Saturday 17 November 2012

சிவன் தலையில் கங்கை ஆறு ! அல்லாஹ்வின் தலையிலிருந்து நைல் நதி!


காடுகளில், குகைகளில் வேட்டைச் சமுதாயாமாக இருந்த மனிதக் கூட்டம் நதிக்கரைகளுக்கு இடம் பெயர்ந்தபொழுது பொழுது, கட்டுக்குள் அடங்காமல் ஒடும் ஆறுகளைக் கண்டு அவன் வியக்கத் துவங்கினான். எங்கே இருந்து இவைகள் வருகின்றன என்று புரியாமல் விழித்தான்!


கங்கை நதியைப் பற்றி இந்துமத நம்பிக்கை இவ்வாறு சொல்கிறது:
மோட்சம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் சாகரனின் மகன்களின் ஆத்மாக்களை புனிதப்படுத்த, கங்கையை பூமியில் இறங்குமாறு பிரம்மனால் உத்திரவிடப்பட்டது. தன்னை பூலோகத்திற்கு இறக்கிவிட்டதை தரக்குறைவாகக் கருதிய கங்கை, ஒட்டு மொத்த பூமியையும் அடித்துச் செல்லத் சொர்க்கலோகத்திலிருந்து பெரும் வேகத்துடன் இறங்கியதாம். கங்கையின் எரிச்சலை உணர்ந்த பகீரதை, பூமியைப் பாதுகாக்குமாறு சிவனை வேண்டியதாம். கங்கையின் வேகத்தை தனது சடைகளால் மிகஎளிதாக சிவன் கட்டுப்படுத்தினார். இவ்வாறாக கங்கை சிவனின் தலையிலிருந்து பூமியில் வழிந்தோடத் துவங்கியது.
நம்பிக்கை இப்படியிருந்தாலும், முரண்பாடாக கங்கை நதியின் மூலத்தைத் தேடி இமயமலைக்கு புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர்.  இதுமட்டுமல்ல இந்தியாவில் ஓடுகின்ற ஒவ்வொரு நதி மூலத்திற்கும் அதன் தகுதிக்கேற்ப  பலவிதமான நம்பிக்கைகள்  இந்து மதத்தில் உண்டு. பெரும்பாலும் அவைகள் நம்பிக்கை என்ற அளவிலேயே உள்ளன.
கிருஸ்த்துவம் தனது பங்கிற்கு இப்படிச் சொல்கிறது :
9. தேவனாகிய கர்த்தர் எல்லாவகையான அழகான மரங்களையும், உணவுக்கேற்ற கனிதரும் மரங்களையும் தோட்ட்த்தில் வளரும்படி செய்தார். அத்தோட்டத்தின் நடுவில் தேவனாகிய கர்த்தர் ஜீவ மரத்தையும், நன்மை மற்றும் தீமை பற்றி அறிவு தருகிற மரத்தையும் வைத்தார். 10. ஏதேன் தோட்டத்தில் தண்ணீர் பாய ஒரு ஆற்றையும் படைத்தார். அந்த ஆறு நான்கு சிறு ஆறுகளாகவும் பிரிந்தது. 11. அந்த முதல் ஆற்றின் பெயர் பைசோன் அந்த ஆறு ஆவிலா நாடு முழுவதும் ஓடிற்று 12 அந்த நாட்டில் தங்கம் இருந்தது. அத்தங்கம் நன்றாக இருந்தது அங்கு வாசனைப் பொருள்களும், கோமேதகக் கல்லும் இருந்தன. 13. இரண்டாவது ஆற்றின் பெயர் பெயர் கீகோன். அது எத்தியோப்பியா நாடு முழுவதும் ஓடிற்று. 14. மூன்றாவது ஆற்றின் பெயர் இதெக்கேல் அது அசீரியாவுக்கு கிழக்கே பாய்ந்தது. நான்காவது ஆற்றின் பெயர் ஐபிராத்து
(ஆதியாகாமம் 2:9-14)
நதிகளைப்பற்றி முஹம்மது என்ன சொல்கிறார் என்பதைப் கவனிப்பதற்குள், அவரது விண்வெளிப்பயணத்தை சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.
தாயிப் நகரத்திற்கு தன்னுடைய புதிய மார்க்கத்தைப் பற்றி மக்களிடையே பிரச்சாரம் செய்யச் சென்ற முஹம்மது நபி, தாயிப் நகரவாசிகளின் ஏளனச் சொற்களால் தாக்குதலுக்குள்ளானார். முயற்சி தோல்வியடைந்த மனவேதனையுடன் கஅபாவில் படுத்திருந்தவர், இரவில் எல்லோரும் உறங்கியவுடன் யாரும் அறியாமல் எழுந்து  உம்முஹானியின் வீட்டிற்குச் சென்றார். (முதலிலிருந்தே உம்முஹானியின் மீது முஹம்மது ஒரு கண்வைத்திருந்தார், ஆனால் கிழவர் அபூதாலிப், உம்முஹானியை, ஏனோ முஹம்மதிற்கு திருமணம் செய்துதர மறுத்துவிட்டார் அதன் பிறகு வாழ்க்கை இருவருக்கும் வெவ்வேறு திசைகளில் பயணப்பட்டது. தற்சமயம் முஹம்மது, உம்முஹானி இருவருமே தங்களது துணைகளை இழந்து தனிமரமாக நிற்கின்றனர். இதை எதற்கு சொல்கிறேன் என்பதை விளங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்) இது முஹம்மது நபியுடைய மனைவி கதீஜா மற்றும் பெரிய தகப்பனார் அபூ தாலிப் ஆகியோரது மரணத்திற்குப் பின் நிகழ்ந்த சம்பவம்.
            இரவில் கஅபாவில் படுத்திருந்த முஹம்மதுவைக் காணவில்லை என மக்கள் தேடிய பொழுது அவர் உம்மு ஹனியின் வீட்டிலிருந்து வெளியே வந்தவர், மக்காவின் கஅபாவில் இருந்து ஜெருசலேமில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் முகத்தஸ்) என்ற புனிதமான பள்ளிவாசல் வரை வான்வெளி பயணம் மேற்கொண்டு, அங்கு மற்ற நபிமார்களுடன் தொழுகையில் ஈடுபட்டு, அதன் பிறகு அங்கிருந்து அல்லாஹ்வை சந்திக்க, ஏழாம் வானம் வரை சென்ற தனது விண்வெளி பயணத்தைப் பற்றி மக்களிடம் கூறுகிறார். முஹம்மது நபியின் விண்வெளிப்பயணத்தை குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது,
தன்னுடைய அடியாரை ஓரிரவில் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவுப் பயணம் செய்வித்த ஒருவன் மகாப் பரிசுத்தமானவன்…
(குர் ஆன் 17:1)
விண்வெளிக்குச் சென்ற முஹம்மது, நட்சத்திரக்கூட்டம், கருந்துளைகள் அல்லது கோள்கள் அல்லது அதன் இயக்கம் என்று ஏதேனும் கூறினாரா என்றால், ஒரு புண்ணாக்குமில்லை. அவர் உண்மையில் அவர், விண்வெளிக்குச் சென்றது அல்லாஹ்வுடன் வாழிபாடுகள் தொடர்பாக ஒரு பேரம் நிகழ்த்தி இறுதி ஒப்பந்தமிடவே! (இதைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்) அவ்வாறு செல்லும் வழியில் ஒரு மாபெரும் உண்மையைக் கேட்டறிந்தார்.


புகாரி :  7517
...அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த முதல் வானத்தில் பாய்ந்தோடும் இரு நதிகளைக் கண்டார்கள். உடனே ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்? என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவையிரண்டும் நைல் மற்றும் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள் என்று பதிலளித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு அந்த வானத்தில் சென்று கொண்டிருந்த போது இன்னொரு நதியையும் கண்டார்கள். அதன் மீது முத்துகளாலும் பச்சை மரகதத்தாலும் ஆன மாளிகை ஒன்று இருந்தது. (அந்த நதியில்) நபி (ஸல்) அவர்கள் தமது கையால் அடித்தார்கள். அ(தன் மண்ணான)து உயர்ந்த நறுமணமிக்க கஸ்தூரியாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள், இது என்ன நதி ஜிப்ரீலே? என்று கேட்டார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், இது உங்களுக்காக உங்கள் இறைவன் ஒதுக்கிவைத்துள்ள கவ்ஸர் (எனும் நதி) ஆகும் என்று பதிலளித்தார்கள்...
புகாரி :  5610
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
...நான் (மிஅராஜ்' எனும் விண்ணுலகப் பயணத்தின் போது வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா' எனும் இடத்திற்குக் கொண்டு செல்லப் பட்டேன். அங்கு நான்கு நதிகள் (ஓடிக் கொண்டு) இருந்தன. இரண்டு நதிகள் வெளியேயும், இரண்டு நதிகள் உள்ளேயும் (ஓடிக் கொண்டு) இருந்தன. வெளியே இருக்கும் இரண்டு நதிகள் நீல் மற்றும் யூப்ரடீஸ் நதிகளாகும். உள்ளே இருக்கும் இரண்டு நதிகள் சொர்க்கத்திலுள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரு நதிகளாகும். அப்போது என்னிடம் மூன்று கிண்ணங்கள் கொண்டுவரப்பட்டன. பால் கிண்ணம், தேன் கிண்ணம், மதுக் கிண்ணம் ஆகியன தாம் அவை. நான் பால் இருந்த கிண்ணத்தை எடுத்து (அதை) அருந்தினேன். அப்போது என்னிடம், நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இயற்கை மரபை அடைந்துள்ளீர்கள் என்று சொல்லப்பட்டது....

குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்பவை நம்பிக்கை சார்ந்தவைகளல்ல அவை தெளிவான நிரூபணங்கள் என்பதே முஸ்லீம்களின் நிலை. உதாரணத்திற்கு அல்லாஹ் என்ற கடவுள் அவனது தூதர்கள் மற்றும் வேதங்கள் குறித்து நீங்கள் கொண்டிருப்பது, நம்பிக்கையா? அல்லது உண்மையா? என்ற  கேள்வியை எழுப்பினால், நிரூபிக்கப்பட்ட உண்மை என்றே கூறுவார்கள். எனவே, ஹதீஸ்களை முதல் தரமான அறிவியல் உண்மைகள்(!?) என்று முடிவு செய்யவேண்டிய நிலைக்கு நாமும் தள்ளப்படுகிறோம்.

எனவே, எங்கிருக்கிறது என்று இன்றுவரை அறியமுடியாத ஏழாம் வானத்தின்(?)  எல்லையில் இருக்கும் சித்ரத்துல் முன்தஹாவின் (கர்த்தர் கூறும் ஜீவமரமாக இருக்க முடியாது ஏனெனில் ஏதென் தோட்டம் பூமியில் இருந்ததாகத்தான் பழைய ஏற்பாடு கூறுகிறது) வேர்ப்பகுதிலிருந்து வெளியாகும் ஆறுகள் பூமியை வந்தடைந்தது எப்படி?

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வரை சுமார் 6758 கிலோ மீட்டர் நீளம் உள்ள நைல் நதி எங்கிருந்து துவங்குகிறது என்று தெரியாமல் குழப்பமிருந்தது. கிபி 1862 ல் நைல் நதியை ஆய்வுசெய்த JOHN HENNING SPEKE என்னும் ஆய்வாளர் விக்டோரியா ஏரியில் உற்பத்தியாவதை கண்டறிந்தார்.  அவரை வரலாறு ஏனோ மறந்தது. பின்னர் கிபி 1937 BRUCKHAR WALDEKKER  ஜெர்மன் ஆய்வாளர் வெள்ளை நைல் உகாண்டாவில் உள்ள விக்டோரியா ஏரியிலிருந்தும், நீல நைல் எத்தியோப்பியாவின் தானா  ஏரியிலிருந்தும் உற்பத்தியாகிறது என்பதை உறுதி செய்தார். இந்த இரண்டு நதிகளும் இணந்து நைல் நதியாக ஓடி மத்திய தரைக் கடலில் கலக்கிறது. சுமார் 2781 கிலோ மீட்டர் நீளம் உள்ள யூப்பரடீஸ் நதி துருக்கியில் துவங்கி சிரியா, ஈராக் வழியே பாய்கிறது.

முஹம்மது தன்னுடைய வாழ்நாளில் எகிப்த்தையோ, அல்லது நைல்நதியையோ பார்த்ததுகூட இல்லை. யூதர்களைத் தனது வலையில் விழவைக்க மூஸாவின் கதையைகூறவேண்டிய நிலையிலிருந்தார். எனவே மூஸாவின் கதையை திரும்பத் திரும்ப குர்ஆனில் கூறினார். மூஸாவின் வாழ்வு நைல்நதியுடன் நெருங்கிய தொடர்புடையது. எனவே நைல்நதியின் மூலத்தையும் அறிந்ததாகக் காண்பித்துக்கொள்கிறார்.

இஸ்லாமிய அறிவியல் பதிவர்கள், நைல் மற்றும் யூப்ரடீஸ் நதிகள் ஏழாம் வானத்திலிருந்து வருகிறது என்பதை நிரூபிக்கவேண்டும் அல்லது சித்ரத்துல்முன்தஹா விக்டோரியா மற்றும் தானா ஏரிகளுக்கு அருகில் அல்லது துருக்கியில் இருக்கிறது என்பதை நிரூபிக்கவேண்டும்.

 இதில் எதை செய்யப் போகிறார்கள்?

யூப்பரடீஸ் மற்றும் நைல் நதிகள் ஏழாம் வானத்தின் சித்ரத்துல்முன்தஹாவின் வேர்ப் பகுதிலிருந்து வெளியாகி விண்வெளியைக் கடந்து பூமியை வந்தடைகிறது பிறக்கிறது என்பதை அறிவுள்ளவர்களால் எப்படி ஏற்க முடியும்?

கங்கை நதி சிவனின் தலையில் இருந்து வருகிறது என்ற இந்துமத  நம்பிக்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

மூம்மதங்களின் கடவுளர்களுக்கும் பூமியின் இதர பகுதிகளையும் அங்கு பாய்ந்தோடுகின்ற  நதிகளையும், வாழுகின்ற மனிதர்களையும் பற்றி ஒன்றுமே தெரியவில்லையா?

தஜ்ஜால்

Facebook Comments

9 கருத்துரைகள்:

ஆனந்த் சாகர் said...

நண்பர் தஜ்ஜால்,

அருமையான பதிவு. நீங்கள் குறிப்பிட்டபடி, கங்கை பற்றிய இந்துக்களின் கருத்து, பக்தி எல்லாம் புராண நம்பிக்கை அடிப்படையில் அமைந்தவை. அதை எந்த இந்துவாவது நம்பவில்லை என்றால் அவர் அதனால் இந்து அல்ல என்று வேறு எந்த இந்துவும் தீர்ப்பு வழங்கி, அவரை கொன்றால் சொர்க்கத்துக்கு போய் கண்டமேனிக்கு கூத்தடிக்கலாம் என்று கூற மாட்டார். இந்து மதத்தில் அப்படி கூறவும் எவராலும் முடியாது.

ஆனால் இஸ்லாத்தில் அப்படியா? குர்ஆனும் ஹதீத்களும் அல்லாஹ்வின் இரண்டு விதமான வஹீ என்றும் அதை மறுப்பவர்கள் நரகத்துக்கு போகும் காபிர்கள் என்றும் அல்லவா இஸ்லாமிய அறிஞர்களும் பி.ஜே போன்ற இஸ்லாமை உய்விக்க வந்த நவீன அண்ணல் நபிகள் நாயகங்களும் அடித்ததுக் (கொள்கிறார்கள் / கொல்கிறார்கள்) கூறுகிறார்கள்.

Anonymous said...

முஹம்மது என்பவர் உண்மையில் இருந்தவரா? இல்லை அதுவே கட்டுக்கதையாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா?

ஆனந்த் சாகர் said...


///தாயிப் நகரத்திற்கு தன்னுடைய புதிய மார்க்கத்தைப் பற்றி மக்களிடையே பிரச்சாரம் செய்யச் சென்ற முஹம்மது நபி, தாயிப் நகரவாசிகளின் ஏளனச் சொற்களால் தாக்குதலுக்குள்ளானார்.///

மக்காவில் தன்னை அல்லாஹ்வின் தூதராக ஏற்றுக்கொள்ள ஒரு சிலரை தவிர மற்ற எவரும் தயாராக இல்லை என்பதை உணர்ந்துகொண்ட முஹம்மது மக்காவுக்கு பக்கத்தில் இருந்த நகரான தாயிப் நகரத்துக்கு ரகசியமாக ஒரே ஒரு சஹாபாவை கூட்டிக்கொண்டு ஒரு சமரச திட்டத்துடன் சென்றார். ஆனால் ஏமாளிகளான மதீனா வாசிகளை போலல்லாமல், தாயிப் வாசிகள் முகம்மதை கேலி செய்து கல்லால் அடித்து விரட்டினர். அவர் கல்லடி பட்டு ரத்தம் சொட்ட சொட்ட தப்பித்தால் போதும் என்று தன் குதிகால் பின்படரியில் பட பயந்து ஓடி வந்தார். இந்த முழு பிரபஞ்சத்தையும் தனக்காகவே அல்லாஹ் படைத்ததாக மறை கழண்டு உளறிய முகம்மதை, இந்த கல்லடியிலிருந்து காப்பாற்ற அல்லாஹ் ஒரு துரும்பையும் அசைக்கவில்லை.

தன் உடலிலிருந்து ஒழுகும் ரத்தத்தை துடைத்துக்கொண்டே ஓடிவரும் பரிதாபமான முகம்மதை பார்த்து அவருடன் சென்று இருந்த சஹாபா அல்லாஹ்விடம் உதவி கேட்க கூடாதா என்று அவரிடம் கேட்கிறார். அப்பொழுது நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில் தமாஷாக சவடால் அடித்து, நபிமார்களின் ரத்தம் பூமியில் சிந்தினால் அல்லாஹ் மிகவும் கோபமடைந்து ரத்தம் சிந்திய மக்களை அழித்துவிடுவான் என்றும் அப்படி தாயிப் மக்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்றே தன்னுடைய ரத்தம் பூமியில் படாதவாறு துடைத்து விடுவதாகவும் முஹம்மது கூறினார். மேலும், அந்த நேரத்தில் ஜிப்ரீல் அவரிடம் வந்து, இந்த தாயிப் வாசிகளை இரண்டு மலைகளுக்கிடையே நெருக்கி நசுக்கி அவர்களின் ஊரையே தலை கீழாக புரட்டிபோடவா என்று கேட்டதாகவும் அதற்கு அவர் அப்படி செய்ய வேண்டாம் என்றும் ஒருவேளை தாயிப் வாசிகள் தன்னை அல்லாஹ்வின் தூதராக ஏற்று கொள்ளாவிட்டாலும் அவர்களுடைய சந்ததிகளாவது ஏற்றுக் கொள்வார்கள் என்றும் ஜிப்ரீலிடம் தான் கூறியதாக அந்த சஹாபாவிடம் முஹம்மது கூறினார்.

இதை முஸ்லிம்கள் முஹம்மதின் கருணை உள்ளத்தை காட்டும் நிகழ்வாக பெருமையுடன் கூறுவதை நாம் அடிக்கடி கேட்க முடியும். ஆனால் இது முஹம்மது எப்படிப்பட்ட ஜோக்கர் என்பதையே காட்டுகிறது என்பது அவர்களுடைய மூளைக்கு தெரிவதில்லை. தன்னுடைய நபிமார்கள் கேலிசெய்யப்பட்டு, கேவலமாக ரத்தம் வரும்படி கல்லால் அடிக்கபட்டாலும் கோபப்படாத அல்லாஹ், அவர்களுடைய ரத்தம் பூமியில் பட்டால் மட்டுமே அடக்க முடியாத கோப வயப்பட்டு ஒட்டு மொத்த ஊரையே அழிக்கும் பைத்தியக்காரனாக மாறி விடுவானாம். அல்லாஹ் அப்படி பைத்தியக்காரனாக மாறிவிடக் கூடாது என்பதற்காக இவர் தன்னுடைய உடலில் இருந்து வழியும் ரத்தம் பூமியில் படாதவாறு துடைத்து விடுகிறாராம். அப்படியானால் அல்லாஹ்வைவிட தானே அறிவுடையவன் என்று முஹம்மது காண்பித்து கொள்கிறார் அல்லவா? அதேமாதிரி, அந்த ஊர் மக்களை அழிக்க வேண்டாம் என்று ஜிப்ரீலுக்கு அறிவுரை கூறுவதின் மூலம் அல்லாஹ்வை விடவும் ஜிப்ரீலை விடவும் தானே அதிக இரக்க குணமும் அறிவும் உடையவன் என்றும் அவர் கூறவில்லையா? அல்லாஹ் தாயிப் வாசிகளின் கல்லடியிலிருந்து தன்னை காப்பாற்றவில்லை என்பதற்கு என்ன ஒரு அருமையான சப்பைக்கட்டு! இது வடிவேலின் நகைச்சுவையை ஒத்திருக்கிறதா இல்லையா?

Unknown said...

நண்பர் தஜ்ஜால்,

அருமையான பதிவு சகோ.இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இருப்பதை வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றிகள்.
//எனவே, எங்கிருக்கிறது என்று இன்றுவரை அறியமுடியாத ஏழாம் வானத்தின்(?) எல்லையில் இருக்கும் சித்ரத்துல் முன்தஹாவின் (கர்த்தர் கூறும் ஜீவமரமாக இருக்க முடியாது ஏனெனில் ஏதென் தோட்டம் பூமியில் இருந்ததாகத்தான் பழைய ஏற்பாடு கூறுகிறது) வேர்ப்பகுதிலிருந்து வெளியாகும் ஆறுகள் பூமியை வந்தடைந்தது எப்படி?//

மூமின்களின் கேரக்டரையே இன்னும் புரிந்து கொள்ளவில்லை தஜ்ஜால்.அதாவது சித்ரத்துல் முந்தஹாவின் வேர்ப்பகுதியிலிருந்து வெளியாகும் ஆறுகள் என்பதிலிருந்தே புரியவில்லையா? ஏழாம் வானம்(?)அதில் உள்ள மழை மேகங்கள் தான் ஆணிவேர் அதிலிருந்து உற்பத்தியாகி மழையாக பூமியை வந்தடைகிறது அத‌ன் பிற‌கு ஏரியாகி,ஆறாகி,க‌ட‌லில் கல‌‌க்கிற‌து.இப்ப‌டித்தான் நீங்க‌ள் விள‌ங்கிக் கொள்ள‌ வேண்டும்.பதிலுக்கு இப்படிப் போட்டுத் தாக்கிவிடுவார்கள்ல.இவ்வாறுதான் மூமின்க‌ள் க‌தை க‌ட்டிவிட்டு கால‌த்தையும் நேர‌த்தையும் வீண‌டித்துக் கொண்டிருப்பார்க‌ள்.மூமின்க‌ளுக்கு இதெல்லாம் ச‌க‌ஜ‌ம‌ப்பா.....

Unknown said...

வானத்தில் நதிகள்,நதிமீது மரகத மாளிகை, அதில் இலந்தை மரம் முளைத்திருப்பது,இவைகளைப் படித்த பிறகும் எப்படி இன்னும் இதுபோல அம்புலிமாமா கதைகளை மூமின்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்று தான் விளங்கவில்லை. சுட்டு விரலால் உலகத்தையே அளந்து கொண்டிருக்கும் இன்றைய நவீன இன்டர்நெட் உலகில் கதைகளை உண்மை என அளந்து கொண்டிருப்பவர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கின்றது சகோ.கடவுள் என்ற பய உணர்வு எப்படி எல்லாம் மனிதனை முட்டாளாக்குகின்றது!!!!!!

தஜ்ஜால் said...

@ நண்பர் ஆனந்த்,
நன்றி.
// கங்கை பற்றிய இந்துக்களின் கருத்து, பக்தி எல்லாம் புராண நம்பிக்கை அடிப்படையில் அமைந்தவை.//உண்மைதான். நம்பிக்கை என்று கூறும் பொழுது அதை விமர்சிப்பதற்கில்லை. ஆனால் இஸ்லாமின் நிலை அப்படியல்ல.
//…முஸ்லிம்கள் முஹம்மதின் கருணை உள்ளத்தை காட்டும் நிகழ்வாக பெருமையுடன் கூறுவதை நாம் அடிக்கடி கேட்க முடியும்.//இதைப்பற்றி அவர்கள் கூறும் வேறொரு நிகழ்வின்(?)மூலம் அடுத்த பதிவில் கூறுகிறேன்.

தஜ்ஜால் said...

நன்றி இனியவன்,
//சகோ.கடவுள் என்ற பய உணர்வு எப்படி எல்லாம் மனிதனை முட்டாளாக்குகின்றது// நாம் தெளிவாக புரியும்படி கூறினாலும், சிறிதும் பொருட்படுத்தாமல் தங்களது மூடத்தனத்தில் தொடர்ந்து அவர்கள் உழலுவதை என்னவென்று சொல்வது?

Unknown said...

Poda punnakku vaya.Arivaliya pesukern endru nenaipa.itharku viraivil pathil kanpai endru nenaikuren

Unknown said...

Poda punnakku vaya.Arivaliya pesukern endru nenaipa.itharku viraivil pathil kanpai endru nenaikuren