Saturday, 17 January 2015

ஆதாம் படைக்கப்பட்டது எவ்வாறு?

விவாதம் : சட்டம் Vs தஜ்ஜால்



முகநூலில் எனக்கும் உண்மைக்குரல் என்ற இஸ்லாமியருக்கும் ஆதாமின் படைப்பு தொடர்பாக ஒரு விவாதம் நடைபெற்றது. நம்மைப் பொறுத்தவரை அந்த விவாதம் முற்றுப் பெற்றுவிட்டது. ஆனால் முதலில் அனானிமஸாக வந்த நண்பர் சட்டம் //Residue of clay as a evidence packed as your brain. Argument has no result . One who knows everything doesn't know anything. // என்கிறார். மேலும் குர்ஆனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விவாதிப்பதென்றால் தான் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார். எனவே அந்த விவாதம் மீண்டும் தனிப்பதிவாக பின்னூட்டத்தில் தொடர்கிறது. விரும்புபவர்கள் தங்களது கருத்துக்களை பதிவுசெய்யலாம்.  ஆனால் நண்பர் சட்டம் அவர்களில் யாருக்கு பதிலளிக்க விரும்புகிறாரோ அவருக்கு மட்டும் பதிலளிக்கலாம். அது அவருடைய சுதந்திரம்.

 

 

ஒருமையில் விளிப்பது, தனிநபர் தாக்குதல் செய்வது, தலைப்பை விட்டு விலகுவது கூடாது. 

 

 

பதிலளிக்க கால அவகாசம் போன்றவைகளை வரையறுக்க விரும்பினால் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


Facebook Comments

91 கருத்துரைகள்:

சட்டம் said...

23:13. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.

இவ்வசனத்திலும் , முந்தைய வசனத்திலும் படைப்புக்கொள்கை அழகாக சொல்லப்பட்டுள்ளது. முதல் மனிதன் களிமண்ணைக்கொண்டு படைக்கப்பட்டான். அவ்வாவுடன் சந்ததி விரிவாக்கம் இந்திரியத்தின் மூலம் நடைபெற்றது. இதில் உங்கள் குழப்பம் என்ன?

தஜ்ஜால் said...

வணக்கம்!

//முதல் மனிதன் களிமண்ணைக்கொண்டு படைக்கப்பட்டான். அவ்வாவுடன் சந்ததி விரிவாக்கம் இந்திரியத்தின் மூலம் நடைபெற்றது. இதில் உங்கள் குழப்பம் என்ன?//
நம்முடைய இந்த விவாதத்தின் தலைப்பு ஆதாமுடைய சந்ததிகள் எப்படி விரிவடைந்தது என்பதல்ல. ஆதாம் எப்படி படைக்கப்பட்டார் என்பதுதான். எனவே சந்ததிகள் எப்படி வந்தன என்பதைப்பற்றி இங்கு பேச வேண்டியதில்லை என்பது என்னுடைய வேண்டுகோள்!

குர்ஆன் கூறும் ஆதிமனிதன் ஆதாமின் படைப்பு நிகழ்ந்தது எவ்வாறு?

ஆனந்த் சாகர் said...

@சட்டம்

//அவ்வாவுடன் சந்ததி விரிவாக்கம் இந்திரியத்தின் மூலம் நடைபெற்றது. இதில் உங்கள் குழப்பம் என்ன?//

இது தனியாக விவாதிக்க கூடிய விஷயம். சந்ததி விரிவாக்கம் குறித்து குரான் பேசுவது சுத்த உளறல். இது குறித்து நாம் தனியாக விவாதிக்காலாம்.

Ant said...

//முதல் மனிதன் களிமண்ணைக்கொண்டு படைக்கப்பட்டான்// same side goal.

Ant said...

http://www.higopi.com/ucedit/tamil.html இந்த தளத்தில் தமிழில் தட்டச்சு செய்ய (ஆன்லைனில்) வசதியுள்ளது. NMH Writer சில் நேரங்களில் அமைப்புகளில் மாற்றம் செய்ய தேவைப்படலாம். யூனிக்கோடு தட்டச்சு செய்யவது எளிது. Off Line தட்டச்சு செய்ய NMH Writer பயன்படுத்தலாம்.

maha said...

let dajjal and sattam talk. if everyone start to talk , it will be confusing.

தஜ்ஜால் said...

@ சட்டம்.

/23:13. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.//
குர் ஆனைக் கொண்டு மட்டும் விவாதிப்பதாகக் கூறினீர்கள் “(மனிதனைப் படைப்பதற்காக)” என்று அடைப்புக் குறியுடன் துவங்கியிருப்பது நல்ல முரண்பாடு! அடைப்புக் குறிகள் புரிதலுக்காக என்று கூறினால். குர்ஆனை நேரடியாக விளங்க முடியாது என்றாகிறது. குர்ஆனின் வார்த்தைகளைக் கொண்டுமட்டுமே விவாதிக்க வேண்டுமென்று நீங்கள் விதித்த நிபந்தனையை நீங்களே மீறியவராகிறீர்கள்.

சட்டம் said...

23:12. நிச்சயமாக நாம் மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.
முந்தைய விவாதத்தில் மண் என்பதை சிலிகா (SiO2) என்ற வகையில் கருத்துகள் இடம்பெற்றன. அதில் ஒருவர் ஒருபடி மேலே போய் ஏன் மண்ணிலிருந்து வந்த மனிதன் உடம்பில் மண்ணில்லை என கேட்டிருக்கிறார். மண்ணிலிருந்து கிடைக்கும் எல்லாப் பொருளிலும் மண் உண்டென்பதை அவர் நிரூபிப்பாரா?
மரம் , செடி கூட மண்ணில்தான் விளைகிறது. மண்ணில் இல்லாத தனிமம் ஏதும் மனித உடம்பில் உண்டா? களிமண்ணில் உள்ள சத்துக்கள் என்பன மனித உடல் உருவாக்கப்பட்ட வேதிப்பொருட்கள். அதை வெறும் சிலிகா என்பது தவறு. தனி மணலில் இருந்து கண்ணாடி போன்ற சில பொருட்கள் செய்யலாம். வேறு தனிமங்கள் கூடும் பொழுதே அது

சட்டம் said...

சத்துள்ள மண்ணாக மாறுகிறது. மண்ணில் உள்ள சத்துகள் பற்றி விளக்க விவசாயிகள் போதும். அத்தகைத சத்துக்களின் விளைபொருள்தான் மனிதன். மனித உடம்பில் காணப்படும் அனைத்து தனிமங்களுமே மண்ணிலிருந்து கிடைக்கக் கூடியவையே. நம் உடலில் அதிக சதவீதத்தில் உள்ள பொருள் தண்ணீர். அது மண்ணில் இருந்து கிடைக்கவில்லையா? அடுத்த இடத்தில் இருப்பது கால்சியம் பாஸ்பேட் அது மண்ணில் இல்லையா? மண்பாண்டத்தில் சமைத்தால் இயற்கையான டெட்ரா சைக்ளின் உடலுக்கு கிடைக்கிறது. தசைகள் , திசுக்கள் குருதி நாளங்கள் அனைத்துமே ஆர்கானிக் பொருட்கள். எனவே மண்ணிலிருந்தே மனிதன் படைக்கப்பட்டான் என்பதே இவ்வசனம் கூறும் கருத்து.

சட்டம் said...

தயவு செய்து உளறல் , பிதற்றல் , பேத்தல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாமே

தஜ்ஜால் said...

@ சட்டம்,
//. மண்ணிலிருந்து கிடைக்கும் எல்லாப் பொருளிலும் மண் உண்டென்பதை அவர் நிரூபிப்பாரா?// மண்ணிலிருந்து கிடைக்கும் பொருள் என்பதற்கும் மண்ணால் செய்யப்பட்ட பொருள் என்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. உதாரணத்திற்கு மண்பாண்டத்திற்கும் மண்ணிலிருந்து கிடைக்கும் தனிமங்களுக்கும் வேறுபாடு தெரியாதவரா நீங்கள்?

தஜ்ஜால் said...

@ சட்டம்,

// மரம் , செடி கூட மண்ணில்தான் விளைகிறது. மண்ணில் இல்லாத தனிமம் ஏதும் மனித உடம்பில் உண்டா? களிமண்ணில் உள்ள சத்துக்கள் என்பன மனித உடல் உருவாக்கப்பட்ட வேதிப்பொருட்கள். அதை வெறும் சிலிகா என்பது தவறு. ..... ......... அனைத்துமே ஆர்கானிக் பொருட்கள். எனவே மண்ணிலிருந்தே மனிதன் படைக்கப்பட்டான் என்பதே இவ்வசனம் கூறும் கருத்து.// மனிதன் மட்டுமல்ல ஒவ்வொரு உயிரினத்திலும், மரம் செடிகொடிகளில் கூட மண்ணில் இருப்பதாக நீங்கள் பட்டியலிடும் வேதிப் பொருட்களை வெவ்வேறு அளவுகளில் காணலாம். அவற்றையெல்லாம் விட்டுவிட்டு அல்லாஹ் மனிதனைமட்டும் மண்ணுடன் முடிச்சிடுகிறான். இது அல்லாஹ்வின் அறியாமை என்றுதான் சொல்ல முடியும்! மற்றவைகளுக்கும் மண்ணிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையா?

தஜ்ஜால் said...

@ சட்டம்,
பகுப்பாய்வு என்று வரும் பொழுது ஒவ்வொன்றையும் அதன் வேதிப்பெயர்களில் கண்டறிவதுதான் அறிவுடைமை. அந்த வகையில் மண் என்பதை சிலிக்கான் என்றுதான் குறிப்பிட முடியும். மிகமிக நுண்ணிய அளவில் தங்கம் இருப்பதால் மண்ணை தங்கம் என்று குறிப்பிடுவது முறையல்ல. இதைத் தான் நீங்கள் குறிப்பிடும் நண்பர் காஃபியில் மிக மிக நுண்ணிய அளவில் விஷத்தன்மை இருப்பதால் அதை விஷம் என்று குறிப்பிட முடியாது என்றார்.

தஜ்ஜால் said...

@ சட்டம்,
// நம் உடலில் அதிக சதவீதத்தில் உள்ள பொருள் தண்ணீர். அது மண்ணில் இருந்து கிடைக்கவில்லையா?// ம்ம்... ரொம்ப கஷ்டம்! அல்லா(!?)ஹ் என்னுடைய வாழ்க்கையில் இப்படி டப்பாங்குத்து ஆடுவானென்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
//மண்பாண்டத்தில் சமைத்தால் இயற்கையான டெட்ரா சைக்ளின் உடலுக்கு கிடைக்கிறது. தசைகள் , திசுக்கள் குருதி நாளங்கள் அனைத்துமே ஆர்கானிக் பொருட்கள். எனவே மண்ணிலிருந்தே மனிதன் படைக்கப்பட்டான் என்பதே இவ்வசனம் கூறும் கருத்து// நல்ல வாய்ப்பாக மண்சோறு சாப்பிடுவதால் ஆத்தாவின் அருள் கிடைக்கிறது என்று சொல்லவில்லை.

நிறைய எதிர்பார்க்கிறேன்.

சட்டம் said...

//மண்ணிலிருந்து கிடைக்கும் பொருள் என்பதற்கும் மண்ணால் செய்யப்பட்ட பொருள் என்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. உதாரணத்திற்கு மண்பாண்டத்திற்கும் மண்ணிலிருந்து கிடைக்கும் தனிமங்களுக்கும் வேறுபாடு தெரியாதவரா நீங்கள்? //
வேறுபாடு தெரியாதவர் தாங்கள்தான். வெறும் மண்ணிலிருந்து செய்யப்படும் பொருட்கள்
சிலிகா ஜெல்
கண்ணாடி
குறைகடத்திகள் (semiconductors)
மண்பாண்டம் ,செங்கல் இவை வெறும் மண்ணல்ல. மண்+ காஉலோக ஆக்ஸைடுகள் (iron oxide , magnesium oxide, aluminium oxide, etc) சிகப்பு நிநிறத்தில் இருந்தால் இரும்பு உள்ளது என்று அர்த்தம். பச்சை எனறால் செம்பு உள்ளது என அர்த்தம். வெறும் மண்ணிற்கு curing பண்பு கிடையாது. ஒன்றோடொன்று இறுகாதுஂ தனிமங்கள்தான் வேதிவினை நிகழ்த்தி இறுக்கத்தன்மையை பெறுகின்றன. வெறும் மண் என்பதை அறிந்து கொள்ளவும்.

தஜ்ஜால் said...

@ சட்டம்,

//வேறுபாடு தெரியாதவர் தாங்கள்தான். வெறும் மண்ணிலிருந்து செய்யப்படும் பொருட்கள்
சிலிகா ஜெல்
கண்ணாடி
குறைகடத்திகள் (semiconductors)
....
வெறும் மண்ணிற்கு curing பண்பு கிடையாது. ஒன்றோடொன்று இறுகாதுஂ தனிமங்கள்தான் வேதிவினை நிகழ்த்தி இறுக்கத்தன்மையை பெறுகின்றன. வெறும் மண் என்பதை அறிந்து கொள்ளவும்.//
மண்ணிலிருந்து என்ன பொருட்களை எடுக்கிறார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறதா? அல்லது மண்ணின் மகத்துவம் பற்றி கட்டுரை வரைக என்று ஏதாவது கேள்வி கேட்டிருக்கிறோமா? உங்களுக்குத் தெரிந்தையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதற்கு பள்ளிவாசல் பயானோ அல்லது மதபிரசங்க கூட்டங்களோ போதும். விவாதம் எதற்கு?

தஜ்ஜால் said...

@ சட்டம்,

ஆதாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது.
ஆனால் குறிப்பிட்ட அந்தக் கட்டுரை //இந்த போலி பகுத்தறிவாளர்கள் எப்படி விளங்கி வைத்துள்ளனர் என்றால் ... மண்ணை எடுத்து அதில் ஒரு பொம்மை செய்து அந்த பொம்மையே ஆதம் .... அப்போ அந்த ஆதமுக்கு எலும்பு தசைகள் , எங்கிருந்து வந்தது குர்ஆன் அது பற்றி கூறவில்லையே என்றும் சில அதிமேதாவிகள் கூறுகின்றனர் கேட்டால் விவாதமாம் // இதில்தான் விவாதம் நடைபெற்றது.

ஆதாம் படைக்கப்பட்டது எவ்வாறு?

சட்டம் said...


7:12. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை ()விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று கூறினான்.
3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” () எனக் கூறினான்; அவர் () ஆகிவிட்டார்.نُونٍ
15:26. ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.
15:28. (!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்: “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்” என்றும்,
15:33. அதற்கு இப்லீஸ், “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள () மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!” என்று கூறினான்

18:37. அவனுடைய தோழன் அவனுடன் (தர்க்கித்தவனாக: “உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?” என்று அவனிடம் கேட்டான்.

சட்டம் said...


32:7. அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்.

55:14. சுட்ட மண் பாண்டங்களைப் போல் () சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் () மனிதனைப் படைத்தான்.

மேற்கண்ட வசனங்களில் மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்றுதான் உள்ளன. இதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். உங்களுக்கு செய்முறை விளக்கம் தேவையென்றால் குரானில் அது இல்லை. ஆகவே மண்பாண்டம் போல் மனிதனை சித்தரிக்கும் செய்முறைதான் தாங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள் . அதனால் அதை தாண்டி உங்களுக்கு சிந்திக்க இயலவில்லை. இறைவனிடம் இறைஞ்சுங்கள் .

தஜ்ஜால் said...

15:26. ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.

23: 12. களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம்.

55:14. சுட்ட மண் பாண்டங்களைப் போல் சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் மனிதனைப் படைத்தான்.

////மேற்கண்ட வசனங்களில் மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்றுதான் உள்ளன. இதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். உங்களுக்கு செய்முறை விளக்கம் தேவையென்றால் குரானில் அது இல்லை.// செய்முறை விளக்கம் இல்லையா?

38:75. "எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது?...

ஆதாமை அல்லாஹ் மண்பாண்டம் செய்வது போல சக்கரத்தில் வைத்து சுழற்றி உருவாக்கியதாகக் கூறவில்லை. சிற்பி போல தனது இரண்டு கைகளால் வடிவமைத்துப் படைத்தான் என்கிறது குர்ஆன். அதன் பிறகு,

23:13 பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம்.

இத்தனை குர்ஆன் வசனங்களையும் தேடிப்பிடித்து உங்களுக்கு 23:13-ம் வசனம் கண்களில் தென்படாமல்(!) போனது தற்செயலானது அல்ல!. குறிப்பிட்ட இந்த வசனம் என்ன சொல்கிறது என்றால், பின்னர்தான் மனிதன் விந்துத் துளியாக ஆக்கப்பட்டானாம். இதன் பொருள் இதற்கு முன் அவன் விந்துத் துளியாக இருக்கவில்லை என்பதுதான். 15:26, 15:33, 23:12, 55:14 போன்ற வசனங்கள் களிமண்ணிலிருந்து மனிதன் உருவாக்கப்பட்டதாகக் கூறுகிறது. களிமண்ணிலிருந்து மனிதன், மனிதனிலிருந்து விந்து இதுவே குர்ஆன் கூறும் படைப்பியல் கோட்பாடு.

//ஆகவே மண்பாண்டம் போல் மனிதனை சித்தரிக்கும் செய்முறைதான் தாங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள்.// ஓ... நீங்கள் வேறு ஏதோ ஒரு முறையை அறிந்து வைத்திருப்பதாகத் தெரிகிறது. அதை குர்ஆன் அடிப்படையில் விளக்கலாம். வேறுவழியில்லையெனில் அதையும் தாண்டி சிந்திக்கும் திறனுள்ள தாங்கள் உங்களது கற்பனைக் குதிரையை தட்டிவிலாம்! அப்படியும் இயலவில்லையெனில் உங்கள் இறைவனிடம் இறைஞ்சுங்கள் வஹீ இறக்கப்படலாம்

சட்டம் said...

38:72. “நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது: அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்”

38:75. “இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது

செவ்வைபடுத்தி என்பதை தாங்கள் சிற்பம் வடிப்பது என அர்த்தம் கொண்டீர்களோ.

சட்டம் said...


48:29. முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது;

சட்டம் said...


67:22. முகம் குப்புற விழுந்து செல்பவன் மிக நேர்வழி அடைந்தவனா? அல்லது நேரான பாதையில் செவ்வையாக நடப்பவ(ன்)னா.

75:4. அன்று; அவன் நுனி விரல்களையும் () செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.

75:38. பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் ( ) படைத்து செவ்வையாக்கினான்.

82:7. அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
87:2. அவனே () படைத்துச் செவ்வையாக்கினான்.

இவை செவ்வை என்ற வார்த்தை இடம் பெறும் வசனங்கள்.அதன் பொருள் அறிந்து கொள்க.

தஜ்ஜால் said...

@ சட்டம்,

//செவ்வைபடுத்தி என்பதை தாங்கள் சிற்பம் வடிப்பது என அர்த்தம் கொண்டீர்களோ.//

அல்லாஹ், களிமண்ணை தனது இரண்டு கைகளால் செவ்வைப்படுத்தி வடிவமைத்து மனிதனாக்கினான் என்பதை குர்ஆன் கூறுகிறது. அவன் சிற்பமாக வடிக்கவில்லை என்பது உங்களுடைய நிலை. இந்த ”செம்மை-செவ்வை” என்ற சொல்லில் நீங்கள் ஏதோ அரிய அரிய விஷயத்தைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் முன்பே கூறியதைப் போல // நீங்கள் வேறு ஏதோ ஒரு முறையை அறிந்து வைத்திருப்பதாகத் தெரிகிறது. அதை குர்ஆன் அடிப்படையில் விளக்கலாம். வேறுவழியில்லையெனில் அதையும் தாண்டி சிந்திக்கும் திறனுள்ள தாங்கள் உங்களது கற்பனைக் குதிரையை தட்டிவிலாம்!

தஜ்ஜால் said...

@ சட்டம்,

எனது வாதம் சிம்பிள்,

குர்ஆனின் கூற்றுப்படி,
களிமண்ணிலிருந்து அல்லாஹ் தனது இரண்டு கைகளால் மனிதனை வடிவமைத்து உருவாக்கினான். அப்படி உருவாக்கிய மனிதனிலிருந்து அவனுக்குத் துணையாக ஒரு பெண்ணை உற்பத்தி செய்கிறான். ஆதாம் என்ற மனிதனிலிருந்து விந்து உற்பத்தி- விந்து மனித சந்ததிகளாக உருவானது. பாவம் பெண்ணிற்கு கருவை சுமப்பதைத்தவிர வேறு எந்த பங்கும் இல்லையாம்!

தஜ்ஜால் said...

@ சட்டம்,

23:13 பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம்.

அப்படியே இந்த வசனத்தையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறன்.


இங்கு நடப்பது விவாதம். இப்பொழுதுவரை உங்களது நிலையை நீங்கள் தெளிவாகச் சொல்லவே இல்லை! படைப்புபற்றி பொதுவாக இருக்கும் முஸ்லீம்களின் நம்பிக்கையைத் தவறு என்கிறீர்கள். அது ஏன்? எப்படி? தவறு என்பதை விளக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. முதலில் உங்களது நிலையை குர்ஆன் அடிப்படையில் தெளிவுபடுத்திவிட்டு வாதத்தைத் தொடருங்கள்!

சட்டம் said...

எனது முதல் பதிவிலே சொல்லி விட்டேன்.
முதல் மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான். அவன் சந்ததி விந்து மூலம் படைக்கப்படுகிறான்.இதுதான் என் நிலைப்பாடு. இது புரியாமல்தான் இவ்வளவு நேரம் பேசினீர்.

தஜ்ஜால் said...


@ சட்டம்,

//முதல் மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான்.// எவ்வாறு?

//செவ்வைபடுத்தி என்பதை தாங்கள் சிற்பம் வடிப்பது என அர்த்தம் கொண்டீர்களோ.// ஆதாம், களிமண்ணால் உருவம் செய்யப்பட்டு உயிர் கொடுக்கப்படவில்லை என்கிறீர்கள்?

இது ஆதாமின் படைப்புபற்றிப் பொதுவாக முஸ்லீம்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு எதிரானது. அவர்களின் இந்த நம்பிக்கை ஏன்- எப்படி? தவறு என்பதை விளக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

தஜ்ஜால் said...

//எனது முதல் பதிவிலே சொல்லி விட்டேன்.
முதல் மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான். அவன் சந்ததி விந்து மூலம் படைக்கப்படுகிறான்.இதுதான் என் நிலைப்பாடு. இது புரியாமல்தான் இவ்வளவு நேரம் பேசினீர்.// உங்கள் நிலைப்பாடு தெளிவில்லை. முதலியே கூறினேன். மறுபடியும் கூறுகிறேன்.

//இந்த போலி பகுத்தறிவாளர்கள் எப்படி விளங்கி வைத்துள்ளனர் என்றால் ... மண்ணை எடுத்து அதில் ஒரு பொம்மை செய்து அந்த பொம்மையே ஆதம் .... அப்போ அந்த ஆதமுக்கு எலும்பு தசைகள் , எங்கிருந்து வந்தது குர்ஆன் அது பற்றி கூறவில்லையே என்றும் சில அதிமேதாவிகள் கூறுகின்றனர் கேட்டால் விவாதமாம் // இதில்தான் விவாதம் நடைபெற்றது. //

ஆதாம் உருவாக்கம் களிமண் பொம்மையா? இல்லை வேறு ஏதாவது முறையிலா?

எதுவாக இருப்பினும் முதலில் உங்களது நிலையைத் குர்ஆன் அடிப்படையில் தெளிவுபடுத்தவும்.

சட்டம் said...


82:7. அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்

82:8. எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (பொருத்தினான்.
جِدِينَ
7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் ” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர யாவரும் தலைவணக்கம் செய்தார்கள்; அவன் தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.

3:49. இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு () பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் () ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது”

64:3. வானங்களையும், பூமியையும் அவன் சத்தியத்துடன் படைத்துள்ளான்; அன்றியும் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களையும் அழகாக்கினான்; அவனிடம் தாம் மீளுதல் இருக்கிறது.

71:17. “அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான்.

சட்டம் said...

மேலே உள்ள வசனங்களில் ஈசா நபியின் அத்தாட்சியாக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி " என குர்ஆன் ஐயமற விளக்கமாக சொல்கிறது. ஆனால் மனிதப்படைப்பை பற்றி இப்படி ஒரு வசனம் இருந்தால் உங்கள் கருத்தை பரிசீலிக்கலாம். ஆனால் மனிதப்படைப்பை பற்றி பேசும் போதெல்லாம் மண்ணிலிருந்து , உருக்கொடுக்கப்பட்டு , என்ற பதங்கள்தான் பயன்படுத்தப்படுகிறது. வசனம் 38:75 ல் எனது கைகளால் படைக்கப்பட்ட என்றுதான் உள்ளது. மாறாக எனது கைகளால் வடிவமைக்கப்பட்டு அல்லது உருக்கொடுக்கப்பட்டு என இருந்தால் உங்கள் வாதம் வலுப்படலாம். கைகளால் படைக்கப்பட்டு என்றுதானே உள்ளது. அல்லாஹ் எல்லாவற்றையும் படைத்தேன் என்றுதான் சொல்கிறான். ஏனெனில் அவன் படைத்த அத்தனையும் அதற்கு முன் கிடையாது. மனிதனும் அவ்வாறே. அந்த படைப்புச்சூத்திரம் இல்லாமையிலிருந்து ஒன்றை படைப்பது.ஆகுக என்றால் உருவாகிய மற்ற படைப்புகள் எவ்வாறோ அவ்வாறேதான் மனிதனும். பூமியையே முன்மாதிரி இன்றி படைத்த எங்கள் ஆண்டவனுக்கு எதற்கு ஒரு களிமண் பொம்மை. மண்ணிலிருந்து மனிதனை படைத்தான் , அதற்கு உருவம் கொடுக்கிறான். பின்னர் அதற்கு உயிர் கொடுக்கிறான். இதைத்தான் நான் குர்ஆன் மூலம் அறிந்துள்ளேன். இதற்கு மேல் தங்களின் கருத்து அறிந்து பேசுகிறேன்.

தஜ்ஜால் said...

//மேலே உள்ள வசனங்களில் ஈசா நபியின் அத்தாட்சியாக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி " என குர்ஆன் ஐயமற விளக்கமாக சொல்கிறது. ஆனால் மனிதப்படைப்பை பற்றி இப்படி ஒரு வசனம் இருந்தால் உங்கள் கருத்தை பரிசீலிக்கலாம்.//

இதை பரிசீலிப்பதுதான் சரியானது. ஏனென்றால் ஈஸாவிற்கு இப்படியொரு சிந்தனை தானாகத் தோன்றியிருக்க முடியாது. இஸ்லாமிய நம்பிக்கைப்படி ஒவ்வொன்றுமே அல்லாஹ் முடிவு செய்வதுதான். மேலும்

பீஜே மொழிபெயர்ப்பு
15:26. சேற்றிலிருந்த கருப்புக் களி மண்ணால் வடிவமைத்து மனிதனைப் படைத்தோம்.
15:28. "சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைத்து, நான் மனிதனைப் படைக்கவுள்ளேன்'' என்று வானவர்களுக்கு உமது இறைவன் கூறியதை நினைவூட்டுவீராக!
15:29. "அவரை நான் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நான் ஊதும் போது, அவருக்குப் பணிந்து விழுங்கள்!''
15: 33. "சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு நீ படைத்த மனிதனுக்கு நான் பணிபவனாக இல்லை'' என்று அவன் கூறினான்.
இந்த குர்ஆன் வசனங்கள் நீங்கள் விரும்பியவாறு ஆதாமை வடிவமைத்து உருவாகியதாகக் கூறுகிறது.

தஜ்ஜால் said...

//ஆனால் மனிதப்படைப்பை பற்றி பேசும் போதெல்லாம் மண்ணிலிருந்து , உருக்கொடுக்கப்பட்டு , என்ற பதங்கள்தான் பயன்படுத்தப்படுகிறது. வசனம் 38:75 ல் எனது கைகளால் படைக்கப்பட்ட என்றுதான் உள்ளது. மாறாக எனது கைகளால் வடிவமைக்கப்பட்டு அல்லது உருக்கொடுக்கப்பட்டு என இருந்தால் உங்கள் வாதம் வலுப்படலாம். கைகளால் படைக்கப்பட்டு என்றுதானே உள்ளது.//

தான் எதைப்படைக்க நாடினாலும் குன் என்றால் அது உடனே ஆகிவிடும் என்று சொல்லக்கூடிய அல்லாஹ்வின் செயல் முறைகள், ஆதமைப்பற்றிச் சொல்லும் பொழுது மாறுபடுகிறது. ஆகுக என்றவுடன் மனிதன் உண்டாகிவிட்டான் என்றிருந்தால் நாம் அதைப்பற்றி பேசவேண்டியதே இல்லை. உதாரணத்திற்கு அல்லாஹ் வானங்களையும்(!) பூமிகளையும் எப்படிப்படைத்தான் என்பதை எவரும் விவாதிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவைகள் ’குன்- ஆகுக’ என்ற பட்டியலில் வருபவை. ஆனால் ஆதாம் இதிலிருந்து பெரிதும் மாறுபடுத்தப்படுகிறார். மண், களிமண், பிசுபிசுப்பான களிமண், கறுப்புக்களிமண், தட்டினால் ஓசைதரக்கூடைய களிமண் என்று பல்வேறு குழப்பம் காணப்படுகிறது. மேலும் எந்த படைப்பிற்கும் சொல்லாத ஒன்றை, ’எனது கைகளால் படைக்கப்பட்ட’ என்ற சொற்களைப் பயன்படுத்திச் சொல்கிறான்.
15:29. "அவரை நான் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நான் ஊதும் போது, அவருக்குப் பணிந்து விழுங்கள்!''
//பூமியையே முன்மாதிரி இன்றி படைத்த எங்கள் ஆண்டவனுக்கு எதற்கு ஒரு களிமண் பொம்மை.// ஏன் இருக்கக் கூடாது? தனக்கு பொம்மை செய்யும் வழக்கமில்லை என்று அல்லாஹ் கூறியிருக்கிறானா என்ன? உயிருள்ளவற்றை வரைவதுகூட இஸ்லாமில் தடை செய்யப்பட்டிருப்பது ஏன்? பொம்மை செய்வதும், உயிர்கொடுப்பதும் அல்லாஹ்வின் அதிகாரத்தின்கீழ் இருப்பவைகள்.

தஜ்ஜால் said...

//..எதற்கு ஒரு களிமண் பொம்மை.// என்று சிந்தித்த உங்களால் பின்வரும் குர்ஆன் வசனத்தை சிந்திக்க முடிந்தததா?

15:29. "அவரை நான் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நான் ஊதும் போது, அவருக்குப் பணிந்து விழுங்கள்!''

தன்னைத் தவிர எதற்கும் தலைவணங்கிப் பணியக்கூடாது என்று சொல்லும் அல்லாஹ், மலக்குகளை எதற்காக ஆதமிற்கு பணியச் சொல்ல வேண்டும்? அல்லாஹ்வின் பார்வையில் ஆதாம் அனைத்தையும்விட சம்திங் ஸ்பெஷல்!

ஆதாமை கைகளால் படைத்ததாக, உருகொடுத்ததாக சொல்கிறான். பொதுவாக எல்லோருமே அறிந்தமுறை கைகளால் சிற்பம் வடிப்பது. அப்படிக் கிடையாது என்றால் கைகளால் வேறு எப்படி உருக்கொடுக்க முடியும் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

குர்ஆன் விளக்கமான தெளிவான புத்தகம் அல்ல! கோடிட்ட இடங்களை நாம்தான் நிரப்பிக்கொள்ள வேண்டும். களிமண்ணிலிருந்து தனது இரண்டு கைகளால் படைத்து உயிரூட்டினான். குர்ஆன் கூறும் செய்தி இவ்வளவுதான். களிமண்ணால் உருவம் செய்வது தொன்றுதொட்டு இருந்துவரும் வழமை. மனிதனால் அந்த சிலைகளுக்கு உயிரூட்ட முடியாது என்பது எல்லோருமே நன்கு அறிந்ததே. கடவுள் என்பதினால் தன்னுடைய ரூஹிலிருந்து ஊதி உயிரூட்டியிப்பான் என்பது நம்பிக்கை. இதை அதனுடன் பொருத்துவதுதான் சரியானது. ஹதீஸ்களும் தஃப்ஸீர்களும் இதைத்தான் செய்திருக்கின்றன. ஆனால் அவற்றை உங்களால் ஏற்க முடியவில்லை.

அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

களிமண்ணிலிருந்து நீங்கள் கூறும் முறையில்(!?) மனிதனை உருவத்தை உருவாக்கலாம் என்று நிரூபிப்பதுதான் எஞ்சியிருக்கும் வாய்ப்பு!

சட்டம் said...

//களிமண்ணால் உருவம் செய்வது தொன்றுதொட்டு இருந்துவரும் வழமை. மனிதனால் அந்த சிலைகளுக்கு உயிரூட்ட முடியாது என்பது எல்லோருமே நன்கு அறிந்ததே. கடவுள் என்பதினால் தன்னுடைய ரூஹிலிருந்து ஊதி உயிரூட்டியிப்பான் என்பது நம்பிக்கை//

மிகச்சரியாக சொன்னீர்கள் . தொன்று தொட்டு என ஒரு காலக்கணக்கு சொன்னீர்களே!

அந்த காலக்கணக்கிற்கு பின்னால் பல மனிதர்கள் மண்பாண்டமெல்லாம் செய்யும் முறையை கற்றுக் கொண்டு ஆண்டவன் மனிதனைப் படைத்தான் என சொல்ல வருகிறீர்களா.

திரும்பவும் சொல்கிறேன் அவன் இல்லாமையில் இருந்தே அனைத்தையும் படைத்தான். அவன் ஆதமைப் படைப்பதற்கு முன் மனிதன் இல்லை என ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். பொம்மை என்பது ஒரு உயிருள்ள பொருளை மாதிரியாக உருவாக்குவது. மண்ணைக்கொண்டு இல்லாமையிலிருந்து ஒரு பொருள் படைக்கப்படுகிறது.பின்னர் அதற்கு உருவம் கொடுக்கப்படுகிறது , அதனுள் உயிர் ஊதப்படுகிறது. இதுதான் ஆதமைப்படைத்த முறை . இதற்கு மேல் இதனை தெளிவாக விளக்க முடியாது. அந்தப் பொருளை எந்த அடிப்படையில் பொம்மை என சொல்கிறீர்கள். அந்தப் பொருளின் வடிவம் என்ன? என ஒரு கேள்வி எழலாம். அதை அறுதியிட்டு சொல்லும் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை. ஒன்றைப்பற்றி அரைகுறையாய் சொல்வதை விட தெரியாது என சொல்வதற்கு எனக்கு கூச்சமில்லை. அந்த படைப்பு சூத்திரம் என்னவென்பதை நான் அறிந்தவுடன் பகிர்ந்து கொள்ளும் முதல் நண்பர் நீங்களாகத்தான் இருப்பீர். ஆனால் நான் நம்பும் குர்ஆனைக் கொண்டு நான் நம்பியவற்றில் எதுவும் மாறாது.

பிஜே வின் மொழிபெயர்ப்பை குரானை தழுவி எழுதப்பட்ட நூல் என விமர்சித்தவர் , தன் கருத்துக்கு ஆதரவாக அதில் இருந்து வசனங்களை மேற்கோள் காட்டுவது சற்றுமுரண்பாடான விசயம்.

மீண்டும் ஒரு விவாதத்தில் சந்திப்போம்.

சட்டம் said...

இறுதியாக ஒரு கேள்வி . தாங்கள் நம்பும் படைப்புச்சூத்திரத்தை என் போன்ற பாமரர்களுக்கு சற்று விளக்கலாமா விருப்பமிருந்தால் இந்த தலைப்பில் அடுத்த விவாதத்தை தொடரலாம். விருப்பமில்லை என்றால் விட்டு விடுங்கள்.

தஜ்ஜால் said...

//பிஜே வின் மொழிபெயர்ப்பை குரானை தழுவி எழுதப்பட்ட நூல் என விமர்சித்தவர் , தன் கருத்துக்கு ஆதரவாக அதில் இருந்து வசனங்களை மேற்கோள் காட்டுவது சற்றுமுரண்பாடான விசயம். //
இந்த விவாதத்தில் குறிப்பிட்ட அந்தக் குர்ஆன் வசங்களை மட்டுமே பீஜே மொழிபெயர்ப்பு என்ற தலைப்புடனே நான் கொடுத்திருப்பதை மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏன் அப்படிச் செய்தேன் என்பதை சிந்தித்திருந்தால் விளக்கம் கிடைத்திருக்கும். சரி... நானே சொல்கிறேன்... அது பொதுவான இஸ்லாமிய நம்பிக்கையின் பிரதிபளிப்பு என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே!

தஜ்ஜால் said...

//அந்த காலக்கணக்கிற்கு பின்னால் பல மனிதர்கள் மண்பாண்டமெல்லாம் செய்யும் முறையை கற்றுக் கொண்டு ஆண்டவன் மனிதனைப் படைத்தான் என சொல்ல வருகிறீர்களா.//
மன்னிக்கவும்! உங்களால் இந்த அளவிற்குத்தான் சிந்திக்க முடிகிறது என்பதை நான் எதிர்பார்க்கவில்லை அனைத்துமே அல்லாவிடமிருந்துதான் தோன்றியிருக்கிறது என்பதுதான் இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை. பொருட்களின் பெயரைக்கூட அல்லாஹ்தான் கற்றுக் கொடுத்தான் என்கிறது குர்ஆன். மண்பாண்டம் செய்யும் முறையை உங்கள் அல்லாஹ்தான் மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்திருப்பான் என்று ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை? இறைமறுபாளனாகிய நான் சொல்கிறேன் உங்களது ஈமான் மிகவும் பலவீனமானதென்று! இன்னும் நீங்கள் இஸ்லாமை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை!

தஜ்ஜால் said...

//திரும்பவும் சொல்கிறேன் அவன் இல்லாமையில் இருந்தே அனைத்தையும் படைத்தான். அவன் ஆதமைப் படைப்பதற்கு முன் மனிதன் இல்லை என ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். பொம்மை என்பது ஒரு உயிருள்ள பொருளை மாதிரியாக உருவாக்குவது.//

திரும்பவும் அதே தவறு! தங்களது அனுபவத்தில் கண்டவைகளைக் கொண்டு மனிதர்கள் ஏதேதோ சிலைகளை வடிக்கின்றனர். அவர்களால் கற்பனைக்கு எட்டாத ஒன்றைச் செய்ய முடியாது. அல்லாஹ்வும் அப்படித்தான் என்கிறீர்களா? அதற்குமுன் மனிதர்கள் இல்லை அல்லாஹ் புதிதாக உருவாக்கியிக்கிறான் என்பதுதானே உங்களது இஸ்லாமிய நம்பிக்கை? அருகிலிருக்கும் பிரபஞ்சங்களை சுற்றிப் பார்த்த அனுபவத்தில், அவற்றை மாதிரியாகக் கொண்டு ஆதமைப்படைத்தான் என்றா நான் சொல்லியிருக்கிறேன்? இல்லையே? உண்மையைச் சொல்வதென்றால் அல்லாஹ்வை நீங்கள் மனிதனுடன் ஒப்பீடு செய்து கொண்டிருக்கிறீர்கள் இது ஷிர்க் எனப்படும் பாவமாகும். (இதற்காக உங்களுக்கு ஜக்கும்பழம் காத்திருக்கிறது(!?)

78:29 ஒவ்வொரு பொருளையும் எழுத்தில் நாம் வரையறுத்துள்ளோம்.

அல்லாஹ் தனது கற்பனை/விருப்பதிற்கேற்ப களிமண்ணால் சிலைசெய்து தனது ரூஹிலிருந்து ஊதி மனிதனைப்படைத்தான் என்பது இஸ்லாமிய நம்பிக்கை!

தஜ்ஜால் said...

// மண்ணைக்கொண்டு இல்லாமையிலிருந்து ஒரு பொருள் படைக்கப்படுகிறது.பின்னர் அதற்கு உருவம் கொடுக்கப்படுகிறது , அதனுள் உயிர் ஊதப்படுகிறது. இதுதான் ஆதமைப்படைத்த முறை . இதற்கு மேல் இதனை தெளிவாக விளக்க முடியாது.//

இதற்கு மேல் எப்படி முரண்பாடாகப் பேசுவதென்று உங்களிடம்தான் கற்கவேண்டும்! மண்ணைக் கொண்டு இல்லமையா..? வேடிக்கையாக இல்லை? அங்குதான் மண் இருக்கிறதே பின் எவ்வாறு அது இல்லாமையாகும்? அல்லாஹ்வே மண், களிமண், பிசுபிசுப்பான களிமண், கறுப்புக்களிமண், தட்டினால் ஓசைதரக்கூடைய களிமண் போன்றவற்றிலிருந்து ஆதாமைப் படைத்தாகச் சொல்கிறான். ’சூரியனுக்கே டார்ச் லைட்டா’ என்பதைப்போல இல்லாமையிலிருந்துதான் நீ எதையும் உருவாக்க வேண்டுமென்று அல்லாவிற்கே சொல்லிக் கொடுக்கிறீர்கள்? இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்! (?)

முதலில் அல்லாஹ்வின் கற்பனையில் ஆதாம் உருவாகிறார்; களிமண்ணால் உருவம் கொடுக்கப்படுகிறது; உயிர் ஊதப்படுகிறது; அவருக்காக ஒரு பெண் உருவாக்கப்படுகிறாள். பெண் எவ்வாறு உருவாக்கப்பட்டாள் என்ற செய்முறை விளக்கம் குர்ஆனில் இல்லை. அதன் பின்னர் ஆதமும் அவரது துணைவியரும், அல்லாஹ் தனக்காக(!?) வைத்திருந்த கனியைத் தின்று, அவர்கள் ஒருவரையொருவர் தின்று மனிதகுலம் பலுகிப்பெருகியதான். இதுதான் குர்ஆன் கூறும் படைப்பியல்.

தஜ்ஜால் said...

//மீண்டும் ஒரு விவாதத்தில் சந்திப்போம்.//

என்ன நீங்கள் இப்படி ’பொசுக்’ கென்று முடித்து விட்டீர்களே..?

இங்கு வெற்றி தோல்வி இல்லை. நாமிருவரும் நமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்!

சரி... அழகிய முறையில் உங்களது நம்பிக்கையில் நின்று உரையாடினீர்கள். மிக்க நன்றி!

சட்டம் said...

அப்படியே ரூட்டை மாத்தி சொல்லவந்த அர்த்தத்தையே அனர்த்தமாக்குவதில் நீங்கள் கில்லாடி என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

சட்டம் said...

இதுவும் ரூட்டை மாற்றும் வேலைதான். மனிதன் இல்லாத நிலையையே இல்லாமை என்றேன்.

சட்டம் said...

ஜக்கும் பழம் என்றால் என்ன?

ஆனந்த் சாகர் said...

@சட்டம்

//இறுதியாக ஒரு கேள்வி . தாங்கள் நம்பும் படைப்புச்சூத்திரத்தை என் போன்ற பாமரர்களுக்கு சற்று விளக்கலாமா விருப்பமிருந்தால் இந்த தலைப்பில் அடுத்த விவாதத்தை தொடரலாம்.//

இதுவரை நீங்கள் செய்ததே மிகவும் அரைவேக்காட்டுத்தனமான அரைகுறை விவாதம். படைப்புச்சூத்திரத்தை உங்களிடம் விவாதம் செய்யும் அளவுக்கு உங்களிடம் ஞானம் இருப்பதாக தெரியவில்லை.

தஜ்ஜால் said...

//ஜக்கும் பழம் என்றால் என்ன?//

37:62 அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) “ஜக்கூம்” என்ற மரமா?

தஜ்ஜால் said...

//மண்ணைக்கொண்டு இல்லாமையிலிருந்து ஒரு பொருள் படைக்கப்படுகிறது//
இதற்கு \\ இதற்கு மேல் எப்படி முரண்பாடாகப் பேசுவதென்று உங்களிடம்தான் கற்கவேண்டும்! மண்ணைக் கொண்டு இல்லமையா..? வேடிக்கையாக இல்லை? அங்குதான் மண் இருக்கிறதே பின் எவ்வாறு அது இல்லாமையாகும்?\\ என்று நான் கூறிய பதிலை //அப்படியே ரூட்டை மாத்தி சொல்லவந்த அர்த்தத்தையே அனர்த்தமாக்குவதில் நீங்கள் கில்லாடி என்பதை ஒத்துக்கொள்கிறேன்.////இதுவும் ரூட்டை மாற்றும் வேலைதான். மனிதன் இல்லாத நிலையையே இல்லாமை என்றேன்.// என்கிறார் நம்து நண்பர் சட்டம்!.

////மண்ணைக்கொண்டு இல்லாமையிலிருந்து ஒரு பொருள் படைக்கப்படுகிறது//
இதை எப்படிப் புரிந்து கொள்வது நீங்களே சொல்லுங்கள்!

தஜ்ஜால் said...


//..இல்லாமையிலிருந்து ஒரு பொருள் படைக்கப்படுகிறது.// இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி மனிதன் இல்லாமை என்ற நிலை இருந்ததா…?

சட்டம் said...

நீங்க ஜக்கி , அலிசினா , போன்ற ஞானிகளிடம் மட்டும் தான் விவாதம் செய்வீரா? சரி !!சரி! எப்படியெல்லாம் தப்பிக்கிறாங்க பாருங்க!

ஞானிகளுக்கு ஞானம் கொடுப்பீர்
என் போன்ற பாமரனுக்கு கிடையாதா.

காலிக் குடத்துல தான் தண்ணியை ஊத்தனும். நிறைஞ்ச குடத்துலதான் ஊத்துவேன்னு சொன்னா எப்படி?

மக்களே இவர்களிடமும் முதல் உயிரைப் பற்றி தெளிவான கருத்து கிடையாது. அதான் இப்படி ஒரு பதில். இவர்களிடம் விவாதித்தால் உண்மை வெளிப்பட்டு விடுமோ என்ற பயம்.

சரி அந்த பயம் அப்படியே இருக்கட்டும்.

சட்டம் said...

வார்த்தை விளையாட்டு அருமை .

சட்டம் said...

அண்ணன் ஆரிய ஆனந்த் அவர்களே

தங்கள் நம்பிக்கையின் படி முதல் உயிரினம் படைக்கப்பட்டது. பயப்படாமல் சொல்லவும்.
தங்களைப் போல் வரிக்கு வரி விமர்னம் செய்யமாட்டேன். அடிப்படையான சந்தேகங்களை கேட்பேன் அதற்கு பதில் சொன்னால் போதும். சந்தேகம் கேட்க ஞானம் தேவையென்றால் எனக்கு ஞானம் என்றால் என்ன என சொல்லித்தாருங்கள்.

நந்தன் said...

நண்பர் சட்டம் ஆரம்பித்ததிலிருந்து கடைசிவரை களிமண்ணிணால் ஆதமை படைத்தான் என்று திரும்பத்திரும்பச் சொல்லிவிட்டு மண்ணிலிரிந்து எப்படி படைத்தான் என்பதை சொல்லவே முடியாமல் விவாதத்தை முடித்துவிட்டார். இவரால் இஸ்லாம் தோன்றிய காலமுதல் நம்பப்பட்டு வரும் கொள்கையையும் ஏற்றுக்கொள்ள முடீயாமல் வேறு படைப்பு முறையும் தெரியாமல் விவாதத்திற்கு வந்துவிட்டார். எதற்கு இந்த விவாதம்? சட்டத்திற்கே வெளிச்சம்.

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//தங்கள் நம்பிக்கையின் படி முதல் உயிரினம் படைக்கப்பட்டது. பயப்படாமல் சொல்லவும்.//

முதல் உயிரினம் படைக்கப்பட்டது என்று நான் எப்பொழுது சொன்னேன்? மதங்கள் சொல்லும் படைப்பை நான் நம்பவில்லை. முஹம்மது இறைத்தூதர் இல்லை என்பதை அவரின் செயல்களை எடுத்துக்காட்டி அம்பலப்படுத்தவே விரும்புகிறேன். மற்ற விஷயங்களை பற்றி விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லை. அவர்மேல் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றை பற்றி விவாதிக்க முன்வருகிறீர்களா?

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//மக்களே இவர்களிடமும் முதல் உயிரைப் பற்றி தெளிவான கருத்து கிடையாது. அதான் இப்படி ஒரு பதில். இவர்களிடம் விவாதித்தால் உண்மை வெளிப்பட்டு விடுமோ என்ற பயம்.//

எங்களுக்கு விவாதம் புரிவதில் ஒரு பயமும் இல்லை. நீங்கள் தான் தஜ்ஜாலுடன் ஆதமின் படைப்பை பற்றி சரியாக விவாதிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு, தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் வேறு விஷயத்துக்கு தாவி உங்களிடம் அறிவு நேர்மை இல்லை என்பதை காட்டிகொண்டீர்கள்.

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//நீங்க ஜக்கி , அலிசினா , போன்ற ஞானிகளிடம் மட்டும் தான் விவாதம் செய்வீரா? சரி !!சரி! எப்படியெல்லாம் தப்பிக்கிறாங்க பாருங்க! //

மற்றவர்கள் எப்படியோ, ஆனால் எனக்கு மற்ற விஷயங்களை பற்றி விவாதிப்பதைவிட முதலில் முஹம்மதுவை அம்பலப்படுத்த வேண்டும் என்பதுதான் மிக முக்கியம். முஹம்மதுதான் இஸ்லாத்தின் நிறுவனர். இஸ்லாத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதை நிறுவிய முஹம்மது எப்படிப்பட்டவர் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். முஹம்மதின் செயல்களை நாம் ஆராய்வது மிக முக்கியம். முஹம்மது எப்படிப்பட்டவர் என்பதை பற்றி நாம் விவாதிப்போமா? முதலில் அவர் ஒரு பயங்கரவாதி என்பதை பற்றி விவாதிப்போம். முன்வருகிறீர்களா?

சட்டம் said...

முகமது நபியின் வரலாற்றை முழுதும் தெரிந்த பின் விவாதிக்கிறேன். ஒரு மாதம் போதும்.நானே விவாதத்திற்கு உங்களை அழைக்கிறேன்.

சட்டம் said...

ஆனந்த் அவர்களே
//எங்களுக்கு விவாதம் புரிவதில் ஒரு பயமும் இல்லை. நீங்கள் தான் தஜ்ஜாலுடன் ஆதமின் படைப்பை பற்றி சரியாக விவாதிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு, தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் வேறு விஷயத்துக்கு தாவி உங்களிடம் அறிவு நேர்மை இல்லை என்பதை காட்டிகொண்டீர்கள்.//

அறிவு நேர்மை இருப்பதால் தான் தெரியாது என்று ஒதுங்கி விட்டேன்.

விருப்பமிருந்தால் விவாதிப்போம் என்றுதான் சொன்னேன். விருப்பமில்லை என ஒற்றை வார்த்தையில் ஒதுங்கியிருக்கலாம். ஏன் ஞானம் அது இது என உதார் விடுகிறீர். தவிர தஜ்ஜாலிடம் கேட்டதற்கு தாங்கள் ஏன் பதில் அளித்தீர். எது நேர்மை.

தஜ்ஜால் said...

@ சட்டம்

//தாங்கள் நம்பும் படைப்புச்சூத்திரத்தை என் போன்ற பாமரர்களுக்கு சற்று விளக்கலாமா விருப்பமிருந்தால் //
//தங்கள் நம்பிக்கையின் படி முதல் உயிரினம் படைக்கப்பட்டது. பயப்படாமல் சொல்லவும்.//
//தவிர தஜ்ஜாலிடம் கேட்டதற்கு தாங்கள் ஏன் பதில் அளித்தீர். எது நேர்மை.//

உயிர்கள் எப்படித் தோன்றியிருக்கும் என்பதைப்பற்றி விவாதிக்கும் முன் உங்களைப் போன்ற முஃமின்களிடம் பேசுவதற்கு, முஹம்மது பற்றியும் இஸ்லாம் பற்றியும் கடவுள்களைப்பற்றியும் பேசுவதற்கு வேறு நிறைய தலைப்புகள் இருக்கிறது. அதில் ஒரு தெளிவான புரிதலுக்கு வராமல் நம்பிக்கையாளர்களிடம் பரிணாம்பற்றிப் பேசுவதில் பயனில்லை என்பது எனது கருத்து. எனவே தற்சமயம் தாங்கள் கூறிய தலைப்பில் எனக்கு விருப்பமில்லை.

ஆனந்த் சாகர் said...

@ சட்டம்,

//முகமது நபியின் வரலாற்றை முழுதும் தெரிந்த பின் விவாதிக்கிறேன். ஒரு மாதம் போதும்.நானே விவாதத்திற்கு உங்களை அழைக்கிறேன்.//

நீங்கள் சராசரி முஸ்லிமாக முஹம்மதை பற்றி நன்கு தெரியாதவராக இருந்தது தெரிகிறது. அவரை பற்றி மேம்போக்காக நல்லவிதமாக மட்டும் எழுதப்பட்ட புத்தகங்களை படித்துவிட்டு விவாதத்திற்கு வந்துவிடாதீர்கள். முஹம்மதின் வாழ்க்கை வரலாறு பற்றி முதன்முதலில் இப்னு இஸ்ஹாக் எழுதிய சீரா, மற்றும் தபரி எழுதிய சீரா ஆகியவற்றை படியுங்கள். அதை சப்ஜெக்டிவாக(subjective) அல்லாமல் அப்ஜெக்டிவாக(objective) படியுங்கள். உங்கள் அழைப்பை எதிர்பார்க்கிறேன்.

ஆனந்த் சாகர் said...

@ சட்டம்,

//அறிவு நேர்மை இருப்பதால் தான் தெரியாது என்று ஒதுங்கி விட்டேன்.//

எதை தெரியாது என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டீர்கள்?

//விருப்பமிருந்தால் விவாதிப்போம் என்றுதான் சொன்னேன். விருப்பமில்லை என ஒற்றை வார்த்தையில் ஒதுங்கியிருக்கலாம். ஏன் ஞானம் அது இது என உதார் விடுகிறீர்.//

உங்களுடைய குறுகிய, முரண்பாடுகள் நிரம்பிய வாதங்களை படித்து, உங்களிடம் விவாதம் புரிவதற்கு போதுமான ஞானம், நேர்மை இல்லை என்று தெரிந்து கொண்டதை கூறினேன். இது உதார் இல்லை, நான் கவனித்தது(observation).

// தவிர தஜ்ஜாலிடம் கேட்டதற்கு தாங்கள் ஏன் பதில் அளித்தீர். எது நேர்மை.//

இது ஒரு பொது மேடை. இங்கு எவர் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை கூறலாம். அந்த வகையில் நான் பதில் அளித்ததால் என்னுடைய நேர்மைக்கு என்ன பங்கம் வந்தது? நேர்மை என்றால் என்னவென்று உங்களுக்கு பாடம் எடுக்க வேண்டுமா?

Ant said...

//15:26. ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.// இந்த வசனம் களிமண்ணால் மனிதனை படைத்ததாக உறுதியாக தெரிவிக்கிறது.

//15:29. "அவரை நான் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நான் ஊதும் போது, அவருக்குப் பணிந்து விழுங்கள்!''//

இதில் //அவருக்குள்// என்ற பதம் ஏற்கனவே மனிதனை படைத்து வைத்து பின்னர் தான் ஊதியதாக கூறுகிறது.


//23:12. நிச்சயமாக நாம் மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.// முந்தைய வசனத்தில் களிமண்ணாள் படைத்ததாக கூறிவிட்டு பின்னர் //களி மண்ணிலிருந்துள்ள சத்து// என்று முரண்பாடாக உள்ளதே.

//23:13. பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.// இந்த வசனத்தில் //அவனை இந்திரிய துளியாக// "பின்னர்" தான் மாற்றியதாக கூறுகிறது.

// நம் உடலில் அதிக சதவீதத்தில் உள்ள பொருள் தண்ணீர். அது மண்ணில் இருந்து கிடைக்கவில்லையா?// இல்லை, தண்ணீர் ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் (இரண்டு வாயுக்கள்) இணைந்து உருவானது அது மே)கத்தில் உள்ளது கடலில் உள்ளது நிலத்தில் அது டெபாசிட் ஆக உள்ளது அவ்வளவே! மனிதனில் பெரும் பகுதி தண்ணீர்தான்.

களிமண்ணில் உள்ள சத்துகள ஒன்று சேர்த்தால் அது ஒரு வடிவுடைய பருபொருளாகலாம். உதாரணம் மேலே குறிப்பிட்ட தண்ணீர். எனவே, வசனம் 23.12 படி பாரத்தால் சத்துகளை தனியாக பிரித்து வடிவம் செய்து ஊதியதாக தான் தெரிகிறது. ஆனால் வசனம் 15.26 களி மண்ணால் மனிதனை படைத்ததாக கூறுவதோடு //ஓசை தரும்// என்ற வார்தையை அல்லா தெரியாமல் பயன்படுத்தியிருக்க முடியாது.

வசனம் 15.26 மற்றும் 23.12 இரண்டையும் சேர்த்து பாரத்தால் ஒசை தரும் கருப்பான களி மண்ணிலிருந்துள்ள சத்து என்று வருகிறது. இங்கு //ஓசை// என்பது தனித்து விடப்படுகிறதே! படைப்பில் ஒசையின் பங்களிப்பு என்ன?

தெளிவானது முரண்பாடற்றது என ஹூபல் அல்லாவால் சான்றளிக்கப்பட்ட குரான் இப்படி மனிதர்களுக்கு தெளிவாக தெரிந்த விசயத்தையே முரண்பாடாக விளக்க முற்படுகிறதே. அறிஞர் பீசே யின் வாதம் முஃமீன்களுக்கு ஏற்புடையது தானே! அவரது ‌சித்து வேலைபாடு நிறைந்த மொழிபெயர்ப்பே அல்லாவை சிக்கலில் வைக்கிறதே! அல்லாவை மனிதன் தான் காப்பாற்ற வேண்டியுள்ளது.திருசட்டம் அவர்களுக்கு குரான் முரண்பாடு தெளிவாக புரிந்துள்ளது.

தஜ்ஜால் said...

//விரும்புபவர்கள் தங்களது கருத்துக்களை பதிவுசெய்யலாம். ஆனால் நண்பர் சட்டம் அவர்களில் யாருக்கு பதிலளிக்க விரும்புகிறாரோ அவருக்கு மட்டும் பதிலளிக்கலாம். அது அவருடைய சுதந்திரம்.// என்று இந்த விவாதத்தின் அறிமுகத்தில் கூறியிருப்பதை நண்பர் சட்டம் கவனிக்கவில்லையென்று நினைக்கிறேன். எனவே //இது ஒரு பொது மேடை. இங்கு எவர் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை கூறலாம்.// என்ற ஆனந்த் அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். இங்கு எவரும் பதிவு தொடர்பாக கருத்துக்களை தாரளமாக பதிவு செய்யலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.

Ant said...

Please refer:
//http://www.satyamargam.com/islam/2045

முதல் மனிதர், முதல் நபியுமான ஆதம் (அலை) அவர்களை, இறைவன் மண்பாண்டம் செய்யும் களிமண்ணினால் வடிவமைத்தான் என்பதை 7:12, 15:26, 33, 23:12, 38:76, 55:14 ஆகிய வசனங்களிலிருந்து விளங்கலாம். மனித வடிவத்தின் மூலப் பொருள் களிமண். (23:12)
நபிமொழி
அல்லாஹ், ஆதமை ஒரு பிடி மண்ணிலிருந்து படைத்தான். பூமியின் எல்லாப் பகுதியிலிருந்தும் அதை எடுத்தான். பூமியின் தரத்திற்கேற்ப ஆதமுடைய மக்கள் உருவானார்கள். இதனால் தான் சிகப்பு நிறமுடையோர், வெண்மை நிறமுடையோர், கருப்பு நிறமுடையோர், இவற்றுக்கு இடைப்பட்ட நிறமுடையோர் எனவும், நளினமானவர், திடமானவர், தீயவர் மற்றும் நல்லவர் உருவாயினர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூமூஸா அல்அஷ்அரி (ரலி) (நூல்கள் - திர்மிதி 2879, அபூதாவூத், அஹ்மத்)
வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். "ஜின்'கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப்பட்டார். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 5722, அஹ்மத்)
முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் மண்ணினால் வடிவமைத்துப் படைக்கப்பட்டார். மனித இனத்தில் தோன்றிய முதல் மனிதரின் படைப்பிற்கு எது மூலப் பொருளாக இருந்ததோ அதுவே அவரது வம்சாவழிக்கும் மூலப் பொருளாக இருக்கும். இதேக் கருத்தையே வரும் வசனங்களும் கூறுகின்றன.//

Ant said...

// ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.
களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம்.// குர்ஆன் (15:26, 23: 12)


// “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று கூறினான்.// (குர்ஆன் 7:12.)

//வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? //(குர்ஆன் 21:30)

//அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா, அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். //(குர்ஆன் 4:82)

சட்டம் said...

//ஆனந்த் அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். இங்கு எவரும் பதிவு தொடர்பாக கருத்துக்களை தாரளமாக பதிவு செய்யலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது//

நீங்கள் இஸ்லாம் எதிர்ப்பு என்ற ஒரு புள்ளியில் இணைந்தாலும் நம்பிக்கை என்ற வகையில் தஜ்ஜால் என்பவர் இறைமறுப்பாளராகவும் , ஆனந்த் இஸ்ஸாம் தவிர்த்த ஒரு நம்பிக்கையில் உள்ளபொழுது இஸ்லாம் எதிர்ப்பில் ஒரே கொள்கையில் இருப்பதற்காக நான் கேட்கவில்லை . படைப்புசூத்திரத்திலும் இருவரும் ஒரே கொள்கையைத்தான் கொண்டுள்ளீர் என்றால் நான் கேட்டது தவறு.. இல்லையெனில் என் கேள்வியில் எந்தத்தவறும் இல்லை.

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

// படைப்புசூத்திரத்திலும் இருவரும் ஒரே கொள்கையைத்தான் கொண்டுள்ளீர் என்றால் நான் கேட்டது தவறு.. இல்லையெனில் என் கேள்வியில் எந்தத்தவறும் இல்லை.//

நான் மதங்கள் கூறுகிற, குறிப்பாக செமிட்டிக் மதங்கள் கூறுகிற படைப்பியலை உண்மையில்லை என்று கூறுகிறேன். பரிணாமம் உண்மை என்று ஏற்கிறேன். டார்வினின் பரிணாமக்கொள்கை நாம் வாழும் பௌதீக உலகத்தை சேர்ந்த உயிரினங்கள் பற்றியது மட்டுமே. ஆனால் படைப்பியல் இதற்கும் மேற்பட்ட ஆன்மீக விஷயங்களை கொண்டது. இதை பொருள்முதல்வாதிகள்(ஜட வாதிகள்) ஏற்கமாட்டார்கள். நான் ஏற்கிறேன். எனவே என்னுடைய கொள்கைக்கும் தஜ்ஜாலை போன்றவர்களின் கொள்கைக்கும் இடையே பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உள்ளன.

நீங்கள் கேள்வி கேட்டது தவறு என்று எவரும் சொல்லவில்லை. முஹம்மதையும் இஸ்லாத்தையும் பற்றிய வாதங்களுக்கே நாங்கள் இப்பொழுது முன்னுரிமை தருகிறோம், மற்ற விஷயங்களை பற்றி விவாதிக்க தற்போது விருப்பமில்லை என்றே கூறுகிறோம்.

சட்டம் said...

நான் மனதுக்கென்று மதத்தையும் பொருள் சார்ந்த உடல் சார்ந்த வாழ்க்கைக்கு அறிவியலை நம்பும் ஒரு சராசரி முஸ்லிம். உடலுக்கு ஏதும் பிரச்சினை என்றால் மருத்துவத்தையம் மனரீதியான பிரச்சனை என்றால் குரானையும் நம்புபவன். உங்கள் பதில்கள் என்னுள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. பார்ப்போம் என்னதான் நடக்குமென.

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

குரான் பயங்கரவாதத்தையும் முட்டாள்தனத்தையும் போதிக்கிற நூல். அதில் ஒரு ஆன்மீக விஷயமும் இல்லை. நீங்கள் மனரீதியான பிரச்சினைக்கு குரானை நாடுவது ஆச்சரியமான விஷயம்தான்.

என்னுடைய எந்த பதில்கள் உங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்று சொல்ல முடியுமா? நான் மற்றவர்கள் புரியும்படி தெளிவாக பேசுவதாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்!

சட்டம் said...

//செமிட்டிக் மதங்கள் கூறுகிற படைப்பியலை உண்மையில்லை என்று கூறுகிறேன். பரிணாமம் உண்மை என்று ஏற்கிறேன். டார்வினின் பரிணாமக்கொள்கை நாம் வாழும் பௌதீக உலகத்தை சேர்ந்த உயிரினங்கள் பற்றியது மட்டுமே. ஆனால் படைப்பியல் இதற்கும் மேற்பட்ட ஆன்மீக விஷயங்களை கொண்டது. இதை பொருள்முதல்வாதிகள்(ஜட வாதிகள்) ஏற்கமாட்டார்கள். நான் ஏற்கிறேன். //இதில்தான் என்னுடைய குழப்பமே . பரிணாமம் தெரியும் evolution theory.
படைப்பியல் ஆன்மிகம் என்ற சொல் தான் என்னுள் கேள்வி எழுப்பியது. ஆன்மிகம் என்றால் மனதுக்கு இதந்தரும் ஒன்று என மட்டுமே என எண்ணியிருந்தேன். ஆனால் அதையும் தாண்டி ஏதோ உள்ளதென அறிகிறேன். அதை என்னால் சிந்திக்க கூட முடியவில்லை. அது என் அறியாமை என்றே நினைக்கிறேன். தாங்கள் விளக்கினால் என் குழப்பம் நீங்கலாம்.

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//இதில்தான் என்னுடைய குழப்பமே . பரிணாமம் தெரியும் evolution theory.
படைப்பியல் ஆன்மிகம் என்ற சொல் தான் என்னுள் கேள்வி எழுப்பியது. ஆன்மிகம் என்றால் மனதுக்கு இதந்தரும் ஒன்று என மட்டுமே என எண்ணியிருந்தேன். ஆனால் அதையும் தாண்டி ஏதோ உள்ளதென அறிகிறேன். அதை என்னால் சிந்திக்க கூட முடியவில்லை. அது என் அறியாமை என்றே நினைக்கிறேன். தாங்கள் விளக்கினால் என் குழப்பம் நீங்கலாம்.//

இந்த தளம் இஸ்லாத்தை அம்பலப்படுத்தும் நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது. எனவே இங்கே ஆன்மீக விஷயங்களை விரிவாக பேச நான் விரும்பவில்லை. அது இந்த தளத்தின் அடிப்படை நோக்கத்திலிருந்து விலகி செல்வதாகும். சுருக்கமாக சொல்கிறேன். கடவுள் யார், நாம் யார், படைப்பு என்றால் என்ன, அதன் நோக்கம் என்ன, நாம் எங்கிருந்து வந்தோம், பிறகு எங்கு செல்கிறோம், இன்னும் பிற முக்கியமான விஷயங்களை பற்றியெல்லாம் ஆன்மீகம் விளக்குகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் பல நூல்கள் வந்துள்ளன, வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை படித்தால் நீங்கள் அறிய விரும்பும் விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். இது அத்வைதம் எனப்படுகிறது. ஆதி சங்கரர் விளக்கிய அத்வைதம் ஹிந்துமத தத்துவங்களில் ஒன்று. ரமணர், ஸ்ரீ நிசர்கதத்தா மஹராஜ், வேதாத்திரி மஹரிஷி போன்ற ஆன்மீக ஆசான்கள் பிரசாரம் செய்ததும் அத்வைத கருத்துக்களே. குறிப்பாக வேதாத்திரி மஹரிஷி படைப்பு எப்படி நடக்கிறது என்பதை மிக அருமையாக விளக்கி இருக்கிறார்.

சிந்திக்கமாட்டார்களா said...

ஜக்கு பழம் என்னன்னு கூட தெரியாதா ?விவாதம் விளங்கிடும்

சிந்திக்கமாட்டார்களா said...

ஜக்கு பழம் என்னன்னு கூட தெரியாதா ?விவாதம் விளங்கிடும்

சட்டம் said...

தகவலுக்கு நன்றி.

நீங்கள் வேறு தளம் கொண்டுள்ளீர்களா .
முகவரி கிடைக்குமா.

நந்தன் said...

சட்டம் நீங்கள் ஆனந்த் சாகருக்கு பதில் அளிக்காமல் அதாவது தஜ்ஜால் தவிர பிறருக்கு பதில் அளிக்காமல் இருக்கலாம் என்பதை முதலிலேயே கூறிவிட்டார் தஜ்ஜால் என்பதை மறந்துவிடவேண்டாம்.

சட்டம் said...

தலைவா பதிலளிக்க வேண்டாம் என கூறவில்லை பதிலளிப்பது என் விருப்பம் எனதான் கூறியுள்ளார்.

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//நீங்கள் வேறு தளம் கொண்டுள்ளீர்களா .
முகவரி கிடைக்குமா.//

ஆன்மீக விஷயங்களை பற்றி எழுத தனி வலைதளம் எதுவும் நான் நடத்தவில்லை. நான் ஆன்மீகத்தை இன்னும் பயின்றுகொண்டிருக்கிறேன். அதற்கே எனக்கு நேரம் போதவில்லை. மேலும் நான் ஆன்மீக சாதகம்(practice) செய்து சொந்த அனுபவம் பெற வேண்டியிருக்கிறது. அதேசமயம் கற்றதை பிறருடன் பகிர்ந்துகொள்வது அவசியம் என்பதையும் உணர்கிறேன்.

NAMBIKKAIYAALAN said...

NAMBIKKAIYAALAN said...

அன்பு ஆனந்த் ! தாமதத்திற்க்கு மன்னிக்கவும் .

//
//குரானை இறை வேதம் என்றும் முஹம்மதை அல்லாஹ்வின் தூதர் என்றும் அப்பாவித்தனமாக 20 வருடங்களுக்கும் மேலாக நம்பிக்கொண்டிருந்தவன்// அப்படின்னா 20 வருஷமா இப்ப நீஙக சொல்ட்ரா முஸ்லிம்கள் மாதிரி பயங்கரவாதியா இருந்தீங்களா?

//உங்களுக்கு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நன்கு தெரியவில்லை என்றே சொல்வேன்.// அது சரி !

//நான் முஸ்லிம்களைப்பற்றியோ மற்ற மதங்களை பின்பற்றுபவர்கள் பற்றியோ விவாதம் செய்ய உங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை// இங்க நீங்கள் யார பத்தி அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் அப்படினு விவாதிக்கிறீங்க? நீங்கள் முஸ்லிம்கள் பற்றி எனக்கு தெரியவில்லை என்று கூறுகின்றீர்களே எந்த முஸ்லிம்கள். நீங்கள் பணிபுரிந்த அனைத்து நிறுவனத்திலும் முஸ்லிம்கள் நீங்கள் கூறும் முஹம்மது போல் கொலை,கொள்ளை,கற்பழிப்பு இவைகளை முன்மாதிரியா கொண்டு ஏதேனும் வன்முறை செய்தார்களா?

//முஹம்மதை பற்றி என்னுடன் விவாதிக்க உங்களுக்கு விருப்பமா, இல்லையா? உங்களால் முடியுமா, முடியாதா? இதற்கு நேரிடையாக பதில் சொல்லுங்கள்.// என்னுடய பதிவில் ஒரு இடத்திலேனும் ஏதேனும் முஹம்மதை பற்றி விவாதிக்கிறேன் என்று கூறினேனா? எதற்க்கு இந்த கூப்பாடு?

//இந்த பயங்கரவாதியை காட்டிலும் மிக ஆபத்தானவர்கள் தக்கியா செய்யும் முஸ்லிம்கள்.// உங்களுக்கு என்ன பிரச்னை? யார்தான் நல்ல முஸ்லிம்கள்!? அல்லது நடக்கின்ற வன்முறைகளுக்கு முஹம்மது முன்மாதிரி என்றால் எனக்கு ஆதாரத்தோடு விளக்குங்கள் தயவுசெய்து!. இந்த கைய வெட்டுனது,தலய வெட்டுனது இதெல்லாம் வேண்டாம்! கடந்த காலங்களில் நடக்கின்ற வன்முறைகள் அது எந்த நாடானாலும் சரி, இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கமாக இருக்கட்டும்! அன்பே உருவான நீங்கள் கூறுவதுபோல் அது அழிந்தும் போகட்டும்! எந்த ஒரு மதமும் நீங்கள் கூறும் அத்வைதமும் எல்லை மீறும்போது வன்முறையாகவே மாறும்! இதுதான் உலகத்தில் நடந்து வரும் யதார்த்த நிலை! திரும்பவும் கூறுகிறேன் நான் இஸ்லாத்தை பற்றியோ ,முஹம்மதை பற்றியோ தஜ்ஜாலுடய பதிவுகளுக்கு மறுப்பு கூறி பதிவிடவில்லை அறியவும்! பரிசீலிக்கிறேன் அவ்வளவே! ஆனால் நீங்கள் முஹம்மது முன்மாதிரி வன்முறைக்கு என்பதை மறுக்கிறேன் ! அது ஈராக்,சீறிய,பாலஸ்தீன்,காஷ்மீர்,பங்ளாதேஷ் போன்ற நாடுகளில் நடக்கும் வன்முறைக்கும் முஹம்மது கூறிய மதககருத்துக்களுக்கும் ஒற்றுமை இல்லை! ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள்,பண முதலைகள் மதத்தின் பெயரால் நடத்தும் நாடகமே இதெல்லாம்!

அதிகம் பாதிக்கப்படுவது சிறுபான்மயினரே! அது யாராக இருந்தாலும் சரி! பங்களாதேஷில் ,ஜம்முவில்,பாகிஸ்தானில் வாழும் ஹிந்துக்களானாலும் சரி, இந்தியாவில் வாழும் முஸ்லிம்களானாலும் சரி! இந்திய முஸ்லிம்கள் என்றதும் இந்திய முஸ்லிம்களா? முஸ்லிம்களீம் அப்படி உண்டா என்று கேட்டீர்கள். 12 கோடி முஸ்லிம்கள் மதத்தை தாண்டிய மொழி,இன பண்பாடு ,பொருளாதார காரணங்களினால் அந்தந்த வட்டாரத்தோடு ஐக்கியப்பட்டே வாழ்கின்றனர்.இதே பாகிஸ்தானுக்கு சென்ற இந்திய முஸ்லிம்களை இன்று வரை முஜாகிர்கள், வந்தேறிகள் என்றே அழைக்கப்படுகின்றனர்! நம்பிக்கயிலும் வணக்கதிலும் முறைகள் தேசத்திற்க்கு தேசம் மாறுபடும்! அறியவும் .

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//தலைவா பதிலளிக்க வேண்டாம் என கூறவில்லை பதிலளிப்பது என் விருப்பம் எனதான் கூறியுள்ளார்.//

சரி, பிறகு ஏன் நான் உங்களுக்கு பதில் அளித்தால் அது நேர்மை இல்லை என்றீர்கள்? நேர்மைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

ஆனந்த் சாகர் said...

ஒரே நபர்தான் சட்டம், நம்பிக்கையாளன் என்று இரண்டு புனைப்பெயர்களில் பின்னூட்டமிடுகிறாரா?

சட்டம் said...

அப்படியானால் ஆனந்த் , தஜ்ஜால் , ஆன்ட் , சகோதரன் எல்லாம் ஒரே ஆள்தானா?
வேறு பதிவில் உள்ளதற்கு இந்த பதிவில் பதிலிட்டால் இப்படித்தான் புரிந்து கொள்வதா?
நல்லவேளை உம்மிடம் இருந்து எதையும் கற்கவில்லை தப்பித்தேன். உமது புரிதலின் தன்மை புல்லரிக்க வைக்கிறது. இந்த லட்சணத்தில் தான் இருக்கும் உமது அத்வைதம் பற்றிய புரிதலும் இஸ்லாம் பற்றிய புரிதலும். நல்லா வருவீங்க

சட்டம் said...

//இது எப்படிப்பட்ட அறியாமை! நான் முஸ்லிம்களோடு வெளிப்புற பழக்கம் மட்டும் வைத்துக்கொள்ளவில்லை. நான் அவர்களில் ஒருவனாக, 5 வேளை தொழுகை புரிந்துவந்த ஒரு பயபக்தியான முஸ்லிமாக இருந்தவன். பள்ளிவாசலின் இமாமிடமிருந்து அரபியில் குரானை ஓத கற்றுக்கொண்டவன். குரானை இறை வேதம் என்றும் முஹம்மதை அல்லாஹ்வின் தூதர் என்றும் அப்பாவித்தனமாக 20 வருடங்களுக்கும் மேலாக நம்பிக்கொண்டிருந்தவன். நான் பல முஸ்லிம்களின் நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறேன், பல முஸ்லிம்களோடு அப்பாவித்தனமாக பழகி இருக்கிறேன். அவர்களின் சுய ரூபதையும் பார்த்திருக்கிறேன். அவர்களின் வெளிவஷத்திற்கு //
உமது பதிவே பல்லைக் காட்டுகிறது இஸ்லாத்திற்கும் உமக்கும் எந்த தொடர்பும் இல்லையென.

உமது வார்த்தைகள் உண்மையான முஸ்லிம் பேசமாட்டார். கற்பனைக்கு வைத்துக் கொண்டாலும் எப்படி சொல்லியிருப்பார் தெரியுமா( குரானை முழுதாகக்கற்றவன் ஐவேளைத் தொழுகையை கடைப்பிடித்தால் என இருந்தால் நம்பலாம். முஸ்லிம் நிறுவனத்தில் வேலைபார்த்தேன் அது இது என்று ஏன் கதை . தயவு செய்து இஸ்லாமியரின் பதிவைப்படித்து புரிந்து கொள்ளவும்.

சட்டம் said...

அய்யா ஆனந்த்
.பதில் எனன?
உமது காவி கிழிந்து விட்டதா

ஆனந்த் சாகர் said...

@நம்பிக்கையாளன்,

//அப்படின்னா 20 வருஷமா இப்ப நீஙக சொல்ட்ரா முஸ்லிம்கள் மாதிரி பயங்கரவாதியா இருந்தீங்களா?// முஹம்மதை பற்றிய உண்மைகள் தெரியாதவரை, அதாவ்து அவர் ஒரு பயங்கரவாதி, வழிப்பறி கொள்ளையர், தன்னை விமர்சிப்பவர்களைஆளை அனுப்பி கொலை செய்பவர், இனவெறி பிடித்தவர், கூட்டு படுகொலை செய்பவர், கற்பழிப்பவர், பிறர் சொத்துக்களை கொள்ளை ஆடிப்பவர், சுதந்திரமான மனிதர்களை அடிமைத்தளத்திற்குள் தள்ளுபவர், தன்னை ஏற்காதவர்களை காஃபிர்கள் என்று முத்திரை குத்தி அவர்களை கண்ட இடத்தில் பிடறியில் வெட்டுங்கள் என்று, பூமி முழுவதும் இஸ்லாத்திற்கு மாறும்வரை காஃபிர்களோடு ஜிஹாத் செய்யுங்கள் என்று கூறியவர், வயதுக்கு வராத சிறுமியோடு பாலியல் சேட்டை செய்பவர், தன்னுடைய வளர்ப்பு மகனின் மனைவிமீது காம இசை கொண்டு அவளை மணந்து கொண்டவர் போன்ற உண்மைகளை தெரியாதவரை, நான் முஹம்மதை நல்லவர் என்று நம்பிக்கொண்டிருந்தேன். முஹம்மதின் பயங்கரவாத செயல்களை தெரிந்தே அதை சரி என்று ஆமோதிக்கிற முஸ்லிமாக நான் இருந்ததில்லை.

ஆனந்த் சாகர் said...

@நம்பிக்கையாளன்,

//இங்க நீங்கள் யார பத்தி அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் அப்படினு விவாதிக்கிறீங்க? நீங்கள் முஸ்லிம்கள் பற்றி எனக்கு தெரியவில்லை என்று கூறுகின்றீர்களே எந்த முஸ்லிம்கள். நீங்கள் பணிபுரிந்த அனைத்து நிறுவனத்திலும் முஸ்லிம்கள் நீங்கள் கூறும் முஹம்மது போல் இங்க நீங்கள் யார பத்தி அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் அப்படினு விவாதிக்கிறீங்க? நீங்கள் முஸ்லிம்கள் பற்றி எனக்கு தெரியவில்லை என்று கூறுகின்றீர்களே எந்த முஸ்லிம்கள். நீங்கள் பணிபுரிந்த அனைத்து நிறுவனத்திலும் முஸ்லிம்கள் நீங்கள் கூறும் முஹம்மது போல் கொலை,கொள்ளை,கற்பழிப்பு இவைகளை முன்மாதிரியா கொண்டு ஏதேனும் வன்முறை செய்தார்களா?இவைகளை முன்மாதிரியா கொண்டு ஏதேனும் வன்முறை செய்தார்களா?//

அது என்ன நான் கூறும் முஹம்மது? முஸ்லிம்களா எவரை அல்லாஹ்வின் இறுதி தூதர் என்று நம்பிக்கொண்டி இருக்கின்றனரோ அந்த முஹம்மதுதான் நான் கூறும் முஹம்மது. அவர்தான் கூட்டு படுகொலை, கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, இன்னும் பல கொடூர குற்றங்களை செய்த குற்றவாளி.

முஹம்மதின் குற்றங்களை அறிந்து கொண்டே அவரை ஏற்றுக்கொள்கிற, அவருடைய செயல்களை சரி என்று கூறுகிற எவருக்கும் அவருடைய குற்ற செயல்களில் பங்கு உண்டு. முஸ்லிம்கள் அவரை ஏற்றுக்கொள்வதால் அவர்களும் அவரை போன்றவர்களே. முஸ்லிம்களுக்கு முஹம்மதிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று ஒரு குரான் வசனம் கூறுகிறது. அதாவ்து முஹம்மதின் குற்ற செயல்கள் முஸ்லிம்களுக்கு அழகிய முன்மாதிரி என்று குரான் கூறுகிறது. இந்த அழகிய முன்மாதிரியை பின்பற்றிதான் முஸ்லிம்கள் முஹம்மது காலம் தொட்டு பயங்கரவாத பாதக செயல்களை செய்து வருகிறார்கள். பயங்கரவாத செயல்களை செய்யாவிட்டாலும் அவற்றை ஏற்றுக்கொள்கிற, ஆதரிக்கிற எவரும் பயங்கரவாதிகள்தான். அமெரிக்கா உஸாமா பின் லாதனை கொன்றதற்கு நான் வேலை செய்த நிறுவனத்தில் இருந்த முஸ்லிம்கள் மிகவும் வருத்தப்பட்டனர். அவர் ஒரு உண்மையான நல்ல முஸ்லிம் என்று சான்றிதழ் வேறு கொடுத்தனர். இதுதான் எல்லா முஸ்லிம்களின் எண்ணம். என்ன, சிலர் வெளியே வேறுமாதிரி நடிப்பார்கள்.

ஆனந்த் சாகர் said...

@நம்பிக்கையாளன்,

//என்னுடய பதிவில் ஒரு இடத்திலேனும் ஏதேனும் முஹம்மதை பற்றி விவாதிக்கிறேன் என்று கூறினேனா? எதற்க்கு இந்த கூப்பாடு?//

நீங்கள் முஹம்மது நல்லவர் என்கிறீர்கள். நான் அவர் மிக கொடூர குற்றங்களை செய்த கொடும்பாவி என்கிறேன். நம் இருவரில் ஒருவர் சொல்வதுதான் உண்மையாக இருக்க முடியும். யார் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்க வேண்டுமென்றால் அதற்கு நாம் விவாதம் புரிவதுதான் ஒரே வழி. அதற்குத்தான் உங்களை அழைக்கிறேன். இது கூப்பாடு அல்ல, அழைப்பு. என்ன, நீங்கள் தயாரா?

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//அப்படியானால் ஆனந்த் , தஜ்ஜால் , ஆன்ட் , சகோதரன் எல்லாம் ஒரே ஆள்தானா?
வேறு பதிவில் உள்ளதற்கு இந்த பதிவில் பதிலிட்டால் இப்படித்தான் புரிந்து கொள்வதா?//

எனக்கு ஆரம்பத்திலிருந்தே சந்தேகம்தான்.



//நல்லவேளை உம்மிடம் இருந்து எதையும் கற்கவில்லை தப்பித்தேன்.//

என்னிடமிருந்து எதை கற்றுக்கொள்ள சொன்னேன்? முஹம்மதின் உண்மையான முகத்தை, உண்மையான இஸ்லாத்தை பற்றி குரான்,ஹதீஸ்,சீரா ஆகியவற்றை சுயமாக படித்து அறிந்துகொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறோம்.



// உமது புரிதலின் தன்மை புல்லரிக்க வைக்கிறது.//

இது என்னுடைய சந்தேகம்,புரிதல் இல்லை. நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் புல்லரிததுக்கொள்ளலாம்.



// இந்த லட்சணத்தில் தான் இருக்கும் உமது அத்வைதம் பற்றிய புரிதலும் இஸ்லாம் பற்றிய புரிதலும்.//

சிரிப்பை வரவழைக்கிறீர்கள்!



// நல்லா வருவீங்க//

வருவோம்ல!

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//உமது வார்த்தைகள் உண்மையான முஸ்லிம் பேசமாட்டார். //

என்னைப்போன்று பல முஸ்லிம்கள் பல வலைதளங்களில் பேசிக்கொண்டி இருக்கின்றனர்.



//கற்பனைக்கு வைத்துக் கொண்டாலும் எப்படி சொல்லியிருப்பார் தெரியுமா( குரானை முழுதாகக்கற்றவன் ஐவேளைத் தொழுகையை கடைப்பிடித்தால் என இருந்தால் நம்பலாம்.//

நான் குரானை முழுவதுமாக ஆராய்ந்து படித்திருக்கிறேன். இந்த விஷயத்தில் குரானில் அல்லாஹ் பல வசனங்களில் சொன்னபடி நடந்துகொண்டேன்!!!



// முஸ்லிம் நிறுவனத்தில் வேலைபார்த்தேன் அது இது என்று ஏன் கதை .//

இது கதை அல்ல, நிஜம்!



// தயவு செய்து இஸ்லாமியரின் பதிவைப்படித்து புரிந்து கொள்ளவும்.//

இஸ்லாமியரின் தக்கியாவை படித்து படித்து போரடித்து விட்டது!

nambikkaiyaalan said...

அன்பு ஆனந்த்!

//முஹம்மதை பற்றிய உண்மைகள் தெரியாதவரை, அதாவ்து அவர் ஒரு பயங்கரவாதி, வழிப்பறி கொள்ளையர், தன்னை விமர்சிப்பவர்களைஆளை அனுப்பி கொலை செய்பவர், இனவெறி பிடித்தவர், கூட்டு படுகொலை செய்பவர், கற்பழிப்பவர்.....//உங்கள பத்தி சொன்னதுமே இவ்வளவு விளக்கம? இதே மாதிரி விளங்காத முஸ்லிம்கள் இருப்பாங்க இல்லயா? அவங்களுக்கும் கொஞ்சம் அவகாசம் கொடுங்க,திருந்துவாங்க அத விட்டுட்டு சும்மா தேஞ்ச ரெகார்ட் மாதிரி முஹம்மது கொல செஞ்சார்,கற்பழிச்சார் அப்டின்னு அலிசீனா பண்டங்களை இங்கு விற்க்க வேண்டாம் (அது உண்மையாக இருந்தாலும் சரி ) இஸ்லாத்தை விமர்சியுங்கள்,முஹம்மதை விமர்சியுங்கள்! அதுவும் வேறு நம்பிக்கையில் இருக்கும் உங்களுக்கு அதுவும் ஆன்மீகத்தில், லயித்திருக்கும் உங்களுக்கு எந்த விதத்திலும் பொருந்தவில்லை! ஏனென்றால் இஸ்லாத்தை விட்டு ஒருவர் வெளியே சென்றால் அவர் இறைமறுப்பு கொள்கையத்தான் தேர்ந்தெடுப்பார்! ஏனென்றால் இஸ்லாமிய நம்பிக்கை அப்படி! உங்களைப்போல் ஜாக்கி,ரவிஷங்கர் போன்றோரை ஆதரிக்கும் ஆன்மீகத்தை தேடும் அடுத்த கட்டத்திற்க்கு செல்லுவது என்பது நகைப்பிற்க்கூரியதே! அது இருக்கட்டும், அது உங்கள் நம்பிக்கை!

//அது என்ன நான் கூறும் முஹம்மது?// ஆம் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வுடன் பதிவிடும் உங்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே உங்களை புரிந்து கொள்ள முடிவதால்!

//முஸ்லிம்களா எவரை அல்லாஹ்வின் இறுதி தூதர் என்று நம்பிக்கொண்டி இருக்கின்றனரோ அந்த முஹம்மதுதான் நான் கூறும் முஹம்மது// முஸ்லிம்கள் அவரை ஏற்றுக்கொள்வதால் அவர்களும் அவரை போன்றவர்களே//அந்த முஸ்லிமாகத்தான் 20 வருஷமாக இருந்தீர்கள்!

//அமெரிக்கா உஸாமா பின் லாதனை கொன்றதற்கு நான் வேலை செய்த நிறுவனத்தில் இருந்த முஸ்லிம்கள் மிகவும் வருத்தப்பட்டனர். அவர் ஒரு உண்மையான நல்ல முஸ்லிம் என்று சான்றிதழ் வேறு கொடுத்தனர்.// இது என்ன சிறுபிள்ளை தனமான பதில் ஒசாமா தீவிரவாதியா இல்லயா என்ற தலைப்பிலும் அமெரிக்க வல்லாதிக்கம் என்ற தளப்பிலும் விவாதிக்க வேண்டிய விஷயம்! பாகிஸ்தான் கிரிக்கெட்டுல ஜெயிச்சா கை தட்டுறவன் முஸ்லிம் என்பது போல் உள்ளது உங்கள் பதிவு!

/

nambikkaiyaalan said...

அன்பு ஆனந்திற்க்கு!
முஹம்மதை பற்றி தங்களுடன் விவாதம் புரிய எனக்கு மனமில்லை! தவிர உங்களின் பதிவுகளில் முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வு இருந்ததால் உள்ளே பதிவிட்டேன்! ஆதாரமாக உங்களின் பதிவுகளை வரிக்கு வரி எடுத்து என்னால் பதிவிட முடியும்! இந்த தளம் அதற்க்கு உரியதல்ல ! இஸ்லாத்தில் நல்ல விஷயங்களே இல்லாததுபோல் வட்டிக்கு தவறான விளக்கம் தந்தது ஒன்றே போதும்!
அப்படி உங்களால் முஹம்மதுதான் நடக்கின்ற வன்முறைகளுக்கு காரணம் என்றால் தலைப்பிட்டு பதிவிடுங்கள் கேள்விகள் கேட்கிறேன்! நீங்கள் பணிபுரிந்த நிறுவனங்களில் யார் முஹம்மதை முன்மாதிரியாக கொண்டு உங்களுக்கு அல்லது பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தினார்கள்? அல்லது உலகளாவிய அளவில் எதுவும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதாரம் உண்டா? அதையும் பதிவிடுங்கள்! வரவேற்கிறேன்! மீண்டும் கூறுகிறேன் உலகளாவிய அல்லது உள்ளூர் தீவிரவாதத்திற்க்கு முஹம்மது முன்மாதிரி கிடையாது௧!,மேலும் இப்படிப்பட்ட எண்ணம் முஸ்லிம்களை ஒழிக்க மட்டுமே பயன்படும்! ஏனென்றால் குஜராத்தில் சிறுபான்மயினர் தாக்கப்பட்டதற்க்கு அதனை வேடிக்கை பார்த்ததும்,நீலிக்கண்ணீர் வடித்ததும் இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்கள்தான்! நீங்கள் அப்படிப்பட்டவராக இல்லாதவரை சந்தோஷமே!.

Unknown said...

Mr. தஜ்ஜால் ... ஏற்கனவே உண்மைக்குரலுடன் நடந்த விவாதத்தில் உண்மைக்குரலின் கருத்து புதுமையை புகுத்துகிறது .. இப்படித்தான் இஸ்லாமியர்கள் அறிவியலை குர்ஆனுடன் கலக்கிறார்கள் என்று... தாங்களாக கூறொக்கொண்டு அதை ஏற்காமல் வந்திவிட்டீர்??

அப்படி பாதியில் விடப்பட்ட விவாதம் முடிவுற்றதாக இங்கே பதிந்துள்ளது ஏனோ??

rahuman said...

‘இரு கைகளால் படைத்தல்’ என்பதில் ‘இரு கைகள்’ என்பது உருவக அணியாகும். -இவ்வகையில்‘கை’ என்பது ஒருவரின் அல்லது ஒன்றின் செல்வாக்கு அல்லது சுய ஆற்றலை குறிக்க பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது.