தொடர். 6
ஸவ்தா பற்றி இபின் கதீர் மேலும் கூறும் போது:
"குர்ஆன் வ்சனம் 4:128 பற்றி மேலதிக விவரங்கள், "ஆயிஷா கூறினார்: இரு மனைவிகள் உள்ள கணவனை பற்றி இது குறிக்கும். இவ்விரு மனைவிகளில் ஒரு மனைவி வயது சென்றவளாகவும், அல்லது அழகில்லாமலும் இருந்தால், இந்த மனைவியின் துணையை, அந்த கணவன் விரும்பவில்லையானால், அவளோடு வாழ அவனுக்கு விருப்பமில்லையானால், அவள் அவனிடம்" என்னை விவாகரத்து செய்ய வேண்டாம், இதற்கு பதிலாக எனக்கு நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்ய வேண்டியதில்லை" என்று நான் என் உரிமைகளை விட்டுக் கொடுக்கிறேன் என்றுச் சொல்லலாம்.
இந்த வசனம் சொல்ல வருவது என்ன? அவள் தன் உரிமைகளில் சிலவற்றை விட்டுக்கொடுக்கிறேன் என்றுச் சொன்னால், அந்த நிபந்தனையினால் விவாகரத்து செய்துக்கொண்டு பிரிவதை விட இருவரும் சமாதானம் அடையலாம் என்று இந்த வசனம் கூறுகிறது. இதன்படித் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் ஸவ்தாவை விவாகரத்து செய்யாமல் தன் மனைவிகள் என்ற எண்ணிக்கையில் ஸவ்தாவையும் இருக்கச் செய்தார். இதற்காக ஸவ்தா தன் உரிமையை ஆயிஷாவிற்கு விட்டுக் கொடுத்தார்கள். ஆக, இஸ்லாமியர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இந்த முன்மாதிரிகளின் படி செய்யலாம், ஏனென்றால், முஹம்மது நபி (ஸல்) இதனை செய்துள்ளதால், இது இஸ்லாமிய சட்டபூர்வமானதும், அனுமதிக்கப்பட்டதுமாக இருக்கிறது.
இந்த செய்தியைப் பற்றி சிறந்த இஸ்லாமிய அறிஞர் இபின் அல் அரபி (Ibn al-’Arabi) கூறும் போது:
".. ஸவ்தா வயதானவராக மாறினபோது, அல்லாஹ்வின் தூதர் அவரை விவாகரத்து செய்ய விரும்பினார். இருந்தபோதிலும், ஸவ்தா முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் ஒருவராக இருக்கவே விரும்பினார். ஆகையால், ஸவ்தா "என்னை விவாகரத்து செய்யவேண்டாம், என் நாள் ஆயிஷாவின் நாளாக இருக்க நான் விட்டுக்கொடுக்கிறேன்" என்றார். அதே போல, முஹம்மது நபி (ஸல்) அவர்களும் ஸவ்தாவை விவாகரத்து செய்யவில்லை. ஆக, ஸவ்தா இறக்கும் போது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவிகளில் ஒருவராகவே மரணமடைந்தார்கள்.
இபின் அபி மாலிக் கூறும் போது: இந்த வசனம் ஆயிஷாவிற்காக இறக்கப்பட்டது, ஒரு மனிதன் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு, பிறகு அவளுக்கு வயது அதிமான போது, அவளை விவாகரத்து செய்து அவளுக்கு பதிலாக வேறு ஒரு திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது என்றுச் சொல்லும் சில முட்டாள்களுக்கு இந்த வசனம் வெளிச்சம் தருகிறது. இப்படிப்பட்ட குழப்பத்திலிருந்து விடுதலையாக அல்லாஹ் இறக்கிய இவ்வசனத்திற்காக நான் அல்லாஹ்வை புகழுகிறேன்.]
ஆக, முஸ்லீம்கள் அறியாமையினால் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றினர் மற்றும் அதே நேரத்தில் இதற்காக அல்லாஹ்வை புகழ்வதையும் மறக்கவில்லை.
டாக்டர் பின்த் அஷ் ஷாதி (Dr bint ash-Shati’) என்பவர், இவர் "இறைத்தூதரின் மனைவிகள் (The Wives of the Prophet [nisaa’ an-Nabi] )" என்ற புத்தகத்தை எழுதியவர். இவர் தன் புத்தகத்தில் "ஸவ்தா பார்ப்பதற்கு அழகில்லாதவராக இருப்பார் மற்றும் பருமனாக இருப்பார்" என்று கூறுகிறார் ]. (புகாரி கூறுகிறார், ஸவ்தா உயரமாக இருப்பார், பருமனாக இருப்பார் மற்றும் நிதானமாக வேலை செய்வார்)
டாக்டர் பின்த் அஷ் ஷாதி, முஹம்மது மற்றும் ஸவ்தாவின் திருமண பந்த உறவு பற்றி கீழ் கண்டவாறு கூறுகிறார்:
ஸவ்தா தன் அனுபவத்திலிருந்து உணர்ந்து கொண்டது என்னவென்றால், தனக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உள்ளத்திற்கும் இடையில் மிகப்பெரிய தடை அல்லது பிளவு உள்ளது என்பதை உணர்ந்தார். தனக்கு தரப்பட்டிருக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு தங்கும் அந்த ஒரு நாள், தனக்கு அன்பினால் மன ஒருமைப்பாட்டினால் கொடுக்கப்பட்டது அல்ல, அது இரக்கத்தின் அடிப்படையில் தரப்பட்டது என்பதை சந்தேகத்திற்கு சிறிதும் இடமின்றி ஸவ்தா புரிந்துக்கொண்டார்.
இருவருக்கும் இடையே அன்பும், ஒற்றுமையும் இல்லையானால், ஏன் முஹம்மது ஸவ்தாவை முதன் முதலிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
மேலும், அன்பும், ஒற்றுமையும் எங்கு இல்லையோ, அங்கே இரக்கம் எப்படி வரும்?
டாக்டர் பின்ட் அஷ் ஷாதி கூறுகிறார்: ஹோலா பின்ட் ஹகீம் (Khola bint Hakim) தான் ஸவ்தாவை முஹம்மது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினாராம். அந்த நேரத்தில் ஆயிஷா 6 வயதுடையவராக இருந்தாராம். கோலாவிடம் முஹமம்து "யார் என்னுடைய வீட்டை பார்த்துக் கொள்வார்கள், யார் இறைத் தூதருடைய மகள்களை கவனித்துக் கொள்வார்கள்" என்று கேட்டாராம். அதற்கு ஹோலா "ஸவ்தாவை திருமணம் செய்துக்கொள்ளும்" என்றுச் சொன்னார்கள், இதற்கு நபி அங்கீகரித்தார். மற்றும் ஸவ்தா முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வீட்டை கவனித்துக்கொள்ளவும், அவருடைய மகள்களை பார்த்துக்கொள்ளவும் மிகவும் விருப்பமுடையவராக இருந்தார்கள்.
இப்போது நமக்கு காட்சி மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது ஆயிஷா முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காதலாக மாறினார், ஸவ்தா முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மகள்களை கவனிக்கும் வேலைக்கார ஆயாவாக மாறினார்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா இறந்த பிறகு அவரின் வேதனையான நேரத்தில் ஆதரவு அளித்து அவரைத் தேற்றி, இத்தனை ஆண்டுகள் அவரின் பிள்ளைகளை கவனித்து, சமைத்துப்போட்டு, துணிகளை துவைத்துப் போட்டு, எல்லாருக்கும் தேவையானதைச் செய்த ஸவ்தாவை இப்போது முஹம்மதுவிற்கு பிடிக்கவில்லை, அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். அவரது விவாகரத்திற்கு வேறு எந்த ஒரு காரணமும் இல்லை, இருக்கும் ஒரே காரணம், ஸவ்தா கிழவியாகி விட்டார், அவரிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச அழகும் இப்போது இல்லையென்பதுதான் குற்றச்சாட்டு.
குர்ஆன் கீழே உள்ள வசனத்தில் தம்பதிகளாக இருக்கும் கணவன் மனைவியின் மத்தியில் இருக்கும் அன்பு குறித்து அழகாக பேசுகின்றது.
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
(குர்ஆன் 30:21)
குர்ஆன் சொல்லும் அந்த அன்பு மற்றும் உவப்பு எப்படிப்பட்டதாக இருக்கிறது? அதில் உள்ள குறைபாடு என்ன என்பதை இதுவரை நாம் கண்ட நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்ளலாம்.
குர்ஆன் சொல்லும் அன்பு, இரக்கம் போன்றவைகள் ஸவ்தாவிற்கு நடந்த நிகழ்ச்சியில் காணப்படவில்லையே?
இஸ்லாமிய சட்ட நூல்களை எழுதிய ஆசிரியர் கீழ் கண்டவாறு எழுதுகிறார்:
வெறும் காமம், மோகத்தை மட்டுமே முக்கியம் என்று கருதி இருக்கும், நல்ல நடத்தை இல்லாத ஒரு மனிதன், இஸ்லாம் அங்கீகரிக்காததை செய்து, தன் மனைவியை எந்த ஒரு காரணமும் இல்லாமல் விவாகரத்து செய்தால் அவனுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்ன? இதற்கான பதில்: இப்படிப்பட்ட மனிதனை அல்லாஹ் தண்டிப்பான், இந்த உலகத்திலும், வரவிருக்கும் அந்த உலகத்திலும், அல்லாஹ் அவனை பழிவாங்குவான்.
மேலே சொன்ன வரிகள் மிகவும் அழகாகவும் நியாயமானதாகவும் தென்படுகின்றது, எதுவரைக்கும்? அதே ஆசிரியர் அதே புத்தகத்தில் சில பக்கங்களுக்கு பிறகு என்ன சொல்லியுள்ளார் என்று நாம் படிப்பதற்கு முன்பாக மட்டுமே இவ்வரிகள் அழகாகத் தெரியும். அதே ஆசிரியர் எழுதுவதை படியுங்கள்: "எப்போது ஒரு பெண் தன் கணவனின் காமத்திற்கு மோகத்திற்கு உபயோகமில்லாதவளாக மாறுகிறாளோ, அவளிடம் இருக்கும் சில சரீர குறைபாடுகளினாலோ, அல்லது முதுமையினாலோ (வயது அதிமாகிவிட்டாளோ) அல்லது இப்படிப்பட்ட காரணங்களினால், ஒரு மனிதன் விவாகரத்து செய்ய அனுமதிக்கப்படுகின்றான்" .
ஒருவன் தன் மனைவி முதுமை அடைந்து விட்டாள் என்பதால் அவளை விவாகரத்து செய்ய அனுமதிக்கப்படுகிறார். இதற்கு மிகவும் பொருத்தமான எடுத்துக்காட்டாக முஹம்மது நபி (ஸல்) வர்ணிக்கப்படுகிறார். முஹம்மது நபி (ஸல்) ஒரு பின்பற்றத்தக்க உதாரண மனிதராக இருப்பதாக குர்ஆனிலே அல்லாஹ் புகழ்ந்துகூறுகிறான்.
நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கின்றீர்
(குர்ஆன் 68:4)
சரி, நபி வெறுப்படைந்ததைப் போன்று ஸவ்தா தள்ளாத வயதுடைய மூதாட்டியா?
2 கருத்துரைகள்:
Naathari. naara thellayoli. oru aambalaiya iruntha ithu sambanthama vivaatham panna nee thayaraga irukkiya la. mutta payala.
தேவுடிய பெத்த தேவுடிய பயனே
உனக்கு அவ்வளவு தில் இருந்த நேரடிய விவாதம் பண்ண வாடா பொட்ட. . .
`ப்ளாக் ல என்ன வேணும்ன எழுதுலம் கேட்க எவனுமே இல்லன்னு நெனசியல முட்டபுண்ட
Post a Comment