Tuesday, 27 January 2015

குர்ஆன் கூறும் அறிவியல் : சூரியன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ!

அல்லாஹ்வின் உண்மை நல்லடியார்களே!

நாம் ஏறக்குறைய இந்த பருவத்தின் முன்பனிக்காலத்தின் இறுதிப்பகுதியை நெருங்கிவிட்டோம். அடுத்தது பின்பனிக்காலத்தின் மத்திலிருந்து வெயில் நம்மை வாட்டி எடுக்கப் போகிறது.  

காலை 8 மணிக்கெல்லாம்  வெயிலின் கொடுமை தனது வேலையைக் காட்டத் துவங்கி, நண்பகலின் உச்சத்தை அடைந்து சாலையில் நடந்து செல்வதே கடினம் என்ற நிலைக்கு கொண்டு சென்றுவிடும். அத்துடன் அனல் காற்று வேறு!

வியர்வையில் குளித்து, உடலெல்லாம் பிசுப்பிப்பாகி, தாகத்தில் நாக்கு வெளியில் தள்ளி... நம்மை படாய்பாடுத்திட காத்திருக்கிறது இந்த வெயில். இதில் பெரும் துன்பம் பெண்களுக்குத்தான். எப்போதுமே உடல் முழுக்க மூடிக் கொண்டிருக்கும் ஆடைகளை அணிவதால், தோல் பிரச்னைகள் சிறுநீர் கோளாறுகள் என்று அவர்களின் நிலைமை சிக்கலாகிவிடுகிறது. ஆனால்  புர்க்கா அணிந்து செல்வதால் எத்தகைய பாதிப்புகளிலிருந்தும்கூட பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதே அல்லாஹ்வும் ரஸூலும் நமக்குக் கற்றுத்தந்த விஷயங்கள்.



அல்லாஹ், தனது தூதரின் வாயிலாக வெளியிட்ட கட்டளைகளின் மகத்துவத்தை, கோடைவெயிலின் கொடுமையால் பள்ளி கல்லூரிக்குச் சென்று திரும்பும் பெண்கள் துப்பட்டாவை தங்களைப் போர்த்திக்கொண்டு செல்வதை காணும் பொழுது நீங்களே உண்மையை அறிந்து கொள்ளலாம்.

மிகக் குறைவாக மழைபெறும்பகுதிகள், ஆறுகளே இல்லாத பாலவனப் பிரதேசங்களில் வெயிலின் கொடுமையைப்பற்றி சொல்லவே தேவையில்லை! அதேபோல குளிரின் தாக்கமும் இருக்கும்.

அன்றைய அரேபியர்களுக்கு இந்த பருவகால மாற்றங்கள் ஏன் நிகழ்கிறதென்பது புரியாத புதிராக இருந்தது. அன்று அவர்களுக்கு இருந்த வசதிவாய்ப்புகள் அவ்வளவுதான். இந்நிலையில், ஏழாம் நூற்றாண்டில் அவர்களுக்கு ஒரு மாபெரும் மனிதர் பொக்கிஷமாகக் கிடைத்ததார். அவர் இந்த பிரபஞ்சத்திற்கே சிறந்த முன்மாதிரியாக, தனது தூதராக, நேசராக, நம்மை நேர்வழிப்படுத்துவதற்காக அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்டவராவார். மூக்கை எப்படிச் சிந்துவது என்பதிலிருந்து மலம் கழித்தால் எத்தனைக் கற்களை எப்படி உபயோகிப்பது என்பதுவரை எல்லாவற்றையும் அல்லாஹ்வின் அருளால் அரேபியர்களுக்கு மட்டுமல்லமல் அகில உலகத்திகும் இன்றுவரை கற்பித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் அல்லாஹ், நமது கண்ணுமணி நாயகத்திற்கு அறிவியல், புவியியல், வரலாறு, கணிதம், பொருளாதாரம், சட்டம், கட்டப்பஞ்சாயத்து, சாபம் விடுவது, என்பதோடு மண்ணைவாரித் தூற்றி எதிரிகளைத் தாக்குவது போன்ற அதிபயங்கரமான சண்டைப் பயிற்சிகளையும், கண்களை தோண்டியெடுப்பது, தலை, கை-கால்களை போன்ற மருத்தவமுறைகளைக் கூட கற்பித்திருக்கிறான்.
அன்றைய அரேபியர்களுக்கு மட்டுமல்ல இன்றும்கூட 150 கோடி முஃமின்களுக்கு நடமாடும் (நடமாடிய) பல்கலைக் கழகம். சிந்தையை தூண்டிடும் அவரது வார்த்தைகள் அண்டசராசரத்தையே ஆட்டம் காண வைத்தது. பருவகால மாற்றத்திற்கான காரணத்தை அவரிடம் அவரது அற்புத போதனைகளில் தேடாமல் நாம் வேறெங்கு தேடுவோம்?

சூரியனிலிருந்து பூமிக்குக் கிடைக்கும் வெப்பம் எப்பொழுது ஒரே போலத்தான் இருந்துவருகிறது. ஆனால் குறிப்பிட்ட சிலகாலங்களில் பூமியில் வெப்பம் அதிகரிக்கின்றது; அதேபோல வெப்பம் குறைந்து குளிராகவும் இருக்கிறது. சூரியன் அவ்வப்பொழுது கூடுதலாகவோ அல்லது குறைத்தோ வெப்பத்தை வெளியிடுவதில்லை; அல்லாஹ் அதற்கு அப்படி எந்தவிதமானக் கட்டளையையும் பிறப்பிக்கவில்லை எனும் பொழுது அதிகப்படியான வெப்பமும் குளிரும் எங்கிருந்து வருகிறது என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். 

பருவகால மாற்றங்கள் எதனால் நிகழ்கிறது?

ஸஹீஹ் புகாரி 537
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இறைவா! என்னுடைய ஒரு பகுதி, மறுபகுதியைச் சாப்பிட்டுவிட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் முஸ்லிம் 1088
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வெப்பம் ஏற்படும்போது வெப்பம் தணியும்வரை தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சு காரணமாகவே உண்டாகிறது" என்று கூறிவிட்டு, "நரகம் தனது இறைவனிடம் (மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு) முறையிட்டது. அதற்கு இறைவன் ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக்கொள்ள அனுமதித்தான்" என்றும் குறிப்பிட்டார்கள்.

நரகம் விடும் பெரும்மூச்சுக் காற்றின் காரணமாகவே பூமியில் பருவகால மாற்றங்கள் ஏற்படுகிறது என்ற மிகப் பெரும் அறிவியல் உண்மையை இப்பொழுது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது அல்லாஹ் தனது தூதருக்கு அறிவித்துக் கொடுத்தது. எந்த அறிவியல் புத்தகத்தில் தேடினாலும் கிடைக்காத அற்புத விளக்கம்.

மாஷா அல்லாஹ்!

மூச்சுவிடுவதற்கு அனுமதி கிடைக்கவில்லையெனில் நரகம் மூச்சு திணறி இறந்துவிடும் என்பதை அறிந்த அல்லாஹ் அதற்கு அவ்வாறான ஒரு சிறப்புச் சலுகையை வழங்கியிருக்கிறான். இதிலிருந்து அல்லாஹ்வின் அளவற்ற கருணையையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

மாஷா அல்லாஹ்!

என்ன ஒரு அற்புதமான விளக்கம்! பாமரர்களுக்கும் புரியும் எளிய விளக்கம்!

ஆனால் அல்லாஹ் நமது பொண்ணுமணிக்கு கற்பித்துக் கொடுத்த அறிய பொக்கிஷங்களை அழிப்பதற்கென்றே இந்த காஃபிர் சைத்தான்கள் அறிவியல்(!) என்ற பெயரில் கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டிருக்கின்றனர். அவர்கள் எப்படியெல்லம் இட்டுக்கட்டி அப்பாவி மக்களை அறியாமையில் தள்ளுகிறார்கள் என்பதையும் கவனிப்போம்.

நாம் வசிக்கும் இந்த பூமி, ஒரு நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறதாகவும், அது தன் அச்சில் கிட்டத்தட்ட 23½ பாகைகள் சாய்ந்திருக்கிறதென்றும் அபாண்டமான ஒரு பொய்யை துவக்கப்பள்ளியில் கற்பிக்கிறார்கள்.



காஃபிர்களின் பொய்(!) இத்துடன் முடிவதில்லை, புவியின் தனது அச்சில் சாய்ந்திருப்பதால் சூரியனிலிருந்து ஒளிக்கதிர்கள் பூமியின் மீது நேராக விழும் பொழுது வெப்பம் அதிகமாகவும், சாய்வாக விழும் பொழுது வெப்பம் குறைவாகவும் இருக்குமாம். பருவகால மாற்றத்திற்காக தாங்கள் கூறும் பொய்க்(!) காரணத்தை படம் வரைந்து விரிவாக விளக்குகின்றனர்.




காஃபிர்களின் இந்த விளக்கம் பொய்யானது!

ஏன் பொய்யாகிறது?

காஃபிர்கள் தங்களது விளக்கத்திற்கு ஆதரவாக ஒரு குர்ஆன் வசனத்தையோ அல்லது பலவீனமான ஒரு ஹதீஸைக் கூட காண்பித்ததில்லை; அவர்களால் காண்பிக்கவும் இயலாது. அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்குக் கற்பித்துத் தராத எந்த ஒரு விஷயமும் பொய்தான்! இஸ்லாமியப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு,  காஃபிர்கள் கூறும் அறிவியலைக் கற்பிக்க வேண்டிய இழிநிலையில் இருக்கின்றனர். காஃபிகள் நிர்வகிக்கும் பள்ளிக்கூடங்களில் வேறுவழியில்லாமல் கற்றுக் கொள்வதைக் கூட மன்னித்துவிடலாம்

முஃமின்களின்  நிர்வாகத்தின் கீழிலிருக்கும் பள்ளிக்கூடங்களிலும் இதே கொடுமைதான். இதை எப்படி மன்னிப்பது?

அறிவியல் என்ற பெயரில் காஃபிர்கள் கூறுவதை நம்பி, அதைக் குர்ஆனுக்குள் நுழைத்து தங்களது செயலுக்கு நியாயம் தேடும் பெயர்தாங்கி முஸ்லீம்களை எப்படி மன்னிக்க முடியும்?

நாம் எத்தகைய காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதை முஃமின்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அல்லாஹ்வும் அவனது ரஸூலும் கூறிய உன்னத போதனைகளை சிறுகச் சிறுக அழித்து, இஸ்லாமை அடியோடு அழிக்க  யூதர்கள் செய்யும் சதித்திட்டம்தான் இவைகள்!

நேரான கதிர்களாம் கடுமையான வெப்பமாம்!  கடுமையான வெப்பத்தைக் கொடுப்பது சூரியனுக்குக் கடமையாக்கப்படவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்!  அல்லாஹ்விற்கு ஸுஜூது செய்வதற்காக(22:18), நிழலுக்கு ஆதாரமாக (25:45), இரவு பகல் வேறுபாட்டையும், காலத்தையும் அறிந்து கொள்வதற்காக(6:96) பிரகாசமான (10:05) விளக்காக (25:61, 71:16, 78:13) இருப்பதற்காவே சூரியனைப் படைத்திருக்கிறான். இத்தனை செய்திகளைக் கூறும் அல்லாஹ்விற்கும், கண்மணி நாயகம் ரஸூல் ஸல்லல்லாஹூ அலைவலஸல்லம் அவர்களுக்கும், கடுமையான வெப்பமும் குளிரும் பூமியில் எதனால் உண்டாகிறதென்பது தெரியாதா?

சூரியனை அல்லாஹ் படைத்தானா? இல்லை இந்த காஃபிர்களும், பெயர் தாங்கி முஸ்லீம்களும் படைத்தார்களா?

சூரியனின் காரணமாகத்தான் பூமியில் கடுமையான வெப்பமும், கடுமையான குளிரும் உண்டாகிறதென்பதற்கு சான்றாக, அறிவியல் என்ற பெயரில் இட்டுக்கட்டும் காஃபிர்களும் அவர்களது கருத்திற்கு வால் பிடிக்கும் பெயர்தாங்கி முஸ்லீம்களாலும் ஒரு குர்ஆன் வசனத்தைக் கூட காண்பிக்க முடியாது! ஹதீஸ்களிலும் காண்பிக்க முடியாது! நரகம் விடும் மூச்சுக் காற்றினால்தான் கோடை காலத்தில் நாம் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நாம் உணரும் கடும் குளிரும் உண்டாகிறதென்பதை இதைவிட எப்படி இந்த காஃபிர்களுக்கு விளக்குவது? அதுமட்டுமல்ல நரகத்தின் கடுமையான வெப்பத்தினால்தான் மனிதர்களுக்கு காய்ச்சல் உண்டாகிறதென்கிற(புகாரி 3262,3263,3264) மருத்துவ உண்மையை இந்த பெயர்தாங்கிகள் என்று உணரப் போகிறார்களோ?

இந்த சூரியன் நாளை கியாமத்து நாளில் என்னவாகப் போகிறது தெரியுமா?

குர்ஆன் 81:1
சூரியன் சுருட்டப்படும் போது.

சூரியனை எப்படிச் சுருட்ட முடியும்? சுருட்டுவதற்கு அதென்ன பத்தமடை பாயா? என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றலாம். காஃபிர்களின் அறிவியல் போதனைகள் உங்கள் மனதில் பதிந்திருப்பதே இதற்குக் காரணம்.

சூரியனை ஏன் சுருட்ட முடியாது?

வட்ட வடிவிலிருக்கும் தோசை, சப்பாத்தி, பூரி போன்றவைகளை சுருட்டி வயிற்றுக்குள் தள்ளி ஏப்பம் விடுவதில்லையா? அதைபோல அல்லாஹ் கியாமத்து நாளில் சூரியனைச் சுருட்டிவிடுவான்.  

கோள வடிவிலிருக்கும் ஒரு பொருளை எப்படிச் சுருட்ட முடியும் என்பதுதானே உங்கள் கேள்வி?  சூரியன் கோளவடிவில் இருப்பதாகச் சொல்வதற்கு குர்ஆன் ஹதீஸ்களில் எந்த ஆதரமும் கிடையாது. நான் முன்பே கூறியதைப் போல் குர்ஆன்-ஹதீஸீல் சொல்லப்படாத, அல்லாஹ்வும்-ரஸூலும் நமக்குக் கற்பித்துத் தராத ஒரு செய்தியை எப்படி ஏற்க முடியும்?

குர்ஆனிலும் ஹதீஸ்களில் சொல்லப்படாத விஷயங்களே இல்லையென்பதை, பாவம் இந்த காஃபிர்கள் எப்படி அறிவார்கள்?

அவர்களுக்கு நல்ல அறிவை வழங்க அல்லாஹ்விடம் துஆச் செய்வோம்!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ!



மௌலான மௌலவி பாஸில் பாகவி சிராஜி ரஷாதி தாவூதி இம்தாதி தஜ்ஜால்.

Saturday, 17 January 2015

ஆதாம் படைக்கப்பட்டது எவ்வாறு?

விவாதம் : சட்டம் Vs தஜ்ஜால்



முகநூலில் எனக்கும் உண்மைக்குரல் என்ற இஸ்லாமியருக்கும் ஆதாமின் படைப்பு தொடர்பாக ஒரு விவாதம் நடைபெற்றது. நம்மைப் பொறுத்தவரை அந்த விவாதம் முற்றுப் பெற்றுவிட்டது. ஆனால் முதலில் அனானிமஸாக வந்த நண்பர் சட்டம் //Residue of clay as a evidence packed as your brain. Argument has no result . One who knows everything doesn't know anything. // என்கிறார். மேலும் குர்ஆனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விவாதிப்பதென்றால் தான் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார். எனவே அந்த விவாதம் மீண்டும் தனிப்பதிவாக பின்னூட்டத்தில் தொடர்கிறது. விரும்புபவர்கள் தங்களது கருத்துக்களை பதிவுசெய்யலாம்.  ஆனால் நண்பர் சட்டம் அவர்களில் யாருக்கு பதிலளிக்க விரும்புகிறாரோ அவருக்கு மட்டும் பதிலளிக்கலாம். அது அவருடைய சுதந்திரம்.

 

 

ஒருமையில் விளிப்பது, தனிநபர் தாக்குதல் செய்வது, தலைப்பை விட்டு விலகுவது கூடாது. 

 

 

பதிலளிக்க கால அவகாசம் போன்றவைகளை வரையறுக்க விரும்பினால் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


Wednesday, 14 January 2015

விவாதம் : உண்மைக் குரல் Vs தஜ்ஜால் அழிப்பவன்

கடந்த மாதம், உண்மைக் குரல் என்ற இஸ்லாமியர் மனிதனின் படைப்பின் துவக்கத்தில் குர்ஆன் கூறும் அறிவியலைப்பற்றி, நாத்தீகத்தின் மறுபக்கம் என்ற இன்னொரு இஸ்லாமியர் எழுதியிருந்த  ஒரு கட்டுரையை முகநூலில்  பகிர்ந்திருந்தார். குர்ஆன் எப்பொழுதுமே அறிவியலுடன் முரண்படுவது நாம் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் அவர் எழுதியிருந்தது, குர்ஆனுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களின் அடிப்படை நம்பிக்கைக்கு எதிராகவும் இருந்தது. இதைப் படித்த பிறகு ஒரு உண்மையான முஃமினான என்னால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? இதைப்பற்றி நீங்கள் தனியாக, ஒரு ஓரத்தில் அமர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்! பொங்கியெழுந்து எனது மறுப்பைக் கூறினேன்.

என்ன ஒரு ஆச்சரியம் விவாதம் ஆரம்பமாகிவிட்டது!

மாஷா அல்லாஹ்!




முதலில் உண்மைக் குரல் அவர்கள் பதிந்திருந்த கட்டுரை

மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டானா?? பகுதி-2 (குர்ஆன் விளக்கம்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு .

சகோதரர்களே! நாம் ஏற்கனவே மனிதனில் உடலில் உள்ள மூலக்கூறுகளும் சத்துக்களும், அதன் தனிமங்களும் மண்ணிலிருந்து கிடைப்பவை அதனால் மனிதன் மண்ணிலிருந்து தான் படைக்கப்பட்டவன் என்பதை அறிவியல் பூர்வமாக பார்த்தோம் ...இதோ அதன் லின்க்....
https://m.facebook.com/story.php…

இன்ஷா அல்லாஹ் மனிதன் மண்ணால் படைக்கப்பட்டானா என்பதை குர்ஆனிலிருந்தும்.. மேலும் அதன் விளக்கங்களை இவர்கள் எப்படி புரிந்து வைத்துள்ளனர் என்பதையும் அதன் உண்மை விளக்கத்தையும் பார்ப்போம்

»குர்ஆன் மனிதனை மண்ணைக்கொண்டு படைத்ததாக சொல்கிறது.

இதை. இந்த போலி பகுத்தறிவாளர்கள் எப்படி விளங்கி வைத்துள்ளனர் என்றால் ... மண்ணை எடுத்து அதில் ஒரு பொம்மை செய்து அந்த பொம்மையே ஆதம் .... அப்போ அந்த ஆதமுக்கு எலும்பு தசைகள் , எங்கிருந்து வந்தது குர்ஆன் அது பற்றி கூறவில்லையே என்றும் சில அதிமேதாவிகள் கூறுகின்றனர் கேட்டால் விவாதமாம் ...

இந்த மாறி செய்முறை விளக்கம் குரானில் இல்லை ...

»சரி குர்ஆன் என்ன கூறுகிறது

23:12. நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்

23:13. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்

மனிதனை களிமண்ணைக்கொண்டு பொம்மையாக செய்யவில்லை அதிலிருந்து எடுக்கப்பட்ட சத்துக்களைக் கொண்டு இந்திரியத்துளி அதாவது உயிரணுவை உண்டுபண்ணினான் .. இதுவே இந்த வசனங்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறது

இன்னும் உயிரணு அதாவது இந்திரியத்துளி இதன் தனிமங்களையும் பார்ப்போம் ..

ஊவைசi யுஉனை (சிட்டிரிக் அமிலம்)
2. ஊhழடநளவநசழட (கொலஸ்டிரால்)
3. ணுinஉ Phழளிhயவநள (ஜின்க் பாஸ்ஃபேட்)
4. யுஉனை Phழளிhயவநள (ஆசிட் பாஸ்ஃபேட்)
5. டீiஉழசடிழயெவநள (பைகார்பனேட்)
6. ர்லயடழசரniஉ யுஉனை (ஹைலோரினிக் அமிலம்)
இந்த வகைத் திரவம் சுமார் 20மூ வீதம் வரை இருக்கும்.

1. யுனெசழபநn (ஆன்ரோஜன்)
2. நுளவசழபநn (ஈஸ்ட்ரோஜன்)
3. புடரவயஅiஉ யுஉனை (குளுட்டாமிக் ஆசிட்)
4. ஐழெளவைழட (இனோசிட்டால்)
5. ஐnhiடிin(இன்ஹிபின்)
6. Pசழவநin (புரதம்)
இந்த வகைத் திரவங்கள் உயிரணுக்கள் உயிர் வாழ்வதற்கும் பாதுகாப்பாக கற்பறைக்கு செல்வதற்கும் துணை புரிகிறது. இந்த உயிரணுக்கள், திரவங்கள் சேர்ந்த மொத்தத்திற்கு பெயர்தான் விந்து அல்லது இந்திரியம் என்று கூறுகிறோம்

»ஆக முதல் நிலை ஈரக்களிமண்
இரண்டாம் நிலை அதிலிருந்து எடுக்கப்பட்ட மூலக்கூறுகளும் சத்துக்களும்

மூன்றாம் நிலை இந்திரியத்துளி

» இந்த இந்திரியத்துளியானது ஆணின் முதுகுத்தண்டிற்கும் ,விலா எழும்புகளுக்கிடையில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது

86:5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.

86:7. முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
86:7. முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.

» இந்த இந்திரியத்துளியே மனிதனாக மாறுகிறது

»23:14. பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்

» இன்று பிறக்கும் அனைத்து மனித இனமும் இந்த முறையில்தான் பிறக்கிறது இதை அறிவியலும் மறுக்கவில்லை ... ஆனால் அறிவியல் தெரியாத போலி பகுத்தறிவாளர்கள் மனித படைப்பை தவறாக புரிந்துகொண்டு மறுத்து வருகின்றனர் .

____________*********_____*******______

இதிலிருந்தும் இவர்கள் குதற்கத்தை விளைவிப்பார்கள் .. அது எப்படி

»சரி எல்லாம் ஓகே அந்த விந்தனு பெண்ணின் கற்பப்பையை அடையும்போதுதான் அது கருவாக மாறி மனித உருவெடுக்கிறது அப்போ முதலில் படைக்கப்பட்டது ஏவாளா ?? குர்ஆன் ஆதமைத்தான் முதலில் படைத்ததாக கூறுகிறது அப்போ குர்ஆன் தவறு ??? இப்படியெல்லாம் சொல்லுவாங்க ..

""""""'23:13. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்"""

இந்திரியத்துளியை பாதுகாப்பாக வைத்தோம் இதிலிருந்து நாம் இலகுவாக புரிந்துகொள்ளலாம் ... வெட்டவெளிச்சத்தில் வைத்தோம் என்று இல்லை ...

ஆதம் படைப்பிற்கு பின்னரே ஏவாள் படைக்கப்படுகிறார் பெண்ணிற்கான அமைப்பும் வழங்கப்படிகிறது ...

இப்படியே ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை தீர்க்கமாக வழங்கிவிட்டான் ..

20:50. “ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன்” என்று கூறினார்.

இவர்களின் அடுத்த குழப்பம்

22:5. மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.

இந்த வசனத்தில் களிமண்ண்லிருந்து என்று சொல்லிவிட்டு ஏன் மேற்கூறிய வசனங்களில் களிமண்ணின் சத்துக்களில் என்று கூறுகிறது ?/

ஆக குர்ஆன் முரண்படுகிறது எனவே குர்ஆன் பொய் ???

இப்படியெல்லாம் இவங்களும் குழப்பி அந்த குழப்பத்தை மற்றவர் மேல் திணிக்கும் கூட்டமும் உண்டு ...

இதற்கு பதில் இந்த வசனத்திலேயே உள்ளது .... நுனிப்புனல் மேய்ந்துவிட்டு கத்துபவருக்கு எதுவும் புரியாது

""''''
முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும"""''

மண்ணிலிருந்தும் என்றால் என்ன?? மண்ணைக்கொண்டு பொம்மை செய்ததாக அற்த்தம் கொள்வதா ???

மண்ணிலிருந்தும் என்று அந்த வாக்கியத்தை தொடர்கிறான் அடுத்தடுத்த நிலைகளை விவரிக்கப்படுகிறது ....


தஜ்ஜால் அழிப்பவன்:
//குர்ஆன் மனிதனை மண்ணைக்கொண்டு படைத்ததாக சொல்கிறது.
இதை. இந்த போலி பகுத்தறிவாளர்கள் எப்படி விளங்கி வைத்துள்ளனர் என்றால் ...
மண்ணை எடுத்து அதில் ஒரு பொம்மை செய்து அந்த பொம்மையே ஆதம் .... அப்போ அந்த ஆதமுக்கு எலும்பு தசைகள் , எங்கிருந்து வந்தது குர்ஆன் அது பற்றி கூறவில்லையே என்றும் சில அதிமேதாவிகள் கூறுகின்றனர் கேட்டால் விவாதமாம் ...
இந்த மாறி செய்முறை விளக்கம் குரானில் இல்லை ...
»சரி குர்ஆன் என்ன கூறுகிறது
23:12. நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்
23:13. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்
மனிதனை களிமண்ணைக்கொண்டு பொம்மையாக செய்யவில்லை அதிலிருந்து எடுக்கப்பட்ட சத்துக்களைக் கொண்டு இந்திரியத்துளி அதாவது உயிரணுவை உண்டுபண்ணினான் .. இதுவே இந்த வசனங்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறது//

குர்ஆனையும் ஹதீஸையும் ஒழுங்காகப் படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது!

குர்ஆன் 15:28. "சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைத்து, நான் மனிதனைப் படைக்கவுள்ளேன்'' என்று வானவர்களுக்கு உமது இறைவன் கூறியதை நினைவூட்டுவீராக!
குர்ஆன் 38:75. "எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' என்று (இறைவன்) கேட்டான்.

முஸ்லீம் 5089
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை), அவர்களைச் சொர்க்கத்தில் (களிமண்ணால்) படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத (கட்டுப்பாடற்ற) படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது'' என அவன் அறிந்துகொண்டான். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் தனது இரண்டு கைகளால் எதைப் படைத்தான்?

Rajeevan Kuganathan:
ஆக முதல் நிலை ஈரக்களிமண் இரண்டாம் நிலை அதிலிருந்து எடுக்கப்பட்ட மூலக்கூறுகளும் சத்துக்களும்மூன்றாம் நிலை இந்திரியத்துளி இந்த இந்திரியத்துளியானது ஆணின் முதுகுத்தண்டிற்கும் ,விலா எழும்புகளுக்கிடையில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது // Did he created the Spine and other bones before creating the Sprms ?

உண்மைக் குரல்:
15:28. (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்: “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்” என்றும்,///சேற்றைக்கொண்டு பொம்மையாக உருவாக்கினேன் என்று தாங்கள் விளங்கினால் அது உமது கோலாறு

38:75. “இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான்.//////ஒரு படைப்பாளன் தன்னுடைய படைப்பை தன் கரங்களால் படைத்தேன் என்றுதான் கூறமுடியும் ..... குர்ஆன் ஹதீஸ்களை தெளிவாக விளங்கிக்கொள்ள முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

படைப்பின் விளக்கத்தை தெளிவாக பதிவிட்டுள்ளேன் . .... படித்து தெரிந்துகொள்ளுங்கள்

நுனிப்புல் மேய்பவருக்கும் குறை கூறும் நோக்கத்துடனே அனைத்தையும் பார்ப்பவருக்கும் விளங்குவது கடினமே

Rajeevan Kuganathan:
Still I couldn't understand the procedure. Still I don't understand why you eliminate the Oxygen, Hydrogen. Mainly Silicon, It is the main component in making the sand, it should at least be there in considerable amount in human body. Lets assume your explanations are correct. How can you say he is not made out of Stones instead of Clay? The thing is you already have a statement, and you take whatever the evidence support the statement and leave the other evidences against it. It is not the right way to prove.

உண்மைக் குரல்:
Rajeevan Kuganathan bro first u have to understand one main thing ... quran is not a book OF explaination how create , what are the components are using ... these are not necessary .....
Just a explain major thing ... if we want to know ... quran said think and analyze then only you get the answer

Rajeevan Kuganathan:
quran is not a book OF explaination how create , what are the components are using ... these are not necessary . // Yes, If quran says god made man out of water, You will argue that water contains all minerals same as sand because if you take sea water you can find all minerals you want. This is not an acceptable way to prove your argument.

உண்மைக் குரல்:
This is the only way .... Think and analyze u want ... otherwise we can't get anything ........ I gave these explanation .... but you need more . If this is not enough for you that's not my mistake ... you don't have enough capability to understand ... that's your problem.

உதாரணமாக ... சிறு குழந்தைகளுக்கு கையைபிடித்து நடக்க வைப்பர். ஆனால் அதுவே வளர்ந்துவிட்டால் மீண்டும் கையை பிடித்து நடக்க வைத்தால்தான் நடப்பேன் என்று ஒருவர் வாதிட்டால் .... அது அவர் பிரச்சினை


Rajeevan Kuganathan:
you don't have enough capability to understand ... that's your problem// Yes, It is my problem. agreed.


தஜ்ஜால் அழிப்பவன்:
 உண்மைக் குரல் , //ஒரு படைப்பாளன் தன்னுடைய படைப்பை தன் கரங்களால் படைத்தேன் என்றுதான் கூறமுடியும்// அதைத்தான் நானும் கேட்கிறேன். அல்லாஹ் தனது கைகளால் எதைப்படைத்தான்?
//நுனிப்புல் மேய்பவருக்கும் குறை கூறும் நோக்கத்துடனே அனைத்தையும் பார்ப்பவருக்கும் விளங்குவது கடினமே// நீங்க ரொம்ப மோசம்! இதை விவாவத்தின் இறுதில் சொல்வதுதான் இஸ்லாமிய மரபு. இப்படி முதலிலேயே சொல்லக் கூடாது.

உண்மைக் குரல்:
//நுனிப்புல் மேய்பவருக்கும் குறை கூறும் நோக்கத்துடனே அனைத்தையும் பார்ப்பவருக்கும் விளங்குவது கடினமே// நீங்க ரொம்ப மோசம்! இதை விவாவத்தின் இறுதில் சொல்வதுதான் இஸ்லாமிய மரபு. இப்படி முதலிலேயே சொல்லக் கூடாது.////என் பதிவிலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளேன் படிக்கவும்

தஜ்ஜால் அழிப்பவன்:
//என் பதிவிலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளேன் படிக்கவும்//உங்கள் பதிவு தெளிவில்லை. அவசர கதியில் அதைக் கடந்திருக்கிறீர்கள்! அதனால்தான் //அல்லாஹ் தனது கைகளால் எதைப்படைத்தான்?// என்று கேட்டிருக்கிறேன்.
//பகுத்தறிவாளர்கள் எப்படி விளங்கி வைத்துள்ளனர் என்றால் ...// என்று நீங்களே கற்பனையாகக் கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். இப்படி விளங்கிய பகுத்தறிவாளர் யாரோ? ஆக உங்களது பதிவு துவக்கத்திலேயே அபாண்டமான பொய்யுடன்தான் துவங்குகிறது!
உண்மையில் ஆதமை களிமண் பொம்மையாகச் செய்து அதில் ஊதியதாகக் கூறுவது உங்களது மத நூல்கள்தான். அதற்காகத்தான் ஒரு ஹதீஸைக் கொடுத்தேன். வசதியாக அதை கவனிக்காமல் விட்டுருக்கிறீர்கள்!

உண்மைக் குரல்:
5089. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களைச் சொர்க்கத்தில் (களிமண்ணால்) படைத்து, "'''''''''''''தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். ""'''''''''''''''''''வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது ”தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத (கட்டுப்பாடற்ற) படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது” என அவன் அறிந்துகொண்டான். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும் //////களிமண்ணில் பொம்மை செய்து விட்டதாக தாங்கள் புரிந்துகொண்டால் நான் என்ன செய்ய ....... படைத்து அதை கண்டுகொள்ளாமல் அதன் போக்கில் விட்டுவிட்டான் .... அதாவது அதற்கு என்று எதையும் கற்றுக்கொடுக்காமல் எந்த நிர்ணமுமில்லாமல் விட்டுவிட்டான் ..... அவர்கள் நிர்வாணமாக தாங்கள் யார் என்று தெரியாத படைப்புகளாக உலாவிய நிலையில் இருந்தனர் என்றே விளங்கலாம்.
பிற்காலத்தில் இறைவன் அந்த படைப்பிற்கு சில விஷியங்களை கற்றுக்கொடுத்து .... அதற்கு சிரம் பணிய சொல்கிறான் ... சைத்தான் அதை மறுக்கிறான் .......

தஜ்ஜால் அழிப்பவன்:
//சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். ""'''''''''''''''''''வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது ”தன்னைத்தானே
கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத (கட்டுப்பாடற்ற) படைப்பாகவே அது
படைக்கப்பட்டுள்ளது” என அவன் அறிந்துகொண்டான். // இதற்கு என்ன பொருள்?
அல்லாஹ் தனது கைகளால் எதைப்படைத்தான்?

உண்மைக் குரல்:
மேலும் இந்த ஹதீஸ் மூலம் விளங்கிக்கொள்ள வேண்டிய விஷியம் மனிதன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத படைப்பாகவே உள்ளான் என்பதே

தஜ்ஜால் அழிப்பவன்:
//வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது // இது என்ன?
அல்லாஹ் தனது கைகளால் எதைப்படைத்தான்?

உண்மைக் குரல்:
//வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது // இது என்ன?////மனிதனுக்கு வயிறு இல்லையா என்ன கேள்வி இது??
அல்லாஹ் தனது கைகளால் எதைப்படைத்தான்?//////மீண்டும் சொல்கிறேன் கரங்களால் பொம்மை செய்து படைக்கவில்லை ,,கரங்களால் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சத்திலிருந்து படைத்தான்.

தஜ்ஜால் அழிப்பவன்:
//கரங்களால் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சத்திலிருந்து படைத்தான்/// மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சத்திலிருந்து எதை முதலில் படைத்தான்? முழுமனிதனாக உருப்பெற்றதாக நீங்கள் கூறமுயற்சிக்கும் வரிசையைச் சொல்லவும்.

உண்மைக் குரல்:
வரிசைப்படிதான் பதிந்துள்ளேன்

தஜ்ஜால் அழிப்பவன்:
மண்ணிலிருந்து முதலில் விந்து ஓகேவா?
உண்மைக் குரல் --????

Prakash Surya S:
என்ன சொல்ல வரீங்க. விந்தை படைத்து, அதை ஏதோ ஒரு கருப்பையில் வைத்து ஆதம் குழந்தையாக பிறப்பிக்கப்பட்டான் என்கிறீர்களா? இதுவரை எங்குமே ஆதம் குழந்தையாக பிறந்ததாக யாரும் சொல்லி நான் கேள்விபட்டதில்லை.

உண்மைக் குரல்:
என்ன சொல்ல வரீங்க. விந்தை படைத்து, அதை ஏதோ ஒரு கருப்பையில் வைத்து ஆதம் குழந்தையாக பிறப்பிக்கப்பட்டான் என்கிறீர்களா? இதுவரை எங்குமே ஆதம் குழந்தையாக பிறந்ததாக யாரும் சொல்லி நான் கேள்விபட்டதில்லை./////அது எங்கள் தவறில்லையே

தஜ்ஜால் அழிப்பவன்:
மண்ணிலிருந்து முதலில் விந்து ஓகேவா?

உண்மைக் குரல்:
மண்ணிலிருந்து முதலில் விந்து ஓகேவா?////// கேட்க வேண்டிய கேள்வியை நேரடியாக கேட்கலாம் ..... சுத்தி வலச்சு பேசவேண்டாம்

தஜ்ஜால் அழிப்பவன்:
பதில் மட்டும் சொல்லவும்!

Prakash Surya S:
ஓ. அப்ப ஆதம் குழந்தையாதான் பிறந்தாரா!!!! அடிச்சாங்க பார்யா அந்தர்பல்டி. நடத்துங்க.

உண்மைக் குரல்:
//பதில் மட்டும் சொல்லவும்!////பதிவே பதில்தான்

தஜ்ஜால் அழிப்பவன்:
//கேட்க வேண்டிய கேள்வியை நேரடியாக கேட்கலாம் .// நேரடியாகக் கேட்காமல் பக்கவாட்டிலா கேட்டிருக்கிறேன்?

உண்மைக் குரல்:
//கேட்க வேண்டிய கேள்வியை நேரடியாக கேட்கலாம் .// நேரடியாகக் கேட்காமல் பக்கவாட்டிலா கேட்டிருக்கிறேன்?/////பதிவு முழுமையாக படிக்கவும்

தஜ்ஜால் அழிப்பவன்:
//பதிவே பதில்தான்// பதிலைச் சொல்லுங்க உண்மைக் குரல்!!

உண்மைக் குரல்:
//பதிவே பதில்தான்// பதிலைச் சொல்லுங்க உண்மைக் குரல்!!///////சிறுபிள்ளைத்தனமாக பேசாமல் பதிவை படியும் அதிலே கேள்வியும் உண்டு பதிலும் உண்டு

தஜ்ஜால் அழிப்பவன்:
மண்ணிலிருந்து முதலில் விந்து? yes or No

உண்மைக் குரல்:
மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட மூலக்கூறுகள் அடங்கிய விந்து .....

தஜ்ஜால் அழிப்பவன்:
//மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட மூலக்கூறுகள் அடங்கிய விந்து .....// விந்து எப்படி மனிதனாகியது?

Prakash Surya S:
செயற்குழு கூடி முடிவெடுத்தாச்சா? இனி எல்லா விவாதத்திலேயும் ஆதம் குழந்தையாதான் பிறந்தார். நாத்திகர்கள்தான் உண்மைய திரிச்சிட்டாங்கனு சொல்லப்போறாங்க.

உண்மைக் குரல்:
கருவிகள் வளர்ச்சி பற்றி படியும் .....////
23:14. பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.

இந்த குர்ஆன் வசனத்தை நவீன கருவியல் வளர்ச்சி பாடத்துடன் ஒப்பிட்டு பார்த்துவிட்டு உம் கேள்வியை கேட்கலாம்.

தஜ்ஜால் அழிப்பவன்:
//கருவிகள் வளர்ச்சி பற்றி படியும் .....//// விந்து எப்படிக் கருவானது?
//இந்த குர்ஆன் வசனத்தை நவீன கருவியல் வளர்ச்சி பாடத்துடன் ஒப்பிட்டு பார்த்துவிட்டு உம் கேள்வியை கேட்கலாம்// முதலில் விந்து எப்படிக் கருவாகி ஆதமாக உருவெடுத்தது என்பதை விளக்குங்கள்!

உண்மைக் குரல்:
விந்தனு , கருமுட்டையை அடையும்போதே அது கருவாக மாறும் என்பது அனைவரும் அறிந்ததே ..... இதில் என்ன உமக்கு பிரச்சனை

தஜ்ஜால் அழிப்பவன்:
//விந்தனு , கருமுட்டையை அடையும்போதே அது கருவாக மாறும் என்பது அனைவரும் அதிந்ததே ..... இதில் என்ன உமக்கு பிரச்சனை// இப்பொழுது புதிதாக கருமுட்டை எங்கிருந்து வந்தது?
நினைவிருக்கட்டும் நாம் ஆதமைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்!

உண்மைக் குரல்:
see 22:5
எத்தனை முறை சொல்வது ....... ஒருவர் பூசனிக்காய் அல்வா செய்தேன் என்று சொன்னால்.... பூசனிக்காய் மட்டும்தான் இருக்கவேண்டும் எனறு சொல்வது மடத்தனம் ??/ அதே போல் அல்வா செய்ய நெருப்பு தேவை என்பதை தனியாக சொல்லவேண்டிய அவசியம் உண்டா என்ன??
முன்னர் தீக்குச்சிதானே இருந்தது புதிதாக நெருப்பு எங்கிருந்து வந்தது என்று நீர் கேட்டால் .....??????

தஜ்ஜால் அழிப்பவன்:
22:5 -ல் ஒன்றுமில்லை!

உண்மைக் குரல்:
22:5. மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், ""''''''''''பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில்''''''''''''''''''''''' தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.

தஜ்ஜால் அழிப்பவன்:
///எத்தனை முறை சொல்வது ....... ஒருவர் பூசனிக்காய் அல்வா செய்தேன் என்று சொன்னால்.... பூசனிக்காய் மட்டும்தான் இருக்கவேண்டும் எனறு சொல்வது
மடத்தனம் ??/ //முன்னர் தீக்குச்சிதானே இருந்தது புதிதாக நெருப்பு எங்கிருந்து வந்தது என்று நீர் கேட்டால் .....??????// இந்த ஈரவெங்காயமெல்லாம் இங்கே வேண்டாம்.

உண்மைக் குரல்:
இந்த அலக் என்ற நிலையே கரு

தஜ்ஜால் அழிப்பவன்:
கருமுட்டை எங்கிருந்து வநதது?

உண்மைக் குரல்:
///த்தனை முறை சொல்வது ....... ஒருவர் பூசனிக்காய் அல்வா செய்தேன் என்று
சொன்னால்.... பூசனிக்காய் மட்டும்தான் இருக்கவேண்டும் எனறு சொல்வது
மடத்தனம் ??/ //முன்னர் தீக்குச்சிதானே இருந்தது புதிதாக நெருப்பு எங்கிருந்து வந்தது என்று நீர் கேட்டால் .....??????// இந்த ஈரவெங்காயமெல்லாம் இங்கே வேண்டாம்.////////இந்த ஈரவெங்காயத்தை தான் உரித்துக்கொழ்ண்டிருக்கிறீர்

தஜ்ஜால் அழிப்பவன்:
//இந்த அலக் என்ற நிலையே கரு// கருவைப்பற்றி பிறகு பார்க்கலாம்! கருமுட்டை எங்கிருந்து வந்தது?

உண்மைக் குரல்:
கருமுட்டை எங்கிருந்து வநதது?//////கருமுட்டை இல்லாமல் கரு உருவாகாது ..... இதற்குதான் சொன்னேன் தீக்குச்சிதானே இருந்தது நெருப்பு எங்கே ?????

தஜ்ஜால் அழிப்பவன்:
//கருமுட்டை எங்கிருந்து வநதது? //
//கருமுட்டை இல்லாமல் கரு உருவாகாது .....
இதற்குதான் சொன்னேன் தீக்குச்சிதானே இருந்தது நெருப்பு எங்கே ?????// அதைத்தான் நானும் கேட்கிறேன் கருமுட்டை எங்கிருந்து வந்தது?
//கருமுட்டை எங்கிருந்து வநதது?//////கருமுட்டை இல்லாமல் கரு உருவாகாது .....
இதற்குதான் சொன்னேன் தீக்குச்சிதானே இருந்தது நெருப்பு எங்கே ?????// அதைத்தான் நானும் கேட்கிறேன் கருமுட்டை எங்கிருந்து வந்தது?////////மறுபடியுமா. இது இல்லாமல் இது இல்லை எனும் போது அதை இலகுவாக விளங்கிக்கொள்வதை விட்டு ..... அதில் குழப்பம் தேடினால் ... குழப்பம் மட்டுமே மிஞ்சும்.

தஜ்ஜால் அழிப்பவன்
//மறுபடியுமா. இது இல்லாமல் இது இல்லை எனும் போது அதை இலகுவாக விளங்கிக்கொள்வதை விட்டு
..... அதில் குழப்பம் தேடினால் ... குழப்பம் மட்டுமே மிஞ்சும்// உண்மைக் குரல், நினைவிருக்கட்டும் நாம் ஆதமைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்! ஆதம் உருவாகக் கருமுட்டை எங்கிருந்து வந்தது?

உண்மைக் குரல்:
//மறுபடியுமா. இது இல்லாமல் இது இல்லை எனும் போது அதை இலகுவாக விளங்கிக்கொள்வதை விட்டு
..... அதில் குழப்பம் தேடினால் ... குழப்பம் மட்டுமே மிஞ்சும்// உண்மைக் குரல், நினைவிருக்கட்டும் நாம் ஆதமைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்! ஆதம் உருவாகக் கருமுட்டை எங்கிருந்து வந்தது!///////அது எனக்கு தெரியாது .... ஆனால் இத்தனையும் செய்தவருக்கு கருமுட்டை ஒரு விஷியமல்ல ....

உண்மைக் குரல்:  Sanofer Ali
(என்பவரை Tag செய்து உதவிக்கு அழைத்தார். ஏனோ அவர் வரவில்லை!)

தஜ்ஜால் அழிப்பவன்:
//அது எனக்கு தெரியாது .... /// இதைத் தெரியாமல் எதற்காக விவாதிக்க வந்தீர்?

உண்மைக் குரல்:
//அது எனக்கு தெரியாது .... /// இதைத் தெரியாமல் எதற்காக விவாதிக்க வந்தீர்?////////அதை தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை ..... சில விஷியங்கள் நம் அறிவுக்கு புலப்படாமல் போகலாம் ஆனால் அது இல்லை என்றாகாது

தஜ்ஜால் அழிப்பவன்:
//ஆனால் இத்தனையும் செய்தவருக்கு கருமுட்டை ஒரு விஷியமல்ல ..// இத்தனையும் செய்பவராக நீங்கள் கூறும் கடவுளுக்கு, ‘குன்’ என்றலே அது ஆகிவிடும் என்று பீற்றிக் கொள்பவருக்கு, களிமண்ணும் விந்தும் எதற்கு?

உண்மைக் குரல்:
//ஆனால் இத்தனையும் செய்தவருக்கு கருமுட்டை ஒரு விஷியமல்ல ..// இத்தனையும் செய்பவராக நீங்கள் கூறும் கடவுளுக்கு, ‘குன்’ என்றலே அது ஆகிவிடும் என்று பீற்றிக் கொள்பவருக்கு, களிமண்ணும் விந்தும் எதற்கு?////
20:50. “ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன்” என்று கூறினார்.

தஜ்ஜால் அழிப்பவன்:
//அதை தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை ..... சில விஷியங்கள் நம் அறிவுக்கு புலப்படாமல் போகலாம் ஆனால் அது இல்லை என்றாகாது// எதைச் சொன்னாலும் தலையாட்டிக் கொண்டிருக்க இது பள்ளிவாசல் பயான் அல்ல! விவாதக்களம்!

உண்மைக் குரல்:
ஒவ்வொன்றுக்கும் அதற்கான அமைப்பு இதுதான் என்று தீர்மானித்துவிட்டான் அது அப்படியே செயல்படுகிறது
//அதை தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை ..... சில விஷியங்கள் நம் அறிவுக்கு புலப்படாமல் போகலாம் ஆனால் அது இல்லை என்றாகாது// எதைச் சொன்னாலும் தலையாட்டிக் கொண்டிருக்க இது பள்ளிவாசல் பயான் அல்ல! விவாதக்களம்!/////தற்க்க ரீதியாக பதில் தேடினால் கிடைக்கும் ... ஆனால் குதற்கங்களுக்கு தலைகீழாக தொங்கினாலும் பதில் கிடைக்காது

தஜ்ஜால் அழிப்பவன்:
//ஒவ்வொன்றுக்கும் அதற்கான அமைப்பு இதுதான் என்று தீர்மானித்துவிட்டான் அது அப்படியே செயல்படுகிறது// அப்படியானால் ‘குன்’ என்பது வெத்துவேட்டா?

உண்மைக் குரல்:
//ஒவ்வொன்றுக்கும் அதற்கான அமைப்பு இதுதான் என்று தீர்மானித்துவிட்டான் அது அப்படியே செயல்படுகிறது// அப்படியானால் ‘குன்’ என்பது வெத்துவேட்டா?////குன் ஆகுக என்பது இல்லாவிட்டால் அதற்கான நிர்ணயத்தை எப்படி ஆக்க முடியும்

தஜ்ஜால் அழிப்பவன்:
//தற்க்க ரீதியாக பதில் தேடினால் கிடைக்கும் ... ஆனால் குதற்கங்களுக்கு தலைகீழாக தொங்கினாலும் பதில் கிடைக்காது// இதிலென்ன குதர்க்கம் உண்மைக் குரல்?
//இதை. இந்த போலி பகுத்தறிவாளர்கள் எப்படி விளங்கி வைத்துள்ளனர் என்றால் ...// என்று ஆரம்பித்தது யார்?

உண்மைக் குரல்:
//தற்க்க ரீதியாக பதில் தேடினால் கிடைக்கும் ... ஆனால் குதற்கங்களுக்கு தலைகீழாக தொங்கினாலும் பதில் கிடைக்காது// இதிலென்ன குதர்க்கம் உண்மைக் குரல்?////////// கருமுட்டையில்லாமல் கரு உருவாகாது என்பது தற்கம் .. அதை அப்படியே விளங்கினால் முடிந்தது .... ஆனால் அந்த கரு முட்டை எங்கிருந்து வந்தது என்பது மறைவான விஷியம் .. அதை யூகிப்பது குதற்கம் விடை கிடைக்காது
//இதை. இந்த போலி பகுத்தறிவாளர்கள் எப்படி விளங்கி வைத்துள்ளனர் என்றால் ...// என்று ஆரம்பித்தது யார்?//////////இதன் மூலம் தாங்கள் கூற வருவது.

தஜ்ஜால் அழிப்பவன்:
//ஆனால் அந்த கரு முட்டை எங்கிருந்து வந்தது என்பது மறைவான விஷியம் .. அதை யூகிப்பது குதற்கம் விடை கிடைக்காது// மறைனான விஷயங்களென்று நீங்கள் எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். அது உங்கள் தனிப்பட்ட உரிமை. அதை மற்றவர்களும் நம்பவேண்டுமென்று நினைப்பது மடத்தனம்!


உண்மைக் குரல்:
//ஆனால் அந்த கரு முட்டை எங்கிருந்து வந்தது என்பது மறைவான விஷியம் .. அதை யூகிப்பது குதற்கம் விடை கிடைக்காது// மறைனான விஷயங்களென்று நீங்கள் எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். அது உங்கள் தனிப்பட்ட உரிமை. அதை மற்றவர்களும் நம்பவேண்டுமென்று நினைப்பது மடத்தனம்!/////////சில விஷியங்களை நம்பினால்தான் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். .. இல்லாவிட்டால் சந்தேகத்திலேயே சாகவேண்டியதுதான்

உதாரணமாக ... என் தாய் தந்தை இணைந்ததால் நான் உருவானேன் என்ற நம்பிக்கை ..... அதையே கேள்விக்குறியாக்கினால் ????????

தஜ்ஜால் அழிப்பவன்:
//இதன் மூலம் தாங்கள் கூற வருவது..// இதைப்பற்றி முதலிலேயே கூறியிருக்கிறேன். பரவாயில்லை மறுபடியும் சொல்கிறேன். மனிதனைக் களி மண் பொம்மையாகப் படைத்து அவனுக்குள் அல்லாஹ் உயிரை ஊதியதாக இஸ்லாம் கூறுகிறதென்று கூறிய பகுத்தறிவாளர் யாரோ?

உண்மைக் குரல்:
//இதன் மூலம் தாங்கள் கூற வருவது..// இதைப்பற்றி முதலிலேயே கூறியிருக்கிறேன். பரவாயில்லை மறுமடியும் சொல்கிறேன். மனிதனைக் களி மண் பொம்மையாகப் படைத்து அவனுக்குள் அல்லாஹ் உயிரை ஊதியதாக இஸ்லாம் கூறுகிறதென்று கூறிய பகுத்தறிவாளர் யாரோ?///////உமர் இயற்கையாளன்

தஜ்ஜால் அழிப்பவன்:
உமர் இயற்கையாளன்--? அவருக்குமுன் எவருமே இப்படி சொல்லியதாக நீங்கள் கேள்விப்பட்டதே இல்லையா?
இப்ன் கதீர் வாசித்திருக்கிறீர்களா?

உண்மைக் குரல்:
உமர் இயற்கையாளன்--? அவருக்குமுன் எவருமே இப்படி சொல்லியதாக நீங்கள் கேள்விப்பட்டதே இல்லையா?//////அவர் பதிவை பார்த்துவிட்டுதான் இந்த பதிவை பதிந்தேன்

தஜ்ஜால் அழிப்பவன்:
தஃப்ஸீர் அல்தபரி வாசித்திருக்கிறீர்களா?

உண்மைக் குரல்:
இப்ன் கதீர் வாசித்திருக்கிறீர்களா?////// வாசித்திருக்கிறேன். தஃப்ஸீர் அல்தபரி வாசித்திருக்கிறீர்களா?/////அல்தபரி க்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை ... அவன் ஒரு பொய்யன் என்பதை நான் பதிவாகவே பதிந்துள்ளேன்

தஜ்ஜால் அழிப்பவன்:
உண்மைக் குரல், முதலில் இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ளவும் அதன் பிறகு மற்றவர்களை குறைகூறக் கிளம்பலாம்-- ஒகே?

//வாசித்திருக்கிறேன்// என்ன சொல்கிறது?

உண்மைக் குரல்:
///உண்மைக் குரல், முதலில் இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ளவும் அதன் பிறகு மற்றவர்களை குறைகூறக் கிளம்பலாம்-- ஒகே?///////படிக்காமல் இங்கு வரவில்லை ... என்னை இதற்கு முன் இப்படி யாரும் சொன்னதும் இல்லை.  //வாசித்திருக்கிறேன்// என்ன சொல்கிறது?/////////நான் குர்ஆன் ஆதாரம் கொடுத்துள்ளேன் ..... குர்ஆனுக்கு முரணாக ஹதீஸ்கள் இருந்தால் அதை ஏற்க அவசியமில்லை.

தஜ்ஜால் அழிப்பவன்
//நான் குர்ஆன் ஆதாரம் கொடுத்துள்ளேன் ..... குர்ஆனுக்கு முரணாக ஹதீஸ்கள் இருந்தால் அதை ஏற்க அவசியமில்லை// ஆக, முதலில் பகுத்தறிவாளர்களைக் குறைகூறியதைத் தவறு என ஒப்புக் கொள்கிறீர்கள்?

உண்மைக் குரல்:
இது என்ன அது என்ன என்று அனைத்தையும் விளக்கவேண்டிய அவசியமில்லை ... மாறாக இதில் எது சிறந்ததோ அதையே பரிந்துள்ளேன் // ஒரு வேலை என்னுடைய கருத்து குர்ஆன் ஹதீஸ்களுக்கு மாற்றமாக இருந்தால் என்னுடைய கருத்தை நிரகரிக்கலாம்

தஜ்ஜால் அழிப்பவன்:
//நான் குர்ஆன் ஆதாரம் கொடுத்துள்ளேன் ..... // ஆதரமல்ல உங்களது சொந்தக் கருத்துக்களைக் கூறியிருக்கிறீர்கள் இதை வேண்டுமானால், “தஃப்ஸீருல் உண்மைக் குரல்” என்று வைத்துக் கொள்ளலாம்!

உண்மைக் குரல்:
//நான் குர்ஆன் ஆதாரம் கொடுத்துள்ளேன் ..... குர்ஆனுக்கு முரணாக ஹதீஸ்கள் இருந்தால் அதை ஏற்க அவசியமில்லை// ஆக, முதலில் பகுத்தறிவாளர்களைக் குறைகூறியதைத் தவறு என ஒப்புக் கொள்கிறீர்கள்?///பகுத்தறிவாளன் என்ற பெயரில் உலவி வரும் சில அறைகுறைகளைத்தான் கூறியுள்ளேன் அதில் தவறில்லை
//நான் குர்ஆன் ஆதாரம் கொடுத்துள்ளேன் ..... // ஆதரமல்ல உங்களது சொந்தக் கருத்துக்களைக் கூறியிருக்கிறீர்கள் இதை வேண்டுமானால், “தஃப்ஸீருல் உண்மைக் குரல்” என்று வைத்துக் கொள்ளலாம்!//////குர்ஆன் வசனங்களுடந்தான் கொடுத்துள்ளேன் சொந்தமாக கற்பனை செய்து கூறவில்லை

தஜ்ஜால் அழிப்பவன்:
///பகுத்தறிவாளன் என்ற பெயரில் உலவி வரும் சில அறைகுறைகளைத்தான் கூறியுள்ளேன் அதில் தவறில்லை// மறுபடியுமா? உங்கள் முன்னோர்கள் எழுதியிருப்பதைத்தான் அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள், அவர்களையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு பகுத்தறிவாளர்களைக் குறைகூற வந்துவிட்டீர்கள்!
//குர்ஆன் வசனங்களுடந்தான் கொடுத்துள்ளேன் சொந்தமாக கற்பனை செய்து கூறவில்லை//வாதத்தை உங்களால் முழுமைப்படுத்த முடியவில்லை/தெரியவில்லை. இந்த ஆதமின் கதையில் என்னால் வரிக்கு வரி முரண்பாட்டைச் சுட்டிக்காட்ட முடியும்!
சரி பிறகு தொடர்கிறேன்....

உண்மைக் குரல்:
தஜ்ஜால் அழிப்பவன், நான் சரியான ஆதாரங்களுடன் தெளிவாகவே பதிவிட்டுள்ளேன் ..... நீர் இதை மறுத்தால் மறுப்பு ஆதாரங்களுடன் பதிவு செய்யவும். . வெட்டிப்பேச்சு வேண்டாம்
இதுவரை தாங்கள் செய்துவந்த குதற்கம் இனி முடியாதோ என்ற அச்சமா?

தஜ்ஜால் அழிப்பவன்:
//நான் சரியான ஆதாரங்களுடன் தெளிவாகவே பதிவிட்டுள்ளேன் ..... நீர் இதை மறுத்தால் மறுப்பு ஆதாரங்களுடன் பதிவு செய்யவும். . வெட்டிப்பேச்சு வேண்டாம்// நீர் பதிந்தவற்றிற்கே உம்மால் விளக்கம் தரமுடியவில்லை. நான் வேறு தனியாக ஆதாரம் தரவேண்டுமா?
//இதுவரை தாங்கள் செய்துவந்த குதற்கம் இனி முடியாதோ என்ற அச்சமா// இதிலொன்றும் குறைச்சலில்லை!!!

உண்மைக் குரல்:
//நான் சரியான ஆதாரங்களுடன் தெளிவாகவே பதிவிட்டுள்ளேன் ..... நீர் இதை மறுத்தால் மறுப்பு ஆதாரங்களுடன் பதிவு செய்யவும். . வெட்டிப்பேச்சு வேண்டாம்// நீர் பதிந்தவற்றிற்கே உம்மால் விளக்கம் தரமுடியவில்லை. நான் வேறு தனியாக ஆதாரம் தரவேண்டுமா?////நான் போதுமான விளக்கத்தை பதிவில் கொடுத்துள்ளேன் .... தமிழில்தானே உள்ளது

தஜ்ஜால் அழிப்பவன்:
இப்ன் கதீர் தரும் விளக்கம்:
http://www.islamawareness.net/Prophets/adam.html
Prophet Adam: Allah the Almighty revealed: Remember when your Lord said to the angels: 'Verily, I am going to place mankind generations after generations on earth.' They said: 'Will You place therein those who will make mischief therein and shed blood, while we glorify You with praises and thanks (exalted be You…
ISLAMAWARENESS.NET

உண்மைக் குரல்:
அதை முதலில் நீர் படியும். .. நீர் கொடுத்த லின்க் ஆதம் படைத்ததற்கு பின் அவர் வாழ்க்கை பற்றியது.

தஜ்ஜால் அழிப்பவன்:
//நான் சரியான ஆதாரங்களுடன் தெளிவாகவே பதிவிட்டுள்ளேன் ....//
1. அல்லாஹ், களி மண்ணிலிருந்து விந்தைப் படைத்தான் என்பதற்கு ஆதாரம் எங்கே?
2. அப்படி உருவாக்கிய விந்து எப்படிக் கருவானது?
4 மணிகள் · பிடித்திருக்கிறது
உண்மைக் குரல், முதலில் அதை முழுவதுமாகப் படிக்கவும்!

உண்மைக் குரல்://நான் சரியான ஆதாரங்களுடன் தெளிவாகவே பதிவிட்டுள்ளேன் ....//
1. அல்லாஹ், களி மண்ணிலிருந்து விந்தைப் படைத்தான் என்பதற்கு ஆதாரம் எங்கே?
2. அப்படி உருவாக்கிய விந்து எப்படிக் கருவானது?//////படிக்கத்தெரியாதா. தமிழில்தானே பதிந்துள்ளேன் பதிவை முதலில் தெளிவாக படியும்

தஜ்ஜால் அழிப்பவன்:
//So Allah shaped Adam into a human being, but he remaineda figure of clay for 40 years. The angels went past him. They were seized with fear by
what they saw, and Iblis felt fear most. He used to pass by the figure
of Adam, buffeting it, which would make a sound like pottery. Allah told
us: "He created man (Adam) from sounding clay like the clay of pottery." (Chapter 55:Quran).//
உண்மைக் குரல், ஆங்கிலம் தெரியாதா?
1. அல்லாஹ், களி மண்ணிலிருந்து விந்தைப் படைத்தான் என்பதற்கு ஆதாரம் எங்கே?

உண்மைக் குரல்
://So Allah shaped Adam into a human being, but he remaineda figure of clay for 40 years. The angels went past him. They were seized with fear by what they saw, and Iblis felt fear most. He used to pass by the figure of Adam, buffeting it, which would make a sound like pottery. Allah told...//
23:12. நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.
23:13. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்./////
தஜ்ஜால் அழிப்பவன்:
/// But am given a wright source for my argument// இப்ன்கதீர் எழுதிய விளக்கம். இது நான் கொடுத்திருந்த லின்க்லிருந்து எடுக்கப்பட்டது!!
//23:13. பின்னர் // --?

உண்மைக் குரல்:
// But am given a wright source for my argument// இது நான் கொடுத்த லின்க்லிருந்து எடுக்கப்பட்டது!!///////மங்குனி அமைச்சரே அந்த விளக்கத்திற்கு எந்த குர்ஆன் ஆதாமும் இல்லை ஆனால் நான் கொடுத்ததில் குர்ஆன் ஆதாரம் கொடுத்துள்ளேன் என்று சொன்னால் ... அதை கூட புரிந்துகொள்ள முடியவில்லையா உம்மால்
//23:13. பின்னர் // --?////என்ன பின்னர் இந்திரியத்துளிக்கு ஆதாரம் கொடுத்துவிட்டேன் பிறகு என்ன?

தஜ்ஜால் அழிப்பவன்:
//23:12. நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.// மனிதனைக் களி மண்ணிலிருந்து படைத்த பிறகும் எதற்காக அவன் விந்தாக இருக்கிறான்?
//23:13. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்// இந்த அடைப்புக்குறியை நம்பித்தான் இங்கு வந்தீரா?

உண்மைக் குரல்:
முதல் வசனம் மேலோட்டம் மனிதனை களிமண்ணின் சக்தினால் படைத்தொம் ,
//23:13. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்// இந்த அடைப்புக்குறியை நம்பித்தான் இங்கு வந்தீரா?///////உம்மை போல் விளங்காமல் கேள்வி கேட்பவருக்காக அடைப்புக்குறி

தஜ்ஜால் அழிப்பவன்:
//முதல் வசனம் மேலோட்டம் மனிதனை களிமண்ணின் சக்தினால் படைத்தொம் ,// உங்க சொந்தக் கதையை இங்கு விட வேண்டாம்!!!

உண்மைக் குரல்:
//முதல் வசனம் மேலோட்டம் மனிதனை களிமண்ணின் சக்தினால் படைத்தொம் ,// உங்க சொந்தக் கதையை இங்கு விட வேண்டாம்!!!///// எதை எப்படி விளங்கவேண்டுமோ அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும் ..... அதான் சொன்னேன் குதற்கத்திற்கு பதில் கிடைக்காது என்று

தஜ்ஜால் அழிப்பவன்:
//அதான் சொன்னேன் குதற்கத்திற்கு பதில் கிடைக்காது என்று// இதிலென்ன குதற்கம்? /குர்ஆன் 23:12. மனிதனை களிமண்ணிலிருந்து படைத்ததாகக் கூறி நிறைவு செய்தபின்னரும் அவன் விந்தாக இருப்பதாக ஏன் மறுபடியும் கூறுகிறது?

உண்மைக் குரல்:
// அதான் சொன்னேன் குதற்கத்திற்கு பதில் கிடைக்காது என்று// இதிலென்ன குதற்கம்? /குர்ஆன் 23:12. மனிதனை களிமண்ணிலிருந்து படைத்ததாகக் கூறி நிறைவு செய்தபின்னரும் அவன் விந்தாக இருப்பதாக ஏன் மறுபடியும் கூறுகிறது?////நிறைவு செய்வதாக இருந்தால் பின்னர் என்ற வார்த்தை உபயோகிக்க அவசியம் இல்லை .... பின்னர் , மேலும் இதுபோன்ற வார்த்தைகளுக்கு அகராதி விளக்கம் தெரியுமா ????

தஜ்ஜால் அழிப்பவன்:
அதேதான் நான் நான் முன்பே கேட்டேன் //23:13. பின்னர் // --?// மீண்டும் கேட்கிறேன் பின்னர் என்பதற்கு உங்களுக்கு விளக்கம் தெரியுமா?

உண்மைக் குரல் :
தேதான் நான் நான் முன்பே கேட்டேன் //23:13. பின்னர் // --?// மீண்டும் கேட்கிறேன் பின்னர் என்பதற்கு உங்களுக்கு விளக்கம் தெரியுமா?////அடுத்தது என்றும் புரிந்துகொள்ளலாம் மேலும் என்றும் புரிந்துகொள்ளலாம் ////சஹோ தங்கள் சொந்த குதற்கத்திற்கு என்னிடம் மட்டுமல்ல வேறு யாரிடமும் பதில் இல்லை ....... உங்கள் குழப்பத்தை நீங்களே தீர்த்துக்கொள்ளவும் .... இப்படி அடுத்தவரின் நேரத்தை வீணடிக்க கூடாது

மனிதம் மட்டும்:
தஜ்ஜால் அழிப்பவன் ..முட்டு சந்துல கொண்டாந்து நிப்பாட்டி இருக்கீங்க நடத்துங்க...

தஜ்ஜால் அழிப்பவன்:
//23:12. நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.// இந்த வசனம் மனிதனைப் படைத்ததாகத்தான் கூறுகிறது. இது எப்படி விந்தைப் படைத்தாகப் புரிந்து கொண்டீர்கள் மங்குனி அமைச்சரே?
விந்தும் மனிதனும் ஒன்றல்ல!!!

உண்மைக் குரல்:
தஜ்ஜால் அழிப்பவன் ..முட்டு சந்துல கொண்டாந்து நிப்பாட்டி இருக்கீங்க நடத்துங்க.../////அய்யோ பாவம் கண்ணை மூடிக்கொண்டு எல்லாமே இருட்டு என்பவருக்கு ஜால்ரா வா

மனிதம் மட்டும்:
கண்களை மூடினால் எல்லாமே இருடுதான் பாய்.....கண்களை உங்களை போல திறந்துவிட்டு இருட்டுன்னு சொல்லுறதுக்கு பெயர்தான் குருட்டு நம்பிக்கை

தஜ்ஜால் அழிப்பவன்:
எந்த ஊரில், எந்த மொழியில் மனிதன் என்ற சொல் விந்தைக் குறிப்பிடுகிறது? இப்படித்தான் உங்களுக்கு மதரஸாவில் சொல்லிக் கொடுத்தார்களா?
குர்ஆன் 23:12 ’மனிதனைப் படைத்ததாக நேரடியாகவே குறிப்பிட்டுவிட்டு, குர்ஆன் 23:13 பின்னர் என்ற துவக்கத்துடன் ‘விந்து’ என்று எதற்காக குறிப்பிடுகிறது என்பதைக் கூட சிந்திக்காமல் பதிவிட வந்துவிட்டீர்! இந்த லட்சணத்தில் ஆதாரத்துடன் பதிவிட்டுவிட்டதாகப் பீற்றல் வேறு!

Jagadesh Kumar:
அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப ஜாகிர் நாயக்கின் 'டஹாஹா' போல இவர்களும் புது விளக்கத்தோடு கிளம்பி விட்டார்கள்...... கருவியலில் சரி பாதி பங்கு வகிக்கும் கருமுட்டை பற்றி முகமது எங்குமே குர்ஆனில் கூற வில்லை... காரணம் அது கண்ணுக்கு தெரிய வில்லை.... கண்ணுக்கு தெ...
(நண்பர் ஜெகதீஷ் குமார் நல்ல விளக்கத்தைக் கொடுத்திருந்தார். தரவிறக்கம் செய்ததில் நான் செய்த தவறு அவரது விளக்கத்தை முழுமையாக இங்கு பதிய முடியாமல் செய்துவிட்டது. மீண்டும் தேடிப்பார்த்த பொழுது இந்த விவாதம் அங்கு காணப்படவில்லை.)

தஜ்ஜால் அழிப்பவன்:
ஜனாப் உண்மைக் குரல் அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து கிழித்துத் தொங்கவிடப்பட்டிருக்கும் அவரது டவுசரைப் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்!


***************************
பின்குறிப்பு :

குர்ஆனிற்குள் எப்படி அறிவியல் புகுத்தப்படுகிறது என்பதற்கு உண்மைக்குரல் என்ற இந்த இஸ்லாமியர் கொடுத்த விளக்கமும் ஒரு உதாரணம்.

குர்ஆன்
 23:12. களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம்.

என்று கூறுவதை இவர்கள் அறியாமல் பதிவிடவில்லை. களிமண்ணிலிருந்து அல்லாஹ் மனிதனை அதுவும் முழுவளர்ச்சி பெற்ற மனிதனைத்தான் உருவாக்கினான் என்ற குர்ஆனின் கருத்து அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.  அன்று முஹம்மதிற்கு தெரிந்த ஒரே அறிவியல் பைபிள் பழைய ஏற்பாடு கதைகள் மட்டுமே. அதை தனக்கு ஏற்ற வகையில் பட்டி, டிங்கரிங் செய்து அதிகாரம்-அந்தப்புரம்-அழகிகள் என்று மஜாவாக இருக்க பயன்படுத்திக் கொண்டார். தனது வார்த்தைகள் கடவுளிடமிருந்து வருவது, முரண்பாடற்றது என்று தனக்குத் தானே சான்றிதழை வழங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்துவிட்டார். பாவம் இஸ்லாமியர்கள்! குர்ஆனின் முரண்பாடுகளை அறிந்து மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல விதவிதமான விளக்கங்களைத் தங்களுத் தாங்களே கொடுத்துக் கொள்கின்றனர்.

ஆதமின் கதையில் காணப்படும் அனைத்து முரண்பாடுகளையும் இஸ்லாமியர்கள் அறியாமலில்லை.  அதை எப்படி சரிக்கட்டுவது என்பதில் தங்களது முழு கவனத்தையும் செலுத்துகின்றனர். அதன் விளைவு அல்லாஹ்(!), தனது கனவிலும்கூட கற்பனை செய்து பார்க்காத அறிவியலைக் குர்ஆனுக்குள் நுழைப்பது.

வரும்காலத்தில் குர்ஆன் 23:12 –ன் மொழிபெயர்ப்பு இப்படி இருக்கலாம்.

களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் (படைப்பதற்கான விந்தையும் கருமுட்டையையும் முதலில்) படைத்தோம்.

இப்பொழுது பாருங்கள் இந்தக் குர்ஆன் வசனம் சோதனைக் குழாயில் கரு உருவாக்கப்படுகிற அதிநவீன அறிவியல் உண்மையையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பிரகடனம் செய்து, குர்ஆன் கடவுளின் வார்த்தைளே என்பதை மீண்டும் நிரூபணம் செய்கிறது!

மாஷா அல்லாஹ்!


தஜ்ஜால்