Monday, 23 September 2013

குர்ஆனில் பெருவெடிப்புக் கொள்கை?குர்ஆன் 21:30
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரி லிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
அறிஞர் பீஜே மொழிபெயர்ப்பு

குர்ஆனின் இந்த வசனம் பெருவெடிப்புக் கொள்கையை முன்னறிவிப்பு செய்கிறது. இந்தப்பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாகத் திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூறமுடியும். எனவே திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது என்கின்றனர் இஸ்லாமிய அறிஞர்கள்.

இந்த வசனத்திலிருக்கும் அறிவியல்(?) பேருண்மைகளைக் காணும் முன் மொழிபெயர்ப்பிலிருக்கும் குழப்பத்தைக் காண்போம்.

கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் மொழிபெயர்ப்பு
... என்பதை காபிரானவர்கள் (சிந்தித்துப்) பார்க்கவில்லையா? ...

இக்பால் மதனி மொழிபெயர்ப்பு
...  இந்நிராகரிப்போர் பார்க்கவில்லையா? ...


YUSUFALI:
 Do not the Unbelievers see that...


PICKTHAL:
Have not those who disbelieve known that  ...


SHAKIR:
Do not those who disbelieve see that ...

இந்த வசனத்தில்  கையாளப்பட்டிருக்கும் சொல்  “awalam yara”  
Awalam - Do not
yara – see

”பார்க்கவில்லையா?” என்பதே சரியான மொழிபெயர்ப்பு.

“பார்க்கவில்லையா?” என்பதை  கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ ”(சிந்தித்துப்)பார்க்கவில்லையா?”  அடைப்புக் குறியுடன் சரிகண்டதை, எதற்காக அறிஞர் பீஜே,  ”சிந்திக்க வேண்டாமா?”  என வேண்டுமென்றே  மொழிபெயர்க்க வேண்டும்?

உதாரணத்திற்கு, “இராமசாமியை நீங்கள் பார்க்கவில்லையா? என்று ஒருவர் உங்களிடம் கேட்கிறார் எனில், உங்களுக்கு இராமசாமியைத் தெரியும் என்பதுதான் பொருள்.

அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும்... காஃபிர்கள் பார்க்கவில்லையா?...

என்றால்,

அன்றைய காஃபிர்கள் அறிந்த ஒரு செய்தியைத்தான் முஹம்மது கேள்வியாக வைக்கிறார் என்றுதான் பொருள்விளங்க முடியும். எல்லோரும் நன்கு அறிந்த ஒரு செய்தியை எப்படி முன்னறிவிப்பாகக் கருதமுடியும்?

ஆதியாகமம் 1:6
பிறகு தேவன், ”இரண்டு பாகமாக தண்ணீர்ப் பகுதியை பிரிந்து ஆகாய விரிவு உண்டாகக்கடவது” என்றார்.


மெசபடோமியர்களின் மதநம்பிக்கைப்படி, தியமத்(Tiamat)  என்ற பெண் கடவுள், ஆதியிலிருந்த அப்ஜு என்ற நன்னீர் கடவுளுடன் இணைந்து இளைய கடவுள்களை உருவாக்கி பெரும் குழப்பம் விளைவித்தவள். தியமத்திற்கு இரண்டு உருவகங்கள் இருந்ததாக அவர்கள் நம்பிக்கை கூறுகிறது.  ஒன்று, நன்னீர் மற்றும் உப்பு நீருக்கும் புனித் திருமணம் செய்து பிரபஞ்சத்தை அடுத்தடுத்த தலைமுறைகள் மூலம் அமைதியாக உருவாக்குவது. இரண்டாவது, படைப்பைப்பற்றி கூறும் எனுமா எலிஷ்  என்ற  பாபிலோனிய காவியத்தில், டியமத்தை கொடூரமான பெண் டிராகன் போன்று உருவகம் செய்கிறது. அவள், தெய்வங்களின் முதல் தலைமுறை பெற்றெடுக்கிறாள்; புயல் கடவுளான மார்டக் அவள் மீது போர் செய்து அவளது உடலை இருகூறாக பிளந்து வானம் மற்றும் பூமியை உருவாக்குகிறார்.

இது போன்ற ஆதிகால நம்பிக்கைகளைத்தான் குர்ஆன் 21:30 மறு ஒலிபரப்பு செய்கிறது. இதில் மூடநம்பிக்கைக்ளைத் தவிர எதுவுமில்லை. இத்துடன் இக்கட்டுரையை முடித்துவிட முடியும், ஆனால் பெருவெடிப்புக் கொள்கையுடன் குர்ஆன் எவ்வாறு முரண்படுகிறது என்பதை நாம் காணவேண்டியுள்ளதால், வாதத்திற்காக குர்ஆனில் கூறப்பட்டுள்ளது பெருவெடிப்புக் கொள்கையேன்றே வைத்துக் கொண்டு, மீண்டும் தொடர்கிறேன்.

அறிவியலைக், குருட்டு நம்பிக்கைகளின் குவியலான குர்ஆனுடன் ஒப்பிட்டு விவாதிப்பதற்கு மன்னிக்க வேண்டும். படைப்பற்றி கூறும் சில குர்ஆன் வசனங்களக் காண்போம்.

7:54 உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.
41:9 "பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்?
41:10 நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.
41:11 பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான்.
41: 12 இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான்.

இரண்டு நாட்களில் வானமும், பூமியும் உருவானதாகக் கூறுவது பெருவெடிப்புக் கொள்கை வரையறை செய்யும் காலத்திற்கு முரணானது. மேலும் இரண்டு நாட்களில் பூமியையும், இரண்டு நாட்களில் மலைகளையும் உணவுவகைகளையும்(யாருக்கானது?)  படைத்த பின்னர் புகையாக இருந்த வானத்தை படைக்க நாடினானாம்!. பூமியின் பணி முழுமையடைந்த பின்னர் வெளியை முழுமை செய்தானாம்! அதாவது, பெருவெடிப்பில் முதலில் முழுமையடைந்தது பூமி என்ற கிரகம்தான். இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான உளறல்களை அறிவியல் எனக்கூறி சிறிதும் கூச்சமின்றி மதவியாபாரம் செய்யும் இஸ்லாமிய அறிஞர்களின் தன்னம்பிக்கையை(!?) நினைக்கையில் நான் மெய்சிலிர்த்துப் போகிறேன்.
பெருவெடிப்பைப் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.

ஒளியை, நிறமாலையின் மூலமாக சிவப்பிலிருந்து ஊதா நிறம் வரை பிரிக்க முடியும் என்பதையும், சிவப்பு நிறத்தின் அலையளவு நீளமானதாகவும், ஊதாவின் அலை நீளம் குறைவானது என்பதையும் அறிவீர்கள். நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து வெளியேரும் ஒளியை அவ்வாறு பிரிக்கும் பொழுது அவை சிவப்பு நிறத்திற்கு மாறுவதை அறிந்தனர். இதன் பொருள் அவை நம்மைவிட்டு விலகிச்செல்கின்றன என்பதுதான்.

அப்படியானால் காலங்களுக்கு முன் அவைகள் நெருங்கியிருந்திருக்க வேண்டுமே என்ற சிந்தனை அறிவியளர்களுக்கு உண்டானது. இப்படியே காலத்தை பின்னோக்கி செலுத்தினால் இப்பிரபஞ்சம் முழுவதுமே  ஒரு புள்ளியில் சுருங்கிவிடும் என்று யூகித்தனர். இதை  ஒருமைநிலை (Singularity) என்றனர். ஏதோ காரணங்களால் இந்த ஒருமை விரிவடைந்து இப்பிரபஞ்சம் ஏற்பட்டது; அப்பொழுதிலிருந்து காலம், வெளி, பொருள் பிறந்திருக்கிறது; இதற்கு சுமார் 13700 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என்பது தற்பொழுதைய அறிவியலின் கணிப்பு. இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது என்பதற்கு வருங்கால அறிவியல் பதில் கூறும்!.  

பெரும் விரிவிலிருந்து பிரபஞ்சம், இன்றைய நிலையை அடைய சுமார் 13700 கோடி ஆண்டுகள் தேவைபட்டிருக்கிறது என்பதை முன்பே பார்த்தோம்.  இதில் பூமி 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னும், 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிர்களும், அதைத் தொடர்ந்து பலசெல் உயிரினங்கள் பரிணாமம் அடைந்திருக்கலாம் என்கிறது.  அந்த ஒருமையில் அடங்கியிருந்தது நெபுலா இல்லையென்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் ... என்று பாறைக்கு வெடிவைத்துப் பிரித்ததைப் போன்று குர்ஆன் கூறுகிறது. பெரும் விரிவு பிரபஞ்சம் அமைய அடித்தளம் அமைத்தது. கோடிக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்களையும்,  நட்சத்திரங்களைச் சுழன்றுவரும் கிரகங்களையும் உருவாக்கியது. அதில் ஒரு அங்கமாக, அதனுள் இருக்கும்  பூமி,  எப்படிப் பிரிய முடியும்?

இஸ்லாமியர்கள் கூறும் இந்த அறிவியல்(!) கதைகளை, நாத்தீகர்களோ அல்லது மாற்று நம்பிக்கைகளில் இருப்பவர்கள் ஒருபொழுதும் ஏற்கப்போவதில்லை.  பின் எதற்காக இப்படிக் கதையளக்கின்றனர்?

மூடுமந்திரமாக, திரித்து, மழுப்பி மறைக்கப்பட்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் உளறல்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. எதையாவது இட்டுக்கட்டி தங்களவர்களை தக்கவைத்துக் கொள்ள, அறியவில் என்ற பெயரில் கதைகளை அவிழ்த்து விடுகின்றனர் என்பதைத் தவிர வேறில்லை.


தஜ்ஜால்

Facebook Comments

17 கருத்துரைகள்:

லூஸிஃபர் said...

அன்புத் தோழர் தஜ்ஜால் அவர்களே! பாராட்டுகள்.
குர்ஆனின் பெருவெடிப்பு கொள்கை போன்ற தெளிவான(?) ஒரு கதை மனுதர்மத்திலும் உண்டு.

அத்:1:8. அந்த பரம்பொருளானவர் சகல உயிர்களுக்கும் இருப்பிடமான தன் உடலினின்றும் பலவிதமான மக்களை உண்டாக்க நினைத்து, பிரபஞ்சப் படைப்புக்கு முன்னர் தண்ணீரை உண்டாக்கி, அதில் தன் ஆற்றல் வடிவமான ஒரு விதையை விதைத்தார்.

அத்:1:9. அந்த விதையானது இறைவனுடைய விருப்பத்தினாலே தங்கநிறமான ஒரு முட்டையானது.
அம்முட்டையில், முற்பிறப்பில் பிரமன் ஆவதற்கு உரிய தவம் செய்த ஒரு உயிரை பிரமனாகப் படைத்து அவரிடத்தில் நுண்மையாய் நுழைந்தார். அந்த பிரமனுக்கு எல்லா உலகங்களுக்கும் தந்தை என்று பெயர்.

அத்:1:12. முன்சொன்ன அந்த தங்கநிறமான முட்டையில் முன்சொல்லிய கணக்கில் ஒரு பிரம்மவருஷம் அந்த பிரம்மன் வசித்து தன்மனத்தினாலேயே இந்த முட்டை இரண்டாக வேண்டுமென்று நினைத்து அதை இரண்டு துண்டுகளாக்கினார்.

அத்:1:13. அவ்விரண்டு துண்டுகளில் மேற்துண்டினாலே சொர்க்கத்தையும், கீழ்த்துண்டினாலே பூமியையும், நடுவில் ஆகாயத்தையும் எட்டுத் திசைகளையும் பெருங்கடல்களையும் படைத்தார்.

உலகத்தில் எந்த மூலைக்குச் சென்றாலும் மதவாதிகளின் சிந்தனை, குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் ஒரேவிதமாகக்தான் இருக்கிறது.

தஜ்ஜால் said...

நன்றி தோழர் லூஸிஃபர்,

//உலகத்தில் எந்த மூலைக்குச் சென்றாலும் மதவாதிகளின் சிந்தனை, குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் ஒரேவிதமாகக்தான் இருக்கிறது.// ஆமாம் தோழர். இதுபோன்றவைகளை அன்றைய காலத்தில் அவர்களுக்குத் தெரிந்த அறிவியல் அவ்வளவுதான் என்ற நிலையில் எடுத்துக் கொள்ளவேண்டும். அதை இன்றைய நவீன அறிவியலுடன் பொருத்தி அவற்றில் கூறப்படாத ஒன்றை வலுவில் திணித்து கதை சொல்வதையே நாம் விமர்சிக்கிறோம்.

vellai vaaranan said...

மனு தர்மம் என்பது இந்துக்களின் வேதம் அல்ல. அது பிற்காலத்து நூல். வேதங்கள் என்பவை நான்கு. ருக் யஜுர் சாமம் அதர்வணம் ஆகியவை. உலகம் எப்படி தோன்றியது என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்போது வாழ்ந்த மனிதர்களின் கற்பனை சிகரமே ஒரு கதை வடிவாக பழைய நூல்களில் உள்ளது. அந்த கற்பனைகளை ஏற்கவேண்டும் என்று இந்து மதத்தில் எவ்வித கட்டாயமும் யாருக்கும் இல்லை. மேலும் இந்து மதநூல்களில் , குருவானவர் தனது சீடர்களுக்கு உபதேசம் செய்யும் போது , எனக்கு தெரிந்த வழியை சொல்லிக் கொடுத்துவிட்டேன். இதனை நீ பின்பற்றிப்பார். அதே சமயம் இதனை விட வேறு சிறந்த வழி கிடைக்கிறதா எனவும் ஆராய்ந்து பார் என்று தான் கூறுகிறார். அதாவது மேலும் தொடர் ஆராய்ச்சிக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. எல்லைகள் எதுவும் இல்லை. எல்லைகள் வகுப்பது ஒரு காட்டு மிராண்டித்தனமே ஆகும்.

Iniyavaniniyavan Iniyavan said...

குரானில் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது என்று பரப்பும் டுபாக்கூர்வாதிகளை முறியடிக்க இனி அவரவர் வேதங்களில் ஏற்கனவே சொல்லப்பட்ட அறிவியல்(?) அவியல்களை அவிழ்த்துவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.தோழர்கள் தஜ்ஜால்,லூஸிபர் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...

mohamed sadiq said...

வணக்கம் தஜ்ஜால் மற்றுமொருமதமூடிகிழிப்பு செய்துள்ளீர் நன்றி தொண்டியாரின் விளக்கவுரையில் நிறைய அறிவியல் அபத்தம் உள்ளது இது அவர்களின்100வதுபதிப்பானாலும் தொடரவெசெய்யும்

தஜ்ஜால் said...

வாருங்கள் இனியவன்,

பாராட்டுகளுக்கு நன்றி.

குர்ஆனில் அறிவியல்(?) மேலும் சில வாரங்களுக்குத் தொடரும்.

தஜ்ஜால் said...

வாருங்கள் முஹம்மத் சாதிக்,

நன்றி

//தொண்டியாரின் விளக்கவுரையில் நிறைய அறிவியல் அபத்தம் உள்ளது // உண்மைதான். பெரும்பாலும் எனது கட்டுரைகளுக்கான கருவை அண்ணன் பீஜேவின் குர்ஆன் விளக்கவுரைகளிலிருந்தே எடுக்கிறேன். அல்லாஹ்(!) அவருக்கு நற்கூலி கொடுப்பானாக!

லூஸிஃபர் said...

அன்பு சகோதரர் வெள்ளை வராணரே!
எனது பின்னூட்டத்தில் நான் ‘மனுதர்மம்’ என்று மட்டும்தான் குறிபிட்டிருக்கிறேன். தாங்கள், “அது இந்துக்களின் வேதம் அல்ல” என்று எனக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். நான் அதை (மனுதர்மத்தை) வேதம் என்று எங்குமே குறிப்பிடவில்லையே ! சுருதி (வேதம்), ஸ்மிருதி (தர்ம சாஸ்திரங்கள்), புராண - இதிகாசங்கள் (தொன்மங்கள்) ஆகியவற்றைப்பற்றி நானும் ஓரளவு அறிந்து வைத்திருக்கிறேன். சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள், ஆகமங்கள், உபநிஷதங்கள், ஷட்தரிசனங்களான (ஆறு தரிசனங்களான) சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், மீமமாம்சகம், ஆரண்யகம் ஆகியவைகள், ஷண் மதங்களான (அறுவகை சமயங்களான) சைவம், வைணவம், சாக்தம், கணாபத்தியம், கௌமாரம், ரௌரம் ஆகியவைகள், பிற்கால தத்துவங்களான துவைதம், அத்துவைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவைகள், இவை மட்டுமல்லாது பிரமசூத்திரம், அர்த்த சாஸ்திரம், சுக்ரநீதி முதலிய இன்னும் எக்ஸட்ரா - எக்ஸட்ரா நூல்கள், தலபுராணங்கள் என்னும் லோக்கல் கடவுள்களின் திருவிளையாடல்கள், மற்றும் நாட்டார் கதைகள் – நாட்டார் வழக்காறுகள், இவைகள் போதாதென்று பௌத்தம், ஜைனம், சார்வாகம், ஆசீவகம், சீக்கியம் முதலிய பல சமயங்களின் தத்துவ - சடங்காச்சார சுவீகரிப்புகள், ஆகிய எல்லாம் கலந்த, - ஒரு பிச்சைகாரன் பாத்திரத்தில் உள்ள பலவீட்டு சோறு போன்ற - கலவை மதம்தான் இந்துமதம் என்பதையும் நான் அறிவேன். அதனால்தான் இம்மதத்திற்கு நிறுவனர் என்று ஒருவர் இல்லை ! நிறுவனம் என்ற ஒன்றும் இல்லை ! அதனாலேயே மதக்கட்டுப்பாடு என்பதும் இல்லை ! இல்லை ! ! இல்லவே இல்லை ! ! ! இதனாலேயே, புட்டபர்த்தி சாயிபாபா முதல் நித்தியானந்தா வரையில் ஏராளமான கிரிமினல்கள் மதத்தின் பெயரால், தத்துவத்தின் பெயரால் மக்களை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அதையும் இந்து மதம் அனுமதித்துக்கொண்டுதான் இருக்கிறது. இப்படிபட்ட ஒரு கலவை மதத்தில் எப்படி எல்லையை வகுக்க முடியும்? எல்லையே வகுக்க இயலாதபோது, எல்லையே இல்லை என்று பெருமை பாராட்டிக்கொள்வது, “நொண்டி ஒருவன், தான் ஒலிம்பிக்கில் ஓடினால் தங்கப் பதக்கம் பெற்றுத் தருவேன்” என்று பீற்றிக்கொண்டதற்கு ஒப்பாகும். இப்படிப்பட்ட கலவையில் பலவிதமான உலகப்படைப்புக் கதைகள் இருக்கத்தானே செய்யும்? அக்கதைகளில் ஒன்றை மட்டும் – அதுவும் குர்ஆனின் உலகப்படைப்பு கதை போன்ற ஒன்றை – மனு தர்மத்தில் இருந்து எடுத்துக் காட்டியதில் என்ன பிழை? நன்றி !

நாட்டு வேங்கை said...

வெள்ளை வாரணன் இந்துக்களின் இன்றை வேதம் மனுதர்மம்தான். மனுவே கோளோச்சனும் என்று ஆர்எஸ்எஸ் துடிக்குது.ஆனாலும் லூசிபர் உங்களுக்கு நல்ல விளக்கமே தந்துள்ளார். பதில் கூறுங்கள்.

(வேதங்களின் விரிவுரையான உபநிடதங்களிலும் எடுத்துக்காட்டுகள் தரலாம்)

mohamed sadiq said...

வணக்கம் லுஸீஃபர் அவர்கள் மதங்களுக்குள்மண்டியிடுகின்றனர் நாம் மதங்களூக்கு மரணதண்டணை கொடுத்துக்கொண்டிருக்கிறோம் புலம்பல்கள் இன்னும் அதிகமாகும்அவர்களுக்கு நமக்குஇன்னும்பொருப்புகள் அதிகமாகும் நன்றி

Ant said...

//7:54 உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்// ஆறு நட்களில் வானங்களும் பூமியும் படைக்கப்பட்டுவிட்டது.
//41:9 "பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்?// அதில் இரண்டு நாட்கள் பூமியை படைப்பதில் செலவாயிற்று.
//41:10 நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே. // பூமின் மீது முளைகளை ஏற்படுத்தி மு‌ழுமையடையவே ஆறுநாட்கள் ஆகிறது.
//41: 12 இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். // வானங்களை படைக்க ஏழு நாட்கள்.
இதன்படி பூமியை படைக்க இரண்டுநாட்களானது அதில் நான்கு நான்கள் முளைகளை ஏற்படுத்த ஹூபல் அல்லா எடுத்துக் கொண்டார். இரண்டு நாட்களில் ஏழுவானங்களை படைத்தார்.
உலகத்தை படைக்க ஹூபல் அல்லா எடுத்துக் கொண்ட நாட்கள்? (a) 6 (b) 10 (c) 8 (d) None. சிந்திக்க மாட்டீர்களா?

mohamed sadiq said...

உம்மிநபிக்குஎழுதபடிக்கதெரியாது அதுப்போல் உம்மி?அல்லாஹ்வுக்கும் கணக்குதெரியாது (கனிமத் பொருளுக்கு ஐந்தில் ஒன்று ஹலால் ஜகாத் பொருள் ஐந்தில் பாதி ஹராம் நம்ம் நபிக்கு )சிந்திக்கமாட்டீர்களா?

Anonymous said...

http://www.icschennai.com/QuranArticles/TamilAppendices/TamilAppendix28.aspx

கடவுளின் வெளிப்பாடுகளை முஹம்மது தனது சொந்தக் கரத்தினால் எழுதினார்

முதல் வெளிப்பாடு “ஓதுவீராக” என்பதாகும், மேலும் கடவுள் “எழுதுகோல் மூலம் கற்பிக்கின்றார்” (96:1-4) என்ற கூற்றையும் உள்ளடக்கியது, மேலும் இரண்டாவது வெளிப்பாடு “எழுதுகோல்” (68:1) என்பதாகும். எழுதுகோலின் ஒரே பணி எழுதுவதாகும்....

Anonymous said...

http://www.masjidtucson.org/quran/appendices/appendix28.html

கடவுளின் வெளிப்பாடுகளை முஹம்மது தனது சொந்தக் கரத்தினால் எழுதினார்

முதல் வெளிப்பாடு “ஓதுவீராக” என்பதாகும், மேலும் கடவுள் “எழுதுகோல் மூலம் கற்பிக்கின்றார்” (96:1-4) என்ற கூற்றையும் உள்ளடக்கியது, மேலும் இரண்டாவது வெளிப்பாடு “எழுதுகோல்” (68:1) என்பதாகும். எழுதுகோலின் ஒரே பணி எழுதுவதாகும்.

Anonymous said...

http://www.icschennai.com/QuranArticles/TamilAppendices/TamilAppendix28.aspx


http://www.masjidtucson.org/quran/appendices/appendix28.html

தஜ்ஜால் said...

வாருங்கள் Anonymous,

முஹம்மதிற்கு எழுதத் தெரியாது என்று முஃமின்கள் மட்டுமே சொல்கிறார்கள். அல்லாஹ்(!) அப்படிச் சொல்லவில்லை!

Dr.Anburaj said...

இந்திய மக்கள் யாராவது படைப்பு கொள்கையை பிடித்து ஆகா அறிவியல் அற்புதம்எ ன்று பிலா விடவில்லை. பழையன கழிவதும் புதியன பிறப்பதும் பிழை அல்ல.வாழும் வகைதான் இந்திய -இந்து சிந்தனை . விஞ்ஞானிகள் ஒரு காலத்தில் அணுவைபிளக்க முடியவே முடியாது என்று உறுதியாக நம்பினார்கள். பிளக்க முடியும்எ ன்றவரை கேலி செய்தாரகள்.பின் பிளந்து காட்டப்பட்டது. அணுவிஞ்ஞானம் இன்று பெரிய அளவில் வளா்ந்து வருகின்றது. ஆகவே இந்துக்களிடையே இந்தியாவில் கருத்துக்கள் சுதந்திரம் உண்டு.அரேபிய மதங்களில் அது இல்லை.என்னை நம்பு.இல்லையேல் செத்து தொலை என்ற சிந்தனை இசுலாமிய பண்பாடு. இந்தியாவில் அது கிடையாது.