Wednesday, 20 November 2013

பூமராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி-6

தஜ்ஜால் அழிப்பவன்:
சரி... //என்னோடு எந்த விவாதத்திலும் பங்கு கொண்டு ஜெயித்ததுமில்லை..!// இதென்ன?

பூம ராங் :
அந்த கற்பழிப்பு விசயத்தில் ..நீங்கள் எப்படியெல்லாம் குரங்கு நடனம் போட்டீர்கள் ..உங்களால் அந்த வாதத்தில் வெல்ல முடிந்ததா..?

தஜ்ஜால் அழிப்பவன் :
கற்பழிப்பு விசயத்தில் .காலில் விழுந்து சரணடைந்ததை மறந்துவிட்டீர்களா பூமராங்?

பூம ராங் :
https://www.facebook.com/.../posts/304826719663994...

பூம ராங்:
தஜ்ஜால் அழிப்பவன்,
//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது?///

திருக்குர்ஆன் ஒன்றும் பைபிள் அல்ல..! திருக்குர்ஆன் மனிதர்களுக்கான முழுமையான மார்க்கத் தரிசனம்.! அதன் அடிப்படையில் கற்பழிப்புக்கு என்ன தண்டனை(மரண தண்டனை) என்பதை கூறி விட்டேன்..விவாதிக்க முன் வந்தால், அது சம்பந்தமான வசனங்கள் எங்கே, எப்படி இருக்கிறது என்பதை தெளிவு படுத்துவேன்..!

எனது இந்த கூற்றுக்கு மாறாக கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்று உங்களால் நிறுவ முடிந்தால் செய்து பாருங்கள்..இது என்னுடைய சவால்..!

பிறகு இன்னொரு விஷயம், குருடு இரண்டு வகைப்படும்.. அகக்குருடு..புறக்குருடு..! புறக்குருட்டை கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் அகக் குருட்டான கருத்துக் குருட்டை ஒன்றுமே செய்ய முடியாது..
இருந்தாலும் உங்கள் கருத்துக் குருட்டை போக்க என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம்-இன்ஷாஅல்லாஹ் செய்வேன்..!
விவாதத்திற்கு ஒப்புக் கொள்ளுங்கள்..!

தஜ்ஜால் அழிப்பவன்:
நான் இன்னும் 30 நிமிடங்கள்வரை முகநூலில் இருப்பேன் அதற்குள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.
கற்பழிப்பிற்கான குர் ஆன்கூறும் தண்டனை என்ன்வென்பதை குர்ஆனிலிருந்து சுட்டிக்காட்டவும். இல்லையெனில் தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள்!

பூம ராங் :
அந்த முப்பது நிமிடங்களில் ..நீங்கள் புறமுதுகிட்டு ஓடிய விவாதத்தை கொஞ்சம் நோட்டமிடுங்கள் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
பூமராங், புரியவில்லையா? குர்ஆன் வசனத்தை மட்டும் காண்பியுங்கள்.

பூம ராங்:
மொத்தம் 414 காமன்டுகள் ..அற்புதமான உங்கள் குரங்கு நடனம்..ஹஹஹா ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
 பூமராங், புரியவில்லையா? குர்ஆன் வசனத்தை மட்டும் காண்பியுங்கள். 414 கமெண்டுகள் சென்றும் கற்பழிப்பிற்கான குர்ஆன் கூறும் தண்டனையைக் குறிப்பிடும் குர்ஆன் வசனத்தைமட்டும் கூறமாட்டேன் என்கிறீர்களே?

தஜ்ஜால் அழிப்பவன்:
 பூமராங் --- எங்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ.........ஏஏஏஏஏ?

பூம ராங் :
414 கமெண்டுகளையும் வாசிப்பவர்கள் புரிந்துக் கொள்வார்கள் ..உங்களது பொய்யையும் புரட்டையும் ..! நீங்கள் என்னத்தான் தலை கீழாக நின்று தவமியற்றினாலும் சத்தியமே வெல்லும்..! உங்களது நயவஞ்சகம் தோற்கும்..!

Mohamed Saleem :
வேபரம் ....என்றால் எதை குறிக்கும் தஜ்ஜால் ???

பூம ராங்:
 ///கற்பழிப்பிற்கான குர் ஆன்கூறும் தண்டனையைக் குறிப்பிடும் குர்ஆன் வசனத்தைமட்டும் கூறமாட்டேன் என்கிறீர்களே?/// அந்தப் பதிவிலே உங்களுக்கு பாடமே நடத்தியிருக்கிறேன்..நீங்கள் என்னிடம் தலையால் தண்ணீர் குடித்தீர்கள் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
//நயவஞ்சகம் தோற்கும்..!// நயவஞ்சகம் தோற்பதெல்லாம் இருக்கட்டும், கற்பழிப்பிற்கான குர்ஆன் கூறும் தண்டனையைக் குறிப்பிடும் குர்ஆன் வசனத்தைமட்டும் சொல்லுங்கள்

பூம ராங் :
இங்கே தரப்பட்டுள்ள தலைப்பிற்கு வாருங்கள் ..தஜ்ஜால் அழிப்பவன் ..! உங்கள் இஷ்டத்திற்கு என்னால் தலைப்பை மாற்ற முடியாது ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
தண்ணீர் குடிப்பது மோர் குடிப்பதெல்லாம் இருக்கட்டும் ,கற்பழிப்பிற்கான குர்ஆன் கூறும் தண்டனையைக் குறிப்பிடும் குர்ஆன் வசனத்தைமட்டும் சொல்லுங்கள்
இந்தக் கதையெல்லாம் வேண்டாம் பதிலைச் சொல்லுங்கள் பூமராங்

பூம ராங் :
உங்கள் நாத்திக கொள்கை படி திருமணம் செய்ய வேண்டுமா ..? குடும்ப அமைப்பு தேவையா ..இல்லையா..? உங்கள் கருத்துப் படி நாம் ஏன் உழைத்து சாப்பிட வேண்டும் ..ஏன் திருடி திங்கக் கூடாது ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
உண்மையிலேயே உங்களுக்குத் திறமையிருந்தால் பதிலைச் சொல்லுங்கள். அல்லது தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்

பூம ராங்:
இங்கே தரப்பட்டுள்ள தலைப்பிற்கு வாருங்கள் ..தஜ்ஜால் அழிப்பவன் ..! உங்கள் இஷ்டத்திற்கு என்னால் தலைப்பை மாற்ற முடியாது ..!
பூம ராங் உங்கள் நாத்திக கொள்கை படி திருமணம் செய்ய வேண்டுமா ..? குடும்ப அமைப்பு தேவையா ..இல்லையா..? உங்கள் கருத்துப் படி நாம் ஏன் உழைத்து சாப்பிட வேண்டும் ..ஏன் திருடி திங்கக் கூடாது ..?

தஜ்ஜால் அழிப்பவன் :
ஸாரி பூமராங் , உண்மையிலேயே உங்களுக்குத் திறமையிருந்தால் பதிலைச் சொல்லுங்கள். அல்லது தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்
நான் இதை வலியுறுத்திக் கேட்பதற்கான காரணம் ////இறையில்லா இஸ்லாத்தின் முதலாளி ‘தஜ்ஜால் அழிப்பவன்’ என்னுடைய எந்த கேள்விக்கும் இது வரை பதில் தந்ததில்லை..என்னோடு எந்த விவாதத்திலும் பங்கு கொண்டு ஜெயித்ததுமில்லை..! //

பூம ராங் :
உங்கள் நாத்திக கொள்கை படி நாம் ஏன் இந்த உலகத்தில் நன்மை செய்ய வேண்டும் ..? ஏன் பொய் சொல்லக் கூடாது ..? ஏன் திருடக் கூடாது ..? ஏன் நமது உடல் இச்சையை தீர்த்துக் கொள்ள..நமக்கு பிடித்தமான பெண்ணை கற்பழிக்கக் கூடாது..?

உங்கள் தோழன்:
பூமராங் இஸ்லாத்தின் மீது தஜ்ஜால் அவர்கள் கூறியிருக்கும் குற்றச்சாட்டை பொய்யென நிரூபிக்க குரான் வசனத்தை இட்டு சத்தியத்தை நிலைநாட்டுங்கள்.்

தஜ்ஜால் அழிப்பவன்:
பூமராங்....??????

பூம ராங்:
ஏன் தாயை மதிக்க வேண்டும் ..? தந்தையை ..நம் நாட்டை போற்ற வேண்டும் ..? ஏன் நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டும் ..? ஏன் நாம் சுயநலமாய் வாழக் கூடாது ..?

உங்கள் தோழன் :
பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆய்ட்டாரு..

பூம ராங் :
உங்கள் தோழன் ///. 414 காமன்டுகளைப் படித்துப் பாருங்கள் .. தஜ்ஜால் அழிப்பவனின் அற்புதமான குரங்கு டான்ஸ் காணலாம்..ஹஹஹா..!


தஜ்ஜால் அழிப்பவன் :
கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, அப்படி யொரு சொல்லே குர் ஆனில் கிடையாது என்ற எனது வாதத்தை பூமராங்கினால் வெற்றிகொள்ள முடியவில்லை!!!!

பூம ராங் :
உங்கள் தோழன் ///இங்கே தரப்பட்டுள்ள தலைப்பிற்கு வாருங்கள் .. ..! உங்கள் இஷ்டத்திற்கு என்னால் தலைப்பை மாற்ற முடியாது ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
தலைப்பை மாற்றவேண்டுமென்று யார் சொன்னார்கள்? கற்பழிப்பிற்கான குர்ஆன் கூறும் தண்டனையைக் குறிப்பிடும் குர்ஆன் வசனத்தைமட்டும் சொல்லிவிட்டு உங்கள் தலைப்பிலேயே நீங்கள் தொடரலாம்

உங்கள் தோழன்:
414 கமெண்டுகளை படிக்க எனக்கு நேரமில்லை தோழரே.. இஸ்லாத்தில் கற்பழிப்புக்கு என்ன தண்டனை என்பதை தங்களால் சில வரிகளிலேயே சொல்லிவிட முடியுமே?? இதற்கு ஏன் 414 கமெண்டுகளை நான் படிக்கவேண்டும்?

பூம ராங் :
////கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, அப்படி யொரு சொல்லே குர் ஆனில் கிடையாது என்ற எனது வாதத்தை பூமராங்கினால் வெற்றிகொள்ள முடியவில்லை!!!!//// கீழே விழுந்தாலும்..ஒரு காலை உயர்த்திப் பிடித்துக் கொண்டு .."நான் தோற்க வில்லை ..!" என்று ஒரு கோழை சொன்னது போல சொல்கிறார்..அந்தப் பதிவிலே கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை குறித்து போதிய விளக்கங்கள் கொடுக்கப் பட்டு விட்டது ..!
அதற்குத் தான் அந்த பதிவை முழுவதும் படிக்கச் சொன்னேன் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
இதுதான் நண்பர் பூமராங் கூறியிருக்கும் பதில்
//(11)பூம ராங் இன்னும் நீங்கள் குரானிலிருந்து கேட்டால் ..இருக்கிறது ..பொதுவான சட்டமாக குறிப்பிடப் பட்டுள்ளது ..5:33 ...33:58முதல் 61வரையுள்ள வசனங்கள் ..!//

குர் ஆனைப் பற்றிய அடிப்படை அறிவு துளிகூட பூமரங்கிற்குக் கிடையாது என்பதற்கு, இவர் குர்ஆனின் 5:33 –ம் வசனத்தை சுட்டிக்காட்டியிப்பதிலிருந்தே தெரிகிறது. 5:33 முஹம்மதைக் கடவுளின் தூதராக ஏற்றுக்கொண்டு பின்மறுத்தவர்களுக்கான தண்டனைகளைக் கூறுகிறது. ”43. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்” என்ற தலைப்பில் பீஜே எழுதியிப்பதை அரைகுறையாகப் புரிந்துகொண்டு இங்கே பிதற்றிக்கொண்டிருக்கிறார்.

அடுத்தது //...33:58முதல் 61வரையுள்ள வசனங்கள் ..!//
33: 58. நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.

33:59. நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

33:60. நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளோரும், மதீனாவில் பொய்களைப் பரப்புவோரும் விலகிக் கொள்ளாவிட்டால் (முஹம்மதே!) உம்மை அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வைப்போம். பின்னர் இங்கே குறைவாகவே உமக்கருகில் குடியிருப்பார்கள்.

33:61. அவர்கள் சபிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் எங்கு காணப்பட்டாலும் பிடிக்கப்பட்டு கொன்றொழிக்கப்படுவார்கள்.

இதைத்தான் உலகமாக ஆதாரமாகக் கூறுகிறார் இதில் கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனையைப்பற்றி எங்கே வருகிறது? பூமராங் திறமையிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்!! அல்லது தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்

பூம ராங் :
தஜ்ஜால் அழிப்பவன் /// இங்கே நீங்கள் உங்கள் இஸ்டத்திற்கு தலைப்பை மாற்ற அனுமதி இல்லை ..! இந்த பதிவிலுள்ள தலைப்பின் அடிப்படையில் நீங்கள் விவாதிக்க தயாரா ..இல்லையா ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
பூமராங், வெற்று நம்பிக்கைகளைக் கொண்டு விவாதிக்க முடியாது. முதலில் குர்ஆனைப் பொருளறிந்து படியுங்கள் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதையெல்லாம் நம்பி விவாதிக்க வந்தால் இப்படி மூக்குடைந்து நிற்க வேண்டியிருக்கும்.
நான் விடைபெறுகிறேன். ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் நான் சென்றபிறகு ஓடிவிட்டான் என்று சொல்லக் கூடாதல்லவா?

சலீம், அதை பொறுமையாகப் படித்துப் பாருங்கள். உறுதியாக கற்பழிப்பைப்பற்றி பேசுகிறது என்று நீங்கள் நினைத்தால் தனிதலைப்பாக பதியுங்கள் பிறகு விவாதிக்கலாம்.
சரி நான் விடைபெறுகிறேன் நான் சென்ற பிறகு ஓடிவிட்டான், மரத்திற்கு மரம் தாவிவிட்டான், பதில் சொன்னதேயில்லை என்று வெற்று ஜம்பமடிக்க வேண்டாம்.

பூம ராங்:
// நேர்வழி என்பது..இறைவன் யாருக்கு நாடுகிறானோ அவனுக்கு கிடைப்பது .. அதனால் நீங்கள் உங்கள் கோயபல்ஸ் பொய்களை இங்கே திரும்ப திரும்ப கூறி ..எப்படியாவது ..அந்தப் பொய்களை உண்மை போல காட்டி விட வேண்டுமென்று துடிக்கிறீர்கள்.. ஆனால் அது நடக்காது ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
கற்பழிப்பு பற்றி இந்த விவாதம் எங்களது இறையில்லா இஸ்லாமில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
நன்றி .....!!!! இனிய இரவு!!!!!

பூம ராங்:
Mohamed Saleem // நீங்கள் புதியதாக மறுபடியும் அதே கருத்துக் கொண்ட பதிவை இடுங்கள் ..அதிலே என்னையும் டாக் செய்யுங்கள் ..அதிலாவது தஜ்ஜால் அழிப்பவன் ஜெயித்துக் காட்டுகிறாரா ..பார்ப்போம் ..!

Mohamed Saleem:
//////மீண்டும்மீண்டும் எங்கோ வாங்கியதை இங்கு வந்தது கொட்டவேண்டம்


தஜ்ஜால் அழிப்பவன்:
ஸாரி பூமராங்... நீங்கள் திருந்தப் போவதில்லை!!!!


முற்றும்.

Friday, 15 November 2013

பூமராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி - 5

Mohamed Saleem:
தஜ்ஜால் அழிப்பவன்////பதில் புரியவில்லைய ??இல்லை இன்னும் விளக்கம் தேவையா ??பைபிள் விலக்கி சொல்வதை போல் சொல்லவேண்டும் என்று என்னுகிரிரோ ??உன்னதாபட்டு விளக்கம் போல் ?

தஜ்ஜால் அழிப்பவன்:
 ///பதில் புரியவில்லைய ??இல்லை இன்னும் விளக்கம் தேவையா ?? Mohamed Saleem, விவாதத்தின் கேள்வி என்ன என்பதை தயவு செய்து பாருங்கள். உங்களுக்கு சிரமம் வேண்டாம் நான் மீண்டும் அதை பதிகிறேன்,
//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது?///
நண்பர் பூமராங், மற்றும் அவரது நண்பர்கள் குழாமும் குர்ஆனிலிருந்து தக்க பதில்களைத் தருவதாகக் கூறியிருந்தனர். அதை கொடுத்தால் விவாதம் முடிந்து விட்டது. இவ்வளவுதான் இதை செய்யாமல் ஏன் ”ஜவ்வாக” இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

Mohamed Saleem:
தஜ்ஜால் அழிப்பவன், அதான் மேலே ஆஷிக் அவர்கள் தெளிவாகக் சொல்லிவுல்லரே கற்பழிப் என்ற சொல்லு ஓரு அனசரியமான வார்த்தை அதை எங்கள் இஸ்லாம் அது போல் உள்ளவர்த்தை உச்சரிக்கவும் செய்து

தஜ்ஜால் அழிப்பவன்:
Mohamed Saleem //பைபிள் விலக்கி சொல்வதை போல் சொல்லவேண்டும் என்று என்னுகிரிரோ ??உன்னதாபட்டு விளக்கம் போல் ?//
இதுபோன்ற வாதங்கள் அப்பட்டமாக உங்களது தோல்வியைக் காண்பிக்கிறது. குர்ஆனின் தவறுக்கு பைபிளில் தவறுள்ளது என்பது என்ன வகையான பதில்?
உதாரணத்திற்கு, நான் உங்களிடம்,
“உங்கள் பெயரென்ன?” என்று கேட்கிறேன்.
அதற்கு
“எதிரிலிருப்பவனுக்கு பெயரே கிடையாது” என்று பதில் சொல்கிறீர்கள்.

Mohamed Saleem :
தஜ்ஜால் அழிப்பவன்//////////மேலும் ஓரு சிறிய விளக்கம் குரானும் ஹதீஸ் யும் எர்ப்பவன் முஸ்லிம் அது மட்டம் இல்லாமல் இஞ்சில் தவ்ராத் ஏற்போம் ..இந்த இரு வேதங்களும் அல்லாஹ் தந்ததே
//பைபிள் விலக்கி சொல்வதை போல் சொல்லவேண்டும் என்று என்னுகிரிரோ ??உன்னதாபட்டு விளக்கம் போல் ?//
இதுபோன்ற வாதங்கள் ///////உங்களுக்கு விளங்கவே இப்படி கூறினேன் ....மரணதண்டனை ஆல் மாய்த மாற்றும் ஆல் நூற் வசனங்கள் தெளிவாக உள்ளது அது மட்டும் இல்லாமல் அதற்புர்வமான ஹதிசும் இருக்கு
//////கற்பழ்சிப்பு என்ற ஓரு வார்த்தை கொண்ட ஹதிசும் உண்டு நான் படித்தும் வுள்ளேன் அண்ணல அந்த ஹதீஸ் கொஞ்சம் நம்பகத்தன்மை அற்றது அதை கருத்தில் கொண்டே அந்த ஹதீஸ்யை இங்கு பதியவில்லை

தஜ்ஜால் அழிப்பவன்:
//அதற்புர்வமான ஹதிசும் இருக்கு// ஹதீஸ் இருப்பது எனக்குத் தெரியும். அபூதாவுதில் 4366-ம் ஹதீஸ் ஆக இது இடம் பெற்றுள்ளது.

பூம ராங்:
தஜ்ஜால் அழிப்பவன் /// மறுபடியும் .. நீங்கள் ஆரம்பத்தில் வைத்த கேள்வியையே திரும்பவும் வைத்துள்ளீர்கள்..உங்கள் பிரச்சனை (1) கற்பழிப்பு என்ற வார்த்தை குர்ஆனில் இல்லை (2) அதனால் கற்பழிப்புக்கு இஸ்லாத்தில் தண்டனை இல்லை ..என்பது தான் ..இதற்கு நான் பல்வேறு வகையில் பதிலளித்து விட்டேன் ..புரிந்துக் கொள்ளக் கூடியவர்கள் ..புரிந்து கொண்டிருப்பார்கள்..! இப்பொழுது நானும், உங்களுக்கு உதவவே வந்துள்ளேன் ..உங்களுக்கு தெளிவு ஏற்படும் வரை உங்களை விடப் போவதில்லை..!ஆரம்பிப்போமா ..?

Mohamed Saleem:
////ஐயா மிண்டும் ஒருமுறை கூறுவது இங்கு நாங்கள் நபி ஸல் அவர்கள் கட்டி தந்த வழியை பின்பர்ருஒம்

தஜ்ஜால் அழிப்பவன்:
 நமது விவாதம் கற்பழிப்பைபற்றி குர்ஆன் மவுனம் காப்பது ஏன்? என்பதுதான்.

Mohamed Saleem :
/////மிண்டும் முதலில் இருந்து பதில் பெண்களை ஏன் பதுககிறது ?

தஜ்ஜால் அழிப்பவன்:
 //நபி ஸல் அவர்கள் கட்டி தந்த வழியை பின்பர்ருஒம்// ஹதீஸ்கள் அனைத்தையும் ஏற்க வேண்டிவரும் பரவாயில்லையா?

பூம ராங்:
// மௌனம் காக்க வில்லை ..இருப்பதை காணாமல் ..நீங்கள் தான் கண்களை இறுக மூடிக் கொண்டிருக்கிறீர்கள் ..!

Mohamed Saleem:
////இது உங்கள் வாதம .....ஏற்கும் நம்பகத்தன்மை ஹதிசுகளை ஏற்போம் குரானுக்கு புறம்பாக இருந்தால் ஏற்க மாட்டோம்

பூம ராங் :
/// உங்கள் விவாதம் முடியட்டும் ..பின்பு நான் வந்து கலந்துக் கொள்கிறேன் ..!

Mohamed Saleem:
 ///விபசாரம் என்றால் என்ன ????மிண்டும் ஓரு முறை குறும்

தஜ்ஜால் அழிப்பவன்:
Mohamed Saleem //ஹதிசுகளை ஏற்போம் குரானுக்கு புறம்பாக இருந்தால் ஏற்க மாட்டோம்// ஹதீஸ்களை ஏற்பதென்றால் அனைத்தஒயும் ஏற்கவேண்டும். புறக்கணிப்பது என்றால் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும். வசதியானதை ஏற்போம் என்பது சந்தர்ப வாதம்.

தஜ்ஜால் அழிப்பவன் :
Mohamed Saleem //விபசாரம் என்றால் என்ன ?// நாம் இங்கு கற்பழிப்பு பற்றியே பேசுகிறோம், விபச்சாரத்தைப் பற்றி அல்ல.

Mohamed Saleem:
///ஐயா மிண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன் இஸ்லாம் மட்டமே சிந்திக்கா சொல்லும் மார்க்கம் .....எல்ல ஹதிசுகளையும் ஏற்பது என்பது எங்கள் சிந்தனையுள்ளது

தஜ்ஜால் அழிப்பவன் ஹதீஸ்களைப்பற்றி பேசவேண்டாம். விவாதம் திசைமாறிவிடும்.

Mohamed Saleem:
தஜ்ஜால் அழிப்பவன் Mohamed Saleem //விபசாரம் என்றால் என்ன ?// நாம் இங்கு கற்பழிப்பு பற்றியே பேசுகிறோம், விபச்சாரத்தைப் பற்றி அல்ல.//////////அதியில்ல் விபசாரம் என்ற சொல்லே இருந்தது .....கற்ப்பு என்ற சொல்லை கற்பழிப்பு என்று என்று குட்டி அதை ஓரு வார்த்தையாக கூறுவது வேடிக்கை


தஜ்ஜால் அழிப்பவன்:
//அதில் விபசாரம் என்ற சொல்லே இருந்தது .....// எதில்??

Mohamed Saleem:
////விவாதத்தை திசைமற்ர்வில்லை உங்களுக்க பதில் மேலே எபோதே கொடுத்துவிட்டார்கள் ,,,,,,,குரானும் ஹதிசும் நாங்கள் ஏற்ப்போம்
//அதில் விபசாரம் என்ற சொல்லே இருந்தது .....// எதில்?/////விபசாரம் என்ற சொல்லே அந்தகாலத்தில் மனிதர்கள் நடைமுறையில் வார்த்தைகளா பயன் படுத்தினர்

தஜ்ஜால் அழிப்பவன்:
//குரானும் ஹதிசும் நாங்கள் ஏற்ப்போம்// நீங்கள் எதை வேண்டுமானலும் ஏற்கலாம். அது உங்களது தனிப்பட்ட உரிமை. ஆனால் நமது விவாதம் அப்படியல்ல.
//விபசாரம் என்ற சொல்லே அந்தகாலத்தில் மனிதர்கள் நடைமுறையில் வார்த்தைகளா பயன் படுத்தினர்// எந்தக் கால மனிதர்கள்?

Mohamed Saleem:
///விவாத அடிப்படை கேள்வி விபசாரத்துக்கு மரணதண்டனை உண்டு என்பது தானே விவாதம்

தஜ்ஜால் அழிப்பவன்:
பைபிளில் கற்பழிப்பு பற்றியும், அதைத் தொடர்ந்து ஒரு போர் நிகழ்ந்ததைப்பற்றியும் கூறப்பட்டிருப்பதை அறிவீர்களா?

Mohamed Saleem:
////// எந்தக் கால மனிதர்கள்////////////கற்பழிப்பு என்ற சொல்ல்வருவதர்க்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய வார்த்தை

தஜ்ஜால் அழிப்பவன்:
//விவாத அடிப்படை கேள்வி விபசாரத்துக்கு மரணதண்டனை உண்டு என்பது தானே விவாதம்// விடிய விடிய ரமாயணம் கேட்டு ... என்றொரு பழமொழி தெரியுமா?

தஜ்ஜால் அழிப்பவன் :
//கற்பழிப்பு என்ற சொல்ல்வருவதர்க்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய வார்த்தை// அது எந்த மனிதர்கள்?

Mohamed Saleem:
தஜ்ஜால் அழிப்பவன் பைபிளில் கற்பழிப்பு பற்றியும், அதைத் தொடர்ந்து ஒரு போர் நிகழ்ந்ததைப்பற்றியும் கூறப்பட்டிருப்பதை அறிவீர்களா?..///////இதை நான் அறியவில்லை ///////அண்ணல பைபிள் சில விபச்ரதுக்கு துண்டும் வரிகளை படித்து உண்டு
//கற்பழிப்பு என்ற சொல்ல்வருவதர்க்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய வார்த்தை// அது எந்த மனிதர்கள்?////////அதன் சொன்னேனே ஹதிசுகளும் ஆதரமாக பார்க்கவில்லைய ?தஜ்ஜால்

தஜ்ஜால் அழிப்பவன்:
பைபிள் பழைய ஏற்பாட்டிலேயே கற்பழிப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. குர்ஆன் அதற்கு பிற்காலத்தைச் சேர்ந்தது என்பதையாவது அறிவீர்களா?

Mohamed Saleem:
 பைபிள் ..அது என்ன பழய புதிய இதிலே குழப்பம் உள்ளதே தஜ்ஜால் ??

தஜ்ஜால் அழிப்பவன்:
Mohamed Saleem விபச்சாரம் என்பதைக் கற்பழிப்பு என்று மாற்றிய மனிதர்கள் யார் என்பதை நீங்கள் விள்க்கியே ஆகவேண்டும்.

Tamil Aman:
 //// கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது? /// கற்பழிப்பு என்பது ஆண்கள் செய்யும் தவறு...... விபச்சாரம் என்பது பெண்கள் செய்யும் தவறு... ஆணாதிக்க சிந்தனை யை இஸ்லாமும் எற்றுகொண்டதன் விளைவே இது....... விபசாரத்துக்கு தான் தண்டனை... கற்பழிப்புக்கு இல்லை என்று நினைக்கிறன்... அப்படி இருந்து இருந்தால் முஹம்மத் அவர்கள் அவர்களின் ஆட்சி காலத்தில் கண்டிப்பாக அவருடைய சஹாபாக்களுக்கு வழங்கி இருப்பார்..... அடிமைகளை உடலுறவு செய்தவர்கள் தானே அவர்கள்........

தஜ்ஜால் அழிப்பவன்:
 //அது என்ன பழய புதிய இதிலே குழப்பம் உள்ளதே தஜ்ஜால் // இருக்கட்டும். அதைப்பற்றி நமக்கென்ன கவலை?

Mohamed Saleem:
///கற்பழிப்பு பிற்காலத்தில் வந்தா சொல் அதில் உங்களுக்கு என்ன சந்தேகம் ?தஜ்ஜால் ....பைபிள் யில் கூறி இருந்தால் அதை எழுதியவர் இடம் கேட்ட்கவேண்டும் இதை பத்தி

தஜ்ஜால் அழிப்பவன்:
புஹாரி ஹதீஸ்      : 6603
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது
நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக் கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்ல் செய்து கொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்படியா செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்கள் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாக்கியே தீரும் என்று பதிலளித்தார்கள்.
இப்படி ஒரு ஹதீஸ் இருக்கிறது. இதில் கூறப்படுவது விபச்சாரமா? கற்பழிப்பா?

Tamil Aman:
 தஜ்ஜால் அழிப்பவன் : என்னங்க..... அடிமைகளுடன் என்ன செய்தால் என்ன ?... அவர்களை கொலை செய்தால் கூட தப்பில்லை.... செக்ஸ் பண்ணி உள்ள விட்ட என்ன வெளிய விட்ட என்ன..... இன்னும் சொல்லப்போனால் அவர்கள் மனிதர்களே இல்லை. எதிரிகள்.....

Mohamed Saleem:
ஓரு இருபது நிமிடம் கழித்து வருகிறேன்

Tamil Aman:
இப்படி தான் இருக்கும் பதில்..... இதை இப்படி சொல்லாமல் சுத்தி சுத்தி வருவாங்க பாருங்க...... கடைசியில் ஈழத்தில் நடந்த போரில் தமிழர்கள் பற்றி பேசுவார்கள்.... எதை எதையோடு ஒப்பிடுவார்கள்.....

தஜ்ஜால் அழிப்பவன்:
Tamil Aman , கற்பழிப்பும் விபச்சாரமும் ஒன்று என்கிறார்கள். மதம் மனிதர்களை எந்த அள்விற்கு மடையர்களாக மாற்றி இருக்கிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

பூம ராங் :
Tamil Aman //// கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது? /// கற்பழிப்பு என்பது ஆண்கள் செய்யும் தவறு...... விபச்சாரம் என்பது பெண்கள் செய்யும் தவறு... ஆணாதிக்க சிந்தனை யை இஸ்லாமும் எற்றுகொண்டதன் விளைவே இது....... விபசாரத்துக்கு தான் தண்டனை... கற்பழிப்புக்கு இல்லை என்று நினைக்கிறன்... அப்படி இருந்து இருந்தால் முஹம்மத் அவர்கள் அவர்களின் ஆட்சி காலத்தில் கண்டிப்பாக அவருடைய சஹாபாக்களுக்கு வழங்கி இருப்பார்..... அடிமைகளை உடலுறவு செய்தவர்கள் தானே அவர்கள்.......///// நீங்க ரொம்ப பச்ச மண்ணா இருக்கீங்க ..! உடலுறவுக்கும், வன்புணர்வுக்கும் கூட வேறுபாடு தெரியலை ..பாவம் ..!
Tamil Aman // நீங்க ரொம்ப பச்ச மண்ணா இருக்கீங்க ..! உடலுறவுக்கும், வன்புணர்வுக்கும் கூட வேறுபாடு தெரியலை ..பாவம் /// இதை நாங்க சொல்லணும்.....

தஜ்ஜால் அழிப்பவன் :
Tamil Aman வன்புணர்வு என்ற கற்பழிப்பிற்கும் விபச்சாரத்திற்கு வேறுபாடு தெரியவில்லை இவர்களுக்கு.

பூம ராங்:
தஜ்ஜால் அழிப்பவன்// விவாதத்தை மடை மாற்றம் செய்ய வேண்டாம் ..Tamil Aman-க்கு உள்ள அடிமை பெண்கள் மீதான கவலையை தீர்க்க வேண்டியது எனது கடமை ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
பூமராங், நான் கொடுத்துள்ள ஹதீஸில் கூறப்படும் சம்பவம் கற்பழிப்பா, விபச்சாரமா?

Tamil Aman :
முஹம்மத் அவர்களும் தீர்க்க முடியாத பிரச்சினை ... இறைவனின் வார்த்தைகளும் திர்க்க முடியாத பிரச்னை... இவர் தீர்த்து வைக்க போகிறார்... வாருங்கள்...

பூம ராங் :
Tamil Aman // வன்புணர்வுக்கு தஜ்ஜால் அழிப்பவன் கொடுத்த விளக்கம் மேலே இருக்கிறது ..கொஞ்சம் சிரமம் எடுத்து படித்து பாருங்கள் ..!
////முஹம்மத் அவர்களும் தீர்க்க முடியாத பிரச்சினை ... இறைவனின் வார்த்தைகளும் திர்க்க முடியாத பிரச்னை... இவர் தீர்த்து வைக்க போகிறார்... வாருங்கள்.//// ஒழுங்காக அடுக்கி வைக்கப் பட்ட பானைக் கடையில் புகுந்து உடைத்த குருடன் ..சரியாக அடுக்கி வைக்க வில்லை என்று கடைக்காரனை குறை சொல்வது போலத்தான் ..உங்கள் கதை ..!

Tamil Aman:
 //ஒழுங்காக அடுக்கி வைக்கப் பட்ட பானைக் கடையில் புகுந்து உடைத்த குருடன் ..சரியாக அடுக்கி வைக்க வில்லை என்று கடைக்காரனை குறை சொல்வது போலத்தான் ..உங்கள் கதை ..! /// இவரு கண்டிப்பா பி.ஜெ. ரசிகர் தான்...

பூம ராங் :
Tamil Aman // நீங்க கண்டிப்பா தினமலர் வாசகரா தான் இருக்கணும் ..!

பூம ராங்:
தஜ்ஜால் அழிப்பவன் // கற்பழிப்புக்கு இஸ்லாமிய சரியத் பிரகாரம் மரண தண்டனை என்பதற்கு குரான் வசனங்களையும், ஹதீஸ் ஆதாரத்தையும் எடுத்து வைத்து விட்டேன் ..!

Tamil Aman :
இங்கே ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறான்....... பர்தா பெண்களுக்கு அணிய வேண்டும் என்று சொன்னதன் காரணம் என்ன.......

பூம ராங் :
தஜ்ஜால் அழிப்பவன் // இஸ்லாத்தில் கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்று நீங்கள் சொல்வதாக இருந்தால் ..அதற்கு எதிர் ஆதாரத்தை நீங்கள் காட்டலாம் ..!

பூம ராங் :
Tamil Aman // சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை தவிர்க்கவும் ..

Tamil Aman:
/// கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது /// //// ற்பழிப்புக்கு இஸ்லாமிய சரியத் பிரகாரம் மரண தண்டனை என்பதற்கு குரான் வசனங்களையும், ஹதீஸ் ஆதாரத்தையும் எடுத்து வைத்து விட்டேன் //// குர் ஆன் பற்றி தான் அவர் தஜ்ஜால் கேட்டார்.... நீங்கள் வைத்த குர் ஆண் ஆதரத்தை இங்கே திரும்பவும் பதிவிடுங்கள்...

பூம ராங் :
தஜ்ஜால் அழிப்பவன் // இஸ்லாத்தில் விபசாரத்திற்கு மரண தண்டனை கொடுக்கப்படும் என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா ..மறுக்கிறீர்களா ...?

Tamil Aman:
//சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை தவிர்க்கவும் .. /// இந்த விவாதத்துக்கு சம்பந்தம் உள்ள கேள்வி தான் இது...

பூம ராங் :
Tamil Aman //சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை தவிர்க்கவும் .. /// இந்த விவாதத்துக்கு சம்பந்தம் உள்ள கேள்வி தான் இது..// நீங்கள் கேட்டது பெண்கள் பர்தா அணிவதைப் பற்றியது ..

Tamil Aman :
அப்போது அடிமை பெண்களை மனம் முடிக்காமல் புணர்வது தவறு இல்லையா...

Mohamed Saleem:
Tamil Aman///இங்கு சம்மதம் இல்லாமல் உளர்வது நீங்கள்தான்

Tamil Aman:
ஆம் .... எதற்காக நபிகள் அவர்கள் அதை அணிய சொன்னார்....

பூம ராங்:
Tamil Aman அப்போது அடிமை பெண்களை மனம் முடிக்காமல் புணர்வது தவறு இல்லையா..// அன்றைக்கு தவறு இல்லை ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
பூம ராங் //குரான் வசனங்களையும், ஹதீஸ் ஆதாரத்தையும் எடுத்து வைத்து விட்டேன் ..!// மன்னிக்க வேண்டும் பூமராங் நமது வாதத்தின் அடிப்படை கேள்விக்கு குர்ஆன் வசனங்களை மட்டுமே பதிலாக காட்டவேண்டும். குர்ஆனில் பதில் இல்லை என்பதை முதலில் ஒப்புக் கொள்ளுங்கள்.

Mohamed Saleem :
அப்படியே அந்த ஹதீஸ் ஏற்றாலும் அதில் என்ன கேட்ட்க பட்டது முதல் கேள்வி ???அடிமை பெண் கள் உடன் புணர்வது சரியா ??அதற்க்கு அப்ப்டிய செய்கிரிகள் ?????பதில் உரூவதை தடுக்க யாராலும் முடியாது ......இந்த பதில் ஏன் என்று யோசிக்கவேண்டும் ....அப்படி புனர்வதால் உண்டாக்கு குழ்ந்ந்தை அவர்களுக்கு வாரிசு முறை ஆகும் ..புணர்வது தவறு என்றே இந்த ஹதீஸ் கூறுகிறது ...இதற்க்கு நீங்கள் ஏன் கன் காது வைத்தாது ஏன் ?தஜ்ஜால் ??

Tamil Aman:
/// அன்றைக்கு தவறு இல்லை .. /// நன்றி.........

பூம ராங் :
Tamil Aman // உங்களுக்கு என்ன பிரச்சனை ..கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்பதா ..அடிமைப் பெண்ணா ..பர்தாவா ..?

Tamil Aman :
//இங்கு சம்மதம் இல்லாமல் உளர்வது நீங்கள்தான் /// நீங்கள் குர் ஆனின் ஆதாரம் இன்னும் தாராமல் உளறி கொண்டு இருக்குறீங்க...
///உங்களுக்கு என்ன பிரச்சனை ..கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்பதா ..அடிமைப் பெண்ணா ..பர்தாவா ..? //// அடிமை பெண்கள் வழக்கில் தீர்ப்பு வந்து விட்டது...... இனி கற்பழிப்பு பற்றி தான்....

Mohamed Saleem :
Tamil Aman///சற்று மேலதே உள்ள வாதத்தை பார்க்கவும்

Tamil Aman :
//எதற்காக நபிகள் அவர்கள் அதை அணிய சொன்னார்.... ///

பூம ராங் :
Tamil Aman /// அன்றைக்கு தவறு இல்லை .. /// நன்றி....//// அரைகுறைகளுக்கு எனது அந்த பதில் போதும் போலிருக்கு ...! என்னா உலகமடா சாமி ..!

தஜ்ஜால் அழிப்பவன் :
Mohamed Saleem, எனது கேள்வி எளிமையானது, குறிப்பிட்ட அந்த ஹதீஸில் கூறப்படும் சம்பவம் கற்பழிப்பா? இல்லை விபச்சாரமா?

Tamil Aman //அரைகுறைகளுக்கு எனது அந்த பதில் போதும் போலிருக்கு ...! என்னா உலகமடா சாமி ..! /// எந்த சாமியை சொல்லுறீங்க....

Tamil Aman :
// சற்று மேலதே உள்ள வாதத்தை பார்க்கவும் /// பார்த்து விட்டேன் உங்களின் மலுப்பல்களை....

Kulasai Voice:
இந்த விவாதம் ஏன் திசைமாறி போய்க் கொண்டிருக்கிறது!!!


பூம ராங் :
Mohamed Saleem// நீங்கள் கொஞ்சம் தள்ளி இருங்கள் ..விவாதத்தின் போக்கை மாற்ற வேண்டாம் ..தமிழ் அமனுக்கு சொல்வதைத் தான் உங்களுக்கும் சொல்கிறேன் ..!

பூம ராங் :
Tamil Aman // உங்களுக்கு என்ன பிரச்சனை ..கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்பதா ..அடிமைப் பெண்ணா ..பர்தாவா ..?

Mohamed Saleem:
 தஜ்ஜால் அவர்களே அடிமை விட்டுதலை இப்படித்தான் நபி அவர்கள் இருந்தார்கள் 2532. கைஸ் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) (நபி(யவர்களிடம்) இஸ்லாத்தை (ஏற்க) நாடி வந்த பொழுது அவர்களுடன் ஓர் அடிமையும் இருந்தான். அவர்கள் பாதையறியாமல் ஒருவரையொருவர் பிரிந்து போய்விட்டார்கள். பிறகு, அபூ ஹுரைரா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் சென்று.... 'நபி(ஸல்) அவர்களே! இவ்வடிமை அல்லாஹ்விற்குரியவன் என்பதற்கு நான் தங்களையே சாட்சியாக்குகிறேன்" என்று கூறினார்கள்.
Volume :2 Book :49


Tamil Aman :
பெண்களை பர்தா அணிவிக்க சொன்னதன் காரணத்தை சொல்லி விட்டால் போதும்..... நான் நாளை வந்து பேசுகிறேன்....

தஜ்ஜால் அழிப்பவன்:
Mohamed Saleem, நான் அடிமை விடுதலையைபற்றி கேட்கவில்லை.

பூம ராங் :
Tamil Aman // நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் ..ஆனால் குழப்பத்தோடு வராதீர்கள் ..தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் கமண்டு போடாதீர்கள் ..!

Kulasai Voice :
பூம ராங்!!தலைப்பிற்கு சம்மந்தமில்லாமல் இருக்கும் வாதங்களை தவிர்க்கவும்

பூம ராங் :
தஜ்ஜால் அழிப்பவன் /// நம்முடைய விவாதம் அப்படியே இருக்கிறது ..!
Tamil Aman ''எவரேனும் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி, (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வராவிட்டால், அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அ(த்தகைய)வர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் (வரம்புமீறிய) தீயவர்கள். (அல்குர்ஆன் 24:4) --------------------------- இப்படி சொன்னவர்...... அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்படியா செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்கள் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாக்கியே தீரும் என்று பதிலளித்தார்கள். ------ இப்படியும் சொல்கிறார்....... அது எப்படி என்று கேட்டால் பதில் வருவது இல்லை....... பர்தா அணிவிக்க காரணம் என்ன என்று கேட்டாலும் பதில் வர வில்லை........ நான் நாளைக்கு வருகிறேன்....

Tamil Aman:
பர்தா + கற்பழிப்பு + அடிமை உடலுறவு மூன்றுக்கும் சம்பந்தம் இருக்கு.......

Kulasai Voice :
Tamil Aman///தலைப்புக்கு சம்மந்தமில்லாமல் பேசுவதை தவிர்க்கவும்.

Tamil Aman:
கமெண்ட் நீக்க பட்டால் நான் மீண்டும் இதில் கமெண்ட் போட மாட்டேன்......

பூம ராங் :
Tamil Aman/// உலகத்திலுள்ள எல்லா பிரச்சனைகளையும் இந்த திரியில் நான் விவாதிக்கப் போவதாக நான் சொல்லவில்லை ..ஒரு தலைப்பில் ஒரு பிரச்சனை ..அதுதான் ..சிறந்தது ..!

Tamil Aman:
//Kulasai Voice Tamil Aman///தலைப்புக்கு சம்மந்தமில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். /// கேள்விக்கு பதில் சொல்லாமல் பல பதிவுகள் இருக்கு அதையும் நீக்க சொல்லுங்க...... நான் வருகிறேன்...

பூம ராங் :
Tamil Aman கமெண்ட் நீக்க பட்டால் நான் மீண்டும் இதில் கமெண்ட் போட மாட்டேன்.../// ஆரம்பம் முதல் நானும் தஜ்ஜால் அழிப்பவனும் என்ன விஷயத்தை குறித்து விவாதித்தோம் என்பதை முதலில் படித்துப் பார்க்கவும் ..

Kulasai :
Voice Tamil Aman///அதை நாங்கள் கண்டுகொள்வதில்லை.அதைப் போல் சம்மந்தமில்லாமல் யார் பேசினாலும் அதற்கு பதில் வராது!!!சம்மந்தமில்லாதவைகளுக்கு பதில் கொடுக்கவும் வேண்டாம்.

தஜ்ஜால் அழிப்பவன் :
இந்த விவாதம் முடிவிற்கு வர இரண்டு வாய்ப்புகளைத் தருகிறேன்.
1.       கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையைக் குர்ஆனிலிருந்து காண்பிக்க வேண்டும்.
அல்லது
2.       கற்பழிப்பு குற்றத்திற்கு குர்ஆனில் சட்டம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பூம ராங்:
//Tamil Aman பர்தா + கற்பழிப்பு + அடிமை உடலுறவு மூன்றுக்கும் சம்பந்தம் இருக்கு.../// ஒண்ணுக்கே வக்கில்லையாம் ..இந்த லச்சணத்துல மூணு தலைப்புல பேசுறாராம் ..@ Kulasai Voice ..மாமு ..என்னையா இது ..!

பூம ராங் :
// கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையைக் குர்ஆனிலிருந்து காண்பிக்க வேண்டும்.// காட்டியாச்சி ..

Kulasai Voice :
சித்தப்பு!!!கமிட் ஆக சொல்லுங்க!!!


தஜ்ஜால் அழிப்பவன்:
Kulasai Voice, என்ன சொல்கிறீர்கள்?

பூம ராங் :
/// கற்பழிப்பு குற்றத்திற்கு குர்ஆனில் சட்டம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.// அதற்கு தண்டனை ..மரண தண்டனை ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
//காட்டியாச்சி ..// எதை?


பூம ராங் :
தஜ்ஜால் அழிப்பவன் பூம ராங், //காட்டியாச்சி ..// எதை/// திருக்குர்ஆன் வசனம் -24:2
தஜ்ஜால் அழிப்பவன் பூம ராங், //திருக்குர்ஆன் வசனம் -24:2 //இதுதான் உங்களது இறுதி பதிலாக எடுத்துக் கொள்ளலாமா?

பூம ராங்:
 பூம ராங், //திருக்குர்ஆன் வசனம் -24:2 //இதுதான் உங்களது இறுதி பதிலாக எடுத்துக் கொள்ளலாமா? // உங்களுக்கு இதில் திருப்தி ஏற்பட்டால் ...!

தஜ்ஜால் அழிப்பவன் :
பூம ராங் // உங்களுக்கு இதில் திருப்தி ஏற்பட்டால் ...!// எனது திருப்திபற்றி பேசவேண்டாம். நான் குர் ஆனை ஏற்பதில்லை எனபதை, நீங்கள் அறிவீர்கள். உங்களது இறுதி முடிவைச் சொன்னால் போதும்.

பூம ராங்:
தஜ்ஜால் அழிப்பவன் /// இஸ்லாம் உடலுறவை இரண்டாக பிரிக்கிறது ..ஒன்று திருமணத்தின் மூலமாக அடைவது ..இதற்கு இஸ்லாத்தில் நன்மை எழுதப் படுகிறது ..!

தஜ்ஜால் அழிப்பவன் :
ஆம்..! இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட பெண்களுடனான உடலுறவையும் ஒரு வணக்கமாக கருதுகிறது என்பதை அறிவேன்.

பூம ராங் :
 // உங்களுக்கு இதில் திருப்தி ஏற்பட்டால் ...!// எனது திருப்திபற்றி பேசவேண்டாம். நான் குர் ஆனை ஏற்பதில்லை எனபதை, நீங்கள் அறிவீர்கள். உங்களது இறுதி முடிவைச் சொன்னால் போதும்/// நீங்கள் என்னோடு விவாதிப்பதை தவிர்த்தால் ..நான் உங்களை வற்புறுத்தமாட்டேன் ..!

Mohamed Saleem :
பூம ராங்/////பாய் நீங்கள் குரானில் இருந்து கட்யியது உண்மை அவருக்கு இன்னும் பல சந்த்கம் இருக்குமானால் அதை தஜ்ஜால் தனியாக ஓரு தா;லைப்பு இட்டு விவ்திக்க சொல்லுங்கள் ,,,,,,,,,,இந்த விவாதத்தில் சம்மதம் இல்லாமல் பங்கெடுத்து இஸ்லாத்தில் மீது உள்ள பற்றே காரணம் பூம ராங் அவர்களே

தஜ்ஜால் அழிப்பவன் :
Mohamed Saleem, நான் பிறப்பால், வளர்ப்பால் ஒரு முஸ்லீம். இஸ்லாமைப் புறக்கணித்து சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறினேன். எனக்கு இஸ்லாம் பற்றி மிக நன்றாகவே தெரியும்.

பூம ராங் :
// இரண்டாவது வகை உடலுறவு ..விபச்சாரம் ..! முறைதவறிய உடலுறவு ..அது இருவர் சம்மதத்துடனோ ..அல்லது வற்புறுத்தி ஒருவருடனோ கொள்வது ..இதற்கு இஸ்லாத்தில் தண்டனை இருக்கிறது ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
 //நீங்கள் என்னோடு விவாதிப்பதை தவிர்த்தால் ..நான் உங்களை வற்புறுத்தமாட்டேன் ..!// சரி இனி நாம் வேறு தலைப்பில் சந்திப்போம்.

பூம ராங் :
//விபச்சாரம் இரண்டு வகைப் படும் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
///விபசாராம் இரண்டு வகைப் படும் ..!// எப்படி ஒன்று காசு கொடுத்து மற்றொன்று ஓசியிலா?

பூம ராங் :
//(1) திருமணம் முடித்தவர் விபச்சாரம் செய்தால், மரண தண்டனை.. (2) திருமணம் செய்யாதவர் விபச்சாரம் செய்தால் நூறு கசையடி தண்டனையாக தரப் படும் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
//திருமணம் செய்யாதவர் விபச்சாரம் செய்தால் என்பது கசையடி தண்டனையாக தரப் படும் .// இதைத்தான் குர் ஆன் 24:2 , 100 கசையடி என்று கூறுகிறது. ஆனால் ஹதீஸிலிருந்து கல்லெறி தண்டனையை புகுத்திவிட்டார்கள்.


பூம ராங்:
//முன்பே சொன்னது போல வன்புணர்வும் விபச்சாரமே ..ஆனால், இதில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் பட்டவர் மீது தவறில்லாததால், வன்புணர்வு செய்தவர் மரண தண்டனை விதிக்கப் படுவார் ..!

பூம ராங் :
//திருமணம் செய்யாதவர் விபச்சாரம் செய்தால் என்பது கசையடி தண்டனையாக தரப் படும் .// இதைத்தான் குர் ஆன் 24:2 , 100 கசையடி என்று கூறுகிறது. ஆனால் ஹதீஸிலிருந்து கல்லெறி தண்டனையை புகுத்திவிட்டீர்கள்/// ஹதீசும் இன்னொரு வகை குரானே ..! அதற்கு ஆதாரம் திருக்குரானில் இருக்கிறது ..!

தஜ்ஜால் அழிப்பவன் :
 //வன்புணர்வும் விபச்சாரமே // மன்னிக்கவும் நண்பரே, இதை ஏற்க முடியாது. இது உங்களது இஸ்லாமியப் பார்வை மட்டுமே!

பூம ராங் :
// விபச்சாரம் பெரிசா ..? வன்புணர்வு பெரிசா ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
 சரி ... வேறுதலைப்புகளில் நான் வரவேண்டுமென்று நீங்கள் விரும்பினால் என்னை tag செய்யவும்.

பூம ராங்:
// இதற்கு பதில் சொல்லவும் ..விபச்சாரம் பெரிசா ..? வன்புணர்வு பெரிசா ..?

பூம ராங்:
தஜ்ஜால் அழிப்பவன் //???

தஜ்ஜால் அழிப்பவன்:
//விபச்சாரம் பெரிசா ..? வன்புணர்வு பெரிசா ..?// வன்புணர்வு மிகவும் ஆபத்தானது. கொலைக்கு சமமானது. விபச்சாரமும் ஒழிக்கப்படவேண்டிய தவறுதான்.

பூம ராங் :
/// அப்போ விபச்சாரத்திற்கே மரண தண்டனை என்றால் ..அதை விட பெரிய தண்டனை இந்த உலகத்தில் இருக்கிறதா ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
கள்ளத்தொடர்பு என்றொன்று இருப்பதை மறந்து விட்டீர்களே?

பூம ராங்:
// கள்ளத்தொடர்பு என்றொன்று இருப்பதை மறந்து விட்டீர்களே?/// உங்களை மந்திரிக்கிற வேப்பிலை என்னிடம் இருக்கிறது ..! கவலை வேண்டாம் ...கள்ளத்தொடர்பு என்றால் என்ன ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
பூம ராங் //விபச்சாரத்திற்கே மரண தண்டனை என்றால்// விபச்சார குற்றத்திற்கு மரணதண்டனை என்று குர்ஆன் கூறவில்லை!

பூம ராங் :
//விபச்சாரத்திற்கே மரண தண்டனை என்றால்// விபச்சார குற்றத்திற்கு மரணதண்டனை என்று குர்ஆன் கூறவில்லை..!// இஸ்லாத்தின் மூல பிரமாணம் இரண்டு ..முதலாவதும் முக்கியமானதும் திருக்குர்ஆன் ..இரண்டாவது ஹதீஸ் ..!

பூம ராங் ஹதீஸ் படி மரண தண்டனைக்கு ஆதாரம் காட்டி விட்டேன்.!

பூம ராங் :
இன்னும் நீங்கள் குரானிலிருந்து கேட்டால் ..இருக்கிறது ..பொதுவான சட்டமாக குறிப்பிடப் பட்டுள்ளது ..5:33 ...33:58முதல் 61வரையுள்ள வசனங்கள் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
//ஹதீஸ் படி மரண தண்டனைக்கு ஆதாரம் காட்டி விட்டேன்.// கற்பழிப்புக் குற்றத்தைப்பற்றி குர்ஆன் அறியவில்லை. அப்படி இருந்திருந்தால் இப்படி ஒரு விவாதத்தை நாம் நிகழ்த்திக் கொண்டிருக்க வேண்டைய தேவையே இருக்காது.
விபச்சாரத்திற்கு, 100 கசையடிகள் என்பதுதான் குர் ஆன் கூறும் தண்டனை. அது விபச்சாரத்தில் ஈடுட்ட இருபாலருக்கும் கிடைக்கும்.

தஜ்ஜால் அழிப்பவன்:
மணி 10 :30 ஆகிவிட்டது நாளை மாலை தொடர்கிறேன்.

பூம ராங்:
உதவி செய்யுங்கள் ..திருக்குரானின் 33:58முதல் 61வரையுள்ள வசனங்களை இங்கே பதிய முடியுமா ..?

பூம ராங் :
naalathu ..iniya iravu..!
தஜ்ஜால் அழிப்பவன் :
//திருக்குரானின் 33:58முதல் 61வரையுள்ள வசனங்களை இங்கே பதிய முடியுமா ..?///

33:58. நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.
59. நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
60. நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளோரும், மதீனாவில் பொய்களைப் பரப்புவோரும் விலகிக் கொள்ளாவிட்டால் (முஹம்மதே!) உம்மை அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வைப்போம். பின்னர் இங்கே குறைவாகவே உமக்கருகில் குடியிருப்பார்கள்.
61. அவர்கள் சபிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் எங்கு காணப்பட்டாலும் பிடிக்கப்பட்டு கொன்றொழிக்கப்படுவார்கள்.

தஜ்ஜால் அழிப்பவன் :
இனிய இரவு...!

இத்துடன் இந்த விவாதத்திலிருந்து நான் வெளியேறிவிட்டேன். நான் சென்ற பிறகு, பூமராங் விவாதத்திற்கு பதில் அளித்துவிட்டதை போன்றதொரு தோற்றத்தை உண்டாக்க, தனது பதிலகளை தொகுத்துப் பதிந்திருந்தார்.

Mohamed Saleem :
இது ஒன்றே பொதும் குரானில் இருந்து அதாரம் இதற்க்கு மேலும் இந்த தலைப்புக்கு வெறு அதாரம் தேவை இல்லை 5:43. எனினும், இவர்கள் உம்மை தீர்ப்பு அளிப்பவராக எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களிடத்திலோ தவ்ராத் (வேத) முள்ளது; அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது; எனினும் அதைப் பின்னர் புறக்கணித்து விடுவார்கள்; இவர்கள் முஃமின்களே அல்லர்.

Tamil Aman :
//ஒண்ணுக்கே வக்கில்லையாம் ..இந்த லச்சணத்துல மூணு தலைப்புல பேசுறாராம் ..@ Kulasai Voice ..மாமு ..என்னையா இது ..! /// தப்பு தான் ஒரு கேள்விக்கே நேரடி பதில் சொல்ல தெரியாதவர்களிடம் இரண்டு துணை கேள்வி கேட்டது தவறுதான்.....

Mohamed Saleem:
////தொழில் என்றால் என்ன ???தொழில் என்ற சொல்ல எதை கூறிக்கும் ?

பூம ராங் :
 // தப்பு தான் ஒரு கேள்விக்கே நேரடி பதில் சொல்ல தெரியாதவர்களிடம் இரண்டு துணை கேள்வி கேட்டது தவறுதான்../// vidiya vidiya kathai kettu, seethaikku.. Raman, siththappanaa..? yendru ketta kathai thaan ungaludaiyathu..! தஜ்ஜால் அழிப்பவன்-nnu yentha alavu vilakka vendumo, antha alavukku vilakkiyaatru ..

Mohamed Saleem :
Tamil Aman/////உங்களுக்கு எதை குறித்து சந்தேகம் ???ஈழத்தை குறித்த ??வெறுப்பு கோவம் இல்லாமல் கேட்க் களம் கேள்விகளை உங்கள் அணைத்து கேள்ளிவிக்கும் பதில் வழங்க பாடும்

பூம ராங் :
Tamil Aman //

நேரிடையான எனது பதில்களை..இங்கே வரிசைப் படுத்தியிருக்கிறேன்..
படித்துப் பார்த்து பிழைத்துக் கொள்ளவும்..!

///இந்த விவாதம் முடிவிற்கு வர இரண்டு வாய்ப்புகளைத் தருகிறேன்.
1. கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையைக் குர்ஆனிலிருந்து காண்பிக்க வேண்டும்.
அல்லது
2. கற்பழிப்பு குற்றத்திற்கு குர்ஆனில் சட்டம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
(1) /// கற்பழிப்பு குற்றத்திற்கு குர்ஆனில் சட்டம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.// அதற்கு தண்டனை ..மரண தண்டனை .. .!

(2), //காட்டியாச்சி ..// எதை/// திருக்குர்ஆன் வசனம் -24:2

(3) /// இஸ்லாம் உடலுறவை இரண்டாக பிரிக்கிறது ..ஒன்று திருமணத்தின் மூலமாக அடைவது ..இதற்கு இஸ்லாத்தில் நன்மை எழுதப் படுகிறது .. !
ஆம்..! இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட பெண்களுடனான உடலுறவையும் ஒரு வணக்கமாக கருதுகிறது என்பதை
(4) // இரண்டாவது வகை உடலுறவு ..விபச்சாரம் ..! முறைதவறிய உடலுறவு ..அது இருவர் சம்மதத்துடனோ ..அல்லது வற்புறுத்தி ஒருவருடனோ கொள்வது ..இதற்கு இஸ்லாத்தில் தண்டனை இருக்கிறது ..!
(5)பூம ராங் தஜ்ஜால் அழிப்பவன் //விபச்சாரம் இரண்டு வகைப் படும் ..!
(6)பூம ராங் தஜ்ஜால் அழிப்பவன் //(1) திருமணம் முடித்தவர் விபச்சாரம் செய்தால், மரண தண்டனை.. (2) திருமணம் செய்யாதவர் விபச்சாரம் செய்தால் நூறு கசையடி தண்டனையாக தரப் படும் ..!
//திருமணம் செய்யாதவர் விபச்சாரம் செய்தால் என்பது கசையடி தண்டனையாக தரப் படும் .// இதைத்தான் குர் ஆன் 24:2 , 100 கசையடி என்று கூறுகிறது. ஆனால் ஹதீஸிலிருந்து கல்லெறி தண்டனையை புகுத்திவிட்டார்கள்.
(7)பூம ராங் தஜ்ஜால் அழிப்பவன் ///முன்பே சொன்னது போல வன்புணர்வும் விபச்சாரமே ..ஆனால், இதில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் பட்டவர் மீது தவறில்லாததால், வன்புணர்வு செய்தவர் மரண தண்டனை விதிக்கப் படுவார் ..!
(8)பூம ராங் தஜ்ஜால் அழிப்பவன் //திருமணம் செய்யாதவர் விபச்சாரம் செய்தால் என்பது கசையடி தண்டனையாக தரப் படும் .// இதைத்தான் குர் ஆன் 24:2 , 100 கசையடி என்று கூறுகிறது. ஆனால் ஹதீஸிலிருந்து கல்லெறி தண்டனையை புகுத்திவிட்டீர்கள்/// ஹதீசும் இன்னொரு வகை குரானே ..! அதற்கு ஆதாரம் திருக்குரானில் இருக்கிறது ..!
//விபச்சாரத்திற்கே மரண தண்டனை என்றால்// விபச்சார குற்றத்திற்கு மரணதண்டனை என்று குர்ஆன் கூறவில்லை!
//விபச்சாரத்திற்கே மரண தண்டனை என்றால்// விபச்சார குற்றத்திற்கு மரணதண்டனை என்று குர்ஆன் கூறவில்லை..!// இஸ்லாத்தின் மூல பிரமாணம் இரண்டு ..முதலாவதும் முக்கியமானதும் திருக்குர்ஆன் ..இரண்டாவது ஹதீஸ் ..!
ஹதீஸ் படி மரண தண்டனைக்கு ஆதாரம் காட்டி விட்டேன்.!
(11)பூம ராங் இன்னும் நீங்கள் குரானிலிருந்து கேட்டால் ..இருக்கிறது ..பொதுவான சட்டமாக குறிப்பிடப் பட்டுள்ளது ..5:33 ...33:58முதல் 61வரையுள்ள வசனங்கள் ..!



இஸ்லாமைப்பற்றி எதுவுமே தெரியாத இவர்களுடன் விவாதித்ததற்காக என்னை நானே நொந்துகொண்டேன். அவர் தொடர்ந்து வெவ்வேறு பதிவுகளில் தொடர்ந்து உளறிக் கொண்டிருந்தார். பூமரங்கின் உளறல் பதில்களுக்கு மறுப்பு கூறவிரும்பவில்லை. இந்நிலையில் அவரது வேறொரு  உளறல் விவாதத்தில், ஃபெரோஸ்பாபு என்பவரின் கேள்விக்கு பதிலளிக்கையில்,  இவ்வாறு கூறியிருந்தார்...




பூம ராங்:
இறையில்லா இஸ்லாத்தின் முதலாளி ‘தஜ்ஜால் அழிப்பவன்’ என்னுடைய எந்த கேள்விக்கும் இது வரை பதில் தந்ததில்லை..என்னோடு எந்த விவாதத்திலும் பங்கு கொண்டு ஜெயித்ததுமில்லை..!

‘’கதை கட்ட ஒருவன் இருந்து விட்டால், கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு..!’’ என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளின் படி..
இஸ்லாத்தை பழித்து விடுவதால், கோழைகளின் சந்துமுனை சிந்தால்.. இஸ்லாம் தோற்று விடாது..! அதன் கருத்துக்களை நேரடி விவாதங்கள் தான் மூலம் ஜெயிக்க வேண்டும்..!
நான் இன்னொரு உதாரணமும் கூறுகிறேன்..
கம்பீரமான குதிரையை ஒரு அற்ப கொசு (தஜ்ஜால் அழிப்பவன் ) கடித்து விட முடியும்.. ஆனாலும் குதிரை குதிரை தானே, Feroz Babu..?”


தொடரும்....