Monday, 22 February 2016

ஸிஹ்ரும் ஷிர்க்கும்! -2

முன்குறிப்பு : இப்பதிவின் சில இடங்களில் இஸ்லாமிய நம்பிக்கைகளின் அடிப்படையிலும் வாதங்களை முன்வைக்க வேண்டியுள்ளது; எனவே அவற்றை நாங்கள் ஆதரிப்பதாகக் கருதக் கூடாது என்பதை நண்பர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். இப்பதிவில் மேற்கோள் காண்பிக்கப்படும் குர்ஆன் வசனங்களின் மொழிபெயர்ப்புகள் அனைத்தும் அண்ணன் பீஜே அவர்களின் வைவண்ணத்தில் உருவானவைகளே


ஸிஹ்ர் எனப்படும் பில்லி-சூனியக் கலை இருக்கிறது, நினைத்ததையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும் சில பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும் என்றிருந்த த..-வின் மாற்றத்திற்கு காரணம் என்ன?

முஹம்மதிற்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஹதீஸைச் சுற்றியே இவர்களது விவாதம் இருப்பதால் நாமும் அந்த ஹதீஸை வாசித்துவிடுவோம். இதன் மீதான நம்முடைய விமர்சனங்களைப் பிறகு பார்க்கலாம்.

புகாரி ஹதீஸ் 5765
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.

(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், 'இந்த மனிதரின் நிலையென்ன?' என்று கேட்டார். மற்றவர், 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார்' என்று பதிலளித்தார். அவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது?)' என்று கேட்க, மற்றவர், 'சீப்பிலும் சிக்கு முடியிலும்' என்று பதிலளித்தார். அவர் 'எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?' என்று கேட்க, மற்றவர், 'ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் 'தர்வான்' குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி(ஸல்) அவர்கள், 'இதுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன' என்று சொல்லிவிட்டுப் பிறகு 'அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது' என்றும் கூறினார்கள்.

நான், 'தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக காட்டக் கூடாது?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (இந்த சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்துவிட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை' என்று சொல்லிவிட்டார்கள்.

இந்த ஹதீஸ், குர்ஆனுக்கு(!) முரணாக இருக்கிறது; அல்லாஹ்விற்கு இணைகற்பித்தல் கலந்துள்ளது எனவே இதை நிராகரிக்க வேண்டுமென்பதே த.த.ஜவின் வாதம். தற்பொழுது அவர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டிலிருந்து…

சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவதில் இணைகற்பித்தல் கலந்துள்ளது என்பதாலும், திருக்குர்ஆனின் பல வசனங்களை மறுக்கும் நிலையும் ஏற்படுவதாலும் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
...
சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்று சொன்னாலும் சூனியத்தால் நபியை மனநோயாளியாக ஆக்க முடியும் என்று சொன்னாலும் சூனியக்காரனுக்கு அல்லாஹ்வைப் போல் ஆற்றல் உள்ளது என்ற கருத்தைத் தருகிறது.
...
சூனியத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஏராளமான வசனங்களில் சொல்லப்படுவதற்கு மாற்றமாக நமது முந்திய நிலைபாடு இருந்ததால் அதைச் சரி செய்துள்ளோம்.
...
இவர்கள் வாதப்படி காஃபிர்களே இஸ்லாத்திற்கு வர முடியாது. தர்ஹாவை வணங்கியவர்கள் இஸ்லாத்திற்கு வந்தால் நேற்று தர்ஹாவை வணங்கிவிட்டு, இப்போது தவறென்று சொல்கின்றீர்கள். நேற்றே இதைச் சொல்லியிருக்க வேண்டியது தானே என்று சொன்னால். நேற்று தெரியவில்லை. இன்று தெரிந்து கொண்டோம். அவ்வளவுதான் பதில்.
பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்
Onlinepj.com

நேற்றைய 1980 களில், பெரும்பான்மையான தமிழக முஸ்லீம்களின் நம்பிக்கைக்கு எதிராக,  அல்லாஹ்விற்கு இணைகற்பித்துவிட்டதாகக் கூறி, தர்ஹாவிற்குச் செல்பவர்கள் முஸ்லீம்களே இல்லையென தெருத் தெருவாக முழங்கிக் கொண்டிருந்த பொழுதோ அல்லது மவ்லீது, ராத்தீபு போன்ற புகழ்மாலைகளைப் பாடல்களை ஓதுவதும் இணைகற்பித்தலே என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த பொழுதோ அல்லது  தொழுகையில் விரலை ஆட்டிக் கொண்டிருந்த பொழுதோ சூனியம் ஒரு பித்தலாட்டமென்று தெரியாமல் போனதும் இன்று தெரிந்து கொண்டதாக இவர்கள் கூறிக் கொண்டிருப்பது ஆச்சரியம்தான்.

அன்று எங்களுக்கு அரபி மொழியில் போதுமான புலமை இருக்கவில்லை என்றோ அல்லதுஷிர்க்என்ற  அல்லாஹ்விற்கு இணைவைத்தல் பற்றிய போதுமான அறிவு எங்களுக்கு இருக்கவில்லையென்றோ அல்லது வழக்கம்போல ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசை கோணலாக இருக்கிறது என்றோ இவர்கள் கூறியிருந்தால், நிச்சயமாக இது அறியாமையென்று நாமும் கடந்து சொன்றிருப்போம்.  ஆனால் த.த.ஜவினர்,  இமாம் ஷாஃபி மாற்றிச் சொல்லவில்லையா? அபு ஹனீஃபா மாற்றிச் சொல்லவில்லையா? நாகூர் ஹனீஃபா(!) மாற்றிச் சொல்லவில்லையா? என்று நீட்டி முழக்குகின்றனர்.

சூனியத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஏராளமான வசனங்களில் சொல்லப்படுவதற்கு மாற்றமாக நமது முந்திய நிலைபாடு இருந்ததால் அதைச் சரி செய்துள்ளோம்.

உண்மையில், இவர்கள் நேர்மையானவர்களாக இருந்திருந்தால், முஹம்மதிற்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஹதீஸை, முன்பு சரிகண்டது எவ்வாறு என்பதை விவரித்து, அதே குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும், மறு ஆய்வில் தங்களது முந்தைய நிலையிலிருந்து, நேர்-முரணான கருத்திற்கு சென்றது எவ்வாறு என்பதையும் விளக்கியிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் செய்தது என்ன?

நேற்று தெரியவில்லை. இன்று தெரிந்து கொண்டோம். அவ்வளவுதான் பதில்!”

இது முறையான பதில் அல்ல! கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்! திடீரென்று இன்று தெரிந்து கொள்வதற்கு இந்தச் செய்தி திடீரென்று ஏழாம் வானத்திலிருந்து(!) எழுந்து வந்ததோ அல்லது முல்லாகள் ’முக்கும்’ பொழுது  வெளியாகும் ஃபத்வாவோ அல்ல! இது பல்வேறு ஹதீஸ் தொகுப்புகளிலும் அன்று முதல் இருந்து வருகிறது. இதன் மீது பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் நடைபெற்றிருக்கிறது.  சூனியம் பற்றிய மாற்றுக் கருத்துக்கள் இருந்த போதிலும் எவரும் முஹம்மது சூனியத்தினால் முஹம்மது பாதிக்கப்படவில்லையென்றோ, முஹம்மதிற்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களையோ மறுக்கவில்லை.

அண்ணன் பீஜே, இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் எழுதிய மறுப்பிற்கு, “ஸிஹ்ர் ஓர் விளக்கம்” என்று தொடரை எழுதினார். அதிலிருந்து…

நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் அனைத்து ஹதீஸ்களூமே மட்டும் இட்டுக் கட்டப்பட்டவை என்பது தான் ந்மது நிலை.

..-வின் இந்த தலைகீழ் மாற்றத்திற்கு  அடிப்படைக் காரணம் என்ன?  என்பதைப் பார்ப்பதற்கு முன், ஸலிஃபிகள் முன்வைக்கும் ஸிஹ்ர் பற்றிய முஹம்மதின் எச்சரிக்கையைக் காண்போம்.

புகாரி ஹதீஸ் 2766
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)" என்று (பதில்) கூறினார்கள்.

இந்தப் பட்டியலில் இரண்டாவது ஸிஹ்ர் இருக்கிறது. (இறுதியிலிருக்கும் பாவச் செயலை கவனித்தீர்களா? காஃபிர் பெண்களின் மீது அவதூறு கூறுவது பெரும் பாவமில்லையாம்!)

அண்ணன் பீஜேவின் ஸிஹ்ர் விளக்கத்தின்படி, ஒன்றுமில்லாத சூனியம் பெரும் பாவங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது எப்படி? ஒன்றுமில்லாத ஸிஹ்ர் எப்படி பெரும் பாவமாக ஆகும் என்ற ஸலஃபிகளின் கேள்விக்கு,

சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற கொள்கை உடையவர்கள் சூனியம் இருக்கிறது என்பதை நிலைநாட்ட ஒரு கேள்வியை எடுத்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிந்திக்கும் திறன் சிறிதளவும் இருப்பவர்களால் இது போல் கேட்க முடியாது. அந்தக் கேள்வி இதுதான்.

சூனியம் பெரும்பாவங்களின் ஒன்று நபியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். சூனியம் இறைமறுப்பில் தள்ளி விடும் என்று நீங்களும் சொல்கிறீர்கள். சூனியம் என்றால் ஒன்றுமே இல்லை என்று சொன்னால் ஒன்றுமே இல்லாததை எப்படி பாவம் என்றும் இறைமறுப்பு என்றும் சொல்ல முடியும் என்பது தான் அந்தக் கேள்வி.

சூனியம் இல்லை என்று நாம் சொல்வதை இவர்கள் புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறார்கள். சூனியம் இல்லை என்றால் சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்பது இல்லை என்ற பொருளில் தான் சொல்கிறோம் என்பது சிறு பிள்ளைக்கும் விளங்கும்.
பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்
Onlinepj.com

இவர் இப்படியொரு பதிலைக் கூறுவதற்குப் பதிலாக பதிலேதும் கூறாமலேயே இருந்திருக்கலாம்.

சூனியம் என்றொரு வழிமுறை இருக்கிறது; அது அல்லாஹ்வின் பார்வையில் பெரும் பாவமாக இருக்கிறது; ஆனால் அதைக் கொண்டு எவருக்கும் எந்த ஒரு பாதிப்பையும் உண்டாக்க முடியாது! எல்லாம் சரிதான். எவருக்கும் எந்த ஒரு பாதிப்பையும் உண்டாக்க முடியாத செயலைச் செய்வது எப்படிப் பெரும் பாவமாகும்?

இதற்கு அண்ணன் பீஜே கூறியுள்ள மேற்கண்ட விளக்கத்தை நீங்கள் மறுபடியும் வாசிக்கவேண்டும்.

ஸிஹ்ர் பெரும் பாவப் பட்டியலில் இணைந்தது ஏன்

விடை மிக எளிதானது. ஏறக்குறைய உலகிலுள்ள அனைத்து நம்பிக்கைகளிலும் கடவுளுக்கு எதிராக ஒரு ’வில்லன்’ கதாபாத்திரம் இருக்கும்; இதற்கு இஸ்லாமும் விதிவிலக்கு அல்ல!
ஆதி மனிதரான ஆதமும் அவரது துணைவியரும் சொர்க்க சோலைகளில் வசித்துக் கொண்டிருந்த பொழுது,

குர்ஆன் 7:20
அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த வெட்கத்தலங்களைப் பற்றிப் புரிய வைப்பதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான்…

ஷைத்தான் என்பது யார்-என்ன?

தீயவர்கள் அல்லது தீய சக்திக்கு அரபியில் ஷைத்தான் என்பார்கள். ஷைத்தான் ஒரு பொதுவான சொல். அது தீமை அல்லது தொல்லை தரக்கூடிய மனிதர்களையும், மிருகங்களையும் மட்டுமல்லாது அல்லாஹ்வின் மற்றொரு படைப்பான ஜின்களையும் குறிப்பிடும்!  ஆயினும் குர்ஆனில் மிகப்பெரும்பாலும் ஷைத்தான் என்ற சொல், தீய ஜின்களையும் அவர்களின் தலைவரான இப்லீஸைக் குறிப்பிடவுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இப்லீஸ் என்பது யார்?

குர்ஆன் 2:34
"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.

”ஆதமிற்குப் பணியுங்கள்” என்பது அண்ணன் பீஜே அவர்களின் ’ஜிகினா’ மொழிபெயர்ப்பு.  இவ்விடத்தில் அல்லாஹ், “ஸஜ்தா” என்ற மூலப்பதத்தையே பயன்படுத்தியுள்ளான்; இன்று முஸ்லீம்கள் வழிபாட்டில் பின்பற்றும் நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங்கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரு கால்களின் விரல்கள் ஆகியவை தரையில்படும் வகையில் குனிந்து வணங்குதல் என்பதே இதற்கு தூதர் முஹம்மது கொடுத்துள்ள பொருள்.

"நீர் விளக்குவதற்காக இதை அருளினேன்'' என்று கூறுவதை விட "நீர் விளக்குவதற்காகவே தவிர இதை அருளவில்லை'' என்பது அழுத்தம் நிறைந்ததாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் என்ற கருத்தை இவ்வாசக அமைப்பு தெளிவாக அறிவிக்கின்றது.
திருக்குர்ஆனை மக்களிடம் கொடுத்தவுடன், அல்லது வாசித்துக் காட்டியவுடன் அவர்களுக்கு அனைத்தும் விளங்கி விடும் என்றிருந்தால், "நீர் விளக்குவதற்காகவே தவிர இதை அருளவில்லை'' என்று அல்லாஹ் கூறியிருப்பானா? விளக்காமலே விளங்குவதை யாரேனும் விளக்குவார்களா? நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் இத்தகைய வேண்டாத வேலையைச் செய்வானா?
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தின் துணையோடு அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு திருக்குர்ஆனை விளங்கினார்களோ அதே விளக்கத்தின் துணையோடு தான் நாமும் திருக்குர்ஆனை விளங்க வேண்டும்; விளங்க முடியும்.
என்று தப்ஸீர் உரை எழுதினாலும், முஹம்மது கூறியுள்ள விளக்கம்  அண்ணன் பீஜேவிற்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது; தூதர் முஹம்மதுவின் விளக்கத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதெனில் நமக்கு எதற்காக பகுத்தறிவு தரப்பட வேண்டுமென்று அண்ணன் பீஜேவுக்குத் தோன்றிவிட்டதென்று நினைக்கிறேன். எனவே தூதர் முஹம்மது கொடுத்த விளக்கத்தை புறந்தள்ளிவிட்டு, ”ஸஜ்தா” என்பதற்கு முஹம்மது பிறப்பதற்கு முன்பாக அரபிகள் பயன்படுத்தியுள்ள பொருளைக் கொடுத்திருப்பதாக தன்னுடைய தப்ஸீர் உரையில் விளக்கமளிக்கிறார். உதாரணத்திற்கு, குர்ஆன் 96:02-ம் வசனத்திலுள்ள, ‘அலக்’ என்ற பதத்திற்கு, முஹம்மதுவோ அல்லது அன்றைய அரேபியர்களோ கனவிலும் கற்பனைகூட செய்து பார்க்காத ’கருவுற்றுசினைமுட்டை’ என்ற பொருள்கொடுத்து அல்லாஹ்வையே புல்லரிப்பிற்கு ஆளக்கியர், தான் விரும்பிய பொருளைக் கொடுப்பதற்கு முஹம்மதிற்கு பிறப்பதற்கும் முந்தைய காலமல்ல அல்லாஹ் பிறப்பதற்கும் முந்தைய காலத்திற்கும் சென்று வருவார். சுருக்கமாகச் சொல்வதென்றால் இவருடைய இத்தகைய போக்கு ஸிஹ்ர் என்ற பில்லி-சூனியத்திற்குள்ளும் புகுந்துவிட்டது. இது நம்மைப் போன்றவர்களுக்கு மிகுந்த உற்சாகமளிக்கிறது. இதைப்பற்றி தொடரின் இறுதியில் சொல்கிறேன்.

நாம், நம்முடைய விவாத்தைத் தொடருவோம். மேற்கண்ட வசனத்தின்படி நோக்கினால் இப்லீஸ், வானவர்கள் எனப்படும் மலக்குகள் இனத்தைச் சேர்ந்தவன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்  குர்ஆனில் மற்றொரு பகுதி இப்லீஸை ஜின் இனத்தைச் சேர்ந்தவன் என்கிறது.  குர்ஆன் மிக மிகத் தெளிவான(!)தொரு புத்தம் என்பதால் நாம் இதில் ஆச்சரிப்படுவதற்கு எதுவுமில்லை.  

குர்ஆன் 18:50
"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்…

குர்ஆன் 15:27
கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.

குர்ஆன் 55:15
தீப்பிழம்பிலிருந்து ஜின்னைப் படைத்தான்.

அதாவது மனிதர்களைப் படைப்பதற்கு முன்பாக நெருப்பின் ஜுவாலையிலிருந்து ஜின் படைக்கப்பட்டுள்ளது. இப்படியொரு படைப்பு இருப்பதற்கு இஸ்லாமியர்களின் நம்பிக்கையத் தவிர வேறு ஆதாரங்கள் எதுவுமில்லை.  

ஆதி மனிதராக ஆதமைக் குறிப்பிடுவது போல, முதல்முதலில் படைக்கப்பட்ட  ஜின் இப்லீஸ்.  இதென்ன புதுக் கதையென்று குழப்பம் வேண்டாம். பின்வரும் குர்ஆன் வசனத்தை கவனியுங்கள்.

குர்ஆன் 7:12
"நான் உனக்குக் கட்டளையிட்ட போது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது?'' என்று (இறைவன்) கேட்டான். "நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!'' என்று கூறினான்.

இஸ்லாமிய நம்பிக்கைபடி, களிமண்ணால் படைக்கப்பட்டது ஆதம் மட்டுமே அவரது துணைவியர்கூட களிமண்ணால் படைக்கப்படவில்லை. பின்னல் அவர்கள் இணைந்து சந்ததிகளை உருவாக்கிக் கொண்டனர்.  களிமண்ணால் படைக்கப்பட்டவர் என்ற சொல் ஆதமிற்கு மட்டுமே பொருத்தமானது. குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் கருத்துப்படி, ஜின்கள் இனப்பெருக்க செய்யக் கூடியவைகள். நெருப்பால் படைக்கப்பட்ட ஒரு ஜின்னிலிருந்து அவைகள் இனப்பெருக்கம் செய்திருக்கலாம். இவ்வசனத்தில் தன்னை நெருப்பால் படைக்கப்பட்டவனாக இப்லீஸ் சொல்வதை கவனத்தில் கொண்டால், முதன்முதலில் நெருப்பிலிருந்து படைக்கப்பட்ட ஜின் இப்லீஸ் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மலக்குகள் படைக்கப்பட்டது எவ்வாறு? என்ற கேள்வி உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். மலக்குகள் ஒளியால் படைக்கப்பட்டவைகள்; ஜின்களுக்கும் முன்பாகப் படைக்கப்பட்டிருக்க வேண்டும். மலக்குகள் உருவாக்கப்பட்ட அன்றைய காலகட்டத்தில் அல்லாஹ்வின் வசம் “SEX TECHNOLOGY”, அதாவது ஒன்றுடன் மற்றொன்று இணைந்து வாரிசுகளை உருவாக்கும் தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு மலக்கையும் ஒளியிலிருந்து ஒவ்வொன்றாகப் படைத்துப் படைத்து நொந்து போயிருக்க வேண்டும். புதிய தொழில் நுட்பதைப் புகுத்தி தனது வேலைப் பழுவைக் குறைத்துக் கொண்டிருக்கலாம்.

இந்த ஜின் இனம் இன்றும் மனிதர்களுடன் வசிப்பதாக அல்லாஹ் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் கூறுகிறான். ஜின்களின் இருப்பை நிரூபிக்கக் கூறிவிடுவார்களோ என்ற அச்சத்தினால், ஜின் என்பதற்கு, ’ஜன்ன’ என்ற வினைச் சொல்லிலிருந்து ’ஜின்’ என்ற வார்த்தை பிரிந்து வந்துள்ளது. மறைத்தல் மறைதல் என்பது இதன் நேரடிப் பொருள் என்பதாக முல்லாக்கள் விளக்கமளிக்கின்றனர்.

இஸ்லாமிய வரலாற்றில் இறுதியாக ஜின்களைப் பார்த்து உரையாடியவர் தூதர் முஹம்மது மட்டுமே. அதன் பின்னர் அவைகள் எவருக்கும் தென்படவில்லை என்பதாக முல்லாக்கள் கூறுகின்றனர். தென்படுவதற்கான வாய்ப்புகள் வரும்காலத்திலும் இல்லையாம்!. அன்றைய காலகட்டத்தில் நபிமார்களுக்கும் மிருகங்களும் தென்பட்ட ஜின்கள், தற்காலத்தில் நபிமார்கள் இல்லததால் மிருகங்களுக்கு மட்டும் தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனவாம்.!. (இந்த நபிமார்கள் கடைசியில் மிருகங்களுக்கு இணையாக ஆகிவிட்டனரே?)

ஆனால் அண்ணன் பீஜே, நெருப்பில் படைக்கப்பட்டதினால் நம்முடைய கண்களால் காணக்கூடிய ’உருவ அமைப்பு’ ஜின்களுக்கு கிடையாது;  நெருப்பில் படைக்கப்பட்டால் உருவம் இருக்காது என்கிறார்.  இவ்வாறு மனித கண்களுக்குத் தெரியாவாறு படைத்திருப்பது அல்லாஹ்வின் மிகப்பெரிய வல்லமைக்குச் சான்றாக இருக்கிறது என்கிறார். இதில் என்ன ’வெங்காய’ வல்லமை இருக்கிறதென்று புரியவில்லை. நான் சொல்கிறேன், உங்களது கண்களுக்கோ கருவிகளுக்கோ தென்படாத வாய்ப்பில்லாத ‘டிங்கன்’ என்ற ஒன்றைப் படைத்திருக்கிறேன்; அது மறைவாக இருந்து கொண்டு நம்மையெல்லாம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது, இது எனது வல்லமைக்கு ஆதாரம் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?

குர்ஆன் 7:27
… நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.

மறைவாக இருப்பதனால் அவைகளுக்கு ஜின்கள் எனப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளதா? அல்லது ஜின்கள் எனப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளதால் அவைகள் மறைந்திருக்கின்றதா? (mullahs knows the best!) மறைவானவைகளை ஜின்கள் என்றழைக்கலாம் எனில் அல்லாஹ்வை பார்த்தவர் எவருமில்லை எனவே அவனும் ஜின்தான்!

மறைவாக இருந்து கொண்டு மனிதர்களுக்கு இந்த ஜின்கள் தரும் தொல்லைகள் சொல்லில் மாளாது.  ஹதீஸ்கள் கூறுவதைச் சற்று சுருக்கமாகக் காண்போம். முழுமையான ஹதீஸைப் படித்தே தீருவது என்ற முடிவிலிருப்பவர்கள், கொடுக்கப்பட்டுள்ள ஹதீஸ் எண்களை தேடிப் படித்துக் கொள்ளவும்.

ஷைத்தான் தீண்டுவதாலேயே குழந்தை பிறக்கும்போது வீறிட்டழுகிறது (முஸ்லீம் 4720); அதுமட்டுமல்ல அப்பொழுதே கூட்டாளியாக ஷைத்தான் இணைக்கப்படுகிறான் (முஸ்லீம் 5421); அவன் உங்களது இரத்தநாளங்களிலெல்லாம் ஓடித் திரிகிறான் (புகாரி 2035); தீய எண்ணங்களை ஏற்படுத்துகிறான். இதிலிருந்து தூதர் முஹம்மதுகூட தப்பமுடியவில்லை. ஒருமுறை முஹம்மது சென்று கொண்டிருந்த பொழுது, அவருக்கு எதிரில் வந்துகொண்டிருந்த ஒரு அந்நியப் பெண்ணைக் கண்டவுடன் அவரது காம உணர்களைக் கிளறச் செய்துவிட்டான்;  முஹம்மதிற்கும் இச்சையை அடக்க முடியாமல் ஜைனப் என்ற அவரது மனைவியைத் தேடி தலைதெறிக்க ஓடச் செய்திருக்கிறான் (முஸ்லீம் 2718) எனில் ஜின்களின் வலிமையை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். (சந்தேகமில்லை! ஷைத்தான்கள் ‘வயாக்ரா’ மருந்தைவிட வலிமை வாய்ந்தவைகள்தான்! மனைவியைப்பற்றி கேட்கிறீர்களா..?  அதே மருமகள்தான்.)

அல்லாஹ்வின் பெயர் கூறாமல் உணவு உண்ணத் துவங்கினால் அவர்களுடன் ஷைத்தானும் இணைந்து கொள்கிறான் (முஸ்லீம் 4105); கழிப்பிடத்திற்கு சென்றாலும் உங்களைப் பின்தொடந்துவந்து வேண்டாத சிந்தனைகளை ஏற்படுத்தி வழிகெடுக்கிறான். கழிப்பிடத்திற்கு செல்லும் பொழுது ”இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானைவிட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்று முஹம்மது வேண்டிக்கொள்வாராம் (புகாரி 142). (முஹம்மதிற்கு கழிப்பறையில் அப்படியென்ன இழிவான சிந்தனைகளைத் தூண்டிவிட்டானோ? அல்லாஹ் அஹ்லம்!)  கழிப்பறையில் உங்களது செயலை முன்றாம் நபர் கண்கணித்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

மாலை நேரங்களில் ஷைத்தான்கள் வெளியே பரவி உங்களது குழந்தைகளை கைப்பற்ற முயற்சிக்கின்றன (புகாரி 3316).  குர்ஆனை ஓதும் பொழுது தொல்லை கொடுக்கிறான் (குர்ஆன்16:98 ). உறங்கச் செல்லும் பொழுது 'ஹா' என்ற சப்தத்துடன் கொட்டாவியை  ஏற்படுத்துகிறான்; அவ்வாறு சத்தமாக கொட்டாவி விட்டுவிட்டால், அதைப்பார்த்து சிரிக்கிறான் (புகாரி 3289); அப்படி கொட்டாவிவிடும் பொழுது வாயை மூடவில்லையெனில் உங்கள் வாய்க்குள் நுழைந்துவிடுகிறான் (முஸ்லீம் 5721).

துணைவியருடன் படுக்கை அறையிலிருக்கும் பொழுதும் ஷைத்தான் உங்களைவிட்டுப் பிரிவதில்லை; ”LIVE SHOW” காண்பதற்காக அங்கே காத்திருக்கிறான்.  ”அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு உடலுறவு கொள்ளப் போகிறேன்” என்று பிரார்த்தனை செய்யவில்லையெனில் உருவாக இருக்கும் கருவிடம் தனது பணியைத் துவங்கிவிடுகிறான் (புகாரி 141). ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்துவிட்டு உறங்கினால், உங்கள் பிடறியில் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான் (புகாரி 1142); கெட்டகெட்ட கனவுகளை ஏற்படுத்துகிறான் (புகாரி 6984). (ஈரக் கனவுகள் கெட்ட கனவா?) அவ்வாறான நேரத்தில் இடதுபுறம் திரும்பி மூன்று முறை துப்பிவிட வேண்டும். (எச்சரிக்கை: உறக்கக் கலக்கத்தில் துணைவியரின் முகத்தில் துப்பிவிடவேண்டாம். பிறகு கனவில் வந்த ஷைத்தானே பரவாயில்லை என்று நொந்துகொள்ள நேரிடும்) கனவில் விதவிதமான உருவங்களில் வருவான். ஆனால் தூதர் முஹம்மதுவின் உருவத்தில் மட்டும் வரமாட்டான் (முஸ்லீம் 4561). (முஹம்மதின் உருவம் ஷைத்தானுக்கே பிடிக்கவில்லை போலும்! அது சரி முஹம்மதின் உருவத்தை அறிந்தவர் எவரேனும் இருக்கிறீர்களா?)

ஆழ்ந்து உறங்கும்பொழுது மூக்கின் உட்பகுதியில் சென்று குடித்தனம் செய்யத் துவங்கிவிடுகிறான் (புகாரி 3295); ஆழ்ந்து உறங்கினால் உங்கள் காதில் சிறுநீர் கழித்துவிடுகிறான் (முஸ்லீம் 1423). எழுந்து அல்லாஹ்வை தொழச் சென்றால், ஷைத்தான் தடையாய் நின்று எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறான். அப்பொழுதும் இடதுபுறம் திரும்பி மூன்று முறை துப்பிவிட வேண்டும் (முஸ்லீம் 4431) (கவனம், இரவில் வாங்கிக் கட்டிக் கொண்டதை நினைவில் கொண்டு துப்பவேண்டும்). தொழுகையில் திரும்பிப் பார்க்க வைத்து தொழுகையை பறித்துச் செல்ல முயற்சிக்கிறான் (புகாரி 751).  பொய்யான ஹதீஸ்களை மனித உருவில் வந்து மக்களிடையே எடுத்துரைக்கிறான் (முஸ்லீம் 15). இன்னும் நிறைய இருக்கிறது என்னால் முடியவில்லை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் ஷைத்தான் எனப்படும் விதவிதமான ஜின்கள் உங்களுடன் இருக்கின்றன.  ஏற்கெனவே ஒரு ஷைத்தான் ஒவ்வொருவருடனும் இருக்கும் பொழுது மறுபடியும் ஷைத்தான்களா? என்று ஆச்சரியப்பட வேண்டாம். போது.. போதும்… என்று சொல்லுமளவிற்கு திணறத் திணற ஷைத்தான்களை அல்லாஹ் வாரி வாரிவழங்கிறான். அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனின் கருணையை என்னவென்று புகழ்வது!  மாஷா அல்லாஹ்..!

இங்கு குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் குறிப்பிடும் ஜின்கள் மனிதர்களைப் போன்று பகுத்தறிவு வழங்கப்பட்டவைகள். அவைகள் ஆண், பெண் என்றும் அவர்களுக்கிடையே இணைந்து சந்ததிகளை உருவாக்கிக் கொள்கின்றன என்பதை முன்பே கவனித்தோம்.  ஜின்கள் மறைவானவைகள் அவற்றைக் காணமுடியாது என்றெல்லாம் ஒருபுறம் சொல்லிக் கொண்டிருந்தாலும், ஜின்கள் எந்ததெந்த வண்ணத்தில் உள்ளாடை அணிந்திருக்கின்றன என்பதைக்கூட சொல்வதற்கு ஹதீஸ்கள் தயாராக இருக்கிறது.

ஷைத்தான் இடக்கையால் உண்ணும் (முஸ்லீம் 4107); அதன் உணவு, விட்டைகளும் எலும்புகளும் ஆகும் (புகாரி 3860). அமரும் பொழுது, கால்களை நட்டுவைத்து, புட்டத்தைத் தரையில் படியவைத்து உட்காருகின்றன (முஸ்லீம் 857); மது, சூதாட்டம், பலிபீடங்கள், அம்புகளைப் பயன்படுத்தி குறிகேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன (குர்ஆன் 5:90). வானத்தில் நிகழும் உரையாடல்களை ஒட்டுகேட்டு மனித நண்பர்களிடம் கூறிவிடுகின்றன (குர்ஆன் 37:08). ஜின்களுக்கு வாயுத்தொல்லை இருப்பதினால் அதைப் பிரிப்பதற்கு பின்புறத்தில் துவாரம் இருக்கிறது (புகாரி 1231). அவைகளுக்கு கட்டிடப்பணி, முத்துக் குளித்தல், பாத்திரங்கள் செய்தல் போன்ற பணிகளும் தெரியும் (குர்ஆன் 38: 35-39) இப்படி நிறைய சொல்லமுடியும்.

ஜின்களின் உருவத்தை யூகிக்க, ஒரு குர்ஆன் வசனத்தைப் பார்க்கலாம். நாளை மறுமையில் சொர்க்கவாசிகளான மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் ஒரே ஹூரிகள் வழங்கப்பட இருப்பதாகவும் குர்ஆன் கூறுகிறது.

குர்ஆன் 55:56
 அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.

‘தீண்டுதல்’ என்பதற்கு நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். என்னது…?  மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் ஒரே ஹூரிகளா? என்று நீங்கள் நெற்றியையும் புருவங்களையும் சுழிப்பதை என்னால் உணர முடிகிறது.

ஆமாம்..!

மனிதர்களோ அல்லது ஜின்களோ தீண்டுவதற்காகத்தான் ஹூரிகளை அல்லாஹ் ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறான். மனித இனம், அளவற்ற பாலியல் பலத்துடன் இன்பம் தூய்ப்பதற்காக அவர்களது உடலமைப்பிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படும் அதே ஹூரிகள்தான் ஜின் இனத்திற்கும்! ஜின் இனத்திற்கென்ற தனிப்பட்ட சொர்க்கமோ, நரகமோ அல்லது 72 ஹூரிகள் இருப்பதாக குர்ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ எந்த செய்தியும் கிடையாது; மனிதர்களுக்கு வழங்கப்படுபவைகள் தான் அவைகளுக்கும். அப்படியானால் ஜின்கள் மனிதர்களுக்கு இணையான உடலமைப்பைக் கொண்டவர்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

ஜின்கள்,  கறுப்பு நாய், கண்களுக்கு மேலே இருவெண் புள்ளிகள் உள்ள கன்னங்கரிய நாய், பாம்பு, காற்றில் பறந்து செல்லும் வடிவங்களிலும், மனித உருவத்தில் இருப்பதாகவும் இருப்பதாக ஹதீஸ்கள் கூறுகின்றன.

நாளை மறுமையில் நாய்கள் மற்றும் பாம்புகளுடன் ஹூரூலீன்களா…?

Beastality..?

ச்சே.. என்ன கொடுமை இது!

அல்லாஹ்வின் ரசனை மிகக் கீழ்த்தரமாக இருக்கிறதே?

நஃவுதுபில்லாஹ்…!
தொடரும்…

தஜ்ஜால்

Facebook Comments

55 கருத்துரைகள்:

Anonymous said...

எங்கேயிருந்து copy paste பண்றீஙக.
வாழ்த்துகள். தஜ்ஜால் பிஸி மேன் அடுத்தடுத்து இரண்டு பதிப்புன்னா லாஜிக் இடிக்குதே.
பகுத்தறிவாளர்னு சொல்லிக்கிறீங்களே இந்து 7மதத்தைபற்றி ஏதாவது கட்டுரை எழுதினிருக்கீங்களா

தஜ்ஜால் said...

வாங்க Anonymous,

//எங்கேயிருந்து copy paste பண்றீஙக.// கட்டுரைகளுக்கான மையக் கரு அண்ணன் பீஜே தான் கொடுக்கறாரு! உண்மையைச் சொல்லனும்னா இந்த விஷயத்தில் அண்ணன் பெரிய வள்ளல்தான். குர்ஆன் வசனங்கள் அவரோட தளத்திலிருந்தான் அவருடைய மொழிபெயர்ப்புதான் நல்ல காமெடியா இருக்கும்! ஹதீஸ்களை ரஹ்மத் அறக்கட்டளை தளத்திலிருந்து copy paste செய்கிறேன். வேறென்ன சந்தேகம்?

//வாழ்த்துகள். தஜ்ஜால் பிஸி மேன் அடுத்தடுத்து இரண்டு பதிப்புன்னா லாஜிக் இடிக்குதே.// ஆமாம் நான் பிஸிமேன்தான் சந்தேகம் வேண்டாம்! அதென்னா அடுத்தடுத்து இரண்டு பதிப்பு?

//பகுத்தறிவாளர்னு சொல்லிக்கிறீங்களே இந்து 7மதத்தைபற்றி ஏதாவது கட்டுரை எழுதினிருக்கீங்களா//
நான் யாரைப்பற்றி எழுதனும் எதைப்பற்றி எழுதனும் என்பதுதை நீங்க முடிவு செய்ய விரும்புறீங்களா? மன்னிக்கனும் அதுக்கு வேற இடத்தை பார்த்துக்கங்க!

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

அல்லாஹ் said...

தாஜ்ஜாலே, நீ இப்படியெல்லாம் எழுதாதே. நான் ஏற்கனவே ஷைத்தானின் பிரச்சினையில் பெரும் குழப்பத்தில் இருக்கின்றேன். பஞ்சத்தில் இருக்கும் மக்களுக்கு என்னால் உணவளிக்க முடியவில்லை, இப்பொழுதெல்லாம் அழகிய உருவில் மனிதர்களை படிக்கவும் முடியவில்லை, அந்த முகம்மது ஆறு வயது சிறுமியை ஆட்டையைப் போட்டு கற்பழித்த விடயத்திலேயே எனது மானமும் சேர்ந்தே போகின்றது, நீ வேறு என்னை இந்த மாதிரி கொமடி பீஸ் ஆக்குகின்றாயே, இது உனக்கே நல்லா இருக்கா?

நான் உனக்கு சிவாஸ் ரெகால் விஸ்கி ஆறும், மிக்ஸ் பண்ண கொக்கோகோலா நதியும், பைட்ஸ் இற்கு சிக்கன் 65 மலையும் தருகின்றேன், 72 அல்ல, 105 கன்னிகள் தருகின்றேன், பிளீஸ் இதை விட்டுப்போடு.

Anonymous said...

ஏழு பாவங்களின் கடைசி பாவமான...
///இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான்///
ஏதோ முத்து மாலை தொலைந்து விட்டதாக கூறி,ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமீ அத் தக்வானீ என்பவருடன் அஜால் குஜால் செய்ததை சொல்ல வேண்டம் என்கிறாரோ-புகாரி 2661
-நரேன்

Anonymous said...

இந்துக்களை பற்றி எழுதினாயா என்றவுடன்
தொனி மாறுகிறதே. உண்மையில் நீ பகுத்தறிவாளன் என்றால் எல்லா மதத்தை பற்றி எழுதேன்.

Anonymous said...

இந்த தளத்தின் நிலைப்பாடு என்ன?
வெறும் இஸ்லாமிய தூற்றல்தான் உள்ளது.
தலைப்பே லூஸ் மாதிரி வச்சிருக்க.
இறை இல்லாம ஏது இஸ்லாம்.
நபிகள் நாயகம் அவர்களைப்பற்றி ஒரு மூன்றாந்தர விமர்சனம்.அதை ஆஹா ஓஹோன்னு ஜால்ரா போட நாலஞ்சு அல்லக்கைகள் வேற.RSS தளம் இல்லை என்றால் இந்து மததில் உள்ள மூடபபழக்கங்களை சாடி ஒரே ஒரு பதிவு போடுங்கள் பார்ப்போம்.
எல்லோருக்கும் உண்மை தெரியட்டும்.
தற்போது தஜ்ஜால் என்ன மதம்.

Jenil said...

I SEE A BIT OF pagaddu IN THIS POST.. ANY IDEA WAT HAPPENED TO PAGAADU ??? vER NICE ON THIS TIME. KEEP ROCKING :) :)

sindhanai said...

anony, maththa mathathula paguththariva pugattaradhukku neraiya per yetkanavey irukkaanga. Tamil muslimukku konjamaachum moolaiya use panna yaaraavadhu kathtu kodukkanumla. athanaalathaan thajjaal thanakku therinja islamiya ayokkiyathanatha pathi eludharaar. tension aavaatheenga.

Anonymous said...

நீ யாருய்யா புது அல்லக்கை

தஜ்ஜால் said...

வாங்க அல்லாஹ்,

தங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள்!!

உங்களுக்கும் முஹம்மதிற்கும் நான் ரொம்ப கடமைப் பட்டிருக்கேன். ஆறு வயசு சிறுமிய ஐம்பது வயசு கிழவனோட சேர்த்துவிட்ட உங்க வல்லமையை உலகறிச் செய்யறதுதான் இந்த அடியானோட கடமை.
// நான் உனக்கு சிவாஸ் ரெகால் விஸ்கி ஆறும், மிக்ஸ் பண்ண கொக்கோகோலா நதியும், பைட்ஸ் இற்கு சிக்கன் 65 மலையும் தருகின்றேன், 72 அல்ல, 105 கன்னிகள் தருகின்றேன், பிளீஸ் இதை விட்டுப்போடு.// இதைதெல்லாம் எனக்கு வேண்டாம் ரொம்ப பத்திரமா எடுத்து வையுங்க பெரும் முஃமின் கூட்டம் காத்துகிட்டிருக்கு!!!

Anonymous said...

சரி நம்புறேன். நீ இஸ்லாமிய பகுத்தறிவாளன்னே வச்சுக்குவோம் உன் எழுத்துல இஸ்லாமியத்தை பற்றி விழிப்புணர்ச்சி ஒரு ----ம் இல்லியே நபிகளை பற்றி மூன்றாந்தர தூற்றல்தானே இருக்கு. இதுல எங்க பகுத்தறிவு பிரசாரம் இருக்கு? கருங்காலி RSSuக்கு விலை போயிட்ட அதை ஒத்துக்க கருங்காலி

தஜ்ஜால் said...

வாங்க நரேன்.

வருகைக்கு நன்றி!!!

//ஏதோ முத்து மாலை தொலைந்து விட்டதாக கூறி,ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமீ அத் தக்வானீ என்பவருடன் அஜால் குஜால் செய்ததை சொல்ல வேண்டம் என்கிறாரோ-புகாரி 2661// சரியா யூகிச்சிருக்கீங்க!!! தூதர் முஹம்மதுவோட பொதுநலதிட்டங்கள் அனைத்திலும் ஒரு சுயநலம் தூக்கலாக இருக்கும்!!!

தஜ்ஜால் said...

வாங்க Anonymous-2

//இந்த தளத்தின் நிலைப்பாடு என்ன?//
இறைமறுப்பு!
//வெறும் இஸ்லாமிய தூற்றல்தான் உள்ளது.//
உண்மைதான் நாங்கள் இஸ்லாமிக் ஸ்பெஷலிஸ்ட்கள்! இங்கு சகலவிதமான இஸ்லாமிய நோய்களுக்கும் சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படும்!

//தலைப்பே லூஸ் மாதிரி வச்சிருக்க.
இறை இல்லாம ஏது இஸ்லாம்.//
இனி தலைப்பு வைக்கும் பொழுது தங்களின் மேலான அறிவுரைகளை பெற்றுக் கொள்கிறோம்.

//நபிகள் நாயகம் அவர்களைப்பற்றி ஒரு மூன்றாந்தர விமர்சனம்.அதை ஆஹா ஓஹோன்னு ஜால்ரா போட நாலஞ்சு அல்லக்கைகள் வேற.RSS தளம் இல்லை என்றால் இந்து மததில் உள்ள மூடபபழக்கங்களை சாடி ஒரே ஒரு பதிவு போடுங்கள் பார்ப்போம் எல்லோருக்கும் உண்மை தெரியட்டும்.தற்போது தஜ்ஜால் என்ன மதம்.//
இத்தளத்தின் அறிமுகக் கட்டுரையை ஒருமுறை வாசிக்கவும்.
http://iraiyillaislam.blogspot.in/2011/07/blog-post.html

இது முன்னாள் முஸ்லீம்களின் தளம். நான் முன்னாள் முஸ்லீம்! எனது எழுத்துக்கள் அதை முகத்தில் அறைந்தார்ப்போல உணர்த்தியிருக்குமே? இஸ்லாம்பற்றி விமர்சிக்க எங்களைப் போன்றவர்களால் மட்டுமே முடியும்! திறனிருந்தால் இங்கு முன் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

தங்கள் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றிகள்!!!

தஜ்ஜால் said...

வாங்க Jenil,


மிக்க நன்றிகள்!!!
//I SEE A BIT OF pagaddu IN THIS POST// முன்புபோல நிறைய எழுத முடிவதில்லை. நீண்ட இடைவெளிவிட்டு எழுதுகிறேன். எனவே லேசாக மசாலா தூவியிருக்கிறேன்

//ANY IDEA WAT HAPPENED TO PAGAADU ???//
பகடு எங்கள் தொடர்பில் இல்லை. என்ன ஆயிற்று என்பதும் புரியவில்லை

தஜ்ஜால் said...

வாங்க sindhanai

//anony, maththa mathathula paguththariva pugattaradhukku neraiya per yetkanavey irukkaanga. Tamil muslimukku konjamaachum moolaiya use panna yaaraavadhu kathtu kodukkanumla. athanaalathaan thajjaal thanakku therinja islamiya ayokkiyathanatha pathi eludharaar. tension aavaatheenga.//

சரியா சொன்னீங்க! அவங்களுக்கு நல்ல எடுத்துச் சொல்லுங்க!!!

மிக்க நன்றிகள்!!!

தஜ்ஜால் said...

வாங்க Anonymous-1,

//உன் எழுத்துல இஸ்லாமியத்தை பற்றி விழிப்புணர்ச்சி ஒரு ----ம் இல்லியே நபிகளை பற்றி மூன்றாந்தர தூற்றல்தானே இருக்கு.// அன்பே அனானி நீங்க சரியான அரைவேக்காடு! இஸ்லாமில் முஹம்மதைப்பத்தி பேசாம ஒரு ----ம் செய்ய முடியாது. உங்க பின்னூட்டங்களிலிருந்து இஸ்லாமைப்பற்றி உங்களுக்கு ஒரு ----ம் தெரியாதுங்கிறது தெள்ளத் தெளிவா தெரியுது

//இதுல எங்க பகுத்தறிவு பிரசாரம் இருக்கு?/ கருங்காலி RSSuக்கு விலை போயிட்ட அதை ஒத்துக்க கருங்காலி// . உணர்ச்சிவசப்படாம அமைதியா நான் எழுதியிருக்கிற கட்டுரைய படிச்சுப் பாருங்க அதற்குப் பிறகு அதிலிருக்கும் சந்தேகங்களைக் கேளுங்க! பதில் சொல்லறேன். ஓவர் டென்ஷன் உடம்புக்கு ஆகாது! சூத்துல் காஃப், ஆயத்துல் குர்ஷி எல்லாம் ஓதி ஊதிக்கங்க பாதுகாப்பு கிடைக்கும்!
கருங்காலி, வெள்ளக்காலி, பச்சைக்காலின்னு அப்புறமா திட்டுங்க வாங்கிகிறேன்!

ஓகே…?

ஓகே!!!

sadiqsamad said...

nonymous23 February 2016 at 14:04
இந்துக்களை பற்றி எழுதினாயா என்றவுடன்
தொனி மாறுகிறதே. உண்மையில் நீ பகுத்தறிவாளன் என்றால் எல்லா மதத்தை பற்றி எழுதேன்.
//
என்னய்ய உங்க அக்கப்போரு அல்லாவையும் முஹம்மதையும் பற்றி எழுதுகிறோம் RSS அல்லேலுயாவெல்லாம் ஒரு பொருட்டா? Rssவிட கொடுமையானது உன் IS,LAM நாங்க எதை எழுத வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியாது முடிந்தால் இந்த தளத்தில் இருக்கும் பதிவுகளுக்கு மறுத்து பதிலளியும்

sadiqsamad said...

Anonymous23 February 2016 at 17:32
சரி நம்புறேன். நீ இஸ்லாமிய பகுத்தறிவாளன்னே வச்சுக்குவோம் உன் எழுத்துல இஸ்லாமியத்தை பற்றி விழிப்புணர்ச்சி ஒரு ----ம் இல்லியே நபிகளை பற்றி மூன்றாந்தர தூற்றல்தானே இருக்கு. இதுல எங்க பகுத்தறிவு பிரசாரம் இருக்கு? கருங்காலி RSSuக்கு விலை போயிட்ட அதை ஒத்துக்க கருங்காலி//
.
.
ஏய்யா RSSபற்றி எழுது RSSபற்றி எழுதுங்கிறியே நாங்களும் அதை பற்றி தானே எழுதுறோம் (R)ரஸூல்(S)ஸல்லல்லாஹு அலைஹிவ(S)ஸல்லம் ,இதுதானே நீங்கள் சொல்லும் RSS ?

sadiqsamad said...

Anonymous23 February 2016 at 17:32
சரி நம்புறேன். நீ இஸ்லாமிய பகுத்தறிவாளன்னே வச்சுக்குவோம் உன் எழுத்துல இஸ்லாமியத்தை பற்றி விழிப்புணர்ச்சி ஒரு ----ம் இல்லியே நபிகளை பற்றி மூன்றாந்தர தூற்றல்தானே இருக்கு. இதுல எங்க பகுத்தறிவு பிரசாரம் இருக்கு? கருங்காலி RSSuக்கு விலை போயிட்ட அதை ஒத்துக்க கருங்காலி//
.
.
ஏய்யா RSSபற்றி எழுது RSSபற்றி எழுதுங்கிறியே நாங்களும் அதை பற்றி தானே எழுதுறோம் (R)ரஸூல்(S)ஸல்லல்லாஹு அலைஹிவ(S)ஸல்லம் ,இதுதானே நீங்கள் சொல்லும் RSS ?

Anonymous said...

கருங்காலின்னு சொன்னா ஏன் இவ்ளோ கோபம் வருது. இஸ்லாத்தையும் நபியையும் திட்டுவ.
உனனை கருஙகாலின்னு தான் திட்டுவேன்.
உன் மூணாந்தர எழுத்தை ஆராய்ச்சி பண்ணி
அதுலர்ந்து கேள்வி கேக்க உன் அல்லக்கைகளை வச்சுக்கோ.நான் வரலை.
ஆமா உன் பேரை தஜ்ஜால் ங்கிறத மாத்தி
கருங்காலின்னு வச்சுக்கோ.

Anonymous said...

150 கோடி மக்களின் தலைவரை விமர்சிக்கும்
உனது தகுதிகள் என்ன

Anonymous said...

தற்பொழுது நீ பகுத்தறிவாளன் .உனது பாஸ்போர்ட்டில் மதம் என்ற இடத்தில் என்ன உள்ளது.உனது சான்றிதழ்களில் மதம் என்ற என்ன உள்ளது.

Iniyavaniniyavan Iniyavan said...

அருமை தஜ்ஜால்...இந்த அளவுக்கு கிழி...கிழி...ன்னு கிழிச்சி மேஞ்சிபுட்டீங்க...

தஜ்ஜால் said...

வாங்க இனியவன்,

நன்றிகள்!

இந்தத் தலைப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று பகுதிகளுக்குத் தொடரும். அதையும் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்

தஜ்ஜால் said...

வாங்க Anonymous,
மிகவும் கொதிச்சு போயிட்டீங்க போலிருக்கு? நான் அப்பவே சொன்னேன் ஓவர் டென்ஷன் உடம்புக்கு ஆகாது. Cool down!!!

//கருங்காலின்னு சொன்னா ஏன் இவ்ளோ கோபம் வருது. // யாருக்கு? எனக்கா..? உண்மையில் முஃமின்கள் என்னை திட்டும் பொழுது எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஏனென்றால் நான் மிகச் சரியான இடத்தில் அடித்திருக்கிறேன் என்துதான் அதன் பொருள். அதனால் தாரளமாக திட்டாலாம்

//இஸ்லாத்தையும் நபியையும் திட்டுவ. உனனை கருஙகாலின்னு தான் திட்டுவேன்.// நான் இஸ்லாத்தையும் நபியையும் திட்டவில்லை குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் விமர்சிக்கிறேன். முடிந்தால் பதில் சொல்லாம் இல்லையேல் ஆசைதீர திட்டிவிட்டு கிளம்பலாம்!

//உன் மூணாந்தர எழுத்தை ஆராய்ச்சி பண்ணி
அதுலர்ந்து கேள்வி கேக்க உன் அல்லக்கைகளை வச்சுக்கோ.நான் வரலை.// சரி வரவேண்டாம்! உங்களுக்குக் கேள்வி கேட்கக் கூட அறிவில்லைன்னு தெரியுது!

//ஆமா உன் பேரை தஜ்ஜால் ங்கிறத மாத்தி கருங்காலின்னு வச்சுக்கோ.// சரி அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
//150 கோடி மக்களின் தலைவரை விமர்சிக்கும் உனது தகுதிகள் என்ன// மனிதன்!

//தற்பொழுது நீ பகுத்தறிவாளன் .உனது பாஸ்போர்ட்டில் மதம் என்ற இடத்தில் என்ன உள்ளது.உனது சான்றிதழ்களில் மதம் என்ற என்ன உள்ளது.//
எந்த அடையாளமும் இல்லை

அப்புறம் அடுத்த கேள்வி…?

Anonymous said...

வடிகட்டின பொய்
மதம் என்ற இடத்தில் எந்த அடையாளமும் இல்லாமல் ஒரு மனிதன் உள்ளான் என்றால் சாத்தியமே இல்லை. நீ கருங்காலி என்பதோடு பொய்யன் என்றும் நிரூபித்து விட்டாய்...

நீ முதலில் அறிவோடு எழுது.
அப்புறம் எனக்கு அறிவிருக்கிறதா என பார்க்கலாம்.

Anonymous said...

இஸ்லாத்தையும் குரானையும் தவறான நோக்கத்தில இழிவுபடுத்தும் கருங்காலியான
உனது எழுததுகள் அனைத்தும் 6
பைத்தியகாரதனமானவை அத பைத்தியந்தான் படித்து கருத்து சொல்லனும்.
நான் எதுக்கு?
ஃ1

தஜ்ஜால். said...

வாங்க Anonymous,

ரொம்பவும் கொதிக்கிறீங்களே! நான்தான் சொல்றேன்ல்ல டென்ஷன் ஆகாதீங்க உங்க நல்லதுக்காத்தான் சொல்லறேன்!

//வடிகட்டின பொய்
மதம் என்ற இடத்தில் எந்த அடையாளமும் இல்லாமல் ஒரு மனிதன் உள்ளான் என்றால் சாத்தியமே இல்லை. நீ கருங்காலி என்பதோடு பொய்யன் என்றும் நிரூபித்து விட்டாய்...// சரி… நான் பொய்யன், கருங்காலி, RSS கைக்கூலி, அப்புறம் .. இவ்வளவு நேரமாகியும் இன்னும் குர்ஆன் வசனங்கள் வரலையே?

நீங்க என்னதான் காட்டுக் கத்தல் கத்தினாலும் ஒன்று மட்டும் நிச்சயம் நான் வெளிப்படுத்த இருக்கும் விஷயத்தை எவனாலும் தடுக்க முடியாது!

உங்களால் எங்களுக்குப் பதில் சொல்ல முடியாது அதற்கான அறிவு இருப்பதாகவும் தெரியவில்லை.

முடிந்தால் திறமையிருந்தால் தடுத்துப்பார்!!

//நீ முதலில் அறிவோடு எழுது. அப்புறம் எனக்கு அறிவிருக்கிறதா என பார்க்கலாம்.
இஸ்லாத்தையும் குரானையும் தவறான நோக்கத்தில இழிவுபடுத்தும் கருங்காலியான
உனது எழுததுகள் அனைத்தும் 6
பைத்தியகாரதனமானவை அத பைத்தியந்தான் படித்து கருத்து சொல்லனும்.
நான் எதுக்கு? // நான் இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன் இதற்கே இவ்வளவு டென்ஷனா? நாம இந்த தலைப்பில் விவாதிக்க இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு! அதுக்குள்ள இவ்வளவு டென்ஷன் ஆன எப்படி? நாம் இன்னும் நிறைய தூரம் போகனும்! அண்ணன் பீஜேவோட ஸிஹ்ரையும் ஷிர்க்கையும் எப்படி மறுக்கிறேங்கிறத பொறுமையா
கவனியுங்க…!

என்ன புரியுதா…?

Anonymous said...

தனிப்பட்ட முறையில் உன்னை திட்ட குரான் வசனங்கள் எதற்கு.
ஆவணங்களின்படி உன் மதம் என்ன என்பதை நிரூபி.
மனிதன் என்றால் பிறர்மனம் நோகும்படி ஒரு மதத்தை வசை பாட வேண்டுமா.Anonymous said...

மதத்தை சீர்திருத்தும் வகையில் உனது பதிவுகள் ஏதாவது உண்டா? வெறும் மத துவேஷம்தானே உண்டு.பிறகென்ன இஸ்லாமியர்களுக்கு நன்மை செய்வதாக பில்டப் வேறு.கருங்காலி கருங்காலி

Anonymous said...

முடிந்தால் தடுத்துப்பார் என எக்களிக்கும் போதே இந்த தளத்திற்கு இந்துத்வா ஆதரவு உண்டென்று புரிகிறது. இதை முதலிலே ஒத்துக்கொண்டிருநதால் நேரம் வீணாகியிருக்காது.

தஜ்ஜால் said...

வாங்க Anonymous,
அஸ்ஸலாமு அலைக்கும்!

எப்படி இருக்கீங்க? வியாபரமெல்லாம் எப்படிப் போகுது? இப்படி டென்ஷனா இருந்த வியாபாரத்தை யாரு கவனிப்பாங்க?

//முடிந்தால் தடுத்துப்பார் என எக்களிக்கும் போதே இந்த தளத்திற்கு இந்துத்வா ஆதரவு உண்டென்று புரிகிறது. இதை முதலிலே ஒத்துக்கொண்டிருநதால் நேரம் வீணாகியிருக்காது.//
நீங்க ரொம்பவும் சிரமப்படற மாதிரி தெரியுது! இந்த தளத்தை இந்துத்துவா ஆதரவு தளம், இதுல எழுதறவங்க எல்லாம் RSS கைக்கூலிகள்னு முஸ்லீம்கள் மத்தியில் சொல்லிவிட்டால், முஸ்லீம்கள் யாருமே இந்த தளத்தை படிக்கமாட்டாங்கன்னு நினைச்சு நீங்க ஒவ்வொரு பினூட்டத்தையும் போடறீங்க! உங்களைப் பார்த்தால் பரிதாபமா இருக்கு! நீங்கள் நினைக்கிற அளவிற்கெல்லாம் இந்துத்துவாவாதிகளுக்கு மூளை கிடையாது.

குருட்டுநம்பிகையை மட்டும் வச்சிகிட்டு பின்னுட்டம் போடறது எந்த வையிலும் பலன் தராது!

வேறவழியில முயற்சி செய்யுங்க!

வாழ்த்துக்கள்!

Anonymous said...

நீ கதறிக் கேட்கிறதால இது இந்துத்வா ஆதரவு தளம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.எனக்கு வயது 60 என்பதால் ஒருமையில் பேசுகிறேன். நீ வயது குறைந்தவனாய் இருப்பாய் என நம்புகிறேன்.
நபிகளை தரககுறைவாக ஏசுவதன் மூலம் என்ன சாதிப்பாய்.நான் கேட்ட பல கேள்விகளுக்கு நீ
இன்னும் பதில் தரவில்லை.

தஜ்ஜால் said...

வாங்க Anonymous,


ஸலாம் சொன்னால் பதில் சொல்ல வேண்டுமென்ற அடிப்படைகூடத் தெரியாமல் 60 வயதை அடைந்திருக்கிறீர்களே தாத்தா! கொடுமை!!!

// எனக்கு வயது 60 என்பதால் ஒருமையில் பேசுகிறேன். நீ வயது குறைந்தவனாய் இருப்பாய் என நம்புகிறேன்.// நான் உங்களிடம் வயதைப்பற்றி கேட்டேனா? இல்லையே? பிறகு எதற்காக இதை இங்கு பதிவு செய்தீர்கள்?
உறுத்தல்..! இதுதான் உங்களைப் போன்றவர்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் வேறுபாடு!

//‘நீ கதறிக் கேட்கிறதால இது இந்துத்வா ஆதரவு தளம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.// நீங்கள் ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாமலிப்பது எங்களைப் பொறுத்தவரை சமம்தான்.
//நபிகளை தரககுறைவாக ஏசுவதன் மூலம் என்ன சாதிப்பாய்.// நான் ஏசினேனே? எங்கே கனவு ஏதேனும் கண்டீர்களா?

//நான் கேட்ட பல கேள்விகளுக்கு நீ இன்னும் பதில் தரவில்லை.// அப்படியா?
“நீ கதறிக் கேட்கிறதால” இந்த வார்த்தைப் பிரயோகம் எந்த வயதினர் பயன்படுத்துவர் என்பதுகூட தெரியாமல் ஒரு சப்பைக்கட்டு வேறு! கொண்டையை மறைய மாட்டேன் என்கிறது?
இது முகநூல் அல்ல!

புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்

Anonymous said...

உண்மைக்கும் உனக்கும் எந்த தொடர்புமில்லையா.
கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் வரலியே.
ஆவணப்படி நீ எந்ந மதம் என உள்ளதுஃ
ஒன்றுமில்லை என்ற சப்பைக்கட்டு வேண்டாம்.
ஆவணங்களில் மதத்திற்கு நேராக என்ன உள்ளது

Anonymous said...

கருங்காலி உனது குடும்பத்தார் இஸ்லாமியர் என்று அறிய முடிகிறது.உனது குழந்தைகளின் ஆவணங்களில் தகப்பனார் இஸ்லாம் என்றுதானே இருக்கும்.இந்த வார்த்தைகளை நீ நீக்க முடியுமா. ஒரு தலைமுறை வேண்டும் உன் அடையாளத்தை தொலைக்க.
உன் உண்மைபெயர் போட்டு பதிவிட முடியுமா.
பாதுகாப்பு பிரச்னை உண்டு.
பிஜே விற்கு உன்னை தெரியும் என்று சொன்னது உண்மையா பொய்யா தெரியவில்லை.உன் வார்த்தைகள் அனைத்தும் பொய்யாகத்தான் உள்ளது.

sagotharan said...

இதில் ஏதேனும் தவறாக பதியப்பட்டு இருப்பின் அழகாக அதற்க்கு பதில் அளிக்கலாமே ஏன் இப்படி முஸ்லிம் சகோதரர்கள் பின்வாங்குகிறார்கள் ?... நானும் எவ்வளவோ முறை அவர்களிடம் கூறி விட்டேன் ! என்னால் இதற்க்கு தர்க்க ரீதியா பதில் அளிக்க முடியவில்லை என்று உதவியும் கேட்டாகிவிட்டது .. யாரும் பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை இனியாவது விளக்கம் இந்த தளத்திலே தர முன்வந்து பல பேருடைய ஈமான் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டுகிறேன் !

Anonymous said...

தவறாக இல்லை கேவலமாக உள்ளது.

தஜ்ஜால் said...

வாங்க sagotharan,

வருகைக்கு நன்றி!
எவ்வளவு கூறினாலும் புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார் நண்பர் Anonymous. அவருக்கு நீங்களாவது கொஞ்சம் புரிய வையுங்கள்.

தஜ்ஜால் said...

வாங்க Anonymous,

பயங்கரமாக சூடாகிவிட்டீர்கள் போலிருக்கிறது. Cool down!!!
எங்களைப்பார்த்தீர்களா எவ்வளவு அமைதியாக பதிலளித்துக் கொண்டிருக்கிறோம். பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்!!

என்னை/எங்களைப்பற்றிய தனிப்பட்ட எந்தத் தகவலையும் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! விரும்பினால் பதிவைப்பற்றி கேட்கலாம், பதில் சொல்கிறோம்!!!

நாங்கள் உங்களைப்பற்றி ஏதேனும் தகவல் கேட்டிருக்கிறோமா? இல்லை!! இங்கு அதற்கான எந்த அவசியமும் இங்கு இல்லை! காரணம் இங்கு விவாதப் பொருள் இஸ்லாம்! நீங்களோ நானோ அல்ல.

இஸ்லாம்பற்றி விவாதிப்பதிற்கு இஸ்லாமிய அறிவு வேண்டும். அது உங்களுக்கு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமிருப்பதாக இதுவரை தெரியவில்லை.

மீண்டும் வேறு எதையாவது முயற்சி செய்யுங்கள்!!!

வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

பிறகு எதற்காக சுய புராணம் படிக்கிறாய்.
இஸ்லாத்தை கேவலப்படுத்தி எழுதுபவனிடபம் எதற்கு விவாதிக்க வேண்டும்.
நீ இதுவரை பல அறிஞர்களின் தளங்களில் பதிவிட்டு இருப்பாய்அதை ஒரு பைத்தியக்காரனின் புலம்பலாக நினைத்திருப்பார்களே தவிர அதை ஒரு பொருட்டாகவே மதித்திருக்மாட்டார்கள்.
பிறகு எப்படி உன்னிடம் விவாதிப்பேன்.
நீ கருங்காலி. நான் கோபமானேன் என அடிக்கடி சொல்கிறாயே கருங்காலி சூடானது நானா நீயா.
முழுமையாக நீ இஸ்லாத்திலிருந்து வெளியேறாத வரை நீ கருங்காலிதான்.

தஜ்ஜால் said...

வாங்க Anonymous,

அஸ்ஸலாமு அலைக்கும்!

எப்படி இருக்கீங்க?

இன்னைக்கு கடைக்கு லீவுதானே?

அப்புறம் வியாபரமெல்லாம் எப்படிப் போகுது?

//பிறகு எதற்காக சுய புராணம் படிக்கிறாய்..// இத இத இதைத்தான் எதிர்பார்த்தேன்!! நான் எதிர்பார்த்த பாதிப்பை அது உண்டாக்கியிருக்கிறது என்பது உங்களது பின்னுட்டங்களைப் படிக்கும் பொழுது நன்கு உணரமுடிகிறது. அல்ஹம்துலில்லாஹ்!!

//இஸ்லாத்தை கேவலப்படுத்தி எழுதுபவனிடபம் எதற்கு விவாதிக்க வேண்டும்// விவாதிக்க வேண்டாம்! ஒரு திருத்தம்! குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இருக்கும் அறிவுபூர்வமான கருத்துக்களைத் தொகுத்துத் தருகிறேன். அது உங்கள் பார்வைக்குக் கேவலமாகத் தெரிகிறது என்றால் நீங்கள் சந்திக்க வேண்டிய நபர் கண்ணுமனி பொன்னுமணி முஹம்மது நபி (ஸல்)!

//நீ இதுவரை பல அறிஞர்களின் தளங்களில் பதிவிட்டு இருப்பாய்// ஆமாம் உண்மைதான் மறுக்கவில்லை. என்னுள் மாற்றங்கள் துவங்கிய காலத்தில் பல ஆலீம்களிடம் ஐயங்களை நேரடியாகவும் கடிதங்கள் மூலமாகவும் கேட்டிருக்கிறேன் அதுமட்டுமல்ல. த.த.ஜ முல்லாக்களில் அப்துந்நாசர் போன்ற ஒரு சிலருடன் தொலைபேசியிலும் உரையாடியிருக்கிறேன். இன்றுவரை தெளிவான பதில்களைக் கொடுக்க ஒருவராலும் முடியவில்லயென்பதுதான் வேடிக்கை.! இன்றும்கூட பல ஆலீம்களுடம் நேரடித் தொடர்பில் இருக்கிறேன்!
அல்ஹம்துலில்லாஹ்!

// அதை ஒரு பைத்தியக்காரனின் புலம்பலாக நினைத்திருப்பார்களே தவிர அதை ஒரு பொருட்டாகவே மதித்திருக்மாட்டார்கள்.// அவர்கள் பொருட்டாக மதித்தார்களா மதிக்கவில்லையா என்பதை நீங்கள் யூகிக்க வேண்டிய அவசியமில்லை!

// பிறகு எப்படி உன்னிடம் விவாதிப்பேன். // உங்களை நான் விவாதிக்க அழைக்கவில்லையே! பொதுவாக விவாதிக்க திறனும் அறிவும், நல்ல பண்புகளும் அவசியம்! அத்தகையவர்களுடன் மட்டுமே விவாதிப்பது வழக்கம். உங்களைப் போன்றவர்களை நான் விவாதிக்க அழைக்கவும் மாட்டேன். விருப்பமிருந்தால் பதிவு தொடர்பான கேள்விளைக் கேளுங்கள் என்றுதான் சொல்லிருக்கிறேன். விருப்பமில்லையா கடந்து சென்று கொண்டேயிருக்கவும்!

// நீ கருங்காலி. நான் கோபமானேன் என அடிக்கடி சொல்கிறாயே கருங்காலி சூடானது நானா நீயா.// அமைதி! அமைதி!! ஏன் கொதிக்கின்றீர்கள்? அமைதியாக உரையாடுங்கள்! என்னைப் பாருங்கள் இந்த உரையாடலில் தவறாக ஒரு வார்த்தையைக்கூட பயன்படுத்தியிருக்க மட்டேன். அதுதான் மதவெறியர்களுக்கும் பகுத்தறிவுவாதிகளுக்கும் இருக்கும் வேறுபாடு! உங்களைச் சொல்லி குற்றமில்லை முஹம்மதின் போதனைகள் அப்படி இருக்கும் பொழுது நீங்கள் என்ன செய்ய முடியும்? உங்களை நினைக்கையில் பரிதாபமாக இருக்கிறது. நண்பர் Anonymous மீது அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக! (ஆமீன்)

//முழுமையாக நீ இஸ்லாத்திலிருந்து வெளியேறாத வரை நீ கருங்காலிதான்.// இப்பொழுதுகூட ஜும்ஆ தொழுகையில் கலந்து கொண்டுவந்துதான் இந்த பதிலை எழுதுகிறேன். ஒரு முஃமினைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிறீர்கள்? இஸ்லாத்திலிருந்து வெளியேற வேண்டுமா? நஃவுதுபில்லாஹ். அஸ்தஃபிருல்லாஹ்!
யா அல்லாஹ், என்னை இஸ்லாத்திலிருந்து வெளியேற தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருக்கும் இந்த நண்பரை ’கருங்காலி’ என்ற ஷைத்தானின் பிடியிலிருந்து காப்பாற்றி அவருக்கு ஹிதாயத்தை வழங்குவாயாக! (ஆமீன்)

Javith Naseem said...

Intha thalam RSs Ku kagavo ilai kanmoodi thanamaga nambum ungalai pondravargalukagavo Alla ithu yengalai pondra madhathai veruthu manidhargala ullavarkalin arivu pasikaga. mudinthal nengal ingu varuvathai thavirthu kolungal - Anonymous

நந்தன் said...

குர்ஆனிலும் ஹதீதுகளிலும் எல்லாம் சரயாக உள்ளது என்று படிக்காமலேயே மூடநம்பிக்கையில் இருக்கும் அனானி எப்படி உங்களுடன் விவாதிப்பார்?
ஆறுவயுது சுறுமியை >>>>>>>>>முகம்மதுவை மறுக்க அவரிடம் என்ன இருக்கிறது? ஒன்றும் கிடைக்கவில்லை போலும் அதான் குறைக்கிறார்.

Anonymous said...

யாரு புது அல்லக்கை?

Anonymous said...

ஜாவித் என்ற அல்லக்கையே பன்றிகள் உலவும்
சாக்கடைக்கு தெரியாமல் வநதுவிட்டேன்.
இனி வரமாட்டேன்.

Varatharaj Vijayasundaran said...

Sir, you have not yet addressed the issues discussed but you are retreating it is unfair.

தஜ்ஜால் said...

வாங்க Javith Naseem,

வருகைக்கு நன்றிகள்!

நமது தளம் குறிப்பாக இஸ்லாமைப் பற்றி விவாதிப்பதர்கு மட்டும்தான்! ஆனால் நண்பர் Anonymous தனிநபர் வசைபாட வந்திருக்கிறார். முகநூலிலுள்ள மதவெறி பக்கங்களுச் சென்றால் அவருக்குத் தேவையானது கிடைக்கும். இடம் தெரியாமல் வந்துவிட்டார்!

தஜ்ஜால் said...

வாங்க நந்தன்,

வருகைக்கு நன்றிகள்!

//குர்ஆனிலும் ஹதீதுகளிலும் எல்லாம் சரயாக உள்ளது என்று படிக்காமலேயே மூடநம்பிக்கையில் இருக்கும் அனானி எப்படி உங்களுடன் விவாதிப்பார்?// சரியென்றோ தவறென்றோ விவாதிக்க குர்ஆன் ஹதீஸ்களை அறிந்திருக்க வேண்டும். குருட்டுநம்பிக்கைகளைக் கொண்டு விவாதிக்க வந்தால் தனிநபர்களை வசைபாடிவிட்டுத்தான் செல்லமுடியும்!

தஜ்ஜால் said...

வாங்க Varatharaj Vijayasundaran,

வருகைக்கு நன்றிகள்!

நானும் பொறுமையாக பல முறை தெளிவாக எடுத்துக் கூறிவிட்டேன் நண்பர் – Anonymous கேட்பதாகவே இல்லை!

Ant said...

இருக்கிறதாக இல்லையா என கண்டுபிடிக்க முடியாதபடி உங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகளில் பார்க்கலாம். அது உள்ளே போனால் அதன் பின்நிகழ்வுகள் நீங்கள் விரும்புவதாக இருக்காது என்பதை உறுதியாக அறியலாம். இன்னுமா “ ஜின் “ இருக்கிறாதா? என்ற சந்தேகம். அல்லாவின் படைப்பை இப்படியா சந்தேகப்படுவது. (இந்த பதிவுக்கு பின்னூட்டமிட்டால் அதுவே ஒரு பதிவாக மாறிவிடும் போல் இருந்தால் இந்த சிறிய பின்னூட்டம் மட்டும்)

Javith Naseem said...

Nan antha sakkadaiyil irupartharku Intha sakkadaiye melu yendru ninaikiren. Panni yai ungaluku pidikathu so yennai panni yenkrirkal. nengal ivlo neram comment panni panni yena than solavarenga. sorry ungalaiyum panni nu solavendiathaiduchu

தஜ்ஜால் said...

வாங்க Ant,

வருகைக்கு நன்றி

ஒரு முஃமினால் ஜின் இல்லையென்று எப்படிச் சொல்ல முடியும்? நாம் முஃமின்களுக்கு அல்லாஹ்வின் படப்பைபற்றி புரியும்படி எடுத்துரைக்கிறோம்.

sadiqsamad said...

ரொம்ப நாளைக்கு பிறகு தளம் களை கட்டியுள்ளது😀வாழ்க வசவாளர் அனானி
யா ....அல்லாஹ் இன்னும் இன்னும் அதிகமான மூமின்ககளை இந்த தளத்திற்கு அறிமுகம் செய்வாயாக ஆ. மீன் ஆ. மீன் யா ரப். பீ லாலமீன்

sadiqsamad said...

ரொம்ப நாளைக்கு பிறகு தளம் களை கட்டியுள்ளது😀வாழ்க வசவாளர் அனானி
யா ....அல்லாஹ் இன்னும் இன்னும் அதிகமான மூமின்ககளை இந்த தளத்திற்கு அறிமுகம் செய்வாயாக ஆ. மீன் ஆ. மீன் யா ரப். பீ லாலமீன்