Sunday 1 December 2013

திரைக்குப் பின்னால்...! பகுதி -1



தமிழகத்தில், வஹாபிஸம் பரவுவதற்குமுன் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்பட்ட புர்காவை, இன்று பெரும்பாலான இஸ்லாமியப் பெண்களின் அடையாளமாகவே மாற்றிவிட்டோம் என்பதை ஒரு இஸ்லாமியதளம் “புர்கா போடும் புரட்சி” என்று மிகப் பெருமையாகப் பின்வருமாறு கூறிக் கொள்கிறது.

புர்கா போடும் புரட்சி :
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வாழும் பெண்கள் குறிப்பாக நெல்லை, குமரி மாவட்டங்களில் பிற மதத்தினரைப் போலவே சேலை, தாவணி, துப்பட்டா போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு தான் காட்சியளிப்பார்கள். மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் ஒரு விதமான கோஷா! தஞ்சையில் ஒரு விதமான கோஷா என்றாலும் அதில் கவர்ச்சிகரமான கோஷா! மார்க்கம் கூறியபடி தங்கள் உடல் அழகை மறைக்காத நிலை தான் பெரும்பாலான முஸ்லிம் பெண்களிடம் இருந்தது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஏகத்துவப் பிரச்சாரம் வீரியமடைந்த பிறகு, பெண்கள் தங்கள் முகம், முன் கைகளைத் தவிர ஏனைய பகுதிகளை மறைக்கும் புர்கா அணியத் துவங்கினர். தவ்ஹீது ஜமாஅத் பெண்கள் மட்டுமல்லாது தற்போது பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் புர்கா அணிகின்றனர். இது உண்மையில் ஒரு புரட்சியாகும். புரட்சி என்றால் ஏற்கனவே இருக்கும் ஒரு நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் மாற்றத்தையே குறிக்கும். அப்படித் தான் தவ்ஹீத் ஜமாஅத் இந்தச் சமுதாயத்தைப் புரட்டிப் போட்டது.

இது வஹாபிஸ வியாபாரிகளுக்குக் கிடைத்த வெற்றிதான் மறுப்பதற்கில்லை. 

லெபனான், சிரியா போன்ற நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த முஸ்லீம்களில் சிலர், ஆஸ்திரேலிய பெண்களிடம் குழுவன்புணர்வில் ஈடுபட்டதாக ஆதரபூர்வமாக குற்றம்சாட்டப்பட்டனர். தாஜ்-அல்-தீன் ஹமீத் ஹிலாலி என்ற ஆஸ்திரேலிய இஸ்லாமிய தலைமை இமாம், அதற்குப் பதிலளிக்கும் விதமாக அக்டோபர் 2006-ல் ரமளான் சொற்பொழிவில் பின்வருமாறு கூறினார்.

”மூடிவைக்கப்படாத இறைச்சியை எடுத்து தெருவில், அல்லது பூங்காவில், அல்லது ஒரு பாதுகாப்பற்ற தோட்டத்தில் வைத்தால், பூனைகள் வரும் அதை சாப்பிடும்... இது யாருடைய தவறு? பூனைகளுடையதா அல்லது மூடிவைக்கப்படாத இறைச்சியுடையதா? மூடிவைக்கப்படாத இறைச்சியே பிரச்சனையாக இருக்கிறது. அவள், அவளது வீட்டின் அறையில், அவளது  ஹிஜாப்வுடன் இருந்தால், எந்தப் பிரச்சனையும் ஏற்படாது." என்றார்.

இக் கருத்து மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தாஜ்தீன் ஹிலாலியின் கருத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் வாதங்களும் பிரதிவாதங்களும் நிகழ்ந்தன. இது தாஜ்தீன் ஹிலாலியின் தனிப்பட்ட கருத்து அல்ல! இது ஒட்டுமொத்த இஸ்லாமிய மதவாதிகளின் கருத்துதையே தாஜ்தீன் ஹிலாலி பிரதிபளித்துள்ளார்.

ஐந்தறிவு உயிரினங்களுக்கு கொடுக்கும் மரியாதைகூட இஸ்லாமியர்கள் தங்களின் பெண்களுக்கு கொடுக்க மறுக்கின்றனர். இறைச்சித் துண்டாக, சதைப்பிண்டமாக பார்க்கின்றனர். எடுத்துக்காட்டுகள் கூறும்போது கூட சடைபிண்டத்தை தாண்டி அவர்களின் சிந்தனை செல்வதில்லை. இதில் இன்னுமொரு கொடுமை என்னவென்றால் பெண்களை வைத்தே பெண்களை சதைப்பிண்டமாக கேவலப்படுத்துவதுதான்.

ஜனவரி, 2010-ம் ஆண்டு,
விஜய் டிவியில், நீயா? நானா? நிகழ்ச்சிக்காக இஸ்லாமியப் பெண்களுக்கிடையே ஹிஜாப்பற்றிய விவாதம் பதிவு செய்யப்பட்டு, ஒலிபரப்பாக இருந்த நேரத்தில் பீஜே குழுவினரின் மிரட்டலால் நிறுத்தப்பட்டது. விஜய் டிவிக்கு திறமையிருந்தால் தங்களிடம் விவாதிக்கட்டும் சவாலும் விட்டனர். பொதுத்தளத்தில், ஹிஜாப்பற்றி விவாதிப்பதை, குறிப்பாக பெண்கள் விவாதிப்பதை அவர்கள் விரும்பவில்லை. பெண்கள் உண்மையைக் கூறிவிடுவார்களோ என்ற அச்சம்தான் காரணம்.

ஹிஜாப் பற்றி விவாதிப்பதற்குமுன், அதை இஸ்லாமியப் பெண்களின் மீது சுமத்தப்பட்டதற்கு காரணங்களாகக் கூறப்படும் சில காட்சிகளைக் காண்போம்.


காட்சி-1
முஹம்மதிற்கு, ஜைத் என்றொரு வளர்ப்பு மகன் இருந்தார்.  ஏதோ காரணத்திற்காக முஹம்மது தனது வளர்ப்பு மகனைக் காண்பதற்காக அவரது இல்லத்திற்கு செல்கிறார். ஜைத் எங்கே? என்று கேட்டவாறு வீட்டிற்குள் நுழைகிறார். ஆனால் முஹம்மதால் ஜைத்தைக் காண முடியவில்லை. அங்கு படுக்கையிலிருந்த ஜைத்தின் மனைவி, ஜைனப் தனது மாமனாரின் வருகையை அறிந்து அவசரமாக எழுந்தார்.  ஜைனப், வெண்ணிறத்துடன் அழகிய உடல் அமைப்பும் கொண்டவர் மேலும் குரைஷி குலத்தின் முழுநிறைவான பெண் என்கின்றனர்.



முஹம்மது, ஜைனப்பைக் காண்பதிலிருந்து பார்வையைத் திரும்பிக்கொண்டார். காரணம், ஜைனப் அப்பொழுது மிகக் குறைவான ஆடைமட்டுமே அணிந்திருந்தார்.  ஜைனப் கூறினார், அவர் (ஜைத்) இங்கு இல்லை, அல்லாஹ்வின் தூதரே உங்ளே வாருங்கள், நீங்கள் என் தாய், தந்தையை போன்று அன்புக்குரியவர் என்றார். முஹம்மது தூதர் வீட்டினுள் செல்ல மறுக்கிறார். "அல்லாஹ்வின் தூதர் கதவருகிலேயே நிற்கிறாரே.." என்றவாறு விரைவாக படுக்கையிலிருந்து குதித்து எழுந்து தனது ஆடையை சரிசெய்ய, முஹம்மதின் மனம் கோணலானது. அவரது மனதில் ஏற்பட்ட முறையற்ற கிளர்ச்சி, மருமகளையே தனது மனைவியாக்கிக் கொள்வதில் முடிந்தது.

குர்ஆன் அல்லாஹ்வின் கட்டளை; லவ்ஹுல் மக்ஃபூல் என்ற அல்லாஹ்விடம் இருக்கும் மூலப்பிரதிகளிலிருந்து வெளியாகிறது என்றெல்லாம் இஸ்லாமியர்கள் புல்லரித்துக்கொள்வதை அறிவீர்கள். குர்ஆனில் என்னென்ன கட்டளைகள் இடம்பெற வேண்டுமென்பதை சுமார் மூன்று முறை அல்லாஹ்(!)விற்கே ஆலோசனை கூறியுள்ளார் முஹம்மதுவின் அல்லக்கைகளில் ஒருவர். அவர் கூறிய ஆலோசனைகளில் ஒன்று, பர்தாபற்றியதாம்!

புகாரி 4790
உமர்(ரலி) அறிவித்தார்
நான், 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். எனவே, தாங்கள் (தங்களின் துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!' என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான்.

நாளுக்கு நாள் முஹம்மதின் அந்தப்புரத்தில் அழகிய இளம்பெண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருந்தது.  முஹம்மதைப் பார்க்க வருகிறவர்களில் எதற்கு வருகின்றனர் என்பதை உமர் சரியாகத்தான் யூகித்திருந்தார்.

காட்சி-2
கலாச்சார விதிமுறைகளை மீறிய, முறைகெட்ட உறவாக இருந்த போதிலும், மருமகள் ஜைனப்வுடனான தனது திருமணத்தை முஹம்மது விமர்சையாகக் கொண்டாடினார். புது மனைவியுடன் தம்பத்திய வாழ்க்கைத் துவங்கியதைக் குறிக்கும் விதமாக விருந்திற்கு ஏற்பாடு செய்து, தனது உறவினர்-நண்பர்கள் அனைவருக்கும் அழைப்புக் கொடுக்கிறார். விருந்தில் உணவு தயாராவதற்கு முன்பே வந்துவிட்ட அவரது தோழர்கள் விருந்து முடிந்த பிறகும் செல்லாமல் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டும் போவதும் வருவதுமாக முஹம்மதுவின் "அவசர நிலைமை" புரியாமல் நடந்து கொள்கின்றனர்.
புது மனைவியுடன் பொழுதைக் கழிக்க நினைத்ததில் விழுந்தது மண்.  வந்தவர்கள் விருந்து முடிந்தும் செல்லாதது கோபத்தை அதிகப்படுத்தியது. முஹம்மதிற்கு கோபமும் எரிச்சலும் தலைக்கேறியது. அவரது கோபத்தை ஏக்கத்தை மற்றவர்கள் உணரவில்லை. விருந்திற்கு வந்த தோழர்களில் சிலர், முஹம்மதின் மரணத்திற்குப் பிறகு அவரது மனைவியை திருமணம் செய்வேன் என்று கூறி அவரது பொறுமையை மேலும் சோதித்தனர்.

அவர்களை கலைந்து போகச் சொல்லும் விதமாக எழுந்து நிற்கிறார். சிலர் சென்று விடுகின்றனர்; சிலர் அமர்ந்து விடுகின்றனர். பொறுமை இழந்த முஹம்மது மூன்றாம் முறையாகவும் எழுந்து நிற்க, முஹம்மதின் தோழர்களில் மேலும் சிலர் கலைந்து சென்று விடுகின்றனர்.

அதிலும் சிலர் விடாப்பிடியாக முஹம்மதின் இல்லத்திற்குள் நுழைய முற்படுகின்றனர். அவர்களைத் திரையிட்டுத் தடுக்கும் முஹம்மது, தனது அங்கிப்பையினுள் இருக்கும் அல்லாஹ்வை முடுக்கிவிடுகிறார். அல்லாஹ், முஹம்மதிற்கு சேவகம் செய்வதற்கென்றே அவதாரம் கொண்டவன்; வெட்கம், மானம், சூடு, சுரணையற்றவன், கேவலமான உத்தரவுகளை வெளியிட்டான்.

புகாரி ஹதீஸ் :  4791          
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
…அவர்கள் எழுந்துவிடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்துவிட்டனர். ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஸைனப் (ரலி) அவர்களிடம்) செல்லப் போனார்கள். அப்போதும் அவர்கள் அமர்ந்து(கொண்டு பேசிக்) கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றுவிட்டார்கள். நான் உடனே உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள் என்று தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள். நானும் அவர்களுடன் உள்ளே செல்லப் போனேன். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் எனக்கும் தமக்குமிடையே திரையைப் போட்டுவிட்டார்கள். அப்போது தான் அல்லாஹ் இறை நம்பிக்கை கொண்டவர்களே நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள் என்று தொடங்கும் இந்த (33-53 ஆவது) வசனத்தை அருளினான்.


குர்ஆன் 33:53
நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்படமாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒரு போதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.

ஒவ்வொரு குர்ஆன் வசனம் கூறப்பட்டதற்குக் ஏதாவது ஒரு நிகழ்வு காரணமாக இருக்கிறது.  முஹம்மதின் மனைவியர்கள் ஹிஜாப் கடைபிடிப்பவர்களல்ல. விருந்திற்கு வந்தவர்கள், அவரை வெறுப்பேற்றியிருக்கவில்லையெனில் ஹிஜாப்- பர்தா பற்றிய அறிவிப்புகள் வெளியாகியிருக்காது என்பது எளிமையான விளக்கம்.

அதே வேளையில் குர்ஆனின் ஒவ்வொரு வார்த்தையும் இப்பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்பே லவ்ஹுல் மக்ஃபூல் என்ற ஏட்டில் அல்லாஹ் எழுதிவைத்தவாறே வெளியாகிறது என்ற குர்ஆனின் கூற்றை நம்பினால், அல்லாஹ்வின் திட்டப்படி விருந்தினர்கள் முஹம்மதின் வீட்டிற்கு வரவழைப்பட்டு, வீட்டிற்குள் எட்டியும் பார்க்க வைத்து, முஹம்மதுவும் எரிச்சலூட்டப்பட்டார்; பின்னர், முஹம்மதை ஆதரித்தும், தோழர்களைக் கண்டித்தும் குர்ஆன் வசனங்களையும் வெளியிட்டுக் கொண்டான் என்பது தெளிவு நிரம்பிய குர்ஆனின் குழப்பமான விளக்கம்.  இதில் விளக்கத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை உங்கள் வசமே விடுகிறேன்.

நான் முதலில் கூறிய விளக்கதில் தொடர்கிறேன். குர்ஆன் 33:53-ம் வசனத்தின் இறுதிப்பகுதி முஹம்மதின் மனநிலையை மிகத் தெளிவாக உணர்த்துகிறது. அதாவது ஜைதை காணச் சென்ற பொழுது திரை விலகியதாலே மருகளான ஜைனப்பின் மீது காமம் பிறந்தது. அதே முறையில், வேறு ஒருவர் தன் மனைவியர்களையும் கவர்ந்து சென்று விடக்கூடாது என்ற முஹம்மதின் கவலையை அல்லாஹ், வஹியின் மூலம் இங்கு சரிசெய்கிறான்.

முஹம்மதின் மீது அபாண்டமாக பழிசுவத்துவதாக நீங்கள் நினைக்கலாம். அவர் பெண்கள் விஷயத்தில் மிக பலவீனமான மனநிலையைக் கொண்டவர்; அவரது மனநிலை எப்படியிருந்தது என்பதை விளக்க இன்னொரு ஹதீஸைக் காண்போம்.

முஸ்லீம் ஹதீஸ் 2718
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். அப்பெண்(ணின் அழகு) அவர்களைக் கவர்ந்தது. உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து, "ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து அவள் (அழகு) அவரைக் கவர்ந்து விட்டால் உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்'' என்று கூறினார்கள்.

அந்தப் பெண்ணின் அழகு, முஹம்மதைக் கவர்ந்ததாம் உடனே அவரது உனர்வுகள் கிளர்ந்தெழுந்துவிட்டதாம்; அதைத் தனித்துக் கொள்ள தனது மனைவியை நாடி சென்றுவிட்டாராம். எத்தனை கேவலமான மனிதராக இருந்திருக்கிறார். அல்லாஹ், குர்ஆன் வசனங்களை கூறிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு புலனடக்கம் என்றால் என்னவென்பதை முஹம்மதிற்குக் கற்றுக் கொடுத்திருக்கலாம். அவரால் தனது செயலில் இருக்கும் தவறைக் கூட உணர்ந்து கொள்ள முடியாமல், தன் மனதிலிருக்கும் அழுக்கான சிந்தனைகளை அடுத்தவர்கள் மீதும், ஷைத்தானின் மீதும் சுமத்தி தன்னை சரிகாண்கிறார். ஒருவேளை இதுதான் மனிதகுலம் பின்பற்றத்தக்க தலைசிறந்த உதாரணமோ?

வேறொரு பெண்ணைக் கண்டதாலே காமுற்று அதைத் தணிக்க தன்னிடம் ஓடிவந்திருக்கிறான் என்பதை அறியும் மனைவியின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்! அழகியதொரு பெண்ணைக் கண்டு காமுற்று அடக்க முடியாமல் தனது மனைவியிடம் சென்று தனித்துக் கொண்ட முஹம்மது செய்த இதே செயலை, எதிர்மறையாக அவரது மனைவி ஜைனப் செய்திருந்தால் இவரது செயல்பாடு எப்படி இருந்திருக்கும்? இஸ்லாம் மட்டுமே பெண்ணுரிமை வழங்கியதாக, பெண்களைப் கண்ணியப்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூச்சலிடுபவர்கள் பதில் கூறலாம்!

இது போன்ற சூழ்நிலைகளில் துணைகளை இழந்தவர்களும், துணைகள் இல்லாதவர்களும் யாரிடம் செல்ல வேண்டுமென்பதையும் தெளிவுபடுத்திருக்கலாம்! பாவம், இஸ்லாமிய ஆண்களில் துணையில்லாதவர்களும், திருமணமாகதவர்களும் குழம்பிபோய் திரிகிறார்களாம்.


காட்சி-3
பொதுவாக கடந்த நூற்றாண்டுவரை கழிப்பறை என்பது திறந்தவெளியாகத்தான் இருந்துள்ளது. 1400 ஆண்டுகளுக்குமுன் நாகரீகம் வளராத அரேபியாவில் இல்லங்களுடன் இணைந்த கழிப்பறைகள் என்பது கற்பனைகெட்டாத விஷயமாகத்தான் இருந்திருக்க முடியும். முஹம்மதுவின் மனைவியர்கள் தங்களின் இயற்கை தேவைகளுக்காக இரவு வேளைகளில் திறந்தவெளிகளுக்கு சொல்பவர்களாக இருந்தனர். இன்றும் நாம் இத்தகைய காட்சிகளைக் காணமுடியும். பெரும்பாண்மையானவர்கள், அத்தகைய காட்சிகளிலிருந்து தமது பார்வையைத் தவிர்த்து, தங்களது மற்ற அலுவல்களுக்குச் சென்றுவிடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் அவ்வாறில்லாமல் கேவலமான செயல்களில் லயித்து விடுகின்றனர். கடந்த ஆண்டு ஒரு நபர் இத்தகைய காட்சிகளை புகைப்படம் எடுத்ததாக கோவையின் தெற்குப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இரண்டாவது கலீபாவாக பதவியேற்ற உமரும் அத்தகைய நபர் என்றே தோன்றுகிறது.

புகாரி ஹதீஸ்- 4795
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள். என்று சொன்னார்கள். சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பி விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது சவ்தா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, அல்லாஹ்வின் தூதரே நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம சொன்னார்கள், என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேதவெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களது கரத்தில் அப்படியே இருந்தது. அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்கள்.
(புகாரி 146).

முஹம்மதின் மனைவியர்கள், வீட்டினுள் அடைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய பொருள் என்பது உமரின் கருத்து. நியாயமாகப் பேசுவதென்றால், ”இயற்கைத் தேவைகளுக்காக பெண்கள், இரவு வேளைகளில் ஒதுங்குமிடங்களில் உனக்கென்ன வேலை?” என்று உமரிடம் கேட்கப்பட்டிருக்க வேண்டும்.

இதுவரைக் கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் முஹம்மதின் மனைவியர்களை குறிப்பிட்டு கூறப்பட்டவைகளே என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்!  குறிப்பிட்டுச் சொல்வதென்றால் சற்றேறக்குறைய குர்ஆனின் 33-ம் அத்தியாயம் முழுவதுமே முஹம்மதின் குழப்பமான மனநிலையைத்தான் பிரதிபளிக்கிறது.

முஹம்மது, தனது வயதான காலத்தில் எண்ணற்ற மனைவிகளையும் வைப்பாட்டிகளாக அடிமைப்பெண்களையும் தனது அந்தப்புரத்தில் நிரம்பச் செய்திருந்தார். தானாக முன்வந்து முஹம்மதிற்கு தங்களை தாரைவார்த்துக் கொண்ட பெண்களும் உண்டு. இவர்களில் ஸவ்தாவைத் தவிர மற்றுள்ள அனைவருமே இளம்வயது அழகிகள். இவர்களை கட்டுப்பாட்டில் வைக்க முஹ்ம்மதிற்குத் தெரிந்த ஒரேவழி அல்லாஹ்தான். அவனது தலையில் ஒரு தட்டுதட்டினால் குர்ஆன் வசனங்களைக் அள்ளித் தெறித்துவிட்டுப் போகிறான்.

குர்ஆன் 33:30
நபியின் மனைவியரே! உங்களில் யாரேனும் தெளிவான வெட்கக் கேடானதைச் செய்தால் அவருக்கு இரு மடங்கு வேதனை அளிக்கப்படும். அது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே இருக்கிறது.

33:32. நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

33:33 உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!...

முஹம்மதின் மனைவியர்கள், தங்களது தேவைகளுக்காக சுதந்திரமாக வெளியில் சென்றுவருபவர்களாக இருந்துள்ளனர் என்பதற்கு குர்ஆன் 33:33 நமக்கு போதுமான ஆதாரமாக இருக்கிறது. முஹம்மதின் முதல் மனைவி கதீஜா மிகப் பெரும் வணிகத்தை நிர்வகித்து வந்தாக இஸ்லாமிய வரலாறு கூறுகிறது. நமது முஹம்மது, கதீஜாவிடம் பணியாளாக இருந்தவர்தான். முஹம்மதிற்கு முந்தைய அரேபியாவில் பெண் சுதந்திரம் இருந்துள்ளது. ஆனால்  இஸ்லாம் தோன்றும் வரை இருந்த அரபியர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் என்றும், இஸ்லாமிற்கு முந்தைய எல்லாவற்றையும் ஜஹிலியா - அறியாமையின் காலம் என்பார்கள்.

முஹம்மது தனது மனைவியர்களின் மீது எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருந்தார் என்பதை குர்ஆன் வசனங்கள் நமக்கு நன்கு விளக்குகின்றன.  அவர் பெண்களைப்பற்றிக் கூறிய ஹதீஸ்களில் ஒன்றைமட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

புகாரி ஹதீஸ் 29
'எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்றார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

முஹம்மதிற்கு எப்பொழுதுமே பெண்களின் மீது நல்ல கருத்து இருந்ததில்லை, அவரது இத்தகைய எண்ணங்கள், பெண்களின் மீது அர்த்தமற்ற கட்டுபாடுகளை விதிக்கத் தூண்டியது.

நாம் ஹிஜாப்பைத் தொடர்வோம்....

தொடரும்...




தஜ்ஜால்

Facebook Comments

8 கருத்துரைகள்:

Anonymous said...

"புகாரி ஹதீஸ் 29
'எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர்"

மறுமை நாள் வந்த பின்புதானே யாருக்கு நரகம் யாருக்கு சொர்கம் என்று தீர்மானிக்கப்படும். அதற்குள்ளாக எப்படி ? இஸ்லாம் ஒரு தெளிவான, எளிமையான இடியாப்ப சிக்கல்.

Ant said...

//தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வாழும் பெண்கள் குறிப்பாக நெல்லை, குமரி மாவட்டங்களில் பிற மதத்தினரைப் போலவே சேலை, தாவணி, துப்பட்டா போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு தான் காட்சியளிப்பார்கள்.. முகம், முன் கைகளைத் தவிர ஏனைய பகுதிகளை மறைக்கும் புர்கா அணியத் துவங்கினர்..// விபச்சார வழங்கில் சிக்குபர்கள கூடத்தான் புர்கா அணிகிறார்கள். ஜாகிலியா காலம் துவங்குகிறது! நம்மூர் சாமியாடிகள் அருவாக்கு சொல்வதற்கும் குரான் வசனங்களுக்கும் வித்தியாசமே இல்லை!!

Anonymous said...

Pengalin urimai ethuvenbathai ella kalangalilum aankalae mudivu seikinranar. Islathil ithu rombavey over. Adhanalthan adamirkku pin avva endru kathai punaindullargal. Palootum avasiyam illatha podhum aankalukku yen nipple irukirathu. Ithai patri quranil yedhaavadhu unda. Vilakkam ethir parkkiren. Quranukku veliyil irundhum kooda.

ibn lahab said...

Quran is a weapon for muhammed created by him to get control and power in Arabia.
Allah is muhammeds superego.
Allah always serves the needs and purposes of MUHAMMED. Funny religion called peace. :)

ibn lahab said...

Destroy all religion before that destroy the whole humankind.

Anand Sagar said...

@ Ibn Lahab

//Destroy all religion before that destroy the whole humankind.//

We should destroy only Islam. Other religions are not as dangerous to humanity as Islam. They will die out naturally when humankind evolves spiritually further and enlightenment is attained. Religions will die out and spirituality will grow up in the future.


சிவக்குமார் said...

நிறைய விளக்கங்கள். புரிந்து கொண்டேன். தொடருங்கள்

நாட்டுவேங்கை said...

ஆனந்த்சாகர் எல்லாமதங்களும் ஆபத்தானவைகளே, கிறித்துவத்திற்கு ஒரு சிலுவைப்போர், இந்துமதத்திற்கு ஒரு மனுதருமம் மற்றும் குஜராத் இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இசுலாம் தவிர பிறமதங்கள் நல்லவைகள் என்று கூறுபவருகளும் ஆபத்தானவர்களே. எச்சரிக்கை!!!