அண்மையில் வெளியான ”துப்பாக்கி” திரைப்படத்தில் முஸ்லீம்களை தவறாக,
இழிவாக புனையப்பட்டிருப்பதாகக் கூறி, இஸ்லாமிய
அமைப்புகள் போரட்டங்களை செய்து பரபரப்பை உருவாக்கின. சில
திருத்தங்கள் திரைப்படத்தில் செய்யப்பட்டது; முஸ்லீம்கள்
இழந்த மானத்தை மீட்கப்பட்டுவிட்டதாக புளகாகிதமடைந்து தமிழக முதல்வருக்கு நன்றி
கூறினர்.
இதற்கு முன்பும் முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாக
காண்பிக்கும் எண்ணற்ற திரைக்கதைகள் வெளியாகியுள்ளன. அப்பொழுது
வெளிவராத கோபம் துப்பாக்கி திரைப்படத்திற்கு வந்தது ஏன்? ”ஸ்லீப்பர்
செல்” என்ற கதாபாத்திரங்களாக அன்றாட வாழ்வில் காணும் யதார்த்த மனிதர்களைக் காண்பித்தது தவறென்று
நண்பர் ஒருவர் கூறினார். எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகள் இல்லை
என்பது உண்மைதான் ஆனால் ஜிஹாதிய சிந்தனையை ஆதரிக்காத முஸ்லீம்கள் உள்ளனரா
என்பதுதான் கேள்வி!
நமக்கு நன்கு தெரிந்த கோவை தொடர்குண்டு வெடிப்பிலும், பங்கெடுத்த ஜிஹாதிகளில் பலருக்கு பாகிஸ்தான் எந்த திசையில் இருக்கிறது
என்பதுகூடத் தெரியாது. துப்பாக்கி திரைப்படத்தில் ”ஸ்லீப்பர் செல்” கதாபத்திரங்கள் அத்தகையதுதான்.
என்ன செய்வது உண்மை கசப்பாகத்தான் இருக்கும்!
வெளிவர இருக்கும் “விஸ்வரூபம்”
திரைப்படத்திற்கு முஸ்லீமக்ளின் எதிர்ப்பு எவ்வாறு இருக்க வேண்டுமென்று
இப்பொழுதே முடிவுசெய்து தயார் நிலையில் உள்ளனர். முஹம்மது மற்றும் இஸ்லாம் பற்றிய
உண்மைகளைச் சொல்பவர்களின் வாயை வன்முறையாக அடைக்க முயற்சிப்பது, அவர்களின் வரலாற்றில் தொன்று தொட்டு
இருந்துவரும் வழமை.
ஸாம் பாஸில் என்பவரால் வெளியிடப்பட்ட
திரைப்படத்தின் டிரைலரில் தங்களது கண்மணி முஹம்மது இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறி
உலகமெங்கும் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் நிகழ்த்தினர். ஸாம் பாஸில் என்ற தனிமனிதரின் செயலுக்கும் சென்னையிலிருக்கும் அமெரிக்க
தூதரகத்திற்கும் என்ன தொடர்பு? ஒன்றுமில்லை! ஆனால் மதவியாபாரி பீஜேவின் துர்போதனையால் வெறியேற்றப்பட்ட வெகுஜன
முஸ்லீம்களில் சிலர் “ஸ்லீப்பர் செல்”-ஆக
மாறி, அமெரிக்க அரசு பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டுமென்று
அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு கூப்பாடு போட்டதை நீங்களே அறிவீர்கள். “INNOCENCE
OF MUSLIMS”–ல் தங்களது கண்மணியின் வரலாறு தவறாக புனையப்பட்டுள்ளது எனில்
உண்மையை அழகிய முறையில் மற்றவர்களை அறியச்செய்யலாம், அறிவார்ந்த
முறையில் விவாதங்களை முன்வைத்திருக்கலாம். அப்படி எதுவும் நிகழவில்லை
காரணம் என்னவெனில் “INNOCENCE OF MUSLIMS”–ல் ஸாம் பாஸில்
கூறியவைகள் அனைத்தும் இஸ்லாமின் மூலப் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகள்.
(விவாதித்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் நிலையை ஏற்படும் என்பதை
அறியாதவர்களல்ல) உண்மை கசப்பானது அவர்களால்
சகித்துக்கொள்ள முடியவில்லை. அதற்காக பொய்யை இன்னும் எத்தனை
காலத்திற்கு நாம் அனுமதிக்க முடியும்?
தங்களது தலைவர் முஹம்மதை இழிவு செய்பட்டதாக கூறி
துள்ளிக் குதிக்கும் இஸ்லாமியர்கள், ஜெர்ரி தலைமையில் கிருஸ்ததுவர்களுடனான
விவாதத்தில் தாங்கள் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு
சிறிதுகூட தொடர்பில்லாதமுறையில், புதிய ஏற்பாடு, லூக்கா 7:37-50, யோவான் 4:11-15 வரையிலான வசனங்களுக்கு பீஜேவும் அவரது கைத்தடிகளும் கொடுத்த ஆபாச
விரிவுரைக்கு என்ன பதில் சொல்வார்கள்? புதிய ஏற்பாட்டில்
கூறப்படாத ஒரு கருத்தை வலுவில் அதன் மீது திணித்து அருவருக்கத்தக்க முறையில் ஆபாசமாக
விவாதித்த பொழுது ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்த பீஜே குழுவினரை முஸ்லீம்கள் கண்டும்
காணாததைப் போல் கடந்து செல்வது ஏன்?
பீஜே குழுவினரின் ஆபாச விளக்கங்களுக்காக சவுதி
அரசாங்கம் மன்னிப்புக் கேட்கவேண்டுமென்று, உலகின்
மற்றபகுதிகளிலுள்ள கிருஸ்துவர்களும் போரட்டம் நிகழ்த்தினால்,
இவர்களின் பதில் என்னவாக இருக்கும்?
இது முஸ்லீம்களின் இரட்டை அளவுகோல் முறை.
இதே இரட்டை அளவுகோல் முறையை அடுத்தவர்களிடம்
மட்டுமல்ல தங்களது மதக்கொள்கைகளிலும் செயல்படுத்துவதுதான் உச்சகட்ட வேடிக்கை. திரைப்படங்களைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதால் இந்தப் பதிவையும் திரைப்படத்திலிருந்தே
துவங்குகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு
திரைப்படத்தில் முஹம்மதின் போதனையொன்று விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. அதை எந்த முஸ்லீமும் கண்டுகொள்ளவேயில்லை. கடந்த
மாதம் நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டும்வரை நானும் அதைக் கவனிக்கவில்லை.
முத்ஆ எனும் ஒப்பந்தத் திருமணம்.
எல்லாத் திருமணங்களுமே பெண்ணும்
ஆணும் கூடிவாழ்வதற்கான ஒப்பந்தம் தானே இதென்ன மேலும் ஒப்பந்தம்? என்ற கேள்விகளை, காணொளி அவசியமில்லாமல்
செய்துவிட்டது. முஹம்மதின் காலத்தில் அவரால்
அனுமதிக்கப்பட்டு நடைமுறையிலும் இருந்திருக்கிறது.
அதாஉ
பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர்
பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் உம்ராவிற்காக
வந்தபோது, அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு நாங்கள் சென்றோம்.
அவர்களிடம் மக்கள் பல விஷயங்களைப் பற்றி (விளக்கம்)
கேட்டார்கள். பிறகு அவர் களிடம் "அல்முத்ஆ' (தவணை முறைத் திருமணம்) பற்றியும் பேசினர். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள், "ஆம்; நாங்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது
காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர்
(ரலி) ஆகி யோரது காலத்திலும் "அல்முத்ஆ' (தவணை முறைத் திருமணம்) செய்துள்ளோம்'' என்றார்கள்.
முஸ்லீம் 2724
முத்ஆ என்பது குறைந்தபட்சம் மூன்று
நாட்கள் என்ற வரைமுறையுடன் செய்யப்படும் திருமணம். தேவை
ஏற்பட்டால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அதிகப்படுத்திக் கொள்ளலாம் ஒப்பந்தத்தின்
முடிவில், விவாரத்து கூறாமலேயே திருமண உறவு முடிவிற்கு
வந்துவிடும். இத்திருமணத்திற்கு சாட்சிகள் எவரும் தேவையில்லை.
இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணை
முறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்த
பட்சம்) மூன்று நாள்களாவது இல்லறம் நடந்திடவேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள்
அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட
விரும்பினாலும் பிரிந்துவிடலாம்.
புகாரி 5119
உதாரணத்திற்கு இஸ்லாமியர் ஒருவர்
முத்ஆ திருமணம் செய்யவிரும்புவதாக கொள்வோம். அவர் பின்வரும்
செயல்முறைகளைப் பின்பற்றினால் போதுமானது.
முத்ஆ திருமணத்திற்கு தயாராக உள்ள இஸ்லாமியப்
பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கன்னியாக இருப்பின்
பொறுப்பாளரின் சம்மதமும் தேவை. அப்பெண் திருமண உறவில்
இருக்கக் கூடாது. கற்பில் சிறந்தவளா என்பதெல்லாம் அவரவர்
தனிப்பட்ட விருப்பம்.
எத்தனை நாட்கள் அல்லது காலம்
என்பதும் குறிப்பிட்டுக் கூறவேண்டிய வேறு ஏதேனும் முன்நிபந்தனைகள் இருப்பின் அதை
தெளிவுபடுத்திட வேண்டும்.
மஹ்ர் என்ற திருமணக்கொடையைப் பற்றி
இறுதி செய்திட வேண்டும்.
இனி முத்ஆ திருமணம்…
"நான், என்னை
குறிப்பிட்ட மஹ்ர்-க்கும், காலவரம்பிற்கும்
உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன்”
என்று அந்தப் பெண் முதலில் கூற வேண்டும்
பிறகு
"நான் ஒப்புக் கொள்கிறேன்”
என்று ஆண் மறுமொழி கூறவேண்டும். இந்த மந்திரங்கள் அரபியில் இருக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
அவ்வளவுதான் முத்ஆ திருமணம்
முடிந்துவிட்டது. இனி, எதற்காக
முத்ஆ திருமணம் செய்து கொண்டார்களோ அதற்கான பணிகளை அவர்கள் மேற்கொள்ளலாம். குறிப்பிடப்பட்ட காலவரம்பிற்குப்பின் தலாக் சொல்லாமலே திருமணம் தானகவே
முடிவிற்கு வந்துவிடும். பாலுறவு நிகழ்ந்திருந்தால் ”இத்தா” என்ற கர்பப்பை பரிசோதனை அவசியமானது. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இவர்கள்தான் பெற்றோர்.
பிரிவிற்குப் பின்னர் குழந்தைகள் யாரிடம்
இருப்பார்கள் அவர்களுக்கான பரமரிப்பு செலவுகளுக்கு பொறுப்பேற்பது யாரோ?
மக்கா வெற்றியின் பொழுது இவ்வாறு
நிகழ்ந்த தனது முத்ஆ திருமணத்தைப்பற்றி முஹம்மதின் தோழர் ஒருவர் கூறுவதை கவனிப்போம்.
சப்ரா
பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின்போது) எங்களுக்கு "அல்முத்ஆ' (தவணை முறைத் திருமணம்) செய்துகொள்ள அனுமதியளித்தார்கள். நானும் மற்றொரு
மனிதரும் "பனூ ஆமிர்' குலத்தைச்
சேர்ந்த ஒரு பெண்ணிடம் சென்றோம். அவள் கழுத்து நீண்ட இளம்
ஒட்டகத்தைப் போன்று (அழகாக) இருந்தாள்.
எங்களில் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அவளிடம் நாங்கள்
கோரினோம். அவள், "(மணக்கொடையாக)
நீங்கள் என்ன கொடுப்பீர்கள்?'' என்று கேட்டாள்.
நான், "எனது மேலாடையை'' என்றேன். என்னுடன் வந்திருந்தவர் "எனது மேலாடையை'' என்று கூறினார். என்னுடன் வந்திருந்தவரின் மேலாடை எனது மேலாடையைவிடத் தரமானதாக இருந்தது.
ஆனால், நான் அவரைவிட (வயது
குறைந்த) இளைஞனாயிருந்தேன். அவள்
என்னுடன் வந்திருந்தவரின் மேலாடையைக் கூர்ந்து பார்த்தபோது, அது
அவளுக்குப் பிடித்தது. அதே சமயத்தில், அவள்
என்னைப் பார்த்த போது, நானும் அவளுக்குப் பிடித்திருந்தேன்.
பிறகு அவள், (என்னைப் பார்த்து) "நீரும் உமது மேலாடையுமே எனக்குப் போதும்'' என்றாள்.
நான் (அவளை மணமுடித்து) அவளுடன்
மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், "அல்முத்ஆ
முறையில் மணமுடிக்கப்பட்ட பெண்ணைத் தம்மிடம் வைத்திருப்பவர், அப்பெண்ணை அவளது வழியில் விட்டுவிடட்டும்'' என்று
கூறினார்கள்.
முஸ்லீம் 2728
இன்றும் ஷியாக்கள் உறுதியுடன் முஹம்மதின்
மேன்மைமிக்க முத்ஆ திருமணத்தை பின்பற்றுகின்றனர். அவர்கள் தரும் விளக்கங்களை பார்க்கலாம்.
1. முத்ஆ திருமணத்திற்கு
குர்ஆனிலேயே அனுமதி இருப்பதாகவும், அல்லாஹ்
தனது அடியார்களின் இயலாமையை அறிந்து வழங்கிய பரிசை வேண்டாம் என்று புறந்தள்ளக்
கூடாது.
2. ஸுன்னி முஸ்லீம்களின்
புகாரி, முஸ்லீம் போன்ற ஆதரப்பூர்வமான ஹதீஸ் தொகுப்புகளில்
அதற்கான அனுமதி இருக்கிறது.
3.
வழக்கத்திலிருக்கும்
திருமணத்திற்கும் முத்ஆவிற்கும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை.
4.
இன்றைய நவீன கால
இளைஞர்களும், இளைஞிகளும் பருவக்கோளாறினால் விபச்சாரம் என்னும்
பாவச்செயலில் வீழ்ந்து அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகும் வாய்ப்புள்ளது. அதற்கு முத்ஆ திருமணம் மட்டுமே சரியான தீர்வு.
முத் ஆவிற்கு குர் ஆனிலேயே அனுமதி
உள்ளது
குர்ஆன்
4:24-ற்கு ஷியாக்கள் தரும் மொழிபெயர்ப்பு,
And all
married women except those whom your right hands possess; (this is) Allah's
ordinance to you; and lawful for you is (all) besides that - that you seek (them) by
means of your wealth taking (them) with chastity, not committing
fornication. Then as such of them with whom you have Mutah, give them their dowries as appointed;
and there is no blame on you about what you mutually agree after what is
appointed; surely Allah is Knowing, Wise.
'எனவே இவ்வாறு பெண்களிடமிருந்து
நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்) தொகையைக்
கடமையாக கொடுத்து விடுங்கள். (4:24)
ஷியா தளத்திலிருந்து…
அநேகமான
அல்குர்ஆன் விரிவுரையாளர்களும் ஹதீஸ் கலை வல்லுனர்களும் இவ்வசனம் முத்ஆ
சம்பந்தமானதே என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். தப்ஸீர் தபரீயில் இவ்வசனத்துடன் தொடர்பான அநேக அறிவிப்புகள்
கூறப்பட்டுள்ளன. அவையனைத்தும் மேற்கூறப்பட்ட வசனம் முத்ஆ
சம்பந்தமானதே என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஏராளமான
நபித்தோழர்களும் இதனை ஆமோதித்துள்ளார்கள். (தப்ஸீர் தபரீ,
பாக.5, பக்.9)
தப்ஸீர்
அத்துர்ருல் மன்ஸூரிலும், சுனன் பைஹகீயிலும் இது சம்பந்தமான பல ஹதீஸ்கள்
வந்துள்ளன. (அத்துர்ருல் மன்ஸூர், பாக.2,
பக்.140, சுனன் பைஹகி, பாக.7,
பக்.206)
மேலும்,
ஸஹீஹ் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம், முஸ்னத் அஹமத் மற்றும் பல கிரந்தங்களிலும் இத் திருமண முறை நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஆலிஹி அவர்களின் காலத்தில் நடைமுறையிலிருந்ததாக அறிவிக்கும் பல ஹதீஸ்கள்
காணப்படுகின்றன…
முஹம்மது முத்ஆ திருமணத்திற்கு அனுமதி
வழங்கினார்
முத்ஆ திருமணம் என்பது Living
together கலாச்சாரத்தைவிட படுகேவலமாக இருக்கிறது; விபச்சாரத்தின் மாறுபட்ட வடிவம் என்றும் தோன்றலாம். ”பிரியமானவளே” திரைப்படமும் இதைத் சொல்கிறது. ஆனால் அல்லாஹ்வோ அனுமதிக்கப்பட்ட தூய்மையான செயலாக கருதுகிறான்.
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஹத் (ரலி) அவர்கள் “எங்களுடன் துணைவியர் எவரும் இல்லாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களுடன் நாங்கள் ஓர் அறப்போரில் கலந்துகொண்டிருந்தோம். நாங்கள் ( அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களிடம்) “நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம்
செய்து) கொள்ளலாமா? என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அப்படிச்
செய்ய வேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள். அதன் பிறகு துணியை (மணக்கொடையாக)க் கொடுத்துப்
பெண்களை ஒரு குறிப்பிட்ட காலம் வரை மணமுடித்துக்கொள்ள எங்களுக்கு
அனுமதியளித்தார்கள்” என்று கூறி விட்டு பிறகு அப்துல்லாஹ்
பின் மஸ்உத் (ரலி) அவர்கள், “நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்
உங்களுக்கு அனுமதித்த தூயவற்றைத் தடை செய்யப்பட்டவையாக ஆக்கிவிடாதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்!
அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்.” (5:87) எனும்
வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
முஸ்லீம் 2720
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை
தடுக்கப்பட்டவையாக ஆக்காதீர்கள்!
குர் ஆன் 5:87
முத்ஆ திருமணம் விபச்சாரமே!
இஸ்லாம் கல்வி (லின்க்) இணையதளத்தின் கட்டுரையில், மௌலவி. S.H.M இஸ்மாயில் ஸலஃபி முத்ஆ திருமணம் என்பது
ஒரு தெளிவான விபச்சாரம் என்பது சாதாரண மக்களுக்கும் புரிகின்றது என்கிறார்.
அதற்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார். அவற்றில் சில..
பொதுவான திருமணத்திலோ அல்லது
இஸ்லாமிய அறிஞர்கள் சரிகண்ட திருமண முறையிலோ இவ்வளவு காலம் எனக் கால நிர்ணயம்
இருக்காது. ஆனால் முத்ஆவில் கால நிர்ணயம் இருக்கின்றது.
ஏனைய திருமணங்கள் தலாக் மூலம்
முறியும். முத்ஆ செய்யப்படும் பெண் தலாக் சொல்லப்படமாட்டாள். (அல்காபி:5/451) காலம் முடிந்ததும் உறவு தானாக முறிந்துவிடும். (இதுதானே விபச்சாரத்திலும் நடக்கின்றது.)
…
என்கிறார் இஸ்மாயில் ஸலஃபி
முத் ஆபற்றிய கேள்விக்கு அண்ணல் பிஜே
தரும் விளக்கம்.
ஒரே நாளில் இஸ்லாம் முழுமைபெறவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் இஸ்லாம் முழுமை பெற்றது.
எனவே மது அருந்துதல், வட்டி வாங்குதல் போன்ற சில
செயல் முதலில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டது. அதுபோலவே
முத்ஆவும் முதலில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. முத்ஆ அரபிகளின் கலாச்சாரம் இஸ்லாமிற்கும் இதற்கும் தொடர்பில்லை.
அண்ணல் பீஜேவை நினைத்தால் சிரிப்பு வருகிறது, முத்ஆ திருமணம், திருமணமில்லை, இரண்டும் கலந்த ஒரு கதம்பம், விபச்சாரம், விபச்சாரமில்லை, என்றெல்லாம் எத்தனை நிலைபாடுகள்தான்
உள்ளதோ? முத்ஆ திருமணம் செய்யப்பட்ட பெண்ணை விபச்சாரி என்று கூறமுடியாமல்,
வாடகை மனைவி என்கிறார்.
நடைமுறையிலுள்ள இஸ்லாமிய முறைத் திருமணத்தில், காலமுள்ள வரையில் இணைபிரியாது இருப்போம் என்று உறுதிமொழியுடன் நடைபெறுவதைபோல
முத்ஆவை பீஜே கிண்டல் செய்கிறார். திருமணம் நிகழ்ந்து ஓரிரு நாட்களில்
விவாகரத்து நிகழும் கதைகளை அண்ணல் பீஜே அறியவில்லை
போலும்! இவர்கள் பெருமையாகப் போற்றும் திருமண முறையில்,
எத்தனை முறைவேண்டுமானலும் விவாகரத்து கூறலாம், திருமணமும் செய்து கொள்ளலாம். அதற்கு எவ்விதமான உச்சவரம்பும் கிடையாது!
உதாரணத்திற்கு இஸ்லாமில் மனைவிகளின்
அதிகபட்ச எண்ணிக்கை நான்கு.
அனாதைகள்
விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த
பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள்
என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை. (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான
வழி.
குர் ஆன்
4:03
எந்த இஸ்லாமியரும் நான்கு முறைகளுக்குமேல்
திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்பது இதன் பொருளால்ல. புதிதாக நான்கு மனைவிகள் தேவையெனில் இருக்கின்ற நான்கு மனைவிகளை விரட்டிவிடு
என்பதுதான் முஹம்மது தனது தொண்டரடிபொடிகளுக்கு கற்பித்த மாபெரும் போதனை. இவர்கள் திருமண உறவைப்பற்றி பேசுவதற்கே தகுதியில்லாதவர்கள்.
திருமண உறவின்றி பெண்களுடன் பாலுறவு
கொள்வது தவறென்று இஸ்லாம் போதிக்கிறதா?
பெண்களுடன் பாலுறவு கொள்வதற்கு முஹம்மது
அனுமதித்துள்ள வழிமுறைகளைக் காண்போம்.
1.
மஹ்ர் கொடுத்து திருமணம்
முடித்திருக்க வேண்டும். – ஏக காலத்தில் அதிக பட்சம் நான்கு பெண்கள்
2.
அடிமைப் பெண்கள்
- எண்ணிக்கை வரைமுறையில்லை, திருமணம் தேவையில்லை
3.
முத்ஆ என்ற காலவரைமுறையுடன்
கூடிய திருமணம்.
4.
மிஸ்யார் என்ற பயணத் திருமணம்.
(சற்றேறக்குறைய முத் ஆவைப் போன்றதுதான். சவுதி
போன்ற நாடுகளில் இன்றும் நடை முறையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. விவரம் தெரிந்தவர்கள் தொடரலாம்.)
பொதுவாக, மஹர் கொடுத்து
திருமணம் செய்வதே சிறந்த முறை என்றும் வரதட்சணை வேதனையில் தவித்துக் கொண்டிருக்கும்
மாற்று மதத்தவர்களிடம், முஹம்மது கற்பித்த திருமணமுறையிலுள்ள
மஹர் என்ற திருமணக்கொடை பற்றி அதிகமாக சிலேகித்து கூறி,
சந்தடிசாக்கில் ’தாவா’-வும்
செய்திடுவார்கள். திருமணக்கொடை
என்பதற்கு அண்ணல் பீஜே
தரும் விளக்கம்,
திருமணம் செய்வதற்காக மணமகன் மணமகளுக்கு வழங்கும் பொருள்
மஹர் (மணக் கொடை) எனப்படும்.
ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனக்கு ஏற்படும்
இழப்புகளைக் கருத்தில் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்பதற்கு உரிமை
உள்ளது. அதை அவள் மட்டுமே உடமையாக வைத்துக் கொள்வதற்கும் உரிமை உள்ளது.
இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள்
தான். தங்களின் அழகையும், இளமையையும்
இழந்த பின் அவர்கள்
விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து
மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையை பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது...
வரதட்சணை காரணமாக 15 வயதிலிருந்தே வாழ்க்கைக்கு ஏங்கும்
பெண்கள் முப்பது வயது வரை கூட மண வாழ்வு கிடைக்காத நிலையில் உள்ளனர்.
இதன் காரணமாக பெண்களில் சிலர் வீட்டை விட்டே வெளியேறி ஓடி
விடுகின்றனர். ஏமாற்றப்படுகின்றனர். விபச்சார விடுதியில் கூட அவர்களில் பலர்
தள்ளப்படுகின்றனர். இந்தப் பாவங்கள் அனைத்திலும் வரதட்சணை வாங்கியவர்களுக்கும் ஒரு
பங்கு நிச்சயமாக உள்ளது. சில பெண்கள் இதனால் இஸ்லாத்தையே உதறித் தள்ளிவிட்டு பிற
மதத்தவர்களுடன் ஓடிப் போகும் நிலையும் உள்ளது...
108. மஹர் (மணக் கொடை) onlinepj.com
இது அண்ணலின் விளக்கம்தான் மஹர் என்பது
இன்பம் அனுபவிப்பதற்கு வழங்கப்படும் கூலி என்கிறார் முஹம்மது. அண்ணல் பீஜே ”அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும்” என்பதை கருத்தில்
கொண்டு மஹர் கேட்கலாம் என்று தனக்குத் தானே முரண்படுகிறார்.
Narrated Aisha, Ummul Mu'minin:
The Apostle of Allah (peace_be_upon_him) said: The marriage of a woman who marries without the consent of her guardians is void. (He said these words) three times. If there is cohabitation, she gets her dower for the intercourse her husband has had. If there is a dispute, the sultan (man in authority) is the guardian of one who has none.
The Apostle of Allah (peace_be_upon_him) said: The marriage of a woman who marries without the consent of her guardians is void. (He said these words) three times. If there is cohabitation, she gets her dower for the intercourse her husband has had. If there is a dispute, the sultan (man in authority) is the guardian of one who has none.
Abu
Dawud 2078
Narrated Basrah:
A man from the Ansar called
Basrah said: I married a virgin woman in her veil. When I entered upon her, I
found her pregnant. (I mentioned this to the Prophet). The Prophet
(peace_be_upon_him) said: She will get the dower, for you made her vagina lawful for you. The child
will be your slave. When she has begotten (a child), flog her (according to the
version of al-Hasan). The version of Ibn AbusSari has: You people, flog her, or
said: inflict hard punishment on him.
Abu
Dawud 2126
முஹம்மதின் பார்வையில் மஹ்ர் என்பதன்
உண்மைப்பொருள் “dower for the
intercourse her”, “made her vagina lawful for you அதாவது ”உடலுறவு கொள்ளப்பட்டதற்கான கூலி”, “பெண்ணுருப்பை
சட்டபூர்வமாக உடைமையாக்கிக் கொள்வது” என்பதுதான்.
அண்ணல் பீஜே ’பீலா’ விடுவதைப்
போன்று வரதட்சணை முறைக்கு எதிரானது அல்ல. முஹம்மதைப் பொறுத்தவரையில்,
பெண்கள் என்ற உயிரினம், ஆண்களின் இச்சைகளைத்தீர்க்க
பயன்படும் ஒரு பொருள்.
எனவே இஸ்லாமிய முறைத்திருமணத்திலுள்ள
மஹர் நேரடிப் பொருள்,
பெண்ணுருப்பை சட்டப்படி உரிமையாகிக் கொள்வதுதான். முத்ஆவில் நிகழ்வதும் இதுதானே?
நாம் காணும் பெரும்பாலான முஸ்லீம்கள்
ஒரே மனைவியுடன் கண்ணியமாகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்? என்று தோன்றலாம். உங்களது கருத்து உண்மைதான்,
அவர்கள் அவ்வாறு இருக்கக் காரணம், இங்கு நிலவும்
கலாச்சார சூழல் அவர்களை அவ்வாறு கட்டுப்பாட்டுடன் வாழவைக்கிறது. அவர்கள் முஹம்மதின் போதனைகளை பின்பற்றவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.
நாம் அண்ணல் பீஜே வின் விடியோவைத் தொடர்வோம்.
”அஞ்சு வருசத்திற்கு உங்க
மகளை கல்யாணம் பண்ணிக்கறேன்ன எவனாவது பொண்ணு கொடுப்பானா?” என்கிறார்.
எந்த ஒரு நல்ல தந்தையும் நிச்சயமாக இதற்கு
அனுமதி வழங்கமாட்டான்.
நமது கேள்வி முத்ஆ திருமணத்தை அல்லாஹ்வும், முஹம்மதும்
அனுமதித்தார்களா இல்லையா? என்பதுதான். பெண்ணுடைய
தந்தை சம்மதம் அளித்தாரா என்பதல்ல.
குர்ஆனிலே அனுமதிக்கப்பட்டிருக்கும்
ஒரு செயலை இவர்கள் எப்படி தடை செய்ய முடியும்?
உங்கள்
அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது)
அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல்
உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் (திருமணத்தின்
மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக
அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர்
திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை.
அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
குர் ஆன்
4:24
என்று திருமணங்களின் வகைகளைப்பற்றி
கூறும் அல்லாஹ் இறுதியாக இவ்வாறு முடிக்கிறான்.
அல்லாஹ்
உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். (ஏனெனில்) மனிதன் பலவீனனாகப்
படைக்கப்பட்டுள்ளான்.
குர் ஆன் 4:28
அடைப்புக்குறிகளுக்கிடையே, ”திருமணத்தின் மூலம்” என்றொரு வார்த்தையை இடைச்சொருகல்
செய்திருப்பது அண்ணல் பீஜே போன்ற அறிஞர்களுக்கு வந்த வஹீ என்பதை நினைவில் கொள்ளவும்.
இஸ்லாமில் திருமணம் என்றால் என்ன என்பதை விளங்கியிருப்பீர்கள்.
எனவே இங்கு வழக்கிலிருக்கும் திருமணமுறையுடன் ஒப்பிடத்தேவையில்லை.
காலவரைமுறையுடன் திருமணம் செய்வதால்
முத்ஆவை திருமணமாக கருதமுடியாது, எனவே இது முஹம்மது அனுமதித்த திருமண
முறையாக கருதக் கூடாது. மேலும் முத்ஆ முறை ஒருவகையான விபச்சாரம்
என்றும், விபச்சாரம் புரிய வேண்டாம் என்று குர்ஆனின் சில இடங்களில்
குறிப்பிடப்பட்டுள்ளது. என்றெல்லாம் கூறி ஸன்னி முஸ்லீம்கள் முத்ஆவை
விபச்சாரத்துடன் ஒப்பிட்டு தவறு என்கிறார்கள்.
விபச்சாரத்திற்கு
நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
குர்ஆன்
17:32
சரி..! விபச்சாரம்
என்றால் என்ன? குர்ஆனில் “விபச்சாரம்”
என்பது எவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது?
இதற்கான பதில், ”இல்லை” என்பதுதான்.
என்னவென்றே தெளிவு செய்யப்படாத ஒரு செயலை
தவறு என எப்படி முடிவு செய்ய முடியும்?
”விபச்சாரம்” என்பதைப்பற்றிய அறிவு அன்றைய அரபிகளுக்கு இருந்ததால், அதைபற்றி குர்ஆன் விவரிக்கவில்லை என்றொரு பதில் கூறலாம்.
அன்றைய அரபிகள் முத்ஆவை ஒருவகைத் திருமண
முறையாகத்தான் கருதினர் என்பதை அண்ணல் பீஜேவும் ஒப்புக்கொள்கிறார். பிறகு எவ்வாறு முத்ஆவை விபச்சாரம் என்று முடிவு செய்ய முடியும்?
முத்ஆ என்பது திருமணம் என்ற பெயரில்
நிகழும் விபச்சாரம் என்றால், தங்களது இல்லங்களில், தங்களது அன்றாடபணிகளை கவனித்துக்
கொண்டிருந்த அப்பாவிகளைத் தாக்கி, சூறையாடி, அவர்களது பெண்களை கைப்பற்றி,
பாலுறவு அடிமைகளாக வைத்துக் கொண்டதை என்னவென்று சொல்லலாம்?
அடிமைப் பெண்களை பரிசுப் பொருளாகவோ, விலை கொடுத்தோ, திடீர்த்தாக்குதல் நிகழ்த்தியோ கைப்பற்றலாம்;
விருப்பம் போலக் கூடலாம் நண்பர்களுக்கு கைமாற்றகவும் கொடுக்கலாம்.
இதில் தாக்குதலில் வம்படியாக கைபற்றப்பட்ட பெண்களுக்கு கணவர்கள் இருப்பின்
முந்தைய கணவர்களுடனான திருமணம் அல்லாஹ்வால் ரத்து செய்யப்படும். எனவே தலாக் அல்லது விவாரத்து சொல்லிக்கொண்டிருக்க
வேண்டிய அவசியமில்லை. எனவே அவர்க்ளது மகிழ்ச்சிக்கு எந்தத் தடையும்
இருக்காது. அல்லாஹ்விடத்தில்
அது பழிப்பிற்குரிய செயலுமல்ல!
(ஆனால்) தம் மனைவியர்களிடமும் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமும் தவிர; -இவர்களிடம் உறவுகொள்வதில் நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படுபவர்கள்
அல்லர்.
குர் ஆன் 23:06
அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அவ்தாஸ்' போர் நாளில் அவர்கள்
சில பெண்களைச் சிறை பிடித்தனர். அப்பெண்களுக்கு (ஏற்கெனவே) கணவர்கள் இருந்த காரணத்தால் (மற்றொருவரின் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள) அஞ்சினர்.
இது தொடர்பாகவே "மேலும், கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், (போரில்) உங்களுக்கு
உடைமையாகிவிட்ட பெண்களைத் தவிர. (இது) அல்லாஹ்
உங்களுக்கு விதித்த சட்டமாகும்'' எனும் (4:24ஆவது) வசனம் அருளப்பெற்றது.
முஸ்லீம் 2887
இதுவும் முஹம்மது அனுமதித்துள்ள பாலுறவுமுறைதான். இந்த கேடுகெட்ட சட்டத்திற்கு, இந்த வினாடிவரை எந்தத்
தடையும் கிடையாது. முஹம்மது உருவாக்கிய காட்டுமிராண்டித்தனமான
கலாச்சாரத்திலிருந்து முஸ்லீம்கள் முன்மாதிரிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில்
இருப்பது வெட்கக்கேடு.
உலகில் ஐந்தில் ஒருவர் தங்களது பிரச்சினைகளுக்கான
தீர்வை,
முஹம்மது என்ற ஒற்றை மனிதரின் வாழ்விலிருந்தே தேடுகின்றர் என்று முஃமீன்
ஒருவர் புல்லரித்தது நினைவிற்கு வருகிறது.
பொதுவாக, ஒருவர் சந்தேகத்திற்கு இடமின்றி, தனது மனைவியல்லாத வேறொரு
பெண்ணுடன், அவளின் அனுமதியுடன் பாலுறவு கொள்வதை விபச்சாரம் என்பதாக
கூறப்படுகிறது. ஆனால் இது இடத்திற்கு ஏற்றவாறு வெவ்வேறு விதமாக
பொருள் கொள்ளப்படுகிறது.
உதாரணத்திற்கு, ஆண் பெண் இருவரின் முழு சம்மதத்துடன் பாலுறவை, நீங்கள்
அதை விபச்சாரமாக கருதினாலும், இந்திய சட்டப்படி தண்டிக்க வழியில்லை.
மும்பையில் சட்டப்படி சரி எனப்படும் விபச்சாரம் சென்னையில் குற்றமாகிறது.
இதுவல்லாமல் இன்று நமது பகுதிகளில்கூட “Dating” என்றொரு கலாச்சாரமும் காணப்படுகிறது. “Dating” கலாச்சாரத்தை
எவரும் விபச்சாரம் என்றுகூறி தடுக்கவுமில்லை. மேற்கத்திய நாடுகளின்
நிலை இன்னும் மாறுபட்டது. எனவே விபச்சாரம் என்பதற்கான பதிலை எந்த
சமுதாயத்திலிருந்து தேர்தெடுப்பது?
முஹம்மதின் போதனைகளிலிருந்தா….?
வாதத்திற்காக, முஹம்மது முத்ஆ திருமணமுறையை (நாம் கருதும்) விபச்சாரத்தைப் போன்றது என்று முடிவு செய்து இனிமேல், முஸ்லீம்கள் எவரும் முத்ஆ திருமணம் செய்யக்கூடாது என்று தடைசெய்தார் என்றே ஒப்புக்கொள்வோம். ஒழுக்கக் கேடானது என்று தான் தடைசெய்த ஒரு செயலை மீண்டும் எப்படி அனுமதித்தார்?
அதை மீண்டும் தடை செய்து, அனுமதித்து தடை செய்து….
இப்படியே போகிறது அவரது மாண்பு மிகு ஒழுக்கம்.
ஷியா தளத்திலிருந்து…
ஸஹீஹ் முஸ்லிமுக்கு விரிவுரை வழங்கிய இமாம் நவவி அவர்கள் முத்ஆ
திருமணம் தடைசெய்யப்பட்ட கால முரண்பாடுகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
1.
கைபர் யுத்தத்தில்
மாத்திரம் ஹலாலாக்கப்பட்டு பின்னர் ஹராமாக்கப்பட்டுவிட்டது.
2.
உம்ரதுல் கழாவில்
மாத்திரம் அது ஹலாலாக இருந்தது.
3.
மக்கா வெற்றியின்
போது ஹலாலாக்கப்பட்டு பின்னர் ஹராமாக்கப்பட்டு விட்டது.
4.
தபூக் யுத்தத்தின்
போது (ஹிஜ்ரி 9ம் ஆண்டு) ஹராமாக்கப்பட்டது.
5.
அவ்தாஸ் யுத்தத்தின்
போது (ஹிஜ்ரி 8ம் ஆண்டு) மாத்திரம் ஹலாலாக இருந்தது.
6.
ஹஜ்ஜதுல்வதாஃவில்
மாத்திரம் (ஹிஜ்ரி 10ம் ஆண்டு) அது ஹலாலாக இருந்தது.
7.
முத்ஆ நபியவர்களில்
காலத்திலும், முதலாம் கலீபா அவர்களின் காலத்திலும்; ஹலாலாகத்தான் இருந்தது. அதனை கலீபாதான் தடைசெய்தார்கள்.
ஷியக்களின் வாதத்தில் உண்மை இருக்கிறது. அதை அதற்கு ஏதுவாக உள்ள சில ஹதீஸ்களைப் பார்க்கலாம்.
ஹிஜ்ரி
7-ல்
சப்ரா
பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் (மக்கா வெற்றியின்போது) எங்களுக்கு "அல்முத்ஆ' (தவணை
முறைத் திருமணம்) செய்துகொள்ள அனுமதியளித்தார்கள்…
முஸ்லீம் 2727
ஹிஜ்ரி
7-ல்
அலீ
பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கைபர் போர் நாளில் "அல்முத்ஆ' (தவணை
முறைத்) திருமணத்திற்கும் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியைப்
புசிப்பதற்கும் தடை விதித்தார்கள்.
முஸ்லீம் 2738
ஹிஜ்ரி
8-ல்
சப்ரா
பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (மக்கா வெற்றியின்போது) அல்லாஹ்
வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன்.
அப்போது அவர்கள், "மக்களே! நான் "அல்முத்ஆ' (தவணை
முறைத்) திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு
அனுமதியளித்திருந்தேன். (இப்போது) அல்லாஹ்
அத்திருமணத்திற்கு மறுமை நாள்வரைத் தடை விதித்துவிட்டான்.
முஸ்லீம் 2730
ஹிஜ்ரி
8-ல்
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள்
கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் "அவ்தாஸ்' போர்
ஆண்டில் மூன்று நாட் களுக்கு "அல்முத்ஆ' (தவணை முறைத் திருமணம்) செய்துகொள்ள
அனுமதியளித்தார்கள். பின்னர் அதற்குத் தடை விதித்தார்கள்.
முஸ்லீம் 2728
ஏன் இத்தனை
குழப்பம்?
உண்மை என்னவெனில் முத்ஆவை
முஹம்மது தடைசெய்யவில்லை.
அவரது காலத்திற்குப் பிறகும் முத்ஆ முஸ்லீம்களின் வழக்கில் இருந்திருக்கிறது.
கேடுகெட்ட அடிமைமுறையே தடைசெய்யப்படவில்லை
எனும் பொழுது, முத் ஆவை தடைசெய்தார் என்று கற்பனை செய்வதுகூட
நகைப்பிற்குரியது. அண்ணல்
பீஜே உதரணத்திற்கு கூறிய மது அருந்துதல், வட்டி வாங்குதல் போன்றவைகளை முஹம்மது தனது அடியாட்களை
உற்சாகப்படுத்தும் நோக்கில் அனுமதித்திருந்தார், தேவைகள் நிறைவு
பெற்றதும் அவற்றிலிருந்து விலகிக்கொள்ளுமாறு கூறிய அறிவுறுத்தல்கள் குர்ஆனில் காணப்படுகின்றன.
முத்ஆ திருமணம் விபச்சாரத்தைப் போன்றது என்று முஹம்மது நினைத்ததாகக்கூட
எந்த ஒரு செய்தியும் அவரது வரலாற்றில் இல்லை. எனவே முத்ஆவை விபச்சாரம்
என்று கூறுவது அண்ணல்
பீஜே, இஸ்மாயில் ஸலஃபி போன்ற இஸ்லாமிய அறிஞர்களுக்கு தனிப்பட்டமுறையில் வந்த சிறப்பு வஹீ!
முஹம்மதின் வழிமுறையை மற்றும் அவர் அனுமதித்தவைகளைப்
பின்பற்றுவதாகக் கூறும் ஸன்னி முஸ்லீம்கள் முத்ஆ திருமணத்தை விபச்சாரம் என்று கூறி
புறந்தள்ளுகின்றனர்.
முத்ஆவைத் தடை செய்தது யார்?
நபியவர்களின் காலத்தில் ஆகுமாக்கப்பட்டிருந்த இருமுத்ஆக்களையும்
நான் தடைசெய்கிறேன்; அதனைச் செய்வோரை நான் தண்டிப்பேன்' என உமர் அவர்கள் கூறினார்;
(முஸ்னத் அஹ்மத் 3:325,பைஹகீ 7:206, அல்முக்னி இப்னு குத்தாமா 7:571, தப்ஸீருல் கபீர் 10:52,
கன்ஸூல் உம்மால் 16:521)
அபூநள்ரா
முன்திர் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர்
வந்து, "இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்களும் இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர் களும் ("தமத்துஉ' வகை
ஹஜ் மற்றும் தவணை முறைத் திருமணம் ஆகிய) இரு "முத்ஆ'க்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டனர்''
என்று கூறினார். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள், "நாங்கள்
அவ்விரண்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இருக்கும் காலத்தில்) செய்தோம். பின்னர் உமர் (ரலி)
அவர்கள் (தமது ஆட்சியில்) அவ் விரண்டையும் செய்யலாகாதென எங்களுக்குத் தடை விதித்தார்கள். எனவே, நாங்கள் அவ்விரண்டையும் திரும்பச் செய்வதில்லை''
என்று விடையளித்தார்கள்.
முஸ்லீம் 2776
முஹம்மது அனுமதித்த ஒரு செயலை உமர் எவ்வாறு
தடை செய்ய முடியும்?
அவ்வாறு உமர் தடை செய்கிறார் எனில் அவருடைய காலத்திலும் முத்ஆ வழக்கில்
இருந்துள்ளது என்பதுதான் பொருள். உமர் சொல்வதெல்லாம் இஸ்லாமாகாது
என்பதை நீங்களே அறிவீர்கள்.
முஹம்மது உட்பட அன்றைய அரபிகள் முத்ஆவை
ஒருவகைத் திருமண முறையாகத்தான் கருதினர் என்பதை அண்ணல் பீஜேவும் ஒப்புக்கொள்கிறார். அதனால்தான் முத்ஆ திருமணம் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டதாக கூறும் வலுவான
ஆதாரத்தை தரமுடியாமல் தடுமாறுகின்றனர். ’ஜாலி மூடில்’
இருக்கும்...
அல்லாஹ்
உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான்...
குர் ஆன் 4:28
அல்லாஹ் எளிதாக்கிய சட்டங்களை கடுமையாக்கும்
அனுமதி,
இஸ்லாமில் எவருக்குமில்லை!
முத்துக்குளிக்க வாரீகளா…! முத்ஆ செய்ய வாரீகளா..!!!
தஜ்ஜால்