Tuesday, 22 November 2016

’தலாக்’ எனும் மணவிலக்கு! – 3

கடந்த பதிவில் ’தலாக்’ மற்றும் ’முத்தலாக்’ பற்றிய குழப்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.  குழப்பம் இன்னும் இருக்கிறது.

ஒரு முஹம்மதியர், ஒரே ஒரு முறை ’தலாக்’ என்று கூறி மணவிலக்கை முன்வைக்கிறார். குர்ஆன் கூறும் குறிப்பிட்ட காலத்தில் மணவிலக்கு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

குர்ஆனின் அறிவுறுத்தல்படி, இப்பொழுது அவரது மனைவி, கர்பப்பை சான்றிதழுக்காக மூன்று மாதவிடாய் காலங்கள் காத்திருந்து தனது மடியில் ஒன்றுமில்லையென்பதை நிரூபிக்க வேண்டும். இந்த கால இடைவெளியில் அவர் மனம் மாறி தனது மனைவியை திரும்பவும் மணவாழ்க்கைக்குள் அழைத்துக் கொள்ளலாம். கவனக்குறைவு அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் தலாக் சொல்லப்பட்ட தனது மனைவியை குறிப்பிட்ட காலவரையறைக்குள் மீட்டுக் கொள்ளவில்லையெனில் என்னவாகும்?

மணவிலக்கு ஏற்பட்டுவிடும்!

ஒருவேளை அதன் பிறகு அதாவது காலக்கெடுவிற்குப் பிறகு, ஒரு சில நாட்களில்  அவர்  மனம் மாறி மணவிலக்கு செய்யப்பட்ட தன்னுடைய மனைவியுடன் இணைந்து வாழவிரும்பினால் என்ன செய்வது?

தலாக்கின் சட்ட திட்டங்கள்
நாஸிர் ஆன்லைன்.காம்
…முதல் தலாக்கிற்குப் பிறகு காத்திருக்கும் காலத்தில் கணவன் மனைவியை திரும்ப அழைத்துக் கொள்ளலாம், காத்திருக்கும் காலத்திற்குள் திரும்ப அழைக்காமல் கணவன் மனைவி உறவு முறிந்து விட்டால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மறுதிருமணம் செய்து கொள்ளலாம்…
இது பற்றி திருமறைக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ
இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டுவிடலாம்.
(அல்குர்ஆன் 2:229)

தவறாக புரியப்பட்டுள்ள தலாக் சட்டம்
ஜி.என்
…அவள் காத்திருக்கும் அந்த இத்தா காலத்திற்குள் கணவன் அவளை அழைத்துக் கொள்ளவில்லை என்றால் இருவருக்கும் இருந்த திருமன உறவு முற்றிலுமாக முறிந்து விடுகிறது. இவன் யாரோ.. அவள் யாரோ.. என்ற நிலைக்கு இருவரும் வந்து விடுகிறார்கள்.இப்போது அவள் வேறொரு ஆணையோ இவன் வேறொரு பெண்ணையோ திருமணம் செய்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் விவாகரத்தின் மூலம் பிரிந்த அவ்விருவரும் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார்கள். இப்போது அவர்கள் திருமணத்தின் மூலம் (திருமணத்திற்குரிய எல்லா விதிகளும் இங்கு பொருந்தும்) சேரலாம்.

என்கின்றனர் வஹாபிய முல்லாக்கள்.

மறுதிருமணம் என்றால், மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர், இரண்டு சாட்சிகள், மணமகளின் முழுமையான சம்மதம், மஹர் என்று மறுபடியும் முதலிலிருந்து கோடுகள் போடவேண்டும். இருவரும் கணவன் மனையாக வாழ்ந்தவர்கள் தானே எதற்காக மறுபடியும்…? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். முஹம்மதியம் என்பது மதம் மட்டுமல்ல ஒரு ’மார்க்கமானது’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால் இங்கு  மணவாழ்க்கையை உடன்படிக்கை, ஒப்பந்தம் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு சிறிய திருத்தம். வெறும் ஒப்பந்தமல்ல; வியாபார ஒப்பந்தம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.  

முஹம்மதிற்கு தெரிந்த தொழில்கள் சிறுவயதில் கால்நடைகளை மேய்த்தது, கதீஜாவைத் திருமணம் செய்வதற்கு முன் செய்த வியாபாரமும்தான் (அதன்பிறகு அவர் செய்த தொழிலைப்பற்றி இங்கு பேசவேண்டாம்) அதனால்தான் என்னவோ அவரது கடவுள் அல்லாஹ்வும், மனிதர்களுடன் ஒப்பந்தம் (5:16, 6:152, 9:111, 16:91) மற்றும் வியாபாரம் (2:16, 9:111, 35:29) செய்வதை நீங்கள் காணலாம். அதேபோல பெண்களையும் வியாபாரப் பொருளாக்கிவிட்டார். அவரது போதனைகளின் பெயரால்தான் முஹம்மதியப் பெண்கள் (மன்னிக்கவும்!) தங்களுடைய உடலை மஹ்ர் என்ற பொருளுக்காக விற்பனை செய்கின்றனர்; அதற்கான சம்மதத்தை சாட்சிகளின் முன்னிலையில் தெரிவித்து வியாபார ஒப்பந்தம்(2:282) சாட்சிகள் முன்னிலையில் அரங்கேறுகிறது. எனவேதான் ஒப்பந்தம் முறியும் பொழுது மஹ்ர் விவாதத்திற்குள்ளாகிறது.

கண்மணி முஹம்மதுவின் விளக்கத்தின்படி மஹ்ர் என்பது மணப்பெண்ணின் ’உறுப்பிற்குத்’ தரப்படும் விலை என்பது உங்களுக்குத் தெரியும்.

AbuDawud Book 11, Number 2126:
Narrated Basrah:
A man from the Ansar called Basrah said: I married a virgin woman in her veil.When I entered upon her, I found her pregnant. (I mentioned this to the Prophet). The Prophet (peace_be_upon_him) said: She will get the dower, for you made her vagina lawful for you. The child will be your slave. …

குறிப்பிட்ட காலவரையறைக்குள் தலாக் சொல்லப்பட்ட மனைவியை மீட்கவில்லையெனில், முன்பு மஹ்ர் என்ற பொருள் கொடுத்து வாங்கப்பட்ட பெண்ணுறுப்பை பயன்படுத்துவதற்கான உரிமத்தை அந்த முஹம்மதியர் இழந்துவிடுகிறார்; காரணம் தவறு அவருடையது. வியாபார ஒப்பந்தத்தை முறிப்பது கணவன். எனவே அவர் மஹ்ர் தொகையை அல்லது பொருளைத் திரும்பக் கேட்கக் கூடாது.

குர்ஆன் 4:21
…, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?

எனவே உரிமத்தை மீண்டும் முறைப்படி புதுப்பிக்க புதிதாக கட்டணமும் செலுத்த வேண்டும். ஒருவேளை அந்தப் பெண் விரும்பினால் கட்டணம் தள்ளுபடி செய்யப்படலாம்.

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், மனைவி தரப்பிலிருந்து கேட்கப்படும் ‘குலா’ அல்லது ‘குல்உ’ எனப்படும் மணவிலக்கு முறையில், திருமணத்தின் பொழுது அவள் பெற்ற மஹ்ர் தொகை கணவன் வசம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். காரணம் இங்கு வியாபார ஒப்பந்தத்தை முறிப்பது மனைவி!

இனி, குர்ஆன் 2:229 வசனத்திற்கான வேறு மொழிபெயர்ப்புகளையும் காண்போம்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
2:229 (ரஜயியாகிய) இந்தத் தலாக்(கை) இருமுறைதான் (கூறலாம்). பின்னும் (தவணைக்குள்) முறைப்படி தடுத்து (மனைவிகளாக) வைத்துக் கொள்ளலாம். அல்லது (அவர்கள் மீது யாதொரு குற்றமும் சுமத்தாமல்) நன்றியுடன் விட்டுவிடலாம்.

இக்பால் மதனி தமிழாக்கம்-சவுதி வெளீயீடு
2:229 (மீட்டுக் கொள்ள உரிமை பெற்ற) தலாக் இரு தடவைகளாகும்; பின்னர் முறைப்படி தடுத்து வைத்துக் கொள்ளலாம். அல்லது(மூன்றாவது முறையாக தலாக் கூறி) நன் முறையில் விட்டுவிடலாம்.

தலாக் கூறப்பட்ட மனைவியை குறிப்பிட்ட அந்தக் காலக்கெடுவிற்குள் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் தலாக் சொல்லாவிட்டாலும் தானாகவே மற்ற இரு தலாக் ஏற்பட்டு விடும் என்கின்றனர் சுன்னத் வல் ஜமாஅத்  தரப்பு.

குர்ஆன் 2:231
பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவை நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்!..

மீண்டும் இருவிதமான நேர்ரெதிர் கருத்துக்கள் - எது சரியானது?

குர்ஆனின் ஆசிரியரால் மட்டுமே இவர்களது குழப்பத்திற்கு பதில் தரமுடியும்! அவர் வரும்வரை தலாக்கின் இதர விதிமுறைகளைத் தொடரலாம்.

ஒருவர், ஏதோ சில காரணங்களுக்காக எந்தத் தவறுமறியாத தனது மனைவியை நோக்கி தலாக் கூறிவிடுகிறார்; அதாவது மந்திரத்தை மூன்று முறை பயன்படுத்திவிடுகிறார். இப்பொழுது முஹம்மதியச் சட்டப்படி கணவன்-மனைவி வியாபார ஒப்பந்தம் முற்றிலும் செயல் இழந்துவிடுகிறது. பின்னர் தனது தவறை உணர்ந்து மீண்டும் அதே மனைவியுடன் வாழ விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது என்ன செய்வது?

மீண்டும் மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர், இரண்டு சாட்சிகள், மணமகளின் முழுமையான சம்மதம், மஹர் என எல்லாவற்றிற்கும் இருவரும் தயாராக இருக்கின்றனர். இவரும் சேர்ந்து வாழமுடியுமா?

குர்ஆன் 2:230
(இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாக ரத்துச் செய்து விட்டால் அவள் வேறு கணவனை மணம்(tankiḥa) செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாக ரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை.

இங்கு ”tankiḥa” என்பது மணமென்று மொழிபெயர்க்கப்படிருந்தாலும் இதன் உண்மையான பொருளை பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.

புகாரி 5261.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
ஒருவர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டார். எனவே, அவள் இன்னொருவரை மணந்துகொண்டாள். அவரும் தலாக் சொல்லிவிட்டார். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் (இது குறித்து) 'முந்திய கணவருக்கு அவள் (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவளா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இல்லை; முந்தைய கணவர் (தாம்பத்திய) இன்பம் அனுபவித்ததைப் போன்றே (அவளுடைய இரண்டாம் கணவரான) இவரும் அவளிடம் இன்பம் அனுபவிக்கும் வரையில் முடியாது' என்று கூறிவிட்டார்கள்.

நிக்காஹ் என்ற சொல்லின் நேரடிப் பொருள் உடலுறவு என்பதுதான். இதை நான் சொன்னால் நம்பமாட்டீர்கள், இருமுறை தலாக் செய்யப்பட்டு, காத்திருப்பு காலத்தை கடந்த நிலையில் கணவன்–மனைவி இருவரும் இணைந்து வாழவிரும்பினால் மறுதிருமணம் செய்ய வேண்டுமென்ற வஹாபிய முல்லாக்களின் வாதங்களை மறுக்கும் மாற்று தரப்பினர் தரும் விளக்கத்திலிருந்து,

குர்ஆன் 2:232
பெண்களை விவாக ரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து (yankiḥ'na) கொள்வதைத் தடுக்காதீர்கள்!...

தேசிய தவ்ஹீத் ஜமாஅத்-இலங்கை
…நிகாஹ் என்ற வார்த்தைக்கு திருமணம் முடித்தல் மற்றும் உடலுறவு கொள்ளல் என்று இரு அர்த்தங்கள் உண்டு. அல்லாஹ் 2:232 வது வசனத்தில் 'அப்பெண்கள் கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்!' என்று கூறுகிறான். இது முதலாவதாக முடிக்கப்படும் திருமணம் என்ற அர்த்தத்தில் கூறப்படவில்லை. ஏனெனில் ஆண்கள் அப்பெண்களை ஏற்கனவே திருமணம் முடித்து விட்டார்கள். திருமணம் முடித்ததினால்தான் தலாக்கும் கூறினார்கள். 2:232வது வசனத்தில் அல்லாஹ் திருமணம் என்று பய்னபடுத்தியிருப்பது உடலுறவு என்பதையே குறிக்கின்றது. ஏற்கனவே ஒரு தலாக், அல்லது இரு தலாக் விட்ட ஆண்களுடன் பெண்கள் சேர்ந்து குடும்பம் நடாத்தும் போது நீங்கள் தலையிட்டு அதைத் தடுக்காதீர்கள் என்றே அல்லாஹ் கூறுகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்….


முஹம்மதிய மணவிலக்கு முறை மிக அதிகமாக மற்றவர்களால் விமர்சிக்கப்படுவதற்கு முக்கிய காரணம், குர்ஆன் 2:230-ன் காட்டுமிராண்டித்தனமான விதிமுறைதான்! இதை மனிதாபிமானம் கொண்டவர்களால் ஏற்க முடியாது.  அன்றைய முஃமின்களில் சிலர் விளக்கங்கள் என்ற பெயரில் இவ்விதிமுறைகளின் கடுமையைக் குறைக்க முயன்றனர்.

Sufi Manzil
குல்உ, தலாக், ரஜ்ஈ தலாக், பஸஹு பற்றிய சட்டங்கள்
..ஒரு நிகாஹிலோ அல்லது பல நிகாஹிலோ முத்தலாக்கு சொன்ன சுதந்திரமான மனிதனுக்கு (அவன் ஓர் அடிமைப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தாலும் சரி) அவனால் தலாக் சொல்லப்பட்டவள் மீண்டும் அவனுக்கு ஹலாலாக வேண்டுமென்றால், அவனல்லாத  வேறொருவனுக்கு சரியாக நிகாஹ் செய்து கொடுக்கப்பட்டு அவன் அவளுடைய முன் துவாரத்தில் உசும்புதலுடைய தன் ஆண் குறியை கத்னாவரை மறையும் படியாக நுழைய வைத்து, பிறகு அவன் அவளைத் தலாக் சொல்லி, அதற்குரிய இத்தா முடிந்த பின் முந்தியவன் அவளை மீண்டும் நிகாஹ் செய்து கொண்டு தான் அவள் அந்த முந்திய கணவனுக்கு மீண்டும் ஹலாலாவாள். இரண்டாவது கணவனுடைய விந்து வெளிப்பட வேண்டுமென்று நிபந்தனையில்லை. இதற்கு தஹ்லீல் என்று கூறப்படும்.

இந்து மதத்தில் சோதிடப் பரிகாரமாக வாழைமரத்திற்குத் தாலிகட்டி தோஷத்தைக் கழிப்பது போல, முஹம்மதியத்தில் பெயரளவில் ஒரு மணமுடித்து தலாக் கூறி மீண்டும் முந்தய கணவனுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கம் தமிழ்நாடு, கேரளா பகுதிகளில் இருந்தது.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத்-இலங்கை
…சில ஊர்களில் மூன்று தலாக்குகளும் கூறப்பட்டு பிரிந்த தம்பதியினரை சேர்த்து வைக்க வேணுமென்று சிலரை வைத்திருக்கும் வழக்கம் உள்ளது. அதாவது இரு தம்பதியினர் பிரிந்து விட்டால் வேறொருவர் வெறுமனே பெயரளவில் அப்பெண்னை மணமுடிப்பார். அவளுடன் தொடர்ந்து வாழவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்காது. அவளுடன் உடலுறவு கொள்வார் பின்னர் அவளை தலாக் கூறிவிடுவார் இதன் பிறகு முதல் கணவன் அவளுடன் குடும்ப வாழ்க்கையை தொடருவான். இது அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறிய சட்டத்தை கேவலப்படுத்துவதாகும் இதற்கு மார்க்கத்தில் எவ்வித அனுமதியுமில்லை இவ்வாறு செய்பவர்களை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்…

 ஆனால், இவ்வாறு செய்வபவர்கள் முஃமின்கள அல்ல! அவர்கள் குர்ஆனின் சட்டங்களைக் கேலி செய்யும் கயவர்கள் என்று வஹாபிய முல்லாக்கள் கொதித்தெழுகின்றனர். அதாவது அப்பெண்ணின் இரண்டாம் கணவன், மஹ்ர் அப்பெண்ணின் தசையை முழுமையாக சுவைத்து உண்ணவேண்டுமென்ற முஹம்மதின் மாபெரும் போதனைகளை நிலைநாட்ட அரும்பாடுபடுகின்றனர்.

தவறு செய்வது அனைவருக்கும் இயல்பானதுதான். உணர்ச்சி வேகத்தில் செய்த தவறுக்கு  இப்படியொரு விதிமுறை தேவையா?

அழுகின்ற இம்ரானாக்களும் எழுகின்ற கேள்விகளும்
...எனவே எஞ்சியுள்ள அந்த ஒரு வாய்ப்பை - கடைசி வாய்ப்பை - மிகக் கவனமாகவே ஒருவன் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, அவனது மனம் எளிதில் ஒப்பாத, அவனால் ஜீரணிக்க இயலாத, மிகக் கடுமையான நிபந்தனையை இஸ்லாம் விதித்துள்ளது. அந்த நிபந்தனையை அறிந்த எந்தக் கணவனும் இந்தக் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தத் தயங்குவான்....

குறிப்பிட்ட அந்தக் கணவன்  பொறுப்பற்று நடந்து கொண்டான்,  அவனுக்கான தண்டனையே இது என்பது வஹாபிய மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் முல்லக்களின் விளக்கம் தலாக் விஷயத்தில் கணவன் தவறு செய்து விட்டான்; அதற்காக மனைவி ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?  இங்கு அவள் செய்த தவறு என்ன?

குர்ஆன் கூறும் இந்த சட்டம், பெண் என்பவள் போகத்திற்காக, இன்பம் அனுபவிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு உடைமை; அவளுக்கென்ற தன்மானமோ, உணர்வுகளோ, சுயஅறிவோ இல்லையென்ற காண்டுமிராண்டித்தனமான நடைமுறையின் மறுபதிப்பு. தலாக் கூறிய கணவனை தண்டிக்க முஹம்மதின் குரூரசிந்தனை கண்டடைந்த வழிமுறைதான் மேற்கண்ட சட்டம். அவரது கேடுகெட்ட சட்டத்தினால் இங்கு உண்மையில் தண்டிக்கப்படுவது யார்?

கணவன் திரும்பக் கிடைக்க வேண்டுமென்பதற்காக தனது உடலை மற்றொரு ஆணிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறுவது என்ன நியாயம்? இது எப்படி கணவனுக்கான தண்டனையாகும்?

’தலாக்’ பற்றிய ஊடக விவாதங்களில் பங்கெடுத்த முஃமினாக்கள் விளக்குவார்களா?

இதைத் தான் தெய்வீக சட்டமென்று இன்று மூளைகெட்ட முல்லாக்களும், முஹம்மதியர்களும் வீதிகளில் இறங்கிக் கத்திக் கொண்டிருக்கின்றனர்.

 முஹம்மதியம் ஒரு தவறான வழிமுறை என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி!

இதைப் போன்ற முஹம்மதியத்தின் அருவெறுப்பான இருண்ட பகுதிகளை மறைக்க வஹாபிய முல்லாக்கள் பெரும் முயற்சி எடுக்கின்றனர்; இல்லாத பொருளை அதனுள் திரித்து ஏற்றி, அதற்கு விளக்கம், விரிவுரை என்ற பெயரில் தங்களது சொந்தச் சரக்குகளை விற்பனை செய்கின்றனர். ஒரு தரப்பு ’முத்தலாக்’ ஏற்புடையது என்றும் அதற்கு நேர்மாற்றமாக மற்றொரு தரப்பு ’முத்தலாக்’ ஏற்புடையதல்ல என்றும் கூறுவதைக் கண்டு நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. முஹம்மதியத்தில் நிலவும் நம்பிக்கைகள் அனைத்திலும் ஒருவருவருக்கொருவர் இவ்வாறு முரண்படுவது மிக இயல்பான ஒன்று. இதைப் போன்ற குழப்பங்கள் முஹம்மதின் காலத்திலேயே நிலைபெற்றிருந்தன எனபதை குர்ஆன்-ஹதீஸ் கருத்தூண்றி வாசிக்கும் எவராலும் உணர்ந்து கொள்ள முடியும். இன்றும் இவைகள் தொடர்வதற்கு  மிக முக்கிய காரணம், மூளையற்ற முஃமின்ளை தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முல்லாக்கள் செய்யும் தந்திரங்களே.

முட்டாள் முஹம்மதியர்களின் படுக்கையறைகளை தங்களுடைய கட்டுபாட்டிற்குள் வைக்க வேண்டுமென்று வஹாபிய முல்லாக்களுக்கும், அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்திய முல்லாக்களுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. இதற்கிடையில் அரசாங்கமோ நீதித்துறையோ நுழைந்தால் அவர்களால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?



தஜ்ஜால்

Monday, 7 November 2016

’தலாக்’ எனும் மணவிலக்கு! - 2


தலாக் விவகாரத்தினால் ஏற்பட்ட விவாவாதங்கள், ”UCC”எனப்படும் பொது சிவில் சட்டம் தேவையா? எனும் அளவிற்கு சென்று விட்டது.


பொது சிவில் சட்டம் தேவையில்லை எனவும், இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை எனவும் முஹம்மதியர்களுக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்கின்றன. நான் கடந்த பகுதியில் கூறியதுபோல முஹம்மதியர்கள், கலந்தாய்வுகள், ஆலோசனைகள், விவாதங்கள், போராட்ட அறிவிப்புகள் என தங்களத் தாங்களே முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.




பாலாஜி சீனிவாசன் என்ற வழக்குரைஞர், முத்தலாக் மூலம் முஹம்மதியப் பெண்களை விவாகரத்து செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டுமென்று ஒரு பொதுநல வழக்கை பாதிக்கப்பட்ட ஷயாரா பானு என்ற பெண்மணியின் பெயரிலேயே தொடுத்த பிறகே இவ்விவகாரம் பொதுவெளியில் விவாதத்திற்கு வருகிறது; மத்திய அரசும் தனது கருத்தைத் தெரிவிக்கிறது.

மத்திய அரசின் நிலைப்பட்டைப்பற்றி அண்ணன் பீஜே கூறுகையில்,
மத்திய அரசின் கருத்தைக் கேட்காமலே இஸ்லாமிய ஷரீஅத் அடிப்படையில் நின்று அப்பெண்களுக்கு நியாயம் வழங்க வழி இருந்தும் நீதிமன்றங்கள் மத்திய அரசிடம் கருத்து கேட்டது அறிவீனமாகும்.
இதன்படி மத்திய அரசும் பின்வரும் கருத்தை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
”தலாக் நடைமுறையை, மத நம்பிக்கையின் ஒரு பகுதியாகக் கருத வேண்டியதில்லை. தலாக் நடைமுறை பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. நாட்டில் இரு பாலாருக்கும் சம உரிமையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்பிரச்சினையை நோக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டமே பிரதானமாகத் திகழும், இந்தியா போன்ற மதச் சார்பற்ற நாட்டில், தலாக் நடைமுறைகளுக்கு இடமளிக்கக் கூடாது.”

மூன்று தலாக் பிரச்சனைக்கு மத்திய அரசிடம் விளக்கம் கேட்டால் அது பற்றி மட்டும் கருத்து சொல்லாமல் ஒட்டு மொத்த தலாக் சட்டத்தையே நீக்க வேண்டும் என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது மடத்தனமானதாக உள்ளது.

சரி..!

ஒரே நேரத்தில் ‘தலாக், தலாக், தலாக்’ என மும்முறை கூறி ஒரு கணவன் தனது மனைவியை மணவிலக்குச் செய்ய முஹம்மதியம் அனுமதிக்கிறதா?

அண்மையில் நிகழ்ந்த ஒரு தலாக் பற்றி அவர்களது பெயர்களைக் குறிப்பிடாமல் சுருக்கமாகக் கூறுகிறேன்.

அவர்கள், பிழைப்பிற்காக ஊட்டியிலிருந்து சென்னையின் தாம்பரம்பகுதிக்குக் குடிபெயர்ந்தவர்கள். சுமார் பத்திற்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட குடும்பம் அது.  அவர்களது மகன்களில் ஒருவர் கணிணி உதிரி பாகங்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். அவரது மனைவி கேரளாவின் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர். சிறுகச் சிறுக தொழிலில் மேம்பட்ட அவர் தனது மனைவி குழந்தைகளுடன் புதுமனையும் புகுந்தார்; கணவன்-மனைவி என இருவரும் இணைந்து புதுமனை புகுவிழாவை சிறப்பாக நிறைவேற்றினர். அடுத்த ஓரிரு நாட்களில் மனைவியை ஓய்விற்காக அவரது இல்லத்திற்கு அதாவது கேரளாவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு வெளியில் சென்றவர், வீட்டிற்குத் திரும்பி வரும் பொழுது இருவருக்கும் உறவினரான ஒரு முதியவருடன் வந்திருக்கிறார். அம்முதியவர் மற்றும் அவரது மாமனார் முன்னிலையில், தனது மனைவியை நோக்கி ‘தலாக், தலாக், தலாக்’ என மும்முறை கூறிவிட்டு சடாரென வெளியேறிவிட்டார். மனைவி உட்பட சாட்சியாக நிறுத்தப்பட்ட அம்முதியவருக்குக்கூட தான் எதற்காக அழைத்துவரப்பட்டிருக்கிறோம் என்பது இவர் தலாக் கூறும்வரை தெரியவில்லையென்பதுதான் இங்கு உச்சகட்ட வேடிக்கை.

பின் நிகழ்ந்த வாதப்பிரதிவாதங்கள் மற்றும் அங்கிருக்கும் ஜமாஅத்துகளின் வழிகாட்டுதல்களின்படி, முஹம்மதிய ஷரீஅத் சட்டப்படி விவாகரத்து நிகழ்ந்துவிட்டதாக இருதரப்பும் ஒப்புக் கொண்டது. அடுத்த ஒரு மாதத்தில் அந்த நபர் வேறொரு பெண்ணை திருமணமும் செய்து கொண்டார். மணவிலக்குச் செய்யப்பட்ட மனைவியின் பாதுகாப்பிலிருந்த குழந்தைகளையும் அவர் தனதாக்கிக் கொள்ள முயன்றதால் குழந்தைகளுக்காக இவ்விவகாரம் இப்பொழுது நீதிமன்றத்தில் இருக்கிறது. இதுமட்டுமல்ல இதைப் போல இன்னும் எண்ணற்ற உதாரணங்களை முஹம்மதியர்களின் எதார்த்த வாழ்க்கையிலிருந்தே காண்பிக்க முடியும்.

இன்றும் மிகப் பெரும்பாலான முஹம்மதிய மணவிலக்குகள், ஒரே நேரத்தில் ‘தலாக், தலாக், தலாக்’ என மும்முறையே கூறி நிகழ்கிறது. தங்களது சமூகத்தில் மணவிலக்கு முறை மிக எளிமையாக இருந்த பொழுதிலும், மணவிலக்குகள் மற்ற சமூகங்களைவிடக் குறைவாகவே நிகழ்வதாக முல்லாக்கள் புள்ளிவிபரங்களை அடுக்குவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதற்கு மிக முக்கய காரணம் பெண்களே! பொதுவாகவே எந்தப் பெண்ணும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மணவிலக்கை நாடுவதில்லை. காரணம் சமூகம், கலாச்சாரம் மற்றும்  பொருளாதாரம் அவர்களது முடிவில் பெரும்பங்கு வகிக்கிறது. இதற்கு முஹம்மதியப் பெண்களும் விதிவிலக்கு அல்ல! வரதட்சனை, கணவன் மற்றும் அவனது உறவினர்களால் ஏற்படும் மன உளைச்சல்கள், பலதாரமணம் செய்யும் கணவன் என பல வேதனைகள் இருப்பினும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு காலத்தைக் கழிக்கின்றனர்.

மற்ற சமூகங்களை ஒப்பிடுகையில் முஹம்மதியப் பெண்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகமிக பின்தங்கியுள்ளனர்; மிகப் பெரும்பாலும் குடும்பத்தினரால் அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது; தடைகளை மீறி கல்வியைப் பெற்றவர்களால் அதைக் கொண்டு பொளீட்டுவதற்கு மேலும் ஏராளமான தடைகளைக் கடக்கவேண்டியுள்ளது. இந்நிலையில் தங்களது அனைத்து தேவைகளுக்கும் அவர்கள் ஆண்களை சார்ந்தே இருக்கவேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல முஹம்மதியச் சட்டப்படி குழந்தைகள் கணவனின் உடைமை; அவன் விட்டுக் கொடுத்தால் மட்டுமே குழந்தைகள் தாயிடம் இருக்க முடியும். மிகப்பெரும்பாலான முஹம்மதிய பெண்கள் மணவிலக்கை அஞ்சுவதற்கு இதுவே மிக முக்கியக் காரணம்.

மிஹ்ராப் விளக்குகள்
Basheer Ahmed usmani
ஆகவே, கணவன் மனைவியின் மீது மூன்று தலாக்கிற்கு உரிமை பெற்றவனாக இருந்தாலும் அந்த மூன்று தலாக்கையும் ஒரே தடவையில் பிரயோகிப்பது வெறுப்பிற்கும் குற்றத்திற்கும் உரியதாகும். இப்படி ஒரேடியாக மூன்றையும் பிரயோகித்தாலும் தலாக் நிகழ்ந்து விடும்….
அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைப்படி குர்ஆன், ஸுன்னா, இஜ்மாஃ, கியாஸ் ஆகியவைகளே ஷரீஆ சட்டங்களின் அஸ்திவாரம். முத்தலாக் என்பது ஸஹாபாக்களின் இஸ்மாஃ எனும் அஸ்திவாரத்தின் ஒரு பகுதியாகும். எனவே, மும்முறை ஒருவர் ஒரேடியாக தலாக் கூறினாலும் அது நிகழ்ந்து விடும்…

ஒரே நேரத்தில் ‘தலாக், தலாக், தலாக்’ என மும்முறை கூறி மணவிலக்குச் செய்வது அறியாமையினால் அல்லது அவர்கள் சார்ந்திருக்கும் பிரிவுகளின் புரோகிதர்களால் கற்பிக்கப்பட்டவை இதற்கும் குர்ஆனுக்கும் எங்களது கண்ணுமணி முஹம்மதிற்கு எவ்விதமான தொடர்புமில்லை என்பதே வஹாபிய முல்லாக்களின் வாதம். மணவிலக்குச் செய்வதற்கு ’தலாக்’ என்றோ மணவிலக்குச் செய்கிறேன் அல்லது அத்தகைய பொருள்படும் ஏதேனும் பதத்தை கூறவேண்டுமென்பது முஹம்மதிய ஐதீகம்.  குறிப்பிட்ட அந்தப் பதத்தை எத்தனை முறை உச்சரிக்க வேண்டுமென்பதுதான் முல்லாக்களுக்கிடையே நிகழும் போராட்டம்.  ஒருதரப்பு தலாக் கூறிட ஆண்கள், மூன்று வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் என்றும்  அதை மறுக்கும் வஹாபியத் தரப்பு அவைகள் வார்த்தைகள் அல்ல மூன்று வாய்ப்புகள் என்றுகூறி இருவரும் சேர்ந்து கொண்டு குர்ஆனின் தாடியைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கின்றனர்.

புகாரி ஹதீஸின் பாடம் 9-ல் இவ்வாறு கூறப்படுகிறது:
ஆதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
…நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவி வீட்டை விட்டு வெளியேறினால் ஒட்டுமொத்த (அல்பத்தா)த் தலாக் சொல்லப்பட்டவள் ஆவாள் என்று கூறினார். (இது குறித்து நான் வினவியபோது) இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘ அவ்வாறு அவள் (வீட்டைவிட்டு) வெளியேறினால் அவன் மூலம் ஒட்டுமொத்தத் தலாக் சொல்லப்பட்டவளாகிவிடுவாள். வெளியேறாவிட்டால் ஒன்றும் நிகழாது’ என்று கூறினார்கள்…
… ‘ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ என் மனைவி அல்லள்’ என்று சொன்னால், அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும். (அதாவது) மணவிலக்குச் செய்யும் எண்ணத்தில் அவர் அவ்வாறு கூறியிருந்தால் அவர் எண்ணப்படியே மணவிலக்கு நிகழ்ந்துவிடும்’ என ஸூஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்…

அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் தங்களது தரப்பை வலுப்படுத்த மேலும் சில ஹதீஸ்களை முன் வைக்கின்றனர்.

திர்மிதீ 1097
அறிவிப்பவர்:  ருகானா
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "என்னுடைய மனைவியை நான் ஒரேயடியாக தலாக் விட்டு விட்டேன்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "நீ அதைக் கொண்டு என்ன நாடினாய்?'' என்று கேட்டார்கள். நான் அதற்கு, "ஒரேயொரு தலாக்கைத் தான்'' என்று பதிலளித்தேன். "அல்லாஹ்வின் மீதாணையாகவா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் மீதாணையாக'' என்றேன். "அப்படியானால் நீ என்ன நாடினாயோ அது தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முத்தலாக் என்பதோ அல்லது ஒட்டு மொத்த தலாக் என்பதோ முஹம்மதியத்திற்கு அந்நியமான சொல்லோ அல்லது செயலோ அல்ல. ஆனால் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் வாதங்களை வஹாபியர்கள் ஏற்க வேண்டுமே?

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி   
தலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்துவிடும். அதன் பின் அவர்கள் மீண்டும் சேரவே முடியாது என்ற தப்பான எண்ணம் முஸ்லிம்களில் பலரிடம் உள்ளது. இது தவறான நம்பிக்கையாகும்.

அபூஅப்துல்லாஹ்
குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணாக மத்ஹபுகளையும், தரீக்காக்களையும் கடைபிடிக்கும் தங்களை அஹ்ல சுன்னத் வல்ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை முஸ்லிம்களும், அவர்களை வழிநடத்திச் செல்லும் ஜமாஅத்துல் உலமா சபையினரும் அவர்கள் நடத்தும் வார, மாத இதழ்களிலும் தலாக் சட்டம் இறவனின் தீர்ப்பாகும். இதில் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை என்று ஏகோபித்து எழுதுகிறார்கள். ஆனால் “நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரே சமயத்தில் சொல்லப்பட்ட 3 தலாக் ஒரே தலாக்காகவே கணக்கிடப்பட்டது” என்ற உண்மையான சட்டத்தை மாற்றி ‘ஒரே சமயத்தில் சொல்லப்பட்ட 3’தலாக்’ மூன்று தடவையாக கணக்கிடப்பட்டு விவாக முறிவு ஏற்படும்’ என்ற சட்டத்தை அல்லாஹ்வின் சட்டம் என்று சொல்கிறார்கள்.

அண்ணன் பீஜே
இந்திய முஸ்லிம்களில் மத்ஹப் எனும் கோட்பாட்டை (அறிஞர்களின் சொந்தக் கருத்தை) பின்பற்றுவோரும் உள்ளனர். இவர்கள் தான் மூன்று தலாக் எனக் கூறினால் அது மூன்று தலாக் நிகழ்ந்து விடும் என்ற கருத்தில் உள்ளவர்கள்.

மத்ஹபுக் கோட்பாட்டை எதிர்க்கும் அஹ்லே ஹதீஸ், நத்வதுல் முஜாஹிதீன், தவ்ஹீத் ஜமாஅத் போன்ற ஜமாஅத்துகளைச் சேர்ந்தவர்கள் மூன்று தலாக் என்று சொன்னாலும் ஒரு தலாக் தான் என்ற கொள்கையில் உள்ளவர்கள் ஆவர். சவூதி அரேபியாவிலும் இதுதான் சட்டம்.

சரி…! வாதத்திற்காக வஹாபிய முல்லாக்கள் கூறுவதைப் போல கண்ணுமணி முஹம்மது கற்பிக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம், வஹாபிய முல்லாக்கள் மறுக்கும் ஒரே நேரத்தில் கூறப்படும் முத்தலாக் என்ற வழக்கம் எப்படி முஹம்மதியர்களிடையே நிலைபெற்றது?

முஸ்லீம் 2932
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் முத்தலாக் ஒரு தலாக்காகவே (நடைமுறையில்) இருந்தது. பின்னர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "நிதானமாகச் செயல்பட்டு (மீட்டுக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்று)வந்த ஒரு விஷயத்தில் மக்கள் (இப்போது) அவசரம் காட்டுகிறார்கள். எனவே, அதை (முத்தலாக்கை) அவர்களுக்கெதிராக (மீட்டுக்கொள்ள இயலாதவாறு) நாம் செயல்படுத்தினால் என்ன?'' என்று கூறி, அவ்வாறே அதைச் செயல்படுத்தினார்கள்.

இந்த ஹதீஸைப்பற்றி வஹாபிய முல்லாக்களின் விமர்சனங்கள்:
ஏகத்துவம் மாத இதழில் வெளியான கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக தேங்கை முனீப், பஹ்ரைன் என்பவர் தொகுத்து எழுதிய கட்டுரையிலிருந்து…

…முத்தலாக் என்று கூறினால் அதை நபி (ஸல்) அவர்கள் ஒரு தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்னரும் தெரிந்தே உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமாக சட்டம் இயற்றியுள்ளனர்.
- ஏகத்துவம் மாத இதழ் - செப்டம்பர் 2005 வெளியீடு
…முத்தலாக் சம்மந்தமான உமர் (ரழி) அவர்களின் முடிவு பற்றி, அவர்களிடத்திலேயே கேட்கப்பட்டது. மக்கள் தலாக்கை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக ஒரு தண்டனையாகவே இதனை அமுல்படுத்தியதாக அவர்கள் விளக்கமளித்தனர். அன்று அவர்களிடம் செல்வம் அதிகமாக இருந்தது. வசதி வாய்ப்புகளை அதிகமாகப் பெற்றிருந்தனர். விவாகம் ஒரு சர்வசாதாரணமான காரியமாக மாறி விவாகரத்துகள் அதிகமாயின. இதனால் உமர் (ரழி) அவர்கள் இவ்வாறு எடுத்த எடுப்பிலேயே மூன்று தலாக்குகள் விடுபவர்களுக்கு ஒரு தண்டனையாக இதனை அமுல் படுத்தினார்கள்…

அபூஅப்துல்லாஹ்
இந்த ஹதீஸ் தெள்ளத்தெளிவாக அல்லாஹ்வின் சட்டத்தை அதன் அடிப்படியில் நபி(ஸல்) நடைமுறையை உமர்(ரழி) மாற்றினார்கள் என்பதை தெளிவாக கூறுகிறது. இந்த நிலையில் தலாக் சட்டம் இறைவனின் தீர்ப்பு; இதில் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமையில்லை என்று சொல்கிறார்களே அதன் பொருள் என்ன? உமர்(ரழி) அவர்கள் மாற்றியமைத்தது தான் அல்லாஹ்வின் சட்டமா? நபி(ஸல்) அவர்களுக்கே இல்லாத, இறைவனின் சட்டத்தை மாற்றும் அதிகாரம் உமர்(ரழி) அவர்களுக்கு இருந்ததாக இவர்கள் நம்புகிறார்களா? ஏனிந்த முரண்பாடு?

அன்றைய மக்களை தலாக் விஷயத்தில் நிதானமாகச் செயல்படாமல் அவசரப்பட்டு, விளையாடிக் கொண்டிருந்ததாக இந்த ஹதீஸின் மூலம் குற்றம் சாட்டுகின்றனர். அதாவது அன்றைய முஹம்மதியர்கள் எடுத்த எடுப்பிலேயே மூன்று தலாக் கூறி மணவிலக்குச் செய்திருக்கின்றனர். ஆனால் அவர்களைக் தண்டிக்கும் விதமாக இரண்டாம் கலீபா உமர் செயல்படுத்திய தலாக் முறை அதைவிட அவசரத் தன்மை கொண்டதாக இருக்கிறதே? அவர்களது செயலை, முத்தலாக் முறையை அங்கீகரிக்கும் விதமாக சட்டமியற்றிய உமரின் செயல் எப்படி தண்டனையாகும்?

உண்மையில், தலாக் விஷயத்தில் அவசரப்பட்ட அன்றைய முஹம்மதியர்களைத் தண்டிப்பதாற்காக சட்டம் இயற்றியதாகக் கூறிக்கொள்ளும் கலீபா உமர் என்ன செய்திருக்க வேண்டும்? தலாக்கை மிக நிதானமாக அதாவது இன்றைய வஹாபிய முல்லாக்கள் சொல்வதைப்போல,

முதலில் மனைவிக்குச் சிறந்த முறையில் அறிவுரை கூறித் திருத்த முற்பட வேண்டும். அது பயன் தரவில்லை என்றால் தற்காலிகமாகப் படுக்கையிலிருந்து அவர்களை விலக்க வேண்டும். அதுவும் பயன் தராதபோது இலேசாக அடித்துத் திருத்த வேண்டும். விவாகரத்து என்ற அளவுக்குச் செல்வதைத் தடுக்கவே இலேசாக அடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது.
இதன் பிறகும் இருவருக்கிடையே நல்லிணக்கம் ஏற்படவில்லையானால் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த நடுவர்கள் மூலம் பேசித் தீர்க்குமாறு 4:35 வசனம் வழிகாட்டுகிறது.
இந்த நான்கு நடவடிக்கைகள் மூலமும் இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமே இல்லை. இந்நிலையில் வேறு வழியின்றி விவாகரத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது.

என்று விளக்கி, அதற்கேற்ப ஒரு சட்டத்தையல்லவா அவர் செயல்படுத்திருக்க வேண்டும்? ஆனால் அவரோ தெரிந்தே முஹம்மதின் போதனைகளுக்கு மாற்றமாகச் செயல்பட்டிருப்பதாக இந்த ஹதீஸ் ஆதரமாகக் கொண்டு விமர்சிக்கின்றனர்.

இரண்டாம் கலீபா உமரைப் பற்றிக் கூறும்  ஒரு ஹதீஸை பார்போம்.
முஸ்லீம் 2435
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர் கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டு விட்டு, "அல்லாஹ்வின் மீதாணையாக! நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்த மிடுவதை நான் கண்டிராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்'' என்றார்கள்.

தனது மருமகன் செய்த செயலை பின்பற்றியே தீர வேண்டுமென்ற கொள்கைவெறியின் காரணமாக, தனக்கு விருப்பமில்லை எனினும் ’ஹஜருல் அஸ்வத்’ கல்லை முத்தமிட்டவர், தலாக் விஷயத்தில் எப்படி குர்ஆனுக்கும், முஹம்மதின் போதனைகளுக்கும் எதிராக சட்டமியற்றியிருக்க முடியும்? இன்றைய வஹாபிய முல்லாக்களுக்கு இருக்கும் அறிவும் பொறுமையும் கூட இல்லாதவரா இரண்டாம் கலீபா உமர்?  தனது மாமனாரை வஹாபிய முல்லாக்களெல்லாம் விமர்சிக்குமளவிற்கு முஹம்மது விட்டுச் சென்றிருக்கிறார் என்பதை நினைக்கையில் எனது மனம் வேதனையில் விம்மி வெடித்துவிடும் போலிருக்கிறது.

முஹம்மதியம் கற்பிக்கும் தலாக் முறையையை இரத்து செய்ய வேண்டுமா? என விவாதங்கள் எழுந்ததற்கே இன்று தினம்தினம் புதுப் புது போராட்ட அறிவிப்புகள் முஹம்மதியர்கள் தரப்பிலிருந்து வெளியாகிறது. ஆனால் குர்ஆனுக்கும், முஹம்மதின் வழிகாட்டுதலுக்கும் எதிராக சட்டமியற்றி அதை வெற்றிகரமாக செயல்படுத்திய இரண்டாம் கலீபா உமர், குர்ஆனின் வசனங்களுடன் போர்புரிந்துவிட்டதாகக் கூறி வழக்கம் போல கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது மிக வன்மையாக கண்டிக்கப்படிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சமாக ஒரு உண்ணாவிரதம் அல்லது அறிக்கை..?... எதுவுமில்லை.

அக்கால கட்டத்தில் கலீபா உமரைச் சுற்றிலும் முஹம்மதிய அறிஞர்களாகவும் சட்ட ஆலோசகர்களாகவும் முஹம்மதிய நம்பிக்கைப்படி தீர்ப்பு வழங்கக் கூடியவர்களாக பலர் இருந்தனர். அவர்களில் எவருமே உமரின்  இந்த முடிவை எதிர்க்கவில்லை. அத்தகைய செய்திகள் முஹம்மதிய வரலாற்றில் எங்குமே காணப்படவில்லையே ஏன்?

காரணம் உமர், குர்ஆனுக்கு எதிராகச் செயல்படவில்லை என்பதுதான்.

அடுத்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டு தலாக்கை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர் அதனால் உமர் தண்டனையாகச் செயல்படுத்தினார் என்கின்றனர். அன்றைய முஹம்மதியர்கள் தலாக் விஷயத்தில் எவ்வாறு விளையாடினர்?

Malik's Muwatta
Chapter No. 29, Divorce
Yahya related to me from Malik that he had heard that a man said to Abdullah ibn Abbas, "I have divorced my wife by saying I divorce you a hundred times. What do you think my situation is?" Ibn Abbas said to him, "She was divorced from you by three pronouncements, and by the ninety-seven, you have mocked the ayat of Allah."
 “நான் என் மனைவியை நூறு தலாக் கூறிவிட்டேன். தாங்கள் என் மனைவி விஷயத்தில் என்ன கருதுகின்றீர்? என்று ஒருவர் என்னிடம் வினவினார். அதற்கு நான் ”மூன்று தலாக் உம்மிடமிருந்து நிகழ்ந்து விட்டது 97 தலாக்குகளால் நீர் இறை வசனத்தைப் பரிகாசம் செய்து விட்டீர்” என்று கூறினேன் என்பதாக இப்னு அப்பாஸ் கூறுகின்றார்கள்.

குர்ஆன் 2:231
பெண்களை நீங்கள் விவாக ரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவை நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்!...
மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
…மனைவியைப் பழிவாங்க நினைக்கும் வக்கிர புத்தி கொண்ட ஆண்களில் சிலர் இதை வைத்து அவளை வஞ்சித்து வந்தனர், மனைவியைத் தலாக் சொல்வர். இத்தலாக் காலம் முடியும் தருவாயில் அவளை மீட்டிக் கொள்வர். பின்னர் மீண்டும் தலாக் சொல்வர். இப்படி மனைவியை வாழாவெட்டியாக வாட்டி வதைத்தனர். ஒரு நபித்தோழர் மனைவியிடம், ‘உன்னை நான் தலாக் விட்டுப் பிரிந்து வாழவும் விடமாட்டேன் சேர்த்து உன்னுடன் சேர்ந்து வாழவும் மாட்டேன். உன்னை தலாக் சொல்வேன் பின்னர் மீட்டிக் கொள்வேன். பின்னர் தலாக் சொல்வேன்... இப்படி காலம் பூராக உன்னை இல்லறத்தை விட்டும் ஒதுக்கி வைப்பேன் என்று கூறிய போது அப்பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இது குறித்து முறையிட்டாள். அப்போது இந்த வசனம் அருளப்பட்டது. மீட்டிக்கொள்ளும் தலாக் என்பது இரண்டு முறைதான் என்று இந்த வசனம் கூறி இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டியது….

குர்ஆன் 2:229
இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம்
தலாக்-முத்தலாக் விவாதங்களில், இந்த ஹதீஸ் பலமானது அந்த ஹதீஸ் பலகீனமானது, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்று வழக்கம்போல முல்லாக்களுக்கிடையே ஹதீஸ் சண்டைகளுக்குப் பஞ்சமில்லை. குறிப்பாக இப்ன் அப்பாஸ் மற்றும் ருகானா பெயர்களில் அறிவிக்கப்படும் தலாக் தொடர்பான ஹதீஸ்களில், முல்லாக்கள் ஒருவரது தாடியை மற்றொருவர் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே நான் அந்த விவாதங்களுக்குள் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. ஒன்று அனைத்து ஹதீஸ்களும் பாகுபாடின்றி ஏற்கப்படவேண்டும் அல்லது அனைத்தும் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டுமென்பதே நமது நிலை; நாம் விவாதத்தைத் தொடர்வோம்.

ஏகத்துவம் ஆகஸ்ட் 2005
அழுகின்ற இம்ரானாக்களும் எழுகின்ற கேள்விகளும்
 …எல்லாம் வல்ல அல்லாஹ் இரண்டு தலாக்குகள் என்று கூறவில்லை. மாறாக தலாக் என்பது இரண்டு தடவைகள் என்று கூறுகின்றான். குறிப்பிட்ட காலக் கெடு முடிவடையாத வரை ஒரு தடவை என்பது பூர்த்தியாகாது. ஒருவர் தன் மனைவியை நோக்கி ஒரே சமயததில், உன்னை மூன்று முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் முன்னூறு முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் அவர் ஒரு தடவை தலாக் கூறியதாகத் தான் பொருள்…
தடவை என்பதன் பொருளை விளங்கிக் கொள்ள சில உதாரணங்களைக் கூறலாம்.
ஒருவர் ஒரு மணி நேரம் குளித்துக் கொண்டேயிருக்கின்றார். அதன் பிறகு அவர் தலையைத் துவட்டிக் கொள்கிறார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் நாம் ஒரு தடவை என்று தான் கூறுவோம்.
இன்னொருவர் பத்து நிமிடம் குளிக்கின்றார். பிறகு வெளியே வந்து தலையைத் துவட்டிக் கொள்கிறார். மீண்டும் போய்க் குளிக்கின்றார். இப்படியே ஒரு மணி நேரத்தில் 5 தடவை இது போன்று செய்கின்றார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் 5 தடவை என்று கூறுவோம்.
ஒருவர் சாப்பிடுவதற்கு அமர்ந்து 10 இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். இவர் ஒரு தடவை சாப்பிட்டுள்ளார்.
மற்றொருவர் இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் அமர்ந்து இரண்டு இட்லி சாப்பிடுகின்றார். இவர் முன்னவரை விடக் குறைவாகச் சாப்பிட்டிருந்தாலும் இரண்டு தடவை சாப்பிட்டார் என்று தான் கூறுவோம்.
இதை இங்கு குறிப்பிடக் காரணம் ஒரு தடவை என்றால் அதற்கு ஒரு ஆரம்பமும் முடிவும் இருக்க வேண்டும்.
இது போலத் தான் தலாக்கின் தடவை என்பதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு தலாக் விட்டால் மூன்று மாத விடாய்க்குள்ளாக மீட்டி விட்டால் ஒரு தடவை தலாக் நிறைவேறி விட்டதாகப் பொருள். ஒரு தலாக் கூறி விட்டு, உரிய காலக் கெடுவுக்குள் மீட்டாமல் ஒருவர் ஆயிரம் முறை தலாக் என்று கூறினாலும் அது ஒரு தலாக் தான். ஏனென்றால் ஒரு தடவை என்பது இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அதை எத்தனை முறை கூறினாலும் ஒரு தடவை தான்.

தலாக் சொல்லப்பட்ட பெண்ணை திரும்பவும் மீட்டுக் கொள்வதற்கான குறைந்தபட்ச காலவரைமுறைபற்றி கூறப்படும் இடங்களை சற்று கூர்ந்து கவனியுங்கள். இதில் எங்கே குறைந்தபட்ச காலவரைமுறை குறிப்பிடப்பட்டுள்ளது? என்று விழிக்கவேண்டாம். குர்ஆனிலும் இல்லை  ஹதீஸ்களிலும் இல்லை முல்லாக்களின் விளக்கங்களிலும் இல்லை. அதை சமாளிக்கவே ’முறை’ ’தடவை’ என்று ஏதேதோ விளக்கங்களை அள்ளிவிடுகின்றனர்.

தலாக் அறிவிக்கக் கூடாத காலத்தைப்பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் கூறப்பட்டிருக்கிறது.

குர்ஆன் 65:1
நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்!

முஸ்லீம் 2929
அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மாதவிடாயிலிருந்த என் மனைவியை நான் மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதைத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (என் தந்தையிடம்), "உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு (மாத விடாயிலிருந்து) அவள் தூய்மையடைந்ததும் மணவிலக்குச் செய்யட்டும்!'' என்று கூறினார்கள்.
ஆனால் குறைந்தபட்ச கால அளவு எவ்வளவு என்பதைப்பற்றி எந்தவிதமான வரைமுறையும் கிடையாது என்பதைப்பற்றி முன்னமே கூறினேன். இதனால் எழுகின்ற குழப்பங்களைப்பற்றி த.த.ஜவினருக்குத்  தெரியும் அதனால்தான் தர்க்கரீதியாக வாதிடுவதாக நினைத்துக் கொண்டு எல்லோரையும் குளிக்க வைத்து இட்லி ஊட்டி விடுகின்றனர். ஒரு தடவை என்றால் அதற்கு ஒரு ஆரம்பமும் முடிவும் இருக்க வேண்டும் என்று விளக்கமளிப்பவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? குர்ஆன் கூறும் தலாக் விஷயத்தில் குறிப்பிட்ட அவரது விளக்கத்தைப் பொருத்திக் காண்பித்திருக்க வேண்டும்.

செய்தார்களா…? செய்தார்களா…? செய்தார்களா…?

இல்லை…!

கவலைப்படவேண்டாம் அவர்கள் செய்யத் தவறியதை நாம் செய்வோம். அதற்குத்தானே இந்தக் கடையை நடத்திக் கொண்டிருக்கிறோம்! அதற்கு முன் அப்படியானால் தலாக் கூறப்பட்ட பெண்ணை மீட்டுக் கொள்வதற்கான காலவரம்பு பற்றி கவனித்து விடுவோம்.

அவ்வாறு மீட்டுக் கொள்வதற்கான காலவரம்பு, தலாக் சொல்லப்பட்ட மறுகணத்திலிருந்து மூன்றாம் மாதவிடாய் ஏற்படுவதற்கு முந்தின வினாடிகள் வரையிலும், அப்பெண் கருவுற்றிருந்தால் குழந்தைப்பேறு வரையிலும் இருக்கிறது என்பதுதான். ஒருவேளை மாதவிடாய் நின்றுபோன பெண்ணாக இருந்தால் மூன்று மாதங்களைக் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும் என்கின்றனர். அதாவது குறிப்பிட்ட இந்தக் காலஇடைவெளியின் ஒவ்வொரு மைக்ரோ, நானோ வினாடியிலும் தலாக்கிலிருந்து திரும்ப அழைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குர்ஆன் 2:231
பெண்களை நீங்கள் விவாக ரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவை நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்!...
குர்ஆன் 65:4
….கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும்…
சரி..!

வஹாபிய முல்லாக்கள் சொல்வதை போல மூன்று இட்லி… மன்னிக்கவும்..! மூன்று வாய்ப்புக்கள் என்று வைத்துக் கொண்டாலும், அதற்கென்று கூறப்படும் பிரத்தியேகமான பதங்கள் அல்லது அத்தகைய பொருள்படும் பதங்களைப் பயன்படுத்தியே மணவிலக்கு செய்யவேண்டும் என்ற கண்மணி முஹம்மதின் போதனையை மறக்கக்கூடாது.

மூன்று விஷயங்கள்: அவற்றைப் பொறுப்புடன் கையாண்டாலும் அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஏற்பட்டே தீரும். அவற்றை விளையாட்டாக கையாண்டாலும் அவற்றால் ஏற்படும் விளைவுகள் ஏற்பட்டே தீரும். அவையாவன: 1) திருமணம் 2) தலாக் 3) தலாக்கை திருபப்ப பெறுதல் என நபியவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா)

அவ்வாறு மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்ணை திரும்பவும் மீட்டுக் கொள்வதற்கு ஏதேனும் மந்திரங்களை உச்சரிக்கவோ அல்லது குனிந்து நிமிர்ந்து சடங்குகளை நிறைவேற்றவோ வேண்டுமா?

நிச்சயமாக இல்லை! அதற்கென்று எந்தவிதமான செயல் முறைகளையும் முஹ்ம்மது கற்பிக்கவில்லை.

தலாக்கிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட பின்னர் அந்தக் கணவனும் மனைவியும் அடுத்த தலாக் சொல்வதற்கு குறைந்த அளவாக எத்தனைக் காலம் மறுபடியும் இணைந்து வாழ வேண்டும்? அப்படி ஏதேனும் வரைமுறை அல்லது வழிகாட்டுதல்கள் இருக்கிறதா?

நிச்சயமாக அத்தகைய எந்த வரைமுறையும் கிடையாது!

அப்படியானால், ஒரு தலாக்கிற்கும் இரண்டாவது தலாக்கிற்கும் போதிய இடைவெளி என்று எதுவுமே இல்லை!

இப்பொழுது த.த.ஜவினர் கொடுத்துள்ள குளியல் மற்றும் இட்லி உதாரணத்தை கவனிப்போம்.

அந்த முஹம்மதியர் தனது மனைவியை தலாக் கூற முடிவெடுத்து, தகுந்த நேரத்தையும் தேர்ந்தெடுத்து சாட்சிகளையும் வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார். பஞ்சாத்து ஆரம்பிப்பதற்கு முன் குளித்து உணவருந்திவிட  முடிவெடுக்கிறார். குளியல் அறைக்குள் செல்கிறார்; குளித்து புத்துணர்வுடன் வெளியில் வந்து மனைவியை நோக்கி, ”தலாக்” என்று கூறிவிட்டு, உணவு இருக்கும் மேசையை நோக்கிச் செல்கிறார். (நான் நேரத்தைக் கணக்கிட விரும்புகிறேன். விரும்பினால் நீங்கள் இப்பொழுது உங்கள் கடிகாரத்தில் நேரத்தைக் கணக்கிட துவங்கலாம்) குர்ஆன், ஹதீஸ் மற்றும் முல்லாகளின் விளக்கங்களைன்படி அவர் தலாக் என்ற சொல்லை முழுமைப்படுத்தியதிலிருந்து அவரது மனைவியில் இத்தா காலம் துவங்கிவிடுகிறது.

மேசையில் தயாராக இருக்கும் இட்லிகளில் இரண்டை சுவைத்து நிதானமாக உண்கிறார். (எனக்கென்னவோ இந்த நபர் த.த.ஜாவினரின் குளியல் மற்றும் இட்லி உதாரணத்தை அவரும் வாசித்திருப்பதாகத் தோன்றுகிறது) அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை தனது மனைவியைத் தலாக்கிலிருந்து மீட்டுக் கொள்வதாக அறிவிக்கிறார். இப்பொழுது அவர் மனைவியின் காத்திருப்பு காலமும் முடிவடைகிறது. (எனது கடிகாரத்தில் சரியாக 10 நிமிடம் ஆகியிருக்கிறது). பஞ்சாயத்திற்கு வந்தவர்கள் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த முஹம்மதியரின் வயிற்றில் ஏதோ கட..முட என்று சத்தம் கேட்க குளியலறையை நோக்கி ஓடுகிறார், அங்கு என்ன நிகழ்ந்ததென்று தெரியவில்லை. திரும்பவும் குளித்து சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தவர் மீண்டும் தனது மனைவியை நோக்கி ”தலாக்” என்று கூறிவிட்டு, இட்லி  இருக்கும் மேசையை நோக்கிச் செல்கிறார். அவரது மனைவியும் வேறுவழி தெரியாமல் ’இத்தா’ காலத்தை கணக்கிடத் துவங்கினார். மீண்டும் இரண்டு இட்லிகளை நிதானமாக உண்டு முடித்தவுடன், தனது மனைவியைத் தலாக்கிலிருந்து மீட்டுக் கொள்வதாக அறிவிக்கிறார். (இப்பொது சரியாக 20 நிமிடம் ஆகியிருக்கிறது).

அவருக்கு அகோரப் பசி என்று நினைக்கிறேன் மேலும் இரண்டு இட்லிகளை வயிற்றுனுள் தள்ளுகிறார். மீண்டும் கை மற்றும் வாய் சுத்தப்படுத்திக் கொண்டு, தனது மனைவியை நோக்கி ”தலாக்” என்று கூறுகிறார் (இப்பொது சரியாக 25 நிமிடம் ஆகியிருக்கிறது). இப்பொழுது அவர் தலாக்கை மூன்று தடவை அதாவது வேவ்வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். (மீண்டும் அவர் குளிப்பாரா…? தெரியவில்லை..!) அதுமட்டுமல்ல ஒரு ஆரம்பம் ஒரு ஒரு முடிவு என த.த.ஜ போன்ற வஹாபிய முல்லாக்களின் அறிவுறுத்தலையும் முழுமையாக  நிறைவேற்றியிருக்கிறார். போதாக்குறையாக இரண்டு முறை குளித்திருக்கிறார்; ஆறு இட்லிகளையும் சாப்பிட்டிருக்கிறார் இதற்குமேல் அவர் என்ன செய்யவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

இது ’போங்காட்டம்’ என்று வஹாபியர்கள் என் மீது பாயலாம். அவர்களிடம் நான் கேட்க விரும்புவதெல்லாம், ஒரு தலாக்கிற்கும் அடுத்த தலாக்கிற்கும் முறைந்தபட்ச இடைவெளி அல்லது கால அளவு என ஏதேனும் இருந்தால் அதை எனக்குத் தெளிவு படுத்துங்கள்! நான் என்னைத் திருத்திக் கொள்கிறேன்.

நிச்சயமாக அப்படி எந்தவிதமான வரைமுறையும் குர்ஆனிலும் கிடையாது ஹதீஸ்களிலும் கிடையாது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆக எப்படி நிதானமாகச் செயல்பட்டாலும்கூட தலாக் விஷயத்தில் 25 நிமிடத்திற்குள் வஹாபிய முல்லாக்கள் வலிந்து கற்பிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியும்! விரைந்து செயல்பட விரும்பியவர்கள் அடுத்தடுத்து மூன்று தலாக்குகளை அடுத்தடுத்து அறிவித்தனர் என்று கூறுவதைத் தவிர எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை! இரண்டாம் கலீபா உமர் செயல்படுத்தியதும் இந்த முறையைத்தான். அதனால்தான் அவரது செயல் அன்றைய முஹம்மதியர்களால் எதிர்க்கப்படவில்லை!
தொடரும்…




தஜ்ஜால்