சக்களத்திச் சண்டையும்
வேதவெளிப்பாடும்
முஹம்மது நபி அவர்களுக்கு தேனை
மிக விரும்பி உண்பார். தினமும் ஒவ்வொரு
மனைவியின் வீட்டுக்கும் செல்வது முஹம்மது நபி அவர்களுக்கு வாடிக்கை. ஜைனப் அவர்களின் முறை வரும் பொழுது சற்று கூடுதலான
நேரம் தங்கி அவர் தரும் தேனைக் குடித்து மகிழ்வார். இதை மற்ற
மனைவியர்களால் பொறுக்க முடியாமல் மனைவியருக்கிடையே
ஏற்பட்ட சக்களத்தி சண்டையில் தேன் உண்பதை நிறுத்திவிடுவதாக கூறுகிறார்
(புகாரி 4912, 5267, 5268).
புகாரி ஹதீஸ் -4912
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம், அவர்களது (வீட்டில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள்.
(இது பிடிக்காமல் நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப்பேசி முடிவு
செய்து கொண்டோம் தேன் சாப்பிட்ட பின்) நம்மவரில் எவரிடம் நபி
(ஸல்) அவர்கள் முதலில் வருவார்களோ,
அவர், நபி (ஸல்) அவர்களிடம் கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா உங்களிடமிருந்து பிசினின்
துர்வாடை வருகிறதே என்று கூறி விடவேண்டும். வழக்கம்போல
ஸைனப்பின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டு விட்டு நபி (ஸல்)
அவர்கள் வந்த போது நாங்கள் பேசிவைத்த பிரகாரம் கூறியதற்கு அவர்கள்
இல்லை (பிசின் சாப்பிட வில்லை) ஸைனப்
பின்த் ஜஹ்ஷ் (வீட்டில்) தேன்
குடித்தேன். (இனிமேல்) நான் ஒரு போதும்
அதைக் குடிக்கமாட்டேன், நான் சத்தியமும் செய்து விட்டேன்
என்று கூறிவிட்டு இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே என்று கூறினார்கள்.
மனைவியர்களின் செயலால் வருத்தமடைந்த முஹம்மது நபி ஒரு
மாத காலம் எந்த மனைவியர்களின் வீட்டிற்கும் செல்லாமல்
இருக்கிறார்.
புகாரி ஹதீஸ் : 5203
அபூ ய அபூர்
அப்துர் ரஹ்மான் பின் உபைத் அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது
நாங்கள்
அபுள்ளுஹா (ரஹ்) அவர்களிடம் (ஒரு மாதத்திற்கு எத்தனை நாள் என்பது குறித்து) விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர்கள்,
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வரும் ஹதீஸை)க் கூறினார்கள். ஒரு நாள் காலை நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அழுது
கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அருகில் அவரவர்
குடும்பத்தினரும் இருந்தனர். நான் (மஸ்ஜதுந் நபிவீ) பள்ளிவாசலுக்குப்
புறப்பட்டுச் சென்றேன். பள்ளிவாசல் மக்களால் நிரம்பியிருந்தது.
அப்போது உமர் பின் கத்தாப் (ரலி)
அவர்கள் வந்து, நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த மாடியறைக்கு ஏறிச்
சென்றார்கள். (நபி (ஸல்) அவர்களுக்கு) சலாம் (முகமன்)
சொன்னார்கள். ஆனால் யாரும் உமருக்கு
பதில் சலாம் சொல்லவில்லை. மீண்டும சலாம் சொன்னார்கள்.
அப்போதும் அவர்களுக்கு யாரும் பதில் சலாம் சொல்லவில்லை. பிறகு (மூன்றாம் முறையாக) சலாம் சொன்னார்கள். அப்போதும் யாரும் (உமர் (ரலி) அவர்களுக்கு)
பதில் சலாம் சொல்லவில்லை. அப்போது உமர் (ரலி) அவர்களை நபி (ஸல்)
அவர்கள் அழைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்)
அவர்களிடம் சென்று, தங்கள் துணைவியரை (தாங்கள்) விவாக ரத்துச் செய்துவிட்டிர்களா?
என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை.
ஆனால், ஒரு மாத காலம் (அவர்களை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் (ஈலாஉ) செய்தவிட்டேன் என்று பதிலளித்தார்கள்.
அங்கு நபி (ஸல்) அவர்கள் இருபத்தொன்பது நாட்கள் தங்கியிருந்துவிட்டுப் பிறகு தம்
துணைவியரிடம் சென்றார்கள்
Bukhari Volume
3, Book 43, Number 648:
The Prophet did
not go to his wives because of the secret which Hafsa had disclosed to 'Aisha,
and he said that he would not go to his wives for one month as he was angry
with them when Allah admonished him.
(அல்லாஹ் அவரை (நபியை)
எச்சரிக்கை செய்த நிகழ்ச்சியில், ஹஃப்ஸா
ரகசியத்தை ஆயிஷாவிடம் தெரிவித்ததால் கோபமடைந்த அல்லாஹ்வின் தூதர் ஒரு மாதகாலம்
அவர்களிடம் (மனைவியர்களிடம்) செல்ல
மாட்டேன் என்று கூறினார்)
இவ்விஷயத்தில்
ஹஃப்ஸா மீது மனவருத்தம் கொண்டு அவரை விவாகரத்து செய்ய நாடினார். இந்த விஷயங்கள் அல்லாஹ்வின் கவனத்திற்கு வருகிறது, அவ்வளவு
எளிதில் விடுவானா? ஜிப்ரீலை
உடனே அனுப்புகிறான். ஜிப்ரீல் தலையீடு காரணமாக தலாக் சொல்வது
தடுக்கப்பட்டது. நபிக்கு எதிராக செயல்பட்ட மனைவியர்களை
கடுமையாக எச்சரித்தான். உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு உணவை எப்படி நீங்கள் ஹராமாக்கலாம்? என்று உடனே வஹி அனுப்பி தேன்
சாப்பிட வைத்தான்.
1. நபியே உம்முடைய மனைவியரின் திருப்திகளை
நீர் நாடி அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன் மிகக் கிருபையுடையவன்.
2. (இத்தகைய) உங்களுடைய சத்தியங்களை முறிப்பதை அல்லாஹ்
உங்களுக்கு திட்டமாகக் கடமையாக்கி இருக்கிறான். அல்லாஹ்
உங்களுடைய எஜமான் – அவன் முற்றும் அறிந்தவன் ஞானமுள்ளவன்.
3. இன்னும் நபி, தம்
மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாகச் சொல்லிய நேரத்தை (நினைவு கூர்க) அதனை அவர் (அம்மனைவி
மற்றொரு மனைவிக்கு) அறிவித்து, அல்லாஹ்
அவருக்கு (நபிக்கு) வெளியாக்கிய போது,
அவர் (நபி) அதில் சிலதை
அறிவித்தும் மற்றும் சிலதை புறக்கணித்தும் விட்டார். அவர்
அதனை அவருக்கு (தம் மனைவியரில் ஒருவருக்கு) அறிவித்த போது இதனை உமக்கு அறிவித்தவர் யார்? என்று (மனைவியரான) அவர் கேட்டார் முற்றும் அறிந்தவனும் (எல்லாவற்றையும்) தெரிந்தவனாகிய (அல்லாஹ்) எனக்கு அறிவித்தான் என்று அவர் கூறினார்.
4. (நபியின் மனைவியரான) நீங்கள் இருவரும் அல்லாஹ்வின்பால் (தவ்பா செய்து)
மீண்டால் (அது உங்களுக்கு நன்மையாகும்)
ஏனெனில் உங்களிருவருடைய இதயங்களும் அவ்வேளையில் திட்டமாக சாய்ந்து
விட்டன; நீங்கள் இருவரும் (நபிக்கு)
எதிராக உதவி செய்து கொண்டால், அப்போது
நிச்சயமாக அல்லாஹ் அவருடைய உதவியாளனாக இருக்கிறான். இன்னும்
ஜிப்ரீலும் முஃமின்களில் ஷாலிஹானவர்கள் அவருக்கு உதவியாளர்களாவார்கள். அதற்குப் பின்னும் மலக்குகள் உதவியாளர்களாவார்கள்.
(குர்ஆன் 66:1-4)
நபியிடம், அல்லாஹ்
கொண்ட அன்பை சொல்லில் விளக்க முடியாது. ஆனால்
அல்லாஹ்விற்கு அந்த சக்களத்தி சண்டையை நிறுத்தத் தெரியவில்லை. அல்லாஹ்வை இதை விட வேடிக்கையாக சித்தரிக்க முடியாது. தேன் அனுமதிக்கப்ட்ட உணவாக
இருப்பினும் கட்டாயமாக சாப்பிட வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லையே. நபி தேன் அருந்த மாட்டேன் என்று
கூறுவதில் என்ன ரகசியம் இருக்க முடியும்?
நபி தேன் அருந்த மாட்டேன் எனக்
கூறியது வெளியானால், நபியின் செயல்
முறைகளை பின்பற்றிவரும் சஹாபாக்களும் தேன் அருந்தாமல் விட்டுவிடுவார்களோ என
அஞ்சியே இந்த செய்தியை ரகசியமாக பாதுகாக்குமாறு நபி கூறினார் என்று
விளக்கமளிக்கின்றனர்.
தேன் கெட்ட வாசனையுடையது அல்ல
என்பது அனைவரும் மிக நன்றாக அறிந்த செய்தி. மக்ஃபிர் என்பது
கருவேல மரத்தின் பிசின் என்கிறார்கள் சில அறிஞர்கள் பேரீச்சை மரத்தில்
உருவாக்கப்படும் 'கள்'
வகை மது என்கிறார்கள். எப்படியிருந்தாலும்
தேனின் வாசனைக்கும் (Maghafir) மக்ஃபிர் -ன்
வாசனைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மக்ஃபிர் மிக மோசமான வாசனையுடையது. மனைவியர்கள் மக்ஃபிர் -ன் வாசனை வருகிறது என்று
முஹம்மது நபி அவர்களிடம், பொய்யுரைத்தவுடன் அதை அப்படியே
நம்பி தேன் அருந்துவதை கைவிடுவதாக முஹம்மது நபி கூறினாராம். அல்லாஹ்வும் வஹீ அனுப்பி தேன் அருந்தச் செய்தானாம். அறிஞர்களால்
அங்கீகரிக்கப்பட்ட இந்த ஹதீஸ்கள் சிறிதும் பகுத்தறிவிற்கு பொருந்தவில்லை. தேனின் வாசனைக்கும் மக்ஃபிர்-ன் வாசனைக்கும் உள்ள
வித்தியாசம் தெரியாதவரா முஹம்மது நபி?
அல்லது மக்ஃபிர் சாப்பிட்டு இருந்தாரா?
மேற்கண்ட ஹதீஸ் கூறும்
நிகழ்ச்சியின் அடிப்படையான விஷயம் என்னவென்றால் முஹம்மது நபி அவர்களை, ஜைனப் பின்த் ஜஹ்ஷ் வீட்டில் அதிக நேரம்
தங்குவதைத் தடுப்பது மட்டுமே நபியின் மற்ற மனைவியர்களான ஆயிஷா மற்றும் ஹப்ஸா
ஆகியவர்களின் நோக்கம்; தேன் அருந்துவதை வெறுக்கச் செய்வது அல்ல. அதாவது கணவன் தனக்கு மட்டுமே
சொந்தம் (Possessiveness) என்று எண்ணிய அப்பாவி மனைவிகளின்
அன்பினால் ஏற்பட்ட சக்களத்திச் சண்டையே இந்நிகழ்ச்சி. இதில்
வேறு எந்த சதித் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால்
அல்லாஹ், மேற்கூறிய அடிப்படைக் காரணத்திற்கு சிறிதும்
தொடர்பில்லாமல் மனைவியர்கள் சதி செய்து விட்டதாக கூறி, ஆயிஷா
மற்றும் ஹப்ஸாவை எச்சரிக்கிறான். நபிக்கு உதவி செய்வதற்கு
ஜிப்ரீல், முஃமின்களில் ஷாலிஹானவர்கள், மலக்குகள் என நிறைய பேர் உள்ளனர் என்றும் பட்டியலிடுகிறான். இஸ்லாமிய அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட "தேன்
குடித்த" சம்பவத்தை என்னால் ஏற்க முடியவில்லை. அல்லாஹ்வே வஹீயின் மூலம் நபியின் மனைவியர்களை எச்சரிக்கை செய்கிறான் என்றால், நிச்சயமாக
வலுவான வேறு காரணம் இருக்க வேண்டும்.
நாம் முதலில் பார்த்த ஹதீஸில், ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம், அவர்களது வீட்டில் தேன் சாப்பிட்டுவிட்டு,
அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள்.
இதை விரும்பாத ஆயிஷாவும் ஹப்ஸாவும் சதி செய்ததாக கூறியது. பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்…
புகாரி ஹதீஸ் : 5268
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களுக்குத் தேனும்
இனிப்பும் மிக விருப்பமானவைகளாக இருந்தன. அஸ்ர் தொழுகையை
முடித்ததும் நபி (ஸல்) அவர்கள்
தம் துணைவியாரிடம் செல்வார்கள்: அவர்களில் சிலருடன்
நெருக்கமாகவும் இருப்பார்கள். இவ்வாறு (ஒரு முறை) தம் துணைவியால் ஒருவரான ஹஃப்ஸா
பின்த் உமா (ரலி) அவர்களிடம் நபி
(ஸல்) அவர்கள் சென்று
வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்து விட்டார்கள். ஆகவே நான் ரோஷப்பட்டேன். அது
குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின்
குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர
சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கிளாள்
என்றும் அதிலிருந்து தயாரித்த பானத்தை நபி (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது.…
தன்னுடைய
வீட்டில், முஹம்மது நபி அதிக நேரம்
தங்கி தேன் அருந்தியது
ஹஃப்ஸாவிற்கு பிடிக்கவில்லையா? முஹம்மது நபி
தன்னுடைய வீட்டிற்கு வருவதை ஹஃப்ஸா விரும்பவில்லையா? (என்னய்யா…! குழப்பம் இது?) 66 :
1–4 குர்ஆன் வசனத்தில்
அல்லாஹ் கண்டிப்பது யாரை?
புகாரி ஹதீஸ் -4913
இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
நான் ஒரு வருட காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் பின்
கத்தாப் (ரலி)
அவர்களிடம் (விளக்கம்) கேட்க
வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்னார் மேலிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காரணமாகக் கேட்பதற்குத் தைரியம் வரவில்லை. (ஒருமுறை)
உமர் (ரலி) அவர்கள்
ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களுடன் புறப்பட்டேன். நான் (ஹஜ் முடித்துக் கொண்டு) திரும்பி
வரும் வழியில் நாங்கள் (மர்ருழ்) ழஹ்ரான்
எனும்) ஒரு சாலையில் இருந்தோம். அப்போது
உமர் (ரலி) அவர்கள் தமது (இயற்கைத்) தேவை ஒன்றிற்காக அராக் மரத்தை நோக்கி
ஒதுங்கிச் சென்றார்கள். அவர்கள், தமது
தேவையை முடித்துக்கொண்டு வரும்வரை நான் அவர்களை எதிர்பார்த்தபடி அவர்களுக்காக
நின்றுகொண்டிருந்தேன். பிறகு அவர்களுடன் செல்லலானேன்.
அப்போது நான் அவர்களிடம், இறை
நம்பிக்கையாளர்களின் தலைவரே நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில், (நபியவர்களைச் சங்கடப்
படுத்தும் வகையில்) கூடிப்பேசிச் செயல்பட்ட இருவர் யார்?
என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தாம் அந்த இருவர் என்று பதிலளித்தார்கள். ….
...பிறகு (பின்
வருமாறு) தெரிவித்தார்கள். அல்லாஹ்வின்
மீதாணையாக* அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும்
இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்களின் உரிமைகள்
தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தை அல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரிய (செலவுத் தொகை, சொத்துரிமை ஆகிய பங்குதனைஅவன்
நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது). (ஒருநாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக்
கொண்டிருந்தபோது என் மனைவி, நீங்கள் இப்படிச் செய்யலாமே
என்று (என்னிடம் ஆலோசனை) கூறினார்.
அதற்கு நான் அவரிடம், உனக்கும் இதற்கும் என்ன
சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன்
தலையீடு எதற்கு? என்று கேட்டேன். அதற்கு
அவர் என்னிடம், கத்தாபின் புதல்வரே (இப்படிச்
சொன்ன) உங்களைப் பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ
தம் துணைவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களுடன் விவாதித்ததால் அன்றைய நாள் முழுக்க அல்லாஹ்வின் தூதர்
கோபமாக இருந்தார்கள் என்று சொன்னார். உடனே நான் எழுந்து,
அதே இடத்தில் எனது மேலங்கியை எடுத்துக்கொண்டு, ஹஃப்ஸாவிடம் சென்று, என் அருமை மகளே, நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்
வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் கோபமாக
இருந்தார்களாமே (உண்மையா?) என்று
கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, அல்லாஹ்வின்
மீதாணையாக (நபிகளாரின் துணைவியரான) நாங்கள்
நபியவர்களுடன் விவாதிப்பதுண்டு என்றhர். அதற்கு நான், அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய
தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தையும்
பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். அருமை மகளே
தன்னுடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ
அவரை-ஆயிஷாவை-ப் பார்த்து நீயும்
துணிந்து விடாதே என்று (அறிவுரை) சொன்னேன்.
பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டு, (நபி (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியாரான உம்மு சலமாவிடம் அறிவுரை கூறச்சென்றேன்.
ஏனெனில், அவர் (என்
தாய்வழி) உறவினராவார். இது குறித்து
அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா, கத்தாபின் புதல்வரே உம்மைக் கண்டு நான் வியப்படைகின்றேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும்
இடையும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்கள் என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக உம்மு சல்மா (தம் பேச்சால்)
என்னை ஒரு பிடி பிடித்து விட்டார். எனக்கு
ஏற்பட்டிருந்த பாதி கோப உணர்ச்சியை உடைத்தெறிந்துவிட்டார். ஆகவே நான், அவரிடமிருந்து
வெளியேறி வந்துவிட்டேன். மேலும், அன்சாரிகளில்
எனக்கொரு நண்பர் இருந்தார். நான் (நபி (ஸல்) அவர்களது அவையில்) இல்லாதபோது
கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர்
இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம். (அந்தக் காலக் கட்டத்தில் ஷாம் நாட்டு) ஃகஸ்ஸான் வம்ச
மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா) மீது
படையெடுக்க விரும்புவதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால்
அவனைப் பற்றிய அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது. இந்நிலையில், (ஒரு நாள்) அந்த
அன்சாரி நண்பர் (என் வீட்டுக்) கதவைத்
தட்டினார். திறங்கள், திறங்கள் என்று
சொன்னார். (கதவைத் திறந்த) நான்
ஃகஸ்ஸானிய மன்னன் (படையெடுத்து) வந்துவிட்டானா?
என்று கேட்டேன். அதற்கவர், அதைவிடப் பெரியது நடந்து விட்டது, அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் தம் துணைவியரை விட்டு
விலகிவிட்டார்கள் என்றார். உடனே நான், ஹஃப்ஸா,
ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறிவிட்டு…
ஹஃப்ஸா செய்த விவாதத்தால்,
முஹம்மது நபி கோபமடைந்து ஒரு மாத காலம் மனைவியர்களை விட்டு விலகி
இருந்ததுடன் அவர்களை விவாகரத்து கூறுமளவிற்கு
சென்று விட்டதாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது.
தேன் குடித்ததற்கு இவ்வளவு பெரிய பிரச்சினையா? மற்ற மனைவியர்களையும் எதற்காக விலக்கி வைக்க வேண்டும்?
தன்னுடைய மகள் உட்பட நபியின் மனைவியர்கள் அனைவரும் தவறு
செய்து விட்டதாக நினைத்து அறிவுரை கூறச் சென்ற உமர் அவர்களை, "அல்லாஹ்வின் மீதாணையாக உம்மு சல்மா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்து விட்டார்.
எனக்கு ஏற்பட்டிருந்த பாதி கோப உணர்ச்சியை உடைத்தெறிந்துவிட்டார்"
என்று கூறுமளவிற்கு உம்மு சல்மா என்ன பதில் விளக்கத்தைக் கூற
முடியும்?
ஒரு ஹதீஸ், ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம், அவர்களது
வீட்டில் தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள் என்று கூறுகிறது.
மற்றொன்று ஹஃப்ஸா வீட்டில் சற்று அதிக நேரம் தங்கியதாக கூறுகிறது.
இன்னொரு ஹதீஸ், ஹஃப்ஸாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்ததாக கூறுகிறது.
ஸைனப் பின்த் ஜஹ்ஷ் வீட்டில் அதிக நேரம் தங்கிவிடுவார்கள்
என்று அறிவிப்பதும், ஹஃப்ஸா வீட்டில்
சற்று அதிக நேரம் தங்கியதாக அறிவிப்பதும் ஆயிஷாதான். ஏன்
இந்த ஆள்மாறட்ட குழப்பம்?
இதில் நமது வாதத்திற்கு சாதகமான ஒரு செய்தி
மறைந்திருக்கிறது.
66 : 1–4 வரையுள்ள குர்ஆன் வசனத்திற்கு
உண்மையை தேடிய பொழுது இன்னொரு விளக்கமும் கிடைத்தது. முஹம்மது நபி
குடித்த தேன் எது? எங்கிருந்து வந்தது? இப்ன் ஸாத் –ன் தபாகத் தரும்
விளக்கத்தைக் காண்போம்.
Reported by Ibn Sa'd in Tabaqat:
Waqidi has informed us that Abu Bakr has narrated that the
messenger of Allah (PBUH) had sexual intercourse with Mariyyah in the house of
Hafsah. When the messenger came out of the house, Hafsa was sitting at the gate
(behind the locked door). She told the prophet, O Messenger of Allah, do you do
this in my house and during my turn? The messenger said, control yourself and
let me go because I make her haram to me. Hafsa said, I do not accept, unless
you swear for me. That Hazrat (his holiness) said, by Allah I will not contact
her again. Qasim ibn Muhammad has said that this promise of the Prophet that
had forbidden Mariyyah to himself is invalid ? it does not become a violation
(hormat). [Tabaqat v. 8 p. 223 Publisher Entesharat-e Farhang va
Andisheh Tehran 1382 solar h (2003) Translator Dr. Mohammad Mahdavi Damghani]
(நபி, ஒவ்வொரு
மனைவியின் வீட்டிற்கும் தினமும் செல்லும் வழக்கமுடையவர். அவ்வாறு
ஹப்ஸாவின் வீட்டிற்கு வரும் முறையன்று, ஹப்ஸாவிடம், உனது தந்தையார் உமர் கத்தாப் உன்னை பார்க்க விரும்புவதாக கூறுகிறார்.ஹப்ஸாவும், நபியின் ஆணையை ஏற்று தந்தையை காணச்
சென்று விடுகிறார். இதற்கிடையில் அடிமைப்பெண் மரியத்துல்
கிப்தியாவுடன் கலவியில் ஈடுபட்டு விடுகிறார். சற்று
விரைவாகவே வீடு திரும்பிய ஹப்ஸா (கதவு
அடைக்கப்பட்டிருந்ததால்) வாயிலில் காத்திருக்கிறார், நடந்த நிகழ்ச்சியை உணர்ந்து கோபமடைகிறார். அவர்
நபியிடம் கூறுகிறார், "அல்லாஹ்வின் தூதரே, என் வீட்டிலா இதைச் செய்தீர்கள் அதுவும் என்னுடன் (இருக்க
வேண்டிய) முறையில்?" ஹப்ஸாவை சமாதானம் செய்ய, வேறு வழியின்றி அல்லாஹ்வால் ஹலால் ஆக்கப்பட்ட மரியத்துல் கிப்தியா இனி
தனக்கு ஹராம் எனக்கூறி ஹப்ஸாவை சமாதானம் செய்கிறார். அதற்கு
ஹஃப்ஸா அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறினால் தவிர என்னால் ஏற்க முடியாது என்கிறார். வேறுவழியின்றி
இனி மரியத்துல் கிப்தியாவுடன் தொடர்பு கொள்ள மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு
கூறுகிறார். இந் நிகழ்சியை யாரிடமும் கூறக்கூடாது எனவும்
கூறுகிறார். ஆனால் ஹப்ஸா, தன் தோழியான
ஆயிஷாவிடம் கூற விஷயம் வெளியாகிறது)
இதைக் கேள்விப்பட்ட மற்ற மனைவியர்களின் ஏளனப் பார்வையை
முஹம்மது நபியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
தன்னுடைய மனைவியர்களுக்கு புத்தி புகட்டவே ஒரு மாத காலம்
விலகியிருந்தார். விவாகரத்து செய்து விடுவதாகவும் மிரட்டல்
விடுத்தார்.
இந்த ஹதீஸைக் கூறிய வாகிதி ஒரு
பொய்யர். எனவே இந்த ஹதீஸ்
ஏற்புடையது அல்ல. தேன் குடித்த சம்பவமே சரியானது, அதுவே அறிஞர் பெருமக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹதீஸ் என்பதே
இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கம்.
66:1-4 வரையுள்ள குர்ஆன் வசனங்களை சற்று கூர்ந்து கவனித்து அதன்
பொருளைத் தெளிவாக உணர்ந்த பின், ஹஃப்ஸா வீட்டில் அதிக நேரம்
தங்கியதாகக் கூறும் புஹாரியில் பதிவு செய்யப்பட்ட நம்பகமான ஹதீஸையும், அறிஞர்களால் பொய்யர் என புறந்தள்ளப்பட்ட வாகிதியால் கூறப்பட்ட ஹதீஸுடன்
இணைத்து ஒப்பிட்டு பாருங்கள். ஹஃப்ஸா உட்பட மனைவியர்கள் அனைவரையும் மணவிலக்கு செய்யுமளவிற்கு வலுவான
காரணம் எதனுடன் பொருந்துகிறது?
தேனா? மரியத்துல்
கிப்தியாவா? நீங்களே
சிந்தித்துப் பருங்கள். "தேன்" எனக் குறிப்பிடப்படுவது சங்கேத வார்த்தையே என்பதை நீங்களே அறியலாம். இருப்பினும் எங்களால் சங்கேத
வார்த்தைகளையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது என்று கூறுபவர்களுக்காக, ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்டுள்ள புஹாரி
ஹதீஸ் தமிழ்மொழிபெயர்ப்பில் 2468 ஆம் ஹதீஸின் 15 ஆம் அடிக்குறிப்பு மரியத்துல்
கிப்தியா உடனான "ஜல்ஸா" நிகழ்ச்சியை
உறுதி செய்கிறது என்பது கூடுதல் தகவல்.
13 கருத்துரைகள்:
கண்டிப்பாக இது தேனுக்காக நடந்த சம்பவமல்ல தேனினும் இனிய அடிமைப் பெண்ணிற்காக தேனைத் தொட்டு(எடுத்து)க் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே...
தேன் நாற்றமெடுக்காது. மாறாக அது சிறதளவு நறுமணமுடையது. எனவே முஹம்மது குடித்து வந்த தேன் என்பது உண்மையில் "தேனை" குறிப்பிடவில்லை. இங்கு தேன் என்பது சங்கேத வார்த்தை. அது கிப்தியாவின் இரண்டு கால்களுக்கு இடையில் உள்ள "தேனையே" குறிக்கிறது என்று அலி சினா கூறுகிறார்.
வாருங்கள் இனியவன்,
//கண்டிப்பாக இது தேனுக்காக நடந்த சம்பவமல்ல // உண்மைதான். குர்ஆனை வாசிக்கும் எவராலும் இதை புரிந்து கொள்ள முடியும். இதனால்தான் சிந்திக்க மாட்டீர்க,ளா சிந்திக்க மாட்டீர்களா.. அல்லாஹ் என்று கெஞ்சுகிறான் போலும்.
வாருங்கள் ஆனந்த்,
முஹம்மது குடித்த தேன் எங்கிருந்து வந்ததென்று கூறுவதற்கு, எனக்கு சற்று தயக்கமாக இருந்தது. நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.
//உமக்கு ஹலாலாக்கியதை நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர்?// இதற்க்கு காரணம் //அல்லாஹ்வால் ஹலால்
ஆக்கப்பட்ட மரியத்துல் கிப்தியா இனி தனக்கு ஹராம் எனக்கூறி ஹப்ஸாவை சமாதானம் செய்கிறார். ... இனி
மரியத்துல் கிப்தியாவுடன் தொடர்பு கொள்ள மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறார்.//
//தம் மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாகச் சொல்லிய நேரத்தை (நினைவு கூர்க) அதனை ...
அதில் சிலதை அறிவித்தும் மற்றும் சிலதை புறக்கணித்தும் விட்டார்.// தேனுக்கும் நேரத்திற்க்கும் சம்பந்தம் இல்லை
சம்பவம நடந்த நேரத்தை தான் குறிப்பிடுகிறது.
//நீங்கள் இருவரும் அல்லாஹ்வின்பால் (தவ்பா செய்து) ... மலக்குகள் உதவியாளர்களாவார்கள்.// ஒருவர் தேன்
சாப்பிடமாட்டேன் என்பதற்க்காக அல்லா மலக்குகள் வானவர்கள் ஜிப்ரியல் என்று ஒரு கூட்டத்தை பத்ரு போர் போல்
இரண்டு பெண்மனிகள், அதுவும் துாதரின் பிரியமான ஆயிஷா உட்பட, இவ்வளவு பெரிய படையை அணுப்ப
நிச்சயமாக தேன் காரணமாக இருக்க முடியாது.
//தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். ... துர்வாடை வருகிறதே என்று கூறி
விடவேண்டும்.// கருவேலம் பிசின் என்பது வேலைக்கார பெண்மனியை சித்தரித்ததுதான். வேலைகார பெண்மனியை
சுவைத்தது தான் அதை கீழான செயலாக கருதி துர்வாடையாக வருகிறது என்று இருவரும் கூறியுள்ளனர் என்பதை
புரிந்து கொள்ளலாம். வேலைக்காரி சுவையானவள் ஆனால் வேலைக்காரி என்பதால் துர்வாடை. போதை தந்ததால்
தான் மக்ஃபிர் ”கள்”
//நபி தேன் அருந்த மாட்டேன் என்று கூறுவதில் என்ன ரகசியம் இருக்க முடியும்?// சிந்திப்பவர்களுக்கு இதில்
அத்தாட்சி உள்ளது.
// தன்னுடைய வீட்டில், ... ஹஃப்ஸாவிற்கு பிடிக்கவில்லையா? ... 66 : 1–4 குர்ஆன் வசனத்தில் அல்லாஹ்
கண்டிப்பது யாரை? // இதில் மேலும் ஒரு அத்தாட்சி உள்ளது.
அலிசினாவே இனி இறையில்லா இஸ்லாம் கட்டுரையை பயன்த்த கூடிய அளவு சிறந்த சிந்தனைமிக்க கட்டுரை.
வாருங்கள் ant,
சிறப்பான, தெளிவான விளக்கங்களை அளித்து அசத்திவிட்டீர்கள். மிக்க ந்ன்றி!
இது கட்டுரை அலிசினா அவர்களின் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டதே. தேடலின் பொழுது, நெற்றிப் பொட்டில் அறைந்ததைப் போன்றிருக்கும் அலிசினாவின் விளக்கங்களால் பாதிக்கப்படேன். அந்த பாதிப்பை எனது எழுத்துக்களில் காணமுடியும். அவரை விடவா நான்?
есть честное интернет казино bestforplay net [url=http://chapfocalimmoro.narod.ru/get261.html]Онлайн Казино Бесплатно Без Регистрации В Хорошем Качестве[/url] онлайн казино 888 full hd , [url=http://chapfocalimmoro.narod.ru/get333.html]Казино На Маврикий На Карте[/url] интернет казино вегас , [url=http://chapfocalimmoro.narod.ru/get153.html]Казино Банк[/url] интернет казино с бонусами за регистрацию , [url=http://chapfocalimmoro.narod.ru/get9.html]Самые Популярные Онлайн Казино[/url] интернет казино корона денежные переводы липецк
казино футурити отзывы [url=http://beantpuruanrespa.narod.ru/entry234.html]казино голден бич[/url] онлайн казино отзывы туристов , [url=http://beantpuruanrespa.narod.ru/entry30.html]казино 4 короля[/url] онлайн казино играть без регистрации , [url=http://beantpuruanrespa.narod.ru/entry168.html]казино на рубли это[/url] интернет казино golden games ru азартные игры через торрент , [url=http://beantpuruanrespa.narod.ru/entry90.html]интернет казино gold slots[/url] казино игра виртуально , [url=http://beantpuruanrespa.narod.ru/entry282.html]интернет казино еврогранд отзывы цена[/url]
நண்பர் தஜ்ஜால்,
///இது கட்டுரை அலிசினா அவர்களின் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டதே. தேடலின் பொழுது, நெற்றிப் பொட்டில் அறைந்ததைப் போன்றிருக்கும் அலிசினாவின் விளக்கங்களால் பாதிக்கப்படேன். அந்த பாதிப்பை எனது எழுத்துக்களில் காணமுடியும். அவரை விடவா நான்?//
அலி சினாவின் விளக்கங்களால் நம்மை போன்றவர்கள் பாதிக்கப்படவில்லை. மாறாக நாம் அறிவை/வெளிச்சத்தை (enlightenment) பெற்றுள்ளோம் என்று கூறுவதே சரியாக இருக்கும். விரும்பத்தகாத விளைவுகளையே பாதிப்பு என்கிறோம். ஆனால் இது விருபத்தகுந்த, அவசியமான, நன்மை பயக்கும் விளைவு(effect). எனவே நீங்கள் பாதிப்பு என்று கூறுவதற்கு பதில், விளைவு என்று கூறலாம் என்பது என் அபிப்பிராயம்.
உங்களுடைய, மற்றும் பகடுவின் எழுத்துக்களில் அலி சினா அவர்களுடைய எழுத்துக்கள் ஏற்படுத்தியுள்ள விளைவுகளை(effects) காண்கிறேன்.
நண்பர் ஆனந்த்,
//விளைவு என்று கூறலாம் என்பது என் அபிப்பிராயம்.// நிச்சயமாக,
பாதிப்பு என்று, அவரது எழுத்துக்கள் எனது சிந்தனையின் போக்கை மாற்றியதைப் பற்றி குறிப்பிடுகிறேன். அவரால் எனக்கு ஏற்பட்டது மிக நல்ல பாதிப்பு.
Muhamed ku alla vilakku pidicharu pola ayyo remba kevalama irukku ithula engala muslim aaga koopidiranga nalla velai thappichen enakku therinja orithar ma mphil padichavar arabu naatula velai kidaikkum nu aadaipattu ippa remba kastapaduraar avara oru matha guru aakitanga athanala islam ma vittu veliya vara thavikkurar islam enakku tharma sangadama irukku ana vera vali illai engirar avara yenna pannalam thajjal plse answer me sir
அருமையான விளக்கம் :)
அருமையான விளக்கம் :)
Post a Comment