மதம் மனிதனுக்கு அபின் போன்றது. அது இதயமில்லா உலகத்தின் இதயம் போன்றது. - கார்ல் மார்க்ஸ்கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள், பரப்பியவன் அயோக்கியன். - தந்தை பெரியார்ஞானஸ்னானத்தைவிட சோப்பு ஸ்னானமே சிறந்தது. - இங்கர்சால்மனிதனின் தொடக்கத்தில் அப்பியிருந்த கடவுள் எனும் இருட்டின் மீது அறிவியலின் ஒளியைப் பாய்ச்சி பரிணாமத்தை விளக்கியவர் சார்லஸ் டார்வின்.
அறிவியலாளர்களும், சமூகவியலாளர்களும் இன்னும் அனேகரும் கடவுள் எனும் கருத்தில் ஒன்றவே இல்லை. கடவுள் என்பதிலேயே ஒன்றமுடியாத போது,
மதம் .....?
மதங்களையும் கடவுளையும் எதிர்ப்பதிலும், மீளாய்வு செய்ய வலியுறுத்துவதிலும் அன்றிலிருந்து இன்று வரை மனிதன் தனது கடமையைச் செய்து வந்திருக்கிறான். அதேபோல அவ்வாறு செயல்படுபவர்களை பல்வேறு வழிகளில் துன்புறுத்தியும், செயல்படவிடாமல் முடக்கியும், தேவைப்பட்டால் உயிரை உருவியெடுத்தும் கூட தங்கள் கடவுளர்களையும், மதங்களையும் காத்துவருகிறார்கள் மதவாதிகள். இதற்கு புருணோ கலிலியோ, போன்ற அறிவியலாளர்கள் தொடக்கம், நம்முடைய சமகாலத்தில் நமக்கு வெகு அருகிலேயே கவிஞர் ரசூல் (மைலாஞ்சி கவிதைகள்) ஈறாக சான்றுகள் ஏராளம் ஏராளம். ஆனாலும் ஆத்திகர்கள் ஓயவில்லை, அவர்களை எதிர்க்கும் நாத்திகர்களும் ஓயப் போவதில்லை.
உலகின் பெரிய மதமான கிருஸ்தவத்தில் நாத்திகம் என்பது கருத்து அளவில் குற்றமாக கருதப்பட்டாலும், சமூக அளவில் அது பெரிய தாக்குதலை ஏற்படுத்த முடியாமல் தோற்கடிக்கப்பட்டு முடங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு அறிவியலும் அதனை உள் வாங்கும் போக்கில் இச் சமூகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் ஒரு காரணமாகிறது. இந்தியாவின் பெரிய மதமான இந்து மதத்தில் நாத்திகம் என்பதும் இந்து மதத்தின் ஒரு பிரிவுதான் எனக் கூறும் அளவிற்கு அது ஆன்மீக வலுவிழந்திருக்கிறது. (இது மதமல்ல சமூக ஒடுக்கு முறைக்கான குற்றச்சட்டங்களின் தொகுப்பு என்பதும், இன்னும் இதில் அம்பலப்படுத்துவதற்கு ஒன்றுமில்லை என்பதும் அது அதிகார வலுவுடன் சமூக ஒடுக்குமுறைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் வேறு விடயங்கள்) மாறாக இஸ்லாத்தில் கருத்தளவிலும் சமூக அளவிலும் நாத்திகம் என்பது இன்னும் தீவிரமான குற்றமாகவே கருத்தப்படுகிறது.
எனவே அதை எதிர்த்து களமாடுவதும், அவ்வாறு களமாடுவதற்கு உதவுவதும், அதன் மூலம் கருத்தளவில் இஸ்லாத்தை விட்டு வெளியேறி சமூக கட்டுப்பாடுகளினால் உள்ளிருந்து கொண்டிருக்கும் முன்னாள் இஸ்லாமியர்களை இனம் கண்டு, அவர்களை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுப்பதும் முன் தேவையாகிறது.
நாங்கள் அந்த முன் தேவையை உணர்ந்தவர்கள். உணர்ந்து ஒன்றுகூடி தொடங்கிய அமைப்பு தான்
“இறையில்லா இஸ்லாம்”
இதில் எங்கள் இலக்கு இஸ்லாம் மட்டுமேயல்ல, என்றாலும் இஸ்லாம் தான் முதன்மையான இலக்கு.
சமூகத்தை விட மதம் முதன்மையானது அல்ல. சமூக அரசியல் வெளியில் பாட்டாளி மக்களின் உயர்வுக்காக பல்வேறு அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டிருக்கும் நாங்கள், முன்னாள் இஸ்லாமியர் எனும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து மேற்சொன்ன முன் தேவைகளுக்கான ஆயத்தங்களை செய்வதற்காக ஒன்றிணைந்திருக்கிறோம்.
மதப்பரப்புரைகள் இணையத்தின் வழியே தொடராக செய்யப்படுவதை எதிர்கொள்ளவும், உள்ளிருக்கும் நாத்திகர்களுக்கு கருத்தியல் ரீதியாக உதவும் பொருட்டும் இந்த தளத்தில் தொடர்ச்சியாக பல கட்டுரைகளும் தொடர்களும் அதன் வழியே விவாதங்களும் நடைபெற இருக்கின்றன. பல மொழிபெயர்ப்புகளும் வெளியிடப்படவிருக்கின்றன. இஸ்லாம் சமத்துவத்தை போதிக்கிறது என்பவர்களுக்கும், இஸ்லாம் ஒழுக்க நெறிகளை மனித சமுதாயத்திற்கு வழங்கியிருக்கிறது என்பவர்களுக்கும், இஸ்லாம் அறிவியலோடு இயைந்த மதம் என்பவர்களுக்கும்; மெய்யாகவே இஸ்லாம் அப்படியான பண்புகளைக் கொண்டிருக்கிறதா? என்பதை அதன் புனிதங்களை விலக்கி காட்சிப்படுத்த இருக்கிறோம். மட்டுமல்லாது, எங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டால் வேண்டிய ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குவதற்கு ஆயத்தமாக உள்ளோம்.
உங்களின் மேலான கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதன் மூலம் மத மாயைகளை தகர்த்தெறிவதற்கு வாருங்கள்.
வாருங்கள்!ஒன்றிணைவோம்!!நமக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வோம்
13 கருத்துரைகள்:
தோழர்
அறிமுக உரை மிக்க சிறப்பு .மேலும் பெரியாரின் கருத்தில் ”வனங்குகிறவன் காட்டுமிராண்டி” என்ற வாக்கியத்தையும் சேர்க்கவும்.
இப்படிக்கு
அன்பு நாத்திகன்
தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்
காலத்தின் கட்டாய தேவை தோழர் தொடரட்டும் உங்கள் மன்னிக்கவும் நமது பணி தொடருவோம் ........
அறிமுகம் சிறப்பாகஉள்ளது.
மதத்தின் பெயரால் மனிதன் சீரழிந்தது போதும்.
புதிய சமுதாயம் படைப்போம்
தொடரவிருக்கும் பணிக்கு வாழ்த்துக்கள்.
30:30. ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
mele ulla vasanam manithan iyarkaiyaga than padaikappattan enbathai koorukirathu.
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.
24:41 quran verse say that the prayer is that what we live and not the doing of some exercise in front of few people.
நாசர், உங்கள் கூற்றில் என்ன அற்புதம் இக்கால மனிதர்கள் நம்புவதற்கானதாக உள்ளது? நான் கூட, நாயும் பன்றியும் என்னை கவிதைகளால் புகழ்ந்து கொண்டிருக்கிறது என்று கூற முடியும். ஆனால்அதனை நம்பினால் நம்புபவனை பைத்தியம் என்று நீங்கள்ளும் கூறுவீர்கள். முடிந்தால் http://paraiyoasai.wordpress.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/ இதை படிக்கவும்
தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்
மதம் சார்ந்தவர்கள் கோடியவர்கள் மதம் சராதவர்கள் நல்லவர்கள் என்று உங்களால் அணித்தரமாக கூற இயலுமா? உலகில் மதம் இல்லையேன்றால் சமதாணம் அகிவிடுமா? ரஷ்யாவில் கிறுஸ்தவமதம் மதம் சராதவர்களால் சிதைக்கப்பட்டதை மறந்து விட வேண்டாம்.
நான் பாலர் வகுப்பில் தொடங்கி பிளஸ் 2 படிக்கும் வரை மிகுந்த இஸ்லாமியப் பற்றாளனாக இருந்தேன்.
அப்போதிருந்தே எனக்குள்ள பிரச்சினை என்னுடன் கூடப்பபடிக்கும் மாற்று மத பள்ளித்தோழர்கள் ஆசிரியா;கள் எனக்குப்பிடித்தவர்கள் நரகம் சென்றுவிழுடுவார்கள் என்று மேலும் இஸ்லாமியர்கள் செய்யூம் கேவலமான வேலைகளுக்காக வட்கப்படவூம் செய்தேன்.
.
நான் மத நம்பிக்கையோடு ருந்தபோது நிம்மதியாக ருக்கவில்லை.
மத நம்பிக்கையை விட்ட பிறகு நிம்மதியாக உள்ளேன்.
மனிதநேயமிக்கவர்கள் பலர் இஸ்லாத்தை இன்னும் படிக்காம்ல் தெரியாமல் இருப்பதால் இஸ்லாத்தில் இருக்கின்றார்கள். அவர்களும் வெளியேற வேண்டும்.
எங்கள் ஊரில் மதநம்பிக்கை அற்றவர்களுக்கு தனி மரியாதை உண்டு. அவர்கள் எந்த கேவலமான கெட்ட நடத்தைகளும் இல்லாமல் இருக்கின்றர்கள்.
தங்களை வெளிக்காட்டாமல் பலர் இருக்கின்றார்கள். நான் என்னை வெளிக்காட்டி நடப்பதால் என்னிடம் மாத்திரம் வெளிக்காட்டுவார்கள்.
கற்பளிப்பாளி கொலைகாரன் .... பின்னால் இத்தனை கோடிப்பேர் அணி திரள முடியூமென்றால் நல்லவர்கள் ஏன் ஒன்று திரள முடியாது?
உலக சனத்தொகையில் 25 சதவீதம் மதநம்பிக்கையற்றவர்கள் ருப்பதாக ஆய்வூ தகவல் ஒன்று கேட்டேன். அப்படியென்றாள் நாம்தான் பெரும்பான்மை உங்கள் பணியூடன் என்பணியையூம் சேர்த்துக் கொள்கின்றேன்.
Post a Comment