Friday 12 August 2011

யாருக்கு யார் காஃபிர் – சிறுகதை


இது உண்மை நிகழ்வல்ல, அதே நேரம் கற்பனையுமல்ல. 

வேடதாரிகள் நிரம்பிய இவ்வுலகில் என்னைப்பற்றி கொஞ்சமாவது சொன்னாத்தான் எனக்கும் கொஞ்சம் உற்சாகமாக இருக்கும். தற்பெருமை அடிக்கிறேன்னு நினைக்காம கொஞ்சம் கேளுங்கள். என் பெயர் மாணிக்கம். அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா? ஆமாம் அதில் என்ன இருக்கிறது? மாணிக்கம் என்றதும் நான் என்ன விலைமதிக்க முடியாத, இவ்வுலக சீமான்களின் அழகுப்பொருளா? நானும் ஒரு தொழிலாளிதான். பத்தாம் வகுப்புவரை படித்த நான் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்கிறேன்.

இதோ என்னருகில் நிற்கிறானே அப்துல் ரஹ்மான், அவன் என்னுடைய பள்ளித் தோழன். ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்த தோழன். அவனும் சுமாராத்தான் படிப்பான். ஆனாலும் கல்லூரிவரை போய் உப்புபெறாத ஒரு பட்டப்படிப்பை முடித்துவிட்டான். பேருக்கு பக்கத்தில போட்டுக்கலாம். அவனுக்கு தொழில் மளிகை கடைதான். வெளியூர் வெளிநாடு போய் சம்பாதிக்கனும் என்றுதான் அவன் ஆசைப்பட்டான். அவனுடை அப்பாவுக்கு உடம்புக்கு முடியாம போனதாலே அவங்களுடைய மளிகைக் கடையை கவனித்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. காசு பணம், நில புலன்கள் என்று கொஞ்சம் தாராளமாக அவர்களிடம் உள்ளதால் வெளிநாட்டுப் பொருள்களை பயன்படுத்துவதில் அவனுக்கு குறையில்லை.

      சாயங்காலம் ஆனா பள்ளிக்கூடத் திடலில் தினமும் பூப்பந்தாட்டம் ஆடுவோம். அப்புறம் கொஞ்சநேரம் டீ கடையில் அரட்டை. 35 வயதாகிவிட்டாலும் இது தொடர்ந்து வருகிறது. ரஹ்மான் ரொம்ப நல்லவன். அவங்கவீட்டுக்குப் போனா அவனுடைய அப்பா அம்மா தன் பிள்ளையைப்போல் அன்பா உபசரிப்பாங்க. உண்ணத் தருவார்கள். குறைந்தப் பட்டசம் டீயாவது குடிக்காம வெளியே வரமுடியாது. எங்கள் ஊர் இசுலாமியர்கள் அதிகம் வாழும் சிறு நகரம் என்பதால் எனக்கு அதிக நண்பர்களும் பழக்கவழக்கங்களும் இசுலாமியர்கள் மத்தியில் தான். மாற்று மதத்தவர்களை சகோதரர்கள் என்று அவர்கள் சொல்லுவதை பொதுவாக அணைவரும் அறிந்திருந்தாலும், ரஹ்மான் gifஎன்னிடம் எந்த வேறுபாடும் காட்டியதில்லை எனபதால் எனக்கு அவர்கள் அப்படி கூறியதில் நம்பிக்கை அதிகமாகவே இருந்தது.

இசுலாமியர்களின் திருமண விருந்துகளில் 5 அல்லது 6 பேர் ஒன்றாக வட்டமாக அமர்ந்து gஒரே (பெரிய) தட்டில் உண்பது வழக்கமாக இருந்தது. அந்த தட்டுக்கு சஹன் என்பர். இன்று, இசுலாமியர்களும் அப்படி உண்பதை அருவெருப்புப்பட்டு அதனை ஒழித்துவிட்டது தனிக்கதை. அப்படி அந்த தட்டில் ரஹ்மான் மற்றும் பிற நண்பர்களுடன் ஒன்றாக உட்கார்ந்து வாலிபர்களாக இருக்கும்போது உணவு உண்போம். அது அந்தக் காலம்.

இன்று  எங்களிர்வருக்கும் இடையில் ஒரு சிக்கல். எனக்கு ஏற்பட்ட விபரீதமான ஆசை இந்த சிக்கலை உருவாக்கிவிட்டது. அது என்ன என்று சொல்கிறேன்.

நான்        : ரஹ்மான், எனக்கு ஒரு சின்ன ஆசை.

ரஹ்மான்    : என்னடா?

நான்        : என்னை இன்னிக்கு உன்னோடு பள்ளிவாசல்ல தொழுக
  கூட்டிக்கொண்டு போயேன்.

ரஹ்மான்    : என்னடா சொல்ற! தொழுக வர்ரீயா?

நான்        : ஆமாம்!

ரஹ்மான்    : ம்ம்... அதெல்லாம் முடியாதுடா. உனக்கேன்டா இந்த ஆசை?

நான்        : அது என்னவோ. கூட்டிப்போவியா மாட்டியா?

ரஹ்மான்    : அங்கெல்லாம் தொழ உன்னை விடமாட்டாங்கடா?

நான்        : ஏன்?

ரஹ்மான்    :டேய்! லூசு. முஸ்லிமா இல்லாதவங்க உள்ள வந்து
 தொழக்கூடாதுடா.

நான்        : அதுதான் ஏன்னு கேட்கிறேன்?

ரஹ்மான்    : ஏன்னா நீ முஸ்லீம் இல்ல.

நான்        ; நான் முஸ்லீம் இல்லேன்னா அல்லாவை தொழக்கூடாதா?

ரஹ்மான்    : எனக்கு சரியா பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நீ பள்ளிவாசல் உள்ள வந்து தொழக்கூடாது.

நான்        : என்னை சகோதரன் என்று அழைக்கிறீர்கள். அப்படியிருக்க நான் தொழவரக்கூடாதா?

ரஹ்மான்    : டேய்! அதுக்கெல்லாம் சில வழிமுறை இருக்குதுடா. சுத்தமா இருக்கனும்....

நான்        : சுத்தமா கொழும்பு சோப்பு போட்டு இப்பத்தான் குளிச்சிட்டு வர்ரேன். சென்ட் எல்லாம் அடிச்சிகிட்டு சும்மா கம.. கமன்னு இருக்கேன் மாப்பிளே.
ரஹ்மான்    : அது மட்டுமில்டா..... ஒன்ணுக்கு போனா கழுவனும், ஒழுச்செய்யத் தெரியனும்....

நான்        : நான்தான் குளிச்சிட்டேன்ல. இதுக்கப்புறம் ஒண்ணுக்கு போனா கழுவிக்கிறேன். ஒழுச்செய்ய சொல்லித்தா அதன்படி செய்றேன்

ரஹ்மான்    : முஸ்லீம்மா இல்லாதவங்க உள்ள வந்து தொழக் கூடாதுடா.

நான்        : அதுதான் ஏன் என்கிறேன்? யாரை முசுலீம் என்கிறாய்? பெயரை மட்டும் வைத்துக்கொண்டிருப்பவன் முசுலீம் இல்லை; குர்ஆன், முகம்மதுநபி சொல்வதை கடைபிடிப்பவன்தான் முசுலீம் என்கிறாய். ஆனால் தண்ணியடிப்பவன், விபச்சாரியிடம் போறவன், சூன் காளி சுதி காளி என்று பொண்ணுகளை துரத்துரவன், வட்டி வாங்குகிறவன், சாராயம் விற்கிறவன், கடத்தல் தொழில் செய்கிறவன், கள்ள வியாபாரம் செய்றவன் இப்படி எல்லோரும் பள்ளிவாசல் உள்ள வந்து தொழத்தானே செய்கிறார்கள். அவர்களை இப்படி எல்லாம் செய்யாத சுத்தமானவர்கள் சோதனை செய்தா தொழுவதற்கு உள்ளே விடுறீங்க? அத விடு மாப்ளே1 இன்னிக்கு பாரு. உங்களை எல்லாம் முஸ்லீம் இல்லேங்கிறார் பி.ஜே அண்ணன். நீங்கலெல்லாம் அவர் கூட்டத்தை நஜாத் என்று சொல்லி முஸ்லீம் இல்லீங்கிறீங்க. அப்படி உங்களுக்குள்ளேயே ஒருத்தர ஒருத்தர் முஸ்லீம் இல்லேன்னு சொல்லிக்கிறீங்க. ஆனால் தொழுக உள்ளே விடுறீங்க. அப்படியிருக்க சகோதரனுன்னு என்னை சொல்லிக்கிட்டு உள்ள வந்து தொழக்கூடாதுன்னு சொல்றியே. இது நியாயமா?

ரஹ்மான்    : அது புனிதமான இடம்டா !

நான்        : டேய்!  இந்த பள்ளிவாசல கட்டினது நாங்க. இன்னவரைக்கும் மராமத்து வேளைகளை உள்ள வந்து செய்றதும் நாங்க. ஆனால் தொழ மட்டும் நாங்க உள்ள வரக்கூடாதா? நாங்க சிலையை வணங்குகிறோம். அதனை கல்லா இருந்தாலும் தெய்வத்தின் உருவம் என்பதால் புனிதமானது என்கிறோம். நீங்க என்ன சொல்லுறீங்க. அது வெறும் கல்லு. தெய்வமாக முடியாது, வெறும் கல்லு புனிதமாக முடியாது என்றும் சொல்லுறீங்க. அப்படின்னா இது வெறும் கட்டிடம்தானே. இது புனிதமான இடம், வேறு மதத்தவங்க உள்ள வந்து  அல்லாவை தொழக்கூடாது என்று ஏன் கூறுகிறாய்? ஒருவேளை உள்ள வந்து மராமத்து வேலை செய்துட்டு நாங்க வெளிய வந்தப்புறம், பாப்பான் தீட்டு கழிப்பதுபோல் தீட்டுக்கழித்து புனிதமாக்குவீங்களோ?

ரஹ்மான்    : அப்படியில்லேடா....

நான்        : என்ன அப்படியில்ல... இன்னும் கொஞ்சம் நான் சொல்ரதை கேட்டுட்டு பதில் சொல்லு. கோவில், சர்ச்சுகளில் பாரு. யாராவது நீ எந்த மதத்தை சேர்ந்தவன்னு பார்த்தா உள்ள விடுறாங்க. சில கோவில் விதிவிலக்கா இருக்கலாம். அங்குகூட நீ சொல்லுற மாதிரி அதற்கான ஒழுக்கத்துடன் போனா அதாவது வேட்டி கட்டிக்கிட்டு சட்டைபோடாம போனா உள்ள விட்டுடுவாங்க. மாற்று மத சகோதர்கள் என்று மூச்சுக்கு முன்னூறு தடவ சொல்ற நீ கூட்டிக்கிட்டு போகமாட்டேங்கிற. தர்காவில மட்டும் உள்ள விடுறீங்களே அது ஏன்டா? காசு வருதுன்னா?

ரஹ்மான்    : தர்கா வழிபாடு ஹராம் மச்சான். அல்லாவைத் தவிர வேறு யாரையும் வணங்க கூடாதுங்கறது எங்க கொள்கை. தர்காவுக்கு போறவங்க முஸ்லீம் இல்லேடா.

நான்        : அப்படி போடு ! தங்களை இசுலாமியர்கள் என்று சொல்லிக் கொண்டு தர்காவுக்கும் போற கோடான கோடிமக்களை இசுலாமியர்கள் இல்லை என்று சொல்ற. நாத்திகர்கள் அல்லாவே இல்லை என்று சொல்லும்போது கோடிக்கனக்கானவர்கள் நம்புவது பொய்யாகுமா? அவங்களெல்லாம் என்ன முட்டாள்களா என்று சொல்லுறீங்க. கோடான கோடிபேர்களாக தர்கா வழிபாடுள்ளவர்கள், இந்துக்கள், கிறித்தவர்களா உள்ளபோது அவர்களின் கடவுளை பொய் என்று நாக்கை புரட்டி பேசுறீங்க. அதவிடு மச்சான். தர்கா வழிபாடு உள்ளவர்களை பள்ளிவாசல் உள்ள விடுவீங்களா மாட்டீங்களா? தர்கா வழிபாடு உள்ளவர்கள் என்று எப்படி கண்டுபிடிப்பீங்க?

வின் டிவில, ஒருநாள் ஒரு பொம்பளை கேட்ட கேள்விக்கு பி.ஜே. அண்ணன் பதில் சொல்லாராரு

அந்தப் பெண் : தர்கா வழிபாடு உள்ளவங்களோடு திருமண உறவுகள் வைத்துக் கொள்ளலாமா ? (சாராம்சத்தில் சுருக்கப்பட்டுள்ளது)

பி.ஜே. அண்ணன் : (அவர் ஸ்டைல) அந்த அம்மா என்ன கேட்குறாங்கன்னா...தர்காவழிபாடு கூடாதுன்னு சொல்றீங்களே. அப்படின்னா அவங்க வீடுகளில் பொண்ண குடுக்கலாமா கூடாதான்னு கேட்குறாங்க. நீங்க ஒண்ண புரிஞ்சிக்கனும். தர்கா வழிபாடு பன்றவங்க முஸ்லீம்களே இல்லேன்னுப்புறம் அவங்க வீட்டுக்கு பொண்ண குடுக்கலாமா கூடாதான்னு கேட்குற கேள்விக்கே இடமில்ல.

----இப்படி சொல்லாரு. நான் என்ன கேட்கிறன்னா.. பி.ஜே அண்ணன், அவங்க ஆட்களை பள்ளி வாசலுக்கு உள்ளே விடலைன்னு ஊருக்கு ஊரு தனி பள்ளிவாசல் கட்டிக்கிட்டு வர்ராரு. அது உள்ளே தர்கா வழிபாடுகாரர்களை (குல தெய்வத்தை வழிபடுறவங்கன்னு சொல்லறாங்க) உள்ளே விடுவாரா? மாட்டாரா? எப்படி அடையாளம் தெரிஞ்சு தடுப்பாரு?

ரஹ்மான்    : ஊருக்கு ஊரு யாரு தர்காவுக்கு போறாங்கன்னு தெரியும்லே..

நான்        : அது சரிப்பா. தொண்டிக்காரன் அதிராம்பட்டினத்துக்கு போறான்னு வச்சுக்க. அப்ப என்ன செய்றது?

ரஹ்மான்    : டேய் ! ஏண்டா என்ன போட்டு உசிர வாங்குற...

நான்        : மச்சான் ! தர்கா வழிபாட்டுகாரங்களை காபிர் என்று சொன்னாலும் தலையில் தொப்பியும், அப்துல்காதர்னு பேரும் இருந்தா உள்ள விடுவாங்கள்ள. அது போல சகோதர்கள் என்று எங்களைச் சொல்லும் நீங்கள் தலையில் தொப்பி போட்டுக்கிட்டு வந்தா உள்ள விடுவீங்களா? மாட்டீங்களா? நாங்க இரண்டுபேரும் காபிர்கள்தானே !

ரஹ்மான்    : டேய் ! ஆளை விடுடா. நாளைக்கு அஸரத்து (இமாம்) கிட்ட கேட்டுக்கொண்டு வந்து சொல்லறேன்.

நான்        : அப்போ உனக்கும் உங்க மதத்தைப் பத்தி தெளிவா தெரியாதுன்னு சொல்லு. சரி பரவாயில்ல. கேட்டுக்கிட்டு வந்து சொல்லு.

எங்கள் இருவருக்கும் இடையில் சிக்கல் ஏன் ஏற்பட்டது என்று புரிந்து விட்டதா? ஆனாலும் அவன் அஸரத்திடம் இதுவரை கேட்காததால் நாங்களிருவரும் இன்றும் நண்பர்களாகத்தான் உள்ளோம்.

Facebook Comments

12 கருத்துரைகள்:

Mohamed Faaique said...

அப்படி போய் தொழுவதில் தவறு ஏதும் இல்லையே!! நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கூட நபி (ஸல்) அவர்களை காண எத்தனையோ முஸ்லீமல்லாதோர் மஸ்ஜிதிற்கு வந்திருக்கின்றனர். அவரின் அறியாத்தனத்தால் வேண்டாம் என்று சொல்லி இருப்பார். அவ்வளவுதான்...

செந்தோழன் said...

கதை நன்றாகவுள்ளது.இரத்தின சுருக்கமாக;கருத்து செரியுடனும்; மதங்களுக்குள் உள்ள ஒற்றுமையை; சுட்டிக்காட்டிய விதம் நன்றாகயிருந்தது.இஸ்லாம் ஒரு தனித்த மதமன்று.குறிப்பாக `பி ஜெ’ யிடம் ஒரு பெண் கேள்வி கேட்டதையும்;பி ஜெ யின் சமாளிப்பு பதிலையும்; கதையோட்டத்தோடு சேர்த்தது மிக நன்றாகவுள்ளது.இதுபோல் கதைகளும் கட்டுரைகளும் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.காலத்துக்கு ஒவ்வாத மதத்தை நவீனபடுத்தி பீற்றிக்கொள்வதில் அர்த்தமே இல்லை! புரியுமா இஸ்லாமிய சமூகம்.

--
தோழமையுடன்
செந்தோழன்

வாஞ்சையுடன் வாஞ்சூர். said...

அருட்கொடையாம் தொழுகை.

தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே.

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.

தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.


CLICK AND READ.
>>> முஸ்லீம்களே!! தொழுகைக்கு நேரம் வகுப்பது சரிதானா? <<<

>>> முஸ்லீம்களே!! வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகைக்கு முக்கிய‌த்துவம் ஏன்? <<<


>>>
முஸ்லீம்களே அரபு மொழியில் மட்டும் வழிபாடு ஏன் ?
<<<

>>>
க‌ட‌வுளின் உருவங்க‌ள‌ற்ற‌ பள்ளிவாச‌ல்க‌ள் எப்ப‌டி புனித‌மாக‌ இருக்க‌முடியும்?
<<<


வாஞ்சையுடன் வாஞ்சூர்.

Amjat said...

சகோதரா ! புரட்சி கரமாய் பேசுவதை நினைத்து முட்டாள் தனமாய் உளற வேண்டாம்
ஏதோ ஒரு அப்துல் ரஹ்மான் சொன்னது அல்ல இஸ்லாம் ..உன்னை தொழ வேண்டாம் என சொல்ல யாருக்கும் அனுமதி இல்லை ..இன்னும் விளக்கம் அளிப்பேன் இன்ஷா அலலாஹ்

nadunilaiyaalan said...

இஸ்லாமியர்களை பார்த்து இஸ்லாத்தை தெரிந்து கொள்ளாதே ...இஸ்லாத்தை பார்த்து இஸ்லாமை தெரிந்து கொள் .ஏனென்றால் நீங்கள் பார்த்த இஸ்லாமியர் தவறான நபராக இருக்கலாம்..நான் மீண்டும் வருவேன் உங்களுக்கு என்னால் இயன்ற விளக்கம் அளிக்க

சாகித் said...

இசுலாமியர்களே, நீங்கள் ஒரு காபிரை காஃபிர் என்ற அடையாளத்துடன் பள்ளிவாசலுக்குள் தொழுவதற்கு அழைத்துச் செல்வீகளா? அது ஹலாலா? ஹராமா? இக்கேள்விக்கு நேரிடையாகப் பதில் சொல்லுங்கள்.

அன்பு நாத்திகன் said...

அன்பு நாத்திகன் \\\\\\\\ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?///////////
வாஞ்சூர் நண்பரே அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது ஒவ்வொரு பணியும், ஒவ்வொரு நாட்டிலும்,அந்தந்த நாட்டிற்கும் ஏற்ற நேரத்தில் அவ்வொப்பொழுதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.உதாரணமாக எல்லா நாட்டிலும் ஒவ்வொரு விநாடியும் குழைந்தை பிறத்தல், இறத்தல்,கலவி இன்பம்,இத்யாதி,இத்யாதி எல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது ஏன் காலைக் கடன் கூட சரியாக காலை 5 ,6 அல்லது 7,8 11, 12 மணிக்கு மாலை 3,4,5 என்று எல்லா நாட்டிலும் சுழற்சியாக நடக்கும் போது 24 மணி நேரமும் காலைக் கடன் சம்பவம் நடக்கத்தானே செய்யும் அப்படியானால் காலைக் கடனும் உலக ஆச்சரியாமா? அல்லது காலைக் கடனும் எல்லா வல்ல அல்லாவின் அதிசியமா? எங்கள் ஊர் சிவபெருமான் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதாம் 1,2,3 ம் தேதி மட்டும் காலை சூரிய உதயம் சிவலிங்கம் மீது பட்டு 30 நிமிடம் ஒளி வீசும் இது போன்று தமிழகத்தின் பல கோவில்களிலும் சம்பவிக்கிறது. எனவே இந்த அதிசயத்திற்கும், சிவபெருமானுக்கும் தொடர்பு இருப்பதாக இந்துக்கள் கூறுவதை தாங்கள் ஏற்பீர்களா?

RAJA said...

இஸ்லாமியர்களைப் பார்த்து இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ளக்கூடாது. இஸ்லாத்தைப் பார்த்து இஸ்லாமைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
எல்லா முஸ்லீம்களும் குரானையும், முகமதுவையும் பின்பற்றுவதான் இஸ்லாம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அப்படி நினைத்துக்கொண்டு பிற மக்களை வெறுக்கிறார்கள். இஸ்லாமியர்கள் இல்லாத இஸ்லாத்தை எப்படித் தெரிந்து கொள்வது? கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.

ஈமானுள்ளகாபிர் said...

இஸ்லாத்தைப் பற்றி இஸ்லாமியர்களுக்கே தெரியாது.


அதனால் தான் பீ.ஜேகிட்டேயும் ஜபுலாதீனுக்கிட்டேயும் மற்றுமுள்ள இஸ்லாமிய அறிவியல், புவியியல், வானவியல், தரைவியல் அறிஞர்கள்கிட்டேயும் தங்களை ஈமானுள்ள முஸ்லீம்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் குரானிலிருந்து தங்களுக்குப்புரியாத காரியங்களையெல்லாம் கேட்கிறார்கள்.
அவர்களும் சகட்டுமேனிக்கு தங்கள் வாயில் வந்ததையெல்லாம் உளறுகிறார்கள்.

புத்தரைப் பின்பற்றினவர்கள் அவரைப் போலவே தங்களுடைய நடை, உடை, பாவனைகளை அமைத்துக்கொண்டார்கள்.


அதைப்போல முகம்மதுவைப் பின்பற்றுகிறவர்களும் அவரைப்போல இருக்க வேண்டும்.
அதாவது பத்து முதல் பதினைந்து பெண்டாட்டி வரை வைத்திருக்க வேண்டும்.
அதுவும் தன்னை விட பதினைந்து வயது மூத்த வயது பெண் முதல் ஆறு வயது பெண் வரையிலும்.
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் போர் செய்ய வேண்டும். ( ஜிஹாத் )
ஷரியா சட்டத்தை சரியாக கடைபிடிக்க வேண்டும். etc ..etc.

இந்த பின்னூட்டத்துல எழுத இடம் காணாது.

இன்னும் பெரிய லிஸ்ட் இருக்கிறது.

இதற்கு மேல் ஹலால் ஹராம் லிஸ்ட் வேற.

mohamed-irshan said...

ஈமானுள்ளகாபிர் avrhaluku muthalla ungada kotaiya kaluvunga athukku poravu islam patri pesalm..

vijay colombo said...

அருமையான பதிவு நண்பரே
முஸ்லிம்கள் ஜமாஅத் தலைமைகளையும் ,மௌலவிகளையும் நம்பும் வரை அவர்களின் நிலை அதோ கதிதான்....உதாரணமாக அண்மையில் அமெரிக்கா இளநகை மீது போர்குற்ற சாட்டு சுமத்திய போது இலங்கையில் இலங்கை sinhala மக்களை vida அதிகமாக அதற்கு எதிராக கொந்தளித்தது இலங்கை தமிழ் மும்மிங்கள் தான்.. அரசியல் ஆதாயங்களுக்காக மொவலவிகள் முஸ்லிம்களை சேர்த்து ஆர்பாட்டம் நடத்தி மகிந்த மாமாவிடம் நல்ல பெயர் வாங்க ஆசைப்பட்டு அனைத்தும் புஸ்வானம் ஆகியது...

சில மாதங்களின் பின்னர் தம்புள்ளையில் பள்ளிவாசல் onru பௌத்த பிக்குகள் தலைமையில் உடைத்து தரைமட்டம் ஆக்கப்பட்டது ....அமெரிக்க பிரச்சனையின் போது கொதித்து கொந்தளித்த முஸ்லிம் தலைமைகள் அரச பணவரவு,பதவி பறிபோகும் என்ற பயத்தில் வயதுக்கு வந்த பெண்ணை போல கமுக்கமாக அடங்கி விட்டனர்.

இறுதியில் இஸ்லாமியர்கள் தங்களின் வழிபாடு இடத்தை இழந்து விட்டதை தவிர வேர் ஒன்றும் இல்லை...சொந்த சுய அறிவை உபயோகிக்காமல் எவனோ ஒருவன் பின் அணி சேர்ந்து கோஷம் இடுவதால் மட்டும் இஸ்லாம் பலம் பொருந்திய மார்க்கம் ஆகி விடாது....என் இனிய islaamiya சகோ.க்கள் உணர்வார்களா?

Dr.Anburaj said...

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?
அரேபிய வலலாதிக்கம் எப்படி சாத்தியமாகும் ? உலகத்தை சவுதிகாரன் எப்படி அடிமையாக்க முயல்கிறான் பாருங்கள் ? படைதிரட்டுவது போல் அதிக எண்ணிக்கையில் திரண்டு பிறரை அழிக்கபலம் திரட்டுவது இப்படித்தான் சாத்தியம்