Thursday 30 April 2015

ஒரு மரணம் சில கேள்விகள் – 11

உமரிடம் ஒரு ஒற்றைப் பெருமூச்சு வெளிப்பட்டது. அழுது கொண்டிருந்த ஆயிஷாவை நோக்கினார், அந்தப் பார்வை ‘இறுதிநேரத்தில், இறைத்தூதர் எதையோ சொல்ல முயன்று கொண்டிருந்த பொழுது, மிகச் சாதுர்யமாக மிஸ்வாக் குச்சியை வாய்க்குள் திணித்ததுச் இறைத்தூதரை பேசவிடாமல் செய்து நாம் நினைத்ததை சாதித்து விட்டாய்!’ என்பதைப் போன்றிருந்தது.

முஹம்மதை அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தவர்களிடையே கிளம்பிய கண்ணீரும், சலசலப்பும் மெல்ல பரவி கூட்டத்தின் இறுதி வரை சென்றது.  இறுதியில் இப்ன் சுன்னா, இப்ன் ஷியா மற்றும் முனாஃபிக் நின்று கொண்டிருந்தனர்.

உமர், தலையை அசைத்து சுற்றிலும் நோட்டமிட்டார் எல்லோருமே முண்டியடித்துக் கொண்டு முஹம்மதின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர்.

உமர் தனது உதவியாரை அழைத்து மெல்லிய குரலில்,

” அபூபக்கருக்கு தகவல் சொல்லிவிடு” என்றார்

அந்த உதவியாளர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியேற, அவரை தொடர்ந்து வந்து கொண்டிருந்த உமர், அடுத்த காட்சியை அரங்கேற்ற தயாரானார்.



முஹம்மதின் உடல் அப்படியே இருந்தது. அங்கிருந்த சிலரால் முஹம்மது இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. ஒருவேளை திடீரென எழுந்து விடுவார் என நம்பி, உடலையே கவனித்துக் கொண்டிருந்தனர். முஹம்மதின் முகத்தை துணியால் மூடுவதற்கு எவருக்கும் துணிவில்லை. (தபரி-9, பக் 185)

வெளியில் உமர்,

“சில நயவஞ்சகர்கள் இறைத்தூதர் இறந்துவிட்டதாகக் கூறுகின்றனர். அவர் இறக்கவில்லை. மூஸா இப்ன் இம்ரான், அல்லாஹ்வைச் சந்திக்க சென்று நாற்பது நாட்கள் தனது சமுதாயத்தினரை விட்டு மறைந்திருந்தார். மூஸா இறந்துவிட்டதாக அவர்கள் கூறிக் கொண்டிருந்த திரும்பிவந்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக இறைத்தூதர் திரும்ப வருவார்கள் தான் இறைந்துவிட்டதாகக் கூறியவர்களின் கையையும் காலையும் வெட்டுவார்கள்!” என்று கோபமாக உறுமினார். (தபரி-9, பக் 184).

சுற்றியிருந்தவர்கள், உமரை வினோதமாகப் பார்த்தனர்.  ஆனால், அங்கு ஒரு கூட்டம் ஒருவருக்கொருவர் கண்களால் சமிக்கை செய்தவாறு  மெல்ல விலகி வெளியேறிக் கொண்டிருந்ததை உமர் உட்பட எவருமே  கவனிக்கவில்லை.

“ரஸூலுல்லாஹ் தனக்கு மரணமில்லையென்று ஒருபொழுதும் சொன்னதில்லையே? உமருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா?” என்று  கிசுகிசுத்துக் கொண்டனர் எவருக்கும் வெளியில் சொல்லும் துணிச்சல் இல்லை!

உள்ளே ஒரு கூட்டம் முஹம்மதின் உடலையே பார்த்துக் கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல வெண்மையான முஹம்மதின் முகம் சாம்பல் நிறத்திற்கு மாறத் துவங்கியது. (தபரி-9, பக்-185) இனி முஹம்மது திரும்பி வரமாட்டார் என்று முடிவு செய்து அவரது முகத்தை மூடியது!

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முனாஃபிக் அந்தச் சூழ்நிலையிலும் அடக்க முடியாமல் சிரித்துவிட்டான்.

 இப்ன் சுன்னாவும், இப்ன் ஷியாவும் அவனது தலையைப் பிடித்து கீழே அழுத்தியவாறு சற்று தொலைவிற்கு அழைத்துச் சென்றனர்.

“அறிவுகெட்டவனே இந்த இடத்தில் எதற்காக சிரித்துக் கொண்டிருக்கிறாய்..?” என்று எரிந்து விழுந்தான்.

“உமர் பேசுவதையும், இவர்கள் செய்து கொண்டிருப்பதையும் கவனிக்கும்பொழுது சிரிக்காமல் எப்படி இருக்க முடியும்? உண்மையிலேயே இவர்களுக்கு அறிவு இருக்கிறதா இல்லையா?”

“இறைத்தூதர் இறந்த அதிர்ச்சியில் இப்படி பேசுகிறார்!” என்றான் இப்ன் ஷியா.

“ஒருவேளை உமர் சொல்லுவதைப் போல அல்லாஹ்வின் தூதர் திரும்பிவந்து கையையும் காலையும் வெட்டுவதாக இருந்தால் அல்லாஹ்வின் தூதர் இறந்துவிட்டதாக முதலில் அறிவித்த ஆயிஷாவின் கையையும் காலையும்தான் வெட்டவேண்டும்!”

”இறைத்தூதரின் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக அவரால் இந்த மரணச் செய்தியை உடனடியாக ஏற்கமுடியவில்லை!”

“அன்பா...? இதை வேறு எவரிடமாவது போய்ச் சொல்! என்னிடம் வேண்டாம்!” என்றான் முனாஃபிக்.

”... ...!?”

“இறைத்தூதர் மரணத்தருவாயில் இருப்பதும் எந்த நேரத்திலும் அவரது மரணம் நிகழக்கூடுமென்பது இந்நகரத்திலிருக்கும் குழந்தைக்குகூடத் தெரியும்! இவரென்னவென்றால் மூஸா திரும்பிவந்ததைப் போல நமது இறைத்தூதரும் திரும்பி வருவாரென்று இட்டுக்கட்டிக் கொண்டிருக்கிறார். மூஸா, சினாய் மலைக்கு சென்றதாகக் கூறுவதும் இதுவும் ஒன்றா?”

“... ...!?”

முனாஃபிக் தொடர்ந்து கொண்டிருந்தான்,

“அல்லாஹ்வைச் சந்திக்கச் செல்கிறேன், திரும்பிவந்துவிடுவேன் என்று எப்பொழுது அல்லாஹ்வின் தூதுர் கூறினார்?”

“இறைத்தூதரின் இறப்பை அவரால் ஏற்றுக் கொள்ளமுடியால் துக்கத்தில் புலம்புகிறார்!” என்றான் இப்ன் ஷியா மறுபடியும்.

“துக்கமா... இவர்களுக்கா... அதை நீ பார்க்கத்தான் போகிறாய்!”

“உமரின் துக்கம் பொய்யானது என்கிறாயா?”

“ஆமாம்!” என்று சொல்லிக் கொண்டிருந்த பொழுது சற்று தொலைவில் குதிரையில் யாரோ வருவது போன்று தோன்றியது. மூவரும் பேச்சை நிறுத்திவிட்டு அதை கவனிக்கத் துவங்கினர். இன்னும் நெருக்கமாக வர,

“அபூபக்ர் போன்று தெரிகிறது!” என்றான் இப்ன் ஷியா

”இத்தனை அருகில் இருந்தும் அபூபக்ர் இங்கு ஏன் வரவில்லை? மரண நேரத்தின் பொழுது  அருகில் இருந்து இறைத்தூதரை கவனித்திருக்கலாம்! அல்லாஹ்வின் தூதருக்கு அருகில் இருப்பதைவிட அபூபக்ருக்கு வேறு ஏதாவது ’முக்கிய’ அலுவல் ஏதாவது இருந்திருக்குமோ?” என்றான் இப்ன் சுன்னா.

”அல்லாஹ்வின் தூதர் இறந்து மூன்று மணி நேரமாகி, அவரது உடல் கூட  சாம்பல் பூத்துவிட்டது. அருகிலிருந்தும் அபூபக்கரால் மட்டும் வரமுடியவில்லை. அப்படியென்ன   ‘முக்கிய’ அலுவலோ? என்றான் முனாஃபிக்.

“அல்லாஹ் நாடவில்லை என்று நினைக்கிறேன்!” என்றான் இப்ன் ஷியா.

“முக்கு’வதற்கா...?” என்றான் இப்ன் சுன்னா

”பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இல்லையோ?” என்றான் முனாஃபிக்.

“இருக்கலாம்...!” என்றான் இப்ன் சுன்னா

”அல்லாஹ்வின் தூதரையே வாயடைக்கச் செய்யும் ஊரறிந்த முரடர் உமர் இங்கு பொறுப்பில் இருக்கும் பொழுது அபூபக்ர் கவலைப்பட வேண்டியதில்லை.” என்றான் முனாஃபிக்.

”வா... அபூபக்ர் என்ன செய்கிறார் என்பதை கவனிக்கலாம்! ” என்றான் இப்ன் சுன்னா.

“சரி.. வா போகலாம்!” என்று முனாஃபிக்கின் கையை இழுத்தான் இப்ன் ஷியா

”நான் வந்தால் உங்களுக்குத்தான் பிரச்சினை ஏற்படும்!”

“பரவாயில்லை வா போகலாம்! உனக்குப் பிடிக்கவில்லையெனில் வெளிப்படையாகக் காண்பிக்காதே மனதிற்குள் வைத்துக்கொள்!” என்று முனாஃபிக்கை இருவரும் கையைப் பிடித்து இழுத்தனர்.

மூவரும் கூட்டத்தை நோக்கித் திரும்பிவந்தனர். இவர்கள் திரும்பி வருவதற்கும் அபூபக்ர் அங்கு வந்து சேருவதற்கும்  சரியாக இருந்தது. யாரிடமும் எதுவும் பேசாமல் முஹம்மதின் உடல் வைக்கப்பட்ட இடத்தை நோக்கிச் சென்றார். அருகில் சென்று முகத்தை மூடியிருந்த துணியை விலக்கி நெற்றியில் முத்தமிட்டு மீண்டும் முஹம்மதின் முகத்தை மூடினார். வெளியில் வந்து  உறுமிக் கொண்டிருக்கும்  உமரிடம் சென்றார்.

“உமரே! அமருங்கள்" என்றார்.

உமர் உட்கார மறுத்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் உமரை விட்டுவிட்டு அபூபக்ரை நோக்கி வந்தனர்.

"நிற்க, உங்களில் யார் முஹம்மத் அவர்களை இறைவன் என நம்பி வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள், முஹம்மத் நிச்சயம் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளட்டும் உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் 'அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவேமாட்டான்' என்பதை அறிந்துகொள்ளட்டும்.

"அல்லாஹ் கூறினான்; முஹம்மது ஒரு  தூதரேயன்றி வேறல்லர்; அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்றிருக்கிறார்கள்; எனவே, அவர் இறந்துவிட்டால், அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழை மதத்திற்கே) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் தம் கால் சுவட்டில் திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு விரைவில் பிரதிபலன் வழங்குவான்”  என்றார்.

உமர் உட்பட அங்கு கூடியிருந்தவர்களில் சிலர், இவ்வசனத்தை இதற்கு முன்னர் அறியாதவர்கள் போன்றும், அபூபக்ர் மூலமாகத்தான் இதை அவர்கள் அறிந்தது போன்றும் இதனை ஓதக் கேட்ட மக்கள் யாவரும் இதனைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டேயிருந்தார்கள்.

அப்பொழுதுதான் சுயநினைவிற்கு வந்ததைப் போன்று திடீரென உமர் தரையில் வீழ்ந்து, கண்ணீர்விட ஆரம்பித்தார்.

அபூபக்ர் உமரின் அருகில் வந்து,

“ம்ம்... போதும்.. எழுந்திருங்கள்! அடுத்த பணியை கவனிப்போம்!” என்று கிசுகிசுத்தார்.

உமர் அழுதுகொண்டே எழுந்தார்.

“அழுதது போதும்! போய் கண்காணிப்பை அதிகப்படுத்துங்கள்” என்றார் அபூபக்ர். அதைக் கேட்டவுடன்,

“சரி...!” என்று கண்களைத் துடைத்து, சட்டென இயல்பு நிலைக்கு வந்தார் உமர்.

உமர் அங்கிருந்து வெளியேறினார்.

அலீ உட்பட இன்னும் சில ஸஹாபாக்கள், முஹம்மதின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அபூபக்கர் அவர்களுடன் இணைந்து கொண்டார்.
+++++

சிறிது நேரத்தில், முஹம்மதின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்குத் திரும்பிவந்தார் உமர். அவரது முகத்தில் பரபரப்பும் கோபமும் குத்தகைக்கு எடுத்து குமுறிக் கொண்டிருந்தது. அங்குமிங்கும் நோட்டமிட்டபடி குதிரையிலிருந்து இறங்கினார். என்ன செய்வதென்பது புரியாமல் அவரது கைகள் வாளை இறுகப்பற்றிக் கொள்வதும் விடுவிப்பதுமாக இருந்தது.

அபூபக்ர் எங்கே இருப்பார்?’ என்று கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
அருகிலிருந்த நபரை அழைத்து,

“நான் வெளியில் காத்திருப்பதாக அபூபக்கரிடம் போய்ச் சொல்!” என்றார்.

அந்த நபர் மெல்ல அன்னநடை பயின்றவராக வீட்டினுள் சென்றார். சிறிது நேரத்தில் அவர்மட்டும் திரும்பிவந்தார்.

“அபூபக்கரிடம் நான் வந்திருப்பதாகச் சொன்னாயா?”

“சொன்னேன்! அவர் இறைத்தூதரின் உடலை தூய்மைப்படுத்தும் பணியை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறாராம் அதனால் வரமுடியாது என்று சொன்னார்!”

“மீண்டும் அவரிடம் போய், அதைவிட முக்கியமான பணியிருக்கிறது உடனே வெளியில்வந்து என்னை சந்திக்கச் சொல்!”

அந்த நபர் மீண்டும் ஆட்டிக் கொண்டு, மெல்ல நடைபயின்று செல்வதைப் பார்க்கையில்  பொறுமையிழந்த உமரின் கைகள் வாளை இறுகப்பற்றி, அப்படியே இவனது காலை வெட்டியெறிந்தால் என்னவென்று தோன்றியது.

அந்த நபர் உள்ளே சென்று அபூபக்கரிடம்,

”மிக அவசரமான பணியாம், உமர் உங்களை நேரடியாக வரச்சொன்னார்!”

“உள்ளே வந்து சொல்லமுடியாத அளவிற்கு அப்படியென்ன அவசரம்?”

“அதை நீங்கள் அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்!”

“ம்ம்... சரி... வருகிறேன் என்று போய்ச் சொல்!” என்றார் சிடுசிடுப்பாக

நான் என்ன செய்தேன், இவர்கள் எதற்கு என்மீது எறிந்து விழுகின்றனர் என்று நினைத்தவாறு அந்த நபர் அங்கிருந்து விலகினார்,

அபூபக்ர் மனதிற்குள்,  

’வரவர இந்த உமரின் தொல்லை தாங்க முடியவில்லை, இறைத்தூதரின் உடலை அடக்கம் செய்வதைவிட அப்படியென்ன முக்கியவிஷயம் இருக்கப்போகிறது?’ என்று எண்ணியவாறு வீட்டிலிருந்து வெளியில் வந்து, பொறுமையிழந்து அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கும் உமரிடம் சென்றார்.

”என்ன விஷயம் சொல்லுங்கள்! இறைத்தூதரின் உடலைத் இறுதிப்பயணத்திற்கு தயார் செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது!” என்றார் விரைப்பாக,

அவரது கையைப் பிடித்து தரதரவென்று ஓரமாக இழுத்துச் சென்று,

“அன்சாரிகள் தங்களது தலைவரை தேர்ந்தெடுத்துவிட்டனராம்!” என்றார் பரபரப்பாக.

அபூபக்கருக்கு ஒரு நிமிடம் நினைவு தவறி உலகமே தலைகீழானது போலிருந்தது. எதுவும் பேசத் தோன்றமல் சிலைபோல நின்று கொண்டிருந்தார்.

“நீங்கள் போய் இறைத்தூதரின் இறுதிப் பயண பணிகளை கவனித்துக் கொள்ளுங்கள்” என்றார் கிண்டலாக

“என்ன சொல்கிறீர்கள்?”

“ஆமாம் அன்சாரிகள் அடுத்த ஆட்சியாளரை தேர்தெடுத்து பை’த் வழங்க 'பனூசாஇதா' சமுதாயக்கூடத்தில் ஒன்றுகூடியிருக்கின்றனராம்!”

“இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை? நீங்கள் அங்கு சென்று பார்த்தீர்களா?”

“எனக்கே இப்பொழுதுதான் தெரியும். தகவல் வந்தவுடன் உங்களிடம் வந்து விட்டேன். “முதலிலேயே என்றால்...? அன்சாரிகள் ஒன்றுகூடுவதற்கு முன்பாகவா? அல்லாஹ்வின் தூதர் இறப்பதற்கு முன்பாகவா?”

“சரி...! விடுங்கள். பதட்டத்தில் ஏதோ உளறிவிடேன். நாம் இப்பொழுது என்ன செய்வது?”

”அவர்களை எப்படியாவது தடுத்தாக வேண்டும்! இல்லையெனில் நாம் இத்தனை நாட்களாக போட்ட திட்டங்கள் அனைத்தும் வீண்!”

“வாருங்கள் நாம் நேரடியாகச் சென்று அன்சாரிகளைச் சந்திப்போம்!”

“இறைத்தூதரின் இறுதிச்சடங்கு...? என்று இழுத்தார் உமர்.

“அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் இறைத்தூதர் எங்கும் போய்விடமாட்டார். நாம் வரும்வரை அவர் காத்திருக்கட்டும்!” என்றார்.



தபரி V -10, Page 3, 4

இருவரும் 'பனூசாஇதா' சமுதாயக்கூடம் இருக்கும் திசையை நோக்கி நடக்கத் துவங்கினார்கள்.

இருவரும் ஓட்டமும் நடையுமாக 'பனூசாஇதா' நோக்கிச் சென்று கொண்டிருந்த பொழுது  அங்கு நின்று கொண்டிருந்த கொண்டிருந்த அபூஉபைதா இப்னு ஜர்ராஹ்-வையும் அழைத்துக்  மூவரும் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது எதிரில் வந்து கொண்டிருந்த ஆஸிம் பின் அதியும் உவைம் பின் சஇஅதாவும்,

“திரும்பிப் போய்விடுங்கள் நீங்கள் விரும்புவதைப் போல எதுவும் நடைபெறாது“ என்றனர்.

”அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட்டுக் கொள்கிறோம்!” என்றவாறு மூவரும் பனூசாஇதா நோக்கி முன்னேறினர்.

+++++++++++









தபரி V -10, Page 1, 2, 3

சிறிது நேரத்திற்கு முன்பு 'பனூசாஇதா' சமுதாயக்கூடத்தில்.
ஏறக்குறைய முன்னூறு பேர் அங்கு கூடியிருந்தனர். அனைவருமே அன்சாரிகள் அதாவது மதீனாவாசிகள். கூட்டத்திலிருந்த ஒருவர்,

“நம்முடைய தரப்பிலிருந்து சஅத்பின் உபாதா அல் அன்சாரீ அவர்கள் பொறுப்பாளியாக இருக்கட்டும்” என்றார்

சஅத்பின் உபாதா அல் அன்சாரீக்கு உடல் நலம் குன்றியிருந்ததால் அவரால் எழுந்து நிற்கவே உரக்க பேசவோ முடியவில்லை. படுக்கையில் இருந்தவாறு, தனக்கு அருகில் இருந்து பணிவிடை செய்யும் அவரது உறவினர் வாயிலாக அந்தக் கூட்டத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பினார்.

“என்னுடைய உடல்ந்லம் சரியில்லாததால், எல்லோருக்கும் கேட்கும்படி என்னால் உரக்க பேசமுடியாது. எனவே நான் சொல்வதை எல்லோரும் கேட்குமாறு செய்யுங்கள்” என்றார் சஅத்பின் உபாதா.

அவரது உதவியாளர்,

”நீங்கள் சொல்வதை அப்படியே மனனம் செய்து உரத்த குரலில் எல்லோருக்கும் கேட்குபடி நான் சொல்கிறேன்” என்றார்.

சஅத்பின் உபாதா தனது உரையை ஆரம்பித்தார்.

“அன்சாரிகளே! இஸ்லாமில் மற்ற அரபு இனங்களுக்கில்லாத முன்னுரிமையும் பலன்களும் உங்களுக்கு இருக்கிறது. முஹம்மது தனது இனத்தினருடன் பத்து வருடங்கள் இருந்து, அவர்களை உருவ வழிபாடுகளிலிருந்து விலகி, கருணையாளனை வழிபட அழைத்தார்தார். அவரை ஒரு சிலரே நம்பினர். அவர் சிறந்ததை உங்களுக்கு வழங்கும் வரை
அவர்களால்  அல்லாஹ்வின் தூதரை பாதுகாக்கவோ, தங்களது மார்க்கத்தை பாதுகாக்கவோ அல்லது அவரது மதத்தை மற்றவர்களின்  எதிர்ப்பிலிருந்து உறுதியாக்கிக் கொள்ளாவோ முடியவில்லை. அவர் உங்களுக்கு மேன்மையை வழங்கி உயர்த்தினார். அவர் மீது நம்பிக்கையை ஏற்படும்படி அல்லாஹ் செய்து, அவரையும் அவரது தோழர்களையும் பாதுகாத்தான். நீங்கள்தான் அவரது எதிரிகளுக்கு எதிராக அதிகமாக போராடியது நீங்கள்தான். அவருக்காக அதிகமாக சிரமங்களை எதிர்கொண்டது நீங்கள்தான். எனவே வேறு எவரிடமும் கொடுக்காமல் நிலைமையை உங்களது கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்குமாறுவைத்துக் கொள்ளுங்கள்”

உடனே கூடியிருந்தவர்கள்,

“நீங்கள் சொல்வது சரிதான். நீங்கள் சொல்வதிலிருந்து நாங்களும் மாறுபடவில்லை மேலும் இந்த விஷயத்தைக் கையாளுவதற்கு உங்களையே பொறுப்பாளியாக நியமிக்கிறோம். நீங்களே எங்களுக்கு போதுமானவர்!” என்றனர்.

அவர்களுக்குள் விவாதங்கள் கிளம்பியது.

”இதை குறைஷிகளான முஹாஜிர்கள்(மெக்காவாசிகள்) ஏற்கவில்லையென்றால்?”

“.... ...?!”

“அவர்கள், அல்லாவின் தூதரது முதல் தோழர்கள் நாங்கள்தான்! நாங்கள் அவரது உறவினர்கள் என்று முஹாஜிர்கள் கூறினால்?”

கூட்டத்திலிருந்த சிலர்,

“அப்படியானால், நம்மிலிருந்து ஒரு தலைவர் அவர்களிலிருந்து ஒரு தலைவர் என்று சொல்ல வேண்டும்! ஆனால் இந்தத் தலைமைப் பொறுப்பு என்பதைத் தவிர வேறு எதுவும் நம்மைத் திருப்தி கொள்ளச் செய்யாது ” என்றனர்.

“இதுவே பலவீனத்தின் ஆரம்பம்” என்றார் சஅத்பின் உபாதா.

அபூபக்ர், உமர், அபூஉபைதா இப்னு ஜர்ராஹ் மூவரும் மூச்சிரைக்க அங்கு வந்து சேர்ந்தனர்.

அன்சாரிகளிடம் பேசுவதற்கென்று உமர் எந்த உரையையும் தயாரித்து வைத்திருக்கவில்லை. துண்டு துண்டாக தன் மனதில் இருப்பவைகளை இணைத்து பேசிவிடலாம் என்று முடிவு செய்து பேசுவதற்கு முற்படுகிறார்.

உமரின் நிலையை உணர்ந்த அபூபக்ர்,

“இது நமக்கு எளிதானதுதான். நான், எனது உரையை நிறைவு செய்த பின்னர் நீங்கள், உங்கள் மனதிலிருப்பதை பேசுங்கள்” என்றார்

”அல்லாஹ்வைத்தவிர கற்சிலைகளையும், மரச்சிற்பங்களையும் வணங்கிக் கொண்டிருந்த சமுதாயத்தில் அல்லாஹ் தனது தூதரை அனுப்பினான். தூதரின் போதனைகளும்,  தங்களது முன்னோர்களின் மதத்திலிருந்து விலகுவதும் அரேபியர்களுக்கு கடும் துன்பமாக இருந்தது. அல்லாஹ் உண்மையைப் பேசவும் தூதரின் மீது நம்பிக்கை கொள்ளவும் அவர்களிலிருந்து முஹாஜிர்களை வெளியாக்கினான். குறைந்த எண்ணிக்கையிலிருந்த முஹாஜிர்கள் கடும் எதிர்ப்பையும் துன்பங்களையும் சந்தித்தனர். அவர்கள்தான் இந்த உலகில் முதன்முதலாக அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள்; அவர்கள் அல்லாஹ்வின் தூதரது நண்பர்கள், உறவினர்கள் துதரின் மறைவிற்குப் பின்னர் இந்த தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியானவர்கள்.  வழி தவறியவர்களே முஹாஜிர்களை மறுப்பார்கள். அன்சாரிகளே இஸ்லாமில்ல் உங்களுக்கு மிகச் சிறந்த முக்கியத்துவம் இருப்பதை மறுக்க முடியாது. அல்லாஹ் அன்சாரிகளைப் பொருந்திக் கொள்வானாக. நாங்கள் தலைவர்கள் நீங்கள் உதவியாளர்கள். எந்த விஷயத்தையும் உங்களது ஆலோசனையின்றி முடிவு செய்ய மாட்டோம். உங்களது முடிவின் படியே செயல்படுவோம் என்று உறுதியளிக்கிறோம்” என்றார் அபூபக்ர்


ஹுபாப் பின் அல்முந்திர், என்பவர் எழுந்து நின்று,

”அன்ச்சாரிகளே...! அதிகாரத்தை நீங்கள் எடுங்கள் உங்கள் நிழலில் மற்றவர்கள் இருக்கட்டும். உங்களை எதிர்க்க எவருக்கும் தைரியமில்லை உங்களது அலோசனையின்றி எவராலும் இந்த விஷயத்தை செயல்படுத்தவும் முடியாது. செல்வத்திலும், எண்ணிக்கையிலும் வலிமையிலும் எதிரியை அதிர்க்கும் தைரியமும் கொண்டவர்கள் நீங்கள்தான். இவர்(அபூபக்ர்) சொல்வதால் உங்களது முடிவிலிருந்து பின்வாங்க வேண்டாம்.  அதனால் நாம் நம்மிலிருந்து ஒரு தலைவரையும்; அவர்கள் அவர்களிலிருந்து ஒரு தலைவரையும் தேர்ந்தெடுக்கட்டும்”

”நிச்சயமாக முடியாது! இரண்டு பேர் சேர்ந்து செயல்பட முடியாது. அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ்வின் தூதர் உங்களில் ஒருவராக இல்லாத நிலையில் அரேபியர்கள் உங்களது தலைமைப் பொறுப்பை ஒருபொழுதும் ஏற்க மாட்டார்கள். அவர்களிலிருந்து ஒருவர் தூதுத்துவம்  பெற்றிருக்கும் பொழுது, அவர்களில் ஒருவர் வழிநடத்துவதை  தடுக்க முடியாது. எங்களுக்குரிய தலைமைப் பதவியை பறிக்க விரும்புபவர்கள், நாங்கள் முஹம்மதுடைய உறவினர்கள், நண்பர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!”

ஹுபாப் பின் அல்முந்திர் மறுபடியும் எழுந்து,

”ஓ அன்சாரிகளே உங்களுடைய செயல்பாடுகளுக்கு நீங்களே தலையேற்க வேண்டும். ஸஹாபாக்களில் ஒருவர் சொல்வதை கேட்க வேண்டியதில்லை. உங்களுடைய பங்கிற்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டும். நீங்கள் கேட்பதை கொடுக்க மறுப்பவர்கள் இந்த நாட்டிலிருந்து வெளியேறலாம்.
'நான் சிரங்கு பிடித்த ஒட்டகம் சொறிந்து கொள்வதற்கான மரக்கொம்பு ஆவேன்; முட்டுக் கொடுக்கப்பட்ட பேரீச்ச மரம் ஆவேன். (அதாவது பிரச்சினையைத் தீர்ப்பவன் ஆவேன். நான் ஒரு நல்ல யோசனை கூறுகிறேன்: அன்சாரிகளான) எங்களில் ஒருதலைவர்; குறைஷிகுலத்தாரே! உங்களில் ஒரு தலைவர்' என்றார்.

அப்போது கூச்சல் அதிகரித்தது. உமர் பொறுமையிழந்து,

“அப்படியானால் அல்லாஹ் உன்னைக் கொல்லட்டும்!” என்றார்

“அல்லாஹ் உன்னைத்தான் கொல்வான்!” என்றார் ஹுபாப் பின் அல்முந்திர்

அபூபக்ருடன் வந்திருந்த அபூ உபைதா,

“ஓ  அன்சாரிகளே! இஸ்லாத்திற்கு முதன் முதலில் உதவி செய்தது அதை வலிமைப்படுத்தியது நீங்கள்தான்! நீங்களே அதை மோசமாக்கிவிடாதீர்கள் என்றார்.

அப்பொழுது அன்சாரிகளில் ஒருவரான பஷீர் இபின் ஸஅத் எழுந்து,

உண்மையில் அல்லாஹ்விற்காகவும் அவனது தூதருக்காகவும்தான் காஃபிர்களை போரில் எதிர் கொண்டோம். உலகின் அற்ப பதவிகளை எதிர்பார்த்து அல்ல! மேலும் முஹஹம்மது  குறைஷி குலத்தைச் சேர்ந்தவர் அவரது உறவினர்களே இதற்குத்  தகுதியானவர்கள். எனவே அவர்களை எதிர்க்கவோ அவர்களின் கருத்தில் வேறுபடவோ நான் விரும்பவில்லை” என்றார்

நிலைமை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வருவதை உணர்ந்த அபூபக்கர்,

”இது உமர்;  இது அபூ உபைதா இவர்களில் விருபுபவர்களை நீங்கள் தேர்வு செய்யுங்கள்” என்றார்.

ஆனால் அவர்கள் இருவரும்,

 ”அல்லாஹ்வின் மீது ஆணையாக அவ்வாறு அல்ல! நீங்களே சிறந்த முஹாஜிர், நண்பர், நல்லவர், அன்று குகையில் ஒளிந்திருந்த இருந்த இருவரில் ஒருவர்; கொள்கையிலும், தொழுகையிலும் அல்லாஹ்வின் தூதருக்கு அடுத்தது நீங்கள்தான்; உங்களைவிட இதற்குத் தகுதியானவர் யார்? எனவே உங்களுக்கு நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம்!”  என்றனர்.

எப்படியோ நாம் நினைத்தது நடந்துவிட்டது என்று தயக்கத்துடன் கையை பிசைந்து கொண்டிருந்த அபூபக்கரின் கையைப் பிடித்து உமரும். அபூ உபைதாவும் அபூபக்ரின் தலைமைக்கு கட்டுப்படுவதாக வாக்குறுதி அளித்தனர்.

முன்பே அபூபக்ருக்கு ஆதரவளித்துப் பேசிய அன்சாரிகளில் ஒருவரான பஷீர் இபின் ஸஅத் தாவிக் குதித்து அபூபக்ருக்கு பை’த்(வாக்குறுதி) வழங்கினார்.

மீண்டும் கூச்சலும் குழப்பமும் அதிகரித்தது.
தொடரும்…

தஜ்ஜால்.

Facebook Comments

15 கருத்துரைகள்:

Anonymous said...

Amazing no one put their comments

பிசாசுகுட்டி said...

சரியான சவுக்கடி, நெத்தியடி, மண்ணடி ...இன்னபிற அடிகளை கொடுத்தீர்கள்ன்னு வெத்து கமென்ட் போட முடியா அளவுக்கு நண்பர் தனது உரை நடைகள் மூலம் உண்மையிலேயே நடந்திருக்கவேண்டும் என்று சிந்திக்க வைத்துவிட்டார்..

அதனால் தான் கமெண்டுகள் இந்த முறை வரவில்லை போலும்.

தஜ்ஜால் said...

@ பிசாசுக்குட்டி,

இந்தத் தொடரை இஸ்லாமியர்கள் கூறும் வரலாற்று அடைப்படையில்தான் எழுதுகிறேன். சில புனைவுகள் செய்திருக்கிறேன் என்பதை மறுக்கவில்லை. குறிப்பாக இந்தப்பகுதியின் இறுதியில் நிகழும் அதிகாரப்போட்டி - விவாதத்தை தபரியில் இருப்பதை மொழிமாற்றம் மட்டுமே செய்திருக்கிறேன்.

தஜ்ஜால் said...

நண்பர்கள் கவனத்திற்கு,

அலுவலகப் பணியில் சற்று நெருக்கடியாக இருப்பதால் இத்தொடரின் அடுத்த பகுதியை வெளியிட முடியவில்லை. விரைவில் வருவேன்.

Ant said...

இந்த தளத்தை அணுகுவதில் அதிக சிரமம் சமீகாலமாக இருந்து வருகிறது. காரணம் புரியவில்லை. கட்டுரை 1400 ஆண்டுகளுக்கு முன் அழைத்து சென்றது. சம்பவங்கள் பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நிலையை நேரில் காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. பாராட்டுகள்!!!

Anonymous said...

Super

ஆனந்த் சாகர் said...

நமக்கு நாமே பின்னூட்டாம் இடுகிறோம். உண்மையான முஸ்லிம்களோ(!) அல்லது பெயர்தாங்கி முஸ்லிம்களோ(!) எவராவது தங்கள் கருத்தை இங்கு பதிவு செய்ய முன்வருகிறார்களா? அவர்கள் இஸ்லாத்தை பற்றிய உண்மைகளை புறக்கணித்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருப்பது தெரிகிறது. இருப்பினும் அவர்களுக்கு இப்படி ஒரு போலி இஸ்லாமிய பக்தி தேவையா என்று கேட்க தோன்றுகிறது.

Unknown said...

what about new articles.PLz add new articles every day

பிசாசுகுட்டி said...

காட்டு வழி போர பொண்ணே கவலைப்படாத.. அப்படின்னு மம்பட்டியான் பாடல்போல.. புதுசா காலேஜுக்கு போர பொண்ணே (கவலைப்படாத .. குரானு வழி நடத்தும் கலங்கி நிக்காதன்னு ஒரு போஸ்ட் போட்டிருக்காங்க - மதவெறி வலைகள்ன்னு பிரிவில ஒரு வலைத்தளத்துல) இங்க எனக்கு டவுட்டு என்னான்னா - அங்கே ஒரு வரி..

// நபி (ஸல்) அவர்களின் காலக்கட்டத்தில் வாழ்ந்த சஹாபாக்கள் அறிவியல், கலை, மருத்துவம், பொறியியல், மொழி, ஆராய்ச்சி என பல துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள்.//

இதுக்கு மேலதிக விவரம் கிடைக்கவில்லை.. எங்கப்பார்த்தாலும் இப்படி தாக்கினார் அப்படி வெட்டினார்ந்னு வன்முறைதான் தெரிகிறது. இதுல எங்க அறிவியல் கலை மருத்துவம் கடலை மாவு பச்சி போண்டா மிக்ஸ் .. இருக்குன்னு கொஞ்சம் சொல்றீங்களா .. அந்த தளத்துல இந்த கேள்வி கேட்டா (கமெண்ட்டே) பதில் வராது.

பிசாசுகுட்டி said...

சாகர் சார்.. மதத்தை விட்டு வெளியில் வந்தால் மரணம் என்றும் சொல்றாங்க அப்புறம் எப்படி வருவாங்க
அதுக்கு சமூகத்தில ரொம்ப பிரபலமா இருக்கணும் (குஷ்பு மாதிரி) நாடு விட்டு நாடு இடம் பெயர தயாரா இருக்கணும் (தஸ்லீமா மாதிரி) ..ஆனா இங்க குடும்பம் குழந்தை குட்டி டெய்லி அவங்களுக்கு பாதுகாப்புன்னு அவசிய கடமைகள்ன்னு இருக்கறப்போ எதுக்கு வீணா வம்ப விலை கொடுத்து வாங்கணுமின்னு சும்மா இருக்காங்க. முல்லாக்கள் மதமாறுதல் கட்டுப்பாடு கிடையாதுன்னு சொல்லிபார்க்கட்டும்.. அப்புறம் தெரியும்

Anonymous said...

இல்லை , யாரும் கடவுளுக்கு பயப்படவில்லை , கொலை செய்யப்படுவோம் என்ற அச்சம். ஆதுவும் குடும்ப நலன் கருதிய அச்சமே தவிர , முகமதுவின் போலி சாபம்களுக்கல்ல, மதம் மாறினால் ஓன்றும் செய்து என்று முல்லாக்களே அறிவார். பயத்தின் காரணம் உறவே . சொந்த , பந்தக்கள் விட்டு போய்விடும் என்பதே.

அதிலும் பெண்களோடு பிறந்த ஆண்கள் , நிலைமை இன்னும் மோசம் . சகோதரிகள் தலாக் செய்யப்ப்டுவர்கள் என்ற பயம்.

படிதவர்ககள் விலகி செல்லும்போது அடுத்த தலைமுறை வெகு வேகமாக ,இந்த கேவலமான இஸ்லாத்தை விட்டு விலகிவிடும் . சுய சிந்தனையை இஸ்லாமிய பெண்களிடையே வளர்க வேண்டும் ..



ஆனந்த் சாகர் said...

பிசாசுகுட்டி சார்,

உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். இருப்பினும் தங்கள் சொந்த மூளையைக்கொண்டு நடுநிலையாக சிந்திக்கக்கூடிய முஸ்லிம்கள் தங்கள் கருத்தையாவது புனைப்பெயரில் இங்கு பதிவு செய்ய முன்வர வேண்டும். இப்படிப்பட்ட கருத்துக்கள் பெரும்பான்மையாக வெளியிடப்பட்டால் அது சமூக மாற்றத்துக்கு வழி வகுக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

ஆனந்த் சாகர் said...

அனானி,

நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. இருப்பினும் இஸ்ல்லாமிய பயங்கரவாதிகளில் மெத்த படித்தவர்களும் இருக்கிறார்கள் என்பதும் நிதர்சனம்.

Unknown said...

hello yenapa Vera articles podunga. ithu varalaru so paduka bore adikithu. something new padika asaiya irku. I love this blog. till I'm searching god. thajjalnu orthan vantha Islam unmai agumnu ninaichen Ana thajjalnu orthar vantha kili kilinu kilikrar

Anonymous said...

DO honey bee eat fruit?

The short answer is yes.Honey bees,especially in a nectar dearth,find ripe fruit very much to their liking.They have been known to feast on plums,peaches,grapes,apples,figs,and pears, But the issue that causes all the disagreement among beekeepers is whether honey bees will actually drill a hole in a fruit or if they simply use pre-existing break in the skin created by a wasp, stink bug, beetle, bird, or some other creature…..
http://www.honeybeesuite.com/do-honey-bees-eat-fruit/

http://www.beesource.com/forums/showthread.php?246182-Honey-bees-eating-Peaches