Sunday 27 November 2011

இஸ்லாத்தை கடந்த சுவடுகள் 3


சாத்தானின் வேதம்
            பெண் மோகம் நபி (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்படும் மிகப் பெரிய குற்றச் சாட்டு. என் மாற்று மத நண்பர்கள், உங்களது நபிக்கு பல மனைவிகள் உண்டாமே? என கேலியாக கேட்பார்கள். நான் அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் செய்து கொண்ட அனைத்து திருமணங்களும் விதவைகளுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் அளிக்கப்பட்ட மறுவாழ்வு மேலும், இன்று புரட்சிகரமானது என்று போற்றப்படும் விதவைகள் திருமணத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே முன்மாதிரியாக இருந்து நடைமுறையிலும் வாழ்ந்து காட்டியவர் எங்கள் தலைவர் முஹம்மது நபி என்று விளக்கமளிப்பேன்.
உண்மையில், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை மனைவிகள் இருந்தனர் என்பது கூட எனக்குத் தெரியாது. நபி (ஸல்) அவர்களை விட, கதீஜா அம்மையார் வயது முதிர்ந்த விதவைப் பெண்மணி என்பது மட்டுமே எனக்குத் தெரிந்த அதிகபட்ச விஷயம். நான்கு மனைவிகள் இருந்திருக்கக் கூடும் என்று எண்ணிக் கொள்வேன். காரணம் திருக்குர்ஆனின் அனுமதி அவ்வளவுதான். மேலும் திருக்குர்ஆனின்  போதனைகளை சிறிதும் தவறாமல் வாழ்ந்து காட்டிய உத்தமர் என்று இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் புகழாரங்களை பலமுறை கேட்டிருக்கிறேன். அவர்களது கூற்று உண்மையே என்பதில் உறுதியாகவும் இருந்தேன்.
ஈரான் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியரான சல்மான் ருஷ்டி எழுதிய, THE SATANIC VERSES (சாத்தானின் வேதம்) என்ற புத்தகம் வெளிவந்த பொழுது, மேற்கத்திய நாடுகள் இஸ்லாமின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் களங்கமற்ற  தலைவர் முஹம்மது நபியின் மீது "பெண் பித்தர்" என்ற பொய்யான செய்திகளை ஊடகங்களில் திட்டமிட்டு பரவச் செய்கிறது என்று முஸ்லீம்களிடமிருந்து கண்டனக் குரல் ஓங்கி ஒலித்தது. இது நமது விரலே நமது கண்ணை குத்திக் கிழித்ததைப்  போல எனக்குத் தோன்றியது.
THE SATANIC VERSES-ல் முஹம்மது நபியை கடுமையாக விமர்சனம் செய்திருப்பதாகவும், அனைத்து முஸ்லீம்களுக்கும் தாய் போன்ற தகுதியுடைய நபி (ஸல்) அவர்களுடைய மனைவியர்களை விபச்சாரிகளாக சித்தரித்திருப்பதாகவும் அறிந்த பொழுது சல்மான் ருஷ்டியை மிகவும் வெறுத்து, என்னுடைய பிரார்த்தனைகளிலும் அவரை சபித்தேன். சல்மான் ருஷ்டிக்கு வழக்கம் போல கடுமையான எதிர்ப்பும்  மரண தண்டனை அறிவிப்பும் மட்டுமே நம்மால் தரப்பட்டது. திருக்குர்ஆனிலிருந்து வெளி வரும் ஒளிக்கதிர்கள் சல்மான் ருஷ்டியை அழிப்பதாக ஒரு பாகிஸ்தானிய திரைப்படம் சித்தரித்து தனது கோபத்தைத் தீர்த்துக் கொண்டது.
இறைவனால் இறக்கப்பட்டது, இப்பிரபஞ்சத்தின் மாபெரும் அற்புதம் என்று முஸ்லீம்களால் புகழப்படும் திருக்குர்ஆனை சாத்தானின் வேதம் என்று கூறிய, சல்மான் ருஷ்டியைப் போன்ற விஷக் கிருமிகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்தேன். களங்கமற்ற ஒரு மாமனிதரை இழிவுபடுத்தும் விதமாக எழுதிய சல்மான் ருஷ்டி மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை மனப்பூர்வமாக ஆதரித்தேன். இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், திருக்குர்ஆனின் மகத்துவத்தையும், முஹம்மது நபி அவர்களின் களங்கமற்ற தன்மையையும், உலக மக்களுக்கும், குறிப்பாக  மேற்கத்திய ஊடகங்களுக்கும் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்றும் விரும்பினேன். பெரிதாக எதுவும் நிகழவில்லை  காலப் போக்கில் எல்லாம் மறந்து போனது.

நான் தேடலின் பாதையில் செல்கையில், சல்மான் ருஷ்டியின் நினைவு வந்தது. சல்மான் ருஷ்டி அவ்வாறு ஏன் கூற வேண்டும்? என்ற சிந்தனை என்னுள் மேலோங்கத் தொடங்கியது. இஸ்லாமிய அறிஞர்கள் மறுப்பதைப் போல, சல்மான் ருஷ்டியின் குற்றச்சாட்டுகள் அபாண்டமான பொய்யாக இருப்பின், மிகக் கடுமையான எதிர்ப்புகளுக்கும் மத்தியில், உயிருக்குத் துணிந்து ஒரு பொய்யை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? திருக்குர்ஆன் உட்பட இஸ்லாமின் முழுப் பின்னணியையும் தெரிந்து கொள்ள விரும்பினேன். முதலில், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்படும் "பெண் மோகம்" கொண்டவர் என்ற குற்றச்சாட்டிற்கு சரியான பதில் தெரிந்து கொள்ள விரும்பினேன். THE SATANIC VERSES இந்தியாவில் தடை செய்யப்பட்டதால் அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களின பலதார மணவாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பிய பொழுது சல்மான் ருஷ்டியின்  குற்றச்சாட்டுகளுக்கு விடை தெரிந்தாலே போதுமானது என்று முடிவு செய்தேன்.

சல்மான் ருஷ்டியின் குற்றச்சாட்டுகளுக்கு, இஸ்லாமிய அறிஞர்களின் மறுப்புகள் புத்தகமாக வெளிவந்திருந்தது. அவற்றைப் படிக்கையில் என் மனம் திருப்தி அடையவில்லை. ஏனெனில், மார்க்க அறிஞர்கள் பலருக்கு சல்மான் ருஷ்டியை கடுமையாக எதிர்ப்பதில் இருந்த ஆவர்வம் ஆதாரங்களுடன் பதில் அளிப்பதில் இருக்கவில்லை. சிலர் THE SATANIC VERSES-ல் அவர் பயன்படுத்திய கீழ்த்தரமான (F...) வார்த்தைகளை எண்ணி கணக்கிட்டு சல்மான் ருஷ்டியை இழிவானவர் என்றனர். இன்னும் சிலர் இதைப் போன்று அநாகரீகமாக விமர்சித்தால் பதில் கூறமுடியாது என்றனர். இன்னும் சிலர், சல்மான் ருஷ்டியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்து, நபி (ஸல்) அவர்களைப் பற்றி விமர்சிக்க சல்மான் ருஷ்டி தகுதியற்றவர் என்றனர். சல்மான் ருஷ்டியின் குற்றச்சாட்டுகளுக்கு,  இஸ்லாமிய அறிஞர்களால் மிகச்சரியான ஆதாரங்களுடன் பதில் அளிக்க முடியவில்லை என்றே தோன்றியது. நபியின் பலதார மணத்திற்கான காரணங்களைத்  தெரிந்து கொள்ள அவரது மனைவியர்களின் பின்னணியையும் தெரிந்து கொள்வது அவசியம் என்று முடிவு செய்தேன்.  

எனக்கு கிடைத்த தகவல்கள் என்னை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் முதலில், நபி (ஸல்) அவர்களுக்கு   நான்கு மனைவிகள் இருக்கலாம் என்று நான் (தவறாக) நினைத்தது ஒன்பதானது, ஒன்பது பதிமூன்றாக உயர்ந்து இருபத்து இரண்டைக் கடந்நது முப்பத்தி இரண்டைத் தொட்டது. நபி (ஸல்) அவர்களுக்கு நான்கு மனைவியர் இருக்கலாம் என்ற யூகத்தில்நான்கு மனைவியர்களைத் திருமணம் செய்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ள ஆய்வில் இறங்கிய எனக்கு தலைசுற்றத் தொடங்கியது…
மனைவியர்களின்  பட்டியல்

ஒரு இஸ்லாமிய இணையதளம் பதிமூன்று மனைவிகளின் பட்டியலை தந்து  குற்றச்சாட்டுகளை மறுத்தது. நபி (ஸல்) அவர்களின்   பலதார மணங்கள் சமுதாய நலனை அடிப்படையாக கொண்டது வேறு விதமாக கண்பது தவறானது எனவும் எச்சரித்தது. இதுதான் அவர்கள் கொடுத்த பட்டியல்,

மனைவியர்களின் / அவருடன்            மனைவியர்களின்           நபி அவர்களின்
வாழ்ந்த பெண்களின் பெயர்கள்          திருமண வயது                 திருமண வயது
1.     கதீஜா                                                                    40                                            25
2.     சவ்தா                                                                    ?                                              52
3.     ஆயிஷா                                                               6                                              52
4.     ஹப்ஸா                                                               22                                            56
5.     ஜைனப்                                                                 30                                            56
6.     உம்முஸல்மா                                                   26                                            56
7.     ஜைனப்                                                                 37                                            58
8.     ஜுவேரியா (போர் கைதி)                                              20                                            58
9.     உம்மு ஹபீபா                                                   36                                            60
10.   ஸபியா (போர் கைதி /அடிமை)                   17                                            60
11.   மாரியா (கிருத்துவ பெண் /அடிமை)         17                                            60
12.   ரைஹானா ( போர் கைதி/ அடிமை)           15                                            60
13.   மைமூனா                                                            36                                            53

மேற்கண்ட பதிமுன்று மனைவியர்களுடன் இன்னொரு இணையதளம் தரும் பட்டியல் இதோ,

நபி (ஸல்) அவர்கள்   மேலும் பல  பெண்களைத் திருமணம் செய்திருப்பதாக ஹதீஸ் ஆய்வாளர் அலீ தஷ்தி குறிப்பிடுகிறார் (இவர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்)  அவர் தரும் பட்டியலையும் காண்போம்

இவர்களைப் பற்றிய குறிப்புகள் 
14.   ஃபாத்திமா                                           al-Tabari vol.9 p.39, al-Tabari vol.9 p.139
15.   ஹெந்த் (விதவை)                            Sahih Muslim vol.3 no.4251-4254 p.928-929.
16.   அஸ்மா பின்த் நுக்மான                                Bukhari vol.7 book 63 no.181 p.131,132
17.   அஸ்மா                                                               a-Tabari vol.9 p.135-136. al-Tabari vol.39 p.166

உறுதியற்ற உறவுகள் / சுருக்கமாக திருமணம் செய்தல்
18.   உம்மு ஷரிக்                                     al-Tabari vol.9 p.139.
19.   ஜைனப்                                                 al-Tabari vol.7 p.150 footnotes 215,216 and al-Tabari vol.39 p.163-164
20.   கவ்லா                                                  al-Tabari vol.39 p.166           
21.   முலைகா பின்த் தாவூத்                 al-Tabari vol.8 p.189
22.   அல் ஷன்பா பின்த் அம்ர்            al-Tabari vol.9 p.136
23.   அல் அலீய்யா                                    al-Tabari vol.39 p.188
24.   அம்ராஹ் பின்த் யஜீத்                   al-Tabari vol.39 p.188
25.   கத்ைலா பின்த் கைஸ்                 al-Tabari vol.9 p.138-139
26.   ஸானா பின்த் ஸூஃப்யான்          al-Tabari vol.39 p.188
27.   ஷாராஃப் பின்த் கலீபா                   al-Tabari vol.9 p.138
28.   ஜைனப்
29.   பெயர் தெரியாத ஒரு பெண்        al-Tabari vol.39 p.187

 Wiki Islam தரும் பட்டியல் இதோ
 1. Khadija/Khadijah                                             
 2. Sauda/Sawda bint Zam'a/Zam’ah
 3. A’isha
 4.  A’isha’s Slaves
 5. Umm Salama
 6. Hafsa/Hafsah
 1. Zainab/Zaynab bint Jahsh
 2. Juwairiya/yya/yah
 3. Omm/Umm Habiba
 4. Safiya/Safiyya/Saffiya
 5. Maimuna/Maymuna bint Harith
 6. Fatima/Fatema/Fatimah
 7. Hend/Hind
 8.  Sana bint Asma’ / al-Nashat
 9.  Zainab/Zaynab bint Khozayma
 10. Habla
 11. Divorced Asma bint Noman
 12. Mary/Mariya the Copt/Christian
 13. Rayhana/Rayhanah bint Zaid
 14. Divorced Umm Sharik /Ghaziyyah bint Jabir
 15. Maymuna / Maimuna
 16. Zainab
 17. Khawla / Khawlah bint al-Hudayl
 18. Divorced Mulaykah bint Dawud
 19. Divorced al-Shanba’ bint ‘Amr
 20. Divorced al-‘Aliyyah
 21. Divorced ‘Amrah bint Yazid
 22. Divorced an Unnamed Woman
 23. Qutaylah bint Qays
 24. Sana bint Sufyan
 25. Sharaf bint Khalifah
சரியான ஆதார வரிசையில்லமல் விடுபட்டவர்களும் வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களின் எண்ணிக்கையை இணைத்தால் நபி (ஸல்) அவர்களின் மனைவிர்களின் எண்ணிக்கை சுமார் நாற்பதை நெருங்கும். உலகத்திற்கே அருளாக அனுப்பப்பட்டவர், இறைவனை அடையும் வழியை போதிக்க வந்தவர்இத்தனை பெண்களுடன் எப்படி வாழ முடியும்

Facebook Comments

8 கருத்துரைகள்:

Anonymous said...

அடிமைப் பெண்கள்
திருமணம் செய்யாமல் அடிமைப் பெண்களுடன் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம் என்று திருக்குர்ஆனின் பல வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

(பார்க்க திருக்குர்ஆன் 4:3, 4:24,25, 4:36, 16:71, 23:6, 24:31, 24:33, 24:58, 30:58, 33:50, 33:52, 33:55, 70:30)

Anonymous said...

இது முஸ்லிமல்லாதவர்களுக்கும், சில முஸ்லிம்களுக்கும் பலவித ஐயங்களை ஏற்படுத்தக் கூடும்.

திருமணம் செய்யாமலேயே அடிமைப் பெண்களை அனுபவிக்கலாம் என்பது விபச்சாரத்திற்கு அனுமதி வழங்கியது போல் உள்ளது. விபச்சாரத்திற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அவர்கள் கருதலாம்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது வைப்பாட்டிகள் வைத்துக் கொள்வதற்கும், அடிமைப் பெண்களை அனுபவிப்பதற்கும் வித்தியாசம் எதுவும் தென்படாததால் அவர்களுக்கு இவ்வாறு ஐயம் ஏற்படுவது இயற்கையே! ஆயினும் இது பற்றிய உண்மை நிலையை விளங்கிக் கொண்டால் இந்தச் சட்டம் அறிவுப் பூர்வமானது என்பதை அவர்களும் ஒப்புக் கொள்வார்கள். எனவே இது பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

இன்று அடிமைப் பெண்களோ, அடிமை ஆண்களோ இல்லாததால் இதைப் புரிந்து கொள்வதற்கு

இது பற்றிய வரலாறு தெரிந்திருப்பது அவசியம்.

இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் போது, போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களைச் சிறைப் பிடிப்பார்கள். சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் ஆண்களும் இருப்பார்கள். குறைந்த அளவில் பெண்களும் இருப்பார்கள்.

இவ்வாறு சிறைப் பிடிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்க அன்று சிறைக் கூடங்கள் இல்லை. அவர்களுக்கு உணவளித்துப் பராமரிப்பதும் தேவையற்ற சுமையாக அமையும். எனவே கைது செய்யப்பட்டவர்களைப் போரில் ஈடுபட்டவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள். 
அவர்களிடம் வேலை வாங்கி விட்டு அவர்களுக்கு உணவளிப்பது சிரமமாக இருக்காது.

வேலைக்கு ஆள் தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தமக்குக் கிடைத்த அடிமைகளை வசதியானவர்களிடம் விற்று விடுவார்கள். இதனால் அடிமைச் சந்தைகளும் கூட செயல்பட்டு வந்தன.

மேலும் சில கொடூர மனம் படைத்த மன்னர்கள் வெற்றி கொள்ளப்பட்ட நாட்டில் நுழைந்து போரில் சம்மந்தப்படாத அழகிய பெண்களையும் பிடித்து வந்து அடிமைகளாக்கிக் கொண்டதுமுண்டு. அடிமைகள் இப்படித் தான் உருவானார்கள்.

மொத்த உலகமும் இதை அங்கீகாரம் செய்திருந்த காலத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யலானார்கள். இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே உலகெங்கும் ஆண் அடிமைகளிடம் வேலை வாங்குவதும், பெண் அடிமைகளை விருப்பம் போல் அனுபவிப்பதும் வழக்கத்தில் இருந்தது என்பதை இந்த விபரங்களிலிருந்து அறியலாம்.

உலகெங்கும் நடந்து வந்த அடிமை வியாபாரத்தை இஸ்லாம் ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வந்ததேயன்றி அடிமைகள் விடுதலை செய்யப்படுவதற்கான வழிகளைக் காட்டியதேயன்றி இஸ்லாமே அடிமைகளை உருவாக்கவில்லை. எத்தனையோ சமூகக் கொடுமைகளை ஒரு உத்தரவின் மூலம் ஒழித்துக் கட்டிய இஸ்லாம் அடிமைகளையும் ஒழித்துக் கட்டியிருக்க முடியாதா? ஏன் இஸ்லாமும் அதை ஏற்றுக் கொண்டது? என்ற கேள்வி சிலருக்குத் தோன்றலாம்.

Anonymous said...

இதில் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க்களத்தில் பிடிக்கப்படுவதன் மூலம் அடிமைகள் உருவானாலும் போர் வீரர்கள் உடனுக்குடன் அவர்களை விற்றுக் காசாக்கி விடுவார்கள். பெரும்பாலும் விலை கொடுத்து வாங்கியவர்களிடம் தான் அடிமைகள் இருந்தனர்.

இனி மேல் அடிமைகள் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டால் அடிமைகளை விலைக்கு வாங்கியவர்கள் பெரிய அளவில் நஷ்டமடைவார்கள்.

அவர்கள் அனைவருக்கும் நஷ்ட ஈடு அளித்தால் அரசை நடத்த முடியாது. நஷ்ட ஈடு அளிக்காமல் உத்தரவு போட்டால் சட்டப்பூர்வமான அனுமதி இருந்த போது செய்த வியாபாரத்தில் மக்களுக்கு நஷ்டம் ஏற்படுத்துவது அநியாயமாகும்.

அப்படியே அனைத்து அடிமைகளுக்காகவும் நஷ்ட ஈடு கொடுத்து விடுவிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டாலும் அது கேடாகத் தான் முடியும்.

ஏனெனில் அடிக்கடி போர்கள் நடந்து கொண்டிருந்த அன்றைய சூழ்நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் ஒருதலைப் பட்சமாக இவ்வாறு அறிவித்தால், முஸ்லிம் கைதிகள் மற்ற நாட்டில் அடிமைகளாக இருக்கும் நிலை ஏற்படும். எதிரிகள் உடனே விடுதலையாகும் நிலையும் ஏற்படும். அந்த எதிரிகள் மீண்டும் படை திரட்டி வரக்கூடிய அபாயமும் உண்டு.

உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த தீர்மானத்திற்கு வரும் வரை நபிகள் நாயகம் (ஸல்) மட்டும் முடிவெடுப்பது நன்மை பயக்காது.

'நபிகள் நாயகத்தை எதிர்த்துப் போர் செய்தால் நமக்கு பெரிய இழப்பு ஏற்படாது; அவருக்குத் தான் இழப்பு ஏற்படும்' என்ற எண்ணம் சுற்றியுள்ள நாடுகளுக்கு ஏற்படும். எனவே தான் உத்தரவு போட்டு அடிமை முறையை ஒழிக்கவில்லை.

அதே சமயத்தில் அடிமைகளை இல்லாதொழிக்க வேறு பல ஏற்பாடுகளை இஸ்லாம் செய்தது.
ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதை முறித்தாலோ அல்லது நோன்பை முறித்தாலோ இது போன்ற குற்றங்களுக்குப் பரிகாரமாக வசதியுள்ளவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று இஸ்லாம் ஆணையிட்டது.
(பார்க்க திருக்குர்ஆன் 2:177, 4:92, 5:89, 9:60, 58:3, 90:13)
ஒப்பந்த அடிப்படையில் அடிமைகள் விடுதலை யாவதற்கும் இஸ்லாம் ஏற்பாடு செய்தது. உன்னை நான் விடுதலை செய்கிறேன். நீ உழைத்து சிறிது சிறிதாக எனது கடனை அடைக்க வேண்டும் என்று எஜமானர்கள் அடிமைகளிடம் உடன்படிக்கை செய்து விடுக்க ஆர்வமூட்டினார்கள்.
(பார்க்க திருக்குர்ஆன் 24:33)
யாரேனும் அடிமையை விடுதலை செய்தால் அந்த அடிமை பிற்காலத்தில் சம்பாதிப்பவைகளுக்கு அவனது எஜமான் வாரிசாவார் என்று சட்டம் கொண்டு வந்து அடிமைகளை விடுவிக்க இஸ்லாம் தூண்டியது.
(பார்க்க புகாரி 456, 1493, 2155, 2156, 2168, 2169, 2561, 2562, 2563, 2564, 2565, 2578, 2717, 2726, 2729, 2735, 5097, 5279, 5284, 5430, 6717, 6751, 6752, 6754, 6757, 6759)

இத்தகைய சட்டங்கள் மூலம் தமது வாழ்நாளில் கணிசமான அளவுக்கு அடிமைகளின் எண்ணிக்கையைக் குறைத்தார்கள். இதுபொதுவாக அடிமைகள் பற்றியது. அடிமைப் பெண்கள் விஷயத்தையும் அறிந்து கொள்வோம்.

அடிமைப் பெண்களாக விற்கப்படுவோர் எஜமான் வீட்டில் தான் தங்கும் நிலை. அவளது கணவன் வேறு நாட்டில் இருப்பான்; அல்லது இல்லாமலும் இருப்பான்.
இந்த நிலையில் கண்டவர்களும் அப்பெண்ணை தகாத முறையில் பார்ப்பதைத் தடுப்பதற்கு வேலி போட்டாக வேண்டும். அவளுக்கும் உடல் ரீதியான தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

Anonymous said...

இதைக் கருத்தில் கொண்டு தான் அடிமைகளை விலைக்கு வாங்கிய எஜமான் (பல எஜமான் இருந்தால் அவர்களில் ஒரே ஒருவர் மட்டும்) குடும்பம் நடத்தலாம். இவ்வாறு குடும்பம் நடத்தும் போது அவள் குழந்தையைப் பெற்றால் அவளும், குழந்தையும் அடிமைத் தளையிலிருந்து விடுபடுவார்கள் என்று இஸ்லாம் சட்டம் போட்டது.

இதை அந்தச் சமயத்தில் அனுமதிக்காவிட்டால் அவளுக்காகப் பரிந்து பேச யாருமில்லாத நாட்டில் அவளது எஜமானையே முழுவதும் சார்ந்திருக்கும் போது அவளை அவன் அனுபவிப்பதைத் தடுக்க முடியாது போகும்.

அடிமை தானே! நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படும். அவளுக்கு கணவன் நிலையில் எஜமான் இருக்கிறான் என்ற எண்ணம் ஏற்படும் போது அவளுக்குப் பாதுகாப்பு ஏற்படும்.

அவளுடன் ஒரு எஜமானர் தான் குடும்பம் நடத்த வேண்டும் எனக் கூறுவதாலும், அவளுக்குப் பிறந்த குழந்தை சொந்த எஜமானின் குழந்தையாகவே கருதப்படும் என்பதாலும் இது விபச்சாரமாகாது.

ஒரு முதலாளியிடம் ஓர் இளம் பெண் வேலைக்குச் சேர்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வேலைக்காரியை அந்த முதலாளி விலை கொடுத்து வாங்கி விடவில்லை. அந்த முதலாளியை விட்டால் அவளுக்கு வேறு கதியே இல்லை என்ற நிலைமையும் இல்லை. அவளுக்காகப் பரிந்து பேசவும் அவளுக்கு நேரும் கொடுமைகளைத் தட்டிக் கேட்கவும் அவளுக்கென்று சிலர் உள்ளனர். இந்த வேலைக்காரப் பெண்ணுக்கு இவ்வளவு சுதந்திரமும், பாதுகாப்பும் இருந்தும் கூட எத்தனையோ வேலைக்காரப் பெண்கள் முதலாளியின் காமப் பசிக்கு இரையாகி விடுகின்றனர். விரும்பியும் விரும்பாமலும் இப்படி இறையாவோர் ஏராளம்!
 
சுதந்திரமும், உறவினர்களும் உள்ள வேலைக்காரிக்கே இந்தக் கதி என்றால் இந்த வேலைக்காரிக்கு இருப்பது போன்ற சுதந்திரமும், பாதுகாப்பும் இல்லாத அடிமைப் பெண்ணின் கதி என்ன என்பதை எளிதில் உணரலாம். இத்தகைய நிலையில் அடிமைப் பெண்களை அவர்களின் எஜமானர்கள் அனுபவிப்பதற்குத் தடை விதித்தால் அது அர்த்தமற்ற தடையாகவே அமையும்.

அடிமைப் பெண்கள் என்ற நிலை இருந்த காலத்தில் இந்த அனுமதியை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இன்று உலகமெங்கும் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதால் இப்போது இதை நடைமுறைப்படுத்த முடியாது.

இவ்வாறு தடை விதிக்காததற்கு இன்னொரு காரணமும் உண்டு.

இஸ்லாம் குற்றங்களைத் தடுப்பதற்காகக் கடுமையான தண்டனைகளை குற்றவாளிகளுக்கு வழங்குகின்றது. இந்தத் தண்டனைகளுக்கு அஞ்சி மக்கள் குற்றங்களிலிருந்து விலகிக் கொள்வார்கள். அடிமைப் பெண்களை அனுபவிக்கக் கூடாது என்று சட்டமியற்றி, அக்குற்றத்திற்குக் கடும் தண்டனை உண்டு என்று அறிவித்தால் கூட இதைத் தடுக்க முடியாது.
ஏனெனில் அடிமைப் பெண்கள் எஜமானர்களின் வீட்டிலேயே எப்போதும் இருப்பதால் அவர்களின் தனிமையைச் சந்தேகப்படவும் முடியாது. அப்படி நடந்து விட்டால் அதற்கு சாட்சிகளும் இருக்க மாட்டார்கள்.

நடப்பதையும் தடுக்க முடியாது. நடந்து விட்டால் நிரூபிக்கவும் முடியாது என்ற நிலையில் தான் உலகம் முழுவதும் நடைமுறையிலிருந்த வழக்கத்தை இஸ்லாம் தடுக்கவில்லை.

வேலைக்காரிகளின் கற்புக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை தானே உள்ளது. எனவே அவர்களையும் அனுபவிக்கலாமா? என்று சிலர் கேட்கலாம்.

வேலைக்காரிக்கும் அடிமைப் பெண்ணுக்குமிடையே பெரிய வித்தியாசங்கள் உள்ளன. ஒரு வேலைக்காரி, வேலைக்காரியாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. குறிப்பிட்ட ஒரு முதலாளியிடம் தான் வேலை செய்ய வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. முதலாளி ஒரு மாதிரி'யாக நடக்கக் கூடியவர் என்று உணர்ந்தால் அந்த வேலையை அவள் உதறி விட முடியும். சுருங்கச் சொன்னால் வேலைக்காரி அந்த நிலையை அவளே தேர்ந்தெடுக்கிறாள். அடிமைப் பெண்கள் விருப்பத்துடன் அவர்களாகவே அடிமையாவதில்லை.
ஆக வேலைக்காரி தன் கற்பைக் காத்துக் கொள்ள மனப்பூர்வமாக விரும்பினால், கற்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும். அடிமைப் பெண் அப்படியெல்லாம் தவிர்த்துக் கொள்ள முடியாது. எனவே வேலைக்காரியுடன் அடிமைகளை ஒப்பிடக் கூடாது.

உடலுறவுத் தேவை என்பது ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் பொதுவானது. பெண்களின் பால் ஆண்களுக்கு நாட்டமிருப்பது போலவே, ஆண்களின் பால் பெண்களுக்கும் நாட்டம் உண்டு. இரு சாராருடைய உணர்வுகளும் கவனிக்கப்பட வேண்டியவையே!

Anonymous said...

அடிமைப் பெண் என்பவள் கணவனை விட்டுப் பிரிக்கப்பட்டோ, அல்லது கன்னியாகவோ பிடித்து வரப்படுகிறாள். அவள் பிடித்து வரப்பட்ட நாட்டில் அவளுக்கு மணம் செய்து வைக்க யாருமே இல்லை. யாராவது முன் வந்தாலும் அவளது எஜமானன் அவளை விலை கொடுத்து வாங்கியிருப்பதால் அதற்கு உடன்பட மாட்டான். திருமணம் செய்து வைத்தால் அவளிடமிருந்து முழு அளவில் வேலை வாங்க முடியாது என்பதால் அவன் அதை நிராகரிக்கவே செய்வான்.

அவன் நிராகரிக்க மாட்டான் என்று வைத்துக் கொண்டாலும் இன்னொரு இடத்தில் முழு நேரமும் இருந்தாக வேண்டிய ஒருத்தியை மணக்க யாருமே முன் வரமாட்டார்கள்.
அவளது உடல் தேவை முழுமையாக மறுக்கப்படும் நிலை; இந்த நிலையில் அவள் என்ன செய்வாள்? கள்ளத் தனமாக கண்டவனையும் நாடுவாள். அல்லது தனது எஜமானனையே சபலப்படுத்தி வெற்றி காண்பாள்.

தன்னைத் தெரிந்தவர்கள் யாருமே இல்லாத இடத்தில் சர்வ சாதாரணமாக அவள் குற்றம் புரியத் துணிந்து விடுவாள். கண்டவனுடனும் கள்ள உறவு வைத்துக் கொள்வதைத் தடுக்கவும் அவளது உணர்வுகளுக்கு வடிகால் ஏற்படுத்தவும் அவளது எஜமானனுக்கு மட்டும் அதை அனுமதிப்பதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. எப்படித் தடுத்தாலும் இது நடந்தே தீரும் விஷயமாக உள்ளதால் இஸ்லாம் அதை அனுமதிக்கின்றது. இது மூன்றாவது காரணம்.

Anonymous said...

நன்றி
payanullathagaval@googlegroups.com,

டெலிவிஷன் said...

இந்த முஸ்லிம்கள் தங்களின் மதத்தில் உள்ள காலத்திற்கு பொருந்தாத விஷயங்களுக்கு இப்படி சகட்டு மேனிக்கு வக்காலத்து வாங்குவதால்தான் இஸ்லாமை மற்றவர்கள் விமர்சனம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. இஸ்லாம் அடிமை முறையை ஏகபோகமாக ஆதரித்ததை என்ன சப்பை கட்டு கட்டினாலும் மறைக்க முடியாது. அறிவிலிகள்.திருந்தாத முட்டாள் கூட்டம் . மத வெறி கொண்ட கொலை செய்ய அலையும் இந்த காட்டுமிராண்டி கும்பலை எப்படியாவது அடித்து துரத்த வேண்டும் என்பதே பலரின் ஆசை.உண்மையான முஸ்லிம்கள் கூட இதைதான் விரும்புகிறார்கள்.

நந்தன் said...

##இனி மேல் அடிமைகள் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டால் அடிமைகளை விலைக்கு வாங்கியவர்கள் பெரிய அளவில் நஷ்டமடைவார்கள்.##

அடிமைகளை விடுதலை செய்துவிடுவதால் எஜமானர்கள் நட்டமடைவார்கள் என்ற உங்களின் நிலைப்பாடு உங்களின் தெளிவான முகவரியையும் குரூரமனத்தையும் சாதி ஆதிக்க மனநிலையையும் காட்டிவிடுகிறது. இன்றும் கூட முன்தொகை என்ற பெயரில் கல்குவாரி முதலாளிகளும், திருப்பூர் ஆலை அதிபர்களும் தொழிளார்களை கொத்தடிமைகளாக வைத்து கசக்கிப் பிழிவதையும் கூட முதலாளி நட்டமடையக்கூடாதுஎன்று உங்களைப் போன்றவர்கள் கவனமாக இருப்பதும் நாங்கள் அறிந்ததே.

##அவளுக்கும் உடல் ரீதியான தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.##

பிஜேவின் கருத்துக்களை கட் அன்ட் போஸ்ட் செய்திருக்கும் அனானியே கொஞ்சமாவது சித்திக்க மாட்டீர்களா? ஒருவர் கூறியதும் அப்படியே அதனை வாந்தி எடுப்பவர்களாக இருக்கிறீர்களே. பெண்ணடிமைகளின் பாலுறவுத் தேவையை நிவர்த்தி செய்ய எஜமானர்களுக்கு காமக் கிழத்திகாளாக முகம்மதுநபி ஆக்கினார்கள் என்று கூறுகிறீர்களே. அப்படியானால் ஆண் அடிமைகளின் பாலுறவுத் தேவைகளை எஜமானியம்மாக்கள் தீர்த்து வைத்தார்களோ! ஆணுக்குத்தான் பாலுணர்வு அதிகம்; அதனாலேயே 4 மனைவி வரை கண்ணாலம் கட்டிக்கிடலாம் என்று முகம்மது கூறினார்கள் என்றும் கூறுகிறீர்கள். அப்படியானால் ஆண் அடிமைகளுக்கும் பாலுணர்வு கூடுதலாகத்தானே இருக்கும். எஜமானியம்மாக்கள் கொடுத்துவைத்தவர்களோ! இப்படியும் சிந்தித்துப் பாருங்கள். பதில் சொல்லுங்கள்.