Wednesday 1 August 2012

ஒரு மரணம் சில கேள்விகள்-2முஹம்மதின் மரணம் கைபரில் துவங்கியதாக கூறுகின்றனர். ஒரு கோணத்தில் நோக்கினால் அதில் சில உண்மை மறைந்திருப்பதை மறுப்பதற்கில்லை. அது சங்கேத குறியீடு!
எனவே, நாம் கைபரை மேலும் தொடர்வோம், போரின் முடிவில், யூதர்களுக்கு நேர்ந்தகதியைக் கண்டு கதிகலங்கிப்போன ஃபதக் யூதர்கள் தாங்களாகவே சரணடந்து விளைச்சலில் பாதியைத் தருவாதாக ஒப்புக்கொண்டனர். இந்த செய்தியை குர்ஆனும் ஆமோதிக்கிறது
அவர்களிடமிருந்து எதைத் தனது தூதர் கைப்பற்றுமாறு அல்லாஹ் செய்தானோ அதற்காக நீங்கள் குதிரையையோ, ஒட்டகத்தையோ ஓட்டிச் செல்லவில்லை. மாறாக அல்லாஹ், தான் நாடியவர் மீது தனது தூதர்களைச் சாட்டுகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
(குர்ஆன் 59:6)

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூநளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவையாகும். அதைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் (தங்களின்) குதிரைகளையோ, ஒட்டகங் களையோ செலுத்திப் போர் செய்திருக்க வில்லை. ஆகவே, அவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியனவாக இருந்தன. அவற்றிலிருந்து நபியவர்கள் தமது ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்து வந்தார்கள். பிறகு, மீதமானவற்றை அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டு வந்தார்கள்.
(புகாரி : 4885)
அதாவது போரிடாமல் கிடைத்த்த காரணத்தினால் பனூ நளீரின் செல்வம் முஹம்மதின் தனியுடைமையானது. அவரது தெளிவற்ற சிந்தனைக்கு இது ஒரு சிறந்த உதாரணம். முஹம்மது என்ற தனிமனிதனைக் கண்டு அஞ்சி நடுங்கியா பனூநளீரின் யூதர்கள் சரணடைந்தனர்? நிச்சயமாக இல்லை! முஹம்மதின் படையினர் நிகழ்த்திய வெறியாட்டத்தைக் கண்டு வேறுவழியில்லாமல் சரணடைந்தனர். வெறிகொண்ட அவரது படையினர் இல்லையெனில் ஒரு பைத்தியம் பிடித்தவன்கூட முஹம்மதுவைக் கண்டு அஞ்சியிருக்கமாட்டான். பிழைப்பிற்கு வழியில்லாமல் மெக்காவிலிருந்து முஹம்மது ஓடி வந்தபொழுது ஃபதக்கின் யூதர்கள் தாங்களாகவே விரும்பி சரணடைந்து, தங்களது செல்வங்களை ஒப்படைத்தனர் என்றிருந்தால், போரிடாமல் கிடைத்த செல்வம் என்று இவர்கள் சொல்வதில் நியாயம் இருந்திருக்கும். இதை ஏன் இவ்வளவு கூறுகிறேன் எனில் முஹம்மதின் மரணத்திற்குப் பிறகு ஃபதக் என்ற இந்த செல்வம் இஸ்லாமையே புரட்டியெடுத்து விட்டது.
            முஹம்மதுவின் காலத்திலேயே மதினாவில் குழப்பங்கள் தலையெடுத்து பனிப்போர் துவங்கிவிட்டது. முஹம்மது மரணப் போரட்டத்தில் இருந்த பொழுது வாரிசுரிமைக் குழப்பம் உச்சகட்டத்தை அடைந்தது. அடுத்த ஆட்சியாளர் யார் என்பதை ஒருவேளை முஹம்மது கூறிவிட்டால், அதை மாற்றவே முடியாமல் போய்விடுமே என்பது அலீயின் அச்சம்.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள்:
போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாளம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்? என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்து கொள்வோம். அது பிறரிடத்தில் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்து கொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள் என்று சொன்னார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் அ(வர்களின் பிரதிநிதியாக ஆட்சி செய்யும் அதிகாரத்)தைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் நமக்கு அதைத் தர மறுத்து விட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒரு போதும்) அதைத் தர மாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்க மாட்டேன் என்று பதிலளித்தார்கள்.
(புகாரி 4447)
அலீ ஆட்சிக்கு வந்துவிடக் கூடாதென்பதற்காக ஆயிஷாவின் எரிச்சல்,
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் (தமக்குப் பின் ஆட்சியாளராக இருக்கும்படி) இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்து விட்டார்களாமே என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கவர்கள், இதைச் சொன்னவர் யார்? என்று கேட்டுவிட்டுநபி (ஸல்) அவர்களின் இறுதி வேளையில் நான் அவர்களை என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (எச்சில் துப்புவதற்காகப்) பாத்திரம் கொண்டு வரும்படி கூறிவிட்டு அப்படியே ஒரு பக்கம் சரிந்து இறந்து போய் விட்டார்கள். (அவர்கள் இறந்துபோனதைக் கூட) நான் உணரவில்லை. (நடந்தது இவ்வாறிருக்க,) அலீ அவர்களுக்கு (ஆட்சிப் பொறுப்பை) எப்படி அவர்கள் சாசனம் செய்திருப்பார்கள்? என்று கேட்டார்கள்
(புகாரி 4459)
தனது தந்தையாருக்கு ஆட்சியதிகாரம் கிடைக்கவேண்டுமென்பதற்காக ஆயிஷா அமைத்துக் காண்பித்த திரைக்கதை,
காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
... நான்தான் (இப்போது) என் தலை(வலி)யே! என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன்மீதும் உன் குடும்பத்தார் மீதும் நான் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனாலேயே உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப் பின் என் பிரதிநிதியாக) அறிவித்துவிட விரும்பினேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆக வேண்டும் என) எவரும் ஆசைப்படவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு அறிவிக்க விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூபக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்க  மாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்க மாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். (ஆகவேதான் அறிவிக்கவில்லை) என்று சொன்னார்கள்.
(புகாரி7217)
வாரிசுரிமை குழப்பம் துவங்கிவிட்டதை முன்பே அவர் உணர்ந்திருந்தார். ஆனால் எவ்விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவரால் மேற்கொள்ள முடியாமல் புலம்பிக் கொண்டிருந்தார்.
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு (நோட்டமிட்டபடி), "நான் பார்க்கின்றவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் மழைத் துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடுகிலும் குழப்பங்கள் நிகழப்போவதைப் பார்க்கிறேன்'' என்று சொன்னார்கள்.
(முஸ்லீம்)
மதீனாவின் வீதிகளில், வீடுகளில் குழப்பங்கள் நிகழப்போவதாக ஆரூடம் கூறிக் கொண்டிருந்தார். ஆனால், குழப்பத்தின் துவக்கம் அவரது வீடுதான் என்பது சற்று வேடிக்கையானதும் கூட. அது அவரது மரணப்படுக்கையின் முன்னே வந்து நின்றது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கி விட்ட போது, அவர்களது இல்லத்தில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் உள்பட பலர் இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் வாருங்கள்; உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒரு போதும் வழிதவறமாட்டீர்கள் என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள் (மக்களிடம்), நபி (ஸல்) அவர்களை (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது. உங்களிடம்தான் குர்ஆன் இருக்கின்றதே! நமக்கு (அந்த) இறைவேதமே போதும் என்று சொன்னார்கள். வீட்டிலிருந்தவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள். அவர்களில் சிலர், (நபியவர்கள் கேட்ட எழுதுபொருளை அவர்களிடம்) கொடுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு ஒரு மடலை எழுதித்தருவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒரு போதும் வழிதவறமாட்டீர்கள் என்று சொன்னார்கள். வேறு சிலர் உமர் (ரலி) அவர்கள் சொன்னதையே சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு அருகே மக்களின் கூச்சலும் குழப்பமும் சச்சரவும் மிகுந்த போது நபி (ஸல்) அவர்கள், என்னை விட்டு எழுந்து செல்லுங்கள் என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு), மக்கள்  கருத்து வேறுபாடு கொண்டு கூச்சலிட்டுக் கொண்டதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்கள் எழுதித்தர நினைத்த மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டது தான்  சோதனையிலும் பெரும் சோதனையாகும் என்று கூறுவார்கள்.
(புகாரி 7366)
அவர்களது கண்ணின்மணி மரணப்படுக்கையிலிருக்கிறார், அந்த வேதனையிலும் தனக்குத் தெரிந்த ஏதோஒரு தீர்வைக் எழுதித்தர முனைகிறார், ஆனால் அவரது தொண்டரடிப் பொடிகள் கூச்சலும், குழப்பமும் சச்சரவு செய்து, அவரை முடக்குகின்றனர். இதற்கு, முதன்மை அல்லக்கை உமரின் தலைமை வேறு. வாய்மொழி உத்திரவுகளை பின்பற்றுவதில் இவர்களுக்கு ஏதேனும் சிரமம் உள்ளதா? அல்லது எழுதி ஆவணப்படுத்தப்படாவிடில் மாற்றிவிடுவார்கள் என்ற அச்சமா? இவற்றில் முதன்மை வகுத்தது எது? குர்ஆன் ஒலி வடிவில்தான் வந்தது, அது ஒலி வடிவில்தான் இன்றும் பாதுகாக்கப்படுகிறது என்றெல்லாம் ‘பீலா’ விடுபவர்கள், இங்கு ஆவணத்தின் முக்கியத்தும் முதன்மைப்படுவதை ஏன் கருத்தில் கொள்வதில்லை? ”நான் ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒரு போதும் வழிதவறமாட்டீர்கள்என்று கூறிய முஹம்மது மடையரா? மனிதர்களின் செயல்களை எழுதுமாறு கூறிய அல்லாஹ் அறிவுகெட்டவனா?
அல்லாஹ்வே மனிதர்களின் செயலை மலக்குகளைக் கொண்டு எழுதிதான் பதிவுசெய்கிறான். அது மட்டுமல்ல, இதற்கென தனி அலுவலகம் அமைத்து இரண்டுபேரை வேலைக்குப்போட்டுக்கொண்டு எழுதி ஆவணப்படுத்துகிறான்.

அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துவந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (இன்னும் மேலே) உயர்ந்தார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது (வானவர்கள் தலை விதிகளைப் பதிவு செய்துகொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.
(முஸ்லீம்)

எழுதுகோல்களின் ஓசை கேட்குமளவிற்கு எழுது எழுது என்று எழுதுகின்றனர் எனில், எலும்புகளிலும், கட்டைகளிலும் கற்களிலும்தான் மலக்குகள் எழுதிக் கொண்டிருக்கின்றனரா? அற்பமனிதர்கள், speech recognition, Virtual reality, brain–computer interface என்று புதுப்புது தொழில்நுட்பங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறான். கையடக்க அலைபேசியில் உலகத்தையே அடைத்து வைத்திருக்கிறான். அல்லாஹ்வின் அலுவலகம் கற்காலத்திலேயே இருப்பதை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது. சரி..! அது அல்லாஹ்வின் தலைவிதி, அதுவும் அவனுக்கு அவனே எழுதிக் கொண்டது நாம் எதுவும் செய்வதற்கில்லை.

காகிதங்களில் எழுதி ஆவணப்படுத்துவது அற்பமனிதர்களின் செயல் எனில், மனிதர்களால் அச்சடிக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டபொழுது ஆத்திரம் கொள்ளவேண்டிய அவசியமில்லை.
சில ஆண்டுகளுக்குமுன்பு பகுத்தறிவாளர்களுடனான ஒரு விவாதத்தில் “பெரியாரின் சிலைக்கு அவமரியாதை செய்யப்பட்டால் தி.க வினர் கோபம் கொள்வது ஏன்? அது வெறும் சிலைதானே? என்ற ரீதியில் பீஜே வாதிட்டார். அதையே நாம் திருப்பி அவர்களிடம் கேட்கிறோம். குர்ஆன் கிராத் பதியப்பட்ட காகிதம், குறுந்தகடுகள் அல்லது ஒலிநாடாக்கள் எரிக்கப்பட்டால் மட்டும் பொங்கி எழலாமோ? அவைகள் வெறும் பதிவுகள் மட்டும்தானே? மனிதனின் அற்ப கண்டுபிடிப்பின் மட்டரகமான செயல்தானே? குர்ஆனையும் பிஜேவின் கருத்துப்டி எரிப்பதில் தவறொன்றுமில்லை.
 அடுத்து ஒரு மாபெரும் மோசடி பிரச்சாரம் இவர்கள் செயெகின்றனர். எழுப்படிக்கத் தெரியாத முஹம்மது தனது கருத்தை எழுதிக்கொள்ளுங்கள் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்? அதைவிடுத்து எழுது பொருட்களை என்னிடம் கொடுங்கள் நான் எழுதித் தருகிறேன் என்று எப்படிக் கூறினார்? முஹம்மது எழுத்தறிவு பெற்றவரா? அல்லது நோய்முற்றிய நிலையில் உளரப்பட்டதா? அதனை பிறகு விலாவாரியாகப் பாரப்போம்.
அவர் மடல் ஒன்றை எழுதித்தருகிறேன் என்ற பொழுது, உமர், ”உங்களிடம்தான் குர்ஆன் இருக்கின்றதே! நமக்கு (அந்த) இறைவேதமே போதும் என்று தடுத்தார். ஆனால் இப்னு அப்பாஸ், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்கள் எழுதித்தர நினைத்த மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டது தான்  சோதனையிலும் பெரும் சோதனையாகும் என்று கண்ணீர் வடிக்கிறார். இதுவே போதுமென்று உமர் கூறிய, குர்ஆன் என்ற இறைவேதம்(?) தீர்வு தரவில்லையோ? அதிலிருந்து அவ்வாறு எந்தவிமான தீர்வும் கிட்டவில்லை என்பதுதான் இப்னு அப்பாஸின் புலம்பல். முஹம்மது எழுதித்தர நினைத்தது என்ன?
குர்ஆனில் இருப்பதை உமர், முஹம்மதிற்கே போதித்ததை நினைத்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை! உமர், முஹம்மதின் எண்ணத்திற்கு குறுக்கே நின்று சோதனையிலும் பெரும் சோதனைக்கு வழிவத்தது ஏன்? எதற்காக?
தொடரும்…..

தஜ்ஜால்

Facebook Comments

13 கருத்துரைகள்:

இப்ன் லஹப் said...

”நான் ஒரு மடலை எழுதித் தருகிறேன்'-- முஹம்மதுக்கு எழுத படிக்க தெரியும்னு சொன்னா நம்ப மாட்டனுங்க...
எப்படி எழுத படிக்க தெரியாதவர் கிறித்தவ பாதிரிகளோடு வாக்கு வாதம் செய்ய முடியும்.
எப்படி எழுத படிக்க தெரியாதவர் பைபிளையும், தோராவையும் புரட்டி போட்டு அதனை முறியடிக்க முடியும்.
எப்படி எழுத படிக்க தெரியாதவர் பைபிளையும், தோராவையும் கமெண்ட் அடிக்க முடியும்.
அப்போ முஹம்மது ஏன் ஆட்களை (காதிப்)கொண்டு எழுத வேண்டும் என்றால் அது நிறைய எழுத வேண்டும் என்றே தவிர அது எழுத தெரியாமல் இல்லை.
எப்படி பெரிய,பெரிய தமிழ் பண்டிதர்களும் படி எடுப்பவர்களை வேலைக்கு அமர்த்துகிரார்களோ அது போல முஹம்மது வேலைக்கு வைத்திருக்கலாம்.
சரி அது இருக்கட்டும், உமர் ரலி ஏன் முஹம்மது வாயை அடைக்க வேண்டும்.
ஒரு வேலை அபூபக்கர் மற்றும் அலியை ஓரங்கட்டி தான் வர முயன்றிருப்பாரோ ?
அல்லாஹுவுக்கே வெளிச்சம் !!!!

தஜ்ஜால் said...

நண்பர் இப்ன் லஹ்ப்,
முஹம்மதிற்கு நிச்சயமாக எழுத்தறிவு இருந்திருக்கிறது. அவரிடம் தஜ்ஜாலைப்பற்றி வினவும் பொழுது, அவன் நெற்றியில் காஃபிர் என்று எழுதியிருக்கும் என்று கூறியோதோடல்லாமல், காஃப், ஃபே, ரே என்று எழுதிக்காண்பித்ததாக ஹதீஸ்கள் கூறுவதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

Unknown said...

நேற்று வந்த திரைப்பட வட நாட்டு நடிகைகள் எல்லாம் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் 23 ஆண்டுகளாக இறைவசனத்தை இறக்கோ இறக்குன்னு இறக்கியும் அரபுமொழியை கற்றுக் கொள்ளவில்லை என்பது நம்பத்தகுந்ததாக இல்லை. எல்லாம் ஒரு நாடகமே.

இனியவன்.....

Unknown said...

“(நபியே) ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்கவேண்டாமா?" (88:17) என்று கேட்கிறான்.

முகம்மதுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதை நிரூபிப்பதற்காக இரு போன்ற வசனங்களை குறிப்பிடுவது மூமீன்களுக்கு வழக்கம். மேலும் இவ்வசனத்திற்கு அறிவியலார்களின் விளக்கத்தையும் மற்றும் படங்கள் ஒளிநாடாக்கள் ஓவியங்கள் போன்ற எடுத்துக் காட்டுகளை எடுத்துக் காண்பித்து விட்டு,பார்த்தீர்களா இவைகள் எப்படி 1400 ஆண்டுகளுக்கு முன் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சாதாரண மனிதருக்கு தெரிய வந்தது??என்று நம்மிடமே கேள்வியும் கேட்பார்கள். 1400 ஆண்டுகளாக பார்க்க வேண்டாமா?? என்ற அல்லாவின் கேள்விக்கு,அல்லாவின் தூதர் அவர் வாழ்ந்தவரை பார்க்கவில்லை,அவர் தோழர்களும் பார்க்கவில்லை,அதன் பின் வந்த அத்தனை மூமீகளும் பார்க்கவில்லை,ஆனால் ஒரு காபிர் பார்த்து படம் பிடித்து காண்பித்து பாடம் நடத்திய‌ பிறகு தான்,முமீன்களுக்கே தெரியவந்திருக்கிறது. ஆக பதில் தெரியாமல் கேள்வி மட்டுமே கேட்ட அல்லாஹ் முட்டாளா?? அல்லது விளக்கம் தருவதற்கே வந்த தூதர் முட்டாளா?? இல்ல குரான படிக்கிற நாம முட்டாளா????

இனியவன்....

ஆர்ய ஆனந்த் said...

கைபரில் இருந்த யூத ஆண்களை எல்லாம் படுகொலை செய்துவிட்டு அதே நாளில் அந்த குலத்தை சேர்ந்த பெண்மணியை தனக்கு உணவு சமைக்க சொல்லி அந்த உணவில் இருந்து சாப்பிட்ட முஹம்மது எவ்வளவு பெரிய முட்டாள்! இந்த முட்டாள் தனத்தை செய்யாதே என்று சொல்லி அல்லாஹ் எந்த வஹியும் முஹம்மதுக்கு இறக்கவில்லை. அப்படியானால் முகம்மதை போல அல்லாஹ்வும் முட்டாள்தானே! அதுசரி, முகம்மதுவும் அவர் கண்டுபிடித்த அல்லாஹ்வும் தனித்தனி ஆள் இல்லையே!

சிவப்புகுதிரை said...

ம்ம்ம்.அட்டகாசம் தஜ்ஜால் அவர்களே..உங்களின் கேள்விகளுக்கு மூமீன்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என பாபோம்.வர வர முகமதுவின் டவுசர் கிழிந்துக்கொண்டே போகின்றது..இப்பு போன்றோர் வந்து தைக்காவிட்டால்.முகமதுவின் மானம் பரிப்போக போகின்றது....

தஜ்ஜால் said...

தஜ்ஜால்
வாருங்கள் ஆர்ய ஆனந்த்
சரியாகச் சென்னீர்கள் ஆர்ய ஆனந்த். முஸ்லீம்கள், முஹம்மதை மிகப் பெரிய இராணுவத் தளபதி என்று ”பீலா” விடுவார்கள். யூதர்களை வலியச் சென்று கொன்று குவித்தபின் அவர்களிடமே உணவு தயாரிக்கும் பணியை விடுவாராம். இவ்வளவு கேணத்தனமான முடிவை பைத்தியக்காரன்கூட எடுக்கமாட்டான்.
///அதுசரி, முகம்மதுவும் அவர் கண்டுபிடித்த அல்லாஹ்வும் தனித்தனி ஆள் இல்லையே!///
நிச்சயமாக ! குர் ஆனைக் கூர்ந்து கவனிக்கும் எவராலும் மிக எளிதாக விளங்க முடியும்.

தஜ்ஜால் said...

நண்பர் சகோதரன்,
நன்றி. பிஜே போன்றவர்களை விட நமது நண்பர் இப்ராஹீம் எவ்வளவோ மேல். அவர் தனக்குத் தெரிந்த பதிலை தனியொரு மனிதனாக, நம்மைப் போன்றவகளின் தளங்களில் பதிவு செய்கிறார். அவர் தனது தரப்பு நியாயத்தை துணிந்து வெளிப்படுத்துகிறார். இந்த துணிவு வேறு எந்த இஸ்லாமியருக்குமில்லை என்பது மகா கேவலம்.
நேரடி விவாதத்தை நாம் தவிர்ப்பது நமது உயிர்மீது கொண்ட காதலால் அல்ல! நம்மைச் சார்ந்தவர்கள், நமது அன்புக்குரியவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்வதால்தான். நமது இந்த பலவீனத்தை பயன்படுத்திதை ஏதோ சாதித்துவிட்டவர்களைப்போல வீராப்பு பேசித் திரிகின்றனர். கடையநல்லூர் செந்தோழன்ஷா விவகாரத்தில் இதே முறையைத்தான் கையாண்டனர். வெகு தொலைவிலிருந்த தோழர் செங்கொடியின் தொழிலை முடக்கினர். இதுதான் இவர்களது வாதத் திறமை.

தஜ்ஜால் said...

நண்பர் சிவப்புக்குதிரை,
//இப்பு போன்றோர் வந்து தைக்காவிட்டால்..// உண்மைதான். ஆனாலும் இப்புவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எத்தனை தளங்களில் அவர் தனி மனிதனாக கத்தி சுழற்றினார். இப்புவின் தைரியம் மற்றவர்களுக்கு இல்லை.

ஆர்ய ஆனந்த் said...

//ஆனாலும் இப்புவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எத்தனை தளங்களில் அவர் தனி மனிதனாக கத்தி சுழற்றினார். இப்புவின் தைரியம் மற்றவர்களுக்கு இல்லை. //

இப்ராஹீம் ரொம்ப்.....ப நல்லவர். அதனால் அவரை நாம் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார். மற்ற முஸ்லிம்கள் இப்ராஹிமை போன்று நல்லவர்களாக இருந்து நம்மிடம் அடிவாங்க தயாராக இல்லை.

தஜ்ஜால் said...

@ ஆர்ய ஆனந்த்,
//இப்ராஹீம் ரொம்ப்.....ப நல்லவர்….///
நான் நினைத்ததும் அதேதான் !

சிவப்புகுதிரை said...

எவ்வளவு அடிச்சாலும் தாங்கினால் தான் அவர்கள் மூமீன்னாக இருக்க முடியும் இல்லை என்றால் அவர்களுக்கு தான் சிக்கல்...பாருங்கள் லண்டன் ஒலிம்பில் புருக்காப்போட்டு தான் ஜூடோ விளையாடுவேனு ஒரு பெண்னை மல்லுக்கட்ட வைத்துவிட்டார்கள்..பாவும் அந்த பெண் ஹித்தாப் போட்டு விளையாடியும் தோற்றுபொய்விட்டது...

Anonymous said...

mnjjh