நமது நண்பர் ANT,
“அப்ப குர்ஆன் 6:101 ..அவனுக்கு
மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அல்லாவின் சொல் என்ன
ஆவது?”
என்றொரு கேள்வியை கேட்டிருந்தார். அதற்கான பதிலை குர்ஆனிலிருந்தே பார்போம்!
குர்ஆன் 21:91
தனது கற்பைக் (فَرْجَهَا-farjahā) காத்துக் கொண்ட பெண்ணிடம் நமக்குரிய உயிரை ஊதினோம்....
குர்ஆன்
66:12
...
அவர் தமது கற்பைக்(فَرْجَهَا-farjahā) காத்துக் கொண்டார்.
அவரிடம் நமது உயிரை ஊதினோம். ...
குர்ஆன் மொழிபெயர்ப்புகளிலுள்ள
தில்லாலங்கடி வேலைகளைப்பற்றி முன்பே பார்த்தோம். குர்ஆன் 21:91, 66:12 ’Farjahā’
- fā rā jīm (ف ر ج) என்ற சொல் எப்படி உருமாறுகிறது
என்பதை இப்பொழுது கவனிக்கலாம்.
’Farjahā’ என்ற சொல் இடம்பெறும் இன்னொரு குர்ஆன் வசனத்தையும் அதற்கான வெவ்வேறு
மொழிபெயர்ப்புகளையும் கவனித்தால் இதிலுள்ள ஏமாற்றுவேலை எளிதாகப் புரியும்.
குர்ஆன் 24:31
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும்
தமது கற்புகளைப்(furūjahunna) பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட
பெண்களுக்குக் கூறுவீராக!...
பீஜே மொழிபெயர்ப்பு
இன்னும்,
முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக : அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள
வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப்(furūjahunna)
பேணிக்காத்துக் கொள்ளவேண்டும்...
தர்ஜுமா.காம் வெளியீடு
மேலும்
(நபியே) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக்
கொள்ளவேண்டும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் (furūjahunna)
பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்...
சவுதி
வெளியீடு
فَرْجَهَا- farjahā فُرُوجَهُنَّ-
furūjahunna என்பதன்
நேரடிப் பொருள் என்னவென்பதை நீங்களே அறிந்திருப்பீர்கள் farjahā என்றால் ’Private part’ இலைமறைவுக்காயாக
வெட்கத்தலம் என்றோ மர்மஸ்தானங்கள் என்றோ கூறிக்கொள்ளலாம். இங்கு மர்யம் பெண் என்பதால் பெண்ணின் மர்மஸ்தானம்
என்று பொருள் கூறலாம். (மன்னிக்கவும்!) சற்று கீழிறங்கிக் கூறினால் ‘சாமானம்’ என்று
சொல்லலாம். ஆனால் கற்பு என்று மொழிபெயர்ப்பது அல்லாஹ்விற்கு அரபி சொல்லிக் கொடுப்பதைப்
போன்றதே!.
குர்ஆன் 21:91
தனது
கற்பைக் (farjahā)
காத்துக் கொண்ட பெண்ணிடம் நமக்குரிய உயிரை ஊதினோம்....
கற்பு என்பதைக் குறிப்பிட அரபியில் வேறு சொற்கள் இருக்கையில்
எதற்காக அல்லாஹ் உடலுறுப்பைக் குறிப்பிடவேண்டும்? இருபாலினமும் உடலால் இணைந்து உருவாகும்
வாரிசுகளை மட்டுமே முறையான வாரிசுவாகக் கருதவேண்டும். இங்கு மர்யம் தனது உறுப்பைப்
பாதுகாத்துக் கொண்டவர்; உடலால் இணைப்பு ஏற்படவில்லை. எனவே ஈஸா தனது வாரிசு இல்லையென்பதே அல்லாஹ்வின் லாஜிக்! அதனால் தான் இங்கு அல்லாஹ்
உறுப்பைப்பற்றி பேசுகிறான்.
மர்யமின் கர்பத்திற்குக் அல்லாஹ்வின்
’விவகாரமான ஊதலே’ காரணம் இதைக் குர்ஆனும் ஒப்புக் கொள்கிறது. எனவே மர்யமின் மகனை அதாவது
ஈஸாவை அல்லாஹ்வின் மகனென்று கூறுவதுதானே முறையான செயலாக இருக்க முடியும்? இது கிறிஸ்தவர்களின்
வாதம்!
அண்ணன்
பீஜே இதை எவ்வாறு மறுக்கிறார் என்பதைக் காண்போம்.
90. அல்லாஹ்வின்வார்த்தை!
அல்லாஹ்வின்உயிர்!
ஈஸாநபியை
அல்லாஹ்வின் வார்த்தை என்று 3:39, 3:45, 4:171 ஆகிய வசனங்களில் குர்ஆன் குறிப்பிடுகிறது.
4:171, 21:91, 66:12 வசனங்களில் அவனது உயிர் எனவும் ஈஸா நபியைப்பற்றிக் குர்ஆன் கூறுகிறது.
இது
போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாக விளங்கிக் கொண்டு ஈஸாநபி இறைவனின் குமாரர் என்று
கிறித்தவ நண்பர்கள் கூறுகின்றனர். குர்ஆனும் இதை ஒப்புக் கொள்வதாகவும் அவர்கள் பிரச்சாரம்
செய்கின்றனர்.
ஈஸாநபியோ,
மற்ற யாருமோ இறைவனுக்குப் புதல்வர்களாக இல்லை என்று ஏராளமான இடங்களில் திருக்குர்ஆன்
தெளிவாகப் பிரகடனம் செய்கின்றது.
(பார்க்க:
திருக்குர்ஆன் 2:116, 4:171, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91,
25:2, 37:149-153, 39:4, 43:81)
பொதுவாக
மனிதர்கள் உருவாக, பெண்ணின் சினைமுட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸாநபி,
ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால்தான் அவரை இறைவனின் வார்த்தை
என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
வானம்,
பூமி மற்றும் எண்ணற்ற படைப்புக்கள் ஆகு' எனும் கட்டளை மூலம்தான் படைக்கப்பட்டன. இதனால்
அவை இறைவனின் புதல்வர்களாகி விட முடியாது.
இறைவனின்
உயிர் என்று ஈஸாநபி கூறப்படுவதால் அவரை இறைவனின் மகன் எனக் கூறமுடியாது. ஏனெனில் 'இறைவனின்
உயிர்' என்றால் 'அவனுக்கு உடமையான உயிர்' என்பதுதான் பொருள். 'அவனது ஒரு பகுதியான உயிர்'
என்று பொருள் இல்லை.
அல்லாஹ்
தேவையற்றவன் என்று முழங்குவார்கள். ஆனால் அவனுக்கொன்று உடமைகளும் இருக்குமாம். இதைவிட
கோமாளித்தனமான விளக்கம் இருக்க முடியாது. அல்லாஹ்விடம்
உடமைகளாக உயிர்களை மட்டும்தான் வைத்திருக்கிறானா அல்லது வேறு ஏதேனும் விவகாரமாக வைத்திருக்கிறானோ
என்னவோ? Mullahs knows the best!(?)
திருக்குர்ஆனின்
15:29, 38:72 ஆகிய வசனங்களில் ஆதம் (அலை) அவர்களையும், அல்லாஹ்வின் உயிர் என்று திருக்குர்ஆன்
கூறுகிறது. இதனால் ஆதம், அல்லாஹ்வின் மகன் என்று கிறித்தவ நண்பர்கள் கூறுவதில்லை.
ஆதம்
(அலை) பற்றிக் கூறப்படும் போது எவ்வாறு புரிந்து கொண்டார்களோ அப்படித்தான் ஈஸாநபி பற்றியும்
புரிந்து கொள்ள வேண்டும்.
ஆமாம்
அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்! இல்லையென்றால் முஹம்மதால் தன்னை எப்படி முன்னிருத்தமுடியும்?
3:59
வசனத்தில் ஆதமைப் படைத்ததும், ஈஸாவைப் படைத்ததும் ஒரே மாதிரியானதுதான் என திருக்குர்ஆன்
தெளிவாகப்பிரகடனம் செய்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
onlinepj.com
’குன்’ என்ற வெற்றுச் சொல்லால் ஈஸா மட்டுமல்ல எதையுமே அல்லாஹ் உருவாக்கவில்லை என்பதை
நாம் முன்னமே பார்த்தோம். மேலும் ஆதமிற்கும் ஈஸாவிற்கும் உருவாக்கத்தில் நிறைய வேறுபாடு
இருக்கிறதென்பதற்குக் குர்ஆனே போதுமானதாக இருக்கிறது. எனவே ’3:59 வசனத்தில் ஆதமைப் படைத்ததும், ஈஸாவைப் படைத்ததும் ஒரே மாதிரியானதுதான்
என திருக்குர்ஆன் தெளிவாகப்பிரகடனம் செய்கிறது’
என்ற
வார்த்தைகள் அர்த்தமற்றது. கிறிஸ்தவர்கள் முன்வைக்கும்
இறைவனின் புதல்வன் என்ற கோரிக்கையையை அவசரகதியில் மறுப்பதைப் போன்றது.
பெண்களை
ஏமாற்றி கர்பமாக்கிய பிறகு, அக் கர்பத்திற்குக் தான் காரணமல்ல என்று கூறி நழுவும் வில்லன்களை
திரைக்கதைகளில் நிறையவே பார்த்திருக்கிறோம். எண்ணற்ற திரைக்கதைகளில் இதுவே மையக்கருவாக
இருந்தது. குர்ஆன் 6:102-ம் வசனத்தில் அல்லாஹ் கூறுவதும் அதைபோன்றதொரு நழுவல்தான்.
அன்றாட வாழ்விலும் இதுபோன்ற வழக்குகளைக் காணமுடியும். உதாரணத்திற்கு, என்.டி.திவாரி
என்ற கிழவரும் இப்படித்தான் கூறிக் கொண்டிருந்தார். நல்ல வாய்ப்பாக அறிவியலின் வளர்ச்சி
இதற்கொரு முற்றுப் புள்ளியை வைத்துவிட்டது. வேறுவழியின்றி என்.டி.திவாரி தனது திரைமறைவு
வேலையை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்கு அவரை அறிவியல் தள்ளிவிட்டது. ஆனால்
கெட்ட வாய்ப்பாக நம்மிடம் அல்லாஹ் மற்றும் ஈஸாவின் மரபணுக்கள் நம்மிடமில்லை. முஹம்மது,
மற்றும் அவரது அடிபொடிகளின் உளறல்களை வைத்துதான் இதற்கொரு தீர்வை கண்டிபிடிக்க வேண்டியிருக்கிறது.
அவசரகதியில்
வெளியான அல்லாஹ்வின்(!) மறுப்பை சற்று நாகரீகமாகவே கூறுகிறேன்,
”மர்யமிடம்
என் விரல் நகம் கூடப் படவில்லை, அவருடன் உடலுறவு கொள்ளவில்லை எனவே ஈஸா எனது மகனில்லை!
ஆனால் மர்யம் கர்பமடைய நான் மட்டும்தான் காரணம்” என்பதே அல்லாஹ்வின் வாதம்!
சரி, மர்யம் எவ்வாறுதான் கர்பமடைந்தார்?
பரிசுத்த
ஆவி ஊதியதால் மர்யம் கர்பமடைந்தார்!
யார்
இந்த பரிசுத்த ஆவி?
ஒரு
நபர் சென்று ஊதவேண்டிய அவசியமென்ன?
பரிசுத்த
ஆவி எவ்விடத்தில் ஊதியது?
குர்ஆன் கூறும், மர்யமின் கர்பமடைந்த
காட்சியை (குர்ஆன் 66:12) தஃப்ஸீர் அல்-ஜலாலைன் இவ்வாறு கூறுகிறது,
And Mary (wa-Maryama is a supplement to
imra’ata Fir‘awna) daughter of ‘Imrān, who preserved [the chastity of] her
womb, so We breathed into it of Our Spirit, namely, Gabriel — when he breathed into the
opening of her shirt, by God’s creation of this action of his which
reached her womb, thus conceiving Jesus — and she confirmed the words of her
Lord, His prescriptions, and His, revealed, Scriptures and she was of the
obedient, [one] of the obedient folk.
குர்ஆன் 66:12 வசனத்திற்கு இப்ன் கதீர் தரும் விளக்கம்
:
And
Maryam, the daughter of `Imran who guarded her chastity (private part).
meaning, who protected and purified her honor, by being chaste and f ree of
immorality,
(And We breathed into it (private part )
through Our Ruh, ) meaning, through the angel Jibril. Allah sent the angel
Jibril to Maryam, and he came to her in the shape of a man in every respect.
Allah commanded him to blow into a gap of her garment and that breath went into
her womb through her private part; this is how ` Isa was conceived.
And
we breathed into it through Our Ruh, and she testified to the truth of her
Lords Kalimat, and His Kutub,) meaning His decree and His legislation.
அல்லாஹ்வின் ஆவி அதாவது பரிசுத்த
ஆவி அதாவது ஜிப்ரீல் என்ற வானவர், மர்யம் அணிந்திருந்த ஆடையின் இடைவெளி வழியாக
ரூஹ்ஹை(உயிரை) ஊதினாராம் அது அவரது உறுப்பின் வழியே சென்று கருப்பையை அடைந்ததாம்.
அதாவது அல்லாஹ்வின் பரிசுத்த ஆவி, மர்யமிடம் சென்று நெற்றியிலோ அல்லது
முகத்திலோ அல்லது வயிற்றிலோ ஊதவில்லை; ஊதவேண்டிய இடத்தில்தான் ஊதியிருக்கிறது. இதற்கென்று
ஒரு நபரை, அதுவும் ஆணின் வடிவத்தில் அனுப்பி, இடம் பார்த்து, இலக்கை நோக்கிச் சரியாக
ஊதவேண்டுமென்றால், அந்த ஊதலில் தேவையானதை வைத்திருக்கிறார்கள் என்பதுதானே பொருள்!
அல்லாஹ்வின்
ரூஹ் ஒரு ஆணின் வடிவத்தில் செல்ல வேண்டும்? பெண்ணின் வடிவத்திலோ அல்லது வேறு ஏதாவது ஒரு உயினத்தின்
வடிவத்தில் சென்றிருக்கலாமே? (இதற்கான பதில் உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்!)
ஆணின் உருவத்தில்
வந்தது அல்லாஹ் அனுப்பிய பரிசுத்த ஆவியென்ற வைத்துக் கொண்டு நாம் குர்ஆனின் கதையைத்
தொடர்வோம்.
குர்ஆன் 19:18-22
18."நீர் இறையச்சமுடையவராக
இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று
(மர்யம்) கூறினார்.
19."நான், உமக்குப்
பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்'' என்று
அவர் கூறினார்.
20."எந்த ஆணும் என்னைத்
தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக
முடியும்?'' என்று (மர்யம்) கேட்டார்.
21."அப்படித் தான்''
என்று (இறைவன்) கூறினான். "இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும்,
நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை' எனவும் உமது இறைவன் கூறினான்''
(என்று ஜிப்ரீல் கூறினார்.)
22. பின்னர் கருவுற்று
அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.
தனது அறையில்
தனிமையிலிருக்கும் ஒரு பெண்ணின் முன்னே திடீரென அறிமுகமே இல்லாத ஒரு ஆண் தென்பெட்டால்
அந்தப் பெண்ணின் நிலை என்னவாகும்? தெரியாமல்தான் கேட்கிறேன், இந்த ஊதல் வேலையை தனிமையிலிருக்கும்
பெண்ணிடத்தில்தான் செய்ய வேண்டுமா? ”இது
எனக்கு எளிதானது”, இது நிறைவேற்றப்பட வேண்டிய
கட்டளை” என்றெல்லாம் பீற்றுவதை
ஊரறிய எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கமாகக் கூறி ஊதுவதில், அல்லாஹ்விற்கு என்ன
தயக்கம்?
குர் ஆன் 3:37
அவரை,
(அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில்
வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவைப் பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா
சென்ற போதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, "மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?''
என்று கேட்டார். "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி
வழங்குகிறான்'' என்று (மர்யம்) கூறினார்.
வெளிப்படையாக
எல்லோர் முன்னிலையிலும் உணவை மர்யமிற்கு வழங்குவதற்கு அல்லாஹ்விற்கு வெட்கம் போலிருக்கிறது.
அதனால் இரகசியமாக உணவைக் கொடுத்து சரி செய்திருக்கிறான். (நாங்கள் ஃபிகர்களை KFC க்கு அழைத்துச் செல்வதும்,
அவர்களது செல் போனுக்கு ரீசார்ஜ் செய்வதும் எப்படித் தவறாகுமென்று ஒரு அப்பாவிக்(!) காதல்
மன்னர் கேட்கிறார்) மர்யமின் மீது அல்லாஹ்விற்கு ஒரு ’இது’ இருந்திருக்கிறது
என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.
உணவைக் கொடுத்து
’உஷார்’ படுத்தியிருப்பதாக நினைக்க வேண்டாம். என்ன இருந்தாலும் தனது வாரிசை சுமக்கப்
போகிறவர் என்ற கரிசனமாக இருந்திருக்கலாம்.
இந்துமதத்தினர்,
மகாபாரதக் கதைகளில் வரும் கர்ணன் மற்றும் பாண்டவர்களின் பிறப்பிற்குக் கூறிக்கொள்ளும்
காரணங்களுக்கும் ஈஸாவின் பிறப்பிற்குக் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கூறிக்கொள்ளும்
காரணத்திற்கும் எந்த வேறுபாடுமில்லை.
இன்றைய சூழலில்
ஒரு பெண், இதுபோன்று தன்னைக் கர்பமாக்கிய கயவன் கடவுள் தானென்று கூறினால் இந்த மதவாதிகள்
என்ன செய்வார்கள்? அறிவியலைத் தஞ்சமடைய மாட்டார்களா?
பேய் மற்றும்
வேற்று கிரகவாசிகளைச் சந்தித்ததாகக் கூறுபவர்களை கவனித்தால் பொதுவான ஒரு உண்மை புலப்படும்.
அதாவது அந்த அனுபங்கள் மிகப் பெரும்பாலும் அவர்கள் மட்டும் தனிமையிலிருந்த பொழுது சந்தித்தாகக்
கூறுவர். இந்தப் பேய்களும் வேற்று கிரகவாசிகளும் பொதுவெளியில் வருவதற்கு வெட்கம் வெட்கம் கொள்வதைப்போல அல்லாஹ்விற்கும் அவனது
ஆற்றலுக்கும் வெட்கம் போலிருக்கிறது.
நாம் பரிசுத்த ஆவி ஊதிய காற்றைத் தொடர்வோம்
சாதரணமாகக் காற்றை ஊதினால் கருத்தரிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது.
’அவ்விடத்தில்’ காற்று புகுந்தால் கர்பமாகிவிடுவார்கள் என்றிருந்தால் பெண்களின் நிலைமை
அவ்வளவுதான்! பெண்கள் ’அதை’ காற்றுப் புகாதவாறு
மூடிக்கொண்டிருக்க வேண்டிய நிலைவந்திருக்கும்.
பரிசுத்த
ஆவியின் விவகாரமான ஊதலில் என்ன இருந்தது? மர்யமிடம் வந்தது பரிசுத்த ஆவிதானா?
தொடரும்...
தஜ்ஜால்