Monday 6 August 2012

ஒரு மரணம் சில கேள்விகள்-3

நாம் முஹம்மதின் விஷமரணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். கவனம் திசைமாறி ஃபதக்கின் வாரிசுரிமைக்காக முஹம்மது அலைகிழிக்கப்பட்டதிற்குள் புகுந்துவிட்டது. கைபரில் வைக்கப்பட்ட விஷத்தின் காரணமாக முஹம்மதிற்கு மரணம் ஏற்பட்டது என்பது நம்பும்படியாக இல்லை. கைபருக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் மனிதர், திடகாத்திரமாக, அழகிய பெண்களுடன் ஜல்ஸாவாகத்தான் இருந்திருக்கிறார். முஹம்மது இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு அல்லக்கை உமரே நம்பவில்லை. அவ்வளவு திடகாத்திரமாக இருந்இருக்கிறார்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான்- நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றுதான்- தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி-ஸல்- அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள் என்று சொன்னார்கள். ....
(புகாரி 3667)
பிறகு அபூபக்கர் வந்து
...மேலும், நபியே! நீங்களும் இறக்க விருப்பவர் தாம்; அவர்களும் இறக்க விருப்பவர்களே என்னும் (கு 39:30) இறை வசனத்தையும், முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப்பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா?...
(புகாரி 3667)
என்ற குர் ஆன் வசனத்தை ஓதி உமரின் காதில் ஊதிய பிறகுகுதான் அவருக்கு நினைவு திரும்பியதாம். உமர் இதற்குமுன்பு மரணத்தைப்பற்றி எதுவுமே அறிந்திராத மனிதரல்ல. நோய்வாய்படுவதற்கு முன்புவரை முஹம்மது நன்கு திடகாத்திரமாகத்தான் இருந்துள்ளார் என்பதற்கு உமரின் இந்த ஆர்ப்பாட்டமே போதுமான சாட்சியாக உள்ளது. மேலும் இதே உமர்தான் சற்று நேரத்திற்கு முன்புவரை, குர்ஆனில் எல்லாம் உள்ளது என்று முஹம்மதிற்கு குர்ஆன் வகுப்பை எடுத்துக் கொண்டிருந்தார் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இதுபோன்ற வேடிக்கைகள் இஸ்லாம் நெடுகிலும் உள்ளது அவைகளையும்  நாம் பார்க்க இருக்கிறோம். ஒருவழியாக முஹம்மது மரணமடைந்து விட்டார் என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டு, அவர் இறந்த அதே இடத்தில் குழியைத் தோண்டி ரகசியங்களையும் சேர்த்து புதைத்து விட்டனர்.
மக்கா வெற்றிக்குப் பிறகு முஹம்மதின் போக்கில் மாற்றம் தென்படத் துவங்கியது. அவரது மாற்றத்தை அன்சாரிகளும் உணர்ந்தனர். தாக்குதல்களின் முடிவில் நிகழும் சூறையாடல்களோ, மனிதர்களை அடிமைபடுத்துதலோ மக்கா வெற்றியில் நிகழவில்லை. மாறாக மக்கத்து குறைஷியர்களுக்கு அதிக முக்கியத்தும் அளிக்கத் துவங்கினார். அதன் பிறகு அடிக்கப்பட்ட கொள்ளைகளில் மக்கத்து குரைஷியர்களுக்கு முன்னுரிமை வழங்கி தாராளமாக வழங்கினார். குதிரைக்கு இரண்டு பங்கும் காலாட்படை வீரருக்கு ஒருபங்கு என்றெல்லாம் அவர் உருவாக்கிய விதிமுறைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டார்.  இதை மதீனத்து அன்சாரிகள், ”இந்த மனிதருக்கு ஊர்ப்பற்று மேலோங்கிவிட்டது” என்று முஹம்மது அறிய வெளிப்படையாகவே விமர்சித்தனர். கொள்ளையில் பங்குபிரிப்பதிலும் தாங்கள் பின்தள்ளப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்தனர். சொத்துக்களையும் பொண்டாட்டிகளையும் முகம்முடன் மதினாவ்வர்களுக்கு கொடுத்துதவிய அன்சாரிகளுக்கு எற்பட்ட கதியைப் பார்த்தீர்களா!

முஹம்மது விஷத்தினால் மரணமடந்தார் என்பதை ஹதீஸ்கள் கூறுகின்றன. 3-4 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட விஷத்திலிருந்து சிறிதை உண்டார் என்றும் வெளியில் துப்பிவிட்டார் என்றும் மாறுபட்ட செய்திகளைப் பார்த்தோம். எனவே கைபரில் வைக்கப்பட்ட விஷத்தினால் அவர் இறந்திருக்கக்கூடும் என்பதை ஏற்பதற்கில்லை. யூதர்கள் மட்டுமல்ல முஹம்மதின் மீது பகைமைகொள்ளக் கூடியவர்கள் மேலும் பலர் இருந்துள்ளனர். அவர் தலைமையில் நிகழ்ந்த கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சூரையாடல்கள் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். இவைகளைவிட அவரது நெருங்கிய உறவினர்களையே நாம் அதிக கவனத்தில் கொள்ளவேண்டும். 

அபூபக்கர் - ஆயிஷா :
            ஆயிஷாவின் திருமணம்(?) அவரது அறியாப்பருவத்தில் பெற்றோர்களால் நிகழ்த்தப்பட்டது. முஹம்மதைவிட 45 வயது சிறியவர். தனது கிழட்டுக் கணவருடைய மரணத்தின் பொழுது அழகும் இளமையும் கொஞ்சும் 18 வயது நிரம்பிய மங்கையாக இருந்தார். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், தனது தந்தையைவிட வயதுமுதிர்ந்த, பல மனைவிகளுடனும் பாலியல்அடிமைகளுடனும் வாழ்ந்துவரும் ஒரு கிழவரிடம் அதீதகாதல் கொண்டிருந்தார் என்பது நம்பும்படியாக இல்லை. ஆனால் ஆயிஷா-முஹம்மது நெருக்கம் குறித்து, ஆயிஷா அறிவித்ததாக ஹதீஸ்களில் நிறைய காணப்படுகிறது. அவைகளில் ”வயதுவந்தவர்ளுக்கு மட்டும்” என்ற வகையைச் சேர்ந்தது கணிசமாக உள்ளது. உதாரணத்திற்கு ஒன்றை குறிப்பிடுகிறேன்.
Narrated Aisha, Ummul Mu'minin:
One night he entered (upon me) while I was menstruating. He went to the place of his prayer, that is, to the place of prayer reserved (for this purpose) in his house. He did not return until I felt asleep heavily, and he felt pain from cold. And he said: Come near me. I said: I am menstruating. He said: Uncover your thighs. I, therefore, uncovered both of my thighs. Then he put his cheek and chest on my thighs and I lent upon he until he became warm and slept.
(Abu Dawud 0270)
(நம்பிக்கையாளர்களின் தாய் ஆயிஷா கூறுகிறார்: நான் மாதவிலக்காக இருந்த ஒரு இரவில் அவர்(முஹம்மது) என்னிடம் வந்தார். தொழுகைக்கென்று அந்த வீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு, தனது தொழுகைக்காக சென்றார். நான் மிகநன்றாக உறங்கும்வரை அவர் வரவேயில்லை சளியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவர், ”என் அருகில் வா” என்று என்னிடம் கூறினார், “நான் மாதவிலக்காக இருக்கிறேன்” என்று நான் கூறினேன். அவர், உன் தொடைகளை திறந்து வை என்றார். எனவே நான் எனது இரு தொடைகளையும் திறந்து வைத்தேன். பிறகு அவர் தனது நெஞ்சத்தையும் கன்னத்தையும் எனது தொடைகளில் வைத்தார். அவர் உடல்சூடேறி உறங்கும் வரை அப்படியே வைத்திருந்தேன்.)
முஹம்மது மலம் கழிக்கும்பொழுது, எப்படி காலை அகட்டி அமர்ந்தார், எந்தக் காலில் உடல்பாரத்தைக் கொடுத்து அமர்ந்தார் என்றெல்லாம் ஆராய்ந்து பின்பற்றும் ஈமாந்தாரிகள், சளி, ஜலதோஷம், இருமல், தும்மல் மூக்கடைப்பு போன்ற வியாதிகளுக்கு அவர் பின்பற்றிய இந்த முறையைப் பின்பற்றலாமே? நல்ல வாய்ப்பாக முஹம்மதிற்கு ”சைனஸ்” என்ற நோய் இருக்கவில்லை. இல்லையெனில் ஆயிஷாவின் தொடை நிரந்தரமாக திறந்து வைத்திருக்க வேண்டியிருந்திருக்கும். அல்லாஹ் தும்மலை விரும்புகிறான் என்று முஹம்மது கூறியது இதை வைத்துதானோ?
 இன்றைய நாகரீகயுகத்தில்கூட, படுக்கையறை அந்தரங்கங்களை வெளிப்படையாக பேசுபவர்களைக் காண்பது அரிதாக இருக்கிறது. ஆயிஷா இப்படியெல்லாம் பேசவேண்டிய தேவை என்ன? தான் மட்டுமே முஹம்மதிற்கு மிக நெருக்கமானவள் என்பதை காண்பித்து அரசியலியலில் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்வதைத் தவிர வேறொன்றுமில்லை. அது அவரை போர்முனைக்கு இழுத்துச் சென்றது.
ஆயிஷாவும் முஹம்மதுவும் சண்டையிட்டுக்கொண்ட கதைகள் ஹதீஸ்களிலேயா நிரம்ப காணக்கிடைக்கிறது. முஹம்மதின் மரணவேதனை துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு,
அப்துல்லாஹ் பின் கஸீர் அல்முத்தலிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
...நபி (ஸல்) அவர்கள் என்னுடன் தங்க வேண்டிய இரவில் (என்னிடம்) வந்தார்கள். தமது மேலாடையை (எடுத்துக் கீழே) வைத்தார்கள்; தம் காலணிகளைக் கழற்றித் தமது கால்மாட்டில் வைத்துவிட்டுத் தமது கீழாடையின் ஓரத்தைப் படுக்கையில் விரித்து அதில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். நான் உறங்கிவிட்டேன் என்று அவர்கள் எண்ணும் அளவு பொறுத்திருந்தார்கள். (நான் உறங்கிவிட்டதாக எண்ணியதும்) மெதுவாகத் தமது மேலாடையை எடுத்து (அணிந்து)கொண்டார்கள்; மெதுவாகக் காலணிகளை அணிந்தார்கள்; கதவைத் திறந்து வெளியே சென்று மெதுவாகக் கதவை மூடினார்கள்.
உடனே நான் எனது தலைத் துணியை எடுத்து, தலையில் வைத்து மறைத்துக்கொண்டேன்; கீழாடையை அணிந்துகொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தேன். அவர்கள் "அல்பகீஉ' பொது மையவாடிக்குச் சென்று நின்றார்கள்; அங்கு நீண்ட நேரம் நின்றிருந்தார்கள். பிறகு மூன்று முறை கைகளை உயர்த்தினார்கள். பிறகு (வீடு நோக்கித்) திரும்பினார்கள்; நானும் திரும்பினேன். அவர்கள் விரைவாக நடந்தபோது நானும் விரைவாக நடந்தேன். அவர்கள் ஓடிவந்தார்கள்; நானும் (அவ்வாறே) ஓடிவந்தேன்; அவர்களுக்கு முன்னால் (வீட்டுக்கு) வந்து படுத்துக்கொண்டேன். நான் படுத்த சிறிது நேரத்தில் அவர்கள் (வீட்டுக்குள்) வந்து "ஆயிஷ்! உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு ஏன் மூச்சு வாங்குகிறது?'' என்று கேட்டார்கள். நான் "ஒன்றுமில்லை' என்றேன். அதற்கு அவர்கள் "ஒன்று, நீயாகச் சொல்லிவிடு! இல்லாவிட்டால் நுண்ணறிவாளனும் மென்மையானவனுமான அல்லாஹ் எனக்கு அறிவித்துவிடுவான்'' என்று கூறினார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே, என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பண மாகட்டும்!'' என்று கூறிவிட்டு, நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் "ஓ நீதான் எனக்கு முன்னால் நான் கண்ட அந்த உருவமா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்' என்றேன். உடனே அவர்கள் என் நெஞ்சில் கையை வைத்துத் தள்ளினார்கள். எனக்கு வலித்தது. பிறகு "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (உனக்கு) அநீதியிழைத்துவிடுவார்கள் என நீ எண்ணிக் கொண்டாயோ?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்! மனிதர்கள் என்னதான் மறைத்தாலும் அல்லாஹ் அதை அறிந்துவிடுவானே!'' என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ என்னைக் கண்டபோது (வானவர்) ஜிப்ரீல் என்னிடம் வந்து மறைவாக ஓரிடத்தில் நின்றுகொண்டு என்னை அழைத்தார். நானும் அவரது அழைப்பை ஏற்று உனக்குத் தெரியாமல் மறைவாக அவரிடம் சென்றேன். -(பொதுவாக) நீ உனது ஆடையை கழற்றிவைத்துவிட்ட நேரங்களில் அவர் நீ இருக்கும் இடத்திற்கு வரமாட்டார்- (எனவே தான், மறைவாக நின்று அவர் என்னை அழைத்தார்.) நான் நீ உறங்கிவிட்டதாக நினைத்தேன். உன்னை எழுப்பிவிடவும் நான் விரும்பவில்லை. நீ தனிமையில் இருப்பதை நினைத்து பயந்துவிடுவாய் என்று நான் அஞ்சினேன். (எனவே, உன்னை உறக்கத்திலிருந்து எழுப்பவில்லை.) அப்போது ஜிப்ரீல் "உம் இறைவன் உம்மை "பகீஉ'வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகின்றான்' என்று கூறினார்'' என்றார்கள்.
தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் "அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்'' என்று சொல்'' என்றார்கள்.
(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)
(முஸ்லீம்)
அல்லாஹ் மறைகழன்ற கடவுள் என்பதில் சந்தேகமேயில்லை. மனைவியுடன் ஜல்ஸா வேலையை முடித்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை, ஜிப்ரீல் என்ற அடியாளை அனுப்பி, நள்ளிரவில், என்றோ இறந்துபோனவர்களுக்காக, கல்லறையில் வந்து பாவமன்னிப்புக் கேட்குமாறு கட்டளையிடுகிறான். முஹம்மதாக விரும்பிச்சென்று அவர்களுக்காக பாவமன்னிப்பைக் கேட்டார் என்று கூறியிருந்தால்கூட பரவாயில்லை. இஸ்லாமியர்களது நம்பிக்கைகளின்படி, முஹம்மது பாவமன்னிப்பை கேட்டாலும் கேட்கவில்லையானாலும் அவர்களது பாவங்களை மன்னிக்கப் போவது யார்? அதை அந்த நள்ளிரவில்தான் செய்யவேண்டுமா? அல்லாஹ்தான் மன்னிப்பதாக இருப்பின் நள்ளிரவில் இந்த சடங்கு எதற்காக? வடிகட்டிய மடத்தனமாக இல்லையா?
இந்த ஹதீஸின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கேள்வி கேட்கமுடியும். அதை நமது நண்பர்கள் தொடரலாம்.
நள்ளிரவில் எழுந்து சென்ற முஹம்மதை பிந்தொடர்ந்த காரணத்தால் ஆயிஷாவிற்கும் முஹம்மதிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது, அவர் ஆயிஷாவை மார்பில் வலிஏற்படும் அளவிற்குத் தாக்கியிருக்கிறார் என்பதைமட்டும் கவனத்தில் கொள்ளவும்.
 ஆயிஷாவும், ஹஃப்ஸா முஹம்மதின் லீலை ஒன்றை வெளிப்படுத்தியதால், அவர் அனைத்து மனைவிகளையும் ஒட்டுமொத்தமாக விவாகரத்து செய்யுமளவிற்குச் சென்ற கதைகளை அறிவீர்கள். முஹம்மதிற்கு விஷம் வைத்தது இந்த இரண்டு பெண்களாக ஏன் இருக்கக்கூடாது என்கின்றனர் ஷியாக்கள்.
ஆயிஷாவின் மீது கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டு எழுந்தபொழுது (இதைப்பற்றி “மர்ம இரவு” என்ற தலைப்பில் முன்பே விவாதித்திருக்கிறோம்)  முஹம்மது அதை மறுக்கவில்லை. மாறாக, ஆயிஷாவை அவரது பெற்றோர்களின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தனது தோழர்களுடன் ஆயிஷாவை விவாகரத்து செய்வதைப்பற்றித்தான் ஆலோசித்தார். ஆயிஷாவை விவாகரத்து செய்வதே சரியானது என்று அலீ தனது கருத்தைக் கூறினார். இதனால் எதிர்கொள்ளவேண்டிய மாபெரும் குழப்பங்களைக் கருத்தில்கொண்டு, ஒரு மாதம் கடந்தபிறகு வேறுவழி தெரியாமல் அல்லாஹ்வின் பெயரில் குர்ஆன் வசனங்களை வெளிட்டுக்கொள்ள வேண்டியதாயிற்று. தன் மகள் இழிவுபடுத்தப்பட்டதை ஒரு தந்தையாக அபூபக்கரால் எப்படி ஜீரணிக்க முடியும்? எந்த ஒரு சராசரி தந்தையாலும் தன் மகளை இழிவுசெய்யப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது. அபூபக்கர் இவ்விவகாரத்தை பெரிதுபடுத்தவில்லையெனில்,
·         ஆயிஷாவின் மீதான குற்றச்சாட்டு உண்மை என்பதாக அவர் நினைத்திருக்கலாம்.
·         முஹம்மதை மறைகழன்ற கேஸ் என்று முடிவு செய்திருக்கலாம்
·         தனது மகள் ஆயிஷாவை மையப்படுத்தி பெரும் திட்டம் தீட்டியிருக்க வேண்டும்
·         அல்லது அபூபக்கர் வெட்கம், மானம், சூடு, சொரணை போன்றவைகள் இல்லாதவராக இருக்கவேண்டும்.
தொடரும்…

தஜ்ஜால்

Facebook Comments

48 கருத்துரைகள்:

ஆர்ய ஆனந்த் said...

//ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான்- நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றுதான்- தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி-ஸல்- அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள் என்று சொன்னார்கள். ....
(புகாரி 3667)//

தான் மரித்துவிட்டதாக தவறாக நினைத்து எந்த மூமினாவது கூறிவிட்டால் அவருடைய கைகளையும் கால்களையும் வெட்டி வீசுகின்ற அற்புத மனிதர்தான் முஹம்மது என்பதை உமர் அழகாக இந்த ஹதீஸில் விளக்கி உள்ளார். முஹம்மதின் சகிப்புத்தன்மை அப்படி! முஸ்லிம்களே, இப்பொழுது சொல்லுங்கள், முஹம்மது உலகங்களுக்கெல்லாம் அருட்கொடையாக அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவர் தானே! உலகங்களுக்கெல்லாம் அருட்கொடையாக இருப்பவர்(?) இப்படிதானே நடந்து கொள்ள முடியும்!

ஆர்ய ஆனந்த் said...

//..அதன் பிறகு அடிக்கப்பட்ட கொள்ளைகளில் மக்கத்து குரைஷியர்களுக்கு முன்னுரிமை வழங்கி தாராளமாக வழங்கினார். குதிரைக்கு இரண்டு பங்கும் காலாட்படை வீரருக்கு ஒருபங்கு என்றெல்லாம் அவர் உருவாக்கிய விதிமுறைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டார். இதை மதீனத்து அன்சாரிகள், ”இந்த மனிதருக்கு ஊர்ப்பற்று மேலோங்கிவிட்டது” என்று முஹம்மது அறிய வெளிப்படையாகவே விமர்சித்தனர். கொள்ளையில் பங்குபிரிப்பதிலும் தாங்கள் பின்தள்ளப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்தனர். சொத்துக்களையும் பொண்டாட்டிகளையும் முகம்முடன் மதினாவ்வர்களுக்கு கொடுத்துதவிய அன்சாரிகளுக்கு எற்பட்ட கதியைப் பார்த்தீர்களா!..//

அதனால் தானே அன்சாரி முஸ்லிம்கள் முஹம்மது பொறாமைக்காரர், தங்களுக்கு கொள்ளை பொருளில் குறைந்த அளவு பங்கு தருகிறார் என்று முஹம்மதின்மீது குற்றம் சாட்டியதை நாம் குர்ஆனில் காண்கிறோம்.

ஆர்ய ஆனந்த் said...

//..(Abu Dawud 0270)
(நம்பிக்கையாளர்களின் தாய் ஆயிஷா கூறுகிறார்: நான் மாதவிலக்காக இருந்த ஒரு இரவில் அவர்(முஹம்மது) என்னிடம் வந்தார். தொழுகைக்கென்று அந்த வீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு, தனது தொழுகைக்காக சென்றார். நான் மிகநன்றாக உறங்கும்வரை அவர் வரவேயில்லை சளியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவர், ”என் அருகில் வா” என்று என்னிடம் கூறினார், “நான் மாதவிலக்காக இருக்கிறேன்” என்று நான் கூறினேன். அவர், உன் தொடைகளை திறந்து வை என்றார். எனவே நான் எனது இரு தொடைகளையும் திறந்து வைத்தேன். பிறகு அவர் தனது நெஞ்சத்தையும் கன்னத்தையும் எனது தொடைகளில் வைத்தார். அவர் உடல்சூடேறி உறங்கும் வரை அப்படியே வைத்திருந்தேன்.)..//

மாதவிலக்கின்போது கூட ஆயிஷாவின் தொடை முகம்மதுவுக்கு தேவைப்படுகிறது. அருமை இஸ்லாமிய சுகாதாரம்!

ஜலதோஷத்திற்கு இளம்பெண்ணின் தொடையில் முகத்தையும் நெஞ்சையும் வைத்து தேய் தேய் என்று தேய்த்தால் ஜலதோஷம் போயே போயிடுச்சு,போயிந்தி,it's gone!இது அல்லவோ இஸ்லாமிய மருத்துவம்!

ஆர்ய ஆனந்த் said...

//..ஆயிஷாவின் மீது கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டு எழுந்தபொழுது (இதைப்பற்றி “மர்ம இரவு” என்ற தலைப்பில் முன்பே விவாதித்திருக்கிறோம்) முஹம்மது அதை மறுக்கவில்லை. மாறாக, ஆயிஷாவை அவரது பெற்றோர்களின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தனது தோழர்களுடன் ஆயிஷாவை விவாகரத்து செய்வதைப்பற்றித்தான் ஆலோசித்தார். ஆயிஷாவை விவாகரத்து செய்வதே சரியானது என்று அலீ தனது கருத்தைக் கூறினார். இதனால் எதிர்கொள்ளவேண்டிய மாபெரும் குழப்பங்களைக் கருத்தில்கொண்டு, ஒரு மாதம் கடந்தபிறகு வேறுவழி தெரியாமல் அல்லாஹ்வின் பெயரில் குர்ஆன் வசனங்களை வெளிட்டுக்கொள்ள வேண்டியதாயிற்று...//

இதை இன்னொரு கோணத்திலிருந்தும் பார்க்கலாம். அதாவது ஆயிஷாவின் நடத்தை குறித்த மூமீன்களின் குற்றசாட்டினால் முஹம்மதின் மானம் போய்விட்டது. அதை எப்படி போக்குவது? அதற்கு ஒரே வழி ஆயிஷா தூய்மையானவர் என்று வழக்கம்போல அல்லாஹ்வை துணைக்கு அழைத்து அறிவித்துவிடுவதுதான். ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. ஆயிஷா அந்த ஆணோடு உண்மையாகவே உடலுறவு கொண்டிருந்து அதனால் அவர் கர்ப்பம் தரித்துவிட்டால் தானும் தன்னுடைய கற்பனை அல்லாஹ்வும் பொய்யர்கள் என்ற உண்மை வெளிவந்து ஊர் சிரிக்கும்படி ஆகிவிடுமே. இதற்கு ஒரே தீர்வு ஆயிஷா கர்ப்பம் தரிக்கிறாரா இல்லையா என்பதை அறிந்து கொள்ளும்வரை மவுனம் காப்பது மட்டுமே. எனவே முகம்மதுவுக்கு அல்லாஹ்விடமிருந்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகியும் எந்த வஹியும் வரவில்லை. ஏனென்றால் அல்லாஹ்வும் முஹம்மதைபோல ஆயிஷா கர்ப்பம் அடைந்ததற்கான அறிகுறி தெரியும்வரை காத்திருக்க வேண்டி இருந்தது. ஒரு மாதம் காலத்துக்கு மேல் ஆகியும் ஆயிஷா கர்ப்பம் அடைந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியாததால், அல்லாஹ் நிம்மதி பெருமூச்சு விட்டு விட்டு, ஆயிஷா மானக்கேடான செயலை செய்யவில்லை என்றும் அவர் மீது பழி சுமத்தியவர்கள் நயவஞ்சகர்கள் என்றும் கூறி முகம்மதுவுக்கு உடனே வஹி இறக்கினார். இதன்மூலம் முஹம்மதின் மானமும் காப்பாற்றப்பட்டு விட்டது, குற்றசாட்டு வைத்தவர்கள் நயவஞ்சகர்களாக ஆக்கப்பட்டு அவற்களுக்கு தண்டனையும் கொடுக்கப்பட்டது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

சிவப்புகுதிரை said...

அங்க இங்க போய் கடைசீல மூமீன்களின் தாய்கே ஆப்பு வைத்துடிங்க தஜ்ஜால்...அருமையான பதிவு நியாயமான சந்தேகம்.

ஆர்ய அனந்து//
உங்களின் கேள்விதான் எனக்கும் ..தாய் ஆயிசா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு உடனே வஹி இறக்கி பதில் சொல்லி இருக்கலாமே அதுக்கு ஏன் ஒரு மாதம் காலம் காத்து இருந்து வஹியை இறக்க வேண்டும்.ஒரு வேளை ஆயிசாவின் இரத்ததை லாப்பில் கொடுத்து செக்பண்ணி சொன்னாரோ .....

Unknown said...

வணக்கம் சகோ. நீங்கள் தொடை என "எ" சான்றிதழ் கண்ணோடு பார்க்கிறீர்கள்,ஆனால் மூமின்களின் பார்வை வித்தியாசமானது "மடிமீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம் மறு நாள் எழுந்து பார்ப்போம்" என்று கவிநயம் பொங்கி உறங்கியிருக்கிறார் அவ்வளவுதான். மூமின்களின் கேரக்ட்டரையே புரிஞ்சிக்க மாட்டீங்களா தோழர்களே????

நன்றி தஜ்ஜால் அருமை பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வருவது கண்டு மூமின்கள் கோபமாக இருப்பார்கள், ரமலான் மாதத்தில் பிரார்த்தனை செய்தால் உடனே அல்லா ஏற்றுக் கொள்வானாமே எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்.

இனியவன்.....

Unknown said...

முகம்மது பாவமன்னிப்பு கேட்கப் போனதாக தெரியவில்லை. கண்ணுமணி பொண்ணுமணியை பிரியத்துடன் ஏற்றுக் கொண்ட ஆயிசாவாக இருந்திருந்தால்,சந்தேகத்துடன் முகம்மதை பின் தொடர வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அங்கு ஏதோ நடக்கவிருப்பதை முன்கூட்டியே ஆயிசா அரிந்திருந்ததால்தான் பின் தொடர்ந்து கண்காணித்திருக்கிறார். வேறு யாருடனும் கள்ளத்தனகமாக சந்திப்பதற்காக சென்ற வேலையில் ஆயிசா சந்தேகித்ததால் தான் முகம்மதுக்கு கோபம் வந்து ஆயிசாவைத் தாக்கியிருக்கிறார் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. யாரு கண்டா எல்லாம் அந்த முகம்மதல்லாவுக்கே வெளிச்சம்.

இனியவன்....

Anonymous said...

pls change font coluer

SAGODHARAN said...

முஹம்மதின் மரணம் கறிதுண்டில் முடித்து வைக்கப்பட்டது என்பது உண்மை! அதே சமயத்தில் இவர்கள் ஹதீதை இந்தளவுக்கு பின்பற்றுகிறார்கள் என்றால் அதில் உள்ள விஷயங்கள் ஒன்று உண்மையாக இருக்க வேண்டும் அல்லது முஹம்மதின் பெருமையை உலகறிய வைக்க கிறித்தவர்கள் பண்ணும் மேடை நாடகம் போல, இல்லாததை இருப்பதாக காண்பித்து இருக்க வேண்டும்.ஏனென்றால் அனஸ் ரழி கூறுகிறார்கள் :நபி ஸல் அல்லாஹ்விடம் சென்றடையும் வரை மெல்லிய ரொட்டியை அவர்கள் பார்த்ததாக எனக்கு தெரியாது.பொறித்த ஆட்டுக்கறியை நபி ஸல் சுவைத்ததேயில்லை. என்றுள்ளது புஹாரியில். மேலும் கண்மணி நாயகம் வசதியான வாழ்க்கை வாழவில்லை என்பதற்கு எல்லோரும் இதனையே,, இன்னும் இதைப்போலவே கூறுவார்கள். மேலும் ஆயிஷா ரழி கூறுகிறார்கள் :நாங்கள் இரண்டு மாதங்களில் மூன்று பிறைகளை பார்த்து விட்டோம்.நபி ஸல் அவர்களின் வீடுகளில் எதுவும் சமைக்கப்படவில்லை மேலும் பேரிதம்பழங்களையும் தண்ணீரையும் உண்டு வாழ்ந்தோம் என்று ஆயிஷா கூறுகிறார்கள் இதைபோன்ற பல சம்பவங்கள் வாயை கட்டி வயித்தை கட்டி வறுமையான வாழக்கை வாழ்ந்ததாக கூறுகிறார்கள். ஆனால் அன்னாரது சங்குக்கு காரணமோ நபி ஸல் அவர்கள் விரும்பி சாப்பிடும் தொடைக்கறி என்று கதைக்கு மெருகேற்றுகிறது. ஒரு வேலை ,விருந்து என்பதால் சாப்பிட்டு இருப்பாரோ என பார்த்தல் கண்மணி பஞ்ச கோலத்தில் இருந்ததை கூறியவர்கள் நம் தெரு பிச்சைகாரர்களைவிட படு மோசமாக வெறும் வயிற்றில் இருந்ததாக கூறுவதுதான் வேடிக்கை! ஏனிந்த கோலம்! யார் சாப்பிட வேண்டாம் என்று சொன்னது? ஒரு வேளை சாகும் வரை பட்டினிதானா? இப்படி இருந்துதான் எளிமையை போதிக்க வேண்டுமா? யூதனின் உடமைகள்,கொள்ளையடித்த செல்வங்கள் என்ன ஆனது? வேலைக்கு சென்று கொண்டிருந்த துரத்தப்பட்ட வணிகரின் திறமைகள் என்ன ஆனது? கன்னுமனிக்கு எவனும் வேலை தரலையா? உழைத்து மார்க்கத்தை பரப்ப வேண்டாம் வெறும் ஆடு,ஒட்டகம் கட்டிக்கொண்டு காலத்தை ஓட்ட வேண்டாம் என்று ஏதும் வஹி வந்ததா?
இத்தனை மனைவிகளை எப்படி சமாளித்தார்?(சாப்பாட்டுக்கு சொன்னேன்) இப்படி பல கேள்விகள் தோன்றிய வண்ணமாய் உள்ளது,. முஹம்மதின் மரணம் இந்த விதத்தில்தான் முடிந்ததென்று உலகமே பறைசாற்றி கொண்டிருக்கையில் சோதனை மன்னன்,சாதனை கண்ணன்,சிந்தனை சிற்பி,சயனைடு குப்பி அரஹ்மான் @ அல்லா மட்டும் உன்னை மனிதகரங்களின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பேன் என்று எதுக்கு உளறினான்? என்பதுதான் தெரியவில்லை!!

ஆர்ய ஆனந்த் said...

@ சிவப்பு குதிரை,

//ஆர்ய அனந்து//
உங்களின் கேள்விதான் எனக்கும் ..தாய் ஆயிசா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு உடனே வஹி இறக்கி பதில் சொல்லி இருக்கலாமே அதுக்கு ஏன் ஒரு மாதம் காலம் காத்து இருந்து வஹியை இறக்க வேண்டும்.ஒரு வேளை ஆயிசாவின் இரத்ததை லாப்பில் கொடுத்து செக்பண்ணி சொன்னாரோ ..... //

முஹம்மதின் தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் வஹி இறக்கும் அல்லாஹ் ஆயிஷா விவகாரத்தில் ஒரு மாதத்திற்க்குமேல் காத்திருந்து ஆயிஷா கர்ப்பம் தரிக்கவில்லை என்று தெளிவான பிறகே முஹம்மதுக்கு வஹி இறக்கினார். ஏனென்றால் முஹம்மதுக்கு எது தெரியாதோ அது எல்லாம் அறிந்த அல்லாஹ்வுக்கும் தெரியாது, முகம்மதுவுக்கு எது தெரியுமோ அது மட்டுமே அல்லாஹ்வுக்கும் தெரியும். இது தெரியாமல் இருப்பதற்கு நாம் என்ன மூமின்களா?

ஆர்ய ஆனந்த் said...

@ சகோதரன்,

முகம்மதுவும் அவருடைய கைத்தடிகளான அவருடைய தோழர்களும் எந்த வேலையும் பார்க்காமல் வெட்டியாக இருந்ததால் அவர்கள் வறுமையில் இருந்தனர். அந்த கால கட்டத்தில் அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர். இதைதான் முஸ்லிம்கள் முஹம்மதின் எளிமை என்றெல்லாம் பெருமை பேசுகின்றனர். மேலும் முஹம்மது பல மன நோய்களால் பீடிக்கப்பட்டு இருந்தார். அதில் ஒரு மன நோய் Obsessive Compulsive Disorder(OCD). இந்த மன நோயின் காரணமாக முஹம்மது, எளிமையான உணவு, உடை, படுக்கை, இரவினில் நீண்ட நேரம் தொழுதல், பற்பல சடங்குகள் போன்றவைகளின் மூலம் தன்னையே வருத்திக்கொள்ளும் பழக்கம் கொண்டவராக இருந்தார். இது முஸ்லிம்களுக்கு பெருமையான விஷயமாக இருக்கிறது. ஆனால் இது ஒரு மன நோய்.

ஆனால், அதே சமயம் முகம்மதுவுக்கு பணத்தாசையும் பொருளாசையும் நிறையவே இருந்தது. இல்லையென்றால் அவர் மிஸ்டர் 20 % ஆக இருந்து தன்னுடைய எல்லா கொள்ளையிலும் 20 % ஐ அமுக்காமல் இருப்பாரா? அல்லது யூதர்களின் செழிப்பான பதக் கிராமம் முழுவதையும் தனக்கு மட்டுமே உரியது என்று கூறி தன்னுடன் கொள்ளைக்கு வந்த மூமின்களுக்குதான் நாமம் போடாமல் இருந்திருப்பாரா?

ஆர்ய ஆனந்த் said...

@ சகோதரன்,

//...முஹம்மதின் மரணம் இந்த விதத்தில்தான் முடிந்ததென்று உலகமே பறைசாற்றி கொண்டிருக்கையில் சோதனை மன்னன்,சாதனை கண்ணன்,சிந்தனை சிற்பி,சயனைடு குப்பி அரஹ்மான் @ அல்லா மட்டும் உன்னை மனிதகரங்களின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பேன் என்று எதுக்கு உளறினான்? என்பதுதான் தெரியவில்லை!! //

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அல்லாஹ்வின் வண்டவாளத்தை இப்படியா தண்டவாளத்தில் ஏற்றுவது?

மனித கரங்களின் தீங்குகளில் இருந்து உன்னை பாதுகாப்பேன் என்று அல்லாஹ் உறுதி அளித்திருந்தாலும் முகம்மதுவுக்கு அதில் எல்லாம் சுத்தமாக நம்பிக்கை இல்லை. பின்னே இருக்காதா? அல்லாஹ் தான் யாரென்று முஹம்மதுக்கு நன்றாக தெரியுமே. அதனால்தான் தான் கொள்ளைக்கு போகும்போதெல்லாம் முஹம்மது தன்னை பாதுகாத்துக்கொள்ள இரண்டு கவச உடைகளை ஒன்றின்மேல் ஒன்று அணிந்து கொண்டு தன்னை சுற்றிலும் பாதுகாவலர்களை வைத்துக்கொள்வார். அவர் எந்த தாக்குதலிலும் நேரிடையாக எவரோடும் சண்டை போட்டதில்லை. தன்னுடைய கைத்தடிகளான மூமின் கொள்ளையர்களை முன்னிறுத்தி தாக்குதலுக்கு உத்திரவு கொடுப்பார். ஆனால் இவர் மட்டும் அவர்களுக்கு பின்னால் மிகவும் பாதுகாப்பாக இருப்பார். அப்படிப்பட்ட கோழை அவர்.

தஜ்ஜால் said...

நன்றி ஆர்ய ஆனந்த்,
எனக்கும், நண்பர்களுக்கும், தெளிவான விளக்கங்களை அளித்துள்ளீர்கள்.
//ஆயிஷாவின் நடத்தை குறித்த மூமீன்களின் குற்றசாட்டினால் முஹம்மதின் மானம் போய்விட்டது. அதை எப்படி போக்குவது? அதற்கு ஒரே வழி ஆயிஷா தூய்மையானவர் என்று வழக்கம்போல அல்லாஹ்வை துணைக்கு அழைத்து அறிவித்துவிடுவதுதான்.//
நிச்சயமாக, அல்லாஹ்வின் பெயரில் குர் ஆன் வசனங்ககளைக் கூறிக்கொள்வது ஒரே கல்லில் இரண்டுமாங்காய்தான்

தஜ்ஜால் said...

@இனியவன்,
///ரமலான் மாதத்தில் பிரார்த்தனை செய்தால் உடனே அல்லா ஏற்றுக் கொள்வானாமே எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்./// நான் தஜ்ஜாலாக உருமாறியதே இதைப்போன்றதொரு ரமலான் மாதத்தில்தான்

தஜ்ஜால் said...

@சகோதரன்
//சோதனை மன்னன்,சாதனை கண்ணன்,சிந்தனை சிற்பி,சயனைடு குப்பி அரஹ்மான் @ அல்லா மட்டும் உன்னை மனிதகரங்களின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பேன் என்று எதுக்கு உளறினான்? என்பதுதான் தெரியவில்லை!!// எங்கிருந்து கிடைத்தது இப்படியொரு வர்ணனை? சிரிக்காமல் இருக்க முடியவில்லை. வாழ்த்துக்கள்.

தஜ்ஜால் said...

@சிவப்புக்குதிரை
ஆயிஷா அவரது திருமணத்தின் பொழுதுதான் குழந்தை. வளர்ந்தபிறகு அவர் ஆடிய விளையாட்டுக்கள் குழந்தைத்தனமானவைகள் இல்லை.

SAGODHARAN said...

சகோதர தோழர்கள் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்
வெறும் ஹதீதை மட்டும் எடுதுக்குக்கொண்டு நாம் ஆய்வு செய்வதாக எண்ணி விடகூடாது!
ஏனென்றால் அந்த காலத்து புதுமை செய்திகளுடைய லட்சணம் என்னவென்று நமக்கு தெரியும்!!
கழுதை,நாய்,கரித்துண்டு,பாறாங்கல்லு, ஆரம்பித்து மரம்,மன்சட்டி வரை பேசியதாக சாதாரண மனிதரில்லை ரஹ்மாதுல்லாஹி அலைஹீ பதிவு செய்திருக்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்ன வென்றால் பகுத்தறிவு மார்க்கம் என இயம்புகின்றீர்களே எனக்கேட்டால்,, அடுத்த பதில் ஹதீதில் நல்லதும் உண்டு,அதை மறுக்கும் முட்டாள் தனமும் உண்டு நீங்கள் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்பார்கள்!!. எழுதியவன் கிறுக்கு கோமாளி என்றாலும், நீ புத்திசாலியாக படித்துக்கொள் என்று பொருள் தரும்படி கூறுவார்கள். பதிவு செய்தவர் பதிவு செய்யும்பொழுதே இப்படி நடந்திருக்க வாய்பிருக்காது என்பதை உணர்ந்து பதிவு செய்ய வேண்டுமே, தவிர பிற்காலத்தில் மனிதகுலம் பின்பற்றும் ஒன்றில், வரும் சமுதாயம் அது குப்பனோ,சுப்பனோ இஸ்லாத்தை தழுவ விரும்பினால் கலிமா சொல்லி,பின் நபி வழியை அடைய விரும்பினால்,ஹதீதை உக்காந்து படிக்கும் ஒன்றில் இப்படி எழுத வேண்டுமா?!! அப்படி விளக்கம் தேவையென்றால்
மார்க்க அறிஞர்களிடம் கேட்டு அலைய வேண்டும்!! இதில் நான்தான் சரியான மார்கவாதி,நாந்தான் சரியான மார்க்கவாதி என்று முன்டியடித்துக்கொள்ளும் சண்டை வேறு! அடப்பாவிகளா!! தெளிவான மார்க்கம் என்று சொன்ன அல்லாஹ்வை போட்டு காலில் மிதிப்பது நீங்களா? இல்லை நாங்களா?
நல்ல மனநிலையில் உள்ள மனிதன் இந்த மாதிரி ஹதீதை பதிவு செய்வானா?
மூமின்களே கொஞ்சம் சிந்தித்து பாருங்களேன்!!
நாய்களை கொல்ல சொல்லி உத்தரவு,பள்ளிகளை கொல்ல சொல்லி உத்தரவு என்று பைத்தியக்காரத்தனமான உளறல்கள் எதில் உள்ளது என்று உங்கள் மார்க்க மன்னாங்கட்டிகளிடம் கேளுங்கள் ,அப்போது தெரியும் நான் சொல்லும் நிலையில் அவர்கள் உள்ளார்களா இல்லையா என்று...
நான் சொல்ல வந்த செய்தி இதுதான்,சகோதரர்கள் குர்ஆனில் உள்ள தகிடுதத்தங்களை வெளிக்கொணர முன் வர வேண்டும்.... அப்போதுதான் இவர்களின் அறிவியல் பூதம் ஓடும்!! குர்ஆனில் உள்ள மனித உரிமை மீறலை போட்டுடைக்க வேண்டும்!
தஜ்ஜால் அதற்க்கான பதிவு மற்றும் கட்டுரைகளை பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன்!

ஆர்ய ஆனந்த் said...

@சகோதரன்,

//சகோதர தோழர்கள் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்
வெறும் ஹதீதை மட்டும் எடுதுக்குக்கொண்டு நாம் ஆய்வு செய்வதாக எண்ணி விடகூடாது!..//

ஹதீத்கள் மற்றும் சீறா ஆகியவை இல்லாமல் முஹம்மது என்ற நபர் உண்மையிலேயே வரலாற்றில் வாழ்ந்தாரா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் குரானை வழங்கிய மனிதரின் வாழ்க்கை பற்றிய தகவல்களும் மிக முக்கியமானதே. இந்த மனிதர் வாழ்ந்த முறையும், நடத்தையும், குணங்களும் அவர் வழங்கிய குரானின் நம்பகத்தன்மையை நிர்ணயிப்பதற்கு மிக அவசியமானது. எனவே ஹதீதையும் சீறாவையும் இஸ்லாத்தை எடை போட நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டும் குரானுக்கு நேரிடையாக தொடர்புடையவைகள். இவற்றை புறக்கணித்து எவரும் இஸ்லாத்தை முழுவதுமாக புரிந்துகொள்ள முடியாது.

முஹம்மது என்பது புகழுக்குரியவர் என்ற பட்ட பெயர் மட்டுமே. முஹம்மது என்ற வார்த்தை குர்ஆனில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே கூறப்பட்டுள்ளது. முஹம்மது என்ற பட்ட பெயரால் அழைக்கப்பட்டவரின் உண்மையான பெயர் வேறாக இருக்க வேண்டும். அவருடைய உண்மையான பெயர் கோதம் என்று தெரிய வருகிறது. அவர் தன்னுடைய 52 வது வயதில் மதினாவில் குடியேறும்வரை இந்த பெயராலேயே அழைக்கப்பட்டார். தன்னை மட்டுமே உயர்வாக எண்ணும் நார்சிச்சிஸ்ட் ஆக இருந்ததால் அவர் தன்னை புகழுக்குரியவராக மற்றவர்கள் அழைக்க வேண்டும் என்று விரும்பி, தன் ஜிப்பா பைக்குள் இருக்கும் அல்லாஹ் தன்னை முஹம்மது என்று அழைப்பதாக குர்ஆனில் வசனங்களை வெளிப்படுத்தி தன் ஆசையை பூர்த்தி செய்து கொண்டார்.

நீங்கள் கூறியபடி, குரானின் அபத்தங்களை விளக்கி கட்டுரைகளை வெளியிடுவது இன்னும் சிறப்பாக இருக்கும். எனக்கு போதுமான நேரம் கிடைக்கும்போது இந்த வகையில் ஒரு சில கட்டுரைகளை எழுதி வெளியிடுவேன்.

தஜ்ஜால் said...

@சகோதரன்
//வெறும் ஹதீதை மட்டும் எடுதுக்குக்கொண்டு நாம் ஆய்வு செய்வதாக எண்ணி விடகூடாது! ஏனென்றால் அந்த காலத்து புதுமை செய்திகளுடைய லட்சணம் என்னவென்று நமக்கு தெரியும்!!// உங்களது கோபம் நியாயமானதுதான். எனினும் ஹதீதுகளை அவ்வளவு எளிதாக நாம் ஒதுக்கிவிட முடியாது. உதாரணத்திற்கு, கிருஸ்துவர்களுடனான விவாதத்தில், குர் ஆனில் சொல்லப்படாத வஹீகளும் உண்டு, அவைகளை ஹதீதுகளில் மட்டுமே காணமுடியும் என்று பீஜே கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இதுதான் இஸ்லாமின் நிலை. ஹதீதுகளைக் கைவிட்டால் இஸ்லாமியர்கள் சிறுநீர்கூட கழிக்க முடியாது. நாம் குர் ஆனின் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டும்பொழுது அவர்கள் ஒதுக்குமிடம் ஹதீதுகளாக மட்டுமே இருக்கமுடியும். எனவேதான் சமீபத்தைய பதிவுகளில் ஹதீதுகளை மையப்படுத்தினேன்.

நண்பர் சகோதரனனின் வேண்டுகோளை கவனத்தில் கொள்கிறேன் இனிவரும் பதிவுகளில் குர் ஆனையும் மையப்படுத்துகிறேன்.

சகோதரன் said...

நன்றி தஜ்ஜால் !
என்னுடைய அறிவுக்கண்ணை திறந்தவர்களில் முக்கிய இடத்தில இருக்கின்றீர்கள்!
20 வருடங்களாக ஏமாற்றிய இந்த குரானையும்,ஹதீதையும் பார்த்து கோபப்படவில்லை,
இதனையெல்லாம் தெரிந்து கொண்டு இளைஞர்களை வழிகெடுத்து, அல்லாவின் வழியில் உயிரை தியாகம் பண்ணும்போது சொர்க்கம் அடைவீர்கள் என்று மூளைச்சலவை செய்து ஒரு கூட்டமல்ல பல கூட்டமாக அலைந்துகொண்டிருக்கிறார்கள்!
அவர்களை பார்த்தால்தான் கோபம் வருகின்றது!

SAGODHARAN said...

இவர்களுடைய விவாதங்களின் லட்சணத்தை நானும் பார்த்திருக்கிறேன்!
கிருதவர்களிடம் விவாதம் செய்து நாங்கள் வென்றுவிட்டோம் என்று மார்தட்டி,சத்திய மார்க்கம் இதுதான் என்று முத்திரை தமக்குத்தாமே அடித்துக்கொண்ட சங்கதியை!
கிருத்தவர்கள் பிடிவாதம் பிடிக்கிற முட்டாள்கள் என்றால்,முஸ்லிம்கள் முரட்டு முட்டாள்கள்!
இரு முட்டாள்களுக்கிடையில் எதை அறிவுப்பூர்வமென்று சொல்ல?
நாத்திக விவாதமும் அப்படிதான், பெரியார் திகாவுக்கு நாற்றமடிக்கும் இஸ்லாமிய நல்லொழுக்க மாண்புகள் தெரியவில்லை! தப்பித்தார்கள் நம் சஹாபாக்கள்.
இல்லையென்றால் அப்போதே தெரியவந்திருக்கும் மூமின்களின் பரிதாப நிலை!
சொல்ல முடியாது, P J என்ற காட்டுக்கிறுக்கன் வாய்க்கு பயந்து போதும்டா சாமி நானும் கலிமா சொல்றேன்னு போனாலும் ஆச்சரியபடரதுக்கில்ல!
வாய் ஓயாம பேசி கொன்று விடுவதில் ஹிந்தி கல்நாயக் ஜாகிர் நாயக்கும்,தமிழ் வில்லாதி வில்லன் ஜைனுலாபுதினும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர் இல்லை!!

ஆர்ய ஆனந்த் said...

தஜ்ஜால்,

//..குர் ஆனில் சொல்லப்படாத வஹீகளும் உண்டு, அவைகளை ஹதீதுகளில் மட்டுமே காணமுடியும் என்று பீஜே கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இதுதான் இஸ்லாமின் நிலை. ஹதீதுகளைக் கைவிட்டால் இஸ்லாமியர்கள் சிறுநீர்கூட கழிக்க முடியாது. ..//

நீங்கள் சரியாக சொன்னீர்கள். தவ்ஹீத் ஜமாத்தாரை பொறுத்தவரை ஹதீத்களும் அல்லாஹ்வின் வஹீயே. அதாவது குரானை போன்று, முஹம்மதின் அனைத்து செயல்களும் சொற்களும் அல்லாஹ் இறக்கிய வஹீ எனும் வெளிப்பாடு. இன்னும் விளக்கமாக சொல்வதென்றால், முஹம்மது செய்த படுகொலைகள், கற்பழிப்புகள், வழிப்பறி கொள்ளைகள், சூறையாடல்கள், குழந்தையுடன் பாலுறவு, மருமகள் மீது காம இச்சை கொண்டு அவளை மணந்து கொண்டு பாலுறவு வைத்துக்கொண்டது போன்ற படுபாதக, அருவருப்பான செயல்கள் மட்டுமல்லாமல், அவர் சாப்பிட்டது, தண்ணீர் அருந்தியது, மூக்கு சிந்தியது, சிறுநீர்/மலம் கழித்தது, காற்று பிரித்தது, மனைவிகளோடு உடலுறவு கொண்டது, உட்கார்ந்தது, எழுந்தது, நடந்தது, உடை அணிந்தது, தாடி வைத்தது, மீசை கத்தரித்தது, அடி முடியை மழித்தது, தலைப்பாகை அணிந்தது, கனவுகள் கண்டது(ஆயிஷா மற்றும் ஜைனப் உடனான கிளுகிளுப்பு கனவுகள் உட்பட) போன்ற அனைத்து செயல்களும் மனித குலம் நேர்வழி அடைந்து சொர்க்கத்திற்கு சென்று மது குடித்துக்கொண்டும், கனிகளை சுவைத்துக்கொண்டும் பட்டாடைகளை அணிந்துகொண்டு தங்க மாளிகைகளில் ஆண்களும் பெண்களும் உல்லாசமாக வாழவும், ஆண்கள் மட்டும் சதாகாலமும் அழகிகளோடு காம களியாட்டத்தில்(பெண்களுக்கு இதில் இடமில்லை) ஈடுபடவும் அல்லாஹுதஆலா இறக்க்...கிய வஹீகள்.

ஆஹா இதுவல்லவோ மதமல்ல மார்க்கம்! இப்படியொரு உன்னத மதத்தை/மார்க்கத்தை உலகில் வேறு எங்காவது நாம் காண முடியுமா?

ஆர்ய ஆனந்த் said...

சகோதரன்,

//நன்றி தஜ்ஜால் !
என்னுடைய அறிவுக்கண்ணை திறந்தவர்களில் முக்கிய இடத்தில இருக்கின்றீர்கள்!//

என் அறிவுக்கண் திறக்க காரணம் அலி சினாவின் கட்டுரைகளும் முஸ்லிம் அறிஞர்களோடு அவர் நடத்திய விவாதங்களுமே. அவர் ஆயிரக்கணக்கானவர்களின் கண்களை திறந்துள்ளார்/திறந்து கொண்டு இருக்கிறார்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னால், தமிழ் முஸ்லிம் ஒருவர் அலி சினாவுக்கு ஒரு கடிதம் எழுதி அது அலியின் வலை தளத்திலும் வெளியிடப்பட்டது. அந்த கடிதத்தில், தான் முகம்மதை பற்றிய உண்மைகளை அறிந்து
மிகுந்த மன உளைச்சலும் வேதனையும் அடைந்து தூக்கம் இல்லாமல் தவிப்பதாகவும் தான் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அதனால் தன்னுடைய குடும்பத்தினர் தன்னை தஜ்ஜால் என்று அழைப்பதாகவும் கூறி இருந்தார். அந்த தஜ்ஜால் தான் இந்த தளத்தை நடத்தும் தஜ்ஜால் தானா என்று எனக்கு தெரியவில்லை. அந்த தஜ்ஜாலின் கடிதத்தில் கம்யூனிச வாடை தெரியவில்லை. ஆனால் இந்த தஜ்ஜாலோ கம்யூனிஸ்ட் ஆயிற்றே.

நம் அறிவுக்கண் திறந்தது மட்டும் போதாது. மற்றவர்களின் அறிவுக்கண்களை திறக்கும் தார்மீக கடமையும் நம் அனைவர்மீதும், முக்கியமாக முன்னாள் முஸ்லிம்கள்மீது உள்ளது.

ஆர்ய ஆனந்த் said...

சகோதரன்,

//..20 வருடங்களாக ஏமாற்றிய இந்த குரானையும்,ஹதீதையும் பார்த்து கோபப்படவில்லை,
இதனையெல்லாம் தெரிந்து கொண்டு இளைஞர்களை வழிகெடுத்து, அல்லாவின் வழியில் உயிரை தியாகம் பண்ணும்போது சொர்க்கம் அடைவீர்கள் என்று மூளைச்சலவை செய்து ஒரு கூட்டமல்ல பல கூட்டமாக அலைந்துகொண்டிருக்கிறார்கள்!
அவர்களை பார்த்தால்தான் கோபம் வருகின்றது!//

இஸ்லாம் பொய்கள் எனும் சீட்டு கட்டுகளை கொண்டு கட்டப்பட்டுள்ள கோபுரம். அது பிரமாண்டமான கோபுரமாக தோன்றினாலும் அதன் அடித்தளம் மிக மிக பலவீனமானது. ஒரே ஒரு சீட்டுக்கட்டை உருவினாலே போதும். அந்த பிரமாண்டமான கோபுரம் அடியோடு சரிந்துவிடும். இஸ்லாம் வளர்ந்ததும் நீடித்திருப்பதும் பயங்கரவாதம் மற்றும் பொய்கள்(தக்கியா) என்ற இரண்டு செயல் தந்திரங்கள் மூலம் தான். இவை இரண்டே இஸ்லாத்தின் இரண்டு கால்கள். அவற்றை நாம் உண்மையை கொண்டு வெட்டி எறியவேண்டும். நாம் முஸ்லிம்களை போல வன்முறையில் ஈடுபடாமல், இஸ்லாத்தையும் அதை உருவாக்கிய முஹம்மதையும் பற்றிய உண்மைகளை உலக மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு அமைதியான அதேசமயம் பாதுகாப்பான முறையில் அம்பலபடுத்தினாலே போதும். இஸ்லாம் என்ற சீட்டுக்கட்டு தானாகவே சரிந்து விழும்.

ஆர்ய ஆனந்த் said...

சகோதரன்,

//...நாத்திக விவாதமும் அப்படிதான், பெரியார் திகாவுக்கு நாற்றமடிக்கும் இஸ்லாமிய நல்லொழுக்க மாண்புகள் தெரியவில்லை! தப்பித்தார்கள் நம் சஹாபாக்கள்.
இல்லையென்றால் அப்போதே தெரியவந்திருக்கும் மூமின்களின் பரிதாப நிலை!
சொல்ல முடியாது, P J என்ற காட்டுக்கிறுக்கன் வாய்க்கு பயந்து போதும்டா சாமி நானும் கலிமா சொல்றேன்னு போனாலும் ஆச்சரியபடரதுக்கில்ல!...//

தப்பித்தது தாவா பணியில் உள்ள சஹாபாக்களா? என்ன முஸ்லிம்களின் அரிச்சுவடியை மறந்து இப்படி பேசுகிறீர்கள்? முஹம்மதின் அழகிய முன்மாதிரியை பின்பற்றுபவன் தானே உண்மையான, சாலிஹான(நல்ல) முஸ்லிம்? நாற்றமடிக்கும் இஸ்லாமிய நல்லொழுக்க மாண்புகளை பெரியார் திகவினர் விவாதத்தின்போது எடுத்து சொல்லாததால் தானே அவர்கள் முஸ்லிம்களிடமிருந்து தப்பித்தார்கள். சொல்லி இருந்தால், முஹம்மதின் அழகிய முன்மாதிரியை பின்பற்றி மூமின்கள் அவர்களை படுகொலை செய்து இருக்க மாட்டார்களா என்ன?

ஆர்ய ஆனந்த் said...

சகோதரன்,

//...வாய் ஓயாம பேசி கொன்று விடுவதில் ஹிந்தி கல்நாயக் ஜாகிர் நாயக்கும்,தமிழ் வில்லாதி வில்லன் ஜைனுலாபுதினும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர் இல்லை!! //

இவர்கள் இருவரும் இஸ்லாமிய வியாபாரம் செய்யும் கபட வேடதாரிகள். முஸ்லிம்களிடம் இருந்து பணத்தை சுருட்டும் வித்தை தெரிந்தவர்கள். விஷயம் அறிந்தவர்கள் ஜாகிர் நாயக்கை ஜோக்கர் என்று அழைக்கிறார்கள். அவர் உண்மையிலேயே பெரிய ஜோக்கர் தான். பீ ஜே வோ காட்டுத்தனமாய் உளறுவதில் முனைவர் பட்டம் வாங்கியவர். முன்னவர் ஹாலிவுட் ரேஞ்சுக்கு உலக மார்கெட்டை பிடிக்க அயராது தாவா செய்கிறார். பின்னவரோ டோலிவுட் ரேஞ்சுக்கு தமிழர்களின் மார்கெட்டை பிடிக்க இஸ்லாத்தை விளக்கமாக வெளக்கிகொண்டே இருக்கிறார். இவர் ஹதீதையும் குரானையும் முஹம்மதுக்கே விளங்க வைக்க கூடியவராயிற்றே.

Unknown said...

வணக்கம் ஆர்ய ஆனந்த்,

//இவர் ஹதீதையும் குரானையும் முஹம்மதுக்கே விளங்க வைக்க கூடியவராயிற்றே//

உண்மை நண்பரே இப்பொழுது கூட தம் விளக்கம் என்ற பெயரிலும்,முன்னோர்கள் சரியாக அரபியை விளங்கவில்லை என்ற பெயரிலும் புதுப்புது அர்த்தம் கர்ப்பிக்கும் நிலையில் உள்ளார். எடுத்துக் காட்டாக "சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையே" என்ற வார்த்தைக்கு சாணத்தை(செரிக்கப்பட்ட உணவு) சத்துணவாக மாற்றிவிட்டார். அதுபோல் வெறும் களிமண்ணை சத்துள்ள களிமண்ணாக மாற்றிவிட்டார். கேட்டால் மூலத்தில் அப்படித்தான் இருக்கின்றது என மழுப்புகிறார். உண்மையை யார் அறிவாரோ???

இனியவன்...

தஜ்ஜால் said...

@ நண்பர் ஆர்ய ஆனந்த்,
//அந்த தஜ்ஜால் தான் இந்த தளத்தை நடத்தும் தஜ்ஜால் தானா என்று எனக்கு தெரியவில்லை.// அதே தஜ்ஜால்தான். நான் மிக்குழப்பமான காலகட்டத்தில் இருந்தபொழுது Dr.அலிசினா அவர்களின்ன் கட்டுரைகளும், விவாதங்களும் தெளிவைத்தந்தன. நான் என்றென்றும் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். இத்தளத்தை இயக்குவதில் எனது பங்கும் சிறிதளவு இருக்கிறது என்று நினைக்கிறேன்.
//ஆனால் இந்த தஜ்ஜாலோ கம்யூனிஸ்ட் ஆயிற்றே.// எனது எழுத்தில் கம்யூனிஸ வாடை தெரிகிறதா? நான் கம்யூனிஸ கொள்கையில் உள்ளவன் அல்ல. அதற்காக அதன் எதிரியுமல்ல.

SAGODHARAN said...

இந்த இடுகைக்கான பதில் இன்று வெளியிடப்படுகிறது,,,, என்று கூறும் இஹ்சாஸ் என்ன ஆனார்?
ஒருவேளை இரண்டுவிதமான பொருள் தரும் குரானை ,
கெட்ட எண்ணத்தோடு படித்தால் அவர்களை வழிகெடுக்க தவறான அர்த்தத்தை புகுத்துவான் ஷைத்தான் !,
அவர்கள் போகும் பாதையிலேயே போகவிட்டு தட்டழியவைப்பான் அல்லா (இதுக்கு ஷைத்தானே தேவலை)
மேலும் அப்படிப்பட்ட நபர்கள் உக்காந்திருக்கும் சபையில், அவர்கள் அல்லாஹ்வை கிண்டல் செய்யும் பேச்சிலிருந்து விடுபட்டு,அடுத்த பேச்சை பேசும் வரை அந்த சபையில் அமர வேண்டாம்!! என்று அண்ணல் நபியை கிண்டல்பண்ணிய குறைஷி ஷைத்தான்களுக்கு அல்லா இறக்கிய வசனத்தின்படி, நம்மை விட்டு விலகி தள்ளி உக்காந்து கொண்டாரா?

ஆர்யா ஆனந்த் said...

நண்பர் இனியவன்,

//உண்மை நண்பரே இப்பொழுது கூட தம் விளக்கம் என்ற பெயரிலும்,முன்னோர்கள் சரியாக அரபியை விளங்கவில்லை என்ற பெயரிலும் புதுப்புது அர்த்தம் கர்ப்பிக்கும் நிலையில் உள்ளார். எடுத்துக் காட்டாக "சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையே" என்ற வார்த்தைக்கு சாணத்தை(செரிக்கப்பட்ட உணவு) சத்துணவாக மாற்றிவிட்டார். அதுபோல் வெறும் களிமண்ணை சத்துள்ள களிமண்ணாக மாற்றிவிட்டார். கேட்டால் மூலத்தில் அப்படித்தான் இருக்கின்றது என மழுப்புகிறார். உண்மையை யார் அறிவாரோ???//

முஸ்லிம்கள் செய்துள்ள குர்ஆன் மொழி பெயர்ப்புகள் அனைத்திலுமே குர்ஆனில் ஆங்காங்கே உள்ள வக்கிரமான, அருவருப்பான, கேவலமான வசனங்களுக்கு தேன் தடவி இனிப்பு ஊட்டி அவற்றை ஏற்கத்தக்கதாக காட்டும் முயற்சி நடந்துள்ளது. இது அல்லாமல் பிராக்கெட் போடும் வேலை வேறு தனி. இப்படி பல தகிடுதத்த வேலைகளை முஸ்லிம்கள் மொழிபெயர்ப்பில் செய்தும்கூட அந்த மொழிபெயர்ப்புகளும் குரானை உலகத்திலேயே மிக மோசமான புத்தகமாகவே காட்டுகின்றன. இந்த மொழி பெயர்ப்பாளர்கள் ஒரு வகையினர். எ.கா. யூசுப் அலி, ஜான் டிரஸ்ட், மர்மடுக் பிக்தால், முஹம்மது அலி, ஷேர் அலி(ஆங்கிலம்), அப்துல் ஹமீது, நிஜாமுதீன் மன்பஈ(தமிழ்) போன்றவர்களின் மொழி பெயர்ப்புகள்.

சமீப காலமாக இன்னொரு வகையினர் தோன்றி உள்ளனர். இவர்கள் குர்ஆனில் அறிவியலை நுழைக்கவும் குரானின் கற்கால, காட்டுமிராண்டி வசனங்களுக்கு நாகரீக உலகின் விழுமியங்களை, அதின் பண்புக்கூறுகளை இட்டுக்கட்டி புது வியாக்கியானம் செய்பவர்கள். இதற்கு அவர்கள் மேற்கொள்ளும் தந்திரம், மோசடி என்னவென்றால், குரானின் அரபி வார்த்தைகளுக்கு தங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி புது புது அர்த்தங்களை கண்டுபிடிப்பதே. இவர்கள் குரான் வசனங்களை அதன் இலக்கணத்தை கண்டமேனிக்கி வளைத்து தங்களுடைய சொந்த பதவுரை, தெளிவுரை, பொழிப்புரை ஆகியவற்றையே மொழிபெயர்ப்பு என்று பித்தலாட்டம் செய்பவர்கள். எ.கா. தன்னை அல்லாஹ்வின் உடன்படிக்கை தூதர் என்று சுய பிரகடனம் செய்த ரஷாத் கலீபா மற்றும் அவருடைய சீடர் எடிப் யுக்செல் மற்ற இரண்டு பேருடன் கூட்டு சேர்ந்து செய்த ஆங்கில மொழிபெயர்ப்புகள். பீ.ஜெவின் தமிழ் மொழி பெயர்ப்பும் இந்த வகையில் சேரும்.

ஆர்யா ஆனந்த் said...


நண்பர் தஜ்ஜால்,

//அதே தஜ்ஜால்தான். நான் மிக்குழப்பமான காலகட்டத்தில் இருந்தபொழுது Dr.அலிசினா அவர்களின்ன் கட்டுரைகளும், விவாதங்களும் தெளிவைத்தந்தன. நான் என்றென்றும் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.//

நீங்கள்தான் அந்த நபர் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அப்பொழுது உங்களுடைய கடிதத்தை படித்தபோது நான் நெகிழ்ச்சியும், தமிழகத்திலிருந்து இப்படி ஒருவர் எழுதி இருக்கிறார் என்பதால் பரவசமும் மகிழ்ச்சியுன் அடைந்தேன். அப்பொழுதே நான் உங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள விரும்பினேன். சில காரணங்களால் அது முடியவில்லை. நீங்கள் அத்தோடு சும்மா இருந்துவிடாமல், இஸ்லாத்தை பற்றிய உண்மைகளை தமிழ் முஸ்லிம்களுக்கு எடுத்து கூறும் உன்னத பணியை செய்து வருகிறீர்கள். பாராட்டுக்கள்.

//எனது எழுத்தில் கம்யூனிஸ வாடை தெரிகிறதா? நான் கம்யூனிஸ கொள்கையில் உள்ளவன் அல்ல. அதற்காக அதன் எதிரியுமல்ல.//

உங்களுடைய பதிவுகளில் எங்குமே கம்யூனிச வாடை இல்லை. இந்த தளத்தின் முகப்பில் பாட்டாளி மக்களின் உயர்வுக்காக பல அமைப்புகளில் செயலாற்றுபவர்கள் என்று கூறப்பட்டிருப்பதால் நீங்களும் கம்யூனிஸ்டாக இருக்கலாம் என்று நினைத்துவிட்டேன். பாட்டாளி மக்களின் உயர்வுக்கு கம்யூனிசமே தீர்வு என்று நான் கருதவில்லை. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதையும் மற்ற பல கம்யூனிச கொள்கைகளையும் நான் ஏற்கவில்லை.

Unknown said...

சகோ.தஜ்ஜால்,

டாக்டர்.அலிசினாவின் கட்டுடைகளின் தமிழாக்கத்தை எந்த தளத்தின் மூலமாக அறிந்து கொள்வது. அவரின் தளம் அமீரகத்தில் கிடைப்பதில்லை தடை செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன். முடிந்தால் உதவவும் நன்றி..

இனியவன்....

தஜ்ஜால் said...

@ ஆர்ய ஆனந்த்,
//அபாயகரமான இஸ்லாத்தை அழிப்பதற்கு நம்முடைய சொந்த பொருளாதார அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படலாம் என்பது என் அபிப்பிராயம்.//உங்களது கருத்தை வழிமொழிகிறேன். //ஜனநாயகத்தை ஏற்கும் நபர்களை இஸ்லாத்திற்கு எதிரான போரில் உற்ற நண்பர்களாக ஏற்றுக்கொள்வார்களா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், என்னுடைய புனை பெயரில் உள்ள ஆர்ய என்ற சொல்லை நீக்கினால் என்னுடைய கட்டுரைகளை இந்த தளத்தில் வெளியிடுவதாக எனக்கு நிபந்தனை விதித்து எனக்கு சில மாதங்கள் முன்பு உங்கள் குழு உறுப்பினர்களிடமிருந்து மின்னஞ்சல் வந்தது.// நான் அனுப்பியுள்ள மின்அஞ்சல் கிடைத்ததா?
நண்பர் ஆர்ய ஆனந்த் இனியவனின் வேண்டுகோளை கவனிக்க வேண்டும்

ஆர்ய ஆனந்த் said...

இனியவன்,

//டாக்டர்.அலிசினாவின் கட்டுடைகளின் தமிழாக்கத்தை எந்த தளத்தின் மூலமாக அறிந்து கொள்வது. //

நண்பரே, அலி சினாவின் ஒரு சில கட்டுரைகளை அலி சினாவின் விசிறி என்ற நண்பர் தமிழில் மொழிபெயர்த்து அலியின் கீழ்க்கண்ட தமிழ் தளத்தில் வெளியிட்டுள்ளார் :

http://tamil.alisina.org/

ஒரு வருடத்துக்கு முன்பு, அலி சினாவின் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்கும் என் விருப்பத்தை நான் தெரிவித்தபோது, அற்புதங்கள்(Miracles) பிரிவில் உள்ள கட்டுரைகளில் வாக்கியங்கள் குறைவு என்பதால் முதலில் அவற்றை மொழிபெயர்த்து அனுப்பினால், தன்னுடைய தளத்தின் உட்தளமாக(sub domain) தமிழ் தளத்தை ஏற்படுத்துவதாக அலி சினா எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். நானும் இரண்டு கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்து அது அலியின் மேற்கூறிய தமிழ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மற்ற பல கட்டுரைகளையும் தமிழாக்கம் செய்ய மிக ஆவலாக உள்ளேன். அலி சினாவின் விசிறியும் நானும் அலியின் கட்டுரைகளை எங்களுக்குள் பிரித்துக்கொண்டு தமிழாக்கம் செய்ய திட்டமிட்டிருந்தோம். சில காரணங்களினால் நான் மொழிபெயர்ப்பது தாமதமாகிவிட்டது. ஆனால் அலி சினாவின் விசிறி அவர்கள், அலியின் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து வெளியிட்டு வருகிறார். தஜ்ஜால் போன்ற நண்பர்களும் அலியின் கட்டுரைகளை தமிழாக்கம் செய்ய வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

//அவரின் தளம் அமீரகத்தில் கிடைப்பதில்லை தடை செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன். முடிந்தால் உதவவும் நன்றி..//

ப்ராக்சி செர்வரை(proxy server) பயன்படுத்தி நீங்கள் அலி சினாவின் இணைய தளங்களை(alisina.org / faithfreedom.org) விஜயம் செய்யலாம்.

Unknown said...

நண்பர் ஆர்ய ஆனந்த்

தகவலுக்கு மிக்க‌ நன்றி சகோ.

இனியவன்...

சிவப்புகுதிரை said...

தோழர் ஆரிய ஆனந்த் @ தாங்கள் நமது தளத்தில் கட்டுரையிடுவதில் நமக்கு தடையேதும் இல்லை தற்பொழுது...தங்களின் பணி நமது தளத்துக்கும் தேவை..ஒன்றுப்பட்ட சேவை தான் வெற்றிக்கு வழிவகுக்கும்.இஸ்சுலாமும் மற்ற மதங்கள் போல் குப்பைதான் என்பதை வெளிப்படுத்துவோம்...மேலும் கம்யூனிசம் சம்மந்தாமாகா தாங்கள் வெளிதளத்தில் தாரலமாக விவாத்தித்துக்கொள்ளளாம் அதற்கு ஏதும் தடையில்லை இங்கு இஸ்சுலாம் சம்மந்தாக விவாதிப்பதே சாலசிறந்ததாக இருக்கும் என்பதே என் அவிப்பிராயம்.

தஜ்ஜால் said...

நண்பர் ஆர்ய ஆனந்த்,
இத்தளம் நாத்திகர்களுக்கானது, குறிப்பாக இஸ்லாமை எதிர்கொள்ளவே இது உருவாக்கப்பட்டது. தனிப்பட்ட அரசியல் பொருளாதார கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு நாம் ஒன்றிணைந்திருக்கிறோம். அதற்கென உள்ள தளங்களில் அவர்கள் தனிப்பட்ட தங்களது அரசியல் பொருளாதார கொள்கைகளை விவாதித்துக் கொள்ளட்டும். இங்கு அதற்கு நாம் இடம் தரவேண்டாம்.
உங்களது படைப்புக்களை வரவேற்கிறோம். வாருங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். //தஜ்ஜால் போன்ற நண்பர்களும் அலியின் கட்டுரைகளை தமிழாக்கம் செய்ய வருமாறு அன்புடன் அழைக்கிறேன்./// அலிசினா அவர்களின் “அன்ஃபால் என்ற கட்டுரையை மொழிபெயர்த்த பிறகுதான் /http://tamil.alisina.org/ என்ற தளம் இருப்பதையே அறிந்துகொண்டேன். அதில் “அன்ஃபால்” கட்டுரையைக் கண்டபிறகு ஏற்கெனவே ஒருவர் அதில் ஈடுபட்டிருக்கும் பொழுது, மேற்கொண்டு நாமும் அதையே தொடரவேண்டுமென்று விட்டுவிட்டேன். மேலும் ஆங்கிலத்தில் நான் நன்கு தேர்ந்தவனல்ல. ஆயினும் இஸ்லாம்பற்றிய அலிசினா அவர்களின் கருத்துக்களை எனது பதிவுகளில் கையாள்வதுண்டு.

ஆர்ய ஆனந்த் said...

@ சிவப்பு குதிரை,

//மேலும் கம்யூனிசம் சம்மந்தாமாகா தாங்கள் வெளிதளத்தில் தாரலமாக விவாத்தித்துக்கொள்ளளாம் அதற்கு ஏதும் தடையில்லை இங்கு இஸ்சுலாம் சம்மந்தாக விவாதிப்பதே சாலசிறந்ததாக இருக்கும் என்பதே என் அவிப்பிராயம். //

நண்பரே, இந்த தளத்தில் கம்யூனிசத்தை பற்றி விவாதிப்பது என் நோக்கமல்ல. இஸ்லாத்தையும் அதை தோற்றுவித்த முஹம்மதின் கோர முகத்தையும் அம்பலப்படுத்துவதில் தான் நம்முடைய கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதே என் கருத்தும்கூட.

ஆர்ய ஆனந்த் said...

@ தஜ்ஜால்,

//இத்தளம் நாத்திகர்களுக்கானது, குறிப்பாக இஸ்லாமை எதிர்கொள்ளவே இது உருவாக்கப்பட்டது. தனிப்பட்ட அரசியல் பொருளாதார கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு நாம் ஒன்றிணைந்திருக்கிறோம். அதற்கென உள்ள தளங்களில் அவர்கள் தனிப்பட்ட தங்களது அரசியல் பொருளாதார கொள்கைகளை விவாதித்துக் கொள்ளட்டும். இங்கு அதற்கு நாம் இடம் தரவேண்டாம்.//

இதை வழிமொழிகிறேன் ஒரு சிறிய திருத்தத்தோடு.

நாத்திக பிரச்சாரம் என்பது தனி. மற்ற மதங்களைபோல இஸ்லாமும் பொய் என்பதால் நாம் இஸ்லாத்தை எதிர்க்கவில்லை. மற்ற மதங்களை போல் அல்லாமல், இஸ்லாம் மட்டுமே உலக மேலாதிக்கத்தை குறிக்கோளாக கொண்டு, பயங்கரவாதத்தை தன் குறிக்கோளை அடையும் வழிமுறையாக(முஹம்மதின் வழிமுறை) கொண்டுள்ளது. இந்த ஒரு காரணத்தினால் தான், நாம் இஸ்லாத்தை முற்றிலுமாக அழிக்க வேண்டிய கடமைக்கு உள்ளாகியுள்ளோம்.

எனவே, இஸ்லாத்தை பூமியின் மேற்பரப்பிலிருந்து முற்றிலுமாக அழித்தொழிக்க நாம் உலகளாவிய பிரமாண்டமான, வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும். இந்த மகா கூட்டணியில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களையும், இல்லாதவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இஸ்லாத்தை எதிர்க்கும் எந்த நாத்திகர்களையும், ஆத்திகர்களையும், அக்னாஸ்டிக்களையும்(agnostics), மனிதநேயவாதிகளையும்(humanists), சமூகவாதிகளையும்(socialists) சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இந்த கூட்டணி பலம் பொருந்தியதாக இருந்து, தன் வளங்களை முழுமையாக பயன்படுத்தி இஸ்லாத்தை அழித்தொழிக்கும் குறிக்கோளை அடைய முடியும்.

தஜ்ஜால் said...

@ஆர்ய ஆனந்த்,
//நாம் இஸ்லாத்தை முற்றிலுமாக அழிக்க வேண்டிய கடமைக்கு உள்ளாகியுள்ளோம்// மதவெறி என்பது இஸ்லாமின் தனியுடமை அல்ல. மூடத்தனமான மத்வெறியர்கள் அனைத்து மதங்களிலும் உண்டு. இஸ்லாமில் அதன் சதவீதம் அதிகம். ஜாதி, @ஆர்ய ஆனந்த்,
//நாம் இஸ்லாத்தை முற்றிலுமாக அழிக்க வேண்டிய கடமைக்கு உள்ளாகியுள்ளோம்// மதவெறி என்பது இஸ்லாமின் தனியுடமை அல்ல. மூடத்தனமான மத்வெறியர்கள் அனைத்து மதங்களிலும் உண்டு. இஸ்லாமில் அதன் சதவீதம் அதிகம். ஜாதி, மதவெறியர்களுக்கு இங்கு இடமில்லை. //இஸ்லாத்தை எதிர்க்கும்//(திருத்தம்: இஸ்லாம் மட்டுமல்ல மதவெறியை எதிர்க்கும்// எந்த நாத்திகர்களையும், ஆத்திகர்களையும் (நம்முடன் வரமாட்டார்கள்), அக்னாஸ்டிக்களையும்(agnostics), மனிதநேயவாதிகளையும்(humanists), சமூகவாதிகளையும்(socialists) சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இந்த கூட்டணி பலம் பொருந்தியதாக இருந்து, தன் வளங்களை முழுமையாக பயன்படுத்தி இஸ்லாத்தை //மட்டுமல்லது மதவெறியை// அழித்தொழிக்கும் குறிக்கோளை அடைய முடியும்.

ஆர்ய ஆனந்த் said...

@ தஜ்ஜால்,

//மதவெறி என்பது இஸ்லாமின் தனியுடமை அல்ல. மூடத்தனமான மத்வெறியர்கள் அனைத்து மதங்களிலும் உண்டு. இஸ்லாமில் அதன் சதவீதம் அதிகம். ஜாதி, மதவெறியர்களுக்கு இங்கு இடமில்லை.//

உண்மைதான். எல்லா மதங்களிலும் தீவிர மதவெறியர்கள் உள்ளனர். மற்ற மதங்களில் உள்ள வெறியர்கள் அவர்களுடைய மதத்தை தீவிரமாக பின்பற்றும் கொள்கை உள்ளவர்களே தவிர, இஸ்லாமிய மத வெறியர்களை போல பயங்கரவாத செயல்களின் மூலம் தங்கள் மதத்தை உலகத்தில் உள்ள அனைவரையும் ஏற்க செய்து, மற்ற மதங்களை எல்லாம் பூண்டோடு அழித்து, தங்கள் மதம் மட்டுமே உலகில் இருக்க செய்ய வேண்டும் என்பதை தங்கள் மத கொள்கையாக கொண்டிருக்கவில்லை.

எல்லா மதங்களுமே பொய்கள் தான் என்றாலும், இஸ்லாமை தவிர மற்ற எந்த மதங்களாலும் மனித இனத்தின் வாழ்வுக்கு, அதன் இருப்புக்கு எந்த பிரச்னையும் இல்லை. இஸ்லாம் மட்டுமே மனித இனத்துக்கு பெரிய ஆபத்தாக உள்ளது. இஸ்லாம் மட்டுமே பயங்கரவாதத்தின் மூலம் உலகம் முழுவதையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வருவதையும், இஸ்லாத்தை ஏற்காத எல்லா மனிதர்களையும் படுகொலை செய்வதையும் தன் மதக்கடமையாக தன் பின்பற்றிகளுக்கு போதிக்கிறது. இந்த காரணத்தினால் தான், நாங்கள் இஸ்லாத்தை அழிப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம். இஸ்லாம் மற்ற மதங்களைபோல கடவுள் பெயரால் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பொய் என்பதால் அல்ல.

மற்ற எந்த மதங்களிலும் மூட நம்பிக்கைகளும் சில தீய போதனைகளும் இருந்தாலும் அவைகள் பெரும்பாலும் மனிதர்களுக்கு பல நல்ல போதனைகளியே செய்கின்றன. ஆனால் இஸ்லாம் மட்டுமே தீமையே உருவானதாக உள்ளது. அதின் போதனைகளில் எந்த நன்மையையும் நாம் பார்க்க இயலாது. மற்ற எந்த மதமாவது இஸ்லாமை போல, தன்னை ஏற்காதவர்களை அவர்களை கண்ட இடத்தில வெட்டி படுகொலை செய்ய சொல்கிறதா? அவர்களுடன் போரிடும்படி தன் பின்பற்றிகளுக்கு உத்தரவு இடுகிறதா? இல்லவே இல்லை. எனவே தான், நாகரீக உலகத்தின் அளவுகோள்படி, ஒரு நல்ல இந்து, ஒரு நல்ல கிறிஸ்தவன், ஒரு நல்ல யூதன், ஒரு நல்ல சீக்கியன், ஒரு நல்ல பார்சி, ஒரு நல்ல புத்தன், ஒரு நல்ல சமணன் என்பவன் ஒரு நல்ல மனிதனாக இருப்பான். ஆனால் ஒரு நல்ல முஸ்லிம் என்பவனோ மகா மோசமான மனிதனாகவே இருப்பான்.

எனவேதான் இஸ்லாத்துக்கு எதிரான கூட்டணியில், எல்லா மதத்தினரை சேர்ந்தவர்களையும், அவர்கள் தங்கள் மதத்தில் தீவிர பற்று கொண்டவர்களாக இருந்தாலும்(இவர்கள் மிக சொற்ப தொகையினர்) அவர்களை இணைத்துக்கொள்வது அவசியமானது.

தஜ்ஜால் said...

நண்பர் ஆர்ய ஆனந்த்,
//இஸ்லாம் மட்டுமே பயங்கரவாதத்தின் மூலம் உலகம் முழுவதையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வருவதையும், இஸ்லாத்தை ஏற்காத எல்லா மனிதர்களையும் படுகொலை செய்வதையும் தன் மதக்கடமையாக தன் பின்பற்றிகளுக்கு போதிக்கிறது//உண்மைதான் இஸ்லாமில் ஆன்மீக கோட்பாடுகள் என்பவைகள் பின்வந்தவர்களால் திணிக்கப்பட்டவையே. அடிப்படையில் இஸ்லாம் ஆட்சியை, அதிகாரத்தை கைபற்றும் வழிமுறைகளைக் கூறும் கோட்பாடுதான். அதனால்தான் ஷரியத்து சட்டம் என்று சிறப்பு அனுமதியைப் பெற்று இன்றைய அரசுகளுக்கு இணையாக, முல்லாக்கள் மற்றொரு அரசாட்சியை நடத்துகின்றனர். நமது போராட்டம் முஹம்மதின் மூடத்தனமான போதனைகளை எதிர்த்துதான் முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
முஹம்மதின் முட்டாள்த்தனமான, மூடத்தனமான, துர்போதனைகளை உலகறியச்செய்வது குறிப்பாக அப்பாவி முஸ்லீம்களுக்கு அறியச் செய்வதுதான் இத்தளத்தின் மையநோக்கம். ///ஜாதி, மதவெறியர்களுக்கு இங்கு இடமில்லை/// என்று நான் குறிப்பிட்டதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சங்பரிவார் அமைப்புகள் ஜிஹாதிகளுக்கு சற்றும் குறைந்தவர்களல்ல. மற்ற மதத்தினரை எள்ளிநகையாடும் கிருஸ்தவர்களையும் அறிவேன். //தங்கள் மதத்தில் தீவிர பற்று கொண்டவர்களாக இருந்தாலும்(இவர்கள் மிக சொற்ப தொகையினர்) அவர்களை இணைத்துக்கொள்வது அவசியமானது.// இத்தகையவர்கள் இஸ்லாமை எதிர்க்கிறேன் என்று தங்களது மூடத்தனத்தையே பிரச்சாரம் செய்கின்றன (உதாரணம்: answeringislam.com ) இதுபோன்ற இரண்டு ஜிஹாதிகளுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நிற்கும் அப்பாவிகளையே நாம் வரவேற்கிறோம்.

ஆர்ய ஆனந்த் said...

நண்பர் தஜ்ஜால்,

இந்த தளத்தில் வெளியிடுவதற்காக, அலி சினாவின் சவாலை தமிழாக்கம் செய்து உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி உள்ளேன். உங்களுக்கு கிடைத்ததா?

Unknown said...

நண்பர் ஆர்ய ஆனந்த்,

பிராக்சி சர்வரை பயன்படுத்தும் முறை எனக்கு சரியாக விளங்கவில்லை,அதனால் அலிசினாவின் சவாலை தமிழாக்கம் செய்தால் என் மின்னஞ்சலுக்கு அனுப்ப இயலுமா?

இனியவன்....

iniyavan76@ymail.com

ஆர்ய ஆனந்த் said...

நண்பர் இனியவன்,

அலி சினாவின் சவாலை தமிழாக்கம் செய்து, அதை இந்த தளத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளேன். நண்பர் தஜ்ஜால் ஓரிரு நாட்களில் இந்த தளத்தில் அது வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். எனினும் நீங்கள் கேட்டுக்கொண்டபடி, அதை உங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன். மேலும், ப்ராக்சி செர்வரை பதிவிறக்கம் செய்யும் இணைப்பையும் உங்களுக்கு அனுப்புகிறேன். அலி சினாவின் விசிறி என்ற நண்பர் தமிழாக்கம் செய்து, அலியின் தமிழ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள சில கட்டுரைகளையும் விவாதங்களையும் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கிறேன்.

Unknown said...

நண்பர் ஆர்ய ஆனந்த்,

தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.மின்னஞ்சலில் கிடைக்கப் பெற்றேன்.

இனியவன்....

ஆர்ய ஆனந்த் said...

தஜ்ஜால்,

//மேலும் ஆங்கிலத்தில் நான் நன்கு தேர்ந்தவனல்ல. ஆயினும் இஸ்லாம்பற்றிய அலிசினா அவர்களின் கருத்துக்களை எனது பதிவுகளில் கையாள்வதுண்டு.//

தஜ்ஜால் என்ற பெயரில் அலி சினாவின் தளத்தில்(www.faithfreedom.org) கருத்துக்களை பதிவிடுபவர் நீங்கள்தான் என்று நினைக்கிறேன். உங்களுடைய ஆங்கிலம் நன்றாகத்தானே உள்ளது.

ஆர்ய ஆனந்த் said...

தஜ்ஜால்,

நான் அனுப்பியுள்ள இரண்டு தமிழாக்கங்களும் இந்த தளத்தில் வெளியிடப்பட்டால், அலி சினாவின் மற்ற கட்டுரைகளையும் தமிழாக்கம் செய்து உங்களுக்கு அனுப்ப எனக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.