Monday, 30 July 2012

ஒரு மரணம் சில கேள்விகள்-1

முஹம்மது இயற்கையாக மரணமடையவில்லை என்று இஸ்லாமிய ஆதாரங்கள் நமக்குச் சொல்கின்றன. உலகத்திற்கே அருளாக, இப்பிரபஞ்சத்தின் அற்புதப்பிறவியாக  அல்லாஹ்வால் படைக்கப்பட்ட ஒரு மனிதர் இயற்கையாக மரணிக்கவில்லை என்று இஸ்லாமியர்களே கூறிக்கொள்கிறார்கள். உலகில் அவர் வாழத் தேவையில்லை என்று நினைத்தவர்கள் யார்?
ஹிஜ்ரி 11 ஸஃபர் மாதத்தில் (கிபி 632) ஒரு சவஅடக்க நிகழ்ச்சியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் பொழுதுதான் முஹம்மதின் மரணம், கடுமையான தலைவலியுடன்  துவங்கியது. அவர்  உடலிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தை அருகிலிருந்தவர்களும் உணர்ந்தனர். அவர் வழக்கப்போல ஒவ்வொரு மனைவியரிடமும் சென்று தனது வெப்பத்தினைத் தணிக்க முயன்றார். இருப்பினும் அவரது தனிப்பட்டகவனம் ஆயிஷா மீதே இருந்தது.

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைவதற்கு முன்பு நோய்வாய்ப்பட்டிருந்த போது தம் மனைவிமார்களிடையே (நிச்சயித்த முறைப்படி ஒரு நாளைக்கு ஒருவரது வீடு என்று) செல்லத் தொடங்கினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்னும் ஆவல் அதிகமாயிருந்த காரணத்தால் நாளை நான் எங்கேயிருப்பேன்? நாளை நான் எங்கேயிருப்பேன்? என்று கேட்கத் தொடங்கினார்கள்...
புகாரி 3774
இறுதியில் வெளிப்படையாகவே கூறி, நடந்து செல்வதற்கு இயலாத நிலையிலும் ஆயிஷாவின் வீட்டிற்கு கிளம்பினார். (ஆசை யாரைவிட்டது?)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் வேதனை அதிகரித்த போது, என் வீட்டில் (தங்கி) நோய்க்கான கவனிப்பையும் சிகிச்சையையும் பெற்றுக்கொள்ள அனுமதியளிக்கும்படி தம்முடைய மற்ற மனைவி மார்களிடம் கேட்டார்கள்; அவர்களும் அனுமதி அளித்து விட்டனர். பின்னர் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள், தம் இரு கால்களும் பூமியில் இழுபட, இரு மனிதர் களுக்கிடையே தொங்கியவண்ணம் புறப்பட்டார்கள். அப்போது, அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்குமிடையே இருந்தார்கள்....
புகாரி 2588

மேற்கண்ட ஹதீஸில் ஆயிஷா, பெயரைக்கூட கூறவிரும்பாத அந்த மற்றொரு மனிதர் அலீ பின் அபீதாலிப்தான். முஹம்மதிற்கு நோய்மிகக் கடுமையாக அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதைபற்றி,
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை.
புகாரி 5646

இப்படி நோய்வாய்ப்பட என்ன காரணம்? கைபர் போரின் (கிபி 629) முடிவில் முஹம்மதிற்கு விஷம் வைக்கப்பட்டதாகவும், அதன் பாதிப்பு மூன்று ஆண்டுகளுக்குப்பின் வெளிப்பட்டதாகவும் இஸ்லாமிய நம்பிக்கைகள் கூறுகின்றன.
கைபர், மதீனாவிலிருந்து 80 மைல்கள் தொலைவிலிருந்த செழிப்பான பகுதி. முஸ்லீம்களால் மறக்கவே முடியாத இடம். முஹம்மதிற்கும் அவரது கொள்ளைக்கூட்டத்திற்கும் பெருமளவு செல்வங்களை வாரிக்கொடுத்த கொள்ளைகளில் கைபருக்கு தனியிடம் உண்டு. முஹம்மதின் காதல் மனைவி ஆயிஷா கொள்ளையின் பலன்களை மெய்சிலிர்த்து கூறுகிறார்.
       ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
கைபர் வெற்றி கொள்ளப்பட்ட போது, இனி நம் வயிறு பேரீச்சங் கனிகளால் நிரம்பும் என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம்
புஹாரி : 4242   
கொள்ளையை வெற்றிகரமாக முடித்த தெனாவட்டில், முஹம்மது, அன்றைய உணவு தயாரிக்கும் பணியை தான், வலியத்தேடித்தேடிக் கொன்றுகுவித்த யூதர்களின் வசம் விடுகிறார்.
அனஸ் (ரலி) அறிவித்தார்.
யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது உண்டார்கள்.
புகாரி 2617
இந்த விஷம்தான் முஹம்மதைக் கொன்றது என்பது முஸ்லீம்களின் ஐதீகம். ஆனால் இந்த விஷத்தைபற்றி முஹம்மது வேறுவிதமாகக் கூறுகிறார். அதற்கு சற்று முன்புதான் அவருக்கு விஷம் வைத்ததாகக் கூறப்படும் ஜைனப் பின்த் அல் ஹாரித் என்ற பெண்ணின் கணவர், தந்தை, சகோதரர்கள், மற்ற உறவினர்களையும் கொன்று குவித்திருந்தார்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பிறகு அவள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அவளிடம் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தர்கள். அப்போது அவள், "நான் உங்களைக் கொல்ல விரும்பினேன்'' என்றாள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதற்காக, அல்லது எனக்கெதிராக அல்லாஹ் உன்னைச் சாட்டியிருக்கவில்லை'' என்று கூறினார்கள்.
(முஸ்லீம்)
அதாவது அவளால் அவரை ஏஉம் செயதுவிடமுடியாது. அல்லா அவரின்பக்கம் இருக்கிறான் என்று பொருள். ஆனால் இந்த ஹதீஸின் பிற்பகுதி விஷத்தின் பாதிப்பு தொடர்ந்து இருந்ததாகக் கூறி வழக்கம்போல முரண்படுகிறது.

மக்கள், "அவளை நாங்கள் கொன்றுவிடலாமா?'' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வேண்டாம்' என்று கூறிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்நாக்குச் சதையில் அ(ந்த விஷத்தின் அடையாளத்)தை நான் தொடர்ந்து பார்த்துவந்தேன்
(முஸ்லீம்)
முஹம்மது அந்த ஆட்டிறைச்சியைக் கடித்தார்கள் ஆனால் விழுங்காமல் வெளியில் துப்பிவிட்டதாக இபின் இஷாக் கூறுகிறது. இதை ”அர்ரஹீக் அல்மக்தூம்” என்ற தனது நூலில் இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபியுர் ரஹ்மான் உறுதிசெய்கிறார். பிஷர் இபின் பாரா என்பவர் விஷமேற்றப்பட்ட ஆட்டிறைச்சியை உண்டதால் அந்த இடத்திலிருந்து எழுந்திருக்காமல், உடல் பச்சைநிறமாக மாறி, பிணமாக வீழ்கிறார். இதிலிருந்து, விருந்தும் விஷமும் முஹம்மதிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கும்பலுக்கும்தான் என்பதை அறியலாம்.  ஆனால், முஹம்மதின் முதன்மை அல்லக் கைகளான அபூபக்ரும், உமரும் இந்த காட்சியில் தென்படவில்லையே?
ஜைனப் பின்த் அல் ஹாரிதாதான் விஷம் வைத்ததாகவும், முஹம்மது ஆட்டின் முன் சப்பையை விரும்பி உண்பார் என்பதை அறிந்து அதில் அதிகவிஷம் ஏற்றினாள் என்கின்றனர். முஹம்மதின் விருப்பம், யூதப் பெண்மணிக்கு எப்படித் தெரியும்? முஹம்மது எந்தப்பகுதியை விரும்பி உண்பார் என்பதை விசாரித்து அறிந்தபிறகு விஷத்தை அதிக அளவில் ஏற்றியதாக சில அறிவிப்புகள் கூறுகின்றன.
கொன்று, உரித்து, துண்டுகளாக வெட்டப்பட்டு, நெருப்பிலிட்டு பொரித்து, விஷமேற்றப்பட்ட ஆட்டின் எலும்பு, தான் விஷமேற்றப்பட்டுள்ள செய்தியைக் கூறுகிறது.
ஆடு பேசுமா?
ஆடு மட்டுமல்ல அழிந்துபோன டைனோஸர் என்ற இராட்சத மிருகங்கள்கூட மனிதர்களைப் போல, மனிதர்களின் மொழியில் பேசுவதை தந்திரகாட்சிகள் கொண்ட திரைப்படங்கள், Cartoon network, Pogo, சுட்டி TV போன்ற மழலையர்களுக்கான சின்னத்திரை அலைவரிசைகளில் பார்க்கலாம். சமீபத்தில் திரையிடப்பட்டுள்ள “நான் ஈ” திரைப்படத்தில், ஒரு ”ஈ” ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதிக் காண்பிக்கிறது. மிதமிஞ்சிய கற்பனைக் கதைகளில்கூட கொன்று நெருப்பிலிட்டு சமைக்கப்பட்ட ஆட்டின் எலும்பு பேசியதைப் பார்த்ததில்லை.
இஸ்லாம் பகுத்தறிவிற்கேற்ற(!?) மார்க்கமாக இருப்பதினால் இறைச்சிதுண்டு, எலும்புத்துண்டு அவ்வளவு ஏன் சாணம் விட்டை போன்றவைகள்கூட பேசி உரையாடும் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சரி…! எதற்காக அந்த ஆட்டின் எலும்பு பேசவேண்டும்? இதை இஸ்லாமியர்களின் மொழியில் சொல்வதென்றால், தனது கண்மணியான தூதர் விஷத்தை உண்பதிலிருந்து தடுத்து காப்பாற்றவேண்டுமென்பதற்காக அல்லாஹ் அந்த ஆட்டின் எலும்பிற்கு பேசும் சக்தியை வழங்கினான்.
 முஹம்மதின் மானத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக பேசிய ஆட்டின் எலும்பிற்கு இருக்கும் ஆர்வம்கூட ஹதீஸ்களை எழுதியவர்களும், பெயர்தாங்கி முஸ்லீம்களுக்கும் இல்லை என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். அற்புதக் கதைகளைக் கூறும்பொழுதே இதைக் கூறவிரும்பினேன். ஆனால் இதன் பின்னணியில் வேறுசில சந்தேகங்கள் தோன்றியதால் இங்கு கூறுகிறேன்.
அந்த யூதப்பெண்மணியிடம் "அதற்காக, அல்லது எனக்கெதிராக அல்லாஹ் உன்னைச் சாட்டியிருக்கவில்லை'' என்று முஹம்மது உறுதிபடக் கூறுகிறார். அவரது இந்த வார்த்தைகள் உண்மையெனில் குறிப்பிட்ட இந்த விஷத்தினால் அவர் இறக்கக் கூடாது, இறக்க முடியாது.
முஹம்மதிற்கு, சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ்வின் தூதராக இருந்த ஈஸாவின் உயிருக்கு, அவரது எதிரிகளால் ஆபத்து நிகழப்போவதை அறிந்து, யாருக்கும் தெரியாமல், இரவோடு இரவாக தனது அடியாட்கள் மூலம் தூதரைக் கடத்திச்சென்று ஆள்மாறாட்டம் செய்த கதையை அறிவீர்கள். ஈஸாவின் அடியார்கள், அவர் சித்திரவதைக்குட்பட்டு மரணித்ததாகக் கூறுவதை ஏற்காமல், அல்லாஹ் தனது தூதர்களை இழிவடையச் செய்யமாட்டான் என்று கூறி அவர்களுடன் மல்லுக்கட்டுகின்றனர். முஹம்மதைவிட தகுதியில் குறைந்தவரான ஈஸா காப்பாற்றப்படும் பொழுது, முஹம்மதை விஷத்தை உண்டு துடிதுடித்து இறக்க அல்லாஹ் அனுமதிப்பானா?  நிச்சயமாக அப்படி நிகழ வாய்ப்பில்லை. (நபிமார்களுக்கிடையே வேறுபாடு உண்டா?)
முன்பு ஒருமுறை, அவர் சூனியத்திற்கு ஆளாகி, ஏறக்குறைய ஆறுமாதங்கள், அரை லூஸாக ஏதேதோ உளறிக்கொண்டிருந்தார். (அவர் எபொழுது தெளிவாக இருந்தார் இப்பொழுது அரை லூஸாவதற்கு?) இதைக்கண்டு பொறுமையிழந்த அல்லாஹ், ஜிராயீல், மீக்காயீல் என்ற அடியாட்களை அனுப்பி முஹம்மதிடம் சூனியத்தைப்பற்றியும், அதற்கான மாற்று செயல்முறைகளையும் விளக்கி சூனியத்திலிருந்து மீட்டெடுத்தான் என்கிறது ஹதீஸ். விஷம் வைக்கப்பட்டதை அறிந்தும் எளிதில் விட்டுவிடுவானா? நிச்சயமாக அனுமதிக்க மாட்டான்.
மேலும் அவர் ஆட்சியாளராக மட்டும் இருக்கவில்லை மருத்துவத்திலும் சிறந்து விளங்கினார் என்று ஹதீஸ்கள் கூறுவதை நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
Abu Huraira reported that Allah’s Messenger said, “Ajwah is from Paradise and it is a cure for poison. …
(திர்மிதி 2073)
(அபூ ஹுரைரா கூறுகிறார்: அல்லாஹ்வின் தூதர் கூறினார், அஜ்வா சொர்க்கத்திலிருந்து வந்தது அது விஷத்தை முறிக்கக் கூடியது...)

அஜ்வா ரக பேரீச்சம்பழங்கள் விஷத்தை முறிக்கக் கூடியது என்று முஹம்மதிற்கு கற்பித்ததும்  அல்லாஹ்தானே? அவர் விஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அஜ்வா ரக பேரிச்சம்பழத்திலிருந்து ஏழு பழங்களை உட்கொண்டு விஷத்தை முறித்திருப்பார். கருஞ்சீரகத்தைப் பற்றி கூறும் பொழுது மரணத்தைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் அதில் தீர்வு உண்டு என்கிறார். அஜ்வாவின் கதை அப்படியல்ல அது விஷத்தை முறிக்கக் கூடியது என்கிறார் முஹம்மது. மேலும், உடல் பலவீனங்களை சரிசெய்யவும் அறுவை சிகிச்சை செய்வதிலும் அவரை  வல்லவராக, அல்லாஹ் மாற்றியிருந்தான்.(நன்றி : பகடு)
அவர் செய்த மூட்டு, மற்றும் கண்கள் அறுவை சிகிச்சைகளைப்பற்றி பின் வரும் ஹதீஸ் விளக்குகிறது           
       அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
உக்ல் குலத்தைச் சேர்ந்த சிலர் நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆகவே, அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்ப்பரை கொலையும் செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். ஆகவே, (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களுக்குப் பின்னால் நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவர்கள் பிடித்துவரப்பட்டு, அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு  அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அந்த நிலையிலேயே சாகும்வரை விட்டுவிடச் செய்தார்கள்.
(புகாரி : 6802)
பேரிச்சம்பழத்தை உண்டு விஷத்தை முறிக்கவும், ஒட்டகத்தின், பாலையும், சிறுநீரையும் குடித்து உடலைத்தேற்றவும் அல்லாஹ், முஹம்மதிற்கு அறிவுறுத்தியிருக்க மாட்டானா? (ஒட்டகத்தின் சாணத்தை என்ன செய்தார்கள்?) இத்தகைய மாபெரும் மருத்துவங்கள் பயனளிக்கவில்லை என்று கூறி முஹம்மதை மட்டுமல்ல அல்லாஹ்வையும் மேலும் இழிவு செய்கின்றனர். எதற்கெடுத்தாலும் யூதர்களை குறைகாணும் இஸ்லாமியர்களின் குறுகியசிந்தனை முஹம்மதின் மரணத்திலும் நுழந்து அதற்கேற்ப திரைக்கதையை திருத்தம் செய்து கொண்டு விட்டது.
தொடரும்...

தஜ்ஜால்