Wednesday, 31 October 2012

முஹம்மது : கொடூரமாக வேதனை செய்பவர் (A Torturer)

(“முகம்மதை புரிந்து கொள்வது” என்பதிலிருந்து)
முஹம்மதின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் எழுதியவரான இப்னு இஷாக், கைபரை கைப்பற்றியதை பற்றிய கதையை விவரிக்கிறார். "யூதர்கள் வாழ்ந்து வந்த இந்த கோட்டை நகரத்தின்மீது, முஹம்மது    எச்சரிக்கை எதுவும் செய்யாமல்   திடீர் அதிரடி தாக்குதல் (கஸ்வா/Gazwa) நடத்தி, ஆயுதம் தரிக்காத பல மனிதர்களை அவர்கள் தப்பி ஓடியதால் கொன்றார். சிறை பிடிக்கப்பட்டவர்களில் கினானா என்பவரும் இருந்தார்"  என்று அவர் குறிப்பிடுகிறார். 
அவர் எழுதுகிறார் :    
பனு நதிரின்(யூத குலம்) கருவூலத்தின் பாதுகாப்பு பொறுப்பை கொண்டிருந்த கினானா அல்-ரபி என்பவர் தூதரிடம் கொண்டு வரப்பட்டார். அவர் அதை(கருவூலம்) பற்றி  அவரிடம் கேட்டார். அது எங்கு இருக்கிறது என்று  தனக்கு தெரியும் என்பதை  அவர்(கினானா) மறுத்தார். ஒரு யூதன் தூதரிடம் வந்து (அவன் கொண்டு வரப்பட்டான் என்று தபரி கூறுகிறார்), அழிவுக்குள்ளான ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு கினானா தினமும் அதிகாலையில் செல்வதை தான் பார்த்ததாக சொன்னான். நீ அதை  (கருவூலத்தை) வைத்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்துவிட்டால் நான் உன்னை கொன்றுவிடுவேன் என்று உனக்கு தெரியுமா? என்று கினானாவிடம் தூதர் கூறினார். ஆமாம் என்று அவர் கூறினார். அழிவுக்குள்ளான இடம் தோண்டப்பட வேண்டும் என்று தூதர் கட்டளை இட்டு, கருவூலத்தில் கொஞ்சம் கண்டுபிடிக்கப்பட்டது. (கருவூலத்தின்) மீதி பற்றி அவர் அவரிடம் கேட்டபோது, அதை வழங்க அவர் மறுத்துவிட்டார். எனவே, அவனிடம் உள்ளதை நீ வெளியே கொண்டுவரும்வரை அவனை கொடூரமாக வேதனை செய் என்று அல் ஜுபைர் அல் அவ்வம் என்பவனுக்கு தூதர் கட்டளை இட்டார். ஆகையால், அவருடைய மார்பின்மீது, கிட்டத்தட்ட அவர் இறந்து போகும்வரை,  இரும்பு மற்றும் சிக்கிமுக்கு கல்லை கொண்டு  அவன் தீயை பற்றவைத்தான். பிறகு, முஹம்மது பின் மஸ்லமா என்பவனிடம் அவரை முஹம்மது ஒப்புகொடுத்தார். அவன் தன்னுடைய சகோதரன் மஹ்முத் என்பவனுக்காக பழி வாங்க அவருடைய தலையை வெட்டினான்[1].  

இளவயது கினானாவை முஹம்மது  சாகும்வரை கொடூர வேதனை செய்த அதே நாளில், அவர்(முஹம்மது) சபியா என்ற  அவருடைய(கினானா)  பதினேழு வயது மனைவியை உடலுறவு கொள்வதற்காக கூடாரத்திற்கு அழைத்து சென்றார்.

இன்னொரு கதையில் புஹாரி விவரிக்கிறார் :
"உக்ல் அல்லது உரைனா குலத்தை சேர்ந்த சிலர் மதீனாவுக்கு வந்தனர். அதனுடைய சுற்றுசூழல் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே நபியவர்கள் (பால்கொடுக்கும்) ஒட்டக கூட்டத்திடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் (மருந்தாக) குடிக்குமாறு பணித்தார். ஆகவே கூறப்பட்டபடியே அவர்கள் சென்றனர். அவர்கள் சுகாதாரம் அடைந்தபின்பு, நபியவர்களின் மேய்ப்பனை கொன்றுவிட்டு எல்லா ஒட்டகங்களையும் அவர்கள் ஓட்டி சென்றுவிட்டனர். அதிகாலையிலேயே நபியவர்களுக்கு இந்த செய்தி வந்தடைந்தது. அவர் அவர்களை தொடரும்படி(ஆட்களை) அனுப்பினார். அவர்கள் பிடிக்கப்பட்டு மதியான வேளையில் கொண்டுவரப்பட்டனர். பின்பு அவர் அவர்களுடைய கைகளையும் பாதங்களையும் வெட்டும்படி கட்டளை இட்டார்(அவ்வாறே செய்யப்பட்டது). சூடு செய்யப்பட  இரும்பு துண்டுகளால் அவர்களுடைய கண்களும் தோண்டப்பட்டது.   அவர்கள் 'அல்-ஹர்ரா' வில் விடப்பட்டனர். அவர்கள் தண்ணீர் கேட்டபோது ஒருவரும் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை" என்று அனஸ் கூறினார்.    "அந்த மக்கள் திருட்டும் கொலையும் புரிந்து, இஸ்லாத்தை தழுவிய பின்பு நிராகரிப்பாளர்களாக (காபிர்கள்) மாறி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராக போர் புரிந்தனர்" என்று அபு  கிலாபா கூறினார். புஹாரி 1.4.234
  
இன்னொரு ஹதீத் கூறுகிறது, அவர்(முஹம்மது) அவர்களுடைய கைகளையும் பாதங்களையும் வெட்டி எறிந்து, சூடேற்றப்பட்ட ஆணிகளை அவர்களுடைய கண்களுக்குள் குத்தினார், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாகும்படி பாறை நிலத்தில் விடப்பட்டனர். அனஸ் கூறினார் : அவர்கள் தண்ணீர் கேட்டனர், அவர்கள் சாகும்வரை ஒருவரும் அவர்களுக்கு தண்ணீரை கொடுக்கவில்லை. புஹாரி 4.02.261 

இந்த அரபிகள் கொலையும் திருட்டையும் செய்தனர், தண்டிக்கப்பட வேண்டியவர்களே, ஆனால் ஏன் இந்த அளவு கொடூர வேதனை படுத்துதல்? மிகச்சரியாக முகம்மதுவும் இவைகளையே செய்யவில்லையா? அவருடைய  ஒட்டகங்கள் எங்கிருந்து அவருக்கு கிடைத்தன? அவைகள் திருடப்படவில்லையா? அவைகளை சூறையாட  அவர் அதிரடி தாக்குதல் நடத்தி மனிதர்களை கொல்லவில்லையா?

இந்த இரட்டை வேடம் தான் அதனுடைய ஆரம்ப நிலையிலிருந்தே, முஸ்லிம் உலகத்தின் குணாதிசயமாக இருந்து வருகிறது. தங்கவிதி(Golder Rule) மற்றும் நியாயம்(Fairness) என்பதின் கருத்தாக்கம் முஸ்லிம்களின் மனநிலையில்  இல்லை. முஸ்லிமல்லாத நாடுகளில் அவர்கள் எல்லா அனுகூலங்களையும் கோருகின்றனர், அதேவேளையில்  அவர்கள் பெரும்பான்மையாக உள்ள  நாடுகளில் முஸ்லிமல்லாதோர்க்கு  அடிப்படை மனித உரிமைகளையே அவர்கள் மறுக்கின்றனர். இப்படிதான் எல்லா விஷயங்களுமே இருக்க வேண்டும் என்று அவர்கள் உண்மையாக நம்புகின்றனர்.

 மூல ஆசிரியர் : அலி சினா
மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்

Facebook Comments

6 கருத்துரைகள்:

RAJA said...

மனம் பதற வைக்கும் சம்பவங்களை முகமதுவின் கூட்டம் பெருமையாக கூறுகிறது. ஆனந்த் சாகர் தொடர்ந்து மொழிபெயர்த்து வெளியிடுங்கள். உலகம் உய்யட்டும்.

Iniyavaniniyavan Iniyavan said...

வணக்கம் ஆனந்த் சாகர்,

மிகவும் கொடூரமான தண்டனையாக இருக்கிறது,பழிக்கு பழி என்ற முன்னுதாரணமாகத் தெரிகின்றதே. இருந்தாலும் இட்டுக் கட்டப்பட்ட பலஹீனமான ஹதீதுகள் என்று மூமின்களால் வர்ணிக்கப்படும்.

ஆனந்த் சாகர் said...

@ ராஜா,

//மனம் பதற வைக்கும் சம்பவங்களை முகமதுவின் கூட்டம் பெருமையாக கூறுகிறது.//

நமக்கு பதறுகிறது. ஆனால் முஸ்லிம்களுக்கு முஹம்மதின் இந்த செயல்கள் அழகிய முன்மாதிரிகளாக தெரிகிறது!

ஆனந்த் சாகர் said...


வணக்கம் இனியவன்,

///மிகவும் கொடூரமான தண்டனையாக இருக்கிறது,பழிக்கு பழி என்ற முன்னுதாரணமாகத் தெரிகின்றதே. இருந்தாலும் இட்டுக் கட்டப்பட்ட பலஹீனமான ஹதீதுகள் என்று மூமின்களால் வர்ணிக்கப்படும்.///

பழிக்கு பழி வாங்குவது என்பது, கடவுளுடைய தூதர் என்பதை விட்டுவிடுவோம், எந்த தூய, கண்ணியமான சாதாரணமான மனிதரும் செய்யத்தகாத செயல். அதுவும் இப்படிப்பட்ட படு பயங்கர வக்கிரத்தனமான கொலைசெயல் மிருகத்தனத்தைவிட மிகவும் மோசமான அக்கிரம செயல்.

புஹாரியால் தொகுக்கப்பட்ட சஹீஹான(நம்பகத்தன்மையுள்ள/authentic ) ஹதீத்கள் இவை. மேலும் இந்த சம்பவம் இப்னு இஷாக் எழுதிய முஹம்மதின் வாழ்க்கை வரலாற்றிலும் கூறப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம்கள் இதை மறுக்க முடியாது. இஸ்லாமிய அறிஞர்கள் இதை மறுக்கவும் இல்லை.

தஜ்ஜால் said...

@ நண்பர் ஆனந்த்,
முஹம்மதின் இயல்பைக்கூறும் நல்ல பதிவு!
//கருவூலத்தில் கொஞ்சம் கண்டுபிடிக்கப்பட்டது. (கருவூலத்தின்) மீதி பற்றி அவர் அவரிடம் கேட்டபோது, அதை வழங்க அவர் மறுத்துவிட்டார். எனவே, அவனிடம் உள்ளதை நீ வெளியே கொண்டுவரும்வரை அவனை கொடூரமாக வேதனை செய் என்று அல் ஜுபைர் அல் அவ்வம் என்பவனுக்கு தூதர் கட்டளை இட்டார்.// முஹம்மதிற்கு, மறுமைநாளின்(!?) இறுதியில் நிகழ்பவையெல்லாம் புள்ளிவிவரத்துடன் அறிவித்துக் கொண்டிருந்த அல்லாஹ், கினானா மறைத்துவைத்ததாகக் கூறப்படும் கருவூலத்தை அறிவிக்கவில்லையென்பது வேடிக்கையானது.
அதுமட்டுமல்ல முஹம்மது எதற்காக தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார் என்பதை இச்சம்பவம் மிகத் தெளிவாக வெளிச்சமிட்டு காண்பிக்கிறது.

ஆனந்த் சாகர் said...

நண்பர் தஜ்ஜால்,

உங்கள் கருத்துக்கு நன்றி. முஹம்மதின் இந்த செயல்களை அறியவரும் சாதாரண அடிப்படை அறிவுள்ள எந்த மனிதனும் அவர் ஒரு கபட வேடதாரி என்பதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் இது புரியவே மாட்டேங்குது! தூங்குபவர்களைத்தான் எழுப்ப முடியும். முஸ்லிம்கள் தூங்குபவர்களைப்போல நடிப்பவர்கள். அவர்களே எழுந்தால்தான் உண்டு.