பக்கங்கள்

Thursday, 3 December 2015

பைஅத் ரிள்வானும் பைத்தியக்கார கடவுளும்!



ஹிஜ்ரி  ஆறாம் ஆண்டு உம்ரா வழிபாடு செய்வதற்காக முஹம்மது தனது தோழர்களுடன் மக்காவிற்கு செல்கிறார். அல்லாஹ்விற்கு  பலியிட ஒட்டகங்களையும், அவரது தோழர்கள் 700 பேர் இருந்ததாக அஹ்மத் ஹதீஸும், 1400 பேர் இருந்ததாக புகாரி ஹதீஸூம் கூறுகிறது. நாம் இரண்டு ஹதீஸ்களுக்கும் பொதுவாக 1050 பேர்கள் இருந்ததாக வைத்துக் கொள்வோம். இப்பொழுது உங்கள் மனதில் இப்படியொரு கேள்வி எழலாம், அல்லாஹ்விற்கு பலியிட 1050 மனிதர்களையா முஹம்மது அழைத்துவந்தார்? 

ஆமாம்..!  என்றுதான் சொல்லுவேன்!

அல்லாஹ்விற்காக(!) முஹம்மது நிகழ்த்திய போர்களைப்பற்றி சற்று சிந்தித்து பாருங்கள். அல்லாஹ்விற்கு மனித இரத்தவாடையின் மீதிருக்கும் மோகம் என்னவென்பது புரியும்!

ஆனால் முஹம்மது இந்தப் பயணத்தை ஒரு புனிதப் பயணமென்றே கூறிக் கொண்டார். அதாவது ஒருவர் தனது மறுமை வாழ்விற்காக நன்மைகளைச் சேர்க்க இதர வழிபாடுகள் செய்வதப் போன்று உம்ராவும் ஒரு வழிபாடு என்று கூறியதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும். முஹம்மது தனது மறுமை வாழ்வு சிறக்க வழிபாடு செய்யட்டும் தவறில்லை அது அவரது நம்பிக்கை. ஆனால் அதை  1050பேர் புடைசூழ சென்றுதான் நிறைவேற்ற வேண்டுமா?
சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு இதில் அத்தாட்சிகள் இருக்கிறது!

முஹம்மது, மக்கா குறைஷிகளை ஆழம் பார்ப்பதற்காக, கிராஷ் பின் உமைய்யா அல்குஸாயீயை மக்காவிற்கு ஸஃலப் என்ற ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பினார்கள். அவர் மக்காவில் நுழைந்ததும் அவரது ஒட்டகத்தைக் குறைஷிகளில் சிலர்  அறுத்து, கிராஷையும் கொலை செய்யவும் முனைந்தனர். அதற்குள் அங்கிருந்த பனூ கினானா கிளையைச் சேர்ந்தவர்கள் கொலை செய்ய முயன்றவர்களைத் தடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததுடன், கிராஷ் பின் உமைய்யா அல்குஸாயீயை, முஹம்மதுவிடம் பாதுகாப்பாக திருப்பி அனுப்பினர்.

உடனே முஹம்மது, ஊரறிந்த முரடரான  உமரை மக்காவுக்கு அனுப்புவதற்காக அழைத்தார்கள். அதற்கு உமர், "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிகள் என்னைத் தாக்கி விடுவார்கள் என்று அஞ்சுகின்றேன். என்னைத் தாக்குவதை விட்டும் தடுத்து எனக்கு உதவுகின்ற பனூ அதீ கிளையார்களில் யாருமே அங்கு இல்லை. நான் குறைஷிகளின் மீது கொண்டிருக்கின்ற விரோதத்தையும் அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் கடினப் போக்கையும் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். என்னை விட குறைஷிகளிடம் மரியாதை மிக்க மனிதரான உஸ்மானை நான் தங்களுக்குக் காட்டுகிறேன்'' என்று  சமர்த்தியமாகப் பேசி நழுவிவிட்டார்.

வேறுவழியில்லாமல், முஹம்மது உஸ்மானை அழைத்து, "நாங்கள் போர் செய்வதற்கு வரவில்லை. அல்லாஹ்வின் ஆலயத்தின் கண்ணியத்தை மதித்து அதில் வணங்குவதற்காகத் தான் வருகின்றோம்' என்று குறைஷிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று உஸ்மானிடம் சொல்லி அனுப்புகிறார்.

மக்கா சென்ற உஸ்மான், அபூசுஃப்யானையும் குறைஷிகளின் முக்கியத் தலைவர்களையும் சந்தித்து, தான் வந்த நோக்கத்தைத் தெரிவிக்கிறார். அதற்குக் குறைஷிகள், "நீ தவாஃப் செய்ய விரும்பினால் தவாஃப் செய்து கொள்'' என்று உஸ்மானிடம் கூறினார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதர் தவாஃப் செய்கின்ற வரை நான் தவாஃப் செய்யப் போவதில்லை'' என்று பதிலளிக்கிறார். தொடரும் பேச்சுவார்த்தைகள் உஸ்மான் திரும்பிச் செல்வதற்குக் காலதாமதத்தை ஏற்படுத்துகிறது.

இந்த கால தாமதம் முஹம்மதிடம்  வேறு மாதிரியான தகவலாகச் சென்றடைகின்றது. உஸ்மான் கொல்லப்பட்டு விட்டதாக தவறான செய்தி முஹம்மதுவின் கூட்டத்தினரைச் சென்றடைகிறது. இரத்தவாடையை நுகர  ஏதாவது காரணம் கிடைக்காதா என்று காத்திருந்தவர்களுக்கு  இந்தத் தகவல் ஆறுதலை அளித்தது. முஹம்மதுவும் அவரது, தோழர்களும் கடுமையான கோபத்திற்கும் கொந்தளிப்பிற்கும் உள்ளாகின்றார்கள். அவர்கள் தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்து போரிடுவதற்கு ஆயத்தமானார்கள். அப்படிப் போராடினால் அது சாதாரணமாக போராட்டமாக இருக்காது, மக்காவினுள்ளே போராடுவதாக இருந்தால் மக்கத்து குறைஷிகளும். இறுதிவரை போராடுவார்கள். இலகுவாக பணிந்துவிட மாட்டார்கள். எனவே, அழிவு இரு புறமும் மிகப் பயங்கரமானதாக இருக்கும். இந்த வகையில் மரணம் உறுதியாகி விட்டாலும்கூட புறமுதுகுக் காட்டி ஓடக்கூடாது என்ற கருத்தில் முஹம்மது தனது அடியாட்கள் அனைவரிடமும் பைஅத்(உறுதி மொழி)செய்கிறார்கள். ஒரு மரத்தடியில் நபி(ஸல்)அவர்கள் உட்கார்ந்து, தம் வலக் கையைச் சுட்டிக் காட்டி, "இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் (இடக்) கையின் மீது தட்டினார்கள். பிறகு, " (இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்' என்று சொன்னார். அதன் பின்  ஒவ்வொருவராக அனைவரும் வந்து பைஅத் செய்தனர். இது இஸ்லாமிய வரலாற்றில் "பைஅத்துர் ரிள்வான்"என சொல்லப்படுகிறது.

புஹாரி 4169.
யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) அறிவித்தார்.
நான், ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்களிடம், 'ஹுதைபிய்யா தினத்தன்று (நபித் தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்" என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள், 'மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்" என்று பதிலளித்தார்கள்..

முஸ்லீம் 3793
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சலமா (ரலி) அவர்களிடம், "ஹுதைபியா தினத்தன்று (நபித்தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(வீர) மரணத்திற்கு(த் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதி மொழியளித்தோம்)" என்று பதிலளித்தார்கள்.

உடன்படிக்கையானது தன்னிடம் செய்த உடன்படிக்கையாகும் என்று இரத்தவாடையை நுகர அல்லாஹ்வும் மூக்கைத் தீட்டிக் கொண்டு உற்சாக வசனங்களை இறக்குகிறான்.

குர்ஆன் 48:10
உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் அல்லாஹ்விடம் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.

முஹம்மதுவும் அவரது அல்லாஹ்வும் இரத்தவாடைக்காக காத்திருந்த பொழுது, ஒரு திடுக்கிடும் செய்தி வந்து சேர்கிறது. அதாவது, உஸ்மான் கொல்லப்படவில்லை என்ற சரியான தகவல் அவர்களை வந்தடைகிறது. வேறுவழியில்லாமல் விருந்தை வேறொரு நாளுக்கு வைத்துக் கொள்வோமென்று சமாதான நடவடிக்கைக்கு முஹம்மது செல்கிறார்.

உஸ்மான் கொல்லப்பட்டதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்பது முஹம்மதுவிற்குத் தெரியாது. காரணம் அவர் ஒரு சாதாரண மனிதர்; தனது மருமகன் உஸ்மான் கொலை செய்யப்பட்டுவிட்டாரே என ஆத்திரம் கொள்வதில் நியாயம் இருக்கிறது.

ஆனால் அல்லாஹ் என்ன செய்திருக்க வேண்டும்?

”அட... அரை லூஸுகளே உஸ்மான் கொல்லப்படவில்லை! உயிருடன்தான் இருக்கிறார். தேவையில்லாமல் துள்ளிக் குதிக்காதீர்கள்” என்றல்லவா அறிவுறுத்தி குர்ஆன் வசனங்களை இறக்கியிருக்க வேண்டும்?

எதார்த்த உண்மை புரியாமல், உளறிக் கொட்டிய அல்லாஹ்வை, பைத்தியக்காரன் என்று அழைக்காமல் வேறெப்படி அழைக்க முடியும்?


தஜ்ஜால்

17 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஆனந்த் சாகர்3 December 2015 at 16:07

    //ஆனால் அல்லாஹ் என்ன செய்திருக்க வேண்டும்?

    ”அட... அரை லூஸுகளே உஸ்மான் கொல்லப்படவில்லை! உயிருடன்தான் இருக்கிறார். தேவையில்லாமல் துள்ளிக் குதிக்காதீர்கள்” என்றல்லவா அறிவுறுத்தி குர்ஆன் வசனங்களை இறக்கியிருக்க வேண்டும்?//

    இதற்கு பிறகும் முகம்மதை இறைதூதர் என்று எப்படி அவரோடு இருந்த கூட்டம் நம்பிக்கொண்டு இருந்தது? உஸ்மான் உயிரோடு இருப்பது எப்படி அல்லாஹ்வுக்கு தெரியாமல் போனது என்று கேட்க ஒருவர் கூட இல்லாமல் போனது சாத்தியமில்லை. உண்மையான சந்தேகத்தை கேட்டால் பைத்தியக்கார சர்வதிகாரி முஹம்மது தங்களை கொன்று விடுவார் என்று தெரிந்தே அவர்கள் அடக்கி வாசித்தனர் என்று எடுத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  3. நாம் ஏன் அல்லாஹ்வையும் முஹம்மதையும் பிரித்து பார்க்கனும் டூ இன் ஒன் என்று கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக இருக்குமே ? அருமை முஹம்மதின் இறைத்தூதர் முகமூடியை மொத்தமாக கிழித்துவிட்டீர்கள்

    ReplyDelete
  4. //ஆனால் அல்லாஹ் என்ன செய்திருக்க வேண்டும்? ”... என்றல்லவா அறிவுறுத்தி குர்ஆன் வசனங்களை இறக்கியிருக்க வேண்டும்? எதார்த்த உண்மை புரியாமல், உளறிக் கொட்டிய அல்லாஹ்வை, பைத்தியக்காரன் என்று அழைக்காமல் வேறெப்படி அழைக்க முடியும்?//
    அல்லா சொன்னால்தானே வசம் இப்படி இருந்திருக்க முடியும்? அப்ப இதை (குர்ஆன் 48:10) அப்படியே நம்பபவர்களை என்னவென்று அழைப்பது? சிந்திப்பவர்களுக்கு இதில் அத்தாட்சியுள்ளது.! ..!! ...!!!.

    ReplyDelete
  5. அப்பப்பா பாமர அரேபிய மக்களை என்னமா ஏமாற்றியிருக்கின்றார் இந்த முகம்மது. இதை உணர விடாமல் தடுக்க என்னமா பாடுபடுகின்றாா்கள்.
    முகம்துவின் இறப்பிற்குப்பிறகு அவரது மனைவிமாா்களின் வாழ்ககை குறித்த செய்திகளை தர வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  6. அருமை தோழரே...இப்பவும்,உண்மையான தவ்ஹீத் வாதிகளையும்,மனித நேயத்தையும் உலகுக்கு எடுத்துக் காட்டவே சென்னையில் மழை வெள்ளத்தை இறைவன் தந்தருளினான் என்று தம்பட்டம் அடிக்கும் முமீன்களும் இருக்கத்தான் செய்கின்றனர்....ஏன் இதே மனித நேயத்தை ஈரான்,ஈராக் போரிலும்,இஸ்ரேல் பலஸ்தீனிலும் காட்டித்தரவில்லை என்ற கேள்விக்கு பதில்தான் கிடைக்கவில்லை...

    ReplyDelete
  7. ஆனந்த் சாகர்10 December 2015 at 11:37

    //...இப்பவும்,உண்மையான தவ்ஹீத் வாதிகளையும்,மனித நேயத்தையும் உலகுக்கு எடுத்துக் காட்டவே சென்னையில் மழை வெள்ளத்தை இறைவன் தந்தருளினான் என்று தம்பட்டம் அடிக்கும் முமீன்களும் இருக்கத்தான் செய்கின்றனர்..//

    இந்த தவ்ஹீத் வாதிகளின் செயல் வெறும் நடிப்பு. உண்மையான இஸ்லாத்தின் முகத்தை மறைப்பதற்காக பாமர மக்களை ஏமாற்றும் நோக்கத்தோடு இவர்கள் இப்படி நாடகமாடுகின்றனர். இவர்கள் உண்மையான மனிதநேயம் உள்ள மனிதர்களாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்காதவர்களை கொலை செய்ய சொல்லும் பாசிச இஸ்லாமிய மதத்தை விட்டு வெளியேற வேண்டும். பாசிச கொள்கையை மனதார ஏற்றுக்கொண்டு நாங்கள் பாசிச வாதிகள் அல்ல என்று இவர்கள் சொல்வதும், மனிதநேயமிக்கவர்களாக காட்டிக்கொள்ள இவர்கள் செய்யும் ஒரு சில தொண்டு செயல்களும் பாமர மக்களை ஏமாற்றும் மோசடியே.

    பேரழிவு ஏற்படுத்தி, மனிதர்களை கொன்று அதன்மூலம் ஏகத்துவ கொள்கையை எடுத்துக்காட்ட முயலுபவனை பைத்தியக்காரன் என்று கூற முடியுமே ஒழிய அவனை இறைவனாக ஒருபோதும் ஏற்க முடியாது என்பதுகூட இந்த அறிவிலிகளுக்கு தெரியவில்லையே!

    ReplyDelete
  8. தஜ்ஜால்10 December 2015 at 19:04

    வாங்க சாதிக் சமத்,

    //நாம் ஏன் அல்லாஹ்வையும் முஹம்மதையும் பிரித்து பார்க்கனும் டூ இன் ஒன் என்று கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக இருக்குமே ? // அதேதான்! முஹம்மதிற்கு என்ன தெரியுமோ அது மட்டும்தான் அல்லாஹ்விற்கும் தெரியும்.

    ReplyDelete
  9. தஜ்ஜால்10 December 2015 at 19:15

    வாங்க ஆனந்த்,

    // இதற்கு பிறகும் முகம்மதை இறைதூதர் என்று எப்படி அவரோடு இருந்த கூட்டம் நம்பிக்கொண்டு இருந்தது? உஸ்மான் உயிரோடு இருப்பது எப்படி அல்லாஹ்வுக்கு தெரியாமல் போனது என்று கேட்க ஒருவர் கூட இல்லாமல் போனது சாத்தியமில்லை// இஸ்லாமிய வரலாற்றில்(!?) எதுவும் சாத்தியம்தான். இதைப் போன்று ஜிஹாதை உற்சாகப்படுத்தும் வசனங்களை நீக்கிவிட்டால், தக்குதல்கள் நிகழ்த்த எவனும் இருக்க மாட்டான். கூட்டிக் கழித்துப் பாருங்கள் சாத்தியக் கூறுகள் உங்களுக்கே புரியும்!

    ReplyDelete
  10. தஜ்ஜால்10 December 2015 at 19:24

    வாங்க ANT,

    // அல்லா சொன்னால்தானே வசம் இப்படி இருந்திருக்க முடியும்? அப்ப இதை (குர்ஆன் 48:10) அப்படியே நம்பபவர்களை என்னவென்று அழைப்பது? சிந்திப்பவர்களுக்கு இதில் அத்தாட்சியுள்ளது.! ..!! ...!!!.//

    முஸ்லீம்களில் பெரும்பாலானவர்களுக்கு குர்ஆன் முழுமையாகத் தெரியாது. அப்படித் தெரிந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதன் பொருள் தெரியாது. பொருள் தெரிந்தவர்களுக்கு வசனங்களின் பின்னணி தெரியாது. சிந்திக்க மாட்டீர்களா.?. சிந்திக்க மாட்டார்களா...? என்றெல்லாம் குர்ஆன் புலம்புவதன் பின்னணிதான் உண்மையில் புரியவில்லை!

    ReplyDelete
  11. தஜ்ஜால்10 December 2015 at 19:28

    வாங்க Dr. Anburaj,

    //முகம்துவின் இறப்பிற்குப்பிறகு அவரது மனைவிமாா்களின் வாழ்ககை குறித்த செய்திகளை தர வேண்டுகின்றேன்..//
    முஹம்மதின் இறப்பிற்குப் பின்னர் அவரது மனைவியர்கள் பற்றிய செய்திகள் இஸ்லாமிய வரலாற்றில் அவ்வளவாகப் காணப்படுவதில்லை ஆயிஷாவைத் தவிர. இருப்பினும் என்னால் இயன்றவரை முயற்சி செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  12. தஜ்ஜால்10 December 2015 at 20:14

    வாங்க இனியவன்,

    //அருமை தோழரே...இப்பவும்,உண்மையான தவ்ஹீத் வாதிகளையும்,மனித நேயத்தையும் உலகுக்கு எடுத்துக் காட்டவே சென்னையில் மழை வெள்ளத்தை இறைவன் தந்தருளினான் என்று தம்பட்டம் அடிக்கும் முமீன்களும் இருக்கத்தான் செய்கின்றனர்....//
    பொதுவாகவே இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களைக் கண்டால் மதவாதிகளுக்குக் கொண்டாட்டம்தான். கடவுளின் ஆற்றலை உங்கள் அறிவியலால் தடுக்க முடிந்ததா? உங்கள் அறிவியல் என்ன செய்தது? என்றெல்லாம் பிதற்றுவார்கள். பிறகு அந்தப் பேரிடர் ஏற்பட கரணங்களை அடுக்குவார்களே பாருங்கள்!
    2004 சுனாமியின் பொழுது, இந்தோனேஷியாவில் சுமார் 25,000 முஸ்லீம்கள் ஒரே நேரத்தில் கிறிஸ்தவ மதத்திற்குக் மாறிவிட்டனராம்; பாலி தீவில் பெருமளவு அனாச்சாரங்கள் நிகழ்ததாம் அதனால்தான் அல்லாஹ் சுனாமிய ஏற்படுத்தி அவர்களை அழித்தான் என்று கூறியவர்கள்தான் இந்த மனித நேயர்கள்!
    2005-ல் அமெரிக்கா கத்ரினா புயலால் பெரும் பாதிப்பிற்குள்ளான பொழுது அது அல்லாஹ்வின் தண்டனை என்று கூறியவர்கள்தான் இந்த தவ்ஹீத்வாதிகள்.

    இப்பொழுது உண்மையான தவ்ஹீத்வாதி(!?)களின் மனித நேயத்தை(!?) உலகிற்கு காண்பிக்க சென்னை, கடலூர் பெருமழை!?
    // ஏன் இதே மனித நேயத்தை ஈரான்,ஈராக் போரிலும்,இஸ்ரேல் பலஸ்தீனிலும் காட்டித்தரவில்லை என்ற கேள்விக்கு பதில்தான் கிடைக்கவில்லை...//

    நீங்களே சொல்லுங்கள் இவர்களது கடவுளர்களை கேலி செய்வது யார்?

    ReplyDelete
  13. தஜ்ஜால்10 December 2015 at 20:19

    வாங்க ஆனந்த்,

    // பேரழிவு ஏற்படுத்தி, மனிதர்களை கொன்று அதன்மூலம் ஏகத்துவ கொள்கையை எடுத்துக்காட்ட முயலுபவனை பைத்தியக்காரன் என்று கூற முடியுமே ஒழிய அவனை இறைவனாக ஒருபோதும் ஏற்க முடியாது என்பதுகூட இந்த அறிவிலிகளுக்கு தெரியவில்லையே!//

    குர்ஆனின் பெரும்பகுதி அந்த சமுதாயத்தை அழித்தேன், இந்த சமுதாயத்தை அழித்தேன் என்ற அல்லஹ்வின் வீர(!?)ப் பிரதாபங்கள்தானே! அதை பின்பற்றுபவர்கள் வேறு எப்படி இருப்பார்கள்?

    ReplyDelete
  14. லூசிபர் நிச்சயமாக நரகம் செல்வன் . அவனை பின்பற்றும் ..இலுமினாடிகளின் நிலைமை ......படுகுழி .. உன்னை போன்ற மூடர்களுக்கு இஸ்லாம் விளங்காது .அல்லாஹ் உங்களது உள்ளத்தில் முத்திரை இட்டுவிட்டான் ..

    உங்களுக்கு பேரழிவு மிக விரைவில் .. எதிர் பாறுங்கள் அதை ..

    (அல்லாஹ் எங்கள் இரச்சகன்.)

    ReplyDelete
  15. ஆனந்த் சாகர்21 December 2015 at 13:58

    //லூசிபர் நிச்சயமாக நரகம் செல்வன் . அவனை பின்பற்றும் ..இலுமினாடிகளின் நிலைமை ......படுகுழி .. //

    ஷைத்தானோ நரகமோ உண்மையில் இல்லை.

    //உன்னை போன்ற மூடர்களுக்கு இஸ்லாம் விளங்காது//

    புரியாமலா இஸ்லாத்தை பற்றிய உண்மைகளை ஆணித்தரமாக அம்பலப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்?!


    ReplyDelete
  16. மழை வெள்ளத்தில் செய்த சேவைகளை கூட கொச்சை படுத்தும் காவி காவாலிகளே.
    போங்கடா போங்க

    ReplyDelete
  17. உதுமானின் கொலைக்காகத்தான் இந்த குரான்குர்ஆன் 48:10
    வசனம் இறங்கியது என்பதற்கு ஆதாரங்கள் தரமுடியூமா

    ReplyDelete