உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் பிரச்சாரம் செய்யும் ஒரு விஷயம், இஸ்லாமிய
வழக்கான ஹிஜாப்-பர்தா-புர்கா பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது
என்பதாகும். உலக ஹிஜாப் தினம் என்று அறிவித்து அதன் அருமை பெருமைகளை(!) பெண்களிடையே
பரவச் செய்கின்றனர்.
தொடர்ந்து வலியுறுத்தப்படும் ஒரு பொய் காலவட்டத்தில் உண்மையாகி விடுவதால், இக்கருத்தை
இப்போது ஒரு சில முஸ்லீம் அல்லாதவர்களும் நம்பத் தொடங்கிவிட்டனர். இதற்கு ஆதாரமாக,
இஸ்லாமியமார்க்க 'அறிஞர்கள்', அமெரிக்காவில் நிகழும் பாலியல் வன்முறைகள் பற்றிய புள்ளி
விவரங்களை முன்வைப்பதை எங்கும் காண முடிகிறது. அமெரிக்காவுடனோடு முஸ்லீம் நாடுகளில்
நடக்கும் பாலியல் வன்நிகழ்வுகளைப் பற்றிய புள்ளி விபரங்களை ஒப்பிட்டு வன்முறைகுறைவாக
இருப்பதாகவும், ஆதலால் பர்தாமுறை, உளவியல் பூர்வமாக சிறந்த வழக்கம் என்று வாதிடுகின்றனர்.
பல இஸ்லாமிய நண்பர்களும் நம்மிடம் சவுதியையும், அமெரிக்காவையும் ஒப்பிட்டு 'தூய' இஸ்லாமிய
வழக்கங்களே சிறந்தது என்று வாதிடுவதையும் செவிமடுத்திருக்கிறோம்.
இஸ்லாம் விஷயத்தில் நிறைய அர்பன்லெஜண்டுகள் உண்டு. அதில் ஒன்றுதான் இந்த பர்தாவானது
பெண்களுக்கு பாதுகாப்பையும், கண்ணியத்தையும் தருகிறது என்பது. பர்தா உண்மையிலேயே பெண்களுக்கு
கண்ணியத்தையும், பாதுகாப்பையும் தருகிறதா என்று இக்கட்டுரையில் பார்ப்போம்.
பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள்:
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பலவித கோணத்தில், பலவித டிகிரிக்களில் நடந்தாலும்
அவற்றை பொதுவாக மூன்று விதமான பெரும் பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தலாம்:
1.குடும்பத்துள் நிகழும் வன்முறைகள் (கணவனால் அடித்துத் துன்புறுத்தப்படுவது,
கொல்லப்படுவது, உறவினர்களின் மூலம் நிகழ்த்தப்படும் வன்முறைகள் மற்றும் பாலியல்வன்
முறைகள், பொருந்தாத் திருமணம், கட்டாயத் திருமணம், கருவழிப்பு, க்ளிட்டோரிஸ் துண்டிப்பு,
குடும்ப கெளவரவம் காக்க செய்யப்படும் கொலைகள் போன்றவை).
2. சமுதாயத்தில் நிகழ்வது (கற்பழிப்பு, பலாத்காரம், அங்கமீறல்கள், தாக்குதல்கள்,
வற்புறுத்தலின் பேரில் பாலியல்தொழில், பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுவது, விலை பேசிவிற்பது,
வயது குறைவான பெண்களுடன் திருமணம் மற்றும் புணர்தல்போன்றவை).
3. அரசின் வன்முறை (சிறைப்படுதலின் போது நடக்கும் பாலியல் வன்முறைகள், சட்டரீதியான
வன்முறைகள், தண்டனை மற்றும் குற்ற நோக்கில் ஆண்-பெண்பேதம் போன்றவை)
பர்தா முறையானது, இவ் வன்முறைகளிலிருந்து பாதுகாப்பை அளித்து, இஸ்லாமியப் பெண்டிருக்கு
கண்ணியத்தையும், மரியாதையையும் வழங்குகிறதா என்பதை சற்றே விரிவாகப் பார்ப்போம்.
குடும்பத்துள் நிகழும் வன்முறைகள்:
1. இஸ்லாமிய சமுதாயத்தில்
பெரிய அளவில் குடும்பத்துள் நிகழும் வன்முறைகள் நிகழ்கின்றன. ஐநா அமைப்பின் பாபுலேஷன்ஃபன்ட்
தெரிவிப்பது என்னவென்றால், உலகிலேயே பெண்களுக்கு எதிராக அதிக வன்முறைகள் நிகழும் நாடுபங்களாதேஷ்
என்பதுதான். பங்களாதேஷ் ஒரு இஸ்லாமியநாடு என்பது நாம் அறிந்ததே. அதுமட்டுமல்ல, அங்குகொல்லப்படும்
பெண்களில் ஐம்பது சதவிகிதத்தினர் தங்களது கணவன்மார்களாலேயே கொல்லப்படுகின்றனர்.
2. கணவன்மார்களால் கொல்லப்படுவது ஒருபுறம் இருக்கட்டும், இஸ்லாமிய நாடுகளில்,
உறவினர்களாலும் குடும்ப கெளரவத்தைக் காப்பதற்காக ஏராளமான (பர்தா அணிந்த) முஸ்லீம் பெண்கள்
கொல்லப்படுகிறார்கள். உதாரணமாக, ஈரானின் அரபு முஸ்லீம்கள் குசேஸ்தான் மாநிலத்தில் சென்ற
ஆண்டு நடத்தப்பட்ட ஓர் கணிப்பின்படி, இரண்டே மாதங்களில் கெளவரவக் கொலைகளால் உயிரழந்த
பெண்களின் எண்ணிக்கை 45 (இவர்கள் அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள்). இத்தனைக்கும்
ஈரானில் கடந்த 24 வருடங்களாக கட்டாயப்படுத்தப்பட்ட பர்தா முறை அமுலில் இருக்கிறது
(பர்தா அணியாமல் வெளியேவரும் பெண்களுக்கு 74 சவுக்கடிகள்வரை கொடுக்க சட்டம் உள்ளது).
ஜோர்டான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இத்தகு கெளரவக் கொலைகளுக்குச் சட்டரீதியான அங்கீகாரம்
உள்ளது. கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உறவினர், அப்பெண்ணைக் குடும்பக் கெளரவத்தைக்
காப்பதற்காக கொன்றோம் என்று நிறுவினால், வெறும் ஆறு மாத சிறைத் தண்டனைதான். இது போன்றே
பல இஸ்லாமிய நாடுகளிலும் இத்தகைய கெளரவக் கொலைகள் தொடர்கின்றன என்று யூனிசெஃப்பின்
ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
3. எஸ்.கே அவர்களின் 'மெய்தீண்டல்' கட்டுரையை துணைக்கு அழைத்திருக்க தெரியாமலிருக்க
வாய்ப்பில்லை, இத்தகு மெய்தீண்டலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் நெருங்கிய உறவு முறையில்,
அக் குழந்தைகள் நன்கு அறிந்த, அவர்களுடன் அன்றாடம் பழகக்கூடியவர்கள் தாம். இவர்கள்,
இஸ்லாத்தால் அனுமதிக்கப்பட்ட மஹராம் உறவுமுறையைச் சேர்ந்தவர்களாகவே பெரும்பாலும் இருப்பதால்,
இஸ்லாமிய நாடுகளில் 'மெய்தீண்டல்கள் ' நிறையவே நடக்கின்றன. பர்தா முறையினால், இஸ்லாமிய
கண்ணோட்டங்களினால், இத்தகைய பாதிக்கப்பட்டோர் வெளியில் இதைச் சொல்லவும் முடிவதில்லை.
4. இதுமட்டுமல்ல, தங்களது மனைவியரை, கணவன் அடிக்கலாம் என்ற இஸ்லாமிய சுன்னாவின்
மூளைச் சலவைகாரணமாக, இஸ்லாமியப் பெண்கள் மற்ற சமுதாயப் பெண்டிரைப் போல எதிர்ப்பு காட்டுவதில்லை,
புகார் செய்வதில்லை. இஸ்லாமிய நாடுகளில், காவல் நிலையங்களிலும் புகார் பெற மறுத்து
விடுகின்றனர். மீறி போலீஸில் புகார் கொடுப்போர் மீதே, நடத்தை கெட்டவள் என்ற புகார்
தரப்பட்டு, பாதிக்கப்படுவோரே மேலும் மேலும் இஸ்லாமிய கோட்பாடுகளின் அடிப்படையில் துன்புறுத்தப்படுகின்றனர்.
5. பங்களாதேஷ் போன்ற நாடுகளில் வாழும் இஸ்லாமியப் பெண்டிருக்கு, இருவகைத் துன்பம்.
இஸ்லாமிய கோட்பாடுகளின், கலாச்சார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் செய்யப்படும் வன்முறைகள்
தவிர மண்வழிக் கலாச்சாரத்தின் பாதிப்புகளும் தொடரத்தான் செய்கின்றன. உதாரணமாக பங்களாதேஷில்
நிகழும் வரதட்சினைக் கொடுமை. இதைச் சுட்டிக் காட்டினால், இவ் வரதட்சினைமுறை இஸ்லாத்துக்கு
எதிரானது என்றும் இது இந்து மதத்தின் தாக்கம் என்றும் கூறும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்,
இப்படி வாங்குபவர்களுக்கு எதிராக பெயரளவில் மட்டுமே கூப்பாடு போட்டுவிட்டு, இஸ்லாத்தின்
பெண்கள் நிலை பற்றி எழுதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டுமே தாக்குதல்கள் நிகழ்த்துகிறார்கள்
என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உடனே, இதற்குத் தீர்வு இஸ்லாமியமயமாக்கல் என்றால்,
இதற்குமாற்றாக இஸ்லாம் பரிந்துரைக்கும் ’மஹ்ர்’ என்னும் பெண்விலையின் விளைவுகளோ இதைவிட
பயங்கரமாகவே உள்ளன.
6. அரபுநாடுகளில் நிகழ்வில் இருக்கும் இஸ்லாத்தால் அங்கீகரிக்கப்பட்ட 'பெண்விலை'
எனப்படும் மஹ்ர் கட்டணத்தின் எதிர்விளைவாக, அங்கிருக்கும் கிழவர்கள் எல்லாம் இந்தியா,
பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருக்கும் ஏழைப் பெண்களை விலைக்கு வாங்கி
(இஸ்லாத்தின் அனுமதியோடு எந்தவிதக் குற்றஉணர்வும் இல்லாமல்) அனுபவித்துவிட்டு, போகும்போது
விபச்சார விடுதிகளில் (முத்தலாக் சொல்லிய பிறகு) விற்று செலவழித்த பணத்தில் கொஞ்சத்தை
திருப்பி எடுத்துப் போவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இப்படி நடந்து கொள்பவர்களில்
பலர், 'தூய' இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கும் சவுதிப் பெரியவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும், முஹம்மதுவின் வழிமுறைகளான ’சுன்னா’ காட்டிய எடுத்துக்காட்டின் அடிப்படையில்,
அறுபது வயதுக் கிழவர்கள் ஆறு வயது சிறுமிகளையும், முறையாகத் திருமணம் செய்து கொள்ளமுடிகிறது.
ஈரானில் ஒன்பது வயதுப் பெண்ணை(சிறுமி) சட்டரீதியாகவே திருமணம் செய்து கொள்ளலாம். இத்தகைய
பொருந்தாத் திருமணங்கள் இஸ்லாமிய நாடுகளில் ஏராளமாக நிகழ்கின்றன. இப்படி சின்னஞ் சிறுமிகளை
'நிக்காஹ்' புரிவதும் கற்பழிப்புக்கு நிகரானது என்பதை முஹம்மது நபியின் வழிமுறைகளான
‘சுன்னா’ அவர்களது கண்களை கட்டி விடுவதால் எந்தமார்க்க 'அறிஞரும் ' தீவிரமாக கண்டிப்பதில்லை.
7. இது தவிர பெண்களின் கிளிட்டோரிஸை துண்டித்து அவர்களின் பாலியல் உணர்வுகளைக்
கட்டுப்படுத்த முயலும் வழக்கமும் இஸ்லாமிய சமுதாயத்தின் சில குழுக்களிடையே இருக்கின்றன.
இஸ்லாமிய நாடான சோமாலியாவில், 90 சதவிகிதம் பெண்களுக்கு இந்தகிளிட்டோரிஸ் துண்டிப்பு
நிகழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்தகைய பெண்களுக்கான சுன்னத்தின் விளைவாக செக்ஸ்
என்றாலே அவர்கள் அலற ஆரம்பித்து விடுகிறார்கள். ஆண்களுக்கு மட்டும்தான் இன்பம், அனுபவிக்கப்படும்
பெண்களுக்கு கனவுகளில்கூட அச்சமூட்டும் துன்பமே மிஞ்சுகிறது.
8. பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில், பஞ்சாயத்தாரே இஸ்லாமிய சட்ட திட்டங்களின்
படி கொடூரமான தண்டனை வழங்குவதும் நடக்கிறது. உதாரணமாக இரண்டாண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானில்
இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில், உயர் ஜாதிப் பெண்ணை காதலித்த ஒரு முஸ்லீம் இளைஞனின்
சகோதரி, பஞ்சாயத்தார் உத்தரவின் பேரில் கூட்டுக் கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டாள்.
பின் அவளை அனைவர் முன்னாலும் நிர்வாணமாக நடக்கச் செய்தனர். கண்ணுக்குக்கண், பல்லுக்குப்பல்
என்ற இஸ்லாமிய சட்டக் கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே இத்தண்டனை வழங்கப்பட்டது.
சமுதாயத்தில் நிகழும் வன்முறைகள் :
1. இஸ்லாமிஸ்ட்டுகளின் பிரச்சாரங்களில் அமெரிக்காவின் கற்பழிப்புக் குற்ற எண்ணிக்கைகளை
சுட்டிக்காட்டியே பெரும்பாலும் பிரச்சாரம் நடைபெறுகிறது. பொதுவாகவே இஸ்லாமிய நாடுகளில்
பர்தாமுறையின் காரணமாக வெளிவந்து புகார் அளிப்பதே மிகஅரிதாக இருக்கிறது.
2. கற்பழிப்புகள் இஸ்லாமிய ஷரியத்சட்டம் அமலில் உள்ள நாடுகளில் பெரும்பாலும்
போலீஸாருக்குத் தெரியப் படுத்தப்படுவதில்லை. காரணம், தாம் கற்பழிக்கப்பட்டதை நேரில்
பார்த்த நான்கு ஆண்சாட்சிகளை ஒரு பெண்சுட்டிக்காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை
இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை. நிரூபிக்க
முடியாமல் போனால், அந்தப் பெண்ணை முறைகேடான உறவுவைத்ததற்காக கல்லால் அடித்துக் கொல்ல
இஸ்லாமியஷரியத் வழிவகை செய்கிறது. இதனாலேயே, இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்புபற்றிய புகார்கள்
மிகவும் குறைவாகவும், அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும் காணப்படுகிறது.
3. இது மட்டுமல்லாது, ஷரியத் சட்டங்கள் அமலில் இல்லாத இஸ்லாமிய நாடுகளிலும்,
மண்வழி மற்றும் மதவழிக்கலாச்சாரத் தாக்கத்தாலும், மதரீதியாக செய்யப்படும் மூளைச் சலவையினாலும்
பெண்கள் முன்வந்து கற்பழிக்கப்பட்டதாக அறிவிப்பது அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளை
ஒப்பிடும் போது மிகவும் அரிதாகவே இருக்கிறது. உதாரணமாக, இஸ்லாமிய நாடுகளில் ஓரளவிற்கு
முன்னேறிய நாடாக விளங்கும் துருக்கியிலேயே, 90 சதவிகித கற்பழிப்புகள் போலீசாருக்கு
புகார் செய்யப்படாமலே போகின்றன என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவிக்கிறது.
4. கூட்டுக் கற்பழிப்புகளும் இஸ்லாமிய நாடுகளில் பெரிய அளவில் நடக்கின்றன. பாலியல்
உணர்வுகளுக்கு வடிகால் தேடமுடியாமல் இஸ்லாத்தால் தடுக்கப்படும் இளைஞர்கள், தீவிர இஸ்லாத்தைப்
பின்பற்றும் மதக்குழுக்களில் சேர்ந்து, சில இஸ்லாமிய குழுக்களை காஃபிர்கள் என்று அறிவித்து
அவர்களின் பெண்களை கூட்டமாக கற்பழிப்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது (காஃபிர்களின்
பெண்டிரைக் கற்பழிப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒன்றாகும்). ஆப்கானிஸ்தானில்
ஷியா முஸ்லீம்களை காஃபிர்கள் என்று அறிவித்த பின் இத்தகைய கூட்டுக் கற்பழிப்புகளில்
முஜாஹித்தீன் (அல்லாஹ்வின்வீரர்கள்) குழுக்கள் ஈடுபட்டிருக்கின்றன. அது போன்று, ஒரு
முஜாஹித்தீன் குழுவின் கை ஓங்கும் போது, அப் பகுதியில் வசிக்கும் வேற்று இன முஸ்லீம்களின்
பெண்களை இத்தகைய அல்லாஹ்வின் வீரர்கள் கற்பழிப்பது, அடிமைகளாக்கிக் கொள்வது போன்றவையும்
தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. பக்கத்தில் உள்ள ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல, இஸ்லாமிய
கோட்பாடுகளை தீவிரமாக அமல் செய்ய ஏற்பட்ட சூடானின் அரசும் கூட அங்குள்ள அரபி அல்லாத
முஸ்லீம் பெண்களை கூட்டம் கூட்டமாகக் கற்பழித்ததை ஐநாவின் பல்வேறு அமைப்புகள் பதிவுசெய்து
பதிப்பித்துள்ளன.
5. பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுவதும் பல முஸ்லீம் நாடுகளில்
நிகழ்வில் உள்ளது. சமீபத்தில் கொலும்பில் நடந்த யூனிசெஃப் கருத்தரங்கில், பங்களாதேஷிலிருந்து
ஐந்து லட்சம் பெண் குழந்தைகள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது பாகிஸ்தானில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பங்களாதேஷ் பெண்கள் (ஏறத்தாழ அனைவருமே
முஸ்லீம்கள்தாம்) பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த
பத்தாண்டுகளில் பாகிஸ்தானுக்கு இரண்டு லட்சம் பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர். பங்களாதேஷில்
பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறை நிலவுவதாகவும் (ஆசிட் எறிதல், கற்பழிப்புகள்,
தற்கொலைக்கு தூண்டப்படுதல்), 72 சதவிகிதம் பெண்கள் குடும்பத்தில் வன்முறைக்கு உள்ளாவதாகவும்
யூனிசெஃப் தெரிவிக்கிறது. நகர்ப்புறங்களில் குழந்தைத் திருமணத்தின் சதவிகிதம் 70%!
இதுவும் யூனிசெஃப் குறிப்பிடுவதுதான்.
6. இது தவிர, தீவிர இஸ்லாம் அமலில் இருக்கும் சவுதிஅரேபியா போன்ற நாடுகளால்,
ஏனைய நாடுகளில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் அதிகரிக்கவே செய்கின்றன.
வளம் படைத்த சவுதியின் ஷேக்குகள் மேற்கின் விபச்சார விடுதிகளிலெல்லாம் விழுந்து கிடக்கின்றார்கள்(இது
குறித்து நைபால் கிண்டலடித்தது நினைவிலிருக்கும்), வசதி குறைந்தவர்கள் பஹ்ரைனுக்கும்,
துபயிக்கும் வார இறுதிகளில் சென்று ஈடுபடுகின்றனர். ஏழை சவுதிக்களோ, மதராஸாக்களிலிருந்து
மற்ற நாடுகளுக்கு முஜாஹிதீன்களாக ஏற்றுமதி செய்யப்பட்டு, அங்கு போய் கற்பழிப்புகளிலும்
ஏனைய வன்முறைகளிலும் ஈடுபடுகின்றனர். ஈரானில் விபச்சாரத்திற்கு மரணதண்டனை வழங்கினால்,
பாகிஸ்தானுக்கு சென்று விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்ட் displaced
sexual violenceஐத்தா ன்சவுதிஅரேபியா, ஈரான் போன்ற தீவிர முஸ்லீம்நாடுகள் தோற்றுவித்துக்
கொண்டிருக்கின்றன.
அரசால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் :
1. இதில் முதலிடம் வகிப்பது, பெண்களுக்கு எதிராக இஸ்லாத்தின் பெயரில் இயற்றப்பட்டு,
செயல்படுத்தப்படும் அல்லாஹ்வின் சட்டங்கள்தாம். ஷரியத் என்று அரபியில் அழைக்கப்படும்
இந்த அல்லாஹ்வின் சட்டங்கள் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும், எதோ ஒருவகையில் அனைத்து
இஸ்லாமிய நாடுகளுமே இந்த ஷரியத்தின் கூறுகளை தம்மிடையே கொண்டுள்ளன. மென்மையான சட்டங்கள்
கொண்டுள்ள இஸ்லாமிய நாடுகளில், ஹூதூது எனும் கடுமையான, கொடூரமான இஸ்லாமிய கிரிமினல்
சட்டத்தை கொண்டு வரவேண்டும், அதுதான் அல்லாஹ்வின் கட்டளை என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள்
கூக்குரலிட்டு வருகின்றனர்.
2. இந்த அல்லாஹ்வின் சட்டங்கள், பெண்களுக்கு எதிராக மிகவும் பாரபட்சமான முறையில்
உள்ளன. மேலே குறிப்பிட்டிருந்தார் போல, இந்த அல்லாஹ்வின் சட்டங்களின் காரணமாக கற்பழிக்கப்பட்ட
பெண், அதை உறுதிப்படுத்தும் நான்கு ஆண்சாட்சிகள் இல்லாமல் வெளியே வந்து புகார் தரமுடியாது.
பாகிஸ்தானில் சிறையில் உள்ள பெண் கைதிகளில் 80 சதவிகிதத்தினர், இந்த ஹூதூது சட்டத்தின்படி
குற்றம்சாட்டப்பட்டவர்களே. இவர்கள் மீது நடத்தை கெட்டவர்கள் என்ற மதக் குற்றச்சாட்டு
இருப்பதால், சிறையிலும் இவர்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகிறார்கள். 1980 லிருந்து
1987 வரை பாகிஸ்தானின் ஃபெடரல் ஷரியத் கோர்ட்டில் மட்டும், 3349 குற்றச்சாட்டுகள் பதிவாயின.
இது ஒரு சிறுதுளியே என்கிறார் அஸ்மாஜ ஹாங்கீர்!. இச்சட்டத்தின் எதிரொலியாக, கற்பழிக்கப்பட்ட
பெண்கள் மீது ஜினா எனும் நடத்தை கெட்டவள் என்ற குற்றம்சாட்டப்பட்டு, அவர்களுக்கே தண்டனை
தரப்படுகிறது. உதாரணமாக, 2002ல் ஜஃப்ரான் பீவி என்ற முஸ்லீம் பெண், அவளது கணவனின் சகோதரனால்
கற்பழிக்கப்பட்டாள். கற்பழித்தவனுக்கு தண்டனை தருவதற்கு பதிலாக, அங்குள்ள ஷரியத்கோர்ட்டு, அவளைக் கல்லால் அடித்துக் கொலை
செய்யுமாறு தீர்ப்பளித்தது. தொடர்ந்து உலக நாடுகள் எல்லாம் இத்தீர்ப்பைக் கண்டிக்கவே,
ஜஃப்ரான் பீவிக்கு விடுதலை கிடைத்தது.
3. இது மட்டுமல்லாது, இஸ்லாமிய நாடுகளில், அரசின் வன்முறைக்கும் நேரடியாக பாதிக்கப்படும்
பெண்களின் எண்ணிக்கை மேற்கு நாடுகளைவிட மிகவும் அதிகமாகவே இருக்கின்றது. கல்வியிலும்,
வசதியிலும் முன்னேறிய இஸ்லாமிய நாடான துருக்கியில், குர்து இனப் பெண்கள், அலெவி பிரிவுபெண்கள்
(இவர்களெல்லாம் முஸ்லீம்கள்தாம்), எதிராகக் கடுமையான பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்படுவதை
ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் டாகுமென்ட் செய்துள்ளன. ஆப்கானிஸ்தான், சூடான்
போன்ற நாடுகளில் தீவிர இஸ்லாமியப் பிடிப்புள்ளவர்கள் நடத்தும் அரசே பல சமயங்களில் கூட்டுக்
கற்பழிப்புகளுக்கும், ஏனைய பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் உடந்தையாக இருந்திருக்கின்றன.
மேலே நான் குறிப்பிட்டுள்ள பல விஷயங்களைப் பார்க்கும் வாசகர்கள், இந்தியாவில்
மட்டும் என்ன வாழுது? என்று கேட்கக்கூடும். உண்மைதான், நமக்கு இதெல்லாம் ஒன்றும் புதிதல்ல.
ஆனால், நான் இங்கு சொல்ல வருவது என்னவென்றால், இஸ்லாமிய கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பது
என்னவோ முஸ்லீம் பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பையும், கண்ணியத்தையும் தருவது போலவும்,
மேற்கத்திய நாடுகளில் பன்மடங்கு வன்முறை நிகழ்வது போலவும் செய்யப்படும் தவறான பிரச்சாரத்தின்
அடிப்படை முரண்களையே இங்கு முன்வைத்துள்ளேன்.
மற்ற சமுதாயங்களில் இம் மாதிரியான விஷயங்கள் இருக்கிறது என்றால், அப்புறம் பர்தா
மட்டும் எப்படி பாதுகாப்பை வழங்குகிறது என்று இஸ்லாமிஸ்ட்டுகள் வாதிடுகிறார்கள் என்று
புரியவில்லை. இஸ்லாமிய சமுதாயங்களைவிட அமெரிக்காவில் பெண்களுக்கு பாதுகாப்பும், கண்ணியமும்
இருக்கிறது. கராச்சியைவிட, முஸ்லீம் பெண்களுக்கு மும்பையில் அதிகபாதுகாப்பு இருக்கிறது.
பர்தா அணிந்த முஸ்லீம் பெண்கள் மீது இஸ்லாமிய நாடுகளில் நடத்தப்படும் வன்முறைகளைவிட,
பர்தா அணியாத முஸ்லீம் பெண்களுக்கு மேற்கத்திய நாடுகளில் மிகவும் குறைவாகவே வன்முறைகள்
நடக்கின்றன. இது மேற்கில்வசிக்கும், வசித்த அனைவரும் அறிந்த ஒன்றே! இந்நிலையில், வெளிப்படையாக
பதிவு செய்யப்படும் குற்றங்களின் எண்ணிக்கையை வைத்து, மேற்கில் பெண்களுக்கு பாதுகாப்பு
இல்லை, இஸ்லாம் பெண்களுக்கு பாதுகாப்பையும், மரியாதையையும் வழங்குகிறது என்று எந்த
அடிப்படையில் பிரச்சாரம் செய்கிறார்கள் இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்பது புரியவில்லை.
இக்கேள்விகளை முன்வைத்தால், அதற்கு இஸ்லாமிஸ்ட்டுகளின் பதில்வாதமாக, இத்த குகுற்றங்களுக்கு
காரணம், அல்லாஹ்வின் கட்டளைகளை 'சரிவர' அமல்படுத்தப்படுவதில்லை, அல்லாஹ்வின் சட்டங்களை
ஷரியத் நீதிபதிகள் சரிவர ஆய்ந்து தீர்ப்பளிப்பதில்லை என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
நான் சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம், இஸ்லாமிய மயமாக்கலுக்கும், பெண்களின் மீதான
வன்முறைகளுக்கும் ஓர் நேரடி வளர்தொடர்பு இருப்பது என்பதுதான். ஹம்சா ஆலவி குறிப்பிடுகின்றார்,
'பாகிஸ்தானில் இஸ்லாமிய மயமாக்கலைத் தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன,
மத அங்கீகாரம் அவற்றுக்கு வழங்கப்பட்டது. இஸ்லாமிய மயமாக்கல் என்ற கூப்பாடு, பெண்களுக்கெதிரான
வன்முறையை அதிகரித்தது. இதை முன்னின்று நிகழ்த்தியவர்கள் முல்லாக்கள்'. பாகிஸ்தானிய
முஸ்லீம் (பெண்) ஆய்வாளர் ஜாஸ்மின் மிர்ஜா குறிப்பிடுகின்றார், 'Women were the
primary target of Zia 's decade of Islamization'. மேலும், இஸ்லாமிய நாடுகளில் செயல்படும்
அநேகமாக அனைத்து பெண்கள் இயக்கங்களும், இந்த சம்பந்தத்தை உணர்ந்து அதன் காரணமாக இஸ்லாமியமயமாக்களை
எதிர்த்து வருகின்றனர். ஏனெனில், இத்த குகுற்றங்களுக்கு, குற்றவாளிகளுக்கு மத அங்கீகாரம்
வழங்கப்படுவது, அக் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறவும், குற்றவாளிகள் எவ்வித தண்டனையும்
பெறாமல், சமூக அந்தஸ்துடன் உலவவும் வழிவகை செய்துவிடுகிறது.
இதெல்லாம் பல முஸ்லீம் பெண் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. பல முஸ்லீம்களும்
இவற்றைக் கண்டித்து, சமுதாயத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
மதம் கண்ணை மறைக்காத அனைவருக்கும் இத்தகைய உண்மைகள் கண்ணில்படுகின்றன. பேசாப் பொருளைப்
பேசி ஃபத்வா வாங்க துணிபவர்கள் குறைவு என்பதால், இதெல்லாம் ஸீனா-ப-ஸீனாவாகவே(இதயத்திலிருந்து
இதயத்துக்கு) போய்விடுகிறது. அல்லது இஸ்லாமிய மெளன வெளியில் ஆழ்த்தப்பட்டு, அடக்கம்
செய்யப்படுகின்றது.
நிதர்சனங்களை மறுதளிப்பதும், வரலாற்றையும் நிகழ்வுகளையும் திரிப்பதும், தமது
மதநம்பிக்கைகள் கண்ணை மறைக்க, அவற்றை அறிவியல் பூர்வமாகவும், உளவியல் ரீதியாகவும் சரியென
நிறுவ முன்பின் முரணானவாதங்களை முன்வைப்பதுமே இஸ்லாமிஸ்ட்டுகளின் வழக்கமாக இருக்கிறது.
இந் நிலையில், முஹம்மதிஸ்ட்டுகளின் வாதங்களில் தென்படும் இடைவெளிகள், முரண்பாடுகளைக்
காட்டவே இக்கட்டுரை
தொகுப்பு : குரங்கின் தூதுவன்