Wednesday, 13 March 2013

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 21

சில Instant வேதவெளிப்பாடுகள்

மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ என்னுமிடத்திலிருந்த கால்வாய் விஷயத்தில் முஹம்மது நபியின் (அன்சாரித்) தோழர் ஒருவருவருக்கும் முஹம்மது நபியின் உறவினரான ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் சச்சரவு ஏற்பட்டது. அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓடவிடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) ‘தண்ணீரைத்திறந்து விட) மறுத்துவிட்டார்கள். இந்தத் தகராறு முஹம்மது நபியிடம் பஞ்சாயத்திற்கு வந்ததுமுஹம்மது நபி கூறிய தீர்ப்பு ஸுபைருக்கு சாதமாக இருந்தது. தீர்ப்பில் அதிருப்த்தியடைந்த அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, ‘உங்கள் அத்தை மகன் என்பதால் அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்களின் முகம் கோபத்தால் நிறம் மாறி சிவந்து விட்டது. அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, ‘உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகைளச் சென்றைடயும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்” என்றுகூறினார்கள்.
அல்லாஹ்வால் அமைதியாய் இருக்க முடியவில்லை உடனே இறக்கிவிட்டான் வஹீயை!

புகாரி ஹதீஸ்- 2359
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது
இறைவன் மீதாணையாக! ‘(முஹம்மேத!) உங்களுடைய இறைவன் மீதுசத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்ற பின்னர், நீங்கள் அளிக்கிற தீர்ப்புக் குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்’
(குர்ஆன் 04:65)

திருக்குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில் தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்” என்று ஸுபைர் (ரலி) கூறினார்கள்.

***

முஹம்மது நபி அவர்களின் மனைவியர்கள் தங்களின் இயற்கை தேவைகளுக்காக இரவு வேளைகளில் திறந்தவெளியில் வருவதை உமர் அவர்கள்  காண்கிறார்எந்தக் காரணத்திற்காகவும் பெண்கள் வெளியில் வருவதை அவர் விரும்பவில்லைஅப்படியே வந்தாலும் அப் பெண்கள் தங்களை இனம் காண முடியாதவாறு  கடுமையாக மறைத்துக் கொள்ள வேண்டுமென்று  விரும்பினார்

புகாரி ஹதீஸ்- 4795
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள். என்று சொன்னார்கள். சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பி விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது ச்வதா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, அல்லாஹ்வின் தூதரே நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம சொன்னார்கள், என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேதவெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களது கரத்தில் அப்படியே இருந்தது. அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்கள்.
(புகாரி 146,4795).

பெண்களைப் பர்தாவுக்குள் மூடிவைக்கப்பட வேண்டிய பொருள் என்ற உமர் நச்சரித்துக் கூறிய  கருத்துக்களையே அல்லாஹ், முஹம்மது நபி அவர்களிடம் வஹீயாக அனுப்பினான் (குர்ஆன் 33:33,59). அதன் காரணமாகவே சவ்தா பர்தாவுடன் கழிப்பிடத்திற்கும் செல்கிறார். அங்கும் விடாது பின்தொடர்ந்து வந்து பர்தாவைப்பற்றி கூறுவதிலிருந்து உமர் அவர்களின் நச்சரிப்பின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம். இவரது வேறு சில நச்சரிப்புகளும் உடனடியாய் வஹீயாக வெளிப்பட்டுள்ளது. அவைகளிலிருந்து ஒன்றைக் காணலாம்,

***

புஹாரி ஹதீஸ் : 1269
இப்னு உமர் (ரலி ).அவர்கள் கூறியதாவது
(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான்.அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்கேள! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்க வேண்டும்” என்று கூறினார். உடேன நபி (ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, ‘(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்” என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடிய போது, உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களை இழுத்து, ‘நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்கைளத் தடுக்கவில்லையா?’ எனக் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘(ஜனாஸாத் தொழுவது, தொழாமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்தெதடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது’ எனக் கூறிவிட்டு, நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத்  தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமேம! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்கைள மன்னிக்கப் போவதே இல்லை"என்ற (திருக்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே "(ந்நய)(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்” என்ற (திருக்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது.

எனக்கு பிறகு ஒருவரை அல்லாஹ் நபியாக தேர்வு செய்தால், அது நிச்சயமாக உமராகத்தான் இருப்பார் என முஹம்மது நபி அவர்களும் பெருமை பாராட்டுகிறார்.

புஹாரி ஹதீஸ் : 2831
அல்பராஉ பின் ஆஸிஃப்  (ரலி ) கூறியதாவது.
இறை நம்பிக்கை கொண்டோரில் (அறப் போரில் கலந்து கொள்ளாமல்) தங்கி விடுவோரும், றைவழியில் தம் உடைமைகளாலும் உயிர்களாலும் அறப்போர் புரிபவர்களும் சம அந்தஸ்து கொண்டவர்களாக முடியாது…” என்னும் வசனம் அருளப்பட்ட போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் இப்னுஸாபித் (ரலி) அவர்களை  அழைத்தார்கள். அவர் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டு வந்து, அந்த வசனத்தை எழுதினார். (அருகில் இருந்த கண்பார்வையற்ற) அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) தம் கண்பார்வையில்லாத நிலை குறித்து முறையிட்டார்கள். அப்போது, ‘…. தகுந்த  காரணமின்றி ..என்ற (வாசகம் சேர்ந்த) முழு வசனம் (திருக்குர்ஆன் 04:95)அருளப்பட்டது.
பார்வையற்ற ஒருவர் தனது இயலாமையைத் தெரிவித்த பின்னரே அல்லாஹ்விற்கு போருக்கு வராமலிருப்பதற்கு சில நியாயமான காரணங்களும் இருக்கிறதென்று தெரிந்ததா?
***

புஹாரி ஹதீஸ் : 4517
அப்துல்லாஹ் பின் மஃகல் (ரலி )கூறியதாவது.
நான் இந்தப் பள்ளிவாசலில் – அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாசலில் – கஅப்பின் உஜ்ரா (ரலி) அருகே அமர்ந்தேன். அவர்களிடம் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பகாரமாக நோன்புகள் நோற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொட்டிக் கொண்டிருக்க, நான் நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர்கள், ‘உங்களுக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை” என்று கூறிவிட்டு, ‘உங்களுக்கு ஓர் ஆடு கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள்! அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை ‘ஸாவு’ உணவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள்; உங்கள் தலையை மழித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். எனவே, இந்த (திருக்குர்ஆன் 02:196 வது) வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது. ஆனால், (அதன் சட்டம்) உங்களுக்கும் பொதுவானதாகும்” என்று கூறினார்கள்.

மனிதர்களின் தலைகளில் பேன்களால் ஏற்படும் சிரமத்தைக்கூட அல்லாஹ் அறியவில்லையா? அவனது தூதர் பேன்களின் தொல்லையைப் பற்றி தகவல் கூறியவுடன் முடியை மழித்துக் கொள்ள அனுமதி. என்னுடைய கேள்வி என்னவென்றால் அல்லாஹ்விற்கு எதுவும் தெரியாதா? மிகச் சாதாரணமான இந்த மனிதர்கள் சொல்வதை மறுஒலிபரப்பு  செய்ய அல்லாஹ் எதற்கு? அற்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வேதவாக்குகள் வெளிப்படுகிறேதே என்று நினைக்க வேண்டாம் அருவருப்பான அனுமதிகளும் வேதவாக்குகளான அற்புதங்களும் உண்டு

Facebook Comments

10 கருத்துரைகள்:

இப்ன் லஹப் said...

ஹலோ தஜ்ஜால் , உங்கள் மீது சாந்தி உண்டாவதாக (சாந்தி என்பது பெண் அல்ல அமைதி ) :)

அது என்ன பாய் இன்ஸ்டன்ட் காபி மாதிரி இன்ஸ்டன்ட் வஹி ?

இந்த உமர் இப்ன் கத்தாபுக்கு வேற வேலையே இல்லையா ?

நபி பொண்டாட்டி சவ்தாபின்த் ஸம்ஆ கக்கூஸ் போறத வேடிக்கை பாக்குறது, மன்னிக்கணும் வேவு பாக்குறது தான் வேலையா ?

அடி செருப்பால நாய .....!!

அடுத்தவன் பொண்டாட்டி மூடிட்டு போனா என்ன, மூடாம போனா இவனுக்கென்ன ? வெண்ண ...
இவன் சொன்னதே தப்பு , இதுக்கு ஒரு கேடு கெட்ட வஹீ வேற !!!!

உங்கள் தலையை மழித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். எனவே, இந்த (திருக்குர்ஆன் 02:196 வது) வசனம்,குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது

தலைல பேன் வந்தா மொட்டையடினு சொல்றதுக்கு ஒரு அல்லாஹ் ஒரு நபி சில அராபிய அல்ல கைகள் !!
நாதாரி !!!







http://authentichadithfoundation.org/sahih-bukhari-1269/

இப்ன் லஹப் said...

வஹீன்ற பேர்ல கடுப்பெதுறாங்க மை லார்ட் !!

தஜ்ஜால் said...

வாருங்கள் இப்ன் லஹ்ப்,

பெண்கள் மலம் கழிக்கச் செல்லுமிடத்தில் உனக்கென்ன வேலை என்று உமரிடம் கேட்க வக்கில்லை. வஹீ மட்டும் வருகிறது இஸ்லாம் ஒரு மாதிரியான மார்க்கம் தான்.

Ant said...

// பார்வையற்ற ஒருவர் தனது இயலாமையைத் தெரிவித்த பின்னரே அல்லாஹ்விற்கு போருக்கு வராமலிருப்பதற்கு சில நியாயமான காரணங்களும் இருக்கிறதென்று தெரிந்ததா?// இங்கிருந்து தகவல் அல்லாவை சென்றடைய ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது என்பது அறிந்தது பார்வையற்ற தன்மையை அல்லா அறிய காலதாமதம் ஏற்பட்டதில் வியப்பில்லையே? மேலும் அவனே அணைத்தையும் அறிந்தவன் என்பதால் அந்தவகையில் அதை அறிந்தே செய்கிறான். நீங்கள் ஒன்றை விரும்பாமல் இருக்கலாம் ஆனால் எது சரி என்பதை அவனே அறிந்தவன் என்பதால் இந்த இலக்கண பிழைக்கு அவனே பொறுப்பு இதற்க்கு அற்ப்ப மானிட பிறவிகள் காரணமல்ல காரணம் படைத்தவனே (வேதத்தை) அதை திருத்திவிட்டதால் மானிடர்கள் சதி ஏதும் இல்லை எனவே மானிடர்கள் இங்கு தவறிழைக்க வில்லை என்பதை மானிட இனத்தின் சார்பாக பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. நிச்சயமாக இதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சி உள்ளது!!!

Unknown said...

உடனடி நிவாரணம் போல் உடனடி அறிவிப்பா..?//அதாவது எது எது மறந்து போய் விட்டு போச்சோ அதை எல்லாம் உடனடியாக அப்பப்ப அல்லாவோட வஹி என்று சொல்லிக் கொண்டு தன் காரியத்தை நிவர்த்தி செய்து கொள்வது என்பது ஒரு வகை நல்ல தந்திரம் தான்.

நந்தன் said...

தான் எதிர்கொள்ளும் ஒவ்வொருபிரச்சனைக்கும் தீர்வாக முகம்மது நபியால் சொல்லப்பட்டவைகளே குர்ஆன். தான் சொன்னதாக முக்மது கூறினால் அது எடுபடாது என்பதால் அதன்மீது புனிதத்தை ஏற்றி சொல்லி இருக்கிறரா. ஆனால் காலத்திற்கு பொருந்தாத அவைகளை இன்னும் கட்டிப்டித்துக்கொண்டு அழும் மக்களை என்னவென்பது? அதை பர்ப்பரை செய்து சொத்து சேர்க்கும் கூட்டத்தை எப்பொழுது விரட்டி அடிக்கப்போகிறார்கள் மக்கள்?

தஜ்ஜால் said...

வாருங்கள் ANT,

// நிச்சயமாக இதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சி உள்ளது!!!// நிச்சயமாக!

தஜ்ஜால் said...

வாருங்கள் இனியவன்,

//அல்லாவோட வஹி என்று சொல்லிக் கொண்டு தன் காரியத்தை நிவர்த்தி செய்து கொள்வது என்பது ஒரு வகை நல்ல தந்திரம் தான்.// குர் ஆன் முழுவதுமே அத்தகைய தந்திரங்கள் நிறைந்ததுதான்.

தஜ்ஜால் said...

வாருங்கள் நந்தன்,

//தான் சொன்னதாக முக்மது கூறினால் அது எடுபடாது என்பதால் அதன்மீது புனிதத்தை ஏற்றி சொல்லி இருக்கிறரா.// தான் சொல்வது எடுபடாது என்ற நிலையில் அங்கு வழக்கிலிருந்த அல்லாஹ்வை தனது அடிமையாக்கிவிட்டார்.

//ஆனால் காலத்திற்கு பொருந்தாத அவைகளை இன்னும் கட்டிப்டித்துக்கொண்டு அழும் மக்களை என்னவென்பது?// காலத்திற்கு பொருந்தவில்லையென்பதினால்தான் ஹதீஸ்களும், விதவிதமான குர்ஆன் விரிவுரைகளின் தேவை ஏற்பட்டது.

Unknown said...

Yellam sari arabu nastula velai tharsppadum dra uthira vsathathudan mulim aa maara koopituraanga athukku enna pathil engala mari kasta padura ealai sc makkalukuthan intha islamiya alaippu athai yetru kondu munnetuvatha illai sv aayave ealai yavum iruppatha sollunga thajjal