Monday, 8 September 2014

மீண்டும் ஒரு மிஹ்ராஜ் !? - 1


பொதுவாக மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தவிர மற்றவர்கள் முன்பு எனது முகமூடியை நான் கழற்றுவதில்லை. இந்த இரட்டைவேடம், என்னை சிலவேளைகளில் தர்மசங்கடமான இடங்களில் நிறுத்திவிடுகிறது. எங்களது பகுதியிலுல் புதிதாகக் துவங்க இருக்கும் பள்ள்ளிவாசல் நிர்வாகக் குழுவில் பங்கெடுக்க அழைக்கப்பட்டது என்னைப்பற்றி முழுமையாக அறிந்தவர்களை பெரும் நகைப்பில் ஆழ்த்தியது அதிலொன்று. அதேபோல சிலவேளைகளில் தவிர்க்க முடியாமல் வழிபாட்டிற்குச் செல்வதும் இருக்கிறது. அப்படியொன்று கடந்த 25.07.2014-ல் நிகழ்ந்தது. ’லைலத்துல்கத்ர்’ ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவு என்பது முஹம்மதியர்களின் நம்பிக்கை. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலால், அன்று இரவு சுமார் 10 அளவில் பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைந்தேன். குறிப்பிட்ட அந்த இரவில் வழிபாடு செய்வதால் எனக்கு 1000 மாதங்கள் (சுமார் 83 ஆண்டுகள்) வழிபாடு செய்த நன்மைகள் கிடைக்குமென்பது அவர்களது நம்பிக்கை.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அன்று, அந்தப் பள்ளிவாசலின் மூன்றுதளங்களும் நிரம்பி வழிந்து வெளியே பிதுங்கிக் கொண்டிருந்தது. அல்லாஹ்(!)வைச் சந்திக்க என்னை அனுப்பி வைத்தவர்களுக்கு வந்த சோதனையோ என்று வேதனை(!)யில் நின்று கொண்டிருந்தேன். வந்தது வந்துவிட்டோம், விடுவதாக இல்லை; என்னை அனுப்பி வைத்தவர்களின் ஆவலைப் நிறைவேற்றியே தீருவதென்று பிதுங்கல்களின் இடைவெளியில் உள்ளே நுழைந்து; வளைந்து, நெளிந்து சென்று, மூன்றாவது தளத்தில் ஒரு இடத்தைப் பிடித்த பொழுது, ’இமாம்’ என்ற மதகுருவைப் பின்பற்றி கடமையான ’இஷா’ என்ற இரவுநேரத் தொழுகை, கூட்டுத் தொழுகையாக நிறைவடைந்து கொண்டிருந்தது.

வேஷமிடுவதென்று முடிவெடுத்தபின் கதாபாத்திரத்தை சரிவர செயல்படுத்துவதுதானே சிறப்பு. தனியாக, இமாம்-மின் வழிகாட்டுதலின்றி குனிந்து நிமிர்தேன். அதாவது குனிந்து நிமிர்ந்து தொழுவதைப் போல பாவனை செய்து முடித்தேன். இதைப் போன்ற புறச்செய்கைகளுக்கு அல்லாஹ்விடம் எப்பொழுதுமே கூடுதல் மதிப்பு கிடைக்கும்.கைகளை எப்படி உயர்த்தி, எங்கு, எப்படி, கட்டவேண்டும். எப்படி குனிந்து நிமிர வேண்டுமென்பதைக்யெல்லாம் அல்லாஹ் கவனித்து மதிப்பெண் அளிக்கிறானாம்; செய்கைகளை சரிவர நிறைவேற்றவில்லையெனில் உங்களது வழிபாட்டை அல்லாஹ், கந்தலை எறிவது போன்று உங்ககளது முகத்திலேயே எறிந்துவிடுவான் என்பதும் அவர்களது நம்பிக்கை. எனவே வழிபாட்டின் பொழுது செய்கைகள் மிக முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இதைப்போன்ற புறச்செய்கைளின் பொழுது, புரிகிறதோ இல்லையோ அதைப்பற்றிய கவலையெல்லாம் இல்லை ஆனால் கட்டாயமாக உச்சரிப்பு சுத்தமாக குர்ஆனின் பகுதிகளை முணுமுணுத்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் மொழி புரியாமல் தவறாக உச்சரிப்பதால் விளையும் தவறான பொருளை அல்லாஹ் அப்படியே அங்கீகரித்து விடுவானாம். இஸ்லாமியர்கள் அரபியைப் பிடித்து இப்படித் தொங்கிக் கொண்டிருக்க இதுவே காரணம்.

உதாரணத்திற்கு ’ஹ(خ)லக்க ஸமாவாத்தி’ என்றால் ’வானத்தைப் படைத்தான்’   என்பது பொருள். ’ஹ(خ)லக்க...’ என்பதிலுள்ள’ஹ’ வை அழுத்தமில்லாமல் அதாவது ’ஹ’(ح) என்று உச்சரித்தால்,  ‘வானத்தை அழித்தான்’ என்று பொருள்வந்துவிடும். அல்லாஹ் எரிச்சலடைந்து உங்களது வழிபாட்டை உங்களது முகத்திலேயே அறிந்துவிடுவானாம்.(அல்லாஹ்விற்கு அரபியைத் தவிர வேறு மொழி தெரியாது?; நாளை(!) சொர்க்கத்தில் பேசப்படும் மொழியாக அரபு மட்டுமே இரும்ருக்கும் என்பதையும் நீங்கள் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். 72 உருப்படிகளை அடைய விரும்புபவர்கள் ‘ஸ்போக்கன் அரபி’ வகுப்பிற்குச் செல்வது நலம்! ’இதற்கெல்லாம்’ மொழி ஒரு பொருட்டல்ல என்கிறீர்களா?). இதனால் ஒரு இஸ்லாமியர் அல்லாஹ்விற்காக மனதார குனிந்து நிமிர்ந்ததற்குப் எந்தப் பலனுமில்லாமல் போய்விடும் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. பொருள் புரியவில்லையென்பது இங்கு ஒரு பொருட்டே அல்ல! அரபு... அது..அதுதான் முக்கியம்.

நான் அடுத்த காட்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தேன். தொழுகையை முடித்த சிலர் வெளியேற, நெரிசல் குறைந்தது. சிலர் வெளியே செல்வதும் கை,கால்களை கழுவி ‘உளு’ என்ற சடங்கை நிறைவேற்றியவர்களாக திரும்பவும் வந்துகொண்டிருந்தனர். அங்குமிங்கும் போவதும் வருவதுமாக இருந்தனர்.அவர்களுக்கு வாயு பகவானின் கடாட்சம் அதிகமாக இருந்ததுதான் காரணம்.

’உளு’ என்ற சடங்கைப்பற்றி அறியாதவர்களுக்காக இரண்டு இணைப்புகளைத் கொடுத்திருக்கிறேன்.



முன் பின் துவாரங்களிலிருந்து ஏதொன்று வெளியானாலும் உங்களது தூய்மை அகன்றுவிடும். மீண்டும் நீங்கள் கை, கால்களைக் கழுவி தூய்மை செய்து கொள்ள வேண்டுமென்பது முஹம்மதின் போதனைகளில் ஒன்று.

உடலைத் தூய்மையாக வைத்திருக்கச் சொல்வதில் என்ன தவறு?என்று கேட்கலாம். நியாயம்தான் நான் அதை மறுக்கவில்லை. ஒருவர் என்னதான் தேய்த்துக் குளித்திருந்தாலும் முஹம்மது போதித்த  ‘உளு’ என்ற கை, கால்களைக் கழுவும் சடங்கை நிறைவேற்றாமல் தொழுகைக்குச் செல்ல முடியாது எனும் பொழுது தூய்மை எனற வாதம் செயலிழந்து, சடங்கு முன்னிலை பெற்று, குளிப்பது இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படுகிறது.

உதாரணத்திற்கு ஒருவர், தேய்த்துக் கழுவவேண்டிய இடங்கள் உட்பட அனைத்தையும் நன்றாக தேய்த்துக் குளித்து, புத்தாடை, வாசனை திரவியங்கள் என்ற மணக்க மணக்க அல்லாஹ்வை வணங்கச் செல்கிறார். அவரது வயிற்றில் ஏற்பட்ட உயர் காற்றழுத்த நிலை, வழுவிழந்து, பின்புறத்தில் ’தென்றாலாக’ வெளியேறுகிறதென்று வைத்துக் கொள்வோம். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி அந்த நபர் அல்லாஹ்வை வணங்குவதற்குத் தேவையான தூய்மையை இழந்து ’உளு’ என்ற சடங்கை நிறைவேற்ற வேண்டியவராகிறார். இப்பொழுது சந்தர்ப்பவசமாக ‘உளு’ச் செய்வதற்குரிய தண்ணீர் கிடைக்கவில்லையெனில் ‘தயம்மும்’ எனப்படும் மண் அல்லது புழுதியில் செய்யப்படும் சடங்கை நிறைவேற்ற வேண்டும். அதாவது, அவர் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டதற்கு மாறாக புழுதியை உடலில் தேய்த்துக் கொள்ளவேண்டும். இதை சடங்குகளின் மீது கொண்டிருக்கும் வெறித்தனமான பற்றீடு என்று சொல்லலாம். இஸ்லாமில் சடங்குகள் சம்பிரதாயங்கள் எதுவுமில்லை என்பார்கள்; அதையும் நீங்கள் எதிர்க் கேள்வியின்றி நம்பவேண்டும்.

சரி..!

இஸ்லாமியர்களின் தர்க்கப்படி நோக்கினால், காற்றைப் பிரித்தால் கைகால்களை எதற்காக கழுவ வேண்டும்? நியாயமாக... கழுவியிருக்க வேண்டிய இடம் வேறல்லவா?

இவ்வாறு தர்க்க ரீதியான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தால் உங்களது தலை ‘கத்னா’ செய்யப்படும் என்பதை நினைவில் கொள்க. அல்லாஹ்வைப் பொறுத்தவரையில் ஏன் எதற்கு என்று கேள்விகள் கேட்காமல் இஸ்லாமிலேயே இருக்க வேண்டும்; வெளியேறிடலாம் என்ற எண்ணமே கூட இருக்கக் கூடாது.

நாம் நோன்பிற்குத் திரும்புவோம்,

நோன்பு என்றால் சாப்பிடாமல் தண்ணீர் கூட குடிக்காமல் பட்டினியாக இருந்து சாவது என்ற எண்ணமிருந்தால் மாற்றிக் கொள்ள வேண்டுகிறேன். ரமளான் நோன்பு துவங்குகிறது என்றாலே இஸ்லாமிய குடும்பத் தலைவர்களின்பாடு திண்டாட்டம்தான். வழக்கமாக ஆகும் குடும்பச் செலவுகளைவிட இருமடங்கு ரமளான் மாதத்தில் ஆகிறது என்பது மாற்று நம்பிக்கையிலிருப்பவர்கள் அறியாதது. நோன்பு இருக்கிறோம் பேர்வழியென்று, ஊர்வன, பறப்பன, நடப்பன, நீந்துவனவற்றுடன், கிழங்கு, பருப்பு வகைகளை, வறுத்தும் பொரித்தும், வேகவைத்துமாக வயிற்றிற்குள் திணிக்கின்றனர்.

விளைவு?





ஒவ்வொருவரும் மனித ’வெடிகுண்டு’களாக மாறிவிடுகின்றனர். சிலவேளைகளில் ஏப்பம் விடுகிறார்களா... அல்லது ‘பாம்’ போடுகிறார்களா... என்பதே புரிவதில்லை! அதுவும் குனிந்து நிமிர்ந்து வழிபாடு செய்யும் பொழுது ’வெடிகுண்டு’த் தாக்குதல் தாரளாமயமாகிவிடுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ’ஸைலண்ட் பாம்’ உற்பத்தி செய்வதுதான் கொடுமை. ‘நிசப்த பிராண சங்கட’மாம். எவர் இந்த வேலையைச் செய்தது என்பதை கண்டுபிடிக்க அல்லாஹ்வால்கூட முடியாது. அத்தனை திறமையாக தங்களது வேடத்தை கையாள்கின்றனர். மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் பள்ளிவாசல்களையும் சற்று கவனிக்க ஆவன செய்யவேண்டும்!

என்னவோ... முஸ்லீம்கள் மட்டும்தான் ‘பாம்’ போடுவதைப் போன்று எழுதியிருக்கிறீர்களே, மற்றவர்களிடமிருந்து ஜவ்வாதும் கஸ்தூரியுமா வெளியாகிறது? என்று இஸ்லாமியர்கள் என்னை நோக்கி இப்படிக் கேட்பார்கள். நான் இல்லையென்று மறுக்கப்போவதில்லை. எனக்குத் தெரிந்தவரையில், அல்லாஹ் என்ற கடவுளைத் தவிர மற்ற கடவுளர்கள் மனிதனது தனிப்பட்ட செயல்பாடுகளில் மூக்கை நுழைப்பதாகத் தெரியவில்லை. உடலின் எந்தெந்த இடத்தில் எத்தனை நீளத்திற்கு முடிகளை வளர்க்கவேண்டும், எதை எப்படி, எத்தனைமுறைக் கழுவவேண்டுமென்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பது அல்லாஹ் மட்டுமே.

ஒருவழியாக தராவீஹ் என்ற நீண்ட நேரவழிபாடு துங்கியது. சிறிது நேரத்தில் நெரிசல் வெகுவாகக் குறையத் துவங்கியது. வழிபாடு என்பது அவ்வளவுதானா?

அவர்களது செய்கைகள், வேடதாரியான என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. இந்தக் குட்டையில்தானே இத்தனை வருடங்களாக ஊறிக் கொண்டிருக்கிறேன் இவர்களின் செய்கைகளை நான் அறியாததில்லை. வழிபாடு, மூன்றில் ஒரு பகுதி நிறைவேறியிருந்த பொழுது அதுவரை இருந்த பொறுமை என்னைவிட்டு விலக, வசதியாக ஒரு இடத்தை தேர்வு செய்து சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில்,

யாரோ என்னைத் தூக்குவது போலத் தோன்றியது; விழிக்க முயன்றேன். இமைகள் ஒட்டிக் கொண்டது. மிதப்பதைப் போன்றதொரு உணர்வு……

தொடரும்...


தஜ்ஜால்

Facebook Comments

16 கருத்துரைகள்:

சிவப்புகுதிரை said...

இன்னக்கி காலைல பஜிர் தொழுதுட்டு அல்லாஹ்க்கு ஆப்பு வைக்குரதுக்கு 6 மணிக்குலாம் வந்துட்டிங்க போல..

நீங்கள் ஒரு மிஹ்ராஜ் பயணம் போர மாதிரி தெரியுது...சீக்கிரம் வந்து அங்க என்ன நடந்துச்சீனு சொல்லுங்க...ஆவலுடன் இருகுரன்.

முகமது நபி பெண்களுடன் என்ன செஞாலும் அது உளுவை முறிக்காது..மூமின்களே முழிச்சுகோ sunrise குடிச்சிகோ....

Anonymous said...

Marumai naalil neengal yellam dhantikka paduvirgal allah is always watching us be careful

இந்தியன் 1947 said...

அலோ அனானி சொல்றத்துக்கு ஏதும் (ஆதாரமில்லை) என்பதால் பொதுவாக தண்டிக்கப்படுவீர்கள் என்று பொத்தாம் பொதுவாக சொன்னால் எப்படி. என்னவிதமான தண்டனை ?
மறுமை நாளுக்கு அப்புறம் என்ன ?(மறுமை நாளின் காலம் என்ன ?)
மறுமை நாள் வரவில்லை என்றால் மிராஜ் ட்ரிப்பில் எறாதூதர் நரகத்தை எப்படி பார்த்தார் (அங்கே பெண்களை எப்படி பாத்தார்) சொர்கத்தின் அடுக்குகளை எப்படி விவரிக்க முடியும். மிராஜ் பொய் அது அவரோட கனவு மட்டுமே என்றால் பொய் சொன்னார்ன்னு தானே அர்த்தம். தூதர்(?) சொன்னது சுவர்க்க அடுக்குகள் என்றால் குரான் மொழிபெயர்ப்பாளர்கள் அதை வானத்தின் அடுக்குகள் என்றல்லவா சொல்கின்றனர். அப்போ சுவர்க்கம் என்பது வானம் அவ்வளவுதானே ?
மறுமை நாளில் வேற்று கிரக மனிதர்களுக்கு என்று ஏதாவது உண்டா ? ஒரே கொளருபடியா இருக்கே

சிவப்புகுதிரை said...

//Anonymous said...
Marumai naalil neengal yellam dhantikka paduvirgal allah is always watching us be careful//

அனாமினஸ் அண்ணன் நீங்களே சொர்கத்தில் தங்க தட்டுல சாப்பிட்டு 72 கண்ணி பொண்ணுங்க கூட குதுகலமாக இருங்க நாங்க வரல.நாங்க பெரிய வாணல்ல என்னைல வேவ்ரோம்..

சிவப்புகுதிரை said...

//மறுமை நாளுக்கு அப்புறம் என்ன ?(மறுமை நாளின் காலம் என்ன ?)
மறுமை நாள் வரவில்லை என்றால் மிராஜ் ட்ரிப்பில் எறாதூதர் நரகத்தை எப்படி பார்த்தார் (அங்கே பெண்களை எப்படி பாத்தார்) சொர்கத்தின் அடுக்குகளை எப்படி விவரிக்க முடியும். மிராஜ் பொய் அது அவரோட கனவு மட்டுமே என்றால் பொய் சொன்னார்ன்னு தானே அர்த்தம். தூதர்(?) சொன்னது சுவர்க்க அடுக்குகள் என்றால் குரான் மொழிபெயர்ப்பாளர்கள் அதை வானத்தின் அடுக்குகள் என்றல்லவா சொல்கின்றனர். அப்போ சுவர்க்கம் என்பது வானம் அவ்வளவுதானே ?
மறுமை நாளில் வேற்று கிரக மனிதர்களுக்கு என்று ஏதாவது உண்டா ? ஒரே கொளருபடியா இருக்கே//

இந்தியன் 1947 அண்ணா இப்படிலாம் நீங்க கேட்ட உங்களுக்கும் நரகம் தான் சரியா..மிராஜ் இரவு அன்னக்கி முகமது நபி எந்த வீட்டுல இருந்தாருனு தெரிஞ்ச மிராஜ் இரவோட கதை புரியும்.

//மறுமை நாள் வரவில்லை என்றால் மிராஜ் ட்ரிப்பில் எறாதூதர் நரகத்தை எப்படி பார்த்தார் (அங்கே பெண்களை எப்படி பாத்தார்) //

இது ஒரு முக்கியாமான கேள்வி இசுலாமியர்கள் நம்பிக்கைபடி இன்னும் நியாய தீர்ப்பு நாளே வரல சொ சொர்கமும் நரகமும் காலிய இல்ல இருக்கனும் சரி சொர்க்கத்துக்கு நிறைய பேர் வருவாங்க அவங்களுக்குலாம் உடனே கண்ணிகளை எப்படி ஏற்ப்பாடு பண்ணுரதுனு இப்பையே ரெடி பண்ணுராங்கனு வச்சிக்கிட்ட கூட நரகம் காலிய தான இருக்கனும் அங்க எப்படி பெண்கள் இருக்குராங்கனு முகமது சொல்லுராரு. சம்திங் ராங்க் வித் முகமது நபி..

பிசாசு said...

பயணத்திற்கு வாழ்த்துக்கள் ஆனா நீங்களும் (கட்டாத) கோயில பாத்தேன் கட்டிடத்த பாத்தேன் டுவின் டவரை பார்த்தேன்னு பிகர்களை பார்த்தேன்னு நபியை பார்த்தேன் நான்தான் கடைசியிலும் கடைசி தூதன் அப்படின்னு சொல்லி பொறாமையை உண்டாக்காதீங்க.

பொண்ணுகளுக்கு நரகம்ன்னா ஹூரிங்க மட்டும் எப்படி சொர்கத்துள இருப்பாங்க.. (எல்லார்க்கும் நரகம் தாண்டான்னு மறைமுகமா சொல்லிட்டு போயிருக்காருன்னு நினைக்கிறேன்)

பிசாசு said...

நாங்களும் எரைதூதர் ஆக காத்துகிட்டு கிடக்கோம் - அவரு சொன்னதையேதான் நாங்களும் சொல்றோம் கூடவே டேய் மறுமையில கடவுள்கிட்ட சொல்லி நான் ஐபோன் வாங்கி தரண்டா அதுல நீ பிரியா இன்னொருத்தனோட ஹீரிக்கு கடலை போடலாம் அப்படின்னு ஆசை வார்த்தை காட்டினாலும்..இந்தக்காலத்துல ஒரு பய காது கொடுத்து கேட்கமாட்டேன்கிரான்..
பெத்த மகன் கிட்டே சொன்னாக்கூட அட போப்பா லூசு மாதிரி பேசாதேன்னு சொல்றான்..
இப்ப நான் லூசா இல்லை இதே மாதிரி சொன்ன தூதர் லூசா

ஜிமிக்கி said...

அண்ணே தவறிப்போய் கூட கனவுல ஈராக் இஸ்லாமிக் ஸ்டேட் பக்கம் போய்டாதீங்க - சுட்டு சுட்டு வெலையா லாடுரான்கலாம்...
வயசுக்கு வராத பொடிபசங்களுக்கு கூட ஹூரி ஆசை கண்ணை மறைக்கும் அளவுக்கு ச்சாப்டர் 24 versas 24.2 அப்படின்னு சகட்டுமேனிக்கு புதுசு புதுசா வஹீ (உபதேச) சுனாமி வந்துகிட்டே இருக்காம்.

தஜ்ஜால் said...

வாங்க சிவப்புக் குதிரை,

//நீங்கள் ஒரு மிஹ்ராஜ் பயணம் போர மாதிரி தெரியுது...சீக்கிரம் வந்து அங்க என்ன நடந்துச்சீனு சொல்லுங்க...ஆவலுடன் இருகுரன்.// ஆமாம் அது ஒரு பெரிய கதை இல்லை..இல்லை... அறிவியல்(!) பூர்வமான உண்மை. இதை விஞ்ஞானிகள் கூட ஒப்புக் கொள்கிறார்கள். (எந்த விஞ்ஞானின்னு கேட்காதீங்கோ..!)

தஜ்ஜால் said...

வாங்க இந்தியன் 1947,

// சம்திங் ராங்க் வித் முகமது நபி..// சம்திங் ராங் இல்ல டோட்டல் ராங்.

தஜ்ஜால் said...

வாங்க பிசாசு,
/நான்தான் கடைசியிலும் கடைசி தூதன் அப்படின்னு சொல்லி பொறாமையை உண்டாக்காதீங்க. // நல்ல ஐடியாவா இருக்கே.. நானும் ஒரு கடையப் போடலாம்னுதான் பார்க்கிறேன்... //நாங்களும் எரைதூதர் ஆக காத்துகிட்டு கிடக்கோம்// அதுக்குள்ளாறா போட்டியா..? பேசாமா நம்ம ஏரியா பிரிச்சி ஏறத் தூதர் பிஸினஸ் செய்யலாம்... என்ன சொல்றீங்க...?

தஜ்ஜால் said...

@ பிசாசு,

//இப்ப நான் லூசா இல்லை இதே மாதிரி சொன்ன தூதர் லூசா // ஹூரிகளைப்பற்றி முல்லாக்கள் எழுதினவைகளைப் படித்தல் மற்றவர்களை இவர்கள் எந்த அளவிற்கு லூசாக நினைத்திருக்கிறார்கள் என்பது புரியும்!

தஜ்ஜால் said...

வாங்க ஜிமிக்கி,

//வயசுக்கு வராத பொடிபசங்களுக்கு கூட ஹூரி ஆசை கண்ணை மறைக்கும் அளவுக்கு ச்சாப்டர் 24 versas 24.2 அப்படின்னு சகட்டுமேனிக்கு புதுசு புதுசா வஹீ (உபதேச) சுனாமி வந்துகிட்டே இருக்காம். // முஹம்மது மிகச் சரியான இடத்திலதான் அடிச்சிருக்கார். இல்லேன்ன ஒரு பயலும் அவர சீண்டியிருக்க மாட்டாங்க...! என்ன சொல்ல்றீங்க?

பிசாசு said...

பொண்டாட்டி ஊர்ல இல்லாத இந்த புனித மாதத்தின் இரவு நேரங்களில் B-Grade என்று சொல்லப்படும் பூலோக சொர்க்க கன்னிகளின் (?) வாழ்க்கை தத்துவங்களை நான் பார்த்து கேட்டு கதறுவது வழக்கம். ஏன்னா நாளைக்கு 72 கன்னிகள் முன்னாடி ஒன்னும் தெரியாம உட்காந்திருக்கக்கொடாது பாருங்க... அப்படித்தான் இன்னைக்கும் உட்கார்ந்தேன். அதுக்குமுன்னாடி எப்போதும் பார்க்கும் தமிழ் வெப்சைட் செய்தி பிரிவில் ஈராக்கில் ஐஸ் (ஐஎஸ் ஐஎஸ்) விக்கிற வீடியோவ பார்த்தேன்...

கொடூரமாக இருக்கிறது. மிராஜ் பயணத்தின் அடுத்த பதிவுகளுக்கு முன்பு தாங்கள் அந்த யுடியுப் வீடியோவை பார்த்துவிடுங்கள். அதை பற்றி நான் இங்கே மிகுந்த மன வலியோடு எழுதலாம் ஆனால் அது தங்கள் பதிவை விட அதிகமானதாகிவிடும். (தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது). சீக்கிரம் அதை விமர்சனம் செய்வீர்கள் என்று எண்ணுகிறேன்... அப்போதும் கமெண்டில் சந்திக்கிறேன்.

தஜ்ஜால் said...

வாங்க பிசாசு,

//அதை பற்றி நான் இங்கே மிகுந்த மன வலியோடு எழுதலாம் ஆனால் அது தங்கள் பதிவை விட அதிகமானதாகிவிடும்.// இணைப்பைக் கொடுங்கள் பார்த்து விடுகிறேன். முல்லாஹ் ஒருவர் சொர்க்கலோக சுந்தரிகளைப்பற்றிப் பேசியதைக் கேட்டிருக்கிறேன். அதை தனிப்பதிவாக எழுதும் எண்ணம் இருக்கிறது.

பிசாசு said...

http://www.youtube.com/watch?v=AUjHb4C7b94