குர்ஆன் மற்றும்
ஹதீஸ் இஸ்லாமின் அடித்தளம் என்ற போதிலும் குர்ஆன் மட்டுமே வேதம். எனவே அல்லாஹ்வின்
உறுதிமொழி குர்ஆனுக்கு மட்டுமே பொருந்தும்.
இஸ்லாமின் ஒரு பிரிவு, போற்றிப் புகழும் புகாரி, முஸ்லீம் போன்ற ஹதீஸ் தொகுப்புகளை,
மற்றொரு பிரிவு ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஹதீஸ்களின் உதவியில்லாமல் ஐவேளைத் தொழுகை
என்ற கருத்தை அறியவே முடியாது.
தொழுகைகளின்
எண்ணிக்கைபற்றி அல்லாஹ், நேரடியாகவே வழங்கிய கட்டளை குர்ஆனில் இடம் பெறவில்லை என்பது
வேடிக்கையானது. எந்தக் காலத்திலும் குர்ஆன் பாதுகாப்பாக இருந்ததில்லை என்பதற்கு இது
எளிய உதாரணம். ரமளான் நோன்பையும் அதன் சடங்கு முறைகளைப்பற்றியும் குறித்துவைத்தவர்கள்
நோன்பைவிட முதன்மையான தொழுகையை எப்படி விட்டார்கள்?
அல்லாஹ்
தனது வஹீயை மனிதக்கரங்களிலிருந்து பாதுக்காப்பதாக கூறிக் கொண்டாலும், அவைகளை மறைந்து
போவதற்கான வழிமுறைகளை செயல்படுத்தியதாகத்தான் தோன்றுகிறது.
குர்ஆனின் முழு அத்தியாயங்களையும்
மறந்துவிட்டதைப் பற்றி,
அபூமூசா
(ரலி) அவர்கள் (பின்வருமாறு)
கூறினார்கள்:
பஸ்ராவாசிகளிலேயே நீங்கள்தாம்
சிறந்தவர்கள் ஆவீர்கள் அவர்களிலேயே
குர்ஆனை நன்கறிந்தவர்களும் ஆவீர்கள். எனவே (தொடர்ந்து) குர்ஆனை
ஓதிவாருங்கள். காலம் நீண்டுவிட்டபோது உங்களுக்கு முன்வாழ்ந்த
(வேதம் அருளப் பெற்ற சமுதாயத்த) வர்களின் உள்ளங்கள்
இறுகிவிட்டதைப் போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிட வேண்டாம். நாங்கள் (நபி (ஸல்) அவர்களதுகாலத்தில்) ஓர் அத்தியாயத்தை ஓதி வந்தோம் கடுமை(யான எச்சரிக்கை விடுக்கும் தோரணை)யிலும் 'பராஅத்" எனப்படும் (9ஆவது)
அத்தியாயத்திற்கு நிகராக அதைநாங்கள் கருதினோம். ஆனால், அந்த அத்தியாத்தை நான் மறக்கச்செய்யப்பட்டு விட்டேன்.
ஆயினம், அதில் 'ஆதமின் மகனுக்கு
(மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான்.
ஆதமின் மகனுடைய வயிற்றை (சவக்குழியின் மண்ணைத்
தவிர வேறெதுவும் நிரப்பாது" எனும் வசனத்தை நான் நினைவில்
வைத்துள்ளேன். மேலும், மற்றோர் அத்தியாயத்தயும்
நாங்கள் ஓதிவந்தோம். அதை (சப்பஹ,
யுசப்பிஹ, சப்பிஹ் என) இறைத்துதியில்
தொடஙகும் அத்தியாயங்களில் ஒன்றுக்கநிகராகவே நாங்கள் கருதினோம். அந்த அத்தியாயத்தையும் நான் மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும், அதில் 'நம்பிக்கை கொண்டவர்களே!
நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அவ்வாறுநீங்கள்
செய்யாததைப் பிறருக்குச் சொல்வீர்களாயின்) அது உங்களுக்கு எதிரான
சாட்சியாக உங்களுடைய கழுத்துகளின் மீது எழுதப்படும். பின்னர்
மறுமைநாளில் அது குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன்.
முஸ்லீம்1897
வசனங்களை
தவறவிடப்பட்டது பற்றி…
…He also said: Ibn Abu Maryam reported to us from Ibn Lahi`a, from Abu l-Aswad, from `Urwa
b.l-Zubair, that A’sha said: ”During the time of the Prophet (s) two hundred
verses of the chapter l-A¡zab
were recited but when compiling the Quran Uthman was only able to collect what
now exists”. ..
(உர்வா பின் ஜுபைர் அறிவிக்கிறார்
ஆயிஷா கூறினார்: தூதர்(ஸல்)
அவர்களின் காலத்தில் அஹ்ஜாப் அத்தியாயத்தில் 200 வசனங்கள் ஒதப்பட்டு வந்தது. குர்ஆனைத்
தொகுத்த பொழுது, இப்பொழுது எவ்வளவு இருக்கிறதோ அதைமட்டுமே உத்மானால் திரட்ட முடிந்தது)
He also said: Ismail b. Ja`far reported to us from ‘l-Mubarak b.
Fudala, from `Asim b. Abu l-Nujud, from Zirr b. Hubaish who said: Ubayy b. Ka`b
told me:”How many verses do you count in the chapter ‘l-A¡zab? I said: ‘72 or 73
verses. ’He said: ‘At one time it had as many verses as ‘l-Baqara, including
the verse on stoning which we used to recite.’ I said: What is the verse
of stoning? ‘He said: ‘If a married man or woman fornicates, stone them without
hesitation; a fitting punishment from God. God is Mighty, and all Wise’ a
fitting punishment from God. God is Mighty, and all Wise.’
Al-Itqan fi Ulum
al-Qur’an by
Jalaluddin Suyuti
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன்
என்று ஒருவர் கூறுவதே அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும்.
உண்மையில், அவர் மறக்கவைக்கப்பட்டுவிட்டார்.
புகாரி 5039
ஆயிஷா(ரலி) கூறினார்
இரவு நேரம் பள்ளிவாசலில்
ஒருவர் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பதை நபி(ஸல்)
அவர்கள் கேட்டார்கள். அப்போது நபியவர்கள்,
'அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன அத்தியாயங்களிலிருந்து
நான் மறந்துவிட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டிவிட்டார்'
என்று கூறினார்கள்.
புகாரி 5042
இதைப் போன்ற
முரண்பாடுகளுக்கு, குறிப்பிட்ட அந்த ஹதீஸ்கள் பலவீனமானவைகளென்றுப் புறக்கணித்துக் கொண்டிருப்பதைத்
தவிர இஸ்லாமியர்களிடம் வேறு எவ்விதமான பதிலும் இல்லை. இதற்கு அல்லாஹ் என்ன பதில் சொல்கிறான்?
இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும்.
குர்ஆன் 56:77, 78
அல்லாஹ்
குர்ஆனை ஒரு பாதுகாப்பான ஏட்டில் வைத்திருப்பதாக கூறுகிறான். இஸ்லாமிய நம்பிக்கைகளின்
படி, அது எங்கோ ஏழாம் வானத்தில் இருக்குமென்று நினைக்கிறேன். அது அவர்களுக்கு மட்டுமல்ல
எவருக்குமே உதவப் போவதில்லை. நாம் இன்றிருக்கும்
குர்ஆனின் கதையைப்பார்போம்.
ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்கள் கூறினார்.
யமாமா போர் நடைபெற்ற பின்
(கலீஃபா) அபூ பக்(ரலி),
எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரக் கூறினார்கள்.
(நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு
அருகில் உமர் இப்னு கத்தாப்(ரலி) இருந்தார்கள்.
அப்போது அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்:
உமர் அவர்கள் என்னிடம்
வந்து, 'இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
(இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு
இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால்
குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி
(நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன்.
(எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க
வேண்டுமென கருதுகிறேன்' என்று கூறினார்கள். நான் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?' என்று
உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத்
திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள்…
புகாரி 4679
குர்ஆனைத்
தொகுக்கும்பணியை ஸைத் இப்னு ஸாபித் என்ற (22-23 வயது) இளைஞரை
அழைத்து ஒப்படைக்கிறார்கள். அதற்கு அவர்,
...’அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில்
ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக
இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள்
கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான்,
நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?'…
புகாரி 4679
என்று
மறுத்துவிடுகிறார். அபூபக்ர் மற்றும் உமரின் வற்புறுதல்களுக்குப் பிறகு ஒப்புக்கொள்கிறார்.
முஹம்மதின் காலத்தில் குர்ஆன் முழுத் தொகுப்பாக இருக்கவில்லையென்ற முடிவிற்கே நாம்
வர வேண்டியுள்ளது(!).
அனஸ்(ரலி) அறிவித்தார்
இந்த நால்வரைத் தவிர வேறு எவரும்
(குர்ஆனைக் கேட்டுத்) திரட்டியிராத நிலையில் நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
1. அபுத்தர்தா
2. முஆத் இப்னு
ஜபல்
3. ஸைத் இப்னு
ஸாபித்
4.அபூ ஸைத்,
5. உபை இப்னு கஅப் (புகாரி 5004)
நாங்களே (என்
தந்தையின் சகோதரர்களில் ஒருவரான) அபூ ஜைத்(ரலி) அவர்களுக்கு வாரிசானோம். (அன்னாருக்கு வேறு வாரிசுகள் இல்லை.)
புகாரி 5004
அதாவது குர்ஆன்
தொகுக்கப்பட்ட காலத்தில் இந்த நபர்களைத் தவிர வேறு எவருக்கும் குர்ஆன் முழுமையாகத்
தெரியாது. முஹம்மதை நிழல்போல பின்தொடர்ந்து கொண்டிருந்த அபூபக்கர், உமர், உஸ்மான் இன்னும்
அவரது தோழர்கள் பலருக்கும் குர்ஆன் முழுமையாகத் தெரியவில்லை. யமாமா போரில் கொல்லப்பட்டவர்களுக்கும்
குர்ஆன் முழுமையாகத் தெரியாது.
உண்மையிலேயே
இவர்களைத் தவிர வேறு எவருக்கும் குர்ஆன் முழுமையாகத் தெரியாதா? அதை பிறகு கவனிப்போம்.
ஸைத் இப்னு ஸாபித் தலைமையிலான குழு தொகுத்த குர்ஆன், அபூபக்ர்,
உமர் ஆகியவர்களைக் கடந்து ஹப்ஸாவை அடைகிறது. அதன்பிறகு சுமார் 19 ஆண்டுகளுக்கு குர்ஆன்
தொகுக்கப்பட்டதை அடியோடு மறந்துவிடுகின்றனர்.
அனஸ் இப்னு மாலிக்
(ரலி) அறிவித்தார்
ஹுதைஃபாயமான் (ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக்
காலத்தின் போதும தீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி),
அர்மீனியா மற்றும் அஃதர்பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து
வெற்றி கொள்வதற்கான போரில் கலந்து கொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள்.
ஹுதைஃபா (ரலி) அவர்களை,
(இராக் மற்றும் ஷாம்நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை
ஓதும் முறையில் கருத்து வேறுபாடு கொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா (ரலி) உஸ்மான் (ரலி) அவர்களிடம்,
'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்)
கருத்து வேறுபாடு கொண்டதுபால் இந்தச் சமுதாயமும் இந்த(த்திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்துவேறுபாடு கொள்வதற்கு
முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர்
அவர்களே!' என்றுகூறினார்கள்...
புகாரி 4987
அனஸ்(ரலி) அறிவித்தார்
உஸ்மான்(ரலி) (அன்னை
ஹஃப்ஸாவிடமிருந்து குர்ஆன்பதிவுகளை வாங்கி வரச்செய்து) ஸைத் இப்னு
ஸாபித், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், ஸயீத்
இப்னு ஆஸ், அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்
(ரலி) ஆகியோரை அழைத்து, (அவற்றைப் பிரதியெடுக்கப் பணித்தார்கள்) அவர்கள் ஏடுகளில்
அவற்றைப் பிரதியெடுத்தார்கள். உஸ்மான்(ரலி)
(அன்சாரியான ஸைத் இப்னு ஸாபித் தவிர உள்ள) குறைஷிகளின்
மூன்றுபேர் கொண்ட அந்தக் குழுவிடம், 'நீங்கள் மூவரும் ஸைத் இப்னு
ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஒரு (எழுத்து இலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறைஷிகளின் மொழி வழக்கிலேயே அதை எழுதுங்கள்.
ஏனெனில், குர்ஆன் குறைஷிகளின் மொழி வழக்கில்தான்
இறங்கியது" என்று கூறினார்கள். அக்குழுவினரும்
அவ்வாறே செய்தார்கள்.
புகாரி 3506
ஹப்ஸாவிடமிருந்த
குர்ஆன் தொகுப்பைப் பிரதியெடுப்பதோடு நின்றுவிடாமல் திருத்தங்களையும் மேற்கொள்கிறார்.
குர்ஆன் குறைஷிகளின் மொழிவழக்கில் மட்டுமே இறங்கியதென்பதை ஹதீஸ்கள் ஒப்புக்கொள்ளவேண்டுமே?
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரேயொரு
(வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார்.
ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின்படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு
அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில்
ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு
வந்து நின்றது.
புகாரி 3219
மேடை,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பலகுரலில் பேசுபவர்கள், ஒரே வசனத்தை வெவ்வேறு நபர்கள்,
வேவ்வேறுவிதமான மொழிவழக்கில் பேசுவதைப் போன்று பேசி நம்மை வியக்க வைப்பதை பார்த்திருப்பீர்கள்.
ஜிப்ரீலிடம், முஹம்மதுவும் அத்தகைய ’மிமிக்ரி’ பயிற்சியை எடுத்திருக்கிறார்.
பலகுரல்
வித்தையில் பயிற்சி பெறுவதைவிட அல்லாஹ்வின் வஹீயை குறைந்தபட்சமாக இன்னொரு மொழியிலும்
வெளியிட முயன்றிருக்கலாம். இதை எதற்காகக் கூறுகிறேன் என்றால், அரபியில் உள்ளது மட்டுமே
குர்ஆன் எனவும் மொழிபெயர்ப்பிலுள்ளவைகள் குர்ஆன் இல்லை எனவே தர்ஜமாவிலிருப்பவைகள் தவறான
பொருளைக் கொடுத்தால் அதற்கு அல்லாஹ்வைக் குறைகாணக் கூடாது என்கிறனர்.
தமிழில் உள்ளது குர்ஆன் அல்ல..!
(முஹம்மதே!) அவர்கள் படிப்பினை பெறவே இதை உமது
மொழியில் எளிதாக்கியுள்ளோம்.
குர்ஆன் 44:48
அவர்கள்
படிப்பினை பெற்றார்களா? இல்லையா? என்பது நமக்குத் தேவையில்லை. அரபு அல்லாத மொழியைத்
தாய்மொழியாக கொண்டவர்களுக்கு என்ன பதில்? என்பதையே நாம் கவனிக்கவேண்டும்! குர்ஆனை மற்ற
பிறமொழிகளால் ஒருகாலும் புரிந்து கொள்ளவே முடியாது. உதாரணத்திற்கு, தமிழர் ஒருவர் சர்வ்வல்லமையுடைய
அல்லாஹ்வின் கட்டளைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அரபியைப்பயின்று மொழியிலக்கணத்தில்
கற்றுத்தேர்ந்து முனைவர் பட்டம் வாங்கினாலும் குர்ஆனை புரிந்து கொள்ள முடியாது!
ஏனெனில்,
அப்துல்
வஹ்ஹாப், நிஜாம்தீன் மன்பயீ, அப்துல் காதிர், அஷஹைக் நாகூர் பிச்சை, முஹம்மது அபூபக்ரு
அஸ்ஸித்தீக்,இக்பால் மதனி, அஷ்ஷைக் முஸ்தஃபா,
அஷ்ஷைக் முஹம்மது, மக்தூம் அஹ்மது ஃபாரூக், அஷ்ஷைக் முத்து வாப்பா அப்துஸ் ஸமது…
(இன்னும் உங்களுக்குத் தெரிந்த தமிழ்-அரபிமொழி வல்லுனர்களைச்
சேர்த்துக் கொள்ளவும்) போன்ற அரைகுறை(?!) மொழிவல்லுனர்களும் மொழிபெயர்த்த
குர்ஆனில் குறைவு ஏற்பட்டுவிட்டது.
இக்குறையை
சரிசெய்ய அரபிகளுக்கே அரபி சொல்லிக் கொடுக்கும் அறிஞர் பீஜே மற்றும் அவரது உதவியாளர்கள்
களத்திற்கு வந்தனர். அவர்கள் மொழிபெயர்த்தும் விதவிதமாக விளக்கமளித்தும் திருத்தங்கள்
செய்த பிறகும் தமிழில் உள்ளதை அவர்களே குர்ஆனாக ஏற்கமறுக்கின்றனர், மட்டுமல்லாமல் குறைகள்
இருக்குமென்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவும் செய்கின்றனர். அரபிமொழியைக் கற்பதால் அல்லாஹ்வின் வஹீயை நாம் புரிந்துகொள்ளலாம்
என்ற கற்பனை அர்த்தமற்றது என்பதையே மொழிபெயர்ப்பாளர்களின் அனுபவங்கள் நமக்கு கற்றுத்தருகின்றன.
மேலே குறிப்பிடப்பட்டவர்களும், இன்னும் அன்றாடம் பள்ளிவாசல்களிலும், மதரஸாக்களிலும்
நாம் காணும் பல்வேறு அறிஞர்கள் அனைவருமே தங்களது வாழ்வின் பெரும்பகுதியை குர்ஆனைக்
கற்றுத் தேர்வதற்காக அரபிமொழியை பயில்வதிலேயே செலவிட்டவர்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.
குர்ஆனின்
இந்நிலை ஏனெனில்,
இது, தாய் கிராமத்தை(மக்காவை)யும், அதைச் சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே!)
நீர் எச்சரிப்பதற்காக நாம் அருளிய வேதம்.
குர்ஆன் 6:92
(மக்கா எனும்) நகரங்களின் தாயையும் அதைச்
சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும், சந்தேகமே இல்லாத ஒன்று திரட்டப்படும் நாளைப் பற்றி எச்சரிப்பதற்காகவும் உமக்கு
(தெரிந்த) அரபு மொழியில் குர்ஆனை அறிவித்தோம்.
குர்ஆன் 42:07
நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் இக்குர்ஆனை நாம் அருளினோம்.
குர்ஆன் 12:02
முஹம்மதையும்
அவர் வாழ்ந்த பகுதியைச் சுற்றியிருந்தவர்களையும் மட்டும் திருத்தவேண்டுமென்பதே அல்லாஹ்வின்
நோக்கம். அதனால்தான் மொழிபெயர்ப்புகள் பயனளிக்க மறுக்கின்றன(!?). உங்களுக்கு விளங்கும்
வகையில் வேதம் வழங்கவேண்டுமென அல்லாஹ் விரும்பியிருந்தால்,
எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக
அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்...
குர்ஆன் 14:04
உங்களது
சமுதாயத்தின் மொழியிலேயே தூதர்களை அனுப்பியிருப்பான். மொழிபெயர்ப்புகளை அல்லாஹ்வும்
விரும்புவதில்லை. காரணம்,
"ஒரு மனிதர் தான் இவருக்குக் கற்றுக்
கொடுக்கிறார்'' என்று அவர்கள் கூறுவதை அறிவோம். யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று
மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழி.
குர்ஆன் 16:103
நமது எதிரணியினர்,
குர்ஆன், ஹதீஸ்களை நாம், நமது விருப்பங்களுக்கு ஏற்ப வளைத்து விளக்கமளிப்பதாக குறைபட்டுக்
கொள்கின்றனர். எனவே அறிஞர் பீஜே அளித்த விளக்கங்களையும் இங்கு தருகிறேன்.
…எந்த மனிதர்
நபிகள் நாயகத்துக்கு இரகசியமாகக் குர்ஆனைக் கற்றுக் கொடுக்கிறார் என்று கூறினார்களோ
அந்த மனிதரின் தாய்மொழி அரபியல்ல. அவர் வேற்றுமொழியைச் சேர்ந்தவராவார்.
வேற்று மொழியைச் சேர்ந்த ஒருவர் அரபுமொழியில் மிக உயர்ந்த தரத்தில் எவ்வாறு
இதைத் தயாரித்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி அவர்களின் அறியாமையைத் திருக்குர்ஆன்
அம்பலப்படுத்தியது…
142.
பிரமிக்கவைத்ததிருக்குர்ஆன்
…இதை நபிகள் நாயகம்
(ஸல்) சுயமாகக் கற்பனை செய்து கூறுகிறார் என்று அம்மக்களால்
நினைக்க இயலவில்லை. எனவே நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களை அடிக்கடி சந்திக்கும் ஒருவர்தான் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களுக்கு இதைக்கற்றுக் கொடுப்பதாகக் கூறினார்கள்.
ஆனால் யார் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதாகக் கூறினார்களோ
அவரது தாய்மொழி அரபியல்ல. குர்ஆனோ தெளிவான அரபுமொழியில் அமைந்துள்ளது என்பதைத்
தெளிவுபடுத்துவதற்காக அரபுமொழியில் அருளப்பட்டதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.
(பார்க்க: திருக்குர்ஆன் 16:103)..
227.
அரபுமொழியில் வேதம்
அரபு அல்லாத மொழியைத் தாய்மொழியாகக்
கொண்டவர்களால் குர்ஆனைக் கற்றுக் கொடுக்க முடியாது. ஏனெனில் அதன் நுட்பம் அத்தகையது
என்பதே அறிஞர் பீஜேவின் விளக்கம். எனவே பிறமொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களால், நமது
அறிஞர் பீஜே உட்பட குர்ஆனை ஒரு பொழுதும் விளங்கிக் கொள்ள முடியாது என்ற முடிவிற்கே
வரவேண்டியுள்ளது!
இதை அரபு மொழியில் அல்லாத குர்ஆனாக நாம் ஆக்கியிருந்தால் இதன் வசனங்கள் தெளிவுபடுத்தப்படக் கூடாதா? (இது) அரபியல்லாததாகவும், (இவர்) அரபியராகவும் இருக்கிறாரே?''...
குர்ஆன் 41:44
”அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்”புவற்கு காரணம் இதே வசனத்தை மற்ற சமுதாயங்களும் ‘உல்டா’வாக தங்களுக்குத் தகுந்தவாறு கூறமுடியும் என்பதைக்கூட
அல்லாஹ் அறியமாட்டானா?
அல்லாஹ்வின்
வஹீயான குர்ஆனை புரிந்துகொள்ள அரபியைத் தாய்மொழியாகக் கொள்வதினாலும் பயனில்லை. ஏனெனில்
குர்ஆனில் கையாளப்பட்டுள்ள அரபு மொழிக்கும் நடைமுறையில் இருப்பதற்குமுள்ள வேறுபாட்டை
நீங்களே அறிவீர்கள். மந்தையில் ஆடு என்ற உன்னதமான மெய்யுணர்வு(!?) நிலையை அடைவதுதான்
தலைசிறந்த வழிமுறையாகும். (எந்த மந்தை?)
குர்ஆன்
தொகுக்கப்பட்டதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம் கவனம் வேறுதிசையில் சென்றுவிட்டது.
குர்ஆன், குறைஷிகளின் மொழிவழக்கில் மட்டுமே இறங்கியது என்ற கலீபா உஸ்மானின் கருத்து
தவறானது ஹதீஸ்களுக்கு எதிரானது. இது குர் ஆன்
திருத்தப்பட்டது என்பதையே வலியுறுத்துகிறது.
உத்மான்
தனது தொகுப்பிற்கு முரண்படும் இதர பிரதிகளை எரித்துவிடுகிறார். ஏனென்றால்,
…ஒருவர் தனக்கு கிடைத்த பத்து அத்தியாயங்களை குர்ஆன் என்று கூறுவார்
இன்னொருவர் வேறு சில அத்தியாயங்களம் மட்டும் குர்ஆன் எனக் கூறுவார். இது போன்ற
நிலை வரக்கூடாது என்றால் கஷ்டப்பட்டு அனைத்து அத்தியாயங்களையும் நபிகள் நாயகம்
காலத்தில் இருந்தது போல் திரட்டிய பின் அறைகுறையாக எழுதி வைத்திருப்பதை அழிப்பது
அவசியமானதே. அழிக்கப்பட்டதில் என்ன இருந்ததோ அவை அனைத்தும் உஸ்மான் பிரதியிலும்
இருந்தன, அவர்கள் எழுதாமல் விட்ட விஷயங்களும் மேலதிகமாக
இருந்தன. எரித்ததனால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டதே தவிர பங்கம் ஏற்படவில்லை…
இஹ்சாஸ் ஒன்லைன் என்ற இணைதளத்தின் கட்டுரையிலிருந்து…
உஸ்மான்
தொகுப்பில் தவறவிடப்பட்டவைகளைப்பற்றி ஹதீஸ்கள் விளக்குவதை முன்பே கவனித்துவிட்டோம். குர்ஆனை பாதுகாப்பதாகக்
கூறிக்கொண்டு, உஸ்மான் ஹப்ஸாவிடம் திருப்பி ஒப்படைத்துவிட்ட குர்ஆன் தொகுப்பை மர்வான்
பின் ஹகாம் எரித்து விடுகிறார். தங்களது பார்வையில் முரண்படுபவைகள் எதுவானலும் அழித்துவிடுவதுதான் இஸ்லாமிய மரபு போலும்.
குர்ஆனைக்
குழப்பமில்லாமல்(?) பாதுகாக்க தங்களுக்கு முரண்படுவதாகத் தோன்றும் பிரதிகளை அழித்தொழிக்க
வேண்டுமென்ற அறிவு, முஹம்மதின் மிக நெருங்கிய நண்பரான அபூபக்கருக்கும், அடுத்த நபியாக
அறிவிக்கப்படும் அளவிற்குத் தகுதியை பெற்றவர் என்று முஹம்மதால் புகழப்பட்ட உமருக்கும்
கூட இல்லாமல் போய்விட்டது.
ஜைத் இப்ன்
ஸாபித் தொகுத்த குர்ஆன் மட்டுமே சரியானது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?
எனவே,
நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த)
குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன்.
அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள்,
போரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம்
செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன்.
(இவ்வாறு திரட்டிபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின்
(கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை.
புகாரி 4679
வசனங்களை குஸைமா
இப்னு ஸாபித் அல்அன்சாரி என்பவரிடம்
இருந்து பெறப்பட்ட 9-ஆம் அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்கள் குர்ஆனின் பகுதிகளே
என்பதை எவ்வாறு உறுதிசெய்கிறார்கள்?
1. அபுத்தர்தா, 2. முஆத் இப்னு ஜபல், 3. ஸைத் இப்னு ஸாபித்,
4. அபூ ஸைத்(ரலி), 5. உபை இப்னு கஅப்
இந்த நபர்களைத்
தவிர வேறு எவருமே குர்ஆனை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்பது எந்த அளவிற்கு உண்மை?
தொடரும்…
தஜ்ஜால்
11 கருத்துரைகள்:
முஹம்மதின் தோழர்களுக்கு மட்டுமல்ல, குர் ஆனை அல்லாஹ்விடமிருந்து வஹியின் மூலம் தான் பெற்றதாக கூறிக்கொண்ட முகம்மதுவுக்கே கூட முழு குர்ஆனும் தெரியாது என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல் அவ்வப்போது வஹியை வெளியிட்டுக்கொண்டு இருந்ததால் அவைகள் அனைத்தையும் அவரால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. என்னதான் தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று கூறிக்கொண்டாலும் முஹம்மது சாதாரண மனிதர்தானே.
உண்மைநிலை இப்படி இருக்க, மூமின்கள் குர்ஆன் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று புல்லரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
வாருங்கள் ஆனந்த்,
// தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல் அவ்வப்போது வஹியை வெளியிட்டுக்கொண்டு இருந்ததால் அவைகள் அனைத்தையும் அவரால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. என்னதான் தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று கூறிக்கொண்டாலும் முஹம்மது சாதாரண மனிதர்தானே.// உண்மைதான்.
ஹதீஸ்கள் முஸ்லீம்களின் நம்பிக்கைகளுக்கு எதிராகத்தான் உள்ளது. ஹதீஸ் பலவீனமானது, ஆரோக்கிய குறைபாடுள்ளது, புரிந்து கொள்வதில் பிழை ஏற்பட்டுள்ளது என்று என்னதான் மழுப்பல், மறைத்தல் வேலைகளைச் செய்தாலும் உண்மை மறைவதில்லை.
முப்பது (?) பெண்களை திருப்தி செய்யும் அளவு சக்தியை தந்த அல்லா அவர் கொடுத்த குரானை நினைவில் வைத்து காப்பாற்றும் அளவு நினைவாற்றலை தந்திருக்கலாம் என்பது சாதராண மனித சிந்தனையாகும். இதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சி உள்ளது.
வாருங்கள் ANT,
//குரானை நினைவில் வைத்து காப்பாற்றும் அளவு நினைவாற்றலை தந்திருக்கலாம்// முஹம்மதின் சின்றின்பத் தேவைகளை பதமாக கவனிக்கவே அல்லாஹ்வின் நேரம் சரியாக இருந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
//எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், போரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை.
புகாரி 4679 //
இப்படி தெருவுல போனவன் வந்தவனிடம் எல்லாம் சேகரிச்சு, இதில் மனிதர்கள் நெஞ்சுகளில் வேறு சேகரிச்சு மொத்தமா தொகுத்துட்டா அதான் இறை வேதமா?? சுத்த பேத்தலாவுல்ல இருக்கு. இதை நம்ப கோடானு கோடி ஆட்கள் இருப்பதை நினைக்கும் போது,இப்படியும் முட்டாளாக்க முடியுமா என்று எண்ணத் தோன்றுகிறது..
வாருங்கள் இனியவன்,
// இப்படியும் முட்டாளாக்க முடியுமா என்று எண்ணத் தோன்றுகிறது..// இவர்களைவிட வடிகட்டிய மடையர்களை எங்கு தேடினாலும் காணமுடியாது. இதில் அடுத்தவர்களை எள்ளிநகையாடுதான் உலகமகாக் கொடுமை!
// யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழி.
குர்ஆன் 16:103// மொழி பெயர்ப்பில் ஈடுபடுபவர்கள் அணைவரும் இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட மொழிகளில் வல்லுனர்களே. ஒரு மொழியை அறிந்தவரால் இன்னொரு மொழியில் எதையும் கூற முடியாது என்பது ஏற்கக்கூடியதல்ல என்பதை சிறுவர்கள் கூட நம்ப மாட்டார்கள்.
//"ஒரு மனிதர் தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்'' என்று அவர்கள் கூறுவதை அறிவோம்.// அந்த காலத்தில் காட்டுமிராண்டிகளிடையே உயிரை துச்சமாக மதித்து உண்மை பேசியவர்கள் இருந்துள்ளனர்.
// யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழி. குர்ஆன் 16:103// மொழி பெயர்ப்பில் ஈடுபடுபவர்கள் அணைவரும் இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட மொழிகளில் வல்லுனர்களே. ஒரு மொழியை அறிந்தவரால் இன்னொரு மொழியில் எதையும் கூற முடியாது என்பது ஏற்கக்கூடியதல்ல. இதை சிறுவர்கள் கூட நம்ப மாட்டார்கள்.
//"ஒரு மனிதர் தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்'' என்று அவர்கள் கூறுவதை அறிவோம்.// அந்த காலத்தில் காட்டுமிராண்டிகளிடையே உயிரை துச்சமாக மதித்து உண்மை பேசியவர்கள் இருந்துள்ளனர்.
வாருங்கள் Ant,
குர்ஆனை விமர்சிக்கிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குர்ஆனிலிருந்து புதுபுதுக் குழப்பங்களை வெளீக் கொணர்கின்றனர், அவர்களும் எவ்வளவுதான் மழுப்பமுடியும்? தப்பிக்க வழி, குர் ஆனை அரபிமொழியில் மட்டுமே புரிந்து கொள்ள முடியுமென்ற தற்காப்பு வாதமுறையை மேற்கொள்கின்றனர். அதுவும் பயனளிக்கவில்லை.
குர்ஆனை கற்றறிந்த அறிஞர்களாலேயே புரிந்து கொள்ள முடியவில்லையெனில் பாமர மனிதர்கள் என்ன செய்ய முடியும்?
ஆனாலும் தஜ்ஜால் தோழர் வரவர அனியாதுக்கு கலக்குரிங்க நீங்க. இந்த அடி அடிச்ச மூஃமின்கள் நிலைமை என்ன ஆவுரது.என் நன்பன் ஒருவனுக்கு இந்த தளத்தை அறிமுக படுத்தினேன்.அதுக்கு அப்பறம் எந்த பக்கமே வரமாட்டென்குரான்..குரானை எதிர்ப்பவர்கள் இன்று கனிசாமாக உயர்ந்து இருக்கின்றது.பல கேள்விகள் பதில் அளிக்க முடியாமல் மூஃமின்கள் தடுமாருகின்றனர்..தொடரட்டும் தங்கள் பணி....
முஸ்லீம்1897 குறிப்படபட்டுள்ள வசனங்கள் இப்போது உள்ளதா? ஏனெனில் ஒரு வசனத்தை ஒருவர் மட்டுமே அறிந்திருந்தால் சிக்கல்தான். ஆனால் பலர் அதை ஓதி வந்த வேளையில் ஒருவருக்கு மறந்து போக வாய்ப்புள்ளது. அது ஏற்க்க கூடயதே காரணம் பள்ளியில் அணைத்து மாணவர்களும் பாடங்களை மனனம் செய்கின்றனர் சிலர் நினைவில் கொள்ளவும் சிலர் மறக்கவும் செய்வது இயல்பே ஆனாலும் பாடங்கள் இருக்கும். //தமிழில் உள்ளது குர்ஆன் அல்ல..!// கானொளியும் குர்ஆன் 44:48 வசனமும் அது தமிழர்களுக்கு இல்லை என்பது தெளிவு. //எச்சரிப்பதற்காக நாம் அருளிய வேதம். உமக்கு (தெரிந்த) அரபு மொழியில் குர்ஆனை அறிவித்தோம். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் இக்குர்ஆனை நாம் அருளினோம். குர்ஆன் 12:02// அரபிகள் விளங்கி கொள்ளாமல் இருந்தனர் அவர்களை எச்சரிக்க வே அல்லா நபிவழி குரானை அனுப்பினான் நிச்சயமாக தமிழர்களை பற்றி ஒரு வரி கூட இல்லை அதனால் அது அரபிகள் அல்லாதவர்களுக்கு பின்பற்றதக்க வகையில் இருந்திருக்க வில்லை மாறாக காட்டுவாசி அரபி கூட்டத்தை சிந்திக்க வைக்க தான். நிச்சயமாக இதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சி உள்ளது.
Post a Comment