நான், சிறுவனாக
இருந்த காலங்களில், ஏதாவது எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்படும் பொழுது
எங்கள் வீட்டுப் பெரியவர்கள் “அல்லாஹ்-பத்ரீன்களே
காப்பாற்று” என்று அழைத்து பாதுகாவல் தேடுவதைப் பார்த்திருக்கிறேன்.
அல்லாஹ்-புரியும்! யார் இந்த
பத்ரீன்கள்? ஏதாவது அவுலியாவா? என்று வினவும்
பொழுது, பத்ரீன்கள் என்பவர்கள் 313 பேர்கள்,
அல்லாஹ்விற்காக போரிட்ட அடியார்கள், அவர்கள் இல்லையென்றால்
முஸ்லீம்களாகிய நாம் இல்லை என்று கூறுவர்.
பத்ரு, முஹம்மதிற்குப்
புதிய உற்சாகத்தை கொடுத்த இடம்; முஸ்லீம்கள் என்றும் பெருமை பாராட்டுமிடம்.
நான் இஸ்லாமிய (மூட)நம்பிகைகளில்
மூழ்கித் திளைத்த காலங்களில் பத்ரு களத்தை நினைத்து பெருமை கொண்டதுண்டு. எங்கள் பகுதி பள்ளிவாசலில், ரமளான் நோன்பு 17-ம் நாள் பத்ரு ஸஹாபாக்களின் நினைவு
தினம் என்று கூறி முந்தின இரவில் மவ்லீது,
சிறப்பு பயான் என்றெல்லாம் அமர்க்களப்படுத்தி விடுவார்கள். 1973-ல் எகிப்து மேற்கொண்ட ஒரு தாக்குதலுக்கும், 1999-ல் கார்கிலில்
பாகிஸ்தான் மேற்கொண்ட திட்டத்திற்கு “OPERATION BADR“ என்று பெயர்
சூடப்பட்டதை அறிவீர்கள். அந்த அளவிற்கு பத்ரு முஸ்லீம்களுக்கு
முதன்மையானது.
எனது அறியாமைக் காலங்களில், அல்லாஹ்வைப்பற்றி
எடுத்துரைக்கச் சென்றதைத் தவிர, ஒரு பாவமும் அறியாத அப்பாவி மனிதர்களை
அழித்தொழிக்கவே பத்ரு சம்பவம் நிகழ்ந்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். குறிப்பிட்ட அந்த பயான்களில் கூறப்படும் எந்த ஒரு செய்திகளையும் அல்லது எனக்கு
கற்பிக்கப்பட்டவைகளையும் நடுநிலையாகவோ, பகுத்தறிவைக் கொண்டோ ஆராய்ந்ததில்லை.
ஆராயவேண்டுமென்ற சிந்தனைகூட இருந்ததில்லை. நான்
தஜ்ஜாலாக உருமாறிக் கொண்டிருந்த காலகட்டத்தில்; எனது நண்பர் ஒருவர்,
முஹம்மது கடவுளின் தூதர்தான் என்பதற்கு சாட்சியாக பத்ரு வெற்றியை ஒரு
அற்புத நிகழ்வாக முன்வைத்து விளக்கமளித்தார். காரணம் முஸ்லீம்களின்
மனதில் பத்ரு வெற்றிக்கு உயர்ந்த இடமுண்டு; இதை அல்லாஹ் நிகழ்த்திக்
காண்பித்த அற்புதமாகவே அவர்கள் கருதுகிறார்கள்.
மக்காவிலிருந்து
ஹிஜ்ரத் செய்து யஸ்ரிப் என்ற மதீனாவிற்கு வந்து தனது வழக்கமான பல்லவியை மீண்டும் வாசிக்கிறார். சில மாதங்கள்
கடக்கிறது வருமானத்திற்கு வழியில்லை. இதுவரை, பெரும் சீமாட்டியான கதீஜாவின் சொத்துக்களை ஒன்றுமில்லாமல் செய்ததைத்தவிர முஹம்மது
உருப்படியாக எந்த வேலையும் செய்ததில்லை. அல்லாஹ்விடமிருந்து வரும்
வஹீயைக் கொண்டு வயிற்றை நிறைக்க முடியாது என்பதை
முஹம்மதுவும் அவரது சீடர்களும் நன்றாகவே அறிந்திருந்தனர். வருமானத்திற்கு
என்ன செய்வது? முஹம்மது தனக்குத் தெரிந்ததாகக் காண்பித்துக்கொண்ட
ஆடுமேய்த்தல் தொழிலையோ, வியாபாரத்தையே தனது சீடர்களுக்கு கற்பிக்க
முயலவில்லை, முஹம்மதிற்கு தன்னை அல்லாஹ்வின் தூதரென்று போற்றிப்
புகழவேண்டும், கைத்தடிகளுக்கு வியர்வைவழிய நேர்மையாக உழைத்து
உண்பதில் விருப்பமில்லை. தீர்வு? இருக்கவே
இருக்கிறது அல்லாஹ்வின் வஹீ!
"போர்
தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்'' என்ற
காரணத்தால் அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட
ஆற்றலுடையவன்.
(குர்ஆன் 22:39)
முதல்கட்டமாக கொள்ளையடித்தலையும், சூறையாடலையும்
அல்லாஹ்வின் பெயரல் சட்டபூர்வமாக அங்கீகரித்தார். இதை முஸ்லீம்களின்
பாணியில் சொல்வதென்றால், வேறுவழியின்றி ஆயுதமேந்தித் தாக்குதல்
செய்தது அல்லது மக்காவிலிருந்து ஷாம் செல்லும் வழியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர
முஹம்மது விரும்பினார்.
கிபி 624 மார்ச்-ல் (ஹிஜ்ரி 2 ரமலான் 17) நிகழ்ந்த பத்ரு தாக்குதலுக்கு
முன்பாக, குறைஷியர்களின் மீது நடைபெற்ற வழிப்பறி
முயற்சிகள் அல்லது திடீர்த் தாக்குதல்கள்,
1.
ஸய்ஃபுல் பஹ்ர் - கிபி 623 மார்ச்
2.
ராபிக் -
கிபி 623 ஏப்ரல்
3.
கர்ரார் -
கிபி 623 மே
4.
அப்வா/வத்தான் - கிபி 623 ஆகஸ்ட்
5.
பூவாத் -
கிபி 623 அக்டோபர்
6.
ஸஃப்வான் -
கிபி 623 செப்டம்பர்
7.
துல் உஷைரா -
கிபி 623 நவம்பர்
8.
பத்ரு-1 -
கிபி 623 டிசம்பர்
9.
நக்லா -
கிபி 624 ஜனவரி
இதில் நக்லாவில் மட்டுமே முஹம்மதுவின் கூட்டத்தினருக்கு
வெற்றி கிடைத்தது. பத்ருவிற்கு முன்பாகவே கொள்ளையடித்தல் எனும் புனிதமிக்க
தொழிலைத் துவக்கியிருந்தனர். குறைஷியர்களை வழிப்பறி செய்ய வேண்டுமென்று
திட்டமிட்டது அல்லாஹ்வோ அல்லது முஹம்மதோ அல்ல.
அப்துல்லாஹ்
பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறியதாவது:
..., சஅத்(ரலி) அவர்கள் வலம் வந்து கொண்டிருந்த
போது அபூஜஹ்ல் வந்து, கஅபாவை
வலம் வருவது யார்? என்று
கேட்டான். சஅத் (ரலி) அவர்கள், நான்
தான் சஅத் என்று கூறினார்கள். அதற்கு அபூஜஹ்ல், (மதீனாவாசிகளான)
நீங்கள் முஹம்மதுக்கும் அவருடைய தோழர்களுக்கும் (மதீனாவில்), புகலிடம் கொடுத்திருக்க, இங்கே கஅபாவை நீ அச்சமின்றி வலம் வந்து கொண்டிருக்கிறாயா? என்று கேட்டான். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், ஆம் (அதற்கென்ன?) என்று
கேட்டார்கள். அவ்விருவருக்குமிடையே (அதையொட்டி) சச்சரவும் வாக்குவாதமும்
ஏற்பட்டது. உடனே உமய்யா, சஅத்
(ரலி) அவர்களிடம், அபுல் ஹகமைவிட
குரலை உயர்த்தாதீர். ஏனெனில், அவர்
இந்த (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர் என்று சொன்னான். பிறகு சஅத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இறையில்லத்தை வலம்வர விடாமல் என்னை நீ தடுத்தால் நீ ஷாம் நாட்டிற்குச் செல்லும்
வாணிபப் பாதையை நான் துண்டித்து விடுவேன் என்று சொன்னார்கள்...
(புகாரி 3632)
குறைஷிகளின் வாணிபப் பாதையையை வழிமறித்து கொள்ளையடிக்க வேண்டுமென்பதும்
’சஅத்’ என்பவர் எடுத்த
முடிவுதான்.
பத்ரு தாக்குதலை சுருக்கமாக
கூறிவிடுகிறேன். மக்காவிலிருந்து ஷாம் (ஈராக்) நாடடிற்கு கொண்டு செல்லப்படும், குறைஷிகளின் வியாபாரப் பொருட்களை கொள்ளையடிக்க முஹம்மது தனது படையை துல்உஷைரா என்ற இடத்தை நோக்கி ஏவிவிடுகிறார். இவர்கள் துல்உஷைராவை அடைவதற்கு பல நாட்களுக்கு
முன்பாகவே வியாபாரக்குழு அவ்விடத்தைக் கடந்துவிடுகிறது. ஏமாற்றத்திற்குள்ளான கொள்ளைக்கும்பல், குறைஷிகளின்
வியாபாரக்குழு ஷாம் நாட்டிலிருந்து திரும்பிவரும்பொழுது வழிமறிக்க முடிவெடுக்கிறது.
அதுவரை காத்திருக்க பொறுமையில்லாமல் நக்லா என்ற இடத்தில் அப்துல்லாஹ் இப்ன் முகீரா, நவ்ஃபல் இப்ன் அப்துல்லாஹ்,
அம்ர் இப்ன் ஹழ்ரமி மற்றும் சில அடிமைகளுடன் வந்து கொண்டிருந்த வியாபாரக்குழுவை தாக்கி வழிப்பறி செய்து, கொலையையும், கொள்ளையையும் நிகழ்த்தினர். அரபிகள், யாருடனும் எதற்காகவும், எவ்விதமான போர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் புனிதமாக போற்றிப் புகழும் துல்கஃதா, துல்ஹஜ், முஹ்ரம், ரஜப் ஆகிய மாதங்களில், ரஜப் மாதத்தின் இறுதியில்தான் மேற்கண்ட கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த்து.
...அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி.
(புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்!...
(குர்ஆன்
9:36)
இது முஹம்மதை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளியது. நிலைமை சமாளிக்க வேறுவழி தெரியாததால் வஹீயைத் துணைக்கிழுக்க வேண்டியதாயிற்று.
புனித
மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். "அதில் போரிடுவது பெருங்குற்றமே.
அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை
விட்டும் (மற்றவர்களைத்)
தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு)
உரியோரை அங்கிருந்து
வெளியேற்றுவதும் அல்லாஹ் விடம் இதை விடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப்
பெரியது'' எனக் கூறுவீராக! …
(குர்ஆன்
2:217)
...போர்க் களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றும் பொருட்களில்
ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும், (அவரது) உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் உரியது
என்பதை அறிந்து கொள்ளுங்கள்!...
(குர்ஆன் 8:41)
இல்லையெனில் 20% பங்கை எப்படிப் பெறமுடியும்?
தான் முன்பு தவறவிட்ட குறைஷிகளின் வியாபாரக்குழு, அபூஸுஃப்யான் தலைமையில் மிகப்பெரிய அளவிலான பொருட்கள் மற்றும் செல்வங்களுடன் சுமார் 1000 ஒட்டகங்களில், மிக பலவீனமான பாதுகாப்புடன் ஷாமிலிருந்து திரும்பிவருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்ட, முஹம்மது பத்ரு கொள்ளைக்குத் தயாரானார்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிரியாவுக்குப்
புறப்பட்டுச் சென்ற) அபூ சுஃப்யானின் வணிகக் குழு என்ன ஆயிற்று எனக் கண்டறிய
புசைசா பின் அம்ர் அல்அன்சாரீ (ரலி) அவர்களை உளவாளியாக அனுப்பிவைத்தார்கள். அவர்
சென்றுவிட்டு (திரும்பி) வந்தபோது, என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் தவிர
வேறெவரும் வீட்டில் இருக்கவில்லை. ("அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்
துணைவியரில் சிலரையும் தவிர' என்று கூறினார்களா என எனக்குத் தெரியவில்லை என்று ஸாபித்
பின் அஸ்லம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் உள்ளது.) அவர் வந்து (அபூசுஃப்யானின்
வணிகக் குழு மக்காவை நோக்கிப் புறப்பட்டுவிட்டது' என்ற) தகவலைச்
சொன்னார்...
(முஸ்லீம்)
”இதோ… குறைஷிகளின் வியாபாரக்கூட்டம் அவர்களது பொருட்களுடன் வருகிறது. அக்கூட்டத்தை நோக்கி நீங்கள் புறப்படுங்கள், அல்லாஹ், அவைகளைக் கொள்ளைப் பொருட்களாக உங்களுக்கு அளிக்கக் கூடும்”
(Page 289, Life of
Muhammad a Translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah by A.Guillaume)
என்று உற்சாகப்படுத்தியவராக தனது அடியாட்களுடன் வியாபாரக் கூட்டத்தை நோக்கி பெரும் ஆவலுடன் பயணமானார்.
முஹம்மதின் குற்றநடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையடைந்த அபூசுஃப்யான் வியாபாரப் பொருட்களுக்கு நேரவிருக்கும் அபாயத்தைக் குறித்த செய்தியை குறைஷிகளுக்கு அறிவிக்க ஒருவரை மக்கவிற்கு அனுப்பியதுடன், வியாபரக்குழு செல்லும் பாதையை மாற்றியமைத்து, முஹம்மதுவிடம் சிக்காமல், தங்களது பொருட்களை
பாதுகாப்பாக கொண்டு
சென்றுவிடுகிறார். வியாபாரப் பொருட்களைப் பாதுகாக்க மக்கவிலிருந்து 1300 பேர்களுடன் வரும் குறைஷியப் படை, வணிகப்பொருட்களுக்கு ஆபத்தில்லை என்பதை அறிந்து படையிலிருந்த 300 பேர், அக்னஸ் இப்ன் ஷரீக் தலைமையில் திரும்பிவிடுகின்றனர்.
அபூஜஹ்லுடன் எஞ்சியிருந்த 1000 பேரும், முஹம்மதுவுடனிருந்த 313 நபர்களும் (310-லிருந்து 320 வரை எண்ணிக்கை மாறுபடுகிறது. 313 பேர் என்பதை பொதுவாக
அங்கீகரிக்கின்றனர்) மோதுகின்றனர்; முஹம்மது வெற்றியடைகிறார். போதிய ஆயுத பலமில்லாத 313 பேர் 1000 பேரை வெற்றி கொண்டதை,
முஸ்லீம்கள் இன்றும் பிரதாபிக்கினறனர்.
இந்த மோதலைப்பற்றி இஸ்லாம் கூறுவதைப்
பார்ப்போம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் பத்ருப் போரை எதிர்பார்த்துப்
புறப்படவில்லை. மாறாக தமது நாட்டு எல்லையில் புகுந்து மக்காவின் வணிகக்
கூட்டம் பயணிக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு அவர்களை வழிமறிக்கவே புறப்பட்டார்கள்…
196. திட்டமிடாமல் நடந்த பத்ருப் போர்-onlinepj.com
சத்தமில்லாமல் யஸ்ரிப்(மதீனா) இப்பொழுது முஹம்மதின் உடைமையாகியுள்ளதை கவனியுங்கள். ஹிஜ்ரத் என்ற பெயரில், பிழைப்பிற்கு வழியில்லாமல் மெக்காவிலிருந்து ஓடிவந்த ஒரு
ஓடுகாலி இரண்டு ஆண்டுகள் ஆவதற்குள், மதீனாவின் மன்னராகி விட்டாராம், நாட்டின் எல்லைகளை நிர்ணயம் செய்வாராம். வேடிக்கையாக இருக்கிறது. இஸ்லாமியர்கள் இவ்வாறு முஹம்மதின் கதையை கட்டமைக்கவில்லையெனில், அவர் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரர் என்பதை குழந்தைகூட கூறிவிடும். அதனால்தான் இந்த Built-up-கள், சமாளிப்புகள்.
முஹம்மது மட்டுமல்ல அவரது
கைத்தடிகளும், பத்ரு தாக்குதலை எதிர்பார்க்கவே இல்லை. அபூஸுஃப்யானின் வணிக்குழுவை கொள்ளையடிப்பதைப் பற்றி மட்டுமே ஆசை வார்த்தைகள்
கூறி அழைத்துவரப்பட்ட கூட்டம், வணிகக்குழு தப்பிவிட்டதையும், அபூஜஹ்லுடன் போர் புரியவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதையும் அறிந்தபொழுது அவர்களுக்குள்
சர்ச்சை உருவானது. அவர்களில் கணிசமான ஆட்கள், வணிக்குழுவைத் தாக்குவதை மட்டுமே விரும்பியதால், அபூஜஹ்லுடன்
போர்புரிவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த இடத்தில் இஸ்லாமியர்கள் கூறும்
ஒரு விளக்கத்தையும் கவனிக்க வேண்டும். முஹம்மது வியாரக்குழுவைத் தாக்கிக்
கொள்ளையடிக்கவே சென்றார் என்பதை அவர்களும் அறிவார்கள். அதை வெளிப்படையாக
எப்படி கூறமுடியும்? அதனால் வேறொரு தந்திரத்தை கையாளுகின்றனர்.
குறைஷிகள், மக்காவிலிருந்து முஹம்மதின் சீடர்களை
அடித்துத், துன்புறுத்தி விரட்டியதாகவும், இனி அவர்கள் அங்கு வாழவே முடியாது என்ற சூழல் ஏற்பட்டதாகவும், அவ்வாறு வெளியேறியவர்களின் செல்வங்கள், இதர உடைமைகளையும்
குறைஷிகள் அபகரித்துக் கொண்டனர். எனவே அவர்களைத் தாக்கி,
அவர்களது உடைமைகளை சூறையாடுவது சரியானதே என்கின்றனர்.
இன்னும் சில இஸ்லாமிய அறிஞர்கள், அபூஸுஃப்யான்
வியாபாரப் பொருட்களாக ஷாம் நாட்டிற்கு கொண்டுசென்றது முஸ்லீம்களது உடைமைகளைத்தான் எனவே
அதைத் திரும்பப் பெறும் நோக்கிலேயே பத்ரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாவும் எனவே அதில்
தவறில்லை என்றும் கூறுக் கொள்கின்றனர். முஹம்மதின் சிடர்களுக்கு
மக்கா நகரமே உடைமையாய் இருந்ததை போல முழம் போடுகின்றனர். இவர்களது இந்த கதைகளுக்கான பதிலை
நாம் “ஹிஜ்ரத்” என்ற பதிவில் பார்த்தோம்.
அதிலிருந்து சில வரிகள்
“முஹம்மதின் சீடர்களில் பெரும்பாலும், அடிமைகளும்,
போக்கிரித்தனமாக ஊரைச்சுற்றிக் கொண்டிருந்த சில இளைஞர்களுமே!
அரேபியர்கள், அடிமைகளைத் தங்களது உடமைகளாகவே கருதிவந்தனர்.
உதாரணத்திற்கு, உங்களுக்குச் சொந்தமான கால்நடைகளை
பகிரங்கமாக கவர்ந்து செல்லப்படுவதை நீங்கள் அனுமதிப்பீர்களா? நிச்சயமாக இல்லை! குறைஷிகள் அதையே செய்தனர்”
அபூஜஹ்லா? பெரும்
செல்வத்துடனுள்ள வியாபாரக் குழுவா? சர்ச்சை தொடர்கிறது…
”கொள்ளைப் பொருட்களை அல்லாஹ் வாரி
வழங்கக் கூடும்” என்று முஹம்மது ஒரு ஆருடம் கூறி அழைத்து வந்தார்,
ஆனால் அலாஹ் வேறுவிதமாக அதை மாற்றுகிறான்.
"எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்)'' என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை
எண்ணிப் பாருங்கள்! ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள்
விரும்புகின்றீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலை நாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான்.
(குர்ஆன் 8:07)
அல்லாஹ்வின் விருப்பமோ அபூஜஹ்லைத் தாக்குவதுதான். ஆனால்
அதை துணிந்து வெளிப்படையாகக் கூறாமல், இரண்டில் ஒன்று கிடைக்கும்
என்று ஆரூடம் கூறுவது போல பூசி மழுப்புகிறான்; கோழையைப் போல முனகுகிறான். அல்லாஹ், தான் உண்மையை நிலை நாட்டவும் மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறேன், ”போய் அபூஜஹ்லைத் தாக்குங்கள்..!”
என்று துணிந்து உத்தரவிடலாமே? அதைக் கூறுவதிலிருந்து அவனைத் தடுத்தது எது? முஹம்மதின் அடியாட்களிடம் கூறவேண்டாம், முஹம்மதிடமாவது கூறியிருக்கலாம்; பாவம்
அவரும்கூட ஏமாற்றத்தில் துவண்டுவிட்டார்.
அல்லாஹ்வின் இந்தச்
செயலைத்,
தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ள முஹம்மதையும், அவரது அடியாட்களையும் நயவஞ்சகமாக அழைத்து வந்திருக்கிறான் என்றே கூறமுடியும்! அதனால்தான் வெளிப்படையாகக் கூறாமல் தடுமாறுகிறான். அவனது இந்த செயலை சூழ்ச்சி என்று கூறுவதே சரியானது! ஆனால் இஸ்லாமியர்கள் இதை அல்லாஹ்வின் திட்டம் அல்லது விதி என்று மழுப்புகின்றனர்.
ஏன் இவ்வாறு எது நிகழ்ந்தாலும்
அல்லாஹ்வின் திட்டம் (சூழ்ச்சி) என்று கூறுகின்றனர்?
முஹம்மது, மலம் கழிக்கச் செல்வதற்குக்கூட தனது கடவுளின் வஹீயை துணைக்கிழுப்பவர். புனிதமிகு கொள்ளைத் தொழிக்குச் செல்லும் போது அல்லாஹ்வை கைவிடுவாரா? நிச்சயமாக அவ்வாறிருக்க இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த பத்ருகொள்ளை முயற்சி இரண்டாம் முறையாகவும் தோல்வியையைத் தழுவிவிட்டது. கொள்ளையடிக்க அடியாட்களைத் திரட்டிக்கொண்டு சென்றது பயனளிக்கவில்லை, எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. எதை சொல்லி சமாளிப்பது ?
மிக எளிதான வழிருக்கிறது! வியாரக்குழு தப்பியதும் அல்லாஹ்வின் திட்டமே என்றொரு வஹீ வெளியிட்டால் போதும் தனது மானத்தையும், கடவுளையும் தோல்வியிலிருந்து காப்பாற்றிவிடலாம் என்பதை முஹம்மது அறிந்திருந்தார்.
தோல்வி அல்லது வேதனையான நேரங்களில் “விதி” என்று கருதிக் கொள்வதால் மனரீதியாக ஆறுதல் அளிக்கிறது என்று விதிக் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் சப்பைக்கட்டு கட்டுவார்கள், உண்மை அதுவல்ல!
கடவுளர்களின் மானத்தைப் பாதுகாக்கவே விதி என்ற கருத்தை மதக்கோட்பாடுகளில் உருவாக்கி வைத்திருக்க வேண்டும்!
அல்லாஹ்வின்(?) ஏடாகூடமான திட்டத்தினால் முஹம்மதிற்கு, வேறுவழியில்லாமல் குறைஷிகளை பத்ருகளத்தில் சந்திக்க வேண்டியதாயிற்று. போதிய ஆயுதபலம்கூட இல்லாத 300 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல், 1000 பேர்களை வெற்றிகொண்டது எப்படி? அல்லாஹ் வழங்கிய உதவியின் காரணமாகவே இது சாத்தியமாயிற்று. முஹம்மது அல்லாஹ்வின் தூதரென்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம் என்கின்றனர் இஸ்லாமியர்கள்.
அல்லாஹ் ஏன் உதவினான்?
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
…. "இறைவா!
எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எனக்கு அளித்த
வாக்குறுதியை வழங்குவாயாக. இறைவா! இஸ்லாமியரில் இக்குழுவினரை நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில்
உன்னை வழிபட (இனி) யாரும் இருக்கமாட்டார்கள்'' என்று
தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம்
பிரார்த்தித்துக்கொண்டேயிருந்தார்கள்....
(முஸ்லீம்)
தன்னை வழிபட ஒருவருமில்லாது போய்விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் மேலிட்டதால்தான் அல்லாஹ், உதவினானோ? முஹம்மதின் பிரார்த்தனையைக் கேட்டதுமே அல்லாஹ்வின் உதவிகள் விதவிதமாக பத்ருகளத்தில் இறங்கியதாம். பத்ருவில் முஹம்மதிற்குக் கிடைத்தவெற்றி மனிதர்களால் ஏற்பட்டதல்ல மாறாக அல்லாஹ் வெளிப்படுத்திய அற்புதங்களால்தான் நிகழ்ந்ததென்பதே இஸ்லாமியர்களின் உறுதியான நிலைப்பாடு.
…அற்புதங்களால்தான் வெற்றி பெற முடிந்ததே தவிர போரில்
பங்கெடுத்தவர்களின் ஆற்றலினால் அல்ல என்பதை உணர்த்தவே இவ்வாறு சுட்டிகாட்டுகிறான்..
193. அத்வைதத்தின்
அறியாமை -onlinepj.com
இன்றைய திரைப்படங்களில், கணிணிவரைகலை தொழில்நுட்பத்தின் உதவியால் பலவிதமான தந்திரக்
காட்சிகளை உருவாக்குகின்றனர். அவற்றில் எதுவும் உண்மையில்லை நாம் அறிவோம். இதுபோன்ற தந்திரக் காட்சிகளுக்கு முன்னோடி இந்த பத்ருகளம்
தான் என்று நினைக்கிறேன் (இஸ்லாமிய அறிவியல் பதிவர்கள் கவனிக்க வேண்டும்) தந்திரவித்தையை, முதலில் சோதனை முயற்சியாக முஹம்மதின் கனவில் காண்பித்தபிறகு,
(முஹம்மதே!) உமது கனவில் அவர்களை அல்லாஹ் குறைந்த
எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாரும்!. அவர்களை அதிக எண்ணிக்கையினராக
அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள்...
(குர்ஆன்
8:43)
பிறகு களத்திலும் செயல்படுத்தினான். இது அல்லாஹ்வின் கிராஃபிக்ஸ் காட்சிபற்றிய அறிவிப்பு!
நீங்கள் (களத்தில்) சந்தித்துக் கொண்ட போது
உங்கள் கண்களுக்கு அவர்களைக் குறைந்த எண்ணிக்கையினராகவும், அவர்களின் கண்களுக்கு உங்களைக் குறைந்த எண்ணிக்கையினராகவும் காட்டியதை எண்ணிப்
பாருங்கள்! செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் செய்வதற்காக (இவ்வாறு
காட்டினான்). காரியங்கள் அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.
(குர் ஆன் 8:44)
முதலில் வியாபரக்குழுவைக் கொள்ளையடிக்க
ஆசைகாண்பித்து ஏமாற்றினான். இப்பொழுது ஆட்களின் எண்ணிக்கை குறைவாக மாற்றிக்
காண்பித்து இருவரையும் ஏமாற்றி மோதவிடுகிறான். ஏனெனில், இந்த இரண்டு
குழுக்களில் எவரை அதிகமாகக் காண்பித்தாலும் அச்சமடைந்து மற்றவர் பின்வாங்க
வாய்ப்புள்ளது. இரு குழுவினரும் மோதியே தீரவேண்டுமென்ற அல்லாஹ்வின் தேவை
நிறைவேறுவதற்காக அனைத்து விதமான தில்லுமுல்லு வேலைகளிலும் இறங்கிவிட்டான். அபூஜஹ்லை கொல்வதற்கு இன்னும் எத்தனை பொய்களை சொல்ல வேண்டியுள்ளதோ? சூழ்ச்சியில் மகாபாரதக் கதைகளில் வரும் சகுனியை மிஞ்சிவிட்டான்!
இதை நாம் சூழ்ச்சி என்றுதான் கூறமுடியும். அல்லாஹ் சூழ்ச்சி செய்வதாகவும், சூழ்ச்சி செய்வதில் சிறந்தவனென்றும்
குர்ஆனின் பல இடங்களில் அறிவித்துக்கொள்கிறான். உண்மையைப் பொய்யாகவும்,
பொய்யை உண்மையாகவும் காண்பித்து ஏமாற்றுவதே சூழ்ச்சி. இன்றும்கூட இராணுவத் தாக்குதல்கள் நிகழும் பொழுது, பொம்மை
பீரங்கிகளையும், ஏவுகணைகளையும் கொண்டு இராணுவ முகாம்களை அமைத்து
எதிரிகளை ஏமாற்றுவதுண்டு. இந்த யுக்தி ஈராக்-அமெரிக்கா போரிலும் கையாளப்பட்டதை அறிவீர்கள். பொதுவாகவே
யுத்த காலங்களில் உண்மையான செய்திகளை அறிந்துகொள்வது சற்று சிரமம்தான். மனிதர்கள் தங்களது இயலாமையால் இத்தகைய செயல்களை மேற்கொள்கின்றனர். இந்த இயலாமையை ராஜதந்திரம் என்று தங்களைத் தாங்களே சொறிந்தும் கொள்வார்கள்.
இந்த அடிப்படையில் அல்லாஹ்வின் இந்த செயல்
பகிரங்கமானதொரு சூழ்ச்சி எனலாம். ஆனால், மனிதர்களை போலவே
இயலாமையால் அல்லாஹ்வும் பொய்சொல்லி ஏமாற்றினான் என்பதை இஸ்லமியர்களால் எப்படி ஏற்க
முடியும்?
… "அவர்கள் கேலி
செய்தால் அல்லாஹ்வும் கேலி செய்வான்'' என்பது "கேலி செய்ததற்கான தண்டனையை வழங்குவான்'' என்ற
கருத்திலும், "அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி
செய்கிறான்'' என்பது "சூழ்ச்சியைத் தோல்வியுறச் செய்வான்'' என்ற
கருத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது...
6. அல்லாஹ் இயலாதவனா? -onlinepj.com
அல்லாஹ் சூழ்ச்சி
செய்தான் என்பதை நவீன நபி பீஜே-வால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது இதை மழுப்பி
மறைத்துவிட வேண்டுமென்று கடுமையாக முயற்சித்துள்ளார். என்ன செய்வது…!
மறைந்து தொலைய மாட்டேன் என்கிறது. அல்லாஹ்வின்
வார்த்தையை மாற்றமுடியுமா என்ன?! உண்மை என்னவெனில், பீஜேவின் விளக்கம், குர்ஆன் 8:44, 8:07-ம் வசனங்களில் எடுபடவில்லை!
தான் எவ்வாறெல்லாம் சூழ்ச்சி என்ற பெயரில் பித்தலாட்டம் செய்து ஏமாற்றியுள்ளதை
விளக்கமாகக் கூற அல்லாஹ்வே வெட்கப்படவில்லை இவர் ஏன் அலட்டிக்கொள்கிறார் என்று தெரியவில்லை.
அடுத்த அற்புதம் மந்திர மண் தாக்குதல்! இன்றைய கண்ணீர்ப் புகை குண்டுகளுக்கு
முன்னோடி!?
தான் நிகழ்த்திய எந்த ஒரு தாக்குதலிலும்
முஹம்மது தனது எதிரியுடன் நேருக்கு நேராக போர் புரிந்ததில்லை. அம்பு
எறிதல், வாள் வீச்சு என்று எதுவும் தெரியாதவர். தனது எதிரியுடன் நேருக்குநேர் நின்று சண்டையிட்டதாக அவரது வரலாற்றிலிருந்து
ஒரு செய்தியைக்கூட காணமுடியாது. தனது தொழிலுக்குத் தேவையான திறமைகளைத்
தனது கடவுளிடம் கேட்டுப்
பெறாமல், அந்தப்புரத்திற்காக, “அந்த” வாள்வீச்சிற்கான ஆற்றலை
அல்லாஹ்விடம் கோரிப் பெற்றுக் கொண்டார் (இதைவிட வேறென்ன வேண்டுமென்கிறீர்களா? அதுவும் சரிதான்!) தாக்குதல்களில், மண்ணையும், கல்லையும்
வீசியெறிந்து சாபமிட்டு ஒப்பாரி வைப்பது என்ற வீரமிக்க பணியைச் செய்வதுமட்டுமே அவரது
வேலை. இங்கு அதற்கும் அல்லாஹ் வேட்டு வைத்துவிட்டான்.
அல்லாஹ்(?), மண்ணை
எறிந்து உதவுதல்
அவர்களை
நீங்கள் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான். (முஹம்மதே!) நீர்
எறிந்த போது (உண்மையில்) நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான். நம்பிக்கை
கொண்டோருக்கு அழகிய முறையில் பரிசளிப்பதற்காக இவ்வாறு செய்தான். அல்லாஹ்
செவியுறுபவன்; அறிந்தவன்.
(குர் ஆன்
8:17)
இங்கு அல்லாஹ்வே அவர்களை கொலை செய்ததாகவும், மண்ணை
எறிந்ததாகவும் சூழ்ச்சி செய்ததாகவும், மார்த்தட்டிக் கூறுவதை
நமது நவீன நபி பீஜே விரும்பவில்லை. சர்வவல்லமையுடையதாக கூறப்படும்
அல்லாஹ், படையின் இறுதியில் பாதுகாப்பாக ஒளிந்து நின்றுகொண்டு,
ஒரு கோழையைப்போல சாபமிட்டு மண்ணை எறிந்தான் என்பதை எப்படி ஜீரணிக்க முடியும்?
எனக்கே மிகவும் கூச்சமாக இருக்கிறது, தூதர் பீஜேவால்
எப்படி இதை ஏற்க முடியும்? எனவே தனது குர்ஆன் விரிவுரையில்(193)
சுற்றிவளைத்து அல்லாஹ்வின் மூக்கையே தொட்டுவிட்டார்!
..நான் கல்லை வீசினால்
போதும், எதிரிகள் ஓட்டமெடுப்பார்கள் என்று முஹம்மதே நீர் நினைத்து
விடக்கூடாது, மாறாக குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியில் நீர் கல்லை
வீசிய போது எனது வல்லமையால் அதை பரவச் செய்தேன்” என்பதுதான் இவ்வசனஹ்ட்தில்
கருத்தாகும்…
193. அத்வைதத்தின் அறியாமை -onlinepj.com
என்று அல்லாஹ்வின் உளறல்களை சரிகாண்கிறார். அல்லாஹ்
அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன போலும். அல்லாஹ்,
தனது அந்தரங்க காரியதரியாக பீஜேவை நியமித்திருந்தால், குர்ஆனின் உளறல்களை முன்பே களைந்திருக்க முடியும்! காலம் கடந்த யோசனை(!)
பத்ரு தக்குதல் திட்டமிடாமல் நிகழ்ந்ததென்பதால்
முஸ்லீம்களிடம் போதிய ஆயுதங்கள்கூட இல்லாமல் இருந்ததென்று உண்மை புரியாமல் கதையளப்பார்கள்.
முஹம்மதுவின் உடனடி ஆயுதப் பட்டறை(?!) மரக்கிளையை
பளபளக்கும் வாளாக மற்றிக் கொடுதத்தைப் பற்றி இப்ன் இஸ்ஹாக் கூறுவதைப் பாருங்கள்.
Ukkasha b. Mihsam b. Hurthan ak-Asadi, ally
of B. ‘Abdu Shams, fought at Badr until his sward broken in his hand. He came
to the apostle who gave him a wooden cudgel telling him to fight with that.
When he took it he brandished it and it became in his hand a long, strong,
gleaming sword, and he fought with it until god gave victory to the Muslims.
The sward was called al-‘Aun …
(Page 305, Life of
Muhammad a Translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah By A.Guillaume)
இதைத் தனது ”அர்ரஹீக்குல்
மக்தூம்” என்ற நூலில் இஸ்லாமியப் பேரரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மானும்
உறுதி செய்கிறார்.
ஜிப்ரீல் உள்ளிட்ட வானவர்படையை இறக்கி உதவுதல்
நீங்கள்
உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது "உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும்
ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன்'' என்று உங்களுக்குப் பதிலளித்தான்.
(குர்ஆன் 8:09)
முதலில் ஆயிரம் வானவர்களை இறக்குவதாகத்தான் திட்டம் இருந்திருக்கிறது. குறைஷிகளை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து வானவர்களின் எண்ணிக்கை
மூவாயிரமாக அதிகரிக்கப்பட்டிருக்கலாம்!(?)
"(விண்ணிலிருந்து)
இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவியது
உங்களுக்குப் போதாதா?'' என்று நம்பிக்கை கொண்டோருக்கு நீர் கூறியதை
நினைவூட்டுவீராக!
அது
மட்டுமல்ல! நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சும் போது திடீரென்று அவர்கள் உங்களிடம் (போரிட) வந்தால் போர்க்கலை
அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.
(குர் ஆன் 3:124, 125)
அல்லாஹ், போர்க்கலை அறிந்த 5000 வானவர்கள் வரை அனுப்பலாம் என்ற திட்டத்தில் இருந்திருக்கிறன். முஹம்மதுவும் அவரது படையினரும் சரியாக அஞ்சவில்லை போலும் அதனால் 3000 வானவர்களை ’ஆணி பிடுங்க’ அனுப்பிவிட்டு, 2000 வானவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டான்.
எனவே இஸ்லாமிய ஆதாரங்களின் படி, முஹம்மதின் படையினர் எண்ணிக்கை 313 அல்ல! 313+3000
= 3313 பேர் (எண்ணிக்கையில்) அடுத்தது எழும் மிக சாதாரணமான கேள்வி, ஒரு வானவர் எத்தனை மனிதர்களுக்கு சமம்? வானவர்களின் உதவி எத்தகையதாயிருந்தது? இதற்கு விடையாக சில ஹதீஸ்களை காண்போம்
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
பத்ரு போரின்போது நபி(ஸல்) அவர்கள், ‘இதோ
ஜிப்ரீல்!
போர்த்
தளவாடங்களுடன்
தம்
குதிரையின்
தலையை
பிடித்துக்கொண்டிருக்கிறார்’ என்று அரிவித்தார்.
(புகாரி 3995)
ஜிப்ரீல், மாற்றுமுள்ள வானவர்களுக்கு போர்க்களத்திற்கு வரும் பொழுதுமட்டும் குதிரை தேவைப்படுகிறது. மற்ற நேரங்களில் அப்படியே பறந்து வருவாராம். குதிரை, கழுதை, ஒட்டகம் தவிர ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு காட்டரபியின் அறிவிற்கு வேறென்ன தோன்றும்? அவரது உளறல்களை நம்பி மற்றவர்களின் உயிரை எடுப்பதற்கு இன்றும் ஒரு பெரும் கூட்டம்!
இந்தத் தாக்குதலில் ஜிப்ரீல் மட்டுமல்ல, அல்லாஹ்வின் முக்கிய மலக்குகள் அனைவருமே களத்தில் இறக்கப்பட்டனர். மரணத்தின் மலக்கு இஸ்ராயீல், இடியின் மலக்கு மீக்காயீல், இறுதிநாளில் சூர் என்ற கொம்பை ஊதக்கூடிய இஸ்ராஃபீல் போன்றவர்களும் களத்தில் இறங்கி வாட்களைச் சுழற்றினர். ஜிப்ரீலின் உருவ அமைப்பை அறிவீர்கள் இருப்பினும் அந்த ஹதீஸையும் காண்போம்
மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:
...அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது
அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்தது'' என்று கூறினார்கள்...
(முஸ்லீம்)
அல்லாஹ், இத்தகைய பிரம்மாண்ட தோற்றம் கொண்ட வானவர்கள்(!) 3000 பேர்களை, சாதாரண மனிதர்களின் கண்களுக்குத் தென்படாத (மாயஉருவில்?) முறையில் குறைஷிகளை எதிர்த்து களமிறக்கினான். இத்தகைய பிரம்மாண்ட உருவங்களில் ஒன்று நிற்பதற்குக்கூட பத்ருகளம் போதாது, இதில் 3000 உருவங்கள் எப்படி செயலாற்றினவோ? அவர்கள் அமர்ந்து பயணம் செய்த, போர்செய்த குதிரைகளின் உருவம் எத்தகையதாயிருந்ததோ? (எல்லாம் அல்லாஹ்வே அறிவான்(!) அவர்களின் செயல்திறனை பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
...இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றைய தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு
முன் சென்றுகொண்டிருந்த இணைவைப்பாளர்களில் ஒருவரை விரட்டிச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர்
"ஹைஸூம்! முன்னேறிச் செல்'' என்று கூறியதையும் செவியுற்றார். உடனே தமக்கு முன்னால்
சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த
இணைவைப்பாளரின் (அருகில் சென்று) அவர் பார்த்த போது, அவனது மூக்கில்
காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து
முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார்...
(முஸ்லீம்)
கண்களுக்குத் தெரியாத எதிரியுடன் போர்புரிவது எளிதான காரியமா? இவைகள் போதாதென்று அல்லாஹ்வும், குறைஷிகளை பயமுறுத்தி உற்சாகமூட்டி உதவினான்.
"நான் உங்களுடன் இருக்கிறேன். நம்பிக்கை கொண்டோரைப்
பலப்படுத்துங்கள்! (என்னை) மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன்.
எனவே கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்!'' என்று
(முஹம்மதே!) உமது இறைவன் வானவர்களுக்கு அறிவித்ததை நினைவூட்டுவீராக!
(குர் ஆன்
8:12)
முஹம்மதின் சார்பாக 3000 வானவர்கள்,
அத்துடன் மாயஜாலவித்தைகள் களமிறங்கியும் குறைஷிகள் தரப்பில்
70 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர். தாக்குதலின் முடிவில்
70 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர் மீதமுள்ள சுமார் 860-க்கும்
மேற்பட்டவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர் என்பது வேடிக்கையானது.
அத்துடன் ”அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்”
என்று அல்லாஹ் கூப்பாடு போட்டுக் கொண்யிருந்ததை ஒருவரும் இங்கு பொருட்படுத்தியதாகத்
தெரியவில்லை! இது அல்லாஹ்வின் இயலாமை என்று கூறுவதைத் தவிர வேறுவழியில்லை.
ஆனால் ஆலீம்களோ மாபெரும் அற்புதமென்று கூறி தங்களையும், அப்பாவி முஸ்லீம்களையும் புல்லரித்து கொண்டிருக்கின்றனர்.
முஹம்மதின் பத்ரு வெற்றிக்கு, ஹதீஸ்களின்
மற்றொரு பகுதி வேறு காரணங்களைக் கூறுகிறது.
…வெற்றியின் நற்செய்தியை
அறிந்தவுடன் முஸ்லீம்களும் அவர்களது தலைவர்களும் நபி (ஸல்)
அவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டனர். இவர்களின் சந்திப்பு ‘ரவ்ஹா’ என்ற இட்த்தில் நபி (ஸல்)
அவர்களுடன் நிகழ்ந்தது. அப்பொழுது அவர்களிடம் மதீனாவைச்
சேர்ந்த ஸலமா இப்னு ஸலமா (ரழி) “நீங்கள்
எங்களுக்கு எதற்காக வாழ்த்து சொல்கிறீர்கள்? கட்டப்பட்ட ஒட்டகத்தைப்
போன்றிருந்த சொட்டைத் தலை கிழவர்களைத்தான் நாங்கள் போரில் எதிர்கொண்டோம்.
எனவே அவர்களது கழுத்துகளை அறுத்தோம்” என்று கூறினார்.
நபி (ஸல்) புன்முறுவல் பூத்து
“எனது சகோதரன் மகனே! நீ யாரை அப்படி கூறுகிறாயோ
அவர்கள்தான் (குறைஷிகளின்) தலைவர்கள்”
என்றார்.
(அர்ரஹீக்குல்
மக்தூம்)
…Then he marched until
he reached Rauha’ when the muslims met him. Salama B. Salama-So ‘Asim b. ‘Umar
b. Qatada and Yazid b. Ruman told me – said, ‘What are you congratulating us
about? By God, we only met some bald old women like sacrificial camels who are
hobbled, and we slaughtered them!’ The
apostle smiled and said, ‘But nephew, those were the chifs…
(Page 308, Life of
Muhammad a Translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah By A.Guillaume)
இந்த சொட்டைத்தலை கிழவர்களைக் கொன்றதைத்தான் மாபெரும் அற்புதம், உலகம்
காணத அதிசயம் என்று பீற்றிக் கொள்கிறார்கள். போரில் பங்கெடுத்தவரே
வாழ்த்து கூறுவதற்குக்கூட தகுதிபெறாத வெற்றி என்கிறார். உடனிருந்த
முஹம்மதுவும்கூட அதை மறுக்கவில்லை என்பது நாம் கவனிக்கத் தக்கது.
வயதான கிழவர்களைக் கொல்ல தந்திரவித்தைகளையும், வானிலிருந்து
படைகளையும் இறக்கியதாக பீற்றிக்கொள்ளும் அல்லாஹ்வை நினைத்தால் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.
போர்முடிந்தவுடன் கைபற்றிய பொருட்களைப் பங்கிடும் விவகாரம் துவங்கியது. முதல்
குற்றச்சாட்டு முஹம்மதின் மீதே விழுந்தது. முஹம்மதைப்பற்றி கூறும்பொழுது அவர்,
’அல் அமீன் - நம்பிக்கைகுரியவர் என்று குறைஷிகள்
கூட அழைத்தனர் என்று இஸ்லாமியர்கள் ’பீலா’ விடுவதை மறுத்து கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அவருக்கு குறைஷிகள் மத்தியில் மட்டுமல்ல தனது சீடர்களிடம் கூட அப்படியொரு நற்பெயர்
இருந்ததில்லை என்கிறது பின்வரும் ஹதீஸ்.
Narrated
Abdullah ibn Abbas:
The verse
"And no Prophet could (ever) be false to his trust" was revealed about
a red velvet. When it was found missing on the day of Badr, some people said;
Perhaps the Apostle of Allah (peace_be_upon_him) has taken it. So Allah, the
Exalted, sent down "And no prophet could (ever) be false to his
trust" to the end of the verse.
(அபு தவூத் 3960)
மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது...
(குர் ஆன்
3:161)
சிவப்பு நிற சால்வை காணவில்லை என்றவுடன், சீடர்கள் சிறிதும் தயக்கமின்றி முஹம்மது எடுத்திருப்பார்
என்கின்றனர். அல்லாஹ் உடனே வஹீயை விட வேண்டியதாயிற்று. இதுதான் ’அல் அமீன்’ என்பதன் பொருளோ?.
இந்த பத்ரு தாக்குதலிலுள்ள தர்க்க முறையிலான முரண்பாடுகளைப் பார்த்தோம். இனி இஸ்லாமின் அடிப்படைக் கொள்கையில் எழும் முரண்பாடுகளையும்
காண்போம். பொதுவாக இத் தாக்குதலை கூறும் பொழுது முடிவு செய்யப்பட்ட வெற்றி என்கிறார்கள் “The battle has been passed down in Islamic history as a decisive
victory..” என்கிறது விக்கிபீடியா. அதென்ன முடிவு செய்யப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட வெற்றி?
இரண்டிலொன்று கிடைக்கும்
என்று வாக்களிக்கப்பட்டதே அதுவா?
அது வெறும் அறிவிப்புதான், தீர்மானமும்,
திட்டமும் தீட்டப்பட்டது
எப்பொழுதென்று யாருக்கும் தெரியாது. அல்லாஹ்விடம் லவ்ஹுல்மஹ்ஃபூல் என்றொரு மூலப்பதிவேடு இருப்பதாகவும், அதில் பிரபஞ்சத்தின் அனைத்து செயல்களும், அதாவது நிகழ்ந்தவைகள், நிகழ்ந்துகொண்டிருப்பவைகள், இனி நிகழ இருப்பவைகள் என அனைத்துமே துள்ளியமாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும்
இஸ்லாம் கூறுகிறது. அதை தீர்மானித்து செயல்படுத்துவது அல்லாஹ் மட்டுமே. அவனை மீறி ஒரு அணுகூட அசையமுடியாது; அசையக் கூடாது இதுதான் இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை.
அவர்கள் செய்த ஒவ்வொரு காரியமும் ஏடுகளில்
உள்ளது.
ஒவ்வொரு சிறியதும், பெரியதும் பதிவு செய்யப்பட்டுள்ளது
(குர் ஆன்
54:52, 53)
இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே
பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
(குர் ஆன்
57:22)
அதை அப்படியே பத்ரு தாக்குதலுக்கும் பொருந்தும். அபூஸுஃப்யான் தப்பித்ததும், அபூஜஹ்ல் கொல்லப்பட்டதும், முஹம்மதின் படை வெற்றிகண்டதும் முன்பே இறுதி செய்யப்பட்டு
லவ்ஹுல் மக்ஃபூல் ஏட்டில் பதியப்பட்ட அல்லாஹ்வின் திட்டமே! அபூஜஹ்லின் தாடியைப் பிடித்து, எப்படி, யாரால் தலைதுண்டித்து கொல்லப்பட வேண்டுமென்பது கூட முன்முடிவு செய்யப்பட்டதுதான். இந்த நம்பிக்கையில்லையெனில் ஒருவர் முஸ்லீமாகவே இருக்க
முடியாது.
இது எப்படி இருக்கிறது எனில், எதிராளி என்று
எவருமில்லாமல், சதுரங்க விளையாட்டில் இருமுனைகளிலும் ஒருவரே
காய்களை நகர்த்தி இறுதியில், வெற்றி பெற்றுவிட்டதாகவும்; தன்னை இணையற்ற மாபெரும் வீரன், சிறந்த அறிவாளி, என்றெல்லாம் சதுரங்கக்
காய்களிடம் பெருமை பாராட்டிக்கொண்டால் என்ன கூறத் தோன்றும்? இதை இயலாமை என்பதா? மனநோய் என்பதா?
பத்ரு தாக்குதைப் பற்றி தாக்குதலுக்குப் பின் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி
கூற நிறைய இருக்கிறது பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
தஜ்ஜால்