Monday, 3 February 2014

காட்டுமிராண்டிகள் யார்?




ஒரு இஸ்லாமிய தளம் (இணைப்பு) இவ்வாறு சொல்கிறது...

சந்திரனே மிகத்துள்ளியமாக உலக மக்களுக்கு அவர்கள் அறிந்துக் கொள்ளும் விதத்தில் நாட்களையும் தேதிகளையும் அறிவிக்கின்றது.
அகில உலக அதிபதி சந்திரனையே உலகம் படைக்கப்பட்ட காலந் தொட்டு நாள்காட்டியாக்கி வைத்துள்ளான்.  இதை குர்ஆனில் அறிவிக்கவும் செய்கிறான்.
அவன்தான் சூரியனை ஒளியுடையதாகவும், சந்திரனை ஒளியை பிரதிபலிப்பதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; இறைவன் உண்மையை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான். (10:5)
சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே இருக்கின்றன. (55:5)
இஸ்லாம் சந்திரனையே நடைமுறை நாள்காட்டியாக்கியது.
குர்ஆனின் இந்த அறிவிப்பையே நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள்.  அவர்கள் காலத்தில் சூரியன் நேரங்காட்டியாக மட்டுமே இருந்தது.  நாள் – வாரம் – மாதம் – வருடம் இவை அனைத்தும் சந்திரனைக் கொண்டே தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. நபி(ஸல்) காலத்தில் சூரிய நாள்காட்டி என்ற பேச்சே இல்லை.
உலகின் பெரும்பாலான பகுதிகளில் நடைமுறையிலிருக்கும் கிரிகோரியன் நாட்காட்டியைவிட அல்லாஹ்வும் முஹம்மதுவும் போதித்த சந்திரநாட்காட்டி மட்டுமே சிறந்ததென்பதே இஸ்லாமியர்களின் வாதம். இஸ்லாமிய நாட்காட்டிக்குள் செல்லும்முன் நாட்காட்டிகளைப்பற்றி சுருக்கமாக கவனித்துவிடுவோம்.

நாட்காட்டி என்பது, நாளைக் காட்டுவது என்ற பொருளைக் கொடுத்தாலும்; இது உண்மையில்; சமூக, சமய, வணிக, நிர்வாக நோக்கங்களுக்காக நாட்களை ஒழுங்கு படுத்தும் ஒரு முறை ஆகும்.

இன்று நாம், அறிவியலின் வளர்ச்சியால் நாட்காட்டிகளை, வணிக நிர்வாக நோக்கங்களுக்காக மட்டும் பயன்படுத்துகிறோம். ஆனால் அன்றைய மக்களின் வாழ்க்கைப் போராட்டம் நாட்காட்டிகளை அடிப்படையாகக் கொண்டே இருந்தது. அன்றைய நாகரீகங்கள் மிகப் பெரும்பாலும் விவசாயத்தையே அடிப்படையாக கொண்டிருந்ததால், பருவகால மாற்றங்களை அறிந்து கொள்வதற்கு அவர்கள் நாட்காட்டிகளையே சார்ந்திருக்க வேண்டிருந்தது. சூரியன், சந்திரனின் மற்றும் இயற்கை நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு அவரவர் கலாச்சாரத்திற்கேற்ப பல்வேறு நாட்காட்டிகள் வழக்கிலிருந்திருக்கிறது.

சந்திரனின் ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சந்திர நாட்காட்டி மட்டுமே மிகத் துள்ளியமாக இருக்கிறதென்பதே இஸ்லாமியர்களின் வாதம்.  இங்கு நமது விவாதம் சூரிய மற்றும் சந்திர நாட்காட்டிகளில் எது சிறந்தென்பதல்ல. ஏனெனில் இரண்டுநாட்காடிகளிலும் நிறை, குறைகள் இருந்திருக்கிறது; அதை சரிகாணும் முயற்சிகளை நாட்காட்டிகளின் வரலாறு நெடுகிலும் காணலாம்.
சூரிய நாட்காட்டியில், பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவரும் காலத்தை ஒரு ஆண்டு என்றும் ஒரு ஆண்டிற்கு 365 நாட்கள் எனக் கணக்கிடப்படுகிறது. ஆனால்  365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடி காலத்தில் பூமி சூரியனைச் சுற்றிவருகிறது. மீதமிருக்கும் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகளை தவிர்க்க இயலாமல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு நாளாக ஃபிப்ரவரியில் 29 என்ற நாளையும் இணைத்து சரிகாணப்படுகிறது. இன்று நம்மிடையே வழக்கிலிருக்கும் சூரியனை அடிப்படையாக கொண்ட கிரிகோரியன் நாட்காட்டி, சந்திரனை அடிப்படையாக கொண்ட  ரோமானிய நாட்காட்டியின் திருத்தப்பட்ட வடிவமே.

சந்திர நாட்காட்டியில், ஒரு மாதம் என்பது, சராசரியாக 29.5305888531 நாட்களாக வருகிறது. ஆண்டிற்கு 12 மாதங்கள் என்றால் 29.5305888531X12 = 354.3671 நாட்கள் என்றாகிறது. இதையே, ஆண்டிற்கு 13 மாதங்களாக கணக்கிட்டால், 383.8977 நாட்களாகிவிடும். இப்படி பல குழப்பங்கள் இருந்திருக்கிறது.  நாட்களை மாதங்களுக்குள்ளும் மாதங்களை வருடத்திற்குள்ளும் முழுமையாக, சரியாக பெறுத்தவும், புவியின் பருவகாலங்களுடன் நாட்காட்டியை இணைக்கவும் பல்வேறு சீர்திருத்தங்களை நாட்காட்டிகளில் மேற்கொண்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு சீன நாட்காட்டி, 2500 ஆண்டுகளில் 50- 100  திருத்தங்களை சந்தித்திருக்கிறது. சந்திர நாட்காட்டியை  பின்பற்றிய சுமேரியர்கள், அதிலிருக்கும் குழப்பத்தை சரிகாண 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை 62 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தை கூடுதலாக  இணைத்திருந்தனர். இவ்வாறாக புவியின் பருவருகாலங்களுடன் நாட்காட்டியை இணைக்க மனிதகுலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

இனி இஸ்லாமிய நாட்காடியை கவனிக்கலாம். இஸ்லாமியர்கள் சந்திர நாட்காடியைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றனர். உண்மையில் சந்திர நாட்காட்டிக்கும் வழக்கிலிருக்கும் இஸ்லாமிய நாட்காட்டிக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. கிபி 638-ல் இரண்டாம் கலீபா உமர் காலத்தில் இஸ்லாமிய ஆண்டுக்கணக்குத் துவங்கியது.
குர்ஆன் 9:36
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்!..
இஸ்லாமிய நாட்காட்டியிலுள்ள குழப்பத்தை அறிய ஆய்வுகள் எதுவும் தேவையில்லை. அதன் நடைமுறைக் குழப்பங்களை கவனித்தால் போதும்.

ஒரு சந்திர மாதம் என்பது சராசரியாக 29.53 நாட்களைக் கொண்டது என்பதை முன்பே பார்த்தோம். மாதம் என்பது 29 நாட்களாக இருக்கும் அல்லது 30 நாட்களாக இருக்கும் என்பது முஹம்மதுவின் கட்டளையும் கூட. அதாவது  குறைந்தபடசம் 29 நாட்களும் அதிகபட்சமாக 30 நாட்கள் மட்டுமே. சராசரியாக பார்த்தால் 29.5 நாட்களாக இருக்கும். அல்லாஹ்விடமுள்ள பதிவேட்டின்படி, பன்னிரண்டு மாதங்களைக் கொண்டது ஒரு ஆண்டு.  பூமி, சூரியனைச் சுற்றத் துவங்கிய இடத்திலிருந்து மீண்டும் அதே இடத்திற்கு வரும் கால அளவை ஆண்டு என்கிறோம். அதற்கு 365.25 நாட்கள் தேவைப்படுகிறது என்பதையும் பார்த்தோம்.

சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி ஆண்டு என்பதை இவ்வாறாக வரையறை செய்கிறது.
 29.5 X 12 = 354  

இதைக் கொண்டு பருவகாலங்களை கணித்தால் எப்படி இருக்கும்?

கோடைகாலமாக இருக்கும் ஏப்ரல்-மே மாதங்கள்,  இஸ்லாமிய மாதங்களில் இந்த ஆண்டு, முறையே ஜமாதுல் ஆகிர்-ரஜப் என்றிருக்கிறது.  பத்துவருடங்கள் கடந்தாலும் ஏப்ரல் – மே மாதங்கள் கோடைக்காலம்தான். ஆனால் ஜமாதுல் ஆகிர்-ரஜப் மாதங்கள் குளிர் காலத்தில் இருக்கும். ஜமாதுல் ஆகிர் - ரஜப் மாதங்கள் 33 வருடங்களுக்குப் பின்னரே தனது முந்தை இடத்தை அடையும்.

இவ்விஷயத்தில் இஸ்லாமியர்கள் செய்ததென்ன?

இஸ்லாமியர்கள் தங்களது மாதத்தின் முதல் நாளை கணக்கிடுவது உலகறிந்த குழப்பம். அதையும் சற்று கவனிக்கலாம்.
புகாரி 1900
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள்." என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இந்த ஒரு ஹதீஸைக் கொண்டு இவர்கள் செய்யும் அழிம்பு தாங்க முடிவதில்லை. இவர்கள், தங்களை தாங்களே குழப்பி, அடுத்தவர்களையும் குழப்பி அரசாங்கத்தையும் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.

பிறை விஷயத்தில் நபிவழியை பின்பற்றுங்கள்
...மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்படுகின்ற அனைத்தும் வழிகேடாகும். அனைத்து வழிகேடுகளும் நரகத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே ரமலான் மற்றும் துர்ஹஜ் மாத துவக்கத்தை தீர்மானிக்க நபிவழி முறையை விட்டு விட்டு, கணிப்பை நம்பி செயல்படுவது குர்ஆன், நபிவழிக்கு எதிரானதும், வணக்க விஷயத்தில் புதிதாகப் புகுத்துவதுமாகும். அது நரகத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் அப்படிப்பட்ட வழியில் செல்லுகின்றவர்கள் சிந்தித்து அதிலிருந்து மீண்டு சரியான தெளிவான நபிவழியை பின்பற்ற முன்வரவேண்டும்.
islampaathai.com
அதாவது முன்கூட்டியே சந்திரனின் இயக்கத்தை கணித்து மாதத்தின் முதல் நாளைக் கணக்கிடக் கூடாது. பிறை சந்திரனைக் கண்களால் கண்டபிறகே மாதத்தை துவங்க வேண்டுமாம்.

இது இன்னொரு கூட்டம்,
பிறை பார்த்தல்!
...சூரியனின் ஓட்டத்தைக் கண்ணால் பார்த்துத்தான் தொழுகை நேரத்தை அறிந்து தொழ வேண்டும் என்று முன்னர் அடம் பிடித்தது,
சந்திரனைப் புறக்கண்ணால் பார்த்தே மாதம் பிறப்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று இப்போது அடம் பிடிப்பது,
இத்தியாதி, இத்தியாதி பொருள்களில் அதாவது மார்க்கத்திற்கு உட்படாத பொருள்களில் அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அதே சமயம் மார்க்கத்திற்கு உட்பட்டவை -அவற்றில் அணுவளவும் மாற்றத்திற்கு இடமே இல்லை என்று திட்டமாக அல்குர்ஆன் கூறுபவற்றில், மனம் போன  போக்கில் மாற்றத்தை உண்டாக்குவதில் புரோகிதர்கள் முன்னணியில் இருக்கின்றனர்.
.....
அதேபோல் அன்று மாதம் பிறந்ததை முதல் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்ததற்கு மாறாக இன்று கணினி கணக்கீட்டின் மூலம் எதிர்வரும் நூறு ஆண்டுகளின் 12 மாதங்களின் தலைப் பிறையை  இன்றே மிகத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறும் அளவில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டு விட்டதால், இன்று பிறையைப் புறக்கண்ணால் பார்க்கக் காத்திருக்கத் தேவையே இல்லை.
ஆனால் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள், தங்களின் தொழிலுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு விஞ்ஞான கண்டு பிடிப்பின்போதும் அதை மறுத்து அலறுவது வாடிக்கை. காலப்போக்கில் வேறு வழியின்றி அவர்களும் அந்த விஞ்ஞான உண்மைகளை ஏற்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
readislam.net
அடுத்தது அண்ணனின்  கூட்டம்,
பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்
....
அதாவது, நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்தின் படி பிறை வானில் இருந்தால் கூட, அது நம் கண்களுக்குத் தெரிய வேண்டும், அதனடிப்படையில் மாதத்தை நாம் முடிவு செய்ய வேண்டும் என்றே அல்லாஹ் விரும்புகிறான். அதற்குரிய முயற்சியில் நாம் இறங்க வேண்டும். ஒரு வேளை பிறை (மேகமூட்டம் காரணமாக) தெரியாமல்  இருந்தால், மாதம் பிறக்கவில்லை, முந்தைய மாதமே நீடிக்கிறது என்று  முடிவு செய்து கொள்ளலாம். ஆக, எந்த நிலையிலும் நம் புறக்கண்ணால் பார்க்காமல் மாதத்தை முடிவு செய்து கொள்வதை அல்லாஹ் விரும்பவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது.
www.onlinepj.com
ஹிஜ்ரா கமிட்டி என்றொரு கூட்டம், பிறை பார்ப்பது என்றால் என்னவென்று அண்ணனுக்கே அரபி சொல்லிக் கொடுத்தது. இங்கு  ஹிஜ்ராகமிட்டிக்காரர்கள், அண்ணனுக்கு கொடுத்த நெற்றியடிகளையும்,  இங்கு அண்ணன் ஹிஜ்ரா கமிட்டிக்கு கொடுத்த மரண(!) அடி, சவுக்கடி, செருப்படிகளையும் காணலாம். நேரமும், விருப்பமும் இருப்பவர்களுக்கு பொழுதுபோக்க அறியவாய்ப்பு.

இப்படி மாறிமாறி செருப்படிகளைப் பரிமாறிக் கொண்டதைத்தவிர இவ்விஷயத்தில் இன்றுவரை இஸ்லாமியர்கள் எதுவும் செய்யவில்லை. ஆண்டிற்கு 355 நாட்கள் என்றுதான் கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களால் முஹம்மதைக் கடந்து சிந்திக்க முடியாது, கூடாது.

உதாரணத்திற்கு, பீஜே குழுவினரும், ஹிஜ்ரா கமிட்டிக்காரர்களும் பக்கப் பக்கமாக எழுதித் தள்ளியவைகளில் சடங்குகளையும் வழிபாடுகளையும் மட்டுமே சுற்றிச் சுற்றி வருகின்றனர். அதைக் கடந்து அவர்களால் சிந்திக்க முடியவில்லை. வழிபாடுகளை அட்டவணைப்படுத்துவதற்காக மட்டும்தான் நாட்காட்டிகளைப் பயன்படுத்த வேண்டும் போலிருக்கிறது! 

நாட்காட்டிகளின் மிக முக்கிய பணி என்னவாக இருந்தது?

சுருக்கமாகச் சொல்லவதென்றால், சமூகத்தின் தேவைகளை காலாளவிற்குள் பூர்த்தி செய்ய முன்கூட்டியே வரைசெய்ய உதவும் ஒரு கருவி. விவசாயம், வேட்டையாடுதல், புலம்பெயர்தல் போன்ற அன்றைய மக்களின் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட நாட்காட்டிகள் பெரும் பங்கு வகித்தது. இன்றும் கூட அப்படித்தான்.

சரி..!  மனிதர்களின் இந்தத் தேவைகளை அல்லாஹ்வும் முஹம்மது அறியவில்லையா? அவர்கள் விவசாயத்தை அவர்கள் எள்ளளவும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.  உண்மை என்னவென்றால் முஹம்மதிற்கு விவசாயத்தைப்பற்றி எதுவும் தெரியாது அதனால் அல்லாஹ்வும் அதைப்பற்றி வாய்திறக்கவில்லை.

முஹம்மதுவின் சொல் செயல் அனைத்துமே அல்லாஹ்வின் கட்டளைப்படி இருந்தது, அவர் தனது உடலிலிருந்து காற்றைப்பிரிப்பது கூட அல்லாஹ்வின் அறிவுறுத்தலின் காரணமாகவே நிகழ்ந்தது எனவே ஹதீஸ்களை, குர்ஆனில் இல்லாத வஹீ என்றெல்லாம் கதையளப்பதை அறிவீர்கள்.

முஸ்லீம் 4711
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பேரீச்ச மரங்களின் உச்சியில் இருந்து கொண்டிருந்த (மதீனாவாசிகள்) சிலரைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது, "இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார் கள்?'' என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், "பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை செய்து (பெண் மரங்களை) சூல் கொள்ளச் செய்கின்றனர்'' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதனால் பயனேதும் ஏற்படும் என்று நான் கருதவில்லை'' என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைப் பற்றி (மதீனா விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் ஒட்டுச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு மகசூல் பாதிக்கப்பட்டது.)
இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, "அ(வ்வாறு செய்வ)தனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்துகொள்ளட்டும். நான் எனது யூகத்தையே தெரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததைவைத்து என்மீது குற்றம் சாட்டா தீர்கள். ஆயினும், நான் உங்களிடம் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஏனெனில், நான் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்கமாட்டேன்'' என்று சொன்னார்கள்.
இஸ்லாமியர்கள், அறியாமைக் காலம் காட்டுமிராண்டிக்காலம் ஜஹிலியாகாலம் என்றெல்லாம் வர்ணனை செய்யும் காலத்தில் வாழ்ந்த ஒரு சாதரண அரபி விவசாயிக்குத் தெரிந்த சொற்ப அறிவியல் கூட முஹம்மதிற்குத் தெரியவில்லை என்பதுதான். எப்படி யாரை வழிப்பறி செய்வது, பெண் கைதிகள், அடிமைகளின் குறிக்குள் விந்தை எப்படி செலுத்துவது, முஹம்மதின் மனைவியர்களைப்பற்றி, அவரிடமே கோள் சொல்வது என்று அல்லாஹ்வின் காலம் முடிந்துவிட்டது. இதில் விவசாயாத்தைப்பற்றி பேசவேண்டுமாம் நல்ல வேடிக்கை!

அல்லாஹ்விற்கும் முஹம்மதிற்கும் விவசாயத்தைப்பற்றி தெரியவில்லை என்பது மட்டுமல்ல அதை ஒரு கேவலமான தொழிலாகக் கருதினர் என்பதுதான் இங்கு வேதனையான விஷயம்.
புகாரி 2321
 முஹம்மத் இப்னு ஸியாத் அல் அல்ஹானீ(ரஹ்) அறிவித்தார்.
அபூ உமாமா அல் பாஹிலீ(ரலி), ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், 'இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்" என்று கூறினார்கள்.
விவசாயத்தை இழிவாகக் கருதியது மட்டுமல்லால். அதற்கு செலுத்தப்பட்ட உழைப்பை முஹம்மது மதிக்கவுமில்லை.
புகாரி 4031
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை  எரித்துவிட்டார்கள். இன்னும்  வெட்டிவிட்டார்கள். அது 'புவைரா' என்னும் இடமாகும். எனவேதான் 'நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படிவிட்டுவிட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்தி விடுவதற்காகவே" என்னும் (குர்ஆன் 59:05) இறைவசனம் அருளப்பட்டது.
வறண்ட பாலைவனத்தில் ஒரு சின்னஞ்சிறிய செடி துளிர்க்க வைப்பது மிகப்பெரிய பணி. வளர்ந்து பலன் கொடுத்துக் கொண்டிருக்கும் பேரிச்சம் மரங்களை எரிப்பதும், வெட்டிச் சாய்ப்பது அறிவுடைய மனிதனின் செயலாக இருக்குமா? காட்டுமிராண்டிகள் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

1996-ல் தலிபான்கள் காபூலில் இருந்த வானிலை ஆய்வு மையத்தை தகர்த்தனர். 100 ஆண்டுகள் பழமையான ஆவணங்கள் அழிக்கப்பட்டது. மூடர்களின் செயலால் விவசாயிகள் துன்பத்திற்குள்ளாயினர். எதிர்பாராத வானிலையால் 1998-ல் ஆப்கனிய விமானம் விபத்திற்குள்ளானதில் 45 உயிர்கள் பலியானது. விமானமாவது, விவசாயமாவது எங்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைகள் மட்டுமே முதன்மையானது.
ஏன் இப்படி?



இஸ்லாமைப் பொருத்தவரையில், பருவ காலங்கள் மற்றும் வானிலையக் கணிப்பது ஜோதிடத்திற்கு நிகரானது; செய்வினை, பில்லி, சூனியம் போன்றது எனவே அது ஹராம். வானிலை முன்னறிவிப்புகளை தாலிபான்களும் மாந்திரீக செயலாகக் கருதினர். பருவ காலங்களை அல்லாஹ் மட்டுமே அறிய முடியும் அது அவனது விதியின் கீழ்வருகிறது. அதை முன்கூட்டியே கணிப்பது அல்லாஹ்வின் ஆளுமையில் குறுக்கீடு செய்வதைப் போன்றது. அவ்வாறு முன்னீடு செய்பவர்களை அழிப்பது அல்லாஹ்விற்கு செய்யும் தொண்டாகும். இதற்கென்று கூடுதல் ஹூரிகள் வழங்கப்படலாம். 

2003 –ல் ஃபிரான்ஸ் அரசு உதவியுடன் ஆப்கானிஸ்தானில் மீண்டும் வானிலை மையம் நிறுவப்பட்டிருக்கிறது. அது எத்தனை காலம் இருக்குமோ? (அல்லாஹ்வே அறிவான்!?)

சந்திர நாட்காட்டிக்கும் இஸ்லாமிய நாட்காட்டிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இஸ்லாமிய நாட்காட்டியென்பது அல்லாவிற்காக வெற்று சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் நிறைவேற்ற வேண்டிய நேரத்தை மட்டும் குறிப்பிடும் கால அட்டவனையன்றி வேறில்லை.



தஜ்ஜால்

Sunday, 26 January 2014

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -33






வேதங்களின் நிலை

குர்ஆன் என்ற புதிய வேதத்தின் தேவை ஏன்? இஸ்லாமிய கொள்கைகளின்  அடிப்படை குர்ஆன். எனவே  இக்கேள்வியை இஸ்லாம் என்ற வழிமுறை புதிய ஏன்? எனவும் கேட்கலாம். இவ்வினாவிற்கு பதில்

(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஈமானுள்ள) ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பிவைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; …
(குர்ஆன் 2:213)

அல்லாஹ்வால் இறக்கப்பட்ட  தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜீல் ஆகிய மூன்று வேதங்களும் மனிதர்கள் தங்கள் அற்பத் தேவைகளுக்காக மாற்றிவிட்டனர் என்பதே அல்லாஹ்வின் பொதுவான குற்றச்சாட்டு. அல்லாஹ்வின் ஆணைகளை மாற்றுவது, அவனது ஆணைகளை ஏற்க மறுப்பதை விட கொடியது, அவனது கட்டளையை தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி நம்பிக்கையாளர்களிடையே அதை பரவச் செய்வது, நம்பிக்கையாளர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம் ஆகும்.

…இவர்களில் ஒருசாரார் அல்லாஹ்வின் வாக்கியத்தைச் செவியேற்று, பிறகு அதனை நன்கு விளங்கிய பின்னரும் அவர் அறிந்தவர்களாயிருக்கும் நிலையிலும் (தெரிந்து கொண்டே) அதை மாற்றி விட்டனர்.
(குர்ஆன் 2:75)

எனவே, தங்களின் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதி பிறகு அதன் மூலம் (உலகின்) சொற்ப கிரையத்தை வாங்குவதற்காக, இது அல்லாஹ்விடமிருந்துள்ளது என்று வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு; மேலும் அவர்களின் கரங்கள் (வேதத்தை மாற்றி) எழுதியதன் காரணத்தால் அவர்களுக்கு வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு …
(குர்ஆன் 2:79)

எனவே நான்காவது வேதமாக குர்ஆன் முஹம்மது அவர்களின் மூலமாக மனித குலத்திற்கு அருளப் பெற்றது. அல்லாஹ், முஹம்மது அவர்களுடன் நிகழ்த்திய உரையாடலின் முழுமையாக பாதுகாக்கப்பட்ட எழுத்து வடிவமே  குர்ஆன். இதை பாதுகாக்கும் பொறுப்பை தானே ஏற்கிறான்.

நிச்சயமாக நாம்தாம் இந்த திக்ரை (நினைவூட்டல்) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதனை உறுதியாக பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்.
(குர்ஆன் 15: 9)

இது அல்லாஹ், மனிதனுக்கு தரும் உறுதிமொழி.    தனது வேதத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறான்.

…அன்றியும், அல்லாஹ்வுடைய வாக்குகளை மாற்றுகிறவர் (எவரும்) இல்லை.
(குர்ஆன் 6:34)

நம்பிக்கையாளர்களின் பண்புகளைக் குறிப்பிடுகையில்,

இன்னும் அவர்கள் எத்தகையவர்கள் என்றால் உமக்கு அருளப் பெற்ற(வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்வார்கள் …
(குர்ஆன் 2: 4)

"அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்ட மாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(குர்ஆன் 3:84)

தனது முந்தைய வேதங்களைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்,

நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. …
(குர்ஆன் 5:44)
நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; "நிச்சயமாக பூமியை (ஹாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
  (குர்ஆன் 21:105)

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக  இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு  நேர் வழிகாட்டியாகவும்  நல்லுபதேசமாகவும்  இருந்தது.
 (குர்ஆன் 5:46)

அல்லாஹ், தன்னுடைய வேதங்களைப்பற்றி கூறுவதை சுருக்கமாக  பார்ப்போம் :
·       குர் ஆன், தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் எல்லாம் அல்லாஹ் இறக்கிய                     வேதங்கள்  ஆகும்
·        குர் ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது
·   குர்ஆனுக்கு முன்பாக இறக்கப்பட்டத தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜீல் ஆகிய    மூன்று வேதங்களும் மனிதர்களால் மாற்றப்பட்டது அல்லது திருத்தப்பட்டது.
·  முந்தைய வேதங்களாகிய தவ்ராத், ஜபூர், இன்ஜீல் அதிகாரபூர்வமாக        அல்லாஹ்தான் இறக்கினான் என்று முஸ்லீம்கள் ஏற்க வேண்டும், குர்ஆன்             பாதுகாக்கப்பட்டு இருப்பதால், அதை மட்டும் தான் நம்பவேண்டும்.
·        அல்லாஹ்வின் வார்த்தைகளை யாரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது.

இவைகளிலிருந்து நாம் சில முடிவுகளை அடையலாம்

குர்ஆனை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி கூறிய அல்லாஹ், மற்ற வேதங்களை  பாதுகாக்காமல் கோட்டை விடுவானா? குர்ஆனின் வசனங்கள் முந்தின வேதங்களை அல்லாஹ் பாதுகாக்க தவறியதை உறுதி  செய்கின்றன. அல்லாஹ்வால் இறக்கப்பட்ட வேதத்தை மனிதர்கள் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்ததாகவும், இறுதியில் குர்ஆனைப் பாதுகாக்க  உறுதிமேற் கொண்டதாக கூறுவது முட்டாள்தனமாக  தெரியவில்லையா?
குர்ஆன் பாதுகாக்கப்பட்டது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்ற முடிவை நீங்கள் கூறினால், இதன் பொருள், தனது வேதங்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற சிந்தனையில்லாமல் இருந்திருக்கிறான் அல்லது தனது வேதத்தைப் பாதுகாக்க முடியாத அளவிற்கு  பலவீனமாக இருந்திருக்கிறான் எனலாம்.  தனது முந்தைய வேதங்களை திருத்தப்பட விட்டு, குர்ஆனை மட்டும் பாதுகாத்த அல்லாஹ்வின் செயலுக்கு, இது தான் விளக்கமாக அமையும்.
அல்லாஹ் ஒரு பலவீனமான இறைவனாக இருக்கலாம் அதனால்தான் அவனால் தன் முந்தைய வேதங்களை பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லாஹ், தனது வலிமையை அதிகமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அதனால்தான், தன் கடைசி வேதமாகிய குர்ஆனை பாதுகாப்பேன் என்று உறுதி கூறுகிறான் என்று நாம் முடிவு செய்யலாம்.
அல்லாஹ்வின் முந்தைய மூன்று வேதங்கள் திருத்தப்பட்டிருக்கும் போது, தன் கடைசி வேதமான குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்று எப்படி நம்புவது? பலவீன மனிதர்கள், தன் முந்தைய வேதங்களை திருத்தும் போது, அதை தடுக்காமல் வெறுமனே இருந்த அல்லாஹ்,  பிந்திய வேதமாகிய குர்ஆனை மட்டும் பாதுகாத்தான் என்று ஒரு மனிதன் நம்புவது எப்படி? ஏனெனில் முந்தைய வேதங்களை பாதுகாக்கவில்லை என்பது அல்லாஹ்வின் வாக்குமூலத்திலிருந்து தெளிவாகிறது.
அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்,  வேதங்களைக் கறைபடாமல் பாதுகாக்கக் கூடியவனென்றால் மற்ற வேதங்களும் கறைபடாமல் பாதுகாக்கப்பட்டவைகளே என்று கூறலாம். முந்தின வேதங்களை பாதுகாக்க இயலாதவனென்றால் குர்ஆன் உட்பட எதனையும் அவனால் பாதுகாக்க முடியாது என்றுதான் கூற முடியும். 
அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்,  வேதங்களைக் கறைபடாமல் பாதுகாக்கக் கூடியவனென்றால் நேர்வழியும் பேரொளியும் இருந்த தவ்ராத்தையும், ஜபூரையும் மற்றும் நேர்வழியும் ஒளியும் இருந்த இன்ஜீலையும் பாதுகாக்கத் தவறியது ஏன்?
முதலில் இறக்கப்பட்ட வேதங்கள் மனிதனால் களங்கப்பட்டது அல்லது அல்லாஹ்வினால்  சரிவர பாதுகாக்கப்படாத காரணத்தால் இரண்டாவது வேதம் இறக்கப்பட்டது. இவ்வாறாக நான்காவது வேதம் வரை தொடர்கிறது. சர்வவல்லமை மிக்கதாக கூறிக் கொள்ளும் அல்லாஹ்விற்கு தன்னுடைய வேதம், மனிதர்களால் மாற்றத்திற்குள்ளாகும் செய்தி முன்பே தெரியாதா?
அல்லாஹ்வுடைய படைப்புகளின் ஒவ்வொரு அசைவும் அல்லாஹ் நாடியவாறு மட்டுமே நிகழ்கிறது அது அவனுக்கு மிக எளிதானதுதான். அல்லாஹ்வும் தன் உரையாடல்களில் இதை பல இடங்களில் குறிப்பிடுகிறான். நாளை மறுமையில் மனிதன் அடையும் வெகுமதிகளும் தண்டனைகளும் கூட அவன் நாற்பது நாட்கள் கருவாக இருக்கும் பொழுதே முடிவு செய்யப்படுகிறது என்பதை முன்பே பார்த்தோம். இப்பிரபஞ்சத்தின் படைப்பின் ஆரம்பம் முதல் மறுமையின் முடிவுக்கு பின்னர் நிகழ்வதையும் நிர்ணயம் செய்து விட்டதாக கூறிக் கொள்பவன், வேத வசனங்களை மனிதர்கள் மாற்றி விட்டதாக புலம்புவது ஏன்? இது யாருடைய குற்றம்?
குர்ஆனின் (6:34) வசனம் முரண்பாடுகளுக்கு மேலும் ஒரு உதாரணம்.  இதன் அடிப்படையில் நாம் மேலும் சிலமுடிவுகளை அடையலாம்.
ü அல்லாஹ்வின் வார்த்தைகளை எவரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது என்ற வசனத்தை ஏற்பதென்றால் தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் ஆகியவை நிச்சயமாக அல்லாஹ்வின் வேதங்களாக இருக்க முடியாது. தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் ஆகிய வேதங்கள் தான் அருளியதாக அல்லாஹ் கூறவது வடிகட்டிய  பொய்.
ü முந்தின வேதங்கள் மாற்றப்பட்டதை அல்லாஹ்வே ஒப்புக் கொண்டு விட்டதால், தனது வார்த்தைகளை எவரும் மாற்ற முடியாது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுவது அர்த்தமற்றது. குர்ஆனும் மனிதர்களால் மாற்றப்பட்டதாக இருக்கலாம். எனவே ஐந்தாவதாக புதிய வேதம் வரலாம்(?)
ü "அல்லாஹ்வின் வார்த்தைகளை எவரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது" என்ற வசனம் குர்ஆனை மட்டுமே குறிப்பிடுகிறது என்று விளக்கம் கூறினாலும் குழப்பம் தீரவில்லை. அல்லாஹ் ஒரு பலவீனமான இறைவனாக இருக்க வேண்டும் அதனால்தான் அவன் முன்பு கூறிய வார்த்தைகளை (வேதங்களை) மனிதர்கள் சுலபமாக மாற்றி விட்டனர். அவைகளை அவனால் பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லாஹ், தனது வலிமையை அதிகமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அதனால் தான், தன் கடைசி வேதமாகிய குர்ஆனை எவராலும் மாற்ற முடியாது என்று உறுதி கூறுகிறான் என்று நாம் முடிவு செய்யலாம்.
ü அல்லாஹ் சர்வ வல்லமையுடையவனே. மனிதர்களை சோதனை செய்யவே தனது வேதங்களை மாற்ற அனுமதித்தான் என்று  வாதிட முடியாது. ஏனென்றால் இவ்வாதம் விதியை அடிப்படையாகக் கெண்டது. தனது பாதையை சுயமாக தேர்ந்தெடுக்கும் உரிமை மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த விளக்கத்தை ஏற்கமுடியும். விதியைப் பற்றி கூறும் வசனங்களை புறக்கணித்தால் குர்ஆனின் பெரும் பகுதி வேடிக்கையாகிவிடும். (விதியின் குழப்பத்தைப்பற்றி நாம் முன்பு பார்த்ததை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளவும்)

மனிதனின் இந்த துரோகச் செயல்களை அல்லாஹ்வினால் முன்னரே அறிந்து கொள்ள முடியவில்லை என  ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்,

ஒருமுறை தவறு நிகழ்ந்தவுடன் அதை திருத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதே தவறு இறுதிவரை தொடர்கிறது. இறுதியில் பாதுகாப்பாக  வெளியிட்டதாக கூறும் குர் ஆனின் நிலை வேடிக்கையானது. இஸ்லாமியர்களின் நம்பிக்கைப்படி, முழுமையான எழுத்து வடிவம் பெறாத ஒரு மொழியில், எழுதவும் படிக்கவும் அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்கும் நிலையில் இருந்த ஒரு எழுத்தறிவற்றவரின் வாயிலாக வெளியிட்டான். அதையாவது ஒழுங்காக செய்தானா? என்றால் அதுவும் கிடையாது.

மறதியாளன் என தன்னால் வர்ணணை  செய்யப்பட்ட  மனிதனின் இதயத்தில்(?)  வைத்து  அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சென்றதாக கூறுகிறான்.
ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை நாம் மறக்கச் செய்தால், அதை விடச் சிறந்ததை அல்லது அதுபோன்றதை நாம் கொண்டு வருவோம் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?
(குர்ஆன் 2:106) 
முஹம்மதிற்கு மறதி ஏற்படுத்தப்பட்டால் அதேபோன்ற வசனம் அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். இவ்விடத்தில் மறந்த அந்த வசனத்தை மீண்டும் மிகச்சரியாக நினைவூட்ட முடியும் என்று அல்லாஹ் உறுதியிட்டு கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது தான் கூறியதை மிகச்சரியாக மீண்டும்  வெளிப்படுத்தும் தன்மையில்லததால், அதைப்போன்ற அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். அவனிடத்தில் இருந்த "மூலப்பதிவேடு" என்ன ஆனது? இத்தகைய நினைவாற்றல் உள்ளவனின் குற்றச்சாட்டை எப்படி ஏற்பது?

எதற்காக மறதி ஏற்படுத்தப்பட வேண்டும்? சிறந்த வசனத்தால் ஈடுசெய்வதற்காகவென்றால் முதலில் கூறியது 'சொதப்பலா'?. அவ்வாறு நீக்கப்பட்ட குர்ஆன் வசனம் பற்றிய ஹதீஸைப் பாருங்கள்,

புகாரி ஹதீஸ் 4095
அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது :
பிஃரு மஊனாவில் தம்தோழர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் முப்பது நாள் காலை(த்தொழுகை)யில் பிரார்த்தித்தார்கள். அப்போது, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த உஸய்யா,ரிஅல், தக்வான்(பனூ) லிஹ்யான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள்கூறுகிறார்கள், ஆகவே இறைவன் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு, பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் குர்ஆன்வசனம் ஒன்றை அருளினான். அதை நாங்கள் ஓதி வந்தோம். பின்னர் (இறைவனால் அந்தவசனம்) நீக்கப்பட்டுவிட்டது. (அந்த வசனம்,)
"நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்தான். நங்களும் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்று எங்கள்  சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள் ".

நீக்கப்பட்ட இவ்வசனத்தின் தன்மையையும் கருத்தையும் கவனித்துப் பாருங்கள் சரியான உளறல் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

முஹம்மதிற்கு மறதி ஏற்பட்டால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். சஹாபாக்களுக்கு மறதி ஏற்பட்டால்?  ஏனென்றால் நபியின் காலத்தில் குர்ஆன் முழுமையாக தொகுக்கப்படவில்லை.

புகாரி ஹதீஸ் : 4986  
வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் பின் ஸாபித் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது
…எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அபுபக்ர் (ரலி) அவர்கள்., அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான் என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூபக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) ஆகவே, (மக்களின் கரங்களிலிருந்து) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை பேரீச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். …

 நபியின் மரணத்திற்கு பிறகு அரசியல் குழப்பங்கள் எல்லை கடந்திருந்த நிலையில் பல குழப்பங்களுக்கிடையே சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகே தன்னுடைய உரையாடல்களை தொகுக்கச் செய்கிறான். ஆவணங்களின் முக்கியத்துவத்தையும், அதற்கான சாட்சிகளின் முறையையும் (குர்ஆன் 2:282)  விவரிக்கவும், முஹம்மது அவர்கள், தன் எதிரிகளுக்கு எழுதிய (மிரட்டல்) கடிதங்களில் முத்திரை பதிக்க அறிவுறுத்திக் கூறியவனுக்கு, தன்னுடைய உரையாடல்களை மிகச்சரியான எழுத்து வடிவத்தில்  தன் தூதரின் வாழ்நாளிலேயே முத்திரையிட்டு இறுதிவடிவம் கொடுக்கத் தெரியவில்லை. ஆயிஷாவின் பாதுகாப்பிலிருந்த குர்ஆனின் அத்தியாயங்களின் பிரதிகளை கோழி, ஆடு மற்றும் நெருப்பிற்கும் இறையாக்கிவிட்டான்.

புகாரி ஹதீஸ் :   4987  
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான் (ரலி) அவர்கள், அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கான போரில் கலந்து கொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்திருந்தார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்து வேறுபாடு கொண்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆகவே, ஹுதைஃபா (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களுடைய வேதங்களில்) கருத்து வேறுபாடு கொண்டது போல் இந்தச் சமுதாயம் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே! என்று கூறினார்கள். ஆகவே, உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்னை) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள் ! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம் என்று தொவித்தார்கள். எனவே, ஹஃப்ஸா (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த குர்ஆனை பதிவை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), சயீத் பின் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான் (ரலி) அவர்கள் (அந்த நால்வரில்) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி, நீங்களும் (அன்சாரியான) ஸைத் பின் ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷியரின் (வட்டார) மொழி வழக்குப் படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்குப்படியே இறங்கிற்று என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா (ரலி) அவர்கிடமிருந்த) அநதக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் அந்தப் பிரதியை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படிடுத்த பிரதிகளில் ஒவ்வான்றையும் ஒவ்வாரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

குர்ஆன் முஹம்மதின் காலத்திலேயே குழப்பமற்ற முறையில்  இறுதி வடிவம் பெற்றுவிட்டதென்றால், பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கலீபா உஸ்மான்,  குர்ஆனை மீண்டும் தொகுக்க  அவசியம் ஏன்? தனது தொகுப்புடன் முரண்படும் மற்ற பிரதிகளை நெருப்பிலிட்டது ஏன்? குர்ஆனுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் முஹம்மது அவர்களின் மருமகன் கலீஃபா உஸ்மான். அவரும் ஒரு இறைத்தூதரோ? குர்ஆனை தொகுத்தவரைப்பற்றி முஹம்மதின் காதல் மனைவி ஆயிஷாவின் கருத்து,
ஒரு இஸ்லாமிய தளத்திலிருந்து,
Ibn Atheer in ‘Al-Nahayah’, Volume 5 page 80 stated:
حديث "اقتلوا نعثلا قتل الله نعثلا" تعني عثمان . وهذا كان منها لما غاضبته وذهبت إل مكة
The hadith “kill Nathal, may Allah kill Nathal" refers to Uthman. That happened from her when she got angry and went to Makka.
Al-Razi records in Al-Mahsol, Volume 4 page 343:
فكانت عائشة رضي الله عنها تحرض عليه جهدها وطاقتها وتقول أيها الناس هذا قميص رسول الله صلى الله عليه وسلم لم يبل وقد بليت سنته اقتلوا نعثلا قتل الله نعثلا
Aisha (may Allah be pleased with her) did her best to incite people against Uthman, and she used to say: ‘Oh people! This is the cloth of the Messenger of Allah (pbuh) still not ragged, while his Sunnah is ragged, kill Nathal, may Allah kill Nathal.’
(ஆயிஷா, மக்களை உத்மானுக்கு எதிராக நன்றாக தூண்டிவிட்டார், அவர்(ஆயிஷா) கூறுவார், “மக்களே அல்லாஹ்வின் தூதருடைய இந்த துணி கிழியவில்லை. ஆனால் அவரது சுன்னத்துகள் கிழிந்து விட்டது, காஃபிரைக்  கொல்லுங்கள் அல்லாஹ் (அந்த) காஃபிரைக் கொல்லட்டும்" என்பார்.)

ஆயிஷாவின் இந்த கருத்தின்படி குர்ஆனை தொகுத்த கலீஃபா உஸ்மான் ஒரு காஃபிர். இதே உஸ்மான் மரணத்திற்குப்பின் அப்பாவியானதும், புனிதரானதும் அவரது கொலைக்கு பழிவாங்க ஆயிஷா போர்க்கோலம் பூண்டதும் தனிக்கதை. குர்ஆனைத்  தொகுத்தவரின் இறுதிகாலம் மிக கேவலமானது. கொலை செய்யப்பட்ட அவரது உடல் தீண்டுவாரின்றி குப்பைகூழத்துடன் மூன்று நாட்கள் கிடந்தது. இறுதியில் யூதர்களின் திறந்தவெளிக் கழிப்பிடத்தில் அடக்கம் செய்யபட்டது. இது தண்டனையா? இல்லை வெகுமதியா?

பல அனுபவங்களுக்கு பின் மிகுந்த பாதுகாப்புடன் வெளியிடப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் இறுதி வேதத்தின் நிலையே இப்படியென்றால், முந்தின வேதங்களின் நிலையைப்பற்றி கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் முந்தின வேதங்கள் மற்றப்பட்டதாக புலம்புவதில் எவ்வித பொருளுமில்லை.

சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வந்த குர்ஆனில் மட்டுமே முந்தின வேதங்கள் மனிதர்களால் களங்கமடைந்து விட்டதாகவும் அவைகளைப் பின்பற்றக் கூடாது என்ற செய்தி உள்ளது. தவ்ராதிலும், ஜபூரிலும் மனிதர்களின் கைவரிசை இருப்பதாக இதற்கு அடுத்து இறக்கப்பட்ட இன்ஜீலில் அப்படி எந்த செய்தியும் காணவில்லையே. தவ்ராதிலும், ஜபூரிலும்  திருத்தம் செய்து கொண்டதை இன்ஜீலின் காலத்தில் அல்லாஹ்வினால் அறிய முடியவில்லையா?

எந்த காலகட்டத்தில், எவ்வாறு, யாரால் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டது என தெளிவாக குறிப்பிடுவதுதானே குற்றம் சாட்டும் முறை. மாற்றிவிட்டார்கள்…! மாற்றிவிட்டார்கள்…! மீண்டும் மீண்டும் ஒப்பரிவைப்பது ‘சின்னபுள்ளத்தனமா’ இருக்கிறது. 

முன்னுக்குப்பின் முரணாக தெளிவின்றி  பேசும் குர்ஆனின் குற்றச்சாட்டுகளை நம்புவது எப்படி?
சரி…  

அல்லாஹ் தன்னுடைய வேதங்களின் மூலம் மனிதர்கள் நேர்வழி  பெற ஏவுவது எதற்காக?
ஏதேனும் ஓர் ஊரை நாம் அழிக்க நாடினால் அதில் சுகமாக வாழ்பவர்களை (நேர்வழியை பின்பற்றுமாறு) ஏவுவோம். (ஆனால் அவர்கள் நேர்வழியை பின்பற்றாமல்) அதில் பாவம் செய்கிறார்கள்; எனவே (வேதனையைக் கொண்டுள்ள நம்முடைய) சொல் அதன் மீது உண்மையாகி அதனை வேரோடு அழித்து நாசமாக்கி விடுகிறோம்.
(குர்ஆன் 17: 16)
இவ்வசனம் அல்லாஹ்வின் மனநிலையை உணர்த்த போதுமானது.  தன்னுடைய சொல்(விதி) எவ்வாறு நிறைவேறுகிறது என்பதைப் பற்றிய ஒரு வாக்கு மூலம்.  சுகமாக வாழும் மனிதர்களைக் காண சகிக்காமல், அவர்களை வேரோடு அழிந்து நாசமாவதைக் காண்பதற்காக நேர்வழியை ஏவுபவன் இறைவனா?  இதற்கு ஒரு வேதம் தேவையா?