Thursday, 10 March 2016

ஸிஹ்ரும் ஷிர்க்கும்! -5

கடந்த பதிவில் மனம் –உள்ளம் என்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

மனம், உள்ளம் என்று அழைப்பதும்  இரக்கம், அன்பு, ஆசை, கோபம், வெறி, ஏக்கம், காமம், காதல்…. இன்னும் அனைத்து உணர்வுகளும் நிகழ்வதெல்லாம் மூளையில்தான். அதில் பதிந்துள்ள நினைவுகளையும், சிந்தனைகளையும் மனம், மனசாட்சி, உள்ளம் என்று அழைக்கிறோம்.  அன்றைய மக்கள் இவற்றை அறிந்திருக்கவில்லை; அவர்களின் காலத்து அறிவியலின் வளர்ச்சி அவ்வளவுதான்! அன்றைய புராண காலத்து மனிதர்கள் இவை அனைத்தும் இதயத்தில் நிகழ்வதாகக் கருதினர். காரணம் அவர்களது சிந்தனை தவறாக இருந்ததுதான். இதன் பதிவுகளை, பாதிப்பை நமது மொழிகள் அனைத்திலும் இன்றும் காணமுடியும்!

உதாரணத்திற்கு, அன்றைய சிறந்த நாகரீகமாக சமுதாயமாகக் கருத்தப்படும் எகிப்திய மக்களிடையே இறந்தவர்கள் என்றேனும் உயிர்த்தெழக் கூடுமென்ற நம்பிக்கை இருந்தது. அதற்கு வசதியாக உடல்களைப் ’மம்மி’களாகப் பதப்படுத்தி வைத்தனர் என்பதை நாம் அறிவோம். அவ்வாறு உடலைப் பதப்படுத்தும் பொழுது குடல், ஈரல், இதயம் போன்ற உறுப்புகளை எடுத்து தனித்தனியாக ஜாடிகளில் அடைத்து வைத்தனர். அந்த உடலுக்குரியவர் திரும்ப உயிர்த்தெழும் பொழுது தேவைப்படும் என்ற நோக்கில் அவ்வாறு செய்தனர். ஆனால் தேவையற்ற உறுப்பாகக் கருதி மூளையை குடைந்து நீக்கி வீசி எறிந்து விடுவார்கள்.

இனி நாம் குர்ஆன் ஹதீஸ்களுக்கு வருவோம்.  முஹம்மதுவின் சிறுவயதிலும், விண்வெளிப்பயணத்திற்கு முன்பாகவும் தனது நெஞ்சம் பிளக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டதாகவும் ஹதீஸ்களில் கூறுகிறார்.  அல்லாஹ்வைச் சந்திக்க உடலுடன் செல்ல வேண்டுமென்ற எந்த நிபந்தனையும் இல்லையென்று கருதும் இஸ்லாமின் சில குழுக்கள் முஹம்மதின் விண்வெளிப்பயணம் முழுவதுமே ஒரு கனவு போன்றது, அதாவது ஆன்மீக, ஆத்மீக முறையிலான பயணம் அதை உடல்ரீதியான பயணமாக கருதக்கூடாது என்கிறது. அண்ணன் பீஜே போன்ற குழுவினர்கள், தூதர் முஹம்மது விண்வெளிப்பணம் சென்றது உண்மைதான் ஆனால் பயணத்திற்கு முன்பாக செய்யப்பட்ட நெஞ்சத்தை பிளந்து, ஈமான், ஹிக்மத் போன்ற பொருட்களால்(!?) அவரது நெஞ்சம்   நிரப்பப்பட்டதாக கூறுவது ஒரு கனவு போன்றது என்கின்றனர். ஏனெனில் ஈமான் என்ற நம்பிக்கையும் ஹிக்மத் என்ற நுண்ணறிவும் பொருட்களல்ல என்பது அவர்களது வாதம். பாரம்பரீய சுன்னத் ஜமாஅத்தினர் அல்லாஹ்வின் தூதரது விண்வெளிப்பயணம் தொடர்பான ஹதீஸ்கள் கனவோ கற்பனையோ அல்ல! அனைத்துமே நிஜம்தான் என்கின்றனர்.  தூதர் முஹம்மது விண்வெளிப் பயணம் செய்விக்கப்பட்டார் என்ற ஒரே செய்திக்கு மாறுபட்ட விளக்கங்கள் உருவாது ஏன்? 

ஹதீஸ்கள் கூறும் செய்தி சராசரி அறிவிற்குக்கூட பொருந்தாமல் போகும் பொழுது பாவம்! அவர்களும் என்னதான் செய்ய முடியும்? நிராகரிக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் இறுதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர்.

தூதர் முஹம்மதிற்கு, மருத்துவர் ஜிப்ரீல் மேற்கொண்ட ஈமான், மற்றும் ஹிக்மத் குறைப்பாடு நீக்க அறுவை சிகிச்சை கனவா அல்லது உண்மைதானா?  இதோ ஒரு நேரடி சாட்சியம்!

முஸ்லீம் 261
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது சிறு வயதில்) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபியவர் களைப் பிடித்துப் படுக்கவைத்து, அவர்களின் நெஞ்சைத் திறந்து இருதயத்தை வெளியிலெடுத்தார்கள்…..
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் ஊசியால் தைத்த அந்த அடையாளத்தை நான் பார்த்திருக்கிறேன்.

ஹதீஸ் அறிவிப்பாளரும், தூதர் முஹம்மதின் உறவினருமான அனஸ் என்பவர், முஹம்மது நெஞ்சத்தில் ஊசியால் தைக்கப்பட்ட அந்த அடையாளத்தைப் பார்த்ததாகக் கூறுகிறார். அண்ணன் பீஜே கூறுவதைப் போல, இருதய அறுவை சிகிச்சை, ஈமான் மற்றும் ஹிக்மத் நிரப்பல்கள் கனவல்ல நிஜம்தான்!

தூதர் முஹம்மது, சிந்தனை மையமாக, மனித உள்ளத்தின் இருப்பிடமாகக் கருதியது மார்புக் கூட்டிற்குள் இருக்கும், உடலுக்குள் இரத்ததை விநியோகிக்கும் இதயத்தைதான் என்பதை வலியுறுத்திக் கூறும் இன்னொரு ஹதீஸ்.

முஸ்லீம் 5011
மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகச் சற்று கூடுதல் குறைவுடன் இடம்பெற்றுள்ளது.
அதில், "அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையே (qulubikum) பார்க்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை(sadrih). நோக்கி சைகை செய்தார்கள்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அண்ணன் பீஜே கூறுவதை போல  ’qalb-இதயம்’ என்பதை சிந்தனை மையம் என்ற பொருளில் பயன்படுத்தியிருந்தாலும், அந்த qulubikum என்ற உள்ளங்கள் sadrih என்ற மார்புக்கூட்டிற்குள் இருப்பதாகக் கூறும் தூதர் முஹம்மதின் செயல் முறைவிளக்கங்கள், அதன் சாட்சிகளாக இருக்கும் துணை ஆதரங்கள் அனைத்துமே அன்றைய மக்களின் அறியாமையை அப்பட்டமாகப் பறைசாற்றுவதுடன்,  அண்ணன் பீஜே அளவற்ற முழம் போடுகிறார் என்பதைத் தெளிவு படுத்துகிறது.

இஸ்லாமிய நம்பிக்கைப்படி மார்பெலும்புகளுக்கு மத்தியிலுள்ள இதயத்தின் பணி என்னவென்பது மனிதனைப் படைத்த அல்லாஹ்விற்குத் தெரியும். முஹம்மது பொய்யுரைப்பவர் அல்ல!  எதிரிகளாலும் புகழப்படும் அளவிற்கு நேர்மையாளர் என்பதும் இஸ்லாமிய நம்பிக்கைதான். இங்கு இந்த இரண்டில் ஒன்று அல்ல இரண்டுமே, சிறிதுகூட உண்மை கலக்காத பச்சைப் பொய்கள்!

மேற்கண்ட ஹதீஸ்களை நிரகரிக்க அண்ணன் பீஜே உடனடியாகத் தயாராக வேண்டும். அறிவிப்பளர் வரிசையில் கோணல் இல்லை, அறிவிப்பாளர்கள் தரத்தில் குறைகள் இல்லை. குர்ஆனில் அல்லாஹ் பயன்படுத்தியுள்ள அதே பதங்கள் அதே பொருளில் இருக்கின்றன ஆனால் ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும்!  இதற்காக த.த.முல்லாக்கள் பெரிதாக வருத்தப்படத் தேவையில்லை; ஏனெனில் ஹதீஸ்களை ஒட்டு மொத்தமாகவே நிராகரிக்க  அண்ணன் பீஜே ஏற்கெனவே அடித்தளம் அமைத்து கொடுத்துவிட்டார்.

ஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார்….
…ஹதீஸ்களைப் பொருத்தவரை ஓரிரு நபித்தோழர்கள் தான் அறிவித்துள்ளனர். நபித்தோழர் இப்படிச் சொன்னார் என்று அறிவிப்பதும் ஓரிருவர் தான். நூலாகத் தொகுக்கப்படும் காலம் வரை ஒருவரில் இருந்து ஒருவர் என்ற அடிப்படையில் தான் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டன…

த.த.ஜ முல்லாக்களே…..!  ஸ்டார்ட் மியூசிக்!!!

(ஹதீஸ்களை மறுக்கலாம்  அது கைவந்த கலை! ஆனால் குர்ஆனை என்ன செய்வது?)

இல்லாத பொருளைக்கூறி குர்ஆனின் பல வசனங்களுக்கு முரண்படுகிறது என்று முஹம்மதிற்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் அனைத்து இட்டுக் கட்டப்பட்டவை என்ற நிலைக்குச் சென்றவர்கள், அகராதிகளிலும் அரபு இலக்கியங்களிலும் ’கல்ப்' என்ற பதத்திற்கு ’மூளை’ என்ற நேரடியான பொருள் இருக்கிறதென்று வாதிடும் சந்தர்பவாதிகள், முஹம்மதிற்கு நெஞ்சு பிளக்கப்பட்டதாக கூறப்படும் ஹதீஸ்கள், குர்ஆனுக்கு இவர்கள் கூறும் பொருளுக்கு நேடியாக முரண்படுகிறது என்பதை அறியவில்லை என்பது ஆச்சரியம்தான். இஸ்லாமிய மக்களின் அறியாமையை இந்த முல்லாக்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தி ஏமாற்றுகின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.


முஹம்மதுவின் நெஞ்சத்தைப் பிளந்து,  இருதயத்தை வெளியில் எடுத்து அதைக் கழுவி சுத்தம் செய்து ஈமானையும் ஹிக்மத்தையும் அதனுள் நிரப்பியவர் யார்? எதார்த்த உண்மைக்கு எதிராக, அடிப்படை உடற்கூறுகளுக்கு முற்றிலும் புறம்பாக, இப்படியொரு அர்த்தமற்ற காட்சி முஹம்மதிற்குத் தோன்றியது எவ்வாறு? குர்ஆன் ஹதீஸ்களில், கிடைக்கின்ற சந்து பொந்துகளில் அறிவியலைத் திருகி ஏற்றும் முல்லாக்களுக்கு இதற்கு பதில் சொல்லும் திறன் இருக்கிறதா?

அல்லாஹ்வைச் சந்திக்கச் சென்றதாகவும், ஜிப்ரீல், மலக்குகள், இப்லீஸ், ஜின்கள், ஷைத்தான்களைக் கண்டதாகவும், அவர்களுடன் உரையாடியதாகவும் கூறிக் கொண்ட தூதர் முஹம்மதின் மனநிலையை உங்களது யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கும், இதற்கும் என்ன தொடர்பு இவைகளை இங்கு எதற்காக விவாதிக்க வேண்டுமென்று உங்களுத் தோன்றலாம். மதத்திற்குள் பகுத்தறிவு சிந்தனையை நுழைந்தால், மதநம்பிக்கைகளை அது எவ்வாறு வேறுடன் பிடுங்கி எறிந்துவிடும் என்பதை விளக்கவே இதை இங்கு கூறுகிறேன். இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது அவற்றை வரும் பதிவுகளில் நாம் கவனிக்கலாம். அண்ணன் பீஜேவின் ஸிஹ்ர் பற்றிய முடிவும் இத்தகையதுதான்! முஃமின்கள் சிந்திக்கட்டும்!

மீண்டும் பழைய கேள்வி

நோய், மறதி, மனநிலை பாதிப்பு, பைத்தியம் உட்பட அனைத்து தீமைகளும் ஏற்படுவது எதனால்? இதில் ஷைத்தானின் பங்காளிப்பு என்ன?

83. பைத்தியத்திற்குஷைத்தான்காரணமா?
தீயகாரியங்களைப் பற்றிக் கூறும் போது 'ஷைத்தான் அதை ஏற்படுத்தினான்' என்று கூறுவதைத் திருக்குர்ஆன் அனுமதிக்கிறது. அய்யூப் நபியவர்களுக்கு நோயும் துன்பமும் ஏற்பட்டபோது 'ஷைத்தான் இவ்வாறு செய்துவிட்டானே' எனக் கூறினார்கள் (திருக்குர்ஆன் 38:41). இதனால் நோயையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று கருதக்கூடாது.

கெட்டகாரியத்தை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்று மரியாதை நிமித்தமாகவே அவ்வாறு அய்யூப் நபி கூறினார்கள். அதுபோல் பைத்தியத்தை அல்லாஹ்தான் ஏற்படுத்தினாலும் அந்தத் தீமை ஷைத்தானுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

“ஜின்களும் ஷைத்தான்களும்” என்ற புத்தகத்திலிருந்து…
"நாம் அப்பாறையில் இளைப்பாறிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது'' என்று (ஊழியர்) கூறினார். (அல் குர்ஆன் 18:63)
மறதி உட்பட எல்லாத் தீமைகளும் இறைவன் புறத்திலிருந்து தான் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. என்றாலும் கெட்ட விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்ற மரியாதைக்காகவே மறதியை ஷைத்தான் ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
... நன்மையை ஏற்படுத்துவது இறைவனுடைய அதிகாரமாக இருப்பது போல தீமைகளை ஏற்படுத்துவதும் இறைவனுக்கு மட்டுமே உரிய அதிகாரமாகும். இதில் நபிமார்கள் உட்பட எப்படிப்பட்ட மகானிற்கும் எள்ளவுகூச(ட) ஆற்றல் இல்லை என்கிற போது ஷைத்தானுக்கு இந்த ஆற்றல் இருப்பதாக நினைப்பது தவறாகும்.

இவ்விளக்கம் தன்னுடைய சொந்தக் கருத்தல்ல. குர்ஆனின் அடிப்படையில்தான் தான் இவ்வாறு விளக்குவதாக பின்வரும் குர்ஆன் வசனத்தை மேற்கோள் காண்பிக்கிறார் அண்ணன் பீஜே.

"அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்?'' என்று கேட்பீராக! அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.  (அல் குர்ஆன் 48:11)

குர்ஆனின் அடிப்படையில், மனிதர்களுக்கு ஏற்படுகின்ற வறுமை, பட்டினிச் சாவுகள், சுரண்டல்கள், கொள்ளை நோய்கள், உடல் ஊனம், கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல் துன்புறுத்தல்கள், வன்புணர்ச்சி, …., …, போன்ற அனைத்து தீமைகளும் அல்லாஹ்விடமிருந்துதான் வருகிறது மரியாதை நிமித்தமாகவே தீமைகள் ஷைத்தானுடன் இணைக்கப்படுகிறது என்பது அண்ணன் பீஜேவின் விளக்கம் மட்டுமல்ல இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கையும் அதுதான். அப்படியானால் முஃமின்கள் அல்லாஹ்வின் தீமைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறார்கள் என்பதுதான் இதன் பொருள்.

இந்த விளக்கத்தை ஸிஹ்ர் என்ற சூனியக் கலைக்கு பொருத்திப் பார்ப்போம்!

உதாரணத்திற்கு, ஒருவர் மற்றொருவருக்கு தீமையை நாடி ஜின்– ஷைத்தான்களுக்கு அல்லது வேறு கடவுள்களுக்கு அல்லது வேறு தீய சக்திகளுக்கு வழிபாடு செய்கிறார் எனில், அவரது நோக்கம் நிறைவேறுவது அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்து அமைகிறது. அதாவது அந்த நபரை அல்லாஹ் வழிகெடுக்க நாடியிருந்தால் அவரது செயலை அவருக்கு அழகாகக் (Q 2:212, 6:108,122,137) காண்பித்து, அவரது நோக்கத்தை நிறைவேற்றி வழிகெடுக்கிறான். வழக்கம்போல அப்பழி (Q 6:43, 8:48) ஷைத்தானுக்கு வழங்கப்படும். எனவே இஸ்லாமிய நம்பிக்கைகளின் அடிப்படையிலும், அண்ணன் பீஜேவின் விளங்களின் அடிப்படையிலும் ஸிஹ்ர்-பில்லி-சூனியத்திற்கு ஆற்றலில்லை என்று கூற முடியாது! ஏனெனில் ஸிஹ்ரின் வெற்றி தோல்வி அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்து அமைகிறது. மேலும் இஸ்லாமிய நம்பிக்கைப்படி, அல்லாஹ்வின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்குமென்று வரையறுப்பதற்கு எவருக்கும் அனுமதியில்லை. இந்த அடிப்படையில் நோக்கினால் ஸிஹ்ர்-பில்லி-சூனியம் உண்மைதான் என்பதையும், இவ்வாறு நம்பிக்கை கொள்வது இணைவைத்தல் அல்ல என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்!

நாம் மீண்டும் இத்தொடரின் முதல் பகுதியின் வாசித்த முஹம்மதிற்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும்  ஹதீஸிற்குச் செல்வோம். (ஏற்கெனவே படித்ததுதான் மீண்டும் படிக்க வேண்டுமா? என்று சோம்பலாக உணர்பவர்கள் கொட்டை எழுத்துக்களில் அடிக்கோடிட்ட பகுதியை மட்டும் படித்துக் கொள்ளவும்)

புகாரி ஹதீஸ் 5765
ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.
(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், 'இந்த மனிதரின் நிலையென்ன?' என்று கேட்டார். மற்றவர், 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார்' என்று பதிலளித்தார். அவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது?)' என்று கேட்க, மற்றவர், 'சீப்பிலும் சிக்கு முடியிலும்' என்று பதிலளித்தார். அவர் 'எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?' என்று கேட்க, மற்றவர், 'ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் 'தர்வான்' குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி(ஸல்) அவர்கள், 'இதுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன' என்று சொல்லிவிட்டுப் பிறகு 'அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது' என்றும் கூறினார்கள்.
நான், 'தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக காட்டக் கூடாது?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (இந்த சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்துவிட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை' என்று சொல்லிவிட்டார்கள்.

நாம் இதுவரை கண்ட விளக்கங்களின் படி, அல்லாஹ், ஷைத்தானின் பெயரில் நபிமார்கள் உட்பட அனைத்து மனிதர்களுக்கும் நோயையும், மறதியையும் இன்னும் இதர தீமைகளை ஏற்படுகிறான். முஹம்மதிற்கு அவ்வாறு மறதி ஏற்படுத்த முடியாது என்பதற்கு எவ்வித ஆதரமுமில்லை. மாறாக அவருக்கு மறதி இருந்ததாகக் கூறும் ஹதீஸ்கள்தான் இருக்கிறது.

அல்லாஹ் ஒருவனை வழிகெடுக்க நாடினால், அவனது செயலை ஷைத்தானின் பெயரால் அழகாக்கிக் காண்பிக்கிறான் என்பதை கவனித்தோம். இந்த ஹதீஸில் கூறப்படும் 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்ற  நயவஞ்சகருக்கு (அதென்ன நயவஞ்சக’ருக்கு’? எங்கள் கண்ணுமணி பொன்னுமணி அல்லாஹ்வின் ரஸூல் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லத்திற்கு சூனியம் வைத்தவனுக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு? நயவஞ்சகனுக்குன்னு திருத்தி படிங்க!) சூனியம் என்ற அவனது செயலை எவ்வாறு அழகாக்கிக் காண்பிப்பது? சரியாகச் சொன்னீர்கள்!  லபீத் இப்னு அஃஸம் என்ற யூதனின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம், அதாவது முஹம்மதிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் அவனது செயலை அழகாக்கிக் காண்பித்து அவனை இங்கு அல்லாஹ் வழிதவறச் செய்திருக்கிறான். முஹம்மதிற்கு சூனியம் பலித்ததும் இவ்வாறுதான்!

ஸிஹ்ர் பற்றி த.த.ஜ தரப்பில் இரண்டாவதாகச் சொல்வது என்ன?

ஸிஹ்ர் உண்மையில்லை. அதற்கு எந்த ஆற்றலுமில்லை பலிக்காது. ஸிஹ்ர் பொய்யென்பதற்கு அண்ணன் பீஜே அவர்களே வாழும் ஆதாரமாக இருக்கிறார்.

ஸிஹ்ர் உண்மையில்லையெனில் பிராத்தனைகளும் உண்மையில்லை!  எப்படி?

பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்.
….சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்றால் அதைச் செய்து காட்டு! நிரூபித்துக் காட்டு என்று நாம் கேட்கிறோம், யாருமே நிரூபித்துக் காட்ட முன்வராவிட்டால் சூனியத்துக்கு ஒரு ஆற்றலும் இல்லை என்று புரிந்து கொள்வது தான் திருக்குர்ஆன் அடிப்படையில் எடுக்க வேண்டிய சரியான முடிவாகும்…

ஸிஹ்ர்-பில்லி சூனியம் என்பதும் ஒரு வகைப் பிரார்த்தனைதான். சூனியக்காரர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்கள் என்பது அவர்களது நம்பிக்கைகளின் அடிப்படையில் இருக்கும். எனவே அண்ணன் பீஜே கூறும் இதே தர்க்கத்தை அல்லாஹ்வை வணங்கிக் கேட்கப்படும் பிரார்த்தனைகளுக்கும் பொருத்துவதுதான் முறை!

உடல் ஊனமுற்ற ஒருவர், விபத்தினால் ஒரு காலை இழந்தவர் அல்லது பிறவியிலேயே ஒருகால் ஊனமுற்றவர் என்று வைத்துக் கொள்வோம், அவர் வருடம் 365 நாட்களும், காலை முதல் இரவுவரை தவறாது அல்லாஹ்வைத் தொழுது, அழுது, புலம்பி துஆ செய்தால் அவரது குறைபாடு நீங்கி, சராசரி மனிதரைப் போல மாற முடியுமா?

தனது குறைபாடு சரியாவதற்கான மருத்துவத்தையோ அல்லது செயல்படுவதற்கான உபகரணங்களை பொருத்திக் கொள்வதால் மட்டுமே அவரால் நடமாடமுடியும்! கடவுளைப் பிரார்த்தனை செய்வதால் ஒன்றும் நிகழப் போவதில்லை! பகுத்தறிவினால் இவர்கள் சூனியத்தை நிராகரித்தால் அதே பகுத்தறிவினால் அல்லாஹ்வையும் நிராகரிக்க வேண்டியிருக்கும்!

முஃமின்களால் இதை ஏற்க முடியாது. பிரார்த்தனைகள் உண்மை அதனால் காரியங்கள் நிறைவேறுகின்றன என்று கூறலாம். சரி… அகோரி மணிகண்டனுடன் ஸிஹ்ர் போட்டியில் வெற்றி வாகை சூடிய அண்ணன் பீஜே, பிரார்த்தனை போட்டிக்குத் தயாரா?   நாம் ஒரு பிரார்த்தனை போட்டி வைப்போம்!  இஸ்லாமை விமர்சித்து கணிணியில் தட்டச்சு செய்யும்  தஜ்ஜாலின் விரல்கள் அழுகி, உதிர்ந்து போகட்டும் என்று துஆச் செய்து பாருங்களேன். தேவை எனில் உலகிலுள்ள அனைத்து நம்பிக்கையாளர்களை இணைத்துக் கொள்ளுங்கள். என்னதான் நிகழ்கிறென்று பார்த்துவிடுவோம்!

ஸிஹ்ரும் உண்மையில்லை எனில் ஷிர்க்கும் உண்மையில்லை!

ஒருவர் தையாவதைக் ஒன்றை கொண்டு அல்லாஹ்விற்கு இணைகற்பித்துவிட்டால் அது அல்லாஹ்விற்கு இணை ஆகிவிடுமா? அல்லாஹ் எப்படி இருப்பான் என்பதே தெரியாது எனும் பொழுது அவனுக்கு எப்படி இணையாக இன்னொன்றை கொண்டுவர முடியும்?

உதாரணத்திற்கு ஒருவர், அல்லாஹ் அல்லாத வேறு கடவுளர்கள் இருக்கிறது  என்று கூறுவதாகக் கொள்வோம்; அப்பொழுது அங்கே பல கடவுள்கள் உருவாகிவிடுமா? அல்லது அவர் அவ்வாறு கூறுவதால் அல்லாஹ்வின் ஆற்றலில் ஏதாவது குறைவு ஏற்படுமா?  

இஸ்லாமிய நம்பிக்கைப்படி அல்லாஹ்விற்கு இணையாக எதுவும் இருக்கவும் முடியாது, யார் என்ன செய்தாலும் அல்லாஹ்வின் ஆற்றலில் எந்தக் குறைவும் ஏற்பாடாது. ஏனெனில் இணைவைப்பவரது கூற்று ஒருபொழுதும் உண்மையில்லை! என்பதுதான் சூரத்துல் இஃக்லாஸ் நமக்குச் சொல்வது. எனவே என்னதான் இணைகற்பித்தாலும் எந்த ஒன்றும் அல்லாஹ்விற்கு இணை ஆக முடியாது!

எனவே, ஸிஹ்ர் எப்படி உண்மையில்லையோ அதைப் போல ஷிர்க் என்ற இணைவைத்தலிலும் உண்மையில்லை!

உண்மையில்லாத இந்த இரண்டு விஷயங்களுமே பெரும் பாவங்கள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்தது ஏன்?

சரி…  அப்படி ஒரே ஒரு கடவுள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில் அப்படியென்ன பிடிவாதம்?

குர்ஆன் 21:22
அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.

குர்ஆன் 23:91
அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.

இரண்டு கடவுள்கள் இருந்தால், ஒருவருக்கொருவர் சண்டையிட்டு இருவரும் சீரந்திருப்பார்களாம். அவரவர் படைப்புகளை எடுத்துக் கொண்டு, நடுவில் ஒரு கோடு வரைந்து இருவம் தனிக்குடித்தனம் போயிருப்பார்கள். ஒருவரையொரு மிகைத்துக் கொண்டிருப்பார்கள். என்னே... ஒரு லாஜிக்! மெய்சிலிர்க்கிறது!  அல்லாஹ் என்ற கடவுளை இதைவிட எப்படி கேலி செய்வது? இந்த விஷயத்தில் நான் குர்ஆனை ஏற்றுக் கொள்கிறேன்!

ஒரு இனக்குழுவிற்கு இரண்டு தலைவர் இருந்தால் என்னவாகும்? அவர்களுக்கிடையே அதிகாரரப் போட்டி ஏற்படும்; அவர்கள் தங்களது அதிகாரத்தில் குறைவு ஏற்பட்டுவிட்டதாக கருதலாம்; மீண்டும் ஒருவருக்கொருவர் மிகைக்க முற்படுவார்கள்; தீராத மோதலில் அந்த இனக்குழுவே சீரழிந்து போகும். இவற்றை கண்டு வளர்ந்த ஒரு இனக்குழு சமூகத்தில் வாழ்ந்த மனிதரால் இதற்குமேல் எப்படி சிந்திக்க முடியும்? 

இந்துமத கடவுளர்களின் கைகளில் வாளும், வில்லும், அம்பும் இன்னும் பழங்கால ஆயுதங்கள் மட்டுமே இருப்பது ஏன்? ஆயுதங்கள் இல்லாமல் கடவுளர்களால் இருக்க முடியாதா? இனக்குழு சமுதாயத்தில் வாழ்ந்தவர்கள் தங்களது அனுபவங்களை கடவுளர்களுக்கும் பொருத்தியுள்ளனர் என்பதைத் தவிர வேறில்லை!

அன்றைய இனக்குழு சமுதாயத்தை விட்டுவிடுவோம் இன்றைய மக்களாட்சி முறையையே எடுத்துக் கொள்வோம், ஒரு கிராமப் பஞ்சாயத்திற்கு இரண்டு தலைவர்கள் இருந்தால் என்னவாகும்? ஊடகத்திற்கு பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமே இருக்காது.  இதைத்தான் மேற்கண்ட வசனமும் சொல்கிறது. அண்ணன் பீஜே பாணியில் சொல்ல வேண்டுமென்றால், முரண்பாடு என்று எதை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்களோ அதுதான் நிகழ்கால அரசியலை உரைப்பதாக இருக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரால் நிகழ்கால அரசியலை எப்படிச் சொல்ல முடியும்? நிகழ்கால அரசியலை 1400 ஆண்டுகளுக்கு தெள்ளத் தெளிவாகக்கூறி இறைவேதமென்பதை நிரூபிக்கிறது. (எத்தனை நாளைக்கு அறிவியலையே கூறி, புல்லரித்துக் கொண்டிருப்பது அதனால்தான் ஒரு மாற்றத்திற்காக அரசியலைக் கூறியிருக்கிறேன்! )

ஆட்சியில் பங்கு கேட்பவரை ஒருபொழுது அல்லாஹ்வும், தூதர் முஹம்மதுவும் விரும்பியதில்லை. இனக்குழு சமுகத்தில் வாழ்ந்த மனிதரால் அவ்வளவுதான் சிந்திக்க முடியும்!

முஸ்லீம் 3774
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒருவர் பின் ஒருவராக) இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) அளிக்கப்பட்டால், அவர்களில் இறுதியானவரைக் கொன்றுவிடுங்கள்.

ஒரு இயக்கத்திற்குள் இரண்டாவது தலைமை உருவானால் என்னவாகும் என்பதை அண்ணன் பீஜேவைவிட நன்கு அறிந்தவர் எவரும் இருக்க முடியாது. அது அவர்களது பிரச்சினை நாம் தலையிட தேவையில்லை.

சரி..!

தவ்ஹீது- ஏகத்துவம் என்றால் என்ன?
ஒருமைப்படுத்துதல். வணக்கத்திற்குத் தகுதியுடையது அல்லாஹுவைத்தவிர வேறெதுவும் இல்லை என்று நம்பிக்கை கொள்வது.

கடவுள் ஒருவனே என்றும் அதற்கு ஏதோ ஒரு பெயரையும் வைத்துக் கொண்டு அவனுக்கு இணைகற்பிக்காமலிருந்தால் அல்லாஹ்வின் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியுமா? என்றால் நிச்சயமாக முடியாது.  

ஏன்?

அல்லாஹ்வின் தூதராக, முஹம்மதை முழுமனதுடன் ஒப்புக் கொள்ளாமல், என்னதான் ஏகத்துவவாதியாக, இஃக்லாஸ்வாதியாக இருந்தும் பயனில்லை. இஸ்லாம் கூறும் ஏகத்துவக் கொள்கை இதுதான்! முஹம்மதை ஒப்புக் கொள்ளாமல் இஸ்லாம் கூறும் ஏகத்துவம் ஒருபொழுது முழுமையடையாது!

குர்ஆன் 24:52
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

குர்ஆன் 4:80
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.

அல்லாஹ்விடமிருந்து தூதர் முஹம்மதைப் பிரித்துப் பார்க்கக் கூடாது! முடியாது!  ஏகத்துவத்தில் முன்னோடிகளாக இருக்கும், யூதர்களும் பாகன் அரபிகளும் முஹம்மதைத் தூதராக ஏற்கவில்லை, அவருக்குத் தேவையானதைக் கொடுக்க மறுத்ததுதான் அங்கு நிகழ்ந்த இரத்தக்களறிகளுக்குக் அடிப்படைக் காரணம்.  ஷிர்க்-இணைகற்பித்தல் பற்றி பேசும் முல்லாக்களின் கண்களில் மேற்கண்ட குர்ஆன் வசனங்களில் அல்லாஹ்விற்கு இணையாக முஹம்மது இருப்பது தெரியவில்லையா?

மேற்கண்ட குர்ஆன் வசனத்தின் பொருள், அல்லாஹ்வை தனது அங்கிப்பைக்குள் வைத்திருக்கும் முஹம்மதுவிற்கு அடிபணியாமல் அல்லாஹ்விற்கு மட்டும் நீங்கள் அடிமையாக இருப்பதால் எவ்வித பயனுமில்லை என்பதே!. ’ஷிர்க்’ பெரும் பாவமாகக் கருதப்பட்டதும் இதன் அடிப்படையில்தான்.  புரியவில்லையா?

அல்லாஹ்விற்கு இணையாக இன்னொரு கடவுள் இருந்து, அந்தக் கடவுளும் ஒரு தூதரை அனுப்பியிருப்பதாக எவனாவது கிளம்பிவிட்டால் முஹம்மதின் முக்கியத்துவம் என்னவாகும் என்பதை சிந்திக்க மாட்டீர்களா? ஷிர்க்–இணைவைத்தல் பெரும் பாவமானது இப்படித்தான்.

இன்னும் நாம், இப்பதிவின் அடிப்படை கேள்விக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது!

ஸிஹ்ர் எனப்படும் பில்லி-சூனியக் கலை இருக்கிறது, நினைத்ததையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும் சில பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும் என்றிருந்த த.த.ஜ-வின் இந்த தலைகீழ் மாற்றத்திற்கு  மாற்றத்திற்கு காரணம் என்ன?

பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்.
…சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்றால் அதைச் செய்து காட்டு! நிரூபித்துக் காட்டு என்று நாம் கேட்கிறோம். யாருமே நிரூபித்துக் காட்ட முன்வராவிட்டால் சூனியத்துக்கு ஒரு ஆற்றலும் இல்லை என்று புரிந்து கொள்வது தான் திருக்குர்ஆன் அடிப்படையில் எடுக்க வேண்டிய சரியான முடிவாகும்…

முஸ்லிம் பெயர்தாங்கிகளும் சூனியக்காரர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆற்றல் இருந்தால் உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லிம்களை அழித்து ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களுக்கு சூனியம் வைத்து சமுதாயத்துக்கு நல்லது செய்திருக்கலாமே?

முஸ்லிம் அல்லாதவர்களிலும் சூனியக்காரர்கள் உள்ளனர் இவர்களை நம் நாட்டு அரசியல்வாதிகள் பயன்படுத்தி யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ அந்தத் தலைவரை ஊமையாக ஆக்கினால் போதுமே? அப்படி ஏதும் நடக்கக் காணோம்.

ஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பது உண்மையானால் மண்ணில் புதைந்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கதைக் கொண்டு வருமாறு ஜின்களுக்குக் கட்டளையிடலாமே?

அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பயங்கரவாத நாடுகளுக்கு நாலு ஜின்களை அனுப்பினால் அந்த நாடுகளை உண்டு இல்லை என்று பண்ணிவிடலாமே? ஜின்களுக்கு அவ்வளவு ஆற்றல் உள்ளதே?

இதுபோன்ற பகுத்தறிவுக் கேள்விகள்தான் அண்ணன் பீஜேவை குர்ஆனும் ஹதீஸ்களும் ஒப்புக்கொள்ளும் ஸிஹ்ர் என்ற பில்லி சூனியத்தை மறுக்கச் செய்திருக்கிறது. என்னதான் இஸ்லாமிய நம்பிக்கையென்றாலும், தூதர் முஹம்மதுவிற்கு சூனியம் பாதித்தது, சூனியத்தால் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை உண்டாக்க முடியும், நோய் உண்டாக்க முடியும் என்றெல்லாம் இன்றைய அறிவார்ந்த சமூகத்தின் முன்னே எப்படி சொல்வது?  என்று தயங்குகின்றனர்.

அதுமட்டுமல்ல பதிலுக்கு நம்மைப் போன்றவர்கள், குர்ஆனும் ஹதீஸ்களும் ஸிஹ்ர் உண்மை என்கிறது, முஸ்லீம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கு பில்லி-சூனியம் செய்ய வேண்டியதுதானே? என்று கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் இந்த ஸிஹ்ர் மறுப்பு முல்லாக்களைப் பிடித்து உலுக்கிக்  கொண்டிருக்கிறது.

இந்தத் தலைவலிகளிலிருந்து தப்பிக்க அவர்களுக்கிருக்கும் ஒரேவழி ஸிஹ்ரைப் பொய்யென அறிவிப்பதுதான்! ஆனால் அதை முஃமின்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். குர்ஆன் வசனத்தை நிராகரிக்க முடியாது அதனால் ஸிஹ்ர் என்றால் மேஜிக், தந்திரவித்தை, ஜாலவித்தை என்று பொருள் கூறி அல்லாஹ்வை மோடி மஸ்தானாக மாற்றிவிட்டார்; இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் நிரூபிப்பதாக நினைத்துக் கொண்டு ஸிஹ்ர், ஷிர்க், மூஸா, சூனியக்காரர்கள், ஸாமிரி, தஜ்ஜால் (இது வேற… நான் அல்ல!)  என்று எங்கெங்கோ சுற்றி, எதையெதையோ மறுத்து, முஃமினகள் காதுகளில் பூந்தோட்டங்களையும் அமைத்திருக்கிறார்.

பகுத்தறிவின் அடிப்படையில் அவரது முடிவை வரவேற்கும் அதேவேளையில், குருட்டு நம்பிக்கைகளில் நின்று கொண்டு பகுத்தறிவுவாதம் பேசுவதை நினைத்தால் நகைக்காமல் இருக்க முடியவில்லை. அவர் முழுமையாக பகுத்தறிவின் பக்கம் விரைவில் வருவார். இன்ஷா அல்லாஹ்!(?)

அண்ணன் பீஜே அவர்கள் நிகழ்த்திய சூனியப் போட்டி, முன்வைத்திருக்கும் பகுத்தறிவுக் கேள்விகள் அனைத்துமே ”ஜஸ்ஸாஸ் என்று அறியப்பட்ட அபூபக்ர்” என்ற அறிஞர் முன்வைத்த கேள்விகளின் அடிப்படையில் உருவானவைகள்!  அண்ணன் பீஜே கொடுத்த விளக்கத்திலிருந்து…

சூனியக்காரர்கள் எதைச் செய்ய முடியும் என்று சாதிக்கிறார்களோ அது உண்மையாக இருந்தால், மந்திரத்தின் மூலம் நன்மை செய்யவும், தீமை செய்யவும் முடியும் என்பதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், வானத்தில் பறக்க வைப்போம், மறைவானதை அறிவோம். தொலைவான ஊர்களின் செய்திகளையும் அறிவோம் என்று அவர்கள் கூறுவதில் உண்மையாளர்களாக இருந்தால் ஆட்சிகளை அகற்றவும், புதையல்களை வெளிக்கொண்டு வரவும், தங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் மன்னர்களைக் கொல்லவும், மற்றவர்களால் தங்களுக்கு எந்தத் தீங்கும் வராமலும் மக்களிடம் கையேந்தாமலும் இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லையே? மாறாக மனிதர்களில் இவர்கள் தான் மோசமான நிலையில் உள்ளனர். அதிகம் பேராசை கொண்டவர்களாகவும் மக்கள் பணத்தை ஏமாற்றி பறிப்பவர்களாகவும் பக்கீர்களாகவும் மக்களிடம் குழைந்து பேசுபவர்களாகவும் உள்ளனர்.


சரி..! மேற்கண்ட சவால்களை பிரார்த்தனையால் நிகழ்த்த முடியுமா? நிச்சயமாக முடியாது! அப்படி பிரார்த்தனைகளால் முடியுமென்றிருந்தால், உலக இஸ்லாமியர்கள் கதறிக் கதறிக் கேட்ட துஆக்களினால் அமெரிக்காவும், இஸ்ரேலும் என்றோ இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருக்கும்! மீண்டும் சொல்கிறேன், ஸிஹ்ர் பொய்யென்றால் பிரார்த்தனைகளும் பொய்தான்!

இதுமட்டுமல்ல இன்னும் ஆயிரமாயிரம் விளக்கங்களை இது போல கொண்டுவர முடியும். ஆனால் இவைகள் பகுத்தறிவின் விளைவினால் ஏற்பட்ட தெளிவே தவிர, ஒருபொழுதும் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் எழுதப்பட்ட விளக்கங்கள் அல்ல!

இவர்கள் தங்களது நாகரீக சிந்தனைகளுக்கேற்ப, குர்ஆன் மற்றும் முஹம்மதின் செயல் முறை விளக்கமான ஹதீஸ்களின் வார்த்தைகளையும், வாக்கியங்களையும் தங்களது வியக்கியான தொழிற்சாலைகளுக்குள் நுழைத்து, அவற்றை அடித்து, உடைத்து, நொருக்கி, உருக்கி, தட்டி, வளைத்து, நெளித்து, நிமிர்த்தி புதிய பொருளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். குர்ஆன் தெளிவான(Q5:15, 22:16, 45:20), விளக்கமான(Q3:118, 39:27), நன்கு விவரிக்கப்பட்ட(Q17:89, 18:54) புத்தகம் என்று அல்லாஹ் கதறிக் கொண்டிருப்பதை முல்லாக்கள் சிறிதேனும் நினைவில் கொள்ள வேண்டும்.  அல்லாஹ்வை நினைத்தால் எனக்கே பாவமாக இருக்கிறது!

இவர்கள் ஆண்டாண்டு காலத்திற்கு விவாதங்கள் செய்து கொண்டிருப்பதற்குக் காரணம், ”கண்ணேறு என்பது உண்மையே!”  அல்லது ”பறவை சகுணம் இல்லை!” என்றெல்லாம் ஹதீஸ்கள் சொல்வது போல ”ஸிஹ்ர் என்பது பொய்”  “ஸிஹ்ர் உண்மையில்லை” அல்லது ”முஃமின்கள் ஸிஹ்ரை நம்பகூடாது” என்று குர்ஆனில் எங்கும் கூறப்படவேயில்லை. மாறாக ஸிஹ்ர் பலித்ததாக கூறும் செய்திகளை பத்திபத்தியாக விவரிக்கிறது.

குர்ஆனும், ஹதீஸ்களும் அன்றய, அரேபியப் பகுதி மக்களின் நம்பிக்கைகளை மட்டுமே பிரதிபளிப்பவைகள். நவீன காலத்து அறிவின் வளர்ச்சிகளை அதில் எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. ஆனால் மதபுரோகிதத் தொழிலில் வயிறு வளர்க்கும் கூட்டத்தினரால் இதை ஏற்க முடியாது. அதனால்தான் விளக்கங்கள், விவாதங்களின் மூலம் ’இல்லாத’ கருத்துக்களை ’இருப்பதாக’ நிரூபிக்க முயற்சிக்கின்றனர்.

நாம் என்ன கூறினாலும் அண்ணனின் அல்லக் கைகள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அண்ணன் பீஜேவின் வாதங்களை முறியடிக்க எவரும் இல்லை என்று தாடியை தடவுவார்கள்(அவர்களது தாடியைத்தான்) அவர்களுக்காக, அண்ணன் பீஜே முத்தாய்ப்பாக வைத்து தனது வாதத்தை முடிக்கும் ஆதாரத்தைப் பார்ப்போம்.

ஜஸ்ஸாஸ் என்று அறியப்பட்ட அபூபக்ர் அவர்கள் வலிமையாக சூனியத்தை மறுத்திருக்கிறார்.

அவர் கூறுவதைக் கேளுங்கள்.

أحكام القرآن للجصاص ط العلمية (1/ 58) …

என்று ஒரு விளக்கத்தை முன்வைத்து மறுத்திருக்கிறார். ஆனால் அபூபக்ர் ஜஸ்ஸாஸ்  என்பவர், முஃதஸிலா என்ற நபிமொழிகளை மறுத்து புதுக்குழப்பத்தை ஏற்படுத்தி இஸ்லாமிய சமுதாயத்தை விட்டு தனியே விலகிச் சென்ற கூட்டத்தை சார்ந்தவர் என்றும் இவரை ஆதரிப்பதன் மூலம் அண்ணன் பீஜேவும் முஃதஸிலா கூட்டத்தின் இணைந்துவிட்டார் என்று எதிரணி குற்றம் சாட்டுகிறது. அண்ணன் ஷிர்க்கை வைத்து மிரட்டினால் இவர்கள் முஃதஸிலா என்று பதிலுக்கு மிரட்டுகிறார்கள்.

உண்மையிலேயே அண்ணன் பீஜே அறிவுடன்தான் வாதிடுகிறாரா என்பது புரியவில்லை. தனது வாதத்திற்கு வலு சேர்க்க வேண்டுமென்பதற்காக படிக்காமலேயே ’ஜஸ்ஸாஸ் அபூபக்ரின்’ கருத்தை முன் வைக்கிறார்.

أحكام القرآن للجصاص ط العلمية (1/ 58) …
யூதப் பெண் சீப்பு தலைமுடி பேரீச்சம் பாளை ஆகியவற்றில் சூனியம் செய்து கிணற்றில் வைத்தாள். ஜிப்ரீல் மூலம் இது நபியவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பின் கிணற்றில் இருந்து அதை அப்புறப்படுத்தியதால் சூனியம் விலகியது என்று கேவலமான நம்பிக்கையும் சிலரிடம் உள்ளது…

ஸஹீஹ் ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன என்பதைக்கூட வாசிக்காமல் இந்த அறிஞர் விமர்சித்திருக்கிறார். புகாரி, முஸ்லீம் போன்ற ஸஹீஹ் ஹதீஸ்கள் முஹம்மதிற்கு சூனியம் வைத்தது ஒரு யூத ஆண் என்கிறது.  இவர் யூதப் பெண் என்கிறார். பாவம் நம்ம ”ஜஸ்ஸாஸ் அபூபக்ர்” ஏதோ தவறான ஹதீஸை ஆய்விற்கு எடுத்திருக்கிறார். முஹம்மதிற்கு விஷம் வைத்ததாகக் குற்றம் சாட்டப்படும் யூதப் பெண்ணை இங்கு கொண்டுவந்து இணைத்திருப்பாரோ? ஒருவேளை ”ஜஸ்ஸாஸ் அபூபக்ர்”  ’மண்டபத்தில்’ எவரேனும் எழுதிக் கொடுத்ததை வாசித்து பொற்காசுகளைப் பெறுவதற்கு முயற்சி செய்திருக்கலாமென்று நினைக்கிறேன். அடிப்படை செய்தியே தவறாக இருக்கிறது. இதை ஒரு ஆதாரமாக முன்வைத்த அண்ணன் பீஜேவின் துணிச்சலை நினைத்தால் என் உடலெங்கும் புல்லரிக்கிறது.

அண்ணன் பீஜேவும் அவரது ததஜவினரும்
நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் அனைத்து ஹதீஸ்களூமே மட்டும் இட்டுக் கட்டப்பட்டவை என்பது தான் ந்மது நிலை.

என்ற அர்த்தமில்லாத பிடிவாதத்தைக் கைவிட்டுவிட்டு, ஸிஹ்ர் பற்றிய செய்திகளை குர்ஆன் ஹதீஸிற்கு முரண் இல்லாதவாறு, அதாவது,   ”என்ன செய்வது? முஸ்லீமாகப் பிறந்துவிட்டோம்! வேறு வழியில்லை! பகுத்தறிவைத் தூக்கித் தொலைவில் எறிந்துவிட்டு எல்லவற்றையும் நம்பித் தொலைக்கிறோம்” என்று புரிந்து கொண்டால் அவர்களுக்கு எந்த குழப்பமும் தோன்றாது.

இவர்களை நாம் ஏன் விமர்சிக்கின்றோம்?
ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகரீகவளர்ச்சியற்ற ஒரு சமுதாயத்தின் கருத்துக்களின் மீது குருட்டு நம்பிக்கை கொண்டு, தொலைந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தின் மீது கொண்ட பரிதாபமே எங்களை எழுத வைக்கிறது. முல்லாக்களின் அர்த்தமற்ற மிரட்டல்கள், புரட்டல்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற மனிதாபிமான உணர்வுகளே அவர்களை எதிர்த்து விமர்சிக்கச் செய்கிறது.

முல்லாக்களின் மதப்புரோகிதத் தொழிலுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது குர்ஆனும் ஹதீஸ்களும்தான்.  குர்ஆன் ஹதீஸ்களுக்கு அடிப்படை தூதர் முஹம்மது.  இவைகளிலுள்ள பதங்களுக்கு  இல்லாத பொருளையும்,  அதன் வாக்கியங்களில் இல்லாத அறிவியலையும் நுழைத்து, இந்த வார்த்தைக்கு அந்தப் பொருள் அந்த வார்த்தைக்கு இந்தப் பொருள் என்று குழப்பிவிட்டால், முஃமின்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் குர்ஆனுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பார்கள்; அவர்களால் குர்ஆனையும் ஹதீஸ்களையும் விட்டு எந்தக் காலத்திலும் வெளியேறவும் முடியாது.   முல்லாக்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான். இதை நாம் வெளிப்படுத்தி விமர்சித்தால், அவர்களது மத உணர்வு புண்படுகிறதாம்! விமர்சிக்கக் கூடாதாம்!

இஸ்லாம் மட்டுமே உயர்ந்ததென்று மேடைகளில் முழங்குவதற்கும்,  கற்பனைக் கதைகள்கூறி மதத்தை விற்பனை செய்வதற்கும் அவர்களுக்கு உரிமையிருக்கும்பொழுது அதை மறுக்கவும், விமர்சிக்கும் உரிமை நமக்கு இருக்கக் கூடாதா?

இஸ்லாமியக் கொள்கைகள் விமர்சனத்திற்குள்ளாகும் பொழுது அதன் நிறுவனர் தூதர் முஹம்மது பாதிப்பிற்குள்ளாவதை ஒருபொழுதும் தவிர்க்க முடியாது! இஸ்லாத்திலிருந்து தூதர் முஹம்மதுவைப் பிரித்தெடுக்க முடியாது! ஒருவேளை முடியுமென்றால் அது எப்படி என்பதை விளக்காமல், 150 கோடி மக்களின் பெரும்தலைவரை இழிவுபடுத்திவிட்டாய் என்று ஒப்பாரி வைப்பதில் பொருளில்லை!

எங்கள் மனம் புண்பட்டுவிட்டது, புரையோடிவிட்டது என்று நீங்கள் என்னதான் கூக்குரலிடலும், மக்களை அறியாமையிலிருந்து மீட்டெடுக்கும் இம்முயற்சியிலிருந்து நாங்கள் ஒருபொழுதும் பின்வாங்கப் போவதில்லை!


தஜ்ஜால்

Facebook Comments

16 கருத்துரைகள்:

Javith Naseem said...

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

குர்ஆன் 4:80
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.

அல்லாஹ்விடமிருந்து தூதர் முஹம்மதைப் பிரித்துப் பார்க்கக் கூடாது! முடியாது! ஏகத்துவத்தில் முன்னோடிகளாக இருக்கும், யூதர்களும் பாகன் அரபிகளும் முஹம்மதைத் தூதராக ஏற்கவில்லை, அவருக்குத் தேவையானதைக் கொடுக்க மறுத்ததுதான் அங்கு நிகழ்ந்த இரத்தக்களறிகளுக்குக் அடிப்படைக் காரணம். ஷிர்க்-இணைகற்பித்தல் பற்றி பேசும் முல்லாக்களின் கண்களில் மேற்கண்ட குர்ஆன் வசனங்களில் அல்லாஹ்விற்கு இணையாக முஹம்மது இருப்பது தெரியவில்லையா?


sema point ithu naal varai ipdi onnu enaku thonave ila. Muhammed than Allah vuku Inai vaikum muthal Ethiri

sadiqsamad said...

எங்கள் மனம் புண்பட்டுவிட்டது, புரையோடிவிட்டது என்று நீங்கள் என்னதான் கூக்குரலிடலும், மக்களை அறியாமையிலிருந்து மீட்டெடுக்கும் இம்முயற்சியிலிருந்து நாங்கள் ஒருபொழுதும் பின்வாங்கப் போவதில்லை!//.

ஆம் ஒரு போதும் பின் வாங்கப்போவதில்லை இனீருக்கிறது புரோகித மவ்லவிகளுக்கு மர்ஹூம் மணியோசை

அருமை தஜ்ஜால்

sadiqsamad said...

எங்கள் மனம் புண்பட்டுவிட்டது, புரையோடிவிட்டது என்று நீங்கள் என்னதான் கூக்குரலிடலும், மக்களை அறியாமையிலிருந்து மீட்டெடுக்கும் இம்முயற்சியிலிருந்து நாங்கள் ஒருபொழுதும் பின்வாங்கப் போவதில்லை!//.

ஆம் ஒரு போதும் பின் வாங்கப்போவதில்லை இனீருக்கிறது புரோகித மவ்லவிகளுக்கு மர்ஹூம் மணியோசை

அருமை தஜ்ஜால்

Ant said...

இதுவரை வெளியான கட்டுரைகளில் சிறப்பானது எது என்று (சிறந்ததிலேயே சிறந்தது என்று கூறலாம்) தேர்ந்தெடுத்தால் இந்த கட்டுரையே தேர்வு பெறும். அறிவு உள்ள முஃமீன்கள் நிச்சயமாக சிந்திப்பார்கள் ஆனால் பதில் இல்லாததால் மௌனமாக இருந்து விடுவர் எனவே முஃமீன்களின் பின்னூட்டம் இல்லையென்றால் பதில் இல்லை என்று பொருள். பாராட்டுகள், பல...!

Ant said...

//அகோரி மணிகண்டனுடன் ஸிஹ்ர் போட்டியில் வெற்றி வாகை சூடிய அண்ணன் பீஜே, பிரார்த்தனை போட்டிக்குத் தயாரா? நாம் ஒரு பிரார்த்தனை போட்டி வைப்போம்! ... துஆச் செய்து பாருங்களேன். // இந்த நிகழவுக்கு பின் அண்ணன் ஒரு உயிர்கொல்லி நோய்க்கு சிகிக்சை பெற்று உயிர்த்தெழுந்ததாக தகவல். அண்ணன் நலமுடனே இருக்கட்டும் அவர் தொடர்ந்து பகுத்தறிவு கேள்விகள் கேட்கட்டும்.

Anonymous said...

நம் முன்னோர்கள் மதம் மற்றும் மதச்சடங்குகளுக்கு காரணம் ராகு என்ற தீய கிரகம் என்பதாகவும்
ஒரு நிகழ்வின் மூலம் அந்த ராகு என்ற கிரகம் உடலை இழந்ததாகவும் பாம்பின் உடலை
பெற்றதாகவும் கூறினார்கள். உடலை இழந்ததால் அந்த கிரகத்திற்கு இதயம் என்பது இல்லை வெறும்
தலை மட்டுமே அல்லது மூளை மட்டுமே
இது மதம் மதவாதிகளின் துணையோடு இதயமில்லா செயல்களை
செய்யும் என்பதை குறிப்பால் உணர்த்துவதாய் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் இது சரியானதாகத் தான்
தெரிகிறது. மதம் தான் வளரும் வரை நல்லதே செய்தது. இன்று ஒன்ரொடொன்று முட்டிக் கொள்ளும் அளவு
வளர்ந்துவிட்டதால் அதன் இதயமில்லா செயல்கள் அறங்கேற்றப் படுகின்றது.
குகையிலிருந்து வெளியில் வந்த மனிதன் துரதிஷ்ட வசமாக மதத்தில் மாட்டிக் கொண்டான் என்பதுதான்
உண்மை.
உண்மையில் மதம் என்பது நாம் நம்புவதைப் போல் இறைவனின் விருப்பம் என்றும் குறிப்பிட்ட மதத்தின்
கீழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் இறைவன் விரும்பியிருந்தால் அதை மிக
எழிதாகவே சாதித்திருப்பான் அதற்காக எந்த புனித நூலோ,அவதாரமோ,தூதுவரோ தேவையில்லை.
இன்றைய தொழில் நுட்பம் மனிதன் பேசுவது உலகம் முழுவதும் கேட்கும் அளவு வளர்ந்து விட்டது
எங்கோ நடக்கும் விளையாட்டு உலகம் முழுதும் தெரிகிறது.அப்படியிருக்க ஏதோ ஒரு மொழியில் சற்று
சத்தமாக எல்லோருக்கும் கேட்கும் வகையில் குறிப்பிட்ட மதம் என்னுடையது அதையே எல்லோரும்
பின்பற்றுங்கள் என்று இறைவன் சொன்னால் என்ன ஆகும் சிந்தித்துப் பாருங்கள்..அல்லது
எப்படி ஒரு உயிரினம் பிறந்தவுடனே எதுவுமே தெரியாத அது பால் இருக்கும் இடமும் குடிக்கும்
விதமும் தெரிந்து கொள்கிறதோ அப்படி தெரியப்படுத்தி இருக்கலாம். மதங்கள் சொல்லும் பாவம், தவறு
என்பதற்காக மனிதன் மதங்கள் சொல்வதைப் போல் நரகம் செல்வானென்றால்
அத்தகைய செயல்களை செய்வதற்கான சந்தர்பத்தை உருவாக்கிய இறைவனும் அங்கு தான் இருப்பான்.
தவறு சரி என்பதை மதங்கள் எப்படி தீர்மானிக்கின்றன??
பிற மதங்கள் தோன்றுவதற்கு முன் தோன்றிய மதங்கள் தவறு என்பதை மனித இனத்தை மட்டும் கருத்தில் கொண்டும்
பிற மதங்கள் தோன்றிய பின் தோன்றிய மதங்கள் தவறு என்பதை தன்னுடைய மதத்தை சேர்ந்தவர்களை
மட்டும் கருத்தில் கொண்டும் பார்க்கிறது. உதாரணமாக ஒரு மதம் முன்னால் தோன்றியிருந்தால்
அதற்கு பிறகு வரும் மதம் முன்னால் தோன்றிய மதத்தின் கருத்துகளை தவறு என்றும் அதற்கு ஒரு படி மேலே போய்
அது பாவம் என்றும் சொல்லாமல் இல்லை.
நம்மை பொருத்தவரை பிறப்பைப் பொறுத்து ஏதோ ஒரு மதத்தில் சேரும் நாம் மதங்களுக்கு
இடையேயான போட்டியின் காரணமாக அவரவர் மதத்தின் கொள்கைகளை உண்மை என நம்புவதிலும்
பிறரை நம்ப வைப்பதிலுமே காலத்தை கடத்தி விடுகிறோம்.இறைவனைப் பற்றிய சிந்தனையில் மதம்
நம்மை ஒரு வட்டத்துக்குள் அடைக்கிறது. மதத்தை நாம் உண்மையென நம்புவதால் தான், இறைவனை நாம்
மதத்தைத்தாண்டி சிந்திக்கவும் இல்லை சந்திக்கவும் இல்லை....

மாங்காய் மடையன் said...

தஜ்ஜால் அவர்களுக்கு.. ஒரு வேண்டுகோள். எக்காரணத்தை கொண்டும் தாங்கள் தான் இந்த தளத்தை நிர்வாகம் செய்கிறீர்கள் என்று தங்களின் உற்றார் உறவினர்க்கு கூட சொலவேண்டம். இன்னும் சொல்லப்போனால் தங்களின் மனைவி மக்களிடம் கூட இந்த தளத்தை பற்றிய பேச்சுக்களை தவிருங்கள். தாங்கள் எழுதி அதை இந்த தளத்தில் upload செய்வதை கூட ரகசியமாக செயுங்கள்.
என் மனதில் இருப்பதை சொல்லிவிடுகிறேன். "லகிலாஹா இல்லல்ஹா முகமது ரசுலா" என்று சிறுபிள்ளை முதல் அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை போதிக்கபடுகிறது. பெற்ற தாய் தந்தையை விடவும் ஒரு சிறுவனுக்கு மிக முக்கிய இடத்தில இறைதூதர் இருக்கிறார். அதனால் அவர்கள் தங்கள் பெற்றோர்களை அல்ஹவிர்காகவும் மறுமை வாழ்கைக்காகவும் எதையும் செய்யும் ஒரு மனோநிலையை அடைந்துவிடுகிறார்கள்.
“Quran 29:8. தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்; என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”
மற்றொரு உதாரணம். Mus‘ab ibn 'Umair (முசாத் உமர்) கதை. பெற்ற தாயையே ஒரு கட்டத்தில் “முகமதுக்கு எதிராக எதாவது சொன்னால் கொன்றுவிடுவேன்” என்று கூரும் அளவிற்கு மூலை சலவை செய்யப்பட்டு கடைசியில் தன் தாயின் கண்முனால் uhud போரில் மாண்டுபோனான்.
https://en.wikipedia.org/wiki/Mus%E2%80%98ab_ibn_%27Umair
இதெலாம் உங்கள் மனதில் என்றுமே இருக்கட்டும். உங்களின் இந்த தளம் பிரசிதி பெற்று அதிகமான இஸ்லாமியர்கள் இந்த தளத்தில் வருகை தரும் காலத்தில் உங்களுக்கு எதிராக ரகசியமாக பாத்வா அறிவிக்கப்படலாம். அப்பொழுது மறுமையில் கிடைக்கும் கூலிகாகவும் அல்ஹவிர்க்காகவும் உங்களை காட்டிகொடுக்க தயங்கமாட்டார்கள். நீங்கள் செய்வது ஒருவித கோரில போர் போன்றது. உங்களின் அடையாளத்தை வெளி உலகத்திற்கு காட்டாதவரை நீங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். இதுபோன்று எழுதுபவர்களை cybercrime மூலம் வலைவீசி தேடுகிறார்கள். ஆகவே "tor browser" போன்றவற்றை உபயோகித்து உங்களின் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.

தஜ்ஜால் said...

வாங்க ஜாவித்,

மிக்க நன்றிகள்!

//sema point ithu naal varai ipdi onnu enaku thonave ila. Muhammed than Allah vuku Inai vaikum muthal Ethiri// இதுமட்டுமல்ல வேறு சில இணைவைப்புகளும் குர்ஆனில் இருக்கிறது. இணைவைப்பை பெரும் குற்றமாக அறிவித்தது, முஹம்மது தனது இருக்கையைக் காப்பாற்றிக் கொள்ள செய்த தந்திரங்கள் மட்டுமே!

தஜ்ஜால் said...

வாங்க சாதிக்,

மிக்க நன்றிகள்!

// ஆம் ஒரு போதும் பின் வாங்கப்போவதில்லை இனீருக்கிறது புரோகித மவ்லவிகளுக்கு மர்ஹூம் மணியோசை// ஆமாம் நமது முயற்சிகள் முல்லாக்களுக்கு மட்டுமல்ல முஹம்மதின் புரட்டல்களுக்கும் மர்ஹும் மணியோசைதான்!!!

தஜ்ஜால் said...

வாங்க Ant,

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்!

உண்மைதான் இந்தக் கட்டுரை முஃமின்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஒரு பின்னுட்டங்கள் அதற்கு சாட்சி. அதற்கு இஸ்லாமிய நம்பிக்கை விமர்சிக்கப்படுகிறது என்பதைவிட அண்ணன் பீஜேவும், அவரது மிக முக்கியமான வாதம் விமர்சனத்திற்குள்ளாகிறது என்பதே முதன்மைக் காரணம். முஹ்ம்மதிலிருந்து தொடங்கிய தனிநபர் வழிபாடு இனியும் தொடரும்!

/// அண்ணன் நலமுடனே இருக்கட்டும் அவர் தொடர்ந்து பகுத்தறிவு கேள்விகள் கேட்கட்டும்.// ஆமாம்! நாம் விமர்சிப்பது அண்ணன் பீஜேவின் கருத்துகளை மட்டுமே பீஜே என்ற தனிநபரையல்ல! எனது சிந்தனையைத் தூண்டிவிட்ட அண்ணன் பீஜே என்றும் எப்பொழுதும் நலமுடன் இருக்க வேண்டுமென்பதே நமது விருப்பம்!

தஜ்ஜால் said...

வாங்க Anonymous,

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

நந்தன் said...

மிக அருமையான கட்டுரை. தொடர்முழுவதும் நல்ல சிந்தனக்கு சாட்சியாக உள்ளது.
கட்டுரையின் முடிவு இஸ்லாமிய தர்க்கவாதிகளை முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. முன்னாடியும் போக முடியாது. பக்கவாட்டிலும் போக முடியாது. இனி அர்களுக்கு ஒரே வழி. பின்னோக்கி செல்வதுதான்.
ஆமாம்...
// ஹதீஸ்கள் கூறும் செய்தி சராசரி அறிவிற்குக்கூட பொருந்தாமல் போகும் பொழுது பாவம்! அவர்களும் என்னதான் செய்ய முடியும்? நிராகரிக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் இறுதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர்.//

//ஸிஹ்ர் பற்றிய செய்திகளை குர்ஆன் ஹதீஸிற்கு முரண் இல்லாதவாறு, அதாவது, ”என்ன செய்வது? முஸ்லீமாகப் பிறந்துவிட்டோம்! வேறு வழியில்லை! பகுத்தறிவைத் தூக்கித் தொலைவில் எறிந்துவிட்டு எல்லவற்றையும் நம்பித் தொலைக்கிறோம்” என்று புரிந்து கொண்டால் அவர்களுக்கு எந்த குழப்பமும் தோன்றாது.//

பகுத்தறிவை தூக்கி எரிந்துவிட்டு 1400 ஆண்டுகளுக்குப் பின்னாடிச் செல்ல வேண்டியதுதான்.

தஜ்ஜால் said...

வாங்க மாங்காய் மடையன்(ர்)

தங்களின் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றிகள்

இத்தளத்தில் நான் அதிகமாக எழுதியிருக்கலாம் ஆனால் இத்தளத்தை நிர்வகிப்பது ஒரு குழுதான்.
//இதெலாம் உங்கள் மனதில் என்றுமே இருக்கட்டும். உங்களின் இந்த தளம் பிரசிதி பெற்று அதிகமான இஸ்லாமியர்கள் இந்த தளத்தில் வருகை தரும் காலத்தில் உங்களுக்கு எதிராக ரகசியமாக பாத்வா அறிவிக்கப்படலாம். அப்பொழுது மறுமையில் கிடைக்கும் கூலிகாகவும் அல்ஹவிர்க்காகவும் உங்களை காட்டிகொடுக்க தயங்கமாட்டார்கள். // நீங்கள் சொல்வது சரிதான். அது போல நிகழ்வதற்கு வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது. அவர்கள் என்னதான் கண்டுகொள்ளாதது போல காண்பித்துக் கொண்டாலும் இத்தளத்தை கவனிக்கின்றனர், மேல்மட்ட அளவில் விவாதிக்கின்றனர் என்பது உண்மைதான்.

//நீங்கள் செய்வது ஒருவித கோரில போர் போன்றது. உங்களின் அடையாளத்தை வெளி உலகத்திற்கு காட்டாதவரை நீங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். இதுபோன்று எழுதுபவர்களை cybercrime மூலம் வலைவீசி தேடுகிறார்கள். ஆகவே "tor browser" போன்றவற்றை உபயோகித்து உங்களின் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.// உங்களது ஆலோசனைகளை நிச்சயமாக கவனத்தில் கொள்கிறேன். மிக்க நன்றி!!

தஜ்ஜால் said...

வாங்க நந்தன்

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

//கட்டுரையின் முடிவு இஸ்லாமிய தர்க்கவாதிகளை முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. முன்னாடியும் போக முடியாது. பக்கவாட்டிலும் போக முடியாது. இனி அர்களுக்கு ஒரே வழி. பின்னோக்கி செல்வதுதான்.// சரியாகச் சொன்னீர்கள். அவர்கள் குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் என்னதான் விளக்கம் கொடுத்தாலும் அது ”மீண்டும் மீண்டும் பல்லை இளித்துக் கொண்டு அசடு வழிந்து கொண்டுதான் நிற்கும்” முல்லாக்களின் அறிவியல் திணிப்புகளைத் தாங்க முடியாமல், குர்ஆனும் ஹதீஸ்களும் நைந்து போன கோணிப்பை போல ஆங்காங்கே கிழிந்து தொங்குகிறது. பார்க்க பரிதபமாக இருக்கிறது!

Anonymous said...

எவ்வளவு நீளமான கட்டுரை!
மிகவும் உழைத்து எழுதியதாகத்தான் தெரிகிறது. கடவுள் என்ற கோட்பாடே ஒரு மாயை என நிறுவும்பொது இப்படிப்பட்ட விளக்கக் கட்டுரைகளின் தேவை இல்லாமல் போய்விடுகிறது என நினைக்கிறேன். இப்படியெல்லாம் சொல்பவர்கள் ஒன்று மனநோய் வயப்பட்டவர்களாகவோ அல்லது பொய் சொல்பவர்களாகவோதான் இருக்க முடியும்.
//தனது குறைபாடு சரியாவதற்கான மருத்துவத்தையோ அல்லது செயல்படுவதற்கான உபகரணங்களை பொருத்திக் கொள்வதால் மட்டுமே அவரால் நடமாடமுடியும்! கடவுளைப் பிரார்த்தனை செய்வதால் ஒன்றும் நிகழப் போவதில்லை! பகுத்தறிவினால் இவர்கள் சூனியத்தை நிராகரித்தால் அதே பகுத்தறிவினால் அல்லாஹ்வையும் நிராகரிக்க வேண்டியிருக்கும்!//
Well said.

http://godisimaginary.com/i48.htm
God is imaginary எனும் இந்த தளம் மிக விரிவாக விவாதிக்கிறது.

தஜ்ஜால் said...

வாங்க Anonymous,

வருகைக்குக் கருத்திற்கும் நன்றிகள்!

// கடவுள் என்ற கோட்பாடே ஒரு மாயை என நிறுவும்பொது இப்படிப்பட்ட விளக்கக் கட்டுரைகளின் தேவை இல்லாமல் போய்விடுகிறது என நினைக்கிறேன். // உண்மைதான்! இஸ்லாமைப் பொறுத்தவரையில் கடவுள் என்றால் முஹம்மது அறிமுகப்படுத்தியவைகள் மட்டுமே! அதைக் கடந்து சிந்திக்க மறுப்பவர்கள். நாம் நேரடியாகக் கடவுள் மறுப்பைக் கூறினால் நீங்கள் குர்ஆனைப் படிக்கவில்லை, அதைப் படித்தால் இப்படிப் பேசமாட்டீர்கள் என்று ஒரு குர்ஆனை நமது கையில் திணித்துவிடுவார்கள்! . எனவேதான் அவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே புரிய வைப்பதற்காக இப்படியும் போகவேண்டியிருக்கிறது.

நீங்கள் கொடுத்த இணைப்பை கவனிக்கிறேன். அதற்கு இன்னொரு நன்றி!