Thursday, 4 December 2014

குர்ஆன் கூறும் அறிவியல் : வேற்று கிரக உயிரினங்கள்! - 1அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹூ!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அல்ஹம்துலில்லாஹி வஹ்த். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலாமல்லாஹ் நபிய்யிபஹ்து வஅலா ஆலிஹி வஸ்ஸஹ்பிஹி. அம்மாபஹ்த்.

அல்லாஹ்வின் உண்மை அடியார்களே! அல்லாஹ்வை மட்டுமல்ல அனைத்துக் கடவுள்களையும் மறுக்கும் நல்ல உள்ளம் கொண்ட காஃபிர் சகோதரர்களே! சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஸலாம் கூறி எனது உரையைத் துவங்குகிறேன்!

அண்மையில் வெளியான INTERSTELLAR என்ற திரைப்படைத்தைப்பற்றிய செய்திகளைப் படித்துக் கொண்டிருந்த பொழுது, நான் முன்பு பார்த்த ET, MISSION TO MARS, CONTACT போன்ற திரைப்படங்கள் எனது நினைவில் வந்து போனது.  பூமியைத் தவிர வேற்றுகிரகங்களில் உயிரினங்கள் இருக்குமா? இதைப்பற்றி வானவியல் அறிஞர்கள் என்ன சொல்கின்றனர்?

Eratosthenes,  Nicolaus Copernicus,  Galileo Galilei, Isaac Newton,  Edwin Hubble, Carl Sagan, Stephen Hawking ... போன்ற இன்னும் நிறைய சிந்திக்கத் தெரியாத சிறுவர்கள் அறிவியல், வானவியல் என்று ஏதேதோ ஆராய்ச்சி செய்கிறோமென்ற பெயரில் காலத்தையும் பொருளையும் வீணடித்துள்ளனர். அவர்கள், தங்களது முயற்சியை சரியான இடத்திலிருந்து துவங்கவில்லை அதனால்தான் அவர்களை சிந்திக்கத் தெரியாதவர்கள் என்கிறேன். நாம் அப்படியில்லை; தெரிந்தோ தெரியாமலோ சிறுவயது முதல் நம்மீது மீது திணிக்கப்பட்ட பயிற்சிகள், நமது தேடலை சரியான இடத்திற்கு கொண்டு சேர்த்துவிடுகிறது(வேறுவழி?). இது முஃமின்களுக்கு மட்டுமே கிடைக்கும்,  அல்லாஹ்வின் அருளாகும்!

மாஷா அல்லாஹ்!

குர்ஆன் ஒரு மிகப் பெரிய அறிவியல் பொக்கிஷம் என்பது உங்களுக்குத் தெரியும்! தேடலை குர்ஆனிலிருந்து துவங்கி,  திரும்பவும் அதிலேயே கொண்டுவந்து முடிப்பதுதானே உண்மையான ஒரு முஃமினுக்கு அழகு? இதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்!

காஃபிர்கள், முஃமின்களைப் போல சிந்திப்பதில்லை; சிந்திக்கத் தெரிவதில்லை அதனால்தான் காஃபிர்களாக இருக்குகிறார்கள். முஃமின்கள் அவ்வாறில்லை நிறைய சிந்திக்கின்றனர்! முஃமின்களின் எவ்வாறெல்லாம் சிந்திக்கின்றனர் என்பதை சில உதாரணங்களுடன் இன்று நாம் பார்க்க இருக்குகிறோம். இந்த பயானைக் கேட்டதிற்குப் பிறகாவது நாத்தீகப் போக்கிரிகளுக்கு முஃமின்களைப் போன்று அறிவு பொங்கி வழிகிறதா மன்னிக்கவும் வளர்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்!

முஃமின்கள், அன்று குர்ஆன், ஹதீஸ்களைக் கொண்டு சிந்தித்தனர்; இன்றும் சிந்திக் கொண்டிருக்கின்றனர்; இனி நாளையும் அப்படி மட்டுமே சிந்துவார்கள். இவர்கள் இப்படி சிந்தோ, சிந்து என்று சிந்தியதால் பள்ளிவாசலில்  வழுக்கிவிழுந்து இடுப்பை உடைத்துக் கொண்டவர்கள் பலர். அதிகாலை ஃப்ஜ்ரு தொழுகைக்காக பள்ளிவாசலுக்குள் நுழைந்தால், ஜுராஸிக் பார்க்கிற்குள் நுழைந்துவிட்டோமா என்று ஒருகணம் பயந்து நடுங்குமளவிற்கு க்..கர்...ர்ர்ர்... புர்..ர்ர்ர்... ட்ட...ர்ர்ர்... என்றெல்லாம் ’சிந்தி’க்கின்றனர். அதனால்தான் என்னவோ முஃமின்களால் எண்ணற்ற வியக்கத்தகு அறிவியல் கண்டுபிடிப்புகள் சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது.  ஒவ்வொருமுறையும் முஃமின்களால் வெளியிடப்படும் கண்டுபிடிப்புகளைப் பற்றி அறியும் பொழுது மயிர்ப்பொடித்து போகிறேன்.

எனது கேள்விக்கான விடையைக் கண்டுபிடிக்க குர்ஆனின் பக்கங்களை புரட்டினேன்! குர்ஆன் மிக எளிமையான, தெளிவானதொரு புத்தகம்; ஒரு குழந்தைகூட அதைப் படித்துப் புரிந்து கொள்ள முடியும் என்பதை நான் சொல்லாமலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும். எனவேதான் நாம் குர்ஆனின் வசனங்களை தஃப்ஸீர்களுடனும்,  நவீன நபிமார்களின் விளக்கங்களை அணுகவேண்டியிருக்கிறது.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

குர்ஆன் 42:29
வானங்களையும்(samāwāti), பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை(dābbatin) அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும், அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் விரும்பும் போது அவர்களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன்.

இந்தக் குர்ஆன் வசனத்தில் அப்படியென்ன அறிவியல் கண்டுபிடிப்பு இருக்கிறதென்று இப்படி ’பில்ட் அப்’ கொடுக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்! நீங்கள் இப்படி  அவசரப்படுவதற்கு ஷைத்தான்தான் காரணம். நீங்கள் அவனிடமிருந்து பாதுகாப்பைத் தேடுவதற்கு,  அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்! அதாவது ”விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று சொல்ல வேண்டும். அப்பொழுது ஷைத்தான் உங்களைவிட்டு விலகிவிடுவான்.  அதிலும் குறிப்பாக,

குர்ஆன் 16:98
நீர் குர்ஆனை ஓத ஆரம்பித்தால், விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக!

என்று அல்லாஹ்வே சொல்கிறான். அல்லாஹ்வின் எச்சரிக்கையில்  மறைந்திருக்கும் காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில்

குர்ஆன் 2:275
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...

குர்ஆனை வாசிக்கத் துவங்கினால், ஷைத்தானின் தொல்லை இருக்கும்; அவனால் தீண்டப்படுவீர்கள்; பைத்தியமாகிவிடலாம். 

யாருப்பா அங்கே, குர்ஆனைப் பொருளுணர்ந்து வாசித்தால் ஷைத்தான் தீண்டாமலேயே பைத்தியமாகலாம்கிறது என்பது வேறு விஷயம்னு முணுமுணுக்கறது?”

ஹைர்! நாம் பயானைத் தொடர்வோம்! (Bayan-விளக்கவுரை, வழக்கில் மதச்பிரசஙகம்)

ஷைத்தானின் தீண்டினால் பைத்தியமாகி விடுவார்களா?

மனநிலை பாதிப்பிற்கு, மூளையில் ஏற்படும் கோளாறுகளே காரணம் என்ற காஃபிர் மருத்துவர்களின் ஷைத்தானிய சிந்தனையோடு குர்ஆனை அணுகுவதால்தான் இவ்வாறான கேள்விகள் ஏற்படுகிறது. சிந்திப்பதென்றால் மார்க்க அறிஞர்கள் வழிகாட்டியவாறு மட்டுமே சிந்திக்கவேண்டும். நீங்களாக தான் தோன்றித்தனமாக சிந்திக்கக் கூடாது.

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஷைத்தானால் தீண்டப்படுவதாக இமாம் புகாரி(ரஹ்) தனது ஹதீஸ் தொகுப்பில் எழுதியிருக்கிறார். 

புகாரி 3286
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகன் (மனிதன்) ஒவ்வொருவனும் பிறக்கும்போது, அவனுடைய இரண்டு (விலாப்) பக்கங்களிலும் ஷைத்தான் தன் இரண்டு விரல்களால் குத்துகிறான்; மர்யமின் குமாரர் ஈஸாவைத் தவிர (அவர் பிறந்தபோது அவரை விலாப் பக்கம்) குத்தச் சென்றான். ஆனால், அவரைச் சுற்றியிருந்த மெல்லிய சவ்தை; தான் குத்தினான். (அதுதான் அவனால் முடிந்தது.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒவ்வொரு மனிதனும் ஷைத்தானால் தீண்டப்பட்டுதான் பிறக்கிறான் என்றால் எல்லோருமே பைத்தியம்தானா? இன்று பைத்தியங்களாக அறியப்படுபவர்கள் பைத்தியமா அல்லது தங்களைப் பைத்தியம் பிடிக்காதவர்களாகக் கூறிக் கொள்பவர்கள் பைத்தியமா? மற்றவர்கள் பார்வையில் பைத்தியத்தியக்காரனனுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகத் தெரிவதைப் போல, பைத்தியத்தின் பார்வையில் மற்றவர்கள் பைத்தியமாகத் தெரியலமே? யாருக்கு யார் பைத்தியம்? என்று உங்களுக்கு கேள்வி எழலாம்! 

இதற்காகத்தான், குர்ஆனை ஓத ஆரம்பித்தால், ஹதீஸைக் கொண்டுவந்து உள்ளே நுழைக்கக் கூடாது என்று சொல்வது. இது நயவஞ்சகர்களான யூதர்கள், இமாம் புகாரியின் வேடத்தில் வந்து இந்த ஹதீஸை எழுதிவிட்டுச் சென்றிருக்கலாம். இதைப் பொருட்படுத்த வேண்டாம்! எனவேதான் ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்ளுமாறு குர்ஆன் அறிவுறுத்துகிறது. 

இந்த ஹதீஸில் முரண் இல்லையே, சரியாகத்தானே இருக்கிறது? பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் ஷைத்தான் தீண்டுவதாக ஹதீஸ் கூறுகிறது. மனிதர்களை ஷைத்தானால் தீண்ட முடியும் என்பதை குர்ஆனும் ஒப்புக் கொள்கிறது. எனவே ஹதீஸ் குர்ஆனுடன் முரண்படவில்லையே என்று காஃபிர்கள் கேட்கலாம்!

உண்மைதான் மறுக்கவில்லை!

ஆனால் இங்கு  குர்ஆன், ஒருபடி மேலே சென்று ஷைத்தானால் தீண்டப்படும் மனிதர்கள் பைத்தியமாகி விடுவார்கள் என்கிறது. இது எதார்த்த வாழ்க்கையுடன் தெளிவாக முரண்படுவதாக உங்களுக்குத் தெரியலாம்.  இது ஷைத்தான் உங்களைப் பற்றிக் கொள்ள முயற்சிப்பதால் ஏற்படும் விளைவு! இதுபோன்ற வேளைகளில், அல்லாஹ்வின் வார்த்தைகளில் முரண்பாடு இருக்காது என்று உங்களை நீங்களே சமாதானம் செய்து கொண்டு,  ”அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்” என்று தஸ்பீஸ் மணிகளை உருட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

அப்படியும் ஷைத்தான் உங்களைவிட்டு விலகவில்லையெனில்,  இஸ்லாமிய விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் தரும் விளக்கங்களை மட்டுமே அணுக வேண்டும்!  மிக அழகிய தெளிவான விளங்களைத் தருவதற்காகத்தானே நாங்கள் இருக்கிறோம்!

...ஒருவன் பைத்தியமாகிவிட்டால் அதன் பின்னர் அவன் செய்யும் எந்தத் தீமைக்காகவும் அவன் பாவியாகமாட்டான். அதற்காக அவனுக்குத் தண்டனையும் கிடையாது. நரகவாசிகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவதை முழுநேரப்பணியாகக் கொண்ட ஷைத்தான், நரகவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் பைத்தியம் பிடிக்கச் செய்யமாட்டான்.
எனவே இவ்வசனத்தில், ஷைத்தானால் தீண்டப்பட்டவன் பைத்தியமாக எழுவது போல்' என்று கூறப்பட்டதை மேற்கண்ட ஆதாரங்களுக்கு முரண் இல்லாத வகையில்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
தீயகாரியங்களைப்பற்றிக் கூறும் போது 'ஷைத்தான் அதை ஏற்படுத்தினான்' என்று கூறுவதைத் திருக்குர்ஆன் அனுமதிக்கிறது.
அய்யூப் நபியவர்களுக்கு நோயும் துன்பமும் ஏற்பட்டபோது 'ஷைத்தான் இவ்வாறு செய்து விட்டானே' எனக்கூறினார்கள் (திருக்குர்ஆன் 38:41). இதனால் நோயையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று கருதக்கூடாது.
கெட்டகாரியத்தை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்று மரியாதை நிமித்தமாகவே அவ்வாறு அய்யூப் நபி கூறினார்கள். அது போல் பைத்தியத்தை அல்லாஹ்தான் ஏற்படுத்தினாலும் அந்தத் தீமை ஷைத்தானுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் விளக்கவுரை
onlinepj.com

பைத்தியத்தன்மையை ஷைத்தான் ஏற்படுத்துவதில்லை. அல்லாஹ்தான் ஏற்படுத்துகிறான் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும். உண்மையைச் சொல்வதென்றால் எப்பொழுதுமே ஷைத்தான் ஒரு ’டம்மிபீஸ்’ தான்! அல்லாஹ்தான் ’அப்பாடக்கர்!!!’ 

அல்லாஹ் ஏற்படுத்தும் பைத்தியக்காரத் தன்மைக்கு, ஒன்றுமே செய்ய இயலாத, முடியாத அப்பாவி ஷைத்தானை எதற்காக பலிகடாவாக்க வேண்டும்? இப்பொழுது, யாரிடமிருந்து யாரிடம் பாதுகாப்புக் கோருவது; எதற்காக ”அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்”  என்ற கூறவேண்டும்?; நியாயமாகப் பார்த்தால் ”அவூது பில்லாஹி மினல்லாஹிர் ரஜீம்! “அல்லாஹ்வின் தீமையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன்” என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்?; ஒருவேளை அல்லாஹ், ஷைத்தானின் வேடத்தில் வருவானோ? அல்லது ஷைத்தான்தான் அல்லாஹ்வின் வேடத்தில் இருக்கிறானே? என்றெல்லாம் குழம்பி, தஸ்பீஹ்  மாலையை வீசி எறிந்துவிட்டு, உங்களை அறியாமல் உங்களது கைவிரல்கள் தலையைப் பிறாண்டி, முடிகளைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கும்!

அல்லாஹ் உங்கள் மனதில் திடமாக இர்..ர்...றங்கிவிட்டான்(இதை கிறிஸ்தவ மதவியாபாரிகளின் உச்சரிப்பு ஸ்டைலில் வாசிக்க வேண்டும்) என்பதே இதன் பொருள்!

இப்பொழுது  நீங்கள் தெளிவான இஸ்லாமிய மனநிலைக்கு வந்துவிட்டீர்கள் எனவே நாம் விஷயத்திற்கு வருவோம்!

ஹைர்!  மண்டையைச் சொறிந்தது போதும். அதை அப்படியே நிறுத்திவிட்டு அப்படியே நான் சொல்வதை கவனியுங்கள்!

குர்ஆன் 42:29 அதிநவீன அறிவியலை உள்ளடக்கியிருப்பதாக நவீன நபிமார்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் இதைக் கண்டறிந்து உலகத்திற்கு அறிவித்து ஆண்டுகள் பல ஆகிவிட்டது. வினாடிக்குவினாடி புதுப்புது கண்டுபிடிப்புகள் முஃமின்களால் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நான்தான், Update ஆவதில் சற்று மந்தமாக இருந்துவிட்டேன்!

பிரபஞ்சத்தில், பூமியைத் தவிர வேறு இடங்களில் உயிரினங்கள் இருக்கின்றனவா?

வானத்தில் தேவைதைகளும், சாத்தான்களும், பூதங்களும் வசிப்பதாக ஏறக்குறைய அனைத்து மதநம்பிக்கைகளும் சொல்கின்றன. வானத்தில் இனம்புரியாத பொருளைப் பார்த்ததாக சொல்பவர்களை கி.மு 214-ல் இருந்தே காணமுடிவதாக விக்கிபீடியா கூறுகிறது. இது, 1947-ஆம் ஆண்டு ஜூன் 24-ம் நாள் கென்னத் அர்னால்ட் என்பவர்,  ரைனியர் மலை அருகே வட்ட வடிவத் தட்டு போன்ற 8 வாகனங்களும், பிறை வடிவ பெரிய வாகனம் ஒன்றும் மணிக்கு சுமார் 1900 கிலோமீட்டர் வேகத்தில் பறந்ததாக கூறினார். அதன் பிறகு, 1950-ம் ஆண்டு,  என்ரிக்கோ ஃபெர்மி என்ற நோபல் பரிசு பெற்ற இத்தாலிய இயற்பியல் அறிஞரின் கருத்திலிருந்து வலுப்பெற ஆரம்பித்தது.

அதன் பிறகு 1959-1960 களில் search for extraterrestrial intelligence(SETI) ஆய்வு துவங்கியது. 1961-ல் Frank Drake என்பவர் வேற்றுகிரக உயிரினங்கள் பற்றி நிகழ்த்தகவு சமன்பாட்டின் மூலம் தனது கருத்தை முன்வைத்தார். விண்வெளியிலிருந்து வரும் நுண் அலைகள் மற்றும் உயர்  நுண் அலைகள் பற்றி ஆய்வு திட்டங்களை NASA-ம் SETI-ம் இணைந்து மேற்கொண்டன. SETI-ன் திட்டங்களுக்காக சுமார் 57 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. SETI-ன் ஆய்வுகளில் சொல்லிக் கொள்ளும்படியான எந்த முன்னேற்றமும் கிடைக்காதால், SETI-ன் மீது விமர்சனங்களும் இருக்கிறது.
1977-ல், NASA, சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் நமக்கு அருகிலுள்ள கிரகங்களைக் கடந்து, சூரியமண்டலத்திற்கு அப்பால் உள்ளவைகளைக் கண்டறிவதற்காக Voyager Interstellar Mission (VIM) திட்டங்களை செயல்படுத்தியது. இதில் வாயேஜர் ஓடங்கள் வேறு கிரக உயிரினங்களுக்கு பூமியில் மனிதர்கள்பற்றி செய்தியையும் எடுத்துச் சென்றது.
இத்தனையும் எதற்காக?

கோடிக்கணக்கான Galaxyகளும் அதில் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், கோள்களும் இருக்கும் பொழுது அதில் ஏன் உயிர்கள் இருக்கக் கூடாது? என்ற கேள்விதான் இந்தத் தேடலைத் துவங்கியது.இதற்காக இத்தனை பொருட் செலவு, உழைப்பு, சிரமங்கள் வேண்டுமா என்பதுதான் எனது கேள்வி?

அல்லாஹ் வழங்கிய குர்ஆன் போதும்!

நல்ல அழகிய வேலைப்பாடுடன், வழவழப்புத்தாளில்  அச்சிடப்பட்ட குர்ஆனின் விலை 500 ரூபாய்க்கு அதிகம் இருக்காது. சரி.. நாம் 1000 ரூபாய் என்றே வைத்துக் கொள்வோம். குர்ஆனையும் சில முல்லாக்களையும் NASA, SETI-யின் திட்டங்களுக்கு வழங்கியிருந்தால் எத்தனை பொருளும், நேரமும் மிச்சமாகியிருக்கும் என்பதை நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்! நான் துவக்கத்தில் குறிப்பிட்ட அறிஞர்களை சிந்திக்கத் தெரியாத  சிறுவர்கள் என்று அழைத்ததில் ஏதாவது தவறு இருக்கிறது? இதைப்பற்றியும் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

குர்ஆன் 42:29 எப்படி வேற்று கிரக உயிரினங்களின் இருப்பை நிறுவுகிறது என்பதுதானே உங்கள் கேள்வி?

இப்படிக் கேள்விகள் கேட்பதே ஷைத்தான்தனமானது(அல்லாஹ்தனமானது) என்பதை முன்பே உங்களிடம் சொல்லியிருக்கிறேன். மறுபடியும் கேட்கிறீர்களா?

உங்களை ஷைத்தானின்.. இல்லை... அல்லாஹ்வின் பிடியிலிருந்து மீட்பதற்காக, எங்களைப் போன்ற இஸ்லாமிய அறிவியல் அறிஞர்கள் கூறும் விளக்கங்களைத் தருகிறேன்.

திருவண்ணாமலை TNTJ என்ற  வானவியல் ஆய்வுதளம்(!) இப்படிக் கூறுகிறது:

விண்ணில் உயிரினங்கள் வாழ்கிறதா?
பூமியில் மாத்திரம் தான் மனிதன் வாழ முடியும் என்று திருமறை வசனம் தெரிவித்தது விஞ்ஞானமும் அதனை உருதிப்படுத்தியது. ஆனால் வின்னில் மனிதனால் வாழ முடியாதே தவிர அங்கு சில உயிரினங்கள் வாழ்கின்றன என்று விஞ்ஞானம் ஊகிப்பதை திருமறை மறுக்கவில்லை.
பூமியல்லாத மற்ற இடங்களில் மற்ற சில உயிரினங்கள் வாழத்தான் செய்கின்றன என்று திருமறையில் இறைவனே குறிப்பிடுகிறான்.(ஆனால் பறக்கும் தட்டு தொடர்பான உயிரினங்கள் பற்றிய செய்திகள் பொய்யானவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்)
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் விரும்பும் போது அவர்களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன்(42:29)
மேற்கண்ட வசனத்தின் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் என்ற வாசகத்தின் மூலம் பூமி அல்லாத மற்ற இடங்களில் நமது விஞ்ஞானத்தினால் இது வரை கண்டு பிடிக்காத (அறிவியல் வளர்ச்சியின் மூலம் பிற்காலத்தில் கண்டு பிடிக்கலாம்) உயிரினங்களை இறைவன் படைத்திருக்கும் செய்தியை தெளிவாக குறிப்பிடுகிறான்.
அதிலிருந்து....


Q: Is there anything in the Quran perhaps that suggests there are other beings other than human beings that exist?
Dr. Shabir: The Quran actually is quite open to the possibility that many Earths do exist, because the first chapter of the Quran says: “Praise be to God, the Lord of the worlds”. In fact, it says here Al-Alamin which is “The Universes” in the plural.

So there could be many universes and many worlds. In traditional commentaries on the Quran, it has been explained that it’s given here in the plural because we have many worlds operating even around us and in our own bodies there are many systems.

There is a world of human beings, there is a plant world, the world of Jinns which is another set of creatures, and the world of angels, another sort of creatures. So there could be many other sorts of creatures out there.

In the 74th chapter of the Quran we read, “And none knows the soldiers of your Lord except Him.” Also the 29th verse in the Quran’s 42nd chapter says: “And of His signs is the creation of the heavens and the earth and what He has dispersed throughout them of creatures. And He, for gathering them when He wills, is competent.” It would seem from this verse that such animate life is scattered throughout the heavens and the earth.

இது Answering Christianity என்ற விண்வெளி ஆய்வுதளம்(!) தளம் தரும் விளக்கம்.

In Sura 42,Verse 29 (42:29) of the Quran,we are told, "Among His (God's) signs is the creation of the heavens and the earth,and the living creatures that He has scattered through them :and He has power to gather them together when He wills." Before proceeding further,a point or two must be noted.The word "sama",translated "heavens",is also the Arabic for "sky".One may object that the verse refers to creatures in the sky (which would be birds),not in the heavens. However,birds are mentioned seperately from creatures of the heavens in 24:41, "Seest thou not that it is God Whose praise all beings in the heavens and on earth do celebrate,and the birds (of the air) with wings outspread?..." In a note to 42;29,Muhammad Asad states,"In the Quran,the expression "the heavens and earth" invariably denotes the universe in its entireity."  The Quran mentions that inanimate objects also worship God:"Do they not look at God's creation, (even) among (inanimate) things- how their (very) shadows turn round,from right to left, prostrating themselves to God..."(16:48). 
  Therefore,may not the creatures spoken of in 42:29 in the heavens, be inanimate creatures of God. No. The next verse,16:49 goes, "And to God doth obeisance all that is in the heavens and earth,whether moving (living) creatures or the angels...". The word translated "living creatures" here is the same as that in 42:29- "Dabbatun".Comments Asad,"The word dabbah denotes any sentient, corporeal being capable of spontaneous movement and is contrasted here with the non-corporeal,spiritual beings designated as "angels" ". In other words,42:29 is referring to precisely the type of lifeforms that science is searching for,not some metaphysical entities.Yusuf Ali says,"Dabbatun :beasts, living,crawling creatures of all kind."  This is the same word used in 2:164,"...in the beasts of all kinds that He scatters through the earth...are signs for a people that are wise," and in 24:45,"And God has created every animal from water:of them are some that creep on their bellies;some that walk on two legs;and some that walk on four. God creates what he wills..." Commenting on 42:29, Allama Shabbir Ahmad Usmani says,"From the verse it appears that like on the earth,there are some kinds of animals- living creatures- in the heavens also." On the same verse,Yusuf Ali comments, "Life is not confined to our one little Planet.It is a very old speculation to imagine some life like human life on the planet Mars...it is reasonable to suppose that Life in some form or other is scattered through some of the millions of heavenly bodies scattered through space." 
From such remarks,the reader will realize that Muslim scholars are well aware of the fact that 42:29 clearly mentions the existence of aliens.


Answering Christianity விண்வெளி ஆய்வுதளம்(!) தளம் தரும் மற்றொரு  விளக்கம் :"And among His Signs is the creation of the heavens and the earth, and the living creatures that He has scattered through them: and He has power to gather them together when He wills.  (The Noble Quran, 42:29)"
This Noble Verse was forwarded to me by brother Frank (www.why-christians-convert-to-islam.com), who have embraced Islam; may Allah Almighty always be pleased with him.
As we see, "through them" includes the living creatures in both the Universe (heavens) and the earth.  Please visit: http://www.geocities.com/CapeCanaveral/7906/ for more details and proofs.  This link too was forwarded to me by brother Frank.
Also, "gather them together when He wills" seems to suggest that Allah Almighty would allow communication, finding and meeting with those scattered creations in the Universe (UFOs in other words) when"He wills".
Allah Almighty clearly talked about what we call today "space shuttles":  
"O ye assembly of Jinns and men! If it be ye can pass beyond the zones of the heavens and the earth, pass ye! not without authority shall ye be able to pass!  (The Noble Quran, 55:33)"
When Allah Almighty revealed to Prophet the Noble Quran 1500 years ago, there were no flying air planes or man-made objects invented.  Yet Allah Almighty talked about humans passing the zones of heavens by saying "If it be ye can pass....., pass ye! not without authority"   What is that authority?  It is the Will of Allah Almighty of course, and the physical "space shuttles".

"Say: None in the heavens or on earth, except God, knows what is hidden: nor can they perceive when they shall be raised up (for Judgment).  (The Noble Quran, 27:65)"
"Not one of the beings in the heavens and the earth but must come to God) Most Gracious as a servant. He does take an account of them (all), and hath numbered them (all) exactly. And everyone of them will come to Him singly on the Day of Judgment. On those who believe and work deeds of righteousness, will (God) Most Gracious bestow love.  (The Noble Quran, 19:93-96)"
Noble Verses 27:65 and 19:93-96 clearly suggest that there are beings existing in the Universe in places other than earth.

உண்மையில் இந்த இஸ்லாமிய வானவியல் அறிவியல் அறிஞர்கள்,  அவர்களது வாப்பாமார்கள் அல்லது அத்தாமார்கள் அல்லது தந்தைமார்கள் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள்; அவர்கள் வாங்கிக் கொடுத்த குர்ஆனை மட்டும் வைத்துக் கொண்டு எந்த செலவுமில்லாமல், உலகமே வியக்கும் மாபெரும் அறிவியல் சாதனைகளைச் செய்துள்ளனர்!

இன்னும் சற்று அவகாசம் கொடுத்தால்,(இந்த அவகாசம் அறிவியலின் ஆய்வு முடிவைப் பொருத்து மாறுபடும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்) அங்கே என்னென்ன வகையான, எத்தனை விதமான உயிரினங்கள் இருக்கிறதென்பதையும், அந்த உயிரினங்களின் வாழ்க்கைமுறை, எப்படி அல்லாஹ்வை வணங்குகிறது,  தொழுகையில் விரலை நீட்டுகிறதா, மடக்குகிறதா, இல்லை ஆட்டுகிறதா என்பதைக் கூட குர்ஆனை ஆராய்ந்து சொல்லிவிடுவார்கள்!

இப்பொழுது  மண்டையைச் சொறிந்து கொள்வதற்கான இடைவேளை! இதே மனநிலையுடன் இருங்கள் அடுத்த பகுதியில்  சந்திக்கிறேன்.

தொடரும்…

தஜ்ஜால் (ஸல், அலை, ரலி, ரஹ்)

Facebook Comments

9 கருத்துரைகள்:

ஆனந்த் சாகர் said...

அருமையான தொடரை எழுத தொடங்கி இருக்கிறீர்கள், தஜ்ஜால்! இதை படித்து என்னால் சிரித்து மாளவில்லை! அருமை,அருமை!!

அது சரி, நீங்கள் மிராஜ் பயணம் போய் வந்தாலும் வந்தீர்கள், உடனேயே நபிமார்களுக்கு மட்டுமே உரிய ஸல்,அலை பட்டங்களையும், மேலும் போனசாக நபித்த்தோழர்களுக்கு மட்டுமே உரிய ரலி,ரஹ் பட்டங்களையும் உங்கள் பெயருக்கு பின்னால் இப்படி செறுகிக்கொண்டீர்களே!! சரி,சரி, முஹம்மதுவும் அவரது கைத்தடிகளும் மட்டும்தான் இப்படி அடை மொழியுடன் திரிய உரிமை உள்ளவர்களா என்ன?

Ant said...

//ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்// ஷைத்தான் தீண்டினால் பைத்தியமாவதை உறுதியாக எடுத்துகாட்டி விளக்குகிறது. //ஷைத்தானால் தீண்டப்பட்டவன் பைத்தியமாக எழுவது போல்' என்று கூறப்பட்டதை மேற்கண்ட ஆதாரங்களுக்கு முரண் இல்லாத வகையில்தான் புரிந்து கொள்ள வேண்டும்// எனவே எப்போதெல்லாம் அறிவியல் ஆதாரங்களை முன் வைக்கிறதோ அப்போது குரான் வச‌னத்தை அதற்கு முரன் இன்றி பொருளை மட்டும் மாற்றி விட வேண்டும். அப்படித்தான் 1400 ஆண்டுகளாக குரான் மாற்றமின்ன அதன் பொருள் மட்டும் முரன் இன்றி மாறிவந்துள்ளது. கட்டுரை விருவிருப்பாக, தக்க ஆதரங்களுடன் அமைந்துள்ளது. நன்று.

பிசாசுகுட்டி said...

வழக்கம்போல படிக்க ஆரம்பிச்சதும்.. ரொம்பவே பீதியாயிடுச்சி.. இஷ்டத்துக்கும் பல்வேறு கலீமாக்களை படிச்சதும்.. நாம சரியான தளத்துக்குதான் வந்திருக்கொமான்னு சந்தேகம் வந்துடுச்சி.. அப்புறம் தான் 'அதிக'பிரசங்கங்களை படிச்சதும் நிம்மதி.
நாசாகுள்ள முல்லாக்கள் பூந்தா இப்படித்தான் இருக்கும்..
!! நான் இன்னைக்கு ஒரு புது கிரகம் கண்டுபுடிச்சிட்டேன்..
-- அது அல்ரெடி குரான்ல இருக்கு
!! அங்கே மனிதர்கள் வாழலாம்..
-- அதுவும் அல்ரெடி குரான்ல இருக்கு
!! ஏலியன்கள் பூமிக்கு வருகை தரபோகிறது..
-- அதுவும் அல்ரெடி குரான்ல இருக்கு "அல்லா எல்லாத்தையும் விரும்பும்போது ஒன்னு சேர்ப்பான்"
இப்படி எல்லாத்துக்கும் "அதானே இது" வாழைப்பழ காமெடியை போல நடக்கும்.
கடைசியா வச்சீங்க பாருங்க அடை மொழி அங்க நீங்க சல்லுவின் 'மரு'பிறப்புன்னு நிரூபிச்சீட்டிங்க..

Anonymous said...

ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்களை சொல்ல வேண்டி வரும் என்பதற்கு, இந்த நவீன மவ்லவிகள் கூறும் நவீன கருத்துக்களே சான்றாகும்..

தஜ்ஜால் said...

வாங்க ஆனந்த்,
நன்றி!
//அது சரி, நீங்கள் மிராஜ் பயணம் போய் வந்தாலும் வந்தீர்கள், உடனேயே நபிமார்களுக்கு மட்டுமே உரிய ஸல்,அலை பட்டங்களையும், மேலும் போனசாக நபித்த்தோழர்களுக்கு மட்டுமே உரிய ரலி,ரஹ் பட்டங்களையும் உங்கள் பெயருக்கு பின்னால் இப்படி செறுகிக்கொண்டீர்களே!! சரி,சரி, முஹம்மதுவும் அவரது கைத்தடிகளும் மட்டும்தான் இப்படி அடை மொழியுடன் திரிய உரிமை உள்ளவர்களா என்ன?//
ஆமாம் மிஹ்ராஜ் பயணத்திற்குப் பிறகு ஈமான் கூடிவிட்டது. அதனால்தான் பயான் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.
அல்லாஹ்(!)வும், மலக்குகளும், ஜின்களும், வானம், பூமி, மரம். செடி, கொடி, மட்டுமல்ல, ஈ, கொசு, கரப்பான் பூச்சி, நாய், பூனை, எலி …. இன்னும்.. இன்னும் எத்தனையோ….. அவ்வளவு ஏன் (வேற்றுகிரக) ஏலியன்கள் கூட என்னுடைய பேரில் ஸலவாத்து சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு நான்தான் சாட்சி! நான் சொன்னால் நம்பக் கூடாதா?
முஹம்மதுடைய ஆத்மா(!) மட்டும்தான் சாந்தியடைய வேண்டுமா என்ன?

தஜ்ஜால் said...

வாங்க ANT.
நன்றி!!!
//எப்போதெல்லாம் அறிவியல் ஆதாரங்களை முன் வைக்கிறதோ அப்போது குரான் வசனத்தை அதற்கு முரன் இன்றி பொருளை மட்டும் மாற்றி விட வேண்டும். அப்படித்தான் 1400 ஆண்டுகளாக குரான் மாற்றமின்ன அதன் பொருள் மட்டும் முரன் இன்றி மாறிவந்துள்ளது.// இப்படியா உண்மையை படார்ன்னு போட்டு உடைக்கிறது? அப்புறம் எங்கள மாதிரி பயான் பண்ணறவங்க பொழப்பு என்ன ஆகறது?

தஜ்ஜால் said...

தஜ்ஜால்
வாங்க பிசாசுக்குட்டி,
//நாசாகுள்ள முல்லாக்கள் பூந்தா இப்படித்தான் இருக்கும்.// அதத்தான் நானும் சொல்லறேன். இந்த நாசா விஞ்ஞானிகளுக்கு அறிவே கிடையாது. நம்ம ஜாகீர் நாயக், ஷப்பீர் அலீ, மண்ணடி மகா சன்னிதானம் மாதிரி ஆளுகளை வேலைக்கு எடுத்திருந்தா… என்னைக்கே ஏலீயன்களுக்கு தாவா செய்யப் போயிருக்கலாம். குர்ஆன்ல அறிவியல் இருக்குன்னு அவங்களுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கலாம்.
நாம சொன்ன எவன் கேட்கறான்?

தஜ்ஜால் said...

வாங்க Anonymous,
//ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்களை சொல்ல வேண்டி வரும் என்பதற்கு, இந்த நவீன மவ்லவிகள் கூறும் நவீன கருத்துக்களே சான்றாகும்.// என்னங்க நீங்க..! பொய் சொல்லவில்லை என்றால் இஸ்லாமே கிடையாது. அது என்றோ மண்ணோடு மண்ணாகப் போயிருக்கும்!

Iniyavaniniyavan Iniyavan said...

அருமை தோழரே,நல்ல சிந்தனையோடு சிரிக்க வைக்கின்றது...சகோ.பிஜே அவர்களின் காமெடி விளக்கம் அவரின் பித்தலாட்ட உரையிலேயே தெரியவரும்,இருப்பினும் மூமின்கள் நம்ப வேண்டும் என்ற நிற்பந்தம் காரணமாக நம்பித்தானே ஆக வேண்டும்,இல்லையேல் சொர்க்கம் மிஸ்ஸிங் ஆயிடுமே...!!!!??