Sunday, 18 May 2014

அல்லாஹ்வின் மகன்!(?) -3
கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளின் வாரிசு என்ற கோரிக்கையை முவைத்த பொழுது, அதை மறுக்கும் விதமாக இப்படியொரு எதிர்க் கேள்வியை அல்லாஹ்(!) முன் வைக்கிறான்.

குர்ஆன் 6:101
..அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்?

அரபி ஒலிபெயர்ப்பு:
..annā yakūnu lahu waladun walam takun lahu ṣāḥibatun

அல்லாஹ்வைப்பற்றிய முஹம்மதின் கற்பனை எவ்வாறு இருந்ததென்பதை இக் குர்ஆன் வசனம் நமக்குத் தெளிவாகக் காண்பிக்கிறது. இதில் ṣāḥibatun என்ற சொல்லை நமது தமிழக முல்லாக்கள் மனைவி என்று மொழிபெயர்த்திருக்கின்றனர்.  ṣāḥibatun என்பதற்கு தோழி‘ என்பதுதான் நேரடிப் பொருள். ஆங்கிலத்தில் கூறினால்‚ girl friend’’ என்று சொல்லலாம். அல்லது திருமணபந்தமின்றி சேர்ந்து வாழும் ஒரு இணை என்று சொல்லலாம். 

அல்லாஹ்விற்கு தோழியா?

நாம் இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டும் அல்லாஹ் ஒரு ஆண்பால்தான்! இல்லையெனில் தனக்கொரு மகனைப் பெற்றுத்தர பெண்ணின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை! சர்வ வல்லமையுடையவனாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொள்பவனால், பெண்ணின் உதவியின்றி தனக்கொரு மகனை உருவாக்கிக் கொள்ள முடியவில்லையாம்!

குர்ஆன் 6:102  நம்மிடம் கேட்கும் கேள்வியின் பொருள்,  அவன் எந்தப் பெண்ணுடனும் உடலுறவு கொள்ளாத நிலையில் அவனுக்கு எப்படி மகன் இருக்க முடியும்? மேலும் ஒரு பெண்ணின் உதவியின்றி தன்னால், தனக்கு ஒரு வாரிசை உருவாக இயலாதென்பதுதான் அல்லாஹ் இங்கு தரும் வாக்குமூலம்!

ஆம்!

அல்லாஹ்வும் அப்படித்தான் நினைக்கிறான். ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டு, விந்தைச் செலுத்தி, அதன் மூலம் அப்பெண் கருத்தரித்து, கருவளர்ந்து குழந்தையைப் பெற்றெடுத்தால் மட்டுமே அது தனது குழந்தையாக இருக்க முடியும் என்ற மனித சிந்தனையைக் கடந்து அல்லாஹ்வினால்(!) சிந்திக்க முடியவில்லை!

வானங்களையும், பூமியையும், மலக்குகள், ஜின்கள், விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள், ஆதாம், ஹவ்வா(ஏவாள்).... இன்னும் எண்ணற்றவைகளை பிறரின் உதவியின்றி, முன்மாதியின்றி படைத்ததாக பீற்றிக் கொள்ளும் ஒரு கடவுளால், ஒரு பெண்ணின் உதவியின்றி தனக்கொரு மகனை உருவாக்க முடியவில்லையாம்.  இதுதான் குர்ஆன் 6:101 நமக்குக் கூறும் செய்தி!

தன்னைக் கையாலாகாதவன் என்று எவரும் நினைத்து விடக் கூடாதென்பதற்காக,  தனக்கு சர்வ வல்லமை இருப்பதாக அல்லாஹ் அறிவித்துக் கொள்ளும் ஒரு வசனத்தைக் காண்போம்.

குர்ஆன் 16:40
ஒன்றை நாம் நாடினால் "ஆகு' எனக் கூறுவதே நமது கூற்றாகும். உடனே அது ஆகி விடும்.

படைப்பின் ஆரம்பத்தைப்பற்றியும், நாம் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் இயேசுவின் உருவக்கம் பற்றிய  குர்ஆனின் கதையாடல்களை வாசித்தவர்களுக்கு இது ஒரு அர்த்தமற்ற பீற்றல் என்பது புரியும்! ஈஸாவின் உருவாக்கம்பற்றிக் கூறும் பொழுது,

குர்ஆன் 66:12
இம்ரானின் மகள் மர்யமையும் அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம்...

அல்லாஹ், தனது இருக்கையில் ’ஸ்டைலாக’ அமர்ந்தவாறு ’குன்’ (ஆகுக) என்று கூறியிருக்கலாமே? அதைவிடுத்து மர்யமிடம் சென்று எதற்காக தனது உயிரை ஊதவேண்டும்? 

உண்மையில், ’குன்’ என்ற வெற்றுச் சொல்லால் அல்லாஹ்(!) எதையுமே உருவாக்கியதில்லை. அப்படி உருவாக்கியதற்கு எவ்விதமான ஆதாரமுமில்லை. அல்லாஹ் பெரிதாகப் பீற்றிக் கொள்ளும் எந்தப் படைப்பையோ அல்லது அழிவுகளையோ ’குன்’ என்ற சொல்லால் உடனடியாக நிகழ்த்திடவில்லை.

உதாரணத்திற்கு, இணைந்திருந்தாக அல்லாஹ் கூறும் வானங்களையும் பூமிகளையும்  (நன்கு கவனிக்கவும் பூமியை மட்டும்) பிரித்து அமைப்பதற்கு ஆறு(எட்டு!?) நாட்கள் தேவைப்பட்டதாம். அந்த பூமியில் தனது பிரதிநிதியாக ஆதாமைப் படைக்க, தூசி/ஈரமண்/களிமண்/தட்டினால் ஓசை தரும் களிமண் என்ற ஏதோ ஒரு பொருளை ஆதாரமாகக் கொண்டு அல்லாஹ் தனது இரண்டு கைகளால் மண்ணைப் பிசைந்து, உருட்டித் திரட்டி, வடிவமைத்து உயிரை ஊதி உருவாக்க வேண்டியிருந்தது. நூஹ் நபி காலத்தில் அவரது எதிரிகளை அழிக்க பெரும் வெள்ளம் தேவைப்பட்டது; பெரும் வெள்ளத்திற்காக மழையைப் பொழிவித்தும், நிலத்தில் ஊற்றைப் பெருகச் செய்தும்; அதனால் பூமியை நீரால் நிறைக்க வேண்டியிருந்தது;  அவ்வெள்ளத்திலிருந்து தனது படைப்புகளைக் காப்பாற்றி, உயிரினங்களைத்  தழைக்கச் செய்ய கப்பல் தேவைப்பட்டதாம்; அந்தக் கப்பலைச் செய்ய நூஹ் நபியின் உதவி தேவைப்பட்டது; ... இப்படி.. இன்னும்... நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். ஒவ்வொன்றும் நிகழ நிறைய கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது இவற்றில் எதுவும் உடனடியாக நிகழவில்லை.

ஈஸா/இயேசுவின் உருவாக்கத்தால் மர்யமின் கற்பின் மீது விழுந்த கேள்விக்குறியை மறுக்கும் விதமாக அல்லாஹ் கூறும் பொழுது,

குர் ஆன் 3:59
அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து "ஆகு' என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.

குர்ஆனின் மூன்றாம் அத்தியாயமாக இருக்கும் ஆலு இம்ரான், முஹம்மது மதீனாவில் கூறியது. அவர், தன் வாழ்வின் கணிசமான பகுதியை, அதாவது சுமார் 23 ஆண்டுகள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி, வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.  கால இடைவெளி அவருக்கு மறதியை உண்டாக்கி விட்டது. மறதி என்பது வழக்கமான மனித இயல்புதான். ஆனால் அவர் மக்காவில் முன்பு வெளியிட்ட அத்தியாயங்களை வாசித்தால் முரண்பாடுகள் எளிதாகப் புரியும். ஆதமின் படைப்பைப் பற்றி முன்பு கூறியதை கவனியுங்கள்,

குர்ஆன் 38:72
அவரைச் சீர்படுத்தி எனது உயிரை அவரிடம் நான் ஊதும் போது அவருக்குப் பணிந்து விழுங்கள்!'' 

குர்ஆன் 15:29
"அவரை நான் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நான் ஊதும் போது, அவருக்குப் பணிந்து விழுங்கள்!'' (என்று கூறினான்)

எனது கேள்வி என்னவென்றால், அல்லாஹ், ஆதமை மண்ணால் உருவமைத்து தனது உயிரை ஊதி உருவாக்கினானா? அல்லது மண் பொம்மையாக இருந்த ஆதாமிடம் ’குன்’ என்று கூறியவுடன் உயிர்பெற்றதா? நான் தற்சமயம் இந்த விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை.

ஈஸா, ‘குன்’ என்ற சொல்லால் உருவானவரல்ல!  அவரை உருவாக்க ஒரு வானவர்(?), தனிமையிலிருந்த மர்யமைச் சந்தித்து ஊதித் தள்ள வேண்டியிருந்தது. அவர் கருவுற்று, கருவைச் சுமந்து, கரு வளர்ச்சியடையும் வரை 9-10 மாதகாலம் காத்திருந்து, வேதனைகளைத் சகித்துக்கொண்டு,  ஈஸாவைப் பிரசவிக்க வேண்டியிருந்தது. ’குன்’ என்ற சொல்லால் அல்லாஹ் எதையும் உடனே உருவாக்கியதாக குர்ஆனில் ஆதாரமில்லை. எனவே ’குன்’ என்றால் ’பிம்பிளிக்கி பிலாப்பி !’

நாம் மர்யமின் கதையைத் தொடர்வோம்..

குர்ஆன் 19:17
அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக ( بَشَرٌ-basharan-adult male) அவருக்குத் தோற்றமளித்தார்.

குர்ஆன் 19:18
"நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறினார்.

குர்ஆன் 3.45
"மர்யமே! அல்லாஹ் தன் வார்த்தை பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ் என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதிமிக்கவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!

அல்லாஹ்வின் ரூஹ் (உயிர்) ஒரு ஆணின் வடிவத்தில் மர்யமிடம் செல்கிறது; அது ஒரு ரூஹ்ஹை ஊதுகிறது. இது நமது முஹம்மது அவர்கள் மக்காவிலிருக்கும் பொழுது கூறியது. அவர் மதீனாவிற்குச் சென்றவுடன் ஒருமையிலிருந்த ரூஹ், மலக்குகளாகப்(குர்ஆன் 3.45) பன்மை வடிவம் பெறுகிறது என்பதை கவனிக்கவும். ஈஸா பற்றிய அறிவிப்பை,  மர்யமிடம் தெரிவிக்கச் சென்றது சென்றது அல்லாஹ்வின் ஒரு ரூஹ்ஹா? அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட மலக்குகளா? இதை நாம் அல்லாஹ்வின் உயிர்கள் மர்யமிடம் சென்றது என்று சொல்லலாமா?  இதைப்பற்றி பிறகு விவாதிப்போம். முதலில் அல்லாஹ்வின் ஒரு உயிர்(ரூஹ்) அதாவது ரூஹுல் குத்தூஸ் என்ற பரிசுத்த ஆவி செய்த செயலைப்பற்றிக் காண்போம்.

தொடரும்...


தஜ்ஜால்

Facebook Comments

24 கருத்துரைகள்:

Anonymous said...

அருமையான விளக்கங்கள்

மஜீத் said...

வாழ்த்துக்கள். தொடருங்கள் தங்கள் பணியை.

Ngama Rgazi said...

//அவரிடம்(மர்யமிடம்)நமது உயிரை ஊதினோம்//
இங்கே 'உயிர்' என்பதை உயிரணு/semen என்று பொருள்கொண்டால்,இயேசு அல்லாவின் வாரிசு(மகன்)தானே ?

தஜ்ஜால் said...

வாருங்கள் Anonymous,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

தஜ்ஜால் said...

வாருங்கள் மஜீத்,

நன்றி!

தஜ்ஜால் said...

Ngama Rgazi said...

//இயேசு அல்லாவின் வாரிசு(மகன்)தானே ?// கிறிஸ்தவர்களின் வாதம் சரியென்றே தோன்றுகிறது.

Ant said...

//கிறிஸ்தவர்களின் வாதம் சரியென்றே தோன்றுகிறது.// அப்ப குர்ஆன் 6:101 ..அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அல்லாவின் சொல் என்ன ஆவது?

தஜ்ஜால் said...

வாருங்கள் ANT,

//அல்லாவின் சொல் என்ன ஆவது?// அல்லாஹ் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறானோ?

Devapriya Solomon said...

இறந்த ஏசுவை, தாவீது ராஜாவின் பரம்பரையினர் என்று நம்பி, நிருபிக்க சுவி கதாசிரியர்கள், பழைய ஏற்பாடு துணை கொண்டு, அதையும் திரித்து, தன்னிச்சையாய்-தனித்தனியாக புனைய வந்ததே இப்பட்டியல்கள். யோசேப்பினால் கர்ப்பம் இல்லை எனில் அவர் தாவீது பரம்பரையே இல்லை. இவை எல்லாம் பின் நாட்களில் இடைசொருகல்
மேரியின் மேல் பரிசுத்த ஆவி வந்ததால் (லூக்கா1:35செக்ஸ் உடலுறவு செய்ததால்? (ஆவி உன் மேல் வரும். உன் மேல் நிழலிடும்.-) குரான்படி பெண்ணுரிப்பில் ஊதியதால்) கர்ப்பம்
Allah: I sent Jibreel to blow into Mary's Vagina
http://wikiislam.net/wiki/Allah:_I_sent_Jibreel_to_blow_into_Mary's_Vagina
In Qur'anic verses 21:91 & 66:12, Allah says that he breathed into Maryam's (Mary's) vagina in order to conceive Isa (the Islamic Jesus). When looking at the tafsir's we find that Allah did this by sending the Angel Jibreel (Gabriel) to complete this task. The word "Farj" is used in these verses to indicate where Allah/Jibreel blew, and Farj means "vagina." The verse uses "Farjaha" which means "her vagina."
http://pagadhu.blogspot.in/2014/04/blog-post_7510.html

Ant said...

@Devapriya Solomon
கருத்துப்படியும் குரன்படியும் பார்த்தால் அல்லா தனது தூதரை ‌தானே உருவாக்க வில்லை அதற்கு ஜிப்ரீல் தேவைபட்டது. ‌ஜிப்ரீல் செய்யத செயல் எல்லாம் அல்லா செய்யத செயலா? அப்ப ஜிபரீல் பங்குக்கு என்ன பெயர்?
சரி போகட்டும்!
கதிஜா அம்மையீர் முகம்மது தனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என கூறியபோது பெண்களை நிர்வான நிலையில் ஜிப்ரீர் காணாது என்ற கோட்பாட்டு அடிப்படையில் தானே முகம்மது அல்லாவின் தூதர் ஆனார். இப்போது பெண் உறுப்பில் ஊதியதாக குறிப்பிடுகிறாரே!

Ant said...

@Devapriya Solomon
////தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்"; என்று கட்டளையிட்டுச் சொன்னார்.// கூறுவது http://www.bibleintamilDOTcom/ref2009/u_mk07-14-23d05wwed.htm
ஆனால்
//17 ஆனால் நன்மை தீமை பற்றிய அறிவைக் கொடுக்கக் கூடிய மரத்தின் கனியைமட்டும் உண்ணக் கூடாது. அதனை உண்டால் நீ மரணமடைவாய்” என்றார்.// இது http://www.biblegatewayDOTcom/passage/?search=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+2%2CGenesis+2&version=ERV-TA;NIV
உண்டாலா? அல்லது உண்னும் நாளிலா? நாள் என்றால் அதை தாண்டி மனிதன் உயிர் வாழ்கிறானே! இநத கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை!

Ngama Rgazi said...

ஏடன் தோட்டம், நன்மை-தீமை பிரித்தறியும் சக்தியைக் கொடுக்கும் ஆப்பிள்பழம்,கடவுளின் விலக்கு,சாத்தானின் தூண்டுதல்,அப்பழத்தை உண்டு உடலுறவு கொண்டு ஆதாமும் ஏவாளும் மனிதர்களின் பூர்விகராதல்,கடவுளின் கோபம்,சாபம்.....இம்மாதிரி "கேண" கதைகளையெல்லாம் நம்பவேண்டும்.ஆனால் பரிணாம சித்தாந்தத்தை மட்டும் நம்பவே கூடாது !!

தஜ்ஜால் said...

வாருங்கள் Devapriya Solomon,

// The verse uses "Farjaha" which means "her vagina."// இதைப்பற்றி அடுத்த பகுதியில் சொல்ல இருக்கிறேன்.

தஜ்ஜால் said...


வாருங்கள் ANT,

//கதிஜா அம்மையீர் முகம்மது தனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என கூறியபோது பெண்களை நிர்வான நிலையில் ஜிப்ரீர் காணாது என்ற கோட்பாட்டு அடிப்படையில் தானே முகம்மது அல்லாவின் தூதர் ஆனார். இப்போது பெண் உறுப்பில் ஊதியதாக குறிப்பிடுகிறாரே!// கதீஜா செய்த பரிசோதனை அவரது தனிப்பட்ட விருப்பு சார்ந்தது. அதற்கு அல்லாஹ்வின் அங்கீகாரம் கிடையாது என்று நழுவிவிடமாட்டோமா என்ன?

தஜ்ஜால் said...

@ANT,

//உண்டாலா? அல்லது உண்னும் நாளிலா? நாள் என்றால் அதை தாண்டி மனிதன் உயிர் வாழ்கிறானே! இநத கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை!//

கடவுள்பற்றி நாங்கள் எதைக் கூறினாலும் அப்படியே நம்பவேண்டும். கேள்வி கேட்பது சாத்தானின் வேலை -- இப்படிக்கு மதவாதிகள்!!

தஜ்ஜால் said...

@ Ngama Rgazi

//இம்மாதிரி "கேண" கதைகளையெல்லாம் நம்பவேண்டும்.ஆனால் பரிணாம சித்தாந்தத்தை மட்டும் நம்பவே கூடாது !!//

குர்ஆனில் கூறப்படுவது பரிணாம சித்தாந்தமே என்று முஸ்லீம்களில் சிலர் கிளம்பியிருக்கின்றனர். அல்லாஹ்விற்கு வந்த சோதனை!

நாட்டு வேங்கை said...

சொர்க்கத்தில் மும்பையின் கிராண்ட் பஜாரை வைத்திருக்கும் அல்லா மர்யம்மையும் விட்டு வைக்கவில்லையா?

நாட்டு வேங்கை said...

அல்லாவுக்குஉருவம் உண்டு என்று பிஜே சாதிக்கிரார். நம்மால்தான் பார்க்கமுடியாதாம். அப்படி என்றால் ஈசா நபி அல்லவுடைய குழந்தையாகத்தான் இருக்க முடியும். ஆனல் உயிரணுவை ஜிப்ரீல் தூக்கிவந்த கதை இடிக்குது. ஒரு வேளை இப்படி இருக்குமோ! அதாவது சிவனுடைய லிங்கத்தை அறுத்ததும் அது கீழே விழுந்துவிடாமல் பார்வதி தன் யோனியால் தாங்கிக் கொண்டாராம். இந்தக் கதை போல் அல்லாவின் கதையும் இருக்குமோ?
எல்லா ஒரேமாதிரி கதை எழுதுராய்ங்க. அது எப்படி?

நாட்டு வேங்கை said...

குர்ஆன் 19:17
அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக ( بَشَرٌ-basharan-adult male) அவருக்குத் தோற்றமளித்தார்.

குர்ஆன் 19:18
"நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறினார்.

குர்ஆன் 3.45
"மர்யமே! அல்லாஹ் தன் வார்த்தை பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ் என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதிமிக்கவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!

இந்த வசனங்களுக்கு சரியான பொழிப்புரை:
ஜிப்ரில் கதவை மூடிக்கிட்டு கசமுச செய்யப்போக, மர்யம் "அய்யோ என்ன காப்பாத்துங்க..... அல்லா என்ன காப்பாத்து" என்று கதற,
ஜப்ரில் " ஸ்ஸ்...... கத்த்தாதே அல்லாதான் அனுப்பினான். சும்மா இரு." என்று மர்யம்மை அடக்கிவிட்டு வேலையை முடித்துவிட்டு போய்ட்டார்.

ஆனந்த் சாகர் said...

மர்யமின் பெண்ணுறுப்பில் ஜிப்ரீல் ஊதினார் என்று அல்லாஹ் கூறுகிறானா? இது என்ன புது கதையா இருக்கு? நான் படித்த குரான் மொழிபெயர்ப்புகளில் இதை மறைத்துவிட்டார்களே. குரானின் அழுக்குகளை மொழிபெயர்ப்புகளில் மறைத்து மோசடி செய்கிறார்கள். முஹம்மது எவ்வளவு கேடுகெட்ட சிந்தனை கொண்டவர் என்பது தெரிகிறது. குரானின் சரியான மொழிபெயர்ப்பு வந்தால் அதன் நாற்றத்தை தாங்க முடியாது போலிருக்கிறது. இருப்பினும் அந்த நாற்றத்தையும் நறுமணம் என்று முஸ்லிம்கள் கூறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனந்த் சாகர் said...

//அல்லாவுக்குஉருவம் உண்டு என்று பிஜே சாதிக்கிரார்.//

மனிதனுக்கு உண்டான உறுப்புகள் அல்லாஹ்வுக்கு இருக்கிறது என்று பீ.ஜே. என்கிற ஞான சூன்யம் பேசிக்கொண்டி திரிகிறார். அப்படியானால் அல்லாஹ் தன்னுடைய ஆணுறுப்பை வைத்துக்கொண்டு என்ன செய்கிறான் என்று அவர் சொல்வாரா?

ஆனந்த் சாகர் said...

//கதீஜா செய்த பரிசோதனை அவரது தனிப்பட்ட விருப்பு சார்ந்தது. அதற்கு அல்லாஹ்வின் அங்கீகாரம் கிடையாது என்று நழுவிவிடமாட்டோமா என்ன?//

ஊதாரியாக திரிந்துகொண்டிருந்த முகம்மதுவுக்கு சமூகத்தில் ஒரு மரியாதை கிடைக்க வேண்டும் என்று அவரை அல்லாஹ் நபியாக தேர்ந்தெடுத்து விட்டான் என்று தன்னுடைய உறவினர் நவ்பல் கூட சேர்ந்துகொண்டு கதீஜா உசுப்பேற்றி விட்டார். சுயகாதல் மனநோயில் இருந்த முகம்மதுவுக்கு வடிகாலாக இந்த புதிய அவதாரம் அமைந்துவிட்டது. கதீஜாவும் ஒருவித மனநோயில் இருந்தவர்தான். அந்த மனோயிக்கும் இது வடிகாலாக இருந்தது. கதீஜா முகம்மதுவை உசுப்பேற்றி உசுப்பேற்றியே இந்த உலகத்தை ரணகளமாக்கி விட்டார்.

தஜ்ஜால் said...

வாருங்கள் நாட்டுவேங்கை,

நான் சொல்லத் தயங்கிக் கொண்டிருந்தவைகளை போட்டு உடைத்து விட்டீர்கள்.

தஜ்ஜால் said...

வாருங்கள் ஆனந்த்,

//கதீஜா முகம்மதுவை உசுப்பேற்றி உசுப்பேற்றியே இந்த உலகத்தை ரணகளமாக்கி விட்டார்.// உண்மைதான்.

மலக்குகள் அதாவது ஜிப்ரீலின் இயல்புகளை அதாவது \\பெண்களை நிர்வான நிலையில் ஜிப்ரீர் காணாது\\ என்று கதீஜா எவ்வாறு அறிந்து கொண்டார்? அவருக்கும் வஹீ ஏதாவது வந்திருக்குமோ?