Thursday, 1 September 2011

இன்று இறுதி தீர்ப்புநாள்…!



அசிம் மெகபூப் மன்னுலக வாழ்க்கைக்கு பின் இறைவனின் கியாம நாளை எதிர்பார்த்து காத்திருந்தான். அவன் மனம் நிறைந்து அமைதியாக இருந்தது. 48 வருடங்கள் இந்தியாவின் குடிமகனாக வாழ்ந்த வாழ்வு. அளவு குறைவுதான் என்றாலும், அவன் வாழ்க்கையில் பேசத்தக்க பல செயல்கள் உண்டு.       
மும்பையின் புறநகரில், ஒரு சில்லரைக்கடைக்கு சொந்தக்காரனாக தொழில் நடத்தி, சொந்த வாழ்க்கையை ஒரு ஈமானுள்ள நல்லடியானாக இஸ்லாமிய ஷரத்துக்களின்படி நடத்தியிருந்தான். தவறாமல் மசூதிக்கு போவான். அங்குள்ள இமாமுக்கும் நல்ல நண்பன். அது மட்டுமல்ல. அசிம்மின் வாழ்க்கையில் அவன் பெருமைப்பட இன்னும் நிறைய இருந்தன. உண்மையில் அசிம் அல்லாஹ்விற்காக இந்த பூமியில் போரிட்டவன். அது கடினமாகத்தான் இருந்தது, ஆனால் அசிமுக்கு சுவனத்தில் கிடைக்கப்போகும் வெகுமதிகள் அவன் பட்ட துயருக்கெல்லாம் பலனாக இருக்கப்போகிறது.
எப்படியெல்லாம் இவற்றை சாதித்திருக்கிறேன் என்று அசிம் யோசித்துக் கொண்டிருந்த போது, பிரகாசமான ஒளி தோன்றியது. கண்ணைக்கூசிய அந்த ஒளிவெள்ளத்தில் அவனால் எதையும் சரியாக பார்க்க இயலவில்லை.

இடிமுழங்கும் குரலில் அசிம்முடன் ஒரு உரையாடல் தொடங்கியது.       
இறைவன் :  அசிம், நான்தான் இறைவன். நீ என்னை அல்லாஹ் என்று சொல்கிறாய். நான் உலகைப்படைத்தவன்மிக்க பலசாலியும், எல்லாம் அறிந்தவனும், எங்கும் உள்ளவனும் ஆவேன்.   

அசிம் : அல்லாஹூ அக்பர்!!! அல்லாஹூ அக்பர்!!! சுப்ஹான் அல்லாஹ். இறைவனே! நான் அசிம். உனது உண்மையான அடிமை.

இறைவன் :  அசிம், நீ யாரென்று தெரியும். நான் இறைவன் இல்லையா?

அசிம் : மன்னிக்க வேண்டும் அல்லாஹ்! நான் இந்த கியாம நாளுக்காக இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன்.   

இறைவன் :   ஆமாம். நீ காத்திருந்ததை அறிவேன். நீ எங்கே போவாய் என்று அறிய ஆவலாய் இருக்கிறாய் - என்னுடன் சுவனத்திற்கா, அல்லது மீளாத நரகத்திற்கா!   

அசிம் : ஆமாம், சர்வ வல்லமை படைத்தவனே!, நான் சுவனத்திற்காக எவ்வளவு ஆவலாக காத்திருந்தேனோ, அது போல இப்போது தங்கள் முடிவை அறிந்துகொள்ள ஆவலாகத்தான் இருக்கிறேன். அல்லாஹ்வே, நான் உனக்காக என்னால் முடிந்த எல்லா விதத்திலும் சேவை செய்தேன், உனது கட்டளைகளை விடாமல் பின்பற்றினேன்.       
இறைவன் : என்னிடம் முடிவு இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பு சுவனத்தை பற்றி நீ தெரிந்துகொண்டதை சொல். நான் எல்லாம் அறிந்திருந்தாலும், உன் எண்ணங்களை அறிய முடிந்தாலும், உன்னுடன் இது குறித்து உரையாட விரும்புகிறேன்.       

அசிம் : மிக்க நன்றி, அல்லாஹ்வே! நீ பரம கருணையானவன். சுவனத்தில் உனது அருகாமையில் வசிக்கவும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், வெண்முத்து, பவளைத்தை போன்ற அழகிய, யாரும் தீண்டாத ஹூருல்ஈன்கள் என்ற கன்னியர்களும் எனக்கு கிடைக்கும் என்பதை அறிவேன்.       

இறைவன் :   ஓகோ!, நரகத்தை பற்றி என்ன அறிவாய்?

அசிம் : அய்யோ! கொழுந்துவிட்டு எறியும் நரக நெருப்பில் வீழ்ந்து, கொதிக்கும் நீரில் கருக்கப்பட்டு, அதையே பருகுவது அல்லவா நரகத்தில். அதுதான் இறை மறுப்பாளர்களான காபிர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நீ இறக்கிய வேத புத்தகத்தையும் உனது கட்டளைகளையும் மறுத்தவர்கள்!      

இறைவன் :   சரி அசிம், நீ போகும் இடத்தை தெரிந்துகொள்வாய். தேவைப்பட்டால் என்னை நினைத்துக்கொள். சென்றுவா!       

உடனே அசிம் பார்வையில் சில காட்சிகள் தோன்றின. ஆவலுடன் எதிர்பார்த்த தெளிந்த நீரோடைகளுக்கு பதில், கொதிக்கும் நீரும் நெருப்பும் துன்பமும் தென்பட்டன. அசிம் பதட்டப்பட்டான், கால்கள் நடுங்கின, பரிதாபமாக இறைவனை நினைத்துக் கொண்டான். இறைவன் மீண்டும் தோன்றினார்

அசிம் : எல்லாம் வல்ல இறைவனே! நான் எங்கிருக்கிறேன்? சுவனத்தின் எந்த பகுதி இது? ஏன் சுவனம் நரகத்தின் காட்சிகள் போல தோன்றுகிறது

இறைவன் : அசிம், நீ சொல்வது சரிதான். நீ நரகத்தில்தான் இருக்கிறாய். இந்த அனுபவங்களை உன் நம்பிக்கை மற்றும் கற்பனைக்கு ஏற்ப கொடுத்துள்ளேன். இந்த அனுபவம், நீ பூமியில் பலருக்கும் விவரித்த நரகத்தை போலவே தோன்றும்.       

அசிம் : ஆனால், ஆனால், இறைவனே, நான் தங்கள் கட்டளைகள் எல்லாவற்றையும் கடைபிடித்தேன். தங்கள் புத்தகத்தில் அசையாத நம்பிக்கை வைத்து அவற்றில் கூறிய அனைத்தையும் செய்தேன்.   
இறைவன் :  இல்லை அசிம், இது உன் தவறான எண்ணம். நீ நான் சொன்னது போல செய்யவில்லை. நபிகளார் முஹம்மது என்று நீ அழைக்கும் ஒரு மனிதர் சொன்னதுபோல செய்தாய்.    

அசிம் : ஆனால், அவர் தங்களின் தூதர். நீங்கள் ஜிப்ரயில் மூலமாக அவருக்கு ஆணையிட்டீர்கள்.     

இறைவன் : இது உனக்கு எப்படி தெரியும்? உன் கண்களால் பார்த்தாயா? நான் அப்படி உன்னிடம் சொன்னேனா?

அசிம்: இல்லையில்லை. இப்படித்தான்  புனித புத்தகம், உன்னால் அருளப்பட்ட புத்தகம் குர்ஆன் சொல்கிறது.  

இறைவன் : குர்ஆன் என் புத்தகம் என்று எப்படி சொல்கிறாய்? அது புனிதமானது என்று யார் சொன்னது?     

அசிம் : ஏனென்றால், நபிகளார் முஹம்மது (ஸல்), இறைவனாகிய தாங்கள் குர்ஆனைஅவரிடம் இறக்கியதாக சொல்லியிருக்கிறார்.  

இறைவன் : அசிம், மனிதர்கள் பலவற்றை சொல்லுகிறார்கள். ஒவ்வொரு நாளும், பலர் என்னிடம் பேசியதாக சொல்கிறார்கள். அதனால், அவர்கள் எல்லோரும் என்னிடம் பேசியதாக ஆகிவிடுமா?  
அசிம் : எல்லாம் வல்லவனே! நான் பலர் அப்படிச் சொல்வதை ஏற்றுக் கொள்வதில்லை, அவர் யாராக இருந்தாலும் சரி. ஆனால்,முஹம்மது (ஸல்) அவர்கள் உங்கள் தூதரானதாலும், அவர் மூலம் மனித இனத்துக்கு அனுப்பப்பட்ட குர்ஆனில் அவர்தான் கடைசி தூதர் என்று சொன்னதாலும் அவர் சொன்னதை நம்பினேன்.
இறைவன் : அசிம், உண்மைக்கும் - உண்மை என்று மக்களால் கோரப்படுவதற்குமுள்ள வித்தியாசத்தை நான் இப்போதுதானே விளக்கினேன். பலர் என்னிடம் பேசுவதாக சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் எல்லோரையும் போல சாதாரண மனிதர்கள்தாம்முஹம்மது என் தூதன் என்று சொன்னால், அவன் என் தூதன் என்று ஆகிவிடாது. முஹம்மது  குர்ஆன் அவரிடமிருந்து அல்ல என்னிடமிருந்து அருளப்பட்டது என்று கோரினால் அதனால் அப்படி ஆகிவிடாதுகுர்ஆன் முஹம்மது  கடைசி தூதர் என்று கோரினால், அவர் கடைசி தூதராக, ஏன் ஒரு தூதராக கூட, ஆகிவிட மாட்டார். நானே வந்து குர்ஆன் என்னுடையது என்று சொன்னால் ஒழிய, உனக்கு குர்ஆன் என்னுடையது என்று தெளிவாகாது.  ஒரு (நிரூபிக்கப்படாத) கோரிக்கைக்கும் உண்மைக்கும் வித்தியாசம் இருக்கிறது.    
                
உண்மையில், நீ கண்மூடித்தனமாக ஒரு மனிதன் நபி என்று சொல்லிக் கொள்வதை நம்பினாய். அதன் விளைவாக அவர் கொடுத்த புத்தகத்தையும் என்னுடையதாக நம்பியிருக்கிறாய்.
அப்படி அந்த புத்தகம் என்னுடையது என்று நம்பியதால் (ஆனால் உண்மையில் அப்படி இல்லாததால்), முஹம்மது  கடைசி தூதர் என்று புத்தகத்தில் சொல்லப்பட்டதைக் கொண்டு உன் (அடிப்படை) தவறான எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்திக்கொண்டாய்.    

அசிம் : மன்னிக்கவேண்டும், இறைவா. மன்னிக்கவேண்டும். என்மீது கருணை காட்டுங்கள். நான் பாவம் செய்துவிட்டேன். கண்மூடித்தனமாக நம்பிவிட்டேன். என்னை மன்னியுங்கள்.    

இறைவன் : நீ என்னை நிராசையாக்கிவிட்டாய். என்னை அவமதித்து விட்டாய். என் மக்களில் பலரை ஒதுக்கினாய். நான் கருணையாய் அன்பு செலுத்தியவர்களை நீ வெறுத்தாய். நீ பாவம் செய்துவிட்டாய் அசிம், எனக்கு எதிராக.     

அசிம், நீ குர்ஆனில் படித்ததை ஞாபகப்படுத்திக் கொள்.

           குர்ஆனில் சொன்னது போல, நான் பாரபட்சமானவனாக இருப்பேன் என்று நம்பினாயா? அதில் சித்தரிக்கப்பட்டது போல நான் கொடுமைக்காரனாக இருந்திருப்பேன் என்று நினைக்கிறாயா? உன்னைப்போன்ற பிறந்து இறக்கும் மனித குலத்தின் உதவி எனக்கு தேவைப்படும் என்று நினைக்கிறாயா?

       மற்ற மதங்கள் இருக்க கூடாது என்று நான் நினைத்தால் ஒரு யூத, கிருத்துவ, புத்த குழந்தைகளை பிறப்பித்துக் கொண்டே இருப்பேனா? எனக்கு எதற்காக மனிதர்களின் உதவி தேவைப்படும்?

      குறைந்த அளவில் நல்லவைகளையும், ஆனால் அதிகமாக தீயவையும் கொண்டு, எல்லையற்ற குழப்ப வரிகளால் எழுதப்பட்டு, மனித நேயத்தை மறுதலிக்கும் அளவு மீறிய வன்முறை கொண்ட ஒரு புத்தகத்தை நீ படித்தாய். அதை நான் அருளியது என்று நீ நினைத்ததே எனக்கு பெருத்த அவமானம்!

       என் கட்டளைகளை ஒரு தப்சீர் குறிப்புகளைக் கொண்டுதான் புரிந்து கொள்ள வேண்டும் என்னும் அளவுக்கு நான் தெளிவாக பேச, எழுத தெரியாதவனா? பல மனிதர்கள் எழுதிய புத்தகங்கள் தெள்ளத் தெளிவான செய்திகள் நிறைந்து இருக்கின்றன. அவை சிறந்தவை என்றாலும் அவையெல்லாம், மனிதர்கள் படைத்தவைதான். ஆனால், நான் அருளியதாகிய ஒரு புத்தகம் அவற்றை விடவா மோசமாக இருக்கும்? நீ என்னை எப்படி இவ்வாறு அவமானப்படுத்தினாய் அசிம்?     

உண்மை என்ன தெரியுமா? குர்ஆன் ஒரு மனிதனின் படைப்பு. எனக்கு குறைவானது.  

அசிம் : இறைவா, மன்னித்துவிடுங்கள். சர்வ வல்லமை பொருந்தியவனே, மன்னித்து விடு.

நான் பதினைந்து வயது மாணவனாக இருக்கும்போது பள்ளியில் குர்ஆனின் சில பகுதிகளில் சந்தேகம் விளைந்தது. குர்ஆனில் படித்ததுபோல் ஒரு இறைவன் தன்னை தொழுவதற்காக மனிதர்களை ஏன் படைக்கவேண்டும் என்று என்னை கேட்டுக்கொண்டேன். என் மனதில் நீங்கள் நான் படித்ததற்கு மாறாக கர்வமும், அதீத சுய-அன்பும் அற்று இருப்பீர்கள் என்று தோன்றியது. ஆனால், என் சுற்றத்தாரால் குர்ஆனில் நம்பிக்கை ஊட்டப்பட்டு கண்மூடித்தனமாக நம்பினேன். என் பாவங்களை மன்னியுங்கள், அல்லாஹ்

இறைவன் : தவறான நம்பிக்கையில் விழுவது சில சமயம் மிகவும் எளிது, அசிம். நான் மனிதர்களுக்கு அளித்த மூளை மிகவும் சிறந்தது. இந்த பூமியில் வேறு எந்த இனத்துக்கும் யோசிக்கும் திறைமை கொடுக்கப்படவில்லை. அந்த திறைமையை நீ உபயோகித்திருக்க வேண்டும், அசிம். அந்த திறைமை மானிடனான உனக்கு ஒரு பரிசு.       
அசிம் : மன்னியுங்கள் இறைவா. என்னை சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் இஸ்லாத்தில் நம்பிக்கை வைக்க வற்புறுத்தினார்கள். விஞ்ஞானம், மனித உரிமைகள், வரலாறு, புனித அறிவு என்று பல ஆதாரங்களை குர்ஆனில் காட்டினார்கள்

இறைவன் : நீ கண்மூடித்தனமாக நம்பியிருக்கிறாய் அசிம். உனக்கு ஒரு பகுத்தறியும் மனது கொடுக்கப்பட்டது. நீ உன் பாவங்களுக்கு பிறரை நோகாதே. உன் செயலுக்கும், எண்ணங்களுக்கும் நீயே பொறுப்பு. நீ ஒவ்வொரு நாட்களையும் உன் நம்பிக்கைகளை மேலும் பலப்படுத்திக்கொள்ளவும், நீ பாதுகாப்பாய் இருக்கவுமே உபயோகித்திருக்கிறாய். தினசரி சஜ்தா தவறாமல் சொன்னாய். அதனால், உன் தவறான நம்பிக்கைகளை உறுதிப்படுத்திக்கொண்டு மேலும் தவறான நம்பிக்கை பெற்றாய். ஆனால், உண்மையில் தினசரி ஒரு பொய்யை சொல்லிக் கொண்டு என்னை அவமானப்படுத்திக் கொண்டிருந்தாய்.       

 "முஹம்மது தூதர் என்ற உண்மைக்கு நான் சாட்சியாகிறேன்" என்று நீ ஒவ்வொரு முறை சஜ்தா சொல்லும் போதும், நீ பொய் சொன்னாய், அசிம். அது பொய்சாட்சி இல்லையா? எதை வைத்து நீ சாட்சி சொன்னாய்? நீ என்ன நேரில் பார்த்தாயா? நீ பொய் பேசினாய், அசிம்.
               
அதுமட்டுமல்ல, உன் சாட்சி எனக்கு அவமானமிழைத்தது. எல்லாம் அறிந்த நான் மட்டுமே நடந்த அனைத்துக்கும், மேலும் நடக்கப் போவதற்கும் சாட்சியாகிறேன். வேறு மிருகமோ, தாவரமோ, ஆணோ, பெண்ணோ நான் காணும் எதையும் காண முடியாது. உண்மையில், சாட்சி நீ உன்னை எனக்கு இணை வைத்தாய்.
       
       
நீ செய்ததை யோசித்திருக்க வேண்டும், அசிம். மாறாக, கண்மூடித்தனமாக சொன்னாய், அப்படி சொல்லும் மற்றவர்களையும் உன் சுற்றத்தில் வைத்து நிம்மதியாய் இருந்தாய். உன்னை சுற்றியிருந்த மக்களும், பொய்யான தகவல்களும், நேர்மையில்லாத நியாயங்களும், உன் மனதுக்கு போதை மருந்துகள் போல, உன் ஈமான் மற்றும் உன் மறுவாழ்வை பற்றி உன்னை உண்மையல்லாத ஒரு சுகத்தை ஏற்படுத்தியது.   

அசிம் : இறைவா, என் தவறான நம்பிக்கைகளுக்கும், செயல்களுக்கும் நான் மிக்க வருந்துகிறேன். தயவு செய்து மன்னித்துவிடுங்கள். முஹம்மதுவின் குர்ஆனில் சொன்ன நரகத்திற்கு நான் மிகவும் பயந்தேன். நரகத்தைப்பற்றி மற்றவர்கள் சொன்னதை கேட்டும், படித்தும் பயந்துபோனேன், அது என்னை யோசிக்காமல் நம்ப வைத்துவிட்டது.     

இறைவன் : அசிம், அதை நான் அறிவேன். நீ பயத்தால் அந்த வழியை பின்பற்றினாய். நீ ஒரு கோழையாகிவிட்டாய். உன் உள்ளமும், இதயமும் சொன்னதை புறக்கணித்தாய். அதனால், மனிதகுலத்துக்கு என் கொடைகளான - கருணையும், பகுத்தறிவையும் அவமதித்தாய்.
என்னைப்பற்றி உன்னிடமிருந்த இரண்டு உண்மையான சான்றுகள் உன் அறிவும், உள்ளமும்தான்.     அந்த இரண்டும்தான் உண்மையில் என்னிடமிருந்து உனக்கு கிடைத்தவை.

       நீ பூமியில் பிறக்கும்போது, உயிரோட்டத்தைத்தவிர, யோசிக்கும் அறிவும், கருணையான உள்ளமும்தான் என் பரிசுகள். குருட்டுத்தனமான உன் நம்பிக்கையில், என் பரிசுகளை நீ உதாசீனப்படுத்திவிட்டாய்.

அசிம், உன் பிரிய மகளுக்கு நீ ஆசையாக கொடுத்த பரிசுகளை அவள் தூக்கிப்போட்டால் நீ எப்படி உணருவாய்!

      
உன் நம்பிக்கை அதைக்கூட உணர முடியாத அளவிற்கு குருடாக இருந்தது. வரலாறு, புவியியல், உயிரியல், உலக நடப்புகள், விஞ்ஞானம், கணிதம், மனித உரிமைகள் எல்லாவற்றையும் புறக்கணித்தாய்; விஞ்ஞான உண்மைகளை திரித்தாய், வரலாற்று கற்பனைகளை உருவாக்கி புது விளக்கங்களை கற்பனையில் புணைந்தாய். அந்த கற்பனை விளக்கங்களில் மேலும் நம்பிக்கை பெற்று உன் தவறான செயல்களையும், எண்ணங்களையும் நியாயப்படுத்தினாய்.    

அசிம் : அல்லாஹ், நான் தவறு செய்தேன் என்று தெரிந்துகொண்டேன். என் தவறுகளுக்கு வருந்துகிறேன். நீங்கள் பெருத்த கருணையுள்ளவர், தயவு செய்து என்னை மன்னியுங்கள். கருணைகாட்டுங்கள்.

இறைவன் :    அசிம், நீ தவறுகளை உணர்ந்துவிட்டாய் என்று அறிகிறேன். ஆனால், நான் நியாயமாகவும், நீதியாகவும் நடப்பவன் ஆனதால், நீ நரகத்திற்கு போயே ஆகவேண்டும். பல நல்லவர்களைக் கொண்டிருந்த உன் சக மனித சமுதாயம் மீளாத நரகத்தில் வாட்டப்படும் என்று நீ நம்பியிருந்தாய். நான் உனக்கு கொடுத்த நற்பண்புகளை ஒதுக்கிவிட்டு, என் பெயரில் வன்முறைச் செயல்களையும், நெறிகெட்ட செயல்களையும் செய்திருக்கிறாய். உன் கோழைத்தனம் உன் உள்ளத்தை இழக்கச் செய்தது, உன் அறிவையும், மனித நேயத்தையும் இழந்தாய். ஆனால், இப்போது இதை சரிசெய்ய தாமதாகிவிட்டது. ஏனென்றால்,

இன்று இறுதி தீர்ப்புநாள்…!     

**********