Thursday 15 August 2013

குர்ஆன் கூறும் அறிவியல் . . . . .?


1.பழம் தின்னும் தேனீக்கள் . . . . . ?



            அல்குர்ஆனில் அறிவியல் சான்றுகள் ஏராளமாய் உள்ளன என்று தற்கால இஸ்லாமிய அறிஞர்கள் புட்டு புட்டு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் அவர்களின் குர்ஆன் கூறும் அறிவியல் கட்டுரைகளைப் படித்தால், தாம் எடுத்துக்கொண்ட முன்முடிவுகளுக்கு எப்படியாவது போய்விடவேண்டும் என்ற ஆவல் மட்டுமே தெரிகிறதே ஒழிய உண்மையான அறிவியல் நோக்கமோ, நடுநிலைச் சிந்தனையோ அதில் வெளிப்படுவதே இல்லை. சொற்களை வலிந்து பொருள்கொண்டும், அடைப்புக்குறிக்குள் முன்னொட்டு - பினொட்டுச் சேர்த்தும்  தமது முன்முடிவுகளுக்கு அவர்கள் செல்லும் போது, வெறும் சாலையோர சர்க்கஸ்காரர்களைப் போன்று தம்மை வேடிக்கைப் பொருளாக்கிக் கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக, மாரிஸ்புகைலின் விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும், டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களின் குர்ஆனும் நவீன விஞ்ஞானமும், டாக்டர் ஹாருன் யஹ்யா அவர்களின் அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள், திருச்சி குலாம் ரசூல் அவர்களின் குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம், ஏ.கே. அப்துல் ரஹ்மானின் திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள், அ.முகம்மது கான் பாகவி அவர்களின் அருள்மறை குர்ஆனும் அறிவியல் கண்டுபிடிப்புகளும், ரஹ்மத் ராஜகுமாரன் அவர்களின் அல்குர்ஆனில் அறிவியல் அத்தாட்சிகள் என்று பல பல படைப்புகளும் தமிழில் வந்து நம்மைத் திக்குமுக்காடச் செய்துகொண்டிருக்கின்றன. ஆனால் இவர்கள் அனைவருமே குர்ஆனில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ள, அறிவியலுக்குமுரண்பட்ட பல செய்திகளை மூடிமறைத்துவிட்டு அல்லது அவைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, பெரிதும் வீரவசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கு விவாதிக்கலாம். முதலாவதாக தேனீக்களின் உணவு எதுவென குர்ஆன் கூறுவதைப் பார்ப்போம்.
           
குர்ஆனில் 16வது அத்தியாயம் தேனீ (அந் நஹல்) ஆகும். இது இறுதி மூன்று வசனங்களை(ஆயாத்தை)த் தவிர்த்து மற்ற 125 வசனங்களும் (ஆயாத்களும்) மக்காவில் அருளப்பட்டதாக (மக்கீ என்று) குறிக்கப்படுகிறது. அந்த இறுதி மூன்று வசனங்கள் மதினாவில் அருளப்பட்டவை (மதனீ) என்றும் கூறப்படுகிறது. அருளப்பட்ட வரிசையில் (தர்தீபே நுஜுலி) இது 70 ஆக உள்ளது.

இந்தத் தேனீ அத்தியாயத்தில் 69வது வசனத்திற்கு விளக்கமாக, தேன் உண்டாவது எப்படி என்பது பற்றிய விளக்கத்தை அண்ணன் பீ.ஜை. அவர்கள். டாக்டர். ழிலன் மற்றும் சிற்பி.இராஜன் குழுவினருக்கு பெரியாரிஸ்ட்களுக்கு - விலாவாரியாக வகுப்பு எடுத்ததை, நாம் குறுந்தகடுகளில் கண்டு சிரிக்க முடிந்தது. ஆனால் அதே வசனத்தில்தான் தேனீக்கள் கனிகளை உண்ணுகின்றன என்பதும் இருக்கிறது. கனிகளை உண்ணும் தேனீக்கள் பற்றிய அறிவியல் விளக்கத்தை அண்ணன் பீ.ஜை. மறைத்துவிட்டார், அல்லது வசதியாக மறந்துவிட்டார். அங்கு அண்ணன் பீ.ஜை. அது பற்றி மூச்சுவிடவில்லை.(அவர் மட்டுமல்ல, குர்ஆனில் அறிவியலைத் தேடும் முன் சொன்ன மாரிஸ்புகைல், டாக்டர் ஜாகீர் நாயக், டாக்டர் ஹாருன்யஹ்யா, திருச்சி குலாம்ரசூல், ஏ.கே.அப்துல் ரஹ்மான், அ.முகம்மது கான் பாகவி, ரஹ்மத் ராஜகுமாரன் முதலியவர்கள் கூட பழம் தின்னும் தேனீக்கள் பற்றி மூச்சு விடுவதில்லை.)

ஆனால் ஜெர்ரி அண்ணாச்சியுடன் நடைபெற்ற விவாதத்தில் மாட்டிக்கொண்ட பீ.ஜை. அவர்கள், ஒரு தேனீ, பழத்தின் மீது அமர்ந்திருப்பது போல, ஒரு படத்தை விட்டலாச்சாரியா வேலை (கிராஃபிக்ஸ்) செய்துகாட்டி ஏமாற்றினார். இப்படத்தை கனிகள் உண்ணும் தேனீக்களுக்கு ஒரு நிரூபணமாகவே அவர் பெருமிதத்தோடு எடுத்துக் காட்டினார்.  இதைப் போலவே, இட்லி உண்ணும் தேனீ, ஜிலேபி உண்ணும் தேனீ, முறுக்கு உண்ணும் தேனீ, கரும்பு உண்ணும் தேனீ, பாகற்காய் உண்ணும் தேனீ, வாழைப்பழம் உண்ணும் தேனீ, பலாப்பழம் உண்ணும் தேனீ, பிரியாணி உண்ணும் தேனீ, கேக் உண்ணும் தேனீ, அப்பளம் உண்ணும் தேனீ, டீ குடிக்கும் தேனீ, ஷர்பத் குடிக்கும் தேனீ, சாராயம் குடிக்கும் தேனீ, கள்ளு குடிக்கும் தேனீ எக்சட்ரா எக்சட்ராவாக விதம் விதமாக படம் போட்டுக் காட்டிவிட முடியும் என்பதை ஏனோ அவர் மறந்துவிட்டார்.

அடுத்து, தேன்! வியந்தேன்! என்ற நூலில் அதன் ஆசிரியர் நமக்கெல்லாம் அல்வா கொடுக்கும் வேலையை மிக அருமையாகச் செய்திருக்கிறார். அதாவது, இனிப்புள்ள பொருள்கள் அனைத்தையும் தேனீக்கள் உண்ணும் என்றும், எல்லாவிதமான இனிப்புப் பொருட்கள் என்று குறிப்பதற்காகவே எல்லாவிதமான கனிகளிலிருந்தும் என்று குர்ஆன் கூறியுள்ளது என்று அந்நூலில் அவர் விளக்கம் அளிக்கிறார். பழங்கள் என்பதற்கும், இனிப்புப் பொருட்கள் என்பதற்கும் வித்தியாசம் தெரியாதவராகவா அல்லாஹ் இருக்கிறார்?  இந்த விளக்கம் சரி என்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொள்வோம். நிலக்கரியிலிருந்து தயாரிக்கப்படும் சாக்கரீன், கிளிசரின், மற்றும் சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் சுகர்ப்ரீ, சித்த மருந்துச் சரக்கு அதிமதுரம் ஆகிய இனிக்கும் பொருட்களையும் தேனீக்கள் உண்ணுமா என்பதே நமது கேள்வி. அதற்கான விளக்கத்தை, தேன்! வியந்தேன்! நூலின் ஆசிரியர்தான்  நமக்கு அளிக்க வேண்டும்.

இங்கு குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் அந்த வசனத்தை (16:69) எப்படி தமிழாக்கம் செய்துள்ளனர் என்பதைக் காணலாம்.

1.திருக்குர்ஆன்-தமிழாக்கம் (பி.ஜைனுல்ஆபிதீன்) 2002, 2003, 2005, 2008,   
   2013ஆம் ஆண்டு பதிப்புகள்.   
................பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உமதிறைவனின்............

2. அன்வாறுல் குர்ஆன்(இ.எம். அப்துர் ரஹ்மான்)-பாகம்10,1982ஆம் ஆண்டு பதிப்பு
பின்னர் கனிகள் அனைத்திலிருந்தும் புசித்து அப்பால் எளிதாக்கப்பட்ட ...................
           
3. தப்ஸீருல் ஹமீத் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜீத்
   (எஸ்.எஸ்.அப்துல் காதிர் பாக்கவி) பாகம் 7 2010 ஆம் ஆண்டு பதிப்பு
பின்னர் எல்லாக் கனிகளிலிருந்தும் புசிப்பாயாக.........................

            4. தர்ஜுமத்துல் குர்ஆன் பிதன்வீரில் பயான் (பி.அப்துல் கரீம் ஹளரத்)
               பாகம் 3 ஜனவரி 2009ஆம் ஆண்டு பதிப்பு
பிறகு, ஒவ்வொரு கனிகளிலிருந்தும் உணவருந்தி...........................

            5. குர்ஆன் பேசுகிறது (கே. முஹம்மது முஸ்தபா அஸ்-ஸிராஜி)
                ஜூன் 2010ஆம் ஆண்டு பதிப்பு
பிறகு, கனிகள் யாவிலும் உண்டு, உன் இரட்சகரின்......................

            6. திருக்குர்ஆன் அரபி மூலத்துடன் தமிழாக்கம்
   (இஸ்லாம் இன்டர்நேஷனல் பப்ளிகேஷன்ஸ் லிட், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்)
              1989ஆம் ஆண்டு பதிப்பு (16:அந் நஹ்ல்:70)
பின்னர் எல்லாவகையான பழங்களிலிருந்தும் தின்று.......................

7. திருக்குர்ஆன் தமிழாக்கம் (டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான்)
   ஹெல்த் டைம் பப்ளிகேஷன்ஸ், மே 2007 ஆம் ஆண்டு பதிப்பு
பின், எல்லாவிதமான கனிகளிலிருந்தும் உணவருந்தி....................

8. குர்ஆன் இறுதி வேதம் (ரஷாத் காலீஃபாவின் ஆங்கில மூலத்தின் தமிழாக்கம்)
    ஏப்ரல் 2009ஆம் ஆண்டு பதிப்பு                          
பின்னர்,மிகத் துல்லியமாக, உன் இரட்சகரின் திட்டத்தைப் பின்பற்றி அனைத்து கனிகளிலிருந்தும் உண்டுகொள்....................

9. குர்ஆன் இறுதி ஏற்பாடு (ரஷாத் காலீஃபாவின் ஆங்கில மூலத்தின் தமிழாக்கம்)   
    ஏப்ரல் 2008ஆம் ஆண்டு பதிப்பு
பின்னர்,மிகத் துல்லியமாக, உன் இரட்சகரின் திட்டத்தைப் பின்பற்றி அனைத்து கனிகளிலிருந்தும் உண்டுகொள்....................

            10. திருக்குர்ஆன்,(சையித் அபுல் அஃலா மௌதூதியின் உர்து மூலத்தின் தமிழாக்கம்)
     இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், (அக்டோபர் 1989, ஆகஸ்ட் 2005, செப்டம்பர்     
     2008, ஜனவரி 2009ஆம் ஆண்டு பதிப்புகள்.
மேலும் பலதரப்பட்ட பழகளிலிருந்து சாற்றை உறிஞ்சிக்கொள்........................

இங்கு எடுத்துக்காட்டிய பத்து (வரிசை எண்:1முதல் 10வரை) தமிழாக்கங்களில் பழங்களிலிருந்து, அல்லது பழங்களை, அல்லது பழச்சாற்றை தேனீக்களின் உணவாக-தேனீக்கள் உண்பதாக- எந்தவொரு திரித்தலும் இல்லாமல் தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளதை கவனத்தில் கொள்வோம். குர்ஆன் அரபு மூலத்திற்கு ஓரளவு பொருந்திய தமிழாக்கம் இது எனலாம்.

ஆனால் இயற்கை அறிவியலுக்கு இது முரணானது என்பது அனைவரும் அறிந்ததே! நடைமுறைக்கு பொருந்துவதாக இல்லாத இந்த வசனத்தை எப்படி உண்மை என்று நிரூபணம் செய்வது என்று சிந்தித்த குர்ஆனிய அறிஞர்கள் இருக்கவே இருக்கிறது அடைப்புக்குறி (பிராக்கெட்) என்று பூந்துவிளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.

மலர்களிலுள்ள நெக்டார் எனப்படும் பூந்தேனை உறிஞ்சி தனது வயிற்றில் சுரக்கும் சில சுரப்புகளைக் கலந்து தேனாக மாற்றி, தேனீக்கள் தனது கூடுகளில் (தேனடைகளில்) சேகரித்து வைக்கின்றன. தேனின் முக்கிய மூலப்பொருள் நெக்டார் எனப்படும் பூந்தேனே யாகும். இதுவே இயற்கை அறிவியல். மக்கள் அனைவருக்கும் பொதுவாகத் தெரிந்த இந்த அறிவியல் உண்மை குர்ஆனை அருளிய அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போய்விட்டதுதான் உச்சகட்ட காமெடி!

இனி, கீழ்வரும் தமிழாக்கங்களைப் பாருங்கள்.

11. தர்ஜுமதுல் குர்ஆன் -பி- அல்தபில் பயான் (அ.கா.அப்துல் ஹமீது பாகவி)
      1961 ஆம் ஆண்டு பதிப்பு
அன்றி நீ எல்லாவிதமான கனி(களின் மலர்)களிலிருந்தும் அருந்தி உமதிறைவனின்............
           
            12. குர்ஆன் மஜீத் (பா.தாவூத் ஷா ஸாஹிப், என்.பி.அப்துல் ஜப்பார் ஸாஹிப்)
                 1966 ஆம் ஆண்டு பதிப்பு.
பிறகு சகலவகைக் கனிகளி(ன் பூக்களி)லிருந்தும் அருந்தி................

13. சங்கைமிக்க குர்ஆன் மற்றும் தமிழ்மொழியில் அதன் கருத்துக்களின் மொழி   
   பெயர்ப்பு (முஹம்மது இக்பால் மதனீ சௌதி அரேபியப் பதிப்பு)
பின்னர், நீ எல்லா விதமான கனி(யின் மலர்)களிலிருந்தும் உணவருந்தி...............

14. தஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் (வேலூர், ஜாமியா அல்பாகியாத்துஸ்   
      ஸாலிஹாத் - அரபிக்கல்லூரி) பாகம் 8, ஜூலை 2010ஆம் ஆண்டுபதிப்பு.
அதன் பிறகு, எல்லா வகையான கனிகளி(ன் பூக்களி)லிருந்தும் நீ அருந்தி.................

15. குர்ஆன் மஜீத் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு, 1/1983 ஆண்டு பதிப்பு
பின் நீ எல்லாவிதமான கனிக(ளின் மலர்க)ளிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன்..........

            மேலே எடுத்துக்காட்டிய வரிசை எண் 11 முதல் 15 வரையில் உள்ள மொழிபெயர்ப்பு செய்த அறிஞர்கள், அடைப்புக் குறி (பிராக்கெட்) போட்டு அதனுள், மலர்கள் என்றும், பூக்கள் என்றும் இட்டு நிரப்பி ஓரளவு அல்லாஹ்வை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயினும் பிராக்கெட் குறியை எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது என்பது புரியாமல் குழம்பிப்போன வேறு சில அறிஞர்கள் தொடங்கிய அடைப்புக்குறியை முடிக்காமலும், அல்லது எங்கோ தொடங்கி எங்கோ முடித்தும் தங்களின் மேதாவிலாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டார்கள். இதனை வரிசை எண் 16, 17 களில் காணலாம்.

16. குர்ஆன் மஜீத் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு, 1990,1993ஆம் ஆண்டு
      பதிப்புகள்
பின் நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன்..........
            (அடைப்புக்குறி முடிவு பெறவில்லை)

17. குர்ஆன் மஜீத் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு, 2010ஆம் ஆண்டு பதிப்பு
பின் நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் காட்டித்தரும்) எளிதான வழிகளில்..........................
(நீண்டுவிட்ட அடைப்புக்குறியும் தொடர்பற்ற வாக்கிய அமைப்பும் கொண்டுள்ளது)

இதில் வேடிக்கை என்னவென்றால், முதல் பதிப்பில் (வரிசை எண் 15 -1983) அல்லாஹ்வைக காப்பாற்ற, சரியாக பிராக்கெட் போட்ட ஹாஜி ஜான் டிரஸ்ட் குர்ஆன் பதிப்புக் குழுவினரே பின்னர் வெளியிட்ட பதிப்புகளில் (வரிசை எண் 16, 17 1990, 1993, 2010) இவ்வாறு குழம்பிப்போனதை நாம் காணமுடிகிறது. இப்படி குழம்பிப்போனவர்கள் தானா, குர்ஆனை உள்ளது உள்ளபடி நமக்கு விளங்கவைக்கப் போகிறார்கள்?

18. தர்ஜமா அல்குர்ஆனில் கரீம் (ஏ. முஹம்மது சிராஜுத்தீன் நூரி)
                 1/2002, 2/2002, 8/2006 ஆம் ஆண்டின் பதிப்புகள்
பின்னர் நீ, எல்லாக் கனி (மலர்) வகைகளிலிருந்தும் உணவருந்தி...............    

19. குர்ஆன் தர்ஜமா (எம்.அப்துல் வஹ்ஹாப், கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி,         
      ஆர்.கே.அப்துல் காதிர் பாகவி)
     ஜனவரி2000, மே2002, செப்டம்பர்2002, செப்டம்பர்2004, ஜூன்2007,   
                ஜூலை2011 ஆம் ஆண்டின் பதிப்புகள்
பிறகு எல்லாக் கனி (மலர்) வகைகளிலிருந்தும் நீ உணவருந்தி..................

20. திருமறையின் தேன்மலர்கள் (திருக்குர்ஆன் வெண்பா) வே.ப.பாபுல்
     2007ஆம் ஆண்டு பதிப்பு
வண்ணக் கனி மலரில் வாய்வைத்துறிஞ்சித் தேன்
உண்டு களித்திறைவன்...............

            21. திருக்குர்ஆன் மூலம் தமிழுரை (எம்.எம்.அப்துல் காதிர் உமரி) டிசம்பர்2011
பின்னர், ஒவ்வொரு கனிகளிலிருந்தும் (மலர்களிலிருந்தும்) உணவருந்தி.................  

அடுத்து வரும் மொழிபெயர்ப்புகள் இன்னும் வித்தியாசமாக அமைந்துள்ளதைக் காண்கிறோம். வரிசை எண் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று பதிப்புகளிலும் ........எல்லாக்கனி (மலர்) வகைகளிலிருந்து...........என்றும், கனிமலரில் என்றும் கூறப் பட்டுள்ளது. கனி (மலர்) என்ற சொற்றொடருக்கு, கனியைத் தரும் மலர் அல்லது கனியின் மலர் என்றும், கனி மற்றும் மலர் என்றும் இரண்டு விதமாகப் பொருள்கொள்ள முடியும். உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகக் கருதி, கனியின் மலர் - கனியைத் தரும் மலர் என்று பொருள் கொண்டால், இது முன்னர் குறிப்பிட்ட வரிசை எண் 11முதல் 17வரையில் உள்ள பதிப்புகளுடன் இணைந்து கொள்ளும். இது முதல் பத்து வரிசை எண்களில் கொடுக்கப்பட்ட குர்ஆன் வசனத்துக்கு கனிகளிலிருந்துதான் தேன் சேகரிக்கப்படுகிறது என்பதற்கு எதிரடியான உண்மையை, அதாவது, மலரிலிருந்துதான் தேன் சேகரிக்கப்படுகிறது என்ற உண்மையை - பிராக்கெட் போட்டதன் மூலம், குர்ஆனிய அறிஞர்கள் ஒத்துக் கொண்டவர்கள் ஆகிறார்கள். அதே சமயத்தில், கனியைத் தரும் மலர் -  கனியின் மலர் - என்று கூறுவதன் மூலம், மல்லிகை, முல்லை, ரோஜா முதலிய கனி கொடுக்காத  மலர்களிலிருந்தும், தேனீக்கள் தேனை சேகரிக்கின்றன என்ற அறிவியல் உண்மையை அவர்கள் நிராகரித்தவர்கள் ஆகிறார்கள். இதனால், இயற்கை அறிவியலுக்கு எதிரானவர்களாக, இவர்கள் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு விடுகிறார்கள்.        

 இல்லை,  கனி மற்றும் மலர் என்று எண்ணிக்கை யாகக் கருதி பொருள் கொண்டால். இந்த மொழிபெயர்ப்பு வரிசை எண் 21-ஐ ஒத்ததாக ஆகிவிடும். அதாவது, கனிகளிலிருந்தும் மலர்களிலிருந்தும் (இரண்டு வெவ்வேறு மூலத்திலிருந்து) தேன் சேகரிக்கப்படுவதாக கூறி இயற்கை அறிவியலிலிருந்து (மலரிலிருந்துதான் தேன் சேகரிக்கப்படுகிறது என்ற கோட்பாட்டிலிருந்து) முரண்பட்டு விடுகிறார்கள்.

இது, இயற்கை அறிவியலுக்கும் ஜால்ரா அடிக்க வேண்டும்; அதே சமயத்தில் குர்ஆனுக்கும் எதிரியாகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு மிகுந்து சர்க்கஸ் காட்டுவதாக அமைகிறது. பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டும் விலாங்கு மீனை ஒத்த இரட்டை நிலையாகும் இது. இதிலிருந்தே குர்ஆனின் குழப்ப நிலை தெளிவுபட்டு விடுகிறது.

            மேலும், இந்த வசனங்களில், கனிகளை (பழங்களை)  மட்டும் குர்ஆன் குறிப்பிடுவது ஏன் என்ற வினா நமது மனதில் எழாமல் இல்லை. பழங்கள் இனிப்பானவை; தேனும் இனிப்புள்ளது; ஆகவே, பழச்சாற்றிலிருந்துதான் தேனீக்கள் தேனை சேகரிப்பதாக அக்காலத்திய அரபுமக்கள் கருதியிருக்கலாம். மேலும் அரபுநாட்டில் அதிகம் விளைவதும், அம்மக்களின் முக்கிய உணவுப்பொருட்களில் ஒன்றாக அமைந்துள்ளதுமான பேரீச்சம்பழத்தின் நிறமும் தேனின் நிறமும் பெரும்பாலும் ஒத்திருப்பதாலும், பழங்களிலிருந்தே தேனீக்கள் தேனை சேகரிக்கின்றன என்ற கருத்து அக்காலத்திய மக்களுக்கு பொருத்தமானதாகப்பட்டிருக்கலாம். அக்கருத்தையே குர்ஆனில் அல்லாஹ்வும் வஹி மூலம் நபிக்கு அறிவித்துவிட்டார். பாவம் அல்லாஹ்! பின்வரும் காலத்தில், தேன் சேகரிப்பைப் பற்றிய அறிவியல் அறிவு இந்தளவுக்கு வளரும் என்றோ, குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்களும், விரிவுரையாளர்களும் நம்மிடம் மாட்டிக்கொண்டு முழிபிதுங்கத் திண்டாடுவார்கள் என்றோ, அவர் - அல்லாஹ் - முன்கூட்டியே அறிந்திருக்க வில்லை என்பதையே இது காட்டுகிறது.

            இன்னும் சில அறிவாளிகள் (?) இவர்களுக்கு துளியும் அறிவு நாணயம் இல்லை என்பது, இவர்தம் தமிழாக்கங்களிலிருந்தே நாம் அறிந்துகொள்ளலாம். இவர்கள் இந்த 16:69 வசனத்திற்கு நேரடியாகவே பூக்கள், புஷ்பங்கள் எனறெல்லாம் மொழிபெயர்த்து தங்களின் அரபு மொழியறிவை வெளிச்சம்போட்டுக்காட்டிக்கொள்கிறார்கள். வரிசை எண்:22 மற்றும் 23 ஆகியவற்றைப் பாருங்கள். அரபு மூலத்தில் இல்லாத சொற்களை இட்டுநிரப்புவது என்பது, அல்லாஹ்வுக்கே அரபு மொழி கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதுதானே உண்மை!

22. தர்ஜுமதுல் குர்ஆன் பி அல்தபில் பயான் (அ.கா.அப்துல் ஹமீது பாகவி)
                  செப்டம்பர் 2004, ஆகஸ்ட் 2007 ஆம் ஆண்டு பதிப்புகள்
அன்றி நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து உமதிறைவன் உனக்கு அறிவித்த............

23. திருக்குர்ஆன் தமிழுரை முதல் பாகம் (வி.எம்.ஏ. பாட்சாஜான்) 1955ஆம்
                 ஆண்டு பதிப்பு
பின்னர் நீ சகல பூக்களிலிருந்தும் புசித்து.....................

            இதில் இன்னுமொரு வேடிக்கையும் உண்டு. முதன்முதலாக குர்ஆன் முழுவதற்குமான தமிழாக்கத்தை வெளியிட்டவர் திருவாளர்.அ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களாவார். 1926இல் தொடங்கப்பட்ட இம்மொழிபெயர்ப்பு பணி 1949இல் முழுமைபெற்று தர்ஜுமதுல் குர்ஆன் -பி- அல்தபில் பயான் என்ற பெயரில் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டது. பின்னர் ஒன்றிரண்டு மறுபதிப்புகளும் வெளிவந்தன. 1955இல் திருவாளர்.அ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்கள் மறைவெய்தினார்கள். அதற்கு பின்னர் அவரின் வாரிசுகளால் வெளியிடப்பட்ட பதிப்புகள் சிறிதுசிறிதாக திருத்தப்பட்டு திருவாளர்.அ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்கள் பெயரிலேயே வெளிவருகின்றன. இவ்வாறு திருத்தியவர்கள், அத்திருத்தங்களுக்கான காரணங்கள் பற்றிய அடிக்குறிப்புகளைக்கூட வெளியிடுவதில்லை. இதனால் அ.கா.அ. பாகவியின் மறைவுக்குப் பின்னர் வெளிவந்த பதிப்புகளில் உள்ள திருத்தங்கள் யாவும் அவரே செய்தது போன்ற ஒரு மாயையை படிப்பவர்களின் உள்ளத்தில் ஏற்படுத்திவிடுகிறது என்பதே உண்மை. இது ஒரு அறிவு மோசடியல்லாமல் வேறென்ன?

            1962இல் லால்பேட்டை மார்க்கத் தீர்ப்பு மையத்திலிருந்து மௌலானா அமானி ஹளரத் அவர்கள், திருக்குர்ஆன் மூலமில்லா மொழிபெயர்ப்பு கூடுமா? என்ற மார்க்கத் தீர்ப்பில், அ.கா.அ. பாகவியின் முன்பதிப்பிலுள்ள பல வரிகள், பின்னர் வெளிவந்த பதிப்புகளில் திருத்தப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டி கண்டித்துள்ளார் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். கீழே எடுத்துக்காட்டியுள்ள வசனம் அ.கா.அ. பாகவியின் இரு வெவ்வேறு பதிப்புகளில் உள்ளதாகும்.

1961 ஆம் ஆண்டு பதிப்பில் (வரிசை எண்:11),
அன்றி நீ எல்லாவிதமான கனி(களின் மலர்)களிலிருந்தும் அருந்தி உமதிறைவனின்............
என்று உள்ள சொற்றொடரை,

2004 மற்றும் 2007ஆம் ஆண்டு பதிப்புகளில் (வரிசை எண்:22)
அன்றி நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து உமதிறைவன் உனக்கு அறிவித்த............
என்று உள்ள சொற்றொடருடன் ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களுக்கே இந்த தில்லுமுல்லு தெளிவாக விளங்கிவிடும்.

            தொடக்கத்தில் எடுத்துக்காட்டியுள்ள மொழிபெயர்ப்புகளில் ஒரேயொருவர் மட்டும் இன்னும் ஒருபடி மேலே சென்றார். அவர் கம்பம், பி.எம்.பீர்முஹம்மது பாகவி அவர்கள். இவர் இவ்வசனத்தை, பழங்களிலுள்ள பூச்சிகளிலிருந்தே தேனீக்கள் தேனை உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றன என்ற கருத்தமைய தமிழாக்கம் செய்துள்ளதையும் உங்கள் முன் சமர்பிக்கிறோம்.    

24. திருக்குர்ஆன் தெளிவுரை, பாகம் 1 (கம்பம், பி.எம்.பீர்முஹம்மது பாகவி)
     1/ஜூலை 2010.
பின்னர் அனைத்து வகையான பழங்களின் (பல்வகையான பூச்சிகளி)லிருந்து உனக்குரிய உணவை உறிஞ்சி எடுத்து உண்டு (தேக்கி வைத்துக்)கொள்.......................

இம்மொழியாக்கத்தில், தேனை சேகரிப்பது, இயற்கை அறிவியலான பூக்களிலிருந்து என்பதும் இல்லை; குர்ஆன் அறிவியலான கனிகளிலிருந்து என்பதும் இல்லை; இரண்டுமற்ற ஒரு புதிய தகவல், கனிகளிலுள்ள பூச்சிகளிலிருந்து எனற தகவல் இங்கு தரப்படுகிறது. இதுதான் குர்ஆனின் அறிவியல்? குர்ஆனிய அறிஞர்களின் பொது அறிவு?

            இவ்வாறெல்லாம் இவர்கள் குழப்ப அல்லது குழம்பக் காரணம் என்ன? தேன் பெரும்பாலும் மலர்களிலிருந்தே சேகரிக்கப்படுகிறது என்பது, இவர்கள் அனைவருக்குமே தெரியும். இதனை இங்கு நிரூபிக்க ஒரேயொரு எடுத்துக்காட்டை மட்டும் பார்த்தாலே போதும்.

மவ்லானா. கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி (1941-2012) அவர்கள் ஷைகுத் தப்ஸீர் என்று பாராட்டப்பட்டவர். தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று தமது இறுதிகாலம் வரையில் பணியாற்றியவர். திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். (மற்ற மொழிபெயர்ப்பாளர்கள்: எம்.அப்துல் வஹ்ஹாப், ஆர்.கே.அப்துல் காதிர் பாகவி; பார்க்க:வரிசை எண் 19, குர்ஆன் தர்ஜமா) முன்னர் பல பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட இவர்களின் இந்த மொழிபெயர்ப்பு, பின்னர் கோயம்புத்தூர் திருக்குர்ஆன் அறக்கட்டளை வெளியீடாக 12 பதிப்புகளுக்கும்மேல் வெளியிடப்பட்டு, விரும்பும் மக்களுக்கு இலவசமாவே அனுப்பப்பட்டு வருகிறது. மவ்லானா. கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி அவர்கள் தமது வாழ்நாளில் செய்த மார்க்கச் சொறபொழிவின் காலஅளவு ஏறத்தாழ10,000 மணிநேரம் என்று திரு.பி.எம்.கலிலுர் ரஹ்மான் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட சிறந்த மார்க்க அறிஞர், மவ்லானா. ஷைகுத் தப்ஸீர் அவர்களின் ஒரு தயாரிப்பு, புரசைவாக்கம் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றுவரும் திருக்குர்ஆன் விரிவுரை 500வது வாரவிழா பல்சுவை மலராகும். அம்மலரில் பக்கம் 35இல் வெளியிடப்பட்ட தேனும் தேனீயும்  என்ற கட்டுரையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். அக்கட்டுரையிலிருந்து ஒரு பகுதி வருமாறு: (பக்கம் : 38)

ஒரு தேனீ 500கிராம்(½ கிலோ) தேனைத் தயாரிப்பதற்கு சுமார் 75,000 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து செல்கிறது. ஒரு கிலோ தேன் சுமார் 50,000 மலர்களிலிருந்து சேகரிக்கப் படுகிறது. சில சமயங்களில் ஒரு தேக்கரண்டி தேனை 2,000 மலர்களிலிருந்து எடுத்துவர வேண்டிய கடின உழைப்பும் தேனீக்களுக்கு ஏற்படுகிறது.

இந்த வரிகளின் மூலம் நாம் அறிவது என்ன? குர்ஆனில் கூறப்பட்டதை ஒப்பி, பழங்களிலிருந்தே தேனீக்கள் தேனை சேகரிக்கின்றன என்று திருவாளர் கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி அவர்கள் மறந்தும் கூறிவிடவில்லையே என்ன காரணம்? குர்ஆன் விரிவுரையாளராக இருந்தும் இயற்கை அறிவியலுக்கு மாற்றமாக இவர்களால்  எந்த செய்தியும் கூறமுடியவில்லை என்பதே உண்மை. அதனால்தான் குர்ஆனின் இந்த ஆயத்தின் மொழிபெயர்ப்புகள், எப்படியெப்படியெல்லாம் உருட்டி புரட்டி செதுக்கி சேர்த்து அல்லாஹ்வைக் காப்பாற்ற இவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது.

அடுத்ததாக, பழக்கடைகளில், குறிப்பாக திராட்சைப்பழக்குலைகளில், ஒன்றிரண்டு தேனீக்கள் மொய்ப்பதை, நாம் பல சமயங்களில் பார்த்திருக்கலாம். அதேபோல கரும்புச்சாறு கடைகளிலும் சிலதேனீக்களை நாம் பார்க்கலாம். அவ்வளவு ஏன்? கள்ளிறக்கும் கலயங்களில் கூட, கள்ளுண்ண முயற்சித்த தேனீக்கள் சில, அதிலேயே வீழ்ந்து இறந்து கிடப்பதையும் நாம் பார்க்கமுடியும். இதனாலெல்லாம், திராட்சை பழச்சாறு, கரும்புச்சாறு, கள் ஆகியவையே தேனீக்களால் உறிஞ்சப்பட்டு தேனாகின்றன என்று முடிவுசெய்துவிட முடியாது. இவைகளெல்லாம் சில விதிவிலக்குகள்; அவ்வளவே!

தென்னிந்திய மக்கள் அரிசி சோறு உண்பவர்கள் என்பது பொதுவான உண்மை. சிலர் கோதுமை உண்ணலாம்; சிலர் கம்பு கேழ்வரகு முதலிய புன்செய் தானியங்களை உண்ணலாம்; எனினும் பெருவாரியான மக்களின் உணவே இங்கு பேசப்படும் உண்மையாகும். அதுபோலத்தான் தேனும் மலர்களிலிருந்து எடுக்கப்படுவது என்ற பெருவாரியான உண்மை இங்கு பேசப்படுகிறது. அதனை மாற்றி, விதிவிலக்குகளை யெல்லாம் பொதுவான உண்மைகளாக ஏற்க இயலாது. அது திருமறைகளில் இறைவன் பெயரால் சொல்லப்பட்டு இருந்தாலும் கூட!

இங்கு மற்றுமொரு கற்பனை விளக்கத்தையும் காண்போம். தன்னை இறைதூதர் என்று அறிவித்துக்கொண்ட ஒருவர், கீழ்கண்ட ஒரு வசனத்தை வேதவாக்கியமாக அறிவிப்பதாகக் கொள்வோம்.

இறைவன் மலைகளைப் படைத்தான். மலைகளிலிருந்து பாறைகளையும், பாறைகளிலிருந்து கற்களையும், கற்களிலிருந்து மண்ணையும் உண்டாக்கினான். மண் சுவையுள்ளதாகவும், மனிதன் முதற்கொண்டு உயிரினங்கள் அனைத்தும் உண்ணும் உணவாகவும் ஆயிற்று. இதில் சிந்திக்கும் மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சி உள்ளது.

இந்த வாக்கியத்தில், மண் சுவையுள்ளதாக இருக்கிறது; மனிதர்களும் மற்ற உயிர்களும் மண்ணையே உண்கிறார்கள்; என்ற பொருள் தெளிவாக விளங்குகிறது. ஆனால் இது அறிவுக்குப் பொருத்தமாக இல்லையாதலால், இதனை விளக்கவந்த அந்தக் கற்பனை மதத்தைச் சேர்ந்தவர்கள், இப்படி பிராக்கெட் போட்டு விளக்குவதாகக் கொள்வோம்.

இறைவன் மலைகளைப் படைத்தான். மலைகளிலிருந்து பாறைகளையும், பாறைகளிலிருந்து கற்களையும், கற்களிலிருந்து மண்ணையும் உண்டாக்கினான். மண் (ணிலிருந்து விளையும் தானியங்கள் மற்றும் காய்கனிகள் முதலியன) சுவையுள்ளதாகவும், மனிதன் முதற்கொண்டு உயிரினங்கள் அனைத்தும் உண்ணும் உணவாகவும் ஆயிற்று. இதில் சிந்திக்கும் மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சி உள்ளது.

            முன் சொன்ன வாக்கியத்தின், அறிவுக்குப் பொருந்தாத நேரடிப் பொருள், பிராக்கெட் போட்டதன் மூலம் மாற்றப்பட்டு, இப்பொழுது அறிவுக்குப் பொருந்தும்படியாகச் செய்யப்பட்டுவிட்டது.

            மற்றுமொரு கற்பனை எடுத்துக்காட்டையும் பார்க்கலாம்.

தன்னை இறைதூதர் என்று அறிவித்துக்கொண்ட ஒருவர், கீழ்கண்ட ஒரு வசனத்தை வேதவாக்கியமாக அறிவிப்பதாகக் கொள்வோம்.

இறைவன் பூமியைப் படைத்தான். பூமியின் மீது வாழ்வதற்காக மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் உண்டாக்கினான். அவ்வுயிரினங்களில், கடுமையான விஷம் கொண்ட பாம்புகளும் அடங்கும். அந்த விஷம் மனிதர்களுக்கு மரணத்தை உணடாக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. இதில் சிந்திக்கும் மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சி உள்ளது.

இந்த வாக்கியத்தில், விஷப்பாம்புகள் பற்றிய உண்மை கூறப்பட்டிருக்கிறது; ஆனால் இதை அறிவுக்குப் பொருத்தமாகவும்,  அதேசமயத்தில் பாம்பின் விஷம், மனிதனை மரணத்திலிருந்து காப்பாற்றும் தன்மை கொண்டவை எனவும் மாற்றிவிட முடியும். இதனை இப்படி பிராக்கெட் போட்டால் மாறிவிடுகிறது.

இறைவன் பூமியைப் படைத்தான். பூமியின் மீது வாழ்வதற்காக மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் உண்டாக்கினான். அவ்வுயிரினங்களில், கடுமையான விஷம் கொண்ட பாம்புகளும் அடங்கும். அந்த விஷம்(கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள்)    மனிதர்களுக்கு மரணத்தை உணடாக்கக் கூடிய (பல கொடிய நோய்களுக்கு உயிர்காக்கும் மருந்)தாகவும் இருக்கின்றது. இதில் சிந்திக்கும் மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சி உள்ளது.

            முன் சொன்ன வாக்கியத்தின் நேரடிப் பொருள், பிராக்கெட் போட்டதன் மூலம் மாற்றப்பட்டு, மனிதனுக்கு மரணத்தை தரும் பாம்பு விஷம் என்ற கருத்து, மரணத்திலிருந்து மனிதனைக் காப்பாற்றும் மருந்தாகி விட்டதை எதிர்மறை கருத்தாகி விட்டதைக் காண்கிறோம்.

இப்படியெல்லாம் பிராக்கெட்போட்டு விளக்குவதை ஏற்றுக்கொண்டால், அறிவுக்குப் பொருந்தாத - அறிவியலுக்குப்புறம்பான,  எந்தவொருகருத்தையும்கூட, பிராக்கெட் போட்டு அறிவுக்குப் பொருத்தமானதாக, அறிவியலோடு பொருந்தக்கூடியதாக நாம் மாற்றிவிட முடியும். இதைத்தான் குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்களும், விரிவுரையாளர்களும் தொடர்ந்து செய்துவருகிறார்கள்.

            இந்தக் கட்டுரையிலிருந்து நாம் அறிந்து கொள்ளும்உண்மைகள் வருமாறு:
1. குர்ஆனில் உள்ள இந்த வசனம் (16. அந் நஹ்ல், 69வது வசனம்) அல்லாஹ்வுக்கு 
   இயற்கை அறிவியல் பற்றிய அறிவு கொஞ்சமும் இல்லை என்பதையேக் காட்டுகிறது.

2. அதனை மறைக்க இந்த மொழிபெயர்ப்பாளர்கள் எப்படியெப்படி யெல்லாமோ
    முயற்சிக்கிறார்கள்.

3. இப்படி முயற்சிப்பதால் தங்களை அல்லாஹ்வைவிடச் சிறந்த அறிவாளியாகக்
    காட்டிக்கொள்கிறார்கள்.

4. இவ்வாறு அல்லாஹ்வுக்கு நிகராகத் தங்களை உயர்த்திக் கொள்வதன் மூலம்
    இணைவைத்தல் (ஷிர்க்) என்ற மிகப்பெரிய பாவத்தைச் செய்தவர்கள் ஆகிறார்கள்.

5. எல்லாவற்றையும்விட குர்ஆனில் அறிவியலும் இல்லை வெங்காயமும் இல்லை என்பதை
    வெட்ட வெளிச்சம் ஆக்கிவிடுகிறார்கள்.

            இதற்குப் பிறகும் இந்த 16வது சூராவில் 69வது ஆயத்தில் இப்படி தில்லுமுல்லு செய்து தங்களைக் கடவுளை மிகைத்த அறிவாளிகளாகக் காட்டிக்கொண்டு, குர்ஆன் இறைவனின் வேதம் என்று கதைப்பார்களேயானால், அவர்கள் மோசடிப் பேர்வழிகளாக இருக்க வேண்டும்; அல்லது முட்டாள்களாக இருக்கவேண்டும். அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதுவும் நம்மால் செய்ய இயலாது.



-        லூஸிஃபர்

Facebook Comments

26 கருத்துரைகள்:

தஜ்ஜால் said...

வாழ்த்துக்கள்!

கலக்கிவிட்டீர்கள் லூஸிஃபர்!

//இதற்குப் பிறகும் இந்த 16வது சூராவில் 69வது ஆயத்தில் இப்படி தில்லுமுல்லு செய்து தங்களைக் கடவுளை மிகைத்த அறிவாளிகளாகக் காட்டிக்கொண்டு, குர்ஆன் இறைவனின் வேதம் என்று கதைப்பார்களேயானால், அவர்கள் மோசடிப் பேர்வழிகளாக இருக்க வேண்டும்; அல்லது முட்டாள்களாக இருக்கவேண்டும். அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதுவும் நம்மால் செய்ய இயலாது.// நெற்றியடி என்பார்களே அது இதுதான்!

செங்கொடி said...

பதிவர் குலாமுடனான விவாதம் ஒன்றில் இந்த தேனீ கனிகள் சாப்பிடுவது குறித்து விவாதித்திருக்கிறோம். அதில் நான் கீழ்கண்டவாறு எழுதியிருந்தேன்.

அந்த வசனங்களில் மிகத்தெளிவாக தேனீ கனிகளை உட்கொள்ளும் என பதிவு செய்யப்பட்டிருக்கிறது. “மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக்கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு” இதன் இரண்டு வாக்கியங்களையும் கவனித்தால் புரியும். மலைகளிலும், மரங்களிலும், கட்டிடங்களிலும் கூடு கட்டு. கவனிக்கவும்: மரங்களில் கூடு கட்டு என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்து விடவில்லை. மலைகளிலும், மரங்களிலும், கட்டிடங்களிலும் கூடுகட்டு என்கிறது. அதாவது சத்தியமுள்ள எல்லா வழிகளையும் கூறுகிறது. அடுத்த வாக்கியத்தில் எல்லா கனிகளிலிருந்தும் சாப்பிடு என்கிறது. இங்கு கனி என்பது தேனீகளின் முதன்மையான உணவா? என்றால் வேறு வாய்ப்புகளை குரான் ஏன் குறிப்பிடவில்லை. தேனீயின் முதன்மையான உணவு தேன். கூடு கட்டுவதில் மலைகளிலும், மரங்களிலும், கட்டிடங்களிலும் என தனித்தனியே பிரித்துக் குறிப்பிட்ட குரான் முதன்மையான உணவை விட்டுவிட்டு உணவல்லாத வேறொன்றை சாப்பிடு எனும் சொல்லால் குறிப்பிடுவதேன்?

ஆனால் இங்கே தம்பி குலாம் உட்பட சுட்டி கொடுத்திருப்பவர்களெல்லாம் இந்த அம்சத்தை கணக்கிலெடுத்துக் கொள்ளவே இல்லை. தேனீயின் உணவு என்ன? அந்த வசனங்களில் தேன் தான் தேனீயின் உணவு என ஏதேனும் குறிப்பு இருக்கிறதா? கனிகளின் நெக்டர்களிலிருந்தும் தேனீ சேகரிக்கிறது என விளக்கமோ விளக்கம் அளிக்கிறார்கள். தேனியின் உணவு தேனா? கனிகளா? தமிழர்களின் உணவு அரிசி. தமிழர்களின் உணவு மாங்கொட்டை. இந்த இரண்டில் எதை சரி என்பீர்கள் எதை தவறு என்பீர்கள். மாங்கொட்டை தமிழர்களின் உணவல்ல என்பீர்களாயின் என்னால் நீலகிரி மலை படுகர்கள் சில போதுகளில் மாங்கொட்டைகளை உணவாக உட் கொள்கிறார்கள் என்பதை அவர்களிடம் செவி கண்டு வெளியிட்டால், படம் பிடித்துப் போட்டால், இணையச் சுட்டி தந்தால் என்ன சொல்வீர்கள். இந்தப் பிரச்சனை தான் குரானின் அந்த வசனங்களிலும் இருக்கிறது. குரானில் தவறே இருக்க முடியாது எனும் முன் முடிவோடு அதை எப்படி சமாளிப்பது என்று ஆளாளுக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்கள், விவகாரம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே. \\\தேனீ கனிகளை உண்ணும் என குரான் பொய் சொல்லியதை விளக்கி இணையப் பரப்பில் எங்கேனும் நேர்மையான பதிலிடப்பட்டிருக்கிறதா?/// நான் கேட்டிருந்தது நேர்மையான பதில். இங்கே அள்ளிக் கொட்டப்பட்டிருப்பவை மதவாத விளக்கங்கள்.

அந்த வசனந்த்தில் ஸமர் எனும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (சிலர் இங்கே தமர் எனும் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதற்கு விளைச்சல் என்றும் பொருள் கொள்ளலாம் என அருஞ்சொற்பொருள் கூறியிருக்கிறார்கள். கவனிக்கவும் அங்கே மூன்று நொக்கத்துகள் இருக்கின்றன இரண்டல்ல. இரண்டு நொக்கத்துகள் இருந்தால் தான் த உச்சரிப்பு வரும் மூன்று நொக்கத்துகள் இருந்தால் ஸ தான்) ஸமர் எனும் சொல்லுக்கு கனி என்பது தான் பொருள். 2:155 லும் கனிகள் என கொண்டாலும் பொருள் மயக்கம் ஒன்றும் வருவதில்லை. சரி மதவாத நண்பர்கள் விரும்புவது போல் விளைச்சல் எனும் பொருளையே கொள்வோம். “தும்ம குலி மின் குல்லி ஸமராதி” எல்லா விளைச்சல்களிலிருந்தும் நீ சாப்பிடு என்றால் என்ன பொருள்? எந்த விளைச்சல்களிலிருந்தெல்லாம் தேனி சாப்பிடுகிறது எனும் பட்டியல் ஏதும் இங்கே சுட்டி கொடுத்த நண்பர்கள் வைத்திருக்கிறார்களா? மறந்து விடாதீர்கள் நண்பர்களே! அந்த வசனத்தில் இருப்பது சாப்பிடு என்பது தேனை சேகரிப்பது என்ற பொருளை வலிந்து எடுத்துக் கொண்டு கனி நெக்டர் என்று சுற்றிச் சுழல வேண்டாம்.

ஸமர் எனும் சொல்லுக்கு 1400 ஆண்டுகலுக்கு முன் கனி எனும் பொருள் பயன்படுத்தப்பட்டதா? விளைச்சல் எனும் பொருளா? இதைத்தான் கருத்து முதல் வாதம் என்பது. சொல் அதே தான் ஆனால் காலம் கடக்க கடக்க அறிவியலின் எல்லைக்கேற்ப அந்தச் சொல்லின் பொருள் மட்டும் மாறுபடும். இதற்கு குரானின் வேறு சில சொற்களையும் எடுத்துக் காட்டாக கூறலாம். இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது ஒற்றைச் சொல்லில் ஏற்பட்ட பேதம் அல்ல. வாக்கியத்தில் ஏற்பட்ட பொருட் பிழை. எல்லா கனிகளிலிருந்தும் நீ சாப்பிடு என்பதில் தவறான பொருள் ஸமர் எனும் ஒற்றை வார்த்தையில் மட்டுமல்ல. அந்த வாக்கியத்தின் பொருளில். எல்லா கனிகளிலிருந்தும் தேனீ சாப்பிடுகிறதா? எல்லா விளைச்சல்களிலிருந்தும் தேனீ சாப்பிடுகிறதா? இரண்டில் எதுவானாலும் அந்த வாக்கியத்தின் பொருள் தவறு தான்.

அல்லா முக்காலமும் உணர்ந்தவர் தானே. இப்படி ஒரு சர்ச்சை வரும் என்பது அவருக்கு தெரியுமா தெரியாதா? சர்ச்சை ஏற்படா வண்ணம் தெளிவான, சரியான, துல்லியமான சொல்லை ஏன் அல்லா பயன்படுத்தவில்லை? ஏன் இப்படி பலவீனமான படைப்புகளின் சமாளித்தல்களுக்காக அல்லா காத்திருந்தான்?

நாட்டுவேங்கை said...

அழகாக, எளிதாக கட்டுரையாளர் விளக்கியுள்ளார். நன்றி!

Ant said...

//கனி(களின் மலர்)களிலிருந்தும் அருந்தி, கனிகளி(ன் பூக்களி)லிருந்தும், // இப்படி பிராக்கட் போட்டு மாற்ற முயற்சித்தாலும் குறம் உள்ளதாகவே படுகிறது. காரணம் கனிகளின் மலர் அல்லது பூ என்று மொத்தமாக குறிப்படபடுவதில்லை. உதராணம்: வாழைகனியின் மலர், மாங்கனியின் மலர், ரோஜா கனியின் மலர் மல்லிகை .கனியின் மலர் தாமரை கனியின் மலர் ஐயோ கனியில்லாத மலரில் (?) தலை சுற்றுகிறதே.
எப்படி டமுடிவு செய்ய?
இரண்டு வழி உள்ளது. 1) சாத்தான் ஏற்கனவே ஒரு சில வசனத்தை போட்டதுபோல் இதில் வார்த்தையை மாற்றி போட்டுவிட்டான்.
2) இது அல்லா அல்லாதவர்களிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரன்பாடுகளை கண்டிருப்பீர்கள் என்பதால் இது அல்லாவிடமிருந்து வரவில்லை.
என்ன செய்ய நம்பியாச்சே!

tawheed said...

The Noble Quran is in arabic. The translations can only go so far in giving the exact meaning. If any people here who have any sense will understand translations are just the translations. The truth can only be found in the arabic verses. To understand what is really said in the noble quran, you have to learn the arabic. Dont judge book by its translations. after all these years, Do you really think all of the sudden you people find the fault in the noble quran? Do you really think you are the first to try to defame the noble quran? You people comments and this posts are nothing but reflection of your total ignorance about Islam and your blind faith. If you are really interested in defaming the noble quran, why not start your rebuttal for every verses in the quran? I believe in allah. if you dont why dont you start comparing your religion and islam? your holy book and the noble quran , verse by verse, see the truth to for yourself. Dont find errors or mistakes again in translations, they are rough that is why they have the brackets of possible meanings.

Unknown said...

//இதற்குப் பிறகும் இந்த 16வது சூராவில் 69வது ஆயத்தில் இப்படி தில்லுமுல்லு செய்து தங்களைக் கடவுளை மிகைத்த அறிவாளிகளாகக் காட்டிக்கொண்டு, குர்ஆன் இறைவனின் வேதம் என்று கதைப்பார்களேயானால், அவர்கள் மோசடிப் பேர்வழிகளாக இருக்க வேண்டும்; அல்லது முட்டாள்களாக இருக்கவேண்டும். அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதுவும் நம்மால் செய்ய இயலாது.//

மிகவும் சரியாக சொன்னீர்கள் இன்னும் ஒருபடி மேலாக இவர்கள் தங்கள் அல்லாஹ்வை காப்பாற்ற துடிக்கும் ஒருவகை மத வெறி சைக்கோவைச் சேர்ந்தவர்கள். மனிதன் எழுதியதை அல்லாஹ்வின் வார்த்தை என்று கண்மூடித்தனமாக நம்பி அந்த வார்த்தைகளில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவணமாக இருக்கும் ஒரு வகை மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.தவறுகளை திருத்திக் கொள்ளும் மனமில்லாத ஒருவகை மார்க்க வியாதிக்கு ஆளானவர்கள்.இது மோசடித்தனத்திலும் முட்டாள்தனத்திலும் வராத ஓர் வகை மனநோயாளிகள்....

இனியவன்....




Kafir said...

mr .tawheed please translate quran arabic to tamil in correct meaning. i think you know very well arabic.

veera balu said...

அருமையான கட்டுரை மொழிப்பெயர்த்த விரிவுரையாளர்களின் யோக்கியதையையும் அழகாக விளக்கியுள்ளீர்கள் .

tawheed said...

I did not claim that i know arabic well. Dont twist my words to make your point.

Let me ask you something, i myself is tamil speaking muslim, i learnt tirukural, and some other classic tamil literature.

If i asked you to translate the real meaning of the tirukural, would you be able to interpret it correctly, without you yourself first learning the classical literatures.

our ex-cm karunanidhi expert in tamil language have to make so many revisions in his translation of classical tamil to modern day tamil. Still it will not be perfect and others scholars in tamil will differ in his views.

Do you know why because each others will experience everything in the world differently. This subjective opinion of some may be right , may be wrong. so the difference in the interpretation.

The noble quran contains many scientific truths.

To translate the noble quran without the knowledge of the subject it deals with itself is the wrong translation.

will you ask the english teacher the doubts in physics because it is in english do you?

that is why who is expert in arabic may not be expert in other scientific matters.

To take the translation of the noble quran and finding fault is not a hard thing to do. To really understand what it says you need to ask the people who knows about it.

To make a case for what you perceive as a false with possible translation is pathetic at best. this kind of debate will not even win the high school debate. Let alone the audience of the world.

For the people who can think, ask him(admin) to list all the miracles of quran then let him prove that it is incorrect. I can assure you he will not because it is true.

Allah knows best.

Ant said...

Mr.tawheed...
//I did not claim that i know Arabic well.// then how you know it is holy?
//our ex ... tamil will differ in his views.// then why Allah not revealed his quaran in an easy / simple language (without any translation to understand)? why in Arabic which is difficult to understand by his own followers?
//will you ask the english teacher the doubts in physics because it is in english do you?// will you ask a physics teacher to explain the physics text in Arabic? First understand that English and physics are different subjects.
//To really understand what it says you need to ask the people who knows about it.// you people are not able to accept the truth because it is against your faith, it is totally fault on your side and not on people saying the fact.
//For the people who can think, ask him(admin) ... it is true.// please realize that you have not denied the criticism on the article still now. The reason is that you do not know the quaran and not able to accept the truth because it is against your faith, realize that this the success of this article. No Muslim will come to debate here why? think if you can?

தஜ்ஜால் said...

தவ்ஹீத்,
//The Noble Quran is in arabic. The translations can only go so far in giving the exact meaning. If any people here who have any sense will understand translations are just the translations. The truth can only be found in the arabic verses. To understand what is really said in the noble quran, you have to learn the arabic.// இன்றுவரை குர்ஆனை மொழிபெயர்த்த ஒருவருக்கும் அரபி சரியாக புரியவில்லை அல்லது கற்கவில்லை என்கிறீர்களா?
இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள்?

தஜ்ஜால் said...


தவ்ஹீத்,
//For the people who can think, ask him(admin) to list all the miracles of quran then let him prove that it is incorrect. I can assure you he will not because it is true.//
குர்ஆனில் அறிவியல் என்ற புளுகு மூட்டையை அவிழ்பதின் துவக்கம்தான் இந்தக் கட்டுரை. அதற்குள்ளே மொழிபெயர்ப்புகளில் தவறு என்ற அரதப்பழசான வாதத்தை முன்வைத்திருக்கிறீர்கள். இன்னும் இருக்கிறது … … …!

Unknown said...

தனக்கு பதில் தெரியவில்லை என்றால் பி.ஜே தன் பாணியில்...படைத்தவனுக்குத் தெரியாயாமலா போய்விடும் கணியிலிருந்து தேண் எடுக்கிறதா அல்லது மலர்களிலிருந்து தேன் எடுக்கின்றதா என்று,நாளை கணிகளில் தேன் எடுக்கும் தேனீக்களை யாராவது கண்டுபிடிக்கலாம்,என்று தன் அடிவருடிகளை சமாலிப்பார்....அவர்களும் ஆமாம் என்று தலையாட்டிவிட்டுச் சென்றுவிடுவார்கள்..

tawheed said...

For starters, This whole article is based on "I found the mistake in translation of quran".

It is suffice to say translations has its own challenges.

then ant said....

please realize that you have not denied the criticism on the article still now. The reason is that you do not know the quaran and not able to accept the truth because it is against your faith, realize that this the success of this article. No Muslim will come to debate here why? think if you can?

Then தஜ்ஜால் said..
"குர்ஆனில் அறிவியல் என்ற புளுகு மூட்டையை அவிழ்பதின் துவக்கம்தான் இந்தக் கட்டுரை. அதற்குள்ளே மொழிபெயர்ப்புகளில் தவறு என்ற அரதப்பழசான வாதத்தை முன்வைத்திருக்கிறீர்கள்."

Especially ant said....

Mr.tawheed...
//I did not claim that i know Arabic well.// then how you know it is holy?
//our ex ... tamil will differ in his views.// then why Allah not revealed his quaran in an easy / simple language (without any translation to understand)? why in Arabic which is difficult to understand by his own followers?
//will you ask the english teacher the doubts in physics because it is in english do you?// will you ask a physics teacher to explain the physics text in Arabic? First understand that English and physics are different subjects.
//To really understand what it says you need to ask the people who knows about it.// you people are not able to accept the truth because it is against your faith, it is totally fault on your side and not on people saying the fact.
//For the people who can think, ask him(admin) ... it is true.// please realize that you have not denied the criticism on the article still now. The reason is that you do not know the quran and not able to accept the truth because it is against your faith, realize that this the success of this article. No Muslim will come to debate here why? think if you can?

Ant started taking my words out of context to prove his point which is silly to begin with because he did not understand what i said.

Giving the fallacies as the proof against the genuine work as noble as quran is not worth reading.

The admin is not expert in anything, which clearly shows he is here to simply blindly ignorantly prove his point.

And who comment on his favour, i would say this, dont make urself look like foolish by supporting this fool.

Those who want to seek truth
"Beware of out-of-context arguments and fallacies"

Further continuing to post comment simply not worth it. To each their own.

ALLAH KNOWS BEST.

Ant said...

//he did not understand what i said.// this is because you didn't understand the article. your are not able to digest the truth about the content. In fact you want to protect Allah.
//Giving the fallacies as the proof against the genuine work as noble as quran is not worth reading// You believe it is holy but it is not necessary that fact should be what you think? you satisfy with your faith but fact always against your faith.
//The admin is not expert in anything,// ha! ha!! ha!! your words are self explanatory about your understanding.
//Further continuing to post comment simply not worth it. To each their own. ALLAH KNOWS BEST.// Allah failed to provide clear words on his own creation.

நாட்டுவேங்கை said...

அய்யோ அய்யோ, காபிர்களே உங்களுக்கெல்லாம் இன்னும் ஒன்றுமே புரியமாட்டேங்குதே, அரபிகளெல்லாம் பூவை பார்த்துதான் கனி (ஃதமர்) என்று சொல்லவார்கள். அதனால் மொழிபெயர்ப்பிலெல்லாம் குர்ஆனை படிக்கக் கூடாது. மொழிபெயர்த்தவர்களெல்லாம் முட்டாள்கள். என்ன தௌபீக் நான் சொல்லவது சரிதானே.

Anonymous said...

தெளிவான விளக்கங்கள். குரானில் இத்தனை மொழிபெயர்ப்புகளையும் அதில் பல தில்லுமுல்லுகள் இருப்பதையும் இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன். ந்ன்றிகள் உரித்தாகட்டும்

Anonymous said...

திராட்டை பழத்தின் மேலும் கரும்புச்சாற்றின் மேலும் உக்காந்து இருப்பவை தேனீக்கள் கிடையாது அவை வாஸ்ப் என சொல்லப்படும் பூச்சிகள்

http://www.diffen.com/difference/Bees_vs_Wasps

Wasps are usually predators who eat other insects such as caterpillars and flies. However, sometimes wasps sip on nectar too. They get attracted to the smell of human food, especially sugary beverages and beer.

இந்த இரண்டும் தூரத்தில் இருந்து பார்க்க ஓரளவுக்கு ஒரே மாதிரி இருப்பதால் இரண்டும் ஒன்று என எழுதுகிறார்கள்.

தேனீக்கள் டீ மேல், வடை மேல் எல்லாம் உக்காராது. அது வாஸ்ப் தான்.

Ant said...

மொழிப் பெயர்ப்பு தவறென்பதை ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் அணைத்து மொழிபெயர்ப்பிலும் ”அணைத்து” என்று ஒட்டுமொத்த மலர் அல்லது கனியினத்தை குறிப்பிடுகிறது என்பதை மறுக்க இயாலது. வரிசை எண் 22 மற்றும் 23 தவிர அணைதது மொழிப்பெயர்புகளும் கனி என்பதை ஒப்புக் கொள்கிறது. அதில் அங்கீகரிக்கப்பட்ட மொழிப் பெயர்ப்பும் அடங்கும் என்பதால் கனி என்பது தான் சரியான மொழி பெயர்ப்பு என்பதை புரிந்து கொள்ள முடியும். தவிர தேனி கனி தராதவற்றின் மலரில் இருந்தும் தேனெப்பதால் அணைத்து மலர் கள் என்பதில் கனி தராதவை அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது. வரிசை எண் 22 மற்றும் 23 தேனீக்கள் மர்களில் இருந்தே தேன் சேகரிக்கிறது என்பதை உறுதிபட குறிப்பிடும் மொழி பெயர்ப்புகளாகும். படைத்தவன் ஞானமிக்கவன் என்பதை அந்த படைப்பலேயே பாராட்டிக் கொள்வதால் அன்று கனி என்று இருந்தது இன்று மலராகிவிட்டது.

நாட்டுவேங்கை said...

தேனிக்கள் உண்மையில் மலரிலிருந்தும் உண்பதில்லை. அது மலர்களில் உள்ள குளுகோஸ் மற்றும் மகரந்தங்களை எடுத்துச் சென்று தான் சுரக்கும் ஒருவித சுரப்பியுடன் கலந்து தேனாக மாற்றி சேமிக்கிறது. பிறகு அதிலிருந்து தேனை உண்ணுகிறது. அதனால் மலரிலிருந்து என்று சொல்லுவதும் தவறு.

DEVAPRIYA said...

மத்தேயு சுவியில் - கன்னிபெண் என மூல எபிரேயத்திலே இல்லை, ஆனால் செப்துவஹிந்து கிரேக்க மொழிபெயர்ப்பில் படைத்தவன் தூண்டி தவறனது என்றனர், ஐயா - யோசேப்பு எபிரேயர் அவருக்கு எதற்கு செப்துவஹிந்து என்றவுடன் வழிந்தனர்.

பைபிள், அதிலிருந்து வந்த குரான் எல்லாமெ அது எழுதப்பட்ட காலத்து கதாசிரியார்களால் புனையப்பட்டவையே.

தேவப்ரியா சாலமன்.

நம் பதிவுகள் இனி இங்கே
http://chennaipluz.in/wp/tamilchristian/

Anonymous said...

Collecting honey from it is robbery. Pl try to understand honey theft from the view of honeybees. Have you ever felt the cry of wandering honeybees after lost their home and food. We think all living beings are created for us. Don't disturb nature you can't tolerate it's counter attack. Praise the nature and be with it

Anonymous said...

சிறுநீர் கழித்து விட்டு எப்படி சுத்தம் செய்வது என்பது கூட தெரியாத அண்ணிய கயவர்களே! உனக்கு என்னடா தெரியும் இஸ்லாத்தைப்பற்றி குர்ஆனையே நீ பிழை கூறுகின்றாயா கை சேத பட்டு விட்டீர்கள்..

Unknown said...

Ahhhh....ha... ha
Really u r an stupid
First C this video clips....
எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயத்தை பற்றி சொல்வதற்கு எதற்கு அல்லாஹ்? எதற்கு குர்ஆன்?

தேனீ மலரில் இருந்து தேனை உண்கிறது என்று உன்னை போல முட்டாளுக்கு கூடத்தான் தெரிந்திருக்கிறது. அதை எதற்கு இன்னும் ஒரு தடவை சொல்லிக்காட்ட வேண்டும்?
ஆனால், தேனீ கனிகளில் இருந்தும் அதன் ரசத்தை உறிஞ்சுகிறது, உண்கிறது என்பதை அறிவியலாளர்கள் கூட அண்மையில்தான்
அறிந்துள்ளார்கள். அந்த யாரும் அறிந்திடாத உண்மையை பற்றித்தான் குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பே கூறியிருக்கிறது.
இன்றைய விஞ்ஞானம் அதை உண்மை என்று கண்டிருக்கிறது.
உன்போல ஒரு சில உச்ச கட்ட முட்டாளுக்கு மட்டும்தான் இந்த உண்மை இன்றுவரை தெரியாமல் இருக்கிறது. ஐயோ பாவம்!!!

அல்லாஹ் குர்ஆனில்
" அன்றி, மனிதன் அறியாதவைகளை எல்லாம் அவனுக்கு கற்றுக்கொடுக்கிறான்"
(96:5-7)
என்று கூறியுள்ளான். எனவேதான் தற்கால விஞ்ஞானம் கூட இன்னும் அறிய முடியாத எத்தனையோ அறிவியல் உண்மைகள் இன்னும் குர்ஆனில் காணப்படுகிறது. உன்போல ஒருசில முட்டாள்கள் அதை பொய் என்பதால் அது ஒன்றும் பொய்யாகிவிடாது.
ஏன் நீங்கள் எல்லாம் தேனீ அதன் வயிற்றில் இருந்துதான் தேனை வெளியாக்குகிறது என்று விஞ்ஞானம் கண்டறிந்து சொல்வதற்கு முன்னால் தேனீ அதன் வாயில் உள்ள பையில்தான் தேனை சேகரிக்கிறது என்றுதானே முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருந்தீர்கள்???
அப்போது நீங்கள், குர்ஆனில் அல்லாஹ் தேனீ தேனை தன் வயிற்றில் இருந்து வெளியாக்குகிறது என்று சொல்லியிருப்பதை பார்த்து இப்போது போலத்தானே பேசியிருப்பீர்கள்???
உங்கள் இறைவனுக்கு தேன் எங்கே இருந்து வருகிறது என்று கூட தெரியவில்லையே!!! தேனை தேனீ தன் வாயில் இருந்து வெளியாக்குகிறது என்று உலகமே தெரிந்திருக்கும் போது உங்கள் குர்ஆனில் அது வயிற்றில் இருந்து வருவதாக சொல்லப்பட்டிருக்கிறதே என்று ஏளனம் செய்திருப்பீர்கள்???
ஆனால், இப்போது விஞ்ஞானம் நீங்கள் நம்பிக்கொண்டிருந்தது முட்டாள்தனம், குர்ஆன் கூறியதுதான் உண்மை என்று கண்டறிந்து சொல்லியதும் மூக்கறுபட்டு நிற்கிறீர்கள்.
இப்போது இன்னும் ஒரு விடையத்தை குர்ஆனில் பிழை கண்டு, இன்று மீண்டும் குர்ஆனில் கூறியிருப்பதை விஞ்ஞானம்
உண்மை என்று நிரூபணம் செய்ததும் மறுபடியும் பலமாய் மூக்கறுபட்டு நிற்கிறீர்கள். ஐயோ பாவம்!!!
மேலும் ஒரு சிறு தகவல்
உங்கள் மர மண்டைக்கு புரிவதற்காக
"எல்லா வகையான கனி வகைகளில் இருந்தும் உண்டுகொள்" என்று சொல்லியிருப்பதானது
மனிதர்கள் உண்ண தகுந்த, மற்றும் உண்ண தகாத அதாவது மனிதர்களுக்கு அல்லது மற்ற விலக்குகளுக்கு சாப்பிட ஒவ்வாத கனிகளில் இருந்தும் கூட தேனீக்களால் அதன் மதுரத்தை உண்ண முடியும். அக்கனிகள் அவற்றுக்கு தீங்கு விளைவிக்காது. என்பதை குறிக்கிறது.
இவ்வாறே மனிதனுக்கு நச்சுத்தன்மையான எத்தனையோ வகையான பூக்களின் தேனை தேனி அருந்துகிறது. ஆயினும் அதற்கு எந்த தீங்கும் ஏற்படுவதில்லை.
இத்தனை நுணுக்கமாக தேனீயை பற்றி திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே மிக சரியாககூறியுள்ளது. அறிவியல் இன்று அதற்கு சாட்சி கூறியுள்ளது.
அடிக்கடி குர்ஆனுடன் மோதி மூக்கறுபடும் உங்களை போன்ற ஒருசிலரை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.
��







https://youtu.be/bWKqYEBI1ks

Unknown said...

https://youtu.be/EO8UBd1kvI0
This s one of the u tube video link
U tube கு போய் honey bee eating fruits என்று typ பண்ணி தேடி பாரு தம்பி. எத்தனை வீடியோ சாட்சி வருகிறது என்று அப்போ உனக்கு புரியும்.
இனிமேலும் வெளியில் இதை சொல்லிக்கொண்டு திரியாதே மக்கள் உன்னைத்தான் லூசு என்று சொல்லும். 😀

அல்லாஹ்வின் அடிமை said...

அருமையாக சொல்லவில்லை அறிவு கெட்ட லூசிபர் ஒங்களுக்கு சிந்திக்கும் அறிவு இல்லை என்பதால் லூசிபர் என்ற பெயரை லூசு என்று வைத்துகொள்ளுங்கள்