பொதுவாக தந்தை பெரியார்
"முஸ்லீம்களுக்கு ஆதரவானவராகவே" சொல்லப்படுகிறார். ஆனால் அது எந்தளவு
உண்மை என்பதையும் பகுத்தறிய வேண்டி உள்ளது. முஸ்லீம்கள் "இஸ்லாத்துக்கு
ஆதரவானவர் பெரியார்" என்று சொன்னால் - தந்தை பெரியாரை முழுமையாக அறிந்தவர்கள், பெரியாரை
ஆய்வு செய்பவர்கள் "அது தவறு. பெரியார் முஸ்லீம்கள் குறித்தும் இப்படியும்
பதிவு செய்திருக்கிறார்" என்று சொல்ல
வேண்டும். ஆனால் அப்படி
செய்யவில்லை. இது ஒரு பெரிய மோசடி இல்லையா? விடுதலையில் வந்த தலையங்கத்தையே
மறைக்கிறார்கள் என்றால்? உண்மை உலகுக்கு அறிவிக்கப்பட வேண்டும்
எனும் நோக்கில், முஸ்லீம்களின் சுயரூபம் அறிந்த பிறகு – தந்தை பெரியார் எழுதிய கட்டுரை. 6.3.1962
அன்று விடுதலையில் எழுதிய
தலையங்கத்தை இங்கே தந்துள்ளேன். தந்தை பெரியார் பார்வையில் முஸ்லீம்களுக்கும், பார்ப்பணியத்துக்கும் மிக பெரிய
வித்தியாசம் இல்லை என்பதை இத் தலையங்கத்தின்மூலம் அறிந்து கொள்ளலாம்.
கடவுளை நம்புபவன் முட்டாள்; கடவுளை கற்பித்தவன்
அயோக்கியன் என்பதில் உறுதியாக இருந்தவர் தந்தைபெரியார். அதனால்தான் டாக்டர்
அம்பேத்கார் போல் தந்தைபெரியார் மதம் மாறவில்லை. நாத்திகராகவே வாழ்ந்து மறைந்தார்.
மதமின்றி வாழ முடியாது
என்று கருதினால் இசுலாமிய மத த்திற்கு போகும்படி மக்களிடம் பெரியார் பிரச்சாரம்
செய்த தாக இசுலாமியர்கள் கூறித் திரிகின்றனர். அதாவது இசுலாமியர்கள்தான்
நேர்மையானவர்கள் என்று பெரியார் கருத்துக் கொண்டிருந்த தாகவும், அவர்
இசுலாந்தினைப்பற்றி முழுமையாக அறிந்திருந்தால் அதாவது குர்ஆனை (நேர்மையாக)
படித்திருந்தால் இசுலாத்திற்கு ஓடி வந்திருப்பார் என்றும் பசப்பித்திரிகின்றனர்.
மதம் வேண்டும் என்றால்
இசுலாத்திற்கு போ என்பதுகூட இசுலாமியர்களைப்பற்றி சரிவர தெரிந்திராத
காலக்கட்டங்களில் கூறியிருக்கலாம். ஆனால், நாழ்த்தப்பட்ட மக்களுடனான
இசுலாமியர்களின் நவஞ்சக நடவடிக்கைகளை அனுபவம் உணர்த்திட ‘விடுதலையில்’ எழுதிவிட்டார்.
விடுதலையின் தலையங்கம்:
நாட்டு இலட்சணப்படி எந்த நாட்டிலும் மைனாரிட்டி (சிறுபான்மையினர்)
சமூதாயம், மைனாரிட்டி
மதம், மைனாரிட்டி
கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ- இருக்குமானால் அது அந்த
நாட்டின் நலத்துக்கு பொது வளர்ச்சிக்கு கேடாகவே முடியும். இந்நாட்டு மைனாரிட்டி
சமுதாயங்களான பார்ப்பனர், முஸ்லீம் ஆகியவர்களுக்கு அந்நிய ஆட்சியாலும்
காங்கிரசாலும் மற்றும் அவர்களுக்கு நீதி அல்லது தனிச் சலுகைகள் இன்றுள்ள ஆட்சியும்
காட்டி வந்த காரணத்தினாலும் மேலும் அவர்களது செல்வாக்கு காரணமாய்
புத்திசாலித்தனமான திறமையான தகுதி உள்ள சமூதாயம் என்று கருதி ஆதிக்கத்திற்கு இடம்
கொடுத்ததனாலும், நாடு
வளர்ச்சி அடையாமலும் மெஜாரிட்டி (நாட்டின் இயற்கையான பெருவாரி ) மக்கள் மனிதத்
தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு
இதுவே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன். இந்தத் தமிழ்நாடு இன்றும்
சுதந்திரமற்ற அடிமை நாடு என்பது எனது பலமான கருத்து. இதை இந்நாட்டுப் பெருவாரி
(மெஜாரிட்டி) சமூதாயம் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். காரணம்
தமிழனுக்கு சுதந்திரம் என்பது என்ன என்றே தெரியாது. ஏன்
என்றால் தமிழன் பல பிரிவினனாக ஆக்கப்பட்டவன் ஆனதால் எதையும் கொடுத்து, என்னமும் செய்து பயனடைந்து வந்தவன், இந்தத் தன்மைக்கு ஏதாவது ஒரு மாறுதல்
தோன்றிற்று என்று சொல்ல வேண்டுமானால் 1900- ஆண்டுகளுக்குப் பிறகு தான் இதுபற்றி
சிந்திக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது. தமிழனுக்கு சுதந்திரம் ஒருநாளும்
இருந்ததில்லை. அவன் சரித்திரமே அடிமைத்தனத்திலும் இழி தன்மையிலும் இருந்தே தான்
துவக்கப்பட்டிருக்கிறது. அது எப்படியோ போகட்டும். இனிமேலாகினும் தமிழன் தமிழ்நாடு
சுதந்திரத்துடன் சுயமரியாதையுடன் வாழ வேண்டாமா? என்பது தான் இனி சிந்திக்க
வேண்டியதாகும். இன்றைய சுதந்திரம் சுதந்திரமே அல்ல. வெள்ளையன் ஆட்சிக்கால
சுதந்திரத்தை விட மோசமான நிலை என்பது சுதந்திர உதய நாள் முதல் எனது கருத்து.
இதற்கு உதாரணம் இந்த நாட்டில் இன்று மைனாரிட்டியாக உள்ள
சமுதாயத்திற்கு இருந்த வரும் வசதியும், ஆதிக்கமும், நடப்பு வசதியுமே போதுமானதாகும்.
அதாவது 100-க்கு
90 விகிதம்
உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாயமாகிய தமிழனின் பெண்கள் நாற்று களை பிடிங்கி, ரோட்டில் கல் உடைத்து வீதியில் மக்கள்
நடக்க மண் சுமந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் ஏராளமான பொதுத் தொண்டு
செய்கிறார்கள். இப்படி இன்னும் பல இருக்கின்றன. 100-க்கு 3- விகிதமுள்ள பார்ப்பன மக்களும் அவர்கள்
பெண்கள் பொதுநலத்துக்கு என்று ஒரு தொழிலும் செய்யாமல் நம்மை எட்டிப்போ! மேலே
படாதே! என்று சொல்லிக் கொண்டு உயர் வாழ்வு வாழ்கிறார்கள். அதுபோலவே 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம்கள் ஒரு கூலி
உடலுமைப்பு வேலையும் செய்யாமல் அவர்கள் பெண்கள் நம் மனிதர்கள் கண்ணுக்கே தென்படக்
கூடாது என்கின்ற நிலையிலும் பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா
முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் அனுபவிக்கிறார்கள்.
இதே
போன்ற நிலையிலே தான் இந்நாட்டு தமிழ் ஆண்கள், பெண்கள் அவர்கள் வீட்டு
வேலைக்காரர்கள் வேலைக்காரிகளாக இருக்கிறார்கள். முதலாவது இந்த இரண்டு – தர மக்கள் நிலையும் இந்நாட்டுத் தமிழனுக்கு
எவ்வளவு இழிவு மானக்கேடு என்பதை எந்தத் தமிழன் உணருகிறான்? இது அவர்கள் மத தருமம்! மத ஆச்சாரம்!
என்றால் யார் நாட்டில், யார்
மத்தியில், யாருடைய மத
தர்மம், யாருடைய மத
ஆச்சாரம், யாரை இந்த
நிலையில் இழிவுபடுத்துவது என்பதை சிந்தித்தால் தமிழனின் சுதந்திரம் சுயமரியாதை அளவு
விளங்கும்.
ஜோசியத்தில் வல்லவரான ஒரு மேதாவியானவன் (அமாவாசையில் பிறந்தவன் திருடுவான் என்பது ஜோசியமானால்) தன் வீட்டில் திருடின அமாவாசையில் பிறந்தவரை மன்னித்து விடுவாரா? இதுபோல் நமது நாட்டின் மைனாரிட்டி உரிமை அவர்களது சமய கலாச்சார பண்பு என்பதற்காக பல காரியங்களில் நாம் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து வந்த காரணமே இன்று தமிழ்நாட்டுக்கு மைனாரிட்டிகளால் பெருங்கேடும், துரோகமும் அடைய வேண்டியவர்களாகி விட்டோம். மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும், “துரோகம் – பச்சைத் துரோகம்” என்கின்ற குழந்தைகளைத் தான் ஈனும்; ஈன்றும் வருகிறது. இது இயற்கைப் பண்பு. (அல்லது விதி) அதனாலேயே நம் தமிழ்நாட்டில் உள்ள யோக்கியப் பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாயக்கேடான காரியங்களுக்கு இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின்பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். இந்தத் துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூமத் துரோகிகளுக்குப் பயன்பட்டு வாழக் காத்துக்கிடக்கிறார்கள். இந்தியக் கூட்டாச்சியில் தமிழ்நாடு ஒரு நாடாக இருக்கும் வரை தமிழ்நாடு இந்தக் கதிக்கு ஆளாகித் தான் தீரும்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பதவி- பணவாதிகள் ஆனதனால் அவர்களுக்கு
இந்த உண்மை ஒப்புக் கொள்ளத்தக்கது ஆகாது. பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும்
வந்தோம். அதன் பலனை
இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதித்து அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை
வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது. ஏன் இப்படி சொல்லுகின்றேன் என்றால் பார்ப்பான்
துரோகம் செய்ய அவனுக்குக் காரணம் உண்டு. என்னவென்றால் அவன் பொய் பித்தலாட்ட உயர்
வாழ்வு சரிந்து விழுகிறது. அதை வெளியிட்டு மக்களைத் திருப்தி செய்ய வேண்டும்.
அப்பொழுது தான் அவர்கள் துரோகக் கூட்டத்தில் இருந்து விலக இச்சைப்பட்டவர்கள்
ஆவார்கள்.
இவ்வளவு
எழுதப்பட்டதன் காரணம் மைனாரிட்டிகளை
ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி
மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவேயாகும். நான் ஒரு மனித தருமவாதி
என்பதும் எதையும் திரை மறைவு இல்லாமல் திகம் பரமாய் கருத்துக் கொள்ளுகிறவன்
என்பதையும் யாவரும் அறிவார்கள்.
.சமத்துவன்