பக்கங்கள்

Thursday, 21 February 2013

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1



நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
குர்ஆன் 15:09

இஸ்லாமின் அடிப்படை, அல்லாஹ்வின் வார்த்தைகளாகக் கருதப்படும் குர்ஆன் மற்றும் அல்லாஹ்வின் வார்த்தைகளையும் முஹம்மதின் சொல்-செயல்களைக் கூறும் ஹதீஸ்களும்தான். இதில் முஹம்மது தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக வஹியை அதாவது வேதம் வெளிப்பட்ட முறையையே முன்வைத்தார். அல்லாஹ்வால் வழங்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டதென்று தனக்குத் தானே சாட்சி கூறிக்கொள்கிறது.

அண்மையில் ஒரு இஸ்லாமிய நண்பருடன் விவாதத்தில் இருந்தபொழுது பாதுகாக்கப்பட்ட குர்ஆன் என்பது ஒரு நம்பிக்கையே, நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல என்றேன்.

அதற்கு அவர், குர்ஆனின் ஒவ்வொரு எழுத்தும் அல்லாஹ் முஹம்மது நபிக்கு அருளியவாரே இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளது; அதற்கு குர்ஆன் 15:09 ஆதாரம் என்றார். ஏனெனில் குர்ஆன் கடவுள் அல்லாஹ்வின் வார்த்தைகளாம்.  ’நான் முஸ்லீம்’ தளமும் அதே பதிலைத்தான் கூறுகிறது.

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (15:9)

இங்கு குர்-ஆனின் பாதுக்காப்புக்கு தானே பொறுப்பேற்பதாக இறைவன் கூறுகிறான்.ஆதாவது மனிதர்களிடம் குர்-ஆனை பாதுக்காக்கும் பொறுப்பை சாட்டாமல் அதனை தன்னளவில் வைத்துக்கொண்டான்.இதன் மூலம் உலகமுடிவு நாள் வரையிலும் குர்-ஆன் பாதுக்காப்பிற்கு எந்த ஒரு மனிதனும் தனிப்பட்ட முறையில் சிரத்தை மேற்கொள்ள தேவையில்லை என்பதை தெளிவாக இவ்வசனத்தில் விளங்கலாம்...
நான் முஸ்லீம்
நமது கேள்வியே குர்ஆனின் நம்பகத்தன்மையைக் குறித்துதான் அதற்கு பதிலைக் குர்ஆனிலிருந்தே கூறுவர். பொதுவாகவே முஸ்லீம்களின் வாதம் வளைவிற்குற்குள் சுற்றிக் கொண்டே இருக்கும்.  அந்த நண்பரிடம், குர்ஆன் தொகுக்கப்பட்ட கதையைக் கூறுங்கள் என்றதும், முடியாது என்று திடமாக மறுத்துவிட்டார்.  இதுதான் குர் ஆனின் யதார்த்த நிலை!

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்” என்ற இந்த இரண்டு வாக்குறுதிகளின் அவசியம் என்ன? அன்றைய மக்கத்துக் குறைஷிகள் இவர்கள் சொல்வதைப் போல முட்டாள்கள் அல்ல! அவர்கள் தெளிவாகவே, முஹம்மது கடவுளின் பெயரால் கதையளப்பதாகக் கூறினர். அதற்காகத்தான் ”நாமே இந்த அறிவுரையை அருளினோம்” என்ற மாபெரும் விளக்கம். இந்த பதிலைக் காணும் பொழுது, நாம் இன்று காணும் அரைவேக்காடு இஸ்லாமிய அறிஞர்களும்,  அப்பாவி முஸ்லீம்களும் எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது. அவர்கள், குர்ஆன் சர்வவல்லமையுடைய கடவுளின் வார்த்தைகளே என்பதை நிரூபிக்க, அவர்கள் மேற்கொள்ளும் சிரமங்களைப் பார்க்கையில் எனது கண்களில் நீர் தழும்பி நிற்கிறது. 

 சரி..! ”நாமே பாதுகாப்போம்” என்று எதற்காகக் கூறவேண்டும்? குர்ஆனை அழித்துவிட யாராவது முயன்றனரா? என்றால், முஹம்மது, குர்ஆனைக் கூறிக் கொண்டிருந்த காலத்தில் அப்படி எந்த ஒரு முயற்சியும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. பிறகு ஏதற்காக இப்படியொரு உறுதிமொழி? 

அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.
குர்ஆன் 2:75

இவ்வாறு மற்ற வேதங்கள் மாற்றப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டை குர்ஆன் திரும்பத் திரும்பக் கூறுவதால், குர்ஆனின் தன்மை எத்தகையது என்ற கேள்வி எழுவதைத் தவிர்ப்பதற்காகக் கூறப்பட்டிருக்குமோ? அல்லது பிற்காலத்து இடைச்சொருகலா?

இஸ்லாமிய அறிஞர்கள் கூறும் விளக்கங்களைப் பார்ப்பதற்கு முன்பாக, நாம் அல்லாஹ்வின் இயல்பை சற்று கவனிக்கலாம். மூலப்பதிவேடு என்ற நூலில் துவங்கி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு புத்தகம் என்ற கணக்கில் எண்ணற்ற புத்தகங்களை, எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறான். முந்தைய வேதங்களாக அல்லாஹ் கூறும் தவ்ராத், ஸபூர், இஞ்ஜீல், மட்டுமல்லாது அவன் அனுப்பிய ஒவ்வொரு தூதர்களுக்கும் வேதங்களை வழங்கியுள்ளான். அன்றுமட்டுமல்ல இன்றும் தனது எழுத்தர்களை கொண்டு மனிதனது செயல்களைக் எழுதிக் கொண்டே இருக்கிறான். 

அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துவந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (இன்னும் மேலே) உயர்ந்தார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது (வானவர்கள் தலை விதிகளைப் பதிவு செய்துகொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்...
முஸ்லீம் 263

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம்.
குர் ஆன் 17:13

இவ்வாறாக அல்லாஹ்வின் அலுவலகத்தில் எழுத்துப்பணி இடைவிடாது இயங்கிக் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொன்றும் எழுத்துவடிவத்தில் பாதுகாக்கப்படுவதை குர்ஆனும் ஹதீஸும் கூறுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.  மோசேவிற்கு கற்பலகைகளில் தனது கட்டளைகளை எழுதிக் கொடுத்துள்ளதாகவும் அதை அவர்கள் ஒரு பேழையில் (உடன்படிக்கைப் பெட்டி) வைத்திருந்ததாகவும் பழைய ஏற்பாடு கூறுகிறது. 

பேழையின் மாதிரிப் படங்கள்.



 குர்ஆனும் தனது பங்கிற்கு மூஸாவிடம் ஒரு பேழை இருந்ததாகக் கூறுகிறது

"அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு அடையாளமாக, உங்களிடம் ஓர் அலங்காரப் பெட்டி வரும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்கு) மன நிறைவு இருக்கும். மூஸாவின் குடும்பத்தாரும், ஹாரூனின் குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில் எஞ்சியது அதில் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அதில் உங்களுக்குச் சான்று உள்ளது'' என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார்.
குர்ஆன் 2:248

மூஸா விட்டுச் சென்ற பெட்டியை மலக்குகள் வானிலிருந்து சுமந்துவந்து மக்களின் முன்பாக வைத்தனர் என்றெல்லாம் விரிவுரைக்கதைகள் கூறுகின்றன. நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு தேவையில்லாத காரணத்தினால் அதை பின்னர் பார்க்கலாம்.
இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, ஈஸா வானுலகிற்குக் கடத்திச் செல்லப்பட்டபொழுது தனது அடியார்களுக்கென்று இன்ஜீல் என்றொரு வேதப் புத்தகத்தை விட்டுச் சென்றிருக்கிறார். அந்த புத்தகம் என்ன ஆனது? இயேசு, அப்படி எந்த ஒரு எழுத்துப்பூர்வமான வேதத்தையும் விட்டுச் செல்லவில்லை என்பதாக கிருஸ்துவம் கூறுகிறது. இவர்களில் யார் சொல்வது சரியானது?  

ஆக அல்லாஹ், வெளியிட்ட குர்ஆனுக்கு முந்தைய எந்த ஒரு வேதமும் இன்று உலகில் இல்லை. அவை மனிதக் கரங்களால் உருமாறிவிட்டது. அல்லது முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது என்பதுதான் இஸ்லாமியர்களின் வாதம். 

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான்.
குர்ஆன் 2:213

முஸ்லீம்களின் வெவ்வேறு விதமான நம்பிக்கைகளின் அடிப்படையில் சுமார் 30-லிருந்து 1,24,000 வரை நபிமார்கள் வந்துள்ளதாக அறிகிறோம். மேற்கண்ட வசனத்தை கவனத்தில் கொண்டால் தவ்ராத், ஜபூர், இன்ஜீல் மட்டுமல்லாது இன்னும் அதிக எண்ணிக்கையில் வேதங்கங்கள் இருந்துள்ளதாக பொருள் கொள்ளலாம்.

”வேதங்களை மாற்றிவிட்டனர்” என்று குர்ஆனில் அல்லாஹ் புலம்புவதை அடிப்படையாகக் கொண்டால், வேதங்களை திருத்தம் செய்யக் கூடாது என்ற எச்சரிக்கைகளை, ஒவ்வொரு வேதத்திலும் நிச்சயம் கூறியிருக்க வேண்டுமில்லையா? தனது வேதங்களை மாற்றியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேதங்களைப் பாதுகாக்கவுமில்லை!
 
பொதுவாக, மனிதர்கள், தாங்கள் எழுதியவற்றை தகுந்த அனுமதியின்றி பிறர் திருத்தம் செய்வதை அனுமதிப்பதில்லை. ஆனால், அல்லாஹ்வோ என்னைக் கேட்காமல் எனது புத்தகத்தை திருத்திவிட்டார்கள் என்று புலம்பிக் கொண்டிருக்கிறான். கொடுமையான தண்டனை வழங்குவேன் என்றெல்லாம் மிரட்டல் விடுத்தும், அவனை அவர்கள் ஏனோ சிறிதுகூட பொருட்படுத்தவில்லை, பயம் கொள்ளவில்லை என்கிறது குர்ஆன். அல்லாஹ்வின் ஆணைகளயும், படைப்புகளையும் மனிதர்களால் அவனது அனுமதியின்றி மாற்றமுடியும் என்பதை அல்லாஹ்வும் ஒப்புக்கொள்கிறான்! 

சர்வல்லமையுடைய கடவுளுக்கு அடுத்தடுத்து புதிய தூதர்கள் மற்றும் வேதங்களின் தேவையென்ன? எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய, அனைத்துவிதமான சட்டங்களையும் உள்ளடக்கிய ஒரே வேதத்தை ஏன் இறக்கிப்பாதுகாக்கவில்லை?

இறுதி நாள் வரை வரும் மக்களுக்கு வழிக்காட்டியாக குர்-ஆன் இலங்கவேண்டும் என்பதற்காகவே குர்-ஆனின் பாதுகாப்பு மட்டும் அவசியாமாகிறது "முழுமைப்படுத்தப்பட்ட தொகுப்பு மட்டுமே பாதுக்காக்கப்படுவதற்கு தகுதியானது!" என்ற அடிப்படையில் தான் முன்னர் அருளப்பட்ட ஏனைய வேதங்களை பாதுக்காக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லையேயொழிய வேலி தாண்டி ஆடுகள் தோட்டத்தை மேய்வதை தடுக்க சக்தியற்ற தோட்டக்காரன் அல்ல...உலகின் இறைவன்!
நான் முஸ்லீம்

இஸ்லாம் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் விரும்பியவர்களெல்லாம் கடவுளின் அந்தரங்க காரிதரிசியாக பதவியேற்கலாம். அல்லாஹ்வின் அருகிலிருந்து அவனது நடவடிக்கைகளை கண்காணித்தவர்களைப் போன்று எவ்வளவு நுணுக்கமான செய்திகளைக் கூறுகின்றனர். இவர்கள்தான் அல்லாஹ்விற்கே ஆலோசனைகள் வழங்கியதைப் போன்று அளந்து விடுகின்றனர். அவனால் எதுவும் செய்ய முடியாது என்ற துணிச்சல்தான். 
 
நாம்  நாத்தீகர்களா? இல்லை அவர்களா?  அண்மைக் காலங்களில் இந்த சந்தேகம் அடிக்கடி எழுகிறது.

தோட்டக்காரனுக்கு, இஸ்லாம் என்ற மததத்தை மன்னிக்கவும் மார்க்கத்தை வேலியமைத்து பாதுகாக்க சுமார் 5500-க்கும் அதிகமான ஆண்டுகள் தேவைபட்டிருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.

குர்ஆன் என்ற வேதம் வழங்குவதற்காகத்தான் மற்ற வேதங்களை பாதுகாக்க விரும்பவில்லையாம்! பாவம், அந்தத் தோட்டக்காரன் இத்தகைய விளக்கங்களை எதிர்பார்க்கவில்லை போலும், அவனது புலம்பலை பார்ப்போம்.

எனவே, தங்களின் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதி பிறகு அதன் மூலம் (உலகின்) சொற்ப கிரையத்தை வாங்குவதற்காக, இது அல்லாஹ்விடமிருந்துள்ளது என்று வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு; மேலும் அவர்களின் கரங்கள் (வேதத்தை மாற்றி) எழுதியதன் காரணத்தால் அவர்களுக்கு வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு …
குர்ஆன் 2:79

முதலில் குர்ஆன் கடவுளின் வார்த்தைகளே என்பதை நிரூபித்த பிறகு தவ்ராத் மற்றும் இன்ஜீலையும் அதன் மூலப்பிரதிகளுடன் ஒவ்வொரு எழுத்தாக, வாக்கியமாக ஒப்பீடு செய்தபின்னர் இப்படியொரு முடிவைக் கூறியிருந்தால், ஏற்புடையதாக கருதலாம். ஆனால் திடீரென்று ”வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்பதைப் போல வேதங்கள் மாற்றப்பட்டுள்ளன அறிக்கைசெய்வது குழந்தைத்தனமானது.

சனிக்கிழமை தடை நீக்கம், கொழுப்பு உண்பது அனுமதிக்கப்பட்டது என்று தவ்ராத்திற்கு மாற்றமான சில அனுமதிகள் பற்றி குர்ஆனில் உள்ளன. நமது விவாதம் அதைப்பற்றியல்ல என்பதை அறிவீர்கள்.  

...வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள் மாற்றுகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர்...
குர்ஆன் 5:13

முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டதாக குர்ஆன் கூறுவதில் முரண்பாடுகள் உள்ளன. இன்னும் சொல்வதென்றால் முஹம்மதின் காலத்தில் மட்டுமல்ல அதற்குப்பின்னும் குர்ஆனைவிட அவைகளே பாதுகாப்பாக இருந்துள்ளதாகத் தெரிகிறது.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.        
நபி(ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரிலிருந்து விபசாரம் புரிந்து விட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள். (தீர்ப்பளிக்கும்படி கேட்டார்கள்) அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் விபசாரம் புரிந்தவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்கள் 'நாங்கள் அவ்விருவரையும் (அவர்களின் முகங்களில்) கரும்புள்ளியிட்டு அடிப்போம்' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், '(உங்கள் வேதமான) தவ்ராத்தில் (விபசாரம் செய்தவருக்கு) 'ரஜ்கி' (சாகும்வரை கல்லால் அடிக்கும்) தண்டனையை நீங்கள் காணவில்லையா?' என்று கேட்க, யூதர்கள், '(அப்படி) ஒன்றும் அதில் நாங்கள் காணவில்லை' என்று பதிலளித்தனர். உடனே, (யூதமார்க்க அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), யூதர்களிடம், 'பொய் சொன்னீர்கள், நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டு வந்து ஓதிக் காட்டுங்கள்' என்று கூறினார்கள். (அவ்வாறே தவ்ராத் கொண்டுவரப்பட்டு ஓதப்பட்டது). அப்போது அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேதம் ஓதுநர் 'ரஜ்கி' தொடர்பான வசனத்தின் மீது தம் கையை வைத்து (மறைத்துக்கொண்டு) தம் கைக்கு முன்னால் இருப்பதையும் அதற்கு அப்பால் உள்ளதையும் மட்டும் ஓதலானார். (கைக்குக் கீழே உள்ள) ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தைவிட்டு இழுத்துவிட்டு, 'இது என்ன?' என்று கேட்டார்கள். யூதர்கள் அதைப் பார்த்தபோது, 'இது ரஜ்முடைய வசனம்' என்று கூறினார்கள். எனவே, (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் தண்டனை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள்
புகாரி 4556

முஹம்மதின் காலத்தில் முந்தைய வேதங்கள் பாதுகாப்பாக இருந்துள்ளதாக குர்ஆனும் கூறுகிறது.

"அல்லாஹ் அருளியதை நம்புங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்'' என்று கூறுகின்றனர். அதற்குப் பிறகு உள்ளதை (குர்ஆனை) மறுக்கின்றனர். அது உண்மையாகவும், அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!
குர் ஆன் 2:91

மேற்கண்ட வசனம் இறக்கப்படும் பொழுது, யூதர்களிடமிருந்த தவ்ராத்தும், கிருஸ்துவர்களிடமிருந்த இன்ஜீலும் உண்மையாக இருந்துள்ளது என்பதுதான் இதன் பொருள்! கடவுள் அல்லாஹ்வின் கட்டளைகளென்று  கூறிக்கொண்ட  முஹம்மதின் குர்ஆனை மறுத்ததும், நபிமார்களைக் கொலை செய்ததும்தான் அவர்கள் செய்த குற்றம். தவ்ராத் மற்றும் இன்ஜீல் பாதுகாப்பாகவே இருக்கையில் மாற்றப்பட்டதாக புலம்புவது வேடிக்கையானது. மற்றப்பட்டதாக அல்லாஹ் குற்றம்சாட்டுவது எதை? சரி… பாதுகாப்பாக இருந்த அந்த தவ்ராத்தும் இன்ஜீலும் எங்கே?

தன்னுடைய தூதர்கள் கொலை செய்யப்படும் வரையில் அல்லாஹ் என்ன செய்து கொண்டிருந்தான்? கொலை செய்யப்பட்ட நபிமார்கள் யார்? இதற்கான பதில் விளக்கமாக நன்கு விவரிக்கப்பட்ட குர்ஆனில் இல்லை. பதில் வேண்டுமென்றால் மாற்றப்பட்ட(?) வேதங்களில்தான் தேடிப்பார்க்க வேண்டும்.

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின்படி முந்தையவேதம் பாதுகாப்பாகவே இருந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் முஹம்மது துப்பறிந்து கண்டுபிடித்த “ரஜ்ம்” என்ற கல்லெறி தண்டனை பற்றிய அல்லாஹ்வின் அறிவிப்பு குர்ஆனில் இல்லை என்பதுதான்!

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
….நிச்சயமாக அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தீல் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்கி) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்…
புகாரி 6830
மட்டுமல்ல,
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்'' என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப் பட்டிருந்தது.  பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
முஸ்லீம் 2876

அதென்ன சிலரால் மட்டும் ஓதப்பட்ட வசனம்? மற்றவர்கள் ஓதிப் பாதுகாக்கவில்லையா? 

அண்ணல் அவர்களுக்கு அல்குர்-ஆன் "ஒலி" வடிவிலேயே இறக்கியருளப்பட்டது; மாறாக "வரி" வடிவில்லல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை எனவே நபிகளுக்கு முழு குர்-ஆனும் அருளப்பட்டது எழுத்து வடிவத்தில் இல்லை என்பது தெளிவாகிறது…
நான் முஸ்லீம் தளத்திலிருந்து

இந்த வசனமும் தற்பொழுதைய குர்ஆனில் இல்லை. ஒலிவடிவில் பாதுகாப்பாக இருக்கிறது என்பவர்களிடம் நாம் கேட்கவிரும்புவது, 

முஹம்மதிடம் அல்லாஹ் கூறியவாறே சிறிய மாற்றம்கூட இல்லாமல் ரஜ்கி மற்றும் ஐந்தாகக் குறைக்கப்பட்ட பால்குடி எண்ணிக்கைத் தொடர்பான வசனங்களைக் கூறமுடியுமா? மனிதர்கள் பாதுகாக்கும் தற்பொழுதைய குர்ஆனில் அவர்களால் இணைக்க முடியுமா?

ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து குர்ஆனை எப்படி குறை கூறலாம்?  நாய் வாலை ஆட்டலாம், வால் நாயை ஆட்டமுடியாது, ஆட்டக்கூடாது என்பதுதானே உங்களது ஆதங்கம்?
தொடரும்…
தஜ்ஜால்

23 comments:

  1. ஆனந்த் சாகர்22 February 2013 at 15:32

    குர்ஆன் முஹம்மது காலத்திலும் பாதுகாக்கப்படவில்லை; அவருடைய மரணத்திற்கு பிறகும் பாதுகாக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்ற விஷயத்தில் குர்ஆன் தனக்கு தானே பல வசனங்களில் முரண்படுகிறது. இந்த முரண்பாட்டை எல்லாம் முஸ்லிம் அறிஞர்களோ அல்லது பாமர முஸ்லிம்களோ கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் கிளி பிள்ளையை போல குர்ஆன் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டது என்றே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே திரிவார்கள். இதன் காரணம் அவர்களுக்கு கோயபல்ஸ் பிரசாரத்தில் அபார நம்பிக்கை இருப்பதுதான்.

    ReplyDelete
  2. தஜ்ஜால்22 February 2013 at 18:25

    வாருங்கள் ஆனந்த்,

    /////குர்ஆன் முஹம்மது காலத்திலும் பாதுகாக்கப்படவில்லை; அவருடைய மரணத்திற்கு பிறகும் பாதுகாக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. //// இது நம்மைப் போன்றவர்கள் பலமுறை கூறிய விஷயம். ஆயினும் அவர்கள் தங்கள்து குருட்டுத்தனமான பிடிவாதத்தை விடுவதாக இல்லை.//கிளி பிள்ளையை போல குர்ஆன் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டது என்றே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே திரி //வதுடன் மற்றவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

    ReplyDelete
  3. வசனம் 15:9 அல்லா தனது வேதத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை தானே எடுத்துக் கொள்கிறார் அது அவரது உரிமை விட்டுவிடுவோம். ஆனால் முந்தைய வேததில் அவர் எதை கூறினார் எதை மனிதர்கள் மாற்றினார்கள் என்பதை விட்டுவிட காரணம் என்ன? ஏனெனில் சில வசனங்கள் அரபு பகுதியில் இருந்த மக்களிடையே நிலவிவந்த கருத்துகளை பிரதிபலிப்பதாக உள்ளதால் அதை புறந்தள்ளுவது சரியல்ல. சிறிது ஆராய்ந்தால் பைபிள் குறித்து மேலும் சில உண்மைகள் வெளிவரலாம். என்னதான் குரான் முரண்பாடுகளை கொண்டிருந்தாலும் அதில் சில வரலாற்று பதிவுகள் மற்றும் நிகழ்வுகள் உள்ளதை மறுக்க முடியாது. தொடர்ந்து மாற்றங்கள் செய்து விட்டார்கள் என்று தனியாக ஒரு வேதத்தை உருவாக்கியதற்கு ஒரு வலுவான காரணம் நிச்சியம் இருக்க வேண்டும். இந்த மாற்றம் என்பது அரபுக்களுக்கு இழுக்கை ஏற்படுத்துவதாகவோ அல்லது அவர்களுக்கிருந்த பொருமைகளை சிறுமைபடுத்தும் விதமாக (போன்ற) ஏதோ ஒன்று இருக்க வாய்ப்புள்ளது. இறுதியாக ஒரு வசனத்தை ஆடு தின்றுவிட்டதாக அறிகிறோம் அப்போது பாதுகாப்பு என்ன ஆனது என்ற கேள்வி எழுகிறது.

    ReplyDelete
  4. சானா குரான் பற்றி முழுமையாக அறிய முடியாத சூழலில் இதன் நம்பகத் தன்மை ஆட்டம் காண துவங்கிள்ளது என்பது குறிப்பிடதக்கது. குரான் வேதம் ஒலி வடிவில் தான் இறக்கப்பட்டது எனவே இப்போதைய எழுத்து நடை என்பது எந்த அளவு நம்பத்தகுந்தது எந்த ஒரு மொழியிலும் வார்த்தைகள் நிலைத்த பொருளை கெண்டிருப்பதல்ல மொழிகள் dynamic தன்மையை கொண்டிருப்பதால் எப்படி அதே பொருளில் இன்றும் புரிந்து கொள்ள முடியும். குரானை எரிததுவிட்டார்கள் என்று பத்வா விதிப்பவர்கள். உதுமான் எரித்தது போக மீதமாக விட்டுவைத்ததை தான் புனிதம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். எரிக்கப்பட்டவை மாற்றங்களுக்கு ஆளானது என்பதால் தானே அவை எரிக்கப்பட்டன அப்படியானால் இப்பொழுது உள்ளது எந்த அளவு மாறுதல் அடையாத ஒரிஜினல் குரான்? அல்லாவே அறிவான். (பீ..ச்சே அண்ணன் வேதப்படி, குரானில் இல்லாத வசனம் கூட உள்ளது என்பதால் அவரது வேதத்தை புறந்தள்ள முடியாது என்பதை மனதில் நிறுத்திதான் குரானின் பாதுகாப்பு குறித்து திடமான முடிவுக்கு வரமுடியும் என்பதால் கட்டுரை இத்துடன் முடிவு பொறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.)

    ReplyDelete
  5. வாருங்கள் ANT,

    நீங்கள் சொல்வதை அமோதிக்கிறேன். குர்ஆனில் இல்லாத வஹீயைபற்றி அறிஞர் பீஜேவின் முடிவுகளை இக்கட்டுரையின் அடுத்த பகுதியில் கூறுகிறேன். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  6. ஆனந்த் சாகர்25 February 2013 at 17:43

    நான் இணைய தளத்தை தொடங்கியுள்ளேன். அதன் முகவரி : www.manidhan.wordpress.com

    இந்த தளத்தில் இஸ்லாமை அம்பலப்படுத்தும் கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவேன். முக்கியமாக அலி சினா அவர்களுடைய கட்டுரைகள் தமிழில் வெளியிடப்படும். மேலும் நான் எழுதும் கட்டுரைகளையும் இதில் வெளியிடுவேன்.

    சகோதர, சகோதரிகள் இந்த தளத்திற்கு வந்து கட்டுரைகளை படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எங்களது வாழ்த்துக்களும் ஆதரவும் எப்பொழுதும் இருக்கும்.

      Delete
  7. இணைய தளம் தொடங்கிய சகோ. ஆனந்த் சாகருக்கு என் வாழ்த்துக்கள்,கண்டிப்பாக இணைந்து கொள்வோம்.

    ReplyDelete
  8. ஆனந்த் சாகர்26 February 2013 at 13:34

    நன்றி, சகோ இனியவன்.

    ReplyDelete
  9. நாளுக்கு நாள் மதவெறி அதிகமாகிறது, ஒரு பாலைவனத்தில் திசை தெரியாமல் சுற்றும் கூட்டம் நல்வாழ்வுக்கு திசை காட்டினாலும் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை,

    As quoted by Richard Dawkins "I am against religion because it teaches us to be satisfied with not understanding the world."

    புதிய தளத்திர்கு வாழ்த்துக்கள் நன்பர்Anonymous ஆனந்த் சாகர்

    -பிரபு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பிரபு,

      நாளுக்கு நாள் மதவெறி அதிகரித்திருப்பதைப் போன்று தோன்றுவது உண்மைதான். இது வளர்ச்சியா வீக்கமா?

      எது எப்படியிருந்தாலும் நாம் விரைந்து செயலாற்ற வேண்டும்.

      Delete
  10. முரண்பாடுகள் பல இருந்தாலும் அவற்றை மறைப்பதற்கு காரணம்,மதம்,முகம்மது,அல்லாஹ்,குரான் போன்ற புணிதபோதையே.குரான் அல்லாஹ்விடமிருந்துதான் வந்தது என்கிற கண்மூடித்தனமான குருட்டு நம்பிக்கையே.இந்த போதை தெளிய பகுத்தறியும் பக்குவம் இன்னும் இவர்களிடம் வளரவில்லை.குரானே பகுத்தறிவு என்று மிகைப்படுத்தி தலைக்கேறிய பக்திபோதை தெளியாத வரையில் இவர்களின் சிந்தனை தெளிவு பெறாது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் இனியவன்.

      குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பது முஸ்லீம்களின் குருட்டு நம்பிக்கையே. அதை குர்ஆன் ஹதீஸிலிருந்து விளக்கும் முயற்சியே இந்தக் கட்டுரை.

      நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  11. ஆனந்த் சாகர் தங்களின் இணைய தளம் சர்ச் பண்ணியும் கிடைக்கவில்லையே என்ன காரணம்...

    ReplyDelete
  12. உங்களின் ஆக்கங்கள் ஆக்கபூர்வமாக உள்ளன. கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பவன் என்பதால் சொல்லுகிறேன். உங்கள் தெளிவான விளக்கங்களுக்கு பதில் அல்லது ஏற்றுக்கொள்ளுதல் என்கிற மனநிலை இன்றைய அப்பாவி முசுலீம்களுக்கு இல்லைதான்.

    உங்களின் அனைத்து ஆக்கங்களும் பாதுகாக்கப்படவேண்டியவையே. தொடர்க.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவி,

      இஸ்லாம் என்பது சீட்டுக்கட்டில் அமைக்கப்பட்ட கோபுரம். அதில் ஒன்றை உருவினாலும்உ ஒட்டுமொத்த கோபுரபும் சரிந்துவிடும் என்கிறார் அலிசினா. அது உண்மைதான். நமது வாதங்களில் ஒன்றை ஏற்றுக் கொண்டாலும் அவர்களது நம்பிக்கை மொத்தமும் சரிந்துவிடும் என்பதை முஸ்லீம்கள் அறியாதவர்களல்ல. எனவேதான் தொடர்ந்து சப்பைக்கட்டுகளைக் கட்டும் முயற்சியிலிருந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் எத்தனைக் காலத்திற்கு என்பதுதான் கேள்வி!

      Delete
  13. சகோதரர் ஆர்யாவுக்கு வாழ்த்துக்கள்!
    அல்லாஹுதாலா உங்களுக்கு நிறைய பிட்டுக்களை எடுத்துக்கூறி உதவுவானாக! ஆமீன் ,மேலும்
    ரப்பின் அருள் இறங்கி மப்பில் அலையும் ராப்பானிகள் என்றழைக்கப்படும் மார்க்க சப்பாணிகளுக்கு உங்களுடைய தளம் உதவிட ஆவல் உள்ளவனாய் இறைவனிடத்தில் இறைஞ்சுகிறேன் !

    ReplyDelete
  14. ஆனந்த் சாகர்28 February 2013 at 16:15

    இனியவன்,

    //ஆனந்த் சாகர் தங்களின் இணைய தளம் சர்ச் பண்ணியும் கிடைக்கவில்லையே என்ன காரணம்...//

    கூகுளில் manidhan.wordpress.com என்று டைப் செய்தால் கிடைக்கிறது. உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

    ReplyDelete
  15. ஆனந்த் சாகர்28 February 2013 at 16:21

    சகோதரன்,

    உங்களுடைய வாழ்த்துக்கும் அல்லாஹ்விடம் நீங்கள் செய்துள்ள பிரார்த்தனைக்கும்(துஆ) என்னுடைய கோடானு கோடி நன்றிகள்!

    ReplyDelete
  16. ஆனந்த் சாகர்28 February 2013 at 16:26

    நண்பர் தஜ்ஜால்,

    //எங்களது வாழ்த்துக்களும் ஆதரவும் எப்பொழுதும் இருக்கும்.//

    உங்களுடைய வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் என் நன்றிகள் பல.

    ReplyDelete
  17. நண்பர் ஆனந்த் சாகர்/

    கூகுளில் தான் முயற்சித்தேன் அதற்கு Did you mean:mandhan.wordpress.com/

    என்றுதான் கேட்கின்றது தங்கள் தளம் வரவில்லை. யாகூவில் முயற்சிக்கிறேன். நன்று....

    ReplyDelete
  18. ungalukku aen intha kolaveri, aduthavarkalin madhathil mookai nulaipathil appadi enna sugam

    ReplyDelete
  19. இஸ்லாம் தவரானது. முஸ்லிம் மக்கள் தவரான பாதையில் (மார்கத்தில்) இருக்கின்றனர் என்று கூறுகின்றீர். சரியான மார்கம் எது உங்கள் கருத்தை கூறுங்கள்

    ReplyDelete