Thursday, 19 January 2012

லூத் என்றொரு ”லூஸ்”மனிதர்களை நல்வழிபடுத்த எண்ணற்ற தீர்க்கதரிசிகளை (நபி) மனிதர்களிடத்தில் அல்லாஹ் அனுப்பியுள்ளதாகவும், அந்த தீர்க்கதரிசிகள் அல்லாஹ்வின் செய்தியை மக்களிடையே கூறி, ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் வாழ்ந்தனர் என்கிறது குர்ஆன்.
ஆனால் உண்மை இதற்கு நேர் எதிரானது. குர்ஆனைப் பொருளுணர்ந்து வாசிக்கும் எவராலும் இதை அறியமுடியும். இந்த முரண்பாட்டை, இஸ்லாமிய அறிஞர்கள் அடைப்புக்குறிகளுக்குள் மறைத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.
இவர்களின் ஏமாற்று வேலையை எளிதாக புரிந்துகொள்ள நாம் இன்று லூத் (லோத்து) என்பவரின் கதையைப் பார்க்கலாம். குர்ஆனில் மிகக் குறைவாக கூறப்பட்டுள்ள கதைகளில் லூத்துவின் கதையும் ஒன்று. அது இவ்வாறு கூறுகிறது,
லூத் (சோதோம்-தற்பொழுதைய ஜோர்டான் பள்ளத்தாக்கு பகுதியில்) தூதராக அல்லாஹ்வால் நியமிக்கப்படுகிறார். இவர் அல்லாஹ்வின் மற்றொரு தூதரன இப்ராஹிமின் நெருங்கிய உறவினர்.
லூத் தனது தூதுப்பணியை செய்து கொண்டிருந்த சோதோம் பகுதில் இருந்த ஆண்கள் அனைவருமே மிகப்பெரிய அளவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர். ஓரினச்சேர்க்கையை எதிர்த்து லூத் செய்த பிரச்சாரங்கள் எதுவும் பயனளிக்கவில்லை. அவர்கள் லூத்தின் அறிவுரைகளை தூக்கி எறிந்தனர். இந்நிலையில் அம்மக்களை அழிக்க அல்லஹ் முடிவு செய்து தனது உதவியாளர்களை (வானவர்கள்) அனுப்புகிறான்.
அந்த வானவர்கள்(உதவியாளர்கள்) முதலில் அல்லாஹ்வின் மற்றொரு தூதரான இப்ராஹிமை சந்திக்கின்றனர். தள்ளாத வயதிலும் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கும் செய்தியைத் தெரிவித்துவிட்டு, லூத்தின் நகரத்தை அழிக்க இருப்பதையும் தெரிவிக்கின்றனர்.
அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்றவர்களாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். "பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று அவர்கள் கூறினர்.
குர் ஆன் 11:70
இப்ராஹிம் பதறியவாறு, அங்கு லூத் இருப்பதை கூறுகிறார்.
இப்ராஹீமை விட்டு பயம் விலகி, நற்செய்தி வந்த போது, லூத்துடைய சமுதாயம் குறித்து நம்மிடம் தர்க்கம் செய்யலானார்.
குர் ஆன் 11:74
"அங்கே லூத் இருக்கிறாரே'' என்று அவர் கேட்டார். "அங்குள்ளவர்களை நாங்கள் நன்றாக அறிவோம். அவரையும், அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றுவோம். அவரது மனைவியைத் தவிர. அவள் (அழிவோருடன்) தங்கி விடுவாள்'' என்றனர்.
குர் ஆன் 29:32
"இப்ராஹீமே! இதை நீர் விட்டு விடுவீராக! உமது இறைவனின் கட்டளை வந்து விட்டது. தவிர்க்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும்'' (என்று இறைவன் கூறினான்.)
குர் ஆன் 11:76
"லூத்துடைய குடும்பத்தாரில் அவரது மனைவியைத் தவிர அவர்கள் அனைவரையும் நாங்கள் காப்பாற்றுவோம். அவள் அழிபவள் என்று நிர்ணயித்து விட்டோம்'' என்றனர்
குர் ஆன் 15:59,60
என்று கூறி, அந்த வானவர்கள் சோதோம் நகருக்கு செல்கின்றனர்.
வானவர்கள் (அழகிய) ஆண்கள் உருவில் லூத்தை சந்திக்கின்றனர். தாங்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி அதிகாலையில் சோதோம் நகரை தலைகீழாக புரட்டியும், சூடான கற்களை வீசியும் அழிக்க இருக்கும் திட்டத்தை கூறி, லூத்தையும் அவரது குடும்பத்தினரையும் மட்டும் நகரைவிட்டு பாதுகாப்பாக வெளியேருமாறு அறிவுறுத்திக் கூறுகின்றனர்.
"லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக் கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?'' என்றனர்.
குர் ஆன் 11:81
இதற்குள், லூத்தை சந்திக்க அழகிய ஆண்கள் வந்திருக்கின்றனர் என்ற செய்தி ஊருக்குள் பரவியது. சோதோமின் ஆண்களில் இளைஞர்களும், கிழவர்களும் லூத்தின் இல்லத்திற்குமுன் பெரும் கூட்டமாக கூடி, லூத்தை சந்திக்க வந்துள்ள ஆண்களிடம் தங்களது இச்சையைத் தீர்த்துக்கொள்ள அனுமதிக்குமாறு லூத்தை வற்புறுத்துகின்றனர். தனது விருந்தினர்களுக்கு அவமானம் நேர்ந்துவிடக்கூடாது என்று பதறிய லூத், வெளியில் காத்திருக்கும் அக்கூட்டத்தினரிடம், விருந்தினருக்கு பதிலாக தனது (இரு) மகள்களை வழங்க முன்வருகிறார்.
"இவர்கள் எனது விருந்தினர்கள். எனவே எனக்கு அவமானத்தை ஏற்படுத்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! என்னை இழிவுபடுத்தாதீர்கள்!'' என்று (லூத்) கூறினார்.
குர் ஆன் 15:68,69
அவரது சமுதாயத்தினர் அவரிடம் விரைந்து வந்தனர். இதற்கு முன் அவர்கள் தீமைகளைச் செய்து வந்தனர். "என் சமுதாயமே! இதோ என் புதல்விகள் உள்ளனர். அவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனது விருந்தினர் விஷயத்தில் எனக்குக் கேவலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்! உங்களில் நல்ல ஓர் ஆண் கூட இல்லையா?'' என்று கேட்டார்.
குர் ஆன் 11:78
"நீங்கள் (ஏதும்) செய்வதாக இருந்தால் இதோ எனது புதல்விகள் உள்ளனர்'' என்று அவர் கூறினார்.
குர் ஆன் 15:71
தனது விருந்தினர்களைப் பாதுகாப்பதே லூத்தின் நேக்கமாக இருந்தாலும், பெரும் இச்சையுடன் இருக்கும் மாபெரும் கூட்டத்தின் தேவையை, லூத்தின் இரண்டு அல்லது மூன்று மகள்கள் தீர்த்துவைக்க முடியுமா? ஒருவேளை அவர்களுக்கு அத்தகைய ஆற்றல் இருந்தாலும் அந்த உறவிற்கு என்ன பொருள்?
                அதாவது லூத் தனது மகள்களை பாலியல் அடிமைகளாக வழங்க முன்வந்திருக்கிறார் என்பதுதான் இதன் நேரடிபொருள் இதை விளங்க எந்த தப்ஸீர் விளக்கவுரையும் தேவையில்லை. முஹம்மதின் காலத்தில் அவருடன் வாழ்ந்த ஸாஹாபாக்களுக்கு இது எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில்    மனைவியர்கள் மட்டுமல்லாது எண்ணற்ற அடிமைப்பெண்கள் என்ற வைப்பாட்டிகளாக வைத்திருப்பது அவர்களின் கலாச்சாரமாக இருந்தது. கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் அவர்களது வாழ்க்கைமுறையாகவே இருந்தது. பெண் என்ற பாலினத்தை  போகப்பொருளாகவே அவர்கள் நினைத்திருந்தனர். உதாரணத்திற்கு, முஹம்மது மெக்கவிலிருந்து தனது (70-80) தோழர்களுடன் குடிபெயர்ந்து மதீனா வந்தவுடன், அவர்களுக்கு பொருள்களையும் தங்களது மனைவியர்களையும் வழங்கி உதவி செய்தனர், என்பதை இன்றும் முஸ்லீம்களும் பெருமையாகக் கூறுவதை நீங்கள் காணலாம். முஹம்மதின் காலத்து மனைவியர்களின் நிலை அவ்வளவுதான். (அந்த விஷயத்தில் முஹம்மது ஒரு ‘Ultra Modern” பேர்வழிதான் போலும்!)
குர் ஆன் 11:78, 15:71-ன் மடத்தனம் பிற்கால இஸ்லாமிய அறிஞர்களுக்கு விளங்கியவுடன், லூத் தனது மகள்களை திருமணத்தின் மூலம் வழங்கவே முன் வந்தார் என்று விளக்கவுரைகளை எழுதி, அல்லாஹ்வின் உளறலை சரிக்கட்டினர்.
குர் ஆனின் 11:78, 15:71 வசனத்திற்கு என்னிடமுள்ள M.அப்துல் வஹ்ஹாப் M.A, B.Th,  K.A.நிஜாமுத்தீன் மன்பயீ, R.K.அப்துல் காதிர் பாகவி ஆகியோர் மொழிபெயர்ப்பு செய்துள்ள மற்றொரு தர்ஜமா இவ்வாறு கூறுகிறது.
... என்னுடைய சமூகத்தினரே! (இதோ!) இவர்கள் என்னுடைய புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணம் செய்து கொள்ள) மிக்க பரிசுத்தமானவர்கள்...
குர் ஆன் 11:78

"நீங்கள் (திருமணம்) ஏதும் செய்வதாக இருந்தால், இதோ என்னுடைய புதல்வியர்கள் இருக்கின்றனர்'' என்று அவர் கூறினார்கள்.
குர் ஆன் 15:71
லூத் திருமணம் செய்து தருவதாகவே கூறினார் என்பதை வாதத்திற்காக ஏற்பதாகக் கொண்டாலும், ஒரு பெரும் கூட்டத்திற்கு ஓரிரு பெண்களை எப்படி திருமணம் செய்து வைக்கமுடியும்? குர் ஆன் கூறும் ஒழுக்கநெறி உங்களுக்குப் புரிகிறதா? ஆனால் அந்த கூட்டத்தினர் தங்களது தேவையைக் குறித்து தெளிவாகவே இருந்தனர்.
"உமது புதல்விகளிடம் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் உறுதியாக அறிவீர்! நாங்கள் விரும்புவதையும் நீர் அறிவீர்'' என்றனர்.
குர் ஆன் 11:79
மேலும், வானவர்கள் தாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதையும், எவ்வாறு சோதோமை அழிக்க இருக்கிறோம் என்பதையும் லூத்திடம் தெளிவாகவே அறிவித்துள்ளனர். ஊரையே அழிக்க வந்தவர்களால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதா? இங்கு மடையர் அல்லாஹ்வா? இல்லை லூத்தா?
பின்னர் அல்லாஹ்வின் திட்டப்படி சோதோம் அழிக்கப்பட்டது.
 நமது கட்டளை வந்த போது, சுடப்பட்ட கற்களால் அவ்வூரின் மீது கல்மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப் பகுதியாக்கினோம்.
குர் ஆன் 11:82
சோதோமிலிருந்து தப்பிச்சென்ற லூத் மற்றும் அவரது குடும்பத்தினரான (இரு) மகள்களைத் தவிர அந்த பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும் உயிரோடு சமாதியாயினர்.
தனக்குப் பிடிக்காத ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் லூத் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தவிர சோதோமை அழித்ததாக கூறும் அல்லாஹ், ஒன்றை கவனிக்க மறந்துவிட்டான். சோதோம் பகுதியில் ஆண்கள்மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கென்று பெண்களையும், குழந்தைகளையும் உறுப்பினர்களாக உள்ளடக்கிய குடும்பங்களையும் அழித்ததாகவே இங்கு பொருள் விளங்குகிறது.
ஒரு பாவமும் அறியாத அப்பாவிகளும், பெண்களும், ஏதுமறியாத குழந்தைகளும் கூட ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்தனரா? கொடுமையாகத் தண்டிக்குமளவிற்கு இவர்கள் என்ன தவறு செய்தனர்? இந்த கதையின் மூலம் அல்லாஹ் தனது அடியார்களுக்குக் கூறும் நீதிதான் என்ன?
இனப்படுகொலை!
இது யாருக்குப் புரிந்ததோ இல்லையோ முஹம்மதுவிற்கு நன்றாகவே புரிந்தது. அவர் தனது இறுதி பத்து ஆண்டுகளில் இதைத்தான் மாற்று மத்தினர் மீது நிகழ்த்திக் காட்டினார்.
சோதோமின் அழிவிற்கு உண்மையான காரணம் என்ன? நபி லூத்தின் போதனைகள் சிறிதுகூட பயனளிக்காமல் போனது ஏன்?
இதற்கான பதிலை நான் கூறுவதைவிட தமிழகத்தின் நபியான அறிஞர் P.ஜைனுல் ஆபிதீன் கூறுவதே மிகப் பொருத்தமாக இருக்கும்.  அவரது திருக்குர் ஆன் விரிவுரையின் 81-வது குறிப்பிலிருந்து

81. நேர்வழியில் செலுத்துபவன் இறைவனே!
மனிதர்களை நேர்வழியில் செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அந்த அதிகாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட எந்த இறைத் தூதருக்கும் இல்லை என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
இறைத் தூதர்கள் மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காகத் தான் அனுப்பப்பட்டனர். மனித உள்ளங்களில் தமது போதனைகளை அவர்களால் சேர்த்து வைக்க முடியாது என்பதை இவ்வசனங்கள் அழுத்தமாகக் கூறுகின்றன.
இதனால் தான் எத்தனையோ இறைத் தூதர்களின் குடும்பத்தினர் தவறான வழி சென்றும் அவர்களால் தமது குடும்பத்தினரை நல்வழிப்படுத்த முடியவில்லை...
onlinepj.com
ஆக, மனிதர்களை நல்வழியை குறித்து சிந்திக்க விடாமல் நேர்வழிக்கு திரும்ப முடியாமல் செய்தது அல்லாஹ்தான். சோதோமின் ஆண்கள் ஓரினச்சேர்க்கையிலிருந்து மீளமுடியாதவாறு செய்ததும் அல்லாஹ்தான். நமது நபி அறிஞர் P.ஜைனுல் ஆபிதீனுக்குப் புரிந்த உண்மையை கூட உணராத லூத் ஒரு நபியா? இந்த அற்ப உண்மையை உணராமல் காலமெல்லாம் போதனை செய்து இறுதியில் தனது மகள்களையே பாலியல் அடிமைகளாக பலியிட முயன்ற நபி லூத் ஒரு லூஸ்தானே?
சரி... தப்பிச்சென்ற லூசு (மன்னிக்கவும்) லூத் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் (மகள்கள்) என்ன ஆனார்கள்?
குர்ஆன் தெளிவான, நன்கு விவரிக்கப்பட்ட, முரண்பாடற்ற புத்தகமாக இருப்பதனால் இதற்கான பதிலை பெற நாம் தலைகீழாக நின்றாலும் குர்ஆனிலிருந்து கிடைக்காது. எனவே முந்தைய வேதமான பழைய ஏற்பாட்டிற்குச் செல்வோம்.
லோத்துவின் கதை பைபிள் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமத்திலிருந்து...
19:23 சூரியன் உதயமானபோது லோத்து சோவார் நகரத்திற்குள் நுழைந்தான்.
19:24 அதே நேரத்தில் கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்க ஆரம்பித்தார். கர்த்தர் வானத்திலிருந்து நெருப்பையும் கந்தகத்தையும் அந்நகரின் மேல் விழுமாறு செய்து,
19:25 அந்த நகரங்களையும் அதன் முழு சமவெளியையும், அங்கிருந்த செடிகளையும், ஜனங்களையும் அழித்துவிட்டார்.
...
19:30 சோர்வாரில் தங்கியிருக்க லோத்துவுக்கு அச்சமாக இருந்தது. எனவே, அவனும் அவனது மகள்களும் மலைக்குச் சென்று அங்கு ஒரு குகையில் வசித்தனர்.
19:31 ஒரு நாள் மூத்தவள் இளையவளிடம், “உலகில் எல்லா இடங்களிலும் ஆண்களும் பெண்களும் மணந்துகொண்டு குடும்பமாக வாழ்கிறார்கள். ஆனால் நமது தந்தையோ வயதானவராக உள்ளார். நமக்கு குழந்தை தர வேறு ஆண்களும் இங்கே இல்லை.
19:32 எனவே நாம் தந்தைக்கு மதுவைக் கொடுக்கலாம். அவர் மயங்கியபின் அவரோடு பாலின உறவு கொள்ளலாம். இப்படியாக நமக்கு சந்ததி உண்டாக்க நம் தந்தையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாள்.

   
19;33 அன்று இரவு இரண்டு பெண்களும் தந்தைக்கு மதுவைக் கொடுத்து குடிக்க வைத்தனர். பிறகு மூத்தவள் தந்தையின் படுக்கைக்குச் சென்று அவரோடு பாலின உறவுகொண்டாள். லோத்துவுக்குத் தன் மகள் தன்னோடு படுத்ததும், எழுந்து போனதும் தெரியவில்லை. அந்த அளவுக்குக் குடித்திருந்தான்.
19:34 மறுநாள் மூத்தவள் இளையவளிடம்:  “நேற்று இரவு நான் தந்தையோடு பாலின உறவுகொண்டேன். இன்று இரவும் அவரை மீண்டும் குடிக்க வைப்போம். பிறகு நீ அவரோடு பாலின உறவு கொள். இதன் மூலம் நாம் குழந்தை பெற நம் தந்தையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நம் குடும்பமும் அழியாமல் இருக்கும் என்றாள்.
19:35 அதனால் இருவரும் அந்த இரவிலும் தந்தையை மது குடிக்கும்படி செய்தனர். பிறகு இளையவள் தந்தையோடு படுத்து பாலின உறவு கொண்டாள். லோத்து மதுவைக் குடித்திருந்தபடியால் அவள் படுத்ததையும், எழுந்து போனதையும் அறியாமலிருந்தான்.
19:36 லோத்தின் இருமகள்களும் கர்ப்ப முற்றனர். அவர்களின் தந்தையே அவர்களது பிள்ளைகளுக்கும் தந்தை.
அந்தப் பிள்ளைகளுக்கு லோத்து தந்தையா? தாத்தாவா? பதில் தெரிந்தவர்கள் கூறுங்கள்.
...
இதுதான் உலகின் இருபெரும் மதங்கள் தங்களது தீர்க்கதரிசிகள் மற்றும் வேதங்களின் வாயிலாக அடியார்களுக்கு போதிக்கும் மோட்சத்திற்குரிய வாழ்க்கைநெறி!
தஜ்ஜால்

  

Facebook Comments

36 கருத்துரைகள்:

RAJA said...

பைபிளில் உள்ள லோத்துவின் கதை தெரியும். இதை என் ப்ளாக்கில் போட நினைத்திருந்தேன். ஆனால் குரானிலும் இந்தக் கதை இருப்பது உங்கள் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். மிக அருமை. வாழ்த்துக்கள் தஜ்ஜால்.

நந்தன் said...

வேதபுத்தகங்கள் எனபது கடவுளின் வார்த்தைகள் என்கின்றனர். இவைகள்தான் கடவுளின் வாரத்தைகள் என்றால்....? அவர்களை சொல்வதில் குற்றமில்லை. அவர்கள் காட்டுமிராண்டிகாலத்திலிருந்து சற்றே வெளியில் வந்தவர்கள். ஆனால் இன்றும் அதனை வேதபுத்தகம் என்று தலையில் வைத்து கொண்டாடும் இவர்களை என்னவென்று சொல்லுவது?
ராஜா அவர்களே உங்களையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்.

Abdullah said...

குற ஆனின் உண்மையான அதன் பொருள் தெரிந்து அதனை தமது வேதமாகக் கொண்டு உலகின் கோடானு கோடிமக்கள் பின்பற்றுவது முட்டாள்தனம் என்றும் எண்ணிக்கையில் சொற்பமாக இருந்து கொண்டு அந்த வேதத்தின் வசனங்களையும் அதன் உண்மையையான பொருளையும் புரியாது மனம் போன போக்கில் தஜ்ஜால் என்ற பெயரில் தரும் இந்த கட்டுரை எழுதிய கம்யுனிஸ்ட்கள் மிகச்சிறந்த அறிவாளிகள் எனவும் நீங்கள் நினைக்கிறீர்கள்.... நீங்கள் உங்களை விளம்பரப் படுத்திக்கொள்ள உங்களின் கம்யுனிச கொள்கைகளை சொல்லுங்கள் உறவே... பிற மத கொள்கை உங்களுக்கு பிடிக்காததை ஏன் தேவையின்றி குழப்புகிறீர்கள்... பைபிள் சரியா குர் ஆன சரியா என்பதை அதை நம்புபவர்கள் அல்லவா கவலைப்பட வேண்டும்... 'செந்தோழன் ஷா இறையில்லா இஸ்லாம்' கேட்ட மாத்திரத்திலேயே இது என்ன என்று எல்லோருக்கும் தெரியும்... நீங்கள் குர்ஆனையும் பைபிளையும் குறை சொல்லி காயப் படுத்து முன் உங்களின் கோர்பசேவ் என்ன சொல்றார்,கம்யுநிசத்தால் வளர்ந்த ரஷ்ய தேசங்களில் தேனாறும் பாலாறுமாய் ஏன் தேவடியாக்குடிகள் பெருகின, மேற்கு வங்காளத்தில் ஏன் மண்ணைக் கவ்வினோம், இனி வரும் காலங்களில் வெறுமையாகிப்போன இந்த கம்யுனிசம் எனும் குருட்டுக் கொள்கை நிலைக்க என்ன செய்யலாம் என ஆராயுங்கள்.... உங்களைப்போன்ற நிறைய புரியுந்தன்மையற்றவர்களின் புலம்பல்கள் கம்யுனிசம் எனும் பிச்சைப் பாத்திரத்தின் எச்சில் பருக்கைகள் தான்... நேர்வழி பெற உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்..

Khader Mohideen said...

ஏன்டா ராஜா முண்டம்,
இஸ்லாமிய, கிறித்தவ மதத்தில் உள்ள குறைகளை நக்க வந்தியே , உன் ப்ரோபில் படம் (சிவன் படம் ) சொல்லும் தத்துவார்த்த அர்த்தம் என்ன?
விஷ்ணு பெண்ணாக மாறிய பொது அவனை சாமான் போட்டு புள்ளை குடுத்ததா?
பிறரின் முகத்தை கழுவ சொல்லும் முன் , உனது குண்டியை கழுவினால் நலம் :)

செங்கொடி said...

நண்பர் அப்துல்லா,

பொதுவெளியில் இருக்கும் எதையும் யாரும் விமர்சிக்கலாம். அதில் தவறிருந்தால், என்ன தவறு? எப்படி அது தவறு? எது சரி என்பதை நீங்கள் விளக்கலாம். மாறாக கம்யூனிசம் என்றதும் மொட்டை தாத்தன் குட்டையில் விழுந்தான் கதை போல கோர்பசேவ், மேற்கு வங்கம் என்று கழிவதற்குப் பதிலாக, (கம்யூனிசம் குறித்து உங்களுக்கு எதுவும் தெரியாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்) மெய்யாகவே உங்களுக்கு இஸ்லாம் குறித்து நல்ல்ல்ல்ல்ல்ல்ல புரிதல் இருந்தால்; தான் எழுதாத ஒரு கட்டுரைக்காக கடையநல்லூரில் தோழர் செந்தோழன்ஷா மீது பொருளாதார தடை விதித்து அவர் வயிற்றிலடிக்கிறீர்களே. இது உங்கள் இஸ்லாமிய முறைப்படியே சரிதானா?

நீங்களோ அல்லது கடையநல்லூரில் உங்களைப்போல் ஆத்திரப்படும் எவரும் இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா?

1) இந்த கட்டுரையில் என்ன தவறாக எழுதப்பட்டிருக்கிறது? அது எந்த விதத்தில் உங்களை புண் படுத்துகிறது?

2) கடையநல்லூரில் தோழர் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் இஸ்லாத்தின் எந்த அடிப்படையில் சரியானது?

முடிந்தால் பதில் கூற முயற்சியுங்கள்.

நந்தன் said...

அட கிறுக்கு பயபுள்ளைகளா ! யாரோ எழுதியதற்கு யாரையோ புடிச்சி தொங்குறீங்களே. தஜ்ஜால் என்றால் யார் என்று பிஜே விடம் கேட்டுபாருங்கடா. அவருக்கு தெரியும்.

அதுபோகட்டும் சிவனையும், அய்யப்பனையும் சொன்னா மட்டும் ருசிக்குதாக்கும். உங்க நபிமார்வோ வண்டவாலத்தை அதுவுட்டா மட்டும் மனசு கொதிக்குதாக்கும். கொதிக்கட்டும் கொதிக்கட்டும். அதுக்குதானே நாங்க உண்மைகளை புட்டு புட்டு எழுதறோம். பொய்யின்னு நிருபிக்க முடியுதான்னு பாருங்கடா. தெரியாத கம்யூனிசத்தை பற்றி உளராதீங்கடா.

நந்தன் said...

அப்துல்லாவே,உங்க முகம்மது நபி காலத்துல அத்தனை பேரும் அடிமைகளை புணர்ந்துவிட்டு கர்பம் உண்டாக விடாமல் விந்துவை வேளியே விட்டுவிட்டு கன்னி கழியாத பெண்கள் என்று வித்தாங்களாம். எல்லோரும் நம்புனது போல எல்லோரும் இப்படி செய்ததினால் நியாயம்தான் என்று தைரியமா இங்கே எழுது பார்கலாம்.

Khader Mohideen said...

தஜ்ஜால் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல என்பது எனக்கு தெரியும்.
ஒரு நல்ல நாத்திகன் மட்டுமே !!
அவரிடம் நான் பேசி இருக்கிறேன். ஆகவே அவரை கம்முனிச போர்வைக்குள் அமுக்கி இஸ்லாத்தை கரை சேர்க்க வேண்டாம்.
நண்பா நந்தா,
சிவனையும்,ஐயப்பனையும் சொன்னா சில முஸ்லிம்களுக்கு வேண்டும் என்றால் ருசிக்கலாம்.
ஆனால் அல்லாஹ்வையும், ஏசுவையும் சொன்னால் RSS காரனுக்கு இனிக்குதே ??
என்ன நினைக்கிறீங்க ??

Abdullah said...

செங்கொடிக்கு
கம்யுனிசத்தையும் இஸ்லாத்தையும் இவ்விதம் கழிப்பறைச் சுவரில் கரியால் கிறுக்கும் மொழிகொண்டு உங்களைப் போன்ற சிலருடன் நான் விவாதிப்பதையோ, அது சம்பந்தமாக இனி இங்கு கருத்துச் சொல்வதையோ விரும்பவில்லை... மனித வாழ்வின் நடை நெறிகளை போதிக்கும், நீ நம்பும் கம்யுநிசமும் நான் ஏற்ற இஸ்லாமியமும் ஆரோக்கியமான முறையில் திறந்த மனதுடன் அமர்ந்து விவாதம் செய்து புரிந்து கொள்ளுதலில் உள்ள நடைமுறை சிக்கல்களை நுண்மையாக விலக்கிய படி மனித நேயத்திற்கு சிறிதும் கேடு வாராது கருத்துகள் பகிரப் பட வேண்டும் அது தான் ஒற்றை நடைமுறை வேறு வழிஇல்லை. மாறாக இந்த கட்டுரை மட்டுமல்ல, உம் போன்றோரின் மற்ற சில பதிவுகளின் மூலமே உமது கூற்றுப்படி எனக்குத்தெரியாத அந்த புதிய கம்யுநிசத்துக்கு புதிய வடிவம் கொடுத்துள்ளது....
மற்றபடி கடையநல்லூரில் பதிவருக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து, ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் அவர் விதைத்ததை அவர் அறுத்தார். என்னைப் பொறுத்த மட்டில், அவர் எந்த இஸ்லாத்தை மலம் என வர்ணித்து அதனை அசிங்கப் படுத்தினாரோ அந்த இஸ்லாத்தை தனது வாழ்நெறியாக கொண்டு வாழும் மக்களிடம் தனது ஜீவாதாரத்திற்காக இனியும் அவர் நம்புவதும் கையேந்தி கடைவிரிப்பதும் கடைந்தெடுத்த மடத்தனம் மற்றும் நயவஞ்சகத் தனம்.... அந்தக் கடை முதலாளி இனி தனது கைச்சரக்கை அவரது அன்புக்குரியவர்களிடம் விற்கலாம். யார் தடுப்பார். இஸ்லாத்தில் மறுக்கப்பட்ட இறைச்சியை அவரிடம் யார் இனிக் கொள்வார். தஜ்ஜால்கள் தேடிவந்து அவரது கல்லாவை நிரப்புவார்கள். நாசப்பட்டு நலிவடையும் நாகரீகம் தெரியாத ஒரு பதிவனை ஒரு பார்வையாளனாக நானும் கண்டு பாதையோடு செல்கிறேன். நிறைந்த மனதுடன்.

மனிதன் said...

மற்றபடி கடையநல்லூரில் பதிவருக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து, ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் அவர் விதைத்ததை அவர் அறுத்தார். என்னைப் பொறுத்த மட்டில், அவர் எந்த இஸ்லாத்தை மலம் என வர்ணித்து அதனை அசிங்கப் படுத்தினாரோ அந்த இஸ்லாத்தை தனது வாழ்நெறியாக கொண்டு வாழும் மக்களிடம் தனது ஜீவாதாரத்திற்காக இனியும் அவர் நம்புவதும் கையேந்தி கடைவிரிப்பதும் கடைந்தெடுத்த மடத்தனம் மற்றும் நயவஞ்சகத் தனம்...//

அய்யா இஸ்லாம் எங்கே பிறந்தது நீங்கள் அங்கே இல்லாமல் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்.

இது அநீதி இல்லையா? இங்கே வாழ்க்கை நெறியாகக் கொண்டு பசுவை பூஜித்த மக்களின் முன்பாகவே அதை பிரியாணி செய்து சாப்பிடுகிறீர்களே? அது உருத்தவில்லையா? இது நேர்மையா?

உங்கள் வியாபாரத்தை உங்களுக்குள் மட்டும்தான் செய்கிறீர்களா? வேறு யாருக்கும் விற்பதில்லையா? தனியாக உங்க மக்களுக்காகவே நெல்லு, புல்லு, ஆஸ்பத்திரி, மருந்து மாத்திரை, எல்லாம் வெச்சிருக்கீங்களா? இப்ப நீங்கள் கமெண்ட் போட்டதுகூட உங்கூர் காரர் உருக்கி செஞ்ச கம்பியூட்டர்லதானா?

நீங்கள் தின்னும் சோறு நீங்கள் நம்பும் கடவுளின் மண்ணில் விளைந்ததா?

எல்லாம் வல்ல நீங்கள் நம்பும் அல்லா உங்களுக்கு நல்ல புத்தியையும் மனிதத்தையும் தருவாராக.

ஆமென்,,,

LIONS CLUB OF COURTALLAM VICTORY said...
This comment has been removed by the author.
நல்லூர் முரசு said...
This comment has been removed by the author.
நல்லூர் முரசு said...

உமர்ந்தரகன் கலீல் என்பவனால் எழுதி வேறொரு பெயர் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கும் இந்தக் கட்டுரைகள் தவறோ சரியோ அதைப்பற்றிய தர்க்கம் வேண்டாம்.
இஸ்லாம், இந்து, கிறிஸ்தவம், கடவுள், மனைவி, மக்கள் இவையெல்லாம் நம்பிக்கை சார்ந்த விஷயமே. ஒரு லெவலுக்கு மேல் இவைகளை யோசிக்கப்போனால் உன் பிறப்பே சந்தேகத்திற்குறியதாகிவிடும்.

கலீல் என்ற உன் அடையாளம் தாங்கியே கட்டுரைகள் எழுது எதற்கு பயப்பட வேண்டும்.

தேவையில்லாமல் ஒரு அப்பாவியை பகடைக்காயாக பயன் படுத்தி அவன் வாழ்க்கையை சீரழித்து விட்டாயே.

இதுதான் கம்யூனிச சித்தாந்தமா?

Anonymous said...

http://www.katturai.com/?p=1937

Khader Mohideen said...

அடப்பாவிங்களா !!

sheik said...

"பைபிளில் உள்ள லோத்துவின் கதை தெரியும். இதை என் ப்ளாக்கில் போட நினைத்திருந்தேன். ஆனால் குரானிலும் இந்தக் கதை இருப்பது உங்கள் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். மிக அருமை. வாழ்த்துக்கள் தஜ்ஜால்."

குர்ஆன் தெளிவான, நன்கு விவரிக்கப்பட்ட, முரண்பாடற்ற புத்தகமாக இருப்பதனால் இதற்கான பதிலை பெற நாம் தலைகீழாக நின்றாலும் குர்ஆனிலிருந்து கிடைக்காது. எனவே """முந்தைய வேதமான பழைய ஏற்பாட்டிற்குச் செல்வோம்.
லோத்துவின் கதை பைபிள் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமத்திலிருந்து...""

எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுகிறீர்கள். பழைய ஏற்பாடு உள்ளதெல்லாம் ஏதோ உண்மை மாதிரி கூறப்பட்டு உள்ளது. தெளிவான அறிவில்லாமல் வரலாறுகளை வைத்து எந்த முடிவும் எடுக்காதிர்கள் நண்பர்களே...

Anonymous said...

Ada muttal tajjaley
un alavukolpadi oruena punarchi(homesex) sariya?
Quran'i patri oru tajjal'ana nee sollavendam!
Nabimarkalai asingamaga pesubavaney marumaiyai anji kol!
Anru unaku therum yaaru loosu enru!

Anonymous said...

//
//அய்யா இஸ்லாம் எங்கே பிறந்தது நீங்கள் அங்கே இல்லாமல் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்//
ethai solvatarku nee yaaru?
Entha nadu enna unga appan sotha?
Ettanai veelai koduthu entha natai vangiullirgal?

Yahoa witness said...

நல்லூர் முரசு கூறுவது படி இந்தக் கட்டுரையை எழுதிய தஜ்ஜால் என்பவரினால் கடையநல்லூர்காரர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஒரு சித்தாந்தத்தின் மீது விமர்சனம் வைப்பவர் தன்னுடைய நேர்மையை நிரூபிக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் நேர்மையானவர்கள் என்று கூறுவார்கள். தன்னுடைய நேர்மையை தஜ்ஜால் நிரூபிக்கட்டும். அவர் வெறும் நாத்திகர் மட்டுமென்றால் செங்கொடி போன்ற வெளிநாட்டு கம்யூனிஸ்ட் நிரூபிக்க வேண்டும்.

Anonymous said...

அதாவது இன்றைய கம்யுனிஸ்ட் கொள்கை என்பதும் திராவிடர்களின் பகுத்தறிவு என்பதும்
வெறும் தெய்வ மறுப்பே அன்றி வேறில்லை .நல்ல வேளை
பெரியாரும் லெனின் காரல் மார்க்ஸ் போன்றோர்களும் உயிரோடில்லை.

பாமரன் part one said...

அறிஞர் தஜ்ஜால் அவர்கள் அல்-குரானின் பல வசனங்களை, பலர் அறியச் செய்திருப்பது, (அவரறியாமலே செய்த) ஒரு நற்செயலே! ஆனால் அவற்றை அவர் புரிந்துகொண்டது அவ்வளவுதான். ஏனெனப் பார்ப்போம். பைபிளின் லூத் நபியின் கடைசி காட்சியை (மகள்களுடனான உறவு) காட்டியவர், ஆரம்பத்தை (வசதிக்காக) விட்டுவிட்டார்போலும்! அவற்றைப்பாருங்கள்:

Genesis 18:22-33
English Standard Version (ESV)
கடவுள் ஆபிரகாமை நோக்கி, ;’ஆபிரகாம், சோதோம் , கொமோரா நகரங்களில் மக்கள் என்னுடைய கட்டளைகளைக் கடைபிடிக்கவில்லை. அவர்கள் தங்கள் மனம் போன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மனங்களில் தீய சிந்தனைகள் மட்டுமே நிறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட தீய சிந்தனை கொண்ட மக்கள் கூட்டம் வாழ்வதைத் தவிர அழிவதே நல்லது. எனவே அவர்களை நான் அழிக்கப் போகிறேன்’ என்றார்.
கடவுளின் திட்டத்தைப் பற்றி அறிந்த ஆபிரகாம் திடுக்கிட்டார். அங்கே தான் அவருடைய அண்ணன் மகன் லோத்து, குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.
அவர் கடவுளை நோக்கி,’ஆண்டவரே… தீயவர்களை அழிக்கும் உமது செயல் நல்லது தான். ஆனால் அங்கே நீதிமான்களும் இருக்கக் கூடும் அல்லவா? தீயவர்களை அழிக்கும் போது நல்லவர்களையும் அழிப்பீரோ ? ஒரு வேளை அந்த நகரில் ஐம்பது நீதிமான்கள் இருக்கலாம் இல்லையா ?’ என்றார்.
அதற்கு ஆண்டவர், ‘ஐம்பது நீதிமான்கள் அங்கே இருந்தால் அவர்களுக்காக அந்த நகரை அழிக்க மாட்டேன்’ என்றார்.
‘ஆண்டவரே, நான் உமது முன்னிலையில் ஒரு தூசிக்குச் சமமானவன், ஆனாலும் கேட்கிறேன் ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இல்லாமல் நாற்பத்தைந்து நீதிமான்கள் இருந்தால் என்ன செய்வீர் ? ‘
‘ஐந்து நீதிமான்கள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்காக நான் அந்த நகரை அழிக்காமல் விட்டு விடுவேன்’
‘கடவுளே.. நான் உம்மிடம் பேசத் துணிந்து விட்டேன். எனவே பேசுவேன். ஒருவேளை அங்கே நாற்பது நீதிமான்கள் மட்டுமே இருக்கக் கண்டால் நகரை அழிப்பீரோ ?’
‘நாற்பது நீதிமான்கள் இருந்தால் அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு அந்த நகர் அழிக்கப் படமாட்டாது’
ஆபிரகாம் தொடர்ந்தார்,’ கடவுளே கோபம் வேண்டாம். ஒரு வேளை முப்பது நீதிமான்கள் மட்டுமே இருக்கக் கண்டால் ‘
‘ஆபிரகாம்… அந்த நகரில் முப்பது நீதிமான்கள் இருந்தால் கூட அவர்களுக்காக அந்த நகரை நான் அழிக்க மாட்டேன்’
‘ஆண்டவரே.. நான் உமது அடியேன். ஒருவேளை இருபது பேர் மட்டுமே அந்த நகரில் இருந்தால் என்ன செய்வீர் ?’
‘இருபது நீதிமான்கள் இருந்தாலும் அந்த இருபது பேருக்காக அந்த நகரை அழிக்க மாட்டேன்…’
ஆபிரகாம் மீண்டும் கடவுளிடம்,’ ஆண்டவரே… இன்னும் ஒரே ஒரு முறை கேட்பேன். கோபம் வேண்டாம். ஒருவேளை பத்து நீதிமான்கள் மட்டும் காணப்பட்டால் சோதோம் நகரை அழித்து விடுவீரோ ?’ என்று கேட்க.
‘ஆபிரகாம், உன்னுடைய விண்ணப்பத்தைக் கேட்கிறேன். அந்த நகரில் பத்து நீதிமான்கள் இருந்தால் போதும். அவர்களுக்காக அந்த நகர் காப்பாற்றப் படும்’ என்று சொல்லி விட்டு கடவுள் விலகினார்.
ஆபிரகாம் தம் இல்லத்துக்குத் திரும்பிச் சென்றார்.
1. இதிலிருந்து அந்த ஊரில் பத்து நல்லவர்கள் கூட தேறமாட்டார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறதல்லவா?
அவ்வாறிருக்க,தஜ்ஜால் அவர்களே என்ன ஆதாரத்துடன் கீழ்கண்டவாறு கூறுகிறீர்கள்? தயவு செய்து கதைக்க வேண்டாம்.
[ஒரு பாவமும் அறியாத அப்பாவிகளும், பெண்களும், ஏதுமறியாத குழந்தைகளும் கூட ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்தனரா? இந்த கதையின் மூலம் அல்லாஹ் தனது அடியார்களுக்குக் கூறும் நீதிதான் என்ன?
இனப்படுகொலை!]
தஜ்ஜால் கேள்வி :
கொடுமையாகத் தண்டிக்குமளவிற்கு இவர்கள் என்ன தவறு செய்தனர்?
அல்லாஹ்வின் பதில் :
29:29. நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்” என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: “நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக” என்பது தவிர வேறு எதுவுமில்லை.

தஜ்ஜால் கேள்வி :
இந்த கதையின் மூலம் அல்லாஹ் தனது அடியார்களுக்குக் கூறும் நீதிதான் என்ன?
பாமரனின் பதில்: இதுகூட சொல்லித்தான் தெரியவேண்டுமா தஜ்ஜால் அவர்களே ! கெடுவான் கேடுநினைப்பான் அல்லவா? குற்றம் புரிந்தவன் தண்டனையைப் பெறுவதுதானே நம் மரபு!
தஜ்ஜால் பதில்: இனப்படுகொலை!
பாமரனின் பதில்: அநீதி நிலைக்காது. தாங்கள் செய்வது வேண்டுமானால் அதுவாக இருக்கலாம்தானே?
தஜ்ஜால் கேள்வி :
பெண்களும், ஏதுமறியாத குழந்தைகளும் கூட ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்தனரா?
பாமரன் பதில்: பெண்ணுறவை வெறுப்பவர்களுக்கு எங்கிருந்தையா குடும்பம் வந்தது? பெண்களின் ஓரினச்சேர்கையைப் (லெஸ்பியன்) பற்றிய அறிவற்றவரா தாங்கள்!

பாமரன் Part 2 said...

2. இரண்டாவதாக அவ்வூர் மக்களுக்கு எது அறவே பிடிக்காது என்பதை தஜ்ஜால் அவர்களே கீழ்காட்டியவாறு எடுத்துரைத்துள்ளார்கள்:
"ஆனால் அந்த கூட்டத்தினர் தங்களது தேவையைக் குறித்து தெளிவாகவே இருந்தனர்.

"உமது புதல்விகளிடம் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் உறுதியாக அறிவீர்! நாங்கள் விரும்புவதையும் நீர் அறிவீர்'' என்றனர்.
குர் ஆன் 11:79"
[சரியான மொழிபெயர்ப்பை கீழே காண்க : “தேவை” என்ற சொல்லுக்கு பதில் “பாத்தியதை” என இருப்பதே சரி ;
11:79. (அதற்கு) அவர்கள் “உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்” என்று கூறினார்கள். (They said: Certainly you know that we have no right on your daughters, and most surely you know what we desire.)]
ஆக, தஜ்ஜாலின் வார்த்தைப்பாட்டின்படி, அவர்களுக்கு பெண்ணுறவு தேவையில்லை என்பதை லூத் நபி நன்றாகவே அறிந்திருந்தார் என்பதில் ஏதும் ஐயமுண்டோ?
சரியான மொழிபெயர்ப்பின்படி, அவர்களுக்கு லூத் நபியின் பெண்கள்மேல் எந்த பாத்தியதையுமில்லை என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள் என்பதும் விளங்குகிறதன்றோ?
அவ்வாறிருந்தும் , லூத் நபி தன் பெண் மக்களை யாருக்காக , எதற்காக கொடுக்க முன்வந்திருப்பார் என சிறிதாவது சிந்தனை செய்துக்கலாமே தஜ்ஜால் அவர்களே? இரண்டு நல்ல ஆண்களாவது அவர்களில் இருந்திருக்கலாம் என்ற நப்பாசை லூத் நபிக்கு இருந்திருக்கலாம்தானே? அவ்வாறு இருந்திருப்பின் அதன் பொருட்டால் இறைவனிடம் அம்மக்களை மன்னிக்கும்படி இறைவனிடம் மன்றாடலாம்தானே! ஏன் தங்கள் சிந்தனை தவறான பாதையில் செல்லவேண்டும்?
தஜ்ஜால் கேள்வி :
காலமெல்லாம் போதனை செய்து இறுதியில் தனது மகள்களையே பாலியல் அடிமைகளாக பலியிட முயன்ற நபி லூத் ஒரு ’லூஸ்’தானே?
பாமரன் பதில்: மேலே தரப்பட்ட விளக்கத்தைப் படித்தபின் யார் லூஸ் என்பதை நல்மனம் படைத்த வாசகர்கள் முடிவுசெய்து கொள்வார்களாக!
3. மூன்றாவதாக
தஜ்ஜால் கேள்வி :
சரி... தப்பிச்சென்ற ’லூசு’ (மன்னிக்கவும்) லூத் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் (மகள்கள்) என்ன ஆனார்கள்?
தஜ்ஜால் பதில்: குர்ஆன் தெளிவான, நன்கு விவரிக்கப்பட்ட, முரண்பாடற்ற புத்தகமாக இருப்பதனால் இதற்கான பதிலை பெற நாம் தலைகீழாக நின்றாலும் குர்ஆனிலிருந்து கிடைக்காது.
பாமரன் பதில்: நாம்தெரிந்து கொள்ள வேண்டியது முஸ்லிம்கள் இன்ஜீலின் (பைபிள்) முதல் வெளிப்பாட்டை நம்புபவர்கள்; ஆயினும் பிற்காலத்திய திரிபுகளை அல்-குரான் மூலமாக அறிந்தவர்கள். ஐம்பதிற்கும் மேற்பற்ற நிகழ்வுகள் இரண்டு மறைகளிலும் வருகின்றன; ஆயினும் நிகழ்வுகளின் முடிவுகள் வேறானவை. எடுத்துக்காட்டாக ஆதாமின் தவறு மன்னிக்கப்பட்டது என அல்-குரானும் , தொடர்கிறது என பைபிளும் கூறுகின்றன. ஈசா நபி கொல்லப்பட்டார் என பைபிளும் அப்படியில்லையென அல்குரானும் கூறுகின்றன…….. எனவே,இதற்கான பதிலை தலைகீழாக நின்று, குர்ஆனிலிருந்து பெற முயற்சிப்பவர்கள் தான் லூசுகள் என்பதில் என்ன தவறிருக்க முடியும்! ஆயினும் தஜ்ஜால் அவர்களே “குர்ஆன் தெளிவான, நன்கு விவரிக்கப்பட்ட, முரண்பாடற்ற புத்தகம்” என பறைசாற்றியதற்குரிய நன்மையை அடைந்துவிட்டீர்தானே! இருப்பினும் ஒரு சந்தேகம்; பைபிளின் நூஹ் நபியின் இறுதி பாகம் தங்களுக்கு மிகவும் கிலுகிலுப்பை ஊட்டியிருக்கும்போல! அந்தோ அல்-குரான் தங்கள் விபரீத ஆசைகளுக்கு இடம் தராத ஏக்கமோ!

பாமரன் Part 3 said...

4. அல் குரான் வந்து 1400 ஆண்டுகளாக மாக்களை மக்களாக்கி நல்வழிபடுத்துகிற சமாச்சாரம் கூடத் தெரிந்துகொள்ளாத பேரறிஞர் தஜ்ஜாலின் இன்றைய கண்டுபிடிப்பு:
மனிதர்களை நல்வழிபடுத்த எண்ணற்ற தீர்க்கதரிசிகளை (நபி) மனிதர்களிடத்தில் அல்லாஹ் அனுப்பியுள்ளதாகவும், அந்த தீர்க்கதரிசிகள் அல்லாஹ்வின் செய்தியை மக்களிடையே கூறி, ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் வாழ்ந்தனர் என்கிறது குர்ஆன்.
ஆனால் உண்மை இதற்கு நேர் எதிரானது. குர்ஆனைப் பொருளுணர்ந்து வாசிக்கும் எவராலும் இதை அறியமுடியும். இந்த முரண்பாட்டை, இஸ்லாமிய அறிஞர்கள் அடைப்புக்குறிகளுக்குள் மறைத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.
இவர்களின் ஏமாற்று வேலையை எளிதாக புரிந்துகொள்ள நாம் இன்று லூத்(லோத்து) என்பவரின் கதையைப் பார்க்கலாம்.

பாமரன் பதில்: பதினான்கு நூற்றாண்டுகளாக பல்லாயிரக்கணக்கான அரபி அறிஞர்கள் கண்களில்படாத பேருண்மைகள் இன்றைய தஜ்ஜால் அவர்களுக்கு வெளிப்படுகின்றன போலும்! அரபி மொழியில் ஒரே வார்த்தைக்கு மிகப்பல பொருள்களுண்டு என்பதும், சரியான பொருள் பேசப்படுகிற இடம் பொருள் ஏவல் சந்தர்ப்பங்களை வைத்தே (CONTEXT) அறியப்படும் என்பதும், அதனால் பிறமொழிகளில் விளக்கமாகப் புரிதல் வேண்டி சில சொற்களை அடைப்புக்குறியில் போடவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளமையும் விளங்காத அல்லது தெரிந்தும் தெரியாதவர்களை அவர்களைப்படைத்த யாரோ முடிந்தால் காப்பாற்றட்டும். நண்பர் தஜ்ஜால் எடுத்துக்காட்டியுள்ள திருக்குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் மேலே தந்துள்ள விளக்கங்களின் வெளிச்சத்தில் பார்க்கிற வாசகர்களுக்கு இது தெரியாமல் போக வாய்ப்பில்லை. யார் ஏமாற்ற முற்படுகின்றனர் என்று சொல்லவும் வேண்டுமோ?

5. இறுதியாக நண்பர் தஜ்ஜால் நபி சல்லால்லாஹ் அலைகிவசல்லாம் அவர்களைப்பற்றியும் அவர்தம் தோழர் பற்றியும் எழுதியுள்ள விஷ(ய)ம், அவர் தன் பகுத்தறிவை யாருக்காகவோ எதற்கோ விலைபேசிவிட்டார் என்பதை நிதர்சனப்படுத்துவதால் அந்தச் சேற்றில் நாமும் விழாது பார்த்துக்கொள்வதே விவேகமாகும்.

இபுலீஸ் said...

"அந்தோ அல்-குரான் தங்கள் விபரீத ஆசைகளுக்கு இடம் தராத ஏக்கமோ!"
சே. அப்படியில்லாம் இல்லைங்க. பைபிளை விட அதிகமாக கிளுகிளுப்பு உங்க அல்-குரான்ல இருக்குங்க. எங்க சமுதாயத்தில ஒரேயொரு திருமணம்தான் பண்ண முடியும். உங்க அல்-குரான் படி நிறைய திருமணம் பண்ணலாம். சுவனத்தில போய் குரூப் செக்ஸ் பண்ணலாம் 72 கன்னிகளோட.

பைபிள்ளயாவது 1400 வருடங்களுக்கு முன் நடந்த சரித்திர சம்பவங்களாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. ஆனா உங்க அல்-குரான் படி presentலயும் futureலயும் ஒரே கிளுகிளுப்புதான்.
உங்க முன்மாதிரி முகம்மது வயசு குறவா இருக்கும் போது ஆன்டிமார கண்ணாலம் பண்ணாரு. வயசு கூடுன பொறவு பேத்தி வயசுல உள்ள சின்ன பாப்பாக்கள கண்ணாலம் பண்ணாரு.

சக்களத்திகள், வைப்பட்டிகள், அடிமைப்பெண்கள், சுவன ஹூரிக்கள்72, கில்மான்கள் 28- அதாவது ஹோமோசெக்ஸ் - இவ்வளவத்தையும் அனுபவிக்கணும்னா இஸ்லாம்தான்.

ஒரே கிளுகிளுப்புதான்.

அ. வேல்முருகன் said...

பதிவு எழுதியவரும், பின்னுட்டமிட்ட மக்களும், அந்தகால மக்களின் வாழ்க்கை முறையை அறிந்திருந்தால் இதுபோன்ற கருத்துக்கள் வந்திருக்காது.

ராகுல்ஜி வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலில் இதை ஒருவாறு சொல்லியிருக்கிறார்

mohammedsolomon said...

http://devapriyaji.wordpress.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/

Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8
இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல்.
இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.
1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.
2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.
3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.
4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.
5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.
6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.
7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.
Quran follows and repeats mostly the Bible- what use

குற்றவாளிகளை பிடிப்பவன் said...

தஜ்ஜால் அவர்களுக்கு ரொம்பவும் பொறுமையாக பதில் அளித்து இருக்கிறார் பாமரன். இதன்மூலம் 'இஸ்லாத்தில் பதில் இல்லை' என்ற பொய் பிரச்சாரம் இங்கேயும் சாகிறது.

ஆனால், இது எனக்கு முன்பே தெரியும்.

இந்த தளத்தின் நிறுவனர் தஜ்ஜால் அவர்கள், இதே இடுகையிலேயே ஆரம்பத்தில் சொல்கிறார்.

இப்படி-
இபுராஹீம் நபியிடம் வரும் வானவர், பக்கத்து ஊரான லூத் நபி ஊரை அழிக்க செல்வதாக.

ஆனால், நபி லூத் தன் ஊர் அழிக்கப்பட்ட பின்னர், தன் மகள்களுடன் எங்கே சென்று இருப்பார்?

நபி லூத்தாக இருந்தால் நான் எங்கே சென்று இருப்பேன்?

படிக்கும் நீங்கள் நபி லூத்தாக இருந்தால் எங்கே சென்று இருந்திருப்பீர்கள்?

ஆம்,
பக்கத்து ஊரான இப்ராஹீம் நபி ஊருக்குத்தானே சென்று இருப்பார்கள்? அங்கே சென்று தன் மகள்களை அந்த ஊரு இளைஞர்களுக்கு திருமணம் செய்து தந்திருக்கலாம். தானும் அங்கே வேறு யாரையாவது திருமணம் செய்து இருக்கலாம்.

அந்த ஊரில் ஏற்கனவே இபுராஹீம் நபி இருப்பதால், நபி இல்லாத வேறு ஊருக்கு இறைவன் அவரை போஸ்டிங் போட்டு இருக்கலாம்.

இந்த சின்ன அறிவு கூடவா வேலை செய்யாது தஜ்ஜால் அவர்களுக்கு?

என்ன உலகமேவா அழிந்து விட்டது? ஒரு ஊர் மட்டும்தானே அழிந்தது? லூத் நபி மட்டுமேவா அன்றைய உலகில் ஒரே ஆணாக இருந்தார்?

என்னப்பா நீங்கள்?

கம்யுனிசமும் உங்களுக்கு தெரியாது. இஸ்லாமும் உங்களுக்கு தெரியாது.
ஆனால், அவதூறு ஆபாச பொய்களை டைப் அடிக்க மட்டும் நல்லா தெரியும்.

அடப்போங்கப்பா.
போயி உங்க புள்ள குட்டிங்களையாவது நல்ல இஸ்லாமிய மதரசாவில் நல்லா படிக்க வைங்கப்பா.

Anonymous said...

பெண்ணுறவை வெறுப்பவர்களுக்கு எங்கிருந்தையா குடும்பம் வந்தது? பெண்களின் ஓரினச்சேர்கையைப் (லெஸ்பியன்) பற்றிய அறிவற்றவரா தாங்கள்!//அப்போ அவெங்க எல்லாம் எப்படி பொறந்தாங்க....ஊருல வயசானவன் யாருமே இல்லையா?....அப்படி யாருமே இல்லைன்னு அல்லாவெ சொல்லம இவருக்கு மட்டும் எப்புடி தெரியும்?
//அவ்வாறிருந்தும் , லூத் நபி தன் பெண் மக்களை யாருக்காக , எதற்காக கொடுக்க முன்வந்திருப்பார் என சிறிதாவது சிந்தனை செய்துக்கலாமே தஜ்ஜால் அவர்களே? இரண்டு நல்ல ஆண்களாவது அவர்களில் இருந்திருக்கலாம் என்ற நப்பாசை லூத் நபிக்கு இருந்திருக்கலாம்தானே? அவ்வாறு இருந்திருப்பின் அதன் பொருட்டால் இறைவனிடம் அம்மக்களை மன்னிக்கும்படி இறைவனிடம் மன்றாடலாம்தானே!//முதல்ல யாருமே இல்லை அதனால குழந்தையே இல்லைன்னு ஒரு பேச்சு அப்புரம் யாராவது இருக்காங்கன்னு ஒரு பேச்சு எது உண்மை?அப்படி இருவர் இருந்தால் !மற்றவர்கள் சும்மா இருப்பார்களா?அவர்களை யார் தடுப்பார்கள்?உங்க அல்லாதான் இதை எல்லாவர்றையும் வேடிக்கை அல்லவா பர்த்துகொண்டு இருக்கிறான்?

Anonymous said...

என்ன உலகமேவா அழிந்து விட்டது? ஒரு ஊர் மட்டும்தானே அழிந்தது? //என்னா ஒரு நியாயமான பதில்...இப்படியே போயி என்னா உலகமேவா அழிந்துவிட்டது ஒரு நாடுதானேன்னு சொல்லுங்க!.....இப்போ ஏன் உங்க அல்லா கல்லெறி...நபி யெல்லாம் கொடுக்க மாட்டேங்கிறான்...ரொம்ப வீக்காயீட்டானோ!கல்லெறிய அல்லாவால் நேரடியாக முடியாதோ அதுக்கும் ரெண்டு அடியாஅள் தேவை படுதோ?அதுவும் அவர்கள் ஏன் லூத்திடம் போய் தங்குகிறார்கள்?ஊரையே அழிக்க வந்திருக்கும் அவர்களுக்கு அவர்களை காப்பாற்ர முடியாதா?அவர்களை லூத் மகள்களை கொடுத்துதான் காப்பாஅர்ற வேண்டுமாக்கும்?

Anonymous said...

தஜ்ஜால் பகடு பக்கம் எங்கே கானோம்...?வேறேதாவது இனைப்பு இருக்கிறதா?

Anonymous said...

பாமரன் போன்றோர் பதிவுகத்திற்கு வரவேண்டும்!?

Natharsha said...

Prophet Luth history is given in Quran as a reference for mankind what will happen if u do against nature.
Almighty , allah (most graceful and merciful) knows very well than us what is the role of men and women.That’s why he created 2 different creations and make them dependant on each other, Prophet Luth followers was not listen him and they relay in homosexuality that’s against nature when a proper pair is given to them so almighty,allah wants future generation to learn lesson from them so he destroyed that group of peoples and teaches the lesson for entire mankind till the end of mankind. And each and every muslims are guide by the god and his prophet Mohamed, they doesn’t have any question about what happen to Prophet luth, after this incident, since the motto is to gain knowledge homosexuality is not good for mankind and that we understood correctly.

Try to understand Quran in a right manner then only you can realize the truth behind it and it’s all in Almighty, allah he is the one who can show right path to whom he wants and he will kept others in dark as a example to show the believers what will happen if we are not follow the words of allah.
I will pray for you guys may allah will show you right path…

ஆனந்த் சாகர் said...

@Natharsha,


//allah wants future generation to learn lesson from them so he destroyed that group of peoples and teaches the lesson for entire mankind till the end of mankind.//

இது அடி முட்டாள்தனமான வாதம். ஒரு வாதத்திற்காக கடவுள் இருக்கிறார் என்று வைத்துகொள்வோம். இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தை மனிதர்களுக்காக படைத்தார் என்று நம்புவதும் அவர்களுடைய பாலுறவு வாழ்க்கை குறித்தெல்லாம் அவருக்கு ஆர்வம் இருக்கும் என்று நினைப்பதும் சுத்த மடத்தனம் அல்லாமல் வேறு என்ன? அதுவும் ஓரின பாலுறவு கொண்ட மக்களை கடவுள் கொடூரமாக கொன்று அந்த கேடுகெட்ட கொலை செயலை பின்வரும் மனித சந்ததிக்கு பாடமாக ஆக்கினார் என்று முஸ்லிம்கள் உளறுவது நகைப்புக்குரிய விஷயம். ஓரின பாலுறவு இச்சை கொள்வது ஒரு வித மனக்கோளாறு. அதை குணபடுத்த வேண்டுமே ஒழிய ஓரின சேர்க்கையாளர்களை கொல்ல கூடாது. இது கூட தெரியாதா அனைத்தையும் படைத்த அல்லாஹ்வுக்கு? பைபிளில் உள்ள கதையை முஹம்மது கேள்விப்பட்டு அதை தான் புனைந்த குர்ஆனில் உளறினால், உங்களை போன்ற முஸ்லிம்கள் அதை எந்த சிந்தையும் இன்றி விழுங்கிவிட்டு அப்படியே எங்களிடம் வந்து வாந்தி எடுப்பதா? என்ன அறிவீனம்!

கனடா நாட்டின் அமைச்சர் அவர்கள் நாட்டின் நாடாளுமன்றத்தில் இப்படி கூறினார் : "ஒரு நாட்டுக்கு தன் குடி மக்களின் படுக்கை அறை விஷயங்களில் எந்த பங்கும் இல்லை." இது தான் நாகரிக சமுதாயத்தின் குரல். ஒரு முஸ்லிமாக இதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒரு நாகரிக மனிதனால் முடியும்.

Anonymous said...

Ibnu Lahab,
you mentioned here about vishnu.I understand that you just get information from oral way.

could u prove from Hindu text books. no sir. Never ever mentioned in any hindu text books regarding your strong allegations.

Unknown said...

இந்து மற்றும் முஸ்லிம் சகோதரர்களே


அல்லஹ் உம் சிவனும்,
ராமனும் ரஹிமும் ஒருவரே
-கபிர் பெருமான்

என்று எல்லோரும் இருந்துவிட்டல் நம் இந்திய நாட்டில் அமைதிக்கு பஞ்சம் இல்லை..
இந்து மசூதிக்கு போவதும்,
முஸ்லிம் கோவிலுக்கு வருவதும் அன்றாடம் நடக்கிறது..
இந்தியா ஒரு சமத்துவநாடு என்பதற்க்கு இது போதாதா..

shafi said...

//அதுவும் ஓரின பாலுறவு கொண்ட மக்களை கடவுள் கொடூரமாக கொன்று அந்த கேடுகெட்ட கொலை செயலை பின்வரும் மனித சந்ததிக்கு பாடமாக ஆக்கினார் என்று முஸ்லிம்கள் உளறுவது நகைப்புக்குரிய விஷயம்.//

ஓரினச் சேர்க்கையின் விபரீதம் உங்களுக்கு புரியவில்லை என்பது தான் உண்மையில் நகைப்பிற்குரிய/வருத்தத்திற்குரிய விஷயம்.

ஓரினச் சேர்க்கை என்னும் விபரீதம் லூத்(அலை) அவர்கள் காலத்தில் மிக வேகமாக பரவியது. அதன் விளைவாக மனிதர்களின் இயல்பான ஆண் பெண் உறவு என்பது முற்றிலும் இல்லாமல் போனது. திருமணத்திலும் குழந்தை பெறுவதிலும் நாட்டமில்லாமல் சமுதாய சீரழிவிற்கு காரணமாக அவர்கள் இருந்தனர்.

இப்போதும் கூட ஓரினச் சேர்க்கைக்கு கொடி பிடிக்கும் நாத்திக நாடுகளில கணவன் மனைவி உறவை பேணுதல் என்பதே இல்லாமல் போய்விட்டது. கணவனுக்கு பிறந்த குழநதைக்கு மனைவி தாயில்லை. மனைவிக்கு பிறந்த குழநதைக்கு கணவண் தந்தையில்லை என்ற இழி நிலை அங்கு இப்போதே வந்துவிட்டது. கணவன் இன்னொரு கணவனுடனும் மனைவி இன்னொரு மனைவியுடனும் தவறான உறவு கொள்ளும் நிலை தான் அங்கு உள்ளது.
அந்த நாடுகள் ஓரினச்கேர்க்கையின் விபரீதத்தை உணர்ந்து அதை தடை செய்யும் நாள் விரைவில் வரும்.(இன்ஷா அல்லாஹ்)

இத்தகைய அசிங்கத்திற்க்கு வக்காலத்து வாங்கும் அளவுக்கு உங்களது நாத்திகக் கொள்கை உங்களை கொண்டு வந்துவிட்டது பரிதாபமாக உள்ளது.

//ஓரின பாலுறவு இச்சை கொள்வது ஒரு வித மனக்கோளாறு. அதை குணபடுத்த வேண்டுமே ஒழிய ஓரின சேர்க்கையாளர்களை கொல்ல கூடாது.//

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் நம்பிக்கைப் படி இயற்கைக்கு ஒரு மனிதனை படைக்கவும் அழிக்கவும் என்ன உரிமை உள்ளது என்று நம்புகிறீர்களோ, அதே போலத் தான் இறைவனுக்கு மனிதனை படைக்கவும் அளிக்கவும் உரிமை உள்ளது. அது கொலை அல்ல. மனிதர்கள் அனைவரும் முன்னரோ அல்லது பின்னரோ மரணிப்பவரே!
ஓரினச் சேர்க்கையாளர்களை குணப்படுத்தத் தான் லூத்(அலை) என்ற தூதர் அனுப்பப்பட்டார். அவர்கள் சிகிச்சைக்கு மறுத்தார்கள். மருத்துவரை (நபியை) கைகளாலும் வாய்களாலும் துன்புறுத்தினார்கள்.. அது மட்டுமல்லாமல் ‘நீ முடிந்தால் உன்னுடைய இறைவனிடமிருந்து வேதனையை எங்கள் மீது வரச்செய்து பார்’ என்று ஏளன ந்கையாடினார்கள். அவர்களது விருப்பம் போன்று அவர்களை அவர்களது இறைவன் அளித்தான்.
இதன் மூலம் ஓரினச் சேர்க்கை தவறு என்று பின்னர் வரும் நம் போன்ற மக்களுக்கு இறைவன் உணர்த்தி உள்ளான்.(இன்னும் பாடம் படிக்காதவர்கள் பலர்)
அன்று அவர்களை இறைவன் அளித்திருக்கவில்லை என்றால் அந்த தீமை அருகில் இருந்த ஊர்களுக்கும் உலகம் முழுமைக்கும் பரவி இருக்கும். இன்று நாம் இருந்திருப்போமா என்பது சந்தேகமே!
700 கோடி மக்கள் தொகையை சில வருடங்களிலேயே 100 கோடி ஆக்கும் வலிமை ஓரினச் சேர்க்கைக்கு உண்டு.
//கனடா நாட்டின் அமைச்சர் அவர்கள் நாட்டின் நாடாளுமன்றத்தில் இப்படி கூறினார் : "ஒரு நாட்டுக்கு தன் குடி மக்களின் படுக்கை அறை விஷயங்களில் எந்த பங்கும் இல்லை." இது தான் நாகரிக சமுதாயத்தின் குரல்.//
சரிதான். ஆனால் ஒருவன் படுக்கையறையில் கொலை செய்தால் அதை அரசாங்கம் விட்டுவிடலாமா! கொலைக்கு சமமான அல்லது அதற்கும் மேலான இந்த தவறை அரசாங்கம் கண்டிக்க வேண்டும் தண்டிக்க வேண்டும்.
தனி மனித சுதந்திரம் தேவை தான். ஆனால் மனித சமுதாய நலனுடன் கூடிய தனி மனித சுதந்திரம் தான் சிறந்தது.
இப்போது சொல்லுங்கள் சகோதரரே..
நாத்திகமா! அல்லது நேர்வழியா!

உங்கள் மீது ஏக இறைவனை சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

-shafi