Monday, 23 April 2012

இஸ்லாத்தை கடந்த சுவடிகள் - 10


தொடர் 10
 நாம் கைபரின் ஷஃபியா விஷயத்திற்கு வருவோம்
கைபர் போரைத் தொடர்ந்து, இப்ன் மஸ்ஊது என்பவரை ஃபதக் என்ற பகுதியில் வசிக்கும் யூதர்களிடம் அனுப்பி, தன்னை (முஹம்மது நபி) இறைத்தூராக ஏற்கும்படி கூறினார். கைபருக்கு ஏற்பட்ட நிலையை கண்ட அந்த யூதர்கள், ஃபதக்கின் விளைச்சலில் சரிபாதியை தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். எவ்விதமான போரும் இன்றி ஃபதக் வெற்றி கொள்ளப்பட்டதால் ஃபதக்கின் சரிபாதி விளைச்சல் முஹம்மது நபிக்கு மட்டுமே சொந்தமாயிற்று.
இத் திருமணத்தை விமர்சிப்பவர்களை  இஸ்லாமிய அறிஞர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இஸ்லாமையும் முஸலீம்களையும் காப்பாற்ற அல்லாஹ்  செய்த ஏற்பாடே இத்திருமணம்  என்றும், தன்னைக் கொல்ல முயன்றவரின் மகளைத் திருமணம் செய்த உத்தமர் மேலும் ஸஃபியாவின் சம்மதத்துடனே இத் திருமணம் நிகழ்ந்துள்ளது. எனவே இது சிறந்த முன்னுதாரணமாகும் என வாதிடுகின்றனர்.
ஸஃபியாவின் அன்புக்குரிய கணவனை சாகும் வரை சித்திரவதை செய்து கொலை செய்யவும்,  தந்தையாரையும், உறவினர்களையும் மற்றும் தன்னுடைய நலம் விரும்பிகளையும் படுகொலை செய்யவும் முழுமுதற் காரணமாக இருந்தவர் நபி (ஸல்) மட்டுமே. அத்தகைய ஒருவர் அழைத்தவுடன் எந்த பெண்ணால் படுக்கையில் துள்ளிக் குதித்து தயார் நிலையில் இருக்கமுடியும்? ஸஃபியாவால் நபி (ஸல்) அவர்களுடன் படுக்கையில் எப்படி சல்லாபம் புரிய முடியும்?. ஸஃபியா, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கள்ளக் காதலியாகவோ, அல்லது அவர் ஒரு விபச்சாரியாகவும் இல்லாத நிலையில்; ஸஃபியா, நபி (ஸல்) அவர்களால் உறவு கொள்ளப்பட்டது, கற்பழிப்புதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. உண்மை இவ்வாறிருக்க, முழுநிலவு தன்னுடைய மடியில் விழுவதாக கனவு கண்டதாக ஷஃபியா காதல் ரசம் வழிய  கூறினாராம்.   அருவருப்பாக தோன்றவில்லையா?
நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்னும் யூதஉறவினர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். ஹிஜ்ரி 50 ம் ஆண்டு தன்னுடைய 60 ம் வயதில் காலமானார்.
சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் பெண்களை வன்முறையால் அடிமைகளாக  கைப்பற்றி  தீராத வெறியை நிறைவேற்றுவதும்; இக் கொடூரச்செயல் இறைவனின் அனுமதி (குர்ஆன் 23:6, 70:30) எனக் கூறுவதும்; வெறி பிடித்த தன்னுடைய கூட்டத்தினரையும் கற்பழிக்க ஊக்குவிப்பதும் (குர்ஆன் 4:24); ஒருவேளை  அடிமைகளாகக் கைப்பற்றப்பட்ட அப்பெண்களை திருமணம் செய்ய விரும்பினால் (குர்ஆன் 4:25), அவர்களின் விடுதலையையே திருமணத்திற்கான மஹராக கூறுவதும், நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்  மாதிரிகளாகும்.

          11. மாரியா


                எகிப்திலிருந்து கிடைத்த அழகிய பரிசு என அவர்களால் குறிப்பிடப்படுகிறார்அலெக்ஸான்டரியாவின் கவர்னருக்கு இஸ்லாமை ஏற்க கூறி ஹாபித் பின் அபூ பல்தா என்பவரை தூதுவராக அனுப்புகிறார். முஹம்மது நபியின் ரசனையை தெரிந்த, அலெக்ஸான்டரியாவின் கவர்னர் சாதுர்யமாக மறுத்து, நபி (ஸல்) அவர்களுக்கு, தன்னிடமிருந்த அழகிய இரண்டு பெண் அடிமைகளை பரிசாக வழங்குகிறார்.
இஸ்லாமை ஏற்க கோரிக்கை வைக்கப்பட்டால், கோரிக்கை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம் ஆனால் பெண்களை பரிசாக அனுப்பப்பட்டது ஏன்? முதலில் அச் செய்தி கோரிக்கை  என்பது தவறு இறுதி எச்சரிக்கை என்று கூறுவதே பொருத்தமானது. இஸ்லாம் வாள்முனையில்தான் விரிவடைந்தது என்பதற்கு உதாரணம்,
ஓமன் நாட்டு மக்களுக்கு நபி அனுப்பிய செய்தி
ஓமன் நாட்டின் ஜுலந்தா சகோதரர்களுக்கு (Julanda Brothers) முஹம்மது நபி தன் சகாக்கள் 'அமர் பின் அல்-‘அஸ் அல்-சஹமி மற்றும் அபு ஜையத் அல்-அன்சாரி' மூலமாக அனுப்பிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன்  ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை  உங்களுக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உங்கள் வலிமை அழிக்கப்படும். என் குதிரைகள் உங்கள் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உங்கள் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.”
[அரபி மொழியில் எழுதப்பட்ட இந்த கடிதம் "ஓமன் நாட்டின் சோஹார் கோட்டையில், பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது]
சோஹருக்கு முஹம்மதுவின் செய்தியாளர்கள் வந்துச் சென்ற இரண்டரை நூற்றாண்டுகளுக்கு பின்பு, சரித்திர ஆசிரியர் அல்-பலதூரி  கீழ் கண்டவாறு விவரிக்கிறார்.
"ஓமன் நாட்டு மக்கள் சத்தியத்தின் ஆதாரத்திற்கும், மற்றும் அல்லாஹ்விற்கும் அவரது நபிக்கும் கீழ் படிவதற்கு உறுதியளித்தபோது, அமர், அவர்களது அமீர் மற்றும் அபு ஜையத் இவர்கள் தொழுகையை நடத்துவதற்கும், இஸ்லாம் பற்றி விவரிப்பதற்கும், குர்ஆனை கற்றுக் கொடுப்பதற்கும் மற்றும் இஸ்லாம் மதத்தின் வழிமுறைகளைக் கற்றுக் கொடுப்பதற்கும் பொறுப்பாளிகளாக்கப்பட்டார்கள்."
ஆனால் அல்லாஹ் குர்ஆனில் (2:256),
(இஸ்லாம்) மார்க்கத்தில் எவ்வித நிர்பந்தமும் இல்லை; நேர்வழியாகிறது வழிகேட்டிலிருந்து (பிரிந்து) திட்டமாகத் தெளிவாகிவிட்டது.
என்றும்
(நபியே) மக்களாகிய அவர்களை நேர்வழியில் செலுத்துவது உம்மீது (கடமை) யில்லை எனினும், அல்லாஹ்தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்                                     
(குர்ஆன் 2:256)
குர்ஆனின் அறிவுறுத்தலுக்கு முரண்பட்ட செயல். குர்ஆன் தனக்குதானே முரண்படுவதையும் பின்னர் காணலாம். இப்பொழுது, மரியாவின் கதைக்கு வருவோம்.
அவர்களில் ஒருவர் மரியா மற்றொருவர் ஷிரின். இருவரும் சகோதரிகள். எகிப்திய உயர்குல கிருஸ்துவ தந்தைக்கும் கிரேக்க தாய்க்கும் பிறந்தவர்வர்கள். வெள்ளை நிறத்துடன் சுருள் சுருளாக கருமையான கூந்தலும் கொண்டவர்  என்று அவரது அழகை குறிப்பிடுகின்றனர்முஹம்மது நபி அவர்கள் தன்னுடைய அறுபதாம் வயதில் பதினேழு வயதான மரியாவுடன் வாழ்க்கையைத் துவங்கினார்ஷிரினை, முஹம்மது நபி  விரும்பவில்லை செய்யவில்லை காரணம் அவர் ஒரு அரவாணிமுஹம்மது நபி , தன்னுடைய கவிஞர் ஹசன் பின் தாபித்திற்கு ஷிரினை பரிசாக வழங்கினார். முஹம்மது நபி அவர்களுடன் மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். ஹிஜ்ரி 16 ம்ஆண்டு காலமானார். இவர்களுக்கு இப்ராஹிம் என்ற ஆண் குழந்தை பிறந்தது. நபி (ஸல்) அவர்களின் மனைவிகளில், முதல் மனைவி கதீஜாவிற்கு பிறகு குழந்தையை கொடுத்தவர் மரியா மட்டுமே. அக்குழந்தையும் பதினெட்டு மாதங்களில் இறந்தது. குழந்தை இப்ராஹிம் இறந்த அன்று சூரியகிரகணம் ஏற்பட்டதுமுஹம்மது நபி அவர்களுடன் இருந்த மக்கள் குழந்தை இப்ராஹிம் மரணமடைந்த காரணத்தால்தான் சூரியகிரகணம் ஏற்பட்டது என்று கூறினர்.
Bukhari 2.018.153
The sun eclipsed in the life-time of Allah's Apostle on the day when (his son) Ibrahim died. So the people said that the sun had eclipsed because of the death of Ibrahim. Allah's Apostle said, "The sun and the moon do not eclipse because of the death or life (i.e. birth) of some-one. When you see the eclipse pray and invoke Allah."
Adds that when the sun eclipsed Muhammad ?he led the people in prayer,? by then the sun (eclipse) had cleared. He delivered the Khutba (sermon) and after praising and glorifying Allah he said, "The sun and the moon are two signs against the signs of Allah; they do not eclipse on the death or life of anyone. So when you see the eclipse, remember Allah and say Takbir, pray and give Sadaqa." The Prophet then said, "O followers of Muhammad! By Allah! There is none who has more ghaira (self-respect - honor) than Allah as He has forbidden that His slaves, male or female commit adultery (illegal sexual intercourse). O followers of Muhammad! By Allah! If you knew that which I know you would laugh little and weep much.
Bukhari 2.018.161
"The Prophet then said, "The sun and the moon are two of the signs of Allah. They eclipse neither because of the death of somebody nor because of his life (i.e. birth). So when you see them, remember Allah." The people say, "O Allah's Apostle! We saw you taking something from your place and then we saw you retreating." The Prophet replied, "I saw Paradise and stretched my hands towards a bunch (of its fruits) and had I taken it, you would have eaten from it as long as the world remains. I also saw the Hell-fire and I had never seen such a horrible sight. I saw that most of the inhabitants were women." The people asked, "O Allah's Apostle! Why is it so?" The Prophet replied, "Because of their ungratefulness." It was asked whether they are ungrateful to Allah. The Prophet said, "They are ungrateful to their companions of life (husbands) and ungrateful to good deeds. If you are benevolent to one of them throughout the life and if she sees anything (undesirable) in you, she will say, 'I have never had any good from you.' "
இவ் ஹதீஸ்களின் முன்பகுதியில், கிரகணங்கள் யாருடைய மரணத்திற்காகவும் நிகழ்வதில்லை என்று பகுத்தறிவு வாதம் கூறும் நபி (ஸல்), பிற்பகுதியில் சிறிதும் தொடர்பற்ற வகையில் கள்ளத் தொடர்பு  என்னும் கூடா ஒழுக்கம் கொள்ளும் பெண்களால் நரகம் நிரம்பி இருக்கும் காட்சியை காண்பதாக கூறுகிறார்கதீஜா அம்மையாரைத் தவிர வேறு எந்த மனைவியிடமும் நபியின் வாரிசுகள் உருவாகவில்லை என்பதையும், நபியின் வீட்டு அடிமைப் பெண்களில் ஒருவர் மீது கள்ளத் தொடர்பு குற்றச்சாட்டு இருந்ததாக புஹாரி கூறுவதையும்  நினைவில் கொள்ள வேண்டும்

Friday, 20 April 2012

இரு கடவுள்!



மனிதர்களை நல்வழிப்படுத்த எண்ணற்ற நபிகள்-ரஸூல்கள் என்ற தீர்க்கதரிசிகள் அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்டனர் என்ற குர் ஆனின் செய்தியை நாம் அறிவோம். இவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்று முஸ்லீம்களுக்கும் தெளிவாகத் தெரியாது. இஸ்லாமியர்களின் நம்பிக்கை இவ்விஷயத்தில் பலவாறாக வேறுபடுகிறது. தீர்க்கதரிசிகளின் எண்ணிக்கை, சில அறிஞர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கலாம் என்று கூறுகின்றனர். சிலர் ஆயிரங்களில் கூறுகின்றனர். இப்படியாக 1,24,000 வரை கூறப்படுகிறது. குர் ஆனின் வழியாக இருபத்து ஆறு நபிமார்களை அறிய முடிகிறது. குர்ஆன் கூறும் இந்த உலகின் வயது ஏறக்குறைய 6000-7000 ஆண்டுகள் இருக்கலாம். அதாவது ஆண்டிற்கு 20 நபிகள் வீதம் வந்திருக்கின்றனர். இப்ராஹிம்-லூத், மூஸா-ஹரூன்-கிள்ரு என்று ஒரே காலகட்டத்தில், ஒரே பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் தேவை ஏற்பட்ட கதைகளையும் குர் ஆனில் காணலாம்.
1,24,000 நபிமார்கள் என்ற தீர்க்கதரிசிகளுக்கு அப்படியென்ன தேவை?

படைபாளன் அல்லாஹ் மட்டுமே அவனைத்தவிர வேறு யாரையும், எதையும் வணங்கக் கூடாது என்ற செய்தியைக் கூற வந்தவர்கள். இதை இத்தனை தூதர்களை அனுப்பித்தான் கூறவேண்டுமா? அதை அவனே நேரடியாகக் கூயிருக்கலாமே? போட்டிக்கு வேறு எந்தவிதமான கடவுளர்களோ படைப்பாளர்களோ இல்லை, தன்னால் மட்டுமே இப்பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பது அல்லாஹ்வின் நிலையாக இருப்பின், தன்னை நிலைநிறுத்த அவன் மேற்கொள்ளும் சிரமம் விநோதமாகத் தோன்றவில்லையா? இதற்கான பதிலைக் காண்பதற்குமுன் இஸ்லாம் கூறும் நபிமார்களின் சிறப்பில்புகளை சுருக்கமாகக் காண்போம்

அல்லாஹ், மனிதர்களிலிருந்து வெகு சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நேரடியாகவும், மலக்குகள் என்ற உதவியாளர்கள் வாயிலாகவும் உரையாடினான். அவர்களுக்கு சிறப்பு போதனைகளும், பயிற்சிகளும் வழங்கப்பட்டது கூடவே சில (அற்பமான) மாயவித்தைகளும்(!) பயிற்றுவிக்கப்பட்டது. அவர்கள் அல்லாஹ்வின் சார்பாக பூமியில் அறிவிப்புகளை செய்தனர் அதனுடன் ஆட்சியையும், ஆதிகாரத்தையும் கைப்பற்றினர். நபிமார்களைப் போல மற்ற மனிதர்களையும் அல்லாஹ் ஏன் அவ்வாறு உருவாக்கிக் கொள்ளவில்லை? என்றொரு நியாயமான கேள்வி உங்கள் மனதில் எழுவது இயல்பானதே. கோடிக்கணக்கான மனிதர்களில் ஒரு சிலரைமட்டும் தேர்வு செய்வது என்ன நியாயம்? நபிமார்களை உருவாக்குவதென்பது அல்லாஹ்விற்கு மிகவும் சிரமமான விஷயமாக இருந்திருக்க வேண்டும் அதனால் தான் அவ்வாறு செய்யவில்லை.
ஆதம், நூஹ், இப்ராஹீமின் குடும்பத்தார், மற்றும் இம்ரானின் குடும்பத்தினரை அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்வு செய்தான்.
குர் ஆன் 3:33
மிகப்பெரும்பாலான தீர்க்கதரிசிகள் இப்ராஹிமின் வம்சத்தில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் மட்டுமே அல்லாஹ் தொடர்புகொண்டான். எல்லாம் வல்ல அல்லாஹ்வால் ஏன் அனைத்து மனிதர்களுடனும், நேரடியாக தொடர்புகொள்ள முடியவில்லை? அவ்வாறு செய்வதிலிருந்து தடுப்பது எது? அல்லாஹ்வின் செயல்களை  எவரும் கேள்விகேட்க முடியாதுஇதுதான் முஸ்லீம்களின் மெய்சிலிர்க்க வைக்கும் பதில்! நாம் விவாதத்திற்குள் செல்ல ஏதுவாக குர்ஆன் கூறும் ஆதிமனிதன் ஆதமின் கதையை கவனிப்போம். நபிமார்களை உருவாக்கும் அல்லாஹ்வின் திட்டம் ஆதமிலிருந்து துவங்குகிறது.
உன்னுடைய ரப்பு வானவர்களை நோக்கி, “நிச்சயமாக நான் பூமியில் பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்.” என்று கூறிய போது….
(குர்ஆன் 2: 30)
என்று தனது உதவியாளர்களான வானவர்களிடம் கூறி ஆலோசனை செய்கிறான். அவர்கள்/அவைகள் மறுக்கின்றன(ர்), அதையும் மீறி ஆதமை அல்லாஹ் உருவாக்குகிறான். ஆதமின் படைப்பு மற்ற படைப்புகளைவிட சற்று சிறப்பு வாய்ந்தது. மிகத் திறமையாக, மிக கவனமாகத் திட்டமிட்டு, தனது உருவத்திலேயே அல்லாஹ்வால் உருவாக்கப்பட்டதொரு படைப்பு. அவருக்கு தாயும், தந்தையும் அல்லாஹ்தான். அதுமட்டுமல்ல அவர் சொர்கத்தில் வாழ்ந்த மனிதர்; அல்லாஹ், இப்லீஸ், மற்றுமுள்ள இதர மலக்குகளையும் கண்களால் கண்டவர்; அல்லாஹ்விற்கும் இப்லீஸிற்குமிடையே நிகழ்ந்த இப்பிரபஞ்சத்தின் மிகப்பெரும் வாக்குவாதத்தையும் கண்டவர்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ...அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமைத் தனது உருவத்திலேயே படைத்தான்
(முஸ்லீம்)
     ஆதம் என்ற களிமண் பொம்மையை, தனது இருகைகளால் படைத்த அல்லாஹ், அதை அப்படியேவிட்டுவிட்டுப் எங்கோயோ போய்விட, புத்தி சாதுர்யமிக்க இப்லீஸ் ஆதமின் உடலை ஆராயத் துவங்கிவிட்டான். அதன் பலவீனங்களையும் அறிந்து கொள்கிறான். (பீ.ஜே அவர்களின் கவனத்திற்கு, இப்லீஸின் இந்த ஆராய்ச்சியின் மூலம் அல்லாஹ்விற்கும் வயிறு இருப்பது தெளிவாகிறது.)

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களைச் சொர்க்கத்தில் (களிமண்ணால்) படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத (கட்டுப்பாடற்ற) படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது'' என அவன் அறிந்துகொண்டான்.
(முஸ்லீம்)
பின்னர் அல்லாஹ் தனது ரூஹிலிருந்து ஊதி ஆதமை உயிர் பெறச் செய்து, மலக்குகளிடம் ஆதமிற்கு தலைவணங்குமாறு கட்டளையிடுகிறான்.

மலக்குகள் அனைவரும் ஸுஜூது செய்தனர்.
இப்லீஸைத் தவிர; அவன் ஸுஜூது செய்தவர்களுடன் ஆவதை விட்டும் அவன் விலகிக் கொண்டான்.
(குர்ஆன் 15:30-31)
ஆதமைப்பற்றி துடுக்குத்தனமாக கேள்விகளைக் கேட்ட மலக்குகளை மட்டம் தட்டும் நோக்கில் ஆதமிற்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்கத் துவங்குகிறான்.

மேலும் (பொருட்களின்) பெயர்கள் அனைத்தையும் ஆதமுக்கு அவன் கற்றுக் கொடுத்தான்.…
(குர்ஆன் 2:31)
        அல்லாஹ் என்ற ஆசிரியரிடம் பயிற்சி பெற்ற மாணவரான  ஆதமிடம், ஜிப்ரீல், மீக்காயீல் உட்பட மலக்குகளின் மொத்த கூட்டமும் தோல்வியடைகிறது. பின்னர் ஆதமிற்கு ஒரு துணையையும் அல்லாஹ் உற்பத்தி செய்து, அவர்களிருவருரையும் சொர்க்கத்தில் அனுமதித்து, மீண்டும் பயிற்சி வகுப்பையும், சில எச்சரிக்கைகளையும் வழங்குகின்றான்.
ஆதமே! இவன் உமக்கும், உமது மனைவிக்கும் எதிரியாவான். இவன் உங்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டாம். அப்போது நீர் துர்பாக்கியசாலியாவீர்!
சுவர்கத்தில் உங்கள் விருப்பம் போல இருங்கள் ஆனால் அந்த தடுக்கப்பட்ட மரத்தை நெருங்காதீர்கள் மீறினால் சபிக்கப்பட்டவராவீர்"
 “நீர் பசியில்லாதிருப்பதும், மறைக்கப்பட்டிருப்பதும் இதில் உண்டு.”
இதில் நிச்சயமாக நீர் தகிக்கவும் மாட்டீர், வெயிலில் படவுமாட்டீர்.”
(குர்ஆன் 2:35, 7:19, 20:117-123)

         அல்லாஹ்விடம் நேரடிப் பயிற்சி பெற்றதால் ஆதம் தம்பதியரிடம் கல்வியை/அறிவை அதன் தரத்தை நாம் சந்தேகிக்க முடியாது. அவர்களிடத்தில் எந்த ஒரு படைப்பும் நெருங்க முடியாத வகையில் அவர்களது அறிவு திறம் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். சொர்க்கலோகத்தின் அனைத்து விதமான உணவுகளும், இதர வசதிகளும் ஆதம் தம்பதியருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் எச்சரிக்கையை அல்லாஹ்விடமிருந்து நேரடியாகவே ஆதம் தம்பதியினர் பெறுகின்றனர். அல்லாஹ்வின் கட்டளையை மீறினால் என்ன நிகழும் என்பதையும் அவர்கள் மிகத் தெளிவாகவே அறிவர். ஆனால்,

சைத்தான் அவருக்கு மனதில் ஊச்சாட்டத்தை உண்டாக்கினான்; ஆதமே நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிந்து விடாத ஆட்சியையும் உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று அவன் கேட்டான்.
(குர்ஆன் 2:35, 7:19, 20:118-123)
அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த வெட்கத்தலங்களைப் பற்றிப் புரிய வைப்பதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். "இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை'' என்று கூறினான்.
"நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுபவனே'' என்று அவர்களிடம் சத்தியம் செய்தான்.
 (குர்ஆன் 7:20-21)
அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.
(குர்ஆன் 20:121)
இதை பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் 3:7 இவ்வாறு கூறுகிறது
இதனால் அவர்களின் கண்கள் திறந்தன. அவர்கள் தாங்கள் ஆடையில்லாமல் நிர்வாணமாக இருப்பதை அறிந்து கொண்டனர். எனவே அத்தி மரத்தின் இலைகளை எடுத்து அவற்றைத் தைத்து ஆடையாக அணிந்து கொண்டனர்.
(கூட்வே தனது துணைவியாருக்கு ஒரு புர்க்காவும் தைத்துவிட்டார் ஆதம்!)
...அவர்களின் இறைவன் அழைத்து "இம்மரத்தை நான் உங்களுக்குத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறவில்லையா?'' எனக் கேட்டான்.
(குர்ஆன் 7:22)
ஆதம், பழியை ஷைத்தான் என்ற இப்லீஸின் மீது போட, அவர்களது செயலுக்கு தண்டணையாக சுகபோக வாழ்க்கையை நீக்கப்பட்டு பூமிக்கு கடத்தப்பட்டனர்.
ஆதம் உணவையே காணாதவர் போல ஏன் நடந்து கொள்ளவேண்டும்? அல்லாஹ், ஆதமிற்கு வழங்கிய மிக உயர்ந்த கல்வியறிவு சிறிதும் பயனளிக்காமல் போனது ஏன்? அல்லாஹ்வை ஆதம் நம்பவில்லையா? அல்லாஹ்வைப் பற்றி அவர் என்ன நினைத்தார்? அல்லாஹ்வை சோதனை செய்து பார்த்தாரா?
இங்கே நீர் பசியோடு இருக்க மாட்டீர்! நிர்வாணமாக மாட்டீர்!
(குர்ஆன் 20:118)
என்று ஆதம் தம்பதியரிடம், அல்லாஹ் வழங்கிய உறுதிமொழி என்ன ஆனது?  இதற்கான பதில்களை மதவாதிகள்தான் கூறவேண்டும்.

அல்லாஹ், மலக்குகளிடம் (குர்ஆன் 2: 30) பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்'' (பீஜே மொழிபெயர்ப்பு)  என்றுதான் கூறுகிறான், சொர்க்கத்திலல்ல!. கட்டளையை மீறியதாகக் கூறி ஆதமையும் இப்லீஸையும் விசாரித்து தண்டித்த அல்லாஹ்வின் செயல் அரைவேக்காட்டுத் தனமாகத் தோன்றவில்லையா?
46. கலீஃபா எனும் சொல்லுக்குப் பொருள்
... முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை கலீஃபா எனக் கூறியது இந்தக் கருத்தில் தான். அதனால் தான் ஒரு கலீஃபாவைப் படைக்கப் போகிறேன் என்று அல்லாஹ் கூறியவுடன் ஒரே ஒரு மனிதர் மட்டும் படைக்கப்பட்டால் எப்படி இரத்தம் சிந்த முடியும் என்று எண்ணாமல் "அவர்கள் இரத்தம் சிந்துவார்களே' என்று வானவர்கள் கூறினர்.
இந்தச் சொல்லிலிருந்து ஆதமுக்கு ஒரு துணைவி படைக்கப்படுவார் என்பதையும், அவ்விருவர் வழியாக மக்கள் பெருகி சண்டையிட்டுக் கொள்வார்கள் என்பதையும் வானவர்கள் விளங்கிக் கொண்டனர்.
எனவே ஆதம் (அலை) அவர்களைப் பற்றிக் கூறும் இடங்களில் வழி வழியாகப் பல்கிப் பெருகுபவர் (தலை முறை) என்ற பொருளிலும் மற்றவர்களைக் குறித்து கலீஃபா என்ற சொல் பயன்படுத்தப்படும் போது முந்தையவர்களின் இடத்தை நிரப்பியவர்கள் என்ற பொருளிலும் புரிந்து கொள்ள வேண்டும். ...
(online pj.com)
         இவ்வளவு பெரிய முரண்பாட்டை தீர்க்க கையாலாகதவர்கள்,  பரிணாமவியலில் Irreducible Complexity பற்றி விவாதிப்பது மிகப்பெரிய வேடிக்கை. மனிதனின் ஆரம்பம் பற்றிய குர்ஆனின் இந்த முரண்பாட்டை ஆரம்பத்தை நேக்கிதொடரில் விரிவாக எழுதியிருக்கிறேன், அதனால் மேற்கொண்டு இங்கு விவாதிக்கவில்லை.
       
       இப்லீஸ், ஆதமை வணங்க மறுத்தது, ஆதமைவிட தான் உயர்ந்தவன் என்ற தன்முனைப்பு காரணமாகிறது. அவன் பெற்ற தண்டனை, பழிவாங்கும் உணர்வைத் தூண்டியதுடன், வெவ்வேறு வகையான குற்றச் செயல்களாக உருவெடுக்கிறது. அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படியாமையால், தடுக்கப்பட்ட மரத்திலிருந்த கனியை சுவைத்ததால் ஆதம் தம்பதிகளின் வெட்கத்தலங்கள் வெளியாயின என்பது அவர்கள் பாலுணர்வைப் பெற்றனர் என்பதையே குறிக்கிறது.

       இப்லீஸின் தன்முனைப்பு, விரோதமனப்பான்மை, கோபம், மோசடி, சூழ்ச்சி, நயவஞ்சகம், பொய்யுரைத்தல், பழிவாங்கும் குணம், ..., ஆதமின் சந்தேகம், ஏமாளித்தனம், கட்டளைக்கு மாறுசெய்தல், பாலுணர்வு, ..., இவைகள் எங்கிருந்து வந்தன? தடை செய்யப்பட்ட பழத்தை உண்டதால் விளைந்த காமம், எங்கிருந்து வந்திருக்க முடியும்?
சந்தேகமென்ன...! அல்லாஹ்விடமிருந்து மட்டுமே வரமுடியும்

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
....நபி (ஸல்) அவர்கள், (ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான்; அவனுக்கு முன் எந்தப் பொருளும் இருக்கவில்லை. அவனது அரியாசனம் தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) பாதுகாக்கப்பெற்ற பலகையில் (பிரபஞ்சத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான் என்று சொன்னார்கள்....
(புகாரி 7418)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ் (படைப்புகளைப்) படைக்கும் பணியை நிறைவு செய்த போது தன்னிடமுள்ள அரியாசனத்திற்கு மேலே, என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது என்று எழுதினான்.
(புகாரி 7422)
அவனே எல்லா விஷயங்களையும் எழுதிய பிறகு யாரிடம், எதற்காக கோபம் கொள்ளவேண்டும்? அவனே எதிபாராத அவனுக்கு விரும்பமில்லாத நிகழ்வுகள் ஏதேனும் அரங்கேறுமோ? கருணை கோபத்தை ஏன் மிகைக்க வேண்டும்?

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன...
(புகாரி 6000)
அல்லாஹ், அன்பு எனும் தன்மையின் தொண்ணூற்று ஒன்பது பகுதியை தன்னிடமே தக்கவைத்துக் கொண்டதாகக் கூறுகிறார்கள். அப்படியானால் காமம் உட்பட தன்முனைப்பு, விரோதம், கோபம், சூழ்ச்சி, பொய்யுரைத்தல், பழிவாங்குதல், நயவஞகம், சந்தேகம், ஏமாளித்தனம் இது போன்ற தன்மைகளின் தொண்ணூற்று ஒன்பது பங்கையும் அவன் தானே வைத்திருக்கத்தானே முடியும்? (ஹூருலீன்களை உருகி, உருகி வர்ணனை செய்வதையும், சல்லாபத்திற்காக வழங்கப்படும் பிரத்தியேக ஆற்றல்களையும் கூறி ஆசைகாட்டுவதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்!)
நானும் சூழ்ச்சியாக சூழ்ச்சி செய்கிறேன்.
(குர்ஆன் 86:15,16)
நிச்சயமாக என்னுடைய சூழ்ச்சி உறுதியானது
(குர்ஆன் 68:45)
     அல்லாஹ்விற்கு இருக்கும் 99 பெயர்களில் இப்படியும் சில பெயர்கள் அவனுக்கு உண்டு.
அல்-முதகப்பிர் (தற்பெருமை கூறுபவன்)அல்-ழார் (துன்பமுறச் செய்பவன்), அல்-ஜப்பார்  (சர்வாதிகாரி), அல்-கஹ்ஹார் (அடக்கியாள்பவன்), அல்-ஃகாஃபிள் (இழிவுபடுத்துபவன்), அல்-முதில்லு (அவமானப்படுத்துபவன்), அல்-முமீத் (மரணத்தை வழங்குபவன்), அல்-முந்த்கிம் (பழிவாங்குபவன்)

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்  (ரலி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான் மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்கமானவை அனைத்திற்கும் தடைவிதித்துள்ளான். தன்னை புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. ஆகவேதான் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்
(புகாரி 4634)
      அல்லாஹ்வின் செயல்களும், அவன் தனக்குத்தானே சூட்டிக் கொண்ட பெயர்களும்,  அவனைக் கடவுள் பாதி மிருகம் பாதி என்று காட்டுகிறது. கடவுள் புனிதனாகவும், சாத்தானாகவும் இருக்க முடியுமா? இதுதான் இறைத்தன்மையா?

         இப்பிரபஞ்சத்தின் நல்லொழுக்கமுள்ள ஒன்று அல்லாஹ் மட்டும்தான் (அடுத்தது முஹம்மதா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது) என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. இதை எப்படி ஒப்பிட்டு கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. அல்லாஹ்விற்கு இயல்புகளும், உணர்வுகளும் இருக்க வேண்டுமென்பது இந்நம்பிக்கையின் ஒரு பகுதி. அல்லாஹ்விற்கு கோபம், கருணை என்ற உணர்வுகள் மட்டுமே இருக்கும் என்பது மடத்தனமாக இல்லையா? மற்ற தீய குணங்கள் எங்கிருந்து வந்தன? பூமியில் நிலவும் தீமைகளுக்கு யார் காரணம்? அது அல்லாஹ்வை மீறி நிகழ்ந்தவைகளா? அல்லது தீமையும் அவனால் திட்டமிடப்பட்டுள்ளதா? ஆம் எனில் அவன் நல்லவன் அல்ல! அவனது விதிமுறை மீறப்பட்டுள்ளாது என்பீர்களேயானால் அவன் சர்வவல்லமையுடையவனல்ல. அல்லாஹ் சர்வவல்லமையும், எல்லைகளற்ற புனிதனாகவும் இருக்கவழியில்லை. அனைத்து தீமைகளுக்கு உச்சகட்ட பொறுப்பு யார்? அல்லாஹ் பொறுப்பல்ல என்று தட்டிக்கழிக்க முடியது. ஏனெனில் ஆதியில் அல்லாஹ்வைத்தவிர எதுவுமே, எந்த தன்மைகளுமே இல்லையென்பதை, குர் ஆனும், ஹதீஸ்களும் கூறும் படைப்பின் துவக்கம் நமக்குக் கூறுகிறது.
இங்கு தீமையை இப்லீஸின் தலையில் சாட்டிவிட்டு ஓடமுடியாது. தீமைமையை இப்லீஸ்தான் உருவாக்கினான் என்றால் ஒரு கடவுள் என்ற வாதம் அர்த்தமற்றது. இப்லீஸ் ஏன் இவ்வுலகைப் படைத்திருக்கக் கூடாது?

தஜ்ஜால்


Sunday, 15 April 2012

வணக்கங்களால் யாருக்கு லாபம் ?


விதண்டாவாதம் என்ற தலைப்பில் வணக்கங்களால் கடவுளுக்கு என்ன லாபம் ?                என்ற கேள்விக்கு அறிஞர் P. ஜெயினுல் ஆபிதீன் அளித்துள்ள விளக்கத்திற்கு மறுப்பு.

உலகிலுள்ள பெரும்பாலான மக்களும் ஏதோ ஒரு முறையில் கடவுளை வழிபாடு செய்கிறவர்கள்தான். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களது நன்மைக்காகவும் வெகு சிலர் மற்றவர்களின் நன்மைக்காவும் அனுதினமும் கடவுளைத் தொழுது சரணடைகின்றனர். இவர்கள் அனைவருமே கடவுளிடமிருந்து நன்மைகளை அடையமுடியுமா?
இந்த கேள்விக்கு  சராசரிக்கும் குறைவான மத அறிவுடைய இஸ்லாமியர் கூட இதற்கு இல்லையென்ற பதிலை உறுதிபடக் கூறுவார். காரணம், அல்லாஹ்வையும் முஹம்மதையும் ஏற்காத ஒரு வணக்கம், ஏற்புடையதல்ல என்பதுதான். எனவே, நன்மைகளை அடைய(!) இஸ்லாம் கூறும் வணக்கமுறைகளைக் காண்போம்.
தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் என்றொரு பட்டியல் இருந்தாலும், அல்லாஹ்விற்கு இணை வைக்காது, அவனது தூதர் முஹம்மதிற்கும் முற்றிலும் வழிப்படுதலே முதன்மையானது.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
குர் ஆன் 4:48
தன்னைத் தவிர வேறு கடவுளர்கள் இல்லை, தான்மட்டுமே ஒரே கடவுள் என்பது அல்லாஹ்விற்குத் தெரியுமல்லவா? மனிதர்கள் அதை உணராமல், தங்களது அறியாமையால் செயல்படுவதால் அவனுக்கு இழப்பு ஏதேனும் நிகழுமோ?
இறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏக மனதாக முடிவு செய்தாலும் இறைவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை. இறைவனை அனைவரும் வணங்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் போட்டாலும் இறைவனது மதிப்பு இதனால் அதிகமாகி விடப் போவதில்லை.
என்கிறார் அறிஞர் P. ஜெயினுல் ஆபிதீன். ஆனால் இது பீஜே அவர்களின் வெற்று கற்பனையே. இவரது இந்த விளக்கம் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு எதிரானது. தான் மட்டுமே ஒரே இறைவன், தன்னை மட்டுமே வணங்க வேண்டும், தான் கூறும் முறையில் மட்டுமே வணங்கப்பட வேண்டும் என்பதை அறியச்செய்ய அல்லாஹ் காண்பிக்கும் வெறித்தனம் எல்லையில்லாதது.
இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் இழப்பை அடைந்தவராக இருப்பார்.
குர் ஆன் 3:85

நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே.
குர் ஆன் 9:28

நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (அல்லாஹ்வை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை.
குர் ஆன் 3:28
நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாது காவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே.
குர் ஆன் 5:51

இவ்வாறு அல்லாஹ், தனது விருப்பங்களையும், கோரிக்கைகளையும்  தனது தூதர் முஹம்மதின் வாயிலாக விளம்பரமும் செய்தான். ஆனாலும் பெரிதாக எந்தப்பலனும் கிடைக்கவில்லை. தனது கோரிக்கையை ஏற்று, னது அறிவுறுத்தலின்படி தன்னை வணங்க மறுத்தவர்களை, ’வழிக்குக் கொண்டுவர இயலாமல் போனது. அவர்களுக்கெதிராக தன்னால் எதுவும் செய்ய கையாலாகமல், முஹம்மதுவிடம், அவர்கள் மீது போர்தொடுக்க வற்புறுத்துகிறான். வரிவசூல் செய்வேன் என்று மிரட்டலும் விடுகிறான். அப்படியாவது தன்னை வணங்கமாட்டார்களா என்ற நப்பாசைதான்.
நபியே! நம்பிக்கை கொண்டோருக்கு போர் செய்ய ஆர்வமூட்டுவீராக! ...
குர் ஆன் 8:65
அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல், உண்மையான மார்க்கத்தைக் கடைப் பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்.
குர் ஆன் 9:28
அவர்கள் திருந்திக் கொண்டு, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்!
குர் ஆன் 9:05
தன்னைத் தவிர வேறு இறைவன்கள் ஒருவரும் இல்லை எனும் பொழுது, அல்லாஹ்விற்கு ஏன் இவ்வளவு கவலை? தனது நிலையை நிரூபிக்க மிகுந்த சிரமங்களை மேற்கொள்கிறான். வெறித்தனமான கோபம் கொள்கிறான். தனது கைத்தடிகளை, மாற்று நம்பிக்கை கொண்டவர்கள் மீது போர் செய்யுமாறு ஏவிவிடுகிறான். போர்க்களத்தில் பின்தங்கி விடுவார்களோ அச்சம் மிகைத்தாலோ என்னவோ அவர்களை உற்சாகமூட்டுகிறான். கூடவே தனது வானவர்(!) படைகளையும் அவர்களுக்கு துணையாக இருப்பதாக்கூறி அவர்களுக்க ஆசைகாட்டுகிறான்.
தங்களுடைய சத்தியங்களை முறித்து (நம்) ரஸூலை (ஊரைவிட்டு) வெளியேற்ற எண்ணிய கூட்டத்தாரிடம் நீங்கள் போர் புரிய வேண்டமா? அவர்கள் (தாம்) முதன் முறையாக உங்களிடம் (போரைத்) துவக்கினர்; அவர்களுக்கு அஞ்சுகறீர்களா? அல்லாஹ்–அவனே அஞ்சுவதற்கு மிகத் தகுதியானவன்- நீங்கள் (உண்மையான) முஃமின்களாக இருந்தால்.
(குர் ஆன் 9:13)

...உங்களில் சகித்துக் கொள்கின்ற இருபது பேர் இருந்தால் இருநூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் நூறு பேர் இருந்தால் (அல்லாஹ்வை) மறுப்போரில் ஆயிரம் பேரை வெல்வார்கள்.
குர் ஆன் 8:65
உங்களுடைய ரப்பிடத்தில் நீங்கள் பாதுகாவல் தேடிய பொழுது தொடர்ந்து அணிவகுத்து முன்னே) வரும்படியான ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உங்களுக்கு நிச்சயமாக நான் உதவி செய்பவனாக இருக்கிறேன் என்று  உங்களுக்கு அவன் பதிலளித்தான்.
(குர்ஆன் 8: 9)

மற்ற இறைவன்களை நிராகரித்துவிட்டு, தன்னை மட்டுமே ஏற்று வணங்க மறுத்தவர்களை கடுமையாக சித்திரவதை செய்து தண்டிக்க உத்தரவிடுகிறான்.
இணை கற்பிப்போரைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்!
குர் ஆன் 9:05
கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகிய வையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை.
குர் ஆன் 5:33

அவர்களுடன் போர் செய்யுங்கள்! உங்கள் கைகளால் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான். அவர்களை இழிவுபடுத்துவான்.
குர் ஆன் 9:14


என்னை நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய ஒவ்வொரு கணுவையும் வெட்டுங்கள்
 குர் ஆன் 8:12

இப்படியெல்லாம் ஒரு கடவுள் கூறுவானா? இதுதான் கடவுளின் இலக்கணமா?

"கொல்லுங்கள்' "வெட்டுங்கள்' என்றெல்லாம் கூறப்படும் கட்டளைகள் போர்க்களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவை. போர்க்களத்தில் இப்படித் தான் நடக்க வேண்டும்.
53. போரின் இலக்கணம்  onlinepj.com
(பீஜே அவர்களின் கவனத்திற்கு, ஒவ்வொரு இணைப்பையும் வெட்ட வேண்டுமெனில் (கு 8:12), மனித உடலிலுள்ள 200க்கும் மேற்பட்ட எலும்பு இணைப்புகளையும் வெட்ட வேண்டுமா? என்று கசாப்புக்கடையில் உயர்நிலைப் போர்ப்பயிற்சி பெறும் நோக்கத்திலுள்ள ஜிஹாதி ஒருவர் கேட்கிறார்)
                "கொல்லுங்கள்' "வெட்டுங்கள்'  என்ற குர்ஆனின் கட்டளைகளின் உண்மையான காரணத்தை மறைத்து, மழுப்பலாக இவைகள் போர்க்களத்திற்கு மட்டும்தான் பொருந்தும் என்று கூறி, மாற்று மதத்தினருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டதைப் போல ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார் பீஜே. முஹம்மதையும் ஏற்க மறுத்தவர்கள், ‘ஜிஸ்யாவரி செலுத்தி திம்மிகள்என்ற இரண்டாம் தர குடிமக்களாக வேண்டும் அல்லது போரிட்டு மடியவேண்டும் இவைகள்தான் அல்லாஹ் வழங்கிய மாபெரும் வாய்ப்புகள். அதிலும் உருவ வழிபாடு செய்பவர்களின் நிலையைக் கேட்கவே வேண்டாம்.
ஏப்ரல் 9 , 2002 பதிப்பில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சௌதி அரேபியாவில் இருக்கும் ரத்தப்பணம் என்ற கருத்தைப் பற்றி ஒரு கட்டுரையை வெளியாகியிருந்தது. ஒருவர் கொல்லப்பட்டால் கொல்வதற்கு காரணமானவர் கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடாக பின்வருமாறு நிர்ணயிக்கப் பட்ட தொகையை ரத்தப்பணமாக கொடுக்க வேண்டும்.
 கொல்லப்பட்டவர்            ரத்தப்பணத்தொகை (ரியால்கள் )
·         முஸ்லிம் ஆண்                               100,000
·         முஸ்லிம் பெண்                              50,000
·         கிறிஸ்துவ ஆண்             50,000
·         கிறிஸ்துவ பெண்            25,000
·         இந்து ஆண்                       6,666
·         இந்து பெண்                      3,333
                அல்லாஹ்வைப் பொறுத்தவறையில், தான் அறிவுறுத்தியபடி தன்னை வணங்காதவர்களின் மதிப்பு இவ்வளவுதான். வழிபாடுகளில் அல்லாஹ்விற்கு எவ்விதமான பலனுமில்லை என்று பீஜே உளறுவதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
                ’தன்னால் நிராகரிப்பவர்களாக மாற்றப்பட்ட படைப்பினங்களை சமாளிக்க வழிதெரியாமல் சூழ்ச்சிகளையும் செய்தான். இறைவன் சூழ்ச்சி செய்வானா? சூழ்ச்சி செய்வது இறைத்தன்மையா? என்ற கேள்விகள் இஸ்லாமிய அறிஞர்களை மிகவும் இம்சித்துவிட்டது. வேறு வழி தெரியாமல்,  
"அல்லாஹ் சூழ்ச்சி செய்கிறான்', "அல்லாஹ் கேலி செய்கிறான்', "அல்லாஹ் ஏமாற்றுகிறான்' என்பன போன்ற வாக்கியங்கள் திருக்குர்ஆனில் பரவலாகக் காணப்படுகின்றன.
ஏமாற்றுதல், கேலி செய்தல் போன்றவை கையாலாகாத பலவீனர்களின் செயல்களாகும். "ஆகு' என்று கூறி ஆக்கும் வலிமை பெற்றவன், திட்டமிட்டு சூழ்ச்சி ஏதும் செய்யத் தேவை இல்லையே என்று சிலர் நினைக்கலாம்.
ஆனால் பெரும்பாலான மொழிகளில் இத்தகைய சொற்பிரயோகங்களை அதற்குரிய நேரடிப் பொருளைத் தவிர்த்து வேறு பொருளில் பயன்படுத்துவதைக் காணலாம்.
உதாரணமாக, "நீ வரம்பு மீறினால் நான் வரம்பு மீறுவேன்'' என்று நாம் கூறும் போது, முதலில் உள்ள வரம்பு மீறுதல் தான் அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதாகக் கூறப்பட்ட வரம்பு மீறுதல், பதிலடி என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் நமக்கெதிராக வரம்பு மீறிய பின் அதற்குப் பதிலடி தருவது வரம்பு மீறலாக ஆகாது.
"அவர்கள் கேலி செய்தால் அல்லாஹ்வும் கேலி செய்வான்'' என்பது "கேலி செய்ததற்கான தண்டனையை வழங்குவான்'' என்ற கருத்திலும், "அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்'' என்பது "சூழ்ச்சியைத் தோல்வியுறச் செய்வான்'' என்ற கருத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"நீ செய்தால் நான் செய்வேன்'' என்ற தோரணையில் அமைந்த இறைத் தன்மையைப் பாதிக்கும் வகையிலான அனைத்துச் சொற்களையும் இவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும். கண்டிக்கும் வகையில் இல்லாமல் பாராட்டும் வகையிலும் இத்தகைய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
"என்னை நீ நினைவு கூர்ந்தால் நானும் உன்னை நினைவு கூர்வேன்'' "நீ நன்றி செலுத்தினால் நானும் நன்றி செலுத்துவேன்'' என்று இறைவன் கூறுவான். இறைவன் நம்மை நினைவு கூரத் தேவையில்லை. நன்றி செலுத்தவும் தேவையில்லை. எனவே அதற்கான பலனைத் தருவான் என்றே இது போன்ற சொற்களைப் புரிந்து கொள்ள வேண்டும். "இறைவன் சபிக்கிறான்' என்றால் "தண்டிக்கிறான்' என்று புரிந்து கொள்ள வேண்டும்
6. அல்லாஹ் இயலாதவனா?  onlinepj.com
        இப்படியும் விளக்கம் கூறமுடியுமா? என்று கேட்வர்கள் தலையிலடித்துக் கொள்ளும் விதமாக சமாளித்து வைத்தனர். சூழ்ச்சியை, சூழ்ச்சி என்றுதான் விளங்கமுடியும். ஏனெனில் அல்லாஹ்வே தனது செற்களை ஒளியும், தெளிவும் நிறைந்தது (கு 5:15) விளங்குவதற்கு எளிதானது (கு 5:22) என்கிறான்.  சூழ்ச்சி செய்வேன், சூழ்ச்சி செய்பவர்களில் சிறந்தவன் என்றெல்லாம் உளறிக்கொட்டுவது இறைத்தன்மைக்கு இழுக்கானதென்று பீஜே போன்ற அறிஞர்களுக்கு இருந்த கவலைகூட, அல்லாஹ்விற்கு இல்லாமல் போய்விட்டது என்கிறது இவர்களின் விளக்கம். தான் பயன்படுத்தும் சொற்கள் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பது அல்லாஹ்விற்குத் தெரியாதா?
...எந்த புத்தகத்திற்கும் அதன் தெளிவான அர்த்தத்தைத் தவிர மற்ற விளக்கங்கள் கொடுக்கக் கூடாது. குறிப்பாக அந்த புத்தகம் தான் ஒரு வழிகாட்டி என்று கூறிக்கொண்டால் அப்படிச் செய்யவே கூடாது. ஒரு வழிகாட்டும் நூல் தெளிவாகவும் வெவ்வேறு வழிகளில் புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை அளிக்காததாகவும் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அது ஒரு வழிகாட்டும் புத்தகமே அல்ல.
...அதே சமயம் அவர்களால் இதை எதிர்த்து கேள்வி கேட்க முடியவில்லை. அதனால், அவர்கள் குர்ஆனுக்கு மறைமுக அர்த்தம் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். கடவுளிடமிருந்து வந்த நன்னெறிப் புத்தகத்தை வேறுவிதத்தில் புரிந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு எண்ணமே ஒரு தவறான தர்க்கம். குர்ஆனுக்கு எப்படி விளக்கம் கொடுத்தாலும், சரியாக வராது. சில சமயங்களில் பச்சை முட்டாள்தனமாக இருக்கும் என்கிறார் Dr.அலிசினா.
தன்னை நிராகரித்தவர்கள் மீதிருந்த கோபம், அல்லாஹ்வை நிதானமிழந்து உளறச் செய்துவிட்டது. அவன் இதைப்பற்றியெல்லாம்  சிறிதும் கவலைபட்டதாகத் தெரியவில்லை.
                அல்லாஹ்வின் கவனம் முழுவதும் எப்படியாவது அவர்களை வெற்றி கொள்ளவேண்டும் என்பதிலேயே இருந்தது. எதிரிகளின் படைபலத்தைக் கண்டு, தனது ஆதரவாளர்கள் புறமுதுகிட்டு ஓடித் தொலைத்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை மேலிட்டதால்,  தந்திரங்களை கையாண்டான், எப்படியும் வெற்றி பெற்றே ஆகவேண்டுமென்ற வெறி, தனது ஆதரவாளர்களையும் சூழ்ச்சி செய்து ஏமாற்றத் தூண்டியது.
உமது கனவில் அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாரும்!. அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள்….
குர் ஆன் 8:43
                இந்த அற்பத்தனமான கிரஃபிக்ஸ்வேலை செய்வதைவிட தனது கைத்தடிகளுக்கு வீரத்தை வழங்கியிருக்கலாம். இப்படியும் ஒரு இறைவனா? ஆனால் நாம் ஒரு உண்மையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். எத்தனை செப்படிவித்தைகளைச் செய்து ஏமாற்றியிருந்தாலும் அதை இறுதியில் ஒப்புக்கொண்ட பாங்கை நாம் பாராட்டியே தீரவேண்டும். அல்லாஹ்வின் இந்த துணிச்சல் இஸ்லாமிய அறிஞர்களிடம் இல்லை. இங்கு இன்னொன்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குர் ஆனில் குறிப்பிடப்படும் நிகழ்வுகள் அனைத்துமே, புதைத்து, அழுகிப்போன பிணத்தைத் மீண்டும் தோண்டி எடுத்து பிரேதப்பரிசோதனை செய்வதைப் போலிருப்பது ஏன்?
                முஸ்லீமல்லாதோரின் மீதான அல்லாஹ்வின் கொடூரம் சகிக்கமுடியாதது. உலகில் அவர்களை தண்டித்து, கொத்துக்கறி செய்வதற்கு உற்சாகமூட்டினான், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விரட்டியடித்தல் என்று பலவாறாக இழிபடுத்தியும் அவனது ஆத்திரம் தணியவில்லை.  அவர்களை மரணத்திற்குப் பின்னும் விடுவதாக இல்லை. அல்லாஹ்விடம் பெரிய அடுப்பு ஒன்று உள்ளது. அதில் மனிதர்களை வறுத்து எடுப்பான். மனிதர்களின் கருகிய உடல்களிலிருந்து வெளியாகும் வாசனையின் மீது அல்லாஹ்விற்கு அலாதியான இன்பம் உண்டு.
இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.
குர் ஆன் 5:34

அவர்கள் விஷயத்தில் கடுமை காட்டுவீராக! அவர்களின் புகலிடம் நரகம். அது கெட்ட புகலிடம்.
குர் ஆன் 66:09

தமது இறைவனைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருந்த இரண்டு வழக்காளிகள் இதோ உள்ளனர். (ஏக இறைவனை) மறுத் தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலைகள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.  அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளும் உள்ளன. கவலைப்பட்டு அங்கிருந்து அவர்கள் வெளியேற எண்ணும் போதெல்லாம் மீண்டும் அதில் தள்ளப்படுவார்கள். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்!
குர் ஆன் 22:19-22

அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுப்பதற்காக தனது கழுத்தைத் திருப்பிக் கொள்கிறான். அவனுக்கு இவ்வுலகில் இழிவு உண்டு. கியாமத் நாளில் சுட்டெரிக்கும் வேதனையை அவனுக்குச் சுவைக்கச் செய்வோம்.
குர் ஆன் 22:09
        முஸ்லீமல்லதோரையும் அல்லாஹ்தானே படைத்தான்? அவன் எல்லொருக்கும்தானே இறைவன்? தனது செந்தப்படைப்புகளின் மீதே அவனுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? குர் ஆனில் அவன் கூறியுள்ள செய்தி, அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மட்டுமே நம்ப வேண்டும். அத்தகையவர்களுக்கு எல்லைகளற்ற உடலுறவு இன்பம்! நம்பாதவர்கள், பெரும் நெருப்பிலிட்டு கரிக்கப்படுவார்கள் என்ற அச்சுருத்தல்கள்.
        தனக்கு எவ்வித பயனுமில்லாத வணக்கங்களையும், சடங்கு, சம்பிரதாயங்களின் செயல்முறைகளை போதித்து, இத்தனை வற்புறுத்தல்களையும், அச்சுருத்தல்களையும் கூறி காலில் விழுந்து கெஞ்சிக் கேட்காத குறையாக கேட்டுப் பெறவேண்டிய தேவையென்ன? தன்னை வழிபடுமாறு அல்லாஹ் கூறியது, மனிதர்களின் நன்மைக்கே என்ற P. ஜெயினுல் ஆபிதீன் அவர்களின் விளக்கம் உண்மையல்ல. பிறகு ஏன் இப்படி கூறவேண்டும்?
        பீஜே., தனது விளக்கத்தில், சூறையாடவும், ஊனப்படுத்தவும், கற்பழிக்கவும் கொலை செய்யவும் காரணமாக இருக்கும் ஒருவனை, நல்லாசிரியர்களுடனும், நலம் விரும்பிகளுடனும் ஒப்பிட்டு உளறுகிறார். ஆசிரியர்களும், நலம்விரும்பிகளும் நன்மையை ஏவுவதும், எச்சரிப்பதும், சமுதாய வாழ்வில் தாங்கள் பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டுதான். அல்லாஹ்வின் நிலையும் அப்படித்தானா? படைப்பதும், இறுதி நிலைவரை விதியைத் தீர்மானிப்பதும் நானே, ஒவ்வொரு செயலும் அதன் முடிவும் தனது விருப்பத்தின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்று கொக்கரிப்பவனுக்கு வணக்க வழிபாடுகளை கெஞ்சிக் கேட்டுப் பெறவேண்டிய தேவையென்ன?
        உதாரணத்திற்கு, என்னுடைய கற்பனைப் புதினத்தில் உள்ள, நான் கற்பனையாக உருவாக்கிய கதாபாத்திரங்கள் என்னைப் போற்றிப் புகழவில்லையே என்று கடும்கோபம் கொண்டு வழக்காடும்வகையில் எழுதினால் என்னை ஒரு முற்றிய பைத்தியக்காரன் என்று சொல்லமாட்டீர்களா? அத்தகைய ஒரு உலக மகா மூடனை நீங்கள் குர் ஆனில் காணலாம். இத்தனை முரண்பாடான இறைவனும், அவனுக்கொரு வழிபாடும்  எதற்கு? இதர முறைகளில் அமைந்த வழிபாடுகள் ஏன் பயனளிப்பதில்லை?
விடை, வழிபாடுகளை போதிப்பவர்களிடம் மறைந்திருக்கிறது.
மீண்டும் மீண்டும் வணக்க வழிபாடுகள் இறைவனுக்குத் தேவையில்லை எனினும் நாம் அவனை வணங்க வேண்டும், இல்லையெனில் அவன் கடும் கோபம் கொண்டு தண்டித்திடுவான் என்று ஒப்பாரி வைப்பது உங்களது நன்மைக்காக அல்ல.
இன்று நாம் காணும், ஒருவேளை உணவிற்காக குறிசொல்லும் குடுகுடுப்பைக்காரன் முதல் பெரும் செல்வத்தில் புரளும்  சாமியார்கள், மதபோதகர்கள் வரை வண்க்க வழிபாடுகளைக் கூறித்தான் பொருளீட்டுகிறார்கள். அவர்கள் புதிதாக எதையும் போதிப்பதில்லை. வழக்கிலுள்ளவைகளையே சற்று கூட்டியும் குறைத்தும் இட்டுக்கட்டி நம்பவைக்கின்றனர்.
ஃபாத்திஹா, மவ்லீது, ராத்தீபு என்ற புகழ்மாலைப் பாடல்களுடன், தர்ஹா வழிபாடு, தொழுகை நோன்பு என்று இஸ்லாமியர்களின் காலம் கடந்து கொண்டிருந்தபொழுது, என்பதுகளிலிருந்து நாமும் இதைபோன்ற ஒன்றைச் சந்திக்கத் துவங்கினோம்.
தமிழகத்தில், திடீரென்று ஒருவர், முஹம்மதை துணைக்கு அழைத்துக் கொண்டு, முஸ்லீம்களின் இரத்தத்தில் இரண்டற கலந்திருந்த தர்ஹா வழிபாட்டை எதிர்க்கத் துவங்கினார். வெகுமக்கள் அதிகமாக அறிந்திராத ஹதீஸ்களை முவைத்து தொழுகையில் விரலை ஆட்டவேண்டும், காலை அகட்டி நெஞ்சின்மீது கையைக் கட்டி வணங்கவேண்டும், இவ்வாறல்லாத வணக்கத்தை அல்லாஹ் ஏற்கமாட்டான் என்றார். நாகூர் ஹனிஃபாவின் பக்திப்பாடல்களையே வழிபாடு நம்பியிருந்த மக்களுக்கு விழிபிதுங்கியது.
ஃபாத்திஹா, மவ்லீது, ராத்தீபு என்ற புகழ்மாலைப் பாடல்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிரானது என்று கடுமையாகச்சாடி, ஐந்திற்கும், பத்திற்கும் ஃபாத்திஹா, மவ்லீது, ராத்தீபு ஓதி வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் பிழைப்பில் மண்ணை எறிந்தார். அவர்களை முஸ்லீம்களே அல்ல என்று கூறி அத்தகையவர்களுடனான உறவைத் துண்டிக்க தனது ஆதரவாளர்களைத் தூண்டினார்.
மசூதிகளுக்குள்ளும், பல குடும்பங்களுக்குள்ளும் விரோதம் நுழைந்தது. குழம்பியகுட்டையில் வலைவீசினார், திமிங்கிலங்களும் அவரது தூண்டிலில் சிக்கியது. இன்று லேப்டாப் சகிதமாக ஹைடெக் ஆலீமாக வலம் வருகிறார். பெரும் பெரும் அரசியல்வாதிகளே அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துமளவிற்கு ஆள்பலத்தைக் காண்பிக்கிறார். இது எப்படி சாத்தியமானது? வழக்கிலிருந்த அதே வணக்கவழிபாடுகளை புதிய சாயம் பூசி விற்பனை செய்ததால் மட்டுமே இது சாத்தியமாயிற்று.
இதையேதான் அன்று முஹம்மதுவும் செய்தார். அரேபியர்களுக்கு நன்கு அறிமுகமாயிருந்த அல்லாஹ்வுடன் தன்னை இணைத்தார். அவர்களது வழக்கிலிருந்த சிலை வழிபாட்டையும், உப தெய்வங்களையும், குட்டித் தெய்வங்களையும் எதிர்த்தார். தான் அரைகுறையாக தெரிந்து வைத்திருந்த, அப்பகுதியில் நிலவிய நாடோடிக்கதைகளை ‘ரீமிக்ஸ்செய்து அல்லாஹ் கூறியதாக உளறிக்கொட்டினார். அல்லாஹ் தர இருப்பதாக, சொர்க்கலோக சல்லாபக் கதைகளைக் கூறி நெருங்கிய உறவுகளையே போர்க்களத்தில் எதிரெதிராக நிறுத்தி, தனது இரத்தவெறியைத்தீர்த்துக் கொண்டார். அவரது பித்தலாட்ட வேலைகளை இனம் கண்டவர்களை அல்லாஹ்வின் விரோதி என்று கூறி கூண்டோடு அழித்தொழித்தார். எதிர்க்கேள்வி கேட்க ஆளில்லாமல்  ஒட்டுமொத்த அரேபியாவும் முஹம்மதின் காலடியில் வீழ்ந்தது.
வணக்கங்களால் லாபமடைந்தது அதை போதித்தவர்கள் மட்டுமே!


தஜ்ஜல்