Monday, 5 August 2013

எந்த இரவு?



நிச்சயமாக நாம் (குர் ஆனாகிய) இதனை மகிமை மிக்க இரவில் இறக்கி வைத்தோம்.  மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்?  மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது…
குர் ஆன் 97:1-3

அது எந்த இரவு?

அபூ ஸலமா அறிவித்தார்
.... ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு செய்ய எழுந்தார்கள். 'யார் நபியுடன் இஃதிகாப் இருந்தார்களோ அவர்கள் திரும்பிச் செல்லட்டும்! லைலத்துல் கத்ரு இரவு பற்றி எனக்குக் காட்டப்பட்டது. நான் மறக்கடிக்கப் பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாள்களில் ஒற்றையான நாளிலுள்ளது. நான் களிமண் மீதும் தண்ணீர் மீதும் ஸஜ்தாச் செய்வது போல் கண்டேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
புகாரி 813
 இஸ்லாமியர்களின் இந்த நம்பிக்கையின்படி, அது இரவுதான் என்பதில் சந்தேகமில்லை.
குர்ஆன் குறிப்பிடும் அந்த இரவு எங்கு நிலவியது?

அது(குர்ஆன்) எங்கு, யாரிடம் எதற்காக இறக்கப்பட்டது என்பதைக் கூறாமல், இறக்கப்பட்டதாக மட்டும் கூறிக் கொள்கிறது. எனவே குர்ஆன் யாருக்கோ, எங்கோ எதற்காகவோ இறக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது  பூமி இரவுப் பொழுதில் இருந்திருக்கிறது. அந்த இரவையே குர்ஆன் “லைலத்துல் கத்ர்” மகத்துவமிக்க இரவு, ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவு என்றெல்லாம் கூறிக்கொள்கிறது.

குர்ஆன் இறக்கப்பட்ட, குறிப்பிட்ட அந்த இரவில் பூமி மகத்துவத்தால் திளைத்துக் கொண்டிருந்த வேளையில், பூமியின் மற்றொரு பகுதி மகத்துவமில்லாத பகலில் இருந்திருக்கிறது.

குர்அனின் கூற்றுப்படி, இரவிற்கு எந்த சிறப்புமில்லை, குர்ஆன் இறக்கப்பட்டதுதான்  மகத்துவத்திற்குக் காரணமாக அமைகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பூமியின் ஒரு பகுதி இருள் சூழ்ந்து கொள்ளும் பொழுது, அதன் மறு பகுதியில், அதிகாலை, காலை, முற்பகல், நன்பகல், பிற்பகல், மாலை என்று வெவ்வேறு சூழல் இருக்கும். மேலும் பூமிக்கு வெளியில் சென்றால், இரவுமில்லை பகலுமில்லை.

எனவே, நியாயமாகப் பார்த்தால், மகத்துவமிக்க, மகிமை மிக்க ஒரு பகலும் இருந்திருக்க வேண்டுமே?

ஏன் இல்லை?

இரவு-பகல் மாற்றத்திற்கான காரணத்தை குர்ஆன் அறிந்திருக்கவில்லை என்பதுதான் பதில்.

தஜ்ஜால்

Facebook Comments

10 கருத்துரைகள்:

Ant said...

//நியாயமாகப் பார்த்தால், மகத்துவமிக்க, மகிமை மிக்க ஒரு பகலும் இருந்திருக்க வேண்டுமே? ஏன் இல்லை? இரவு-பகல் மாற்றத்திற்கான காரணத்தை குர்ஆன் அறிந்திருக்கவில்லை என்பதுதான் பதில்.// அல்லா அல்லாதவர்களிடமிருந்து வந்திருந்தால் ஏராளமான முரண்பாடுகளை கண்டிருப்பார்கள் என்கிறதே அப்ப அல்லா அல்லாதவர்களிடமிருந்து தான் வந்துள்ளது என்று தர்க்க முறையில் முஃமீன்கள் ஏற்றுக் கொள்வார்களா?

Sulaiman said...

Ant said.....

தௌரத்தை கர்த்தர் சொல்லெ மோசே எழுதவில்லை. ஆபிரகாம் பொய், யாத்திரகாமம் பொய் என தேவப்ரியா இங்கே கலக்க, லைலத்துக்கான கதிர் பற்றி தஜ்ஜால் சிறப்பகச் சொல்லி உள்ளார்.

http://chennaipluz.in/pivotx/?e=2

Unknown said...

//லைலத்துல் கத்ரு இரவு பற்றி எனக்குக் காட்டப்பட்டது. நான் மறக்கடிக்கப் பட்டு விட்டேன். //

மறந்தா என்ன..??நினைவுக்குக் கொண்டுவர அந்த அரபு நாட்டு அல்லாஹ் கையாலாகாதவனா..??

Unknown said...

லைலத்துல் கத்ர் இரவு ரமலான் பிறை 27ல் மட்டும் தான் என்று நிரூபித்தால் ரூ 10 லட்சம் பரிசு என தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு;

27ல் இல்லை என்று நிரூபித்தால் ரூ 50 லட்சம் பரிசுத்துகை என சுன்னத்துல் ஜமா அறிவிப்பு;

நிரூபிக்க யார் ரெடி...???

சொக்கா..கா....பரிசுத்துகை எவ்வளவு...??/

சுன்னத் ஜமாத் அறிவித்துள்ள பரிசு போட்டி..!

இதில் யார் வேணுமனலும் கலந்துக் கொள்ளலாம்.

பதில் தர வேண்டிய முகவரி:
sheikjamali786@gmail.com


To read more, visit:
www.sheikjamali.blogspot.com
**************************************
Like Us: https://www.facebook.com/hajarathsheikabdullahjamali
**************************************
Google Group: www.groups.google.com/group/ahle-sunna
**************************************
Subscribe Us: www.youtube.com/sheikjamali786
**************************************

தஜ்ஜால் said...

வாருங்கள் நண்பர்களே!

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

சிவப்புகுதிரை said...

இந்த வருடம் 27 நோம்புக்கு பள்ளிக்கு சென்று இருந்தேன் .அப்போது பயான் செய்த சுன்னத் ஜமாத் அசுரத் 27 இரவுதான் லைலத்துல்கதிர் இரவு என அடிசி வாத்திட்டார் அதற்கு அவர் வைத்தா வாதங்கள் எல்லாம் என்ன தெரியுமா? அல்லாவுக்கு புடிச்ச நம்பர் 7லாம் அதுனால தான் எல்லாம் 7ம் படைசி இருக்கானாம் ..இத கேட்டு அப்படியே புல்லறிசிபோச்சி தோழர்....

Anonymous said...

All of you kindly see this site and download the ali sina's understanding muhammad in tamil
http://siraj.freedombulwark.com/

download the book here

https://dl.dropboxusercontent.com/u/100132969/Tamil_UM.pdf

Unknown said...

சாமி வந்து ஆடுவோர்க்கு தெரியும் அது பக்தியால் அல்ல என்ற உண்மை.குறி சொல்பவன்,ஜோதிடம் பார்ப்பவன் இவர்களுக்கும் அதன் தந்திரம் தெரியும் எதுவும் உண்மை இல்லை என்று.அதுபோல் தன்னை இறைத்தூதர் தான் கூறும் வார்த்தை இறை வாக்கு என்று கூறுபவருக்கே தெரியும் அதில் உண்மை இல்லை என்று. ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்.....

இனியவன்.....

Ant said...

Anonymous Thank you for providing "ali sina's understanding muhammad in tamil"

ASHAK SJ said...

குரான் இறங்கும் போது இரவா? பகலா? இரவு என்றால் மகத்துவமிக்க இரவு பகல் என்றால் மகத்துவமிக்க பகல், இந்த அடிப்படை தெரியாத மூடர் கூடம் , பின்னூட்டம் இட்ட தற்குறி