அல்லாஹ்வின் மகன்!(?)
-6
கடந்த
பதிவில் கலப்பான விந்துத் துளியைப்பற்றி கவனித்துக் கொண்டிருந்தோம். முஹம்மது பெண்களுக்கு
விந்து, நீர் வடிவத்தில் வெளியாகும் என்கிறார். அது குழந்தையின் தோற்றத்தை நிர்ணயிப்பதாகவும்
கூறுகிறார். பெண்களுக்கு விந்து வெளியாகுமா?
அப்படி ஒன்று இருக்கிறதா?
முஹம்மது,
விந்து என்று எதைக் குறிப்பிடுகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் நானும்
கூறிவிடுகிறேன். இணை சேருவதற்கு ஏதுவாக, பெண்ணுருப்பிலிருந்து
வெளியாகும் நிறமற்ற திரவம். உம்மு ஸலமா முஹம்மதின் தவறை சுட்டிக் காட்டிய பின்பும்
முஹம்மது தனது உளறலை நிறுத்தாமல் ”நன்றாய் கேட்டாய்! ஆம்!
அப்படி இல்லையென்றால் அவளுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது?” என்று
மேற்கொண்டும் உளறுகிறார்.
குர்ஆன் 76:02 வசனத்திற்கு அண்ணன் பீஜே தரும் விளக்கத்தைப்
பார்போம்
207. இனப்பெருக்கத்தில்பெண்களின்பங்கு
மனிதன் படைக்கப்பட்டதைக் கூறும் போது விந்துத்துளியிலிருந்து
படைத்ததாகப் பலவசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். துளி' என நாம் மொழிபெயர்த்திருந்தாலும்,
விந்துத்துளியில் உள்ள ஒரு உயிரணுவிலிருந்து மனிதனைப் படைத்ததாகவும், அது கலப்புவிந்துத்துளி
எனவும் இந்தவசனத்தில் (76:2) இறைவன் கூறுகிறான்.
குர்ஆன் 76:02
மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத்
துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம்...
குர்ஆன்
76:02-ல் விந்துத்துளியிலிருந்து படைத்ததாக மட்டுமே உள்ளது; விந்துத்துளியிலுள்ள உயிரணுவிலிருந்து
மனிதனைப் படைத்ததாகக் கூறுவது அண்ணன் பீஜேவிற்கு வந்த தனிப்பட்ட வஹீயாக இருக்கலாம்.
நாம் அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.
ஆணிடமிருந்து வெளிப்படும் உயிரணு, பெண்ணிடமிருந்து
வெளிப்படுகின்ற சினைமுட்டையுடன் இரண்டறக் கலந்து, பிறகுதான் அது பெண்ணின் கருவறைக்குச்
சென்று மனிதனாக உருவாகிறது.
மனித உற்பத்தியில் ஆணுடைய உயிரணுவும்,
பெண்ணுடைய சினைமுட்டையும் கலந்தாக வேண்டும் என்ற அறிவியல் உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு
முன்பே திருக்குர்ஆன் கூறி இது இறைவனின் வார்த்தைதான் என்பதை நிரூபிக்கிறது.
onlinepj.com
ஒரு
கரு உருவாக பெண்ணின் சினை முட்டையின் பங்களிப்பு தேவையாக இருக்கிறது என்பதை அல்லாஹ்வோ,
முஹம்மதுவோ அல்லது முஹம்மதின் காலத்தில் அரேபியாவில் வாழ்ந்த எவரேனும் நினைத்தாக ஒரே
ஒரு குர்ஆன் வசனம் அல்லது ஹதீஸ் அல்லது ஏதாவது
ஒரு தகவலை இவர்களால் காண்பிக்க முடியுமா?
எதைச்
சொன்னாலும் நம்புதற்கு ஒரு கூட்டம் இருக்கிறதென்ற தைரியத்தில்தான், அல்லாஹ்வும், முஹம்மதுவும்
கனவிலும் நினைக்காத செய்திகளை குர்ஆனில் இருப்பதாக அண்ணன் பீஜே அடித்து விளாசுகிறார்.
பெண்களுக்கு
ஏற்படும் மாதவிடாயைப்பற்றி முஹம்மதிடம் கேட்கப்பட்டபொழுது,
குர்ஆன் 2:222
மாதவிடாய்
பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை
விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்!...
மாதவிடாய்
பற்றி தன்னிடம் கேட்கப்பட்டால் அதைப்பற்றி இங்கு விளக்கியிருக்க வேண்டும். ஆனால் முஹம்மதோ
உடலுறவைப்பற்றி பேசுகிறார். இதுதான் முஹம்மதின் அறிவியல்! பெண்ணின் கருமுட்டை என்றொரு
பொருள் இருப்பதை இவர்கள் அறியவே இல்லை! அன்றைய அறிவியலின் வளர்ச்சி அவ்வளவுதான். இதற்காக
நாம் முஹம்மதைக் குறைகூற முடியாது. அவரென்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்?
இமாம்
தபரியின் குர்ஆன் விரிவுரையிலிருந்து...
ஆதமும்
அவரது துணைவியாரும் அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றவில்லையென்பதை அறிந்த அல்லாஹ் அவர்களை
விசாரிக்கும் பொழுது..
...
Then Adam became fugitive in the garden, and his Lord called to him: “Adam, are
you running away from me?” He said: “No may Lord, but I am ashamed before you.”
He said: “Adam, from where wewr you approached? He said: “From Eve, Lord.” So
God said: “I shall cause her to bleed
once every month, just as you have this tree to bleed. I shall make her
foolish, although I created her mild tempered. I shall make her have a painful
pregnancy and childbirth, although I made her have an easy pregnancy and
childbirth.”
Ibn
Zaid said: If it were not for the affliction which befell Eve, the women of
this world not menstruate, and they mild tempered, and have easy pregnancies
and child births.
மாதவிடாய்
என்பதைப்பற்றி அன்றைய மக்களின் அறிவு இந்த அளவிற்குத்தான் இருந்திருக்கிறது. முஹம்மதுவின் மரணத்திற்குப் பின் சுமார் 200 ஆண்டுகளுக்குப்பின்
இமாம் தபரியின் தொகுப்புகள் உருவாகிறது. அப்பொழுதும் கூட மாதவிடாயின் காரணத்தை அன்றைய
அரேபியர்கள் அறிந்திருக்கவில்லை; அதனால்தான் மாதவிடாயை அல்லாஹ்வின் தண்டனை என்ற கருத்தை
பதிந்துள்ளனர்.
சரி...!
முஹம்மதிற்கும் மற்றவர்களுக்கும் தெரியாமல் இருக்கலாம்; அறியாமையில் தவறாகப் பேசலாம்;
நுண்ணறிவாளன் என்று தன்னைத்தானே பீற்றிக் கொள்ளும் அல்லாஹ் அறியவில்லையா? தனது செல்லக்குட்டி
தூதர் உளறிக் கொட்டியதை அல்லாஹ் சரி செய்திருக்கலாமே? சிந்திக்க மாட்டீர்களா...? சிந்திக்க மாட்டார்களா...? என்றொல்லாம் அல்லாஹ்
கெஞ்சுவதைப்பற்றி முஹம்மதின் காலத்து மனிதர்களில் எவரேனும் சிறிதேனும் சிந்தித்திருந்தால்
இப்படி அல்லாஹ்வின் டவுசர் இப்படிக் கிழிந்து தொங்கி இருக்காது.
குர்ஆன் 96:2
அவன்
மனிதனை (عَلَقٍ -alaqin) கருவுற்ற சினை
முட்டையிலிருந்து படைத்தான்.
’அலக்’ என்பதற்கு கருவுற்ற சினை முட்டை என்று அண்ணன் பீஜே விடும் பீலா’வை அவரது விசிலடிச்சான்
குஞ்சுகளைத் தவிர மற்ற முஸ்லீம்கள் ஏற்கவில்லை.
இருப்பினும்
’அலக்’ என்ற சொல்லிற்கு, மற்றவர்களின் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் மீறி, இல்லாத
ஒரு பொருளை, அண்ணன் பீஜே திணிப்பதற்கான காரணம் என்னவென்பதை நாம் கவனிக்க வேண்டும்!
365. கருவுற்ற சினை முட்டை
இவ்வசனங்களில் மனிதனின் துவக்க நிலையைச்
சொல்லும் போது 'அலக்' 'அலக்கத்' என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இச்சொல்லுக்குப்
பல அர்த்தங்கள் உள்ளன.
இரத்தக் கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும்
நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது என்றெல்லாம் பொருள் உண்டு.
இந்த இடத்தில் இரத்தக் கட்டி என்று பொருள்
கொள்ள முடியாது. கருவில் இரத்தக் கட்டி என்று ஒரு நிலை இல்லை. தொங்கிக் கொண்டிருக்கும்
நிலை எனவும் பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் மனிதனின் மூலத்தைக் கூறும் போது அது ஒரு
பொருளாகத் தான் இருக்க முடியும். தொங்கும் நிலை என்பது ஒரு பொருள் அல்ல.
மனிதப் படைப்பு பற்றி இறைவன் வரிசைப்படுத்திக்
கூறும் போது, முதலாவதாக 'நுத்ஃபா' என்ற நிலையைக் குறிப்பிடுகிறான். இரண்டாவதாக 'அலக்கத்'
என்ற நிலையைக் குறிப்பிடுகிறான். 'நுத்ஃபா' என்பது ஆணுடைய விந்திலுள்ள உயிரணுக்களாகும்.
மனிதன் உருவாவதற்கு ஆணுடைய நுத்ஃபா எனும் உயிரணு மட்டும் போதாது. பெண்ணுடைய சினை முட்டையுடன்
ஆணின் உயிரணு சேரும் போது தான் கரு உருவாகும். ஆணின் உயிரணுவும் பெண்ணின் சினை முட்டையும்
இணைந்த இந்த நிலை தான் உயிரியல் அடிப்படையில் இரண்டாவது நிலையாகும்.
இதன்படி நுத்ஃபாவுக்கு அடுத்த நிலையாகக்
குர்ஆனில் கூறப்பட்ட 'அலக்' என்பது இந்த நிலையைத் தான் குறிக்கும் என்பதை எளிதாக விளங்க
முடியும். மேலும் அலக் என்ற சொல், பல அர்த்தங்களைக் கொண்டதாக இருந்தாலும் 'ஒன்றுடன்
ஒன்று கோர்த்துக் கொள்வது' என்ற பொருளில் தான் மிக அதிகமான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்னது.
ஆணுடைய உயிரணு, பெண்ணின் சினை முட்டையுடன்
ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்வதால் இந்த நிலையைக் குறிப்பிட இதை விடப் பொருத்தமான
வேறு சொல் இருக்க முடியாது.
இதனால் தான் சுருக்கமாக கருவுற்ற சினை
முட்டை என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம். இரண்டு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பது என்பது
இதன் நேரடிப் பொருள். இதன் கருத்து தான் கருவுற்ற சினை முட்டை.
Onlinepj.com
’عَلَقٍ –alaqin-அலக்’
என்றால் இரத்தக்கட்டி அல்லது அட்டைப் பூச்சி, பற்றித்
தொங்குகிற நிலை என்பதுதான் நேரடிப் பொருள். குர்ஆன் தவறான தகவலைக் கூறுகிறதென்பதை
அவர் மனப்பூர்வமாக உணந்திருக்கிறார் என்பதை அண்ணன் பீஜே கொடுத்திருக்கும் மேற்கண்ட
விளக்கம் வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது. தான் உயிராக மதிக்கும் கொள்கை மற்றவர்களால்
எள்ளி நகையாடப்படக் கூடாது என்ற எண்ணத்தில், பிற்காலாத்தைய கண்டுபிடிப்பான சினைமுட்டையை,
அண்ணன் பீஜே குர்ஆனில் லாகவமாக நுழைத்து, கிழிந்து போன அல்லாஹ்வின் ‘டவுசருக்கு’ ஒட்டுபோட
முயற்சிக்கிறார். எனவே அண்ணன் பீஜேவின் குறிப்பிட்ட இந்த மொழிபெயர்ப்பு ஏமாற்றுவேலையை
இனி நாம் அதிகமாக விமர்சிக்கத் தேவையில்லை.
பொதுவாக
நாம் எந்த இஸ்லாமியரிடம் பேசினாலும், அவர்கள் முதலில் முன்வைக்கும் வாதம் குர்ஆனில்
அறிவியல் பற்றிய முன்னறிவிப்புகள் இருக்கிறது என்பதுதான். அதிலும் கருவளர்ச்சியைப்பற்றி
குர்ஆன் கூறுகிறதென்ற வாதம் மிக முதன்மையானது. இது பலராலும் பலவிதமாக மறுக்கப்பட்டிருந்தாலும்
இஸ்லாமியர்கள் மீண்டும் மீண்டும் இதே உளறலைக் கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்தப்
பதிவில் அவர்களுக்கு மறுப்பெழுதுவது நமது நோக்கமல்ல இருப்பினும் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன்.
1.
ஆணுடைய விந்து நீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து
வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது. கரு உருவக்கத்தில் பெண்ணின் பங்களிப்பைப்பற்றி
குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் அறியவே இல்லை. மாறாக பெண்ணிற்கு விந்து வெளியாகும் என்று
உளறுகிறது.
2.
Ovary எனப்படும் சூலகத்தின் பங்களிப்பைப்பற்றி குர்ஆனுக்கு எதுவுமே தெரியவில்லை.
அதனால் மாதவிடாய்பற்றி சரியான பதிலை அதனால் கூற முடியவில்லை.
3. விந்து மட்டுமே சதைக்கட்டியாக மாறுவதாகக் கூறுவது, குர்ஆனின் அறியாமையைக்
காண்பிக்கிறது.
4. கருக்கட்டப்பட்ட முட்டை கர்பப்பை குழாய் என அழைக்கப்படும் பலோப்பியன் குளாய்
(FALLOPIAN TUBE) ஊடாக கருப்பையை சென்றடைகிறது. பின்னர் கர்ப்பப்பை படிப்படியாக வளருகின்றது.
ஆனால், ஹதீஸ் கருப்பையிலிருக்கும் விந்து கருவாக மாறுவதாகக் கூறுகிறது.
5.
ஆக கரு உருவாகும் முறை பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் கருத்து அடிப்படையிலேயே
தவறாக இருக்கிறது. மேற்கொண்டு குர்ஆன் கூறும்(!) கருவளர்ச்சி பற்றி விவாதிப்பது அர்த்தமற்றது.
ஒருமுறை
வெளியேறும் 2-4மிலி விந்து நீரில் சுமார் 100 மில்லியனிலிருந்து 300 மில்லியன் விந்தணுக்கள்
இருக்கும். இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது. இந்த விந்தணுக்கள்
ஒரு தலைப்பகுதியும் நீண்ட வால் பகுதியும் கொண்டவை. இந்த வால்பகுதியை அசைத்து அசைத்து
விந்தணுக்களால் மிக மிக வேகமாக நகர்ந்து செல்ல முடியும். ஆணின் உடலில் இருந்து வெளியேறிய
இந்த விந்தணுக்கள் சுமார் 72 மணி நேரம் வரையில் உயிரோடிருக்கும் என்கிறது அறிவியல்.
கருக்கட்டலில்
வெற்றிபெற்ற ஒரு விந்தணுவைத்தவிர மற்ற 100-300 மில்லியன்கள் விந்தணுக்களை எந்தக் கணக்கில்
சேர்ப்பது? இவைகள் ஆன்மா அல்லது ஆத்மாக்கள் இல்லையா?
குர்ஆன் 32:8
பிறகு
அவனது சந்ததிகளை அற்பமான நீரின் சத்திலிருந்து உருவாக்கினான்.
32:9 பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான்.
அதென்ன
நீரின் சத்து? விந்துவில், கால்சியம், குளோரைட், சிட்ரேட், குளுக்கோஸ், லேக்டிக் அமிலம்,
மெக்னிஸியம், பொட்டாசியம், சோடியம், யூரியா என்று நிறைய சத்துப் பொருட்கள் இருக்கிறது
இதில் எந்த சத்துவிலிருந்து படைத்தான்? சத்து என்பதற்கும் உயிரணு என்பதற்கும் நிறைய
வேறுபாடு இருக்கிறது.
கருக்கட்டல்
நிகழ்ந்து கருவளரத் துவங்கினாலும் அது உயிரற்ற ஜடப்பொருள்தான். கருவை அல்லாஹ் விரும்பியவாறு
சீரமைத்த பின்னர் அதனுள் தனது உயிரை ஊதுவானாம். அப்படியானால் அல்லாஹ் அற்பமான நீரின்
சத்திலிருந்து உருவாக்கியதை உயிரென்று அழைக்க முடியாது.
குர்ஆன் 4:1
மனிதர்களே!
உங்களை ஒரே ஒருவரிலிருந்து(نَفْسٍ-nafsin)
படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான்...
பீஜே
மொழிபெயர்ப்பு
இதுவரை
நாம் பார்த்த விளக்கத்தின்படி, படைத்தான்... படைத்தான்.. என்று அல்லாஹ் கூறிக் கொண்டிருப்பது
உடல்களைத்தான் உயிர்களை அல்ல என்பது உங்களுக்குத் தெளிவாகியிருக்கும். அதாவது ஆதாம்
என்ற உடலிலிருந்து மட்டுமே எண்ணற்ற மனித உடல்கள் உருவானதாக பொருள் கொள்ளலாம்.
குர்ஆன் 4:1
மனிதர்களே!
நீங்கள் உங்கள் இரட்கனுக்குப் பயந்து(நடந்து) கொள்ளுங்கள். அவன் எத்தகையவனென்றால்,
உங்கள் (யாவரையும்) ஒரே ஆத்மாவிலிருந்து(نَفْسٍ-nafsin)
படைத்தான் அதிலிருந்து அதற்குரிய ஜோடியையும் படைத்தான்...
இக்பால்
மதனி மொழிபெயர்ப்பு
ஒருவர்
نَفْس- நஃப்ஸ் என்பதை தனிமனிதன்(Self)
என்பதாகவும் மற்றொருவர் ஆத்மா என்றும் மொழிபெயர்க்கின்றனர். நடைமுறையில் நஃப்ஸ் என்பதை
ஒருவரது ஆளுமை என்ற பொருளில்தான் பயன்படுத்தப்படுகிறது. நஃப்ஸ் என்ற சொல்லை ஆங்கிலத்தில்
Soul என்று மொழிபெயர்க்கின்றனர். Soul என்பதை Immortal part of Human being எனப்பொருள்
கொண்டால் ஆன்மா அல்லது ஆத்மா என்ற பொருளுக்கு நெருக்கமாக வரும். நான் சொன்னால் நீங்கள்
நம்பமாட்டீர்கள், அண்ணன் பீஜே என்ன சொல்கிறார் என்பதை கவனியுங்கள்.
குர் ஆன் 3:185
ஒவ்வோர்
உயிரும் (نَفْسٍ-nafsin)
மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. கியாமத் நாளில்தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும்.
பீஜே
மொழிபெயர்ப்பு
இப்பொழுது
நமது கேள்வி نَفْس- நஃப்ஸ் என்றால் என்ன?
எத்தகையது?
ஒரே
ஆத்மாவிலிருந்தே மனிதர்கள் அனைவரும் படைக்கப்பட்டனர் என்றால் ஆத்மா பல்கிப் பெரும்
தன்மையுடையது என்றாகிறது. ஆதாமின் முதுகுகளிலிருந்தது (குர்ஆன் 7:172-அண்ணன் பீஜே விளக்க
எண் 189) அல்லாஹ் வெளிப்படுத்தியது ஆன்மாக்களையா
அல்லது ஆன்மாக்கள் இருப்புவைக்கப்பட இருக்கும் கூடுகளையா? ஆன்மா பாலூட்டி வகையைச் சார்ந்ததா?
அல்லது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வகையைச் சார்ந்ததா? நான் சொல்லவில்லையென்றாலும்,
குர்ஆன் தெளிவானது விளக்கமானது என்பதையும் அவ்வப்பொழுது நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
காதியாணிகள் அல்லது ரஷாது கலீபாவின் அஹ்லே குர்ஆனியவாதிகளின் மொழிபெயர்ப்பை தீண்டத்
தயங்கும் முஸ்லீம்கள், தகிடுதத்தம் நிறைந்த அண்ணன் பீஜே செய்த மொழிபெயர்ப்பைஎவ்வாறு
அனுமதிக்கின்றனர் என்பது புரியவில்லை.
முதலில்
படைக்கப்பட்ட அந்த ஆத்மா எது?
இதென்ன
புதுக்குழப்பம் என்கிறீர்களா? இதுதான் முஹம்மதின்
உண்மை முகம். தற்காதல் கோளாறு எப்படியெல்லம் வேலை செய்கிறது என்பதை காண்பிக்கவே நமது
மௌலாலான அஸீஸ் அவர்களின் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை இங்கு பதிந்திருக்கிறேன். முஹம்மதின்(குர்ஆனின்) அனைத்து உளறல்களுக்கும் தற்காதல் கோளாறும் அவரது அறியமையையும்தான்
காரணம். இதைப்பற்றி பிறகு பேசலாம். நாம் ஈஸாவின் விஷயத்தை கவனிக்க வேண்டும்; பாவம்
அவர் வேறு நீண்ட நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கிறார்.
Oh..
Jesus forgive me...
தொடரும்...