Tuesday, 23 August 2011

ஃபிர்அவ்னும் குர் ஆனின் கட்டுக் கதைகளும்குர் ஆனின் பெருமைகளை கூறும் சொற்பொழிவுகளில் பாதுகாக்கப்பட்ட பிர்அவ்னின் உடலுக்குதனி இடம் எப்பொழுதும் உண்டு.

10:92 எனவே, இன்று உன்னை - உன்னுடைய உடலோடு உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு நீ ஒரு படிப்பினையாய் இருப்பதற்காக நாம் பாதுகாப்போம்...

என்ற குர் ஆன் வசனத்தையும் மனிதர்களால் பாதுகாக்கப்பட்ட இரண்டாம் ரமேசஸ்-ன் உடலையும் பக்குவமாக இணைத்துக் கூறி அப்பாவி வெகுமக்களை வியப்பினால் புல்லரிக்கச் செய்துவிடுகின்றனர். 

இதில் வியப்பதற்கு எதுவுமில்லை. பிர்அவ்ன்-ஃபேரா (Pharaoh) என்பது, அரசர், மன்னர், பிரதமர், முதலமைச்சர் என்று ஆட்சியாளர்களைக் குறிப்பிடுகின்றதைப் போன்ற பொதுப்படையான பெயர்ச் சொல். குறிப்பாக கூறுவதென்றால், பிர்அவ்ன்-ஃபேரா (Pharaoh) என்பது பண்டய எகிப்திய அரசர்களின் பட்டப்பெயர்கள். பிர்அவ்ன் என்ற இறந்த அரசர்களின் உடல்கள் பிரமிடுகளில் வைத்து பாதுக்காக்கப்படுவது, முஹம்மது அவர்களின் காலத்து மக்கள் மட்டுமல்ல இறந்த உடல்களை மம்மிகளாக பாதுகாக்க துவங்கிய காலத்திலிருந்தே அனைவரும் அறிந்திருந்த ஒரு மிகச் சாதாரணமான செய்திதான் என்று மறுப்புக்களை கூறினாலும் இஸ்லாமியர்கள், பாதுகாக்கப்பட்ட பிர்அவ்னின் உடலை விடுவதாக இல்லை. அப்பாவி முஸ்லீம்களின் கைப்பேசிகளிலும் இன்றும் காணப்படும் இரண்டாம் ரமேசஸ்-ன் உடலை காண்பிக்கும் வீடியோ காட்சிகளே இதற்கு உதாரணமாகும்.

காலம் சென்ற சவுதி அரசர் ஃபைஸல் அவர்களின் குடும்ப மருத்துவர் மாரீஸ் புகைல் என்பவர் 1976-ல் இதற்கு திரைக்கதை அமைத்தார். அவர் எழுதிய “The Bible, The Quran and Science” என்ற புத்தகம், இஸ்லாமிய உலகின் பட்டிதொட்டிகளில் எல்லாம்  டாலர்களைக் குவித்தது. ஏறக்குறைய எல்லா முஸ்லீம் நாடுகளும் இப்புத்தகத்தை தங்களது தாய்மொழியில் மொழிபெயர்த்து புண்ணியம் தேடிக் கொண்டன. இன்று மதரஸாக்களிலிருந்து வெளியேரும் ஒவ்வொரு முல்லாவும் தவறாமல் படிக்கின்ற வேதபுத்தகமாகவும் இது ஆகிவிட்டது. 

நாம் குர் ஆன் கூறும் பிர்அவ்னின் கதையைத் தொடர்வோம்.

எகிப்திலிருந்த யூதர்களை  பிர்அவ்ன், அவர்களது பச்சிளம் ஆண்மக்களைக் கொன்றும், பெண்மக்களை அடிமைகளாக வாழவிட்டும் கொடுமை செய்தான். இக்கொடுமையிலிருந்து யூதர்களைக் காப்பாற்ற, அல்லஹ், மூஸாவையும், அவரது சகோதரர் ஆரூனையும் தனது தூதராக பிர்அவ்னிடம் அனுப்புகிறான். அங்கு நிகழும் மாயாஜாலப் போட்டியில் மூஸாவின் வெற்றி, பிர்அவ்னைக் கோபப்படுத்துகிறது. இருப்பினும் யூதர்களை மூஸாவுடன் அனுப்ப ஒப்புக்கொள்கிறான். மூஸாவின் தலைமையில் செல்லும் யூதர்களை அழிக்க பின்தொடந்த பிர்அவ்னையும் அவனது படைகளையும் செங்கடலில் மூழ்கடித்து அழித்ததாக அல்லாஹ் கூறுகிறான். 

தண்ணீரில் அமிழ்த்திக் கொன்றதாக அல்லாஹ் உரிமைகோரும் பிர்அவ்னின் பெயரையோ, அவனது உடல் பாதுகாக்கப்பட்ட முறையையோ, இடத்தையோ குர்ஆன் குறிப்பிடவில்லை. 

Onlinepj.com-ன் வருமுன் உரைத்த இஸ்லாம் என்ற நூலில் 33 பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல் எனும் தலைப்பிலிருந்து...


கிபி 1800 களில் ஃபிர் அவ்ன் ரமேசஸ்-ன் உட்பட அரசகுடும்பத்தினரின் பெரும்பாலான பாதுகாக்கப்பட்ட உடல்கள் நைல் நதிக் கரையில் கட்டப்பட்டிருந்த பிரமிடுகளிருந்துதான் கண்டெடுக்கப்பட்டன. ஃபிர்அவ்ன் ரமேசஸ் உடல், வரலாற்று ஆய்வாளர்களால்  KV7 என்று குறிப்பிடப்படும் பிரமிடுவில்தான் வைக்கப்பட்டிருந்தது. கொள்ளையர்களை அஞ்சிய அன்றைய மதகுருமார்கள், ஃபிர்அவ்ன் ரமேசஸ்-ன் உடலைப் பாதுகாப்பான வெவ்வேறு இடங்களுக்கு இடம்மாற்றினர். இத்தகவல்கள் அனைத்தையும் ரகசியக் குறியிடுகளாக ஃபிர்அவ்ன் ரமேசஸ்ன் உடலைச் சுற்றியுள்ள துணியில் பதிந்துள்ளனர்.

உண்மை இவ்வாறிருக்க பனிப்பாறைகளுக்கிடையே ஃபிர்அவ்ன் ரமேசஸ்-ன் உடல் இருந்ததாக கதையளக்கிறார் பீஜே. ஃபிர்அவ்ன் ரமேசஸ்-ன் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பள்ளத்தாக்கு இதுதான். பனிப்பாறை தென்பட வாய்ப்பிருக்கிறதா? என்பதை நீங்களே பாருங்கள்


பீஜே இப்படி கதையளந்தற்கு காரணம் உள்ளது. பின்வரும் படத்தைப் பாருங்கள்
       
Mummy of Ramses II

இந்த உடல் மனிதர்களால் பாதுகாக்கப்பட்டதுதான் என்பது பார்த்தவுடன் எளிதாக சொல்ல முடியும். அல்லாஹ்வின் வித்தை இதில் ஏதுமில்லை என்பது பீஜேவும் உணர்ந்திருக்கிறார். எனவேதான் பனிப்பாறை கதையை நுழைக்க முயற்சிக்கிறார்.

1974-ல் ஃபிர் அவ்ன் ரமேசஸ்-ன் உடல் பூஞ்சை தாக்குதல் காரணமாக விரைவாக பாதிப்படையத் துவங்கியது. அப்பொழுதும் அல்லாஹ் எந்த தடுப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. ஆய்வாளர்களின் முயற்சியால் கடவுச்சீட்டு சகிதமாக ரமேசஸ்-ன் உடல் பாரீஸூக்கு அனுப்பி அரசரின் பூஞ்சை நோய்க்கு மருத்துவம் செய்து அவரது உடல்நிலை சரிசெய்யப்பட்டது. இந்த ஆய்வின் பொழுது அரசரின் உடல் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், போர்க் காயங்கள், மூட்டுவலி போன்றவைகளால் இயற்கையாக மரணமடைந்திருக்க வேண்டுமென்றும் கண்டறியப்பட்டது. 

வாதத்திற்காக குறிப்பிட்ட அந்த உடல் குர் ஆன் குறிப்பிடும் பிர்அவ்னின் உடல்தான் எனக் கொண்டாலும்,  செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஃபிர்அவ்ன் ரமேசஸ், பாதுகாக்கப்பட்ட மம்மியாக மாறியது எப்படி? நைல் நதிக்கரைக்கு வந்தது எப்படி? என்ற எளிமையான கேள்விகளுக்கு விடையில்லை. 

இந்த இரண்டாம் ரமேசஸ்-ற்கும் ஆயிரம் ஆண்டுகள் முன்பு ஆட்சி செய்த பல்வேறு ஃபிர்அவ்ன்களின் உடல்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவைகளைப் பாதுகாத்த மனிதனின் திறமை, அல்லாஹ்வையும் விஞ்சி நிற்கிறதே?

இக்கதையை இட்டுக்கட்டி கதையை உருவாக்கியவர்கள், குர் ஆனின் மற்ற வசனங்களை கவனிக்கத் தவறி விட்டனர்.

7:137 ... இன்னும் உம்முடைய ரப்பின் வாக்கு பனீ இஸ்ராயீலின் மீது-அவர்கள் பொறுமையாக இருந்த காரணத்தால் நிறப்பமாய் விட்டது; பிர் அவ்னும் அவனுடைய சமூகத்தினரும் உண்டாக்கியிருந்தவற்றையும், அவர்கள் உயரமாகக் கட்டியிருந்தவற்றையும் நாம் அழித்து விட்டோம்.

அதாவது, ஃபிர்அவ்னையும் அவனது படைகளையும் செங்கடலில் மூழ்கி அழியுமாறு செய்ததுடன் அல்லாஹ்வின் கோபம் அடங்கவில்லை. மேலும்  தண்டிப்பதற்காக, ஃபிர்அவ்னால் கட்டப்பட்ட அனைத்தையும் தரைமட்டமாக்கி அழித்து விட்டதாக அல்லாஹ் கூறுகிறான். அழிக்கப்பட்ட கட்டிடங்கள் எவை?

எகிப்து, உலகின் பெரும் நாகரீகங்கள் தோன்றிய இடங்களில் ஒன்று. அதனை ஃபரோஹ் (பிர்அவ்ன்) என்றழைக்கப்பட்ட அரசர்கள் ஆட்சி செய்து வந்தனர். பெரும் எண்ணிக்கையிலான அரண்மனைகளும், நினைவுச் சின்னங்களும், வழிபாட்டுத்தளங்களும் கிமு 2686 முதல் கிமு 2134 வரை கட்டப்பட்டன. ஃபிர்அவ்ன்கள் இறந்த பிறகு அவர்களது உடல்களை வைப்பதற்காக பிரமிடுகளும் கட்டப்பட்டன.

அவர்கள் உயரமாகக் கட்டியிருந்தவற்றையும் நாம் அழித்து விட்டோம்என்பது பிரமிடுகளையும் இதர கட்டிடங்களையும் குறிப்பிடுகிறது என்பதில் சந்தேகமில்லை. 

இன்றும் கம்பீரமாக, உலக அதிசயங்களில் ஒன்றாக, வானுயர்ந்து நிற்கும் பிரமிடுகளையும், பண்டைய வழிபாட்டுத்தலங்களையும், சிங்க உடலும் மனிதத்தலையும் கொண்ட பிரம்மாண்ட  சிற்பங்களும் குர்ஆனின் வார்த்தைகளிலுள்ள ஓட்டையை விளக்குகிறது.

பிரமிடுகளிகள் மட்டுமல்ல, ஃபிர்அவ்ன் ரமேசஸ் தன்னைத்தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்டவன். தனக்காக வழிபாட்டு தலங்களையும், தனது சிலைகளையும் நிறுவிக் கொண்டவன்.

இன்றும் அபூசிம்பலில் கம்பீரமாக நிற்கும் ஃபிர் அவ்ன் ரமேசஸ்-ன் கோவில்

          
         

ஃபிர் அவ்ன் ரமேசஸ்-ன் சிலை
இவைகள், அவர்கள் உயரமாகக் கட்டியிருந்தவற்றையும் நாம் அழித்து விட்டோம்”  என்ற அல்லாஹ்வின் கொக்கரிப்பை அர்த்தமற்றது என்று நிரூபித்துவிட்டது. அல்லாஹ், பொய்யான செய்திகளைக் கூறி ஏழாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மக்களை முட்டாள்களாக்கி விட்டான். ஒரு பொய்யன் இறைவனாக இருக்க முடியாது. முழுக் குர்ஆனும், தற்குறி முஹம்மதின் கற்பனைகளே என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

Facebook Comments

12 கருத்துரைகள்:

செங்கொடி said...

வாழ்த்துக்கள் தஜ்ஜால்,

அருமையாக சொல்லியிருக்கிறீகள். இது குறித்து முன்னர் நான் எழுதிய கட்டுரை ஒன்று

http://senkodi.wordpress.com/2010/03/26/fir-awn/

Mohamed Faaique said...

நன்பரே!!! குரானில் செங்கடல் என்று வருகிறதா??? கெய்ரோ மியூசியத்தில் கேட்டுப் பாருங்கள். பிர் அவ்னின் உடல் மட்டும் மற்ற மம்மிகள் போலவன்றி, எந்த ஒரு பாதுகாப்பு பதார்த்தமும் இடாமல் பாதுகாத்து வரப்படிகிறது. உங்கள் இஸ்லாத்தில் அளவுகோலாக பி.ஜ ஐ எடுத்துக் கொள்ளாதீர்கள்.

குரானை பாருங்கள். அதில் அரிவுள்ளவர்களுக்கு அத்தாட்சி இருக்கிறது. தர்ர்க்கவாதிகளுக்கு அல்ல..

http://www.youtube.com/watch?v=8X1VxUU6s7o&feature=related

http://www.youtube.com/watch?v=62gl21mKMqA&feature=related

http://www.youtube.com/watch?v=SWdnmAofQ5o&feature=share

உண்மையாக இஸ்லாஅத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த லின்க்`களை பாருங்கள்..

செந்தோழன் said...

பிஜே மாதிரியான ஆட்கள் ஃப்ர அவ்ன் கதையை சொல்லி கூவி கூவி விற்றுக்கொண்டிருந்தனர்.அவர் பிழைப்பில் மண் அள்ளி போடுறீங்களே!
இது நியாயமா?பாவம் பிஜே வேறு எந்த
கதையை சொல்லி விற்க! தடுமாறுகிறார்.
தோழர் தஜ்ஜால் வரவர உங்கள் ஆய்வுகள் அறிவியல் பூர்வமாகவும்,சிந்தனையை தூண்டும்விதமாகவுள்ளது.தொடர்ந்து இதுபோல் கட்டுரை எழுத வாழ்த்துக்கள்.

dajjal said...

நண்பர் முஹம்மத் ஃபைக்,
மூஸாவின் தலைமையில் சென்றவர்கள் கடந்து செல்ல ஏதுவாக பிளக்கப்பட்ட(?!) கடல் எதுவென்று என்று நீங்கள் கூறினால் நாங்களும் அறிந்து கொள்வோம்.
கடலில் மூழ்கடித்து கொல்லப்பட்டதாக குர் ஆன் கூறும் ஃபிர்அவ்ன் உடலை’ பாதுகாப்பு பதார்த்தமாக’ மாற்றியது யார்? என்பதுதான் இங்கு கேட்கப்பட்ட கேள்வி. 1974-ல் ஃபிர் அவ்ன் இரண்டாம் ரமேசஸ்-ன் உடல் பாரீஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டது ஏன்? என்று அதே கெய்ரோ மியூசியத்தில் விசாரித்து கூறினால் தேவலை.
ரமேசஸ்-ன் உடலில் மெலிதாக இருக்கும் கழுத்து பகுதிக்குள் தலையையும் உடலை (மார்புப்பகுதியை) இணைத்தவாறு மரக்கழி ஒன்று இருக்கிறது. அதைப் பற்றியும் மாரீஸ்புகைல், ஜாகிர்நாயக், ஹாருன் யஹ்யா போன்ற அளவுகோல்களிடம் விசாரித்து கூறவும். நண்பரே இஸ்லாத்தின் அளவுகோல்களாக குர் ஆன், ஹதீஸை மட்டுமே காணவேண்டும், தான்தோன்றித்தனமாக இன்றும் கூறப்படும் விளக்கவுரைகளை அல்ல.
கட்டுரையின் இறுதியில் சுட்டிக்காண்பிக்கப்பட்ட தற்குறி முஹம்மதின் உளறலை (குர்ஆன் 7:137) நீங்கள் கவனிக்கவில்லையா?

தஜ்ஜால்

Iniyavaniniyavan Iniyavan said...

முகம்மது சொன்ன கொஞ்சூண்டு கதையை கண் காது மூக்கு வச்சு நீட்டிவிட்டவர் நம்ம அண்ணன் பீலாவுதீன் அதாங்க பி.ஜே. சூப்பரப்பு...

அன்புடன் இனியவன்...

Madras MeMes said...

அருமையான பதிவு; கிறிஸ்டியன் ஜாக் என்பவர் எழுதிய ராம்ஸஸ் புத்தகத்தில் எகிப்தின் கலாச்சாரத்தை பற்றியும் ராம்ஸஸின் ஆட்சியை பற்றியும் நன்றாக எழுதப்பட்டிருக்கும்;ramses lived happily after jews left with moses; his another book "master hiram and king solomon" tells more about solomon, hiram , sheeba etc

Habib Mohamed said...

What is the secret of such good preservation of this body?Dr. Maurice Bucaille was a head and the leader of a group of physicians concern on rebuilding in France. That was in 1981. The result has shown that the residue of salt inside his body was evidence that he died by drowning.
Morris was preparing on final report on what was believed to be a "new discovery" in a Pharaoh's body. Till he was told that Muslims talk about drowning of this mummy he was very surprised!! after he read the story of Pharaoh's drowning in the Quran. Source : Ahmad Deedat Channel

Habib Mohamed said...

உங்கள் அறிவார்ந்த சந்தேகங்களுக்கு என் அரிவுகெட்டிய சில
1 1400 வருடத்திற்கு முந்திய குர்ஆனில் 3000 வருடத்துக்கு முந்திய இந்த கதை அதற்கு பிந்திய நமக்கு ஏன் இந்த கண்டுபிடிப்பும் அதன் விசாரணைகள் உண்மையாய்
2. கொம்பனாலேயும் எளிதாக விளங்க இயலா மம்மியிலிருந்து இறந்த அரசனை வேறு வேலைய விட்டுவிட்டு இடம் பெயர்க்கும் கும்பலை நினைத்தால், உங்களை போன்றவர்களோ எல்லாத்துக்கும் சந்தேக பேர்வழி என சிரிக்கத்தோன்றுகிறது.

Mubarak Haja Mohideen said...

ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (ஆராயாமல் பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Mubarak Haja Mohideen said...

1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது.
மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகை தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகை.

சிந்தனையில் மோரிஸ் புகை!

திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது. தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா? என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? பைபிளில் தேடினார் மோரிஸ் புகை. பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது.

Mubarak Haja Mohideen said...

ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. (யாத்திராகமம் 14 :28)

இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் பைபிள் வழங்கவில்லை.

ஆய்வுக்குப் பின்னர் பர்வோன் மன்னனின் உடல் விலை உயர்ந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு தனி மரியாதையுடன் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோரிஸ் புகை சிந்தனையில் ஆழந்தார்! இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்ற குர்ஆனின் செய்தி அவரை சிந்திக்கத் தூண்டியது. இதே வேளையில் தான் சவூதி அரேபியாவில் மருத்துவ அறிவியல் சம்மந்தமான ஒரு மாநாடு நடை பெற்றது. மோரிஸ் புகை அதில் கலந்து கொண்ட போது தான் கண்டு பிடித்த உண்மையையும் தண்ணீரில் மூழ்கி இறந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட உடலைக் குறித்தும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த அறிஞர்களில் ஒருவர் திருக்குர்ஆனைத் திறந்து கடலைக் கடந்து செல்லும் இஸ்ரவேலர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற ஃபிர்அவ்ன் மன்னன் மூழ்கடிக்கப்பட்டதையும் அவனது உடல் பின்வரும் தலைமுறைக்கு ஓர் அத்தாட்சி என்ற நிலையில் பாதுகாக்கப்படும் என்ற இறைவனின் பிரகடனத்தை வாசித்துக் காட்டினார். அவ்வசனம்

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்"
(அல்-குர்ஆன் 10: 92)

இவ்வசனம் மோரிஸ் புகை அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கு கூடியிருந்தவார்களுக்கு முன்னால் அவர் அறிக்கையிட்டார்! அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்! வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்!

கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப்பட்டிருக்கும் போது ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது! திருக்குர்ஆனின் அறைகூவலை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாட்சியைக் கண்கூடாகக் கண்ட பின்னரும் மக்களில் பெரும்பாலோர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர். திருக்குர்ஆனின் கூற்று எவ்வளவு உண்மை!

”நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (அல்-குர்ஆன் 10:92)

Unknown said...

செங்கொடி நீ என்னதான் தர்க்கம் செய்தாலும் இந்த சத்திய மார்க்கம் மூலை முடுக்கெல்லாம் பரவியே தீரும். முகம்மது நபியை நேசித்து , அல்லாஹ்வின் அடிமையானவர்களின் வரலாற்றை புரட்டிப் பார். அவர்கள் கூறும் காரணத்தை செவியேற்றுப் பார். இந்த சத்திய மார்கம் உன்னைப் போன்ற நம்பிக்கை கெட்டவர்கர்ளுக்கு அல்ல. யார் அல்லாஹ்வின் நம்பிக்கை கொண்டு அவனுக்கு அடிபணிகின்றார்களோ அவர்களுக்கு மட்டுமே. நிராகரிப்பவர்களுக்கு கடும் வேதனையும் உண்டு. உன் வாதம் சரியென்றால் இஸ்லாம் வளர்ந்து கொண்டு போகாது.
படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், ஜாதி, மதம் பாராமல் இம் மார்கம் ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கும். அல்லாஹ்வின் ஒளியை வெறும் வாயால் ஊதி அணைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ் தனது ஒளியை பூரணமாக்கியே தீருவான்.