Saturday, 3 September 2016

வஹாபியிச வெறியன் ஜாகிர் (2)

ஜாகிர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்:
இந்தியா ஷரியா சட்டத்தின் படி ஆட்சி நடத்த வேண்டும் என்கிற சாகிர் நாயக்கின் கருத்தையும் மேலும் மதக் கொள்கைகளை மீறுவதால் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற சாகிர் நாயக்கின் கருத்தை வால் ஸ்டிரீட் ஜர்ணல் பத்திரிகையில் எழுத்தாளர் சதானந்த் துமே (Sadanand Dhume) விமர்சிக்கிறார். மேலும் முஸ்லீம் அல்லாதவர்கள் வழிபாட்டுத் தலங்கள் கட்டக் கூடாது என்றும் ஆப்கானிஸ்தானில் பாமியன் புத்தர் சிலைகள் வெடிவைத்துத் தாக்கப்பட்டதையும் சாகீர் நாயக் நியாயப்படுத்துகிறார்.
சாகீர் நாயக்கை இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகள் தடை செய்துள்ளன.இவரது பேச்சுகள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக அமைந்துள்ளதால் இங்கிலாந்து அரசு இவரைத் தடை செய்தது. மலேஷியா, பங்களாதேஷும் தடைவிதித்துள்ளது தாருல் உலூம் எனும் இஸ்லாமிய அமைப்பு சாகிர் நாயக்கிற்கு ஃபத்வா விதித்துள்ளது. சாகிர் நாயக் ஒரு சர்ச்சைக்குரிய பேச்சாளர் என பேராசிரியர் டோர்கெல் ப்ரெக்கெல் (Torkel Brekke) குறிப்பிடுகிறார். மேலும் இந்திய உலமாக்களில் பலர் இவரை வெறுக்கின்றனர் எனக் குறிப்பிடுகிறார்.

சாகிர் நாயக் முஸ்லீம்களை தவறாக வழிநடத்துகிறார் மேலும் உண்மையை இஸ்லாமிய ஞானிகளிடமிருந்து உணரவிடாமல் செய்கிறார் என இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் வங்காளதேசம் சன்னி பிரிவைச் சேர்ந்த முல்லாக்கள் கூறுகின்றனர்.
அல் காயிதா அமைப்பை சாகிர் நாயக் ஆதரிக்கிறார் என பாக்கிஸ்தானிய அரசியல் விமர்சகர் காலித் அஹமது (Khaled Ahmed) குற்றஞ்சாட்டுகிறார். 2008 ஆம் ஆண்டு லக்னோவைச் சேர்ந்த இஸ்லாமியக் கல்வியாளர் ஷாகர் க்வாஸி அப்துல் இர்ஃபான் ஃபிராங்கி மகாலி (shahar qazi Mufti Abul Irfan Mian Firangi Mahali) சாகிர் நாயக் ஒசாமா பின்லாடனை ஆதரிக்கிறார் என்றும் இவர் மீது ஃபத்வா விதிக்கிறார்.
லஷ்கர்--தொய்பா அமைப்பிடமிருந்து சாகிர் நாயக் பண உதவி பெற்றிருக்கிறார் என பத்திரிகையாளர் ப்ரவீண் சாமி கூறுகிறார். மேலும் இவரது செய்திகள் இஸ்லாமியர்களை மூளைச்சலவை செய்து அவர்களை தீவிரவாதிகளாக்குகிறது என்றும் இந்திய ஜிகாதிகளை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டது என்றும் சொல்கிறார் இப்படி ஜாகீர் சொல்கிறார் ,ஜாகிர் சொல்கிறார் என்று கூறினாலும் உண்மையில் கூறுவது. முஹம்மதின் குர் ஆனும் ஹதிஸும்தான் இவைகளை படித்துதான் ஜாகிர்களும் , பிஜை களும் உருவாகுகிறார்கள்.


ஜாகிர் நாயக்கோ பிஜையோ இந்தியாவின் முழு முஸ்லிம் களின் அடையாளம் அல்ல என்பதை பெரும்பான்மை முஸ்லிம்கள் புரிந்து வைத்திருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும்.
சரி... ஜாகிரின் இஸ்லாமிய பரப்புரையை ஏற்காத பிஜைகள் ஏன் ஜாகிருக்கு எதிராக களம் இறங்கியுள்ளார்கள் இங்குதான் முக்கிய அரசியல் உள்ளது ஜாகிர் தனிநபராக பரப்புரை செய்துவருகிறார். அவர் இயக்கமாக அமைப்பாக செயல்படவில்லை. அதனால் இவரை நம் அரசியல்சாசன சட்டப்படி தடைசெய்வது சுலபமில்லை. ஆனால் இந்தியாவின் கூட்டு மனசாட்சி என்ற பெயரில் தடைசெய்ய வாய்ப்பு உள்ளது அப்படி ஒரு முன்மாதிரியை மோடி அரசு செயல்பட்டால் .… அடுத்து பாதிக்க படுவது நம்ம ஒரிஜினல் மூமின்ஸ் ஜமாத் தான் (TNTJ). அதன் வீரியம் பிஜைகள் புரிந்து இருப்பதால்தான் ஒரு முஷ்ரிக்கான ஜாகிருக்காக களம் இறங்குகிறார்கள். தனி நபரையே தடை செய்ய இயலும் என்றால் அமைப்புகளை தடைசெய்யவும் அதன் தலைவர்களை கைது செய்வதும் எளிது. அதை செய்யும் தகுதி மோடி அரசிற்கு இருக்கிறதா என்பதே கேள்வி? இஸ்லாமிய அடிப்படைவாதம் எப்படி நாட்டிற்கு அச்சுறுத்தலோ அதேபோல் இந்துத்துவாக்களின் கட்டட்ற்ற வன்முறை பேச்சுக்களும் நாட்டிற்கு அச்சுறுத்தலே என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
_________
இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்று
அல்லாஹ் உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியும் தேடுகிறோம் .… என்பதாகும். இதை இன்றைய ஜாகிர் ஆதாரவு போராட்டவாதிகளில் யாருமே பின்பற்றவில்லை என்பது இவர்களின் ஓரிறை நம்பிக்கையில் விழுந்த மண். இவர்களின் ஓரிறை நம்பிக்கையை இவர்களே குழிதோண்டி புதைத்து விட்டார்கள் என்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஜாகிருக்காக ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்ய இஸ்லாம் வலியுறுத்தவில்லை ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் ,கடையடைப்பு, போன்ற போரட்ட முறைகள் காஃபிர்களின் வழிமுறையாகும். இவைகளை பின்பற்ற முஹம்மது தடைசெய்துள்ளார் இவர்கள் உண்மையில் இவர்களின் அல்லாஹ்விற்கு ஆற்றல் இருப்பதாக நம்பினால் மஸ்ஜீதுகளிலும் இயக்க மர்கஸ்களிலும் ஒரு ஸ்பெஷல் தொழுகையை போட்டு ஜாகிர் நாய்க்காக பிராத்தனை செய்யலாம். அதன் மூலம் மோடி அரசை நிலை குலைய செய்யலாம். ஏனென்றால் அல்லாஹ் எப்போதும் முஸ்லிம்களின் பக்கம்தான் இருப்பான். நஜீஸ் காஃபீர்களுக்கு உதவமாட்டான் இப்படி நம்பாமல் இந்த வஹாபிய போராளிகள் இந்துவவாதிகளின் திட்டங்கள் வெற்றி பெரும் முகமாக அல்லாஹ்வை மறந்து காஃபிர்வழி போராட்டங்களை கையில் எடுத்துள்ளார்கள்.(தொடரும்)

Facebook Comments

3 கருத்துரைகள்:

Ant said...

//https://www.youtube.com/watch?v=PInw4wU2M6c//
அமைதியான நாட்டில் உட்கார்ந்து கொண்டு இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று பேதிப்பதற்கு பதில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் என்று செல்லலாமே இஸ்லாமியர்கள் நரகத்திற்கு செல்வதை தடுக்கலாமே என்ற கேள்விக்கு பதில் இல்லாத நாயக்.

Ant said...

https://www.youtube.com/watch?v=NddUq11qvL8
நான் நல்லவை செய்தால் முஸ்லீமாக இலலை என்ற காரணத்திற்காக சுவர்க்கம் செல்ல முடியாதா? என கடவும் பாகுபாடு காட்டுவதேன் என்ற கேள்விக்கு தலைப்பு Stupid Man Makes Dr Zakir Naik Very Angry By His Questions (முட்டாள்) என வைத்துளள்ளதையும் காணலாம்.

தஜ்ஜால் said...

நல்ல துவக்கம் தொடருங்கள் சாதிக் சமத்!