Wednesday, 19 September 2012

இஸ்லாத்தை கடந்த சுவடுகள் -தொடர் 14


 (பலதாரமணம்  ஏன்? தொடர்சி)
மனைவியின் மாதவிடாய் காலங்களிலும் பிரசவ காலங்களிலும் ஆண்கள் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி வாழ்வது சிறப்பானது. அவ்வாறு உணர்ச்சிகளை அடக்க முடியாத சபலபுத்தி உள்ள ஆண்கள்  விபச்சாரம், தவறான தெடர்பு என வழிதவறி விடுகிறார்கள். எனவே அதற்கு இஸ்லாம் தரும் ஒரே தீர்வு பலதார மணம் என்பதே மார்க்க மாமேதைகளின் அடுத்த விளக்கம்

மேலும் மதவிடாய் பற்றி  உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர் (அவர்களுக்கு) நீர் கூறுவீராக, அது ஓர் அசுத்தமான உபாதையாகும் அந்த மாதவிடாயி(ன்     காலத்தி)ல்  பெண்களை விட்டு விலகி இருங்கள் அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்…
(குர்ஆன் 2:222)


அப்படி என்றால் முஹம்மது நபி  அவர்களும்  ஒரு சபலபுத்திகாரரா?.  - ஆம்…!
புகாரி ஹதீஸ் -302
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையிலுள்ள (நபியின் மனைவியரான) எங்களில் ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அணைத்துக் கொள்ள விரும்பினால் மாதவிடாய் போகுமிடத்தை துணியால் கட்டிக் கொள்ளுமாறு  கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்? (அவ்வாறிருந்தும் ஆடைகளுக்கு மேல்தான் அனுபவித்தார்கள்.)

புகாரி ஹதீஸ் -300
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பொழுது நபி (ஸல்) அவர்கள் என்னை துணி கட்டிக்கொள்ளுமாறு பணிப்பார்கள். (நான் அவ்வாறே செய்து கொள்வேன்) அப்போது என்னை அணைத்துக் கொள்வார்கள்.

புகாரி ஹதீஸ் -303
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரில்  ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்.

புகாரி ஹதீஸ் -299
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

பெருந்துடக்குடனிருந்த  நபி (ஸல்) அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து (ஒருமித்து நீரள்ளிக்) குளிப்போம்.

புகாரி ஹதீஸ்        : 1929       
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போர்வைக்குள் இருக்கும்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது நான் (போர்வையிலிருந்து) நழுவி, மாதவிடாய்க்குரிய ஆடைகளை அணிந்து கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ,உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா, என்று கேட்டார்கள். நான், ஆம்!, என்று கூறிவிட்டு, அவர்களுடன் போர்வைக்குள் நுழைந்து கொண்டேன். நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (இருக்கும் தண்ணீரையள்ளிக்) குளிப்போம். நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது என்னை முத்தமிடுவார்கள்.
Sunaan Abu Dawud: Book 1, Number 0270:
Narrated Aisha, Ummul Mu'minin:

Umarah ibn Ghurab said that his paternal aunt narrated to him that she asked Aisha: What if one of us menstruates and she and her husband have no bed except one? She replied: I relate to you what the Apostle of Allah (peace_be_upon_him) had done.
One night he entered (upon me) while I was menstruating. He went to the place of his prayer, that is, to the place of prayer reserved (for this purpose) in his house. He did not return until I felt asleep heavily, and he felt pain from cold. And he said: Come near me. I said: I am menstruating. He said: Uncover your thighs. I, therefore, uncovered both of my thighs. Then he put his cheek and chest on my thighs and I lent upon he until he became warm and slept.
Sunaan Abu Dawud: Book 13, Number 2380:
Narrated Aisha:

The Prophet (peace_be_upon_him) used to kiss her and suck her tongue when he was fasting.
(ஆயிஷா அறிவிக்கிறார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்),  நோன்பு வைத்திருக்கும் வேளையிலும் முத்தமிட்டு அவருடைய (ஆயிஷா) நாக்கை உறிஞ்சி சுவைப்பார்.)

புகாரி ஹதீஸ்  : 1928      
உர்வா பின் ஸுபைர் (ரஹ்)
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது : “நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டு தம் துணைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்!” என்று சொல்லிவிட்டு (என் சிறியதாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் சிரித்தார்கள்.
புகாரி ஹதீஸ் -297
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்கள் நான் மாதவிடாயுடன் இருக்கும் பொழுது எனது மடியில் தமது தலையை வைத்தபடி திருக்குர்ஆன் ஓதுவார்கள்.

Thursday, 13 September 2012

இஸ்லாத்தை கடந்த சுவடுகள் - தொடர் 13



பலதாரமணம்  ஏன்?

நபி (ஸல்) அவர்கள் நாடியிருந்தால் பல கன்னியர் அவர் காலடியில் இருந்திருப்பார்கள். அவர் திருமணம் செய்ததில் ஆயிஷா அவர்களைத் தவிர யாரும் கன்னியரில்லை. நபி (ஸல்) அவர்களின் திருமணங்கள் அனைத்தும் இச்சையின காரணமாக செய்யப்பட்டதல்ல. அனைத்தும் ஆதரவற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட மறுவாழ்வு மற்றும் பலவாறாக பிளவுபட்ட அரபு சமுதாயங்களை இணைக்கவே இத்தனை பெண்களுடன் வாழ்ந்தார் என மார்க்க அறிஞர்கள்   வாதிடுகின்றனர்நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய திருமணங்களுக்கு இப்படியொரு விளக்கத்தை எங்கும், எப்பொழும் தரவில்லை. ஆதரவற்ற பெண்களுக்கு மறுவாழ்வளிக்க உலகில் இதைவிட வேறு வழிகளே இல்லையா?. 

நமது  நாட்டில் இன்றும் பலவிதமான தீவிரவாத அமைப்புக்களும், பிரிவினைவாத குழுக்களும் உள்ளது. இவர்களால் எப்பொழுதும் நாட்டின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. தீவரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் அடக்கியாளபிரதமரோ அல்லது உள்த்துறை அமைச்சரோ  தீவிரவாதிகளுடன் திருமண ஒப்பந்தங்களை, செய்து  கொண்டதாக கூறினால் அவர்களை எள்ளிநகையாட மாட்டீர்களா?

சமுதாயங்களின் தலைவர்கள் தங்களைச் சார்ந்த ஆதரவற்ற பெண்களுக்கு வாழ்வளிக்க, திருமணம் செய்யத் துவங்கினால் என்ன ஆகும்? உதாரணத்திற்கு நமது பிரதமர், விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களை திருமணம் செய்வதாக கற்பனை செய்து பாருங்கள். பிரதமரின் மனைவியர்களின் சிறிய தேவைகளை நிர்வகிக்கவே தனி அமைச்சரவை தேவைப்படும். மனைவியர்கள் தங்குவதற்கு அந்தப்புரங்கள் கோடிக்கணக்கில் அமைக்க பெரியதொரு தனி மாநிலமே உருவாக்க வேண்டும். இஸ்லாமிய அறிஞர்களின் இவ்விளக்கம் முட்டாள்த்தனமாகத்  தெரியவில்லையா?
இன்றும் உலகில் ஆதரவற்ற நடுத்தர வயது பெண்கள் மூதாட்டிகள் என பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் எவ்வாறு வாழ்கின்றனர்? பிளவுபட்ட சமுதாயத்தை அல்லாஹ்வினாலும் அவன் கொள்கைகளாலும் இணைக்க முடியவில்லையா?.
முஹம்மது நபி  அவர்கள் மட்டுமல்ல அவருடைய அன்பு (சகோதரன்) மருமகன்  அலீ அவர்களின் மனைவியரின் எண்ணிக்கை எவ்வளவு என வரலாற்று ஆசிரியர்களுக்கே தெரியவில்லை. அவற்றில் குறிப்பிடத்தகுந்தது என ஒரு ஏழு பெண்களைக் குறிப்பிடுகின்றனர். இங்கும்  அடிமைப் பெண்களும், வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களின் கணக்கு தனி. இவரும் பெண்களைப்பறறிய ஆராய்ச்சியில் இருந்தவர்தானா?.
அலீ  அவர்களும் தனது மனைவியரின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டார். ஆனால், அதை முஹம்மது நபி விரும்பவில்லை. தனது அன்பு மகள் பாத்திமா    இருக்கும் பொழுது வேறு எந்த பெண்ணையும்  திருமணம்  செய்யக்கூடாது என தடைவிதித்தார். காரணம், பாத்திமா   விரும்பவில்லை எனவே முஹம்மது நபியும் அதை விரும்பவில்லை.
புகாரி ஹதீஸ் -5230
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி ஹிஷாம் பின் முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். அலீ பின் அபீதாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்கு செய்துவிட்டுஅவர்களுடைய மகளை மணமுடித்துக் கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு அனுமதி வழங்க மாட்டேன்.) ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும். அவரை மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும் என்று சொன்னார்கள்.

 பலதாரமணம் அல்லாஹ் அனுமதித்த வழிமுறை. பொதுவாக, திருமணத்திற்கு  மணப்பெண் மற்றும் மணப்பெண்ணின் பொறுப்பாளரின் (தந்தைசம்மதம் மட்டுமே போதுமானது. பலதாரமணத்தை விரும்புபவர்கள் மற்ற மனைவியரின் ஒப்புதலையோ அல்லது அவர்களுடைய பொறுப்பாளர்களின்(மாமனார்) ஒப்புதலையோ பெற வேண்டுமென்று அல்லாஹ்வும் கூறவில்லை. அல்லாஹ்வின் அனுமதிக்கு எதிராக முஹம்மது நபி  ஏன் துள்ளிக் குதிக்க வேண்டும்?

தன் அன்பு மகளுக்கு ஒரு சக்களத்தி வருவதை விரும்பாதவர், தன்னுடைய மனைவியர்களின் விஷயத்திலும் இதே நியாயத்துடன் நடந்து கொள்ளவில்லையே?. அலீ பின் அபீதாலிப் அவர்களின் இரண்டாவது திருமணம் தன் மகளை வெறுப்படையச் செய்து விடும் என்று வேதனைப்பட்டவர் தன்னுடைய மற்ற மனைவியர்களும் இதேபோல அடைந்த மனவேதனையை குறித்து எந்த கவலையும் அடையவில்லையே? இந்தசம்பவம் முஹம்மது நபியின் இரட்டை வேடத்தை உங்களுக்கு உணர்த்தவில்லையா? எப்படி இருக்கிறது இவர்களது நியாயம்? 
முதல் மனைவி ஃபாத்திமா உயிருடன் இருந்தவரை அலீ   வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் அடிமைபெண்களின் கணக்கு தனி. அலீ  அவர்களின் செயல்களில் அதிருப்தி அடைந்த அவருடைய மகன்கள் ஒரு காலகட்டத்தில் அலீ  அவர்களை விட்டு ஒதுங்கி இருந்தனர்.
ஷரீயத்தின்படி ஒரு ஆண் நான்கு மனைவிகளுடன் ஒரே நேரத்தில் வாழ்கை நடத்தலாம். ஆனால் ஷரீயத்தை உருவாக்கியவர் நாற்பது மனைவிகளுடன் வாழ்கை நடத்தலாம்இது நடுநிலையற்றது என வாதிடும் சமஉரிமை விரும்பிகளுக்கு அல்லாஹ்வின்  பதில்,

(ஆனால்) தம் மனைவியர்களிடமும் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமும் (அடிமைகள்) தவிர (இவர்களிடம் உறவு கொள்வதில்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படுகிறவர்கள் அல்லர்
(குர்ஆன் 23:6, 70:30)
சமஉரிமை விரும்பிகள், வைப்பாட்டிகளை தங்கள் விரும்பும் எண்ணிக்கையில் வைத்துக்கொள்வதற்கான அனுமதி.
குடும்ப வாழ்க்கையை, பலதார மணவாழ்கையை, பெண்களின் குணங்களையும் செயல்பாடுகளைப் பற்றி தன் கருத்துக்களை அல்லது அறிவுரைகளை தெரிவிக்க பல மனைவிகளுடன் வாழ்ந்து சுயஅனுபவம் பெற்று விளக்கமளித்தார் என்பதும் உலமாக்களின் இன்னொரு பதில்.
பொய், திருட்டு, மது அருந்துதல், விபச்சாரம், கொலை, கற்பழிப்பு பற்றி ஒருவர் தன்னுடைய கருத்தை தெரிவிக்க மேற்கண்ட செயல்களில் சுயஅனுபவம் பெற்றிருந்தால் மட்டுமே மிகவும் சிறப்பான கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என்று  வாதிட்டால் உங்களால் ஏற்க முடியுமா?.

Friday, 7 September 2012

அறிவியலோ அறிவியல்... ரூபாய்க்கு மூணு குர்ஆன் அறிவியல்..


மனித குலத்தின் விடிவிளக்கு, மறுமைக்கான ஒளிவிளக்கு என்றல்லாம் போற்றப்படும் குரான் இன்று அது உயிர் வாழ மனிதகுலம் கண்டுபிடிச்ச நவின அறிவியலோடு கலக்கப்பட்டு புத்துணர்ச்சி கொடுக்கப்படுகின்றது.

"உலகில் உள்ள அனைத்து பொருட்களும் எதோ ஒரு விசையில் இயங்கிக்கொண்டு இருக்கின்றது. அப்படி இயங்க முடியாத ஒரு பொருள் இருக்குமேயானால்  அது அழிவை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பது தான் இயக்கவியல் விதி".

குரானும் முகமதுவும் மேற்கண்ட விதியில் தான் உயிர் வாழ்கின்றார்களே தவிர எல்லாம் வல்ல அல்லாஹ்வால் இல்லை என்பதை நம் மூஃமின்கள் நமக்கு அடிக்கடி சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். அதனல் தான் ஹிக்போசான் துகள்கள், பிக்பேங்க் தியரி, பால் சுரப்பி, இதயம் சுருங்குதல், விந்து உற்பத்தியாகும் இடம் என அறிவியலை அவர்களின் இஷ்டத்துக்கு வளைத்து நெளித்துக் குரானில் சொருகபார்க்கின்றார்கள்.
ஒரு முறை என் நன்பன் ஒருவனிடம் குரான் சம்மந்தமாக பேசிக்கொண்டு  இருக்கும் போது அவன் சொன்னான் குரானில் இல்லாத அறிவியலே இல்லை. குரானில் இருந்து தான் இதுவரை கண்டுபிடித்த அனைத்து அறிவியலும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.அது ஒரு அறிவியல் புத்தகம் என தனக்குதானே பூரித்துக்கொண்டான்.நான் அவனிடம் கேட்டேன் ஏன் மச்சி அப்ப குரானை முழுமையாக நன்கு விளக்கம் புறிந்துப்படித்த ஒரு ஹாலிம்மாலையும் ஹாபிசாவாலையும்  கூட ஒரு சின்ன அறிவியலை கண்டு பிடிக்கமுடிவில்லை,ஆனால் இந்த பாலாபோன யூதர்களால் மட்டும் இவ்வளவு அறிவியலை கண்டுப்பிடிக்க  முடிக்கின்றது என்று.அதற்கு அவன் அளித்த பதில் என்ன தெரியுமா? சு..சு..சு......ம்ம்ம், நீ காஃபீர் மச்சி அதான் உனக்கு தெரியல என்று.

இப்படி தான் இன்னும் குரானில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமுக அறிவியல் என எல்லாம் இருக்கின்றது என்று மூஃமீன்கள் சொன்னால் 'ஆம்' என்று நீங்கள் பதில் அளித்தால் நீங்கள் மூஃமீன். 'எப்படி' என்று மறுகேள்வி எழுப்பினால் என்னை போல் நீங்களும் காஃபீராகிவிடுவீர்கள். ஆகவே 'ஆம்' என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்து படியுங்கள் நாம் குரான் சொல்லும் ஒரு அறிவியலை பற்றி இங்கு விவாதிக்க போகின்றோம்..

இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்குரான் 42:32
                                                                                                                                                                  அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றனகுரான் 42:33
                                                                                                                                                                           
மேற்கண்ட வசனத்தை படிக்கும் போதே தெரிகின்றதா நம் முகமது நபி எவ்வளவு பெரிய விஞ்ஞானியாக இருந்து இருக்கின்றார் என்று. பாருங்கள் 1400 வருடத்திற்கு முன்பே சொல்லிவிட்டார் காற்றை அவன் (அல்லாஹ்) நிறுத்திவிட்டான் என்றால் கப்பல் ஒரு துளிக்கூட அசையாமல் அதே இடத்தில் கிடக்குமாம். என்னே முகமதுவுடைய ஞானம்! விஞ்ஞானம் ! காற்று இல்லை என்றால் கப்பல் நகராத?
இந்த நவின காலத்தில் 150கிலோ மீட்டர் வேகத்தில் எதிர் காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் அளவுக்கு போர்க்கப்பல்களும், ரேசர் கப்பல்களும் (RACER BOAT) கண்டுபிடிக்கப்பட்டூவிட்டன. இன்னும் சொல்லப்போனால் காற்றே இல்லாதா ஆகாயத்திலும் கடலுக்குள் செல்லும் ஸ்பேஸ் சிப் (SPACE SHIP ) மற்றும் சப்-மறைன்களையே( SUB-MARIN) கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனாலும் இன்னும் நம் மூஃமீன்கள் காற்று இல்லனா கப்பல் போகாது என நம் காதில் பூசுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.

முகமது வாழ்ந்த காலத்தில் இருந்த பாய்மர கப்பல்களுக்கு வேண்டுமேயானால் மேலே சொல்லப்பட்ட வசனம் செட்டாகலாம். ஆனால் நம் காலத்துக்கு செட்டாகாது. மூஃமீன்களே ! கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் (சாரி இந்த வசனத்தில் நீங்கள் சிந்திக்க கூடாது பொறுமையாக நன்றி செலுத்த வேண்டும்)

சோ! பி,ஜெவிடம் சொல்லி அவரின் 11வது குரான் தமிழாக்கத்தில் இந்த வசனத்தை திருத்த சொல்லுங்கள். அல்லது இட்டுகட்டுன வசனம் என்று சொல்லி முழுமையாக எடுத்துவிட சொல்லுங்கள். இல்லை என்றால் காஃபீர்கள் முகமதுவின் அறிவியலை  ஊர் முழுக்க சொல்லி அவரின் கைலியை அவிழ்த்துவிட்டு சந்திசிரிக்க வைத்துவிடுவார்கள்.. கெட்ட காஃபீர்கள்.

Tuesday, 4 September 2012

முகம்மதுவுக்கு அல்லாஹ் வெளிப்படுத்திய ஏழு குர்ஆன்கள்


Dr. ஜாகிர் நாயக் தன்னுடைய உருது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒன்றில், அதை தொகுத்து வழங்குபவர் ஏன் இஸ்லாம் மற்ற எல்லா மதங்களைவிட உயர்வானது என்று உரிமை கோருகிறது என்று கேட்ட கேள்விக்கு,  பதில் அளிக்கிறார். மற்ற மதங்கள் தவறான கணக்கீடுகளுக்கு வழிகாட்டும் போது, 2+2=4 என்ற சரியான விடையை பெற, இஸ்லாமே நேரான பாதையை அவருக்கு போதிக்கிறது என்று Dr. ஜாகிர் நாயக் வாதிட்டார். இப்படி, தன்னுடைய நிகழ்ச்சிகளில் எதையும் கண்மூடித்தனமாக நம்புகின்ற முஸ்லிம்கள் கேட்கின்ற  கேள்விகளுக்கு தமாஷாக அவர் விடையளிக்கின்றார். உண்மையில், அவரும் அவருடைய குரு அஹ்மத் தீதத்தும் இஸ்லாத்துடைய மேலாதிக்க இயல்பை முஸ்லிம்கள் அறிந்து கொள்ளும்படியே செய்துள்ளனர். அவர்கள் இதற்க்கு முன்பு, தங்களுடைய மதத்தை பற்றி அறிந்துகொள்வதை பற்றி பெரிதும்  அலட்டிக்கொள்ளாமலே இருந்தனர். தீதத்துக்கும் ஜாகிருக்கும் நன்றிகள்!
23 வருடங்களில் 7  குர்ஆன்கள், எல்லாமே அரபியில். 
1 = 7           
23 வருடங்கள் என்ற நம்ப முடியாத நீண்ட காலகட்டத்தில், ஏழு வெவ்வேறு விதமான முறைகளில் முஹம்மதுக்கு குர் ஆன் வெளிப்படுத்தப்பட்டது என்பதையும், எல்லா ஏழு குர் ஆன்களும் முஹம்மதின் மரணத்திற்கு பிறகே புத்தக வடிவங்களாக தொகுக்கப்பட்டன என்பதையும் அறிந்துகொள்ளும்போது அது முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாக இல்லாமலிருக்கலாம், ஆனால் அது முஸ்லிமல்லாதோர்க்கு அதிர்ச்சியூட்டுவதாக இருக்கின்றது. அவைகள் தொகுக்கப்பட்டு சுமார் 20  வருடங்களுக்கு பிறகு, மூன்றாவது கலீபாவான உத்மான், ஏழு பாடபேதங்களில்(versions) இருந்து ஒரே கைப்பிரதியை(codex) உருவாக்கி அதையே அதிகாரப்பூர்வமான குர்ஆனாக அறிவித்து, இஸ்லாமிய பேரரசு எங்கும் உள்ள  மற்ற ஆறு பாடபேதங்களையும் (versions) எரித்துவிடும்படி ஆணையிட்டார். எனவே நூற்றுக்கணக்கான குர்ஆன்களின்  மற்ற ஆறு பாடபேதங்களும்  சடங்கு ஏதுமின்றி தகனம் செய்யப்பட்டன.
இந்த உண்மையை எல்லா முஸ்லிம்களும் அறிவார்களா?
அநேகமாக இன்றைய குர்ஆனை போலவே, புனிதமாகவும்  முக்கியத்துவமிக்கதாகவும் உள்ள, மனித இனத்துக்கு வழிகாட்ட வெளிப்படுத்தப்பட்ட அல்லாஹ்வின்  புத்தகங்கள்- ஒன்றல்ல, ஆனால் அவைகளில் ஆறு புத்தகங்கள், அவைகளின் எந்த அறிகுறியும் இல்லாமல் சாம்பலாக எரிக்கப்பட்டுவிட்டன என்பதை அவர்கள் அறிய வரும்போது முஸ்லிம்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள்?
7 வெவ்வேறு மூல குர்ஆன்களுக்கு ஆதாரம்
கூறப்படுவதைபோல, ஏழு வெவ்வேறு பாட பேதங்களில் (versions / விருத்தாந்தங்கள்) முஹம்மதுக்கு குர் ஆன் வெளிப்படுத்தப்பட்டது என்பதற்கும் முஹம்மதின் மரணத்திற்கு பிறகுகூட அவை புத்தக வடிவத்தில் இல்லை என்பதற்கும் கீழ்க்கண்ட ஹதீதகளே சான்றுகள் :
ஸஹீஹ் அல்-புஹாரி வால்யூம்  3, புத்தகம் 41, எண் 601 :
உமர் பின் அல் கத்தாப் அறிவித்தார் : '................ அதை ஓதியபோது, அல்லாஹ்வின் தூதர், "அது இந்த வகையில்  வெளிப்படுத்தப்பட்டது" என்று  கூறினார் . அதை நான் ஓதியபோது, அது இந்த வகையில்  வெளிப்படுத்தப்பட்டது" என்று அவர் கூறினார்,   எனவே உங்களுக்கு எளிதான முறையில் அதை ஓதுங்கள்."
குர்ஆன் ஒரே புத்தக வடிவில் இருந்ததே இல்லை
முஹம்மது தன்னுடைய வாழ்நாளின்போது குர்ஆனை புத்தக வடிவில் தொகுப்பதை பற்றி அலட்டிகொள்ளவே இல்லை என்பதற்கும், இன்றைய சாதாரண முஸ்லிம்களைபோல மிகப்பெரிய சஹாபாக்காளில் ஒருவர்கூட குர் ஆனை முழுவதுமாக மனப்பாடம் செய்திருக்கவில்லை என்பதற்கும் அடுத்த ஹதீத் சான்றாக உள்ளது. குர்ஆனை புத்தக வடிவத்தில் தொகுத்ததின்மூலம், நேர்வழிபெற்ற கலீபாக்கள் முஹம்மதின் கொள்கையை சட்டப்படி நீக்கிவிட்டனர் (abrogated).
ஸஹீஹ் அல்-புஹாரி வால்யூம் 6: 509:
ஜைத் பின் தாபித் அறிவித்தார் :

வெவ்வேறு மூலங்களில் இருந்து குர்ஆனை சேகரித்து அதை ஒரு புத்தக வடிவமாக தொகுக்கும்படி அபு பக்கரை உமர் பின் கத்தாப் கேட்டுக்கொண்டார். அப்பொழுது, அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படி செய்ய முடியும்? என்று அபு பக்கர் அவருக்கு பதிலுரைத்தார்.
அல்லாஹ் தன்னுடைய குர்ஆனில் பொய் உரைக்கிறார்
தான் புத்தக வடிவத்தில் குர் ஆனை முஹம்மதுக்கு வெளிப்படுத்தியதாக தன்னுடைய குர் ஆனில் அல்லாஹ் பல இடங்களில் உறுதிபடுத்துகிறார்.   

1. வஹியின் மூலம் உமக்கு புத்தகத்திலிருந்து இறக்கி வைக்கப்பட்டதை ஓதுவீராக, மேலும்  தொழுகையை நிலைநிறுத்துவீராக (குர்ஆன்  29:45).   

2. புத்தகத்திலிருந்து நாம் உமக்கு வெளிப்படுத்தியுள்ளது முன்பே  வெளிப்படுத்தப்பட்டதை  உறுதிப்படுத்தும் உண்மை ஆகும் (குர் ஆன்  35:31) .   
புனித குர் ஆனின் 6  பாடபேதங்களை  (versions ) புனிதமாக எரிப்பது 
ஸஹீஹ் அல்-புஹாரி வால்யூம் 6: 510:
அனஸ் பின் மாலிக் அறிவித்தார் : "... அவர்கள்  எதை பிரதி எடுத்தார்களோ அதின் ஒரு ஒரு பிரதியை ஒவ்வொரு முஸ்லிம் மாகாணத்திற்கும் அனுப்பி வைத்து, மற்ற எல்லா குர்ஆன் எழுத்துக்களையும், தனித்தனி கைப்பிரதிகளோ(fragmented manuscripts) அல்லது முழுமையான பிரதிகளோ, அவைகளை  எரித்துவிடவேண்டும் என்று உத்மான் உத்தரவு இட்டார்...." 
குர்ஆனின் ஏழு பாடபேதங்களை குறித்த அதிகமான ஆதாரங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ள வாசகர்கள் இந்த ஹதீத்களை  படித்து பார்க்கலாம் :
ஸஹீஹ் அல்-புஹாரி வால்யூம் 4: 442
ஸஹீஹ் முஸ்லிம் 1787
அல் திர்மிதி 2215

ஆகையால், 7 வெவ்வேறு விதங்களில் குர்ஆனை  முஹம்மதுக்கு அல்லாஹ் வெளிப்படுத்தினார்; எந்த சஹாபாவும் குர் ஆனை முழுவதுமாக மனப்பாடம்  செய்திருக்கவில்லை; முஹம்மதின் மரணத்திற்கு பிறகும்கூட குர் ஆன் புத்தக வடிவத்தில் இல்லை; முஹம்மதின் மரணத்திற்கு 20 வருடங்களுக்கு பிறகே, உத்மான் குர் ஆனின் மீதமுள்ள 6 பாடபேதங்களையும் எரித்துவிட்டு தன்னுடைய சொந்த பாடபேதத்தை தொகுத்தார் என்பதை இந்த ஹதீத்கள் உறுதிப்படுத்துகின்றன.
அல்லாஹ்வின் தெளிவாக விளக்கும் அரபி 
இதற்கு மாறாக, அல்லாஹ் தன்னுடைய குர் ஆனில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் :
1 .  நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்(12 :2)
2 . மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்(20:113).
3 . தெளிவான அரபி மொழியில்(26:195).
4 . (அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்) (39:28).
5 . அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது(41:3).
எனவே,  அரபி தெளிவாக விளக்குகின்ற மற்றும் மிக சிறந்த மொழி என்பதால் குர் ஆனை  எளிதாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்வதற்காக, அதை மனித குலத்துக்கு வழிகாட்டியாக தான்  அரபியில் வெளிப்படுத்தியதாக   இந்த வசனங்களில்  அல்லாஹ் கூறுகிறார்.
அல்லாஹ்வுடைய குர்ஆனிய அரபி மொழியே உயர்வானது என்றால், பிறகு ஏன் அவர் எபிரேயு, அபிசீனியம், பாரசீகம் , சிரிய, கிரேக்கம் போன்ற  மற்றும் பல மொழிகளில் இருந்து சொற்களை தன்னுடைய குர்ஆனுக்காக கடன் வாங்கினார்?
மேலும், அரபி மொழியின் 7  விதங்களில் ஏன் அவர் தன்னுடைய குர் ஆனை அனுப்பினார்?
உலகின் மற்ற பகுதிகளில் வாழும் தன்னுடைய படைப்பின் பெரும் பகுதியினரை பற்றி அல்லாஹ் பொருட்படுத்துபவராக இருந்திருப்பாரானால் , மற்ற 6  பாடபேதங்களையும் அவர்களுடைய மொழிகளிலும்  அனுப்பி இருப்பார்.
தன்னுடைய குர்ஆனின் 7 பாடபேதங்களையும் ஒரே மொழியில் அனுப்புகிற அளவுக்கு இப்படிப்பட்ட அறிவீனராக எப்படி அல்லாஹ் இருக்க முடியும்?
அவருடைய குர்ஆனின் எல்லா 7 பாடபேதங்களையும் பின்பற்றும் அளவுக்கு அவரை பின்பற்றுபவர்கள் நிச்சயமாக அறிவீனர்களாக இருக்கவில்லை. ஆகையால், அவர்கள் அதிக அடிப்படை அறிவையும் புத்திசாலி தனத்தையும் காட்டி, தங்களுக்கு ஒரே ஒரு குர்ஆனை தேர்ந்தெடுத்துக்கொண்டு மற்ற 6 பாடபேதங்களையும் எரித்து விட்டார்கள்.
எனவே, Dr. ஜாகிர்!  உண்மையாகவே  இஸ்லாம் போதிப்பது  7=1 என்றா? நீங்கள் உரிமை கோருகிறபடி, சரியான கணக்கீடுகளை ஒன்றும் இஸ்லாம் போதிக்கவில்லை.
குர்ஆனிய வாரிசுரிமை சட்டம் என்பது அல்லாஹ்வின் இன்னொரு முழுமையான கணக்கு குழப்பம்.  குர்ஆனில் கூறப்பட்டுள்ள வாரிசுரிமை சட்டத்தை ஒரு முஸ்லிம் பின்பற்ற விரும்பினால், அவர் கண்டிப்பாக பைத்தியமாகி விடுவார். எழுத்தறிவில்லாத, குர்ஆனுடைய ஆசிரியரான முஹம்மது, இப்படிப்பட்ட மடத்தனமான வசனங்களை புனைந்து தன்னுடைய அறிவீனத்தை இன்னொரு முறையும் நிரூபித்துள்ளார். 

மூல ஆசிரியர் : மிர்சா காலிப்(Mirza Ghalib) - 19/02/2012
மொழி பெயர்ப்பு : ஆர்ய ஆனந்த்