Saturday, 28 September 2013

விவாதத்திற்கு அழைப்பு



இஸ்லாம் தூய மார்க்கம்(?) என்றும், சமாதானத்தை மட்டுமே முன்னிலைப் படுத்தி(?), மனித குலத்தை ஒற்றுமைபடுத்தி(?), மனித நேயத்தை வளர்ப்பதற் காக(?)வே தங்களின் ‘ஜமாத்’ உழைத்து வருவதாகவும் சில பெயர்தாங்கி முஸ்லிம்கள் கூறிவருகிறார்கள். இஸ்லாத்தின் கடந்த கால வரலாறு, கொடுமைக்குச் சான்று கூறும் ஹதீஸ்கள், குர்ஆனின் முரண்பாடுகள் முதலியவற்றை மூடிமறைத்துவிட்டு, தற்கால கண்டுபிடிப்புகளுக்கு முற்றிலும் எதிரான, அபத்தமான அறிவியல் விளக்கங்களையும், பொய்யையும் புனைவுகளையும் தங்களின் தளங்களில் விரிவாக எழுதி புளங்காகிதம் அடைவதோடு, தங்களின் தம்பிகளையும் புல்லரிக்கச்செய்து வருகிறார்கள். அப்படிபட்ட எந்த ஜமாத்தாரோடும், இணையத்தில் விவாதிக்க நாம் ஆயத்தமாகவே இருக்கிறோம். இத்தளத்தில் வெளிவரும் ஆக்கங்களுக்கு அறிவுபூர்வமான எதிர்விமர்சனங்களை ஏற்று அவற்றுக்கு பதில் தரவும் காத்திருக்கிறோம்.

பகிரங்க நேரடி விவாதத்திற்கு அறைகூவல் என்ற பெயரில் தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள், இணைய தள விவாதத்திற்கு மட்டும் அஞ்சி ஓடுவது ஏன்?

நேரடி விவாதத்தில் நினைவற்றாலும், சொல்வன்மையும் மிக்கவரால் பார்வையாளர்களை தன்வசப்படுத்தி உண்மையை மவுனமாக்கிட இயலும்! தனிநபர் தாக்குதலில் இறங்கி விவாதத்தின் போக்கை மாற்றிட முடியும்.

இணையதள விவாதத்தில், முன்வைக்கப்படும் ஆதரங்களை சரிபார்ப்பதற்கு போதிய அவகாசம் இருதரப்பினருக்கு மட்டுமல்லாமல் வாசகர்களுக்கும் கிடைக்கும். அஞ்சாமல் வாருங்கள் விவாதிப்போம். இணையப் பயனாளிகள் அனைவரும் உண்மை உணரட்டுமே!



இறையில்லா இஸ்லாம்

Monday, 23 September 2013

குர்ஆனில் பெருவெடிப்புக் கொள்கை?



குர்ஆன் 21:30
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரி லிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
அறிஞர் பீஜே மொழிபெயர்ப்பு

குர்ஆனின் இந்த வசனம் பெருவெடிப்புக் கொள்கையை முன்னறிவிப்பு செய்கிறது. இந்தப்பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாகத் திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூறமுடியும். எனவே திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது என்கின்றனர் இஸ்லாமிய அறிஞர்கள்.

இந்த வசனத்திலிருக்கும் அறிவியல்(?) பேருண்மைகளைக் காணும் முன் மொழிபெயர்ப்பிலிருக்கும் குழப்பத்தைக் காண்போம்.

கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் மொழிபெயர்ப்பு
... என்பதை காபிரானவர்கள் (சிந்தித்துப்) பார்க்கவில்லையா? ...

இக்பால் மதனி மொழிபெயர்ப்பு
...  இந்நிராகரிப்போர் பார்க்கவில்லையா? ...


YUSUFALI:
 Do not the Unbelievers see that...


PICKTHAL:
Have not those who disbelieve known that  ...


SHAKIR:
Do not those who disbelieve see that ...

இந்த வசனத்தில்  கையாளப்பட்டிருக்கும் சொல்  “awalam yara”  
Awalam - Do not
yara – see

”பார்க்கவில்லையா?” என்பதே சரியான மொழிபெயர்ப்பு.

“பார்க்கவில்லையா?” என்பதை  கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ ”(சிந்தித்துப்)பார்க்கவில்லையா?”  அடைப்புக் குறியுடன் சரிகண்டதை, எதற்காக அறிஞர் பீஜே,  ”சிந்திக்க வேண்டாமா?”  என வேண்டுமென்றே  மொழிபெயர்க்க வேண்டும்?

உதாரணத்திற்கு, “இராமசாமியை நீங்கள் பார்க்கவில்லையா? என்று ஒருவர் உங்களிடம் கேட்கிறார் எனில், உங்களுக்கு இராமசாமியைத் தெரியும் என்பதுதான் பொருள்.

அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும்... காஃபிர்கள் பார்க்கவில்லையா?...

என்றால்,

அன்றைய காஃபிர்கள் அறிந்த ஒரு செய்தியைத்தான் முஹம்மது கேள்வியாக வைக்கிறார் என்றுதான் பொருள்விளங்க முடியும். எல்லோரும் நன்கு அறிந்த ஒரு செய்தியை எப்படி முன்னறிவிப்பாகக் கருதமுடியும்?

ஆதியாகமம் 1:6
பிறகு தேவன், ”இரண்டு பாகமாக தண்ணீர்ப் பகுதியை பிரிந்து ஆகாய விரிவு உண்டாகக்கடவது” என்றார்.






மெசபடோமியர்களின் மதநம்பிக்கைப்படி, தியமத்(Tiamat)  என்ற பெண் கடவுள், ஆதியிலிருந்த அப்ஜு என்ற நன்னீர் கடவுளுடன் இணைந்து இளைய கடவுள்களை உருவாக்கி பெரும் குழப்பம் விளைவித்தவள். தியமத்திற்கு இரண்டு உருவகங்கள் இருந்ததாக அவர்கள் நம்பிக்கை கூறுகிறது.  ஒன்று, நன்னீர் மற்றும் உப்பு நீருக்கும் புனித் திருமணம் செய்து பிரபஞ்சத்தை அடுத்தடுத்த தலைமுறைகள் மூலம் அமைதியாக உருவாக்குவது. இரண்டாவது, படைப்பைப்பற்றி கூறும் எனுமா எலிஷ்  என்ற  பாபிலோனிய காவியத்தில், டியமத்தை கொடூரமான பெண் டிராகன் போன்று உருவகம் செய்கிறது. அவள், தெய்வங்களின் முதல் தலைமுறை பெற்றெடுக்கிறாள்; புயல் கடவுளான மார்டக் அவள் மீது போர் செய்து அவளது உடலை இருகூறாக பிளந்து வானம் மற்றும் பூமியை உருவாக்குகிறார்.

இது போன்ற ஆதிகால நம்பிக்கைகளைத்தான் குர்ஆன் 21:30 மறு ஒலிபரப்பு செய்கிறது. இதில் மூடநம்பிக்கைக்ளைத் தவிர எதுவுமில்லை. இத்துடன் இக்கட்டுரையை முடித்துவிட முடியும், ஆனால் பெருவெடிப்புக் கொள்கையுடன் குர்ஆன் எவ்வாறு முரண்படுகிறது என்பதை நாம் காணவேண்டியுள்ளதால், வாதத்திற்காக குர்ஆனில் கூறப்பட்டுள்ளது பெருவெடிப்புக் கொள்கையேன்றே வைத்துக் கொண்டு, மீண்டும் தொடர்கிறேன்.

அறிவியலைக், குருட்டு நம்பிக்கைகளின் குவியலான குர்ஆனுடன் ஒப்பிட்டு விவாதிப்பதற்கு மன்னிக்க வேண்டும். படைப்பற்றி கூறும் சில குர்ஆன் வசனங்களக் காண்போம்.

7:54 உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.
41:9 "பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்?
41:10 நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.
41:11 பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான்.
41: 12 இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான்.

இரண்டு நாட்களில் வானமும், பூமியும் உருவானதாகக் கூறுவது பெருவெடிப்புக் கொள்கை வரையறை செய்யும் காலத்திற்கு முரணானது. மேலும் இரண்டு நாட்களில் பூமியையும், இரண்டு நாட்களில் மலைகளையும் உணவுவகைகளையும்(யாருக்கானது?)  படைத்த பின்னர் புகையாக இருந்த வானத்தை படைக்க நாடினானாம்!. பூமியின் பணி முழுமையடைந்த பின்னர் வெளியை முழுமை செய்தானாம்! அதாவது, பெருவெடிப்பில் முதலில் முழுமையடைந்தது பூமி என்ற கிரகம்தான். இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான உளறல்களை அறிவியல் எனக்கூறி சிறிதும் கூச்சமின்றி மதவியாபாரம் செய்யும் இஸ்லாமிய அறிஞர்களின் தன்னம்பிக்கையை(!?) நினைக்கையில் நான் மெய்சிலிர்த்துப் போகிறேன்.
பெருவெடிப்பைப் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.

ஒளியை, நிறமாலையின் மூலமாக சிவப்பிலிருந்து ஊதா நிறம் வரை பிரிக்க முடியும் என்பதையும், சிவப்பு நிறத்தின் அலையளவு நீளமானதாகவும், ஊதாவின் அலை நீளம் குறைவானது என்பதையும் அறிவீர்கள். நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து வெளியேரும் ஒளியை அவ்வாறு பிரிக்கும் பொழுது அவை சிவப்பு நிறத்திற்கு மாறுவதை அறிந்தனர். இதன் பொருள் அவை நம்மைவிட்டு விலகிச்செல்கின்றன என்பதுதான்.

அப்படியானால் காலங்களுக்கு முன் அவைகள் நெருங்கியிருந்திருக்க வேண்டுமே என்ற சிந்தனை அறிவியளர்களுக்கு உண்டானது. இப்படியே காலத்தை பின்னோக்கி செலுத்தினால் இப்பிரபஞ்சம் முழுவதுமே  ஒரு புள்ளியில் சுருங்கிவிடும் என்று யூகித்தனர். இதை  ஒருமைநிலை (Singularity) என்றனர். ஏதோ காரணங்களால் இந்த ஒருமை விரிவடைந்து இப்பிரபஞ்சம் ஏற்பட்டது; அப்பொழுதிலிருந்து காலம், வெளி, பொருள் பிறந்திருக்கிறது; இதற்கு சுமார் 13700 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என்பது தற்பொழுதைய அறிவியலின் கணிப்பு. இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது என்பதற்கு வருங்கால அறிவியல் பதில் கூறும்!.  

பெரும் விரிவிலிருந்து பிரபஞ்சம், இன்றைய நிலையை அடைய சுமார் 13700 கோடி ஆண்டுகள் தேவைபட்டிருக்கிறது என்பதை முன்பே பார்த்தோம்.  இதில் பூமி 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னும், 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிர்களும், அதைத் தொடர்ந்து பலசெல் உயிரினங்கள் பரிணாமம் அடைந்திருக்கலாம் என்கிறது.  அந்த ஒருமையில் அடங்கியிருந்தது நெபுலா இல்லையென்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் ... என்று பாறைக்கு வெடிவைத்துப் பிரித்ததைப் போன்று குர்ஆன் கூறுகிறது. பெரும் விரிவு பிரபஞ்சம் அமைய அடித்தளம் அமைத்தது. கோடிக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்களையும்,  நட்சத்திரங்களைச் சுழன்றுவரும் கிரகங்களையும் உருவாக்கியது. அதில் ஒரு அங்கமாக, அதனுள் இருக்கும்  பூமி,  எப்படிப் பிரிய முடியும்?

இஸ்லாமியர்கள் கூறும் இந்த அறிவியல்(!) கதைகளை, நாத்தீகர்களோ அல்லது மாற்று நம்பிக்கைகளில் இருப்பவர்கள் ஒருபொழுதும் ஏற்கப்போவதில்லை.  பின் எதற்காக இப்படிக் கதையளக்கின்றனர்?

மூடுமந்திரமாக, திரித்து, மழுப்பி மறைக்கப்பட்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் உளறல்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. எதையாவது இட்டுக்கட்டி தங்களவர்களை தக்கவைத்துக் கொள்ள, அறியவில் என்ற பெயரில் கதைகளை அவிழ்த்து விடுகின்றனர் என்பதைத் தவிர வேறில்லை.


தஜ்ஜால்

Friday, 13 September 2013

குர்ஆன் கூறும் அறிவியல் . . . . .?

2. தாரிக் என்பது. . . . . . .  

விடிவெள்ளியா? விண்மீனா? விண்வீழ்கொள்ளியா?



இறைவனே நேரடியாய் ஜிப்ரயீல் என்ற கொரியர் சர்வீஸ் வழியே, ரசூல் முஹம்மதுவுக்கு அனுப்பிவைத்தது; இல்லை! இறக்கிவைத்தது; இல்லை! அருளப்பட்டது; குர்ஆன் என்ற இறைவேதம் என்பது இஸ்லாமியரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை அவர்களுடன் மட்டுமே இருந்திருக்குமேயானால் நாம் அதுபற்றி பேசப்போவதில்லை. ஆனால் சில இஸ்லாமிய அறிஞர்கள்(?) எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாகத் தங்களைக் கருதிக்கொண்டு, பிறமதங்களைக் கேலிபேசுவதும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களையும் நாத்திகர்களையும் வீண்வம்புக்கிழுப்பதும் தொடர்கதையாகி வருவதால், நாமும் அதுபற்றி விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

       ஒரு தெருவில் வசித்துவரும் ஒருவன் தனது தாய் பத்தினி என்று கூறுவதை யாரும் பெரிதாக பொருட்படுத்தப்போவதில்லை. ஏனெனில், அவனது நம்பிக்கை அவனுக்கு என்று இருந்துவிடு வார்கள். இந்தத் தெருவில் எனது தாய் மட்டுமே பத்தினி என்று கூறிக்கொண்டு அலையும் பொழுது, எதிர்மறையாக அவன், மற்றவர்களின் தாய்மார்களை(ப் பத்தினி இல்லை - விபச்சாரி என்று)க் கேவலப்படுத்தி  விடுகிறான் என்பதால், மற்றவர்கள் ஆவேசப்படவும், அவனுடைய தாயின் பத்தினித் தன்மை பற்றி, அத்தாயின் அந்தரங்கம் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசவேண்டிய கட்டாயத்தையும் அவனே உண்டாக்கிவிடுகிறான். லா இலாஹ இல்லல்லாஹு வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை) என்ற கலிமா வாக்கியமே, என் தாய்மட்டுமே பத்தினி என்று கூறுவதைப்போல அமைந்திருக்கவில்லையா என்பதே நமது கேள்வி. உன்தாய் பத்தினியா? என்தாய் பத்தினியா? என்று விவாதம் செய்வது, இரண்டு தாய்மார்களின் அந்தரங்கங்களை விவாதப்பொருளாக்கி வேடிக்கைப்பார்ப்பது சரியானது தானா என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டாமா? ஏனெனில் தாயின் பத்தினித் தன்மை என்பது நம்பிக்கையின் பாற்பட்டதேயொழிய, நிரூபணத்தின் பாற்பட்டதல்ல. இவைகள் விவாதப் பொருளாக ஆக்கப்படும் பொழுது, அறிவு மழுங்கி ஆவேசம் மட்டுமே மிஞ்சும் என்பதை இவர்கள் உணர வேண்டாமா? கடந்த சிலகாலமாக எனது தாய் மட்டுமே பத்தினி என்பது போன்ற கருத்துகள் சில இஸ்லாமிய அறிஞர்களால்(?) முன்வைக்கப்பட்டு விவாதப் பொருளாக்கப்பட்டதால் நாமும் இந்த விவாதத்தில் பங்கு எடுக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம். இங்கு முதலில் அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பாக குர்ஆனிய விளக்கம் பற்றிய விவாதத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

       குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்த்த பலரும் தத்தமது சிந்தனைக்கு ஏற்ப மொழிபெயர்ப்பைச் செய்து கொண்டார்கள் என்பதையும், அறிவியலுக்கு முரண்பட்டதாகப் பொருள் அமையும்பொழுது அரபிமூலத்திற்குச் சிறிதும் தொடர்பில்லாத தமிழாக்கங்களைச் செய்து, அதனை அடைப்புக் குறிக்குள்ளோ அல்லது வெளிப்படையாகவோ அமைத்துத் தங்களின் மேதாவிலாசத்தை(?) வெளிப்படுத்திக் கொண்டதையும், ‘பழம் தின்னும் தேனீக்கள்’ எனற முதல் கட்டுரையில் கண்டோம். இந்த கட்டுரையில்குர்ஆனின் விண் அறிவியல் பற்றி சிறிது காணலாம்.

குர்ஆனில் 86வது அத்தியாயம் விடிவெள்ளி (தாரிக்) ஆகும். இதிலுள்ள 17வசனங்களும் (ஆயாத்களும்) மக்காவில் அருளப்பட்டதாக (மக்கீ என்று) குறிக்கப்படுகிறது. அருளப்பட்ட வரிசையில் (தர்தீபே நுஜுலி) இது 36 ஆக உள்ளது. இந்த அத்தியாயம் 7வது மன்ஸிலில், 30வது ஜூஸ்உ-இல் உள்ளதாகும்.

பொதுவாக, குர்ஆனின்114 அத்தியாயங்களுக்கும் தொடக்க காலங்களில், தலைப்புப் பெயர் இடப்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. தோற்றுவாய் (அல்ஃபாத்திஹா) என்ற முதல் அத்தியாயம் தொடங்கி, அல் பகரா, ஆலுஇம்ரான், அன்னிஸா முதலிய சில அத்தியாயங்களுக்கு மட்டுமே நபி முகம்மது பெயரிட்டதாக ஹதீஸ்கள் மூலம் அறிய முடிகிறது. சில அத்தியாயங்களுக்கு நபித் தோழர்கள் (ஸகாபாக்கள்) பெயரிட்டுள்ளதையும் அறியமுடிகிறது. அப்படியும் கூட, நபித்தோழர்களால் பெயரிடப்பட்ட நிஸாவுல் குஸ்ரா என்ற 65வது அத்தியாயம் பிற்காலத்தில் தலாக் என்று பெயர் மாற்றப் பட்டிருப்பதை அறியும்போது, மேலும் சில அத்தியாயங்கள் இவ்வாறே பெயர் மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொள்கிறோம். தற்காலக் குர்ஆனின் மூலப்பிரதிகளான, காலிபா உஸ்மான் காலத்துப் பிரதிகளில், எந்தவொரு அத்தியாயத்திற்கும் பெயர் இடப்பட்டிருக்கவில்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

எது எப்படியாயினும், இன்றைய குர்ஆன் பிரதிகளில் 86வது சூராவில் (அத்தியாயத்தில்) தலைப்பில் அச்சிடப்பட்டிருக்கும் பெயரையே நாம் இங்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்கிறோம். அந்த அரபு மொழித் தலைப்பின் தமிழ் ஒலிபெயர்ப்பு இவ்வாறெல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. அரபுமொழியில் உள்ளதைத் தமிழில் ஒலிபெயர்ப்புச் செய்யும் பொழுது பலரும் பலவிதமாகச் செய்துள்ளனர்.

அவை: 1. தாரிக், 2. அல் தாரிக், 3. அத்தாரிக், 4. ஸூரத்துத் தாரிக், 5. சூரத்துத் தாரிக்கி,
             6. சூரா அல் அத்தாரிக்.

       இவைகளில் எது சரியானத் தலைப்பு என்று குர்ஆனிய அறிஞர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும். எல்லாத் தலைப்புகளும் சரியானதுதான் என்று கூறுவார்களேயானால், குர்ஆன் தலைப்புகளுக்குப் பொருள் மாறுபடாத வகையில் முன்னொட்டு - பின்னொட்டு சேர்த்துக் கொள்ளலாம் என்றும், அது அனுமதிக்கப்பட்டது என்றும் முடிவுசெய்யப்படுமானால், சரியானத் தலைப்பு எது என்பதில் குழப்பம் ஏற்படுவது உறுதி.

          இங்கு குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் பலரும் அந்த 86வது அத்தியாயத்தின் தலைப்பையும், முதல் மூன்று வசனங்களையும் எப்படியெப்படியெல்லாம் தமிழாக்கம் செய்துள்ளனர் என்பதை இனி காணலாம். முதலில் அவற்றின் ஒலிபெயர்ப்பும், பின்னர் அதன் தமிழாக்கங்களும் வருமாறு:


         86. அத்தாரிக்
1. வஸ்ஸமாஇ வத்தாரிக்
2. வமா அத்ராக  மத்தாரிக்
3. அன்னஜ்முஸ் ஸாகிபு





1. தர்ஜமா அல்குர்ஆனில் கரீம் (ஏ. முஹம்மது சிராஜுத்தீன் நூரி)
               1/2002, 2/2002, 8/2006 ஆம் ஆண்டின் பதிப்புகள்
                   86. ஸூரத்துத் தாரிக் - விடிவெள்ளி
            1: வானத்தின் மீதும் (அத்தாரிக்) விடிவெள்ளியின் மீதும் சத்தியமாக!
                           2: (நபியே! அத்தாரிக்) விடிவெள்ளி என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
                         3: (அது) இலங்கிக்கொண்டிருக்கும் (ஒரு) நட்சத்திரம்.


2. குர்ஆன் மஜீத் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு, 1/1983 ஆண்டு பதிப்பு
86. ஸூரத்துத் தாரிஃக் விடிவெள்ளி
     1: வானத்தின் மீதும் விடிவெள்ளியின் மீதும் சத்தியமாக,
                           2: விடிவெள்ளி என்னவென்று உமக்கு அறிவிப்பது எது?
             3: அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.


3. திருக்குர்ஆனும் ஏனைய வேதங்களும் (திருக்குர்ஆனின் 30வது பாகத்தின் விரிவுரை)
    எஸ். முகம்மது அலி, செப்டம்பர் 1984 ஆண்டு பதிப்பு
          86. அத் தாரிக் விடிவெள்ளி
      1: வானின், விடிவெள்ளியின் சான்றாக.
                           2: விடிவெள்ளி எது என்பதை உமக்கு எடுத்துக்கூறியது எது?
             3: (அது) ஊடுருவும் ஒளியுடைய ஒரு விண்மீன்.


4. மவாஹிபுல் குர்ஆன் (சூரத்துல் ஃபாத்திஹா, அம்ம ஜுஸ்உவின் தமிழ் விரிவுரை)
    1/2003 ஆண்டு பதிப்பு              
86. ஸூரத்துத் தாரிஃக் விடிவெள்ளி
     1: வானத்தின் மீதும், (அத்தாரிக்) விடிவெள்ளியின் மீதும் சத்தியமாக.
                           2:“தாரிக்”என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
             3: (அதுதான்) பிரகாசித்துக்கொண்டிருக்கும் நட்சத்திரம்.


5. குர்ஆன் தர்ஜமா (எம்.அப்துல் வஹ்ஹாப், கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி, ஆர்.கே.
    அப்துல் காதிர் பாகவி) ஜனவரி 2000ஆம் ஆண்டு பதிப்பு
86. ஸூரத்துத் தாரிக் விடிவெள்ளி           
1: வானத்தின் மீதும் “அத்தாரிக்” (என்னும் விடிவெள்ளியின்) மீதும்              சத்தியமாக -
                           2: (நபியே) அத்தாரிக் என்னவென்று உமக்குத் தெரியுமா?
             3: (அது) பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரம்.

6. தர்ஜுமதுல் குர்ஆன் -பி- அல்தபில் பயான் (அ.கா.அப்துல் ஹமீது பாகவி)
      1961, 1978 ஆம் ஆண்டு பதிப்புகள்
          86. தாரிக் உதயதாரகை     
     1: வானத்தின் மீதும் உதயதாரகை மீதும் சத்தியமாக,
                           2: (நபியே) உதயதாரகை என்னவென்று நீர் அறிவீரா?
             3: (அதுதான்) சுடரிடும் நட்சத்திரம்.

7. திருமறையின் தேன்மலர்கள் (திருக்குர்ஆன் வெண்பா) வே.ப.பாபுல்
     2007ஆம் ஆண்டு பதிப்பு
          86. தாரிக் உதயதாரகை
               1-3: கார்முகிலின் வான்மீதும் கண்பறிக்கும் சீருதய
            தாரகை தன்மீதும் சத்தியமாய் - ஏர்நபியீர்
           ஒண்ணுதய தாரகையோ உற்றுச் சுடர்வீசும்
           விண்மீனே யாகும் வெளிர்ந்து.

மேலே எடுத்துக்காட்டியுள்ள ஏழு தமிழாக்கங்களிலும் தாரிக் என்ற தலைப்பானது விடிவெள்ளி என்றும் உதயதாரகை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டு சொற்களுமே ஒரே பொருளைக் குறிப்பனவேயாகும். தமிழில் விடிவெள்ளி (விடியற்கலையில் தோன்றும் வெள்ளி) என்பதைத்தான் வடமொழியில் உதயதாரகை (சூரிய உதயத்தின் போது தோன்றும் விண்மீன், அதாவது விடிவெள்ளி) என்று குறிப்பிடுகின்றனர்.

(உதய தாரகை என்பது கிரகமே யொழிய, தாரகை என்று குறிப்பிட்டுவிட்டதால் அது நட்சத்திரமாகி விடாது. எரிநட்சத்திரம், வால்நட்சத்திரம் என்பவை போலவே உதயதாரகையும் நட்சத்திரம் அல்ல. இவை பற்றி பின்னர் விளக்கப்படும்.) 

அரபு மூலத்தில், இந்த அத்தியாயத்தின் முதல் மூன்று வசனங்களில், தாரிக் என்ற சொல் முதலிரண்டு வசனங்களிலும், னஜ்மு என்ற சொல் மூன்றாம் வசனத்திலும் எடுத்தாளப் பட்டுள்ளன. தாரிக் என்ற சொல்லிற்கு விடிவெள்ளி அல்லது உதயதாரகை என்ற சொல்லையும், னஜ்மு என்ற சொல்லிற்கு நட்சத்திரம் அல்லது விண்மீன் என்ற சொல்லையும் மேலே கண்ட ஏழு குர்ஆனிய அறிஞர்களும் பயன்படுத்தி உள்ளதையும் காண்கிறோம்.

இதோடுகூட மற்றும் சில அறிஞர்கள், தலைப்பை விடிவெள்ளி அல்லது உதயதாரகை என்று மொழிபெயர்த்து விட்டு, தாரிக் என்ற சொல் வருகின்ற வசனங்களில் விடிவெள்ளி அல்லது உதயதாரகை என்று குறிப்பிடாமல் தாரிக் என்ற அரபுச்சொல்லை அப்படியே தமிழில் ஒலிபெயர்ப்பாக்கி நிறைவுசெய்து வைத்துள்ளனர். அந்த மொழிபெயர்ப்புகள் வருமாறு:

8. திருக்குர்ஆன்-தமிழாக்கம் (பி.ஜைனுல்ஆபிதீன்) 1/2002, 2/2003, 4/2005, 7/2008,   
   11/2013ஆம் ஆண்டு பதிப்புகள். (தௌஹீது ஜமாத் மொழிபெயர்ப்பு)
          86. அத்தாரிக் விடிவெள்ளி     
     1: வானத்தின் மீதும் தாரிக் மீதும் சத்தியமாக!
                           2: தாரிக் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
             3: அது ஒளி வீசும் நட்சத்திரம்.

9. குர்ஆன் மஜீத் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு, 6/1990, 9/1993ஆம் ஆண்டு      
    பதிப்புகள்
          86. ஸூரத்துத் தாரிஃக் விடிவெள்ளி     
     1: வானத்தின் மீது  சத்தியமாக! தாரிக் மீதும், சத்தியமாக!
                           2: தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
             3: அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.

10. குர்ஆன் மஜீத் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு, 26 / 2010 ஆம் ஆண்டு பதிப்பு
          86. அத் தாரிக் விடிவெள்ளி     
     1: வானத்தின் மீது  சத்தியமாக! ‘தாரிக்’ மீதும், சத்தியமாக!
                           2: ‘தாரிக்’ என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
             3: அது இலங்கும் (ஒரு) நட்சத்திரம்.

11. குர்ஆன் தர்ஜமா (எம்.அப்துல் வஹ்ஹாப், கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி, ஆர்.கே.
    அப்துல் காதிர் பாகவி) செப்டம்பர் 2002, செப்டம்பர் 2004, மே 2005, ஜூன் 2007,
    ஜூலை 2011ஆம் ஆண்டு பதிப்புகள்
86. அத் தாரிக் விடிவெள்ளி           
1: வானத்தின் மீதும், “தாரிக்” மீதும் சத்தியமாக -
                           2: (நபியே) “தாரிக்” என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
             3: (அது) பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரம்.

12. குர்ஆன் தர்ஜமா (எம்.அப்துல் வஹ்ஹாப், கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி, ஆர்.கே.
    அப்துல் காதிர் பாகவி) மே 2002 ஆம் ஆண்டு பதிப்பு
86. அத் தாரிக் உதயதாரகை
1: வானத்தின் மீதும், “தாரிக்” மீதும் சத்தியமாக -
                           2: (நபியே) “தாரிக்” என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
             3: (அது) பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரம்.

13. திருக்குர்ஆன் மூலம் தமிழுரை  (எஸ். எஸ். அப்துல் காதிர் உமரி) டிசம்பர் 2011
      ஆம் ஆண்டு பதிப்பு
86. அத் தாரிக் விடிவெள்ளி           
1: வானத்தின் மீது சத்தியமாக! தாரிக்கின் மீதும் சத்தியமாக!
                           2: தாரிக் என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
             3: அது இலங்கும் ஒரு நட்சத்திரம்

14. குர்ஆன் தமிழாக்கம்  (டாக்டர். ஃபஸ்லுர் ரஹ்மான்)
      மே 2007ஆம் ஆண்டு பதிப்பு
86. விடிவெள்ளி (அரபு மொழிச் சொல் கொடுக்கப்படவில்லை)          
1: வானத்தின் மீது சத்தியமாக! ‘தாரிக்’ மீதும் சத்தியமாக.
                           2: ‘தாரிக்’ என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
             3: அது ஒளிவீசும் நட்சத்திரம்………

15. சங்கைமிக்க குர்ஆன் மற்றும் தமிழ்மொழியில் அதன் கருத்துக்களின் மொழி
      பெயர்ப்பு (முஹம்மது இக்பால் மதனீ சௌதி அரேபிய அரசுப் பதிப்பு)
      ஏப்ரல் 1993(?)
86. அத் தாரிக் உதயதாரகை
1: வானத்தின் மீதும், “தாரிக்”கின் மீதும் சத்தியமாக,
                           2: “தாரிக்” என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
             3: (அதுதான்) பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரம்.

16. தப்ஸீருல் ஹமீத் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜீத் (எஸ்.எஸ். முஹம்மது அப்துல்
      காதிர் சாஹிப் பாக்கவி) பாகம்-20, 3 / 2009ஆம் ஆண்டு பதிப்பு
86. சூரத்துத் தாரிக்கி (“தாரிக் என்பதற்குப பல பொருள்கள் உண்டு. ஆனால்
இவ்விடத்தில் விடிவெள்ளியை இப்பதம் குறிக்கிறது.” என்கிறார், இதன் ஆசிரியர், எஸ்.எஸ்.முஹம்மது அப்துல் காதிர் சாஹிப் பாக்கவி அவர்கள்)  
1: வானத்தின் மீது சத்தியமாக. இன்னும் ‘தாரிக்’கின் மீதும் (சத்தியமாக)
                           2: மேலும், தாரிக் என்பது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
             3: (அது) பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரமாகும்.


மேலே எடுத்துக்காட்டியுள்ள 16 குர்ஆன் மொழியாக்கங்களில் (வரிசை எண்:1, 2, 3, 4, 5, 6, 7 ஆகிய) ஏழில் மட்டுமே தலைப்பிலும் மற்றும் வசனங்களிலும் ‘தாரிக்’ என்பதற்கு ‘விடிவெள்ளி’ அல்லது ‘உதயதாரகை’ என்ற பொருள் எந்தவொரு குழப்பமுமின்றி தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள (வரிசை எண்: 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ஆகிய) ஒன்பது மொழியாக்கங்களிலும் தலைப்பில் மட்டுமே ‘விடிவெள்ளி’ அல்லது ‘உதயதாரகை’ என்ற பொருள் கொடுக்கப்பட்டுள்ளதேயொழிய, தமிழாக்க வசனங்களில் ‘விடிவெள்ளி’யும் இல்லை, ‘உதயதாரகை’யும் இல்லை. ‘தாரிக்’ என்ற அரபுச்சொல் அப்படியே ஒலிபெயர்ப்பாகத்  தமிழ் எழுத்துகளில் (‘தாரிக்’ என்றே) குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன் இவ்வாறு செய்யவேண்டும்? இங்குதான் இருக்கிறது குர்ஆனின் விண்அறிவியல். அதனை கொஞ்சம் அலசலாமா? 

விடிவெள்ளி அல்லது உதயதாரகை என்றால் என்ன?

·                  பொதுவாக சூரியனைச் சுற்றிவரும் கிரகங்கள் முறையே 1. புதன் (மெர்குரி), 2. வெள்ளி (சுக்கிரன் அல்லது வீனஸ்), 3. பூமி, 4. செவ்வாய் (மார்ஸ்), 5. வியாழன் (குரு அல்லது ஜுபிடர்), 6. சனி, 7. யுரேனஸ், 8. நெப்டியூன், 9. புளூடோ ஆகியவற்றுள், சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகங்களில் இரண்டாவது இடத்தில் உள்ள கிரகமே வெள்ளி. நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களுள் ஏறத்தாழ நமது பூமியின் அளவுள்ள கோள் இது. வைகறையில் சூரியன் தோன்றுவதற்குச் சற்று முன்னர் கிழக்கிலும், சூரியன் மறைவிற்குச் சற்றுபின்னர் மேற்கிலும் தோன்றும் ஒருகிரகமே இது. பொதுவாக எந்த கிரகத்திற்கும் சுயஒளி இல்லை. அவைகள் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிப்பதை மட்டுமே செய்கின்றன. இந்த வெள்ளி கிரகத்தைச் சுற்றிலும் ஒருவகை ஒளி புகாத மேகப்படலமோ அல்லது தூசிப்படலமோ சூழ்ந்துள்ளது. சூரியனின் கதிர்கள் இப்படலத்தில்பட்டு இரவில் மிகுந்த ஒளியோடு பிரதிபலிக்கின்றது. பார்ப்பதற்கு இது ஒரு ஒளிமிகுந்த மின்விளக்கு போல் காணப்படும். சிரியஸ் விண்மீனைப் போன்று 15மடங்கு ஒளியோடு, இது ஒரு பிரகாசமான விண்மீன் (நட்சத்திரம்) போன்று இருப்பதாலும், சூரிய உதயத்திற்கு முன்னர் வானில் காணப்படுவதாலும் இதற்கு உதயதாரகை (தாரகை = நட்சத்திரம்) அல்லது விடிவெள்ளி என்று பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. இக்கிரகம் தனது சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றிக்கொண்டு செல்லும்போது, பூமிக்கு மிகத்தொலைவாகச் செல்லும்போது 261மில்லியன் கி.மீ. தூரத்திலும், பூமிக்கு மிக அருகில் வரும்போது 38.2 மில்லியன் கி.மீ. தூரத்திலும் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பூமியிடமிருந்து இதைவிடக் குறைவான தூரத்தில் வெள்ளி கிரகம் நெருங்கி வந்ததில்லை என்பதே வானியல் விஞ்ஞானம் கண்ட உண்மை. பொதுவாக கிரகங்கள் அனைத்தும், நட்சத்திரங்களைப் போல் மினுக்கிடாமல் (கண்சிமிட்டாமல்) விளக்குகளைப் போல பளிச்சென்று ஒளிவீசிக் கொண்டிருப்பவை யாகும். இது விண்மீன்களுக்கும் கோள்களுக்கும் உள்ள மிகமுக்கிய வேறுபாடுகளுள் ஒன்று.   

குர்ஆன் 86வது அத்தியாயத்தின் தலைப்பில் (வரிசை எண்:1-16) விடிவெள்ளி அல்லது உதயதாரகை (தாரிக்) என்று தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது இந்த வெள்ளி (சுக்கிரன் அல்லது வீனஸ்) கிரகத்தையே குறிப்பதாகும். ஆனால் வரிசை எண்:8-16களில், தலைப்பில் விடிவெள்ளி எனக் குறிப்பிட்டுவிட்டு  உள்ளடக்கத்தில் தாரிக் என்ற சொல் வருகிற முதலிரண்டு வசனங்களிலும் அப்படியே தாரிக் என்றே குறிப்பிடப்பட்டிருப்பதுதான் இங்கே விவாதத்துக்கு உரியதாகிறது. இந்த மொழிபெயர்ப்பாளர்கள், தாரிக் என்றால் விடிவெள்ளி என்று அறிந்திருந்தும், அத்தியாயத் தலைப்பில் அதனையே குறிப்பிட்டுக் காட்டியிருந்தும், விடிவெள்ளியைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு, தாரிக் ஐ ஏன் பயன்படுத்தியுள்ளனர் என்பதை இனி ஆராயலாம்.

குர்ஆன்86:3இல் தாரிக் என்பது னஜ்மு - ஒரு நட்சத்திரம் என்று உறுதிபட அல்லாஹ் கூறியுள்ளார்.

அதன் தமிழாக்கங்களிலும் பிரகாசமான நட்சத்திரம், ஒளிவீசும் விண்மீன்,  என்றெல்லாம் பலவாறாகக் கூறப்பட்டுள்ளதால், தாரிக் என்பது விடிவெள்ளியா, விண்மீனா  (கிரகமா அல்லது நட்சத்திரமா) என்று குழம்பிப் போன சில தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள், (86:1,2) வசனங்களில் தாரிக் என்பதை விடிவெள்ளி, உதயதாரகை என்றெல்லாம் மாற்றாமல், அப்படியே தாரிக் என்று போட்டுவிட்டு அல்லாஹ்வை ஒரளவுக்காகவேனும் காப்பாற்ற முயன்றுள்ளனர் எனத் தெரிகிறது.

இந்த முயற்சியில் மேலும் சில தமிழ் மொழிபெயர்ப்பாளர்களும் சேர்ந்துள்ளனர். இவர்களின் தமிழாக்கங்களை இனி காணலாம். பின்வருகின்ற அந்த மொழிபெயர்ப்புகளில் தலைப்புகளுக்கு இரவில் தோன்றுவது, உதயமாகக் கூடியது முதலிய பொத்தாம் பொதுவான சொல்லாக்கங்களைக் கொடுத்துள்ளதையும், அதன் 3ஆம் ஆயத்தில், மிகத்தெளிவாக அதனை ஒரு நட்சத்திரம் என்றே குறிப்பிடுவதையும் கவனிக்க வேண்டுகிறோம்.  

17. திருககுர்ஆன் தமிழுரை இரண்டாம் பாகம் (வி.எம்.ஏ. பாட்சாஜான்) மே 1968
          86. தாரிக் இரவில் தோன்றுவது
86:1: வானத்தின் மீதும், இரவில் தோன்றுவதின் மீதும் சத்தியமாக.
     2: மேலும், இரவில் தோன்றுவது இன்னதென்று உமக்கு அறிவித்தது எது?
     3: பிரகாசித்துக் கொண்டிருக்கும் தாரகை.

18. அன்வாருல் குர்ஆன் என்னும் திருமறை பிரகாசம் 1வது ஒளி, அம்மயத்  ஜுஸு      
                   தர்ஜுமா (ஹாஜி எம்.ஏ. ஷாஹுல் ஹமீது & சன்ஸ்) 8/2000 ஆம் ஆண்டு பதிப்பு
                   86: தாரிக் இரவில் தோன்றுவது
86:1: வானின் மீதும், இன்னும் இரவில் தோன்றக்கூடியதன் மீதும்                 பிரமாணமாக:
     2: மேலும், இரவில் தோன்றக்கூடியது என்பது எதுவென உனக்கறிவித்துக் கொடுப்பதெது?
     3: இலங்கும்படியான நக்ஷத்திரம்.

19. அன்வாறுல் குர்ஆன் அம்ம ஜுஸ்உவின் தமிழ் தப்ஸீர் 21ஆம் பாகம்
      (இ.எம்.அப்துர் ரஹ்மான்)  9/1982, 15/2007ஆம் ஆண்டு பதிப்புகள்
       பாகம் 5, ஆகஸ்ட் 2011 ஆம் ஆண்டு பதிப்பு
          86. அத்தாரிக் இரவில் தோன்றக்கூடியது
86:1: வானத்தின் மீதும், இரவில் தோன்றக்கூடியதன் மீதும் சத்தியமாக.
     2: இரவில் தோன்றக்கூடியது என்னவென்று உமக்கு எது அறிவித்துக்
         கொடுத்தது?
     3: (அது)பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரமாகும்.

20. ஜவாஹிருல் புர்கான் -  அம்ம ஜுஸ்உவின் தமிழ் தப்ஸீர் 30ஆம் பாகம்
      (பா.தாவுத்ஷா) 2 / மே 1931 ஆம் ஆண்டு பதிப்பு
          86. அத்தாரிக் இரவில் தோன்றும்படியானது
86:1: வானத்தின் மீதும், இரவில் தோன்றக்கூடியதன் மீதும் பிரமாணமாக.
     2: மேலும், இரவில் தோன்றக்கூடியது இன்னதென்று உமக்கு எது
         அறிவித்துக் கொடுத்தது?
     3: மிக பிரகாசிக்கக் கூடிய நக்ஷத்திரம்.

21. தர்ஜுமதுல் குர்ஆன் -பி- அல்தபில் பயான் (அ.கா.அப்துல் ஹமீது பாகவி)
      செப்டம்பர்2004, ஆகஸ்ட் 2007ஆம் ஆண்டு பதிப்புகள்.
          86. அத்தாரிக் - உதயமாகக்கூடியது
     1: வானத்தின் மீதும் (இரவில்) உதயமாகக்கூடியதின் மீதும் சத்தியமாக!
                           2: (நபியே) உதயமாகக்கூடியது என்னவென்று நீங்கள் அறிவீர்களா?
             3: (இதுதான்) இரவெல்லாம் சுடரிட்டுப் பிரகாசித்துக்கொண்டிருக்கும்
                   நட்சத்திரம்.

மேலும், சில தமிழ் மொழிபெயர்ப்பாளர்களும் உள்ளனர். இவர்களின் தமிழாக்கங்களில் 86ஆம் சூராவின் தலைப்புக்கு, பிரகாசமான நட்சத்திரம், இரவில் தோன்றும் தாரகை முதலிய சொல்லாக்கங்களைக் கொடுத்துள்ளதையும், அதன் 3ஆம் ஆயத்தில், மிகத்தெளிவாக அதனை ஒரு நட்சத்திரம் என்றுக் குறிப்பிடுவதையும் கவனிக்க வேண்டுகிறோம்.

22. குர்ஆன் - இறுதி ஏற்பாடு ரஷாத் கலீஃபாவின் ஆங்கில மூலத்தின் தமிழாக்கம்
      (கடவுளுக்கு மட்டும் அடிபணிந்தோர் சங்கம் - அஹ்லே குர்ஆன் ஜமாத்)
      2007(?) அல்லது 2008(?) ஆம் ஆண்டு பதிப்பு
          86. அல் - தாரிக் பிரகாசமான நட்சத்திரம்
86:1: ஆகாயம் மற்றும் அல் தாரிக்கின் மீது.
     2: அல் தாரிக் என்பது என்னவென்று உமக்குத் தெரியுமா?
     3: பிரகாசமான நட்சத்திரம்.

23. குர்ஆன் - இறுதி ஏற்பாடு ரஷாத் கலீஃபாவின் ஆங்கில மூலத்தின் தமிழாக்கம்
      (கடவுளுக்கு மட்டும் அடிபணிந்தோர் சங்கம் - அஹ்லே குர்ஆன் ஜமாத்)
      2008ஆம் ஆண்டு பதிப்பு
          86. அல் - தாரிக் பிரகாசமான நட்சத்திரம்
86:1: ஆகாயம் மற்றும் அல் தாரிக்கின் மீது சத்தியமாக.
     2: அல் தாரிக் என்பது என்னவென்று உமக்குத் தெரியுமா?
     3: பிரகாசமான நட்சத்திரம்.

24. குர்ஆன் - இறுதி வேதம் ரஷாத் கலீஃபாவின் ஆங்கில மூலத்தின் தமிழாக்கம்
      (அஹ்லே குர்ஆன் ஜமாத்) ஏப்ரல் 2009 ஆம் ஆண்டு பதிப்பு
          86. அல் - தாரிக் பிரகாசமான நட்சத்திரம்
86:1: ஆகாயம் மற்றும் அல் தாரிக்கின் மீது.
     2: அல் தாரிக் என்பது என்னவென்று உமக்குத் தெரியுமா?
     3: பிரகாசமான நட்சத்திரம்.

இதுவரையில் நாம் பார்த்த 24 தமிழாக்கங்களிலும் 86வது (தாரிக்) அத்தியாயத்தின் தலைப்பு விடிவெள்ளி, உதயதாரகை, இரவில் தோன்றுவது, இரவில் தோன்றக் கூடியது, இரவில் தோன்றும்படியானது, உதயமாகக் கூடியது, இரவில் தோன்றும் தாரகை, பிரகாசமான நட்சத்திரம் என்றெல்லாம் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டோம்.

          இன்னும் சில மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன குழப்பமோ தெரியவில்லை? நமக்கு எதற்கு வம்பு என்று தலைப்பை மொழிபெயர்க்காமல் அப்படியே விட்டுவிட்டார்கள். அவைகளை இனி காணலாம்.

25. திருக் குர்ஆன் பாகம் 2 (சையித் அபுல் அஃலா மௌதூதியின் உர்து மூலத்தின்
      தமிழாக்கம்) இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், அக்டோபர் 1992,
      மற்றும் ஆகஸ்ட் 2005, செப்டம்பர் 2008, ஜனவரி 2009,  ஆம் ஆண்டு பதிப்புகள்
      மற்றும் தஃப்ஹீமுல் குர்ஆன் (அத்.78அத்.114வரை) மே 2003 ஆம் ஆண்டு பதிப்பு
          86. அத்தாரிக் (தமிழில் பொருள் கொடுக்கப்படவில்லை)
86:1-3: வானத்தின்மீது சத்தியமாக! மேலும், இரவில் தோன்றக்கூடியதன் மீதும்
  சத்தியமாக! - இரவில் தோன்றக்கூடிது எது என்று உமக்குத் தெரியுமா,
  என்ன? அது ஓர் ஒளிரும் தாரகை.           

26. குர்ஆன் பேசுகிறது (முஹம்மத் முஸ்தபா அஸ் - ஸிராஜி) ஜூன் 2010ஆம் ஆண்டு
      பதிப்பு
          86. அத்-தாரிக் (தமிழில் பொருள் கொடுக்கப்படவில்லை)
86:1: ஆகாயத்தின் மீது  சத்தியமாக. தாரிகின்  மீது சத்தியமாக.
     2: தாரிக் என்றால் என்னவென்று (நாம் தெரிவிக்காமல்) எது உமக்குத்   
         தெரிவிக்கவுளது?
      3: ஊடுருவும் நட்சத்திரமாகும்

27. தர்ஜுமத்துல் குர்ஆன் பிதன்வீரில் பயான் பாகம் 5 (B. அப்துல் கரீம் காமில் நூரி)
      பிப்ரவரி 2011 ஆம் ஆண்டு பதிப்பு
          86. சூரா அல் அத்தாரிக் (தமிழில் பொருள் கொடுக்கப்படவில்லை)
86:1-3: வானத்தின்மீதும், தாரிக்கின் மீதும் சத்தியமாக, தாரிக் என்றால்   என்ன
             வென்று உமக்கு அறிவித்தது எது? அது சுடர் வீசும் நட்சத்திரமாகும்.            

28. திருமறை அல்குர்ஆனின் இறுதி மூன்று ஜுஸ்உகளுக்கான (தப்ஸீர்) விளக்கம்
      (இதனுள் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமான சட்டங்கள் உள்ளடங்கியுள்ளன)
      (www.tafseer.info என்ற ஒரு குறிப்பைத் தவிர, பிற குறிப்புகளான, பதிப்பாளர்,
      மொழிபெயர்ப்பாளர், விரிவுரையாளர் ஆகியோரின் பெயரோ, முகவரியோ, பதிப்பு
      ஆண்டோ எதுவும் இல்லை.)
86. அத்-தாரிக் (தமிழில் பொருள் கொடுக்கப்படவில்லை)
86:1: வானத்தின் மீதும், இரவில் தோன்றக்கூடியதின் மீதும்  சத்தியமாக.
(இரவில் தோன்றக் கூடியது என்பது நட்சத்திரமாகும். அது இரவில்    
தோன்றி பகலில் மறைந்து விடுவதனால் அதற்கு இவ்வார்த்தை
பிரயோகிக்கப்பட்டுள்ளது)
2: தாரிக் என்றால் என்ன என்பதை உமக்கு எது அறிவித்துவிட்டது?
      3: (இருளைத்) துளைத்து பிரகாசத்தை ஏற்படுத்தும் ஓர் நட்சத்திரமாகும்.

29. திருக்குர்ஆன் மூலமும் தமிழாக்கமும் முப்பதாம் ஜுஸ்உ
      (மவல்வி. கே.எம். முகம்மது முகைதீன் உலவி)
      ஜனவரி 2002 ஆம் ஆண்டு பதிப்பு
          86. ஸூரத்துத் தாரிக் (தமிழில் பொருள் கொடுக்கப்படவில்லை)
86:1: வானத்தின்மீதும், தாரிக் மீதும் சத்தியமாக.
     2:  ‘தாரிக்’ என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
     3: அது ஜெலிக்கும் நட்சத்திரமாகும்.

30. ஞானமிகு குர்ஆன் சொல்லுக்குச் சொல் தமிழாக்கம்
               (சூரா அல்பகறா, ஜுஸ்வு அம்ம) 1/ அக்டோபர் 2008
    அ.கா. அப்துல் ஹமீது பாக்கவி & உமர் ஷரீஃப் இஃப்னு அப்துஸ் ஸலாம்
          86. அத் தாரிக் (தமிழில் பொருள் கொடுக்கப்படவில்லை)
86:1: வானம் சத்தியமாக!  ‘தாரிக்’ (இரவில் தோன்றி பகலில் மறையும் நட்சத்திரம்)      
          சத்தியமாக!
     2: (நபியே!) தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
     3: அது மின்னும் நட்சத்திரமாகும்.

மேலும், பின்வரும் (வரிசை எண்: 31 இல்) தலைப்பு தாரகை என்று ஒருமையிலும், வசனங்களில் அவை, எவை, தாரகைகள் என்று பன்மையிலும் தமிழாக்கங்கள் அமைந்துள்ளதை கவனிக்கப்போகிறோம். இந்தத் தமிழாக்கம் யாருடையது தெரியுமா? அண்ணனுக்கும் அண்ணன் பி.எஸ்.அலாவுத்தீன் மன்பஈ அவர்களுடையது ஆகும். ஆம், இந்த பி.எஸ்.அலாவுத்தீன் மன்பஈ அவர்கள் அண்ணன் பீ.ஜை. யின் சொந்த அண்ணன்தான் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்? இதில் இன்னுமொரு வேடிக்கை, (வரிசை எண்:8இல்) தம்பி பீ.ஜை. அவர்கள் தம்முடைய தமிழாக்கத்தில் தாரிக் என்பதை விடிவெள்ளி (கிரகம்) என்கிறார். ஆனால் அண்ணன் பி.எஸ். அலாவுத்தீன் மன்பஈ அவர்களோ தம்முடைய மொழிபெயர்ப்பில் இரவில் தோன்றும் தாரகை (நட்சத்திரம்) என்கிறார். அதுமட்டுமல்லாது   அந்த (86வது) அத்தியாயத்தின் 3வது ஆயத்தின் மொழியெர்ப்பில் தம்பி பீ.ஜை. அவர்கள் நட்சத்திரம் என்று ஒருமையிலும், அண்ணன் பி.எஸ். அலாவுத்தீன் மன்பஈ அவர்களின் தமிழாக்கத்தில் தாரகைகள் (நட்சத்திரங்கள்) என்று பன்மையிலும் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் இருவருமே அரபிக்கல்லூரிகளில் படித்து பட்டம் வாங்கியவர்கள் தான். இதில் எது சரியானது என்பதை அல்லாஹ்தான் முடிவுசெய்யவேண்டும். அண்ணனுக்கும் அண்ணன் பி.எஸ். அலாவுத்தீன் மன்பஈ அவர்களின் தமிழாக்கம் வருமாறு:

31. திருக் குர்ஆனின் நிழலில்- (செய்யித் குதுப் ஷஹீத் அவர்களின் ஃபீழிலாலில்   
      குர்ஆனின்) 30-ம் ஜூஸ்உ விரிவுரை- தமிழாக்கம் (பி.எஸ். அலாவுத்தீன் மன்பஈ)     
      அக்டோபர் 1996ஆம் ஆண்டு பதிப்பு
          86. அத்தாரிக் இரவில் தோன்றும் தாரகை
86:1: வானத்தின்மீது சத்தியமாக, இரவில் தோன்றக்கூடியவை மீதும்
         சத்தியமாக. 
     2: இரவில் தோன்றக்கூடியவை எவை என்று உமக்கென்ன தெரியும்?
     3: (அவை இருளைத்) துளைத்திடும் தாரகைகள்.
இன்னும் ஒரு மொழிபெயர்ப்பு உள்ளது. மற்ற அனைத்து தமிழாக்கங்களிலும் அஃறிணைப்பொருளாக குறிப்பிடப்பட்ட தாரிக், இப்பதிப்பின் முதலிரண்டு வசனங்களில் (86:1,2) உயர்திணையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் இதன் 3வது வசனத்தில்  அது ஒரு நட்சத்திரம் என்று கூறி, அஃறிணைப்பொருளாக்கி நம்மைக் குழப்பிவிடுகிறார்கள் அதன் மொழிபெயர்ப்பாளர்கள். ஆக நட்சத்திரம் என்பது உயர்திணையா, அஃறிணையா என்பதை அவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும். அந்த தமிழாக்கத்தையும் பார்த்து விடுவோமே! (மலையாள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், புதிதாகத் தமிழ் கற்று பேசத் தொடங்கும் பொழுது இப்படித்தான், ஆட்டோ வந்தார், மேனேஜர் போவுது என்று உயர்திணையை அஃரிணையாக்கி, அஃரிணையை உயர்திணையாக்கி பேசுவார்கள். அபப்டித்தான் உள்ளது இந்த தமிழாக்கம்)

32. திருக்குர்ஆன் அரபி மூலத்துடன் தமிழாக்கம்
      (இஸ்லாம் இன்டர்நேஷனல் பப்ளிகேஷன்ஸ் லிட், இங்கிலாந்து)- காதியானிகளின்  
      தமிழாக்கம், 1989ஆம் ஆண்டு பதிப்பு
          86. அத்தாரிக் (தமிழில் பொருள் கொடுக்கப்படவில்லை)
86:2: வானத்தையும், இரவில் வருபவரையும் சான்றாகக் காட்டுகிறேன்.
     3:  இரவில் வருபவர் என்றால் என்னவென்று உம்மை அறியச்செய்தது எது?
     4: அது ஊடுருவிச் செல்லும் ஒளியைக் கொண்ட நட்சத்திரமாகும்.

          ஒரே மொழிபெயர்ப்பாளர் அல்லது பதிப்பாளரின் வெவ்வேறு பதிப்புகளில் உள்ள முரண்பாட்டையும் குழப்பத்தையும் இங்கேயே சொல்லிவிடுவது நல்லது என்று கருதுகிறோம். முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட முதல்பதிப்பில் (வரிசை எண்:2) தலைப்பிலும், முதலிரண்டு ஆயத்துகளிலும் விடிவெள்ளி என்று குறிப்பிட்டவர்கள், பிந்தைய பதிப்புகளில் (வரிசை எண்: 9, 10) தலைப்பை விடிவெள்ளி என்று அப்படியே வைத்துவிட்டு, முதலிரண்டு ஆயத்துகளிலும் தாரிக் என்று மாற்றியதன் நோக்கம் என்ன?

எம்.அப்துல் வஹ்ஹாப், கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி, ஆர்.கே.அப்துல் காதிர் பாகவி ஆகியோர் மொழிபெயர்த்த குர்ஆன் தர்ஜமா (வரிசை எண்:5) பதிப்பில், தலைப்பில் விடிவெள்ளி என்றும்  முதல் ஆயத்தில்  அத்தாரிக் என்று வெளியேயும், அடைப்புக் குறிக்குள் விடிவெள்ளி என்றும்,  இரண்டாம் ஆயத்தில் அத்தாரிக் என்பதை மட்டும் பதிப்பித்தவர்கள், பின் வந்த பதிப்புகளில் (வரிசை எண்:11,12) தலைப்பில் விடிவெள்ளி / உதயதாரகை என்று போட்டுவிட்டு, ஆயத்துகளில் அத்தாரிக் என்று மட்டுமே பதிப்பித்துள்ளதையும் காணும் பொழுது அவர்கள் குழம்பித்தான் போய்விட்டார்கள் என்பதை உணரமுடிகிறது.

அதுபோலவே, முதல் தமிழாக்கம் என்று பெருமையடித்துக் கொள்ளும் அ.கா.அப்துல் ஹமீது பாகவியின், தர்ஜுமதுல் குர்ஆன் -பி- அல்தபில் பயான் (வரிசை எண்:6) இல் தலைப்பிலும் உள்ளடக்க ஆயத்துகளிலும் உதய தாரகை என்று பதிப்பித்தவர்கள், பின்வந்த பதிப்புகளில் (வரிசை எண்:21) உதயமாகக்கூடியது என்ற ஒரு பொத்தாம்பொதுவான மொழி பெயர்ப்பை இட்டுநிரப்ப வேண்டியக் கட்டாயம், குழப்பம் அல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்? மேலும், (வரிசை எண்: 30இல்) தலைப்பில் தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாமலும், உள்ளடக்கத்தில் மின்னும் நட்சத்திரம் என்றும் பதிப்பித்துள்ளது, அவர்கள் மிகவும் குழம்பிவிட்டார்கள் என்பதையேக் காட்டுகிறது. ஒருவேளை தாத்தாவின் (ஆ.கா.அ.பாக்கவியின்) அறிவு போதாது என்று பேரன் (உமர் ஷரீஃப் இஃப்னு அப்துஸ் ஸலாம்) தனது அறிவின் விசாலத்தை இங்கே வெளிச்சமிட்டும் காட்டியிருக்கலாம்.

இங்கு எடுத்துக்காட்டிய 32 தமிழாக்கங்களில் 2மற்றும் 3வது வசனங்களைச் சற்று கூர்ந்து கவனியுங்கள். (வரிசை எண்: 5,6,7,8,21,22,23,24,25,26,30ஆகிய) பதினொரு மொழி பெயர்ப்புகள் தவிர மீதமுள்ள (வரிசை எண்:1,2,3,4,9,10,11,12,13,14,15,16,17,18,19,20,27, 28,29,30,31ஆகிய) 21 மொழிபெயர்ப்புகளிலும், “ஒரு பிரகாசமான நட்சத்திரம்தான், தாரிக் என்றால் என்னவென்பதை நபிக்குத் தெரியப்படுத்தியது”, என்று பொருள் கொள்ளும்படியாக இந்த வரிகள் அமைந்துள்ளதை சிந்திக்க வேண்டுகிறேன். இந்த மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தமிழ் கூடத் தெளிவாகத் தெரியவில்லையா என்ன? அரபு மூலமே அப்படித்தான் குழப்பமாக உள்ளது என்று கூறப்படுமானால், அந்த வேதம் எப்படி அல்லாஹ் அருளிய  இறைவேதமாக இருக்கமுடியும்?  

அடுத்து, இத்தமிழாக்கங்களில் மூன்றாவது வசனத்தின் தமிழாக்கத்தை, தாரிக் என்பது ஒரு நட்சத்திரம்தான் என்று குறிப்பிடுவதைத் தொகுத்துக் காணலாம். (இங்கு தரப்பட்டுள்ள வரிசை எண்கள், முன்னர் எடுத்துக்காட்டிய தமிழாக்கங்களின் வரிசை எண்களே!

1. (அது) இலங்கிக்கொண்டிருக்கும் (ஒரு) நட்சத்திரம்.        
2. அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
9. அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
10. அது இலங்கும் (ஒரு) நட்சத்திரம்.
13. அது இலங்கும் ஒரு நட்சத்திரம்
18. இலங்கும்படியான நக்ஷத்திரம்.

3. (அது) ஊடுருவும் ஒளியுடைய ஒரு விண்மீன்.
25. அவை இருளைத் துளைத்திடும் தாரகைகள்.
27. ஊடுருவும் நட்சத்திரமாகும்.
29. (இருளைத்) துளைத்து பிரகாசத்தை ஏற்படுத்தும் ஓர் நட்சத்திரமாகும்
32. அது ஊடுருவிச் செல்லும் ஒளியைக் கொண்ட நட்சத்திரமாகும்.

4. (அதுதான்) பிரகாசித்துக்கொண்டிருக்கும் நட்சத்திரம்.
5. (அது) பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரம்.
11. (அது) பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரம்.
12. (அது) பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரம்.
15. (அதுதான்) பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரம்.
16. (அது) பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரமாகும்
17. பிரகாசித்துக் கொண்டிருக்கும் தாரகை.
19. (அது)பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரமாகும்.
20. மிக பிரகாசிக்கக் கூடிய நக்ஷத்திரம்.
21. (இதுதான்) இரவெல்லாம் சுடரிட்டுப் பிரகாசித்துக்கொண்டிருக்கும் நட்சத்திரம்.
22. பிரகாசமான நட்சத்திரம்.
23. பிரகாசமான நட்சத்திரம்.
24. பிரகாசமான நட்சத்திரம்.
26. அது ஓர் ஒளிரும் தாரகை.

6. (அதுதான்) சுடரிடும் நட்சத்திரம்.
7. . . . . உற்றுச் சுடர்வீசும் விண்மீனே யாகும் வெளிர்ந்து.
28அது சுடர் வீசும் நட்சத்திரமாகும்.

8. அது ஒளி வீசும் நட்சத்திரம்.
14. அது ஒளிவீசும் நட்சத்திரம்………                

30. அது மின்னும் நட்சத்திரமாகும்.
31. அது ஜெலிக்கும் நட்சத்திரமாகும்.

 ஆகவே நமது பார்வைக்குக் கிடைத்த 32 தமிழாக்கங்களும் மூன்றாவது வசனத்தில் உள்ள தாரிக் - ஐ, இலங்கும், ஊடுருவும், பிரகாசிக்கும், சுடர்வீசும், ஒளிவீசும், ஜெலிக்கும், மின்னும், முதலிய பலவிதமான முன்னொட்டுகள் சேர்த்து ஒரு நட்சத்திரம் (தாரகை / விண்மீன்) என்று உறுதியாகக் கூறுகின்றன. ஆனால், முதல் ஏழு தமிழாக்கங்களில் (வரிசை எண் : 1-7) தலைப்பும் முதல் இரண்டு வசனங்களும் தாரிக்கை, விடிவெள்ளி / உதயதாரகை என்ற கிரகமாகக் சுட்டிக்காட்டுகின்றன. அடுத்துவரும் (வரிசை எண் : 8-16) ஒன்பது தமிழாக்கங்களில் தலைப்பை மட்டும், விடிவெள்ளி / உதயதாரகை என்றெல்லாம் கிரகமாகக் கூறிவிட்டு உள்ளடக்க முதலிரண்டு (1, 2) வசனங்களில் தாரிக் என்று அப்படியே ஒலிபெயர்ப்பாக குறிப்பிட்டிருப்பதையும் மனதில் கொண்டால் மொத்தம் முதல் 16 தமிழாக்கங்களில் தாரிக் என்பது விடிவெள்ளி / உதயதாரகை (என்ற கிரகம்) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.  அகவே, இங்கு நட்சத்திரம் (விண்மீன் / தாரகை) என்றால் என்னவென்றும், கிரகங்கள் (கோள்கள்) என்றால் என்னவென்றும் அறிந்து கொண்டால்தான் கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியும். ஆகவே அவற்றை இங்கு விளக்க வேண்டியது அவசியமாகிறது.

நட்சத்திரம் என்றால் என்ன?
           
          நட்சத்திரம் என்பது தாரகை என்றும், தமிழில் விண்மீன் என்றும் அழைக்கப்படுகிறது. இரவில் தெளிவான வான்வெளியை நாம் நோக்கினால், சர்க்கரை துணுக்குகளை வானத்தின் குறுக்கே இறைத்துவிட்டாற்போல கண் சிமிட்டும் விண்மீன்களை நாம் காணமுடியும். ஏறத்தாழ 5000 விண்மீன்களைத் தொலைநோக்கி (டெலஸ்கோப்) உதவியின்றியும், தொலைநோக்கி உதவியுடன் பார்த்தால் பல இலட்சக்கணக்கான விண்மீன்களையும் காணவியலும் என்றும் விண்ணியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். விண்மீன்கள் எல்லாம் ஒருபெரிய கோளத்தில் பொருத்தி வைக்கப்பட்ட ஒளிப்புள்ளிகள் என்றும், அவை யாதொரு இயக்கமும் இல்லாமல், பூமியிலிருந்து ஒரே அளவு தூரத்தில்தான் இருக்கின்றன என்றும் பழங்கால மக்கள் தவறாகக் கருதிவந்தனர். (இதே தவறான கருத்துதான் குர்ஆனில் 37:6, மற்றும் 67:5 ஆகிய வசனங்களில் எதிரொலிக்கக் காண்கிறோம்.)

          அறிஞர் கோபர்நிகஸ் (1473-1543), பூமியிலிருந்து வெகுதொலைவில் விண்மீன்கள் இருப்பதாகவும், ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் இடைவெளி மிகஅதிகம் என்ற கருத்தைக் கண்டறிந்தாலும் திருச்சபைக்கு அஞ்சி வெளியிடத்தயங்கினார். ஆனால், முதன்முதலாக ஜியார்டானோ புருனோ (1548-1600) என்ற அறிஞர், அதே கருத்தை, அதாவது, பூமியிலிருந்து வெகுதொலைவில் விண்மீன்கள் இருப்பதாகவும், ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் இடைவெளி மிகஅதிகம் என்ற கருத்தைப் பகிரங்கமாக அறிவித்தார். பைபிள் கருத்துகளுக்கு எதிரானதாகக் கூறியதால், கிருத்தவ திருச்சபை அவருக்கு மரணதண்டனை விதித்து. பெருமை (?) தேடிக்கொண்டது. தாமஸ் டிக்ஸ் (1546-1595) என்ற ஆங்கிலேய வானியலார், நட்சத்திரங்கள் பூமியிலிருந்து வெகுதொலைவில் இருப்பதாகவும், சிறிது மங்கலாகத் தெரியும் நட்சத்திரங்கள் சற்று பளிச்சென்று தெரிவதைவிட தொலைவில் இருக்கிறது என்றும், நமது கண்களுக்குப் புலப்படாத விண்மீன்களும் இருக்கின்றன என்றும் கண்டறிந்து அறிவித்தார். ஜெர்மனியில் பிறந்த ஆங்கிலேயரான வில்லியம் ஹெர்ஷல் (1738-1822) இன் வானியல் ஆய்வு எல்லை மிகவிரிந்தது ஆகும். யுரேனஸ் கிரகத்தையும், நெபுலாக்கள் நட்சத்திரக் கூட்டமாகும் என்ற நட்சத்திரக் கோட்பாட்டையும், மூன்று நெபுலாக்களையும், எட்டு வால்நட்சத்திரங்களையும், கண்டுபிடித்தார். 68,948 நட்சத்திரங்களின் இருப்பிடத்தை ஆராய்ந்து பதிவுசெய்தார். இன்னும் தைகோ பிரேக் (1546-1601), கலிலியோ கலிலி (1564-1643), ஜான் கெப்ளர் (1571-1630), ஐசக் நியூட்டன் (1642-1727), பிளேம்ஸ்டீட் (1646-1719), எட்மண்ட் ஹாலி (1656-1742), பிராட்லீ (1692-1762), வில்லியம் ஹெர்செல் (1738-1822), பியரி ஸைமன் லேப்லாஸ் (1742-1827), சர் ஜான் ஹெர்செல் (1792-1871), லார்ட் ரோஸி (1800-1867), லீ வெரியர் (1811-1877), ஜான் கோச் ஆதம்ஸ் (1819-1892) முதலான எண்ணற்ற வானியலறிஞர்களின் கடும் உழைப்பால்  விண்அறிவியலில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம். அவர்களை நினைவு கூர்ந்து மேலே செல்வோம்.  

நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் இயல்பில் நமது சூரியனுக்கு ஒப்பானது. நமது சூரியனைவிட மிகப் பெரியதும், சற்று சிறியதுமான நட்சத்திரங்களும் உண்டு. இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் நமது சூரியமண்டலத்திலிருந்து வெகுதொலைவில் உள்ளவையாகும். விண்வெளியில் தொலைவைக் கணக்கிட ஒளியாண்டு என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது. ஒளியின் (வெளிச்சத்தின்) ஓராண்டு பயண தொலைவே ஒரு ஒளியாண்டு ஆகும். அதாவது ஒரு ஒளியாண்டு என்பது ஏறத்தாழ 9.4670778 x 1012  கிலோமீட்டருக்குச் சமமானதாகும். (அதாவது, ஒன்பதுலட்சத்து நாற்பத்துஆறாயிரத்து எழுநூற்றுஏழு கோடியே எழுபத்து எட்டு லட்சம் (9,46,707,78,00,000) கிலோமீட்டர்கள்.)   

இவ்வாறாக நமது விண்ணியல் அறிஞர்கள் எண்ணற்ற பல நட்சத்திரங்களை ஆராய்ந்து அவற்றின் தொலைவையும், ஒளியின் அளவையும், ஏன், விட்டத்தையும் கூட கணக்கிட்டுக் கூறியுள்ளனர். மேலும், பலவற்றிற்குப் பெயரையும் சூட்டியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக நமது சூரியமண்டலத்திற்கு அருகிலுள்ள சில நட்சத்திரங்களின் பெயரையும், தொலைவையும் கீழே காணலாம். 

1. ப்ராக்ஸிமா ஸெஞ்சுரி (V645 Cen)         -        (ஏறத்தாழ)   4.2     ஒளியாண்டு 
2. ரிஜில் கெண்டயூரி      (Alpha Cen A)     -        (ஏறத்தாழ)   4.3     ஒளியாண்டு
3. பர்னார்ட் விண்மீன்    (Barnards star)   -        (ஏறத்தாழ)   6.0     ஒளியாண்டு
4. உல்ஃப் 359   (Wolf 359) (CN Leo)        -        (ஏறத்தாழ)   7.7     ஒளியாண்டு
5. லுயிடென் 726-8 A     (UV Cet A)         -        (ஏறத்தாழ)   8.4     ஒளியாண்டு
6. சிரியஸ் A                   (Alpha CMa A)   -        (ஏறத்தாழ)   8.6     ஒளியாண்டு
7. ரோஸ் 154           (Ross 154)               -        (ஏறத்தாழ)   9.4     ஒளியாண்டு
8. ரோஸ் 248           (Ross 248)               -        (ஏறத்தாழ)   10.4   ஒளியாண்டு







நமது விண்வெளியில் எண்பது லட்சத்திற்கும் (80,00,000) அதிகமான அண்டங்கள் (Galaxies) இருக்கின்றன என்றும், இத்தகைய அண்டங்கள் ஒவ்வொன்றிலும் ஏறத்தாழ பதினான்காயிரம் கோடி (14,000,00,00,000) நட்சத்திரங்கள் இருப்பதாகவும் தற்கால அறிஞர்கள் கணித்துள்ளனர்.

ஆகவே, தாரிக் என்று குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது (86:3 இன்படி) விண்மீன்தான் என்று குர்ஆனிய அறிஞர்கள் உறுதிபடுத்துவார்களேயானால், தற்காலத்தில் அதற்கு விஞ்ஞானிகள் என்ன பெயர் சூட்டியுள்ளார்கள் என்பதைத் தகுந்த ஆதாரங்களோடு தெளிவுபடுத்த வேண்டிய கடமையும் அவர்களுக்கு உண்டு. தெளிவுபடுத்துவார்களா?

அடுத்து, இரவில் தோன்றுவது (வரிசை எண்:17.18), இரவில் தோன்றக்கூடியது (வரிசை எண்:19), இரவில் தோன்றும்படியானது (வரிசை எண்:20), என்ற பொதுவான மொழி பெயர்ப்புகளைக் கவனத்தில் வைத்துக்கொண்டு தொடர்வோம். இங்கு இரவில் தோன்றுவது என்று பொதுவாகச் சொல்வோமானால், அது, சந்திரனையும் குறிக்கலாம்; வெள்ளியையும் குறிக்கலாம்; வால்நட்சத்திரத்தையும் குறிக்கலாம்; நட்சத்திரங்களையும் குறிக்கலாம்; இன்ன பிற இரவில் தோன்றும் வான மண்டல பொருட்களையும் குறிக்கலாம்;  உதயமாகக்கூடியது (வரிசை எண்:21) என்றால் அது, சந்திரன், சூரியன் ஆகிய இரண்டிற்கு மட்டுமே பொருந்துவதாக அமையும். விடிவெள்ளி உதயமாவதை மக்கள் வழக்கில் வெள்ளி முளைத்தது என்றே கூறுவர். நட்சத்திரங்கள் உதித்தன என்று கூறுவது வழக்கமல்ல; நட்சத்திரங்கள் பூத்தன என்பதே மரபு. மற்ற உயிரினங்கள் ஒலியெழுப்புவதை, குயில் கூவுகிறது, காகம் கரைகிறது, மயில் அகவுகிறது, யானை பிளிறுகிறது, நாய் குரைக்கிறது என்பது போன்ற மரபுவழிப் பயன்பாடாகும் முன்சொல்லிய சூரியன் உதித்தது,  வெள்ளி முளைத்தது, நட்சத்திரங்கள் பூத்தன முதலியன. ஆகவே, முற்குறிப்பிட்ட (வரிசை எண்:17,18,19,20,21 ஆகியவற்றின்) தமிழாக்கங்கள், குர்ஆன். 86:3-இல் கூறப்பட்டுள்ள (னஜ்மு) நட்சத்திரம் என்பதற்குத் தெளிவாகப் பொருந்துமாறு இல்லை. இம்மொழியாக்கங்களை வைத்துக்கொண்டுதான் குர்ஆனில் அறிவியலைக் கண்டு புல்லரித்துக்கொண்டிருக்கிறார்கள் நமது குர்ஆனிய அறிவியல் அறிஞர்கள்(?). இதனை அல்லாஹ்வின் குழப்பம் என்பதா? குர்ஆனின் குழப்பம் என்பதா? மொழிபெயர்ப்பாளர்களின் குழப்பம் என்பதா?  அந்த அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

குர்ஆன் தெளிவானது; எளிமையானது; அனைவருக்கும் விளங்கக்கூடியது என்றெல்லாம் குர்ஆனிய பிரச்சாரகர்கள் பசப்பி வருகிறார்கள். ஆனால் பல ஆண்டுகள் அரபி மொழியைக் கற்றறிந்த அறிஞர்களுக்குள்ளேயே பொருள்விளக்கத்தில் மொழியாக்கத்தில் - உள்ள முரண்பாடுகளைப் பார்க்கும் பொழுது, சாதாரண மக்கள் குர்ஆனை எப்படித் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்? இந்த முரண்பாடுகள் பற்றி என்ன சமாதானத்தை இந்தப் பிரச்சாரகர்கள் கூறப்போகிறார்கள்? இந்த குர்ஆனிய அறிஞர்கள் இப்படி குழம்புவார்கள் அல்லது குழப்புவார்கள் என்று, எல்லாம் அறிந்துள்ள அல்லாஹ்வுக்கு முன்கூட்டியேத் தெரியாதா? மொழிகள் அனைத்தையும் உண்டாக்கிய அல்லாஹ், ஒரு பொருளுக்கு ஒரேயொரு பெயர் மட்டும் உள்ளதாக, எல்லா மொழிகளையும் வேண்டாம், அரபுமொழியை மட்டுமாவது உருவாக்கியிருந்தால் இந்தக் குழப்பங்களைத் தடுத்திருக்கலாமே! அதுகூட அல்லாஹ்வால் முடியாதா? அல்லது அப்படிப்பட்ட குழப்பங்கள் வராதபடி, ஒரு பொருளுக்கு ஒரேயொரு பெயர் மட்டும் உள்ள சொற்களைக் கொண்டாவது குர்ஆனை உருவாக்கி முகம்மது நபிக்கு, அவர் மூலமாக மக்களுக்கு வழங்கியிருந்தால் இவ்வளவு குழப்பங்கள் ஏற்பட்டிருக்காதே! அதைக்கூட அல்லாஹ்வால் செய்திருக்க இயலாதா? அப்படி செய்ய இயலாதவர்தான் அல்லாஹ் என்றால் ‘எல்லாம் செய்யவல்லவர் அல்லாஹ்’ என்ற பெருமை அவருக்கு எதற்கு?

அண்ணன் பீ.ஜை. முதற்கொண்டு தமிழாக்கம் செய்த பலரும் தாரிக் என்பதற்கு விடிவெள்ளி என்றும், னஜ்மு என்பதற்கு நட்சத்திரம் என்றும் பொருள் கூறுகின்றனர். திருவாளர். எம்.எம். அப்துல் காதிர் உமரி அவர்கள் தமது திருக்குர்ஆன் பொருள் அட்டவணையில் (பக்கம்: 634) விடிவெள்ளியை,  நட்சத்திரம் என்ற தலைப்பில்தான் சேர்த்திருக்கிறார். அதேபோல ஷேக் அப்துல் கரீம் பாரேக் - ஆல் தொகுக்கப்பட்டு, மௌலவி அப்துல் காதர் முஹம்மத் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குர்ஆன் சொற்களஞ்சியத்தில் (பக்கம்: 181) விடிவெள்ளி / உதய தாரகை / இரவில் தோன்றும் நட்சத்திரம் என்றே  குறிப்பிட்டிருக்கிறார் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

மேலும், குர்ஆன் விரிவுரையாளர்கள் பலரும் தாரிக் (விடிவெள்ளி) ஒரு நட்சத்திரமே என்று வாதிடுகிறார்கள். இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக மவாஹிபுல் குர்ஆன் என்ற சூரத்துல் ஃபாத்திஹா - அம்ம ஜுஸ்உவின் தமிழ் விரிவுரையின் ஆசிரியர், திருவளர். எம். அப்துற் றஹ்மான் அவர்கள் தாரிக் (விடிவெள்ளி), ஒரு நட்சத்திரமே என்று உறுதிபடுத்துவதைக் காணலாம். ஸூரத்துத் தாரிஃக் என்பதை விடிவெள்ளி என்று மொழிபெயர்ப்பு செய்துள்ள இவர், (வரிசை எண்:4-ஐப் பார்க்க). அதற்கு எதிர்நிலையாக தாரிக் ஒரு நட்சத்திரம்தான் என்று விரிவுரை வரைகிறார்.      

           ‘‘. . . . . .இவ்வசனங்களில் அல்லாஹ் பிரமாண்டமான வானத்தின் மீதும், இரவில் தோன்றி, பிரகாசித்து, பகலில் மறைந்துகொள்ளும் நட்சத்திரங்கள் மீதும் சத்தியம் செய்கிறான். இரவில் தோன்றி, பகலில் மறைவதால், நட்சத்திரத்திற்கு தாரிக் - இரவில் வரக்கூடியது எனப் பெயர்சூட்டப்பட்டது. இரவில் வரக்கூடிய ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பொருளுக்கும் அரபுகள் தாரிக் எனக் கூறுவர். பிறகு தாரிக் என்பதை அல்லாஹ் விளக்கி, அது பிரகாசித்துக்கொண்டிருக்கிற நட்சத்திரம் எனக் கூறுகிறான். நட்சத்திரங்கள் தம் ஒளியால் இருளைப் போக்குகின்றன­­. ஷைத்தான்கள் வானத்தை நெருங்கினால் அவற்றைக் கரித்துவிடுகின்றன.”
                                                          (மவாஹிபுல்குர்ஆன். பக்கம்:197)

          ஆனால் இதற்கு நேரெதிராக, தமிழில் முதன்முதலாக முழுமையாக எழுதப்பட்ட விரிவுரையான தப்ஸீருல் ஹமீத் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜித்-இன் ஆசிரியர், எஸ்.எஸ். முஹம்மது அப்துல் காதிர் சாஹிப் பாக்கவி அவர்கள், தாரிக் என்பதற்கு விடிவெள்ளி என்றே பொருள் என்று உறுதிபடுத்துகிறார். அதேசமயத்தில் நமது சூரியகுடும்பத்தில் ஒரு கிரகமான (விடி)வெள்ளியை ஒரு நட்சத்திரம்தான், அதாவது மற்றொரு சூரியன்தான் என்று கூறி குழப்புகிறார். அவருக்கு வந்த குழப்பமல்ல இது; அல்லாஹ்வுக்கே வந்த குழப்பம் என்றே உறுதிபடுத்துகிறது அவருடைய விளக்கம்.

          “. . . . தாரிக் என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. ஆனால் விடிவெள்ளியை இப்பதம் குறிக்கிறது. விடியற்காலை வேளையில் உதயமாகிற இந்த நட்சத்திரம், மிகப் பிரகாசமாக இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. ஆனால், அல்லாஹுதஆலா, தாரிக் என்று கூறிவிட்டு அவனே விபரிப்பதில் விடிவெள்ளி என்பதை வெளிப்படையாகக் கூறாமல், பிரகாசிக்கும் நட்சத்திரம் என்று பொதுப்படக் கூறியிருப்பதால் பொதுவாக எல்லா நட்சத்திரங்களையுமே இது குறிக்கிறது என்று ஹஸன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள். நட்சத்திரங்களின் ஜோதி வித்தியாசப்பட்டிருந்தாலும், எல்லா நட்சத்திரங்களுமே பிரகாசிப்பதாலும், இப்பதம் அல்லாஹுதஆலாவின் பேராற்றலை வானும், அதிலுள்ள நட்சத்திரங்களும் அறிவிப்பதால், அவற்றைச் சுட்டிக்காட்டி அவன் சத்தியம் செய்துள்ளான் என்பதாக அவர் கூறியுள்ளார்.
(தப்ஸீருல் ஹமீத் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜித்-பாகம்20-பதிப்பு3/2009, பக்கம் 211)

          இவ்விளக்கத்தில், முதல்வரியில் விடிவெள்ளி (கிரகம்) என்று கூறியவர், அடுத்த வரியிலேயே, அப்படியே அந்தர்பல்டி அடித்து, விடிவெள்ளியும் ஒரு நட்சத்திரம்தான் என்று உதார் விடுகிறார். தாரிக் சூராவின் 3வது வசனத்தை மறுக்கமுடியாததால், அல்லாஹ்வைக் காப்பாற்றுவதற்காக ஏற்பட்ட சறுக்கல்தான் இது என்பது நமக்கு புரிந்துவிடுகிறது. அதாவது நமது சூரியகுடும்பத்திலுள்ள கிரகமான விடிவெள்ளியை, நம்மிடமிருந்து பல ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள நட்சத்திரங்களுடன் சேர்த்து, அதுவும் ஒரு நட்சத்திரமே என்று விளக்கியது அல்லாஹ்வின் அறியாமையா? அல்லது அவனுடைய ரசூலினுடைய அறியாமையா? அல்லது மொழிபெயர்ப்பும் விரிவுரையும் செய்த அவனது அடியார்களுடைய அறியாமையா? இது அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.                
  
ஆகவே விடிவெள்ளி என்பது ஒரு நட்சத்திரம்தான் என்று இந்த குர்ஆனிய அறிஞர்கள் உறுதிபடுத்துவார்களேயானால், இது ஒரு வேடிக்கையான முடிவாக இருக்கும். இம்முடிவால், இப்பிரபஞ்சம் முழுவதையும் படைத்து பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே, எது கிரகம், எது நட்சத்திரம் என்ற வேறுபாடு தெரியவில்லை என்றாகி விடுகிறது. அப்படியானால் அனைத்தும் அறிந்தவன் அல்லாஹ் என்ற பேரறிவாளனின் முட்டாள்தனம் வெட்டவெளிச்சமாகிவிடுகிறது.

அப்படியில்லை, தாரிக் என்பது ஒரு விண்மீன்தான், அது விடிவெள்ளி அல்ல என்று உறுதி செய்வார்களேயானால், முதலில் அவர்களின் மொழிபெயர்ப்பு முட்டாள்தனமானது என்பதை ஏற்றுக்கொண்டு, தங்களின் அரபுமொழியறிவின் மேதாவிலாசத்தை(?) பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். அதோடுகூட, தாரிக்கின் (என்ற நட்சத்திரத்தின்) இருப்பு எந்த அண்டத்தில் (Galaxies-இல்)  என்பதையும், அந்த நட்சத்திரம் தற்காலத்தில் என்ன பெயரிட்டு அழைக்கப்படுகிறது என்பதையும் தகுந்த சான்றுகளுடன் நிரூபிக்கவேண்டிய கடமையும் அவர்களுக்கு உண்டு. அதிலிருந்து தப்பித்து ஓடிவிட முடியாது.

இத்துடன் இக்கட்டுரையை முடித்துவிட முடியாது. இந்த தாரிக் அத்தியாயம் அருளப்பட்ட வரலாற்றுப் பின்னணி பற்றிய சான்றுகளைக்கொண்டும் அலசலாம் வாருங்கள்.
திண்டுக்கல் ஏ.சிராஜுத்தீன் நூரி அவர்களின் குர்ஆன் தமிழாக்கம் (வரிசை எண்:1) தர்ஜமா அல் குர்ஆனில் கரீம் ஆகும். இத்தமிழாக்கத்தில் ஆயத்துகள் அருளப்பட்ட காரணங்களும் இணைந்துள்ளது ஆய்வுக்கு உதவியாகும். இதனில் (1/2002, 2/2002 -பக்கம்:1116, 8/2006- பக்கம்:1120). . . . . . . . . . . 

“நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப், ஒருநாள் நபி(ஸல்) அவர்களைப் பார்க்க அவர்களின் இல்லத்திற்கு வந்தார். நபி அவர்கள் ரொட்டியும் பாலும் கொண்டுவந்து வைக்க இருவரும் புசிக்க ஆரம்பித்தனர். அச்சமயம், வானிலிருந்து ஒரு நட்சத்திரம் பெயர்ந்து பூமியை நோக்கி வெகுசமீபமாக வந்தவிட்டது. அதன் பிரகாசம் நபி அவர்களின் இல்லமெல்லாம் பரவிற்று. இதனைக் கண்ணுற்ற அபூதாலிப் பீதியடைந்து உணவருந்துவதை நிறுத்திக்கொண்டு எழுந்து நின்று, இதென்னவென வினவினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் பின் வரும் கருத்தை அளித்தார்கள். இது நட்சத்திரமாகும். வானின் காவலாளிகளான மலக்குகள் (வான் மீதேற முயற்சிக்கும்) ஷைத்தான்களை இதனால் எறிந்து துரத்தி யடிக்கின்றனர். அல்லாஹ்வின் சக்தியை எடுத்துக்காட்டும் சின்னங்களில் இதுவும் ஒன்றாகும். இதைச் செவியுற்ற அபூதாலிப், வியப்பில் ஆழ்ந்த சமயம் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் இவ்வத்தியாயத்தைக் கொண்டிறங்கினார்கள்.”

இந்தக் குறிப்புக்கு அவர், தப்ஸீர் பத்ஹுல் அஜீஸ் ஸீப்பார ஏ அம்ம என்ற குர்ஆன் விரிவுரையை ஆதாரமாகக் காட்டுகிறார். இதே குறிப்பைத்தான் அன்வாருல் குர்ஆனில் (பாகம்-21/1982, பக்கம்-140, பாகம்-5/2011, பக்கம்-4900) அதன் ஆசிரியர் தென்காசி இ.எம்.அப்துர் ரஹ்மான் அவர்களும் குறிப்பிடுகிறார்கள், தர்ஜுமத்துல் குர்ஆன் பிதன்வீரில் பயான்-இல் (பாகம் 5/2011, பக்கம்- 2972)  - இல்,
“நபிகள் நாயகம் (சல்) அவர்களிடம் அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்கள் வந்தபோது பாலும், ரொட்டியும் கறியும் கொண்டுவந்து வைத்தார்கள் நபிகள் நாயகம் (சல்) அவர்கள். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் எரிந்து விழுந்தது. விழுந்த கொஞ்சநேரத்தில் அது தண்ணீர் போலானது. பிறகு நெருப்புபோல மாறியது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த அபூதாலிபுக்கு, இது ஷைத்தானை விரட்டுவதற்காக அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கும் நட்சத்திரமாகும் என்று நபிகள் நாயகம் (சல்) அவர்கள் சொன்னார்கள். நட்சத்திரங்கள் ஷைத்தான்களை விரட்டுவதற்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கு ஒளி தரவும் படைக்கப்பட்டிருக்கிறது. வானத்துக் கூரைக்கு அழகு தருவதற்காகவும் படைக்கப் பட்டிருக்கிறது. நட்சத்திரம் முழுமையாக விழுவதில்லை. எரியும் நெருப்பிலிருந்து ஒரு பொறி பறப்பது போல விழுவதுதான் நட்சத்திரம் விழுகிறது என்று நாம் சொல்லுகிறோம்.” என்று அதன் ஆசிரியர் பி. அப்துல் கரீம் காமில் நூரி அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளார். இதற்கு ஆதாரமாக, அவர் எந்த விரிவுரையையோ, அல்லது ஹதீஸையோ  சுட்டிக்காட்டவில்லை.

மேலும் இஸ்லாமிய கலைக் களஞ்சியத்தை வெளியிட்ட அதன் ஆசிரியர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீம் அவர்கள், இந்தத் தகவலை (பாகம் 3- பக்கம் 521 / பதிப்பு2 / 2006) அல்வாகிதி கூறியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். இஸ்லாமிய கலைக் களஞ்சியம் மேலும் கூறுகிறது, ‘‘தாரிக் என்ற சொல் விடிவெள்ளியையும், எரி வெள்ளியையும், எல்லா விண்மீன்களையும், சனிக்கோளையும் குறிக்கும் என பல்வேறு விதமாகக் கூறப்படுகிறது.’’ என்று விவரிக்கிறது. அப்படியானால் தெளிவற்ற, குழப்பமுடைய ஒரு சொல்லாகவே நாம் தாரிக்கைப் பற்றி முடிவுசெய்ய வேண்டியுள்ளது. 

இந்த குழப்பங்களுக்கெல்லாம் மூலத்தை தேடியபொழுது, ஷஹீஹுல் புகாரியில் (பாகம் 5, பக்கம் 745, பதிப்பு 1999, ரஹ்மத் அறக்கட்டளை) உள்ள ஒரு குறிப்புரையை நாம் காணமுடியும். அக்குறிப்புரை பின் வருமாறு:

(86) அத்தாரிக் அத்தியாயம்
(86:1வது வசனத்தின் மூலத்திலுள்ள அத்தாரிக் என்னும் சொல், இரவில் தோன்றும்
        விண்மீன்களைக் குறிக்கும். இரவில் (திடீரென) வரும் ஒவ்வொன்றுக்கும் தாரிக்  என்பர்.

(86:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள அந்நஜ்முஸ் ஸாகிபு என்னும் சொல்லுக்கு
        ஒளிரும் நட்சத்திரம் என்று பொருள்.
         
புகாரியில் உள்ள மேற்கண்ட குறிப்பு தாரிக் என்பது ஒரு நட்சத்திரம்தான் என்று அடித்து சொல்கிறது.


இப்பொழுது நாம் குழப்பத்தின் எவரஸ்ட்டுக்கே சென்றுவிட்டோம். இந்த அத்தியாயம் அருளப்பட்ட வரலாற்றில், வானிலிருந்து ஒரு நட்சத்திரம் பெயர்ந்து பூமியை நோக்கி வெகு சமீபமாக வந்துவிட்டது என்று கூறப்படுவது நம்பக்கூடியதல்ல. ஏனெனில், நமது சூரியக்குடும்பத்திலிருந்து வெகு தொலைவில் - பல ஒளியாண்டுகள் தொலைவில் - உள்ள சூரியன்களான நட்சத்திரங்களில் ஒன்று பெயர்ந்து பூமிக்கு அருகில் வந்ததாக வானியல் சான்றுகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் (நபி வாழ்நாளில்) அப்படி நிகழ்ந்ததற்கான பதிவுகள் எதுவும் எந்த நாட்டிலும் இல்லை. பதிவுகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்குமானால் நட்சத்திரங்களில் ஒன்று பெயர்ந்து பூமிக்கு அருகில் வருமானால் அதன் விளைவுகள் என்னவாகும் என்பதை சிறிது கற்பனை செய்து பாருங்கள். அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையின் காரணமாக நமது சூரியகுடும்பமே சின்னாபின்னப்பட்டு வெடித்து சிதறுண்டுபோயிருக்கும். அதுமட்டுமல்லாது அந்த நட்சத்திரம் வெப்பம் மிகுந்ததாக இருக்குமானால், நமது சூரியமண்டலத்திலுள்ள அனைத்தும் எரிந்து ஒன்றுமில்லாமல் போயிருக்கும் என்பதே அறிவியல் உண்மையாகும்.

அடுத்ததாக, “........அதன் பிரகாசம் நபி அவர்களின் இல்லமெல்லாம் பரவிற்று. இதனைக் கண்ணுற்ற அபூதாலிப் பீதியடைந்து உணவருந்துவதை நிறுத்திக்கொண்டு எழுந்து நின்று, இதென்னவென வினவினார்.......”  என்ற வரிகள் அது விடிவெள்ளியுமல்ல என்பதை உறுதிபடுத்துகிறது. ஏனெனில், விடிவெள்ளி தினந்தோறும் - விடியற்காலையிலும், மாலையிலும் வானில் தோன்றிக்கொண்டிருப்பதாகும். அது ஒரு இயல்பான நிகழ்வாகையால் அது கண்டு அபூதாலிப் பீதியடைந்திருக்க முடியாது. நமது சூரியகுடும்பத்தில் ஒரு கிரகமான வெள்ளி தனது சுற்றுப்பாதையில், பூமிக்கு மிக அருகில் வரும்போது உள்ள குறைந்தபட்ச  தூரம் 38.2 மில்லியன் கிலோ மீட்டர்களாகும். (அதாவது 3,82,00,000 மூன்று கோடியே எண்பத்தி இரண்டு இலட்சம் கிலோ மீட்டர்களாகும்.) இது முன்பே இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுயஒளியின்றி, சூரியனின் ஒளியை வாங்கிப் பிரதிபளிக்கும்  வெள்ளிகிரகத்தின் இந்த அருகாமை கூட (38.2 மில்லியன்.கி.மீ) நமக்கு ஒரு ஒளிமிகுந்த விண்மீன் போலவேத் தோற்றமளிக்குமேயல்லாமல், முஹம்மது நபியின் வீட்டையெல்லாம் தனது ஒளிக்கதிர்களால் பிரகாசமாக்கியது என்பதை அறிவியல் அடிப்படையில் ஏற்கவியலாது.

வெள்ளி கிரகம் பூமிக்கு மிகமிக அருகில் வந்ததாக ஒரு பேச்சுக்காக வைத்துக் கொள்வோம். அப்பொழுது என்ன நடந்திருக்கும்? அந்த அருகாமையால், அவ்வெள்ளி கிரகத்தின் ஈர்ப்புவிசையால் சந்திரன், பூமி, மற்றும் சில கிரகங்களின் போக்குகளில் மாற்றம் ஏற்பட்டு, அம்மாற்றத்தால் நமது சூரிய குடும்பத்தில் வேண்டாத பல விளைவுகள் ஏற்பட்டிருக்கும். அவ்வளவு ஏன்? ஈர்ப்புவிசை காரணமாக வெள்ளியும், பூமியும், மற்ற சில கிரகங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு சிதறிப்போயிருக்கவும் வாய்ப்புண்டு. ஆகவே, அபூதாலிப் கண்டது விடிவெள்ளியாகவும் இருக்கமுடியாது.


தாரிக் என்பது நட்சத்திரமும் அல்ல, விடிவெள்ளியும் அல்ல என்றால் வேறு என்னவாக இருக்கும் என்பதை, அல்லாஹ்வோ அல்லது அவரின் இறுதித்தூதர் முகம்மது நபியோ, அல்லது இன்றைய காலத்தில் குர்ஆனுக்குள் அறிவியலை, பூதக்கண்ணாடி வைத்து தேடித்தேடி, இல்லாததை எல்லாம் இமயமலையாகக் காட்டிக்கொண்டிருக்கும் அறிஞர்களான, மாரிஸ்புகைல், டாக்டர் ஹாருன் யஹ்யா, டாக்டர் ஜாகிர் நாயக், ஏ.கே.அப்துல் ரஹ்மான், அ.முகம்மது கான் பாகவி, ரஹ்மத் ராஜகுமாரன் முதலியோர்தான் தெளிவுபடுத்த வேண்டும். 

தப்ஸீர் பத்ஹுல் அஜீஸ் ஸீப்பார ஏ அம்ம என்ற குர்ஆன் விரிவுரையில் எடுத்தாளப்பட்ட மேற்கோளில் கூறப்பட்ட அந்த ஒளிமிகுந்த பொருள் என்னவென்று சொல்லவேண்டிய கடமை நமக்கும் உண்டு என்பதை நாம் மறக்கவில்லை. ஆனால் அப்பொருளைப் பற்றி நாம் விவரித்தவுடன், நமது குர்ஆனிய விஞ்ஞானிகள் “பார்த்தீர்களா? பார்த்தீர்களா? குர்ஆனில் அறிவியலைப் பார்த்தீர்களா?” என்று நமக்கே அல்வா கொடுக்க ஆரம்பித்து விடுவார்களோ என்பதும், அண்ணன் பி.ஜைனுல்ஆபிதீன் முதற்கொண்டு மொழி பெயர்ப்பாளர்கள் பலரும் தமது தமிழாக்கங்களை அவசரஅவசரமாகத் திருத்த முற்பட்டு விடுவார்களோ என்பதுமே நமது அச்சமாக உள்ளது. இருப்பினும் நட்சத்திரங்களைப் பிடுங்கி வீசும் ஷைத்தான்கள் இருப்பது வரையில் நாம் அது பற்றி கவலைப்படாமல் மேற்கொண்டு செல்வோம்.


ஒரு எரிநட்சத்திரமே, அதாவது விண்வீழ் கொள்ளியே அபூதாலிப்பை அச்சப்படுத்தி யிருக்கலாம். இதை நாம் சொன்னவுடன், “பார்த்தீர்களா? பார்த்தீர்களா? குர்ஆனில் அறிவியலைப் பார்த்தீர்களா? எரிநட்சத்திரம் என்பதைத்தான் ‘பிரகாசிக்கும் நட்சத்திரம்’ என்று குர்ஆனில் அல்லாஹ் தெளிவுபடுத்தியிருக்கிறான்” என்று நமது குர்ஆனிய விஞ்ஞானிகள்(?) வானத்திற்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கிவிடுவார்கள். “விஞ்ஞானிகளே! சற்றுப் பொறுங்கள். நட்சத்திரம் என்பது வேறு; எரிநட்சத்திரம் என்பது வேறு என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். குர்ஆனிய அறிஞர்களே! அவ்வாறு நீங்கள் தெளிவுபெறாவிட்டால், சினிமா நட்சத்திரம் என்பதைக் கூட வானிலுள்ள நட்சத்திரங்களுள் ஒன்று எனக் கூறத் தொடங்கி விடுவீர்கள்.” நட்சத்திரங்களைப் பற்றி முன்னரே எடுத்துக்காட்டியுள்ளோம். இனி கிரகங்கள், துணை கிரகங்கள், நட்சத்திரங்கள் தவிர வானில் சுற்றிவரும் மற்ற பொருட்களைப் பற்றி சிறிது அறிந்து கொள்வோம். நமது சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள், துணைகிரகங்களைத் தவிர வேறு சிலவும் சூரியனைச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை வால்நட்சத்திரங்கள் (Comets) என்றும், சிறுகிரகங்கள் அல்லது குறுங்கோள்கள் (Astroids)  என்றும், விண்கற்கள் (Meteorites) என்றும், விண் எரிகற்கள் அல்லது விண்வீழ்கொள்ளிகள் அல்லது எரிநட்சத்திரங்கள் (Meteors) என்றும் விண்ணியல் அறிஞர்கள் வகைபடுத்தியுள்ளனர். அவற்றை விளங்கிக்கொள்ளலாம் வாருங்கள்.



வால்நட்சத்திரங்கள் (Comets) :

           வால்நட்சத்திரங்கள் என்று பெயரிடப்பட்ட இவை உண்மையில் நட்சத்திரங்கள் அல்ல. சூரியனை மிக நீண்ட வட்டப்பாதையில் சுற்றிவரும் இவை, நைட்ரஜன், ஸையனோஜன், அம்மோனியா, கார்பன்மானாக்சைட், பனிக்கட்டி துகள்கள் ஆகியவற்றால் ஆனவை. இவைகளுக்கு ஒளிமிகுந்த ஒருதலையும், மிகவும் அடர்த்தி குறைந்த ஒரு வாலும் உண்டு. ஏறக்குறைய 20 பில்லியன் (2000 கோடி) வால்நட்சத்திரங்கள் சூரியனைச் சுற்றிவருவதாகவும், அவற்றின் மொத்த எடை பூமியின் எடையைக்காட்டிலும் குறைவு என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றின் பயணப்பாதை மிகநீண்டதாகையால், அவை சூரியனைச் சுற்றிவர பல ஆண்டுகள் ஆகின்றன. வால்நட்சத்திரங்கள் உருவிழந்து சிதறும் போது, அது எரிநட்சத்திரங்களின் தாரையாகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.


சிறுகிரகங்கள் என்னும் குறுங்கோள்கள் (Astroids):

            சூரியக்குடும்பத்தில் கோள்கள், துணைக்கோள்களுக்கு அடுத்ததாகச் சிறுகிரகங்கள் என்னும் குறுங்கோள்களைக் கூறலாம். சில நூறு மீட்டர்கள் முதல் 1000 கி. மீ. களுக்கும் சற்று அதிகமான குறுக்களவு உடையது வரை குறுங்கோள்கள் உள்ளன. 1801ஆம் ஆண்டில் முதன் முதலாக சிரெஸ் (Ceres) என்ற குறுங்கோள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து குறுங்கோள் பற்றிய ஆய்வுகள் தொடங்குகின்றன. இக்குறுங்கோள்களில் பெரும்பாலானவை, செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையில் காணப்படும், குறுங்கோள்கள் பாதைப் பட்டை(Astroids belt)யில் சுற்றி வருகின்றன. 2000 மேற்பட்ட குறுங்கோள்களின் சுற்றுப்பாதை சரியாகக் கண்டறியப்பட்டு அவற்றிற்குப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் 1,00,000க்கும் மேற்பட்டவைகளுக்கு எண் வரிசை கொடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. இக்குறுங்கோள்கள் எப்போதாவது புவி, மற்றும் பிற கோள்களின் மீது மோதி பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.








விண்கற்கள் (Meteorites):

           குறுங்கோள்களுக்கு அடுத்ததாக சூரியனைச் சுற்றி வரும், சற்று சிறிய பாறைகள் மற்றும் திடப்பொருட்களின் திரட்சியே விண்கற்கள் ஆகும். இவை அளவில் விண்எரிகற்களை விடப் பெரியவை. இவை பூமியின் ஈர்ப்பு எல்லைக்கு அருகில் வரும்பொழுது பூமியால் வெகு வேகமாக இழுக்கப்படுகிறது. அப்பொழுது அதன் வேகம், மணிக்கு ஏறத்தாழ 39,600 கி.மீ. முதல் 2,16,000 கி.மீ. வரையாகும். இந்த வேகத்தில் புவியை சுற்றியுள்ள காற்றுமண்டலத்தில் நுழையும் இந்த விண்கற்களில், அங்கு ஏற்படும் உராய்வினால்  தோன்றுகின்ற உயர்வெப்பநிலையில். சிறியதாக உள்ள துகள்கள், கற்கள் ஆகியன முழுவதுமாக எரிந்துவிடுகின்றன. அளவில் பெரியவைகள் மட்டும் எரிந்தது போக மிஞ்சியது பூமியைத் தாக்குகின்றன. மிகப்பெரிய விண்கற்கள் மிக அரிதாகவே பூமியைத் தாக்குகின்றன. பூமியைத் தாக்கிய பெரிய மற்றும் சிறிய அளவுள்ள விண்கற்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆப்ரிக்காவிலுள்ள குருட்பான்ட்டைன் என்ற ஊரில் புதைந்து கிடக்கும் ஹோபாவெஸ்ட்டு விண்கல்லும், நியுயார்க் நகரில் ஹைடென் பிளானெட்டேரியத்தில் உள்ள ஆனிஹிட்டோ விண்கல்லும், வில்லாமெட்டு விண்கல்லும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இவ்வாறாக பூமியில் விண்கற்கள் வீழ்ந்த அடையாளங்களாக சில பள்ளங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஒரு விண்கல்லினால் ஏற்பட்ட பெரிய பள்ளம் ஒன்று, அமெரிக்காவில் அரிஸோனா மாநிலத்தில் இன்றைக்கும் நமக்குச் சான்றுரைத்துக் கொண்டிருக்கிறது. இது பூமியில் வீழ்ந்த காலம் 2500 ஆண்டுகளுக்கு முன் என்றும், 20,000 ஆண்டுகளுக்கு முன் என்றும் பலவாறு கூறப்படுகிறது. ஆனால், கடவுள் ஒளிமயமாக மேலுலகிலிருந்து மண்ணுலகில் இறங்கிய இடத்தை அது காட்டுகிறது என்று ஹோப்பி சிவப்பிந்தியர்களின் மூடநம்பிக்கை ஒன்றும் வழங்கிவந்திருக்கிறது.  

எரிநட்சத்திரங்கள் என்னும் விண்வீழ்கொள்ளிகள் அல்லது விண்எரிகற்கள் (Meteors):
           இவைகள் எரிநட்சத்திரங்கள் என்று கூறப்பட்டாலும், உண்மையில் இவை நட்சத்திரங்கள் அல்ல. பூமியை நோக்கி, எரிந்து கொண்டே வீழும் விண்கற்களே, எரிநட்சத்திரங்கள் என்றும், விண்வீழ்கொள்ளிகள் என்றும், விண்எரிகற்கள் என்றும் பெயர் பெறுகின்றன. இவைகள் பெரும்பாலும் புவியை வந்தடையும் முன்பே 60முதல் 100கி.மீ. உயரத்திலேயே எரிந்து விடுகின்றன. இரவுபகல் எப்பொழுதும் பொழிந்தபடியுள்ள இந்த எரிநட்சத்திர மழையைச் சூரியஒளிகாரணமாக நாம் பகலில் காணஇயலாது. இரவிலும் சற்று பெரியதான எரிநட்சத்திரங்களையே நம்மால் காணமுடியும்.

          James Sayre Pickering எழுதிய Captives of The Sun என்ற நூலிலிருந்து ஒரு சிறுபகுதி உங்கள் பார்வைக்காக இங்கே எடுத்துக்காட்டப்படுகிறது.

“1908ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரஷ்யாவிலுள்ள ஸைபீரியாவின் ஒரு பாழான பகுதியில் ஒரு பெரிய விண்கல்லோ அல்லது விண்கல்லின் கூட்டமோ விழுந்திருக்கிறது. அது விழுந்த இடத்திலிருந்து வெகுதொலைவில் வாழ்ந்த மக்கள் அக்காட்சியைக் கண்டனர். அம்மக்கள் வெகுதொலைவில் இருந்ததனால், அழியாமல் தப்பினார்கள். அந்த விண்கல் வானிலிருந்து பெரியதீப்பொறி போல் விழுந்ததையும் மக்கள் கண்டார்கள். அது விரைந்து வந்தபோது, இடியொலியைப் போன்ற பேரொலியைக் கேட்டார்கள். அது பூமியில் மோதியபோது அதன் பேரதிர்ச்சியை உணர்ந்தார்கள். அந்த அதிர்ச்சி பூகம்ப அதிர்ச்சிக்கருவிகள் பலவற்றிலும் பதிவாயிற்று. அந்த விண்கல் ஒரு காட்டில் விழுந்த டெலாவேர் என்ற மாநிலம் அளவுள்ள பரப்பில் இருந்த மரங்கள் எல்லாம் விண்கல் மோதிய இடத்திலிருந்து வெளிப்புறம் நோக்கி சாய்ந்து எல்லாதிசைகளிலும் விழுந்து கிடந்தன. மற்றொரு விண்கல், 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி கிழக்கு ஸைபீரியாவிலுள்ள மலைப்பகுதியில் விழுந்தது. இந்த விண்கல், கண்ணைக் குருடாக்கும் ஒளிமிக்க பந்தாகத் தோன்றியது. அதைத் தொடர்ந்து ஒரு புகைக் கற்றையும் தோன்றியது. அது விழுந்த இடத்தைச் சுற்றி ஏறத்தாழ 8சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு குழிகள் அங்கங்கே காணப்பட்டன. சுற்றிலுமுள்ள மரங்களெல்லாம் கருகி வீழ்ந்து கிடந்தன.”

         மேலே எடுத்துக்காட்டிய செய்திகளிலிருந்து உங்களுக்கு ஒன்று தெளிவுபட்டிருக்கும். மக்காவுக்கு அருகில் எங்கோ பாலைவனத்தில் வீழ்ந்த விண்வீழ்கொள்ளியே ஆபூதாலிபை அச்சம் கொள்ளச் செய்திருக்க வேண்டும். எரிந்துகொண்டே தரைவீழ்ந்த விண்எரிகல்லின்  வெளிச்சம் முகம்மது நபியின் இல்லமெல்லாம் பரவியுமிருக்கலாம். அன்றைய காலத்தில், விண் அறிவியல் வளர்ச்சியடையாத நிலையில், அல்லாஹ்வாலும் அவரின் இறுதி தூதர் முகம்மது நபியாலும், வானில் ஏற முயற்சிக்கின்ற ஷைத்தான்களை விரட்டுவதற்காக மலக்குகளால் புடுங்கி வீசப்பட்ட நட்சத்திரமாகவே அது கற்பனைச் சிறகை விரித்திருக்கிறது. அரேபியாவில் அக்காலம் அறியாமை காலம் என்றும், ஏன், உலகமே அக்காலத்தில் அறியாமையில் மூழ்கியிருந்தது என்றும், விஞ்ஞானம் போதித்த மெய்ஞானத் தூதராம் நபிகள் நாயகம் வந்த பின்னரே அரேபியாவில் மட்டுமல்லாது,  உலகம் முழுவதும் அறியாமை இருள் நீங்கிற்று என்றும், அறிவியல் சிந்தனையும், பகுத்தறிவு சிந்தனையும் அரியணை ஏறியது என்றும் இன்றைய இஸ்லாமிய குர்ஆன் தாங்கிகள் ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வால் அருளப்பட்டு நபி மூலமாக வழங்கப்பட்ட அல்குர்ஆனில் விடிவெள்ளியைப் பற்றியும் தெளிவில்லை!  விண்மீனைப் பற்றியும் தெளிவில்லை!  விண்எரிகற்களைப் பற்றி எந்த ஒரு சிறு தகவலும் இல்லை!  இல்லை! !  இல்லவே இல்லை! ! !  இதுதான் இஸ்லாமின் விஞ்ஞான சிந்தனை.          

          ஒரு குறும்பைச் செய்துவிட்டு, மற்றொரு குறும்பைச் செய்வதற்காக விரைந்து சென்றுகொண்டிருக்கும் சிறு தேவதைகள், ஆவிகள் மோட்சத்திற்கு செல்லும் பாதைகள், தங்களின் பணியை நிறைவேற்றச் செல்லும் கருணை உள்ளம் கொண்ட தேவதூதர்கள் என்றெல்லாம் எரிநட்சத்திரங்கள் பற்றிய பழங்கால மக்களின் கற்பனைகள் இறக்கை கட்டிப் பறந்துள்ளன. எரிவிண்கற்களைப் பார்ப்பவர்களுக்கு நினைவாற்றல் குறையும் என்ற மூடநம்பிக்கையும்  தமிழ் மக்களிடம் உண்டு. அது போன்றதொரு கற்பனைதான், வானத்தின் காவலாளிகளான மலக்குகள், ஷைத்தான்களை இதனால் எறிந்து துரத்தியடிக்கின்றனர் என்ற முகம்மது நபியின் வார்த்தைகளும். அந்த கட்டுக்கதையின் தொடர்ச்சியே, ‘விழுந்த கொஞ்ச நேரத்தில் அது தண்ணீர் போலானது. பிறகு நெருப்புபோல மாறியது’ என்பதெல்லாம். மலக்குகள் எதையும் புடுங்கவும் இல்லை! அதைக் கொண்டு ஷைத்தானை விரட்டவும் இல்லை! மலக்குகளும் இல்லை! ஜின்களும்இல்லை! அல்லாஹ்வும் இல்லை!

அந்த விண்வீழ்கொள்ளியின் வீழ்ச்சியே, தாரிக் என்றும் னஜ்மு என்றும் குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. நமது தமிழ் மொழிபெயர்ப்பாளர்களால் அது விடிவெள்ளி, உதயதாரகை, இரவில் தோன்றுவது, இரவில் தோன்றும் தாரகை, உதயமாகக் கூடியது, பிரகாசமான நட்சத்திரம், மின்னும் நட்சத்திரம், ஜொலிக்கும் நட்சத்திரம் என்றெல்லாம் தமிழாக்கம் செய்யப்பட்டு நம்மைக் குழப்பி, படாதபாடுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

இவ்விளக்கத்தை - அதாவது தாரிக் என்பது விண்வீழ்கொள்ளிதான் - என்ற விளக்கத்தை, குர்ஆனிய அறிஞர்கள் ஏற்கவில்லை என்றால் - தாரிக் என்பது விடிவெள்ளிதான் என்று பிடிவாதம் செய்தால்  (அத்தியாயம் 86:3இல் கூறப்பட்டுள்ளபடி) விடிவெள்ளி ஒரு நட்சத்திரம் தான் என்று அவர்கள் நிரூபித்தாக வேண்டும். னஜ்மு என்பது நட்சத்திரம்தான் என்று உறுதிபடுத்தினால் தாரிக் என்பது விடிவெள்ளி அல்ல என்றாவது மறுத்துரைக்க வேண்டும். தாரிக் என்பது விண்வீழ்கொள்ளி என்பதை ஒப்புக்கொண்டால், தாரிக் - விடிவெள்ளி, னஜ்மு - நட்சத்திரம்  ஆகிய இரண்டுமே தவறு என்று ஒத்துக்கொள்ள வேண்டும். எப்படியானாலும் இது அவர்களுக்கு ஒரு இடியாப்பச்சிக்கல்தான்.       

இந்தக்கட்டுரையைப் பார்த்த பின்னர் அண்ணன் பீ.ஜை. முதற்கொண்டு குர்ஆனை தமிழாக்கம் செய்த பழைய மொழிபெயர்ப்பாளர்களும், இன்னும் குர்ஆனை மொழிபெயர்க்க முயற்சிக்கும் புதியவர்களும் இனிமேல் தாரிக் என்பதை விண்எரிகல் அல்லது விண்வீழ்கொள்ளி என்றும் னஜ்மு என்பதை எரிநட்சத்திரம் என்றும் மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு, குர்ஆனின் விண்அறிவியல் அதிசயத்தை எட்டுத்திக்கும் முழங்கப் போகிறார்கள். “அந்த ஒரு வாழைப்பழம் இதுதான்” என்று கவுண்டமணி & செந்தில் ஜோக் அடிப்பது போல், எதையாவது முட்டாள்தனமாகச் சொல்லி நம்மையெல்லாம் வயிறு வலிக்க சிரிக்க வைப்பதுதான் நமது மதவாதிகளுக்குக் கைவந்த கலையாயிற்றே !



- லூஸிஃபர்