போர்க்களத்தில் வானவர்கள்.…!
பிரம்மாண்டமான
இப்பிரபஞ்சத்தையும் பலவிதமான உயிரினங்களையும் "குன்" (ஆகுக!) எனும் ஒற்றை சொல்லில் உருவாக்கி, தன் கட்டளையின் கீழ் வைத்தும் நிர்வகிப்பதாக கூறிக் கொள்பவன் நிச்சயமாக வல்லமைமிக்கவனாகவும், நம் அனைவரின் கற்பனைக்கு எட்டாத அளவு ஞானம் உள்ளவனாக இருக்க வேண்டும். அத்தகைய சர்வ வல்லமைமிக்க ஆற்றல் தன்னால் படைக்கப்பட்ட
படைப்பினத்தில் இருந்த ஒரு மிகச்சிறிய அற்ப மனித
கூட்டத்தை கட்டுப்படுத்த அல்லது அழிக்க, போர்வியூகம் அமைத்து,
கையில் வாள் ஏந்திய
மலக்குகளை குதிரையில் ஏற்றி,
முஹம்மது நபிக்கு ஆதரவாக போரிட போர்க்களங்களில் இறக்கினான்.
புகாரி ஹதீஸ் -4118
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலான வீதியில் நபி (ஸல்) அவர்கள் பனூ
குறைழா குலத்தாரை நோக்கிச் சென்ற போது (வானவர்)
ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது
படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனி வந்ததால் கிளம்பிய புழுதியை (இப்போது கூட) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
புகாரி ஹதீஸ் -2813
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரி
4 அல்லது 5ஆம் ஆண்டில் நடந்த)
அகழ் போரின் போது (போரின் முடிந்து)
திரும்பி வந்து ஆயுதங்களை கீழே வைத்து விட்டு குளித்தார்கள்.
அப்போது ஜிப்ரீல் (அலை)
தமது தலையை புழுதி மூடியிருக்க வந்தார்கள்.
நபி (ஸல்)
அவர்களை நோக்கி நீங்கள் ஆயுதத்தை கீழே வைத்து விட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக!
நான் அதை கீழே வைக்கவில்லை என்று கூறினார்கள்.
நபி (ஸல்)
அவர்கள் அப்படியென்றால் எங்கே (போர் புரியப்)
போகிறீர்கள் என்று கேட்க, ஜிப்ரீல் (அலை)
அவர்கள் இதோ இங்கே !
என்று பனூ குறைழா ( என்னும் யூதக்)
குலத்தினரை (அவர்கள் வசிக்கும் இடம்)
நோக்கி சைகை காட்டினார்கள்.
ஆகவே அல்லாஹ்வின் தூதரும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்
(புகாரி 2813,4117,4118).
அசூரர்களை அழிக்க கடவுளர்களும், தேவர்களும் பலவிதமான சிறப்பு
ஆயுதங்களுடன் போரிட்டதாக கூறும் இந்துமத புராண கட்டுக்கதைகளை விட
சிறுபிள்ளைத்தனமானது. ஏனெனில் அவைகளில் காண்பிக்கப்படும்
அசூரர்கள் பலவிதமான மாயசக்தி கொண்டவர்கள், அவர்களது
கடவுளர்களுடன் நேரடியாக போரில் ஈடுபடும் அளவுக்கு வல்லமையுடையவர்கள். அசூரர்கள் எனப்படுபவர்கள் சராசரி மனிதர்களில்லை.
அசூரர்களை ஏமாற்றவும் அவர்களுடன் சண்டையிடவும் இந்துமதக் கடவுள்கள் மாறுவேடத்தில் வரவேண்டியதாக
இருந்ததென்கிறது இந்துமதக் கதைகள். உதாரணத்திற்கு அசூரர்களை மயக்கி, ஏமாற்ற விஷ்ணு
மோகினி அவதாரம் எடுத்தாராம்.மோகினியின் அழகில் மயங்கிய சிவன், அது விஷ்ணு என்ற உண்மை
புரியாமல் மயங்கிய சிவன் வழியெங்கும் இந்திரியத்தை சிதறடித்தவாறு ஓடினானாம்! இப்படிப் போகிறது இந்துமதக்
கதைகள். அசூரர்களை அழிக்க இந்துமதக் கடவுளர்கள் எத்தனை சிரமங்களைச் சாந்திக்க வேண்டியிருந்தது
என்பதை விளக்கவே இதைக் கூறுகிறேன். ஆனால் முஹம்மதை எதிர்த்தவர்கள் மிகச் சாதரண மனிதர்களே!
அதற்கே அல்லாஹ்விற்கு வானிலிருந்து வானவர் படையை இறக்க வேண்டியிருந்தது. (கடவுளர்களின்
நிலைமை சற்று சிரமமாகத்த்தான் இருக்கிறது)
நபி (ஸல்) அவர்களின் எதிரிகள்
அபூஜஹல் மற்றும் அவனுடய கூட்டத்தினரை பலவாறு சபிக்கறான். சவால் விடுகிறான். உடன்படிக்கை செய்து கொள்கிறான் (குர் ஆன் 8:56,57,58,61,
9:4). வேறு வழியில்லாமல் போருக்கு வியூகம்
வகுக்கிறான் (குர் ஆன் 4:101,
102, 103, 104, 8:60). ஆயிரக்கணக்கில் மலக்குகளை அனுப்பி வாளெடுத்து
போர் புரிய வைக்கிறான் (குர் ஆன் 3:124, 125,
8:9).
உங்களுடைய ரப்பிடத்தில்
நீங்கள் பாதுகாவல் தேடிய பொழுது தொடர்ந்து அணிவகுத்து முன்னே) வரும்படியான
ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உங்களுக்கு நிச்சயமாக நான் உதவி செய்பவனாக இருக்கிறேன்
என்று உங்களுக்கு அவன் பதிலளித்தான்.
(குர்ஆன் 8: 9)
உம்முடைய ரப்பு மலக்குகளிடம், நிச்சயமாக நான்
உங்களுடன் இருக்கிறேன். எனவே முஃமின்களை நீங்கள்
உறுதிப்படுத்தங்கள். காஃபிரானவர்களின் இதயங்களில் திகிலை
விரைவில் போடுவேன்; ஆகவே
கழுத்துகளுக்கு மேல் வெட்டுங்கள் அவர்களிலிருந்து ஒவ்வொரு கணுவையும் வெட்டுங்கள் என்று அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)
(குர்ஆன்
8:12)
(பத்ருப்போரில்)
அவர்களை நீங்கள் வெட்டவில்லை எனினும் அல்லாஹ் வெட்டினான். (மண்னை அவர்களின் மீது) நீர் எறிந்த போது (அதை நபியே) நீர்
எறியவில்லை எனினும் அல்லாஹ் எறிந்தான்…
(குர் ஆன் 8:17)
1000 அல்லது 3000 அல்லது 5000
போர்
அடையாளம் உள்ள மலக்குகளை அல்லாஹ் அனுப்பியதாகவும் ஹதீஸ்களிலும் காணப்படுகிறது
புகாரி ஹதீஸ் -3995
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
பத்ருப்
போரின் போது நபி (ஸல்) அவர்கள், இதோ ஜிப்ரீல்! போர்த்தளவாடங்களுடன் தமது குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று
கூறினார்கள்.
முஹம்மது நபி அவர்களின் எதிரிகள் எவ்வித சிறப்பு சக்திகளும்
இல்லாத நாகரீகமறியாத மிகச் சாதாரண மனிதர்கள். சில ஆயிரங்களில்
மட்டுமே எண்ணிக்கை கொண்டவர்கள். அவர்களிடம், வாள், அம்பு, ஈட்டி, கற்களைத் தவிர எந்த சிறப்பு ஆயுதங்களும் கிடையாது. குதிரைகள்,
ஒட்டகங்களைத் தவிர எந்த வாகன வசதியும் கிடையாது. மேலும் இன்று இஸ்லாமுக்கு எதிராக உள்ளவர்களின் எண்ணிக்கையில் மிக
சொற்பமானவர்கள். இன்றுள்ளது போல எவ்வித தொழில்நுட்ப
வளர்ச்சியின் உதவியும் அவர்களுக்கு கிடையாது.
எதிரிகளுடன்
போர் புரிய உற்சாகப்படுத்துகிறான்,
தங்களுடைய சத்தியங்களை முறித்து (நம்) ரஸூலை (ஊரைவிட்டு) வெளியேற்ற
எண்ணிய கூட்டத்தாரிடம் நீங்கள் போர் புரிய வேண்டமா? அவர்கள் (தாம்) முதன் முறையாக உங்களிடம் (போரைத்) துவக்கினர்; அவர்களுக்கு
அஞ்சுகறீர்களா? அல்லாஹ்–அவனே அஞ்சுவதற்கு மிகத் தகுதியானவன்-
நீங்கள் (உண்மையான) முஃமின்களாக
இருந்தால்.
(குர் ஆன் 9:13)
புஹாரி ஹதீஸ் : 3992
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
நபி
(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை)
அவர்கள் வந்து, உங்களிடையே பத்ருப்
போரில் கலந்து கொண்டவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
(பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில்
சிறந்தவர்கள் என்றோ அல்லது அதுபோன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல் (அலை)
அவர்கள், இவ்வாறு தான் வானவர்களில்
பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள் (எங்களில்
சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்) என்று
கூறினார்கள். இந்த ஹதீஸை பத்ருப் போரில் கலந்து கொண்டவரான
ரிஃபஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரகீ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர் முஆத் பின் ரிஃபஆ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
போர் புரிய வராதவர்களை
எச்சரிக்கிறான் (குர்
ஆன் 9:39,81,83,90,93–97),
சபிக்கிறான் (குர்
ஆன் 8:16, 9:94–97). வெற்றி பெற்றவுடன் மகிழ்ச்சியால் திளைக்கிறான். போரில்
கைப்பற்றிய பெண்கள் மற்றும் இதர பொருட்களை பங்கு பிரித்து தருகிறான் (குர் ஆன் 48:15). முஹம்மது நபி அவர்களின் படை
புறமுதுகிட்டால் எச்சரிக்கிறான், சபிக்கிறான்.
(அல்லாஹ்வின்) ரஸூல் உங்களுக்கு
பின்னாலிருந்ருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க எவர்பக்கமும் நீங்கள்
திரும்பிப்பார்க்காமல் விரண்டோடிக் கொண்டிருந்ததை (நினைத்துப்பாருங்கள்)
எனவே (நீங்கள் ரஸூலுக்கு கொடுத்த) துக்கத்திற்கு பகரமாக (தோல்வி எனும்) துக்கத்தை உங்களுக்கு பிரதிபலனாகக் கொடுத்தான்…
(குர்
ஆன் 3:153)
முஹம்மது
நபி அவர்களின் மனைவியருக்கிடையே ஏற்படும்
சக்களத்தி சண்டையை பஞ்சாயத்து செய்கிறான். யாரும் எந்த கேள்வியும் கேட்கக் கூடாதென்பதற்காக நபியே உம்மை
படைக்கவில்லையென்றால் இந்த பிரபஞ்சத்தையே படைத்திருக்க மாட்டேனென்றும்,
நீரே
இறுதித் தூதர் என்றும் பாதுகாப்பளிக்கிறான். யாராவது உயிர்,
ரூஹ் என
சிக்கலான கேள்வியை கேட்டால், வஹி வரும் வேளையில் இது போன்ற கேள்விகள் வஹியை
தடுத்து விடும் தேவையற்ற வீண் கேள்விகளால் உங்களது முன்னோர்கள் அழிந்ததைப் போன்று
நீங்களும் அழிய வேண்டாம் என எச்சரிக்கிறான். (குர்ஆன் 2:108). போர்க்களங்களுக்கு
மலக்குகளை அனுப்புவதற்கு முன்பாகவே ஒரு
இரவில், நபியை விண்வெளிப் பயணத்திற்கு அழைத்துச் சென்றனாம்.