Thursday, 10 March 2016

ஸிஹ்ரும் ஷிர்க்கும்! -5

கடந்த பதிவில் மனம் –உள்ளம் என்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

மனம், உள்ளம் என்று அழைப்பதும்  இரக்கம், அன்பு, ஆசை, கோபம், வெறி, ஏக்கம், காமம், காதல்…. இன்னும் அனைத்து உணர்வுகளும் நிகழ்வதெல்லாம் மூளையில்தான். அதில் பதிந்துள்ள நினைவுகளையும், சிந்தனைகளையும் மனம், மனசாட்சி, உள்ளம் என்று அழைக்கிறோம்.  அன்றைய மக்கள் இவற்றை அறிந்திருக்கவில்லை; அவர்களின் காலத்து அறிவியலின் வளர்ச்சி அவ்வளவுதான்! அன்றைய புராண காலத்து மனிதர்கள் இவை அனைத்தும் இதயத்தில் நிகழ்வதாகக் கருதினர். காரணம் அவர்களது சிந்தனை தவறாக இருந்ததுதான். இதன் பதிவுகளை, பாதிப்பை நமது மொழிகள் அனைத்திலும் இன்றும் காணமுடியும்!

உதாரணத்திற்கு, அன்றைய சிறந்த நாகரீகமாக சமுதாயமாகக் கருத்தப்படும் எகிப்திய மக்களிடையே இறந்தவர்கள் என்றேனும் உயிர்த்தெழக் கூடுமென்ற நம்பிக்கை இருந்தது. அதற்கு வசதியாக உடல்களைப் ’மம்மி’களாகப் பதப்படுத்தி வைத்தனர் என்பதை நாம் அறிவோம். அவ்வாறு உடலைப் பதப்படுத்தும் பொழுது குடல், ஈரல், இதயம் போன்ற உறுப்புகளை எடுத்து தனித்தனியாக ஜாடிகளில் அடைத்து வைத்தனர். அந்த உடலுக்குரியவர் திரும்ப உயிர்த்தெழும் பொழுது தேவைப்படும் என்ற நோக்கில் அவ்வாறு செய்தனர். ஆனால் தேவையற்ற உறுப்பாகக் கருதி மூளையை குடைந்து நீக்கி வீசி எறிந்து விடுவார்கள்.





இனி நாம் குர்ஆன் ஹதீஸ்களுக்கு வருவோம்.  முஹம்மதுவின் சிறுவயதிலும், விண்வெளிப்பயணத்திற்கு முன்பாகவும் தனது நெஞ்சம் பிளக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டதாகவும் ஹதீஸ்களில் கூறுகிறார்.  அல்லாஹ்வைச் சந்திக்க உடலுடன் செல்ல வேண்டுமென்ற எந்த நிபந்தனையும் இல்லையென்று கருதும் இஸ்லாமின் சில குழுக்கள் முஹம்மதின் விண்வெளிப்பயணம் முழுவதுமே ஒரு கனவு போன்றது, அதாவது ஆன்மீக, ஆத்மீக முறையிலான பயணம் அதை உடல்ரீதியான பயணமாக கருதக்கூடாது என்கிறது. அண்ணன் பீஜே போன்ற குழுவினர்கள், தூதர் முஹம்மது விண்வெளிப்பணம் சென்றது உண்மைதான் ஆனால் பயணத்திற்கு முன்பாக செய்யப்பட்ட நெஞ்சத்தை பிளந்து, ஈமான், ஹிக்மத் போன்ற பொருட்களால்(!?) அவரது நெஞ்சம்   நிரப்பப்பட்டதாக கூறுவது ஒரு கனவு போன்றது என்கின்றனர். ஏனெனில் ஈமான் என்ற நம்பிக்கையும் ஹிக்மத் என்ற நுண்ணறிவும் பொருட்களல்ல என்பது அவர்களது வாதம். பாரம்பரீய சுன்னத் ஜமாஅத்தினர் அல்லாஹ்வின் தூதரது விண்வெளிப்பயணம் தொடர்பான ஹதீஸ்கள் கனவோ கற்பனையோ அல்ல! அனைத்துமே நிஜம்தான் என்கின்றனர்.  தூதர் முஹம்மது விண்வெளிப் பயணம் செய்விக்கப்பட்டார் என்ற ஒரே செய்திக்கு மாறுபட்ட விளக்கங்கள் உருவாது ஏன்? 

ஹதீஸ்கள் கூறும் செய்தி சராசரி அறிவிற்குக்கூட பொருந்தாமல் போகும் பொழுது பாவம்! அவர்களும் என்னதான் செய்ய முடியும்? நிராகரிக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் இறுதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர்.

தூதர் முஹம்மதிற்கு, மருத்துவர் ஜிப்ரீல் மேற்கொண்ட ஈமான், மற்றும் ஹிக்மத் குறைப்பாடு நீக்க அறுவை சிகிச்சை கனவா அல்லது உண்மைதானா?  இதோ ஒரு நேரடி சாட்சியம்!

முஸ்லீம் 261
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது சிறு வயதில்) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபியவர் களைப் பிடித்துப் படுக்கவைத்து, அவர்களின் நெஞ்சைத் திறந்து இருதயத்தை வெளியிலெடுத்தார்கள்…..
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் ஊசியால் தைத்த அந்த அடையாளத்தை நான் பார்த்திருக்கிறேன்.

ஹதீஸ் அறிவிப்பாளரும், தூதர் முஹம்மதின் உறவினருமான அனஸ் என்பவர், முஹம்மது நெஞ்சத்தில் ஊசியால் தைக்கப்பட்ட அந்த அடையாளத்தைப் பார்த்ததாகக் கூறுகிறார். அண்ணன் பீஜே கூறுவதைப் போல, இருதய அறுவை சிகிச்சை, ஈமான் மற்றும் ஹிக்மத் நிரப்பல்கள் கனவல்ல நிஜம்தான்!

தூதர் முஹம்மது, சிந்தனை மையமாக, மனித உள்ளத்தின் இருப்பிடமாகக் கருதியது மார்புக் கூட்டிற்குள் இருக்கும், உடலுக்குள் இரத்ததை விநியோகிக்கும் இதயத்தைதான் என்பதை வலியுறுத்திக் கூறும் இன்னொரு ஹதீஸ்.

முஸ்லீம் 5011
மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகச் சற்று கூடுதல் குறைவுடன் இடம்பெற்றுள்ளது.
அதில், "அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையே (qulubikum) பார்க்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை(sadrih). நோக்கி சைகை செய்தார்கள்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அண்ணன் பீஜே கூறுவதை போல  ’qalb-இதயம்’ என்பதை சிந்தனை மையம் என்ற பொருளில் பயன்படுத்தியிருந்தாலும், அந்த qulubikum என்ற உள்ளங்கள் sadrih என்ற மார்புக்கூட்டிற்குள் இருப்பதாகக் கூறும் தூதர் முஹம்மதின் செயல் முறைவிளக்கங்கள், அதன் சாட்சிகளாக இருக்கும் துணை ஆதரங்கள் அனைத்துமே அன்றைய மக்களின் அறியாமையை அப்பட்டமாகப் பறைசாற்றுவதுடன்,  அண்ணன் பீஜே அளவற்ற முழம் போடுகிறார் என்பதைத் தெளிவு படுத்துகிறது.

இஸ்லாமிய நம்பிக்கைப்படி மார்பெலும்புகளுக்கு மத்தியிலுள்ள இதயத்தின் பணி என்னவென்பது மனிதனைப் படைத்த அல்லாஹ்விற்குத் தெரியும். முஹம்மது பொய்யுரைப்பவர் அல்ல!  எதிரிகளாலும் புகழப்படும் அளவிற்கு நேர்மையாளர் என்பதும் இஸ்லாமிய நம்பிக்கைதான். இங்கு இந்த இரண்டில் ஒன்று அல்ல இரண்டுமே, சிறிதுகூட உண்மை கலக்காத பச்சைப் பொய்கள்!

மேற்கண்ட ஹதீஸ்களை நிரகரிக்க அண்ணன் பீஜே உடனடியாகத் தயாராக வேண்டும். அறிவிப்பளர் வரிசையில் கோணல் இல்லை, அறிவிப்பாளர்கள் தரத்தில் குறைகள் இல்லை. குர்ஆனில் அல்லாஹ் பயன்படுத்தியுள்ள அதே பதங்கள் அதே பொருளில் இருக்கின்றன ஆனால் ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும்!  இதற்காக த.த.முல்லாக்கள் பெரிதாக வருத்தப்படத் தேவையில்லை; ஏனெனில் ஹதீஸ்களை ஒட்டு மொத்தமாகவே நிராகரிக்க  அண்ணன் பீஜே ஏற்கெனவே அடித்தளம் அமைத்து கொடுத்துவிட்டார்.

ஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார்….
…ஹதீஸ்களைப் பொருத்தவரை ஓரிரு நபித்தோழர்கள் தான் அறிவித்துள்ளனர். நபித்தோழர் இப்படிச் சொன்னார் என்று அறிவிப்பதும் ஓரிருவர் தான். நூலாகத் தொகுக்கப்படும் காலம் வரை ஒருவரில் இருந்து ஒருவர் என்ற அடிப்படையில் தான் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டன…

த.த.ஜ முல்லாக்களே…..!  ஸ்டார்ட் மியூசிக்!!!

(ஹதீஸ்களை மறுக்கலாம்  அது கைவந்த கலை! ஆனால் குர்ஆனை என்ன செய்வது?)

இல்லாத பொருளைக்கூறி குர்ஆனின் பல வசனங்களுக்கு முரண்படுகிறது என்று முஹம்மதிற்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் அனைத்து இட்டுக் கட்டப்பட்டவை என்ற நிலைக்குச் சென்றவர்கள், அகராதிகளிலும் அரபு இலக்கியங்களிலும் ’கல்ப்' என்ற பதத்திற்கு ’மூளை’ என்ற நேரடியான பொருள் இருக்கிறதென்று வாதிடும் சந்தர்பவாதிகள், முஹம்மதிற்கு நெஞ்சு பிளக்கப்பட்டதாக கூறப்படும் ஹதீஸ்கள், குர்ஆனுக்கு இவர்கள் கூறும் பொருளுக்கு நேடியாக முரண்படுகிறது என்பதை அறியவில்லை என்பது ஆச்சரியம்தான். இஸ்லாமிய மக்களின் அறியாமையை இந்த முல்லாக்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தி ஏமாற்றுகின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.


முஹம்மதுவின் நெஞ்சத்தைப் பிளந்து,  இருதயத்தை வெளியில் எடுத்து அதைக் கழுவி சுத்தம் செய்து ஈமானையும் ஹிக்மத்தையும் அதனுள் நிரப்பியவர் யார்? எதார்த்த உண்மைக்கு எதிராக, அடிப்படை உடற்கூறுகளுக்கு முற்றிலும் புறம்பாக, இப்படியொரு அர்த்தமற்ற காட்சி முஹம்மதிற்குத் தோன்றியது எவ்வாறு? குர்ஆன் ஹதீஸ்களில், கிடைக்கின்ற சந்து பொந்துகளில் அறிவியலைத் திருகி ஏற்றும் முல்லாக்களுக்கு இதற்கு பதில் சொல்லும் திறன் இருக்கிறதா?

அல்லாஹ்வைச் சந்திக்கச் சென்றதாகவும், ஜிப்ரீல், மலக்குகள், இப்லீஸ், ஜின்கள், ஷைத்தான்களைக் கண்டதாகவும், அவர்களுடன் உரையாடியதாகவும் கூறிக் கொண்ட தூதர் முஹம்மதின் மனநிலையை உங்களது யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கும், இதற்கும் என்ன தொடர்பு இவைகளை இங்கு எதற்காக விவாதிக்க வேண்டுமென்று உங்களுத் தோன்றலாம். மதத்திற்குள் பகுத்தறிவு சிந்தனையை நுழைந்தால், மதநம்பிக்கைகளை அது எவ்வாறு வேறுடன் பிடுங்கி எறிந்துவிடும் என்பதை விளக்கவே இதை இங்கு கூறுகிறேன். இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது அவற்றை வரும் பதிவுகளில் நாம் கவனிக்கலாம். அண்ணன் பீஜேவின் ஸிஹ்ர் பற்றிய முடிவும் இத்தகையதுதான்! முஃமின்கள் சிந்திக்கட்டும்!

மீண்டும் பழைய கேள்வி

நோய், மறதி, மனநிலை பாதிப்பு, பைத்தியம் உட்பட அனைத்து தீமைகளும் ஏற்படுவது எதனால்? இதில் ஷைத்தானின் பங்காளிப்பு என்ன?

83. பைத்தியத்திற்குஷைத்தான்காரணமா?
தீயகாரியங்களைப் பற்றிக் கூறும் போது 'ஷைத்தான் அதை ஏற்படுத்தினான்' என்று கூறுவதைத் திருக்குர்ஆன் அனுமதிக்கிறது. அய்யூப் நபியவர்களுக்கு நோயும் துன்பமும் ஏற்பட்டபோது 'ஷைத்தான் இவ்வாறு செய்துவிட்டானே' எனக் கூறினார்கள் (திருக்குர்ஆன் 38:41). இதனால் நோயையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று கருதக்கூடாது.

கெட்டகாரியத்தை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்று மரியாதை நிமித்தமாகவே அவ்வாறு அய்யூப் நபி கூறினார்கள். அதுபோல் பைத்தியத்தை அல்லாஹ்தான் ஏற்படுத்தினாலும் அந்தத் தீமை ஷைத்தானுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

“ஜின்களும் ஷைத்தான்களும்” என்ற புத்தகத்திலிருந்து…
"நாம் அப்பாறையில் இளைப்பாறிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது'' என்று (ஊழியர்) கூறினார். (அல் குர்ஆன் 18:63)
மறதி உட்பட எல்லாத் தீமைகளும் இறைவன் புறத்திலிருந்து தான் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. என்றாலும் கெட்ட விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்ற மரியாதைக்காகவே மறதியை ஷைத்தான் ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
... நன்மையை ஏற்படுத்துவது இறைவனுடைய அதிகாரமாக இருப்பது போல தீமைகளை ஏற்படுத்துவதும் இறைவனுக்கு மட்டுமே உரிய அதிகாரமாகும். இதில் நபிமார்கள் உட்பட எப்படிப்பட்ட மகானிற்கும் எள்ளவுகூச(ட) ஆற்றல் இல்லை என்கிற போது ஷைத்தானுக்கு இந்த ஆற்றல் இருப்பதாக நினைப்பது தவறாகும்.

இவ்விளக்கம் தன்னுடைய சொந்தக் கருத்தல்ல. குர்ஆனின் அடிப்படையில்தான் தான் இவ்வாறு விளக்குவதாக பின்வரும் குர்ஆன் வசனத்தை மேற்கோள் காண்பிக்கிறார் அண்ணன் பீஜே.

"அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்?'' என்று கேட்பீராக! அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.  (அல் குர்ஆன் 48:11)

குர்ஆனின் அடிப்படையில், மனிதர்களுக்கு ஏற்படுகின்ற வறுமை, பட்டினிச் சாவுகள், சுரண்டல்கள், கொள்ளை நோய்கள், உடல் ஊனம், கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல் துன்புறுத்தல்கள், வன்புணர்ச்சி, …., …, போன்ற அனைத்து தீமைகளும் அல்லாஹ்விடமிருந்துதான் வருகிறது மரியாதை நிமித்தமாகவே தீமைகள் ஷைத்தானுடன் இணைக்கப்படுகிறது என்பது அண்ணன் பீஜேவின் விளக்கம் மட்டுமல்ல இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கையும் அதுதான். அப்படியானால் முஃமின்கள் அல்லாஹ்வின் தீமைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறார்கள் என்பதுதான் இதன் பொருள்.

இந்த விளக்கத்தை ஸிஹ்ர் என்ற சூனியக் கலைக்கு பொருத்திப் பார்ப்போம்!

உதாரணத்திற்கு, ஒருவர் மற்றொருவருக்கு தீமையை நாடி ஜின்– ஷைத்தான்களுக்கு அல்லது வேறு கடவுள்களுக்கு அல்லது வேறு தீய சக்திகளுக்கு வழிபாடு செய்கிறார் எனில், அவரது நோக்கம் நிறைவேறுவது அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்து அமைகிறது. அதாவது அந்த நபரை அல்லாஹ் வழிகெடுக்க நாடியிருந்தால் அவரது செயலை அவருக்கு அழகாகக் (Q 2:212, 6:108,122,137) காண்பித்து, அவரது நோக்கத்தை நிறைவேற்றி வழிகெடுக்கிறான். வழக்கம்போல அப்பழி (Q 6:43, 8:48) ஷைத்தானுக்கு வழங்கப்படும். எனவே இஸ்லாமிய நம்பிக்கைகளின் அடிப்படையிலும், அண்ணன் பீஜேவின் விளங்களின் அடிப்படையிலும் ஸிஹ்ர்-பில்லி-சூனியத்திற்கு ஆற்றலில்லை என்று கூற முடியாது! ஏனெனில் ஸிஹ்ரின் வெற்றி தோல்வி அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்து அமைகிறது. மேலும் இஸ்லாமிய நம்பிக்கைப்படி, அல்லாஹ்வின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்குமென்று வரையறுப்பதற்கு எவருக்கும் அனுமதியில்லை. இந்த அடிப்படையில் நோக்கினால் ஸிஹ்ர்-பில்லி-சூனியம் உண்மைதான் என்பதையும், இவ்வாறு நம்பிக்கை கொள்வது இணைவைத்தல் அல்ல என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்!

நாம் மீண்டும் இத்தொடரின் முதல் பகுதியின் வாசித்த முஹம்மதிற்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும்  ஹதீஸிற்குச் செல்வோம். (ஏற்கெனவே படித்ததுதான் மீண்டும் படிக்க வேண்டுமா? என்று சோம்பலாக உணர்பவர்கள் கொட்டை எழுத்துக்களில் அடிக்கோடிட்ட பகுதியை மட்டும் படித்துக் கொள்ளவும்)

புகாரி ஹதீஸ் 5765
ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.
(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், 'இந்த மனிதரின் நிலையென்ன?' என்று கேட்டார். மற்றவர், 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார்' என்று பதிலளித்தார். அவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது?)' என்று கேட்க, மற்றவர், 'சீப்பிலும் சிக்கு முடியிலும்' என்று பதிலளித்தார். அவர் 'எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?' என்று கேட்க, மற்றவர், 'ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் 'தர்வான்' குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி(ஸல்) அவர்கள், 'இதுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன' என்று சொல்லிவிட்டுப் பிறகு 'அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது' என்றும் கூறினார்கள்.
நான், 'தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக காட்டக் கூடாது?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (இந்த சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்துவிட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை' என்று சொல்லிவிட்டார்கள்.

நாம் இதுவரை கண்ட விளக்கங்களின் படி, அல்லாஹ், ஷைத்தானின் பெயரில் நபிமார்கள் உட்பட அனைத்து மனிதர்களுக்கும் நோயையும், மறதியையும் இன்னும் இதர தீமைகளை ஏற்படுகிறான். முஹம்மதிற்கு அவ்வாறு மறதி ஏற்படுத்த முடியாது என்பதற்கு எவ்வித ஆதரமுமில்லை. மாறாக அவருக்கு மறதி இருந்ததாகக் கூறும் ஹதீஸ்கள்தான் இருக்கிறது.

அல்லாஹ் ஒருவனை வழிகெடுக்க நாடினால், அவனது செயலை ஷைத்தானின் பெயரால் அழகாக்கிக் காண்பிக்கிறான் என்பதை கவனித்தோம். இந்த ஹதீஸில் கூறப்படும் 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்ற  நயவஞ்சகருக்கு (அதென்ன நயவஞ்சக’ருக்கு’? எங்கள் கண்ணுமணி பொன்னுமணி அல்லாஹ்வின் ரஸூல் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லத்திற்கு சூனியம் வைத்தவனுக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு? நயவஞ்சகனுக்குன்னு திருத்தி படிங்க!) சூனியம் என்ற அவனது செயலை எவ்வாறு அழகாக்கிக் காண்பிப்பது? சரியாகச் சொன்னீர்கள்!  லபீத் இப்னு அஃஸம் என்ற யூதனின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம், அதாவது முஹம்மதிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் அவனது செயலை அழகாக்கிக் காண்பித்து அவனை இங்கு அல்லாஹ் வழிதவறச் செய்திருக்கிறான். முஹம்மதிற்கு சூனியம் பலித்ததும் இவ்வாறுதான்!

ஸிஹ்ர் பற்றி த.த.ஜ தரப்பில் இரண்டாவதாகச் சொல்வது என்ன?

ஸிஹ்ர் உண்மையில்லை. அதற்கு எந்த ஆற்றலுமில்லை பலிக்காது. ஸிஹ்ர் பொய்யென்பதற்கு அண்ணன் பீஜே அவர்களே வாழும் ஆதாரமாக இருக்கிறார்.

ஸிஹ்ர் உண்மையில்லையெனில் பிராத்தனைகளும் உண்மையில்லை!  எப்படி?

பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்.
….சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்றால் அதைச் செய்து காட்டு! நிரூபித்துக் காட்டு என்று நாம் கேட்கிறோம், யாருமே நிரூபித்துக் காட்ட முன்வராவிட்டால் சூனியத்துக்கு ஒரு ஆற்றலும் இல்லை என்று புரிந்து கொள்வது தான் திருக்குர்ஆன் அடிப்படையில் எடுக்க வேண்டிய சரியான முடிவாகும்…

ஸிஹ்ர்-பில்லி சூனியம் என்பதும் ஒரு வகைப் பிரார்த்தனைதான். சூனியக்காரர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்கள் என்பது அவர்களது நம்பிக்கைகளின் அடிப்படையில் இருக்கும். எனவே அண்ணன் பீஜே கூறும் இதே தர்க்கத்தை அல்லாஹ்வை வணங்கிக் கேட்கப்படும் பிரார்த்தனைகளுக்கும் பொருத்துவதுதான் முறை!

உடல் ஊனமுற்ற ஒருவர், விபத்தினால் ஒரு காலை இழந்தவர் அல்லது பிறவியிலேயே ஒருகால் ஊனமுற்றவர் என்று வைத்துக் கொள்வோம், அவர் வருடம் 365 நாட்களும், காலை முதல் இரவுவரை தவறாது அல்லாஹ்வைத் தொழுது, அழுது, புலம்பி துஆ செய்தால் அவரது குறைபாடு நீங்கி, சராசரி மனிதரைப் போல மாற முடியுமா?

தனது குறைபாடு சரியாவதற்கான மருத்துவத்தையோ அல்லது செயல்படுவதற்கான உபகரணங்களை பொருத்திக் கொள்வதால் மட்டுமே அவரால் நடமாடமுடியும்! கடவுளைப் பிரார்த்தனை செய்வதால் ஒன்றும் நிகழப் போவதில்லை! பகுத்தறிவினால் இவர்கள் சூனியத்தை நிராகரித்தால் அதே பகுத்தறிவினால் அல்லாஹ்வையும் நிராகரிக்க வேண்டியிருக்கும்!

முஃமின்களால் இதை ஏற்க முடியாது. பிரார்த்தனைகள் உண்மை அதனால் காரியங்கள் நிறைவேறுகின்றன என்று கூறலாம். சரி… அகோரி மணிகண்டனுடன் ஸிஹ்ர் போட்டியில் வெற்றி வாகை சூடிய அண்ணன் பீஜே, பிரார்த்தனை போட்டிக்குத் தயாரா?   நாம் ஒரு பிரார்த்தனை போட்டி வைப்போம்!  இஸ்லாமை விமர்சித்து கணிணியில் தட்டச்சு செய்யும்  தஜ்ஜாலின் விரல்கள் அழுகி, உதிர்ந்து போகட்டும் என்று துஆச் செய்து பாருங்களேன். தேவை எனில் உலகிலுள்ள அனைத்து நம்பிக்கையாளர்களை இணைத்துக் கொள்ளுங்கள். என்னதான் நிகழ்கிறென்று பார்த்துவிடுவோம்!

ஸிஹ்ரும் உண்மையில்லை எனில் ஷிர்க்கும் உண்மையில்லை!

ஒருவர் தையாவதைக் ஒன்றை கொண்டு அல்லாஹ்விற்கு இணைகற்பித்துவிட்டால் அது அல்லாஹ்விற்கு இணை ஆகிவிடுமா? அல்லாஹ் எப்படி இருப்பான் என்பதே தெரியாது எனும் பொழுது அவனுக்கு எப்படி இணையாக இன்னொன்றை கொண்டுவர முடியும்?

உதாரணத்திற்கு ஒருவர், அல்லாஹ் அல்லாத வேறு கடவுளர்கள் இருக்கிறது  என்று கூறுவதாகக் கொள்வோம்; அப்பொழுது அங்கே பல கடவுள்கள் உருவாகிவிடுமா? அல்லது அவர் அவ்வாறு கூறுவதால் அல்லாஹ்வின் ஆற்றலில் ஏதாவது குறைவு ஏற்படுமா?  

இஸ்லாமிய நம்பிக்கைப்படி அல்லாஹ்விற்கு இணையாக எதுவும் இருக்கவும் முடியாது, யார் என்ன செய்தாலும் அல்லாஹ்வின் ஆற்றலில் எந்தக் குறைவும் ஏற்பாடாது. ஏனெனில் இணைவைப்பவரது கூற்று ஒருபொழுதும் உண்மையில்லை! என்பதுதான் சூரத்துல் இஃக்லாஸ் நமக்குச் சொல்வது. எனவே என்னதான் இணைகற்பித்தாலும் எந்த ஒன்றும் அல்லாஹ்விற்கு இணை ஆக முடியாது!

எனவே, ஸிஹ்ர் எப்படி உண்மையில்லையோ அதைப் போல ஷிர்க் என்ற இணைவைத்தலிலும் உண்மையில்லை!

உண்மையில்லாத இந்த இரண்டு விஷயங்களுமே பெரும் பாவங்கள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்தது ஏன்?

சரி…  அப்படி ஒரே ஒரு கடவுள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில் அப்படியென்ன பிடிவாதம்?

குர்ஆன் 21:22
அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.

குர்ஆன் 23:91
அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.

இரண்டு கடவுள்கள் இருந்தால், ஒருவருக்கொருவர் சண்டையிட்டு இருவரும் சீரந்திருப்பார்களாம். அவரவர் படைப்புகளை எடுத்துக் கொண்டு, நடுவில் ஒரு கோடு வரைந்து இருவம் தனிக்குடித்தனம் போயிருப்பார்கள். ஒருவரையொரு மிகைத்துக் கொண்டிருப்பார்கள். என்னே... ஒரு லாஜிக்! மெய்சிலிர்க்கிறது!  அல்லாஹ் என்ற கடவுளை இதைவிட எப்படி கேலி செய்வது? இந்த விஷயத்தில் நான் குர்ஆனை ஏற்றுக் கொள்கிறேன்!

ஒரு இனக்குழுவிற்கு இரண்டு தலைவர் இருந்தால் என்னவாகும்? அவர்களுக்கிடையே அதிகாரரப் போட்டி ஏற்படும்; அவர்கள் தங்களது அதிகாரத்தில் குறைவு ஏற்பட்டுவிட்டதாக கருதலாம்; மீண்டும் ஒருவருக்கொருவர் மிகைக்க முற்படுவார்கள்; தீராத மோதலில் அந்த இனக்குழுவே சீரழிந்து போகும். இவற்றை கண்டு வளர்ந்த ஒரு இனக்குழு சமூகத்தில் வாழ்ந்த மனிதரால் இதற்குமேல் எப்படி சிந்திக்க முடியும்? 

இந்துமத கடவுளர்களின் கைகளில் வாளும், வில்லும், அம்பும் இன்னும் பழங்கால ஆயுதங்கள் மட்டுமே இருப்பது ஏன்? ஆயுதங்கள் இல்லாமல் கடவுளர்களால் இருக்க முடியாதா? இனக்குழு சமுதாயத்தில் வாழ்ந்தவர்கள் தங்களது அனுபவங்களை கடவுளர்களுக்கும் பொருத்தியுள்ளனர் என்பதைத் தவிர வேறில்லை!

அன்றைய இனக்குழு சமுதாயத்தை விட்டுவிடுவோம் இன்றைய மக்களாட்சி முறையையே எடுத்துக் கொள்வோம், ஒரு கிராமப் பஞ்சாயத்திற்கு இரண்டு தலைவர்கள் இருந்தால் என்னவாகும்? ஊடகத்திற்கு பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமே இருக்காது.  இதைத்தான் மேற்கண்ட வசனமும் சொல்கிறது. அண்ணன் பீஜே பாணியில் சொல்ல வேண்டுமென்றால், முரண்பாடு என்று எதை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்களோ அதுதான் நிகழ்கால அரசியலை உரைப்பதாக இருக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரால் நிகழ்கால அரசியலை எப்படிச் சொல்ல முடியும்? நிகழ்கால அரசியலை 1400 ஆண்டுகளுக்கு தெள்ளத் தெளிவாகக்கூறி இறைவேதமென்பதை நிரூபிக்கிறது. (எத்தனை நாளைக்கு அறிவியலையே கூறி, புல்லரித்துக் கொண்டிருப்பது அதனால்தான் ஒரு மாற்றத்திற்காக அரசியலைக் கூறியிருக்கிறேன்! )

ஆட்சியில் பங்கு கேட்பவரை ஒருபொழுது அல்லாஹ்வும், தூதர் முஹம்மதுவும் விரும்பியதில்லை. இனக்குழு சமுகத்தில் வாழ்ந்த மனிதரால் அவ்வளவுதான் சிந்திக்க முடியும்!

முஸ்லீம் 3774
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒருவர் பின் ஒருவராக) இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) அளிக்கப்பட்டால், அவர்களில் இறுதியானவரைக் கொன்றுவிடுங்கள்.

ஒரு இயக்கத்திற்குள் இரண்டாவது தலைமை உருவானால் என்னவாகும் என்பதை அண்ணன் பீஜேவைவிட நன்கு அறிந்தவர் எவரும் இருக்க முடியாது. அது அவர்களது பிரச்சினை நாம் தலையிட தேவையில்லை.

சரி..!

தவ்ஹீது- ஏகத்துவம் என்றால் என்ன?
ஒருமைப்படுத்துதல். வணக்கத்திற்குத் தகுதியுடையது அல்லாஹுவைத்தவிர வேறெதுவும் இல்லை என்று நம்பிக்கை கொள்வது.

கடவுள் ஒருவனே என்றும் அதற்கு ஏதோ ஒரு பெயரையும் வைத்துக் கொண்டு அவனுக்கு இணைகற்பிக்காமலிருந்தால் அல்லாஹ்வின் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியுமா? என்றால் நிச்சயமாக முடியாது.  

ஏன்?

அல்லாஹ்வின் தூதராக, முஹம்மதை முழுமனதுடன் ஒப்புக் கொள்ளாமல், என்னதான் ஏகத்துவவாதியாக, இஃக்லாஸ்வாதியாக இருந்தும் பயனில்லை. இஸ்லாம் கூறும் ஏகத்துவக் கொள்கை இதுதான்! முஹம்மதை ஒப்புக் கொள்ளாமல் இஸ்லாம் கூறும் ஏகத்துவம் ஒருபொழுது முழுமையடையாது!

குர்ஆன் 24:52
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

குர்ஆன் 4:80
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.

அல்லாஹ்விடமிருந்து தூதர் முஹம்மதைப் பிரித்துப் பார்க்கக் கூடாது! முடியாது!  ஏகத்துவத்தில் முன்னோடிகளாக இருக்கும், யூதர்களும் பாகன் அரபிகளும் முஹம்மதைத் தூதராக ஏற்கவில்லை, அவருக்குத் தேவையானதைக் கொடுக்க மறுத்ததுதான் அங்கு நிகழ்ந்த இரத்தக்களறிகளுக்குக் அடிப்படைக் காரணம்.  ஷிர்க்-இணைகற்பித்தல் பற்றி பேசும் முல்லாக்களின் கண்களில் மேற்கண்ட குர்ஆன் வசனங்களில் அல்லாஹ்விற்கு இணையாக முஹம்மது இருப்பது தெரியவில்லையா?

மேற்கண்ட குர்ஆன் வசனத்தின் பொருள், அல்லாஹ்வை தனது அங்கிப்பைக்குள் வைத்திருக்கும் முஹம்மதுவிற்கு அடிபணியாமல் அல்லாஹ்விற்கு மட்டும் நீங்கள் அடிமையாக இருப்பதால் எவ்வித பயனுமில்லை என்பதே!. ’ஷிர்க்’ பெரும் பாவமாகக் கருதப்பட்டதும் இதன் அடிப்படையில்தான்.  புரியவில்லையா?

அல்லாஹ்விற்கு இணையாக இன்னொரு கடவுள் இருந்து, அந்தக் கடவுளும் ஒரு தூதரை அனுப்பியிருப்பதாக எவனாவது கிளம்பிவிட்டால் முஹம்மதின் முக்கியத்துவம் என்னவாகும் என்பதை சிந்திக்க மாட்டீர்களா? ஷிர்க்–இணைவைத்தல் பெரும் பாவமானது இப்படித்தான்.

இன்னும் நாம், இப்பதிவின் அடிப்படை கேள்விக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது!

ஸிஹ்ர் எனப்படும் பில்லி-சூனியக் கலை இருக்கிறது, நினைத்ததையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும் சில பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும் என்றிருந்த த.த.ஜ-வின் இந்த தலைகீழ் மாற்றத்திற்கு  மாற்றத்திற்கு காரணம் என்ன?

பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்.
…சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்றால் அதைச் செய்து காட்டு! நிரூபித்துக் காட்டு என்று நாம் கேட்கிறோம். யாருமே நிரூபித்துக் காட்ட முன்வராவிட்டால் சூனியத்துக்கு ஒரு ஆற்றலும் இல்லை என்று புரிந்து கொள்வது தான் திருக்குர்ஆன் அடிப்படையில் எடுக்க வேண்டிய சரியான முடிவாகும்…

முஸ்லிம் பெயர்தாங்கிகளும் சூனியக்காரர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆற்றல் இருந்தால் உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லிம்களை அழித்து ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களுக்கு சூனியம் வைத்து சமுதாயத்துக்கு நல்லது செய்திருக்கலாமே?

முஸ்லிம் அல்லாதவர்களிலும் சூனியக்காரர்கள் உள்ளனர் இவர்களை நம் நாட்டு அரசியல்வாதிகள் பயன்படுத்தி யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ அந்தத் தலைவரை ஊமையாக ஆக்கினால் போதுமே? அப்படி ஏதும் நடக்கக் காணோம்.

ஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பது உண்மையானால் மண்ணில் புதைந்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கதைக் கொண்டு வருமாறு ஜின்களுக்குக் கட்டளையிடலாமே?

அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பயங்கரவாத நாடுகளுக்கு நாலு ஜின்களை அனுப்பினால் அந்த நாடுகளை உண்டு இல்லை என்று பண்ணிவிடலாமே? ஜின்களுக்கு அவ்வளவு ஆற்றல் உள்ளதே?

இதுபோன்ற பகுத்தறிவுக் கேள்விகள்தான் அண்ணன் பீஜேவை குர்ஆனும் ஹதீஸ்களும் ஒப்புக்கொள்ளும் ஸிஹ்ர் என்ற பில்லி சூனியத்தை மறுக்கச் செய்திருக்கிறது. என்னதான் இஸ்லாமிய நம்பிக்கையென்றாலும், தூதர் முஹம்மதுவிற்கு சூனியம் பாதித்தது, சூனியத்தால் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை உண்டாக்க முடியும், நோய் உண்டாக்க முடியும் என்றெல்லாம் இன்றைய அறிவார்ந்த சமூகத்தின் முன்னே எப்படி சொல்வது?  என்று தயங்குகின்றனர்.

அதுமட்டுமல்ல பதிலுக்கு நம்மைப் போன்றவர்கள், குர்ஆனும் ஹதீஸ்களும் ஸிஹ்ர் உண்மை என்கிறது, முஸ்லீம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கு பில்லி-சூனியம் செய்ய வேண்டியதுதானே? என்று கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் இந்த ஸிஹ்ர் மறுப்பு முல்லாக்களைப் பிடித்து உலுக்கிக்  கொண்டிருக்கிறது.

இந்தத் தலைவலிகளிலிருந்து தப்பிக்க அவர்களுக்கிருக்கும் ஒரேவழி ஸிஹ்ரைப் பொய்யென அறிவிப்பதுதான்! ஆனால் அதை முஃமின்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். குர்ஆன் வசனத்தை நிராகரிக்க முடியாது அதனால் ஸிஹ்ர் என்றால் மேஜிக், தந்திரவித்தை, ஜாலவித்தை என்று பொருள் கூறி அல்லாஹ்வை மோடி மஸ்தானாக மாற்றிவிட்டார்; இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் நிரூபிப்பதாக நினைத்துக் கொண்டு ஸிஹ்ர், ஷிர்க், மூஸா, சூனியக்காரர்கள், ஸாமிரி, தஜ்ஜால் (இது வேற… நான் அல்ல!)  என்று எங்கெங்கோ சுற்றி, எதையெதையோ மறுத்து, முஃமினகள் காதுகளில் பூந்தோட்டங்களையும் அமைத்திருக்கிறார்.

பகுத்தறிவின் அடிப்படையில் அவரது முடிவை வரவேற்கும் அதேவேளையில், குருட்டு நம்பிக்கைகளில் நின்று கொண்டு பகுத்தறிவுவாதம் பேசுவதை நினைத்தால் நகைக்காமல் இருக்க முடியவில்லை. அவர் முழுமையாக பகுத்தறிவின் பக்கம் விரைவில் வருவார். இன்ஷா அல்லாஹ்!(?)

அண்ணன் பீஜே அவர்கள் நிகழ்த்திய சூனியப் போட்டி, முன்வைத்திருக்கும் பகுத்தறிவுக் கேள்விகள் அனைத்துமே ”ஜஸ்ஸாஸ் என்று அறியப்பட்ட அபூபக்ர்” என்ற அறிஞர் முன்வைத்த கேள்விகளின் அடிப்படையில் உருவானவைகள்!  அண்ணன் பீஜே கொடுத்த விளக்கத்திலிருந்து…

சூனியக்காரர்கள் எதைச் செய்ய முடியும் என்று சாதிக்கிறார்களோ அது உண்மையாக இருந்தால், மந்திரத்தின் மூலம் நன்மை செய்யவும், தீமை செய்யவும் முடியும் என்பதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், வானத்தில் பறக்க வைப்போம், மறைவானதை அறிவோம். தொலைவான ஊர்களின் செய்திகளையும் அறிவோம் என்று அவர்கள் கூறுவதில் உண்மையாளர்களாக இருந்தால் ஆட்சிகளை அகற்றவும், புதையல்களை வெளிக்கொண்டு வரவும், தங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் மன்னர்களைக் கொல்லவும், மற்றவர்களால் தங்களுக்கு எந்தத் தீங்கும் வராமலும் மக்களிடம் கையேந்தாமலும் இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லையே? மாறாக மனிதர்களில் இவர்கள் தான் மோசமான நிலையில் உள்ளனர். அதிகம் பேராசை கொண்டவர்களாகவும் மக்கள் பணத்தை ஏமாற்றி பறிப்பவர்களாகவும் பக்கீர்களாகவும் மக்களிடம் குழைந்து பேசுபவர்களாகவும் உள்ளனர்.


சரி..! மேற்கண்ட சவால்களை பிரார்த்தனையால் நிகழ்த்த முடியுமா? நிச்சயமாக முடியாது! அப்படி பிரார்த்தனைகளால் முடியுமென்றிருந்தால், உலக இஸ்லாமியர்கள் கதறிக் கதறிக் கேட்ட துஆக்களினால் அமெரிக்காவும், இஸ்ரேலும் என்றோ இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருக்கும்! மீண்டும் சொல்கிறேன், ஸிஹ்ர் பொய்யென்றால் பிரார்த்தனைகளும் பொய்தான்!

இதுமட்டுமல்ல இன்னும் ஆயிரமாயிரம் விளக்கங்களை இது போல கொண்டுவர முடியும். ஆனால் இவைகள் பகுத்தறிவின் விளைவினால் ஏற்பட்ட தெளிவே தவிர, ஒருபொழுதும் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் எழுதப்பட்ட விளக்கங்கள் அல்ல!

இவர்கள் தங்களது நாகரீக சிந்தனைகளுக்கேற்ப, குர்ஆன் மற்றும் முஹம்மதின் செயல் முறை விளக்கமான ஹதீஸ்களின் வார்த்தைகளையும், வாக்கியங்களையும் தங்களது வியக்கியான தொழிற்சாலைகளுக்குள் நுழைத்து, அவற்றை அடித்து, உடைத்து, நொருக்கி, உருக்கி, தட்டி, வளைத்து, நெளித்து, நிமிர்த்தி புதிய பொருளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். குர்ஆன் தெளிவான(Q5:15, 22:16, 45:20), விளக்கமான(Q3:118, 39:27), நன்கு விவரிக்கப்பட்ட(Q17:89, 18:54) புத்தகம் என்று அல்லாஹ் கதறிக் கொண்டிருப்பதை முல்லாக்கள் சிறிதேனும் நினைவில் கொள்ள வேண்டும்.  அல்லாஹ்வை நினைத்தால் எனக்கே பாவமாக இருக்கிறது!

இவர்கள் ஆண்டாண்டு காலத்திற்கு விவாதங்கள் செய்து கொண்டிருப்பதற்குக் காரணம், ”கண்ணேறு என்பது உண்மையே!”  அல்லது ”பறவை சகுணம் இல்லை!” என்றெல்லாம் ஹதீஸ்கள் சொல்வது போல ”ஸிஹ்ர் என்பது பொய்”  “ஸிஹ்ர் உண்மையில்லை” அல்லது ”முஃமின்கள் ஸிஹ்ரை நம்பகூடாது” என்று குர்ஆனில் எங்கும் கூறப்படவேயில்லை. மாறாக ஸிஹ்ர் பலித்ததாக கூறும் செய்திகளை பத்திபத்தியாக விவரிக்கிறது.

குர்ஆனும், ஹதீஸ்களும் அன்றய, அரேபியப் பகுதி மக்களின் நம்பிக்கைகளை மட்டுமே பிரதிபளிப்பவைகள். நவீன காலத்து அறிவின் வளர்ச்சிகளை அதில் எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. ஆனால் மதபுரோகிதத் தொழிலில் வயிறு வளர்க்கும் கூட்டத்தினரால் இதை ஏற்க முடியாது. அதனால்தான் விளக்கங்கள், விவாதங்களின் மூலம் ’இல்லாத’ கருத்துக்களை ’இருப்பதாக’ நிரூபிக்க முயற்சிக்கின்றனர்.

நாம் என்ன கூறினாலும் அண்ணனின் அல்லக் கைகள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அண்ணன் பீஜேவின் வாதங்களை முறியடிக்க எவரும் இல்லை என்று தாடியை தடவுவார்கள்(அவர்களது தாடியைத்தான்) அவர்களுக்காக, அண்ணன் பீஜே முத்தாய்ப்பாக வைத்து தனது வாதத்தை முடிக்கும் ஆதாரத்தைப் பார்ப்போம்.

ஜஸ்ஸாஸ் என்று அறியப்பட்ட அபூபக்ர் அவர்கள் வலிமையாக சூனியத்தை மறுத்திருக்கிறார்.

அவர் கூறுவதைக் கேளுங்கள்.

أحكام القرآن للجصاص ط العلمية (1/ 58) …

என்று ஒரு விளக்கத்தை முன்வைத்து மறுத்திருக்கிறார். ஆனால் அபூபக்ர் ஜஸ்ஸாஸ்  என்பவர், முஃதஸிலா என்ற நபிமொழிகளை மறுத்து புதுக்குழப்பத்தை ஏற்படுத்தி இஸ்லாமிய சமுதாயத்தை விட்டு தனியே விலகிச் சென்ற கூட்டத்தை சார்ந்தவர் என்றும் இவரை ஆதரிப்பதன் மூலம் அண்ணன் பீஜேவும் முஃதஸிலா கூட்டத்தின் இணைந்துவிட்டார் என்று எதிரணி குற்றம் சாட்டுகிறது. அண்ணன் ஷிர்க்கை வைத்து மிரட்டினால் இவர்கள் முஃதஸிலா என்று பதிலுக்கு மிரட்டுகிறார்கள்.

உண்மையிலேயே அண்ணன் பீஜே அறிவுடன்தான் வாதிடுகிறாரா என்பது புரியவில்லை. தனது வாதத்திற்கு வலு சேர்க்க வேண்டுமென்பதற்காக படிக்காமலேயே ’ஜஸ்ஸாஸ் அபூபக்ரின்’ கருத்தை முன் வைக்கிறார்.

أحكام القرآن للجصاص ط العلمية (1/ 58) …
யூதப் பெண் சீப்பு தலைமுடி பேரீச்சம் பாளை ஆகியவற்றில் சூனியம் செய்து கிணற்றில் வைத்தாள். ஜிப்ரீல் மூலம் இது நபியவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பின் கிணற்றில் இருந்து அதை அப்புறப்படுத்தியதால் சூனியம் விலகியது என்று கேவலமான நம்பிக்கையும் சிலரிடம் உள்ளது…

ஸஹீஹ் ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன என்பதைக்கூட வாசிக்காமல் இந்த அறிஞர் விமர்சித்திருக்கிறார். புகாரி, முஸ்லீம் போன்ற ஸஹீஹ் ஹதீஸ்கள் முஹம்மதிற்கு சூனியம் வைத்தது ஒரு யூத ஆண் என்கிறது.  இவர் யூதப் பெண் என்கிறார். பாவம் நம்ம ”ஜஸ்ஸாஸ் அபூபக்ர்” ஏதோ தவறான ஹதீஸை ஆய்விற்கு எடுத்திருக்கிறார். முஹம்மதிற்கு விஷம் வைத்ததாகக் குற்றம் சாட்டப்படும் யூதப் பெண்ணை இங்கு கொண்டுவந்து இணைத்திருப்பாரோ? ஒருவேளை ”ஜஸ்ஸாஸ் அபூபக்ர்”  ’மண்டபத்தில்’ எவரேனும் எழுதிக் கொடுத்ததை வாசித்து பொற்காசுகளைப் பெறுவதற்கு முயற்சி செய்திருக்கலாமென்று நினைக்கிறேன். அடிப்படை செய்தியே தவறாக இருக்கிறது. இதை ஒரு ஆதாரமாக முன்வைத்த அண்ணன் பீஜேவின் துணிச்சலை நினைத்தால் என் உடலெங்கும் புல்லரிக்கிறது.

அண்ணன் பீஜேவும் அவரது ததஜவினரும்
நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் அனைத்து ஹதீஸ்களூமே மட்டும் இட்டுக் கட்டப்பட்டவை என்பது தான் ந்மது நிலை.

என்ற அர்த்தமில்லாத பிடிவாதத்தைக் கைவிட்டுவிட்டு, ஸிஹ்ர் பற்றிய செய்திகளை குர்ஆன் ஹதீஸிற்கு முரண் இல்லாதவாறு, அதாவது,   ”என்ன செய்வது? முஸ்லீமாகப் பிறந்துவிட்டோம்! வேறு வழியில்லை! பகுத்தறிவைத் தூக்கித் தொலைவில் எறிந்துவிட்டு எல்லவற்றையும் நம்பித் தொலைக்கிறோம்” என்று புரிந்து கொண்டால் அவர்களுக்கு எந்த குழப்பமும் தோன்றாது.

இவர்களை நாம் ஏன் விமர்சிக்கின்றோம்?
ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகரீகவளர்ச்சியற்ற ஒரு சமுதாயத்தின் கருத்துக்களின் மீது குருட்டு நம்பிக்கை கொண்டு, தொலைந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தின் மீது கொண்ட பரிதாபமே எங்களை எழுத வைக்கிறது. முல்லாக்களின் அர்த்தமற்ற மிரட்டல்கள், புரட்டல்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற மனிதாபிமான உணர்வுகளே அவர்களை எதிர்த்து விமர்சிக்கச் செய்கிறது.

முல்லாக்களின் மதப்புரோகிதத் தொழிலுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது குர்ஆனும் ஹதீஸ்களும்தான்.  குர்ஆன் ஹதீஸ்களுக்கு அடிப்படை தூதர் முஹம்மது.  இவைகளிலுள்ள பதங்களுக்கு  இல்லாத பொருளையும்,  அதன் வாக்கியங்களில் இல்லாத அறிவியலையும் நுழைத்து, இந்த வார்த்தைக்கு அந்தப் பொருள் அந்த வார்த்தைக்கு இந்தப் பொருள் என்று குழப்பிவிட்டால், முஃமின்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் குர்ஆனுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பார்கள்; அவர்களால் குர்ஆனையும் ஹதீஸ்களையும் விட்டு எந்தக் காலத்திலும் வெளியேறவும் முடியாது.   முல்லாக்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான். இதை நாம் வெளிப்படுத்தி விமர்சித்தால், அவர்களது மத உணர்வு புண்படுகிறதாம்! விமர்சிக்கக் கூடாதாம்!

இஸ்லாம் மட்டுமே உயர்ந்ததென்று மேடைகளில் முழங்குவதற்கும்,  கற்பனைக் கதைகள்கூறி மதத்தை விற்பனை செய்வதற்கும் அவர்களுக்கு உரிமையிருக்கும்பொழுது அதை மறுக்கவும், விமர்சிக்கும் உரிமை நமக்கு இருக்கக் கூடாதா?

இஸ்லாமியக் கொள்கைகள் விமர்சனத்திற்குள்ளாகும் பொழுது அதன் நிறுவனர் தூதர் முஹம்மது பாதிப்பிற்குள்ளாவதை ஒருபொழுதும் தவிர்க்க முடியாது! இஸ்லாத்திலிருந்து தூதர் முஹம்மதுவைப் பிரித்தெடுக்க முடியாது! ஒருவேளை முடியுமென்றால் அது எப்படி என்பதை விளக்காமல், 150 கோடி மக்களின் பெரும்தலைவரை இழிவுபடுத்திவிட்டாய் என்று ஒப்பாரி வைப்பதில் பொருளில்லை!

எங்கள் மனம் புண்பட்டுவிட்டது, புரையோடிவிட்டது என்று நீங்கள் என்னதான் கூக்குரலிடலும், மக்களை அறியாமையிலிருந்து மீட்டெடுக்கும் இம்முயற்சியிலிருந்து நாங்கள் ஒருபொழுதும் பின்வாங்கப் போவதில்லை!


தஜ்ஜால்

Sunday, 6 March 2016

ஸிஹ்ரும் ஷிர்க்கும்! -4

கடந்த பதிவில் நாம் பார்த்தைப் போன்று முஹம்மது ஜின் ஓட்டியதாகக் கூறும்  இன்னொரு செய்தியும் இருக்கிறது.

ஒருமுறை முஹம்மதுவிடம், ஒரு பெண் பைத்தியம் பிடித்த ஒரு குழந்தையை கொண்டு வந்து காட்டினார். அக்குழந்தையைத் தமது கையில் எடுத்த முஹம்மது 'அல்லாஹ்வின் விரோதியே! வெளியே செல்! அல்லாஹ்வின் விரோதியே வெளியே செல்! நான் அல்லாஹ்வுடைய தூதர்!' என்று கூறினார்கள். குழந்தை குணமடைந்தது. இந்நிகழ்வு அஹ்மது, ஹாகிம், பைஹகீ போன்ற நூல்களிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஜின்–ஷைத்தன்கள் மனிதர்களின் மீது இறங்கி அவர்களை தங்கள் விருப்பத்திற்கேற்ப ஆட்டுவிக்கும் என்று கூறுவது  ஹதீஸ்கள் தானே என்று உங்களுக்கும் தோன்றலாம். அப்படியானால் சில குர்ஆன் வசனங்களை முன்வைக்கிறேன்.  இதற்கு என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

குர்ஆன் 26:221, 222
ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?  இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.

குர்ஆன் 41:25
இவர்களுக்குத் தோழர்களை(quranāa) நியமித்துள்ளோம். இவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவர்கள் அழகாக்கிக் காட்டுகின்றனர். எனவே இவர்களுக்கு முன் சென்று விட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களில் உள்ள (தீய) கூட்டங்களுடன் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் கட்டளை உறுதியாகிவிட்டது. இவர்கள் இழப்பை அடைந்தோராகி விட்டனர்.

குர்ஆன் 50:27
"எங்கள் இறைவா! நான் இவனை வழிகெடுக்கவில்லை. இவனே தொலைவான வழி கேட்டில் இருந்தான்'' என்று அவனது கூட்டாளி (qarīnuhu)(யான ஷைத்தான்) கூறுவான்.

குர்ஆன் 37: 51,52,53
"எனக்கு ஒரு நண்பன்(qarīnun) இருந்தான். நீயும் (மறுமையை) நம்புவோரில் ஒருவனா? நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது நாம் கூலி கொடுக்கப்படுவோமா?'' என்று (என்னிடம் கேட்டான்) என அவர்களில் ஒருவர் கூறுவார்.

ஷைத்தான் என்ற ஜின்கள் மனிதனின் மீது இறங்கின்றன அவை தங்களின்(அல்லாஹ்வின்!?) விருப்பதிற்கேற்ப மனிதர்களை ஆட்டுவிக்கின்றன என்பதற்கு  குர்ஆன் வசனங்ளும் ஹதீஸ்களும்  போதுமான சாட்சிகளாக இருக்கின்றன.  

பாரம்பரிய சுன்னத் ஜமாஅத்தினர் ஜின் இருக்கிறது என்பார்கள்; ஜின்கள் மனிதனை ஆட்டுவிக்கும் என்பார்கள்; தேவையேற்பட்டால் அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொள்வோம் என்றும் கூறுகின்றனர். அவர்கள் யாருடனும் எந்த வம்பிற்கும் செல்வதில்லை. தாங்கள் உண்டு தங்கள் நம்பிக்கையுண்டு என்று இருப்பவர்கள்.

இன்னொரு வகை முஃமின்கள் உண்டு. அவர்களிடம் ஜின்கள் பற்றி வேறொரு கருத்தும் இருக்கிறது. நாம் அதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

….களிமண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனிதன் உடம்பு களி மண்ணாக இல்லை, இரத்தமும் தசையுமாகவே உள்ளது. அதேசமயம் மண்ணில் உள்ள அனைத்து சத்துக்களும் (Minerals) மனித  உடலில் உள்ளது. இது போலவே நெருப்புச் சுடரிலிருந்து படைக்கப்பட்ட ஜின்கள் நெருப்பு சுவாலையாக இருப்பதில்லை. ஆனால் நெருப்பின் பண்பான வெப்ப ஆற்றலைக் (Plasma-Radiant energy) கொண்டுள்ளார்கள். …


மனிதர்களைப்போல் மூன்று நிலைகளில் (3 டைமேன்சன்) இல்லாமல் நான்காவது நிலையான பிளாஸ்மா எனும் உருவமற்ற நிலையில் இருப்பதால் இவர்களால் அண்டவெளி முழுவதும் குறுகிய நேரத்தில் சுற்றிவர முடியும். இடம், காலம் வெளி, இவர்களுக்கு பொருட்டல்ல!...

இன்று பேசப்படும் ஏலியன்கள், என்னும் வேற்று கிரகவாசிகள் இஸ்லாம் கூறும் ஜின்களே! ஜின்கள் நம்மோடு நம் பூமியிலும் வசிக்கின்றன, பிரபஞ்ச பெருவெளியிலும் வாழ்கின்றன. நம் கண்களால் இவைகளைக்  காண முடியாது. ஆனால் அவைகளால் நம்மை பார்க்க முடியும். ஜின் என்ற அரபிச் சொல்லுக்கு மறைக்கப்பட்ட என்ற பொருள்.

இந்த பிளாஸ்மா உயிர்கள்தான் மனிதர்களிடையே நாய், பூனை, கழுதை, பாம்பு போன்ற தோற்றங்களில் உருமாறி வந்தனவா? மனிதர்களுக்குள் புகுந்து அவர்களது எண்ணங்களை ஆட்கொண்டு தங்கள் விருப்பம் போல ஆட்டுவிக்கின்றனவா? அல்லது மனித உருவில் தோன்றி மனிதர்களை வழிகெடுக்கின்றனவா? அல்லது இந்த பிளாஸ்மா உயிரிகளைத்தான் முஹம்மது,  எச்சில் துப்பி, 'அல்லாஹ்வின் விரோதியே! வெளியே செல்!” என்று மிரட்டி வெளியேற்றினாரா?

குர்ஆனுக்கு விளக்கத்தை சொல்வதற்கு முன் அது குர்ஆனின் மற்ற செய்திகளுடன் பொருந்துகிறதா? இல்லையா? என்பதையெல்லாம் கவனிக்காமல் மனதில் தோன்றுவதையெல்லாம் விளக்கம் என்ற பெயரில் விற்பனை செய்கின்றனர்.

தமிழக முஸ்லீம்களில் இன்னொரு பிரிவு இருக்கிறது  அவர்கள், குர்ஆன் ஹதீஸ் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், இதைப்பற்றி அண்ணன் பீஜே கூறியுள்ளது என்ன? என்பார்கள்.  அவர்களுக்காக, 

……. ஒரு மனிதனின் உடம்பில் ஜின் இருக்கின்றது என்றால் அந்த மனிதனுக்கு மனித உள்ளம், ஜின் உள்ளம் என்று இரண்டு உள்ளங்கள் இருப்பதாக ஆகின்றது.  அதிலும் இரவில் ஜின் உள்ளத்தைக் கொண்டு தொழுகின்றான், பகலில் தெரியாது என்று கூறுகிறான் என்றெல்லாம் கூறுவது இரண்டு உள்ளங்கள் அவனிடம் இருக்கின்றது என்று தான் அர்த்தம்.

ஆனால் இவ்வாறு இரண்டு உள்ளங்கள் யாருக்கும் இருக்க முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. (அல்குர்ஆன் 33:4)……

இஸ்லாமிய அறிஞர்கள் மட்டத்தில், தர்க்க ரீதியான வாதங்களுக்கு  இப்ன் தைமிய்யா (CE 1263)  புகழ் பெற்றவர்.  அன்றைய மக்களின் நம்பிக்கை எவ்வறிருந்தது என்பதை  அறிய The Jinn (Demons - Abridged, Annotated and Translated by Dr. Abu Ameenah Bilal Philips) என்ற அவரது கட்டுரையில் காணலாம். அதில் ”ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான் (புகாரி 3281) என்ற செய்தியை  மேற்கோள் காண்பித்து. மனிதனுக்குள் ஜின்கள் ஊடுரும் என்கிறார்.

ஆனால் ”மனிதர்களுக்கு இரண்டு உள்ளம் இல்லையென்ற குர்ஆன்(33:4) வசனத்தை அடிப்படையாகக் கொண்டு ”ஜின்கள் மனிதர்கள் மேல் வந்து உட்கார்ந்து கொண்டு, மனிதனை ஆட்டுவிக்கும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்கிறார்  அண்ணன் பீஜே. அப்படியானால் நாம் கண்ட குர்ஆன் வசனங்களில் சொல்லப்படும் வழிகெடுத்த, வழிகெடுத்துக் கொண்டிருக்கும், வழிகெடுக்கப்போகும் கூட்டாளி-நண்பன்-Qareen யார்? இந்த Qareen எப்படி வழிகெடுப்பான்?  

தூதர் முஹம்மதைத் தவித்து வேறு சிலரிடமும் ஷைத்தான் நேரில் தோன்றியதாகக் கூறும் சில செய்திகள் குர்ஆன் ஹதீஸ்களில் காணப்படுகிறது. வழிப்பறிக் கொள்ளை முயற்சியில் உருவான ’பத்ரு’ சண்டைக் களத்தில் குரைஷிகளிடம் சென்ற ஷைத்தான்,

குர்ஆன் 8:48
ஷைத்தான் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகானதாகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! "இன்று மனிதர்களில் உங்களை வெல்ல யாருமில்லை; நான் உங்களுக்கு அருகில் இருக்கிறேன்'' எனவும் கூறினான். இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த போது பின் வாங்கினான். "உங்களை விட்டும் நான் விலகிக் கொண்டவன். நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்'' என்று கூறினான்.

அதாவது, பத்ரு களத்தில் மோதல் துவங்குவதற்குமுன், முஹம்மதின் எதிரிப்படையான குரைஷியர்களின் எண்ணிக்கையை அல்லாஹ் ’கிரபிக்ஸ்’ செய்து குறைத்துக் காண்பித்து, ஏமாற்றிக் கொண்டிருந்த அதேவேளையில் வேளையில், குரைஷியர்களிடம் சென்ற ஷைத்தான், அவர்களை உற்சமூட்டினான் என்றும் சண்டையில் அவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்ட பொழுது பின்வாங்கி ஓடிவிட்டான் என்கிறது மேற்கண்ட குர்ஆன் வசனம். குரைஷிகள் ஷைத்தானை நம்பியதால்தான் ஏமாற்றத்திற்கு ஆளாயினர் என்கிறான் அல்லாஹ்!

ஒருமுறை அபூஹுரைராவை ரமளானுடைய ஸகாத் (உணவுப்) பொருட்களுக்கு காவலாக இருந்த பொழுது தொடர்ந்து மூன்று நாட்கள் அவற்றைத் திருட ஷைத்தான் வந்ததானாம். (ஜின்களின் ’உணவு’ ஸகாத்தில் இருந்ததா?) அபூஹுரைரா அவனை கையும் களவுமாக பிடித்த பொழுது, ஷைத்தானாகிய தனது தொல்லைகளிலிருந்து தப்பிக்க ஆயத்துல் குர்ஷியை ஒதிக் கொள்ள அவனே அறிவுறுத்தியதாகவும் புகாரி ஹதீஸ் கூறுகிறது. 

ஷைத்தான்கள் மனிதனின் சிந்தனைக்குள் நுழைந்து அவனை ஆட்டுவிக்கின்றன என்பதைக் கூறும் ஹதீஸ்கள்

புகாரி 1232
'உங்களில் ஒருவர் தொழத் தயாரானால் அவரிடம் ஷைத்தான் ஊடுருவி, அவர் எத்தனை ரக்அத் தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறான். எனவே, உங்களில் ஒருவருக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் (கடைசி) இருப்பில் இருந்தவாறே இரண்டு ஸஜ்தாச் செய்யட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புகாரி 3276
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, 'இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?' என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், 'உன் இறைவனைப் படைத்தவர் யார்?' என்று கேட்கிறான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக் கொள்ளட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஷைத்தானால் மனித உள்ளத்திற்குள் நுழைந்து அவரது எண்ணங்களை ஆட்டுவிக்க முடியும் என்பதற்கு ஆதாரமாக ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன.   ஜின்கள் பற்றிய த.த.ஜவின் புத்தகம் இவ்வாறு விளக்கம் கூறுகிறது.

தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால அழைப்பதும் நன்மையான காரியங்களை புறக்கணிக்குமாரு(று) ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும்.  அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்கு கட்டுப்பட்டவர்கள் தீமையை செய்துவிடுகிறார்கள் அவனது ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்கள் நன்மையின் பால் விரைகிறார்கள்.

ஆனால் இவ்விளக்குத்திற்கு நேர் எதிராக அண்ணன் பீஜே இரண்டு உள்ளம் இருக்க முடியாது என்கிறார்.  ஷைத்தான் மனிதனுக்குள் நுழையாமல் அவனது சிந்தனையை, உள்ளத்தை எப்படி தங்களது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருகின்றன?  ஷைத்தான், அண்ணன் பீஜேவிற்குள் புகுந்து(!) கொண்டு முன்னுக்குப்பின் முரணாக விளக்கம் சொல்ல வைக்கிறான் என்று நினைக்கிறேன்.!

ஷைத்தான்களுக்கு கூச்ச உணர்வு அதிகமாகிவிட்டதோ என்னவோ தெரியவில்லை, அன்றைய காலத்தில் பலவிதமாக நேரிலும் உருமாறியும் அரேபியப் பகுதிகளில் தோன்றிய ஷைத்தான்கள் இப்பொழுது எவர் முன்பாகவும் வருவதில்லை.  அப்படியொன்று இருக்கிறதா? என்று எண்ணத் தோன்றுகிறது. கடந்த  1400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஜின் இனம் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருக்கின்றன.  என்ன காரணம்?

ஷைத்தான்கள் மனிதர்கள் மீது இறங்குகின்றன, இறக்கப்படுகிறது, Qareen-களாக இணைக்கப்படுகிறது என்றெல்லாம் கூறும் குர்ஆன் வசனங்களை என்ன செய்வது?

இதற்கு, ஜின்கள் மறைந்திருந்து மனிதர்களை வழி கெடுக்கின்றன என்ற ஒரேஒரு பதில் மட்டுமே இருக்கிறது. அதாவது அவைகள் மறைந்திருந்து பேசலாம், மாயக்காட்சிகளை மனிதர்களது கண்களில் தோன்றச் செய்யலாம். அல்லது மனிதர்களுக்குள் நுழைந்து அவர்களது சிந்தனைகளை ஆட்டுவிக்கலாம். ஆனால் இவையெல்லாமே மனநலபாதிப்பின் விளைவுகள் என்கிறார் அண்ணன் பீஜே!

…மனிதனிடம் இரண்டு உள்ளங்களை ஏற்படுத்தவில்லை என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.  இதற்கு மாற்றமாக அந்த மனிதன் கூறுவதால் இது ஏமாற்று வேலையாக இருக்கலாம்.  மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் ஆதாயம் கருதியோ அவர் இவ்வாறு நடிக்கலாம்.
அவர் நடிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அவர் மனநோய்க்கு ஆளாகியிருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை.  திருமணம் அல்லது வேறு ஏதேனும் தேவைகள் இருப்பவர்கள் அதை நேரடியாக வீட்டில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே வைத்திருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.  இது, ஹிஸ்டீரியா என்ற ஒருவகை மன நோயாகும்.

மனநோயில் பலவகைகள் இருக்கிறது. நான் அன்றாடாம் காணும் மனநோயால் பதிக்கப்பட்டவர்கள் செய்வது என்ன? அவர்கள் தனியே அமர்ந்து கொண்டு சிரிப்பார்கள், அழுவார்கள், அவர்கள் எதிரில் யாரோ இருப்பதைப் போன்று தீவிரமாக உரையாடுவார்கள், விவாதம் செய்வார்கள், எதையாவது கொடுப்பாவர்கள், வாங்குவார்கள் இப்படி தினமும் ஒருவரையாவது நாம் காணலாம். இதற்குக் காரணம் அவர்களிடம் யாரோ இருப்பதைப் போன்றும், தங்களுடன் பேசுவதை போன்றும், சண்டையிடுவதைப் போன்றும் தோன்றுவதால்தான்.

அண்மையில், உஸ்பெகிஸ்தானை சேர்ந்த கியுல்செஹ்ரா போபோகுலோவா என்ற  39 வயதுப் பெண், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு வீட்டில் 4 வயது பெண் குழந்தையை கவனித்துக் கொள்ளும் ஆயாவாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து தலையை கத்தியால் துண்டாக வெட்டி அதை எடுத்துக் கொண்டு மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றார். போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.



குழந்தையை கொலை செய்தீர்களா என்று நீதிபதி கேட்டதற்கு கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் சிரித்துக் கொண்டே ஆமாம் என்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் சிரித்துக் கொண்டே கூறுகையில், அல்லாஹ் தான் அந்த குழந்தையை கொலை செய்யுமாறு உத்தரவிட்டார் என்றார்.

தூதர் முஹம்மதுவும் இப்படித்தானே கூறினார், இதேபோலத்தானே செய்து கொண்டிருந்தார்?  (இப்படி ’பொசுக்’குன்னு ஒரு கேள்வியைக் கேட்டா ஒரு மனுஷன் என்னத்த சொல்ல முடியும்?)

அவர் கூறிக் கொண்டிருந்ததில் ஒரு சிலவற்றை மட்டும் காண்போம். தனது காதுகளில் மணியடிப்பதைப் போன்ற ஓசை கேட்கிறது என்றார்; தன்னிடம் இதுவரை எவருமே பார்த்திராத, பார்க்க வாய்ப்பில்லாத, ஜிப்ரீல் என்ற ஒருவர் பேசுவதாகக் கூறினார்; யாரோ (அல்லாஹ்) பேசுவது தனக்கு கேட்பதாகக் கூறினார்; கண்களுக்கு ஏதேதோ காட்சிகள் தெரிவதாகக் கூறினார். தன்னை ஏற்காத அனைவரையும் கொன்றொழிக்கும்படி அல்லாஹ் ஆணையிட்டிருப்பதாகக் கூறிக் கொண்டார். அதை நிறைவேற்றவும் செய்தார். இது தெளிந்த மனநிலையா?

முஹம்மதிற்கு முதன் முதலில் வஹீ(!) வந்த பொழுது,   அவர் தன்னை ஏதேனும் கெட்ட ஜீன் பீடித்திருக்கும் அதனால் தனக்கு குழப்பம் ஏற்படுவதாகவும் பைத்தியம் பிடித்திருக்கலாமென்றும் நம்பினார். அவரது துணைவியரான கதீஜா அதிபயங்கரமான சோதனைகள் செய்து, முஹம்மதை இறுக்கி அணைத்து ‘உம்மா’ கொடுத்தது ஷைத்தான் அல்ல என்பதை நிரூபித்து(!), முஹம்மதிற்கு உற்சாகமூட்டினார் என்கிறது இப்ன் இஸ்ஹாக்.

நாம்முடன் எப்பொழுதுமே Qareen என்ற ’ஜின்’ இருப்பதாகவும், நாம் எங்கு சென்றாலும், உறங்கும் பொழுதும், எழுந்திருக்கும் பொழுதும், கழிப்பிடத்திற்குச் செல்லும் பொழுதும், குளிக்கும் பொழுதும், ஆடை மாற்றும் பொழுதும், சாப்பிடும் பொழுதும், அலுவலகத்திற்குச் செல்லும் பொழுதும், துணையுடன் இருக்கும் அந்தரங்கமான வேளைகளிலும்கூட நம்மைவிட்டு விலகாமல் நம்முடனே இருந்து கொண்டு நமது செயல்களைக் கண்காணித்தும், இடையூறு செய்தும், வழிகெடுக்கவும் காத்திருக்கின்றன என்பதை  உறுதியாக நம்பிக்கொண்டு,  அல்லாஹ்வே என்னைக் காப்பாற்று என்று முணுமுணுத்துக் கொண்டிருப்பது மனநிலை பாதிப்பாகத் தெரியவில்லையா? ஜின்கள் மனிதர்களைத் தாக்கும் என்ற பாகன் அரேபியர்களின் மூட நம்பிக்கைகளை இஸ்லாம் என்ற பெயரில் விற்பனை செய்திருக்கிறார்.

இன்னொரு உதாரணத்தையும் கூறமுடியும்; பின் வரும் குர்ஆன் வசனத்தைக் கவனியுங்கள்.

குர்ஆன் 113:1-5
அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

அதென்ன பொறாமைக்காரர்களின் தீங்கு?

புகாரி 5740
அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள், 'கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே' என்று கூறினார்கள். மேலும், பச்சைகுத்துவதைத் தடை செய்தார்கள்.

முஸ்லீம் 4405
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
கண்ணேறு உண்மையாகும். தலைவிதியை ஏதேனும் ஒன்று வெல்ல முடியுமானால், கண்ணேறு அதை வென்றிருக்கும். (கண்ணேறுக்குக் காரணமான) உங்களிடம் குளித்துக் கொள்ளுமாறு கோரப்பட்டால் குளித்துக்கொள் ளுங்கள்.

பொறமை கொண்டு ஒருவரை பார்ப்பதால் அவருக்கு கண்ணேறு(கண் திருஷ்டி)  ஏற்படுகிறது, அதனால் பொறமைக்குள்ளாகும் மனிதர்  பாதிக்கப்படுவது உண்மைதான் என்கிறார் முஹம்மது. அது எப்படி மனிதனை பாதிக்கும்? 

சூனியத்தைப்பற்றிய அண்ணன் பீஜே அவர்களின் விளக்கத்திலிருந்து,

'ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ, உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும்' என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்கையுடையோர் கனிசமான எண்ணிக்கையில் காணப்படுகின்றனர்….

ஸிஹ்ர், ஜின் பீடித்தல், பைத்தியம் போன்ற இடையூறுகள் செய்வதில் ஜின் – ஷைத்தான் என்ற கண்களுக்குத் தெரியாத ஏதோ ஒன்றின் பங்களிப்பு இருப்பதாக கூறுவதைக்கூட அண்ணன் பீஜே அவர்களின் தர்க்க  அடிப்படையில் ’ஜின்’ என்ற ’சாதனம்’ இருப்பதால்  சரியென்று ஒப்புக்கொள்ள ஒரு காரணம் இருக்கிறது.  இந்த கண்ணேறு உண்மையாவது எப்படி? பொறாமை கொண்டு புலம்பிக் கொண்டிருந்தால் அது எதிராளியை பாதிக்குமா? ஸிஹ்ர் உண்மையில்லை என்றால் கண்ணேறு மட்டும் எப்படி உண்மையாகும்?

சூனியத்தில் புறச்சாதனங்கள் எதுவும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபிக்க இயலாமல் ஜோசியத்துக்கு முதலில் தாவினார்கள். அடுத்து கண்டிதிருஷ்டிக்கு தாவியுள்ளார்கள்.
….
நம்மால் வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியாத அம்சம் சூனியத்தில் இருக்கின்றது என இவர்களால் அடித்துச் சொல்ல முடியவில்லை. இருக்கலாம் என்று யூகம் தான் செய்ய முடிகின்றது. இந்த யூகத்துக்கு வலு சேர்க்க கண்ணேறு தொடர்பான ஹதீஸை இழுத்துக் கொண்டு வந்துள்ளனர்.

கண்ணேறு தொடர்பான ஹதீஸ்கள் பற்றி விரைவில் நாம் தெளிவான விளக்கத்தைத் தர இருக்கின்றோம்.  ….

இதை எழுதிய தம்பி அப்பாஸ் அலீ எதிர்க் கட்சிக்குத் தாவிவிட்டதால் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக இந்த கண்திருஷ்டி –கண்ணேறு தொடர்பான ஹதீஸ்கள் கவனிப்பாரின்றி அநாதைகளாக இருக்கிறது. அருள்கூர்ந்து அண்ணன் பீஜேவும் அவரது அல்லக்கை முல்லாக்களும் ஒன்றுகூடி விரைவில் ஒரு முடிவிற்கு வரவேண்டும்! மூட நம்பிக்கைகள் இஸ்லாமின் பரம்பரைச் சொத்து என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!

இம்மை, மறுமை வாழ்க்கைக்கு மட்டுமல்ல பகுத்தறிவிற்கும் ஏற்புடைய ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! அதை எப்படி மூடநம்பிக்கை மதம் என்று சொல்லாம்? என்று சிலர் கொதித்து எழலாம் எனவே, நாம் அண்ணன் பீஜேவின் விளக்கத்திற்கு வருவோம்.

…மனிதனிடம் இரண்டு உள்ளங்களை ஏற்படுத்தவில்லை என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.  இதற்கு மாற்றமாக அந்த மனிதன் கூறுவதால் இது ஏமாற்று வேலையாக இருக்கலாம்.  மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் ஆதாயம் கருதியோ அவர் இவ்வாறு நடிக்கலாம்.
அவர் நடிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அவர் மனநோய்க்கு ஆளாகியிருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை.  திருமணம் அல்லது வேறு ஏதேனும் தேவைகள் இருப்பவர்கள் அதை நேரடியாக வீட்டில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே வைத்திருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.  இது, ஹிஸ்டீரியா என்ற ஒருவகை மன நோயாகும்.

அந்நபர் மற்றவர்களைப் பற்றி தகவல்களைக் கூறுவதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். ஆச்சரியப்படுவதற்கு இதுவெல்லாம் அபார சக்தி கிடையாது.  மறைமுகமான முறையில் தகவல்களை அறிந்துகொண்டு யார் வேண்டுமானாலும் இவ்வாறு நடித்து மற்றவர்களை ஏமாற்ற முடியும்.

ஹிஸ்டீரியா, மனநோய் என்றெல்லாம் வகைப்படுத்துவதற்கு மார்க்கத்தில் அதாவது குர்ஆன் ஹதீஸ்களில் ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?

மற்றவர்களுக்கு பொழிப்புரை கூறுவதற்கு முன், முஹம்மதின் செயல் ஏன்  ஏமாற்று வேலையாக இருக்கலாம்;  மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் ஆதாயம் கருதியோ அவர் இவ்வாறு நடித்திருக்கலாம்; மற்றவர்களைப் பற்றி தகவல்களைக் கூறுவதைப் பார்த்து இவர்கள் இறைவேதம், அற்புதம் அபாரம் என்றெல்லாம் ஆச்சரியப்படாமல்,  ஆச்சரியப்படுவதற்கு இதுவெல்லாம் அபார சக்தி கிடையாது,  மறைமுகமான முறையில் தகவல்களை அறிந்துகொண்டு அல்லாஹ் கூறியதாக ஆட்டுக்குட்டி கூறியதாக நடித்து மற்றவர்களை ஏமாற்றியிருக்கலாம் அல்லது அவர் நடிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அவர் மனநோய்க்கு ஆளாகியிருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை என்று முடிவெடுத்திருக்க வேண்டும்.  இதைச் செய்தார்களா?

அண்ணன் பீஜே கூறுவது பகுத்தறிவு வாதம்! இன்றைய அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்ட வாதம்! இஸ்லாமிய மதநம்பிக்கைகளின் அடிப்படையிலான வாதம் அல்ல! மதங்களுக்கும் பகுத்தறிவிற்கு தொடர்பு கிடையாது. குறிப்பாக இஸ்லாமிற்கும் பகுத்தறிவிற்கும் சம்பந்தமே இல்லை! மதத்திற்குள் அறிவியலையோ அல்லது பகுத்தறிவையோ கொண்டுவந்தால் ஒட்டு மொத்த மதத்தையும் புறக்கணிக்க வேண்டிவரும். மதத்திற்குள் பகுத்தறிவு சிந்தனையை நுழைத்தால், மதநம்பிக்கை அழிந்து போகும். அண்ணன் பீஜே அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். (இது  ஒருவகையில் நமக்கு சாதகம்தான்!)  அதனால்தான் அவரால் குர்ஆன் வசனங்களிலும் ஹதீஸ்களிலும் எண்ணற்ற முரண்பாடுகளைக் காணமுடிகிறது. விளைவு, புதிதுபுதிதாக மொழிபெயர்ப்புகளும் விளக்கங்களும் வியாக்கியானங்களும் தொடர்கதையாகிவிட்டது. ஒன்று அவர் மதவாதியாக இருக்கலாம் அல்லது முழுமையான பகுத்தறிவுவாதியாக மாறவேண்டும். இரண்டிற்கும் நடுவில் புதிய வழியைக் காண முயற்சிப்பதால் அவரும் குழம்பி ஈமான்தாரிகளையும் குழப்பிக் கொண்டிருக்கிறார். விளவு ஒரு காலத்தில் மூடுமந்திரமாக இருந்த இஸ்லாமிய நூல்கள் வீதிக்கு வந்துவிட்டன.

பாரம்பரிய சுன்னத் ஜமாஅத்தினர், ஜின் இருக்கிறது என்பார்கள், ஜின் இறங்கும், ஜின்கள் மனிதர்களுக்கு பைத்தியம் பிடிக்கச் செய்யும், ஸிஹ்ர் ஜின்னின் உதவியோடு செய்யப்படுகிறது என்றெல்லாம் நம்புவது ஏன்? அவர்களுகென்ன அறிவியல் தெரியாதா?

பகுத்தறிவு வந்தால் மதம் அழிந்து போகும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அதனால்தான் பாரம்பரிய சுன்னத் ஜமாஅத்தினர் பீஜே போன்றவர்களை மதத்திற்குள் இருந்து அதை அழிப்பவர்கள் என்கிறார்கள்.


நாம் அண்ணன் பீஜேவின் விளக்கத்தைத் தொடர்வோம். மனம் என்று குர்ஆன் எதைக் குறிப்பிடுகிறது என்பதை நினைவில் கொண்டுதான் அண்ணன் பீஜே பேசுகிறாரா? என்பது விளங்கவில்லை. குர்ஆனைப் பொருத்தவரையில் மனம் என்பது மார்பெலும்புகளுக்கு மத்தியில் பொதிந்திருக்கும் இதயம்; மூளையில் பதிந்திருக்கும் செய்திகளும் அல்லது அனுபவங்களும் அல்ல.

குர்ஆன் 2:007
அவர்களது உள்ளங்களிலும்(qulūbihim), செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.

ق ل ب இந்த மூலச் சொல் குர் ஆனில் 168 இடங்களில் வருகிறது இதில் 132 இடங்களில் qalb-இதயம் என்ற பொருளில் பெயர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் ’qalb-இதயம்’ என்று கூற முயற்சிப்பது மனித சிந்தனை மையத்தைதான் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் மனித அது உடலில் எங்கு இருக்கிறது? என்ற கேள்விக்கு குர்ஆனும் ஹதீஸ்களும் பழங்கால நம்பிக்கையைப் பதிலாகக் கூறி சருக்கி விழுகின்றன.

 தூதர் முஹம்மதின் ஆட்கள், எதிரிப்படைகளைக் கண்டு அச்சத்தால் நடுங்கியதைப் பற்றிக் கூறும் பொழுது,

குர்ஆன் 33:10
அவர்கள் உங்கள் மேற்புறத்திலிருந்தும், உங்கள் கீழ்ப்புறத்திலிருந்தும் வந்த போது, பார்வைகள் நிலை குத்தி, இதயங்கள்(l-qulūbu) தொண்டைக் குழிகளை அடைத்து,..

அதிர்ச்சியால் இதயத்துடிப்பு அதிகரித்து தொண்டைகுழியில் அடைப்பதைப் போன்று தோன்றும். சிந்தனை மையம் எப்படித் தொண்டைக் குழியை அடைக்கும்?


சிந்திப்பது இதயமா? மூளையா?

…அரபு மொழியில் கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது. அரபு இலக்கியங்களில் மூளையக் குறிக்கவும், இதயத்தைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூளை தான் எல்லாக் காரியங்கைளயும் நிகழ்த்துகிறது என்பைதக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறன், மூளை, இதயம் ஆகிய அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரபு அகராதி என்னவேண்டுமானாலும் சொல்லட்டும், அதையெல்லாம் குர்ஆனுக்குள் புகுத்த முடியுமா? நிச்சயம் முடியாது! காரணம் குர்ஆனுக்கு  சரியான பொருள் தூதர் முஹம்மவிடமிருந்து மட்டும்தான் தேடவேண்டும். ஒருவேளை அவர் எந்த விளக்கத்தையும் கொடுத்திருக்கவில்லையெனில்,  அவர் அல்லாஹ்வின் கட்டளையைத் (Q4:63) தவறவிட்டிருக்கிறார் என்பது பொருள்.   

அகராதிகள் என்பது காலத்திற்குக் காலம் பயன்பாட்டிற்கேற்ப புதியபொருள்களுடன் மாறக் கூடியவைகள் அதைக் கொண்டு குர்ஆனுக்குப் பொருள் கூறுவது முறையல்ல.  மேலும், முஹம்மதின் மரணத்திற்கு பின் 500 ஆண்டுகளுக்குப் பிறகு (CE 1232 – CE 1311) எழுதப்பட்ட ஒரு அகராதியை குர்ஆனுக்குள் நுழைப்பது அயோக்கியத்தனமானது.

சிந்திப்பது இதயமா? மூளையா?
..ஆனால், இதயத்தில் தான் சிந்தைன மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். இதயத்தில் நடக்கிற காரியங்கைள மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு நம் காலம் வரை வந்து சேர்ந்திருக்காது…

அல்லாஹ்வை கேவலாமாக, இழிவாகச் சித்தரிப்பது எப்படி என்பதை அண்ணன் பீஜேவிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.  ”இதயத்தில் தான் சிந்தைன மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்களாம்” அதாவது குர்ஆனைப் பாதுக்காப்பதற்கு அல்லாஹ்விற்கு வேறுவழிதெரியாமல் அம்மக்களை ஏமாற்றியிருக்கிறான்; அங்கிருந்த பெரும்பான்மை மக்களின் தவறான கருத்தை மறுக்கவும், அதை எதிர்த்து உண்மையை நிலை நிறுத்தும் துணிச்சலில்லாத கோழைத்தனம் நிறைந்தவன் என்கிறார். முஃமின்கள் சிந்திக்கட்டும்!

அகராதி என்றால் என்ன?
அகரவரிசைப்படி சொற்களை அமைத்து அதற்கான பொருள் அல்லது அதற்கு சமமான பதத்தை வேறு மொழியில் கூறும் நூல். ஒரு பதத்திற்கு பொருள் வழக்கிலிருந்துலிருந்து பெறப்படுகிறது மாறாக வானிலிருந்து குதித்து வருவதில்லை.

“அரபு மொழியில் கல்ப்- qalb என்ற சொல்லுக்கு சிந்திக்கும் திறன், மூளை, இதயம் என்ற பொருள் இருக்கும் பொழுது, குர்ஆன் சொல்வதை மட்டும் அன்றைய மக்கள் எப்படி எதிர்க்க முடியும்? அன்றைய பாகன் அரேபியர்கள் தங்களது வழக்கத்திற்கு மாறாக இருப்பதாகக் கூறி முஹம்மதின் போதனைகளை எதிர்த்தனர். ஆனால் அங்கு நிகழ்ந்தது என்ன? வாளின் முனையில் அவர்களுக்கு போதிய பாடம் புகுத்தப்படவில்லையா?

அதுமட்டுமல்ல ”இதயத்தில் தான் சிந்தைன மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில்” மூளையில்தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் இருப்பதாக  நடைமுறைக் கருத்திற்கு எதிராக ஒரு அகராதி எப்படிப் பொருள் கூறமுடியும்?

நம்முடைய மிக எதார்த்தமான கேள்வி என்னவென்றால், நாம் கடந்த பதில் பார்த்த ‘ஸஜ்தா’ என்ற பதத்தின் பொருளுக்காக முஹம்மதின் முந்தைய காலத்திற்கும் சென்றவர்,  பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதிகளிலும் அரபு இலக்கியங்களிலும் ’கல்ப்' என்ற பதத்திற்கு  ’மூளை’ என்ற நேரடியான பொருள் இருக்கும் பொழுது ’உள்ளம்’ என்று எதற்காக மொழிபெயர்க்க வேண்டும்?

முஸ்லீம் 261
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது சிறு வயதில்) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபியவர் களைப் பிடித்துப் படுக்கவைத்து, அவர்களின் நெஞ்சைத் திறந்து இருதயத்தை வெளியிலெடுத்தார்கள்…..
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் ஊசியால் தைத்த அந்த அடையாளத்தை நான் பார்த்திருக்கிறேன்.

புகாரி1636
அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவில் இருக்கும்போது எனது (வீட்டுக்) கூரை திறக்கப்பட்டது. (அதன் வழியாக) ஜிப்ரீல் (அலை) இறஙகி எனது நெஞ்சைப் பிளந்தார். …

அவர் அவ்வாறு ’கல்ப்' என்பதை  ’மூளை’  என மொழிபெயர்த்தால் அது பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் நேரடியாக முரண்படும்! எதார்த்த உண்மைக்கு முரணாக இருக்கிறது என்று இன்னும் பல ஹதீஸ்களை மறுக்க வேண்டிய நிலை ஏற்படும்!




தனது நெஞ்சத்தைக் கிழித்துக் காண்பித்த ஒரு குரங்கைப்பற்றி இந்துமத இதிகாசம் இன்றும் சொல்லிக் கொண்டிருப்பதையும், இயேசுவின் இதயத்தில் முற்கள் சுற்றப்பட்ட ஓவியங்களையும் அறிவீர்கள்.  மேற்கண்ட அறிவியல் இஸ்லாமியரின் பங்கு! மூடத்தனத்தில் மதவாதிகள் ஒருவருக்கொருவர் சிறிதும் சளைத்தவர்கள் அல்ல!

தொடரும்…

தஜ்ஜால்