Sunday, 30 March 2014

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -38

மறுமை வாழ்கை


இந்த வாழ்கை ஒரு சோதனைக் களம் அல்லாஹ்வை ஏற்று வாழ்ந்தால், மறுமை வெற்றி!.  வெற்றிக்கு பரிசு சொர்க வாழ்க்கை. தங்க, வெள்ளி மற்றும் முத்து மாளிகைகள் அவற்றின் கீழ் நீரருவிகள், பச்சை நிற உயர்ந்தரக பட்டாடைகள், தங்கம், உயர்ந்தரக வைரம், முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், தங்கமாளிகைகள், தங்கத் தட்டில் பழங்கள், தங்கக் குவளையில் போதை தராத பழரசம், தேவையானவற்றை  செய்ய சுறுசுறுப்பான சிறுவர்கள்.

நிச்சயமாக ஈமான் நற்செயல்கள் செய்பவர்களை சொர்க்கங்களில் புகச் செய்வான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவற்றில் தங்கத்தினாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் (ஆபரணங்கள்) அவர்கள் அணிவிக்கப்படுவார்கள்.…
(குர் ஆன் 22:23)

தங்கத்தினாலான தட்டுகளும், குவளைகளும் அவர்களிடம் சுற்றிக் கொண்டுவரப்படும்…
(குர் ஆன் 43:71)
       
தங்கம் இரும்பைப் போன்ற ஒரு உலோகமே. பூமியில், தங்கம் கிடைப்பது அரிதாக இருப்பதன் காரணமாகவே பெரிதாக மதிக்கப்படுகிறது. பொருள்களை பண்டமாற்றம் செய்து வந்த மக்கள், நாளடைவில் அரிதான உலோகமான தங்கத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் தேவைகளை நிறைவேற்றினர். ஆக, தங்கத்தின் மதிப்பு மனிதர்களின் பிற தேவைகளையே சார்ந்தது. உலக வாழ்வில்  தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களின் உணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படைத் தேவைகளுக்காகவும், மற்றவர்களை விட தன்னை உயர்ந்தவனாக கண்பிக்கும் மனோபாவாமே மனிதனை பொருளை (தங்கத்தை) தேடி ஓட வைத்தது. எவ்வித தேவைகளும், போட்டி, பொறாமைகளுமற்ற  மறுமை வாழ்வில் தங்கத்திற்கு தனி மரியாதை தேவையில்லையே?   மறுமை வாழ்வில் அல்லாஹ்  தரும் தங்கத்தை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?

வீட்டுவாடகை, School fees, collage fees, Ration கடை, பருப்பு, பாமாயில், கரண்ட பில் என்ற எந்த கவலையும் சொர்கத்தில் உங்களுக்கு இருக்காது. பஸ்ஸை பிடிக்க வேண்டும், இரயிலைப் பிடிக்க வேண்டும், கல்யாணத்திற்குப் போக வேண்டும், காது குத்திற்குப் போக வேண்டும் Hospital  போக வேண்டும் என்ற பிடுங்கல்களும் இருக்காதுஅல்லாஹ்வை தொழ வேண்டும், முஹம்மதுவிற்கு பல்லக்கு தூக்க வேண்டும்என்ற எந்த வழிபாடுகளும் கிடையாது. பொறாமை,கோபம், விரோதம் போன்ற  தீய எண்ணங்களும் சொர்க்கவாசிகளின் மனதைவிட்டு அகற்றி விடுவதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

பிறகு என்னதான் இருக்கிறது?

 இவ்வளவையும் மனிதனைவிட்டு நீக்கிய அல்லாஹ் மிக முக்கியமான ஒன்றை அதிகரிக்கச்செய்கிறான். அதுதான் Sex.  மனிதனின் உடற்பசியை மட்டும் ஒரு காலத்திலும் அவனை விட்டு விலக விடுவதில்லை. மாறாக மேலும் அதிகரிக்கவே செய்கிறான். சொர்கத்தில்  மனிதனுக்கு இருக்கும் ஒரே பணி  தனது பாலியல் தேவைகளை விதவிதமாக தேடித் தேடி நிறைவேற்றிக் கொள்வது மட்டுமே! சொர்க்கத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம்  Sex …  Sex… முடிவில்லாத  சல்லாபங்கள்.



விருந்தாக, கட்டிலில் என்றும் இளமை மாற நீழ்விழி, மான்விழி ஹூர் எனும் பேரழகிகள். மறுமையின் வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச வெகுமதிகளாக 80,000 பணியாட்களும், உலகில் அவர்களுடன் வாழ்ந்து மறுமையிலும் வெற்றி பெற்ற  அவர்களது மனைவியர்களுடன், எழுபதிற்கும் மேற்பட்ட ஹூருலீன்களும்  வழங்கப்படுவார்கள்.

நீங்களும் உங்களுடைய மனைவியரும் மகிழ்ச்சிக்குரியவர்களாக இருக்கும் நிலையில் சொர்க்கத்தினுள் புகுங்கள்…
(குர் ஆன் 43.70)
அவற்றில் அழகுமிக்க நற்குணமுள்ள கன்னியர்கள் இருப்பர்
(குர் ஆன் 55.70)
இவ்வாறே;   இன்னும் அவர்களுக்கு  ஹூருல்ஈன்  (என்னும் சுவர்கத்துக் கன்னியர்)களைத் துணைவியராக்கி வைப்போம்.
(குர்ஆன் 44: 54)
அவற்றில் பார்வை கீழ் நோக்கிய பெண்கள் இருக்கின்றனர் அவர்களை எந்த மனிதனும் எந்த ஜின்னும் (சொர்க்வாசிகளாகிய) இவர்களுக்கு முன் தீண்டியதே இல்லை.
      (குர்ஆன் 55: 56)
அவர்களை கன்னியர்களாகவும் ஆக்கினோம்.
(குர்ஆன் 55: 36)
மார்பகங்கள் உயர்ந்த சம வயதுள்ள கன்னிப் பெண்களும்.
(குர்ஆன் 78: 33)


சரி, மனைவியர்கள் இருக்கையில், எதற்காக இவ்வளவு ஹூருலீன்கள் தங்களது கணவர்களுக்கு உண்மையாக நடந்து கொள்ளாத (கள்ளத்தொடர்பு) காரணத்தால் நரகத்தில் பெண்களே மிகுதியாக இருக்கக் கண்டதாக முஹம்மது நபி கூறுகிறார்

புகாரி ஹதீஸ் எண் : 3241
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நான் (மிஅராஜ்- விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களை கண்டேன். இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஹம்மது நபி, பெண்கள் என்றாலே பிற ஆண்களுடன் கள்ளத்தொடர்பு கொள்பவர்கள் என்று முடிவு செய்துவிட்டாதாகவே தோன்றுகிறது. அவரது தனிப்பட்ட அனுபவம் அப்படி இருந்திருக்கிறது என்றுதான் நாம் சொல்ல முடியும்! முஹம்மதை மிஃராஜ் பயணத்திற்கு அழைத்துச் சென்ற அல்லாஹ், குறிப்பாக சில காட்சிகளைக் காண்பித்திருக்கிறான் அதில்  இதுவும் இடம்பெறுகிறது.

பிற ஆண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு, அதை தங்களது கணவன் மூலம் பெற்ற குழந்தை என்று கூறும் பெண்களையும் பார்த்தார்கள். இத்தகைய பெண்கள் மார்பகங்கள் கட்டப்பட்டு அதில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.

முஹம்மது நபியின் சந்தேக குணத்தை பெட்ரோல் ஊற்றி கொழுந்துவிட்டு எரிய வைத்தது உமர் கத்தாப் அவர்களின் பணியாகும். இன்று முஸ்லீம் பெண்களின் முகங்கள் கருப்புத் திரைகளால் மூடப்பட்டிருப்பதற்கு  இவர்களது இந்த குணம் மட்டுமே காரணம்.

எனவே, பெரும்பாலான பெண்கள் கள்ளத் தொடர்பு குற்றத்திற்காக நரகத்திற்குள் வீசப்பட இருப்பதால், ஆண்களின் இச்சையை  சரிகட்டவே ஒவ்வொருவருக்கும் 72 ஹூருலீன்கள் வழங்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஹூருலீன்களைப்பற்றி தெரிந்து கொள்ள ஹதீஸ்களிலிருந்து சில செய்திகள்.

புகாரி ஹதீஸ் எண்: 3327
அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளி வீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள் பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள். எச்சில் துப்பவும் மாட்டார்கள், மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவருடைய சீப்புக்கள் தங்கத்தாலானவை. அவர்களுடைய வியர்வை கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகை போடும்) தூப கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அகில் என்பது நறுமணக் குச்சியாகும். அவர்களுடைய மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்.

புகாரி ஹதீஸ்:3246 ,
அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழைகின்ற முதல் அணியினர் பௌர்ணமி இரவின் (ஒளிரும்) சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்களுக்குப் பின்னே வருபவர்கள் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள். அவர்களுடைய உள்ளங்கள் ஒரே மனிதனின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே எந்த மன வேறுபாடும் இருக்காது, எந்தவிதக் குரோதமும் இருக்காது. அவர்களில் ஒவ்வெருவருக்கும் இரு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களில் ஒவ்வெருத்தியுடைய காலின் எலும்பு மஜ்ஜையும் அவளுடைய (கால்) சதைக்கு அப்பாலிருந்து (அவளது பளிங்குமேனியின் பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும். அவர்கள் காலையும் மாலையும் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நோயுற மாட்டார்கள். அவர்களுக்கு மூக்குச் சளியோ, எச்சிலோ வராது. அவர்களுடைய பாத்திரங்கள் தங்கத்தாலும், வெள்ளியாலும் ஆனவை. அவர்களுடைய சீப்புகள் தங்கத்தால் ஆனவை. அவர்களுடைய தூப கலசங்களின் எரிபொருள் அகிலாக இருக்கும். அவர்களுடைய வியர்வை (நறுமணத்தில்) கஸ்தூரியாக இருக்கும்.



The great Islamic scholar, Ibn Kathir, comments on 78:33:
(And vineyards, and Kawa`ib Atrab,) meaning, wide-eyed maidens with fully developed breasts. Ibn `Abbas, Mujahid and others have said, (Kawa`ib) "This means round breasts. They meant by this that the breasts of these girls will be fully rounded and not sagging, because they will be virgins, equal in age. This means that they will only have one age.'' The explanation of this has already been mentioned in Surat Al-Waqi`ah…
(சம வயதுடையவர்கள் ஹூரூலீன்களுக்கு வட்டவடிவமான நிமிர்ந்த்த மார்புகள்  உடையவர்கள்)

Comment on 56:36 from Maariful Tafsir

The word "abkaran, being the plural of bikr, means ‘virgins’. The sense is the creation of the maidens of Paradise will be of such a nature that, even after every sexual intercourse, they will remain like virgins  (Page: 290)
(ஒவ்வொரு உறவுக்குப் பின்னரும் அவர்கள் (ஹூரூலீன்கள்) கன்னியர்களாகவே இருப்பார்கள்)

Comment on 44:54 from Maariful Tafsir
… Although the inmates of Paradise will not be legally obligated to observe the precepts of Shariah the purpose of marriage will be to honour them. Therefore, this should not raise any objection IF the word is taken in the first sense, houris having big dark eyes will be given as life partners to the men of Paradise. The houris in this case will be granted to them as a gift. There will be no need for a contract of marriage as is done in this world. (Page 762).
(மறுமையில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு, ஹூரூலீன்கள் பரிசாக வழங்கப்படுவார்கள். உலகில் இருப்பதைப் போல அங்கு எவ்வித திருமண ஒப்பந்தங்களும் தேவையில்லை)

இத்தனை ஹூருலீன்களையும் வைத்துக் கொண்டு சராசரி பாலியல் பலம் கொண்ட மனிதன் தன் இச்சையை எப்படி தீர்க்கமுடியும்? என்ற உங்களது அச்சம் நியாயமானதே. இதற்கும் சரியான தீர்வு முஹம்மது நபி அவர்களால் சொல்லப்பட்டுள்ளது.

Sunan al-Tirmidhi #2459
A man will have intercourse in Paradise with his wives from among al-hoor al-‘iyn and his wives from among the people of this world, if they enter Paradise with him. A man will be given the strength of a hundred men to eat, drink, feel desire and have sexual intercourse. It was narrated from Anas that the Prophet said: "The eliever in Paradise will be given such and such strength for sexual intercourse." He was asked, "O Messenger of Allaah, will he really be able to do that?" He said, "He will be given the strength of one hundred (men)." 
(ஹூருலீன்களுடன் இணைவதற்கும் முடிவில்லா சுகம் பெறுவதற்கும் நூறு பேருடைய ஆற்றல் சொர்க்வாசி ஆண்களுக்கு வழங்கப்படும். அறிவிப்பவர் அனஸ் (ரலி) திர்மிதீ.)


ஜிப்ரீல் முஹம்மது நபிக்கு ஆண்மைபலம் பெருக லேகியம் (பக்குவமாக சமைக்கப்பட்ட இறைச்சி) கொடுத்ததை முன்பே உங்களிடம் கூறியிருக்கிறேன். அதைவிட பல மடங்கு சக்த்திவாய்ந்த லேகியம் சொர்க்கத்தில் இருக்க வேண்டும். நூறு பேருடைய ஆற்றல் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்படுகிறதே பிறகு என்ன கவலை? ஆற்றல் குறைபாடு உள்ளவர்கள், அல்லஹ்விடம் முறையிடலாம். ஜிப்ரீலைத் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்து சற்று கூடுதல் சக்தியுடைய லேகியம் வாங்கி சாப்பிட்டுக் கொள்ளலாம்.  இதில் வயாக்ரா என்ற நவீன மருத்துவக் கண்டுபிடிப்பின் முன்னறிவிப்பை நாம் காணலாம். வயாக்ரா பற்றி முன்னறிப்பை எழுதுவதற்கு முஃமின்களுக்கு  கூச்சமாக இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை , ஒருவரும் வாய்திறந்து பேசமாட்டேன்  என்கின்றனர்!


ஒரு நாளைக்கு நூறுமுறை என்றால்மறுமை வெற்றியாளர்கள்  சுமார் பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை RECHARGE செய்யப்பட்டு ஹூருலீன்களை  ‘வெற்றி கொள்ள களத்திற்கு’ அனுப்பப்படுவார்கள்

சாதாரண ஆண்மை பலத்திற்கே முஃமின்களில் பலருக்கு பலதாரங்கள் தேவைப்படுகிறது. இதில் நூறு பேருடைய ஆற்றல் வழங்கப்பட்டால் மென்மையான ஹூருலீன்களின் நிலை என்னாவது? என்று கவலைப்பட வேண்டாம்.உங்களது அந்த கவலையையும் அல்லாஹ் கவனத்தில் கொண்டுள்ளான். அல்லாஹ்வைப்பற்றி நீங்கள் அத்தனை லேசாக எடைபோடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.


நிச்சயமாக நாம் (ஹூருல்ஈன்களான) அவர்களை பிரத்தியேகமாக உண்டாக்கினோம்.
(குர் ஆன் 55.35)

ஹூருலீன்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். எவ்வளவு முறை உறவு கொள்ளப்பட்டாலும் சலிப்படையவோ வேதனையடையவோ மாட்டார்கள். அவர்களுக்கு மாதவிலக்கு கிடையாது என்றுமே கன்னித்தன்மையுடையவர்களாக இருப்பார்கள். இவை பற்றிய ஹதீஸ்கள் கூறும் வர்ணணைகளின் சுருக்கமான தகவல்கள்.

எகிப்திய அறிஞரின் குர்ஆன் விரிவுரையிலிருந்து

Imam Al-Suyuti :
“Each time we sleep with a houri we find her virgin. Besides, the penis of the Ejected never softens. The erection is eternal; the sensation that you feel each time you make love is utterly delicious and out of this world and were you to experience it in this world you would faint. Each chosen one [ie Muslim] will marry seventy  houris, besides the women he married on earth, and all will have appetizing vaginas.”

(ஹூரியுடன் உறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் அவளை கன்னியாகவே நாம் காண்போம். அன்றியும், ஆணுறுப்பு ஒருபொழுதும் தளர்ந்து விடாது. அதன் விறைப்புத்தன்மை நிலையானது; உங்கள் காதலால் ஒவ்வொரு முறையும் நீங்கள் உணரும் முழு இன்பம் உலகில் இல்லாதது. அதை(இன்பங்களை) இவ்வுலகில் நீங்கள் அனுபவித்தால் மயங்கி விடுவீர்கள்.  தேந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் 70 ஹூரூலீன்களை திருமணம் செய்வார்கள். அன்றியும், அவரது இவ்வுலக மனைவியர்கள் (இச்சையைத்) தூண்டும்படியான பெண்ணுறுப்புகளைப் பெற்றிருப்பார்கள்)


ஆண்களுக்கு ஹூருல்ஈன்கள். Ok   பெண்களுக்கு என்ன…?

பெண்களுக்கு எந்த சுகங்களும் இல்லையா? வெற்றி பெற்ற பெண்களுக்கு தங்க கட்டிலில் என்றும் இளமை மாற நீழ்விழி ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் கிடையாதா? பெண்களுக்கு சம உரிமையில்லையா? என்ற போர்க்குரல்கள் ஒலிக்கத் தொடங்கிதும் இஸ்லாமிய அறிஞர்கள் ஹதீஸ்களையும் வரலாறுகளையும் புரட்டி தேடிப் பார்த்தனர். ஹதீஸ்கள் ஹூருலின்களை  பெண்கள் என குறிப்பிட்டு பல விதமாக அவர்களின் அழகை வர்ணணை செய்கிறது. ஹூருலின்களில் ஆண்களும்  உண்டு  என்பதற்கு குர்ஆனிலும், ஹதீஸ்களில் எவ்விதமான ஆதரமில்லை. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது, ஹூருல் என்பது பன்மைச் சொல் ஆண், பெண் என இருபாலரையும் குறிப்பிடும். மறுமையில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் போலவே பெண்களுக்கும் வழங்கப்படும் நிச்சயமாக, ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் உண்டு என்றனர். இதை Dr. ஜாகீர் நாயக் அவர்களும் தன்னுடைய பதிலில் குறிப்பிடுகிறார்.,

     மேற்படி அருள்மறை குர்ஆனின் வசனங்களிலிருந்து நாம் அறிவது என்னவெனில் 'ஹூர்' என்ற அரபி வார்த்தை குறிப்பாக எந்த பாலை (ஆண்பால் அல்லது பெண்பால்) குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப் படவில்லை என்பதுதான். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த முஹம்மத் அஸாத் 'ஹூர்' என்ற அரபி வார்த்தைக்கு Spouse (கணவருக்கு மனைவியும் - மனைவிக்கு கணவரும்) என்று மொழியாக்கம் செய்துள்ளார். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த யூசுப் அலி 'ஹூர்' என்கிற அரபி வார்த்தைக்கு Companions  (இணை அல்லது துணை) என்று மொழியாக்கம் செய்துள்ளார். இன்னும் பல மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி - சொர்க்கத்தில் ஒரு ஆணுக்கு அழகிய கண்களை உடைய பெண்ணும், ஒரு பெண்ணுக்கு அழகிய கண்களை உடைய ஒரு ஆணும் இணையாக அல்லது துணையாக அல்லது ஜோடியாக கிடைப்பார்கள்.

     பெண்கள் இவ்வுலகில் கிடைக்கப்பெறாத ஒன்றை, சொர்க்கத்தில் கிடைக்கப் பெறுவார்கள். அருள்மறை குர்ஆனில் 'ஹூர்' என்கிற அரபி வார்த்தை பெண்பாலை குறிப்பிடத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சில மார்க்க அறிஞர்கள் ஆணித்தரமாக நம்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் முகமாக ஹதீஸ் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கத்தில் ஆண்களுக்கு அழகிய கண்களையுடைய பெண்கள்துணையாக கிடைப்பார்கள் எனில் - சொர்க்கத்தில் பெண்கள் எதை கிடைக்கப்பெறுவார்கள் என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது - சொர்க்கத்தில் பெண்கள் மனித கண்கள் எதுவும் கண்டிராத - மனித காதுகள் எதுவும் கேட்டிராத - மனித மனங்கள் எதுவும் எண்ணிப்பாராத ஒன்றினைப் பெறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேற்படி பதில் சொர்க்கத்தில் பெண்கள் - மிகவும் சிறப்பான ஒன்றினைப் பெறுவார்கள் என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

ஆனால் அல்லாஹ்வோ மார்பகங்கள் உயர்ந்த சமவயது ஹூரிகளை வழங்குவதாக குர்ஆனில் 78:33-ல் குறிப்பிடுகிறான், ஒரு வேளை சொர்க்கத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கும்,  மார்பகங்கள் உயர்ந்த அதே வகையான ஹூரிகளை வழங்கிவிடுவானோ?  குழப்பமாக இருக்கிறது ஒருவேளை... கதை அப்படிப் போகிறதோ?  அல்லாஹ் ஒரு Ultra modern பேர்வழியாக இருக்கலாம்!

ஹூருலீன்கள் என்பவர்கள் பெண்களே என்றால்,

குழந்தைகளை பராமரிப்பது, உணவு சமைப்பது, துணிகளை துவைப்பது வீட்டைப் பராமரிப்பது என்ற எவ்விதமான சேவைகளும் அங்கு பெண்களுக்கு கிடையாதுசுவைமிகுந்த உணவுகளும், பழங்களும், பானங்களும், உடைகளும், ஆபரணங்களும் அளவின்றி வழங்கப்படும்எதிர்கால தேவை, வாரிசுகளுக்காக சேமிக்க வேண்டும் என்ற கடமைகளும் இருக்காது. இருக்கும் ஒரே வேலை, தங்களது கணவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என்பது மட்டுமே. ஏனென்றால் ஒவ்வொரு மனைவியரையும் ஒரே மாதிரியாக நீதத்துடன் நடத்த வேண்டும் அவர்களுக்கிடையே வேற்றுமை காணக் கூடாது. ஒவ்வொரு மனைவியருடனும் சமஅளவில் நேரத்தை செலவிட வேண்டும் என்பதும்  முஹம்மது நபி உலக வாழ்வில் செயல் முறையில் நமக்கு கற்றுத் தந்த படிப்பினைகளாகும்.

ஒரு சொர்க்கவாசிதன் மனைவியிடம் சென்று தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால், 72 ஹூருலீன்கள் X 15 நிமிடங்கள் = 1080 நிமிடங்கள். அதாவது, அவர்களது கணவர்கள் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் செயல்படுவதாக இருந்தாலும் குறைந்த பட்சம் 18 மணி நேரம் வரையிலும், ஹூருலீன்கள் உட்பட ஒவ்வொரு மனைவியரும் தங்களது முறை வருவதற்காக காத்திருக்க வேண்டும். உணவு உறக்கம் போன்ற தேவைகளுக்கான நேரம் தனிக்கணக்கு.

மனைவியர்கள் விரும்பினால் தங்களது கணவர்கள் ஹூருலீன்களுடன் நிகழ்த்தும் வீர விளையாட்டுக்களை கண்டு பரவசமடையலாம். அல்லது தங்களது கணவர்கள் 72 ஹூருலீன்களுடனும் சாகசங்கள் பல புரிந்து வரும்வரை ஏக்கத்துடன் காத்திருக்க வேண்டும் (வேறு வழியில்லை…!)

ஹூருலீன்களில் ஆண்களும் உண்டு என்றால்,
மறுமையில் வெற்றி பெற்றவர்கள் தம்பதிகளாகவும் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று முன்பே பார்த்தோம். பெண்களில் மிகப் பெரும்பாலானவர்கள் திருமணமானவர்களே. வெகு சிலரே  திருமண வாழ்க்கையின்றி இருப்பவர்கள்.  இவர்களைத் தவிர மீதம் இருப்பவர்கள் கணவன் நரகத்திற்கு சென்று விட்டதால்  தனிமையில் சொர்கத்திற்கு வரும் பெண்கள் இவர்களுக்கும்  ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் வழங்கப்படுவார்கள்.



அல்லது அனைத்து பெண்களுக்கும் பாகுபடின்றி ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் பரிசாக வழங்கப்படலாம். எப்படி இருந்தாலும், அறிஞர்களால் தரப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் கூறுவதென்றால், ஆண்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே பெண்களுக்கும் சிறப்பு ஆற்றல்களும், 72 ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் வழங்கப்படுவார்கள் என்று உறுதியாகக் கூறமுடியும்.

           “…...…..........”
           “.....................”
(இவ்விடத்தில் ஆண்களுக்கு விவரித்த சொர்க்கலோக சல்லாபக் காட்சிகளை பெண்களுக்கும் கற்பனை செய்து கொள்ளவும்.)

ஆக,சொர்க்கவாசியாகத் தேர்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருடனும் 72 கட்டழகு கன்னியர்களும், காளையர்கள் இணையக் காத்திருக்கின்றனர் (ஒருவேளை இப்பொழுதும் நிகழ்ந்து கொண்டிருக்கலாம். யார் கண்டது ?!)

ஒருவேளை, சொர்க்கவாசிகள் தங்களுக்கு அல்லாஹ்வால்  வழங்கப்பட்ட ஹூருலீன்கள் போதவில்லை என்று நினைத்தால், அதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Al Hadis, Vol. 4, p. 172, No. 34
Ali reported that the Apostle of Allah said, "There is in Paradise a market wherein there will be no buying or selling, but will consist of men and women. When a man desires a beauty, he will have intercourse with them."
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் கூறினார், சொர்க்கத்தில்  உள்ள கடைத்தெருவில் ஆண்களையும் பெண்களையும் தவிர வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒன்றும் இருக்காதுஒரு ஆண் விரும்பும் பொழுது (அங்குள்ள) அழகிய பெண்ணுடன் கலவியில் ஈடுபடலாம்.

Sunan al-Tirmidhi 1495
In paradise, there is a market of rich, beautiful and ever-young women; they will be pleased whoever buys them…
சொர்கத்தில்  செல்வந்தர்களின் கடைத்தெரு உள்ளது, (அங்குமிக அழகான என்றும் இளமையாக உள்ள கன்னியர் (ஹூருலீன்கள்) உள்ளனர். யார் அவர்களை  வாங்கினாலும் அவர்கள் (ஹூருலீன்கள்) அகமகிழ்வார்கள்.

உங்களது விருப்பம் போல பெற்றுக் கொள்ளலாம்.

முஹம்மது நபியால் வர்ணனை செய்து கூறப்பட்ட சொர்க வாழ்க்கையின் காட்சிகளை கற்பனை செய்து பாருங்கள். கேடுகெட்ட காட்சிகள்தான் கண்முன்னே தோன்றும்.

சிற்றின்பக் கேளிக்கை விடுதியை அடைவதற்காகவா இந்த உலகத்தில் பலவிதமான கொடுமைகளையும், வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்?. அல்லாஹ், இது போன்ற காட்சிகளைக் காண மிகுந்த சிரமம் எடுக்கத் தேவையில்லை. மிக மட்டரகமான நீலப்பட காட்சிகள் இணைய தளங்களிலும், குறுந்தகடுகளாக கடைத்தெருக்களிலும் எளிதாக கிடைக்கின்றது.


ஆக, சொர்கம் என்பது சிற்றின்ப  வெறியர்கள் நிறைந்த பரத்தையர் இல்லத்தைப் போன்றது என்றும் கூறலாம். ஹூருலீன்களை காமப்பதுமைகள் (Sexdolls) என்று கூறுவதே பொருத்தமானது. இதிலிருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சிந்தனையில் இருப்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.


Facebook Comments

41 கருத்துரைகள்:

Tamilan said...

சூப்பர் பதிவு.
//தேவையானவற்றை செய்ய சுறுசுறுப்பான சிறுவர்கள்// இது என்ன?
//(ஹூருலீன்களுடன் இணைவதற்கும் முடிவில்லா சுகம் பெறுவதற்கும் நூறு பேருடைய ஆற்றல் சொர்க்வாசி ஆண்களுக்கு வழங்கப்படும். அறிவிப்பவர் அனஸ் (ரலி) திர்மிதீ.)//
100 பேர் ஆற்றல். இதில் 72அய் கழித்தால் 28 . இந்த 28 பேர் இடைவெளியில் கையா :)? இல்லை மேலே இருக்கும் சிறுவர்களா?

//ஹூருலீன்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். எவ்வளவு முறை உறவு கொள்ளப்பட்டாலும் சலிப்படையவோ வேதனையடையவோ மாட்டார்கள். அவர்களுக்கு மாதவிலக்கு கிடையாது என்றுமே கன்னித்தன்மையுடையவர்களாக இருப்பார்கள். // இது இங்கேயே கிடைக்கிறது, (inflated Dolls).

Tamilan said...

நான் முன்பே கேட்டதுதான். இந்த படத்தில் பெரிய பெண்களே இருக்கிறார்கள். முகமது மாதிரியான ஆள் சுவர்க்கத்துக்கு போனால் 9 வயது சிறுமி உண்டா?

Tamilan said...
This comment has been removed by the author.
தஜ்ஜால் said...

வாருங்கள் தமிழன்,

இஸ்லாமிய சொர்க்கத்தைப்பற்றி எழுதத் துவங்கினால், ஒரு புத்தகத்தையே எழுதலாம்.

//சுவர்க்கத்துக்கு போனால் 9 வயது சிறுமி உண்டா?// சொர்க்கத்தில் விரும்பியதெல்லாம் கிடைக்கும் என்கிறார்கள். எனவே... நிச்சயமாக அதற்கு மட்டுமல்ல எதற்கும் வழியிருக்கிறது!

Ant said...

இவ்வுலகில் மதிப்பு மிக்கதாக கருதப்படுவதெல்லாம் பொருளாதாரம் சார்ந்தது. இத்தகைய பொருட்களால் சொர்க்கத்தில் எந்த தேவை உள்ளது. அவை மதிப்பு மிக்கதாக அங்கு கருதுவதற்க்கு? சொர்க்கம் வயது வந்தவர்களுக்கு மட்டும் தானா? ஒரு மனிதன் எதை உயர்ந்தது என என்னுகிறானே அதை அடைய முயற்சிக்கிறான் அப்படியானால் பொருளாதாரத்தில் மிகும் நசித்த ஒரு கூட்டத்திற்கு மஈட்டும்தான் வெகுமதிகள் கவர்ச்சியானதாக இருக்க முடியும். செல்வந்தர்கள் சொர்க்கத்திலும் கடைவிரிக்கதான் வேண்டுமா? ஆனாலும் கிலுப்பாக கதை உள்ளது.

Devapriya Solomon said...

Another Good Posting to expose Abrahamic religions.

ஆனந்த் சாகர் said...

உண்பது, குடிப்பது, புணருவது, மாட மாளிகைகளில் வசிப்பது, உயர்ந்த ஆடைகளை அணிவது போன்ற உடல் சார்ந்த இன்பங்களை மட்டுமே சொர்க்கத்தில் கிடைக்கும் என்று முஹம்மதுவால் கதை அளாந்துவிட முடிந்தது. ஏனென்றால் அவருக்கு தெரிந்ததெல்லாம் அவை மட்டுமே. ஒரு கீழ்த்தரமான மனிதனால் இதை தாண்டி சிந்திக்க முடியாது என்பதில் வியப்பேதுமில்லை.

முஹம்மதுவின் சொர்க்கத்தில் நூலகங்களோ, கலை நயங்களோ, அன்பு செய்வதோ இல்லை. அறிவை பெருக்கிகொள்வதிலும் கலைகளில் ஈடுபடுவதிலும் ஒருவர் மேல் ஒருவர் நிபந்தனையற்ற அன்பு கொள்வதிலும் ஏற்படுகிற பேரின்பதை முஹம்மதின் சொர்க்கத்தில் கற்பனையும் செய்ய முடியாது.

எப்பொழுதும் பெண்களுடன் சல்லாபிப்பது மட்டுமே சொர்க்க இன்பம் என்றால் அப்படிப்பட்ட சொர்கத்தை பலர் இந்த உலகத்திலேயே ஏற்படுத்தி இருக்கின்றனரே! அப்படிப்பட்ட சொர்ககம் பூமியில் பல இடங்களில் உள்ளதே! மூமின்களும் குறிப்பாக அரபு ஷேக்குகள் அப்படிப்பட்ட சொர்க்கங்களுக்கு வாடிக்கையாளர்களாக இருக்கிறார்களே! அல்லாஹ்வுக்கு இது கூட தெரியாமல் இருப்பது பரிதாபம்தான்.

Indian 1947 said...

மறுமையில் எதற்கு தங்கம் மற்றும் வெள்ளி ? பிளாட்டினம் பல்லேடியம் இதெல்லாம் அல்லாவுக்கு தெரியாதா. இதெல்லாம் காசுள்ளவனுக்கு பூமியிலேயே கிடைக்குதே.

தீய எண்ணம் எப்படி மனத்தை விட்டு அகலும் ? அடுத்தவனுக்கு கொடுக்கப்பட்ட ஹீருன்களை போல் இல்லாமல் நமக்கு சொத்தையாய் கொடுத்துவிட்டாரே என்று மனம் என்னாதா ? அல்லது அடுத்தவரின் ஹீரூங்களை கவர முயற்ச்சிக்கும்போது சண்டை வராதா ? மனுஷபயல் மனம் ஒரு குரங்கு என்பது கடவுளுக்கு தெரியாதா ?

ஒரு பேச்சுக்கு இப்படி ஒருத்தர் இந்த காலத்தில் என்னை நம்புங்க என்னை மட்டும் பாலோ பண்ணுங்க, நாள் சொல்றதை மட்டும் கேட்டு நடங்க அப்படி நடந்த அந்த ...... தீவுல (மேற்சொன்ன) எல்லாம் நீங்க இறந்தவுடன் கிடைக்கும். அப்படின்னு சொல்ற ஒரு ஆள என்னன்னு சொல்லும் இந்த சமூகம்?

தஜ்ஜால் said...

வாருங்கள் ANT,

அல்லாஹ்வின் சொர்க்கம் இந்த உலகைப் போன்ற மற்றொரு பகுதியென்றே தோன்றுகிறது. தன்னைக் கடவுள் என்று கூறிக்கொள்ளும் அல்லாஹ்வாலும் உலகைக் கடந்து சிந்திக்க முடியவில்லை.

தஜ்ஜால் said...

வாருங்கள் சாலமன்,

கிருஸ்தவமும் இஸ்லாமும் என்பது யூதக் கதைகளின் தொகுப்புதான். ஆங்காங்கே மானே.. தேனே.. பொன்மானே என்று ஜிகினாக்களை சேர்த்திருக்கிறார்கள்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

தஜ்ஜால் said...

வாருங்கள் ஆனந்த்,

உண்மைதான். முஹம்மதால் தங்கம் வெள்ளி, உணவு, பாலுறவு இவற்றைக் கடந்து சிந்திக்க முடியவில்லை.

அன்பு மற்றும் அறிவைப்பற்றி முஹம்மது பேசுவாரா?

இது உங்களுக்கே சற்று அதிகமாகத் தெரியவில்லையா?

தஜ்ஜால் said...

வாருங்கள் இந்தியன் 1947,

//தீய எண்ணம் எப்படி மனத்தை விட்டு அகலும் ? அடுத்தவனுக்கு கொடுக்கப்பட்ட ஹீருன்களை போல் இல்லாமல் நமக்கு சொத்தையாய் கொடுத்துவிட்டாரே என்று மனம் என்னாதா ?// விரும்பியதெல்லாம் கிடைக்கும் என்று வந்துவிட்டாலே குழப்பம்தான். ஏன் ஒருவனுக்கு ஒரு பொருளின் மீது விருப்பம் ஏற்படுகிறது? தன்னிடமில்லாத தன்னைக் கவர்ந்த ஏதோ ஒன்றை அவன் அறிகிறான், தன்னை மற்றவருடன் ஒப்பீடு செய்கிறான். இவ்வுலக வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருக்கும் குழப்பமும் அதுதான். எனவே மறுமை(!) வாழ்விலும் மோதலுக்கு தயாராகிக் கொள்ளுங்கள்.

Anonymous said...

intha male padi Visayathirku mattumthana?veru onrumea illaiya?

Anonymous said...

I really really admire by your post. Please keep posting and let the world knows about real Islam that they called.

Ant said...

//அல்லாஹ்வோ மார்பகங்கள் உயர்ந்த சமவயது ஹூரிகளை வழங்குவதாக குர்ஆனில் 78:33-ல் குறிப்பிடுகிறான்// குர்ஆனுக்கு மாற்றாக எதை யார் கூறினாலும் அது ”விதிப்படி” ஏற்க முடியாது. எனவே ஹூர் என்பது பெண்தான். சிக்கல் ற்என்னவெனில் சமவயது உடையவர்கள் எனும் போது ”வளர்ச்சி” அவசியமாகிறது. அது பல்வேறு கேள்விகளை முன்வைக்கிறது. அத்தோடு சிறுவர்கள் ஏன்? வயதானவர்களுக்க வயதான ஹூர் களா? ஏற்க முடியாது!

ஆனந்த் சாகர் said...

சீனர்கள் பெண்களின் மார்பகங்கள் தட்டையாக இருப்பதையே விரும்புகிறார்கள், பெரிய மார்பகங்களை அவர்கள் விரும்புவதில்லை என்று கூறப்படுகிறது. இதை பற்றி அல்லாஹ் அறியாதவனாகவே இருக்கிறான். அப்படியானால் இஸ்லாமிய சொர்க்கத்தில் சீன முஸ்லிம்களின் பாடு திண்டாட்டம்தான் போல் இருக்கிறது.

ஆனந்த் சாகர் said...

சீனர்கள் பெண்களின் மார்பகங்கள் தட்டையாக இருப்பதையே விரும்புகிறார்கள், பெரிய மார்பகங்களை அவர்கள் விரும்புவதில்லை என்று கூறப்படுகிறது. இதை பற்றி அல்லாஹ் அறியாதவனாகவே இருக்கிறான். அப்படியானால் இஸ்லாமிய சொர்க்கத்தில் சீன முஸ்லிம்களின் பாடு திண்டாட்டம்தான் போல் இருக்கிறது.

Feroz Babu said...

//தங்கத்தினாலான தட்டுகளும், குவளைகளும் அவர்களிடம் சுற்றிக் கொண்டுவரப்படும்…
(குர் ஆன் 43:71)//
தஜ்ஜால் அய்யா, இது உங்களது லேடஸ்ட் கற்பனை காவியமா! இந்த தட்டுகளிலும், குவளைகளிலும் என்ன இருக்கும் என்பதை இதற்கடுத்த வரிகளில் கூறப்படுகிறது. ...மனங்கள் எதனை விரும்புகின்றனவோ அதுவும், கண்கள் இன்பமடையுமே அதுவும் அதில் உள்ளன. என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் என்னடாவென்றால் தங்கம், உலோகம், ஸ்கூல்பீசு என கற்பனையை அள்ளிவிட்டு உங்கள் கற்பனை வளத்தை நீங்களாகவே தடவிக் கொடுத்து அற்பத்தனமாக மகிழ்ந்து கொள்கிறீர்கள்.

Feroz Babu said...

//சரி, மனைவியர்கள் இருக்கையில், எதற்காக இவ்வளவு ஹூருலீன்கள் ? //

இது அடுத்த கற்பனை. நான் என்ன கேக்குறன்னா ஒரு ஊர்ல 50000 பெண்கள் இருக்கிறார்கள்னா அத்தனை பேர் மேலயுமா அங்குள்ள ஆண்கள் விழுந்து புரள்வார்கள்? சிப்பா இருக்குய்யா. சுவர்க்கத்தில் ஹூர்ளின்கள் இருப்பார்கள்னு சொன்னத வச்சி நம்ம தஜ்ஜாலுக்கு ஒரு யோசனை வந்துடுச்சி. இவ்ளோ பேரா அவ்ளோ பேரிடமும் சல்லாபம் செய்யலாமோ என குதூகலித்துவிட்டார். ஏன்னா இங்கு இவரது மனம் பக்குவப்பட்ட முறை அப்படி. வசனம் 52:20 .....இன்னும் ஹூருள் ஈன்களை அவர்களுக்கு நாம் மணம் முடித்து வைப்போம். இப்படிதான் இந்த வசனம் சொல்லுது. ஆனால் நம்ம தஜ்ஜாலு இஸ்லாத்தின் மேல் அவதூறு செய்யவேண்டும். அதனை ’பழுத்த’ அறிவாளிகள் படித்து தனது முதுகை சொறிந்துவிடவேண்டும். தானும் சொறிந்துகொள்ளனும். இதுதான் தஜ்ஜாலுக்கு பிடித்தமானது.

தஜ்ஜால் said...

அய்யா Feroz Babu,

//தஜ்ஜால் அய்யா, இது உங்களது லேடஸ்ட் கற்பனை காவியமா! இந்த தட்டுகளிலும், குவளைகளிலும் என்ன இருக்கும் என்பதை இதற்கடுத்த வரிகளில் கூறப்படுகிறது.// எதையும் முழுவதுமாக படிக்கவே மாட்டீர்களா?. அல்லாஹ் கூறும் சொர்க்கத்தில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை சிறப்பித்துக் கூறவேண்டிய அவசியமென்ன என்பதுதான் இங்கு கேள்வி! குவளைகளில் என்னென்ன இருக்குமென்பதல்ல! ஆக உங்கள் அல்லாஹ்விற்கும் தங்கம் பெரிய விஷயமாகத்தான் தெரிகிறது.

தஜ்ஜால் said...

அய்யா Feroz Babu,

///சுவர்க்கத்தில் ஹூர்ளின்கள் இருப்பார்கள்னு சொன்னத வச்சி நம்ம தஜ்ஜாலுக்கு ஒரு யோசனை வந்துடுச்சி. இவ்ளோ பேரா அவ்ளோ பேரிடமும் சல்லாபம் செய்யலாமோ என குதூகலித்துவிட்டார். ஏன்னா இங்கு இவரது மனம் பக்குவப்பட்ட முறை அப்படி.///
தெரியாமல்தான் கேட்கிறேன்!

72 ஹூரிகள் வழங்கப்பட்டவர்கள், அந்தக் காமப்பதுமைகளை வைத்து என்ன செய்வார்கள்?

நிமிர்ந்து புடைத்த மார்புகளையும், தோய்வடையாத பெண்ணுருப்புகளையும் வைத்து என்ன செய்வதாக உத்தேசம்?

எதற்காக 100 பேரின் பாலியல் பலம் வழங்கப்பட வேண்டும்?

ஹூரிகள் எதற்காக நித்திய கன்னிகளாக இருக்க வேண்டும்?

எனது மனம் பக்குவப்பட்ட முறையல்ல! உங்கள் முஹம்மதுவின் மனமென்ற மலக்குழியில் நெளியும் புழுக்கள் அப்படி இருந்திருக்கிறது!

தஜ்ஜால் said...

அய்யா Feroz Babu,

// ஆனால் நம்ம தஜ்ஜாலு இஸ்லாத்தின் மேல் அவதூறு செய்யவேண்டும். அதனை ’பழுத்த’ அறிவாளிகள் படித்து தனது முதுகை சொறிந்துவிடவேண்டும். தானும் சொறிந்துகொள்ளனும். இதுதான் தஜ்ஜாலுக்கு பிடித்தமானது.//

ஹய்யோ... ஹய்யோ....!
அவதூறு செய்கிறார்கள், புண்படுத்திவிட்டார்கள் என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். இதைத் தவிர வேறு எதுவும் தெரியாதா? இஸ்லாமை மட்டுமல்ல மதங்களின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம்தான்! அதில் இஸ்லாமிற்கு எப்பொழுதும் தனித்த இடமுண்டு!

Feroz Babu said...

//அல்லாஹ்விற்கும் தங்கம் பெரிய விஷயமாகத்தான் தெரிகிறது.//

தங்கத்தை வைத்து என்னா செய்றதுன்னு கேட்டது சாட்சாத் தஜ்ஜாலான நீங்கள்தான். தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்றா கூறப்பட்டுள்ளது? தங்கத்திலானா பண்டங்களில் வழங்கப்படும் என்றுதான் கூறப்பட்டுள்ளது.
தங்கம் மனிதனுக்கு பெரிய விஷயமாக தெரிவதால்தான் அதை கூறுகிறான். தகரம்னு சொல்லியிருந்தா அய்யே இதுலயா கொடுப்பாங்க என்பீர்கள். மனிதனுக்கு தெரியாத ஒரு உலோகத்தை கூறினால் என்னப்பா புதுசா இருக்கு என்பீர்கள். எலும்பில்லா நாக்கு எப்படி வேண்ணாலும் பேசும்

Feroz Babu said...

72 என்று குரானில் கூறப்படவில்லை. மணம் முடித்து வைக்கப்படுவர் என்றே கூறப்பட்டுள்ளது. கன்னியர் என்றாலே அதற்குத்தான் என்பது உங்களது புரிதல். ஒவ்வொருவரின்புரிதலும் அவரவர் சிந்தனைக்கு ஏற்பவே.

Feroz Babu said...

//அவதூறு செய்கிறார்கள், புண்படுத்திவிட்டார்கள் என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.//
இதில் கூட உங்களது எழுத்தின் மீது உங்களுக்குள்ள மேட்டிமைத்தனமே வெளிப்படுகிறது. ஹாஹாஹா! இங்கு அவதூறு செய்யப்பட்டுள்ளதால்தான் எனது மறுமொழியே தவிர அய்யய்யோ திட்டிட்டானே என்ற வெற்று புலம்பல் அல்ல. நான் எதையும் வெளிப்படையாக சொல்லிவிடுவேன். மனிதனால் நம்பமுடியாத விஷயங்களை அது எங்களது நம்பிக்கை என்றளவில் நிறுத்திவிடுவேன், விவாதத்தை தொடரமாட்டேன். அதனால் நீங்கள் என்னை பரிகசித்தால் கூட நான் நாணப்படுவதில்லை. ஏனென்றால் அறிவதற்குரிய விஷயம் வற்றாத ஊற்றுபோல. ஆனால் நீங்கள் இங்கு செய்திருப்பது அவதூறு.

தஜ்ஜால் said...

Feroz Babu,
//தங்கத்தை வைத்து என்னா செய்றதுன்னு கேட்டது சாட்சாத் தஜ்ஜாலான நீங்கள்தான். // ஆமாம் நானேதான்! இல்லையென்று சொல்லவில்லையே? தங்கத்தை மனிதர்கள் மதித்துப் போற்றுவது தேவைகளின் காரணத்தால் மட்டுமே!
உங்கள் இறைவன் சொல்லும் சொர்க்கத்தில் தேவைகளே இருக்காது எனும்பொழுது அது தங்கமாக இருந்தாலென்ன தகரமாக இருந்தாலென்ன என்பதுதான் கேள்வி!
சரி... அல்லாஹ்விற்கு, இப்படியெல்லாம் ஆசைகாட்டி ஆள் பிடிக்க வேண்டிய தேவையென்ன?

தஜ்ஜால் said...

Feroz Babu,
//கன்னியர் என்றாலே அதற்குத்தான் என்பது உங்களது புரிதல். ஒவ்வொருவரின் புரிதலும் அவரவர் சிந்தனைக்கு ஏற்பவே.//
தெரியாமல்தான் கேட்கிறேன், பெருத்த மார்பகங்களும், ஒளி ஊடுருவும் சருமம் கொண்ட கன்னியர்களை எதற்காக திருமணம் செய்து வைக்கிறான்?
அதற்கு நாங்கள் கொடுத்திருக்கும் பதில் எனது கற்பனைகள் அல்ல! உங்களது புனித நூல்களிலிருந்துதான் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான குறிப்புகளையும் தெளிவாகவே கொடுத்திருக்கிறோம்.
//ஆனால் நீங்கள் இங்கு செய்திருப்பது அவதூறு.// இது அர்த்தமற்ற குற்றச்சாட்டு! எனவே நீங்கள் புகார் பட்டியல் கொடுக்க வேண்டிய இடம் – இஸ்லாம்!

Ant said...

//நீங்களும் உங்களுடைய மனைவியரும் மகிழ்ச்சிக்குரியவர்களாக இருக்கும் நிலையில்// இதற்கு என்ன பொருள்?
//அவர்களை எந்த மனிதனும் எந்த ஜின்னும் (சொர்க்வாசிகளாகிய) இவர்களுக்கு முன் தீண்டியதே இல்லை// இதன் பொருள்?
Perfectly erected என்று adjective -வை ஏன் பயன்படுத்த வேண்டும்?

Feroz Babu said...

Mr.Ant,
//நீங்களும் உங்களுடைய மனைவியரும் மகிழ்ச்சிக்குரியவர்களாக இருக்கும் நிலையில் சொர்க்கத்தினுள் புகுங்கள்…// இதுதான் முழுமையான வாக்கியம். இது என்ன சொல்லுதுன்னா இஸ்லாம் கூறுவதுபோல மறுமையில் கேள்விக் கணக்கு முடிந்த பின்னர் கணவனும் மனைவியுமாகிய அவர்கள் சொர்க்கவாசியாகிவிட்டோம் என்ற மகிழ்ச்சியுடன் சொர்க்கத்தினுள் நுழையுங்கள் என்கிறது. நீங்கள் என்னாடான்னா ”அந்த” மகிழ்ச்சி என்று நினைத்துவிட்டீர்கள். உங்களைச் சொல்லிக் குற்றமில்லைதான் உங்களுக்கு விளக்கம் சொல்லித் தருபவர்களின் தகுதி அப்படி.
///அவர்களை எந்த மனிதனும் எந்த ஜின்னும் (சொர்க்வாசிகளாகிய) இவர்களுக்கு முன் தீண்டியதே இல்லை// இதன் பொருள்?//
இதன் பொருள்---- சொர்க்கத்தில் நுழைபவர்களுக்கு ஹூர்ளின்கள் மணமுடித்து வைக்கப்படுவர். இவ்வாறு மணமுடித்து வைக்கப்படுபவர்கள் கன்னியர் என்பதற்காக அவர்களை சுவர்க்கவாசிகளுக்கு மணமுடித்து வைக்குமுன்னர் யாரும் தீண்டியதில்லை என்று கூறுகிறது. குறிப்பாக ஒருவருக்கு எத்தனை ஹூர்ளின்கள் மணமுடித்து வைக்கப்படுவர் எனக் கூறப்படவில்லை. ஒரு ஹதீதில் 2 என்றும் ஒரு ஹதீதில் 72 என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் 72 என்ற ஹதீதை வைத்து இஸ்லாத்தை கேலி பேசலாம் என்பதினால் தஜ்ஜால் போன்றவர்கள் இந்த ஹதீதை மட்டும் பயன்படுத்திக் கொள்கின்றனர். மேலும், வசதியாக குரானில் உள்ள மணமுடித்து வைக்கப்படுவர் என்ற வசனத்தையும் மறைத்துவிடுவர். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், மணமுடித்து வைக்கப்படும் ஹூர்ளின்களின் எண்ணிக்கை பற்றி குரானில் இல்லை. ஹதீதில் மட்டுமே 2 என்றும் 72 என்றும் ஒன்றுக்கொன்று முரண் பட்ட இரு ஹதீதுகள் உள்ளன. எனவே இந்த இரு ஹதிதுகளையுமே ஒதுக்கித் தள்ளுவோம். எதையாவது ஒன்றை எடுத்துக்கொள்ளுவதாக இருந்தால் ஏன் 2 என்ற ஹதீஸை எடுத்துக்கொள்ளக்கூடாது?

Feroz Babu said...

//ஆமாம் நானேதான்! இல்லையென்று சொல்லவில்லையே? // மறுமையில் தங்கத்தட்டையும் குவளைகளையும் மனிதர்களிடம் கொடுப்பதாக குரான் கூறவில்லை. அவற்றில் இருக்கும் பொருள்பற்ரிதான் அந்தவசனம் சொல்கிறது. ஆனல், இதற்கு நீங்கள் சொன்ன தங்கத்தை வைத்து என்னா செய்வது என்ற விளக்கம் தவறு என்பதுதான் எனது வாதம். முதலில் நீங்கள் அளித்த விளக்கத்தைப் பற்றி சொல்லுங்கள் பிறகு ஆள் பிடிப்பதற்கு போகலாம்.

தஜ்ஜால் said...

//எனவே இந்த இரு ஹதிதுகளையுமே ஒதுக்கித் தள்ளுவோம். எதையாவது ஒன்றை எடுத்துக்கொள்ளுவதாக இருந்தால் ஏன் 2 என்ற ஹதீஸை எடுத்துக்கொள்ளக்கூடாது?// ஏன் 72 என்ற ஹதீஸை எடுக்கக் கூடாது? இது எங்களது கற்பனைகள் அல்ல நண்பரே! உங்களது புனித நூல்களில் உள்ளவைகள்தான்!!!

தஜ்ஜால் said...

//மறுமையில் தங்கத்தட்டையும் குவளைகளையும் மனிதர்களிடம் கொடுப்பதாக குரான் கூறவில்லை.///
பாபு.... ஃபெரோஸ் பாபு.....!!!
எதையும் முழுவதுமாகப் படிக்க மாட்டீர்களா? என்று முன்பே கேட்டிருந்தேன் நினைவிருக்கிறதா? அதையே மீண்டும் கேட்கிறேன் எதையும் முழுவதுமாகப் படிக்க மாட்டீர்களா?
தங்கத் தட்டு குவளைகள் பற்றிய குர்ஆன் வசனத்திற்கு முன்பாக இன்னொரு வசனத்தை குறிப்பிட்டிருக்கிறேன் அதை பார்த்தீர்களா?
// ஆனல், இதற்கு நீங்கள் சொன்ன தங்கத்தை வைத்து என்னா செய்வது என்ற விளக்கம் தவறு என்பதுதான் எனது வாதம். // உங்களது புரிதலே தவறு இதில் வாதம் வேறா?

Ant said...

//43:70. நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).// அடைப்புக்குறிக்குள் உள்ள வாரத்தைகள் தான் தாங்கள் ‌தரும் பொருள் தருகிறது. அது சரி வலக்கரத்தால் மகிழ்ந்தவர்கள் அந்த வலக்கரத்துக்கு சொந்தகாரர்களை சொர்க்கத்திற்கு அழைத்து செல்ல முடியாதா? இவர்கள் பூலோக ஹூர் ஈன் களா ? ????

//இவர்களுக்கு முன் தீண்டியதே இல்லை// ..// இவ்வாறு மணமுடித்து வைக்கப்படுபவர்கள் கன்னியர்// "அந்த” மகிழ்ச்சி" தொடர்பான வெளிப்பாடுகள்தானே இவை. மணம் மணம் முடித்துவைப்பது எதற்க்காக? கன்னியர் என்ற அழுத்தம் ஏன்? சிற்றின்ப வேட்கை கொண்டோரை ஊக்கப்படுத்ததானே?

//43:71. பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்;// இங்கு அவற்றில் என்ன உள்ளது என்பத பற்றி எதுவும் குறிப்பிடபடவில்லை. பொன் தட்டுகளும் கிண்ணங்களும் சுற்றுவதால் மகிழ்ச்சி ஏற்படும் என்போது பொருளாதார தேவை உள்ள உலகில் அப்ப சொர்க்கத்திலும் கொடுக்கல் வாங்கல் இருக்குமா?

//சம வயதுடைய ஹூர்ல் ஈன்கள்// அப்ப சிறுவர்களுக்கு? அது சரி! வயதானவர்களுக்கு ? மனைவி இல்லாதவர்களுக்கு? மணமாகத பெண்களுக்கு? வலக்கரத்திற்கு சொந்தம் ஆனவர்கள் நிலை?

Dr.Anburaj said...

மண்ணுலகில் ”அலியாக திருநங்கை” யாக வாழ்ந்தவர்களுக்கு என்ன கிடைக்கும். தனது அடியார்களில்சிலரை ஆணும் பெண்ணும் அற்ற பிறவிகளாகப் படைத்த அல்லாவுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? படைப்பில் இவ்வளவு தவறுகள் ஏன் ? நரகத்தில் போடப்பட வேண்டிய அதுவும் மிகவும் கடினமான பிரிவில் போட வேண்டிய முதல் ஆள் அல்லாதான். இரண்டாவது அரேபிய வல்லாதிக்க சண்டியர் முகம்மது.

Indian 1947 said...

www. youtube. com/watch?v=LnrB5KU2TFs
(Remove the space & see)
என்ன ஒரு அமைதி மார்க்கம்...
இப்படி சிந்திப்பவர்களுக்கு நிறைய மச்சினிச்சிகள் உள்ளன (அத்தாச்சின்னா தப்பாய்டாது?)

Anonymous said...

ஒரு சந்தேகம் : "ஹூரி","ஹூருலீன்" - இவை இரண்டும் ஒன்றுதானா?

இப்போதைக்கு நான் 'Anonymous'தான்!

தஜ்ஜால் said...

ஹூரி - ஹூரிலீன்கள் என்பதை சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், ”ஹூர் அல் அய்ன்” என்று வரும்.

”ஹூர் அல் அய்ன்” என்றால் அழகிய கண்களைக் கொண்ட பெண்கள் என்று பொதுவாகப் பொருள் செய்யப்படுகிறது.

ஹூர் என்றால் திரும்பத் திரும்ப என்றும் பொருள் கூறப்படுகிறது. திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும் கண்களையுடைய பெண்கள் என்றும் பொருள் கூறுகின்றனர்.

Ngama Rgazi said...

அன்பார்ந்த தஜ்ஜால், ஒரு வேண்டுகோளும் ஒரு சில கேள்விகளும் :
(1) புகாரி ஹதீஸ், அல் ஹதீஸ், ......... அப்படியென்றால், பலவகை ஹதீஸ்கள் உண்டா?
(2) அரபிமொழியில் 'அல்' என்பது, ஆங்கில 'THE' என்பது மாதிரியா?
(3) முஸ்லிம் மதகுருமார்கள் சரியானது [ ISO Certified(!) ] என்று ஏற்றுக்கொள்ளும் தமிழ்/ஆங்கில ஹதீஸ் புத்தகம் ஒன்று எனக்கு வேண்டும். எங்கே கிடைக்கும்?
(4) குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களில் அடிக்கடி வரும் அரபுசொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் அடங்கிய சிறு அகராதி ஒன்றை ONLINE-ல் தரமுடியுமா?

தஜ்ஜால் said...

Ngama Rgazi ,
//புகாரி ஹதீஸ், அல் ஹதீஸ், ......... அப்படியென்றால், பலவகை ஹதீஸ்கள் உண்டா?//
பல்வேறு வகையான ஹதீஸ் தொகுப்புகள் இருக்கின்றன. அவற்றில் ஆறு தொகுப்புகளை மட்டும் நம்பிக்கைக்குரிய செய்திகள் அடங்கியிருப்பாதாக முல்லாகள் முடிவு செய்து வைத்திருக்கின்றனர். அதில் புகாரி, முஸ்லீம் போன்ற தொகுப்புகள் முதலிடத்திற்கு வருகின்றன.
//அரபிமொழியில் 'அல்' என்பது, ஆங்கில 'THE' என்பது மாதிரியா?//
ஆம்!
//முஸ்லிம் மதகுருமார்கள் சரியானது [ ISO Certified(!) ] என்று ஏற்றுக்கொள்ளும் தமிழ்/ஆங்கில ஹதீஸ் புத்தகம் ஒன்று எனக்கு வேண்டும். எங்கே கிடைக்கும்?//
அப்படி முல்லாக்கள் கருதியிருந்தது புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களைத்தான். நம்மைப் போன்றவர்களின் விமர்சனங்களால், அவற்றிலும் கேள்விக்குறிகள் தோன்றிவிட்டது. புகாரி முஸ்லீம் மற்றும் இதர ஹதீஸ் தொகுப்புகளை இணையத்திலேயே இலவசமாகத் தரவிறக்கம் செய்யலாம். அச்சிட்ட புத்தகமாக வேண்டுமெனில் இஸ்லாமிய புத்தகங்கள் விற்பனை செய்யும் நிலையங்களுக்கு செல்லவேண்டும்.
// குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களில் அடிக்கடி வரும் அரபுசொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் அடங்கிய சிறு அகராதி ஒன்றை ONLINE-ல் தரமுடியுமா?//
Corpus quran.com என்ற தளம் ஓரளவிற்கு உதவியாக இருக்கும்.

Mohamed Rabeek said...

அல்லாஹு அக்பர் உமுக்கும் எமக்கும் அல்லாஹ் பாவத்தை மன்னிப்பானாக ஆமின்

Mohamed Rabeek said...

தஜ்ஜால் னு பேரு வச்சா நீ தஜ்ஜாலா அவன் உன்னவிட இறைதுரோகி அல்லாஹ் பொருமையாளனுக்கெல்லாம பொருமையாளன்