Monday, 14 May 2012

இப்ராஹீம் என்றொரு கோழை மனிதன்


இப்ராஹீம் என்றொரு கோழை மனிதன்
      


 இது பள்ளி விடுமுறைக் காலம் என்பதால், எங்களது குடும்பத்தைச் சேர்ந்த சிலர் உம்ராவிற்கு கிளம்பிவிட்டனர். இப்பொழுது அங்கு கோஷ்டிகானம் பாடியவர்களாக, சுற்றலும், ஓட்டமும், மொட்டையுமாக நன்மைகளைத்(?) தேடித்தேடி சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் ஹஜ்ஜிற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். என்னைப்பற்றி தெரிந்தும், இந்த மடத்தனங்களை செய்யவருமாறு நச்சரிப்பதுதான் மிகப்பெரிய கொடுமை. இந்தச் சடங்குகளின் நாயகரான இப்ராஹீமைப்பற்றிய சில செய்திகளைப் பார்ப்போம்.
     
  அல்லாஹ்வின் தூதர்களில் தனிச் சிறப்பு பெற்றவர். இப்ராஹீமை அல்லாஹ்வின் தூதர்களுக்கெல்லாம் தந்தையாக இஸ்லாமிய நம்ம்பிக்கை கருதுகிறது.
தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர வேறு யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில் நல்லோரில் இருப்பார்.
 (குர் ஆன் 2:130)
       பிற ஆப்ரஹாமிய மதங்களான யூதமும், கிருஸ்துவமும் ஆப்ரஹாமை சிறப்பித்துக் கூறுகின்றன. தாங்கள் மட்டுமே ஆப்ரஹாமின் உண்மையான வழித்தோன்றல்கள், விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்வதில் மூன்று மதங்களும் போட்டியிட்டுக்கொள்கின்றன.
       

    இப்ராஹீம் தனது இளம் வயதிலிருந்தே அல்லாஹ்வை பற்றி தனது சமுதாய மக்களிடம் எடுத்துரைத்து வந்திருக்கிறார். ஒருமுறை திருவிழா ஒன்றின் பொழுது, அவரது சமுதாய மக்கள் இல்லாத நேரத்தில் அவர்கள் வழிபட்டுக்கொண்டிருந்த சிலைகளை கோடாரியால் உடைத்து, சிதைத்த பின்னர் அந்தக் கோடாரியை பெரியசிலை தோளில் தொங்கவிட்டு சென்றார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் ஒருபோதும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை:
1.        (இணைவைக்கும் திருவிழாவுக்கு இப்ராஹீம் (அலை) அவர்களை மக்கள் அழைத்தபோது) "நான் நோயுற்றிருக்கிறேன்'' என்று (அதில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியது.
2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு, மக்கள் "இப்படிச் செய்தது யார்?' என்று கேட்டபோது) "ஆயினும், இவர்களில் பெரியதான சிலைதான் இதைச் செய்தது'' என்று கூறியது. ...
(முஸ்லீம்)
    
   21-ம் நூற்றாண்டில் இருப்பதாகவும், நாகரீகமும், மனிதாபிமானமும் நிறைந்த மார்க்கத்தை(!)  பின்பற்றுவதாகவும் பீற்றிக்கொள்பவர்கள், தனது ஃபேஸ்புக் கணக்கில் கட்டுரைக்கு இணைப்பு (மட்டுமே) கொடுத்ததாக ஒருவர் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதை நாம் அறிவோம். ஏறக்குறைய நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நாகரீகமற்ற சமுகம் எப்படியிருக்கும்? கோபம் கொண்ட மக்கள் இப்ராஹீமை நெருப்புக் குண்டத்தில் வீசி எரிந்தனர்.

உம்மு ஷுரைக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும் அவர்கள், அது இப்ராஹீம் (அலை- அவர்கள் தீக் குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள்.
(புகாரி)
இப்ராஹீமின் மீது, பல்லிக்கு என்ன கோபம்? அல்லாஹ், பல்லியைத் விரட்டியடித்து(!), அற்புதம் நிகழ்த்தி அவரைக் காப்பாற்றியதாக குர் ஆன் கதையளக்கிறது.

"நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!'' என்றனர்.
"நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு'' என்று கூறினோம்.
 (குர் ஆன் 21: 68,69)
குர்ஆன் கூறும் இந்த நெருப்புக் குண்டக்கதையை மற்ற ஆப்ரஹாமிய மதங்களான யூதமும், கிருஸ்தவமும் ஆதரிக்கவில்லை. மாறாக இப்படியொரு சம்பவம் ஆப்ரஹாமின் வாழ்வில் நிகழவேயில்லை என்கின்றன.
       கிபி இரண்டாம் நூற்றாண்டில், Jonathan Ben Uziel  என்ற யூத அறிஞர் அராமிக் மொழியில் பழைய ஏற்பாட்டை மொழிபெயர்க்கும் பொழுது, ஆதியாகமம் 15:7 “நானே கர்த்தர், உன்னை பாபிலோனியாவிலுள்ள ஊர் என்னும் பட்டனத்திலிருந்து அழைத்து வந்தேன் என்ற வசனத்திலிலுள்ள  நகரத்தின் பெயரைக்குறிக்கும் ஊர் என்ற சொல்லை நெருப்பு என்று தவறுதலாக மொழிபெயர்த்துவிட்டார்.  இந்தத் தவறு குர்ஆனிலும் இடம் பிடிதத்து எப்படி? என்கின்றனர் கிருஸ்துவர்கள். மேலும் சிலை உடைப்பு நகைச்சுவைக்கதையும் யூத கற்பனைப் புதினங்களிலுள்ளவைகளே என்கின்றனர். ஹீப்ரூ மொழியில் ஊர் என்ற சொல்லிற்கு நெருப்பு என்ற பொருளும் இருக்கிறது என்று கூறி, மொழிபெயர்ப்பில் தவறு என்ற தங்களது வழக்கமான ஆயுதத்தை இஸ்லாமியர்கள் முன்வைக்கின்றனர். இதை கட்டுரையின் அளவை கட்டுப்படுத்தும் நோக்கிலும் மேற்கொண்டு விவாதிக்க விரும்பவில்லை. முஸ்லீம்களும், குர்ஆனும் வற்புறுத்திக் கூறுவதைப்போல பெரும் நெருப்புக்குண்டம் இப்ராஹீமிற்கு குளிர்ந்த பூங்காவனமாகவே இருந்தது என்றே தொடர்வோம்.
       இயற்கையின் விதிமுறைகளை மீறிய,  அல்லாஹ்வின் அத்தாட்சியொன்றை தெளிவாகவே அவர் கண்டுள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. மேலும் இப்ராஹீமைப்பற்றி கூறும் பொழுது,

அவரது இறைவன் "கட்டுப்படு!' என்று அவரிடம் கூறிய போது "அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டேன்'' என்று அவர் கூறினார்.
(குர் ஆன் 2:131)
இப்ராஹீம் சகிப்புத் தன்மை மிக்கவர், இரக்கமுள்ளவர். ..
(குர் ஆன் 2:131)
என்று உயர்வாக, கனிவாகக் கூறினாலும், இப்ராஹீமின் உள்ளம் திருப்தியடையவில்லை என்பதுதான் உண்மை.

"என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!'' என்று இப்ராஹீம் வேண்டிய போது, "நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?'' என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் "அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவே.'' என்றார். "நான்கு பறவைகளைப் பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக'' என்று (இறைவன்) கூறினான்.
(குர் ஆன் 2:260)
                -என்று அவரது அவநம்பிக்கையை குர்ஆன் வெளியிடுகிறது. இப்பிரபஞ்சத்தைப் படைத்த்தாகக் கூறுபவன் நேரடியாக உரையாடுகிறான், அற்புதங்களைச் செய்து காண்பிக்கிறான், ஆயினும் அல்லாவின் உற்ற தூதருக்கு அவன் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. மேலும் மேலும் ஆதாரங்களைக் கேட்கிறார். இப்ராஹீமின் உள்ளம் அமைதியடையாமல் போனது ஏன்?
                உண்மையென்னவென்றால், பெரும்பான்மையான மதநம்பிக்கையாளர்கள் கடவுளின் இருப்பிற்கு ஆதாரம் கிடைக்காதா என்று அலைகின்றனர். இல்லாத முன்னறிவிப்புகளையும், அறிவியலையும் வேதங்களின் மீது திணித்து தங்களின் அரிப்பை தீர்த்துக்கொள்கிறனர். இவைகளை ஏன் கடவுள் காண்பதில்லை?
                ஆனால் வேதங்களோ கதையளப்புகளை நிறுத்துவதேயில்லை. வேறொரு நபர் இதே போன்று தனது சந்தேகப்பட்டு நினைத்தாரம் உடனே அவருக்கு செயல் முறைவிளக்கம் காண்பிக்கப்படுகிறது.
அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. "இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?'' என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து "எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?'' என்று கேட்டான். "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்'' என்று அவர் கூறினார். "அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக!  (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!'' என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது "அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்'' எனக் கூறினார்.
(குர் ஆன் 2:259)
                ஏதோ ஒரு காலத்தில் எங்கோ நடைபெற்றதாகக் கதையளப்பதைத் தவிர வேதங்களில் என்ன இருக்கிறது? நம்பிக்கையற்று கேள்விகளைக் கேட்ட இப்ராஹீமும், மற்றொரு பெயர் தெரியாத அந்த நபரும் தண்டிக்கப்பட்டனரா? இல்லை! உடனடியாக அல்லாஹ், செயல்முறை விளக்கத்தில் இறங்கியதாகத்தானே குர் ஆன் கூறுகிறது? இன்று நம்மைப் போன்ற பகுத்தறிவுவாதிகள் ஆதாரங்களைக் கேட்டால் நம் மீது பாய்கின்றனர்.
உலகின் மூன்று மதங்களும் போற்றிப் புகழாரம் பாடுமளவிற்கு இப்ராஹிம் அப்படி என்ன செய்தார்?

     அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக தனது மகனை நரபபலிகொடுக்க முயன்றதுதான் காரணமாம். தனது வயதான காலத்திலும் அவர் செய்த மாபெரும்(!) தியாகத்தைக்) கண்டு உள்ளம் உருகிப்போய், அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான் (4:124) என்கிறது குர்ஆன். இப்ராஹீம் செய்த நரபலி முயற்சியை எது தியாகம்? அல்லது எது தியாகத் திருநாள்? (இணைப்பில்  சொடுக்கவும்) என்ற தலைப்பில் நாம் முன்பே விவாதித்திருக்கிறோம்.
இதுதான் நம்பிக்கையற்ற மனிதன் அல்லாஹ்வின் நண்பனான கதை. இந்த இப்ராஹீம் மூன்று பொய்களைக் கூறியதாக ஹதீஸ்கள் முன்பே பார்தோம், அதில் அவர்கூறிய விவகாரமான பொய்யை கவனிப்போம்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
... இன்னொரு பொய் (தம் துணைவி) சாரா விஷயத்தில் அவர்கள் சொன்னதாகும்: (ஒரு நாள்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியார்) சாரா (அலை) அவர்களுடன் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய நாட்டுக்குச் சென்றார்கள். சாரா (அலை) அவர்கள் மக்களிலேயே மிகவும் அழகிய பெண்மணியாக இருந்தார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் சாரா அவர்களிடம், "இந்தக் கொடுங்கோல் மன்னன், நீ என் துணைவி என அறிந்து கொண்டால் உன்னை என்னிடமிருந்து கைப்பற்றிக்கொள்வான். (நீ யார் என) அவன் உன்னிடம் கேட்டால் "நீ என் சகோதரி' என்று கூறிவிடு. ஏனெனில், இஸ்லாத்தில் நீ என் சகோதரிதான். மேலும், பூமியில் உன்னையும் என்னையும் தவிர முஸ்லிம்கள் வேறெவரும் இருப்பதாக நான் அறியவில்லை'' என்று கூறினார்கள்.
பிறகு அவர்கள் அந்த நாட்டுக்குள் நுழைந்தபோது, அந்த மன்னனுக்கு வேண்டியவர்களில் ஒருவன் சாரா அவர்களைப் பார்த்து விட்டு மன்னனிடம் சென்று, "(மன்னா!) உங்கள் நாட்டுக்குப் பெண்ணொருத்தி வந்துள்ளாள். உங்களுக்குரியவளாக இருப்பதைத் தவிர வேறெதுவும் அவளுக்குத் தகாது'' என்று சொன்னான். ஆகவே, மன்னன், சாரா அவர்களிடம் ஆளனுப்பினான். சாரா அவனிடம் கொண்டுசெல்லப்பட்டார்கள்.
அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் தொழுவதற்காக நின்றுகொண்டார்கள். சாரா மன்னனிடம் சென்றபோது, அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளாமல் சாராவை நோக்கித் தனது கையை நீட்டினான். உடனே அவனது கை (வலிப்பு நோயால்) கடுமையாக இழுத்துக்கொண்டது. உடனே அவன் சாரா அவர்களிடம், "அல்லாஹ்விடம் (என் கைகளை) விடுவிக்கும்படி எனக்காகப் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கிழைக்கமாட்டேன்'' என்று சொன்னான்.
அவ்வாறே அவர்கள் பிரார்த்தித்தார்கள். (அவன் குணமடைந்ததும்) மீண்டும் அவன் (அவர்களை நோக்கி) கையை நீட்டினான். அப்போது முன்பைவிடக் கடுமையாக அவனுடைய கை இழுத்துக்கொண்டது. அவன் முன்பு போன்றே மீண்டும் (பிரார்த்திக்கும்படி) கூறினான். அவ்வாறே சாராவும் பிரார்த்தித்தார்கள்.
(குணமடைந்ததும்) மறுபடியும் அவன் கையை நீட்டியபோது முந்தைய இரு தடவைகள் இழுத்துக்கொண்டதைவிட மிகக் கடுமையாக அவனது கை இழுத்துக்கொண்டது. அப்போது அவன் எனது கையை விடும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். உனக்கு அல்லாஹ்வே சாட்சி. (இனி) உனக்கு நான் தீங்கிழைக்கமாட்டேன்'' என்று கூறினான்.
அவ்வாறே சாரா அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவனது கை விடுவிக்கப்பட்டது. சாராவை அழைத்து வந்தவனை மன்னன் அழைத்து, "நீ ஒரு மனுஷியை என்னிடம் கொண்டுவரவில்லை. ஒரு ஷைத்தானையே என்னிடம் கொண்டுவந்துள்ளாய். இவளை எனது நாட்டிலிருந்து வெளியேற்றி விடு. இவளுக்கு ஹாஜர் எனும் (அடிமைப்) பெண்ணை அன்பளிப்பாகக் கொடுத்துவிடு'' என்று கூறினான்.
சாரா தம்மை நோக்கி நடந்துவருவதை இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்டபோது (தொழுகையை முடித்துத்) திரும்பினார்கள். அவரிடம் "என்ன நடந்தது?'' என்று கேட்டார்கள். சாரா அவர்கள், "நல்லதே நடந்தது. அத் தீயவனின் கையை இறைவன் தடுத்துவிட்டான். ஒரு பணியாளரையும் கொடுத்தான்'' என்று சொன்னார்கள்.
(முஸ்லீம்)
ஒரு இறைத்தூதரால் காப்பாற்ற முடியாமல் மனைவியை விட்டுக் கொடுப்பது என்ன நியாயம்? மனைவியைப் பாதுகாப்பதைத் தவிர கணவனின் தலையாய கடமை என்ன இருக்கிறது? இப்ராஹீம் தனது மனைவியை பாதுகாக்க போரடவில்லையே ஏன்? இதுதானா மும்மதங்களும் போற்றும் தலைவனின் வீரம்? இந்த கேவலமான கதையை பைபிள் பழைய ஏற்பாடும் ஆமோதிக்கிறது. அவர் பொய்யுரைத்ததற்கான உண்மையான காரணத்தையும் தெளிவுபட எடுத்துரைக்கிறது.

12. எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும் பொழுது அவர்கள், ‘இவள் இவனுடைய மனைவி என்று பேசுவார்கள்பிறகு உன்னை அடைய விரும்பி என்னைக் கொன்று விடுவார்கள். 13. அதனால் நான் அவர்களிடம் நீ என் சகோதரி என்று கூறுவேன். பிறகு அவர்கள் என்னைக் கொல்லமாட்டார்கள். நான் உன் சகோதரன் என்பதால் அவர்கள் என் மீது கருணையோடு இருப்பார்கள். இவ்வகையில் நீ என் உயிரைக் காப்பாற்றலாம் என்றான்.
ஆதியாகமம் 12:12,13
       மனைவியை சகோதரி என்று கூறி தனது உயிரைத் தக்கவைத்துக் கொள்வதுதான் நபிமார்களின் முன்மாதிரியோ?  இது ஆப்ரஹாமிற்கு இயல்பான விஷயம் போலும். இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த மன்னன் கொடுத்த பொருட்கள் மூலம் இப்ராஹீம் செல்வந்தராகிறார். இந்த ஜோடி மற்றொரு இடத்திலும் தங்களது வேலையைக் காண்பித்து செல்வத்தையும் திரட்டுகின்றனர்.
1.                    ஆபிரகாம் அந்த நாட்டைவிட்டுப் பாலைவனப் பகுதிக்குச் சென்றான். அவன் காதேசுக்கும், சூருக்கும் நடுவிலுள்ள கேராரில் தங்கினான். 2. அவன் கேராரிலே தங்கி இருந்தபோது தன் மனைவி சாராளைச் சகோதரி என்று சொன்னான். அபிமெலேக்குக் கேராரி அரசன். அவன் சாராளை விரும்பினான். எனவே, வேலைக்காரர்களை அனுப்பி அவளைக் கொண்டுவருமாறு கூறினான்.
ஆதியாகமம் 20:1,2
தந்தையின் அடிச்சுவற்றை அவது மகன் ஈசாக்கும் தவறாது பின்பற்றுகிறார். அவரும் சளைத்தவரில்லை;
6. ஆகவே, ஈசாக்கு கேராரிலியே தங்கினான். 7. ஈசாக்கின் மனைவியான ரெபெக்காள் மிகவும் அழகானவள். அங்குள்ளவர்கள் அவளைப்பற்றி ஈசாக்கிடம் கேட்டனர். அதற்கு ஈசாக்கு, அவர்களிடம் ரெபெக்காள் தன் மனைவி என்று சொல்ல அஞ்சி “அவள் என் சகோதரிஎன்று சொன்னான். தன்னைக் கொன்று அவளை அபகரித்துக் கொள்வார்கள் என எண்ணினான்
ஆதியாகமம் 26:6,7
       அந்த கொடுங்கொல் மன்னன், சாராவைத் தனது இச்சைக்கு இரையாக்க நெருங்கியதும் அவனுக்கு, அல்லாஹ் (வலிப்பு) நோயை ஏற்படுத்தியதால், சாராவின் கற்பு பாதுகாக்கப்பட்டது. அவனது அடுத்தடுத்த முயற்ச்சிகளும் தோல்வியடைந்த்தால் பரிசுப் பொருட்களுடன் சாரா விடுவிக்கப்பட்டதாக ஹதீஸ் கூறுகிறது. அல்லாஹ் அவனைத் தண்டித்து, தடுத்ததற்கான காரணம் என்ன?
1.         
     பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் புரிய முயன்றதாலா?

2
          பிறன் மனைவியை நோக்கினான் என்பதாலா?

3. 
        தனது தூதரின் மனைவியை பலவந்தப்படுத்த முயன்றான் என்பதினாலா?

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களையும், வன்முறைகளையும் தினமும் நாம் கேள்விப்படுகிறோம். சாராவைத் தொட முயன்றதும் அம்மன்னனுக்கு (வலிப்பு) நோயை வழங்கிப் பாதுகாத்த அல்லாஹ், மற்ற அபலைகளுக்கும் உதவ முன்வருவதில்லையே – ஏன்?

      நான் இங்கு கூறவிரும்புவது, அல்லாஹ்வின் நிலைப்பாடு மிகவும் விநோதமானது என்பதைத்தான். முஹம்மதுவும் வெறிபிடித்த அவரது படையினரும், பல பெண்களது கணவர்களைக் கொன்று மனைவியர்களையும், பெண்குழந்தைகளையும் பாலியல் அடிமைகளாக கைப்பற்றிய வரலாற்று உண்மைகள் அழிக்க முடியாதவைகளாக உள்ளன.  ஆறு வயது குழந்தையை, ஐம்பத்து நான்கு வயது கிழவனுக்கு விதவிதமாக கனவில் காண்பித்து வெறியூட்டிய செய்திகளை எப்படி மறக்க முடியும்? பிறன் மனையை (ஜைத்-ஜைனப்) நோக்கிய முஹம்மதின் செயலை சட்டமியற்றி அங்கீகரித்ததுடன், தனக்கு ஒதுக்கப்பட்ட நாளில், அல்வாகொடுத்துவிட்டு அடிமைப்பெண்ணை புணர்ந்ததை எதிர்த்து நியாயம் கேட்ட மனைவியை எச்சரித்த மாபெரும் பாதுகாவலன் அல்லவா இந்த அல்லாஹ்?
       தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி. அல்லாஹ் யாருக்கு இறைவன்? இவன் எந்த வகையான இறைவன்?
       நாம் இப்ராஹீமின் கதையைத் தொடர்வோம். அவர் தன்னை, மனைவியின் சகோதரன் என்று கூறி அந்த உறவையும் கொச்சைபடுத்திவிடார். இதற்கு பதிலாக, (புரோக்கர்) “மாமாஎன்று கூறியிருந்தால் சூழ்நிலைக்கு பொருத்தமாக இருந்திருக்கும். இதுதான் சிறந்த முன்னுதாரணமா? அவர் இப்படியெல்லாம் கூறி தனது உயிரைத் தக்கவைத்துக் கொண்டது எதற்காக?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியாரான) சாராவைப் பார்த்து இவர் என் சகோதரி என்று கூறினார்கள். அல்லாஹ்வின் திருப்திக்காகவே அப்படிச் சொன்னார்கள்.
(புகாரி)
                அதாவது இப்ராஹீமிற்கு பொய் சொல்வதில் விருப்பமேயில்லை, அல்லாஹ்வின் திருப்தியை நாடியே மனைவியைச் சகோதரியென்று பொய்சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாரானாம்...! அது என்ன அல்லாவின் திருப்தி? அல்லாவின் கையாளாகாத நிலையா? சமயத்திற்கு ஏற்றாற்போல் பொய் சொல்லி தப்பித்துக்கொள்ள? இது எப்படி இருக்கிறது?
                அது போல தன் மகன் மீது அளவு கடந்த அன்பிருந்த போதும், நரபலியிட முயன்றது அல்லாஹ்வின் திருப்தியை நாடியே என்கிறது இஸ்லாம். நரபலி முயற்சியை, தியாகத்திருநாள், ஆட்டுத்திருநாள், ஹஜ், என்றெல்லாம் கதையளந்து, வழிபாட்டு விழாவாகக் கொண்டாடுபவர்கள், மனைவியைத் தியாகம்(?) செய்ததையும் ஒரு வழிபாடாக, விழாவாகக் கொண்டாடினால் என்ன? அப்படியொரு சடங்கு இருந்தால் அதை எப்படி செய்வார்கள்?
       மகனைப் பலியிட கூறியது அன்பிற்கு வைக்கப்பட்ட சோதனை, மனைவியைக் கூட்டிக் கொடுக்கவைத்தது தன்மானத்திற்கு வைக்கப்பட்ட சோதனையா? இந்தக் கதைகள் முஹம்மது என்னதான் கூற விரும்புகிறார்?
மனைவியை விட்டுக்கொடுத்தேனும் அல்லாஹ்வின் திருப்தி என்ற பெயரில் மதவெறியை வளர்த்துக்கொள் என்பதுதானா?.
இஸ்லாமில் பெண்களின் நிலை ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறது? பெண் என்பவள் போகப்பொருள் மட்டும்தானா?
தஜ்ஜால்

Facebook Comments

6 கருத்துரைகள்:

Anonymous said...

மும்மின்கள் யாரும் மாற்று கருத்தை சொல்லவில்லையே எல்லோரும் ஏற்கிறீர்களா?

Anonymous said...

மும்மின்கள் யாரும் மாற்று கருத்தை சொல்லவில்லையே எல்லோரும் ஏற்கிறீர்களா?

சிவப்புகுதிரை said...

அருமையாக சொன்னிங்க தஜ்ஜால்.நபிகளின் தந்தையே கோழையாக இருந்து இருக்கின்றார். நல்ல வேலை நம்ம முஹமது நபி அந்த நேரல இல்ல. இருந்து இருந்த சாராவை அவரிடம் இருந்து யாரு காப்பாத்துரது...

தஜ்ஜால் said...

//மும்மின்கள் யாரும் மாற்று கருத்தை சொல்லவில்லையே எல்லோரும் ஏற்கிறீர்களா?// ஏற்பதைத்தவிர வேறுவழியில்லை //நல்ல வேலை நம்ம முஹமது நபி அந்த நேரல இல்ல./// நல்லவேளை முஹம்மதிற்கு உடன்பிறந்த பெண்கள் என்று யாருமில்லை.

yasir said...

நரபலியிட முயன்றதற்கு ஒரு திருவிழாவா??பேஷ்..பேஷ்... ரொம்ப நன்னாயிருக்கு. இதை தொழுகையில் வேறு ஓதி ஓதி தொழவைப்பது அதைவிட நன்னாயிருக்கு....

Anonymous said...

makkah masjid chennai என்ற மெளாலானா சம்சுதீன் காஸ்மி என்பவர் நடத்தும் வலைதளத்தில் 8.2.13 அன்று தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அண்ணல் நபி என்ற சொழ்பொழிவில் மக்காவிலிருந்து வந்தவர்களிடம் முகம்மது தனது இரு மனைவியர்களைக் காட்டி இவர்களில்
யார் வேண்டும் எனச் சொல்லுங்கள். தலாக் செய்து விடுகிறேன். நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றாராம்.தோழர்களிடம் கொண்ட அன்பின் அடையாளமாக இதை முகம்மது செய்ததாக காஸ்மி கூறுகிறார். கூட்டிக் கொடுக்கும் கலை தொடர்கிறது.