பெரியவர்
சொன்னவைகளைக் கேட்டு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. என்ன பேசுவதென்றே தெரியமல்
அமைதியாக இருந்தேன்.
“ஏன் ஒன்னும் பேசாம
அமைதியா இருக்கறே..?” என்றார்.
”நீங்க சொல்லறது எல்லாமே
ஏறக்குறைய குர்ஆன் ஹதீஸ்களுக்கு மாறுபட்டு இருக்கே..?
”ஆமாம்... நானும் அதத்தானே
சொல்றேன்...!” என்றார்.
“இப்ப..., முதன்முதலா
ஜிப்ரீலும் முஹம்மதுவும் சந்திச்ச விஷயத்தையே எடுத்துக்குவோம்.., தனக்கு ஓதத் தெரியலைன்னு
சொன்னபோது, அறிமுகமற்ற அந்த நபர் மூச்சு திணறக்
கட்டிப்பிடிச்சு ஓதச் சொன்னதாகவும், பயந்து போய் தன்னோட மனைவி கதீஜாகிட்ட சொன்னதாகவும்,
அவங்க நவ்ஃபல் கிட்ட போனதாகத்தானே முஸ்லீம்களோட வரலாறு சொல்லுது..?!”
“குர்ஆன், ஹதீஸ்கள்
மேல பதவிதமான விமர்சனங்கள் இருக்கறது உனக்கே தெரியும், அப்படியிருக்கும் போது அதை வரலாறுன்னோ
அல்லது உண்மையின்னோ எப்படி ஏத்துக்கற?”
”ஆனால் குர்ஆன் ஹதீஸ்கள்
மட்டுமே உலகின் நிலையான உண்மைகள் என்பதுதானே முஸ்லீம்களின் வாதம்?”
“அவர்கள் எதை வேண்டுமானாலும்
கூறலாம். அவைகளை முஸ்லீம்கள் தரப்பு செய்திகள் அல்லது கோரிக்கைகள்னுதான் பார்க்க முடியும்.
அது எல்லாமே முழுமையான உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்ல..!” என்றார் எவ்வித சலனமுமில்லாமல்.
”சரி... உங்களுக்கு
முஹம்மதோட மேல தனி கரிசனம் வரக் காரணம்..?”
“அந்தக் கொடுமைய ஏன்
கேட்கற... இந்த மலக்குகள் ’.... ...’ என் வாயில நல்ல வருது.... எல்லாம் இவளுக செய்த
வேலைதான்...!”
“அப்படி என்ன செஞ்சாங்க...?”
”நாங்க... இங்க செய்யறத,
பேசறதையெல்லாம் முஹம்மதுகிட்ட உளறிவச்சுட்டாங்க... அவரும் அதுக்கு கைகால வச்சு உருவமாக
ஆக்கிட்டாரு..!”
“மலக்குகள் எதுக்கு
முஹம்மதுகிட்ட போகணும்?”
“முதல்ல... ஜிப்ரீல்
- முஹம்மது விவகாரத்தப்பத்தி சொல்லறேன்”
“எனக்கு தகவல்களைச்
சொல்லறதும் மலக்குகளோட பணி. அப்படி ஒருதடவ
முஹம்மதைப்பத்தின செய்திகள் வந்தது. ஆறுதலா
ஒரு நாலு வார்த்தை பேசிட்டு வாங்கன்னு சொன்னதும் நான்தான் ஆனா இப்படி விவகாரமாக முடியும்னு
நான் எதிர்பார்க்கவே இல்ல...”
”முஹம்மதை நீங்க தண்டிச்சிருக்கலாமே..?”
”நானாக கூப்பிட்டு
கேட்கறவரை, குகைல நடந்தவைகளை ஜிப்ரீல் எனக்கு
ரிப்போர்ட் செய்யவேயில்லை... ஜிப்ரீலோட நிலைமையைப் பார்த்து பதறிப்போய் விசாரிச்சப்ப
முஹம்மதை தண்டிக்க வேண்டாம் மன்னிச்சி விட்டுருங்க பாவம் என்றார்”
“அட... இப்படியொரு
மன்னிக்கும் குணமா... ஆச்சரியமா இருக்கே!?”
“நானும் அப்படித்தான்
நினைச்சேன். ஆனா அந்த குகை சம்பவத்திற்குப் பிறகு, ஜிப்ரீலுக்கு
முஹம்மதுமேல ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருந்திருக்குது. அந்தக் கருமாந்தரம் எனக்குத்
தெரியாம போச்சு...!”
“ரணகளத்தில ஒரு கிளுகிளுப்பா...?
கேட்கவே... கொடுமையா இருக்கு..!”
“இவங்க போட்ட ஆட்டத்தினாலோ...
என்னவோ... ஒரு கட்டத்தில முஹம்மதுவுக்கு ஃபியூஸ் போயிருச்சி... அதுக்கு நான் தான் காரணம்னு
கோவிச்சிட்டு இங்க வந்து இப்படிப் படுத்தவன்தான் எந்திரிக்கவே மாட்டேங்கிறான்...!”
“அடக் கொடுமையே...
இதுக்குப் பின்னாடி இவ்வளவு கேவலமான ஒரு ஃபிளாஷ்பேக்கை நான் எதிர்பார்க்கவேயில்ல..!”
“முஹம்மதுவுக்கு செய்திகள்
போனதும், என் பேரைச் சொல்லி விளையாடனதும் இப்படித்தான் நடந்தது...”
என்று அவர் கூறியதைக்
கேட்கையில் எனக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. நிச்சயமாக
இங்கு ஏதோ குழறுபடி இருக்கிறது. ஆனால் இவர் தன்னை நல்லவன் போல காட்டிக் கொள்ள முயற்சிக்கிறோ?.
நான் ஒன்றுமே தெரியாதவன் போல,
“எப்படிப் பார்த்தாலும்
ஜிப்ரீல்-முஹம்மது சந்திப்பு என்பது இங்கு உண்மைதானே?” என்றேன்.
“எதையும் முழுமையா
ஆராயறதில்ல... ஒரு செய்தில கொஞ்சம் உண்மையிருந்தாலே அதை முழு உண்மையின்னு நினைக்கிற
பலவீனமான அறிவுதான் அவர்களை இப்படி பேச வைக்குது!”
“அப்ப... குர்ஆன்,
ஹதீஸ்ல உங்கள் பங்களிப்பு எதுவுமில்லையா...?”
“ம்ம்..ம்.... அப்படி
முழுமையா மறுக்க முடியாது ..!” என்று பல்டியடித்தார்
நான் நினைத்தது சரிதான்.
கிழவர் பெரிய தில்லாலங்கடிதான்; இவரை கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்க வேண்டும்.
அப்பொழுது ஒரு மலக்கு
எங்களை நோக்கி, கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான கழுதை போன்ற
ஒன்றுடன் வந்து கொண்டிருந்தது.
“அப்ப... குர்ஆன் ஹதீஸ்களில்
உங்க பங்களிப்பு என்ன?” என்றேன்.
அருகில் வந்த மலக்கு
முதியவரின் காதில் ஏதோ கிசிகிசுத்தது. அவர் என்னை நோக்கி,
“உண்மையைச் சொல்லனும்னா அதுல என்னோட நேரடி செய்திகள்னு
எதுவும் கிடையாது...!”
“அய்யா... நல்லாவே குழப்பறீங்க... நீங்க சொல்லவர்றது உண்மையிலேயே
எனக்குப் புரியல...!”
என்று நான் பேசிக்
கொண்டிருந்தபொழுது கால்களை ஏதோ பிறாண்டுவது
போல தோன்றியது. கால்களை லேசாக உதறியவாறு எனது
கவனத்தை அதன்மீது திருப்பினேன்.
”கொஞ்சம் பொறு ...
இங்கேயே இரு... சீக்கிரம் வந்துவிடுகிறேன்.” என்றவாறு முதியவர் அந்தக் கழுதையை நெருங்க...
அது திடீரெனப் பாய்ந்து
முதியவரின் தாடியை பற்றி இழுத்தது. என்ன நடக்கிறது என்பதை நான் யூகிப்பதற்குள், நிலை
குலைந்த முதியவர் கீழே விழுந்தார். விரைவாகச் செயல்பட்ட மலக்கு, கழுதையின் பிடியிலிருந்து
முதியவரின் தாடியை விடுவித்தது. தட்டுத்தடுமாறி எழுந்து நின்றவர்,
“ஒழுங்காக பிடிக்கறதில்லையா...?”
என்றார் கோபமாக.
மலக்கு எதுவும் பேசாமல்,
அசடுவழிய மண்டையை சொறிந்து கொண்டு நின்றிருந்தது. மலக்கை முறைத்துப் பார்த்தவாறு,
”சரி... போகலாம் வா...”
என்றார்.
இருவரும் கழுதையின் மீது ஏறிக் கொள்ள, அது கால்களை
உதைத்து, நூலறுந்த பட்டம்போல அங்குமிங்குமாக அலைந்து பறந்து மறைந்தது.
ஜிப்ரீலின் அருகில்
குனிந்து எனது கால்களைப் பிறாண்டியதை தேடிக் கொண்டிருந்தேன். அதுவரை எந்த சலனமுமில்லாமல்
படுத்திருந்த ஜிப்ரீல் ’திடுக்’ எழுந்து உட்கார, நான் அதிர்ந்து போய் தள்ளி நின்றேன்.
“பயப்படாதே உன்னை ஒன்றும்
செய்யாமாட்டேன்” என்றார் ஜிப்ரீல்.
“உங்களையும் முஹம்மதையும் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம்”
என்றேன்.
“ம்ம்.. நானும் அதைக்
கேட்டேன்”
“அவர் சொன்னதெல்லாம்
உண்மையா?” என்றேன்.
“குர்ஆனைப்பற்றி அவர்
சொன்னது உண்மையில்லை”
“அப்ப... உங்களைப்பற்றி
சொன்னது..?”
“உண்மைதான்..!” என்று
அசடுவழிந்தார் ஜிப்ரீல்.
“குர்ஆனைப்பற்றி சொல்லுங்க”
என்றேன்
“அல்லாஹ், சொல்லச்
சொன்னததான் நான் முஹம்மதுக்கு சொன்னேன் அதுல என்னோட கற்பனைகள் எதுவுமில்ல!”
“... ...?!”
“ஆனா முஹம்மதுவும்,
அப்பப்ப... தனக்குத் தேவையானத சேர்த்துகிட்டாரு..!”
“ஆனால் இந்தப் பெரியவர்
தனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லறாரே...?”
“எடக்குமடக்க கேள்விகளைக்
கேட்டு சிக்க வைக்கிற உன்னை மாதிரி ஆட்களைப்பற்றி அவருக்கு நல்லாவே தெரியும். அதனாலதான்
நீ சொல்ல வேண்டியதையெல்லாம் அவரு சொல்லி, மழுப்பிட்டு
இருக்காரு... !”
“சரி... என்னை எதுக்கு இங்க கொண்டுவரணும்...?”
“சாட்சிக்காரன் கால்ல
விழறததவிட சண்டக்காரன் கால்ல விழலாம்கிற திட்டமா
இருக்கலாம்!”
”ஆரம்பதிலிருந்தே என்கிட்ட
குழையறதுக்கு இதுதான் காரணமா..?”
“அதேதான்..!” என்றார்
ஜிப்ரீல்
“இந்த விஷயத்தில் நான்
மட்டுமா சண்டைக்காரன்? ஒரு பெரும் கூட்டமே இருக்கிறது. சரி... தன்னைக் கடவுள்ன்னு சொல்லிக்கிறவர்
இப்படி பொய் சொல்லலாமா...?”
“அவர் தன்னை சூழ்ச்சி
செய்கிறவர்களில் (Q 68:45) சிறந்தவன்னு வெளிப்படையாகவே சொல்லியிருக்காரு. உண்மையை மறைக்காம
எப்படி சூழ்ச்சி செய்ய முடியும்?”
“இதப்பத்தி நான் அவர்கிட்டயே
பேசிக்கிறேன். சரி... உங்க காதலர் முஹம்மத பத்தி சொல்லுங்க...!” என்று நான் கேட்டவுடன்
ஜிப்ரீலின் கண்களில் நீர் முட்டிக் கொண்டு நின்றது.
”அவரு.. இங்கதான் இருக்காரு..!”
“அவரைப் போய்ப் பார்க்க
வேண்டியதுதானே?”
“அந்தக் கொடுமைய நான்
எப்படிச் சொல்லுவேன்...” என்று ஒப்பாரி வைத்து அழத் துவங்கினார். சத்தம் கேட்டு அருகிலிருந்த
மலக்குகள் ஜிப்ரீலின் அருகில் குழுமிவிட்டனர். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அதில் ஒரு மலக்கு என்னை நோக்கி,
“முஹம்மதுக்கு ஹூரிகள்
கிடைச்சவுடனே ஜிப்ரீல... கழட்டிவிட்டுட்டார்...” என்றது.
“எங்கே இருக்காரு நான்
அவரைப் பார்க்கணும்”
மலக்குகள் தங்களுக்குள்
ஏதோ கிசுகிசுத்துக் கொண்டனர்.
“அல்லாஹ் வர்ற மாதிரி
இருக்கு, அவர்கிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கோ...”
என்று கூறி எல்லோரும் பழைய நிலையில் படுத்துக்
கொண்டனர்.
சிறிது நேரத்தில் முதியவர்
கழுதையில் வந்து இறங்கினார். முகத்தில் களைப்பு தெரிந்தது.
”இவங்க... உன்கிட்ட
ஏதாவது சொன்னாங்களா...? என்றார். நான் ஒன்றுமே
அறியாதவன் போல,
“யாரு..?” என்றேன். அவர் அடுத்ததை சொல்வதற்குமுன்,
”உங்க தூதர் முஹம்மது
எங்கே, எப்படி இருக்கார்?” என்று அவரது கவனத்தை திசை திருப்பினேன்.
”ம்ம்.. அதைபத்தி அப்புறம்
சொல்றேன்” என்றார்
”நாம குர்ஆனைப்பத்தி
பேசிக்கிட்டு இருந்தோம் அதுக்குள்ள நீங்க போயிட்டீங்க” என்று முன்பு பேசிக் கொண்டிருந்ததை
நினைவூட்டினேன்.
இருவரும் நடந்து கொண்டிருந்தோம்.
கர... கர... வென்று
எதையோ வைத்து தேய்ப்பதைப் போன்ற மெல்லிய ஒலி எனது கவனத்தை ஈர்த்தது.
நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே
வந்ததால் எவ்வளவு தூரம் நடந்தேன் தெரியவில்லை.
இப்பொழுது வேறொரு இடத்திற்கு வந்திருந்தோம். அங்கே நிறைய பேர், கண்களுக்கு எட்டியவரை
பார்த்தேன் ஓலைகளில் எதையோ எழுதிக் கொண்டிருந்தனர்.
“இதுதான் என்னோட ஆஃபீஸ்!”
“இன்னும் இவங்க அரதப்பழசான
ஓலையில எழுதற டெக்னிக்லதான் இருக்காங்க போலிருக்கு..?”
“... ...!?”
“கொஞ்சம்கூட அறிவே
இல்லாத ஒரு கும்பல வச்சிக்கிட்டு இங்கே என்னதான் செய்யறீங்க?”
“உலகத்தில நடக்கறத
கவனிச்சு பதிவு செய்யறோம்?”
“பதிவு செய்து...?”
“மறுமை நாள் விசாரணையில
எவிடன்ஸா யூஸ் செய்வோம்!”
“அல்லாஹ், எந்தத் தேவையுமில்லாதவன்னு
குர்ஆன் சொல்லுது. ஆனா, நீங்க உட்கார பாறையும் அத சுமக்க மலக்குகளும், உலகத்தில் நடக்கறத
கவனிச்சி பதிவும் செய்திட்டு இருக்கிறீங்க! எந்தத் தேவையுமில்லாதவர் இதையெல்லாம் ஏன்
செய்யனும்?”
“... ...!?”
“எதுக்காக இவ்வளவையும்
படைக்கனும் பிறகு அதை அழிக்கனும்? அல்லாஹ் தேவையில்லாதவன் சொல்லிக்கிறது தப்புதானே?”
என்றேன்.
“தஜ்ஜால், இந்த பிரபஞ்சமோ
இல்ல இந்த மனுஷங்களோ.. எதுவும் எனக்கு எந்தப் பலனையும் குடுக்கப் போறதில்ல. மலக்குகளை
வச்சு எழுதற இந்த ஆவணங்களால் கூட எனக்கு எந்தப் பலனுமில்லை !”
“எந்தத் தேவைகளும்
இல்லாத ஒருத்தருக்கு, அர்ஷும் அதை சுமக்க மலக்குகளும், ஆட்சி செய்ய பிரபஞ்சமும் அதில்
உயிரினங்களும், பிறகு அதை அழிக்க வேண்டிய அவசியமும் ஏன்?”
“ஏப்பா... இந்தக் கேள்விய
நீ விடவே மாட்டியா? இதுக்கு நான் அப்பவே பதில் சொன்னேனில்ல...”
“என்ன பதில்? ... மலக்குகள்
சுமக்கவில்லைனா அர்ஷ் கீழே விழுந்திடும்னு சொன்னீங்களே அதுவா?” என்றேன்.
“ஆமாம் ...!”
“ஒரு பொருள் சுமக்கப்பட
வேண்டியிருக்கு என்றாலே அது எடை மிகுந்ததுன்னு சொல்லாம். அந்த எடைக்கு முக்கிய காரணம்,
அதுமேல ஈர்ப்பு சக்தி செயல்படுதுன்னு பொருள். உங்களையும் உங்க ’அர்ஷை’யும் கூட இந்த
ஈர்ப்பு சக்திகிட்ட இருந்து தப்பிக்க முடியலைன்னு சொல்லலாமா?”
“என்னது... என்மேலயும்
ஈர்ப்பு சக்தி செயல்படுதா...? சும்மா கதைவிடாதப்பா... எதுவும் என்னை கட்டுபடுத்த முடியாது!”
“அப்புறம் எதுக்காக
உங்க அர்ஷை மலக்குகளை சுமந்து கொண்டிருந்தாங்க,
நீங்களே சொல்லுங்க..?”
“நான் அர்ஷை உருவாக்கினதிலிருந்து
மலக்குகள் சுமக்கிறாங்க... நீ வந்து கீழ போட வச்சிட்டே..!”
”சரி... நீங்க முதலில்
அர்ஷை உருவாக்கினீங்களா... இல்ல... அதை சுமக்கிற
மலக்குகளை உருவாக்கினீங்களா?”
“அர்ஷை முதலில் உருவாக்கி,
தண்ணீர் மேல மிதக்க வச்சிருந்தேன் (புகாரி 3191)!”
“தண்ணீருக்கு உங்க
அர்ஷை தாங்கக்கூடிய சக்தி இருந்திருக்கு அப்புறம் எதுக்கு மலக்குகள்? இதையெல்லாம் படைக்கறதுக்கு
முன்பு... உட்கார எதுவுமில்லாம கால்கடுக்க நின்னுட்டு இருந்திருக்கீங்க அப்படித்தானே...?”
“ஏப்பா... இப்படி கேள்விகேட்டு...
என்னை கொல்றியே?”
”அய்யா... கேள்விகள் தோன்றலைன்னா அவன் மனிதனே இல்லை வெறும்
ஜடம்தான்!”
“என்னோட அடியார்கள்
இந்த மாதிரியெல்லாம் கேட்க மாட்டாங்க!”
“அப்படீன்னு நீங்க
நினைச்சுட்டு இருக்கிறீங்க! ஆனா உண்மை நிலை அப்படியில்லை! உங்க குர்ஆனுக்கு விரிவுரைகளும்,
விரிவுரைகளுக்கு விளக்க உரைகளும், விளக்க உரைகளுக்கு தன்னிலை விளக்கங்களும் இந்த வினாடிவரை
எழுதிக்கிட்டுதான் இருக்காங்க. கேள்வி எழலைன்னா இது எதுவுமே அவசியமில்லை!”
“அவங்க அப்படி எழுதக்
காரணமே குண்டக்க மண்டக்க கேள்விகேட்கற உன்னை மாதிரி நாத்தீகப் போக்கிரிகள்தான் காரணம்”
என்றார் பெரியவர்.
“எப்படிப் பார்த்தாலும்
எங்களோட கேள்விகள்ல இருக்கிற நியாயம் முல்லாக்களை தூங்கவிடறதில்லைன்னு உறுதியாக்ச்
சொல்லலாம். கொஞ்ச நேரத்திற்கு முன், ‘இவனுக சிந்திக்கவே மாட்டானுக.. சிந்திச்சு.. பாருங்க..
சிந்திச்சு.. பாருங்கன்னு சொன்னா எவன் கேட்கிறான்’னு சொல்லி நீங்கதான் வருத்தப்பட்டீங்க.
சிந்திச்சா கேள்விகள் உருவாவதை தடுக்க முடியாது” என்றேன்
“சிந்திக்கிறதுன்னா...
நான் சொல்லறமாதிரிதான் சிந்திக்கனும் நீயாக உன்னோட இஷ்டத்துக்கு கண்டதையெல்லாம் சிந்திக்கக்
கூடாது! அது ஷைத்தான் தனமானது!”
”ஷைத்தானா...?”
“ஆமாம்... அவனேதான்!”
“குர்ஆனைத் தவிர வேறெங்கேயும்
அப்படி எவரையும் நான் பார்த்ததேயில்லை. ஆமாம், உங்க தோஸ்த் ஷைத்தான் எங்கே இருக்காரு?” என்றேன்.
“அவரா...? அவனுக்கென்ன
மரியாதை வேண்டிக்கிடக்கு...?” என்றார் எரிச்சலாக.
”அய்யா உங்களோட பேச்சும்
செயல்பாடும் ஒன்னுக்கொன்னு முரண்பாடா இருக்கு!”
”என்ன முரண்பாடு...?”
”குர்ஆன்ல உங்க பங்களிப்பு
இல்லைன்னு சொல்றீங்க...! சர்வவல்லமையுடையவராக இருந்தால், மனிதர்களை நல்வழிப்படுத்த
வேண்டுமென்ற விருப்பமுள்ளவராக இருந்தால், குறைந்த பட்சம், குர்ஆன்– ஹதீஸ்-தஃப்ஸீர்ங்கற
பேர்ல நடந்து கொண்டிருக்கும் கோமாளித்தனங்களத் தடுத்திருக்கலாம் இல்ல... சரி செஞ்சிருக்கலாம்.
அதவிட்டுட்டு இங்க உட்கார்ந்து பதிவு செய்யறதால யாருக்கு என்ன லாபம்?”
“மறுமை விசாரணையில,
மனிதர்களோட செயல்களுக்கு இதுதானே எனக்கு எவிடென்ஸ்?”
“மறுமைநாளில் மனிதர்கள்
உங்களை எதிர்த்து வாதிடுவாங்கன்னு நினைக்கிறீங்களா?”
“ஆமாம் அந்த விசாரணையில,
ஒவ்வொரு மனிதனும் தன்னோட செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முயற்சி செய்வான். அப்போ இந்த
ரெக்கார்டுகளை அவனுக்கு காண்பிச்சா, அவனால எதுவும் பேசமுடியாது!”
“எதிலிருந்தும் எந்தப்
பலனையும் நான் எதிர்பார்கறதில்லைன்னு சொன்னீங்க ஆனால் மலக்குகளால் எழுதப்படும் இந்த
ஓலைகளால் உங்களுக்கு பெரிய பலன் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறீங்க. இந்த மலக்குகளோட
உதவியில்லனா உங்களால் மறுமை விசாரணையை நடத்தவே முடியாது !”
“.... ...?!”
”சரி... நீங்க தயாரிக்கிற
இந்த ஆதாரங்களை மனிதனால் மறுக்க முடியாதுன்னு எப்படிச் சொல்றீங்க?”
”ஒருவேளை அவன் அப்படிச்
செய்தால், அந்த நாளில், மனிதனோட காது, கை, கால், தோல் எல்லாமே அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல(Q 41:20)
வைப்பேன்”
“அப்புறம் எதுக்கு
தேவையில்லாம எழுதிகிட்டு இருக்கீங்க...? இதெல்லாம் அர்த்தமற்றவைகள்ன்னு உங்களுக்கே
தெரியலையா?”
”அல்லாஹ் நேர்மையானவன்
அவனது விசாரணையும் தீர்ப்பும் நேர்மையாகவே இருக்கும்னு நிரூபிக்க வேண்டாமா?”
“யாருகிட்ட உங்க நேர்மைய
நிரூபிக்கப் போறீங்க? மனுஷங்க கிட்டதானே?”
“... ...?!”
”எங்கே, மனிதர்கள் அல்லாஹ்வை அநீதிக்காரன்னு சொல்லிவிடுவாங்களோன்னு நீங்க பயந்து சாகறீங்கன்னு நினைக்கிறேன். அதனாலதான் விசாரணை, விவாதம், சாட்சி, தீர்ப்புன்னு நானும் நேர்மையாகத்தான் இருக்கேன்னு மனிதர்களிடம் காண்பிச்சு, அவர்களை சமாளிக்க நினைக்கிறீங்க!”
“மனிதர்களைப் பார்த்து
நான் எதுக்கு பயப்படனும்...? அவர்கள் எல்லாரும் என்னோட அடிமைகள். நான் நிர்ணயித்த மாதிரிதான்
மனிதனால் செயல்பட முடியும். என்னை மீறி அவனால் எதுவுமே செய்ய முடியாது”
“நானும் அதைத்தான்
சொல்லறேன். குர்ஆன்ல அல்லாஹ்வைப்பற்றி சொல்லும் போது, அவன் சர்வவல்லமை கொண்டவன், அவனோட
விருப்பப்படிதான் மரத்திலிருக்கும் இலைகூட உதிருது(Q 6:59), எல்லாமே அல்லாஹ்வின் நாட்டப்படிதான்
நடக்குதுன்னு சொல்லறாங்க. ஆனால் மனிதர்களோட செயல்களை பதிவு செய்யறீங்க, உங்களோட விதிப்படிதான்
ஒவ்வொன்றும் நிகழ்வும் நடக்குதுன்னா அதை எதுக்கு பதிவு செய்யனும்? எல்லாமே நீங்க நிர்ணயித்த விதிப்படிதான் நடக்குதுன்னா...
மறுமை விசாரணையும், எழுதப்பட்ட ஏடுகளும் எதுக்கு?
“... ...!?”
”இதெல்லாமே ஒன்னுக்கொன்னு
முரண்பாடா தெரியலையா...? உதாரணத்திற்கு சில குர்ஆன் வசனங்களை சொல்றேன்..
(Q 57:22) பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும்
அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக
அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
(Q36:7) அவர்களில் பெரும்பாலானவர்களின் மீது (விதியின்) சொல் திட்டமாக
உறுதியாகி விட்டது எனவே அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
(Q 54:49) நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் விதியுடன்(கத்ர்) படைத்திருக்கின்றோம்.
இதெல்லாம் நீங்க சொன்னதுதானே...?
”ஆமாம் நான்தான் சொன்னேன்...!”
“அப்படின்னா... உலகத்தில
நடக்கற கொடுமைகள் எல்லாமே நீங்க வடிவமைச்சதுதானே?”
”இல்லை... தீமைகள்
மனிதர்கள் தாங்களாக ஏற்படுத்திக்கிறது இதைப்பத்தி குர்ஆன் 4:79-ல் உமக்கு ஏதேனும் நன்மை
ஏற்பட்டால் அது அல்லாஹ்விடமிருந்து ஏற்பட்டது. உமக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் அது
உம்மால் ஏற்பட்டது... குர்ஆன் 42:30-ல் துன்பத்திலிருந்து உங்களுக்கு ஏதாவது ஏற்படுமாயின் (அது) உங்களுடைய
கரங்கள் சம்பாதித்துக் கொண்ட(தீய)வற்றினாலேயாகும்ன்னு சொல்லியிருக்கேன்.”
என்றார்.
”.... ...!!!”
“எத்தனையோ சின்னக்
குழந்தைங்க கொடுமையான நோயோட வேதனையில் துடிதுடிச்சு சாகறாங்க... காமவெறி பிடிச்சவங்க
பிஞ்சு மலர்கள கசக்கி எறியறாங்க... போர்கள் கலவரம்னு வன்முறையில சிதைஞ்சு போறாங்க...
பலர் ஒருவேள உணவுகூட இல்லாம பட்டினியால சாகறாங்க... இதையெல்லாம் இங்க உட்காந்து...
அணுவணுவா... நான்தான் டிசைன் செய்யறேனா... ஏப்பா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?
சரி அந்த மாதிரிக் கொடுமைகளைச் செய்வியா... இல்ல தடுப்பியா..?”
“என் கண்முன்னால நடந்தால்
முடிந்தவரை தடுக்கப் போராடுவேன், குறைந்தபட்சம் மனதால் வெறுப்பேன்!”
“நீ மட்டுமல்ல மனிதாபிமானமுள்ள
ஒவ்வொரு மனிதனும் அதைத்தான் செய்வான்!”
“... ....!”
“ஆனால் நான் மட்டும்
தொடர்ந்து கொடூரமான செயல்களை திட்டம் போட்டு ரசித்து செயல் படுத்திக்கிட்டே இருப்பேன்
அப்படித்தானே?”
“அந்த கொடூரமான செயல்களைப்பத்தி
உங்களுக்கு முன்கூட்டியே எதுவுமே தெரியாதா?”
“ம்ம்ம்... தெரியும்..!”
என்றார் தயக்கமாக.
“மனிதர்கள் தங்களுத்
தாங்களே இந்த கொடுமைகளைச் ஏற்படுத்திக்கிட்டாங்கன்னே வச்சுக்குவோம். மனிதாபிமானம் இருக்கிற
ஒவ்வொரு மனிதனும் அதை தடுக்க முயற்சி செய்யும் பொழுது, மனிதர்களைவிட அன்பும், அருளும்
நிறைந்த, சர்வவல்லமையுடையவரான நீங்கள் தடுத்திருக்கலாமே?!”
”என்னால தடுக்க முடியும்,
நானே எல்லா விஷயத்திலும் தலையிட்டுகிட்டு இருந்தா மனுஷன் சோம்பேறியாயிருவான். தீமைகளைத்
தடுக்க வேணும் என்ற சிந்தனையே அவனுக்கு இல்லாம போயிரும்!”
”அப்ப... மனிதர்களுக்கு
சுயமாக முடிவெடுக்கும் தன்மை இருக்குன்னு சொல்றீங்களா...?”
“ஆமாம் அப்படித்தான்
!”
“ஒவ்வொரு பொருளையும்
விதியுடன்தான் படைத்ததாகச் சொல்றீங்க. மனிதர்கள் சுயமாக முடிவெடுக்கிறாங்க என்றால்
விதிக்கு இங்கே என்ன வேலை?”
”விதியைப்பற்றி மனிதர்களால்
புரிஞ்சுக்க முடியாது...!”
“இதுல புரிஞ்சுக்கறதுக்கு
ஒன்னுமில்லை. நான் கேட்கறதுக்கு பதில் சொன்னால் மட்டும் போதும்!”
“விதியைப்பத்தி பேச
நான் விரும்பலை..!”
“சரி... மனிதர்கள்
தாங்களே சுயமாக முடிவுகளை எடுத்து அழிஞ்சு போறாங்கன்னு வச்சுக்குவோம்.... அதுக்காக
ஒன்னுமே தெரியாத அப்பாவிகளை பலி கொடுக்கணுமா?”
“மனிதர்களை நான் தேர்ந்தெடுக்க...
வேற வழி..?”
“எதுக்குகாக தேர்தெடுக்கிறீங்கன்னு
நான் தெரிஞ்சுக்கலாமா...?”
”என்னப்பா... குர்ஆனைப்
படிச்சிருக்கேன்னு சொல்லற... மனிதர்களுக்கு
சொர்க்கத்தையும் முடிவில்லாத இன்பங்களையும் பரிசா கொடுக்கறதுக்குத்தான்.”
“சொர்க்கத்தைப்பத்தி
நிறைய பேச வேண்டிருக்கு அதை அப்புறமா கேட்டுக்கிறேன். சரி... எப்படி தேர்ந்தெடுக்கிறீங்க...
இதனால உங்களுக்கு என்ன லாபம்!?”
”வெவ்வேறு சூழல்களில்
மனிதர்கள் எப்படி நடந்துக்கிறாங்க என்பதை அடிப்படையாக வச்சுதான்! மனிதர்களுக்கு இந்த
உலகம் ஒரு சோதனைக்களம். பள்ளிக் கூடத்தில ஆசிரியர்கள் வைக்கிற தேர்வு மாதிரிதான் இதுவும்.
தேர்வுனால ஆசிரியருக்கு என்ன லாபம்? ஒருத்தரோட
நன்மைக்காக அவரை ஒரு காரியத்த செய்யச் சொல்லி நாம சொன்னா, அதனால நமக்கு ஏதோ லாபம் இருக்குன்னு
சொல்லறது அர்த்தமில்ல!”
“.... ...”
“மனிதர்கள்கிட்ட இருந்து
எதையும் நான் எதிர்பார்கவே இல்லை எனக்கு அது தேவையுமில்லை”
“சிறந்தவர்களை உருவாக்கறதும்,
அவங்களோட திறமைய முறையான ஒரு பரீட்சை வழியா மதிப்பீடு செய்து சமுதாயத்துக்கு சொல்ல
வேண்டியது ஒரு ஆசிரியரோட கடமை. அந்த ஆசிரியரை
அவ்வாறு செய்யச் சொல்லறது சமுதாயம்தான். அது மனித சமுதாயத்தை மேலும் முன்னொடுத்துச்
செல்றதுக்கு அது உதவுகிறது.
உங்களுக்கு இந்த மாதிரி சோதனை செய்ய வேண்டிய தேவை
என்ன? அப்படி உங்கள் செய்யச் சொன்னது யாரு? இல்லை உங்களோட இந்த தேர்வு யாருக்கு, எதுக்கு
உதவுதுன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?”
“மனிதர்களுக்குத்தான்”
“சோதனைக்களத்தை உருவாக்கினது
யார்?”
“நான்தான் இதையெல்லாம்
உருவாக்கி நிர்வகிக்கிறேன்!!!”
“சோதனைக்களத்தை உருவாக்கிட்டு...
அதுல நடக்கிற தவறுகளை சுட்டிக்காட்டினால் மனிதர்கள் செய்த தவறுன்னு குர்ஆன் வசனத்தை
சொல்லி பொறுப்பை தட்டிக்கழிக்கிறீங்களே...
ஏன் நீங்க உருவாக்கின சோதனைக்களத்தில நடக்கிற இனி நடக்கப் போகிற விஷயங்கள் உங்களுக்குத்
தெரியுமா தெரியாதா...?”
“இதைத்தான் அப்பவே
சொன்னேனே... எனக்குத் தெரியும்..!”
“எப்படி...?”
“... ...?!”
“தயங்காம... சொல்லுங்க..”
“அய்யா... குர்ஆன்
4:78-ல அவர்களுக்கு
ஏதேனும் நன்மை ஏற்பட்டால் "இது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' என்று கூறுகின்றனர்.
அவர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் "இது உம்மால் தான் ஏற்பட்டது'' என்று கூறுகின்றனர்.
"அனைத்தும் அல்லாஹ் விடமிருந்தே'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! இந்தச் சமுதாயத்திற்கு
என்ன நேர்ந்தது? எந்தச் செய்தியையும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லையே! இப்படி இருக்கே..? என்றேன்.
“ஏப்பா... விதியப்பத்தி கேள்வி கேட்கறத நீ விடவே
மாட்டியா...!”
”நீங்க சொல்ல வேண்டாம்.
நானே சொல்லறேன். உங்க குர்ஆனுடைய பெரும்பாலான
பகுதிகள் இதைத்தான் சொல்லுது உதாரணத்திற்கு,
(Q 14:04)…அல்லாஹ் தான் நாடியவரை வழி தவறச் செய்கிறான்; இன்னும் தான்
நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்… (Q 76:30) அல்லாஹ் நாடினாலன்றி (எதையும்) நீங்கள்
நாடமாட்டீர்கள்.
இங்கு அல்லாஹ்வுடைய
நாட்டம்தான் மனிதனை இயக்குவதாக குர்ஆன் சொல்லுது! அப்படியானால் ஒருத்தன் மனிதாபிமானமுள்ளவனாக
இருப்பதும், மிருகங்களைவிட கீழாக நடந்துகொள்வதற்கும் உங்களுடைய நாட்டம் மட்டும்தான்
காரணம். ஆனால் நீங்க என்னடான்ன, மனிதர்கள்மேல பழியப் போடறீங்க! முதல்ல உங்க குர்ஆனைத் திருத்துங்க, அப்புறமா மனுஷங்க
மேல பழியப் போடலாம்!”
“ம்ம்... நான் தான்
சொன்னேன்... எல்லாமே நான் சொன்னதுதான்...! இப்ப என்ன செய்யறது...! அன்றைக்கு அரபிகளிடம்,
எல்லாம் எனக்குத் தெரியும் உன்னை காஃபிரக்கறது நான்தான்னு பந்தா... விடப்போய்... கடைசியில
எனக்கு நானே ஆப்பு வச்சிக்கிட்ட மாதிரி ஆயிருச்சு!” என்று சலித்துக் கொண்டார்.
”அப்ப... விதி... இருக்கா...
இல்லையா? குர்ஆனைவிட ஹதீஸ்கள் விதியோட வலிமையைப்பற்றி நல்லாவே சொல்லுது அதையும் சொல்லட்டுமா?”
“ஆள..விடுப்பா என்னால
குர்ஆனுக்கே பதில் சொல்ல முடியல இதுல ஹதீஸ் வேறா..? விதி... இருந்தா சிந்திச்சு பாருங்கன்னு
சொல்லியிருக்கக் கூடாது! சிந்தித்து முடிவெடுக்கும் தன்மையும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட
விதியும் ஒன்னுக்கொன்னு எதிரெதிரானது!”
“விதி இருக்கா...?”
“எல்லாம் விதிப்படிதான்
நடக்குதுன்னா... மறுமையும் தீர்ப்பு நாளும் அவசியமே இல்லைப்பா....!” என்றார்.
”அப்ப... விதி இல்லையா...
?”
“நடந்தது, நடக்க இருக்கற
நிகழ்வுகள் எதுவுமே என்னோட கட்டுப்பாட்டில் இல்லைன்னு சொன்னா எவன் என்னை கடவுளா மதிப்பான்?”
“என்னதான் சொல்ல வர்றீங்க..!?”
“எனக்கும் அதுதான்
இன்னும் புரியல... தீர்ப்பு நாள் அன்றைக்கு அவனவன் இப்படிக் கிளம்பினால் என்னோட பொழப்பு
நாறிப் போகும்! அதனாலதான் இன்னும் உலகத்தை அழிக்காம வச்சிருக்கேன்! ஏதாவது ஐடியா இருந்தா
சொல்லேன்” என்றார்.
“ஐடியா எதுக்கு...
உலகத்தை அழிக்கவா?”
“அட... அதுக்கு...
இல்லப்பா...! இந்த விதிக் குழப்பத்த சமாளிக்க... ஏதாவது ஐடியா இருந்தா சொல்லேன்!” என்றார்
அப்பாவியாக...
“அதானே கேட்டேன்...
உலகத்தை அழிக்க உன்னோட ஜிஹாதிகளும் அவங்கள வளர்த்துவிடற வளைகுடா நாடுகளும், அமெரிக்காவும்
போதுமே!” என்றேன்.
“ஐயோ... ஜிஹாதியா..!”
என்று அதிர்ந்து அலறினார்.
தொடரும்...
தஜ்ஜால்