Tuesday, 16 April 2013

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-24


தோழர்களின் மீது சந்தேகமும் வேதவெளிப்பாடும்

Tabaqat, 8:101-102

Sulaiman Ibn Harb narrated, quoting Hammad Ibn Zaid, quoting Ayyub Ibn Abi Qulaba that Anas said, "I know about this verse, 'the verse of the curtain', more than anyone else. When Zainab was given to the Messenger of God, he held a banquet on the night he married Zainab, invited the people and served them a meal. He wished that they leave afterward, because his mind was set on his bride. He stood up to let them know he wanted to leave, so some left. He stood up once more, but some stayed. He stood up a third time, and then they all left. So he entered his house [where the bride was] and Anas followed him, but he prevented him [from coming in] by letting down the curtain and said

ஹிஜாப் (கோஷா) முறை அமலக்கப்பட்ட நிகழ்சி
தன்னுடைய வளர்ப்பு மகனின் மனைவி (மருமகள்) ஜைனப்  யை ஒருவழியாக திருமணம் செய்த பிறகு அவருடன் தாம்பத்திய வாழ்கையைத் துவங்குவதன் அடையாளமாக ஒரு விருந்து முஹம்மது நபி  அவர்களால், இரவு நேரத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. விருந்தில் உணவு தயாராவதற்கு முன்பே வந்து விட்ட சஹாபாக்கள் (நபித்தோழர்கள்)விருந்து முடிந்த பிறகும் செல்லாமல் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டும் போவதும் வருவதுமாக  முஹம்மது நபி  அவர்களின் "நிலைமை" புரியாமல் நடந்து கொள்கின்றனர். அவர்களை போகச் சொல்லும் விதமாக எழுந்து நிற்கிறார். சிலர் சென்று விடுகின்றனர் சிலர் அமர்ந்து விடுகின்றனர். பொறுமை இழந்த முஹம்மது நபி  அவர்கள் மூன்றாம் முறையாக இறுதில் எழுந்து நிற்கிறார் சஹாபாக்களும் (நபித்தோழர்கள்) கலைந்து சென்று விடுகின்றனர்.
புகாரி ஹதீஸ் :  4791     
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனைப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டபோது மக்களை அவர்கள் (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு பேசிக்கொண்டே அமர்ந்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து போகத் தயாராயிருப்பது போல் (பலமுறை) காட்டினார்கள். ஆனால், மக்கள் எழுந்திருக்கவில்லை.அதைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்துவிட்டார்கள்….
அவர் மணமகள் (மருமகள்?) இருக்கும் அறையை நோக்கிச் செல்கிறார். அனஸ்  அவரை பின் தொடர்து செல்கிறார். ஆனால் திரையிட்டு அவரை (அனஸ் வீட்டினுள் செல்வதை) தடை செய்கிறார்.

புகாரி ஹதீஸ் ஹதீஸ் :  4791                                                                                                       
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
அவர்கள் எழுந்துவிடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்துவிட்டனர். ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஸைனப் (ரலி) அவர்களிடம்) செல்லப் போனார்கள். அப்போதும் அவர்கள் அமர்ந்து(கொண்டு பேசிக்) கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றுவிட்டார்கள். நான் உடனே உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள் என்று தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள். நானும் அவர்களுடன் உள்ளே செல்லப் போனேன். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் எனக்கும் தமக்குமிடையே திரையைப் போட்டுவிட்டார்கள். அப்போது தான் அல்லாஹ் இறை நம்பிக்கை கொண்டவர்களே நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள் என்று தொடங்கும் இந்த (33-53 ஆவது) வசனத்தை அருளினான்.
இவைகளை கண்ட அல்லாஹ்வால் அமைதியாய் இருக்க முடியவில்லை. உடனே வஹியை இறக்கி விட்டான்.
முஃமீன்களே உணவுக்காக உங்களுக்கு அறிவிக்கப்படாதவரை-அதன் தயாரிப்பை எதிர்பார்த்தவர்களாக- நபியுடைய வீடுகளில் நீங்கள் பிரவேசிக்க வேண்டாம்; எனினும் நீங்கள் (உண்பதற்கு) அழைக்கப்பட்டால் அப்பொழுது பிரவேசியுங்கள். பிறகு உணவு அருந்தி முடிந்ததும் பேசுவதில் ஈடுபடாதவர்களாக களைந்து சென்றுவிடுங்கள்; நிச்சயமாக அது நபிக்கு நோவினை செய்வதாக இருக்கிறது (எனினும்) உங்களிடம் (அதனைச்) சொல்ல வெட்கப்படுகிறார்; அல்லாஹ்வோ உண்மையைச் சொல்ல வெட்கப்படமாட்டான்.…
( குர் ஆன் 33.53)
 அல்லாஹ்வின் வஹி எவ்வளவு விளையாட்டாக இருந்திருக்கிறது. இந்த வசனம் முஹம்மது நபி  அவர்களின் வஹீ விளையாடலுக்கு  ஒரு உதாரணம்மேலும் இவ்வசனத்தின் இறுதிப்பகுதி முற்றிலும் வேறொரு செய்தியை கூறுகிறது அதாவது அனஸ் வீட்டினுள் செல்வதை திரையிட்டு தடுக்கப்பட்டதன் காரணம்,
…(நபியின் மனைவியர்களாகிய) அவர்களிடம் ஏதேனும் ஒரு பொருளை நீங்கள் கேட்பதானால் திரைக்கு பின்னாலிருந்து அவர்களிடம் கேளுங்கள். அது உங்களுடைய உள்ளங்களுக்கும் அவர்களுடைய உள்ளங்களுக்கும் பரிசுத்தமானதாகும். அல்லாஹ் உடைய ரசூலை நீங்கள் நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அவருக்குப் பின் எப்பொழுதுமே அவருடைய மனைவியரை நீங்கள் மணம் செய்து கொள்வதும் கூடாது- நிச்சயமாக அது அல்லாஹ் விடத்தில் (பாவத்தால்) மகத்தானது ஆகும்.
( குர் ஆன் 33.53)
புகாரி ஹதீஸ் : பாகம் 7, எண் : 7421
அனஸ் இப்னு மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது.
பர்தா தொடர்பான வசனம் ஜஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் விஷயத்தில்தான் அருளப் பெற்றது. அன்று நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்ததற்காக (வலீமா விருந்தாக) ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக் கொடுத்தார்கள்…
மேற்கண்டவசனத்தின் இறுதிப்பகுதி நபியின் மனநிலையை தெளிவாக உணர்த்துகிறது. அதாவது ஜைதை காணச் சென்ற பொழுது திரை விலகியதாலே மருகளான ஜைனப்பின் மீது காமம் பிறந்தது. அதே முறையில், வேறு ஒருவர் தன் மனைவியர்களையும் கவர்ந்து சென்று விடக்கூடாது என்ற நபியின் கவலையை அல்லாஹ் வஹியின் முலம் சரிசெய்தான்.
சரி…ஜைத் என்ன ஆனார்?
முஹம்மது - ஜைனப் திருமணம் நிகழ்ந்த அதே ஆண்டு, கிபி 629 ல் சுமார் 3000 பேர் கொண்ட சிறிய படையை முத்தா என்ற  (தற்பொழுதைய ஜோர்டான்) பகுதிக்கு, சுமார் 200000 படை வீரர்களைக் கொண்ட மிகப் பெரும் ரோமானியப்படையை எதிர்கொள்ள அனுப்பினார். போரில் கொடியை பிடித்து படையை வழி நடத்தும் பொறுப்பை ஜைத்திடம் ஒப்படைத்திருந்தார். முஸ்லீம்கள் தோல்வியடைந்த அப்போரில் முதலில் கொல்லப்பட்டவர்களில் ஜைத்தும் ஒருவர்

Facebook Comments

12 கருத்துரைகள்:

Ant said...

//http://egathuvam.blogspot.in/2008/05/blog-post.html// தாவீது தீர்க்கதரிசியும் போர்வீரனும் என்ற கட்டுரை ஏனோ மறக்க நினைத்தாலும் நினைவுக்கு வருகிறது. உரியாவின் கதையை துாதர் நிச்சயம் அறிந்திருப்பாரே!

தஜ்ஜால் said...

வாருங்கள் Ant,
//உரியாவின் கதையை துாதர் நிச்சயம் அறிந்திருப்பாரே!// அப்படித்தான் தோன்றுகிறது.

Jenil said...

Even i remmembered the same story :):)

Unknown said...

அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டய போடலாம் தான் பொண்டாட்டிய மட்டும் யாரும் சீண்டக்கூடாது அதிலும் தான் இறந்த பிறகும்....நல்லா இருக்கே தனக்கு வந்தா இரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளிச் சட்னியா...???

ஆனந்த் சாகர் said...

கல்யாணமான பெண்களை அவர்களுடைய கணவர்களை கொன்றுவிட்டு அனுபவிப்பதில் முகம்மதுவுக்கு அலாதி பிரியம் இருந்திருக்கிறது. இந்த கேடுகெட்ட குணம் வேறு எந்த சரித்திர நாயகர்களுக்காவது இருந்திருக்கிறதா? இது மட்டுமல்லாமல், முகம்மதுவுக்கு குழந்தைகள் மேல்கூட காம இச்சை இருந்திருக்கிறது. ஆய்ஷா இதற்கு ஒரு உதாரணம். ஹிட்லர், முசோலினி போன்ற மோசமான சர்வாதிகாரிகளுக்கு கூட இந்த கேடுகெட்ட குணம் இருந்ததில்லை.

சந்தேகம் said...

என்ன சகோகலே..நம்ம நபியபதி நமக்கு தெரியாதா.இன்று வரைக்கும் நியாய தீர்ப்பு நாள் வரலையாம் ஆனா நரகத்துல பெண்கள் தான் நிரையபேரு இருந்தாங்கனு சொன்னவராசே...எனக்கு ஒரு சந்தேகம் சொர்கத்தில் நபியோட மனைவிமார்கள் இருப்பாங்கனா.அவர்களுக்கும் 72 ஆண்களை அல்லா கொடுப்பானா .அப்படி கொடுத்தால் முகமது நபி தன் மனைவிமார்கள் அனைவருக்கும் தாய் ஆகிராள் என்று சொன்னதை அல்லா மீறுகின்றான் என்று தானே அருதம்...கேள்வி ஆபாசமாக தெரிந்ததாள் இதுவரை யாரிடமும் கேட்காமல் இருந்தேன்.

தஜ்ஜால் said...


வாருங்கள் இனியவன்,

//அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டய போடலாம் தான் பொண்டாட்டிய மட்டும் யாரும் சீண்டக்கூடாது அதிலும் தான் இறந்த பிறகும்// இது முஹம்மதிற்கு மட்டுமே வழங்கப்பட்ட சிறப்பு சலுகையாம்.

தஜ்ஜால் said...

வாருங்கள் ஜெனில்,

//Even i remmembered the same story :):)// உரியாவின் கதையா?

தஜ்ஜால் said...

வாருங்கள் ஆனந்த்,

//ஹிட்லர், முசோலினி போன்ற மோசமான சர்வாதிகாரிகளுக்கு கூட இந்த கேடுகெட்ட குணம் இருந்ததில்லை.// என்ன இருந்தாலும் முஹம்மதை மிஞ்ச முடியுமா?? அவர் இப் பிரபஞ்சத்தின் சிறந்த முன்னுதாரணம் அல்லவா?

தஜ்ஜால் said...

வாருங்கள் சந்தேகம்,
//சொர்கத்தில் நபியோட மனைவிமார்கள் இருப்பாங்கனா.அவர்களுக்கும் 72 ஆண்களை அல்லா கொடுப்பானா// நிச்சயமாக கொடுப்பான் என்று பீஜே, ஜாகீர் நாயக் போன்றவர்கள் கூறுகின்றனர். முஸ்லீம்கள் நம்பித்தானே ஆக வேண்டும்!

Jenil said...

//உரியாவின் கதையா?//

Yes becos i learnt it in sunday class long back :):)

Ant said...

//http://dinamani.com/latest_news/2013/04/18/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/article1550895.ece// லுாத் என்ற லுாஸ் கட்டுரை வழிதான் இந்த தளத்தை அறிய முடிந்தது. அதறக்கு பின் அங்குள்ள உண்மை நிலையை இந்த செய்து தோலுரித்து காட்டுகிறது.