Saturday, 17 March 2018

முகம்மத்தீய எதிர்ப்பு நாள்.



மார்ச் 16, 2017. நமது தோழர் கோவை பாரூக் இசுலாமிய தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நாள். இன்றுடன் (மார்ச் 16) அவர் நம்மை விட்டுப் பிரிந்து ஒருவருடம் கடந்துவிட்டது. துயறுற்று வாழும் அவரது குடும்பத்திற்கு மீண்டும் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மார்ச் 16 தினத்தை முகம்மதீய எதிர்ப்புத்தினமாக நாம் அறிவித்த வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக கடைப்பிடித்து அவருக்கு அஞ்சலி செலுத்தி மதபயங்கரவாதங்களுக்கு எதிராக போராடுவோம் என் உறுதிமொழி ஏற்போம்.

இந்த முகம்தீய எதிர்ப்புத் தினத்தை பெரியார் திராவிடக் கழகம் மற்றும் முன்னால் முஸ்லீம்களின் அமைப்புகள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, அடுத்தநாள் ஒரு அரங்கக் கூட்டம் நடத்தி தோழர் பாரூக்கின் மறைவிற்க்கு உரிய மரியாதை செலுத்தியதற்கு எமது குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்ளகிறோம்.

தோழர் பாரூக் படுகொலை செய்யப்பட்டதும் விரைவாகவும் மதிநுட்பமாகவும் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரியை நாம் மிகவும் பாராட்டுகிறோம். அதன் பிறகு காவல் துறையினரின் அடுத்தடுத்தக் கட்டங்கள் மிக விரைவாக செயல் படுத்தப்பட்டதற்கும் நாம் காவல் துறையை பாராட்டுகிறோம். பெரிதளவான கோரிக்கை இல்லாமலேயே, பெரியார் திராவிடக் கழகத்தின் கோரிக்கையை உடனடியாக ஏற்று குற்ற விசாரனையை CB-CID துறைக்கு மாற்றி குற்ற விசாரனையின் அடிவேர்களையும் கண்டறிய உத்தரவிட்ட தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்றுவரை சிறந்த முறையில் விசாரனையை எடுத்துச் செல்லும் CB-CID துறையினருக்கு எமது பாட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். குற்ற விசாரணை அறிக்கையை வழக்கு மன்றத்தில் தாக்கல் செய்வதில், கொலைக்கு பின்னணியாக இருந்த அடிவேர்களையும் அந்நிய வேர்களைகளையும் கண்டறிவதில் இன்னும் சில ஈதுள்ளதால் தாதமதமாவதாக நாம் அறிகிறோம்.

தோழர் பாரூக்கின் கொலையாளிகளை உடனே தண்டித்துவிட்டால் மட்டும் இந்த பயங்கரவாதம் நின்றுவிடாது. அடிவேர்களை எரித்துப் பொசுக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த சமூகத்திற்காக பாடுபடுபவர்களை ஒழிக்கும் பயங்கரவாதிகளை ஒழிக்க முடியும். நீதி தாமதமானலும் அது முழுமையானதாக நிறைவுறுவதே தோழர் பாரூக்கிற்கு நாம் செய்யும் கைமாறாகும்.

தோழர் பாரூக் படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே செய்தி பரவி சமூக சிந்தனையாறர்கள் ஊடங்கள் கொலைபற்றி தாம் அறிந்தவர்களிடம் கொலையாளிகள் எந்த இஸ்லாமியஅம்மைப்பிலும் இல்லை என்று சொன்னார்கள். முகநூல் வாட்சப் போன்றவற்றிலெல்லாம் பதிவிடும் இஸ்லாமியர்கள் ‘அவர்கள் எந்த அமைப்பிலும் இல்லை’ என்று ஒரே குரலாகச் சொன்னார்கள்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் படுகொலைக்கு அடுத்த சில தினங்களில் பேட்டி கொடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பி.ஜெயினுலாபிதீன் படுகொலை செய்தவர்கள் எந்த அமைப்பிலும் இல்லை என்று கூறுகிறார்.
அதுத்தடுத்து தமிழ்நாடு கேரளா மாநிலங்களிலுள்ள இஸ்மாமிய அமைப்புகள், மனிதநேய மக்கள் கட்சி என்ற இஸ்லாமிய அரசியல் கட்சி என்று ஒன்று பாக்கியில்லாமல் கொலையாளிகள் எந்த அமைப்பிலும் இல்லை என்று அடித்துச் சொன்னார்கள். இதிலிருந்து இரண்டு இன்றியமையாத உண்மைகள் உள்ளன என்பது வெட்ட வெளிச்சமானது.

1. கொலையாளிகளாக கைது செய்யப்பட்டவர்களை எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் அவர்கள் கொலையாளிகள் அல்ல என்று சொல்லவில்லை. இதிலிருந்து கொலையாளிகள் இவர்கள்தான் என்பதை காவல்துறை கண்டுபிடித்து விடும், இவர்கள் கொலை செய்யவில்லை என்றுச் சொல்லி தாமும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று நுனலும் தன் வாயாற்கெடும் என்பதற்கேற்ப முன்னெச்சரிக்கையாக, இவர்கள் கொலையாளிகள் அல்ல என்று மறுப்புக் குரல் எழுப்பவில்லை. இதுவே கைது செய்யப்பட்டவர்கள்தான் கொலையாளிகள் என்பதற்கும் கொலையாளிகளின் பின்னால் ஒரு அமைப்பு அல்லது கூட்டு அமைப்புகள் உள்ளன என்பதற்குச் சரியான நிருபனமாகவும் இருக்கிறது.

2. ஒரு அமைப்பின் மையக்குழுவிற்கு தம் அமைப்பில் எவவர்கள் உள்ளனர் என்று தெரியலாம். அதுவே இலட்சக் கணக்கானவர்கள் உறுப்பினராக உள்ள அமைப்புகளில் உள்ளூர் பொறுப்பில் உள்ளவர்களுக்குத்தான் முழுவிபரமும் தெரியும். உள்ளூர் பொறுப்பில் உள்ளவர்கள் வழியகத்தான் மைய நிர்வாகம் அறிய முடியும். அதனால் சில மணி நேரங்களிலேயே ‘கொலையாளிகள் எந்த அமைப்பிலும் இல்லை’ என்று அனைத்து மீடியாக்களிலும் இஸ்லாமியர்கள் பரப்புரை செய்ததிலிருந்து இக்கொலை பல கட்டங்களில் திட்டமிட்டு ஏதோ ஒரு அமைப்பு அல்லது அமைப்புகளின் கூட்டுத்திட்டம்தான் என்பது ஐயமில்லாத தெளிவு.
ஒருவேளை தன் அமைப்பில் யார் யார் இருக்கிறார்கள் என்பதுதலைமைக்கு துள்ளியமாக தெரியும் என்றே எடுத்துக்கொள்வோம். பிற அஐப்பிலுள்ள உறுப்பினர்களை இவர்கள் எப்படி அறிவார்கள்?
அல்லது ஒவ்வொரு அஐப்பிலும் உள்ளவர்கள் அனைத்து பிற அமைப்புகளில் உள்ளவர்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்களா? அப்படியானால் இவர்களிடம் தாலிபான்கள், இலஷ்கர்-இ-தொய்பா, ISIS, சிமி போன்ற பயங்கரவாத அமைகளின் தமிழ்நாட்டு உறுப்பினர்களின் பட்டியலும் உறுப்பினர்கள் பற்றிய விவரங்களும் தெரியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இல்லை என்றால் தன்னுடைய அமைப்பில் இல்லை என்றுதானே சொல்லியிருக்கனும். எந்த அமைப்பிலும் இல்லை என்று சொன்னதிலிருந்து தமிழகத்தின் இஸ்லாமிய அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவைகள் எனபது நிருபனமாகிறது. அரசும் காவல்துறையும் இதனை ஆய்ந்தறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கிறோம்.

மார்ச் 16_ஆம் நாளை வருடந்தோறும் முகம்மத்தீய எதிர்பு நாளாக கடைப்பிடிப்போம்.

இவன்,
நந்தன்

Facebook Comments

0 கருத்துரைகள்: